திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -2-6-

கீழ் ப்ரஸ்துதமான சம்ச்லேஷத்தால் தான் பெறாப் பேறு பெற்றானாய் -அதனாலே ஹ்ருஷ்டனாய்
இப்பரீதிக்கு ஒரு குலை தல் வாராத படி எத்தைச் செய்வேன் -இவர் ஆகிறார் கிட்டக் கொண்டு அகலுமவர் ஒருத்தர்
இக்கலவிக்கு விச்சேதம் வாராத படி பரிஹரிக்கும் படி என்-என்று தன் பக்கலிலே அதி சங்கை பண்ணின படியைக் கண்டு
இவனுக்கு நம் பக்கலில் கிடந்த பாரதந்தர்ய வாத்சல்யாதி கள் இருந்த படி என் என்று விஸ்மிதராய்
தாம் அவனை விடாத ஸ்வ பாவராய் இருக்கும் படியை அவனுக்கு அறிவித்து அவனைத் தரிப்பிக்கிறார்
ப்ரணயி ப்ரீதி அனுசந்தானம் காண் இது -என்று ஆளவந்தார்
இப்படி தன் பேறாக வந்தவன் ஸ்ரீ வைகுண்ட நாதன் ஆயிற்று -அந்தாமத்து அன்பு செய்து -என்றும் வைகுந்த -என்றும் பேசுகையாலே
அடியார் குழாங்களை-என்று இவர் சபரிகரனாக அவனை ஆசைப் பட்டார் –
-அவனும் இவரோடு கலந்த பின்பு -எமர் கீழ் மேல் எழு பிறப்பும் -என்று இவரோடு சம்பந்தித்தாரைத் தேடினான்
குணாதிக விஷயம் ஆகையால் மேல் விழலாம் எனக்கு -நான் தோஷ பிரசுரனாய் இருக்க இவன் மேல் விழுவதே -என்கிறார்
இரண்டு தலைக்கும் ரசம் அதிசயித்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் இறே

—————————————————————————————————————————————

இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அவன் அதி சங்கை பண்ண -அத்தை நிவர்த்திப்பிக்கிறார் –

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

வைகுந்தா –
சம்ச்லேஷ சமயத்திலே ப்ரீதிக்கு போக்குவீடாக நாம கிரஹணம் பண்ணுமா போலே -வைகுந்தா -என்கிறார் –
பிராட்டி ஆர்யபுத்ர -என்னுமா போலேயும் -இடைப் பெண்கள் -கிருஷ்ணா என்னுமா போலேயும் -அவர்கள் அளவன்றியே-
நித்ய விபூதி உக்தனாய் இருக்கிற இருப்பை யாயிற்று இவருக்கு விதேயம் யாக்கிற்று –
மணி வண்ணனே –
நீல மணி போலே இருக்கிற வடிவு அழகை உடையவனே
என் பொல்லாத் திருக் குறளா –
மஹா பலிக்குத் தன் வடிவு அழகைக் காட்டினால் போலே அத்தியாய வந்து தன் அழகைக் காட்டின ஸுலப்யத்தை சொல்லுகிறது
மேன்மையும் நீர்மையும் வடிவு அழகையும் கூட்டின பசும் கூட்டம் ஆயிற்று பரதத்வம் இருப்பது
பொல்லா -என்றது விபரீத லக்ஷணை -உகவாதவர்கள் கண் எச்சில் படாமைக்கு என்னவுமாம் –
என்னுள் மன்னி
என் பக்கலிலே ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்து
வைகல் வைகல் தோறும் அமுதாய –
நாள் செல்ல நாள் செல்ல அபூர்வவத் போக்யனாய் இரா நின்றான்
வானேறே-
நித்ய ஸூ ரிகளுக்கு போக்யனாய் இருக்குமா போலே எனக்கும் போக்யனானவனே
ஏறே என்கிறது -பின்பும் இவன் ஏற்றமே விஞ்சி இருக்கை-

செய்குந்தா வரும் தீமை
செய்து அற்று குந்தாவாய் -தப்ப அரியதாய் அனுபவிக்கும் பாபம்-செய்கும் -செய்யப் பட்டு –
தாவரும் தீமை -தாவ அரியதாய் -கடக்க அரியதான கர்மம் -என்றுமாம் –
உன் அடியார்க்குத் தீர்த்து –
உன்னை ஆச்ரயித்தார்க்கு அனுபவிக்க வேண்டாத படி பண்ணி
அசுரர்க்குத் தீமைகள் செய் –
தத் விரோதிகள் மேலே ஏறிட்டு அவற்றை அனுபவிப்பிக்கும்
கடலைச் சீறித் தொடுத்த அம்பை அவன் முகம் காட்டினவாறே அவன் சத்ருக்களான மருகாந்தரத்திலேஅசுரர்கள் மேலே விட்டால் போலே
த்விஷந்த பாபக்ருத்யாம் -இப்படி அசலிடப் பெற்றது இல்லை யாகில் –
உரசா தாரயாமாச பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -என்று தான் ஏறிட்டுக் கொண்டு அனுபவிக்கும்
குந்தா –
இப்படி ஆஸ்ரிதர் பக்கல் ஓரமாகிற சுத்தியை உடையவனே
குந்தம் என்கிறது குந்தம் பூவாய் -அதின் வெண்மையை நினைத்து சுத்தி சொல்கிறது
உன்னை
ஆஸ்ரித பக்ஷ பாதியான உன்னை
நான்-
ஆடியாடியிலே விடாய்த்த நான்
பிடித்தேன் கொள் சிக்கனவே –
திருவடிகளை பிடித்தேனாக திரு உள்ளத்தில் கொள்ள அமையும்
மதிப்பன் அல்லன் என்று விடவோ –
வடிவில் பசை இல்லை என்று விடவோ
ஸூ லபன் அன்று என்று விடவோ
தேவர் நெகிழ்க்கிலும் நெகிழாத படி பற்றினேன் –

————————————————————————————————————————

அவன் தன்னை அனுபவித்த படியையும்-அவ்வனுபவத்தால் அவன் திரு மேனியில் பிறந்த புகரையும் சொல்லுகிறார் –

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்-ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
ஷூத்ரமாய் இருபத்தொரு பதார்த்தமும் பிறி கதிர் படாத படி தன் சங்கல்பத்தாலே சகல லோகங்களையும் ஒரு காலே வைத்து சிக்கென புகுந்தான் –
இனி ஒரு காலமும் பிரியாத படி புகுந்தான் -புகுந்த பின் அவன் இருந்த படி என் என்னில் –
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் –
ஞான வெள்ளத்தால் வந்த மிக்க தேஜஸை உடையவனாய்
விகசித சஹஜ சார்வஞ்ஞனாய்
சேதனனுக்கு கர்ம பாரதந்தர்யத்தால் வரும் ஞானத்தில் விகாரம் -ஆஸ்ரித பாரதந்தர்யத்தால் ஈஸ்வரனுக்கு உண்டாகிறது ஆயிற்று
அங்கனே ஆகில் இ றே ஆஸ்ரயணீயன் ஆவது –
துளக்கற்ற –
ஆடியாடியில் ஆற்றாமையால் வந்த உள் நடுக்கம் தீர்ந்தானாய் இரா நின்றான் -விஜ்வர என்னக் கடவது இறே
அமுதமாய்-
பிரமுமோத ஹ-என்கிறபடியே தன் உகப்பாலே எனக்கு நிரதிசய போக்யனாய் அவன் தன்னை அனுபவித்து இனியனாய் இருக்கும் இருப்பு இறே இவர்க்கு போக்யம்
எங்கும்-பக்க நோக்கு அறியான்-
பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் –
இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை
என் பைந்தாமரைக் கண்ணனே-
ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –

———————————————————————————————————————–

நித்ய ஸூ ரிகளைப் போலே தன் படிகளில் ஈடுபட்டு புகழும் படி பண்ணின இது ஓர் உதார குணமே என்கிறார் –

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் –
ஒரு கால் நோக்கினால் நித்ய ஸூ ரிகள் ஜ்வர சந்நிபதரைப் போலே அடைவு கெடக் கூப்பிடுவார்கள் ஆயிற்று
தலைமகனை –
இப்படிக்கு கூப்பிடா நின்றாலும் -நிரவத்ய பர ப்ராப்தே-என்கிறபடியே அவ்வருகாய் இருக்கும்
துழாய் விரைப்-பூ மருவி கண்ணி எம்பிரானைப்-
அவர்களைக் கண்ணாலே தோற்ப்பித்தான்-என்னைத் தோளில் மாலையால் தோற்ப்பித்தான் –
விரையும் பூவும் மருவி இருந்துள்ள திருத் துழாய் மாலையை உடைய என் யாயனை
பொன் மலையை-
என்னோட்டைக் கலவியாலே அபரிச்சின்னமான அழகை உடையனாய் கால் வாங்க மாட்டாதே இருக்கிறவனை –
நான் ஏத்தப் பெற்ற படியால் வளர்ந்த படி -என்னவுமாம் –
நாம் மருவி-
அருவினையேன்-என்று அகன்ற நான் வந்து கிட்டி -பகவத் ப்ரத்யாசித்தியை பாபம் என்று அகன்ற நான் கிட்டி
நன்கேத்தி-
நித்ய ஸூ ரிகள் ஏத்தக் கடவ விஷயத்துக்கு நிலவனாய் சத்ருசமாம் படி ஏத்தி
வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை -என்றவர் இறே –
யாதோ வாசோ நிவர்த்தந்தே என்று வேதம் மீண்ட விஷயத்தை நன்றாக ஏத்தி என்றுமாம் –
யுள்ளி –
குணங்களை அனுசந்தித்து -நினைந்து நைந்து -என்றவர் இறே
வணங்கி –
குண பலாத்க்ருத்யனாய் நிர்மமனாய் வணங்கி -வணங்கினால் மாசூணாதோ என்றவர் இறே
நாம் மகிழ்ந்தாட –
பகவத் அனுபவத்தால் வந்த ப்ரீதி தத்துவத்தில் புதியது உண்ணாத நாம் ஹ்ருஷ்டராய் -அதுக்கு போக்கு விட்டாட
நா வலர்-பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே-
கால புஷபம் போலே நாவிலே அலரா நின்றுள்ள பா உண்டு -கவி -அதிலே மருவி நிற்கும் படி நிலவனாய் நிற்கும் படி தந்த
நா வலர் பா -மனஸ் சஹகாரமும் வேண்டாத படி இருக்கை –
பான்மையே வள்ளலே–வள்ளலே என்று சம்போதமாய் –
வள்ளலே இது ஒரு ஸ்வ பாவமே என்னுதல்
பான்மையேய்-அத்தை ஸ்வ பாவமாக உடையவன் என்னுதல் -பான்மை -கடன்

—————————————————————————————————

இந்த ப்ரீதி எத்தனை குளிக்கு நிற்குமோ என்ன -உன் படிகளை அனுபவித்து வைத்து விட உபாயம் உண்டோ என்கிறார் –

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
அவன் படிகளை சொல்லுகிறார்
வள்ளலே -உன்னை எனக்குத் தந்த பரம உதாரனே
மது சூதனா -உன்னை அனுபவிக்கைக்கு விரோதிகளை போக்குமவனே –
என் மரகத மலையே -உன்னிலும் சீரியதான உன் வடிவு அழகை எனக்கு அனுபவிக்கத் தந்தவனே –ஸ்ரமஹரமாய் -அபரிச்சேத்யமான வடிவு
உனை நினைந்து-எள்கல் தந்த வெந்தாய்-
உன்னை அனுபவித்தால் புறம்பு உள்ளவற்றை எல்லாம் இகழும் ஸ்வ பாவத்தை எனக்குத் தந்தவனே
எள்கல்-இகழ்ச்சி யாதல் -ஈடுபாடு ஆதல் –
உன்னை அனுபவித்தால் அமையும் என்று இராதே மேன் மேல் என ஈடுபடும் ஸ்வ பாவத்தை -என்றுமாம் –
உன்னை எங்கனம் விடுகேன்-
பாஹ்ய ருசியைத் தவிர்த்த உன்னை விட்டு எங்கே போவேன் -உன் பக்கல் ஈடுபட்ட நான் உன்னை விட்டால் சத்தை உண்டோ
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து-
கடல் போலே இருந்துள்ள உன்னுடைய கல்யாண குணங்களில் அவகாஹித்து –
ஆடிப் பாடிக் –
ப்ரீதிக்குப் போக்கு வீடான காயிகமாயும் வாசிகமாயும் உண்டான விக்ருதி –
களித்து உகந்து உகந்து-
ஹ்ருஷ்டனாய் அது விச்சேதியாத படி மேன் மேல் என ஒருபடிப் பட்டு இராதே பெருகி வர –
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து –
விஷய ப்ராவண்யத்தால் வரும் நோய் –
விரஹத்தால் வரும் நோய் –
அயோக்கிய அனுசந்தானத்தால் வரும் நோய் –
உய்ந்து –
அசன்னேவ ச பவதி -என்கிற நிலை தவிர்ந்து சந்த மேனம் என்னும் படி உஜ்ஜீவித்து
போந்து-
உள்ளளவும் போந்து -சம்சாரத்தில் இருக்கச் செய்தெ நித்ய ஸூ ரிகள் பரிமாற்றமாய் இருக்கை
இருந்தே –
க்ருதக்ருத்யனாய் இருந்து -இப்படி இருந்து வைத்து உன்னை எங்கனம் விடுகேன்-

————————————————————————————————————

நித்ய கைங்கர்யத்தை லபித்த எனக்கு உன்னை விட சம்பாவனை உண்டோ என்கிறார் –

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-

உய்ந்து போந்து-
ஸ்வரூபத்தைப் பெற்று சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தனாய் போந்து
என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து-
முடிவின்றிக்கே அதி குரூரமான கர்மங்களை நசிப்பித்து
உனது-அந்தமில் அடிமை அடைந்தேன் –
விரோதி நிவ்ருத்தி முன்னாக உன் திருவடிகளில் நித்ய கைங்கர்யத்தை அந்வயித்த நான் –
அர்த்ததச்ச மயா ப்ராப்தா -என்கிறபடியே இதிலே எல்லாம் உண்டாம்படியான தைக் கிட்டின நான்
விடுவேனோ-
விஷயாந்தரங்களை விரும்பினேனோ விடுகைக்கு
ஸ்வரூப சித்தி இன்றிக்கே விடுகிறேனோ
தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாமே விடுகிறேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை –
அடிமையை சுவடு அறிந்த திரு வனந்த ஆழ்வான் விடில் அன்றோ நான் விடுவது
பகவத் அனுபவ ஹர்ஷத்துக்கு போக்கு விடுகைக்கு ஐந்து பைந்தலையை உடையனாய்
சாய்க்கைக்கு ஸ்வா பாவிகமான குளிர்த்தியை உடையனாய் -ப்ரீதியாலே தூங்கு மெத்தை போலே அசைந்து வாரா நிற்பானாய்
நாற்றம் தொடக்கமான வற்றை ப்ரக்ருதியாக உடையனான திரு வனந்த ஆழ்வான் மேலே –
மேவிப்
கிளப்ப ஒண்ணாத படி பொருந்தி
பாற் கடல் யோக நித்திரை-சிந்தை செய்த
திருப் பாற் கடலிலே ஜகத் ரக்ஷண சிந்தாத்மக யோக நித்திரை பண்ணி அருளினை
சேதனர் உடைய உஜ்ஜீவன பிரகாரம் ஆதல் –ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தையன் மதுஸூதன-என்கிறபடியே தன்னை அனுசந்தித்தல் ஆதல்
வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –
எந்தாய் – இந்நீர்மையைக் காட்டி என்னை என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனே
உன்னை -நான் விட்ட வன்றும் விடாத ஸ்வ பாவனான உன்னை
சிந்தை செய்து செய்தே-விச்சேதியாத படி உன்னை அனுசந்தித்து –

———————————————————————————————————–

உமக்கு இனிச் செய்ய வேண்டுவது என் -என – நான் பெறாதது உண்டோ எல்லாம் பெற்றேன் என்கிறார் –

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

உன்னைச் சிந்தை செய்து செய்து –
போக்யனாய் -ப்ராப்தனுமான உன்னை -நிதித்யாசித்வய என்கிற விதி பிரேரித்தனாய் அன்றிக்கே-
விட மாட்டாமையாலே அநவரதம் பாவனை பண்ணி
உன் நெடுமா மொழியிசை பாடியாடி-
நெடிய மொழி -மாவான இசை -இரண்டின் வை லக்ஷண்யமும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை
ப்ரீதி பிரேரித்தனாய் பாடி -ஏதத் சாம காயன் நாஸ்தே-என்கிற முக்த அனுபவத்தை இங்கே பெற்றேன்
ஆடி -காயிகமான வ்ருத்தி -பால் குடித்து நோய் போக்குமா போலே
என்-முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் –
அநாதி கால சஞ்சிதமான கர்மங்களை -சவாசனமாகப் போக்கினேன்
யான்-
யான் என்கிறது பேறு தம்மைதான படியால்
விரோதியை நீ போக்கினை படி என் என்ன -நரசிம்ஹமமாய் ஹிரண்யனைப் போக்கினால் போலே
உன்னைச் –
வகுத்தவனுமாய் -உபகாரகனுமான உன்னை
சிந்தையினால் இகழ்ந்த-
உன்னை வாக்கால் இகழுகை அன்றிக்கே நெஞ்சால் இகழ்ந்த
பிராப்தி யாலும் அழகாலும் இகழ போகாது -விஷயீ கரிக்கைக்கு மித்ரா பாவமே அமையும் -நெஞ்சத்தால் தூஷித்தால் யாயிற்று கை விடுவது
இரணியன் அகல் மார்வம்-
அஹங்காரம் மமகாரத்தால் அகன்ற மார்வம் திரு உகிருக்கு இரை பெறும்படி வரத்தை ஊட்டியாக இட்டு வளர்த்தது இ றே
கீண்ட –
நரசிம்மத்தின் சீற்றத்தைக் கண்டவாறே ஒத்த பதம் செய்தது -அநாயாசேன கிழித்த படி
என்-முன்னைக் கோளரியே
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உபகரித்ததும் தமக்கு என்று இருக்கிறார்
ஆஸ்ரிதரிலே ஒருவருக்குச் செய்தது தனக்குச் செய்ததாக நினைத்து இராத வென்று பகவத் சம்பந்தம் இல்லையாம் அத்தனை
முடியாதது என் எனக்கே –
ஆஸ்ரித ப்ரதிஞ்ஞா சமயத்திலே உன்னை அழிய மாறி தோற்றுவாயான பின்பு பெறாதது உண்டோ -எல்லாம் பெற்றேன் அல்லேனோ-

————————————————————————————————————-
நீர் எல்லாமே பெற்றீரோ என்ன -என் பக்கல் அவன் பண்ணின பக்ஷ பாத ராஜ குலத்தாலே என்னோடே சம்பந்தி சம்பந்திகள்
ஆனாரும் கூட சம்சார உத்தீர்ணர் ஆனார்கள் -ஆனபின்பு நான் பெறாதது உண்டோ என்கிறார் –

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-

முடியாதது என் எனக்கேல் இனி
எனக்காக்கில் இனி முடியாதது உண்டோ –இனி அநவாப்தாமாய் இருப்பது உண்டோ -எங்கனே என்னில்
முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து-அடியேனுள் புகுந்தான் –
பிரளய ஆபத்தில் சகல லோகமும் நோவு படாத படி திரு வயிற்றிலே வைத்து ரஷித்தவன்-
ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதாப் போலே என்னை ஒழிய செல்லாதனாய் சம்பந்தத்தைப் பார்த்து உட்ப்புகுந்தான்
ஒரு நீராகக் கலந்தான் -தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றிக்கே உகந்து புகுந்தான்
இவனுக்கும் ஜகத்துக்கும் செல்லாமை ஒக்கும் -உகப்பு ஏற்றம் இவ்விஷயத்தில் இவனுக்கு -மத சம்பந்திகள் அளவும் கீழ் மேல் ஓடும்படி புகுந்தான் –
அகல்வானும் அல்லன் இனி
பிரளய அநந்தரம் உமிழ்ந்தான்-இங்கு அங்கனே செய்வானாய் இருக்கிறான் அல்லன்
சேதனரைப் போலே பாபத்தாலே அகன்று ஒரு ஸூ க்ருத்தாலே கிட்டுதல் இல்லையே இவனுக்கு
பனை நிழல் போல் -உம்மை நோக்கி விட அமையுமோ
உம்மோடு சம்பந்தித்து இருப்பார் செய்வது என் என்ன -அவர்களும் பெற்றார்கள்
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து –
தூறு மண்டின நோய்கள் எல்லாம் துரந்து-விஷய பிராவணயத்தாலே வந்த நோய் -பகவத் அலாபத்தாலே வந்த நோய் -இவற்றை எல்லாம் வாசனையோடு ஒட்டி
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்-
வேறு ஒன்றால் அன்றியே என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக -எவ்வளவு என்னில் -கீழ் ஏழு படியும் மேல் ஏழு படியும்
விடியா வென்னரகத்து –
ஒரு நாளிலே முடிவுண்டான தண்டல் யமனது -விடியா வென்னரகம் சம்சாரம்
வென்னரகம் -நரகம் என்று புத்தி பிறக்குமதில் தண்மை தோற்றாத நரகம் இது
என்றும் சேர்த்தல் மாறினரே –
என்றும் கிட்டக் கடவதான தண்மையும் தவிர்த்தார்கள்
நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை
அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை
என் பக்கல் அவன் பண்ணின பக்ஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள் –

—————————————————————————————————————

நிர்ஹேதுகமாகப் பெற்ற இஸ்ஸம்ருத்தி ஒரு நாளும் விச்சேதியாது ஒழிய வேணும் என்று இரக்கிறார்

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து –
சபரிகாரமாக உம்மை விஷயீ கரிக்கைக்கு நீர் செய்தது என் என்ன –
அநாதியாக சாவது பிறப்பதுமாகப் போந்தேன்-அனுபவித்து மீளுதல் -பிராயச்சித்தம் பண்ணுதல் செய்யக் காலம் இல்லை யாயிற்று
இப்படி ஜென்ம பரம்பரையாக போரா நிற்க உன் திருவடிகளை வந்து கிட்டிக் கொண்டு நின்றேன்
அதாகிறது இந்த சித்திக்கு இத்தலையில் ஒரு முதலும் உண்டு என்று தோற்றாத படியால் சொல்லுகிறது
உள்ளம் தேறி-
நெடு நாள் விஷய வாசனையாலும் பகவத் அலாபத்தாலும் உள்ள அந்தகரண காலுஷ்யம் போய் ஹிருதயம் தெளிந்து
-சா தம்சமா சாத்யவிசுத்த சத்வா -ஹிருதயம் தெளிந்த மாத்திரம் அன்றிக்கே
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
முடிவு இல்லாத ஆனந்த சமுத்ரத்திலே நான் அவகாஹித்தேன்
திருவடி திரு அனந்த ஆழ்வான் இவர்களும் குமிழ் நீர் உண்ணுகிற விஷயத்தில் இ றே நான் அவகாஹிக்கப் பெற்றது
விரோதி வர்க்கம் செய்தது என் என்னில் பெரிய திருவடி யுடைய திருச் சிறகை கேட்க்கும் அத்தனை
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று-ஏறி வீற்று இருந்தாய்-
சின்னம் பின்னமாய் அஸூர வர்க்கத்தின் உடைய பல வகைப் பட்ட குழாங்கள் ஆனவை நீறாம்படி
விரோதி வர்க்கத்தில் பாயா நின்றுள்ள அத்விதீயனான பெரிய திருவடி மேலே ஏறி ஐஸ்வர் யத்தாலே வந்த வீறுபாடு தோற்றும்படி வந்து இருந்தவன்
பெரிய திருவடிக்கு அத்விதீயம் -அவன் கருத்து அறிந்து செய்கையில் தலைவனாகை
உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –
என்னோடே இப்படி கலந்த உன்னை என் பக்கலில் நின்றும் நீக்க நினையாது ஒழிய வேணும்
தம்முடைய இனிமையாலே இவரும் அவன் பக்கலிலே அதி சங்கை பண்ணுகிறார் -தம் உகப்பு அவனை எதிர் இட்ட படி
எந்தாய் -விரோதியைப் போக்கி வந்து கலக்கைக்கு அடியானை ப்ராப்தியைச் சொல்கிறது

———————————————————————————————————-

விஸ்லேஷிக்க முடியாத படி என்னோடே கலந்து வைத்து ஒன்றும் செய்யாதாரைப் போலே பரகு பரகு -என்கிறது என் என்கிறார்
இவர் நினைவு அறிய வேணும் என்று அவன் கால் வாங்கப் புக இனி எங்குப் போகின்றது என்கிறார் என்னவுமாம் –

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-

எந்தாய் –
வகுத்த ஸ்வாமி என்னும் முறையை அறிவித்தவனே
தண் திருவேங்கடத்துள் நின்றாய் –
ஸ்ரமஹரமான திருமலையில் நின்றாயிற்று சம்பந்தத்தை அறிவித்தது
இலங்கை செற்றாய் –
சம்பந்த ஞான விரோதி வர்க்கம் இலங்கை பட்டது பட்டது
மராமரம்-பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா-
மஹா ராஜரை இசைவித்தால் போலே யாயிற்று இவரை இசைவித்தது –
பைந்தாள்-பரந்த அடியை உடைத்தாகை-
ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா-துளை உள்ளது ஒன்றிலே அம்பை ஓட்டினால் போலே யாயிற்று அனாயாசம் இருந்த படி
கொந்தார் தண் அம் துழாயினாய்
வைத்த வளையத்தை காட்டி யாயிற்று இவரை இசைவித்தது -கொந்தார்-தழைத்து இருக்கை
அமுதே –
அவ் ஒப்பனையாலே எனக்கு நிரதிசய போக்யமானவனே
உன்னை என்னுள்ளே குழைந்த-
கலக்கிற இடத்தில் -ஏக தத்வம் என்னலாம் படி யாயிற்று கலந்தது
வெம்-மைந்தா –
என்னோடே கலக்கப் பெற்ற இத்தாலே நவீக்ருத யுவன ஸ்வ பாவன் ஆனவனே
வானேறே
அஸ் ப்ருஷ்ட சம்சார கந்தரை அனுபவிப்பித்தால் போலே யாயிற்று இவரை அனுபவிப்பித்தது
இனி எங்குப் போகின்றதே –
நித்ய ஸூ ரிகளை விடில் அன்றோ என்னை விடலாவது -போகிலும் கூடப் போக வேண்டும்படி யன்றோ கலந்தது –

———————————————————————————————————-

நாம் போகாது ஒழிகிறோம்-நீர் விடாதே ஒழிய வேணும் என்ன -நீ பண்ணின உபகாரங்களை கண்டு வைத்து விட சம்பாவனை உண்டோ என்கிறார் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை –
கால த்ரயத்தாலும் தாயும் தமப்பனும் செய்யும் நன்மைகளும்
உயிராகின்றாய் –
ச பித்ராச பரித்யக்த –என்று அவர்கள் விடும் அளவிலும் தான் தனக்குப் பார்க்கும் நன்மைகளையும் செய்யுமவனே
இச் சேதனர் அநாதி காலம் தன வி நாசத்தையே சூழ்த்துக் கொள்ள -முகம் தோற்றாத படி நின்று சத்தையை நோக்கி போந்தவன் அல்லையோ –
உன்னை –
இப்படி உபகாரகனான உன்னை
நான் அடைந்தேன் விடுவேனோ
உபகார ஸ்ம்ருதியை உடையேனான நான் கிட்டப் பெற்ற இனி விடுவேனோ –
பாகின்ற தொல் புகழ் –
விதிதஸ் சாஹி தர்மஞ்ஞா -என்கிறபடியே ஸர்வத்ர பரம்பு இருப்பதாய் ஸ்வ பாவிகமான கல்யாண குணங்களை உடையவனே
மூ வுலகுக்கும் நாதனே –
குண ஹீனன் ஆனாலும் விட ஒண்ணாத சம்பந்தம் சொல்கிறது –
பரமா –
சம்பந்த மாத்ரமேயாய் மேன்மை அளவுபட்டு இருக்குமோ என்னில்-சர்வாதிகனாய் இருக்கும் –
மேன்மையால் கிட்ட ஒண்ணாதாய் இருக்குமோ என்னில்
தண் வேங்கட-மேகின்றாய் –
ஸ்ரமஹராமான திருமலையில் வந்து ஸூ லபன் ஆனவனே
தண் துழாய் விரை நாறு கண்ணியனே –
என்னொட்டை கலவியாலே குளிர்ந்து அதி பரிமளிதமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய் –
செய்தது வாய்த்துச் செல்வனாய் பிடித்து மோந்த இலைத் தொடையும் தாணுமாய் இருக்கிறபடி-

—————————————————————————————————————

இப்பத்தையும் இனிதாக அநுஸந்திக்குமவர்கள் பகவத் பரிக்ரஹம் ஆவார் என்கிறார்-

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப்-
இவர் நம்மை விடில் செய்வது என் என்று அவனுக்கு ஓடின அதி சங்கை தீருகையாலே பிறந்த செவ்வியைச் சொல்லுகிறது –
வைத்த வளையமும் செவ்வி பெற்று இருக்கிற கண்களும் விகசித்தம் யாயிற்று
புகழ்-நண்ணித் –
அவன் தம் பக்கல் பண்ணின அபி நிவேச குணத்தில் அவகாஹித்து
தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன-எண்ணில் சோர்வில் அந்தாதி –
அவன் மநோ ரதத்தில் ஒன்றும் குறை இல்லாத படி அருளிச் செய்த
ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்-பண்ணில் பாட வல்லார் அவர் –
இதில் அபி நிவேசத்தால் இசையோடும் பண்ணோடும் பாட வல்லார்கள்
பண்ணாகிறது -கானம் -இசையாகிறது குருத்துவ லகுத்வாதிகளில்-தன்னிலே நெகிழ்ந்து பொருந்துகை –
த்வனியிலே -நிறத்தில் என்றபடி
கேசவன் தமரே –
குல சரண கோத்ராதிகள் வேறு அன்றிக்கே-விண்ணப்பம் செய்வார்கள் -என்னுமா போலே இதுவே பிரகாரமாய் இருக்கை –

—————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: