திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -2-2-

கீழ் தமக்கு வந்த வியஸன அதிசயத்தையும் மறக்கும் படி வந்த ப்ரீதி ப்ரகர்ஷத்தையும் அனுபவித்து விஸ்மிதராய் உள்ள ஆழ்வார்
இப்படி ப்ரீதர் ஆகைக்கு காரணம் -எம்பெருமான் நிரதிசய போக்யன் ஆகையால் என்றும் –
இந்த போக்யதைக்கு ஹேது ஸ்ருஷ்ட்ருத்வ வாத்சல்ய பிரமுகமான-ஸமஸ்த கல்யாண குணாத்மகனான சர்வேஸ்வரனாகை என்றும்
இம்முகத்தாலே அவனுடைய ஈஸ்வரத்தையும் அனுசந்தித்து அத்தை உபபாதிக்கிறார் –

——————————————————————————————-

இஜ் ஜகத்துக்கு கிருஷ்ணனே ஈஸ்வரன் என்கிறார் –

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

திண்ணம் –
த்ருடம்
வீடு முதல் முழுதுமாய்
மோக்ஷ ப்ரப்ருத்ய அசேஷ புருஷார்த்த ப்ரதனாய்
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்-
ஒரு நாளும் அழியாத பரமபதம் தொடக்கமான அசேஷ விபூதியை உடையனாம் என்றுமாம்
எண்ணின் மீதியன் எம்பெருமான்-மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்-கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே-
அசிங்க்யேய கல்யாண குணங்களையும் உடையனாய் -பிரளய ஆபத்து வந்தபோது பூமி தொடக்கமான சகல லோகத்தையும்
தரம் பாராதே ஓக்கத் திரு வயிற்றிலே வைத்துக் கொண்ட நம்முடைய கிருஷ்ணனே இஜ் ஜகத்துக்கு த்ருஷ்டீ –
நம்-கண்ணன்-என்று ரக்ஷகத்வ பிரசித்தியை சொல்லுகிறது-

—————————————————————————————-

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-

ருத்ரனுக்கு -லோக குருவாயும் -பிதாவாயும் உள்ள ப்ரஹ்மாவினுடைய சிரஸை அறுக்கையாலே வந்த மஹா பாபம் நீங்கும் படி
அவனுடைய பிஷா பாத்திரமான கபாலத்தை தன் திரு உடம்பிலே ஸ்வேத ஜலத்தாலே நிறைப்பதும் செய்து
இங்கண் ஒத்த ஆபத்துக்களை உதவுக்கைக்காக ஸ்ரீ நந்தகோபர் திரு மகனாய் வந்து திரு அவதாரம் பண்ணினவன் ஆகையால்
மேனானித்து இருந்துள்ள எம்பெருமான் அன்றி –

——————————————————————————————-

ஸுசீல்யத்தாலும் த்ரை விக்ரமான அதி மானுஷ ப்ரவ்ருத்தியாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார் –

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3-

ருஷப வாஹனனையும் -திரு நாபீ கமலத்தில் பிறந்த ப்ரஹ்மாவும் தனக்கு ஸ்ப்ருஹணீயையான பெரியபிராட்டியாரையும் விஷயீ கரிக்கும் பிரகாரத்தைக் கண்டு
அயர்வறும் அமரர்கள் கொண்டாடும்படி அவர்களைத் தரம் பாராதே தன் பக்கலிலே ஓக்க வைத்து
மேல் லோகங்களை எல்லாம் விஞ்சும்படி அநாயாசேன வளர்ந்து பூமாந்தரிக்ஷாதி லோகங்களை எல்லாம்
அளந்து கொண்ட அபரிச்சேதய மஹிமனான எம்பெருமானை ஒழிய வேறு ஈஸ்வர தயா சங்கிக்கலாம் தைவம் உண்டோ

—————————————————————————————————

பூவுக்கு ஈடான ஸுந்தர்ய ஸுகுமார்யங்களும் -பூஜைக்கு ஈடான ப்ராதான்யமும்
எம்பெருமானை ஒழிய வேறு சிலர்க்கு இல்லாமையால் அவனே சர்வேஸ்வரன் என்கிறார் –

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–

தேவ மனுஷ்யாதி சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்கு வல்லனான ப்ரஹ்மாவை திரு நாபீ கமலத்தில் படைப்பதும் செய்து
தன்னுடைய ஸுந்தர்யாதிகளாலே என்னை அடிமை கொண்டவனுக்கு அல்லது –

—————————————————————————————————

புண்டரீகாக்ஷன் ஆகையால் அவனே ஈஸ்வரன் என்கிறார் –

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-

ஸ்ருஷ்ட்ருத்வ சக்தி யுக்தமான தன்னுடைய சங்கல்பத்தின் உள்ளே
தனி முதல் -பிரகிருதி என்றும் சொல்லுவர்-
ஐஸ்வர்யங்களால் மிக்கு இருந்த தேவர்களையும் மற்றும் உள்ள பதார்த்தங்களை எல்லாம் படைக்க
தகும் என்னும் இடத்தை தெரிவியா நின்றுள்ள திருக் கண்களை உடையனாய் -அவ் வழகாலே என்னை அடிமை கொண்டு அருளினை எம்பெருமானே பர தத்வம்
இவன் ஒழிய வேறு சில ஈஸ்வரர்கள் உண்டு என்னும் இடத்துக்கு பிரமாணம் இல்லை

—————————————————————————————————-

சேதன அசேதனாத்மகமான சகல பதார்த்தங்களையும் தன் திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கையாலே அவனே ஈஸ்வரன் -என்கிறார் –

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-

சேதன அசேதன பதார்த்தங்கள் ஒன்றும் ஒழியாமே-எல்லா வற்றையும் –
பிரளய காலத்துக்கு பரஸ்பரம் நெருக்குப் படாத படி திரு வயிற்றிலே வைப்பதும் செய்து பறந்து இருந்துள்ள ஞான வெள்ளத்தையும்
தேஜோ ரூபமான திருமேனியையும் உடையராய் இருந்துள்ளவர் ஜகத்திதார்த்தமாக வந்து பிரளய ஆர்ணவத்திலே கண் வளர்ந்து அருளுகிறவர் –

—————————————————————————————–

அகடிதகடமான வட தள சயன பிரகாரத்தைச் சொல்லி -அத்தாலே ஈஸ்வரன் என்கிறார் –

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7-

ஜகத்து எல்லாம் உள்ளே புக்காலும் பின்னையும் இடமுண்டாய் ரக்ஷகமான வயிற்றை உடைய ஈஸ்வரனை
அத்யாகாதமாய் தெரியாதே ஆச்சர்யமான அவனுடைய மநோ வ்ருத்தியை ஒருவருக்கும் அறிய ஒண்ணாது –

—————————————————————————————–

சங்கல்பத்தாலே ஸ்ருஷ்ட்டி ரக்ஷணங்களைப் பண்ணுகையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார் –

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-

தன் சங்கல்பத்திலே தேவர்கள் தொடக்கமான சகல பதார்த்தங்களையும் உண்டாக்கின ஆச்சர்ய பூதனே அன்றி மற்று யார்
திண்ணியதான நிலையை உடைத்தாம் படி மூ உலகையும் திருத்தி தன் சங்கல்பத்திலே வைத்துக் கொண்டு காக்கும் ஸ்வ பாவர் –

————————————————————————————————

ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும் இவன் இட்ட வழக்கு ஆகையால் இவனே ஈஸ்வரன் என்கிறார் –

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-

பரிபாலநத்தை ஸ்வ பாவமாக உடையவன்
சம்ஹரித்து
தன் உந்தி உள்ளே ஸ்ருஷ்ட்டி ஷமனான திசை முக்கண் இந்திரன் வானவர் தெய்வ உலகுகள் இவற்றை எல்லாம் உண்டாக்கினான் –

——————————————————————————————–

கீழ் எம்பெருமானே ஈஸ்வரன் -அல்லாதார் அநீஸ்வரர்கள்-என்றும் சொன்ன போதுக்கு
அவர்கள் தங்களுடைய ஸ்துதி வாக்யமே பிரமாணம் -என்கிறார்

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-

கள்வா-
உன் ஐஸ்வர்யத்தை மறைத்து எங்களுக்குத் தெரியாதபடி வந்து நிற்கிறவனே
எம்மையும் ஏழுலகும் நின்-னுள்ளே தோற்றிய இறைவ என்று-
எங்களையும் நான் இருந்த லோகங்களையும் உன் சங்கல்பத்தாலே தோன்றுவித்த ஸ்வாமி என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–
லோகார்த்தமாக பெரிய திருவடி மேலே ஏறிப் புறப்படும் இடத்திலே அவன் திருவடிகளில் விழுந்து ஏத்தா நிற்பர் –

—————————————————————————————-

நிகமத்தில் இப்பத்தும் சாபிப்ராயமாக வல்லார்க்கு -எம்பெருமான் அநீஸ்வரன்-என்று புத்தி பண்ணுதல்
இதர தேவதைகள் ஈஸ்வரர்கள் என்று புத்தி பண்ணுதல் செய்யும் இவ்வனர்த்தங்கள் ஒன்றும் வாராது என்கிறார்

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-

தேவாதிகள் எல்லாம் நின்று புகழ லோகங்களை எல்லாம் அளந்து கொண்ட மநோ ஹாரி சேஷ்டிதத்தை மேற்பட்ட –

————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: