திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -2-4-

அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று மநோ ரதித்த படி அச் க்ஷணத்தில் கை வராமையாலே
கீழ்ப் பிறந்த ப்ரீதியையும் மாறி மிகவும் அவசன்னரான ஆழ்வார் -ஸ்வ கீயரானவர்கள் தம்முடைய தசையை
எம்பெருமானுக்கு விஞ்ஞாபிக்கிற படியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
எம்பெருமானோடே புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி -க்ஷண மாத்திரை விஸ்லேஷத்தாலே -அறத் தளர்ந்து -ஆர்த்தியாலே கிடந்த இடத்தே கிடவாதே
மோகமும் உணர்ச்சியுமாய் மாறி மாறிச் சென்று கண்டார்க்கு எல்லாம்தயை நீயை யான தசையை பிராப்த்தையாய்
ராம கிருஷ்ணாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணி அருளி ஆச்ரித சம் ரக்ஷணம் பண்ணி அருளும் நீர்மைகளை அனுசந்தித்து
தனக்கு உதவாமையாலே மிகவும் நோவு படுகிற பெண் பிள்ளையுடைய வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்து –
இவளுடைய திருத் தாயார் அத்தை எம்பெருமானுக்கு அறிவித்து
ஆஸ்ரிதற்கு உண்டான விரோதிகளை எல்லாம் போக்கி அவர்களை ரக்ஷிக்கும் ஸ்வ பாவரான நீர் இவள் முடிவதற்கு முன்னே
வந்து இவளை விஷயீ கரிக்க வேணும் என்று பிரார்த்திக்கிறாள் –

—————————————————————————-

நரசிம்ஹமமாய் வந்து ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுடைய ஆபத்துக்கு உதவினவன் எனக்கு உதவுகிறிலன் –
என்று பெண் பிள்ளை அவசனனை யாகா நின்றாள் -என்று சொல்லித் திருத் தாயார் சோகிக்கிறாள்-

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

ஆடியாடி
வியஸன அதிசயத்தாலே மேன் மேல் எனப் பண்ணுகிற சேஷ்டிதங்கள் மநோ ஹாரிகளாய் இருக்கிற படி
துடிப்பின் மிகுதியைச் சொல்லிற்று ஆகவுமாம்-ந்ருத்யந்தீ மிவ மாதரம் இதிவத்
யகம் கரைந்து
வியாஸன அதிச யத்தாலே மிகவும் சிதில அந்த கரணையாய்
இசை-பாடிப்பாடி –
ஆற்றாமை சொல்லுகிற சொல் பாட்டாய் இருக்கிறபடி
கண்ணீர் மல்கி -மிக்கு
எங்கும்-நாடி நாடி நரசிங்கா வென்று-வாடிவாடும் –
இவ் வவசா நத்திலே-ஸர்வதா வாராது ஒழி யான் என்று எங்கும் பல காலும் தேடி –
-அநந்தரம் அவனைக் காணாமையாலே மிகவும் வாடா நின்றாள் –
இவ்வாணுதலே –
அழகிய நுதலை உடையவள்
இவ் வழகு அழியவும் பேசாது இருப்பதே -என்று இன்னாதாகிறாள் என்று கருத்து –

———————————————————————————-

பாணனுடைய பாஹு வனத்தைச் சேதித்து அநிருத்த ஆழ்வானுக்கு உதவின நீர் இவளுக்கு இத்திசையில் இரங்காது ஒழிவதே-என்கிறாள் –

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-

மிக்க அழகை உடையளாய் பொறுப்பு இன்றிக்கே இருக்கிற இப் பெண் பிள்ளை பிரிந்தால் தரிப்பது அரிதாம் படி
இருக்கிற உம்மைக் காண வேணும் என்னும் ஆசையால் சிதிலை யாகா நின்றாள்
விறல் -வெற்றி
உம்மை இவள் காணும்படி நீர் இரக்கம் உடையீர் ஆகிறிலீர்

—————————————————————————————————–

ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் திறத்து நீர் செய்த செயல்களை அனுசந்தித்து உம்மை ஆசைப்பட்டு இவள் நோவு படா நின்றாள்
இதுக்கு நீர் இரங்குகிறிலீர் –நான் என் செய்வேன் -என்று செயல் அற்று சொல்கிறாள் –

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–

அவசன்னமான மனசை உடையளாய் எரியைக் கிட்டின அரக்கும் மெழுகும் போலே வியசனத்தாலே கரையா நின்றாள் –

——————————————————————————————————-

ராம வ்ருத்தாந்தத்தை நான் சொல்லக் கேட்டு சிறிது தரித்த இவள் பின்னையும் தம் ஆற்றாமையால் அலற்றுவது தொழுவது ஆகா நின்றாள் என்கிறாள் –

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-

நினைத்த இடத்திலே கொடு வர வல்ல பெரிய திருவடியை வாஹனமாக உடையவனே என்னா நின்றாள்
வருகைக்கு ஒரு தட்டு இன்றிக்கே இருக்க அவன் வாராமையாலே ஹிருதயம் கலங்கும் படி நெடு மூச்சு எறியும்
கண்ணீர் மல்கும்படியாக தான் நோவு பட்டு வருந்தி விழித்து தன்னுடைய நோவு வாயால் சொல்ல மாட்டாமையாலே தன் கருத்தை
கை தொழுகையாலே ஆவிஷ்கரியா நின்றாள் –
இவளே என்றது -தன்னைப் பிரிந்தார் இப்பாடு படும்படி விலக்ஷணை என்று கருத்து

—————————————————————————————————-

இப்படி துர் தசா பன்னையான இவள் பக்கல் தயை பண்ணுகிறிலீர்
-இங்கனேயோ உம்முடைய தயாவத்தை இருக்கும் படி என்று உபா லம்பிக்கிறாள் –

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-

இப்படி அவசன்னையான இவள் இரவும் பகலும் வாய் வெருவி
சோகத்துக்கு அநர்ஹமாய் குவளை போலே இருக்கிற தன்னுடைய கண்கள் சோகஜமான அஸ்ருவாலே பூர்ணம் ஆயிற்று
இவளுக்கு நிரதிசய போக்யமான திருத் துழாயைக் கொடுத்து ஆஸ்வசிப்பிக்கிறிலீர்
உம்முடைய பர துக்க அஸஹத்வம் இவள் பக்கலிலே கண்டோம் இறே -திவளும் -படியும் –

——————————————————————————————————–

நான் எம்பெருமானை குண ஹானி சொல்லிற்று பொறுக்க மாட்டாமை-அவனுடைய தாயாதி குணங்களை பேசப் புக்கு –
அந்த குணங்களில் அழுந்த நின்றாள் என்கிறாள் –

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-

இப்படிச் சொல்ல வாராது ஒழியச் செயதேயும் மிகவும் விரும்பும் –
அவன் பண்டு தனக்கு பண்ணின உபகாரங்களை ஸ்மரித்து பிரான் என்னும் –
என் ஆத்மாவுக்கு நிரதிசய போக்யன் ஆனவனே -என்னும் –
அந்தக்கரணம் மிகவும் சிதிலமாம் படி தான் தளர்ந்து நின்று –
ஹிருதயத்திலே செல்லுகிற வியசனம் வாசா மகோசரம் –

——————————————————————————————————–

இவள் அவசாதத்தையும் -அவன் தன் குணங்களாலே இவளை வஞ்சித்த படியையும் சொல்லுகிறாள் –

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-

பாவ பந்தத்தாலே வந்த நோவு ஆகையால் ஆத்மா உள்ளே மிக உலர்ந்து தனக்கு தாரகமாக அவனுடைய உதார பவ்யத்தைகளைச் சொல்லா நிற்கும்
தன்னுடைய விடாயாலே பின்னையும் நீர் வெள்ளத்திலே கண் வளர்ந்து அருளினை படியைச் சொல்லா நிற்கும்
என்னுடைய அதி சதுரையான இவள் அவனைப் படுத்தும் பாட்டைத் தான் படுவதே –

———————————————————————————————————-

உம்மை அபாஸ்ரயமாகப் பற்றின இவள் -பிரதிகூலர் பட்ட பாட்டை படக் கடவளோ என்கிறாள் —

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-

குண சேஷ்டி தாதிகளாலே என்னை வஞ்சித்தவனே என்னும் –
அதுவே உபகாரமாகத் தொழா நிற்கும்
முன்னமே உலர்ந்து இருக்கிற நெஞ்சம் விரஹ அக்னியாலே வேம்படி நெடு மூச்செறியும் –

—————————————————————————————————————-

உம்மை விஸ்லேஷித்து நிரந்தரமாக நோவுபடுகிற சபலையான இவள் திறத்தில் செய்து அருள நினைத்தது என் -என்கிறாள் –

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-

உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாள்-
திரு உடம்பில் ஸ்பர்சத்தாலே வந்த பரிமளத்தாலும் மதுவால் பூரணமான திருத் துழாயை வேணும் என்று வாய் வெருவா நிற்கும்
ஆஸ்ரிதர் உடைய பிரதிபந்தக நிரசன அர்த்தமாக வன்றோ
சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையும் உடைய திரு வாழியைத் தரித்து அருளுகிறது –

—————————————————————————————————————-

இவளுடைய முக்த்தமான நோக்கே நோக்காக அல்லாது எல்லாம் இழந்தாள்-
இவ் வழகிய நோக்கை இத்தனையும் போகாது ஒழிய வேணும் என்கிறாள் —

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –2-4-10-

கிடையாது என்றாலும் விடாத படி அத்யந்த சபலையுமாய் ஹிதம் சொன்னால் கேளாத படி பாலையுமான இவள்
இரவோடு பகலோடு வாசி இன்றிக்கே தன்னுடைய ஒப்பில்லாத அழகிய கண்கள் அஸ்ருபூர்ணமாய் இருக்கும்
கண்ண நீரால் மிகவும் அழகியதான இவள் கண்ணை எம்பெருமான் காணில் என் பாடு படுமோ -என்று கருத்து
இவளோட்டை சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தகம் பெரிது என்னில்கி
ளர்ந்து இருந்துள்ள இலங்கையில் வாழ்வை எல்லாம் போக்கின உமக்கு போக்க ஒண்ணாத தொரு பிரதிபந்தகம் உண்டோ –

—————————————————————————————————————

நிகமத்தில் இப்பத்தும் கற்றார்க்கு எம்பெருமான் திருவடிகளில் ஆழ்வார் பட்ட கிலேசம் எல்லாம் படாதே
திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறலாம் -என்கிறார் –

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

இவ் வவசாநத்திலே வந்து சம்ச்லேஷித்து ஆழ்வாரை உளர் ஆக்குகையாலே வாட்டம் இன்றிக்கே
பரி பூரணமான கல்யாண குணங்களை உடையனான வாமனனை
இசையோடே கூட்டி
அர்த்த புஷ்கல்யத்துக்கும் சப்த புஷ்கல்யத்துக்கும் அமைந்த காதைகள்-

——————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: