திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -2-1-

முதல் பத்தால்-பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார்
இரண்டாம் பத்தால் -அந்தக் கைங்கர்யத்தில் களை பறித்தார்
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்
நாலாம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்கிறார்
அஞ்சாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்கிறார்
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளில் சரணம் புக்கார்
ஏழாம் பாத்தால் இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும் தக்த்த பட நியாயம் போலே சம்சாரம் அனுவர்த்திக்கிற
படியைக் கண்டு விஷணராகிறார்
எட்டாம் பத்தால் இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் – தக்த்த பட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை அறாத படியால் என்று பார்த்து அவற்றில் -ஒரு நசை இல்லை என்றார்
ஒன்பதாம் பத்தால் -இப்படி நசை அற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் -என்று அதி சங்கை பண்ண -நான் நாராயணன் சர்வ சக்தி உக்தன் –
உம்முடைய சர்வ அபேக்ஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் என்று அருளிச் செய்ய -அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார் –
பத்தாம் பத்தால் ஆழ்வார் உடைய பதற்றத்தைக் கண்டு திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய அபேக்ஷித சம்விதானம் பண்ணினபடியை அருளிச் செய்கிறார் –

இரண்டாம் பத்தில் -முதல் திருவாய்மொழியில்-மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -என்று நம்பி உடைய
ஸுலப்யத்தையும் வேண்டற்பாட்டையும் அழகையும் அனுசந்தித்து பாஹ்ய சம்ச்லேஷத்தில் பிரவ்ருத்தராய் அது கிட்டாமையாலே –
லோகத்தில் பதார்த்தங்களும் தம்மோபாதி பிராப்தி உண்டு என்று அனுசந்தித்து இருக்குமவர் ஆகையால் அவற்றையும் பகவத் அலாபத்தாலே
நோவு படுகின்றனவாக அநுஸந்திக்கும் படி அவசன்னரானவர் தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –

எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி மஹா அந்தகாரமான மத்திய ராத்திரியிலே தன் ஆற்றாமை கை கொடுக்க கடல் கரையோடே
தோள் தீண்டியான தன்னுடைய -லீலா உத்யோனத்திலே புறப்பட்டு -ராம விஸ்லேஷ பிரசங்கத்தில் தங்களுடைய தரியாமைக்கு நீர் பிரிந்த மத்ஸ்யத்தை
த்ருஷ்டாந்தமாகச் சொல்லும் இளங்கோவும் பிராட்டியும் போலே அன்றிக்கே-மிகவும் அவசன்னையாய்-கண்ணால் கண்ட
சகல பதார்த்தங்களும் தன்னைப் போலவே எம்பெருமானை பிரிந்து நோவு படுகின்றவாகக் கொண்டு
அவற்றினுடைய துக்க அனுசந்தானத்தாலும் தம்முடைய துக்கம் இரட்டித்து துக்கிகள் சம துக்கிகளோடு கூடி பிரலாபை ரேவ தார்யதே-என்கிறபடியே
அவற்றோடு கதறி திரிகிறான் ஒரு பிராட்டி பேச்சாலே தம் தசையைப் பேசுகிறார் –
அஞ்சிறைய மட நாரை -அவதார ஸுலப்யத்திலே யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாத ஆற்றாமை –
இங்கு அர்ச்சாவதாரத்திலே யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாத ஆற்றாமை
இவ்விஷயத்தில் ஏற்றமே யன்றிக்கே-அஞ்சிறைய மட நாரை தொடங்கி-பகவத் குணங்களை இவ்வளவும் அவகாஹித்த ஏற்றத்தாலும் ஆற்றாமை மிக்கு இருக்கக் கடவது –
அங்கு தூது விட ஆள் பெற்றார் -இங்கு எல்லாரும் இழவானவர் ஆகையால் தூது விடவும் ஆள் பெற்றிலர்
நாரையாகில் வெளுத்து இருக்கையும் -காற்றாகில் சஞ்சரிக்கையும் முதலான ஸ்வ பாவங்கள் இவற்றுக்கு நியதம் என்று அறியாதே
வியதிரேகத்திலே சேதன அசேதன விபாகம் அற ஆற்றாமையை விளைக்க வல்ல விஷயம் -என்னுமத்தை புத்தி பண்ணி அவற்றுக்குமாக வெறுக்கிறார்
அபி வ்ருஷா பரிம்லாநா ச புஷ்பாங்குர கோரகா-விஷயே தே மஹா ராஜ ராம வியஸன கர்சிதா
உபதத்தோதகா நத்ய பல்வலா நி சராம்ஸிச பரி சுஷ்க பலா சா நி வனான் யுபவ நா நிச
பாட்டுத் தோறும் எம்மே போல் -என்கிறது இவற்றுக்குத் தனித் தனி உண்டான ஆற்றாமை இவர்க்கு ஒரு வகைக்கு போறும் அத்தனை என்கைக்காக-

————————————————————————————————————————

தான் இருக்கிற கடல் கரையிலே ஆமிஷ அர்த்தமாக இருக்கிற தொரு நாரையைக் கண்டு
நீயும் நான் அகப்பட்ட விஷயத்தே அகப்பட்டாய் ஆகாதே என்கிறாள் –

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரையுகளும் –
வாய் கை -கிட்டுகை
உழலுகை மேலே மேலே போகை
அலை கடல் நீர் குழம்ப வகுடாடவோடி-இத்யாதி
மலை போல் வருகிற திரைகளால் சலிப்பிக்க ஒண்ணாத படி தன் ஆமிஷம் கிட்டும் தனையும் பேராதே இருக்கை-
தன் நாயகன் ஒருவனையும் நினைத்து இவ்வருகு உண்டான துக்க பரிபவங்களைப் பொறுத்து இருக்கிற இருப்புக்கு
போலியாக நினைத்து இருந்தாள்-பகவத் த்யான பரர் இருக்குமா போலே -க்ரயோ வர்ஷ தாராபி –
கானல் –
நெய்தல் நிலம் -பிரிந்தார் இரங்கும் இடம் நெய்தல் நிலம் -அத்தாலும் தன் ஆற்றாமை அவற்றுக்கும் உண்டு என்று இருக்கிறாள்
நெய்தலுக்கு பூதம் -ஜலம்-கூடும் இடம் குறிஞ்சி -பூதம் ஆகாசம் -பிரியும் இடம் பாலை -பூதம் தேஜஸ் ஸூ -ஊடலுக்கு ஸ்தானம் மருதம் -பூதம் வாயு
மடநாராய்-
மடப்பம் -பற்றிற்று விடாதே ஒழிகை
கிராமணிகள் யாகங்களும் பண்ணி பவித்ரங்களும் முடிந்திட்டு -தார்மிகர் -என்னும் படி திரியா நிற்பார்கள் இ றே-பாரா ஹிம்சை பண்ணா நிற்கச் செய்தே
அப்படியே தான் நினைத்த ஆமிஷம் கிட்டும் தனையும் ஷூத்ர மத்ஸ்யங்கள் மேலிட்டாலும் அநாதரித்து இருக்கை
ஆயும்
எண்ணெய் பெற்றதே அடியாக உறங்காத தாயும் –
அமருலகும் துஞ்சிலும் –
சத்தையே பிடித்து உறக்கம் இன்றியே இருக்கிற நித்ய ஸூ ரிகளும் உறங்கிலும்
தாயானவள் -பதி சம்யோக ஸூ லபம் வயோ த்ருஷ்ட்வாஸ மே பிதா -சிந்தார்ணவ கத பாரம் நாஸ சாதாப்ல வோயதா-என்கிறபடியே
சத்ருச வரனைத் தேடி உறங்காள் முன்பு -விரஹ வியசனத்தால் உறங்காள் பின்பு
நீ துஞ்சாயால்-
கூடாதது கூடிலும் நீ இமையோடு இமை பொருந்து கிறிலை –
நோயும் பயலைமையும்
விரஹவ்யத்தையும் -அத்தால் வந்த வைவர்ணயமும் -அதனுடைய வெளுப்பையும் தன்னுடைய வைவர்ணயத்துக்கு போலியாக நினைக்கிறாள்
மீதூர –
விஷம் ஏறினால் போலே உடம்பிலே ஊர
எம்மே போல்-
வருகிற துக்க பரம்பரைகளை பொறுத்து இருகையாலும் -பற்றிற்று விடாதே இருக்கையாலும்-வைவர்ணயத்தாலும் என்னைப் போலே இரா நின்றாயீ-
நீயும் –
இந்நோய் படுகைக்கு நான் ஒருத்தியும் அமையாது
மிருது பிரக்ருதியான நீயும் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்க மாட்டாமைக்கு இருவரும் ஒத்தோமோ –
திருமாலால்-
மைந்தனை மலராள் மணவாளனையோ நீயும் இழந்தது
தாயையும் தாமப்பனையுமோ நீயும் பிரிந்தது
நெஞ்சம் கோட்பட்டாயே –
நெஞ்சு பறி யுண்டாய் ஆகாதே
தோல் புரை அன்றிக்கே மறு பாடுருவ நோவு பட்டாயாகாதே –

——————————————————————————————————————

விஸ்லேஷித்து வர்த்திக்கிற அன்றிலினுடைய தாருண த்வனியைக் கேட்டு அத்தைக் குறித்து வெறுக்கிறாள் –

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

கோட்பட்ட சிந்தையையாய்க் –
கிரஹிக்கப் பட்ட மனஸை உடையையாய் -அபஹ்ருதமான சித்தத்தை உடையையாய்
கூர்வாய வன்றிலே-
அபஹ்ருதமான மனஸ் ஸூ -என்று அறிந்த படி எங்கனே எண்ணில் -இதில் பேச்சு அடி அற்று இருக்கையாலே தோற்றி இருக்கிறது
கூர்த்த வாயை உடைய -என்னுதல்
வாய் என்று வார்த்தையாய் தனி இருப்பாருடைய நெஞ்சை ஈரும் பேச்சை உடைய என்னுதல் –
சேட் பட்ட யாமங்கள் –
நெடிய சாமங்கள் -ராத்ரி நெடுகுகை அன்றிக்கே ராத்திரியவயவங்கள் தான் நெடிதாகை
சேராது –
படுக்கையில் சேராதே
இரங்குதியால்-
படுக்கையில் சேராது ஒழிந்தாலும் தரிப்போடே இருக்கலாம் இ றே
சிதிலமான நெஞ்சை உடையை யாகா நின்றாய்
ஆட்பட்ட வெம்மே போல் –
ஐஸ்வர்யம் ஆத்மபிராப்தி-என்கிற இவ்வளவு இன்றிக்கே-பிராப்தி பலமான தாஸ்ய பரிமளத்தை யோ நீயும் ஆசைப் பட்டது
நீயும் –
என்னைப் போலே — பதிம் விஸ்வஸ்ய–யஸ் யாஸ்மி -தஸ் யைஷ ஆத்மா பதவித்தம் விதித்வா நகர்மணா லிப்யதே பாபகேந -என்கிறபடியே வேதாந்த வாசனை யாதல்
மயர்வற மதி நலம் அருள பெற்றுத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என்னுதல்
இவை ஒன்றுமே இன்றிக்கே இருக்க நீ நோவு படுவதே -இதுக்கோர் அதிகாரி நியதியும் இன்றிக்கே இருந்ததீ
அரவணையான்-தாட்பட்ட தண் துழாய்த் தாமம் –
படுக்கையைச் சொல்லுகையாலும் -திருமாலால் -என்று கீழே சொல்லுகையாலும் -படுக்கையிலே இருவரும் கூடின சேர்த்தியிலே அந்தரங்க சேவையையோ ஆசைப் பட்டது –
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் –
சுடர் முடி மேல் துழாயை ஒழிய அவர்கள் இருவரும் கூடித் துகைத்த தாளிணை மேல் துழாயை யோ ஆசைப் பட்டது
தாமம் -மாலை
காமுற்றாயே-
சங்கத்து அளவிலே விட்டிலை யாகாதோ
சங்காத் சஞ்சாயதே காம -என்னும் அளவு ஆசைப் பட்டாய் ஆகாதே –

——————————————————————————————————————

கோஷிக்கிற கடலைக் கண்டு -ஐயோ நீயும் ராம குணத்தில் அகப்பட்டு நான் பட்டதே பட்டாய் ஆகாதே -என்கிறாள் –

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

காமுற்ற கையறவோடு –
ஆசைப் பட்ட பொருள் கைப் புகுராமையாலே வந்த இழ வோடே
காமுறுகையும் இழவும் கடலுக்கு இன்றிக்கே இருக்கே த்ருஷ்டாந்த பூதையான தனக்கு உண்டாகையாலே அநு மித்துச் சொல்லுகிறாள்
எல்லே –
ஓதமும் நானும் உறங்காது இருந்தேனே -என்று உறங்காமைக்கு கூட்டு ஆகையால் -வாராய் -என்று சம்போதானம் ஆதல் -என்னே என்று ஆச்சர்யம் ஆதல் –
யிராப்பகல் – முற்றக் கண் துயிலாய்-
உறங்கக் கண்ட இரவோடு விழித்து இருக்கக் கண்ட பகலோடே வாசி அற உறங்கு கிறிலை
நீ –
உன் காம்பீர்யம் எல்லாம் எங்கே போயிற்று
நெஞ்சுருகி யேங்குதியால்-
கண் உறங்காதே ஒழிந்தால் -நெஞ்சு சிதிலம் ஆகாது ஒழிதல்-வாய் வீட்டுக் கூப்பிடுதல் -தான் பெற்றதோ –
யேங்குதியால்-
ஏங்கா நின்றாய்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்-
அக்னி வயிறு நிறைய ஊட்டினான் -என்னுதல்
இலங்கையை முற்ற தீ யூட்டினான் என்னுதல் –
ஒருத்தியைப் பெறுகைக்கு மார்விலே அம்பு ஏற்றவன் அவளுடைய அந்தப்புர பரிகரத்துக்கு உதவானோ -என்று நீயும் ஆசைப் பட்டாயோ
தாள் நயந்த-யாமுற்ற துற்றாயோ –
அவன் திருவடிகளை ஆசைப்பட்டு நான் பட்டது பட்டாயோ
தாள் நயந்தாரோடு தோள் நயந்தாரோடு வாசி இல்லை
அவனுடைய பிரணயித்தவ குணத்திலேயோ நீயும் அகப்பட்டது –
வாழி-
வாழ்ந்திடுக –
எல்லாருக்கும் தாரகமான உன்னுடைய அவசாதானம் நீங்குக –
கனை கடலே-
வாய் விட்டுக் கூப்பிட மாட்டாதே -விம்மல் பொருமலாய் -படுகிறாய் ஆகாதே
சப்திக்கிற கடலே -என்னவுமாம் –

—————————————————————————————————————

சஞ்சரிக்கிற காற்றைக் கண்டு நீயும் என்னைப் போலே கிருஷ்ணனுடைய கையும் திரு வாழியும் காண ஆசைப் பட்டு நோவு பட்டாயோ -என்கிறாள் –

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

கடலும் மலையும் விசும்பும் துழாய் –
பரப்பு உடைத்தான் கடலோடே-நிர் விவரமான மலையோடு -அபரிச்சின்னமான ஆகாசத்தோடு -வாசி அறத் துழாவி –
காரார் திரு மேனி காணும் அளவும் போய் -என்று ஷீராப்தி யோடு -திருமலையோடு -பரமபதத்தோடு வாசி அறத் தேடுவார்க்கு போலியாய் இருக்கிற படி –
தவ் வனானி கிரீன் சைவ சரிதச்ச சராம்ஸிச நிகிலேந விசின்வா நவ் ஸீதாம் தசரதாத் மஜவ் –
எம் போல்-
அவனைப் பிரிந்து தேடித் திரிகிற எங்களை போலே
சுடர் கொள் இராப்பகல் –
விரஹ வ்யாசனத்தாலே நெருப்பைச் சொறிந்தால் போலே இருக்கிற இராவும் பகலும் –
சந்த்ர ஸூ ர்யர்களுடைய -என்னவுமாம்
துஞ்சாயால் –
உறங்கு கிறி லை
தண் வாடாய்-
ஜ்வர சந்நிபதரைப் போலே குளிர்ந்து இரா நின்றாய்
இனி சத்தையோடு ஜீவித்து இருக்க மாட்டாய் ஆகாதே
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான்-
பாரத சமரத்திலே சக்ர உத்தாரண தசையில் பீஷ்மாதிகள் மேலே திரு வாழி யைக் கொண்டு தொடர்ந்த சர்வேஸ்வரனை
க்ருஷ்ண ஏவஹி–ஏதத் வ்ரதம் மம-என்னும் அளவும் அன்றிக்கே ஆஸ்ரித விஷயத்தில் அசத்திய ப்ரதிஞ்ஞனை ஆசைப்பட்டாய் ஆகாதே
ஏஹ் ஏஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர நமோஸ்துதே தேவ வராப் ரமேய ப்ரஸஹ்யமாம் பாதயா லோக நாத ரதோத்தமாத் பூத சரண்ய சங்க்யேய-
அடல் கொள் படை –
எதிரிகளை மண் உண்ணப் பண்ணும் ஆயுதம்
நீ-உடலம் நோய் உற்றாயோ-
பிரதியுபகார நிர பேஷமாக உபகரிக்கும் நீ சரீராந்தமான நோயை கொண்டாய் ஆகாதே
சஞ்சாரம் இதுக்கு நியத ஸ்வபாவம் இ றே
ஊழி தோர் ஊழியே-
காலம் மாறி வரச் செய்தேயும் நோய் ஏக ரூபமாகச் செல்லுகை –

————————————————————————————————————

நீராய் இற்று விழுகிற மேகத்தைக் கண்டு அவன் வீர சரிதத்தே நீயும் அகப்பட்டாய் ஆகாதே -என்கிறாள் –

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

ஊழி தோர் ஊழி —
உலகுக்கு நீர் கொண்டு-ஊழி தோர் ஊழி –நீராய் நெகிழ்கின்ற
வானமே-
லோகம் எல்லாம் வெள்ளம் இட வேண்டும் நீரைக் கொண்டு கல்பம் தோறும் நீராய் உருகா நின்றாய்
வானம் என்று ஆகாசத்தை சொல்லவுமாம் –அதி ஸூ ஷ்மமான ஆகாசம் –
மேக சகலமாய்ச் சிதறி நீராய் உருகி விழுகிறது என்று நினைக்கிறாள் என்னவுமாம் –
தோழியரும் யாமும் போல்-
உனக்கு நல்ல நிதர்சனம் –இவளுக்கும் அவ்வருகு ஆயிற்று தோழி மாருடைய அவசாதம்
வாழிய –
ஜகத்துக்கு உபகாரமாய் இருக்கிற உன்னுடைய கண்ணநீரும் நீங்கி வாழ்ந்திடுக
நீயும் மதுசூதன்-பாழிமையில் பட்டு –
விரோதிகளை சங்கல்பத்தால் அன்றிக்கே கை தொட்டு அழித்தவனுடைய-வீர குணத்திலே அகப்பட்டு
பாழிமை -பலம் -இடமுடைமை என்றுமாம் -ஏற்றம் என்னவுமாம்
அவன் கண் பாசத்தாலே –
அவன் பக்கல் நசையாலே -விஷய அநு கூலமாய் இ றே நசை இருப்பது
நசை உள்ள அளவும் வ்யாதிரேகத்தில் நோயும் உண்டாய் இ றே இருப்பது
நைவாயே-
பக்த்யேக லப்தி ப்ரசித்தியே -நைவே பலம் -ஜீவிக்கவும் பெறாதே-முடியவும் பெறாதே சிதிலம் ஆகிறாயே-

—————————————————————————————————————–

கலா மாத்ரமாம் படி தேய்ந்த சந்த்ரனைக் குறித்து -நீயும் எம்பெருமானுடைய அசத்திய வசனத்தை
விஸ்வஸித்து நான் பட்டது பட்டாய் ஆகாதே -என்கிறாள் –

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –2-1-6-

நைவாய வெம்மே போல் –
வ்ரஹ வ்யசனத்தாலே நைகிற எங்களை போலே
நைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே -என்றுமாம்
தர்ம தர்மி விபாகம் அற நைகிற எங்களை போலே
ச பங்காம் அந லங்காராம் விபத் மாமிவ பதமி நீம்
அவ்யக்த லேகா மிவ சந்த்ர லேகாம் வாயு பிரபக் நா மிவ மேக லேகாம் –
நாண் மதியே –
நாள் நிரம்பின மதியே -பண்டு பூர்ணனாகக் கண்டு இருக்கும் இ றே
நாட்பூ என்னுமா போலே இள மதி என்றுமாம்
நீ –
தர்ச நீயனான நீ
இந்நாள்-
இப்போது
மைவான் இருள் அகற்றாய் –
ஆகாசத்தில் செறிந்த இருளை அகற்று கிறி லை
அணித்தான ஆகாசத்தில் இருளையும் போக்கு கிறி லை
சத்ருக்கள் எதிரி எளியன் ஆனால் கூட நின்று உறுமுமா போலே மேல் இடா நின்றது
சஹாவஸ் த்தானமும் உண்டாகா நின்றதீ
மிக்க இருள் என்றுமாம் –
மாழாந்து தேம்புதியால்
ஓளி மழுங்கித் தேயா நின்றாய்
ஐ வாயரவணை மேல் ஆழிப் –
பல வார்த்தை சொல்லுகைக்கு பல வாயை உடைய திரு வனந்த ஆழ்வானோடே இ றே பழக்கம்
ஜயத்ர வதத்தில் பகலை இரவாக்கின பொய்க்கு பெரு நிலை நின்ற திரு வனந்த ஆழ்வானோடே இ றே பழக்கம்
பேறு அவர்களால் யானால் இழவில் இன்னாதாக பிராப்தி உண்டாகை
பெருமானார்-
அவர்களும் தம் பக்கலிலே பொய் யோத வேண்டும் படி பொய்யால் பெரியவர் –
மெய் வாசகம் கேட்டு –
பேதை நின்னைப் பிரியேன் -என்று ஏகாந்தத்திலும்
ஏதத் விரதம் மம -என்று ஒழக்கத்திலும் சொன்ன பெரும் பொய்
யுக்தி மாத்ரமேயாய் அர்த்தகிரியா காரி யன்றிக்கே ஒழிகை –
மெய் -என்று விபரீத லக்ஷணை
உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –
உன் உடம்பில் ஒளியை இழந்தாய் ஆகாதே
தர்ச நீயமாய் –தண் அளியேயாய்-லோக உபகாரகமான உன் உடம்பில் ஒளியை யாகாதே இழந்தது

—————————————————————————————————————

மதி கெட்டவாறே அந்தகாரம் வந்து மேலிடுமது இ றே -பரஸ்பரம் காண ஒண்ணாத படி நடுவே மூடின அந்த காரத்தைக் குறித்து
நீ எங்களை இங்கனே நலியக் கடவையோ என்கிறாள்

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

தோற்றோம் மட நெஞ்சம் –
எம்மே போல் என்று கீழும் மேலும் உண்டான பதார்த்தங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு தோற்றோம் என்கிறார் –
மட நெஞ்சம் தோற்றோம்
பற்றிற்று விடாத சபலமான நெஞ்சு -என்னுதல்
பவ்யமான நெஞ்சு என்னுதல்
எம்பெருமான்-
அப்ராப்த விஷயத்துக்கு தோற்றோமோ –
நாரணற்கு-
அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு –
ஸூ லபனுக்கு என்னவுமாம்
ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம் என்கை –
எம்-ஆற்றாமை சொல்லி அழுவோமை
எங்கள் ஆற்றாமையைச் சொல்லிக் கூப்பிடுகிற எங்களை –
நாங்கள் பெறுகிறது உண்டோ –
நீ பொறுக்க மாட்டாதே ஸாத்ரவம் கொண்டாட
அவனைப் பெறவோ
போன நெஞ்சைப் பெறவோ
எங்கள் தரியாமையாலே அழப் பெறோமோ-
நீ நடுவே-
உனக்கு பாத்ய பாதக பாவ சம்பந்தம் இன்றிக்கே இருக்கச் செய்தே
வேற்றோர் வகையில் கொடியதாய் –
சத்ருக்கள் படியிலும் கொடியதாக செய்யா நின்றாய்
வகை -பிரகாரம் –
கொடிதாய்-கொடிதான படியை உடையையாய்
சத்ருக்கள் ஆனாலும் நோவு பட்டரை ஐயோ என்ன வன்றோ வடுப்பது-
எனையூழி-மாற்றாண்மை நிற்றியே-
கால தத்வம் உள்ளதனையும் ஸாத்ரவத்திலே நிற்க கடவையோ –
வாழி –
காதுகரை -உடன் பிறந்தீர் என்னுமா போலே பாதியாமைக்காக மங்களா சாசனம் பண்ணுகிறாள்
கனையிருளே –
செறிந்த இருளே
அன்றிக்கே –
தமஸ் பதார்த்தம் ஓளி மழுங்கி இருக்கை ஸ்வ பாவம் என்று அறியாதே விரஹ வ்யசனத்தாலே
ஓளி மழுங்கி கதறவும் மாட்டாதே இருக்கிறதாகக் கொண்டு
பாண்டே நோவு படுகிற எங்களை –
நீ நடுவே
எங்கள் ஆற்றாமையில் காட்டில் வ்யாவருத்தமாய் இரா நின்றதீ உன் ஆற்றாமை
சத்ருக்கள் நலியும் நலிவிலும் கொடிதாய் இரா நின்றதீ -உனது துக்கத்தைக் காட்டி நலிகிற நலிவு
வாழி கனை இருளே –
உன் மாலினியம் போய் நீ ஜீவித்திடுக –

————————————————————————————————————-

இருளாலே ஜல ஸ்தல விபாகம் அறியாதே ஒரு கழியிலே சென்று -நீயும் என்னைப் போலே
எம்பெருமான் பக்கல் நசையாலே தரைப் பட்டு நொந்தாய் ஆகாதே -என்கிறாள் –

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே-
இருள் செறிந்தால் போலே இருக்கிற பெரு நீரை உடைய கழியே
போய்-மருளுற்று –
மிகவும் அறிவு கெட்டு-உள்ளுள்ளவை எல்லாம் கலங்கி
மயர்வற மதி நலம் அருள பெற்ற அவ்வளவு எல்லாம் கலிங்கினார்க்கு போலியாய் இருக்கை –
இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்-
கால தத்வம் முடியிலும் நீ உறங்கு கிறி லை
உருளும் சகடம் உதைத்த –
ரக்ஷையாக வைத்த சகடம் அ ஸூ ரா வேசத்தாலே மத்தய ராத்ரத்திலே ஊர்ந்து வந்து மேல் விழ
ஸ்தன்யார்த்தியாய் அழுகிற போதை திருவடிகளுக்கு இலக்காய் -அது துகளாம் படி பண்ணின
பெருமானார்-
அத்தை அழியச் செய்து ஜகத்துக்கு ஒரு சேஷியைத் தந்தவன்
அருளின் பெரு நசையால் –
அவ்வாபத்துக்கு உதவினால் போலே இப்போதும் உதவும் என்னும் நசையினாலே
அருள் சாவாதி யாகில் இ றே நசையும் சாவதி யாவது
தாய்க்கு உதவினவன் பிரணயி நிக்கு உதவானோ என்னும் நசையாலே
ஆழாந்து நொந்தாயே –
அற விழிந்து நோவு படுகிறாயே –

———————————————————————————————————-

ஆற்றாமையால் தன் மாளிகையில் புகுந்து அங்கே எரிகிற விளக்கைக் கண்டு -பகவத் விஸ்லேஷத்தாலே வெதும்புகிறதாகக் கொண்டு
என்னைப் போலே நீயும் இங்கனே பட்டாய் ஆகாதே -என்கிறாள் –

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

நொந்தாராக் காதல் நோய் –
இடைவிடாதே உருவ நலிகிற பிரேம வியாதி
பிரேம வியாதிக்கு உள்ளது ஓன்று இ றே இது
மெல்லாவி –
விளக்கின் பிரக்ருதியின் மார்த்வம் போலே இருக்கும் ஆத்மாவும் என்று இருக்கிறாள்
அதாகிறது -பகவத் குண அனுசந்தானத்தாலே நைந்து இருக்கை
உள்ளளுலர்த்த-
தோல் புரை அன்றிக்கே -உள்ளே குருத்து வற்றாக வற்றுவிக்க
நந்தா விளக்கமே –
முடியவும் பெறாதே உருவச் செல்லுகிற விளக்கே -அனுமான ஸித்தமான நஸ்வரத்தை விஸ்மரித்தாள் –
நீயும் –
லோகத்துக்கு கண் காட்டியான நீயும்
அளியத்தாய்-
அருமந்த நீ பரார்த்தமான உடம்பிலே இந்நோவு படுகிறதோ
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்-அந்தாமத் தண் துழாய் –
கண்ணாலே குளிர நோக்கி ஸ்மித பூர்வகமான சாந்த்வநம் பண்ணி –
அந்த நோக்காலும் அந்த ஸ்மிதத்தாலும் என்னை அநந்யார்ஹம் ஆக்கினவனுடைய அழகிய திருத் துழாய் மாலையில் உண்டான ஆசையால்
ஆத்வாரம் அநுவவ்ராஜ -என்று மங்களா சாசனம் பண்ணின பிராட்டியை தாம் வரும் அளவும் தரித்து இருக்க பதிம் சம்மா நிதா சீதா -என்கிறபடியே
தோளின் மாலையை இவன் தோளிலே இட்டுக் குளிர நோக்கி ஸ்மிதம் பண்ணி கொண்டாடினால் போலே
ஆசையால் வேவாயே –
ஆசையே நெருப்பாக வேகிறாயே
உடம்பே இந்த் நயமாக வேகிறாயே
அக்நி நேவாக் நிபர்வத -என்னக் கடவது இறே –

———————————————————————————————————-

அவன் இவ்வவசாதம் எல்லாம் தீரும் படி வந்து முகம் காட்ட இனி ஒரு நாளும் என்னை விடாதே ஒழிய வேணும் என்கிறார் –

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

வேவாரா வேட்கை நோய் –
ஒரு கால் வெந்து சமையக் கடவது அன்றிக்கே -அக்னி நேவாக் நி பர்வத -என்கிறபடியே வெந்த இடமே இந்தநமாக தஹியா நிற்கிற காதல்
அளவில்லாத வேட்க்கை நோய்
மெல்லாவி –
பாத்தம் போராத ஆத்மாவை -அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னி யாகில் இ றே
யுள்ளுலர்த்த-
கூடோ அக்னி ரிவ பாதபம் -கோடாரத்தில் பற்றின அக்னி போலே குருத்து வற்றாக வற்றுவிக்க
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்-
வேவேரா வேட்க்கை நோயாகைக்கு அடி இருக்கிற படி
இடை விடாதே சர்வ காலமும் உன் குணங்களைக் காட்டி என்னை உன் பக்கலிலே விழ விட்டு நீ கடக்க நின்றாய்
விழ விட்டுக் கொண்டாய் என்னவுமாம்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த-மூவா முதல்வா –
கேசியை நிரசித்து யாமளா ர்ஜுனங்களின் நடுவே போய் -அவ்வாபத்தைத் தப்பி மஹா பலியால் வந்த ஆபத்தை
இந்த்ரனுக்குப் போக்கி ஒன்றும் செய்யாதாரைப் போலே ஸ்ருஷ்ட்டி யாதி ஜகத் ரக்ஷணங்களைப் பண்ணினவனே
மூவாது ஒழி கை யாவது -இளகி வருகை -அதாகிறது ஒன்றும் செய்யாதானாய் ரக்ஷணைத்தே ஒருப்படுகை-
இத்தால் சொல்லிற்று ஆயிற்று -அப்படியே என்னுடைய விரோதிகளை போக்கி இம் மஹா அவசானத்திலே வந்து சம்ச்லேஷித்து
என்னை உண்டாக்கினவனே -என்கிறார்
இனி எம்மைச் சோரேலே –
இதுக்கு முன் நீ போய் நின்று பட்டது போறும்
இனி நீ என்னை விடாது ஒழிய வேணும் என்கிறார்

————————————————————————————————————–

நிகமத்தில் இப்பத்தையும் அப்பியசிப்பார் பரம பதத்தில் நித்ய வாசம் பண்ணப் பெறுவார் இது நிச்சிதம் -என்கிறார் –

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-

சேராத எப்பொருட்கும் ஆதியாம் –
இப்படி இவரோடு கலந்து இவரை உளர் ஆக்குகையாலே ஓன்று ஒழியாதபடி சகல பதார்த்தங்களும் ஈஸ்வரனுமாய்
சோதிக்கே-
முக மலர்த்தியும் தன்னைத்தான் படி இருந்தான்
இவர் ஒருவரையும் சோர விட்டான் ஆகில் சர்வ சேஷி யாக மாட்டானே
நிரவதிக தேஜோ ரூபமான விகிரஹத்தை உடையானான் என்றுமாம் –
சர்வ ரக்ஷகத்வம் நிலை நின்றது
வடிவு அழகும் புதுக் கணித்தது
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்-
லோகத்தில் சகல பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து நோவு படுகின்றனவாகக் கொண்டு பிரமிக்கும் படியான நிரவதிக பக்தியை உடையவர்
நிரூபக தர்மம் இவருக்கு காதல் ஆயிற்று
தம் படி சொல்லினும் தாமே சொல்லும் அத்தனை
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்-சோரார்
அபி நிவேசத்தோடே அருளிச் செய்தது ஆகையால் வி லக்ஷணமான ஆயிரம்
அவற்றிலும் வி லக்ஷணமான இவை பத்தையும் சோராதவர்கள்
விடார் கண்டீர் வைகுந்தம் –
எல்லாரும் இழந்து நோவு படுகின்றனவாக அனுசந்திக்க வேண்டும் தேசத்தை விட்டு
சகலரும் பகவல் லாபத்தாலே களித்து வர்த்திக்கும் தேசத்திலே நித்ய வாசம் பண்ணப் பெறுவார்
கண்டீர் என்று கை எடுத்துக் கூப்பிடுகிறார்
திண்ணனவே –
ஸூ நிச்சிதம் –

———————————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: