திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -2-3-

எத்தனையேனும் அளவுடையார்க்கும் ஸ்வ யத்னத்தால் கிட்ட அரியதாய்-அவன் தானே காட்டுகையால் தமக்கு எளியதாய்
சமாதிக விவர்ஜிதமுமாய் இருந்துள்ள அனுபவ ரசம் தம்மால் தனியே அனுபவிக்க ஒண்ணாமையாலே இதுக்கு உஸாத் துணை யாவாரை இங்குக் கிடையாமை
இதுக்கு நிலவரான நித்ய ஸூ ரிகளோடே அனுபவிக்க ஆசைப் பட்டு அது கிட்டாமையாலே -அவர்கள் திரளை என்றோ நான் கிட்டுவது என்று அநவாப்தியோடே தலைக் கட்டுகிறார்
வாயும் திரையுகளும்-திருவாய் மொழி உடன் ஆயிற்று இதற்கு நேரே சங்கதி உள்ளது
ஈஸ்வரன் இவர் பிரகிருதி அறிபவன் ஆகையால் -ப்ராசங்கிக்கமாக பரத்வத்தை அனுபவிப்பித்து பின்னை இத்தை அனுபவிப்பித்தான்
வாயும் திரையுக்களில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் சேர்ந்தார்
சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நைசர்க்கிகமான நித்ய ஸூ ரிகளை உசாத் துணையாகத் தேடுகிறார் –

——————————————————————————————————————–

இந்த ஸம்ருத்தி எல்லாம் உன்னாலே வந்தது அன்றோ என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் –

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

ஊனில் வாழுயிரே –
மாம்ச பிரசுரமான சரீரத்தில் இருந்து வைத்து வாழுகிற உயிரே
சரீரத்தைப் பற்றி வாழ்ந்து போந்த உயிரே -என்றுமாம்
பரம பதத்தைப் பெற்று அங்கே தான் பகவத் அனுபவம் பண்ணுகிற இடைத்தேயோ நீ உதவிற்று
மாம்ஸாதி புஞ்சமான சரீரத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது –
நல்லை போ –
போ என்று -போக்கு -வரவைக் காட்டி -நெஞ்சே வா என்னுதல்
ப்போ-என்கிறதை தமிழ் செய்து -சம்போதானம் -என்னுதல்
நல்ல போ என்று முழுச் சொல்லாய் -நல்ல நல்ல என்னுதல்
என்னை கொண்டாடுகிறது என் என்ன
உன்னைப் பெற்று-
ஈஸ்வரனும் என்றும் உளன் –
தத் சம்பந்தமும் அநாதி –
அவன் எதிர் சூழல் புக்கு அவசர ப்ரதீஷனாய் நிற்க -நீ ஆபிமுக்யம் பண்ணாமையால் அன்றோ இழந்தது
நீ ஆபி முக்கியம் பண்ணி இறே இப்பேறு பெற்றது –
நீர் பெற்ற பேறு தான் எது என்ன –
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்-
நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகு- ஆனவன் -சம்சாரிகளுக்கும்-இவ்வருகு வான என்னளவும் வரச் செடி சீய்த்து –
தானும் யானும்-
-என்னைத் தனக்கு ஆக்கின தானும் -வாயும் திரையுகளில் யானும் -விடாய்ப்பித்த தானும் -விடாய்த்த நானும் –
-க்ருஷி பண்ணின தானும் கிருஷிக்கு விஷய பூதனான நானும் –
எல்லாம் தன்னுள்ளே –
எல்லா ரசங்களும் தன்னுள்ளே யாம்படி கலந்தோம் –
அர்த்ததச்ச மயா ப்ராப்தா தேவ ராஜ்யா தபோ குணா ஹதசத்ரும் விஜயி நம் ராமம் பஸ்யாமி ஸூ ஸ் த்திரம் –
கலந்து ஒழிந்தோம்-
பேற்றுக்கு இனி அவ்வருகு இல்லை
பரமபதத்தே போகத் தேடுகிறதும் -உசாத் துணையாகவும் விச்சேதியாமைக்கு யாயிற்று
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே-
தேனும் தேனும் என்று -ஏக ஜாதி த்ரவ்யங்கள் கலந்தால் போலெ -என்று ஆளவந்தார்
சர்வ ரஸ என்கிற வஸ்துவாகையாலே சர்வ ரசங்களும் உண்டாம் படி கலந்தோம் என்று எம்பெருமானார் –

—————————————————————————————————————-

எம்பார் கோஷ்டியில் இதிகாசம் -என்னைக் கொண்டாடுகிறது என் உபகரித்தார் இருக்க -என்ன
இசைவிக்கும் படியான சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார் –

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா-
சமாதிக தரித்ரனாய் -அபரிச்சேதயங்களான குண சேஷ்டிதங்களை உடையவனே –
அவாப்த ஸமஸ்த காமனுக்கும் நித்ய தாரித்ர்யம் உண்டு
ஒத்தாய் எப் பொருட்கும்-
இப்படி சர்வாதிகனான நீ என்னைப் பெறுகைக்காக அநேக அவதாரங்களை பண்ணினாய் –
மேன்மையோடே வரில் -கிட்ட ஒண்ணாது -என்று அகலுவார்கள் -தாழ விட்டு வரில் காற்கடைக் கொள்ளுவார்கள்
ஆகையால் சஜாதீயனாய் வந்து பொருந்தும் –
ப்ரஹ் மேஸ மத்திய கணநா கண நார்க்க பங்க்தா விந்த்ரா நுஜத்வ மதி தேஸ்தா நயத்வ யோகாத்
இஷுவாகு வம்ச யது வம்ச ஜனிச்ச ஹந்த சிலாக்ய அந்நிய முன்யநு பமஸ்ய பரஸ்ய தாம் ந —
இப்படி அவதரித்து செய்தது என் –
உயிராய்-
தனக்குத் தானே பண்ணிக் கொள்ளும் நன்மை -என்னுதல்
ஆத்மாவாய் -என்னுதல்
என்னைப் பெற்ற அத்தாயாய் –
வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –
எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்
தந்தையாய்த் –
நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்
அறியாதன யறிவித்து-
சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்
ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இ றே
அத்தா –
ஸ்வாமி
நீ செய்தன –
இவ் உபகாரங்களை -உடையவன் ஆகையால் செய்தாய் என்கிறார்
மாதா பிதா பிராதா -இத்யாதி
நாராயண -என்கிறார்
நீ செய்தன -பேசவும் போகாது -நினைக்கவும் போகாது -நீ செய்யும் என்னும் அத்தனை
அடியேன் அறியேனே –
உபகரித்த நீயே அறியும் அத்தனை –
நான் அதுக்கு இலக்காய் குமிழ் நீர் உண்ணும் அத்தனை -என்கிறார் –

——————————————————————————————————-

நாம் உமக்கு என்ன என்ன உபகாரம் பண்ணினோம் என்ன -யோக்யதை இன்றிக்கே இருக்க –
உன் திருவடிகளில் கைங்கர்யத்தில் நிலவனாக்கி வைத்தாய் என்கிறார் –

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து-
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியா மா மாயத்து அடியேனை-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து-வைத்தாயால்-
அறிவு கேட்டைப் பண்ண வற்றாய்-துஸ்தரமான சம்சாரத்திலே இருக்கிற என்னை –
அடியேன் -என்கிறது -அஹம் சப்த பர்யாயம் –
அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்
அடியேன் என்கிறது -நமக்கு அர்ஹமான வஸ்து இப்படி எளிவரவு படுவதே –என்று செய்து அருளின அத்தனை இ றே என்றுமாம் –
இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவஹாகிப்பித்தது-அத்தாலே ஒரு தேச விசேஷத்திலே பெறும் பேறு சாத்மிக்கைக்காகவும்-
ப்ராப்யத்தில் த்வரை விஞ்சுக்கைக்காகவும் இறே
போக்யதை மிக்கு இருக்கிறபடி –
மேல் தம்மை வசீகரித்த படிக்கு நிதர்சனம்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று-அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
தன் நெஞ்சை ஒளிப்பாரைப் போலே பிராட்டியும் அறியாத படி –
குறளாய்-
சேர்ப்பால் போலே போக்யதை மிக்கு இருக்கிறபடி –
தன்னை தாழ விட்டு அர்த்தியான படி –
நிலம் என்றால் -அவன் முகம் பாராமையாலே மா வலி என்றான் -முதல் பேர் சொல்லுவார் இல்லாமையால் அவன் பார்த்து
உனக்கு வேண்டுவது என் என்ன மூவடி என்றான்
இப்படி அந்நவிதமான பேச்சாலே வசீகரிக்கை
அறியாமை வஞ்சித்தாய்
சுக்கிராதிகள் இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் -என்ற வார்த்தை செவிப் படாத படி தன் பேச்சாலே வஞ்சித்தான் –
எனதாவியுள் கலந்தே-
அந்நிய பரமான என் ஆத்மாவில் புகுந்து -தன் குண சேஷ்டிதாதிகளாலே வசீகரித்து –
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று-அறியாமை வஞ்சித்தால் போலே – எனதாவியுள் கலந்தே-
அறியா மா மாயத்து அடியேனை-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து- வைத்தாயால்-என்று அந்வயம்

——————————————————————————————————–

தமக்கு அவன் பண்ணின உபகாரத்துக்கு பிரதியுபகாரம் காணாதே தடுமாறுகிறார் –

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4-

எனதாவி-
அநாதி காலம் சம்சாரத்திலே வாசனை பண்ணிப் போந்த என்னோடே கிடீர் கலந்து
வசிஷ்டன் சண்டாள ச்ரேணியிலே புகுந்தால் போலே தம்மை அனுசந்திக்கிறார்
யுள் கலந்த –
அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்கும் செருக்கரைப் போலே -அதுவே ஹேதுவாக தன் பேறாக கலந்தான்
தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்-என்கிறபடியே கலந்த படி
பெரு நல்லுதவிக் –
அதாவது -தன் பேறாக உபகரிக்கை
கைம்மாறு-
கைம்மாறாக -பிரதியுபகாரம் பண்ணி யல்லது தரிக்க ஒண்ணாத படி
எனதாவி தந்து ஒழிந்தேன் –
நீ உன்னை எனக்கு ஆக்குகையாலே வெளிறு கழிந்த என் ஆத்மாவைத் தந்தேன்
நெடு நாள் இழந்தவர் ஆகையால் இவர் திரிய நிற்கும் என்று கொண்டு இது எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன –
இனி மீள்வது என்பதுண்டே-
சத்யோ தசாஹமாக தந்தேன் -மீள்வு என்றோர் அர்த்தம் தானும் உண்டோ –
இவரை ப்ரம்மத்தோடு விடுகிறது என் -என்று யார் பொருளை யாருக்கு கொடுத்தீர் என்ன
எனதாவி யாவியும் நீ –
எனது ஆத்மாவுக்கு அந்தராத்மாவாய் நிற்கிறாய் நீ -இது உனக்கு அநந்யார்ஹ சேஷம் அன்றோ –
நீ பொழில் எழும் உண்ட எந்தாய்-
பிரளய ஆர்ணவத்திலே நசியாதபடி ஜகத்தை ரஷித்தால் போலே நான் பிரிந்து நோவு படாதபடி என்னோடே கலந்து அடிமை கொண்டவனே
பிரளயம் கொள்ளாமல் நோக்குகையாலும் நீயே ஸ்வாமி என்னவுமாம்
எனதாவி யார் யானார்-
எனதாவி என்று பிரதேய வஸ்து வான நான் ஆர்
தந்து ஒழிந்தேன் என்று ப்ரதாதாவான நான் ஆர்
தந்த நீ கொண்டாக்கினையே –
நீர் என்று ஒருத்தர் இல்லையோ பல போக்தாக்கள் நீர் அல்லீரோ என்ன
உன்னுடைய வஸ்துவை நீயே கொண்ட பின்பு நித்தியமான ஆத்மாவை இவன் தருகை யாவது என் -என்னில்
சத்தை அவன் இச்சாதீனம் ஆகையால் தந்தான் -என்கிறது
இச்சாத ஏவ தவ விச்வ பதார்த்த சத்தா –

———————————————————————————————————-

உமக்கு ஞான லாபமே அமையுமோ -பிராப்தி வேண்டாவோ என்ன -எனக்கு பிரதம ஸூ க்ருதமும் நீயேயாய்
உன் திருவடிகளில் கைங்கர்ய ருசியை தந்த பின்பு இனிப்பு பெற்றேனே யன்றோ -என்கிறார் –

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-

யார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்-
ஸ்வ யத்னத்தால் காண நினைப்பார் எத்தனையேனும் அதிசயித ஞானரே யாகிலும் அவர்களால் பரிச்சேதிக்க ஒண்ணாத என் நாயகனே
அதாகிறது -துரியோதனனால் பரிச்சேதித்தல் ராவணனால் எடுக்கலாய் இருத்தல் செய்ய அரிதாய் இருக்கை-
ஹிமவான் -இத்யாதி
வாயு ஸூ நோஸ் ஸூ ஹ்ருத் வேந பக்த்யா பரமயாஸச சத்ருணா மப்ரகம்ப்யோ அபி லகுத்வமகமத் கபே –
கனிவார் வீட்டின்பமே –
ஓர் அளவில்லை யாகிலும் பகவத் விஷயத்தில் பக்வமான ப்ரேமம் உடையவர் களுக்கு மோக்ஷ ஸூகமானவனே
அவர்கள் இருந்த இடத்தே வந்து போக்யனானவனே என்னவுமாம்
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -என்னக் கடவது இறே
என் கடல் படா வமுதே-
உபய கோடியிலும் வ்யாவ்ருத்தனான எனக்கு அத்யந்த ஸித்தமான போக்யமே
தனியேன் வாழ் முதலே –
எனக்கு இப் பேற்றுக்கு அடியான பிரதம ஸூ க்ருதத்துக்கு உத்பாதகன் ஆனவனே
பந்துக்கள் நடுவே இருக்கிறவர் -தனியேன் -என்கிறார் இறே
வழி பறிக்காரர் நடுவே நின்றால் அவர்கள் துணை யாகார் இறே
எனக்கு என்று இருப்பார் நடுவே இருக்கை இறே இவருக்கு தனிமை
நம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கை இறே இவருக்கு வாழ்வு
பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்-நுனியார் கோட்டில் வைத்தாய்-
சப்த த்வீபவதியான பூமியை அத்விதீயமான ஸ்ரீ வராஹ வேஷத்தைக் கொண்டு கூர்த்த கொம்பிலே எடுத்து வைத்தால் போலே
சம்சார சாகரம் கொண்ட என்னை எடுத்தாய் என்கிறார் –
இனி யுனபாதம் சேர்ந்தேனே –
இமையோர் தலைவா இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்னும்படி அறிவித்த தந்த போதே உன் திருவடிகளை பெற்றேனே அன்றோ –

————————————————————————————————————-

இனி உன பாதம் சேர்ந்தேன் என்றார் -இனி என்று விசேஷிக்க வேணுமோ -முன்பே உன்னைப் பெற்றேன் அல்லேனோ-என்கிறார் –

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-

சேர்ந்தார் –
கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இவனைக் கிட்டினவர்கள்
தீ வினைகட்கு அரு நஞ்சைத்-
அவர்களுடைய பாபத்துக்கு காற்றுப் போகாத நஞ்சு ஆனவனே
திண் மதியைத்
விரோதியை பரிஹரிக்கை அன்றிக்கே-தன்னாலும் கலக்க ஒண்ணாத அத்யவசாயத்தை கொடுக்குமவனை –
த்வயா அபி பிராப்தம் ஐஸ்வர்யம் யதஸ்தம் தோஷ யாம் யஹம் நாஹமாராதயாமித்வாம் தவ பத்தோயம் அஞ்சலி –
அம்பரீஷன் தபஸ் ஸூ பண்ணா நிற்க சர்வேஸ்வரன் இந்திர வேஷத்தை தரித்துக் கொண்டு சென்று உனக்கு வேண்டுமவற்றை வேண்டிக் கொள்-என்ன
நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன் காண்-என்னை சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே -உன்னைக் கும்பிடுகிறேன் -என்றான் இறே
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாத
தன்னை ஒழியச் செல்லாதவர்கள் -தீர்ந்தார் ஆகிறார்
அவர்களுக்கு செல்லிலும் தனக்கு செல்லாது இருக்கை
வருயிரை-சோர்ந்தே போகல் கொடாச்
விஸ்லேஷத்தில் நீர்ப் பண்டமாய் -மங்கிப் போம்படி யாயிற்று அவர்கள் படி
அவர்கள் ஆத்மாவை மங்கிப் போக விட்டுக் கொடான்
சுடரை-
அவர்கள் நோவு படாத இத்தால் தனக்கு உண்டான உஜ்வல்யம்-க்ருதக்ருத்யஸ்ததா
அரக்கியை மூக்கு-ஈர்ந்தாயை –
அவர்களோட்டை கலவிக்கு வரும் பிரதிபந்தங்கள் சூர்பணகை பட்டது படும் இத்தனை
ஈர்த்தாயை என்கிறார் -ராமஸ்ய தஷினோ பாஹு என்கிற பிரசித்தியால்
அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –
அநாதி காலம் இழந்த இழவை மறக்கும் படி வந்து கலக்கையாலே-
இன்றோ பெற்றது –
இவ்வாத்மா உள்ள வன்றே பெற்றேன் அல்லேனோ -சேஷத்வம் ஸ்வதஸ் ஸித்தம்
அசித் சம்சர்க்கமாய் அது புழுதி ஏறின வோ பாதி -அத்தை மறக்கும் படி கலந்தான் ஆகையால் சொல்லலாம் இறே
சம்சாரிகளில் வ்யாவ்ருத்தனாக்கி முறையை அறிவித்த அன்றே பெற்றேன் அல்லேனோ என்றுமாம்
வாயும் திரையுகளில் -முன்பு சம்ச்லேஷித்ததேற்றமும் கலங்கி விஸ்லேஷமாய் சென்றால் போலே கலவியின் மிகுதியால்
அத்தை மறந்து முன்பே பெற்றேன் அல்லேனோ -என்றுமாம்
முதன் முன்னமே -முன்பே -பழையதாக -என்றபடி

———————————————————————————————————-

கலந்த கலவிக்கு விச்சேதம் பிறக்கிலோ என்று சங்கித்து விஸ்லேஷத்தில் தரிக்க மாட்டேன் என்று
திரு உள்ளத்திலே கொண்டு அருள வேணும் என்கிறார் –

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பழையதாய் வி லக்ஷணமாய் யாழ் விஷயமாக ப்ரவ்ருத்தமாய் அப்யஸிக்கப் படுவதான நூல் உண்டு சாஸ்திரம்
அது சொன்ன லக்ஷணத்தை உடைய நரம்பில் பிறந்த முதிர்ந்த ரசம் போலே போக்யமானவனே
ய ஆத்ய ஸ்வா தூ நாம் -என்று சப்த சாரஸ்யத்தை தலையாகச் சொல்லக் கடவது இ றே
மிடற்றைச் சொல்லாதே நரம்பைச் சொல்லிற்று கர்மத்தால் போது செய்யாதது ஆகையால்
மேல் இதுக்கு போக்தாக்கள் இருக்கிறபடி
பன்னலார் பயிலும் பரனே –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரிகள் சதா அனுபவித்தாலும் தொலையாத போக்யனானவனே
நிரவத்ய பர ப்ராப்தே
பவித்திரனே-
சம்சாரிகளையும் அந்நிய பரத்தையைப் போக்கி உன் பக்கலிலே பிரவணர் ஆக்கிக் கொள்ளுமவனே
பன்னலார்-என்று முமுஷுக்களை சொல்லிற்று ஆக்கவுமாம்
பவித்ரனே என்று அவர்களுக்கு த்வத் அனுபவ விரோதிகளை போக்குமவனே
கன்னலே-
நிரதிசய போக்யமானவனே
அமுதே-
போன உயிரை மீட்க வற்றாகை
கார் முகிலே-
பிரயோஜன நிரபேஷமாக கொடுக்கை
என் கண்ணா
எனக்கு உன்னைத் தந்தவனே
நின்னலால் இலேன் காண் –
உன்னை ஒழிய ரக்ஷகரை உடையேன் அல்லேன் என்னுதல்
உன்னை ஒழிய தரிக்க மாட்டேன் என்னுதல்
என்னை –
வை தர்மயம் நேஹா வித்யதே -என்று தம்மைக் காட்டுகிறார்
நீ குறிக்கொள்ளே–
திரு உள்ளம் பற்ற வேணும் –

————————————————————————————————————–

என்னை நீ குறிக் கொள்-என்று நீர் விஸ்லேஷ சங்கை பண்ணும்படியோ உமக்கு நாம் செய்தவை என்ன
-அவ்வுபகாரங்களை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார் –

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

குறிக் கொள் ஞானங்களால் –
யம நியமாதி க்ரமத்தாலே அவஹிதராய்க் கொண்டு சம்பாதிக்கும் பக்தி ரூபாபன்ன ஞானங்களாலே
வேதன உபாசன த்யாநாத்ய அவஸ்தா விசேஷங்களாலே -பலவாகச் சொல்லுகிறது
எனை யூழி செய்தவமும்-கிறிக் கொண்டு –
அநேக கால சாத்தியமான புருஷார்த்தத்தை -அநாயாசேன பெறலாவது ஒரு நல் விரகைப் பெற்று
தபஸ் -என்று தத் பலத்தைச் சொல்லுகிறது
கிறி என்று பகவத் பிரசாதம்
இப்பிறப்பே சில நாளில் எய்தினன்-
இஜ் ஜென்மத்தில் -அது தன்னிலும் அல்ப காலத்திலேயே பெற்றேன்
யான்-
ஒரு புருஷார்த்தம் உண்டு என்று அறியாத நான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்-நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –
கீழே எய்தினன்-என்கிற பேற்றைச் சொல்லிற்று ஆதல் –
கிறி என்கிறதை உபபாதிக்கிறது ஆதல்
கிறி யான போது-உறிக் கொண்ட வெண்ணெய் பால்-லோபத்தாலே யாதல் -இவனுக்கு சாத்மியாது என்றாதல்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும்
தைவம் கொண்டதோ என்னும் படி யாயிற்று அமுது செய்வது
ஐஸ்வர்யமான மாயையால் யன்றிக்கே-களவில் வாசனை இருந்த படி –
அம்மான் –
நவ நீத ச்வர்ய வ்ருத்தாந்தத்தாலே நாட்டை எழுதிக் கொண்ட படி
பின்-நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் –
அவன் ஒளித்தாலும் பெரு நிலைக்கு கள்ளரான இவருக்கு தெரியாமை இல்லையே
திருத்த தேர் தட்டிலே அர்ஜுனன் சரம ஸ்லோகம் கேட்டது -இவர் வெண்ணெய் களவு காணப் புக்க இடத்தே யாயிற்று கேட்டது
அர்ஜுனனுக்கு உபதேசித்த அம்சத்தை சொல்ல நினைத்து அவ்வளவும் போக மாட்டாதே நவ நீத ச்வர்ய வ்ருத்தாந்தத்திலே நடுவே மோஹிக்கிறார்
அந்தர ரகஸ்யத்தை பின் சென்ற நெஞ்சனாய்
பிறவித் துயர் கடிந்தே –
அதன் பலமாக சம்சார துரிதத்தைக் கடிந்தேன்
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற இடம் பிராப்திக்கும் உப லக்ஷணம்
ப்ராப்யத்தை சொல்லிற்றான போது கிருஷ்ணனே பிராப்யனும்-
பின்-நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் –
யேந யே ந தாதா கச்சதி –
பிறவித் துயர் கடிந்தே —
விரோதி நிவ்ருத்தியும் ப்ராப்ய அந்தர்கதம் இ றே
பிறவித் துயர் கடிந்தேன் என்னுதல்
கடிந்தே -எய்தினேன் என்னுதல் –

——————————————————————————————————————

சோஸ்னுதே-என்கிறபடியே ஒரு தேச விசேஷத்தில் குண அனுபவத்தை இங்கே அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் –
திரு மேனியில் ஸ்பர்சத்தாலே பிறந்த மது தாரைகளை உடைத்தான திருத் துழாயாலே அலங்க்ருதனான கிருஷ்ணன்
கடி என்று பரிமளமாய்-வார் என்று மிகுதியாகவுமாம் –
கடி என்று புதுமையாய் -செவ்வி மிக்க என்னவுமாம் –
விண்ணவர் பெருமான்-
இவ் வழகுக்கு போக்தாக்களை சொல்லுகிறது -நித்ய அனுபவம் பண்ண நிற்கப் செய்தேயும் -க்ஷணம் தோறும் தோற்று எழுதிக் கோடா நிற்பர்கள்
படிவானம் இறந்த பரமன் –
பரம பாதத்திலும் ஒப்பு இல்லாத பரமன் –
வான் -என்று மேகமாய் -வெறும் புறத்திலே மேகமும் ஒப்பு யன்று என்னவுமாம்
பவித்ரன் –
சம்சாரிகளை நித்ய ஸூ ரிகளோடு ஒரு கோவை யாக்கை வல்ல சுத்தி உக்தன் –
சீர்- சீரிலே
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி-அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே-
வாயும் திரையுகளில் தூறு மண்டின கிலேசம் எல்லாம் போம்படி
சாம்சாரிக துரிதம் என்னவுமாம்
படிந்து -சென்று கிட்டி
குடைந்து -எங்கும் புக்கு
ஆடி -அவகாஹித்து
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் -பெரு விடாயோடே அனுபவித்து
களித்தேனே-இதர விஷய ஸ்பர்சம் துக்கமே யானால் போலே-பகவத் குண அனுபவம் களிப்பே யாகக் கடவது –

—————————————————————————————————————

இப்படி களித்து இன்னமும் ஹேய விஷயங்களிலும் களிக்க இராதே இதுவே யாத்ரையான
நித்ய ஸூரிகள் திரளில் புக்கு அவர்களோடே களிக்கப் பெறுவது எப்போது என்கிறார் –

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
அல்ப அஸ்திரத்தவாதி தோஷ துஷ்டமான விஷய லாபத்தாலே வந்த களிப்பும் -அவை கிட்டாது ஒழிந்தால்
இவை கிட்டாது ஒழிய பெற்றோமே என்று இராதே பண்ணும் சாபலமும் -இரண்டுக்கும் அடியானை ஜென்மம்
ஜென்ம ப்ரயுக்தமான வியாதி -ஒன்றால் பரிஹரிக்க ஒண்ணாத அவ்ரஜ நீயமாய் வரும் மூப்பு
இவற்றோடு யாகிலும் ஜீவிக்க நினைத்தால் வரும் நிரன்வய விநாசம் -ஆக ஷட்பாவ விகாராதிகள் அற்று
ஒளிக் கொண்ட -சோதியமாய்
சுத்த சத்துவ மயமாகையாலே பிரகாசகமான சரீரத்தை உடையோமாய்
உடன் கூடுவது என்று கொலோ-
நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ
வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி-அளிக்கின்ற மாயப்பிரான் –
வர்ஷிக்கிற ஆகாசத்தையும் அத்தாலே ஜீவிக்கிற பூமியையும் -சங்கல்பத்தால் அன்றிக்கே கையும் திரு ஆயுதங்களுமாய்
ரக்ஷணமே யாத்ரையாய் இருக்கிற ஆச்சர்ய சக்தி உக்தனான ஈஸ்வரன்
பரம பதத்தில் ஆபரணமாய் காட்சி தரும் -இங்கு ஆயுதமாய் இறே திவ்ய ஆயுதங்கள் இருப்பது
அடியார்கள் குழாங்களையே –
இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –
குழாங்களையே –
திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்
இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –

————————————————————————————————————–

இத்திருவாய் மொழியை பகவத் ஏக போகராய் இருப்பார் எல்லாரும்
-என்னைப் போலே தனிமைப் படாதே கூடி புஜியுங்கோள் என்கிறார் –

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
பர ஹிம்சைக்கு சஹகாரிகளான பந்து வர்க்கத்தை உடையனாய் -தான் பெரு மிடுக்கனான ராவணனை நிஸ் சந்தானமாம் படி சீறினவனை –
கரிஷ்யே மைதிலீ ஹேதோ ராபிசாசமரா ஷசம்-என்று இ றே சீற்றம் –
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன்-
வாயும் திரையுகளில் அவசாதத்தே பிழைத்தவர் -என்று இவரை அனுபவிப்பிக்கைக்கு
ப்ருந்தபிருந்தைர யோத்த்யாயாம் -என்கிறபடியே வைஷ்ணவ சமூகங்களை உடையதாயிற்று திரு நகரி
தெரிந்துரைத்த-
உள்ளபடி அனுசந்தித்துச் சொன்ன
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் –
திரண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஜீவனைத்தை கூடு பூரித்தார் யாயிற்று
பத்துப் பத்தான ஆயிரம் -தொண்டர்க்கு அமுது உண்ண -என்னக் கடவது இ றே
உடன் பாடி-
கருத்தோடே பாடி
குழாங்களாய் –
பருகிக் களித்தேனே -என்னா உடன் கூடுவது என்று கொலோ -என்று நான் பட்டது படாதே முதலிலே திரளோடே அனுபவிக்கப் பாருங்கோள்
யடியீருடன் கூடி நின்றாடுமினே-
அநு கூலராய் இருப்பார் அஹந்காராதிகளாலே பிரிய வர்த்தியாதே ஏக கண்டராய் அனுபவிக்கப் பாருங்கோள்-
அர்த்த காமாதிகளைப் பற்றி ஸ்வரூபத்தை இலாவாதே கொள்ளுங்கோள் -என்கிறார் –

———————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: