திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -2-8-

தம்முடைய பரிகரத்தையும் தம்மைப் போலே ஆக்கி -இத்தால் போராது -என்று பார்த்து -முக்த ப்ராப்யமான
ஐஸ்வர்யத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருகையில் ஒருப்பட்டு இருக்கிற இருப்பைக் கண்டு அதி ப்ரீதராய்
சம்சாரிகள் படுகிற அநர்த்தத்தைக் கண்டு -எல்லாரும் ஈத்ருஸ போக பாகிகள் ஆக வேணும் என்று மோக்ஷ பிரதத்வத்தை உபதேசிக்க
-அது ராவணனுக்கு சொன்ன ஹிதம் போலே நிஷ்பலமாகையாலே
இவர்களை போலே ஆகாதே நாம் ததேக போகராகப் பெற்றோமே -என்று திருப்பித்தராய் முடிக்கிறார்
இது திருவாய் மொழி பரதவ உபதேசம் என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்
பல இடத்திலும் பரத்வம் சொல்லா நின்றது -மோக்ஷ பிரதத்வம் தனியே சொல்ல வேண்டுவது ஓன்று -அத்தைச் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்வார் –
இவை தான் ஒன்றை ஓன்று ஒழிந்து இராது -மோக்ஷ பிரதத்வம் சர்வேஸ்வரத்தோடே வ்யாப்தம்
சர்வேஸ்வரனாகில் மோக்ஷ பிரதனாய் இருக்கும்
மோக்ஷம் ஆகிறது -தனக்கு அசாதாரணமாய் முக்த ப்ராப்யமான தன்னுடைய ஐஸ்வர்யம்
அதாகிறது பிராட்டி திரு வனந்த ஆழ்வான் முதலான நித்ய ஸூ ரிகளை பரிகாரமாக உடைத்தாய்
அளவுடையார்க்கும் ஸ்வ யத்ன சாத்தியம் அன்றிக்கே தன்னாலே தன்னைப் பெறுவார்க்கு அநாயாஸ ஸித்தமாய்-நிரதிசய ஸூக ரூபமாய்
அபரிச்சேதயமாய் -அதி ஸ் ப்புடமாய் சர்வ உத்க்ருஷ்டமான ஐஸ்வர்யம் –

—————————————————————————————–

சர்வ சங்க்ரஹமாய் -இதிலே ஓர் ஒரு பதத்தைப் பற்றி மேலில் பாட்டுக்களும்-அவை தம்மைப் பற்றி எழுவனவும் ஆகின்றன மேல் –

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

அணைவது அரவணை மேல்-
மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றை ஸ்வ பாவமாக உடைய திரு வனந்த ஆழ்வான் மேலே அணைவது-
சேஷ பூதன் அடிமை செய்து அல்லது தரிக்க மாட்டாதாப் போலே
சேஷியும் திரு அநந்த ஆழ்வான் மேல் அணைந்து அல்லது தரியானாய் இருக்கிறபடி
பூம்பாவை
பூ என்று அழகு -பாவை என்று ஸ்த்ரீத்வம்
நிரவாதிகமான போக்யதையும் ஸ்த்ரீத்வத்தையும் உடையாளாய் இருக்கை
தேஹ குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் குறைவற்று இருக்கை
யாகம்-புணர்வது –
இவருடைய ரூப குணத்திலே துவக்குண்டு ஆத்ம குணத்து அளவும் செல்ல மாட்டாது இருக்கை
அணைவது புணர்வது -என்கையாலே போகம் ஒத்து இருக்கிற படி
ரம மாணா வநேத்ரய -மாதா பிதாக்கள் கூட இருக்கும் படுக்கையில் சம்பந்தமே ஹேது வாக ஏறும் புத்ரனைப் போலே
பிராட்டியும் அவனும் திரு அநந்த ஆழ்வான் மேலே இருக்க
தமேவம்வித் பாதே நாத்யாரோஹதி -என்கிறபடியே அதிலே ஏறி அவர்களை இவனை ணிக்கை இறே முக்த ப்ராப்யம் –
இருவரவர் முதலும் தானே
ந ப்ரஹ்ம ந ஈசான -என்று சுருதி பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு காரண பூதன்
காரணந்து த்யேயா -என்கிறபடியே உபாஸ்யனும் அவனே -ப்ரஹ்மாதிகளுக்கு காரணத்வம் இல்லை -பாவ நாத்ர யான்விதர் யாகையாலே
இணைவனாம் எப்பொருட்கும் –
தேவாதி சகல பதார்த்தங்களோடும் சஜாதீயனாய் அவதரிக்கும்
அவதார பிரயோஜனம் சொல்லுகிறது
வீடு முதலாம்-
மோக்ஷ ஹேதுவாகைக்காக அவதரிக்க வேண்டுகிறது
பரமபதம் சென்று அபேக்ஷிக்க நிலம் அல்லாமையாலே சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறது
உத்க்ருஷ்டன் ஆகில் வெகுண்டு அகலுவார்கள் -தாழப் பிறக்கில் காற்கடைக் கொள்ளுவார்கள்
சர்வ சாதாரணனன் மோக்ஷ பிரதன் ஆகைக்காக வந்து அவதரித்தால்-சர்வ முக்தி பிரசங்கியாதோ என்னில்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –
சம்சாரம் ஆகிறது ஒரு கடல் -அது நம்மால் கடக்க அரிது -ஒரு சர்வ சக்தியைப் பற்றி கடக்க வேணும் -என்று
நினைப்பார்க்கு ப்ரதி பூவாய்த் தலைக்கு கட்டிக் கொடுக்கும்
சர்வ பர நிர்வாஹகன் இறே– ப்ரதி பூ
விஷ்ணு போதம் என்கையாலே தெப்பம் என்னவுமாம் –

—————————————————————————————————–

வீடு முதலாம் என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு அவன் தானே செய்ய வேணுமோ –
-அவனோடே உண்டான சம்பந்தமே மோக்ஷ ப்ரதம் என்கிறார் –

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்-
துரஸ்தமான துக்கத்தை உடைய ஜென்மம் முதலான சர்வ விகாரங்களையும் கடத்தும் –
நீந்தும்
நீந்தும் –என்றது நீத்தும் என்றபடி -நீந்தும் என்கிற வர்த்தமான நிரதேசத்தாலே துஸ்தரம் என்கை –
துயரில்லா வீடு முதலாம்-
துக்க கந்த ரஹிதமான மோக்ஷத்துக்கு ஹேதுவாம் -இது பிள்ளை திரு நறையூர் அரையர் நிர்வாகம்
நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்றும் –
நீந்தும் துயரான எவ்வெவையும் இல்லா வீடு முதலாம் என்றுமாம் –
இவர் வீடு என்கிறது -சம்சார நிவ்ருத்தி மாத்ரத்தை அன்று –
ஸூக பாவைக லக்ஷனை யான பகவத் ப்ராப்தியை –
முக்திர் மோஷா மஹா நந்த -என்னைக் கடவது இ றே
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த-
இது த்ருஷ்டாந்தம் –
பரப்பு மாறப்பூத்து குளிர்ந்த நீரை உடைய பொய்கையில் முதலையாலே நலிவு பட்ட யானை இடரைப் போக்கின
பூந்தண் துழாய் என் தனி நாயகன் –
செவ்வியை உடைத்தாய் குளிர்ந்த திருத்த துழாயாலே அலங்க்ருதனான அத்விதீய நாயகன் –
இது திருத் துழாயின் குளிர் வாசனையால் யாயிற்று யானையை ஆசுவாசிப்பித்தது-
ஆணைக்கு உதவினதும் தமக்கு உதவிற்றாக நினைத்து இருக்கிறார்
புணர்ப்பே –
அவனோட்டை சேர்த்தி -சம்பந்தம்
தனி நாயகன் புணர்ப்பே –வீடு முதலாம் -என்று அந்வயம்-

———————————————————————————————————

இருவரவர் முதலும் தானே -என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு ஸ்ரீ யபதியான அவனுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களை – எங்கும் காணலாம் -என்கிறார் –

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்-
ஸ்ருஷ்டிக்கு கடவ ப்ரஹ்மாவுக்கும் சம்ஹாரத்துக்குக் கடவ ருத்ரனுக்கும் நிர்வாஹகனாம் –
ததா தர்சித பந்தா நவ் -ஸ்ருஷ்டிம் தத கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே-
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி-
தன்னை உண்டாக்கின திரு நாபி கமலத்திலே இருந்தால் யாயிற்று -ஸ்ருஷ்டிக்கு ஷமன் ஆவது –
ருத்ரன் திரு மேனியில் வலப் பார்ஸ்வத்தைப் பற்றி இருந்தால் யாயிற்று ஜகத் சம்ஹாரத்துக்கு ஷமன் ஆவது –
இவர்கள் இருப்பை மாற்றினால் அதிகரித்த காரியத்துக்கு ஷமர் அல்லர் என்கை –
சாமா நாதி காரண்யத்தாலே அந்தர்யாமித்வம் சொல்லுகிறது –
புணர்ந்த தன்னுந்தி-என்கையாலே காரணத்வம் சொல்லிற்று –
ஆகத்து மன்னி-என்கையாலே திருமேனியைப் பற்றி லப்த ஸ்வரூபம் என்னும் இடம் சொல்லிற்று –
புணர்ந்த திருவாகித் தன் மார்வில்-
தன் மார்விலே சம்ச்லேஷிக்கப் பட்ட பெரிய பிராட்டியாரை உடையவன் –
கீழே நீர்மை சொல்லிற்றாய் -இத்தாலே மேன்மை சொல்லுகிறது
தான் சேர்- புணர்ப்பன் –
ஏகார்ணவத்திலே ஸ்ருஷ்ட்யர்த்தமாக கண் வளர்ந்த சேஷ்டிதத்தை உடையவன் என்னுதல்-
தனக்கு சத்ருசமான சேஷ்டிதங்களை உடையவன் என்னுதல் –
பெரும் புணர்ப்பு எங்கும் புலனே-
இப்படி பட்ட அதி மானுஷ சேஷ்டிதங்கள் எங்கும் பிரசித்தம் அன்றோ என்கை –

———————————————————————————————————

இப்படிப்பட்டவன் என்று அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அற்று மோக்ஷத்தை பெற வேண்டி இருப்பார்
-அவன் கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோள் -என்கிறார் –

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி-
ஐந்து விஷயங்களிலும் ப்ரவணமாம் ஐந்து இந்த்ரியங்களுக்கும் வஸ்யராகை தவிர்ந்து -சில பதார்த்தத்தை வறை நாற்றத்தைக் காட்டி
முடிக்குமா போலே -சப்தாதிகளிலே மூட்டி நசிப்பிக்கையாலே இந்திரியங்களை பொறி என்கிறது –
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்-
இவ் விபூதி அநந்த கிலேச பாஜநமாய் இருக்குமா போலே முடிவிறந்த போக்யதையை உடைத்தாய் இருக்கை-
நாடு -என்கையாலே -அவித்யாதி நிவ்ருத்தியாதிகள் அன்று -மோக்ஷம் என்கை –
புகுவீர் என்கையாலே -அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச பிராப்தியையும் -அதுக்கு இச்சையே அதிகாரம் என்னும் இடத்தையும் சொல்லுகிறது –
விரோதி வர்க்கம் செய்வது என் என்னில் –
அலமந்து வீய அசுரரைச் செற்றான்-
அஸூரசங்கங்களை தடுமாறி முடியும் படி நிரசித்தால் போலே நிரசிக்கும்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –
ஸ்மர்த்தவ்ய விஷய சாராஸ்யத்தாலே ஆச்ரயண தசையே தொடங்கி ரசியா நிற்கிற கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோள்
ஓவாதே –
அபர்வணி கடல் தீண்டல் ஆகாதே -என்னுமா போலே இதுக்கு கால நியதி இல்லை என்கை
தமக்கு ரசித்த படியால் இடைவிடாமல் அனுபவியுங்கோள் -என்கிறார்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னுமவர் இறே

————————————————————————————————————-

இணைவனாம் எப்பொருட்க்கும்-என்கிற பதத்தை விவரித்துக் கொண்டு ஸ்ரீ ஹயக்ரீவாதி அவதாரங்களாலே ரஷிக்கும் என்கிறார் –

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட
நீந்தும் துயரில் காட்டில் தன்னேற்றம்
நிரந்தர துக்காவஹமான ஜென்மம் உட்பட -ஜென்மம் தொடக்கமாக –
மற்று எவ்வெவையும் –
மற்றும் உண்டான ஸ்திதி ஸம்ஹாராதி சர்வத்துக்கும்
மூவாத் தனி முதலாய்-
மூவாது ஒழிகை யாவது -முசியாது ஒழிகை –
இவன் தன்னைப் பெறுகைக்காக-கரண களேபரண்களைக் கொடுக்க -அவற்றைக் கொண்டு விஷய ப்ரவணராய்
அநர்த்தப் படா நின்றால்-நிஷ் ப்பலமாயிற்று-என்று முசியாது ஒழிகை
மூவுலகும் காவலோன் –
மேலும் கீழும் நடுவும் –
க்ருதகம் அக்ருதகம் க்ருதாக்ருதகம் –
காவலோன் –
சாஸ்திர ப்ரதா நாதிகளாலே ரஷிக்கை-
சாஷான் நாராயணோ தேவ -இத்யாதி
தன் மேன்மை குலையாதே நின்றோ ரக்ஷிப்பது என்னில்
மாவாகி யாமையாய் மீனாகி –
வித்யா ப்ரவர்த்தகமான அவதாரங்கள்
மானிடமாம்-
அனுஷ்ட்ட்டே யதார்த்த ப்ரகாசகமான ராம கிருஷ்ணாத் யாவதாரங்கள்
மர்யாதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதா சச -என்றும் –
யத்ய தாசாரதி ஸ்ரேஷ்ட-என்றும் சொல்லுகிறபடியே –
இப்படி செய்கின்றவன் தான் ஆர் என்னில்
தேவாதி தேவ பெருமான் –
ப்ரஹ்மாதிகளுக்கு ஆதி தேவர்களான நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகு ஆனவன் கிடீர் இப்படி தாழ நின்றான் என்கை –
இந்த்ராதிகளும் பூமியில் துர்க்கந்தாதிகள் பொறுக்க மாட்டாதே ஒரு யோஜனத்துக்கு அவ்வருகு இ றே நிற்பது –
என் தீர்த்தனே —
என்னை பிரயோஜ நான்தர பரதையை தவிர்த்தவன் –
நான் இழிந்து ஆடும் துறை என்றுமாம் –

—————————————————————————————————————–

தேவாதி தேவ பெருமான் என்னா நின்றீர் -இம் மேன்மையைப் ப்ரதிபாதித்துத் தர வேண்டாவோ வென்ன-
அர்ஜூனனே நிஷ்கர்ஷித்திலனோ-நாம் இன்று இருந்து சொல்ல வேண்டும் படி குறையாய்க் கிடந்ததோ-என்கிறார் –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

தீர்த்தன் –
த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே க்ருஹீத்வா தர்ம பாநீயம் பாதம் நாதஸ்ய துஷ்டயே -ஷாளிதம் பரயா பக்த்யா பாத்யார்க்யாதி ப்ரர்ச்சித்தம்
ததம்புபதி தம் த்ருஷ்ட்வா தாதர சிரஸா ஹாரா -பாவ நார்த்தம் ஜடா மத்யே யோக்கியோ அஸ்மீத் யாவதாரணாத் வர்ஷாயுதா தன பஹூன் னமுமோச ததா ஹர -என்றும்
ஸ்வ ஸிரோத்ருதேந-என்றும் -ச சிவச் சிவோஸ்பூத்-என்றும் ருத்ரனை சுத்தனாய் சிவன் என்று சொல்லும்படி பண்ணினவன் –
உலகளந்த சேவடி மேல் –
அவனுடைய சர்வ ஸூ லபமான திருவடிகளில் -இது கிருஷ்ண அவதாரத்திலேயாய் இருக்க ஸ்ரீ வாமன அவதாரத்தைச் சொல்லுகிறது –
வரையாதே தீண்டுகை –இரண்டு அவதாரத்துக்கு ஒத்து இருக்கையாலே
பூந்தாமம்-சேர்த்தி –
அழகிய மாலையைச் சாத்தி -பூ மாலை என்னவுமாம்
யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
அந்த பூ மாலைகள் தன்னையே ருத்ரன் ஜடையில் கண்டு
அவையே -தஜ் ஜாதீயங்கள் அன்றியே அவை தன்னையே
சிவன் முடி மேல் -இவன் திருவடிகளில் இட்டத்தை அவன் தலையிலே கண்டான்
தான் கண்டு -அர்ஜுனன் தானே கண்டு -சுருதி யாலே யாதல் -ஆப்த வாக்யத்தாலே யாதல் அன்றிக்கே
அதாகிறது அர்ஜுனனுக்கு ஆர் அஸ்திர அபேக்ஷையாலே அத்தேவதையை அர்ச்சிக்க வேண்ட -அத்தை என் காலிலே இடு என்று இடுவித்துக் கொள்ள
ஸ்வப்னத்தில் அம்மாலையை சிரஸிலிலே தரித்துக் கொண்டு வந்து அஸ்திரத்தைக் கொடுத்துப் போயிற்று
பார்த்தன் தெளிந்து ஒழிந்த-
அவன் சாரதியாய் தாழ நிற்கச் செய்த்தேயும்-அதில் கலங்காதே சது பார்த்தோ மஹா ம நா என்கிற அர்ஜுனன் நிஷ் கர்ஷித்தான் அன்றோ
பைந்துழாயன் பெருமை
சர்வாதிகனுடைய பரத்வம் -சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் இ றே திருத் துழாயை உடையனாகை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே
இது பின்னை சிலரால் ஆராய வேண்டும்படி இருந்ததோ –

—————————————————————————————————————

ஒரு தேவதை இவனை அனுவர்த்தித்தது -என்ற ஏற்றம் சொல்ல வேணுமோ -இவ்விபூதி இவனுக்கு அசாதாரணம் என்னும் இடத்துக்கு
தனித்தனியே பூரணமான உபபத்திகள் அநேகம் அன்றோ என்கிறார் –

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
கிடந்து – திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியாதல் –
அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா பிரதிசிஸ்யே மஹோததே -என்று கடல் கரையிலே கண் வளர்ந்து அருளின படியாதல்
இருந்து -உடஜே ராம மாசீ நம் அபித பாவ கோபமம்-என்று சித்ர கூடத்தில் இருப்பு
நின்று -அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தனுரூர்ஜிதம் ராமம் ராமாநுஜஞ்சைவ பர்த்துச்சைவா நுஜம் சுபா -என்று ராவண வதம் வீர ஸ்ரீயோடே நின்ற நிலை –
அளந்து -மஹா பாலி அபஹரித்த பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
கேழலாய்க் -பூமியை பிரளயம் கொள்ள -தன் மேன்மை பாராதே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு
கீழ்ப் புக்கு-இடந்திடும்-
அண்ட புத்தியில் புக்கு ஒட்டு விடுவித்துக் கொண்டு ஏறின படி
தன்னுள் கரக்கும்-
பிரளய ஆபத்தில் பிரளயம் தனக்கு தெரியாத படி திரு வயிற்றில் வைத்துக் காக்கும் –
உமிழும்-
இவை என் பட்டனவோ என்று உமிழ்ந்து பார்க்கும் –
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும்-
அவளோட்டை ஸ்பர்சத்தாலே மிகவும் பெரும் தோளால் ஆரத் தழுவும்
பெருமைக்கு மேலே -தடம் என்றும் பெருமையாய் அறப் பெரும் தோள் என்றபடி
பார் என்னும்-மடந்தையை-
பூமிக்கு அபிமானியான பிராட்டியை -பூமியை பிரகாரமாக உடையவள் ஆகையால் -தத்வாசி சப்தத்தால் இவளை சொல்லுகிறது
மடந்தையை–நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவளை
மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –
சர்வேஸ்வரன் பண்ணுகிற வ்யாமோஹம் -எத்தனையேனும் அளவுடையார்க்கும் காணப் போகாது –
ப்ரஹ்மாதிகளுக்கு பிராப்தி இல்லாமையே அன்றிக்கே இவனுடைய வியாமோஹ அதிசயம் பரிச்சேதிக்கவும் மாட்டார்கள் –

—————————————————————————————————————–

ஸ்வ யத்தனத்தாலே காண்பார்க்கு அவனுடைய ஒரோ அற்புத கர்மங்கள் தான் எவ்வழியாலே பரிச்சேதிக்கப் படுவது -என்கிறார் –

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை –
சர்வேஸ்வரனாய் வைத்து கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு ஸூலபனானவனை ஸ்வ யத்னத்தால் காண்பார் யார்
என் காணுமாறு-
காணும் பிரகாரம் என்
காண்போம் என்னுமவர்கள் தான் எவ்வழியால் பரிச்சேதிப்பது
ஊண் பேசில்
ஊண் படி சொல்லில்
எல்லா வுலகுமோர் துற்றாற்றா-
சர்வ லோகங்களும் ஓர் அவதானத்துக்குப் போராது-இது அபரிச்சேதயத்தைக்கு உதாஹரணம்
சேண் பால் வீடோ –
உயர்த்தியே ஸ்வ பாவமாக உடைத்தான பரம பதம் என்ன
வுயிரோ
முக்தாத்மாக்கள் என்ன
மற்று எப்பொருட்கும்
மாற்று உண்ட தேவ திர்யக் யாதி சகல பதார்த்தங்களுக்கும்
ஏண்பாலும் சோரான்
எட்டுத் திக்குக்களிலும் உள்ளாரை விடான் என்னுதல் –
எண்ணப் பட்ட இடம் தோறும் விடான் என்னுதல்
பரந்துளான் எங்குமே –
எல்லாப் பதார்த்தங்களிலும் பரிசாமாப்ய வியாபித்து உளனாம்
வியாபித்து இருக்கும் சர்வ வியாபக வஸ்துவை -வியாபங்களிலே ஓன்று பரிச்சேதிக்க வற்றோ என்கை –

—————————————————————————————————————-

சகல பதார்த்தங்களிலும் ஒருவனே பரிசமாப்ய வர்த்திக்கும் -என்றால் இது கூடுமோ என்ன-
-அநுபூத அம்சத்தில் சம்சயத்தை பண்ணினால் ஹிரண்யன் பட்டது படுவர்கள் என்கிறார் –

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

எங்கும் உளன் கண்ணன் –
சர்வேஸ்வரன் சர்வகதன் என்றான் -இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு –
மயா ததாமிதம் சர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்தி நா -என்றும்
நத தஸ்தி விநாயத் ஸியாத் மயா பூதம் சராசரம் -என்று அவன் தானே சொன்னதை யாயிற்று இவன் சொல்லிற்று –
என்ற மகனைக் காய்ந்து
இவ்வர்த்தத்தை சத்ருக்கள் சொல்லிலும் ஆதரிக்க வேணும்
இவன் பருவத்தாலும் சம்பந்தத்தாலும் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் ஆதரிக்க வேணும் –
இப்படி இருக்க அதிக்ருத்யனாய்
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
சர்வகதன் -என்று நீ சொன்னவன் இங்கும் உண்டோ என்று தான் இருந்த தூணைத் தட்ட
அளந்து இட்ட தூண் இ றே
தனக்கேற இல்லை என்று சம்பிரதி பன்னமான தூண் இ றே –
அங்கு அப்பொழுதே
அத் தூணிலே பிரதஞ்ஞா சமயத்திலே
அவன் வீயத் தோன்றிய-
சீற்றத்தோடே வந்து தோற்றிய தோற்றரவிலே பிணம் ஆனான்
என்-சிங்கப்பிரான் –
ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உதவினது தமக்கு உதவிற்றாய் இருக்கிற படி
பெருமை யாராயும் சீர்மைத்தே –
பரத்வம் -சிலரால் அறியும் அளவே –

—————————————————————————————————————-

வழி பறிக்கும் இடத்திலே தம் கைப் பொருள் கொண்டு தப்புவாரைப் போலே நான் அனுபவிக்கப் பெற்றேன் என்று ஹ்ருஷ்டராகிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

சீர்மை கொள் வீடு -ச்வர்க்க நரகு ஈறா
சீர்மையை உடைத்தான பரம பதம் -ஸ்வர்க்கம் -நரகம் இவை முடிவாக
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
ஈராக் பாட்டை உடைய தேவர்கள் நடுவாக மற்றும் உண்டான சகல பதார்த்தங்களுக்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
த்ரிவித காரணமும் தானே யாய்
தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிசத்-என்கிறபடியே சர்வ சப்த வாச்யனாய் ஜகதாகாரேண அத்விதீயனாய் நிற்கை
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
பரமபதத்தில் வர்ஷூ கலாவாஹம் போலே -ஸ்ரமஹரமான வடிவோடே அத்விதீயனாய் எழுந்து அருளி இருக்குமவன்
கிருஷ்ணனாய் எனக்கு உபகரிக்கையாலே நான் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –

—————————————————————————————————————–

நிகமத்தில் இது திருவாய்மொழியைக் கற்றவர்கள் இதில் சொன்ன முக்த ப்ராப்யமான ஐஸ்வர்யத்தை பெறுவார்கள் -என்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

கண்டலங்கள் செய்ய –
பூதலம் -என்னுமா போலே கண்ணில் பரப்பை நினைக்கிறது
விஸ்திருதமாய் சிவந்த திருக் கண்களை உடையவன்
கருமேனி யம்மானை-
இதுக்கு பரபாகமாய் ஸ்ரமஹரமான வடிவு அழகை உடைய சர்வேஸ்வரனை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
வண்டுகள் தேனிலே அலையா நின்ற சோலையை உடைய திரு வழுதி வள நாட்டை உடையவர்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
தலையான பண்ணிலே சொன்னது என்னுதல் –
பண்ணின் மேலே சொன்னது என்னுதல்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –
தலையான விண்ணிலே என்னுதல் -விண்ணின் மேலே என்னுதல்
சாம்சாரிகமான சங்கோசம் எல்லாம் தீருகையாலே வீறு பட இருந்து –
எனக்கும் என் பரிகரத்துக்கும் தருவானாய்ச் சமைந்து இருக்கிற பரமபதத்தை ஆளப் பெறுவார் –

——————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: