திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -2-4-

அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று மநோ ரதித்த படி அப்போதே லபிக்கப் பெறாமையாலே
கீழ்ப் பிறந்த ப்ரீதியையும் மாறி மிகவும் அவசன்னரான ஆழ்வார் -ஸ்வ கீயரானவர்கள் தம்முடைய தசையை
எம்பெருமானுக்கு விஞ்ஞாபிக்கிற படியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
எம்பெருமானோடே புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி -க்ஷண மாத்திரை விஸ்லேஷத்தாலே -அறத் தளர்ந்து -ஆர்த்தியாலே கிடந்த இடத்தே கிடவாதே
மோகமும் உணர்ச்சியுமாய் மாறி மாறிச் சென்று கண்டார்க்கு எல்லாம்தயை நீயை யான தசையை பிராப்த்தையாய்-நோவு படுகிற
இவளைக் கண்ட திருத் தாயார் -அவன் திரு முன்பே பொகட்டு
ராம கிருஷ்ணாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணி ஆர்ஜித்த நீர்மைகளை எல்லாம் இவளுடைய அவசாதத்தை
போக்காமையாலே இழக்கப் புகா நின்றீர் என்று கூப்பிடுகிறாள்
அஞ்சிறைய மட நாரையிலும் வாயும் திரையுகளிலும் காட்டில் இதில் ஆற்றாமை விஞ்சி இருக்கும்
காசை இழந்தவனுக்கும் பொன்னை இழந்தவனுக்கும் மாணிக்கத்தை இழந்தவனுக்கும் இழவு ஒத்து இராது இறே -இங்கு தம் தசை தாம் பேச மாட்டார் –
இவர் ததீயரை அனுபவிக்க வாகில் ஆசைப் பட்டது -அவர்களை சொல்லாதே உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்-என்று அவனைச் சொல்லுவான் என் என்னில்
முன்பு பகவத் விஷயத்தில் அநுபூத அம்சமும் அஸத் சமமாம் படி அடி மண்டியோடே கலங்கி -அடி தொடங்கி சம்ச்லேஷிக்க வேண்டும்படி இருக்கை
கதான்வஹம் சமேஷ்யாமி -குஹே ந சஹிதோ ராம
இன்னமும் இத் திருத் தாயார் எத்தனையெனும் அவசாதம் உண்டானாலும் அவனுக்கு அறிவிக்கும் அத்தனை ஒழிய
தாம்தாமே பரிஹரித்துக் கொள்ளும் குடி அல்லாமையாலே அவன் முன்னே பொகட்டு கூப்பிடுகிறாள் –

——————————————————————————————————————-

ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் உடைய ஆபத்துக்கு உதவினவன் எனக்குஉதவுகிறிலன் என்று இவள் அவசன்னை யாகா நின்றாள் -என்கிறாள் –

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

ஆடியாடி
ஸ்திதி கமன சாயா நாதிகள் மாறி மாறி வருகிற வியஸன அதிசயத்தை இறே ஆடிற்றாகச் சொல்லுகிறது
வடிவு அழகாலே தாய்மார் கண்ணுக்கு ஆகர்ஷகமாய் இருக்கையாலே வல்லார் ஆடினால் போலே இருக்கிறது
ந்ருத்யந்தீ மிவ மாதரம் -என்னக் கடவது இறே
வீப்சையாலே பிரதம வியாபாரத்தோடே முடிந்ததோ என்னும் படி இருக்க -அவ்வளவில் பர்யவசியாதே பின்னையும் அனுவர்த்திக்கை –
வி லக்ஷண விஷயத்தை புரிந்தால் முடிகையும் அரிது -ஜீவிக்கையும் அரிது -வை லக்ஷண்யம் ஜீவிக்க ஒட்டாது -நசை முடிய ஒட்டாது
ச காம மனவாப்யைவ ராமபாதா யுபஸ்ப் ருசன் நந்திக்ராமே அகரோத் ராஜ்ஜியம் ராமா கமன கங்க்ஷயா -இ றே
முந்துற ஆடி என்றால் இரண்டாம் ஆடிக்கு சென்ற காலத்தின் அளவைச் பரிச்சேதித்துத் தருவது தாளமாயிற்று
ஒரு தாளம் அதிலே ஏறி இருக்கும் –
யகம் கரைந்து –
இவள் வியாபாரம் கண்ணுக்கு இலக்கு ஆனால் போலே அகவாயும் இவள் நெஞ்சுக்கு இலக்காய் இருக்கிறபடி
இவள் வியாபாரம் அடி அற்று இருக்கையாலே மனஸ் தத்வம் நீராய் உருகிப் போயிற்று என்கிறாள்
இசை-பாடிப்பாடி-
மதுரா மதுரா லாபா -என்றும் -பண்ணை வென்ற வின் சொல் மங்கை -என்றும் சொல்லுகிறபடியே
ஆற்றாமையால் கூப்பிடுகிற இது பாடினால் போலே இருக்கிற படி
வீப்சை யும் -ஆடி ஆடி என்றால் போலே
கண்ணீர் மல்கி –
உருகின மனஸ் தத்வம் இசையாய் பிரவஹித்து-மிக்கது கண்ண நீராய் பிரவஹிக்கிற படி
மல்கி -மிக்கு -கிமர்த்தன் தவ நேத்ராப்யாம்
எங்கும்-நாடி நாடி-
இவ் வவசா னத்தில் ஸர்வதா வாராது இரான் -என்று வரவுக்கு சம்பாவனை இல்லாத இடத்தே தேடுவான் என் என்னில்
நரசிங்கா –
வரவுக்கு சம்பாவனை இல்லாத இடத்திலே தோன்றினவன் ஆகையால்
பத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரங்களை அவ்வருகு போக மாட்டார் –
ஆணுமாய் -மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்னும் தெளிவும் வேணுமோ உதவும் போது
முன்பு தனக்கு உதவினவன் இப்போது உதவுகிறிலனாக சொல்லுகிறாள்
நரசிங்கா வென்றுவாடும்
அப்போதே உதவாமையாலே ஆஸ்ரயம் இழந்த தளிர் போலே வாடா நின்றாள் –
வாடிவாடும்-
அது தான் தளிரும் முறியும் -என்னும் படி வாடா நின்றாள்
விச்வாஸம் குலையாமையாலே முடிய பெறுகிறிலள்
இவ்வாணுதலே –
ஒளியை உடைய நுதலை உடைய இவள் -நுதல் -நெற்றி
இவ்வியக்தியை இழந்தால் சமாதானம் பண்ணலாம் என்று இருக்கிறீரே
இவ் வழ குக்கு இலக்கானார் வாடுமத்தை இவள் வாடுவதே
வாணுதலே –
அம்பு பட்டு முடித்தார் முகம் போல் அன்று இ றே நீரிலே முடித்தார் முகமும்
இவ் வழகு அழியவும் பேசாது இருப்பதே என்று இன்னா தாகிறாள்-என்று கருத்து –

———————————————————————————————————————-

வாணனுடைய தோள்களைத் துணித்து அநிருத்த ஆழ்வானுக்கு உதவின நீர் இவளுக்கு இரங்காது ஒழிவதே என்கிறாள் –

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-

வாணுதல்
இவள் அவயவ சோபை -போக ஹேதுவாகை யன்றிக்கே நைகைக்கு உறுப்பாவதே –
பெற்றவளுக்கு ஆகர்ஷகமாய் இருக்கிற இது உமக்கு அநாதர ஹேது வாவதே -இயம் சீதா —
இம்மடவரல் –
மடப்பம் வந்து இருக்கை -மடப்பத்தை உடையவள் -மடப்பத்தை வர வாறாக உடையவள் –
துஷ்க்கரம் க்ருதவான் ராமோ ஹீ நோ யத நயா ப்ரபு தாரயத் யாத்மா நோ தேகம் ந சோகே நாவ சீததி
பெண்மையாலே ம்ருது ஸ்வபாவை -பிரிவில் பாடு ஆற்ற மாட்டாதவள் -முன்பு உம்மை பிரிந்த ம்ருது ஸ்வபாவைகள் அளவேயோ இவள்
உம்மைக்-காணும் ஆசையுள் நைகின்றாள் –
பிரிந்தார்க்கு தரிக்க ஒண்ணாத உம்மை
இவளை அறியாது ஒழிந்தால் உம்மை அறியாது ஒழிய வேணுமோ
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியீரே
காணும் ஆசையுள் நைகின்றாள் –
உம்மைக் கிட்டி அணைக்கவோ ஆசைப் பட்டது -ஒரு கால் காண வன்றோ
நைகின்றாள் –
வாடுகை தான் தேட்டமாம் படி யாயிற்று
ஸூ கார்ஹாம்து க்க சந்தப்யாம் வ்யஸநாநா மகோவிதாம்
பிரபல பிரதிபந்தகம் உண்டானால் வரப் போமோ என்னில்
விறல்-வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் –
வாணனுடைய பஹு வனத்திலும் பரப்புண்டோ இவள் விரோதி -விறல் -வெற்றி
ஆணாகவும் பேரனாகவும் வேணுமோ -பெண்ணாய் ப்ரணியிநி யானால் யாகாதோ
உம்மைக்-காண-
உம்மைக் கிட்டவோ -சதா தர்சனம் பண்ணவோ -ஒரு கால் காண வன்றோ ஆசைப் பட்டது
நீர் இரக்கமிலீரே–
நை வ தம்சான் -என்கிறபடியே நீர் ஈடுபடுகை தவிர்த்தால் சாமான்யமான இரக்கமும் போக வேணுமோ –
இவள் நைவும் தெளிவும் பேற்றுக்கு அடி என்று இருக்கிறிலள் -அவர் இரக்கமே என்று இருக்கிறாள் –

————————————————————————————————————–

ஒரு பிரணியிநிக்கு உதவின படியை நினைத்து உம்மை ஆசைப் பட்டு நோவு படா நின்றாள்
-நீர் இரங்குகிறிலீர் -நான் என் செய்வது என் என்கிறாள் –

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–

இரக்க மனத்தோடு
நெகிழ்ச்சி யாதல் -ஈடுபாடு ஆதல் -ஈரிப்பு ஆதல் -ஆற்றாமையை உடைத்தான மனஸோடு நீர் முகம் காட்ட நினையா விட்டால் உம்மைப் போலே பிரியில் வலியதொரு நெஞ்சைக் கொடுக்க மாட்டிற்று இலீரோ –
எரியணை-அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்-
எரியணை என்கையாலே -தீந்து முடிதல் -வலித்தல் -செய்யாது ஒழிகை –
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்-
த்ரவ்ய அத்ரவ்யங்கள் எல்லாம் கூடினாலும் இவள் ஆற்றாமைக்கு போராது என்கை
இவள் -நீர் குறி அழியாது இருக்க சைத்தில்யாம்சம் இவளுக்கே யாவதே –
இரக்கம் எழீர் –
இரக்கம் உடையீர் ஆகிறிலீர் –
பிரணயித்தவம் குடி போனால் வழி போக்கருக்கு உண்டான அம்சமும் போக வேணுமோ -இப்போது உதவாமையாலே இரக்கம் இல்லை என்று இருக்கிறாள் –
இதற்கு என் செய்கேன்-
இவளை உருக்காது ஒழிய பண்ணவோ
உம்மை இரங்கப் பண்ணவோ
அரக்கன் இலங்கை செற்றீருக்கே-
உமக்கு இரக்கம் இன்றிக்கே ஒழிந்தால் இவள் இரங்குவதை ஒன்றைச் செய்து வைக்க வேணுமோ
ஒரு பிரணியி நிக்கு உதவினவன் நமக்கு உதவானோ என்று ஈடுபட நின்றாள்
புழு குறித்தது எழுத்து ஆனால் போலே ஓன்று வாய்த்தத்தைக் கொண்டு அந்யார்த்தம் என்று இராதே நோவு படுகிறாள் –
அரக்கன் இலங்கை செற்றீருக்கே-இவள் இரக்க மனத்தோடு -எரியணை-அரக்கும் மெழுகும் ஒக்கும்-நீர் இரக்கம் எழீர் -நான் இதற்கு என் செய்கேன் –

——————————————————————————————————–

முன்புள்ளார்க்கு உதவின படி சொல்லிக் கூப்பிட்டு அப்படிப் பட்டவன் தனக்கு உதவாமையாலே நோவு படா நின்றாள் என்கிறாள் –

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-

இலங்கை செற்றவனே யென்னும் –
ஷேபித்து திருத் தாயார் இலங்கை செற்றீருக்கே -என்றாள்-அத்தை பொறாதே-ஒருத்திக்காக மார்விலே அம்பு ஏற்ற மஹா உபகாரகனே என்னா நின்றாள் –
முன்னம் தனக்கு உதவினவன் இப்போது தனக்கு உதவாது ஒழிந்தால் போலே கூப்பிடா நின்றாள் –
கடல் கடக்க வேணுமோ -அம்பு ஏற்க வேணுமோ -என் பக்கல் வரும் போது என்ன பிரதிபந்தகம் உண்டு
பின்னும்-வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் –
பலத்தை உடைய பெரிய திருவடியை கொடியாக உடையவன் என்னுதல் –
கொடி -என்ற போது தூரத்திலே கண்ட போது ஆர்த்தி தீரும் படி வருகையும் -விரோதிகளை அழியச் செய்து கொடு வருகையும் –
வாஹனமான போது -நினைத்த இடத்தே கொடு வர வல்லனாகையும்
உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் –
ஆபத்து மிக்க இடத்தே ஆனைக்கு உதவினால் போலே வருகைக்கு தட்டு இன்றிக்கே இருக்க -வாராமையாலே ஹிருதயம் கலங்கி நெடு மூச்சு எறியா நின்றாள் –
தஹந்தீமிவ
கண்ணீர் மிகக்-
உள்ளம் நெடு மூச்சாய்க் கழிந்து -கழியாதது கண்ணீராய்க் கழிகிற படி
கலங்கிக் கை தொழும் –
பிரணயி கை தொழுவது கலங்கி இ றே
நின்றிவளே –
நின்று -கை தொழுகை மாறாது ஒழிகை –
இவள் -தொழுவித்துக் கொள்ளக் கடவ இவள் இறே தொழுகிறாள்

——————————————————————————————————

இப்படி துர் தசா பன்னையான இவள் பக்கல் தயை பண்ணுகிறிலீர்
உம்முடைய தயாவத்தை இருந்தபடி படி என்று உபா லம்பிக்கிறாள் –

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-

இவள் இராப்பகல் வாய் வெரீஇ –
அநித்ரஸ் சததம் ராம -என்கிறபடியே அத்தலையிலே உண்டாக பிராப்தம் ஆனவை எல்லாம் இங்கே யாயிற்று
இரவோடு பகலோடு வாசி யற இடைவிடாதே வாய் வெருவா நின்றாள்
வாய் வெரீஇ –வாய் வெருவி -அவதானம் பண்ணிச் சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாத்யாயராகச் சொல்லுகிற இத்தனை
தன-குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் –
ஆனந்தா ஸ்ரு ப்ரவஹிக்க கடவ கண் சோகஸ்ரு பரவஹியா நின்றது –
தனக்கு அசாதாரணமாய் குவளை போலேயாய்-அவ்வளவு அன்றிக்கே வி லக்ஷணமான கண்கள் நீரால் நிரம்பிற்று
நம்மைச் செய்யச் சொல்லுகிறது என் என்ன
வண்டு- திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என-தவள வண்ணர் தகவுகளே –
விரஹத்துக்கு இளையாமையாலே செவ்வி மாறாதாய் இருக்கிற தோளின் மாலையைக் கொடுக்கிறிலீர் –
வண்டுகள் கண்ணிலே என்ன கண்ண நீரைக் கண்டு கொடுத்தீர் –
திவளும் -படிந்து ஓளி விடா இருக்கை -இதஸ் தஸ் சஞ்சரிக்கை என்றுமாம்
தவள வண்ணர்-சுத்த ஸ்வபாவர்-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்டு இருக்கை –
என -என் என்பின -எங்கே போயிற்று -என்னும் பிள்ளான்
நாட்டிலே இப்படி ருஜுக்களுமாய் பர துக்க அஸஹிஷ்ணுக்களுமாய் இருப்பார் சிலர் தார்மிகர் நடையாட-அபலைகளுக்கு அழகிதாக ஜீவிக்கலாம் என்பர் பட்டர்
தகவுகளே -தயநீய விஷயங்கள் பல வாகையாலே தாயையும் பலவாய் இருக்கை –

——————————————————————————————————–

நான் அவன் குண ஹானி சொல்ல பொறாதே அவன் குணங்களை பேசப் புக்கு அதிலே அழுந்தா நின்றாள் என்கிறாள்

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-

தகவுடையவனே யென்னும் –
தயா குணத்துக்கு ஊற்று வாய் ஆனவனே என்னும்
பின்னும்-மிக விரும்பும் –
இப்படி சொல்லா நிற்க வாராது ஒழியச் செயதேயும் மிகவும் ஆதரியா நின்றாள்
பிரான் என்னும் –
தாயார் குண ஹானி சொல்ல இடம் அறும்படி இவ்வாபத்திலே உதவினாரைப் போலே பிரான் -என்னா நின்றாள்
முன்பு பண்ணின உபகாரத்தை நினைத்து சொல்லுகிறாள் ஆகவுமாம்
என-தகவுயிர்க்கு அமுதே என்னும் –
அக உயிர் -ஆத்மா -என்னுடைய பிரத்யாகாத்மாவுக்கு நிரதிசய போக்யன் ஆனவனே -என்னும் -போக தசையில் சொல்லுமவை எல்லாம் சொல்லா நின்றாள்
உள்ளம்-உகவுருகி நின்றுள்ளுளே–
அகவாய் இருந்தபடி என் என்னில் -மனஸ் ஸூ நீராய் உருகும் படி உருகி நின்றாயிற்று சொல்லுகிறது
உள்ளுளே -பரிச்சேதிக்கலாம் அளவு இது -மேல் வாசா மகோசரம்
உள்ளுளே உருகி நின்று -என்பாரும் உண்டு –

————————————————————————————————-

இவள் அவசாதத்தையும் இவள் அவன் குணங்களாலே வஞ்சிக்கப் பட்ட படியையும் சொல்லுகிறாள் –

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-

உள்ளுளாவி -உலர்ந்து உலர்ந்து
ஆந்தரமான மனஸ் ஸூ க்கு தாயகமான ஆத்மா சருகாய் வருகிறபடி
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து-
அந்தக் கரணத்துக்கும் அவ்வருகான ஆத்மா –
அசோஷ்யம் என்கிறதும் போயிற்று என்கிறாள் –
பாவ பந்தம் அடியாக வந்த நோய் ஆகையால் குருத்து வற்றாக உலர்ந்து செல்லா நிற்கை
என்-வள்ளலே கண்ணனே என்னும் –
தனக்கு தாரகமாக அவனுடைய உதார பவ்யத்தைகளை சொல்லா நின்றாள் –
அதி பிராவண்யம் ஆகாது என்று ஜனனி சொன்ன ஹிதமும் நெஞ்சில் படாத படி என்னை அநன்யார்ஹை ஆக்கினவனே
அவ்வளவு அன்றிக்கே உன்னை எனக்கு கையாளாக தந்தவனே
பின்னும்-
அதுக்கும் மேலே
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் –
வந்து அவதரித்து பரம பதைத்து ஏறப் போகை அன்றிக்கே -க்ருத்வாப்பாரா வதரணம் –
அவசர பிரதீஷனாய்க் கொண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனே
இது இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தால் போலே இருக்கிறது -தா பார்த்தோ ஜல சாயி நம் –
என்-கள்வி –
தனக்கு ஆற்றாமை உண்டானாலும் தான் அவிக்ருதையாய் அவனை விக்ருதன் ஆக்க வல்ல ஸ்த்ரீத்வத்தை உடையவள்
தான் பட்ட –
அத்தலை இத்தலையாய் -அவன் அவிக்ருதனாய்-இவளை தோற்பிக்கும் படி யாவதே
வஞ்சனையே –
பெரும்படை உடையாரை அளவு படை உடையார் வெல்லுவது வஞ்சனையால் இறே
நேர் கொடு நேரே ஜெயம் அன்று என்கிறாள் –

————————————————————————————————–

உம்மை அபாஸ்ரயமாகப் பற்றினவள் -பிரதிகூலர் பட்டது படக் கடவளோ என்கிறாள் —

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-

வஞ்சனே என்னும் –
தாயார் வஞ்சகன் என்னப் பெறாதே அது தன்னையே குணமாகச் சொல்லுகிறாள் -குண சேஷ்டிதங்களாலே என்னை வஞ்சித்தவனே –
அதாவது -தாயார் வார்த்தை கேட்டல் -தானே மீளுதல் செய்ய ஒண்ணாத படி அநன்யார்ஹை ஆக்கின படி
கை தொழும் –
அந்த உபகாரத்துக்காக கை தொழா நின்றாள்
தன்-நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் –
இவள் உபகாரன் என்னும் காட்டில் விரஹம் விட்டு வையாதே முன்பே உருகா நிற்கிற நெஞ்சம் விரஹ அக்னியாலே தக்த்தமாம் படி நெடு மூச்செறியும்
ததோ மலி ந சம்வீதாம் ராக்ஷஸீ பிஸ் ஸமாவ்ருதாம் உபவாச கிருசாம் தீ நாம் நிச்வாஸந்தீம் புந பு ந –
விறல்-கஞ்சனை வஞ்சனை செய்தீர் –
மிடுக்கை உடைய கஞ்சனை அவன் நினைத்த நினைவு அவன் தன்னோடே போம்படி வஞ்சித்தீர் –
ஆணுமாய் மிடுக்கனுமாய் எதிரியுமான அவன் பட்டது படுவதே
பெண்ணுமாய் அபலையுமாய் உம்மை உகந்தவள்
உம்மைத்-தஞ்சம் என்று –
அதஸ்மின் தத் புத்தி பண்ணி அந்தர பட்டாள்-
தஞ்சமாகிய தந்தை தாய் என்னும் -சர்வ ரக்ஷகனை காதுகரைச் சொல்லுமா போலே சொல்லுகிறாள் இ றே -மக்களுடைய தசையைப் பார்த்து
இவள்-
விறலுக்கு எதிர்தலையான இவள்
பட்டனவே –
எதிரிகளா பாதி முடியப் பெற்றால் அல்லள்
சம்சாரிகளோ பாதி அகல இருக்கப் பெற்றிலள்
நித்ய ஸூ ரிகளோ பாதி அனுபவிக்கப் பெற்றிலள்
எங்களை போலே தத் தஸ்ய சத்ரு சம்பபவேத் -என்னும் அளவில் இருக்கப் பெற்றிலள்
என் வழி வராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேணும் தான் –

——————————————————————————————————

இவள் பட்டது தான் ஏது-என்ன அத்தை சொல்லுகிறாள் –உம்முடைய கையும் திரு வாழியும் காண ஆசைப் பட்டு
உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாதே சபலையுமாய் இப்படி நோவு படுகிற இவள் திறத்து செய்ய நினைத்தது என் என்னவுமாம் –

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-

பட்டபோது எழுபோது அறியாள் –
உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள் -இனிச் செய்வது என் -இது தாயார் இருந்தபடி என் என்னில்
ராத்திரியில் நித்திரை காணாமையாலும் -பகலில் வார்த்தை சொல்லிப் போது போக்காமையாலும்
விரை-மட்டலர் தண் துழாய் என்னும்-
இவ் வறியாமை சர்வ விஷயமாகிலுமாம் இ றே -ஒன்றையே எப்போதும் வாய் வெருவா நிற்கும்
பரிமளத்தாலும் தேனாலும் பரிபூரணமான திருத் துழாய் என்னும்
பரிமளம் தேன் செவ்வி குளிர்த்தி இவற்றை உடைய திருத் துழாய் என்னுதல்
சுடர்-வட்ட வாய் நுதி நேமியீர் –
கையும் திரு வாழி யான சேர்த்தியைக் காட்டி அனுபவிப்பித்தல் -விரோதிகளை அழியச் செய்தல் செய்கை அன்றிக்கே
அச் சேர்த்தியை இவளுக்கு காட்டி அவ் வழகைக் கொண்டு அகல நின்று நலியத் தொடங்கினீர்
சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையும் உடைத்தாகை
உகப்பாரை அவ் வழகைக் காட்டி அவ் வழகைக் கொண்டு அகல நின்று முடிக்கும் –
யுகாவாதாரைக் கிட்டி நின்று அத் திரு வாழி யாலே அழியச் செய்து முடிக்கும் -என்பர் சீயர்
நும்-திட்டமென் கொல் –
நித்ய ஸூ ரிகளைப் போலே கிட்ட நின்று அனுபவிக்க நினைக்கிறீரோ
அகல நின்று முடிக்க நினைக்கிறீரோ
வேறு ஒன்றையும் அறியாதே அவனையே வாய் புலற்றுகிற இத்தையும் பேற்றுக்கு பரிகரம் என்று இருக்கிறிலள்
அவன் நினைவே உபாயம் என்று இருக்கிறாள்
இவ்வேழைக்கே–
அபலைகள் பலரும் உண்டு -என்று இ றே நீர் இருப்பது -இப்படி இருபத்தொரு வ்யக்தி புறம்பு இல்லை என்கிறாள்
அத்யந்தம் சபலையான இவள் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் –

———————————————————————————————————-

இவள் நோக்கு ஒன்றும் ஒழிய அல்லாதது வெல்லாம் சென்று அற்றது -இது ஒன்றும் தொங்கும் படி பார்க்க வேணும் -என்கிறாள் –

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –2-4-10-

ஏழை –
கிடையாது என்றாலும் விட மாட்டாத அத்யந்த சபலை
பேதை –
நான் ஹிதம் சொன்னால் அது கொள்ளும் பருவம் அன்று என்கை
இராப்பகல் தன்-கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் –
ஆனந்த ஸ்ருவுக்குத் தகுதியாக ஒப்பு இன்றிக்கே கண்ண நீர் இல்லா விடிலும் கண்டார்க்கு ஆலத்தி
வலிக்க வேண்டும் படியான கண் சர்வ காலமும் அஸ்ரு பூர்ணம் ஆயிற்று
நெடு நாள் இக் கண்ண நீருக்கு கிருஷி பண்ணி பல வேளையில் இது காட்டில் எறித்த நிலாவாய்ப் போக நீர் உபேக்ஷை பண்ணித் திரிவதே
பொன்னும் முத்தும் விளையும் படி இ றே நீர் க்ருஷி பண்ணிற்று
இப்போது இவள் இழவுக்கு அன்றிக்கே அவன் இழவுக்காக யாயிற்று இவள் நோகிறது
கிளர்-வாழ்வை வேவ இலங்கை செற்றீர் –
பிரதி பந்தகம் பெரிதே என்னில் -ராவணனிலும் பெரிதோ இவள் விரோதி
கிளர்ந்து இருந்துள்ள இலங்கையில் வாழ்வைப் போக்கின உமக்கு முடியாதது உண்டோ
தாயும் தகப்பனும் சேர்க்க இருக்க சம்வதியாத படி இ றே அவனுடைய கிளர்த்தி
ஒருத்தி கண்ண நீர் மாற்றுகைக்கு அன்றோ அச் செயலைச் செய்தது
ஒன்றை அளிக்கப் புக்கால் நிச் சேஷமாக அழிக்கும் அவர் இ றே நீர் என்னவுமாம்
நம்மைச் செய்யச் சொல்லுகிறது என் என்ன
இவள்-மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –
முக்த்தமான மான் போலே இருக்கிற நோக்கு
மாழை-இளமையும் அழகும்
நோக்கு கண்
இந்த நோக்கு ஒன்றும் ஒழிய அழிந்தது
அசமாதேயமான நோக்கு ஒன்றும் அழியாத படி பண்ண வேண்டும் –

—————————————————————————————————-

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தார் சூட்டு நன் மாலையின் படியே அத் திரளில் கூடி
திரு மாலை சாத்தி அனுபவிக்கப் பெறுவர்கள் என்கிறார் –

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

வாட்டமில் புகழ் –
நோக்கு ஒன்றும் வாட்டேன் மின் -என்றவாறே புறப்பட்டோம் என்று லஜ்ஜையோடே வந்து தோற்றினான்
இவள் வாட அவன் புகழ் யாயிற்று வாடுவது
இவ் வவசாநத்திலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்களை உடையனானான்
வாமனனை –
இவளுடைய ஆற்றாமையில் க்ருசனனாய்-அர்த்தித்தவம் தோற்ற வந்தபடி
தன் உடைமைக்கு தான் அர்த்தியாய் வருமவன் இ றே
இசை-கூட்டி –
இயல் தானே ஆகர்ஷகமாய் இருக்க புஷ்ப்பம் பரிமளத்தோடே அலர்ந்தால் போலே இசையோடே புணர்ப்புண்டது என்கை
வண் சடகோபன் சொல் –
மானஸ அனுபவம் அன்றிக்கே வாசகம் ஆக்கி நாட்டை அடைய வாழ்வித்த உதார குணம்
அமை பாட்டு
சப்த லக்ஷணங்களாலும் அர்த்தத்தாலும் பூரணமாய் இருக்கை -அமைவு -சமைவு
ஓராயிரத்து இப்பத்தால் –
ஆயிரமும் இப்படியே -அதில் இப்பத்தையும் கற்றார்க்கு
அடி-சூட்டலாகுமே அந்தாமமே –
திருவடிகளில் சூட்டு நன் மாலையின் படியே செவ்வி மாலையை சூட்ட வாயிற்று
இவர் அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்டது அப்படியே அனுபவிக்கப் பெறுவார்கள்
பித்ரு தனம் புத்திரனுக்கு பிராப்தம் ஆமாம் போலே இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் அனுபவிக்க வேண்டாதே பேற்றிலே அந்வயிப்பர்கள் –

—————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: