திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -2-9-

கீழே ஈஸ்வரன் இவருக்கு மோக்ஷத்தைக் கொடுப்பானாய்ச் சமைந்து நிற்கிற படியைக் கண்டு தமக்கு பகவத் பார தந்தர்யத்தால்
அல்லது செல்லாத படியைப் பார்த்து –
எனக்கு என்று ஒரு புருஷார்த்தைக் கோலுமது மமகார விஷயம் ஆகையால் ஐஸ்வர்யார்யாதிகளோ பாதி ஹேயம் என்று அத்தை உபேக்ஷித்து
பரமபதஸ் தத்தனாய் ஸூ கியாகவும் -சம்சாரத்தில் தூக்கியாகவுமாம் இவற்றில் நிர்பந்தம் இல்லை
-உனக்கே யாய் இருக்கும் இருப்பு எனக்கு வேண்டுவது -என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்
இது தான் ஸ்வரூபம் அன்றோ அபேக்ஷிக்க வேணுமோ என்னில் புருஷார்த்தங்களுக்கும் சாதாரணமான பிரகிருதி சம்பந்தத்தோடே
இருக்கையாலே அபேக்ஷிக்கை பிராப்தம் –
அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூபமாய் இருக்கச் செய்தே-உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்வீ காரம் வேண்டுமா போலே
உபேயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்வரூப அனுகூலமான புருஷார்த்தத்தை அபேக்ஷிக்கை பிராப்தம்
இவருடைய இந்த ஸ்வரூப ஞானம் இராமாயண புருஷர்கள் பக்கலிலே காணலாம்
விலலாப சபா மத்யே ஜகர் ஹேச புரோஹிதம்-என்று ஸ்ரீ பரத ஆழ்வான்
பரவா நஸ்மி காகுத்ஸத-இத்யாதி -குருஷ்வமாம் அநு சரம் -என்று இளைய பெருமாள் –

——————————————————————————————————-

எத்தனையேனும் வி லக்ஷணமான பரம பதத்திலும் எனக்கு அபேக்ஷை இல்லை –
-உன் திருவடிகளை என் தலையிலே வைக்கும் இத்தனையே வேண்டுவது என்கிறார் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்-
வீடு -மோக்ஷம் /நா வீடு -உத்க்ருஷ்டமான மோக்ஷம் -அவித்யா நிவ்ருத்தம் மாத்திரம் அன்று
எம்மா வீடு -எல்லா பிரகாரத்தாலும் உத்க்ருஷ்டமான மோக்ஷம் கிடீர் என்ன -ஆனாலும் அபேக்ஷை இல்லை –
வீட்டுத் திறமும் -வீட்டிடை யாட்டம் –
செப்பம்-செப்போம்-சொல்லோம்-
என் கருத்து அறிக்கைக்காக -நீ கொள் -என்றும் நாம் வேண்டா -என்றும் நிஷேத அர்த்தமாகவும் பிரசங்கிக்க காட்டுவோம் அல்லோம் –
ஒரு தமிழன் -எம்மா வீட்டு விகற்பங்களும் செவ்வியவாம் -என்றான் -அப் பக்ஷத்தில் சாலோக்ய ஸாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம்
-என்கிற இவை எல்லாம் இம் மோக்ஷத்தில் உண்டாகை-
உமக்குச் செய்ய வேண்டுவது என் என்ன –
நின்-செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
ப்ராப்யமாய் -அகவாய் சிவந்து -அதுக்கு பரபாகமான புறா வாயில் கறுப்பை உடைத்தாய் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம்
இவற்றாலே நிரதிசய போக்யமான திருவடிகளை –
ஆஸ்ரிதற்கு அருமைப் பட வேண்டாத படி செவ்வியதாய் பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம்
என் தலையிலே கொக்குவாயும் படி கண்ணியும் போலே சேர்த்து அருள வேணும்
சேர்த்து -என்று ல்யப்பு அன்று -விதியாய் -சேர்த்து அருள வேணும் என்கை /ஒல்லை -ஈண்டென
கைம்மா துன்பம் கடிந்த பிரானே-
இது த்ருஷ்டாந்தம் -கைம்மா துன்பம் -என்னும் அத்தனை -பேச்சுக்கு நிலம் அன்று
பாய்மா -குதிரை / கைம்மா-ஆனை-இப்பேச்சாலே சொல்லிற்று துதிக்கை ஒழிய முழுகிற்று என்கை –
துன்பம் கடிந்த -பரமாபதமா பன்ன-என்கிற தசையில் -அதந்த்ரி தசமூ பதி ப்ரஹித ஹஸ்தம் -என்று
த்வரையோடு வந்து சவாசனமாக துக்கத்தைப் போக்கினவனே
பிரானே-அவனுக்கு உதவிற்று தமக்கு உதவிற்றாய் இருந்தபடி
நம்மோடு உமக்கு சம்பந்தம் ஏதாக அபேக்ஷிக்கிறீர் என்ன
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே
நீ ஸ்வாமி -நான் சேஷ புதன் –
உத்க்ருஷ்டம் என்று வேண்டுகிறேன் அல்லேன்
நிஷித்தம் என்றாலும் விட ஒண்ணாத படி எனக்கு ராக பிராப்தம் -மற்ற என்ன வேணும் என்ன
ஈதே-உன் திருவடிகளை என் தலையிலே வைக்கும் இதுவே –

————————————————————————————————

இப்புருஷார்த்தத்தை பெற்றேன் நான் என்று தெளியும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

ஈதே யானுன்னைக் கொள்வது-
இவரை பல காலும் கேட்கவே தடுமாறி அகவாயில் கிடந்தது தெரியும் என்று திரியவும் கேட்கவே
ஈதே -இப்படி நிச்சயித்து எத்தைக் கொண்டேன் என்ன
யான் உன்னை -இரண்டு தர்மியையும் கொண்டு அறியும் அத்தனை
இது நம்மை அர்த்திப்பாரும் இல்லை -பாத்தாலே அதை நாம் கொடுத்து அறிவதும் இல்லை -உம்முடைய பக்கலிலே கண்டு அறியும் இத்தனை –
இது உமக்கு எத்தனை நாளைக்கு நிற்கும் என்ன
எஞ்ஞான்றும் –
யாவதாத்ம பாவி நிற்கும் –
இவ்வடிமைச் சுவட்டில் ருசியைப் பிறப்பித்தார் யார் என்ன
என்-மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
உன் வடிவு அழகு இ றே ருசி ஜனகம்
கருமையோடே கூடின ஒளியை உடைய மணி போலே இருக்கிற வடிவு அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே
அபேக்ஷை தான் என் என்ன
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்-கைதா-
ஸ்வ யத்தனத்தாலே காண்பார்க்கு கிட்ட அரிதான திருவடிகளை நீயே காட்டக் காண இருக்கிற நான் பெற்றேன் என்று தெளியும் படி பண்ண வேணும் –
ஞானக்-கைதா-
மயர்வற மதிநலம் அருள பெற்ற போதே பெற்றிலீரோ என்று நினைத்து இருக்குமது போராது
நான் உன்னைப் பெற்றேன் என்று இருக்கும் படி தெளிவாகிற கையைத் தர வேணும்
ஞானம் என்று பக்தியாய் -பக்தியால் நம்மைப் பெற வேண்டாவோ என்ன -அத்தையும் நீயே தந்து அருள வேணும் என்கிறார் என்றுமாம்
ஞான பிரதானம் அமிழ்ந்தார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே ஞானக் கை தா என்கிறார்
எம்பாருக்கு முதலியாண்டான் அருளிச் செய்த வார்த்தை -ஒருவன் கிணற்றில் விழுந்தால் இருவராக எடுக்கும்
காலக் கழிவு செய்யலே-
செய்கிறோம் என்ன ஒண்ணாது செய்து கொடு நிற்க வேணும் –

—————————————————————————————————–

காயிகமான அடிமையை வேண்டினார் முதலிலே -அனந்தரம் மாநஸமான அடிமையை வேண்டினார்
-இதில் வாசிகமான அடிமையை வேண்டுகிறார் –

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் –
விஷய ப்ராவண்ய ரூபமான துஷ் கர்மங்களை பண்ணாதே கோல் என்று பிரசாதத்தைப் பண்ணும் –
விஷய ப்ராவண்யத்தை மாற்றுவது சாஸ்த்ரா பிரதாநாதிகளாலேயோ- எண்ணில்
என்-கையார் சக்கரக் கண்ண பிரானே-
கையும் திரு வாழியுமான அழகையும் -ஸுலப்யத்தையும் காட்டி பாஹ்ய ருசியைத் தவிர்த்த மஹா உபகாரகனே –
ஐயார் கண்டம் அடைக்கிலும்-
ஐயருகை யாவது -சிலேஷ்மம் செறிகை-அது மிடற்றைக் கட்டிலும்
துர்க்கதா வபி ஜாதாயாம் -என்கிறபடி உத்க்ரமண தசையாய்ச் செல்லிலும்
நின் கழல்-எய்யாது ஏத்த-
உன் திருவடிகளை இளையாது ஏத்தும் படி –
துக்க நிவ்ருத்தியே யன்று எனக்கு வேண்டுவது -உன்னை அனுபவிக்க வேணும் என்கை –
இது ஒரு ஸூ க்ருத பலமே அன்றோ என்ன
அருளிச் செய் எனக்கே-
இவன் பெற்றிடுவான் என்று இரங்கி அருள வேணும் –
இது சர்வருக்கும் பிரயோஜனம் ஆகாதோ என்ன
எனக்கே -எனக்கு ஒருவனுக்கும் செய்து அருள வேணும் –

——————————————————————————————

மநோ வாக்யங்கள்-ஸ்வரூப அனுகூலமாக தேவர் பக்கலிலே பிரவணனாம் படி பண்ணி அருள வேணும் என்றார் -கீழ் மூன்று பாட்டாலே –
அதுக்கு அடியான உபநிஷத் குஹ்யமான பாரதந்தர்யத்தை நிஷ் கர்ஷித்து அபேக்ஷிக்கிறார் இதில் –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

எனக்கே யாட்செய்
ஆட செய் என்று -ஸ்வாதந்தர்யத்தை வியாவர்த்திக்கிறது
எனக்கே ஆடச்செய் -என்று விஷயாந்தர வ்யாமிச்ரத்தையை வியாவர்த்திக்கிறது
எக்காலத்தும்-
ஒழி வில் காலமெல்லாம் என்கிறபடியே -நித்தியமாக வேணும் –
என்று –
க்ரியதாமிதி மாம் வத-என்று ஏவிக் கொண்டு அருள வேணும் –
என்-மனக்கே வந்து –
தூரஸ்தன் ஆகாதே என் ஹிருதயத்திலே புகுர வேணும்
இடைவீடின்றி –
வேறு போக்கு இன்றியே நிரந்தரமாக வேணும் –
மன்னி-
திரு உள்ளத்தில் அந்நிய பரத்தை அன்றிக்கே ஸ்தாவர பிரதிஷ்டையாக வேணும்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே-
இருந்து கொள்ளும் கார்யம் சொல்லுகிறது –
சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இ றே
அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்
ஸ் ரக் சந்த நாதிகளைப் போலே மிக்க அம்சம் கழிக்கலாய் இருக்கை-
கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது –
முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் –
எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது
தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –
எனக்கு அசாதாரணமான சிறப்பு -ப்ராப்தனாய் பவ்யனானவனைக் கொள்ளும் சிறப்பு –
ஸ்வரூப ஞானம் உடைய நான் கொள்ளும் சிறப்பு –
சிறப்பு ஆகிறது ஏற்றம் -அதாகிறது புருஷார்த்தம் –
தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டாய் -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –

——————————————————————————————–

சரீர விஸ்லேஷம் பிறந்தால் உமக்கு ஸ்வரூபம் எது -ஸ்வரூப அனுரூபமாய் இ றே புருஷார்த்தம் இருப்பது என்ன
நான் யாராய் ஆகிறேன் -நான் ஆயிற்ற வஸ்து அத்தலைக்கே -யாய் யதுவே -எனக்கு வேண்டுவது என்கிறார் –

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

சிறப்பில் வீடு -ஸூ கை கதா நமான-மோக்ஷம்
ச்வர்க்க -பரிமித ஸூ கமான ஸ்வர்க்கம்
நரகம்-நிஷ்க்ருஷ்ட தூக்கமே யான நரகம்
இறப்பில் எய்துக –
சரீர விஸ்லேஷத்தில் -பிராபிக்க –
இத்தால் -தேஹாதி வியாதிரிக்தமாக ஆத்மாவும் உண்டாய் பரம பதாதிகளை அனுபவிக்கவுமாம்
எய்தற்க-பிராபியாது ஒழிக-தேஹாதிகளே யாகவுமாம் -இதில் ஒரு நிர்பந்தமும் இல்லை –
யானும்-ஸ்வரூப நிர்ணயித்தில் நிர்பந்தம் இன்றிக்கே-அத்தலைக்கே யாம் அதுவே பேறு-என்று இருக்கிற நானும் –
ச சப்தத்தால் நானும் இத்தைப் பெற்றேனாய் விடுவது காண் என்கிறார்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை-
ஜென்ம ஹேதுவான கர்ப்ப சம்பந்தம் இன்றிக்கே இருக்க அனுக்ரஹத்தாலே அசங்க்யேய அவதாரங்களை பண்ணும் சர்வேஸ்வரனை –
மறப்பு ஓன்று இன்றி –
அவதாரங்கள் -அவற்றில் உண்டான சேஷ்டிதங்கள் -இவற்றில் ஒன்றும் மறவாதே
இத்தலையில் உள்ள வெல்லாம் மறக்கலாம்
அத்தலையில் ஒன்றும் நழுவ ஒண்ணாது
என்றும் மகிழ்வேனே–
மகிழ்கை என்றும் அனுபவம் என்றும் பர்யாயம் -ப்ரீதி பூர்வகமாக என்றும் அனுபவிக்க வேணும் –

————————————————————————————————

தேவாதி பதார்த்தங்களை தனித் தனியே நியத ஸ்வபாவங்கள் ஆகும்படி பண்ணினால் போலே –
எனக்கும் உன்னையே அனுபவிக்கையே -ஸ்வபாவமாகப் பண்ண வேணும் என்கிறார் –
தேவாதி சர்வ ஸ்ருஷ்டியும் பண்ணின நீ ஸ்ருஷ்ட்டி பிரயோஜனமாக உன்னுடைய அனுபவத்தை
மானஸ அனுபவ மாத்திரம் அன்றிக்கே பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணும் படி எனக்குத் தர வேணும் என்கிறார் ஆகவுமாம் –

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

மகிழ் கொள் தெய்வம் –
மனுஷ்யாதிகளில் காட்டில் போக ஸ்ம்ருதியாலே ப்ரீதி உக்தரான தேவர்கள்
உலோகம்
ப்ரத்யக்ஷ ஸித்தமான அசித் அம்சம் -லோக்யத இதி லோக –
அலோகம்
ப்ரத்யக்ஷத்தால் காண ஒண்ணாத சேதன வஸ்து
மகிழ் கொள் சோதி
ப்ரகாசகத்வாதிகளாலே ப்ரீதி உக்தரான சந்த்ர ஆதித்யர்கள்
மலர்ந்த வம்மானே
பஹுஸ்யாம் -என்கிற படியே ஸூஷ்ம சித்த அசித் விசிஷ்டானாய்க் கொண்டு விஸ்திருதனான சர்வேஸ்வரன்
மகிழ் கொள் சிந்தை –
நீ என்றால் நெஞ்சு ப்ரீதி உக்தனாக வேணும் –
சொல்-
அந்த ப்ரீதி வழிந்த சொல் –
செய்கை
ப்ரீதி காரிதமான செயல்
கொண்டு என்றும்-மகிழ்வுற்று –
சர்வ காலமும் நானும் ப்ரீதி உக்தனாய்
உன்னை வணங்க வாராயே –
ப்ராப்தனான உன்னை முறையிலே அனுபவிக்க வேணும் –

——————————————————————————————

வாராய் என்ற போதே வரக் காணாமையாலே விஷண்ணராய்
பின்னையும் அபி நிவேசத்தாலே நான் உன்னைக் கிட்டும் படி வாராய் என்கிறார் –

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

வாராய்
வர வேணும் –
யுன் திருப்பாத மலர்க்கீழ்-
பிராப்தமுமாய் -பூஜ்யமுமாய்-போக்யமுமான -திருவடிகளின் கீழே
பேராதே
இடை விடாதே
நான்
ஸ்வரூப ஞானம் உடையனான நான்
வந்தடையும் படி
வந்து அடிமை செய்யும் படி
தாராதாய் என்கைக்கும் -கீழ் வாராய் -என்கைக்கும் பொது நடுவு சொன்னவிடம் -அந்நிய பர உக்தியில் ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –
தாராதாய் –
உன்னை தருகிறதில்லை -வாராத இன்னாப் போலே இத்தை நிரூபகமாகச் சொல்லுகிறார்
உன்னை என்னுள் வைப்பில் என்றும்-ஆராதாய்-
இது பெறாது ஒழிந்தால் -முகவாய் பெரிய திரு நாளாகச் செல்ல வேணுமோ
கிட்டா விட்டால் மறந்து பிழைக்க லாகாதோ
நிரதிசய போக்யனான உன்னை பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணாத போது தரிக்க மாட்டாத என்னுள்ளே நிரந்தரமாக பிரகாசிப்பிக்கிறவனே –
எனக்கு என்றும் எக்காலே-
எனக்கு எக்காலத்திலும் எல்லா அவஸ்தைகளிலும் –
எனக்கு என்றும் எக்காலமும் -உன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே யான் வந்து அடையும் படி -வாராய் –

———————————————————————————————

தம்முடைய விடாயாலே அத்யல்ப கல்பம் ஆகிலும் சம்ச்லேஷிக்கப் பெறில் பின்னை
ஒரு காலமும் அதுவும் வேண்டா வென்று அருளிச் செய்கிறார் –

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

எக்காலத்து –
எத்தனையேனும் கூறிட ஒண்ணாத அத்யல்ப காலத்திலும்
எந்தையாய் என்னுள் மன்னில் –
வகுத்த ஸ்வாமியாய் என்னோடு கலக்கப் பெறில்
மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்-
மற்று எக் காலத்திலும் இது தன்னையும் வேண்டா என்கிறார் -என்பர் ஆளவந்தார்
எக்காலம் என்றது -எல்லாக் காலத்திலும் என்றபடி
எக்காலத்திலும் ஈது ஒன்றும் ஒழிய மற்று ஒன்றும் வேண்டேன் என்கிறார் –என்று எம்பெருமானார்
இது யாருடைய பரிமாற்றம் என்ன
மிக்கார்
பகவத் ப்ரேமத்தால் அதிசயித்தவர்கள்
வேத விமலர்
வேதத்திலே நிர்மலராக ப்ரஸித்தர் ஆனவர்கள் –யத்ர ருஷய பிரதமஜா யே புராணா
விழுங்கும்
நித்ய அனுபவம் பண்ணும்
என்-அக்காரக் கனியே
அவர்களுக்கு சர்வ வித போக்யமும் தானே என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் –
அக்காராம் போலேயும் கனி போலேயும் இருக்கை –
அக்காராம் வ்ருஷ ஸ்தானே யாய் -அது கோட் புக்கு பலித்தால் போலே இருக்கை
அவர்களுக்கு நிரதிசய போக்யனான உன்னை எனக்கு காட்டினவனே
உன்னை யானே –
ப்ராப்தனாய் போக்யனான உன்னை -உன் போக்யத்தையிலே சபலனான நான் –

————————————————————————————————

இஸ் சம்பந்தத்தையும் உன் போக்யத்தையும் அநாதி காலம் இழந்தேன் என்கிறார் –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

யானே –
அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்
என்னை யறியகிலாதே
தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்
யானே என்தனதே என்று இருந்தேன்
ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்
இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இ றே இருப்பது
என்தனதே என்று இருந்தேன்
நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்
தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்
இருந்தேன் –
இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்
அர்த்த தத்வம் இங்கனே யன்றோ என்ன
யானே நீ
நானும் உனக்கு பிரகாரமே –
என்னுடைமையும் நீயே
என் உடைமையும் உனக்கு பிரகாரமே
இது எங்கே உள்ள பரிமாற்றம் என்ன
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –
வானில் உள்ளார் முறை அறிந்து ஏத்த
நீ -சேஷியான உத்கர்ஷத்தோடே இருக்குமவன் அல்லையோ –
மாஞ்சா க்ரோசந்தி போலே -எம் என்று தமக்கும் அவர்களோடே பிராப்தி உண்டாய் இருக்கிற படி

————————————————————————————————

என்னை விசுவாசியாதே பிரதிபந்தகங்களைப் போக்கி என்னை ஈண்டெனத் திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேணும் என்கிறார் –

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

ஏறேல் ஏழும் வென்று
ஏறு ஏழையும் நிரசித்து – ஏல்-அசை-
நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தகமான ருஷபங்கள் ஏழையும் வென்றாய் –
ஏர் கொள் இலங்கையை-நீறே செய்த –
கட்டளை பட்டு அதி ஸம்ருத்தியான இலங்கையை பஸ்மசாத்கரித்த
நெடுஞ்சுடர்ச் சோதி
ராவணனை அழியச் செய்து வீர ஸ்ரீ உடன் நின்ற புகர்
அவர்களுடைய விரோதிகளை போக்கினால் போலே -என்னுடைய பிரதிபந்தகங்களையும் போக்க வேணும் –
தேறேல் என்னை
என் பக்கல் வந்தால் அவ்வளவு போராது-
என் கையில் என்னைக் காட்டித் தரில் நான் அனர்த்தத்தை விளைவித்துக் கொள்வான்
தேறேன் என்ற பாடமான போது -தெளியேன் என்னுதல்-தரியேன் -என்னுதல் –
உன் பொன்னடி சேர்த்து ஒல்லை-வேறே போக எஞ்ஞான்றும் விடலே-
என்னை நான் இசைந்த போதே சடக்கென உன் திருவடிகளில் சேர்த்து அருளி சர்வ காலமும் பிரியாத படி பார்த்து அருள வேணும் –

————————————————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழியில் ஸ்ராத்ததானார் இது தானே தாம் நிஷ்கர்ஷித்த ப்ராப்யத்தை பெறுவார் என்கிறார் –

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

விடலில் சக்கரத் தண்ணலை-
கையில் திரு ஆழியை விடாத சர்வேஸ்வரனை –
இது திரு வாழியை விடில் அன்றோ நான் ஆஸ்ரிதரைப் பிரிவது
எஞ்ஞான்றும் விடலே என்னக் கடவீரோ
மேவல்-விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-
அவன் விடிலும் அவனை விடில் தரியாத ஆழ்வார் அருளிச் செய்தது
வண்மை யாவது -இவ்வனுபவத்துக்கு பாசுரம் இட்டு உபகரித்த படி
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்-
அப்யசித்தார்க்கு அநர்த்த கந்தம் இல்லாத படி இருக்கிற ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இப்பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –
ஸ்ராத்தராய் இதிலே இழிவாருக்கு இது தானே -தனக்கே யாக என்னைக் கொள்ளும் இதே -என்று
நிஷ்கர்ஷித்த அஹங்கார கந்தம் இல்லாத பேற்றைக் கொடுக்கும் –

——————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: