திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -2-5-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆர்த்த்வ த்வனியைக் கேட்டு மிகவும் வியாகுலனாய் எழுந்து அருளி –
அவனுடைய ஆர்த்தி எல்லாம் தீர்த்து -அத்யந்த ஸூ கிதனாம் படி பண்ணி அருளினால் போலே -கிருபா சமுத்ரமான எம்பெருமான்
ஆழ்வாருடைய ஆர்த்தவ த்வனியைக் கேட்டு தான் மிகவும் ஆர்த்தனாய்
அழகிதாக ஜெகன் நிர்வஹணம் பண்ணினோம் ஆகாதே என்று தன்னுடைய ரக்ஷணஸ்வ பாவத்தை நிந்தியா நின்று கொண்டு சீக்கிரமாக வந்து
தம்முடைய ஆர்த்தியைத் தீர்த்து மிகவும் நிரவருத்தராம் படி பண்ணித் தம்மோட்டை சம்ச்லேஷத்தாலே தான் அத் உஜ்வலனாய்
தம் பக்கலிலே அத்ய அபி நிவிஷ்டனாய்-தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் திவ்ய ஆபரணங்களையும் திவ்ய சேஷ்டிதங்களையும்
மற்றும் தனக்கு உள்ள திவ்ய போகங்களையும் இவற்றை எல்லாம் தமக்கு காட்டிக் கொடுத்து க்ருதக்ருத்யனான படியை அனுசந்தித்து
ஹர்ஷ விஸ்மய நிர்ப்பரரான ஆழ்வார் தமக்குப் பிறந்த ஸம்ருத்தியை பேசி அனுபவிக்கிறார் –

—————————————————————————————————————-

தாம் மநோ ரதித்த படியே தன பரிகரங்களோடே கூடாது தம்மோடு வந்து சம்ச்லேஷிக்கையாலே எம்பெருமானுக்கு பிறந்த உஜ்வலத்தை பேசுகிறார் –

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-

திரு நாட்டில் உள்ளார் பக்கல் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி என்னோடே வந்து சம்ச்லேஷித்த சர்வேஸ்வரனுக்கு
அழகிய மாலை -செவ்வி பெறா நின்றுள்ள திரு அபிஷேகம் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -திருவாழி -திவ்ய ஆபரணங்கள் -என்று தொடக்கமாக
பண்டு என்னோட்டை விரஹத்தாலே அனுஜ்வலமானவை -சம்ச்லேஷத்தாலே உளவான என்னும் படி உஜ்வலமாயின
தாமம் -தேஜஸ் ஆகவுமாம்-
ஹர்ஷ ப்ரகரஷத்தாலே உத்தபுல்ல புண்டரீக தடாகம் போலே விகசிதமான திருக் கண்கள் –

—————————————————————————————————

லஷ்மீ பரப்ருதிகளுக்கும் தன் பக்கல் ஒரோ பிரதேசத்தையே பற்றி லப்த சத்தாகராம் படி இருக்கிற சர்வேஸ்வரன்
சர்வ அங்கங்களாலும் என்னோடே சம்ச்லேஷித்ததாலே உஜ்வலனானான் என்கிறார் –

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

தேஜோ ரூபமான திரு உடம்பு மிகவும் ஒளி பெற்றது -பிராட்டிக்கும் ப்ரஹ்மாவுக்கும் ஆபாஸ்ரயமான இடத்தை ஒழிய
நீங்கின இடத்தைப் பற்றி லப்த ஸ்வரூபனாய் இருக்கும் ருத்ரனும் -ஓ என்று விஸ்மயம்-
இப்படி இருக்கிற சர்வேஸ்வரன் என்னுடைய அங்கத்திலே ஏக தேசத்திலே தன்னுடைய சர்வ ங்கத்தோடும் சம்ச்லேஷித்தான் –

——————————————————————————————————

ருத்ராதிகள் மாத்திரம் இன்றிக்கே சகல லோகங்களுக்கும் ஆபாஸ்ரயமான எம்பெருமான் -தன்னை ஒழிந்தால்
இவ் உலகங்கள் எல்லாம் படும் பாட்டை என்னைப் பிரிந்து தான் பட்டு என்னோடே சம்ச்லேஷிக்கையாலே அத்யந்தம் புஷ்கலனானான் என்கிறார் –

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

என்னோடே சம்ச்லேஷிக்கையாலே வளர்ந்து உஜ்வலமான திருமேனியை உடையவனுக்கு
ஸமஸ்த லோகங்களும் தன் சங்கல்பத்தை பற்றி நிலை நிற்கின்றன-
தன் திரு உள்ளத்தை அபாஸ்ரயமாக உடைத்து அன்றிக்கே இருக்கும் வஸ்து தான் முதலிலே இல்லை –

———————————————————————————————————-

என்னோடே கலந்த எம்பெருமான் கால தத்வம் உள்ளதனையும் அனுபவிக்கிலும் க்ஷணம் தோறும் நிரதிசய போக்யனாய் இருக்கும் என்று விஸ்மிதர் ஆகிறார் –

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

எல்லா பதார்த்தமும் தான் இட்ட வழக்காய் என்னோடே சம்ச்லேஷித்து அதிஉஜ்வலன் ஆகையால் –
வளர்த்தியாலும் என்னை விட்டுப் போகாதே நிற்கையாலும் மரகத குன்றம் ஒக்கும் –
அப்போது அலர்ந்த தாமரைப் பூ
ஒரு க்ஷணமும்-

————————————————————————————————————

எம்பெருமானுக்கு என்னோட்டை சம்ச்லேஷத்தால் பிறந்த அழகுக்கு உவமானம் இல்லை என்கிறார் –

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–

நிரதிசய போக்யனாய் இருந்து வைத்து -அத்யந்த ஹீனனான என்னோடே கலப்பதும் செய்து
பாத்தாலே கார்காலத்தில் ஆர்ந்த கருமுகில் போல் உஜ்வலனாய் என் ஸ்வாமியான கிருஷ்ணனுக்கு
வாயை ஒவ்வாது செம்பவளம் –
கண் பாதம் கைகளோடு ஒவ்வாது கமலம்
இழை -ஆபரணம் –

—————————————————————————————————————

தம்மோடு கலந்த எம்பெருமானுடைய அசங்க்யேயமான திவ்ய பூஷணாதிகளை அனுபவிக்கிறார் –

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

பாம்பணை மேலார்க்கு பிரகாரங்களை என்னப் புகில்-ஆபரணங்கள் -குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் –
திவ்ய விக்ரஹங்கள் -ஐந்த்ரிய ஸூ கண்கள் -ஞானங்கள் -இவை எல்லாம் அசங்க்யே யங்கள்
ஞானம் என்று ஞான சாதனமான சஷூராதி இந்திரியங்கள் ஆகவுமாம்
சர்வ இந்திரியங்களுக்கும் போக்யமாய் இருக்கும் பரிகரங்களை உடையவன் என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் -பாம்பணை மேலாற்கேயோ-என்றது –

——————————————————————————————————

திவ்ய சேஷ்டிதங்களை எம்பெருமான் காட்டி அருளக் கண்டு அனுபவிக்கிறார் –

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

தேவர்களுக்கு ஸமாச்ரயணீயனாய்க் கொண்டு-திருப் பாற் கடலிலே – திரு அரவணை மேல் கண் வளர்ந்து அருளிற்றும்
ஏறு ஏழைச் செற்றதும்-நிரதிசய போக்யமான நப்பின்னை பிராட்டிக்காக -காம்பு -மூங்கில்
தேனையும் பணை களையும் உடைத்தாய் அடிக் குறிக்க ஒண்ணாத படி சோலை செய்த மராமரம் ஏழ் எய்ததுவும்
நல்ல தொடையை உடைத்தாய் உள்ள திருத்த துழாயாலே அலங்க்ருதனாய்ப் பொன் முடியை உடையனாய் அத்தாலே மிகவும் மேநாணித்து இருந்தவன் –

——————————————————————————————————

வாங்மனசங்களுக்கு நிலம் அன்றிக்கே விலஷணனாய் இருந்து வைத்து என்னோடே ஸம்ஸலேஷித்த இம் மஹா குணம் எனக்கு பேச நிலம் அன்று என்கிறார் –

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

பொன் முடியை உடையனாய் மிகவும் செருக்கை உடைய ஏறு போலே மேநாணித்து இருப்பதும் செய்து
தன்னுடைய குண சேஷ்டிதங்களாலே என்னை அடிமை கொண்டவனை
அழகிய திருத் தோள்கள் நாலையும் உடையவனாய் -அபரிச்சேதயமான வை லக்ஷண்யத்தையும் உடையவனாய்
சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமாய் நிரதிசய போக்யமான திருத் துழாய் மாலையை உடையவனை
என்னுடைய நிர்மர்யாதையான நிஹீ நதையைப் பாராதே என்னுள்ளே கலந்தவனை சொல்லி முடிக்கும் படி அறியேன்

————————————————————————————————————

தமக்கு எம்பெருமானைப் பேச முடியாமையாலே பேசவும் தவிர்ந்த ஆழ்வார் பின்னையும் தன்னுடைய சாபல்யத்தாலே
எல்லாரையும் அழைத்து அவர்களும் தாமும் கூடப் பேசுகையாலே உபக்ரமிக்கிறார் –

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-

நான் உஜ்ஜீவிக்கும் படி தன்னுடைய குண சேஷ்டிதங்களை காட்டிக் கொண்டு என்னுள் நின்றவனை
எல்லை இல்லாத அழகை உடைய கரு மாணிக்கத்தின் ஒளியை உடைய தன்னை எனக்குத் தந்தவனை
ப்ராக்ருத போக்யங்களில் தலைக்கு கட்டான அமுதம் போலே போக்யமுமாய் பரம ப்ராப்யமுமான மோக்ஷ புருஷாத்தமுமாய்
தன்னுடைய போக்யதைக்கு தாமரைப் பூவில் பரிமளத்தை உபமானமாக உடையனுமாய்
நாட்டில் காண்கிற ஆணின் படியும் அல்லன் பெண்ணின் படியும் அல்லன் –

—————————————————————————————————————–

எம்பெருமானுடைய ஸ்த்ரீபுன்ன பும்ஸகாதி சர்வ வஸ்து வை லக்ஷண்யாதி களைச் சொல்லா நின்று கொண்டு
ஏவம் விதனானவன் என்னோடு கலந்தபடி பேசி முடியாது என்கிறார் –

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

ஸ்த்ரீபுன்ன பும்ஸகாதி சர்வ வஸ்து வி லஷணன்-ஸ்த்ரீ நபும்சகங்களில் காட்டில் வி லஷணன் என்று சொல்லிற்று –
எம்பெருமானோடு ஒவ்வாமைக்கு ஸ்த்ரீ நபும்சங்களோடே புருஷர்களோடு வாசி இல்லை என்று தோற்றுகைக்காக-
இவற்றோடு அவனோடு ஏக பிராமண கம்யத்வ சாம்யத்வமும் இல்லை -அநாஸ்ரித்தற்கு துர்லபன்-ஆஸ்ரிதற்கு ஸூ லபன்
-ஆஸ்ரிதர் ஏதேனும் ஒன்றை -இவனுக்கு வடிவாக வேணும் என்று நினைத்தால் அத்தையே தனக்கு வடிவாகக் கொள்ளும்
-அவ்விருப்பில் அநாஸ்ரித்தற்கு வர ஒண்ணாத படி இருக்கும் –
இப்படி இருக்கிற எம்பெருமான் என்னோடே சம்ச்லேஷித்த படி பேசுவோம் என்றால் மிறுக்கு உடைத்து –

—————————————————————————————————————–

நிகமத்தில் இப்பத்தையும் அப்யசிப்பார் இதில் சொன்னபடியே பரிபூர்ணமாக எம்பெருமானை
திரு நாட்டிலே என்றும் அனுபவிக்கப் பெறுவார் -என்கிறார்

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

தன்னுடைய ஒரோ சேஷ்டிதமே கால தத்வம் எல்லாம் கூடினாலும் பேச ஒண்ணாது இருக்கிறவனை
சர்வ குண சேஷ்டிதாதிகளோடும் பரிபூர்ணன் ஆனபடியை பேசுகையில் துணிந்து –

—————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: