திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-8-

நித்யரும் முக்தரும் பத்தருமான த்ரிவித சேதன வர்க்கத்தோடும் தனக்கு பரிமாற வேண்டினால் நாநா ருசிகளான அவர்களைத் தன்னளவில்
பவ்யராக்குகை அரிதாகையாலே -அதில் காட்டில் மேட்டில் நீரை வருந்தி ஏற்றுமா போலே தன ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களை சங்கோசித்து
தன்னை அவர்களுக்கு பங்காக நியமித்து அவர்களோடே பரிமாறும் என்று -அவனுடைய ஆர்ஜவ குணம் சொல்லுகிறது –
அதாகிறது அவர்கள் போன வழி செவ்வை வழி யாம் படி தன்னைத் திருத்திப் பரிமாறுகை –

—————————————————————————————–

நித்ய சித்தரோடு பரிமாறும் படி சொல்லுகிறது –

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

ஓடும் புள்ளேறி –
புள்ளேறி ஓடும் -பெரிய திருவடியை மேற்கொண்டு சஞ்சரியா நிற்கும்
மஹிஷிக்கு ஸ்தன பரிரம்பணம் போலே தன்னை மேற்கொள்ளுகை வாஹனத்துக்கு அபேக்ஷிதமாய் இருக்கை –
மேற்கொள்ளும் அது தான் -அங்கு உள்ளார்க்கு காட்சி கொடுக்கைக்கும் -அவனுடைய ஸ்வரூப லாபத்துக்குமாய் இருக்கும்
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிணங்க ஸோபிநா
சூடும் தண் துழாய்
தண் துழாய் சூடும் -தன் பக்கல் செவ்வி -திருக் குழலிலே யாக வேணும் -என்னும் அளவிலே வளையமாக வைக்கும்
சின்மயைஸ் ஸ்வ ப்ரகாசச்சை -இங்கு திர்யக் ஸ்தாவர ஜங்கமங்கள் பாப பலமாய் -ஞான சங்கோச ஹேதுவாய் இருக்கும்
அங்கு இவை உண்டாகுகைக்கு அடி ஏன் -என்னில் அந்தப்புரத்தில் கூனர் குறளராய் வர்த்திக்குமா போலே
இச்சையால் ஞான பலமாகப் பரிக்ரஹித்த சரீரங்கள்
சம்சாரிகளுக்கு அன்றோ ருசி பேதமும் செவ்வைக் கேடும் உள்ளது
நித்ய ஸூ ரிகளுக்கு விஷயம் ஒன்றாகையாலே ருசி பேதமும் இல்லை -செவ்வைக் கேடும் இல்லை
அவர்களோடு செவ்வியனாக பரிமாறுகை யாவது என் என்னில் -எல்லாருக்கும் விஷயம் ஒன்றே ஆகிலும் –
அவ்விஷயம் தன்னில் வ்ருத்தி பேதத்தால் ருசி பேதங்கள் உண்டாம் –
நீடு நின்றவை
கர்ம அநு கூலமாகில் இ றே-அநித்தியம் ஆவது –
ஸ்வரூபம் அநு கூலம் ஆகையால் நித்யமாகச் செல்லா நிற்கும் -அவனுக்கு இவர்களை ஒழியச் செல்லாது -இவர்களுக்கும் அவனை ஒழியச் செல்லாது
புள் என்றும் துழாய் என்றும் சொல்லுகிற படியால் -அவை என்கிறது
ஆடும்
அவற்றோடு பரிமாறும் என்னும் இடத்தில் -ஆடும் -என்கிறது -இரண்டு தலைக்கும் போக ரூபமாய் இருக்கையாலே
அம்மானே
நித்ய ஸூ ரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் சாதாரணமான ஸ்வாமித்வம் உண்டாய் இருக்கச் செய்தேயும்
இப்படி தனித்தனியே அசாதாரணமாய் பரிமாறுகை
இப்படி பரிமாறுகைக்கு நிபந்தம் சொல்லுகிறது என்னவுமாம்
நித்ய ஸூ ரிகளுடைய தாரகாதிகளும் தன்நினைவிலே யாம்படியான ஏற்றத்தை உடையவன் என்றுமாம் –

——————————————————————————————————————

லீலா விபூதியில் ஆஸ்ரிதருடைய விரோதிகளை போக்கி அவர்களோடு பரிமாறும் படி சொல்லுகிறது

அம்மானாய் பின்னும் எம் மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2-

அம்மானாய்
சர்வாதிகனாய் வைத்து
பின்னும்
அதன் மேலே
எம் மாண்பும் ஆனான்
எல்லா அவதாரங்களையும் உடையான் ஆனான்
மாண்பு என்று அழகு -பரத்வத்தில் காட்டில் அவதாரங்களில் அழகு மிக்கு இருக்கை -ச உஸ்ரேயான் பவதி ஜாயமான
வெம்மா வாய் கீண்ட-
வெவ்விதான மா உண்டு -கேசி -அதனுடைய வாயைக் கிழித்த
தற்காலத்தில் கேசியினுடைய வெம்மை இப்போது ஸ்ம்ருதி விஷயமாக துணுக் என்கிறது
விவ்ரு தாஸ்ய -இதை
செம்மா கண்ணனே-
அநாயாசேன பிளந்த ப்ரீதியாலே சிவந்து மலர்ந்த திருக் கண்களை உடையவனை
அம்மானாய் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணன் எம் மாண்பும் ஆனான் –

————————————————————————————————————–

இரட்டைப் பிள்ளை பெற்ற தாயார் இருவருக்கும் பாங்காக கிடந்து முலை கொடுக்குமா போலே-பத்த முக்த கோடி த்வயத்துக்கும்
முகம் கொடுக்கைக்காக திருமலையில் வந்து நின்று அருளினான் என்கிறார் –

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
சம்சாரிகளோடு நித்ய ஸூ ரிகளோடு வாசி இல்லை -அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு
கண்ணாவான்
கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்
கண் -என்று நிர்வாஹகன் -சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் -என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்
தண்ணார் வேங்கடம்
குளிர் மிக்கு இருந்துள்ள திருமலை
ரக்ஷகனுக்கு ரஷ்ய வர்க்கம் பெறாமையால் வரும் தாபத்தையும் -இங்கு உள்ளார்க்கு ரக்ஷகனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் தீர்க்க வற்றாய் இருக்கை
விண்ணோர் வெற்பனே
நித்ய விபூதியின் மேன்மையையும் திருமலையில் நிற்கிற நீர்மையையும் ஒரு போகியாக அனுபவித்துக் கொண்டு
விடாதே படுகாடு கிடக்கையாலே-விண்ணோர் வெற்பன் -என்கிறார்
சம்சாரிகள் மேன்மையைக் கண்டு அறியாமையால் நீர்மையையும் அறியார்கள்
மண்ணோர் விண்ணோர்க்கு -என்கிற இடம் ஈஸ்வர அபிப்ராயத்தாலே
நின்ற வேங்கடம் நீள் நிலத்தில் உள்ளது -என்று திருமலை சம்சாரிகளுக்கு என்னும் இடம் சித்தம்
விண்ணோர் வெற்பு -என்கிற இடம் இறே சாத்தியம்
விண்ணோர் வெற்பன் என்கிற இடம் நித்ய ஸூரிகள் அபிப்ராயத்தாலே
விண்ணோர் எங்களது -என்று அபிமானிக்கும் படியான தண்ணார் வேங்கட வெற்பை உடையவன் –

—————————————————————————————————————-

அவ்வார்ஜவ குணம் தம்மளவில் வர பளித்த படியைச் சொல்லுகிறார் –

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே -1-8-4-

வெற்பை ஓன்று எடுத்து –
பசுக்களும் இடையரும் தொலைய வர்ஷிக்கப் புக்கவாறே-கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்து ரஷித்த படி
கீழ் ஒரு மலையை ஆதாரமாகக் கொண்டு ரஷித்த படியைச் சொல்லிற்று
இப்போது ஒரு மலையை ஆதேயமாகக் கொண்டு ரஷித்த படி சொல்லுகிறது
ஏழு வயசிலே ஏழு நாள் ஒருபடிப்பட மலையை எடுத்து
ரஷித்த இடத்தில் இளைப்பு உண்டாயிற்று இல்லையோ என்னில்
ஒற்கம் இன்றியே நிற்கும்
பரார்த்தமாக வ்யாபாரிக்கையாலே இளைப்பு இன்றிக்கே நின்றான்
ஒற்க மாவது -ஒல்குதலாய்-அதாவது -ஒடுங்குதலாய் -அதாவது -இளைப்பு -தாது ஷயம் பிறவாவிட்டால் இளைப்பு இல்லை இ றே
அம்மான்
வகுத்த ஸ்வாமி ஆகையால் இளைப்பு இல்லை
பிரஜா ரக்ஷணத்தில் இளைப்பு மாதாவுக்கு உண்டாகாது இ றே
சீர் கற்பன்
அவன் மலையை எடுத்து ரஷித்த அப்போதே நீர்மையையும் அழகையும் வாய் வெருவுவன்
சொல்லுவன் -என்கிற ஸ்தானத்தில் -கற்பன் -என்கிறது குண பிரேரித்தராய் சொன்னார் என்னும் இடம் தோற்றுகிறது
வைகலே
நீடு நின்று நித்ய ஸூ ரிகளுக்கு அதுவே யாத்திரை யானால் போலெ எனக்கும் இதுவே யாத்ரையாய் இருக்கும் –

————————————————————————————————————

நான் அவன் ஸ்வரூபத்தை விட்டு அவன் குணங்களையே விரும்புகிறாப் போலே –
அவனும் என்னை விட்டு என் தேஹத்தையே விரும்பா நின்றான் என்கிறார் –

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது மெய் கலந்தானே –1-8-5-

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
கற்பன் வைகலே என்று எனக்கு அவன் குணம் என்றும் தாரகமாய் இருக்குமா போலெ
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யமே அவனுக்கும் நித்ய தாரகம் யாயிற்று என்கிறார்
கை கலந்து உண்டான்
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -என்கிறபடியே குடத்தில் கை புக்கதனையும் வயிறு நிறையும் என்கிற மவ்க்கியத்தாலே-என்னுதல்
கள்ளன் -என்று சிலுகிட்ட வாறே -அவர்கள் தங்களோடு கலந்து அமுது செய்தான் என்னுதல்
ஓர் இளம்பனும் ஓர் சதிரனும் களவு கண்டார்கள் -என்ற பட்டர் கதையை ஸ்மரிப்பது
அபி நிவேசத்தால் இரண்டு கையாலேயும் அமுது செய்தான் என்னுதல்
கை வாசி அறியாத மவ்க்கியத்தாலும் அபி நிவேசத்தாலும்
பொய் கலவாது மெய் கலந்தானே
வெண்ணெய்யில் பண்ணின விருப்பத்தில் பொய் இல்லாதப்போலே கிடீர் என் உடம்பில் பண்ணுகிற விருப்பமும்
அவன் மேல் விழ-தாம் மேன்மையைக் கண்டு இறாய்க்கிறார் ஆயிற்று
அவன் மேல் விழுகிறதும் இத்தாலே யாயிற்று
இந்நின்ற நீர்மை என்று நான் அநாதரிக்கிற சரீரமும் இவனுக்கு கலக்கைக்கு விஷயம் ஆவதே

————————————————————————————————————

தேஹத்து அளவன்றிக்கே -என்னை அநந்யார்ஹம் ஆக்கினார்-என்கிறார் –

கலந்து என்னாவி நலம் கொள் நாதன்
புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே –1-8-6-

கலந்து
என்னோடே ஒரு நீராகக் கலந்து
என்னாவி நலம் கொள் நாதன்
என் ஆத்மாவினுடைய நலத்தை -நற்சீவனைக் கொண்டான்
நாதன்
என்னை ஆளும் கொண்டு -என்கிறபடியே தன்னை ஒழியச் செல்லாமையை விளைத்து
நான் எனக்கு உரியேனாய் இருக்கிற நிலையைத் தவிர்த்தான்
தாம் அகப்பட்ட படிக்கு மஹா பள்ளியை நிதர்சனமாகச் சொல்லுகிறார்
புலன் கொள் மாணாய்
ஸர்வேந்த்ரிய அபஹார ஷமமான வடிவைக் கொண்டு
நிலம் கொண்டானே
மஹா பலி-தன்னது -என்று அபிமானித்த பூமியைக் கொண்டான்
அவன் என்னைப் போல் தன்னைக் கொடுத்திலன் -அவன் வடிவிலே தோற்றான் -நான் நீர்மையிலே தோற்றேன் என்கிறார் –

—————————————————————————————————-

தன் பக்கல் உண்டான என்னுடைய மநோ ரதத்தை என் பக்கலிலே தான் பண்ணினான் என்கிறார் –

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து எண் தான் ஆனானே–1-6-7-

கொண்டான் ஏழ் விடை
ஏழு வகைப் பட்ட வ்ருஷபங்களை ஜெயித்தான்
இன்ன படை வீட்டைக் கொண்டான் என்னுமா போலே -கொண்டான் என்றது ஜெயித்தான் என்றபடி
நப்பின்னை பிராட்டியோட்டைக் கலவிக்கு விரோதியைப் போக்கினால் போலே என் விரோதிகளை போக்கி வந்து கலந்தான் என்கை
உண்டான் ஏழ் வையம்
ஜகத்தை எல்லாம் பிரளய ஆபத்தில் தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தான்
பிரளய ஆபத்தில் ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதாப் போலே என்னை ஒழிய தனக்கும் செல்லாத படி இரா நின்றான் என்கை
தண் தாமம் செய்து
தட்பத்தை உடைய தாமம் உண்டு -பரம பதம் -அதில் பண்ணைக் கடவ விருப்பத்தை என் பக்கலிலே பண்ணி தன் விபூதிகனாக என்னை ஆதரித்து என்னவுமாம்
எண் தான் ஆனானே
நான் மநோ ரதித்த படியே எனக்கு கை புகுந்தான் என்னுதல்
என் மநோ ரதத்தை தான் கைக் கொண்டான்
அதாகிறது -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-என்று நான் அத்தேசத்தில் அனுபவிக்க எண்ண
திரு நகரிலேயே வந்து என்னை அனுபவிக்க எண்ணா நிற்கை

—————————————————————————————————————-

என் பக்கல் சங்காதிசயத்தாலே என்னைப் பற்ற அவன் பட்டதுக்கு ஓர் அளவில்லை என்கிறார் –

ஆனானான் ஆயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8-

ஆனானான்
ஆனாயன் ஆனான் -கையிலே கோலைக் கொடுத்து -பசு மேய்த்து வா என்னலாம் படி இடையனாய்ப் பிறந்த மெய்ப்பாடு -அவ்வளவேயோ
ஆயன் மீனோடு ஏனமும்-தான் ஆனான்
சர்வாதிகனான தானே இ றே திர்யக் சஜாதீயன் ஆனான்
அவன் க்ரமத்திலே பிறக்கச் செய்தேயும் -அனுசந்தானத்தில் பதற்றத்தாலே ஏக காலத்திலே இரண்டு அவதாரம் போலே சொல்லுகிறார்
ஆனான்
வடிவும் சொலவும் செயலும் ஜாதிக்கு அடுத்தவையாய் இருக்கை
இதுக்கு ஹேது என் என்னில்
என்னில் தானாய சங்கே –
என் பக்கல் தனக்கு உண்டான சங்காதிசயத்தாலே என்னுதல்
என்னைக் குறித்து தான் பண்ணின அவதாரங்கள் சங்கம் என்கிற மஹா சங்க்யைக்குப் போரும்
என்னில் என்னைக் குறித்து -தானாய தானவை -சங்கே -சங்கத்து அளவே அன்று இ றே

——————————————————————————————

இப்படி அவதரிக்கும் இடத்தில் ஐஸ்வர்யமான சிஹ்னங்களோடே வந்து அவதரிக்கும் என்கிறார் –

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய நங்கள் நாதனே –1-8-9-

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
வெறும் புறத்திலே துவக்க வல்ல கையிலே திவ்ய ஆயுதங்களைத் தரித்தான்
திவ்ய ஆயுதங்கள் எல்லா அவதாரங்களில் உண்டோ என்னில் -எங்கும் உண்டு
ராஜாக்கள் கறுப்பு உடுத்து புறப்பட்டால் அந்தரங்கர் அபேக்ஷித தசையில் வந்து முகம் காட்டுகைக்காக பிரியத் திரிவர்கள்
அது போலே தோற்றாதேயும் நிற்பர்கள்
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி -எண்ணும் இவருக்கு அப்படி இ றே தோற்றுவது
எங்கும் தானாய
தேவாதி ஜாதி பேதங்கள் தோறும் வந்து அவதரிக்கும் –
வியாப்தி ஆகவுமாம்
நங்கள் நாதனே —
நம்மை எழுதிக் கொள்ளுகைக்காக

———————————————————————————————–

இவன் படியைப் பேசும் போது கடல் கிளர்ந்தால் போலே வேதமே பேச வேண்டாவோ என்கிறார் –

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரனே–1-8-10-

நாதன்
சர்வ நியாந்தா வானவன்
ஞாலம் கொள் பாதன்
வசிஷ்ட சண்டாள விபாக ரஹிதமாக எல்லார் தலைகளிலும் திருவடிகளை பரப்பினவன்
என்னம்மான்
இம் மேன்மையையும் நீர்மையையும் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன் –
அதவா
நாதன் –
முதல் பாட்டில் சொன்ன நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவன்
ஞாலம் கொள் பாதன் –
இரண்டாம் பாட்டில் சொன்ன அவதார ஸுலப்யத்தை உடையவன்
என் அம்மான் –
நான் நின்ற நிலையிலே நின்று அனுபவிக்கலாம் படி மூன்றாம் பாட்டில் சொன்ன திருமலையில் வந்து நின்றவன்
ஓதம் போல் கிளர் வேத நீரனே
இவனுடைய இப்படிகளைச் சொல்லப் புக்கால் கடல் கிளர்ந்தால் போலே கிளரா நின்றுள்ள வேதத்தாலே ப்ரதிபாதிக்கப்பட்ட
நீர்மையை உடையவன் -நீர்மை யாகிறது ஆர்ஜவ குணம் –

————————————————————————————————-

நிகமத்தில் இத்திருவாய்மொழி எல்லாத் திருவாய் மொழிகளிலும் ஆராய்ந்து சொல்லப் பட்டது என்கிறார் –

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-

நீர் புரை வண்ணன் சீர்
நீரோடு ஒத்த ஸ்வ பாவத்தை உடையவனுடைய ஆர்ஜவ குணத்தை
புரை -ஒப்பு
வண்ணம் -ஸ்வ பாவம்
நீரை வருந்தி மேட்டிலே ஏற்றினால் போலே சம்சாரிகள் விலங்கிப் போனது தனக்கு வழியாம் படி தான் செவ்வியனாகை
சடகோபன் -நேர்தல்
ஆழ்வார் அருளிச் செய்த -நேர்தல் -சொல்லுதல்
ஆயிரத்து ஓர்தல் இவையே –
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இவை ஓர்ந்து அருளிச் செய்யப் பட்டவை
அதாகிறது -சம்சாரிகள் உடைய அநார்ஜவத்தாலும் இழக்க வேண்டாத படியான அவனுடைய ஆர்ஜவ குணத்தை அனுசந்தித்து அருளிச் செய்கை
அன்றிக்கே
சேதனர்க்கு ஓரப்படுமவை
தம்தாம் செவ்வைக் கேட்டால் இழக்க வேண்டாத படி அவனுடைய ஆர்ஜவ குணத்தை சொல்லப் பட்டவை ஆகையால் -சேதனர்க்கு எப்போதும் அனுசந்தேயம் என்கை
ஆயிரத்திலும் சடகோபன் நீர் புரை வண்ணனுடைய சீரை நேர்ந்த இவை ஓர்தல் –

———————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: