திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -2-7-

எம்பெருமான் பண்ணின அபி நிவேச அதிசயம் ஆழ்வார் தம் பக்கல் அடங்காதே தம்மோடு பரம்பரையா சம்பந்தமானார் பக்கலிலும் கூட
வெள்ளம் இட்ட படியைக் கண்டு இது என் பக்கல் உண்டான விஷயீ கார அதிசயம் இறே-என்று கொண்டு ப்ரீதராய்
தம்மை இப்படி விஷயீ கரிக்கைக்கு ஈடான குண சேஷடி தாதிகளை அனுசந்தித்து தத் ப்ரதிபாதிகமான திரு நாமங்களாலே பேசி அனுபவிக்கிறார் –

————————————————————————————————–

ஸ்வ சம்பந்திகள் பக்கலிலும் எம்பெருமான் அபி நிவிஷ்டானாம் படியைக்கண்டு -இது எல்லாம்
என் பக்கல் உண்டான விஷயீ கார அதிசயம் இறே என்று ஹ்ருஷ்டராகிறார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்-
கீழ் ஏழு படி காலும் மேல் ஏழு படி காலும் என்னோடு சம்பந்திகளாய் இருப்பார்கள் எல்லாம் பகவத் பரிக்ரஹம் ஆனார்கள்
மா சதிர் இது பெற்று –
கேசவன் தமர் ஆகிற இப் பெரும் சதிரைப் பெற்று -ஆகஸ்மிக பகவத் பிரசாதத்தை பெற்று
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா-
நம்முடைய இஸ் சம்பத்து மிகுகிற படி என் –
அவ்வழியே அயர்வறும் அமரர்களைப் போலே என்னை அடிமை கொண்ட ஆச்ரித வத்சலனான நாராயணனாலே –

——————————————————————————

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

சர்வ லோகங்களுக்கும் ஸ்வாமியாய் -க்ரியா சாதனம் -கிரியை தத் சாத்தியமான கார்யம் -இவற்றுக்கு நிர்வாஹகனுமாய்
இப்படி வேதத்தில் மிகவும் பிரதி பாதிக்கப் படுகிறவன் கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி
சீர்மையை உடையராய் அப்ராக்ருத ஸ்வ பாவரான நித்ய ஸூ ரிகளும் மற்றும் பலரும் தொழுது ஏத்தும் படி நின்று
குவலயா பீடத்தின் கொம்பை பறிக்கை யாகிற மஹா உபகாரத்தையும் பண்ணுவதும் செய்து
இப்படிகளாலே நாராயணன் என்னும் திரு நாமத்தை உடையனுமாய் என் பக்கல் பிரவணனான ஸ்ரீ யபதி என்னை அடிமை கொண்டான்
சீர் அணங்கு என்று பெரிய பிராட்டியார் என்றும் சொல்வார்கள் –

———————————————————————————————–

மாதவன் என்கிற யுக்தி மாத்திரத்தாலே என்னுடைய சகல தோஷங்களையும் போக்கி என்னை விஷயீ கரித்து அருளினான் என்கிறார் –

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

மாதவன் என்னும் திரு நாமத்தின் உடைய யுக்தி மாத்ரத்தையே அநேக வ்யயாயாச சாதிய ஸமாச்ரயணமாகக் கொண்டு என்னை
போன நெடும் காலம் எல்லாம் இழந்தோம் -இனி மேல் உள்ள காலம் ஆகிலும் இவர் பக்கல் ஒரு தோஷமும் சேர போகல் ஓட்டேன் என்று என்னுள்ளே வந்து புகுந்து
நிரந்தர வாசம் பண்ணி எனக்கு நிரதிசய போக்யமுமாய்க் கொண்டு
ஸ்வரூப ப்ரயுக்தம் என்னலாம் படி அநாதையாய் வருகிற தோஷத்தையும் நாள் தோறும் ஒரு ஹேது வசத்தால் வருகிற தோஷத்தையும் போக்குவதும் செய்து
என்னோட்டை சம்ச்லேஷத்தால் விகசிதமாய் சிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் வளர்ந்த திரு மேனியையும் உடையவன்
தீது -அவம் -என்றது நிஷ்க்ருதி இல்லாத பாவமும் நிஷ்க்ருதி உண்டான பாபமும் என்றுமாம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே
பாகு தப்பாதல் மாற்று ஒன்றினுடைய சம்சர்க்கத்தாலே வரும் தோஷம் யாதல் ஒன்றும் இன்றிக்கே இருந்துள்ள
கன்னல் கட்டி போலே நிரதிசய போக்யமாய் தன்னுடைய போக்யதையைக் காட்டி என்னை அடிமை கொண்டவன்
என் கோவிந்தன் -என்னை விஷயீ கரிக்கைக்காக கோவிந்தன் ஆனவன் –

————————————————————————————————-

என்னோடு பரம்பரயா சம்பந்தர் ஆனவரும் கூட என்னைப் போலே யாக்கினான் ஒருவருடைய சாமர்த்தியம் இருந்த படியே என்று விஸ்மிதர் ஆகிறார் –

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

தன்னுடைய குண சேஷ்டி தாதிகளுக்கு வாசகமான திரு நாமங்களை சொல்லா நின்று கொண்டு ப்ரீதி ப்ரகரஷத்தாலே குனிக்கவும்
தன்னுடைய ஐஸ்வர் யத்தையும் ஆஸ்ரித பாரதந்தர்யத்தையும் பாடி ஆடும்படியாகவும் என்னைத் திருத்தி
சம்சாரத்திலே மக்நனாய் இருக்கிற என்னைப் பரிஹரித்து பின்னை என்னுடைய துஸ்ஸாதமான பாபங்களையும் போக்கி
கீழ் ஏழு படி காலும் மேல் ஏழு படி காலும் என்னோடு சம்பந்திகள் ஆனாரை தன்னால் அல்லது செல்லாத ஸ்வ பாவர் ஆக்கினான்
என்னை விஷயீ கரிக்கைக்காக ஜகத் எங்கும் வ்யாபித்தனாய் இருக்கிறவன் தான் நினைத்தபடி செய்ய வல்லன் –

———————————————————————————————————

தம்மையும் தம்மோடு சம்பந்திகள் ஆனாரையும் தத் ஏக போகர் ஆக்கிற்று -தன் திரு அழகைக் காட்டி என்கிறார் –
தம்மையும் தம்முடன் சம்பந்திகள் ஆனாரையும் பெறுகை யாலே எம்பெருமானுக்கு நிரதிசயமான உஜ்ஜ்வல்யம் பிறந்தது என்கிறார் என்றுமாம் –

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

விட்டிலங்கு கை-மிகவும் விளங்கா நிற்கை –
மதியம் சந்திரன் / பரிதி -ஆதித்யன் / அம்மான் -சர்வேஸ்வரன் /மதுசூதனன் -தம்முடைய பிரதி பந்தக நிராசகன்-

———————————————————————————————————

தன் பக்கல் நான் பிரவணன் ஆக்கைக்கு எம்பெருமான் அநேக காலம் வருந்திற்று எல்லாம் தன்னுடைய கிருபையால் என்கிறார் –

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

மது சூதனனை ஒழிய மாற்று ஒரு ப்ராப்யத்தை உடையேன் ஆலன் என்று அத்யவசித்து
மற்று ஒரு புருஷார்த்தங்களைக் கொண்டு கார்யம் இன்றிக்கே காலம் உள்ளதனையும் நின்று
தன்னுடைய ஸ்தோத்ராத்மகமாய் ஸ்பஷ்டமாக வாசகமான பாட்டுக்களை பாடி அந்த ஹர்ஷத்தாலே ஆடும்படியாக
அநேக ஜென்மங்கள் எல்லாம் என்னை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான திரு அவதாரங்களை பண்ணி
சர்வேஸ்வரனாய் வைத்து சர்வ ஸூலபத்தவர்த்தமாக த்ரிவிக்ரமனாய் இருக்கிற எம்பெருமானை அதுக்கு மேலே எனக்கே
நிரவதிக பிரசாதம் பண்ணும் படி எனக்கு என்னவே விதி சூழ்ந்தது –
தம்மை விஷயீ கரித்து அல்லது எம்பெருமானை இருக்க ஒட்டாமையாலே அவனுடைய கிருபா குணத்தை விதி என்கிறது

————————————————————————————————————

உன்னுடைய குண அனுசந்தான பூர்வகமாக ஸ்துதி பிரணாமாதிகளைப் பண்ணிக் கொண்டு உன்னை அனுபவிக்கும் அதுவே
பிரயோஜனமாகக் கொண்டு இருக்கும் மனஸை எனக்குத் தந்தாய் -ஸ்ரீ வாமனான உனக்கு அரியது உண்டோ என்கிறார் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

சிவந்து தோற்றின திருவதர நிறத்தில் பகைத் தொடையனாய் அதி தவளமான திரு முத்தின் நிறத்தைக் காட்டி என்னை ஈடுபடுத்தினவன்
இப்படி பல கால் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கியும் இப்படி கால தத்வம் உள்ளதனையும் அநந்ய பிரயோஜனமாகக் கொண்டு
உன் திருவடிகளில் அடிமை செய்யும் படியான மனஸை தந்தாய் -எம் வாமனன் என்று எம்பெருமானை உகக்கிறார் –

————————————————————————————————————

எம்பெருமான் பண்ணின உபகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லை என்கிறார் –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

எனக்கு ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன்
லோகத்தை எல்லாம் தன் அழகால் பிச்சேற்றும் காமனுடைய அழகுக்கும் உபாதானம் ஆனவனே
கீழ் சொன்ன திரு நாமங்களை இனிதாகச் சொல்லா நின்று கொண்டே உன் திருவடிகளில் விழுந்து
நிர்தோஷ அந்தகரணாய் சாம்சாரிக துக்கம் எல்லாம் நீங்கும் படியாக என்னுடைய மநோ தோஷத்தைப் போக்கினாய்
பூர்ணன் ஆகையால் உனக்கு ப்ரத்யுபகாரமாக என்னால் செய்யலாவது காண்கிறிலன் –

——————————————————————————————————————-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-

ஆடியாடியில் பிறந்த வியசனம் எல்லாம் போய் மிகவும் ப்ரீதானாம் படி என்னுள்ளே வந்து பேராத படி புகுந்து அருளி
என்னுடைய இந்திரியங்களை நீ இட்ட வழக்கு ஆக்கினாய் என்று ப்ரீதர் ஆகிறார் –
பக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்க -பிரதி பந்தகங்களும் நீங்கி நிரதிசய ஸூ கமும் பிறக்கும் படியாக
உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்றுமாம்
வாய்-வெரீ இ -வாய் வெருவி /மரீ இய -மருவின /இரீஇ -வைத்தனை -இருத்தி வைத்தாய் –

——————————————————————————————————————-

நமக்கு மிகவும் உபகாரகன் ஆனவனை ஒரு காலும் விடாதே கிடாய் என்று திரு உள்ளத்தைக் குறித்து அநு சாஸிக்கிறார் –

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்-முருடு தீர்த்த பிரான்-
லங்கையில் ராஜஸ சந்தானத்தில் முருடனான ராவணனை முடித்து உபகரித்தால் போலே தன் அழகால் என் இந்திரியங்களை
அநந்ய பரம் ஆக்குகை யாகிற மஹா உபகாரகத்தைப் பண்ணினவன் –
எம்மான் அமரர் பெம்மான் என்று என்று-தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து என்னை அடிமை கொண்டான் என்று கொண்டு மிகவும் அனுசந்தித்து
நெஞ்சே அறிவுடையாகில் அவனை அனுபவி -இத்தை த்ருடத்தரமாக கொள்-
அறி அறிந்து-மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –
அவனை விட அடாது என்று அறிந்து சர்வ குண சம்பன்னனாய் நிரதிசய ஸூ ந்தரனானவனை நம்முடைய
அயோக்கியா அனுசந்தானத்தாலே விடுவோம் என்று தோற்றினாலும் விடாதே கிடாய் –

———————————————————————————————————————-

அத்யந்த விலஷணனாய் இருந்து வைத்து அத்யந்த ஸூலபனாய் என்னை அடிமை கொண்டவன் என்னை அல்லது அறியான் என்கிறார் –

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையனாய் அபரிச்சேதயமானவன் –
ஸமஸ்த கல்யாண குண கணனானவன்-மதேக சித்தன் –
என்னை தனக்கு அர்ஹனாக்கி பரிக்ரஹித்து எனக்கு தன்னை அசாதாரணமாக தந்த விலக்ஷண கல்பகமுமாய் நிரதிசய போக்யமானவன் –
இவனுக்கு இவ்வுதார குணம் உண்டாயிற்று திருமலையின் மிதியாலே -அயர்வறும் அமரர்கள் அதிபதி –

————————————————————————————————————-

பகவத் ஞானத்தில் அபி மானிகளாய் இருந்துள்ள ப்ரஹ்மாதிகளுக்கும் எம்பெருமானை அறிய ஒண்ணாது என்கிறார் –

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12-

ஜகத் காரண பூதனாய் -ஜகத்துக்கு பிரளய ஆபத் சகனுமாய் -ஆஸ்ரித பவ்யனானவனை ஒருவருக்கு அளவிடலாமோ என்று
அறிந்தார்களாகக் கொண்டு தோலும் ஸ்வ பாவருமாய்-எம்பெருமானுக்கு சரீரவத் அந்தரங்கரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும்
தன்னுடைய குண ஆர்ணவத்தை என் பக்கலிலே மடுத்து என்னை அடிமை கொண்டவனை பரிச்சேதிக்கலாமோ –

————————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியைக் கற்றவர்களை இது திரு வாய் மொழி தானே எம்பெருமான் திருவடிகளில் சேர்க்கும் என்கிறார் –

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

நிறம் உடைத்தாய் மஹார்க்கமான மணியினுடைய ஒளியை உடையனாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
அஸ்மதாதிகளுக்கும் ஸூலபனாக்கைக்கு கிருஷ்ணனாய் வந்து திரு வவதாரம் பண்ணுவதும் செய்து என் பக்கலிலே மிகவும் அபிநிவிஷ்டனானவனை
பண்ணில் -பண்ணிலே நடந்த

—————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: