திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -2-1-

மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -என்று நம்பி உடைய ஸுலபயத்தையும் -வேண்டற்பாட்டையும் -அழகையும் -அனுசந்தித்து
-பாஹ்ய சம்ச்லேஷத்திலே பிரவர்த்தராய் -அது கை வராது ஒழிந்ததும் -இவ்வளவும் வர பகவத் குணங்களில் அவஹாகித்து பிரிகையாலும்
அஞ்சிறைய மட நாரையை போல் இன்றியே தூத ப்ரேஷணத்துக்கு ஆள் இல்லாத படி -தம்மைப் போலே எல்லா பதார்த்தங்களும் எம்பெருமானைப் பிரிந்து
நோவு படுகின்றனவாக அனுசந்தித்து கலங்கி -பாத்தாலே மிகவும் விக்ஷணரான ஆழ்வார் தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
எம்பெருமானோடே புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி மஹா அந்தகாரமான மத்திய ராத்திரியிலே
தன் ஆற்றாமை கை கொடுக்க கடல் கரையோடு தோள் தீண்டியான க்ருஹ உபவனத்திலே சென்று ராம விஸ்லேஷ பிரசங்கத்தில் தம்முடைய
தரியாமைக்கு நீரை பிரிந்த மத்ஸ்யத்தை த்ருஷ்டாந்தமாகச் சொல்லும் இளைய பெருமாளையும் பிராட்டியும் போலே அன்றிக்கே
எல்லா லோகத்திலும் அந்நிய பரமான சகல பதார்த்தங்களும் தன்னைப் போலவே எம்பெருமானை பிரிந்து நோவு படுகின்றவாகக் கொண்டு
அவற்றின் உடைய துக்க அனுசந்தானத்தாலும் தம்முடைய துக்கம் இரட்டித்து துக்கிதர் துக்கித்தரோடே கூடி
பிரலாபித்து தரிக்குமா போலே அவற்றோடு பிரலாபித்து தரிக்கிறாள் –

———————————————————————————————————-

ஆமிஷ அர்த்தமாக ஏகாக்ர ஸித்தமாய் இருக்கிற தொரு நாரையைக் கண்டு தன்னைப் போலவே எம்பெருமானாலே அபஹ்ருத சிந்தையாய்
இருக்கிறதாகக் கொண்டு -ஐயோ நீயும் இங்கனே பட்டாய் ஆகாதே -என்கிறாள்

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வருகிற திரைகள் தலை மேலே போக அத்தாலே வந்த துக்க பரிபவங்களை பொறுத்து இருக்கிற நெய்தல் நிலத்தில் நாராய்
என்னுடைய வியஸனத்திலே உறங்காத தாயும் உறங்காமையே ஸ்வ பாவமான தேவ லோகமும் உறங்கக் கூடிலும் நீ உறங்கு கிறிலை
விரக வியசனமும் -அத்தாலே வந்த வேறுபாடும் மிகவும் அபி பவிக்க எம்மைப் போலே நீயும் மைந்தன் மலராள் மணவாளனாலே நெஞ்சு பறி உண்டாயோ –

———————————————————————————————————-

விஸ்லிஷ்டமான அன்றிலினுடைய தருண த்வனியைக் கேட்டு அத்தைக் குறித்து சோகிக்கிறாள் –

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

அபஹ்ருதமான நெஞ்சை உடையையாய் -கேட்டார்க்கும் பிழைக்க ஒண்ணாத படி தருண த்வனியை உடைய அன்றிலே
அற நெடிய சாமங்கள் படுக்கையில் சேராதே கண்டார்க்கு தய நீயமாம் படி நோவு படா நின்றாய்
அடிமைச் சுவட்டிலே அகப்பட்ட எங்களை போலே துக்கம் பொறுக்க மாட்டாத நீயும்
பெரிய பிராட்டியாரும் தானும் கூடத் திருவணை மேல் கண் வளர்ந்து அருளும் இடத்தில் அந்தரங்க சேவையை ஆசைப்பட்டு இங்கனே படுகிறாயே-

——————————————————————————————————

கோஷிக்கிற கடலைக் கண்டு -ஐயோ நீயும் ராம குணத்தில் அகப்பட்டு நான் பட்டதே பட்டாய் ஆகாதே -என்கிறாள் –

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

ஆசைப்பட்ட பொருள் பெறாமையாலே வந்த வ்யாசனத்தோடே
எல்லே என்று தோழியை சம்போதிக்குமா போலே துணை ஆகையால் அத்தை சம்போதிக்கிறாள்
உறங்காமைக்கு கண்ட பகலொடு-உறங்குகைக்கு கண்ட இரவோடு வாசி இன்றிக்கே ஒரு காலும் உறங்கு கிறிலை –
ஹ்ருதயம் சிதிலமாய் தரிப்பு இன்றியே ஏங்கா நின்றாய் –
அக்னி ஹ்ருஷ்டமாம் படி யாக லங்கையை விருந்திட்ட பெருமாளுடைய திருவடிகளை ஆசைப்பட்ட நாங்கள் பட்டது பட்டாய் அன்றோ
முற்ற என்று இலங்கையை எல்லாம் என்றுமாம் –

——————————————————————————————————–

சஞ்சரிக்கிற காற்றைக் கண்டு நீயும் என்னைப் போலே கிருஷ்ணனுடைய கையும் திரு வாழியும் காண ஆசைப் பட்டு நோவு பட்டாயோ -என்கிறாள் –

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்-
கடலிலும் மலையிலும் விசும்பிலும் ஓர் இடம் ஒழியாமே தேடித் கொண்டு எம்பெருமானால் அல்லது செல்லாதே அலமருகிற எங்களை போலே
சுடர் கொள் இராப்பகல் –
விஸ்லேஷ வ்யாசனத்தாலே நெருப்பை உருக்கி வார்த்தால் போலே இருக்கிற இரவும் பகலும் –
சந்த்ர ஸூ ர்யர்களுடைய இராவும் பகலும் என்றுமாம்
துஞ்சாயால் –
உறங்குகிறிலை
தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ-உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே-
பாரத சமரத்திலே-சக்ர உத்தார தசையில் விபக்ஷ சேனையை அடைய மண் உண்ணும் படியான
திரு ஆழியை கையிலே உடையனான சர்வேஸ்வரனை காண் கைக்காக நெடும் காலம் எல்லாம் சென்று சரீரத்தோடு முடியும் நோய் நீ கொண்டாயே –

——————————————————————————————————————-

நீராய் இற்று விழுகிற மேகத்தைக் கண்டு என்னைப் போலே எம்பெருமானுடைய குண சேஷ்டிதாதிகளிலே அகப்பட்டு
அத்தாலே நோவு படுகிறாய் -என்று சோகிக்கிறாள் –

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

கல்பம் தோறும் கல்பம் தோறும் லோகம் எல்லாம் வெள்ளம் இட வேண்டும் நீரைக் கொண்டு
தோழி மாரைப் போலேயும் எங்களை போலேயும் நீராய் நெகிழா நின்றுள்ள வானமே -உன்னுடைய அவசாதம் நீங்கி வாழ்ந்திடுக
எங்களை போலே நீயும் ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வ பாவன் ஆனவனுடைய
வீர்ய குணத்திலே அகப்பட்டு அவன் பக்கல் உண்டான நசையாலே நோவு படுகிறாயே
பாழிமை என்று -இடம் உடைமையுமாம் –

———————————————————————————————————-

கலா மாத்ரமாம் படி தேய்ந்த சந்த்ரனைக் குறித்து -நீயும் எம்பெருமானுடைய அசத்திய வசனத்தை
விஸ்வஸித்து நான் பட்டது பட்டாய் ஆகாதே -என்கிறாள் –

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –2-1-6-

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்-மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
விரஹ வ்யசனத்தாலே நைகிற எங்களை போலே பண்டு பூர்ணனான சந்திரனே
இப்போது மை போலே இருக்கிற இருளை ஆகாசத்தில் நின்றும் போக்குகிறிலை –
ஓளி மழுங்கித் தேயா நின்றாய் –
மை வான் இருள் -மிக்க இருள் என்றுமாம் –
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்-மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
பல் வார்த்தை சொல்லுகைக்கு ஐந்து வாயை உடைய திரு வனந்த ஆழ்வானோடும்
ஜெயத்ர வதத்திலே பகலை இரவாக்கின பொய்க்கு பெரு நிலை நின்ற திரு வனந்த ஆழ்வானோடும் பழகி
அவர்களும் தன் பக்கலிலே பொய் ஓத வேண்டும் படி பெரியனான எம்பெருமான்
ஏதத் விரதம் மம -என்ற பெரும் பொய்யாய் மெய்யாகக் கருதி உன்னுடைய உடம்பில் அழகிய ஒளியை இழந்தாயே-

——————————————————————————————————–

பரஸ்பரம் காண ஒண்ணாத படி மூடின அந்தகாரத்தைக் குறித்து -எங்களை எத்தனை காலம் நலியக் கடவை -என்கிறாள்

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

தோற்றோம் மட நெஞ்சம்-இத்யாதி –
சபலமான நெஞ்சை எம்பெருமானுடைய ஆஸ்ரித ஸூ லப்தவாதி குணங்களால் இழந்தோம்
எங்கள் தரியாமையைச் சொல்லி பிரலாபிக்கிற எங்களை விரோதம் பண்ணுகைக்கு ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே
ஆபத்து வந்தால் சத்ருக்களும் ஐயோ என்பர் -அவர்களில் காட்டிலும் கொடிதான படியை உடையையாய்
மாற்றாண்மை நிற்றியே –
சாத்திர வத்திலே நிற்க்க கடவையோ-
வாழி-
பாதியாமைக்கு மங்களா சாசனம் –
கனையிருளே-
செறிந்த இருளே –
தமஸ் பதார்த்தம் தான் மழுங்கி இருக்கை ஸ்வ பாவம் இ றே என்று பாராதே எம்பெருமானை பிரிந்த அதிமாத்ர துக்கத்தால்
ஒளியும் மழுங்கி வாய் திறந்து கதறவும் மாட்டாதே இருக்கிறதாகக் கொண்டு
பாண்டே நோவு படுகிற எங்களை உன்னுடைய துக்கத்தைக் காட்டி என்னுடைய சத்ருக்கள் நலியும் நலிவும் ஸூ கம் என்னும் படி
கொடியையாய்க் கொண்டு எத்தனை காலம் நலியக் கடவை
ஐயோ உனக்கு துக்கம் நீங்குக என்றுமாம்

————————————————————————————————–

இருளாலே ஜல ஸ்தல விபாகம் அறியாதே ஒரு கழியிலே சென்று -நீயும் என்னைப் போலே எம்பெருமான் பக்கல்ந
சையாலே தரைப் பட்டு நொந்தாய் ஆகாதே -என்கிறாள் –

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

இருள் செறிந்தால் போல் இருக்கிற பெரு நீரை உடைய கழியே-மிகவும் அறிவு கெட்டு காலம் முடியிலும் நீ முடிகிறிலை –
அஸூராவேசத்தாலே உருளுகிற சகடத்தை உதைத்த உபகாரத்தாலே சேதனரை எல்லாம் அடிமை கொண்ட கிருஷ்ணன் அவ்வாபத்தை நீக்கினால் போலே
இவ்வாபத்துக்கும் உதவும் என்னும் பெரு நசையாலே முடியாதே ஆழ விழுந்து நோவு பட்டாயே –

——————————————————————————————————-

ஆற்றாமையால் தன் மாளிகையில் புகுந்து அங்கே எரிகிற விளக்கைக் கண்டு -பகவத் விஸ்லேஷத்தாலே வெதும்புகிறதாகக் கொண்டு
என்னைப் போலே நீயும் இங்கனே பட்டாய் ஆகாதே -என்கிறாள் –

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே
விடாதே நலிகிற பிரேம வியாதி -பகவத் குண அனுசந்தானத்தாலே நைந்து இருக்கிற ஆத்மாவை உள்ளுள்ள பசை எல்லாம் அறும்படி உலர்த்த
விச்சேதியாதே உருவச் செல்லுகிற விளக்கே
நீயும்-
-நானே யன்றிக்கே நீயும்
அளியத்தாய் –
அருமந்த நீ –
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்-அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே-
அப்போது அலர்ந்த செந்தாமரை பூப் போலேயாய்-பெருத்து இருக்கிற திருக் கண்களாலே நோக்குகை பூர்வகமாக சாந்தவனம் பண்ணி
திருத் தோளில் தோள் மாலையை வாங்கி தோளிலே இட்டு அவன் பண்ணும் பிரசாதத்தை நினைத்து அதில் ஆசையால் பரிதபிக்கிறாயே –

————————————————————————————————

இப்படி தன்னுடைய அவசாதம் எல்லாம் தீரும் படி வந்து சம்ச்லேஷித்த எம்பெருமானைக் குறித்து
இனி ஒரு நாளும் என்னை விடாதே ஒழிய வேணும் என்று அவனை அர்த்திக்கிறார்-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

சில நாள் நலிந்து விடக் கடவது அன்றிக்கே மேன்மேல் என மிகவும் நலியக் கடவதான விரஹ வியசனம் ப்பராம் இல்லாத ஆத்மாவை மிகவும் நோவு படுத்த
நிரந்தரமாக உன்னுடைய குண சேஷ்டி தாதிகளைக் காட்டி என்னை அகப்படுத்திக் கை விட்டாய்
கேசியை நிரசித்து யாமளா ர்ஜுனங்களின் நடுவே போய் திரு உலகு அளந்து அருளி மஹா பலியால் வந்த ஆபத்தை இந்திரனுக்கு போக்கி அருளி
ஒன்றும் செய்யாதாரைப் போலே மீளவும் ஜகத் ரக்ஷணத்தில் ஒருப் படுமா போலே என்னுடைய பிரதிபந்தகத்தைப் போக்கி
இம் மஹா அவசாதத்திலே வந்து சம்ச்லேஷித்து என்னை உண்டாக்கினவனே –

———————————————————————————————–

நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றார் திரு நாட்டிலே நித்ய வாசம் பண்ணப் பெறுவார் இது நிச்சிதம் என்கிறார் –

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-

ஆழ்வாரோடு சம்ச்லேஷித்து அவரை உளர் ஆக்குகையாலே ஓன்று ஒழியாமே சகல பதார்த்தத்துக்கும் ஈஸ்வரனானவன் திருவடிகளில்
லோகத்தில் அந்நிய பரமான பதார்த்தங்கள் எல்லாம் தம்மைப் போலே எம்பெருமானைப் பிரிந்து நோவு படுகிறவனாக
பிரமிக்கைக்கு ஈடான நிரவதிக பக்தியை உடையரான ஆழ்வார்
ஓர் ஆயிரம் விலக்ஷணமாய் இருக்கை

——————————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: