திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -1-8-

முக்தரும் பத்தருமான சேதனர்க்கும் தனக்கும் சம்ச்லேஷம் பிறக்கும் போது இரண்டத் தொரு தலை பவ்யமாக வேணும் –
பவ்யமாம் இடத்தில் அவர்களை திருத்துவதில் காட்டில் தான் அவர்களுக்கு பாங்காகை ஸூகம் ஆகையால்
மேடான ஸ்தலத்துக்கு நீர் அபேக்ஷையானால் விரகாலே நீரை மேட்டில் ஏற்றுமா போலே தன்னுடைய ஸ்வரூப ரூப சேஷ்டிதாதிகளை
சங்கோசித்து அவர்களுக்குத் தன்னைப் பாங்காக்கி அவர்களோடே கலக்கும் என்கிறார் –

—————————————————————————————————————-

நித்ய சித்தரோடே எம்பெருமான் கலக்கும் படி பேசுகிறார் –

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
பெரிய திருவடிக்கு தன்னை வஹிக்கை அபேக்ஷிதம் ஆனால் அவன் மேலே ஏறி சஞ்சரிக்கும்
திருத் துழாய் செவ்வி அழியாமே சூட வேண்டும் தசை அறிந்து சூடும்
நீடு நின்றவை ஆடும் அம்மானே —
சர்வேஸ்வரன் காலம் உள்ள தனையும் மிகவும் அத்தோடு சாதரமாக சம்ச்லேஷிக்கும் –

—————————————————————————————————————–

சம்சாரத்தில் ஸமாச்ரிதர் ஆனாரோடு சம்ச்லேஷிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

அம்மானாய் பின்னும் எம் மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2-

அம்மானாய் பின்னும் எம் மாண்பும் ஆனான்
கீழ்ச சொன்ன நித்ய விபூதியை உடையனாய்
அதன் மேலே எல்லா மாண்பையும் உடையவன் ஆனான்
மாண்பு என்று திருவவதாரங்களை சொல்லுகிறது
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே
கொடியனான கேசியின் வாயை அனாயசேன பிளந்த ப்ரீதியாலே சிவந்து மலர்ந்த திருக் கண்களை உடையான் –

——————————————————————————————————————

பத்த முக்த கோடி த்வயத்தோடும் சம்ச்லேஷிக்கைக்கு ஈடாக திருமலையில் வந்து நின்று அருளினான் -என்கிறார் –

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
சம்சாரிகளுக்கும் நித்ய சித்தருக்கும் -என்றும் கண்ணாகைக்காக
கண்ணாவான் என்றுமாம்
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே —
ரக்ஷணீய ஜந்துக்களுக்கு பிரத்யா சன்னமாய் யாலே ஈஸ்வரனுக்கு சிரமஹரமாய்-
அயர்வறும் அமரர்களுக்கு பரம ப்ராப்யமான திருமலையில் நின்று அருளினான் –

——————————————————————————————————————

கோவர்த்தனம் உத்தரணம் பண்ணினவனுடைய குணத்தை என்றும் அனுபவிப்பேன் என்கிறார் –

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே -1-8-4-

வெற்பை ஓன்று எடுத்து
அப்போதைக்கு எட்டிற்று ஒரு மலை எடுத்து
ஒற்கம் இன்றியே -நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே
இளைப்பு இன்றியே நிற்பதும் செய்து கோவர்த்தன உத்தரண உபகாரத்தாலே ஜகத்தில் உள்ளாரை எல்லாம்
அடிமை கொண்டவனுடைய குணங்களை என்றும் சொல்லுவன்-

————————————————————————————————————-

தன்னுடைய குண கீர்த்தன உபக்ரமத்திலே தம் பக்கல் எம்பெருமான் அபி நிவிஷ்டனான படியை அருளிச் செய்கிறார்-

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது மெய் கலந்தானே –1-8-5-

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
நாள் தோறும் வெண்ணெய் களவு காணப் புக்க
அபி நிவேச அதிசயத்தாலும் மவ்க்கியத்தாலுமாக-இரண்டு கையாலுமாக வெண்ணெய்யை விழுங்குமவன்
பொய் கலவாது மெய் கலந்தானே –
அப்படியே ததேக தாரகனாய்க் கொண்டு என் உடம்பிலே கலந்தான் –

———————————————————————————————————-

தம்மோடு கலந்த எம்பெருமான் தம்மை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட படியை ச நிதர்சனமாகச் சொல்லுகிறார் –

கலந்து என்னாவி நலம் கொள் நாதன்
புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே –1-8-6-

கலந்து என்னாவி நலம் கொள் நாதன்
என்னோடே சம்ச்லேஷித்து என் ஆத்மாவில் நன்மையைக் கொண்டு என்னை ஆளும் கொண்டான்
புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே —
ஸர்வேந்த்ரிய அபஹார ஷமமான குறள் வடிவைக் காட்டி மஹா பலியிடம் நிலம் கொண்டால் போலே –

—————————————————————————————————–

தன் விஷயத்தில் என்னுடைய மநோ ரதத்தை-என் பாக்களில் தான் பண்ணினான் என்கிறார் –

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து எண் தான் ஆனானே–1-6-7-

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதியான எருதுகள் ஏழையும் கொன்றான்
ஜகாத்தை அடையத் திரு வயிற்றிலே வைத்துக் கொண்டான்
இதுக்கு கருத்து -தம்முடைய சம்ச்லேஷ விரோதிகளை போக்கி ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதாப் போலே
தம்மை ஒழிய எம்பெருமானுக்கு செல்லாது என்று
தண் தாமம் செய்து எண் தான் ஆனானே–
பரமபதத்தில் பண்ணும் வியாமோஹத்தை பண்ணி நான் நினைத்த படி செய்தான் என்றுமாம்

——————————————————————————————————–

சர்வேஸ்வரன் என் பக்கல் உண்டான சங்காதிசயத்தாலே-தேவ மனுஷ்யாதி அநேக அவதாரங்களை பண்ணி அருளினான் என்கிறார் –

ஆனானான் ஆயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8-

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து எனக்காகப் பண்ணின திரு வவதாரத்துக்கு எண்ணில்லை என்றும் சொல்லுவர்-

————————————————————————————-

ஆஸ்ரிதரோடு சம்ச்லேஷிக்கைக்காக எங்கும் வந்து திருவவதாரம் பண்ணும் போது
தன்னுடைய ஐஸ்வர்யமான சிஹ்னங்களைக் கொண்டு வந்து திருவவதாரம் பண்ணி அருளும் என்கிறார்

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய நங்கள் நாதனே –1-8-9-

பல இடத்திலும் தேவ மனுஷ்யாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணி அருளி எங்களை வசீகரித்து அடிமை கொண்டவன்
எங்கும் தானாய -வியாப்தி யாகவுமாம்

————————————————————————————————–

எம்பெருமானுடைய படி வேதைக ஸமதி கம்யம்-என்கிறார் –

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரனே–1-8-10-

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
சர்வேஸ்வரனாய் வைத்து த்ரை விக்ரமமான படியைக் காட்டி என்னை அடிமை கொண்டவன்
ஓதம் போல் கிளர் வேத நீரனே–
தன் குண அனுசந்தானத்தாலே ஓதம் போல் கிளரா நின்றுள்ள வேதங்களால் பிரதிபாத்யமான நீர்மை யுடையவன்

——————————————————————————————————

நிகமத்தில் இத்திருவாய்மொழி எல்லாத் திருவாய் மொழிகளிலும் ஆராய்ந்து சொல்லப் பட்டது என்கிறார்

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-

நீர் புரை வண்ணன் சீர்
உபா யஃஞர்க்கு நினைத்த இடத்திலே கொடு போகலான நீரின் தன்மையை உடையவனுடைய குணத்தை
நேர்தல் -சொல்லுகை
ஓர்தல் -ஒப்பன-என்னவுமாம் –

———————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: