திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -2-5-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய பரமாபதாமாபன்ன -என்கிற பரமமான ஆபத்தில் ஆர்த்த த்வனியைக் கேட்டு
ஸ்ரக்ப்பூஷாம் பரமயத்தாய தந்ததான-என்கிறபடியே அரை குலைய தலை குலைய வந்து அவனுடைய ஆர்த்தி எல்லாம் தீர
முகம் காட்டி ஆசுவசிப்பித்து-பாத்தாலே ஹ்ருஷ்டனாய் பெறாப் பேறு பெற்றானாய் நின்றாள் போலெ
ஆழ்வாருடைய ஆர்த்த த்வனியைக் கேட்டு -அழகிதாக ரக்ஷகரானோம் -என்று ரக்ஷகத்வத்தை நித்தியா நின்று கொண்டு –
அந்த ஆர்த்தி எல்லாம் தீர முகம் காட்டி -அத்தாலே தான் அது உஜ்வலனாய்
அழகையும் சேஷ்டிதங்களையும் ஆயுத ஆபரணாதிகளையும் இவர் இழவு மறக்கும் படி அனுபவிப்பித்து
க்ருதக்ருத்யனாம் படியை கண்டு ஹ்ருஷ்டராய் தமக்குப் பிறந்த ஸம்ருத்தியைப் பேசி அனுபவிக்கிறார் –

———————————————————————————————————————-

தன் பரிகரங்களோடே வந்து கலந்து -அத்தாலே அவனுக்குப் பிறந்த உஜ்வல்யத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-

அந்தாமத்தன்பு செய்து –
பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி -மஞ்சா க்ரோசந்தி இத்வத்
என்னாவி சேர் –
கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே -உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று
குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் –
அம்மானுக்கு-
நித்ய விபூதியில் உள்ளரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தி உடையவனுக்கு
இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் யாயிற்று –
அந்தாம வாழ் முடி –
அழகிய மாலை வாழா நின்றுள்ள முடி -வாள் -என்று ஒளியாய் -அழகிய மாலையும் ஒளியையும் உடைத்தான் திரு அபிஷேகம் என்றுமாம் –
தாமம் -தேஜஸ் ஆகவுமாம்
சங்கு ஆழி நூல்-திரு யஞ்ஞபவீதம்- ஆரமுள
இவை நித்ய ஸூரிகளுக்கும் உப லக்ஷணம்
அடியார் குழாங்களை என்று இவர் ஆசைப் பட்ட படியே சபரிகரனாய் வந்து கலந்தான்
உள-
இவரோடு கலப்பதற்கு முன்பு அசத்சமமாய் அனுஜ்வலமுமாய் இருந்த இவை உளவுமாய் உஜ்வலமுமாய் ஆயின என்கிறது –
நித்யரானவர்கள் உளராகை யாவது என் என்னில்
ஏகாகீ ந ரமதே என்கிறபடியே இவரோடு கலவாது போது அந்த விபூதியும் இல்லையாகத் தோற்றுகையாலே சொல்லுகிறது –
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்-செந்தாமரை யடிக்கள் –
ஆடியாடியிலே உறாவின திருக் கண்கள் உத்புல்ல பங்கஜ தடாகம் போலே விகசிதமான படி
ஆர்த்தி எல்லாம் தீர இவரைப் பார்த்து கொடு நிற்கிற நிலை –
சிவந்து கனிந்த வாய் -சிவந்த தாமரை போலே இரா நின்றது
வசசா சாந்த்வயித்வா-என்கிறபடி சாந்தவனம் பண்ணுகிற வாய்
நோக்குக்கும் முறுவலுக்கும் தோற்று விழும் திருவடிகளும் அப்படியே இரா நின்றது
செம்பொன் திருவுடம்பே
திருவடிகளில் விழுந்தாரை எடுத்து அணைக்கும் உடம்பு -தம்மை அணைத்த பின்பு பிறந்த புகரைச் சொல்லுகிறது -ருக்மாபம்-

————————————————————————————————–

லஷ்மீ பரப்ருதிகளும் தன் பக்கலிலே ஒரோ பிரதேசத்தத்தையே பற்றி லப்த சத்தா கராம்படி இருக்கிறவன்
சர்வ அங்கங்களாலும் என்னோடே கலந்து உஜ்வலன் ஆனான் என்கிறார் –

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

திருவுடம்பு வான்சுடர் –
தேஜோ ரூபமான திருமேனி மிகவும் ஒளி பெற்றது –
விக்ரஹம் இல்லை என்கிறார் முன்பே மயர்வற மதி நலம் அருள பெற்றவர் தாமே -திரு உடம்பு என்பதே -என்று ஜீயர் வித்தராவர்
செந்தாமரைக் கண் கை கமலம்-
திமிர்க்கும் படி நோக்கின கண்ணும் -அந்நோக்கிலே நைந்தவர்களை-க்ருத சிஹனே பாணி நா -என்று ஸ்பர்சிக்கும் கைகளும்
இவருக்கு கவிகளை போலே ஒரு கால் சொன்னது பல கால் சொல்லுவான் என் என்னில்
முத்துக் கோக்க வல்லவன் முகம் மாறி கோத்த வாறே மிக விலை பெறுமா போலே இவரும் ஒரோ முக பேதத்தாலே அனுபவிக்கிறார்
திருவிடமே மார்வம் –
ஆகையால் அணைப்பிக்கும் பெரிய பிராட்டியார்க்கு இருப்பிடம் திரு மார்வு –
அயனிடமே கொப்பூழ்-
சதுர் தச புவனா சிரேஷ்டாவான ப்ரஹ்மா திரு நாபி கமலத்தில் இருக்கும்
ஒருவிடமும் –
ஓர் இடம் என்னாதே ஒரு விடம் -என்கிறது ஒருவிதலாய்-நீங்குதலாய் சேஷித்த இடம் என்றபடி
எந்தை பெருமாற்கு அரனேயோ-
என் குல நாதனுக்கு சேஷித்த இடம் எல்லாம் ருத்ரனுக்கு ஸ்தானம்
ஓ -ஓ என்று விஸ்மயம்
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –
இப்படி இருக்கிறவன் என்னுடைய சரீர ஏக தேசத்திலே தன்னுடைய சர்வ அங்கங்களாலே சம்ச்லேஷித்தான்
ஒரு இடம் இன்றி என்னுள் கலந்தானுக்கு–திரு உடம்பு என்று தொடங்கி–அரனே ஓ -என்று அந்வயம்-

—————————————————————————————————

ருத்ராதிகள் அளவு அன்றிக்கே சர்வ லோகங்களும் தன்னைப் பற்றி அல்லது சத்தை இல்லாதாப் போலே
என்னைப் பற்றி அல்லது தனக்கு சத்தை இல்லை என்னும் படி இரா நின்றான் என்கிறார் –

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

என்னுள் கலந்தவன் –
அகஸ்திய ப்ராதா-என்னுமா போலே -மேன்மைக்கு ஸ்ரீ யபதி என்னுமா போலே யாயிற்று -நீர்மைக்கு இதுவும் –
செங்கனிவாய் செங்கமலம்-
சிவந்து கனிந்த வாய் -என்னோட்டை கலவியால் பிறந்த ப்ரீதி எல்லாம் ஸ்மிதத்திலே தோற்றும் படி இருக்கை
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்-
வந்து கலந்த பின்பு புகர்த்து வளர்ந்து ஸ்திரனாய் கால் வாங்கிப் போக மாட்டாதே நிற்கிற நிலை
வாமனன் வளர்ந்த படி -நோக்குகிற கண் -நோக்குக்கு தோற்று விழும் திருவடிகள் -எடுத்து அணைக்கும் கை
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
பிரவாஹா ரூபேண நித்தியமாய் போரு கிற சகல சேதன அசேதனங்களும் தன் சங்கல்பத்தைப் பற்றி நிலை நிற்கின்றன
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –
ந ததஸ்தி வினா யத்ஸ்யாத் -என்கிறபடியே ப்ருதக் ஸ்திதி யோக்யமாய் இருபத்தொரு வஸ்து சச விஷாணத்தோ பாதி முதலிலே இல்லை –
-அவை இவனைப் பற்றாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது ஸ்வரூபத்தாலே
-இவன் இவரைக் கலவாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது குணத்தால் –

——————————————————————————————————

அவன் காலதத்வம் உள்ளதனையும் அனுபவிக்கலும் நித்ய அபூர்வமாய்க் கொண்டு நிரதிசய போக்யனாய் இருக்கும் என்று விஸ்மிதர் ஆகிறார் –

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

எப்பொருளும் தானாய் –
சகல பதார்த்தங்களும் தனக்கு பிரகாரம் ஆகையால் தான் இட்ட வழக்காய் -ஸ்வ அதீனம் இல்லாததொரு பதார்த்தத்தைப் பற்றி இப்பாடு படுகிறானோ
மரகதக் குன்றம் ஒக்கும்-
ஜகத் சரீரத்வம் அன்றியே -அசாதாரண விக்ரஹத்தை சொல்லுகிறது –
கீழே மின்னும் சுடர் மலைக்கு என்று -தம்மோட்டை கலவியால் வந்த புகரைச் சொல்லிற்று
இங்கு அதற்கு ஆஸ்ரயமான அசாதாரண விக்ரஹத்தைச் சொல்லுகிறது
அப்பொழுதைத் தாமரைப் பூக் –
முன்பு சொன்ன சாமான்யம் ஒப்பாக மாட்டாது -அப்போது அலர்ந்தது ஆனால் யாயிற்று ஒப்பாவது
கண் பாதம் கை கமலம்-
கண் -பந்தத்தை விளைக்கும் கண்
பாதம் -பந்தம் பிறந்தால் அனுபவிக்க இழியும் துறை –
கை கமலம் -தம்மோட்டை ஸ்பர்சத்தாலே செவ்வி பெற்ற படி
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்-
க்ஷண காலமும் -கலா காஷ்டாதிகளாலும் பேதிக்க ஒண்ணாத அத்யல்ப காலம் அனுபவிப்பது
ஒரு நாள் அனுபவிப்பது -ஒரு மாசம் அனுபவிப்பது -ஒரு சம்வத்சரம் அனுபவிப்பது
கல்பம் தோறும் கல்பம் தோறும் அனுபவிப்பது -இப்படி கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும்
பூர்வ க்ஷணத்தில் அனுபவம் போலே அன்றியே உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது –
ஊழி ஊழி -மேல் போக்கு இல்லாமையால் மடிக்கிறார்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –
தாரா வாஹிக ஞானத்தில் கால உபஷடம்பாதிகளால் வருவதொரு பேதம் உண்டு இ றே ஞானத்துக்கு
அது போல் அன்றிக்கே அனுபவித்த ஒன்றை அனுபவித்தால் போலே நித்ய அபூர்வமாய் இருக்கை-

—————————————————————————————————

என்னோட்டை கலவியால் அவனுக்குப் பிறந்த அழகுக்கு உபமானம் இல்லை என்கிறார் –

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–

ஆராவமுதமாய்-
நிரதிசய போக்யனாய் வைத்து -அசன்னேவ -என்கிற ஆத்மாவோடு வந்து கலந்தான் –
தன்னையும் அறிந்திலேன் -என்னையும் அறிந்திலேன் –
யல்லாவி –
அசித்தில் காட்டில் தம்மைக் குறைய நினைத்த படி -அசித்துக்கு இழவு இல்லை –
சேதனனாய் இருந்து வைத்து ஞான பலம் இல்லாமையால் அசித்துக்கு அவ்வருகாக நினைத்து இருக்கிறார்
யுள் கலந்த-
பெரு மக்கள் உள்ளவர் -என்கிற ஸூ ரிகள் அளவில் கலக்குமா போலே தான் கலந்தானோ –
என்னை ஆராவமுதமாக நினைத்து என் அளவாக தன்னை நினைத்துக் கிடீர் கலந்தது-
அவன் இப்படி இருந்தமை என் கொண்டு அறிவோம் எண்ணில்
காரார் கரு முகில் போல் –
என்னோட்டை கலவி பெறாப் பேறு-என்னும் இடம் வடிவிலே தோற்ற இரா நின்றான்
தனக்கு நிறக் கேடாம் படி இ றே என்னோட்டைக் கலவி இருப்பது
கார் காலத்தில் ஆர்ந்த மேகம் –தன் காலத்தில் காள மேகம்
என்னம்மான் கண்ணனுக்கு-
அவ் வடிவைக் காட்டி முறையை உணர்த்திய கிருஷ்ணனுக்கு
நேராவாய் செம்பவளம்-
கீழ் ஒப்பாகச் சொன்ன சிவந்த பவளம் ஜாதியாக நேர் நில்லாது
கண் பாதம் கை கமலம் நேரா –
முதல் உறவு பண்ணும் கண் -ப்ராப்யமான திருவடிகள் -எடுத்து அணைக்கும் கை -இவற்றுக்கு தாமரை ஜாதியாக ஒப்பாகாது
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –
பெரிய ஆரம்-திருக் கழுத்திலே இரு மடியாகச் சாத்தின பெரிய திரு ஆரம்
ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகம் –
விடு நாண்-பின்னையும் உபமானம் இல்லாத ஆபரணம் அநேகம் –

————————————————————————————————————

தம்மோடு கலந்தவனுடைய ஆபரணாதிகளை அனுபவிக்கிறார் –

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

பலபலவே யாபரணம்
சாதிப் பன்மையும் -அவாந்தர பன்மையும் –
பேரும் பலபலவே-
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களும் பல -சீலப் பேர் -வீரப் பேர் அநேகமாய் இருக்கை –
பலபலவே சோதி வடிவு –
அக் குண சேஷ்டிதங்களுக்கு ஆஸ்ரயமான வடிவும் பல –
சுத்த சத்வ மயமான விக்ரஹத்தையே இதர சஜாதீயம் ஆக்குகையாலே கொண்ட வடிவு எல்லாம் ஜோதி வடிவாய் இருக்கிறது –
ஸுபரியைப் போலே அநேக வடிவு எடுத்தாயிற்று இவரை அனுபவிப்பது
பண்பு என்னில்-
அவனுடைய பிரகாரங்களை அனுசந்திக்கில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்-
கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தும் உண்டாகக் கடவதான ஐந்த்ரிய ஸூ கமும் பல –
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–
வைஷாயிக ஞானமும் பல பல -ஞாயதே அ நேந -என்கிறபடியே ஞான சாதனமான சஷூராதிகளை சொல்லிற்று ஆகவுமாம் –
பாம்பணை மேலாற்கேயோ–
சர்வ இந்திரியங்களுக்கும் போக்யமான பரிகரங்களை உடையவன் என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் –
பாம்பணை மேலாற்கேயோ-பண்பு எண்ணில் -பலபலவே யாபரணம் பேரும் பலபலவே
சோதி வடிவு பலபலவே – கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம் பலபல- ஞானமும் பலபல ஓ -என்கிறார் –

————————————————————————————————————

அவன் திவ்ய சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார் –

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்-
திருப் பாற் கடலிலே நீர் உறுத்தாமைக்கு திரு அனந்த ஆழ்வான் மேல் தன் ஸுகுமார்யத்துக்கு அனுகூலமாக கண் வளர்ந்து அருளிற்றும் ஆர்த்த ரக்ஷணத்துக்காக
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
காம்பு -மூங்கில் -ருஷபங்கள் ஏழை யும் ஒரு காலே ஊட்டியாக நெரித்ததும் -நிரதிசய போக்யையான நப்பின்னை பிராட்டிக்காக
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்-
தேனையையும் பணை யையும் உடைத்தாய் இலக்கு குறிக்க ஒண்ணாத படி சோலை செய்த மரா மரம் ஏழையும் எய்ததுவும் மஹா ராஜர்க்காக
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –
அழகியதாக தொடை உண்ட என்னுதல்
பூவை உடைத்தாய் தொடை உண்ட என்னுதல்
ஸ் ப்ருஹணீயமாய்-ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை உடையவன் ஆகையால்
அழகியதாய் செருக்கி இருந்துள்ள வ்ருஷபம் போலே மேநாணித்து இருக்கிறவன்

—————————————————————————————————————–

வாங்மனசங்களுக்கு அவிஷயமான வைலக்ஷண்யத்தை உடையனாய் வைத்து
என்னோடே கலந்த இம் மஹா குணம் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார் –

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

பொன் முடியம் போரேற்றை –
ஸ் ப்ருஹணீயமான திரு அபிஷேகத்தை உடையனாய் நிருபாதிக ஸ்வாதந்தர்யத்தாலே மேநாணித்து இருக்கிறவனை
எம்மானை-
சேஷித்வத்தில் எல்லையைக் காட்டி என்னை சேஷத்வத்தின் எல்லையில் நிறுத்தினவனை
நால் தடம் தோள்-
கற்பகத தரு பணைத்தால் போலே -நாலாய்-சுற்று உடைத்தான் தோள்களை உடையவனை
தன் முடிவொன்றில்லாத –
யாதோ வாசோ நிவர்த்தந்தே-என்று மீளும் படியான உத்கர்ஷத்தை உடையவனை
தண் துழாய் மாலையனை-
சர்வாதிக விஷயத்துக்கு அடையாளமான திருத் துழாய் மாலையை உடையவனை
என் முடிவு காணாதே- என்னுள் கலந்தானை
தன்னுடைய உத்கர்ஷத்துக்கு முடிவு இல்லாதோபாதி உஎன்னுடைய நிகர்ஷத்துக்கும் முடிவு இன்றிக்கே இருக்க
அத்தைப் பாராதே அவ்விஞ்ஞாதவாய் என்னோடே கலந்தவனை -தன்னைப் பிரிந்து நான் முடியுமது காண மாட்டாமையாலே என்றுமாம்
சொல் முடிவு காணேன் நான் –
அவன் என்னை அனுபவிப்பிக்க அத்தால் எனக்கு பிறந்த ரசம் அனுபவித்து விடுமத்தனை யல்லது
பாசுரம் இட்டு சொல்ல முடியாது -சொல்லி முடிக்கும் படி அறியேன்
சொல்லுவது என் சொல்லீரே –
விஷயாந்தர அனுபவத்துக்கு பாசுரம் இட்டுச் சொல்லுகிற நீங்கள் இதுக்கு ஏதேனும் சொல்ல வல்லீர்களோ

—————————————————————————————————————-

பேச முடியாது என்று மீண்டவர் சாபல அதிசயத்தாலே எல்லாரையும் கூட்டிப் பேசாத தொடங்குகிறார் –

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-

சொல்லீர்
எல்லாரும் கூடி யாகிலும் பேச வல்லி கோளே
என் அம்மானை
தன் குண சேஷ்டிதங்களாலே என்னை முறையிலே நிறுத்தினவனை
என்னாவி யாவி தனை
இவ்வாத்மாவுக்கு தாரகன் ஆனவனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
திவ்யாத்மா ஸ்வரூபத்தை உடைய குணங்களுக்கு எல்லை உண்டாகிலும் விக்ரஹ குணங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற படி
எல்லை இல்லாத ஸுந்தர்ய ஸுகுமார்யாதிகளை உடைத்தாய் பெரு விலையனான நீல மணி போலே
புகரை உடைத்தாய் இருக்கிற வடிவை என்னை அனுபவிப்பித்தவனை
நல்ல வமுதம்
நித்தியமாய் போக்யமுமான அமுதம்
ப்ராக்ருத போக்யங்களின் எல்லையான அமுதம் என்றுமாம்
பெறர்க்கு அரிய வீடுமாய்
ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே பிறப்பிக்க ஒண்ணாத பரம புருஷார்த்த லக்ஷண மோஷமாய்
அல்லிமலர் விரை ஒத்து
போக்யதைக்கு தாமரைப் பூவில் பரிமளத்தை உபமானமாக உடையவனாய்
ஆண் அல்லன் பெண் அல்லன் —
புருஷ விசஜாதீயன்-பெண் அல்லன் என்கிற இது த்ருஷ்டாந்த தயா சொல்லுகிறது
ஆக உபமான ரஹிதன் என்றபடி –

——————————————————————————————————————-

அவனுடைய வை லக்ஷண்யத்தைப் பேசிலும்-அவன் என்னோடு கலந்த படியை சொல்ல முடியாது என்கிறார் –

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

ஆண் அல்லன் பெண் அல்லன் -அல்லா வலியும் அல்லேன்
ஸ்த்ரீ புன்ன பும்ஸகாதி சர்வ வஸ்து வி லஷணன் -ஸ்த்ரீ நபும்சகங்களை சொல்லிற்று -அவ்வோபாதி புருஷ சாம்யம் அல்லன் என்கைக்காக –
அல்லா வலி-
நிர் விநியோகம் யெண்ணுதல்-உக்தங்கள் அல்லாத என்னுதல்
ஆக சஜாதீய விஸஜாதீய நிஷேதம் பண்ணின படி
பட்டரை கோஷ்டியிலே ஒரு தமிழன் ஆனால் அவ்வஸ்து சூன்யமோ -என்ன -இயல் அறிய வில்லையோ
-அல்லன் -என்ற சப்தம் தானே புருஷோத்தமன் என்று காட்டா நின்றது -என்றார் –
காணலும் ஆகான் –
அவற்றைக் காணும் சஷூராதி களால் காணப்படான் –ஏக பிராமண கம்யத்வ சாம்யமும் இல்லை
உளன் அல்லன் இல்லை அல்லன்-
அநாஸ் ரிதற்கு துர்லபன் -ஆஸ்ரிதற்கு ஸூ லபன் -அத்தை உபபாதிக்கிறது மேல்
பேணும் கால்-
தேவகி முதலானோர் தன்னை ஆஸ்ரயித்தால்
பேணும் உருவாகும்
அவர்கள் உகந்தபடியே பிள்ளையாய் பிறக்கும்
அல்லனுமாம்-
பிறந்த இடம் தன்னில் விமுகராய் இருப்பிற்கு கிட்ட ஒண்ணாத படி இருக்கும் –
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே-
சர்வேஸ்வரன் என்னை அனுபவிப்பித்த படி -என்னால் பாசுரம் இட்டு சொல்லப் புக்கில் மிகவும் மிறுக்கு உடைத்து –

——————————————————————————————————————-

நிகமத்தில் இப்பத்தையும் அனுசந்திப்பார் இதில் சொன்ன பூர்ண அனுபவத்தை பரம பதத்தில் அனுபவிக்கப் பெறுவார் என்கிறார் –

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

கூறுதல் ஓன்று ஆராக் –
ஆனந்த வல்லி யில் சொல்லுகிறபடியே ஒரோ குணங்களை பேசப் புக்கால் பேசித் தலைக் கட்ட ஒண்ணாதாயிற்று
குடக் கூத்த வம்மானை-
குடக் கூத்தாடின நீர்மை ஒன்றையும் பேசப் புக்கால் பேசித் தலைக் கட்ட ஒண்ணாது
அம்மானை -குடக் கூத்தாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனை
கூறுதலே மேவிக்
வேதங்கள் -பேச நிலம் அன்று -என்று மீண்ட விஷயத்தை தாம் உள்ளபடியே பேசுவராகக் கோலி
குருகூர்ச் சடகோபன்-கூறின-
கோலின படியே -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையால் கூறினார்
வந்தாதி –
சிலரால் பேதிக்க ஒண்ணாத படி அந்தாதியாகச் சொன்ன
யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல்-
இவருடைய பாவ வ்ருத்தி ஒழிய இப்பாசுரமே அமையும்
கூடுவர் வைகுந்தமே –
இவருடைய அனுபவத்தை பரமபதத்தில் அனுபவிக்க பெறுவார் –

—————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: