திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-10-

கீழ்ப் பெற்ற பேற்றை அனுசந்தித்து -இக் கனத்த பேறு நமக்கு எத்தாலே வந்தது -என்று இதுக்கு அடியை ஆராய்ந்த வாறே
புத்திஞ்ஞான சம்மோஹ ஷமா சத்யந்த மச்சம–ஸூகம் துக்கம் பவோ பாவோ பயஞ்சா பயமேவவா அஹிம்சா சமதா துஷ்டி
ஸ்த போதாநம் யஸோஸ் யஸ பவந்தி பாவா பூதா நாம் மத்த ஏவ ப்ருதக் விதா-என்கிறபடியே
புத்த்யாதி சகல பதார்த்தங்களும் தானே காரணம் ஆகையால்
அத்வேஷம் என்ன பரிகணைனை என்ன பரம சக்தி என்ன
இவ்வளவுகளை நிர்ஹேதுக கிருபையாலே தமக்கு பிறப்பித்து தம்மோடு கலந்த படியைக் கண்டு
அத்வேஷாதிகள் உடையாரோடும் தம்மோடு கலந்தால் போலே கலக்கும் ஸ்வ பாவன் என்றும் அவர்களுக்கு
அவ்வளவுகளைப் பிறப்பிப்பான் அவனே -என்றும் அனுசந்தித்து நிர் வ்ருத்தர் ஆகிறார் –
முன்புள்ளார் -கீழ் பெற்ற பேற்றை அனுசந்தித்து நிர் வ்ருத்தர் ஆகிறார் -என்னும் அளவே யாயிற்று நிர்வஹிப்பது
பட்டர் தம்முடைய வைபவம் எல்லாம் காட்டும் திருவாய்மொழி யாயிற்று இது –

—————————————————————————————————–

தன்னுடைய ஸுந்தர்ய சீலாதிகளைக் காட்டி தம்மை அநந்யார்ஹர் ஆக்கி உன்மஸ்த கரசமாக கலந்த கலவியை அனுபாஷிக்கிறார்
இது திருவாய் மொழிக்கு சங்க்ரஹம் -முதல் பாட்டு என்னவுமாம் —

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

பொருமா நீள் படை –
பொரு – விரோதிகளான நமுசி பிரப்ருதிகள் மேலே விழா நிற்கை –
பரதஸ்ய வதே தோஷம் நாஹம் பஸ்யாமி ராகவ –
தன்னிலே பொருகை-என்றுமாம்
மா -ஆஸ்ரித விஷயத்தில் ஈஸ்வரன் நெகிழ நின்றாலும் விடாத ஓரத்தின் மிகுதியைச் சொல்லுகிறது –
நீள் படை -ஈஸ்வரன் வளருகின்ற போது ஓக்க வளரா நின்றுள்ள திவ்ய ஆயுதமான
ஆழி சங்கத்தொடு-கூட –
த்ரி விக்ரம க்ரமாக்ராந்த த்ரை லோக்யஸ்ப்புரதாயத்த
இடங்கை வலம் பூரி நின்று ஆர்ப்ப
மா நீள் படை என்று -மிக்க வளர்த்தியைச் சொல்லிற்று ஆகவுமாம்
திருமா நீள் கழல் –
திரு சந்தக்கரத்தாங்க கல்பக-என்கிற ஐஸ்வர்ய ஸூ சகமான சிஹனங்களை உடைத்தாகை
மா -அவன் தன்னிலும் பூஜ்யமாய் இருக்காய்
நீள் கழல் -ஆசா லேஸம் உடையார் அளவும் வளரும் திருவடிகள்
ஏழ் உலகும் தொழ-
அஞ்ஞரோடு சர்வஞ்ஞரோடு வாசி அற தொழும் படி திருவடிகள் தலையிலே வந்து இருக்கையாலே தொழுதார்களாம் இத்தனை இறே
ஒரு –
அத்விதீயமாய் இருக்கை-
இன்னமும் தானே அவ்வடிவை கொள்ள வேணும் என்னிலும் அப்படி வாயாது இருக்கை
மாணிக் குறளாகி –
மாணி-அர்த்தித்வத்திலே தகண் ஏறின படி -மாண்-அழகு
குறளாகி -சேர்ப்பால் போலே சுருங்கின தனையும் போக்யமாய் இருக்கை
நிமிர்ந்த –
அபேக்ஷிதம் பெற்ற ப்ரீதியாலே வளர்ந்த படி
அக்-கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே-
குளிர்ந்து பெரு விலையனான ரத்னம் போலே அவ் வழகை நிர்ஹேதுகமாக என் கண்ணுக்கு விஷயம் ஆக்கினான்
மயர்வற மதி நலம் அருள பெற்ற தம்மால் பரிச்சேதிக்க ஒண்ணாமையாலே அக் கரு மாணிக்கம் -என்கிறார்
கண் -என்று இடமாய் எனக்கு ஸூ லபன் என்னவுமாம் –

————————————————————————————————–

பரி கணனையோடு பரம பக்தியோடு வாசி அற முகம் கொடுக்கும் என்று அக்குணத்திலே ஈடுபடுகிறார் –

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
அவனைப் பெறா விடில் தரியாதானாம் படியான பரம பக்தியை உடையனாய்க் கொண்டு தொழில் கண் வட்டத்தே விடாதே நிற்கும் –
இத்தலைக்காக நிற்கை யன்றிக்கே-தன் செல்லாமையோடே ஸ்தாவர பிரதிஷ்டை யாய் நிற்கும்
எண்ணிலும் வரும்-
கட படாதிகள் உடைய அஸ்தி பாவத்தை இசையும் -ஈசுவரனுடைய அஸ்தி பாவத்தை இசையான்-
பஞ்ச விம்சதி தத்துவத்தையும் இசையும் -ஷட் விம்சகளை இசையான் –
நம்முடைய உண்மையை இசைந்தான் இ றே என்று அப்போதே வந்து முகம் காட்டும்
இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும் என்னவுமாம்
என்னினி வேண்டுவம்-
சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை –
வேல் வெட்டிப் பிள்ளை இதிகாசம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்-
நல் வாயுவும் -என்றது தாரகத்வத்தைப் பற்ற –
விண்ணுமாய் விரியும் -ஆய் -அந்தராத்மாவாய்
விரியும் -பஹுஸ்யாம் என்கிறபடி விஸ்திருதன் ஆகா நிற்கும்
எம் பிரானையே-
ஜகத் காரணத்வ பிரயுக்தமான உபகாரத்தை நினைத்தல்-
சர்வேஸ்வரன் -என்னுதல்-
எம்பிரானை என்கிற த்வதீயையை பிரதமை யாக்கி -எம்பிரான் -கண்ணுள்ளே நிற்கும் -என்னுதல் –

————————————————————————————————–

அவனுடைய இந்நீர்மைக்கு அடியானை லஷ்மீ சம்பந்தத்தை அனுசந்தித்து இவ்விஷயத்தை அனுபவிக்கப் பாராய் என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

எம்பிரானை –
கீழ் பாட்டில் அவன் நீர்மையை அனுசந்தித்து என்னாயன் என்கிறார்
எந்தை தந்தை தந்தைக்கும்-தம்பிரானைத்
தம் அளவேயாய் அடி அற்று இருக்கை அன்றிக்கே-என் குடி நாயன் -என்கிறார்
சமாசத்ரிய ஜெகந்நாதம் மமபூர்வேபிதா மஹா விபஷாபஹ்ருதம் ராஜ்ய மவாபு புருஷோத்தமம்
தண் தாமரைக் கண்ணனை
பிரயோஜன நிரபேஷமாக புகழுகிறார் -என்று உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணாலே குளிர நோக்கினான்
இந்நோக்குக்கு அடி சொல்லுகிறது மேல்
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை-
வஞ்சிக் கொம்பு போலேயும் அரவு போலவும் -நுண்ணியதாய் நேரிதான இடையை உடைய பெரிய பிராட்டியாரை திரு மார்விலே உடையவன்
அரவு என்கிறத்தை அராவு என்று நீட்டிக் கிடக்கிறது
நச்சராவணை -என்னக் கடவது இ றே
பணம் போலே நிதம்ப பிரதேசம் -கொம்பை -லகூ கரியா நின்றுள்ள இடை என்றுமாம்
எம்பிரானைத் –
இச் சேர்த்தி அழகைக் கண்டு எம்பிரானை என்கிறார்
தொழாய் –
இவர் தொழும் வஸ்து மிதுனமாய் இ றே இருப்பது
மட நெஞ்சமே-
தொழுது எழு என்னலாம் படி பவ்யமான நெஞ்சே

————————————————————————————————–

தாம் சொன்ன போதே மேல் விழுந்து தொழுத வாறே திரு உள்ளத்தைக் கொண்டாடி நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி
நான் விஸ்லேஷிக்கும் சமயத்திலும் நீ விடாதே கொள்-என்கிறார் –

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

நெஞ்சமே நல்லை நல்லை –
சொன்ன காரியத்தை உகந்து செய்த சத் புத்திரர்களை உகக்குமா போலே உகக்கிறார் -என்னைக் கொண்டாடுகிறது என் என்னில்
உன்னைப் பெற்றால்-என் செய்யோம் –
பலம் தருகைக்கு ஈஸ்வரனுண்டு
விலக்காமைக்கு நீயும் உண்டு
இனிச் செய்ய முடியாதது உண்டோ –
இனி என்ன குறைவினம்-
உன்னைப் பெற்றால் என் செய்யோம் என்று சாத்திய அம்சம் உண்டாக சொன்ன இடம் தப்பச் சொன்னோம்
உன் பக்கல் விலக்காத அளவே பற்றாசாக அவன் கார்யம் செய்வானாக இருந்தால் இனி சாத்திய அம்சம் உண்டோ
அவன் உபாய பாவம் நித்ய நிரபேஷம் ஆனால் சாத்திய அம்சம் தானுண்டோ
எனக்கு க்ருத்யம்சம் யாது -என்ன
எனக்கு வள வேழ் உலகு பின்னாட்டுவது ஒரு போது உண்டு
அப்போதும் நீ விடாதே கொள்
மைந்தனை –
நித்ய யவ் வன ஸ்வ பாவனை
மலராள் மணவாளனைத்-
நிரதிசய போக்யையாய் இருக்கிற பிராட்டி செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவனை
துஞ்சும் போதும்
அயோக்கியன் என்று அகலும் போதும் –
விஸ்லேஷம் விநாச பர்யாயம் -என்கை
ந ச சீதா த்வயா ஹீ நா யஸ்த்வயா சக
விடாது தொடர் –
நான் விடிலும் நீ விடாதே மேல் விழுந்து அனுபவிக்கப் பார்
அவள் விடிலும் நீ தொடர பார்
கண்டாய்-
இவ் வேப்பங்குடி நீரை அன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்கிறது
பிராட்டி அகலகில்லேன் இறையும்-என்கிற விஷயத்தை அன்றோ நான் அனுபவிக்கச் சொல்கிறது –

—————————————————————————————————-

எண்ணிலும் வரும் -என்கிறது தானும் மிகை யானபடி கண்டாயே -என்று அவன் படியை மூதலிக்கிறார் –

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

கண்டாய் நெஞ்சே –
சைதன்யத்துக்கு ப்ரசரணை த்வாரமான உனக்கு தெரியாமை உண்டோ
கருமங்கள் வாய்க்கின்று-
பிரயோஜனங்கள் நேர்படப் புக்கால்
ஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
எண்ணிலும் வரும் -என்று இது மிகையாம் படி வந்து பலித்துக் கொண்டு நிற்கிறபடி கண்டாயே
இயலுகை பலிக்கை
இப்படி பலிக்க வேறே எங்கே கண்டோம் கண்டோம் என்னில்
உண்டானை உலகேழும்
அபேஷா நிரபேஷமாக ஆபத்தையே பற்ற திரு வயிற்றிலே லோகங்களை வைத்து ரஷித்த படி
ஓர் மூவடி-கொண்டானைக் –
மஹா பாலியல் வந்த இடரைப் போக்க வேணும் என்ற அத்தனை போக்கி திருவடிகளைத் தலையிலே வந்து இருக்க எண்ணினார் உண்டோ
உலகு ஏழும் என்கிற இடம் இரண்டு இடத்திலும் கூட்டிக் கொள்ளக் கடவது –
கண்டு கொண்டனை நீயுமே-
பழம் கிணறு கண் வருகிறது என் –
நீ அவனைக் காண எங்கே எண்ணினாய்
பிரளய ஆபத்தில் பிரதி கூலிகைக்கு பரிகரம் இல்லை
பிரதி கூலிகைக்கும் பரிகரம் உடைய நீ யன்றோ பெற்றாய் –

——————————————————————————————————–

நான் விடாது ஒழிகிறேன்-அவன் விடில் செய்வது என் என்னில் -நாம் அயோக்யதை பார்த்து விடாது ஒழியும் அத்தனை வேண்டுவது
நம் இசைவையே பற்றி அவன் ஒரு காலும் விடான் என்கிறார்-

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

நீயும் நானும் –
தொழு என்று சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழச் சொல்லுகிற நானும் –
பிரதி கூலித்துப் போந்த நீயும் -உன்னைப் பின் சென்ற நீயும்
இந்நேர் நிற்கில்-
ஓர் எண் தானும் இன்றியே நிற்கில்
ந நமேயம் என்கிற நிர்பந்தத்தை தவிர பெறில்
இப்படி நின்றால் அவன் செய்வது என் என்னில் –
மேல் மற்றோர்-நோயும் சார் கொடான் –
மேல் உள்ள காலம் ஒரு நோயும் சார விட்டுக் கொடான்
முன்பு பண்ணின பாப பல அனுபவம் பண்ண விட்டுக் கொடான்
விஷய பிரவணனாக விடான்
பிரயோஜ நாந்தரங்களைக் கொண்டு அகல விடான்
அயோக்கியன் என்று அகல விடான்
உபாயாந்தரங்களைப் பற்றி அகல விடான்
நெஞ்சமே சொன்னேன்-
நான் உன்னை ஆராயாதே உன் அநர்த்தத்தைப் பார்த்து உனக்கு இவ்வர்த்தத்தை சொல்லிக் கொடு நின்றேன்
பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்று இருக்கைக்கு திருக் கோஷ்ட்டியூர் நம்பியோடே ஒப்பர்
சொல்லிச் சமைந்து பதண் பதண் என்கைக்கு ஒரு கீதாசார்யனோடு ஒப்பர்
இதந்தே நாத பஸ்காய
சொன்னேன் –
உபதேசத்தில் குறை இல்லை
பிரதி பத்தி பண்ணாது ஒழியில் இழக்கும் அத்தனை
இப்படி விட்டுக் கூடாது ஒழி வது சாஸ்த்ர முகத்தாலேயே -தன் ஸ்வா தந்தர்யத்தாலேயோ என்னில்
தாயும் தந்தையுமாய் –
பிரிய காமனுமாய் ஹித காமனுமாய்
அப்படி யாவதும் தன் நிலை குலையாதே நின்றோ வென்னில்
இவ்வுலகினில்-வாயுமீசன் –
தன் வாசி அறியாதே சம்சாரத்தில் தன்னை அழிய மாறி வந்து அவதரித்து
ஈசன் –
இப்படி வந்து அவதரிக்கைக்கு ஹேது-ப்ராப்தனாகை –
இங்கே வந்து அவதரித்து ஈரரசு தவிர்க்கையாலே ஈசன் ஆனான் என்னவுமாம்
மணி வண்ணன் எந்தையே –
வடிவைக் காட்டி விஷயாந்தர பிறாவண்யத்தைத் தவிர்த்து -தன் சேஷித்வத்தைக் காட்டி என் சேஷத்வத்தை நிலை நிறுத்தினவன்
தாயும் தந்தையாய் இவ்வுலகினில் வாயும் மணி வண்ணனாய் எந்தையான ஈசன் நீயும் நானும் இந்நேர் நிற்கில்
மேல் மற்றோர் நோயும் சார் கொடான் -நெஞ்சமே சொன்னேன் -சத்யம் சத்யம் -என்கிறபடி இது மெய் –

——————————————————————————————————

மணி வண்ணன் எந்தை என்று அவனுடைய வை லக்ஷண்யத்தையும் ஸ்வ நிகர்ஷத்தையும் அனுசந்தித்து அகலுகிறார்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் -என்றதுவே வந்து பலித்தபடி –

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

எந்தையே என்றும் –
எனக்கு பரிவன் ஆனவனே என்றும் -பரிவனாம் அளவே அன்றிக்கே
எம்பெருமான் என்றும்-
எனக்கு வகுத்த ஸ்வாமியே என்றும் –
சிந்தையுள் வைப்பன்-
விஷயாந்தர ப்ரவணமான நெஞ்சிலே வைப்பன்
நெஞ்சிலே நினைத்து ரகஸ்ய பிராயச் சித்தம் பண்ணி விடும் அளவன்றிக்கே
சொல்லுவன்-
இவன் பேசும் அளவேயோஇவ்விஷயம் என்று கை விடும் படி பிறர் கேட்க்கச் சொல்லா நின்றேன்
பாவியேன்-
வி லக்ஷண போக்யமான இவ்விஷயத்தை அழிக்கைக்கு நான் ஒரு பாப கர்மா உண்டாவதே
தமோ அபி பூதியாலே அகத்திலே அக்னி ப்ரஷே பத்தைப் பண்ணி சத்வம் தலை எடுத்த வாறே அநுதபிக்குமா போலே பாவியேன் என்கிறார் –
நீர் இங்கனே சொல்லுவான் என் -பகவத் விஷயத்தை நினைக்கையும் சொல்லுகையும் பாப பலமோ என்னில் –
புரோடாசத்தை நாய் தீண்டினால் போலே வி லக்ஷணருடைய பாக்யத்தை அளிக்கை பாப பலம் அன்றோ
எந்தை எம்பெருமான் என்று வானவர்-சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –
நினையா விடில் அரை க்ஷணம் தரிக்க மாட்டாத நித்ய ஸூரிகள் நினைத்து -அவ்வனுபவம் வழிந்து
எந்தை எம்பெருமான் என்று சொல்ல பாத்தாலே ஸ்ரீ மானாய் மதிப்பன் ஆனவனை நான் நினைத்தும் பேசியும் ரிக்தனுமாக்கி மதிப்பையும் கெடுத்தேன் –

—————————————————————————————————–

அநர்ஹன்-என்று அகன்ற நான் யாதிருச்சிக பகவன் நாம ஸ்ரவணத்தால் சிதிலனாய் அகல மாட்டு கிறி லேன்
அவனும் என்னை விட மாட்டு கிறிலன் -இது ஒரு விஸ்மயம் என் -என்கிறார் –

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

செல்வ நாரணன் –
ஆழ்வார் பரிசரத்தில் லஷ்மீ சம்பந்தம் ஒழிய ப்ரஹ்மச்சாரி எம்பெருமானைப் பற்றுவார் இல்லாமையால்
-ஸ்ரீ மன் நாராயணன் என்று யாதிருச்சிகமாக சொன்னார்கள்
என்ற சொல் கேட்டலும்-
இச் சப்தம் செவிப்பட்ட அளவிலே அர்த்த அனுசந்தானம் பண்ணிற்று இலேன் -பாவித்து இலேன்
விஷ ஹரண மந்த்ரம் போலே அர்த்த அனுசந்தானம் ஒழியவே பலித்தது
மல்கும் கண் பனி –
என்னை ஒழியவே கண்ணானது நீர் மல்கத் தொடங்கிற்று
நாடுவன் –
நெஞ்சானது -எங்குற்றாய் எம்பெருமான் -என்று தேட த் தொடங்கிற்று
மாயமே-
அல்லேன் என்கைக்கு நான் வேண்டிற்று
ஆவேன் என்கைக்கு நான் வேண்டிற்று இலேன்
இது ஒரு ஆச்சர்யம் என் என்கிறார்
அவன் செய்கிறது என் என்னில்
அல்லும் நன்பகலும் –
தம்முடைய அபிசந்தி ஒழிய அவன் மேல் விழுகிற காலம் ஆகையால் நன்றான இரவும் நன்றான பகலும்
இடைவீடின்றி-
நான் ஒரு கால் தேடி விடா நின்றேன்
அவன் இடை விடாதே ஸ் நேஹியா நின்றான்
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –
அபூரணனான என்னை பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்
நம்பி -ஒருத்தனாக நினைத்து
நம்பி அல்லும் பகலும் வீடின்றி நல்கி நம்பி என்னை விடான் மாயமே
ஆழ்வான் -நம்பியே என்று ஸ்வரத இவனையே பூர்ணன் என்பது என்பர் –

—————————————————————————————————–

அவன் விடாது ஒழிந்தால் நீர் அந்நிய பரராய் அவனை மறந்தால் ஆகாதோ -என்னில் –
அவன் படிகளைக் கண்டு வைத்து மறக்கப் போமோ -என்கிறார் –

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ–1-10-9-

நம்பியைத்
கல்யாண குண பரி பூர்ணணை
பரம பதத்தில் குணங்களுக்கு ஸத்பாவமே உள்ளது
இங்கே குணங்களுக்கு பூர்த்தி
தென் குறுங்குடி நின்ற-
கலங்கா பெரு நகரத்தை கலவிருக்கையாக உடையவன் -அத்தை விட்டு என்னைப் பற்ற
திருக் குறுங்குடியிலே அவசர பிரதீஷனாய்க் கொண்டு ஸ்தாவரப் பிரதிஷடையாய் நின்றவனை
அச்-செம்பொனே திகழும் திரு மூர்த்தியை-
ஓட வைத்த செம்பொன் போலே நிரவதிக தேஜோ ரூபமாய் எல்லாருடைய வாங்மனஸ் ஸூக்களாலும்
பரிச்சேதிக்க ஒண்ணாத திவ்ய மங்கள விக்கிரகத்தை உடையவனை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை-
ஆக்கரான ப்ரஹ்மாதிகள் அன்றிக்கே அவ்வருக்கான நித்ய ஸூ ரிகளுக்கு சத்தா ஹேதுவாய்
அவர்களுக்கு அதி மநோ ஹரமுமான தேஜஸையும் உடையவனை
அவ்வடிவுக்கு போக்தாக்கள் இ றே அவர்கள்
எம்பிரானை –
நித்ய ஸூ ரிகளுக்கு போலே தானே தாரகமாம் படி எனக்கு உபகரித்தவனை
என் சொல்லி மறப்பேனோ-
குண ஹீனன் என்று மறக்கவோ
அஸந்நிஹிதன் என்று மறக்கவோ
வடிவில் பசை இல்லை என்று மறக்கவோ
மதிப்பன் அல்லன் என்று மறக்கவோ
எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ –

—————————————————————————————————

அவன் மறவாமைக்கு கிருஷி பண்ணா நிற்க -என்னாலே மறக்கப் போமோ என்கிறார் –

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறப்பு என்றும் ஞானம் என்றும் ஒன்றும் அறிந்திலேன் நான்
ஒரு சேதனனாய் நினைத்தேனோ மறக்கைக்கு
நினைவு நான் அடியாக வரில் அன்றோ மறுப்பும் நான் அடியாக வருவது -அசித் கல்பன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு-மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை-
அறிவுக்கு அடைவு இன்றிக்கே இருக்கிற என் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து
மறக்கக் கூடும் என்று பார்த்து
அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு
ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி
என்னுள்ளே ஸ்தாவர பிரதிஷடையாய் இருந்தவனை
புறம்பு ஒரு அந்நிய பரதை தோற்ற இருக்கிறிலன்
மறப்பனோ இனி –
மறவாமைக்கு பரிஹாரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ
கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதாப் போலே இ றே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்
யான் –
அநாதி காலம் விஸ்மரித்துப் போந்த நான்
என் மணியையே-
பெரு விலையனாய் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து புகரை உடைத்தான் நீல மணி போலே இருக்கிற தன்னை
எனக்கு அனுபவ யோக்யமாம் படி பண்ணி வைத்த பின்பு நான் அவனை அநாதரிப்பேனோ

——————————————————————————————————-

நிகமத்தில் இப்பத்தும் கற்பார் நிரதிசய புருஷார்த்தமான கைங்கர்யத்தை பெறுவார் என்கிறார் –

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

மணியை-
தனக்கு முடிந்து ஆளலாம் படி ஸூ லெபனான் படியைச் சொல்லுகிறார் –
வானவர் கண்ணனைத்-
நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகானான மேன்மையை உடையவனை
தன்னதோர் -அணியை –
தனக்குத் தானே ஆபரணமாக அழகை உடையவனை
தென் குறுங்குடி என்கிற இடம் ஸுலப்யம்
உம்பர் வானவர் அம் சோதியை -என்கிற இடம் மேன்மை
செம் பொன்னே திகழும் திரு மூர்த்தி -என்கிற இடம் அழகு
ஸுலப்யமும் மதிப்பும் அழகும் கூடின பசும் கூட்டம் பகவத் தத்வம்
தென் குருகூர்ச் சடகோபன்
சொல் -பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
மிடைந்த சொல் -என்கிறபடியே சொற்கள் பணி செய்த ஆயிரம் என்னுதல்
சொல்லாலே பணி செய்த ஆயிரம் என்னுதல் -வாசிகமான அடிமையை சொல்லுதல்
உடன் கற்பரேல்-
சாபிப்ராயமாக கற்பார் ஆகில்
தணிவிலர் கற்பரேல்-
தணிவாகிறது ஆறுதல் -ஸ்ரத்தாநராயக் கற்பார் ஆகில்
கல்வி வாயுமே-
கல்வி தானே பிரயோஜனம் என்னுதல்
கல்வியின் பயனான கைங்கர்ய சித்தி உண்டாகும் என்னுதல்

—————————————————————————————————————

சர்வ ஸ்மாத் பரன் என்றார்
பஜ நீயன் என்றார்
அவன் தான் ஸூ லபன் என்றார்
ஸூலபன் ஆனவன் அபராத சஹன் என்றார்
அவன் சீலவான் என்றார்
ஸ்வாராதன் என்றார்
நிரதிசய போக்யன் என்றார்
அவனுடைய ஆர்ஜவ குணம் சொன்னார்
சாத்ம்ய போக ப்ரதன் என்றார்
இப்படி ஏவம் பூதனானவன் நிர்ஹேதுகமாக விஷயீ கரிப்பான் ஒருவன் என்றார்
ஆகையால் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து தலைக்கட்டினார் –

————————————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: