திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -2-6-

கீழ் ப்ரஸ்துதமான சம்ச்லேஷத்தாலே -மிகவும் பூர்ணனுமாய் அத்யந்த ஹ்ருஷ்டனுமாய் -இவர்க்கு எத்தைக் கொடுப்பன் -எத்தைச் செய்வன்
-இவர் என்னை விடார் இ றே-என்று அதி சங்கை பண்ணா நின்றுள்ள ஸ்ரீ வைகுண்ட நாதனான எம்பெருமானுக்கு தம் பக்கல் உண்டான
பாரதந்தர்ய வாத்சல் யாதிகளைக் கண்டு -அத்யந்த விஸ்மிதராய் -தாம் எம்பெருமானை விடாத தன்மையாய் இருக்கிற படியை
அவனுக்கு அறிவித்து அவனை நிலை நிறுத்துகிறார் –

——————————————————————————————————–

எம்பெருமான் -இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அதி சங்கை பண்ண அத்தை நிவர்த்திப்பிக்கிறார் –

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

அத்யந்த புஷ்கலனாய் அதி ஸூ ந்தரனாய் இருந்து வைத்து எனக்கு மிகவும் ஸூ லபனாய்-அயர்வறும் அமரர்களோடு சம்ச்லேஷிக்குமா போலே
என்னுள்ளே புகுந்து -என்னோடே சம்ஸ் லேஷியா நின்று கொண்டு நாள் தோறும் அபூர்வவத் போக்யமானவனே
பொல்லா வென்று -பிறர் கண்ணில் எச்சில் படாமைக்கு -விபரீத லக்ஷணை ஆகவுமாம் –
அனுபவ விநாஸ்யமான பாப கர்மங்கள் ஆஸ்ரிதர் பக்கல் வாராத படி பண்ணி அவற்றை ஆஸ்ரிதர் விரோதிகள் பக்கலிலே
போக்குகை யாகிற சுத்தியை உடையவனே –
இப்படி அபி நிவிஷ்டனாய் வந்து -என்னோடே கலந்து சம்ச்லேஷித்த உன்னைப் பிரிந்து உறாவின நான்
இனி ஒரு நாளும் விடாத படி பிடித்தேன் என்று கொண்டு அருள அமையும் –

———————————————————————————————————-

தம்மோடு கலந்த பின்னை எம்பெருமானுக்கு பிறந்த புஷ்கல்யத்தைப் பேசுகிறார் –

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

என்னோடு கலக்கும் போது அந்நிய பரதை எல்லா லோகங்களுக்கும் வேண்டும் சம்விதானத்தை ஒரு காலே
தன் திரு உள்ளத்தால் பண்ணி யருளி பிரியாதபடி என் பக்கலிலே புகுந்தான் –
புகுந்த பின்பு விகசித சஹஜ சார்வஞ்ஞனாய் விஜ்வரனாய் தன்னுடைய பிரமாத ரசத்தால் எனக்கு போக்யமாய்
பெரிய பிராட்டியார் வந்து ஸ்பர்சித்தாலும் விலங்கப் பார்க்க அறியாத படி யானான்
என்னோட்டை கலவியால் குளிர்ந்த திருக் கண்களை உடையவன் –

—————————————————————————————————————

அயர்வறும் அமரர்களுக்கு போலே எனக்கு தன்னுடைய ஸுந்தர்யாதிகளை வர்ணிக்கைக்கு ஈடான வாக்கைத் தந்து அருளினான்
-ஒருவனுடைய உதாரகுணம் இருந்த படியே என்று ஹ்ருஷ்டராகிறார் –

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை –
திருக் கண்களின் அழகிலே ஈடுபட்டு ஸ்துதிக்கிற அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் உள்ளவனை
துழாய் விரைப்-பூ மருவி கண்ணி எம்பிரானைப் –
விரையும் பூவும் மாறாதே இருக்கும் திருத் துழாய் மாலையால் அலங்க்ருதனான தன்னுடைய திரு அழகை எனக்கு நிர்ஹேதுகமாக காட்டினவனை
பொன் மலையை-
என்னோட்டை கலவியால் அபரிச்சேத்யமான திரு அழகை உடையனாய் என்னைப் பிரிந்து போகைக்கு ஷமன் இன்றிக்கே இருக்கிறவனை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட-
அயர்வறும் அமரர்கள் ஏத்தக் கடவ நிலத்துக்கு நாம் நிலவராய் சத்ருசமாம் படி ஏத்தி குண அனுசந்தானத்தைப் பண்ணி- இக் குண அனுசந்தான
பலாத்காரத்தாலே நிர்மமராய்க் கொண்டு திருவடிகளில் விழுந்து ப்ரீதி தத்வம் புதியது உண்டு அறியாத நாம் ஹர்ஷ ப்ரகரஷத்தாலே மகிழ்ந்து ஆடும் படி
நா வலர்-பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –
ஹர்ஷ ப்ரகர்ஷம் அநாயாசேன சொல்லுவிக்கச் சொல்லுகிற கவிக்கு நிலவராய் நிற்கும்படி நம்மைப் பண்ணுகை ஸ்வ பாவமாக உடையனாய் இருக்கிற வள்ளல் –

——————————————————————————————————————-

நிர்ஹேதுகமாக உன்னைத் தரும் ஸ்வ பாவனாய் விரோதி நிரசன பிரமுகமான கல்யாண குண அன்விதானாய் இருந்துள்ள
உன்னை அனுபவித்து வைத்து விட உபாயம் உண்டோ என்கிறார் –

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-

பரம உதாரனாய்– உன்னை புஜிக்கைக்கு விரோதியான பிரதிபந்தங்களைப் போக்கும் ஸ்வ பாவனாய் –
ஸ்ரமஹரமாய்-அபரிச்சேத்யமான உன்னுடைய அழகை எனக்கு அனுபவிக்கத் தந்தவனே –
உன்னை அனுபவித்தால் புறம்பு உள்ளவற்றை எல்லாம் இகழும் ஸ்வ பாவத்தை எனக்குத் தந்தவனே
உன்னை அனுபவித்தால் ஈடுபடும் ஸ்வ பாவத்தை எனக்குத் தந்தவனே என்றுமாம் –
அபரிச்சேத்யமான உன்னுடைய கல்யாண குணங்களை ஓர் இடம் ஒழியாமே அவகாஹித்து அத்தாலே வந்த ப்ரீதி அதிசயத்தாலே
ஆடிப் பாடிக் களித்து ப்ரீதி க்ஷணம் ப்ரீதி பெருகி வர அனர்ஹதா அனுசந்தானத்தாலும் விஸ்லேஷத்தாலும்
வந்த வியஸனங்கள் எல்லா வற்றையும் போக்கி உஜ்ஜீவித்து உன் திருவடிகளில் வந்து இருந்து –

—————————————————————————————————————-

நித்ய கைங்கர்யத்தை பிராபித்து இருந்துள்ள எனக்கு உன்னை விட சம்பாவனை உண்டோ -என்கிறார் –

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-

ஸ்வரூப ஸத்பாவம் பெற்று சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தனாய் முடிவு இன்றிக்கே மிகவும் கூடியதான என் கர்மங்களை நசிப்பித்து
திருப் பாற் கடலிலே உன்னோட்டை சம்ச்லேஷ ஸூகத்தால் அலர்ந்த ஐந்து பணங்களை உடைத்தாய் கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடாம்படி
அசைந்து வாரா நின்றுள்ள -திரு அரவணை மேல் சாய்ந்து அருளி ஜகத் ரக்ஷக சிந்தாத்மக யோக நித்திரையைப் பண்ணி அருளினை
இக் குணத்தைக் காட்டி என்னை அடிமை கொண்டவனே -இப்படி உபகாரனான உன்னை மிகவும் அனுசந்தித்து –

———————————————————————————————————————-

உமக்கு இனிச் செய்ய வேண்டுவது என் -என்று எம்பெருமான் கேட்டு அருள நான் பெறாதது உண்டோ எல்லாம் பெற்றேன் என்கிறார் –

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

நிரதிசய போக்யனான உன்னை நிரந்தரமாக அனுசந்தித்து ப்ரீதி பலாத்க்ருதனாயக் கொண்டு
அபரிச்சேதய ரசமான இயலை நல்லிசையாலே பாடி யாடி அவ்வழியாலே என்னுடைய ப்ராக்த்தனமான பிரதிபந்தங்களை சவாசனமாக போக்கினேன்
நிரதிசய போக்யனான உன்னை மனசாலே இகழ்ந்த ஹிரண்யன் உடைய அகன்ற மார்வை பிளந்து பாண்டே எனக்கு உபகரித்த நரசிம்ஹமே-

————————————————————————————————————————

நீர் எல்லாம் பெற்று சமைந்தீரோ என்ன -என் பக்கல் எம்பெருமான் பண்ணின பக்ஷபாத ராஜ குலத்தாலே
என்னோடே சம்பந்தி சம்பந்திகள் ஆனாரும் கூட சம்சார உத்தீர்ணர் ஆனார்கள் -ஆனபின்பு நான் பெறாதது உண்டோ என்கிறார் –

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-

எனக்கு ஆப்தவ்யமாய் இருப்பது ஓன்று உண்டோ
பிரளய காலத்தில் இஜ் ஜகத்தை அடைய திரு வயிற்றிலே வைத்துக் கொண்டவன் ஜகத்துக்கு தன்னை ஒழிய
செல்லாதாப் போலே என்னை ஒழிய தனக்கு செல்லாமையாலே அத்யபி நிவிஷ்டனாய் என்னுள் புகுந்தான்
இனி ஒரு காலும் விஸ்லேஷிப்பதும் செய்யான்
சாம்சாரிக துக்கங்களை எல்லாம் போக்கி கீழும் மேலும் ஏழு படி காலான அஸ்மதீயர் சம்சாரத்தில் என்றும் கிடக்கக் கடவதான தன்மையைத் தவிர்ந்தார்கள்

————————————————————————————————————————–

நிர்ஹேதுகமாக உன்னுடைய பிரசாதத்தாலே பெற்ற இஸ்ஸ ம்ருத்தி இனி ஒரு நாளும் விச்சேதியாது ஒழிய வேணும் –
இதுவே எனக்கு வேண்டுவது என்று எம்பெருமானை பிரார்த்திக்கிறார் –

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-

பர்யாயேண சாவது பிறப்பதாய் ஒரு நன்மை இன்றிக்கே இருக்கச் செய்தே சாம்சாரிக விஷய நிவ்ருத்தி பூர்வகமாக திருவடிகளை பெற்று
விஷய வாசனையாலும் பகவத் அலாபத்தாலும் உள்ள அந்தகரண காலுஷ்யம் எல்லாம் நீங்கி முடிவு இல்லாத ஆனந்த சாகரத்தில் நான் குலுக்கினேன்
தன் திருச் சிறகில் வேகத்தால் அஸூ ரா சமூகங்கள் ஆனவை சின்னம் பின்னமாய் தூளியாம் படி சஞ்சரிக்கும் ஸ்வ பாவனாய்
அத்யந்த வி லஷணனான பெரிய திருவடி மேலே ஏறி உன்னுடைய சர்வ ஐஸ்வர்யத்தாலே வரும் வீறு தோற்றும் படி இருந்தவன்
இத்தால் இப்படியே தமக்கு உண்டான பிரதிபந்தக நிரஸனம் பண்ணி அத்தாலே மேநாணிந்து இருந்த இருப்பைச் சொல்கிறது
ஆஸ்ரிதர் உடைய அபேக்ஷிதம் செய்யும் ஸ்வ பாவன் என்றுமாம்
என்னோடே இப்படி வந்து கலந்த நீ ஒரு நாளும் பிரியாது ஒழிய வேணும் -இப்படி உள்ள கலவியாலே என்னை அடிமை கொண்டவனே –

—————————————————————————————————————————

உன்னுடைய குண சேஷ்டிதங்களைக் காட்டி என்னை வசீகரித்து விஸ்லேஷிக்க முடியாத படி
என்னோடே கலந்து இருந்துள்ள உனக்கு இனி போக உபாயம் இல்லை என்கிறார் –

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-

என்னை அடிமை கொண்டு அருளுகைக்காக நிரதிசய போக்யமான திரு மலையிலே நின்று அருளினவனே –
பரந்த அடியை உடைய மராமரம் ஏழும் உருவ அநாயாசேன எய்தவனே
கொந்தார் -தழைத்து இருக்கை
விஸ்லேஷ அநர்ஹமாம் படி என்னோடே சம்ச்லேஷித்து அக்கலவியாலே நவீக்ருதமான யுவனத்தை உடையவனே
வானேறே -தம்மோடு கலந்த படிக்கு த்ருஷ்டாந்தம்

—————————————————————————————————————————–

கால த்ரயத்தாலும் உன் கிருபையால் எல்லாப் படியாலும் எனக்கு உபகாரகனான உன்னை
சாஷாத் கரித்து வைத்து இனி விட சம்பாவனை உண்டோ -என்கிறார் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-

கால த்ரயத்திலும் தாயும் தமப்பனும் செய்யும் நன்மைகளையும் என் ஆத்மா தான் தனக்குப் பார்த்துக் கொள்ளும் நன்மைகளையும்
செய்யும் ஸ்வ பாவன் ஆனவனே -இப்படி உபகாரகனாய் நின்றுள்ள உன்னைக் காண வல்லேனோ என்று இருக்கிற
நான் காணப் பெற்று வைத்து இனி விட உபாயம் உண்டோ –
உன்னுடைய ஐஸ்வர் யாதிகளுக்கு ஓத்தார் மிக்கார் இல்லாதபடி இருந்து வைத்து என்னொட்டை சம்ச்லேஷத்துக்காக
நிரதிசய போக்யமான திருமலையை விடாதே எழுந்து அருளி நிற்பதும் செய்து என்னொட்டை கலவியாலே
பருவம் செய்து அதி பரிமளமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனானவனே –

——————————————————————————————————————————

இப்பத்தை இனிதாய் அநுஸந்திக்குமவர்கள் பகவத் பரிக்ரஹம் ஆவார் என்கிறார் –

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-

தம்மோடு கலக்கையாலே அவனுக்குப் பிறந்த செவ்வியைச் சொல்லிற்று
அவன் தம் பக்கல் பண்ணின அபி நிவேச குணத்தில் அவகாஹித்து
ஆயிரம் திரு வாய் மொழியிலும் எம்பெருமான் தம் பக்கலிலே பண்ணின வ்யாமோஹத்தில் ஒன்றும் குறையுமே ஆழ்வார் அருளிச் செய்த
இப்பத்தை இசையோடும் பண்ணோடும் பாட வல்லார்களுக்கு கேசவன் தமர் என்னும் ஆகாரம் போக்கி ஆகாராந்தரம் இல்லை –

————————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: