திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -2-8-

தம்முடைய பரிகரத்தையும் தம்மைப் போலே யாக்கி -இத்தால் போராது என்று பார்த்து அருளி -தனக்கு அசாதாரணமாய் –
பரியங்க வித்யையில் சொல்லுகிறபடியே பெரிய பிராட்டியாரையும் தனக்கு பரியங்க பூதனான
திரு வனந்த ஆழ்வான் தொடக்கமான -அயர்வறும் அமரர்களையும் பரிகாரமாக உடைத்தாய்
எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளுக்கும் -ஸ்வ பாஹு பலத்தால் துஷ் ப்ராபமாய் –
ஓர் அளவும் இல்லை யாகிலும் திருவடிகளையே பற்றினார்க்கு அநாயாசேன பெறலாய் துக்க கந்த ரஹிதமாய் -அத்யந்த ஸூக ரூபமாய்
நிரதிசய மங்களமாய்-அனுபவிப்பார்க்கு அதி ஸ்ப்புடமாய்-அபரிச்சேதயமாய் -உத்தமமாய் உள்ள முக்த ப்ராப்யமான தன்னுடைய ஐஸ்வர் யத்தை
சர்வேஸ்வரன் ஆகையால் அபேக்ஷித சம்விதான ஷமனாய் யுள்ள-ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் தமக்கும் தம்பரிகரத்துக்கும்
தருகையில் உபக்ரமித்து அருளுகிற இருப்பைக் கண்டு அதி ப்ரீதரான ஆழ்வார் -எல்லாரையும் ஈத்ருஸ போக பாகிகள் ஆக்க வேணும் என்று பார்த்து அருளி –
அவனுடைய மோக்ஷ பிரதத்வத்தையும் -அதுக்கு உறுப்பாக ஐஸ்வர் யத்தையும் உபதேசித்து –
நானும் இவர்களை போலே யாகாதே ததேக போகனாய்க் கொண்டு அவனைப் புஜிக்கப் பெற்றேன் என்று திருப்பித்தராய் முடிக்கிறார் –

———————————————————————————————————————————–

இது திருவாய் மொழியில் பிரதிபாதிக்கிற அர்த்தத்தை சங்ஷேபிக்கிறார்-

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

பெரிய பிராட்டியாரும் எம்பெருமானும் திரு வனந்த ஆழ்வான் மேல் இருக்கும் இருப்பை காண்கை முக்த ப்ராப்யம் என்று கருத்து –
ஆகம் -உடம்பு
இருவரவர் -பிரசித்தமான ப்ரஹ்ம ருத்ரர்கள்
தேவ மனுஷ்யாதி ஸமஸ்த ஐந்து சஜாதீயனாய் வந்து
திருவவதாரம் பண்ணி
மோக்ஷ பிரதன் ஆம்
துஸ்தரமான சம்சாரத்தை கடக்க வேணும் என்று இருக்கும் ஆஸ்ரிதர் பரம் எல்லாம் தானே நிர்வஹிப்பான் ஆகை

————————————————————————————————————-

வீடு முதலாம் என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு -எம்பெருமான் தானே வேணுமோ
-அவனோடு உள்ள சம்பந்தமே மோக்ஷ ப்ரதம் என்கிறார் –

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-

கடக்க அரிதான துக்கத்தை உடைத்தான் ஜென்ம மரணாதிகள் ஒன்றும் இல்லாத மோக்ஷத்துக்கு அடியாம்-
பூத்துக் குளிர்ந்த நீரை உடைய பொய்கையில் முதலையாலே நலிவு பட யானையினுடைய இடரைப் போக்கின
நிரதிசய போக்யனாய் என்னை அநந்யார்ஹமாக அடிமை கொண்ட எம்பெருமானோட்டை சம்பந்தம் –
இங்கே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத் நிவாரணம் த்ருஷ்டாந்தயா சொல்லிற்று

————————————————————————————————————-

இருவரவர் முதலும் தானே -என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு ஸ்ரீ யபதியான எம்பெருமானுடைய
ஐஸ்வர்ய ஸூ சகமான சேஷ்டிதங்களை எங்கும் பிரத்யஷிக்கலாம் -என்கிறார் –

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் சம்ஹர்த்தாவான ருத்ரனுக்கும் திரு நாபி கமலத்திலும் திரு உடம்பிலுமாக
இடம் கொடுத்து அவர்களுக்கும் நிர்வாஹகனாய் –
உந்திக்குப் புணர்ப்பாவது -ப்ரஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமாகை-
தன் மார்விலே சம்லிஸ்ஷ்டை யான பெரிய பிராட்டியாரை உடையனாய் ஏக ஆர்ணவத்திலே ஸ்ருஷ்ட்யர்த்தமாக
சயனனாய் இருந்துள்ளவனுடைய பெரும் தொழில் –
தான் தனக்கு சத்ருசமான சேஷ்டிதங்களை உடையவன் என்றுமாம் –

——————————————————————————————————–

ஷூத்ரமான விஷய ஸூ கங்களை விட்டு நிரதிசய ஸூக ரூபமான மோக்ஷ புருஷார்த்தத்தை
வேண்டி இருப்பீர் எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

ஐந்து விஷயங்களிலும் ப்ரவணமாம் ஐந்து இந்த்ரியங்களுக்கும் வஸ்யராகையைத் தவிர்ந்து நிரதிசய போக்யமான
திரு நாட்டிலே புக வேண்டி இருப்பீர் –
உங்களுடைய ஸமாச்ரயண விக்னங்களை நிஸ் சேஷமாக போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானுடைய ஸமாச்ரயிக்கும் தசையில்
ஸாத்ய தசையில் போலே இனிதாய் இருந்துள்ள கல்யாண குணங்களிலே நிரந்தரமாக பிறவனார் ஆகுங்கோள் –

———————————————————————————————————–

ஸ்ரீ ஹயக்ரீவாதி ரூபத்தினாலே திருவவதாரம் பண்ணி அருளி தன்னாலே ஸ்ருஷ்டமான ஜகத்தை எல்லாம்
ரஷித்து அருளா நிற்கும் என்று கொண்டு -முதல் பாட்டில் ப்ரஸ்துதமான சர்வ சஜாதீயத்தை விவரிக்கிறார் –

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

நிரந்தர துக்காஹாமான ஜென்மம் அகப்பட மற்றும் எல்லாவற்றுக்கும் நிஷ் பலம் என்று கை விடாத காரணமாய்
ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் ஆதி தேவராய் உள்ள அயர்வரும் அமரர்கள் அதிபதி யானவன் –
என்னை பிரயோஜனாந்தர பரதையை தவிர்த்தவன் –

——————————————————————————————————————–

அர்ஜுனன் ஆராய்ந்த பகவத் பரத்வம் இன்னமும் சிலர் ஆராய வேண்டும்படி யாய் இருந்ததோ என்கிறார் –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

திருவடிகளின் நின்றும் புறப்பட்ட கங்கா ஸ்பர்சத்தாலே ருத்ரன் சித்தனாய் -சிவன் என்னும் பேரை உடையனாம் படி பண்ணின
எம்பெருமானுடைய சர்வ ஸூ லபமான திருவடிகளில் அழகிய பூ மாலைகளை சாத்தி
அர்ஜுனன் இப்படி ஆராய்ந்த பகவத் பரத்வம் –

———————————————————————————————————————–

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

பகவத் ஐஸ்வர்ய சாதனத்தில் ஒரோ ஒன்றே நிரபேஷ சாதனமான ஷீரார்ணவ சயனாதிகள் ஆகிற உபபத்திகளை சொல்ல வேணும்
-என்று உபக்ரமித்த ஆழ்வார் -அவற்றினுடைய அனந்தயத்தாலே ஒருவருக்கும் அறிய முடியாது என்கிறார் –
கேழல் -வராஹம்
பார் என்னும் மடந்தையை -பூமிக்கு அபிமானியான பிராட்டியை
மால் -சர்வேஸ்வரன்
செய்கின்ற மால் -பண்ணுகிற வ்யாமோஹம் –

————————————————————————————————————————

அவனுடைய அத்புத கர்மங்கள் தனித்தனியும் எத்தனையேனும் அளவுடையார்க்கும் பரிச்சேதிக்க முடியாது என்கிறார் –

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

சர்வேஸ்வரனான கிருஷ்ணனைக் காண்கைக்கு அளவுடையார் இல்லை –
-எத்தனையேனும் அளவுடையார்க்கும் காண ஒண்ணாத படி அபரிச்சேதயமாய் இருக்கும் அவன் படி –
பிரளய காலத்தில் திரு வயிற்றிலே ஜகத்தை வைக்கிற போது ஜகத்து எல்லாம் கூட ஓர் அவதானத்துக்கும் போந்தது இல்லை
-இது அபரிச்சேதயைதைக்கு உதாஹரணம் –
உயர்த்தியே ஸ்வ பாவமாக உடைத்தான பரமபதஸ்தரான நித்ய ஸூ ரி ப்ரப்ருதிகள் என்ன -முக்தாத்ம ஸ்வரூபம் என்ன –
பத்தரான திர்யக்காதிகள் அகப்பட எல்லா பதார்த்தங்களுக்கும் ஓர் இடமும் விடாதே எங்கும் வியாபித்து உளனாம் –

———————————————————————————————————————–

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

எம்பெருமானுடைய சர்வகத த்வத்தை இசையாதார் இசையை வேண்டும்படியாக ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்காக அபேஷா சமகாலத்திலே
தூணிலே வந்து தோற்றி அருளின ஸ்ரீ நரசிம்ஹத்தின் உடைய பெருமை ஒருவராலும் ஆராயும் அளவு அல்ல -என்கிறார் -வீய -முடிய –

———————————————————————————————————–

அல்லாதார் செய்யப்படி செய்கிறார் -உபய வித மஹா விபூதிகனாய் இருந்த எம்பெருமானை நான் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

பரமபதம் ஸ்வர்க்கம் நரகம் இவை முடிவாக ஈரப்பாடு உடைத்தான தேவர்கள் நடுவாக மாற்று உண்டான சகல பதார்த்தங்களுக்கும்
-த்ரிவித காரணமும் தானே யாய்க் கொண்டு சர்வ கதனாய்
சம்சாரிகளோடு வியாவ்ருத்தனாய் திரு நாட்டிலே வ்ரஷூகலாவஹம் போலே இருக்கிற
திரு நிறத்தை உடையனாய் என்னை விஷயீ கரித்த கிருஷ்ணனை

———————————————————————————————————–

நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றவர்கள் இது திருவாய் மொழியில் சொன்னபடியே எல்லாபடியாலும்
விலக்ஷணமான முக்த ப்ராப்யமான ஐஸ்வர்யத்தைப் பெறுவார் என்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

ஆழ்வாரோட்டை கலவியாலே விஸ்திருதமாய் சிவந்த திருக் கண்களையும் நிறம் பெற்ற திரு மேனியையும் உடையனான சர்வேஸ்வரனை
பகவத் விஷயீ காரத்தாலே புஷ்டம் ஆகையால் வண்டுகள் தேனிலே அலையா நின்ற திருகி சோலையை உடைய திரு வழுதி வள நாட்டை உடையரான
பண்டலையில் -பண்ணின் மேல் / விண்டலையில் -விண்ணின் மேலே –

———————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: