திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-7-

பிரவேசம்
சர்வ சேஷியாகையாலே வகுத்தவனாய் –ஸ்ரீ யபதி யாகையாலே சர்வாதிகனுமாய் -ஸூ லபனுமாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனாகையாலே
ஆஸ்ரிதற்கு முகம் கொடுக்கும் சீலனுமாய் -ஆனந்தவஹமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையனாகையாலே நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் –
ஏஷஹ்யேவாநந்தயாதி -என்கிறபடியே தன்னைக் கிட்டினாரை ஆனந்திப்பிக்கும் ஸ்வ பாவனான பஜியா நின்று வைத்து
பலாந்தரத்தை பிரார்த்திக்கிற வர்களை நிந்தித்து -பஜநீயனனவன் தான் வேண்டா -பஜனம் தான் அமையும் -என்று
ஆஸ்ரயனத்தின் உடைய ரச்யதையை அருளிச் செய்கிறார்
அச்ரத்ததாநா புருஷா தர்மஸ் யாச்ய பரந்தப அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு ஸம்சார வர்த்தமநி –
பிரத்யஷாவகமம் ந்ம்தர்யம் ஸூஸூகம் கர்த்துமவ்யயம்-

——————————————————————————

நிரதிசய போக்யனை ஆஸ்ரயித்து வைத்து -ஷூத்ர பிரயோஜனத்தை அபேஷிப்பதே-என்று கேவலரை நிந்தித்து
அவர்கள் சிறுமை பாராதே அவர்கள் அபேஷித்ததைக் கொடுப்பதே -என்று அவன் நீர்மையைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார்

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

பிறவித் துயர் அற-பிறவி என்கிற இது அஞ்சு விகாரங்களுக்கும் உப லஷணம் –
ஜரா மரண மோஷாயா-என்கிற இடத்தில் ஜன்மாதிகளும் கூடுகிறாப் போலே –
ஜன்ம ஜரா மரணாதி சாம்சாரிக துக்கம் அறுகைக்காக
ஞானத்துள் நின்ற –
ஆத்ம ஞான மாத்ரத்திலே நின்று -அதாகிறது சாஸ்திர ஜன்ய ஜ்ஞான மாத்ரத்திலே -என்றபடி –
சுடர் விளக்கம் என்று பலமாகச் சொல்லுகையாலே இங்கு ஜ்ஞான மாத்ரத்தையே சொல்லுகிறது –
எதோ உபாசனம் இ றே பலம்
துறவிச் சுடர் விளக்கம்
துறவி -துறக்கை -சரீர அவசானத்திலே
சுடர் விளக்கம் -ஜ்ஞான குண கமாய் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிற ஆத்மாவினுடைய அசங்குசித தசையை
தலைப் பெய்வார்
கிட்டுவார்
பிறவித் துயர் அற-ஞானத்துள் நின்று -என்று உபாசனம்
துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்கை பலம்
பிரகிருதி நிர்முக்த ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரிக்க வேண்டி இருப்பார் –

அறவனை
தார்மிகனை –
அநந்ய பிரயோஜனரோடு ஒக்க -பிரயோஜ நாந்தர பரரையும் அங்கீ கரித்து அவர்கள் அபேஷித்ததையும் கொடுப்பதே -என்ன தார்மிகனோ என்கிறார்
ஆழிப் படை அந்தணனை
கையும் திரு வாழி யையும் கண்டு அதில் கால் தாழாதே -ஆத்ம அனுபவ விரோதியைப் போக்குகைக்கு உறுப்பான
சுத்தி மாத்ரத்தையே உப ஜீவிப்பதே -என்கிறார்
அழுக்கு அறுக்கும் கூறிய உவளைப் போலேயும் -சாணிச் சாறைப் போலேயும் இ றே அவனை நினைத்து இருப்பது
அந்தணன் -என்று சுத்தி மாத்ரத்தையே நினைக்கிறது
கையும் திரு வாழி யுமான அழகைக் கண்டால் -இன்னார் என்று அறியேன் -என்று முன்னாடி தோற்றாதே இறே தாங்கள் இருப்பது
மறவியை இன்றி மனத்து வைப்பாரே
அவனுடைய போக்யதையும் கண்டு வைத்தும் தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே ஆஸ்ரியியா நிற்பர்களே
மறவியை -மறப்பை-இன்றி -மறப்பு இன்றிக்கே -மறவாதே
அவர்களுக்கும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பதே -என்ன தார்மிகனோ என்று கருத்து
ஒருவன் ஒரு தப்பைச் செய்தால் சம்வதிக்கையும் அரிதாய் இறே நிர்வாஹகனுக்கு இருப்பது –

———————————————————————————–

அநந்ய பிரயோஜனர் திறத்தில் அவன் இருக்கும் படியை ச் சொல்கிறார்

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

வைப்பாம் –
ப்ராப்யமான புருஷார்த்தமாம் –
நினைத்த வகைகள் எல்லாம் அனுபவிக்கைக்கு யோக்யமாம் படி சேமித்து வைக்கும் நிதி போ லே -தன்னை ஆக்கி வைக்கும்
மருந்தாம் –
விரோதியைப் போக்கி போக்த்ருத்வ சக்தியைக் கொடுக்கும் -இத்தால் பிராபகத்வம் சொல்கிறது –
நிர்வாணம் பேஷஜம் -என்னக் கடவது இறே-இப்படி செய்வது ஆர்க்கு என்னில்
அடியாரை
பிரயோஜ நாந்தரத்தைக் கொண்டு அகலாதே-தானே பிரயோஜனமாய் இருக்குமவர்களுக்கு
வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
விஷயங்களில் மூட்டி -ஸ்வ விஸ்லேஷ ஜனகமான மஹா பாபத்தை பண்ணுவிக்கைக்கு சமர்த்தமான
ஸ்ரோத்ராதி இந்த்ரியங்களால் வசிக்கும் படி விட்டுக் கொடான் –
துப்பு -சாமர்த்தியம்
சங்காத் சஞ்சாயதே–இதயாரப்ய–புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்னக் கடவது இறே
அவன் -என்கிறது ஆரை என்னில் –
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து-
எல்லா இடத்திலும் உள்ள எல்லாரிலும் காட்டில் ஆனந்தத்தால் மேற்பட்டு
அப்பாலவன் –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி சத குணி தோத்தர க்ரமத்தாலே ப்ரஹ்ம ஆனந்தம் அளவும் சென்று -அத்தை மனுஷ்ய கோடியில் ஆக்கி
மேல் மேல் கற்ப்பித்துக் கொண்டு ஆனந்தத்தைப் பெருக்கினாலும்-பிரமாணங்களால் வாங்மனஸ் சங்களுக்கு நிலம் அன்று என்று
மீளும்படி அவ்வருகான ஆனந்தத்தை உடையவன்
எங்கள் ஆயர் கொழுந்தே
இப்படி சர்வாதிகனாய் வைத்து -ஆஸ்ரிதற்காக தாழ்வுக்கு எல்லையான இடையூரிலே வந்து பிறந்தவன்
ஆயர் கொழுந்தே
இடையர் ப்ரஹ்மாதிகள் கோடியில் என்னும்படி தாழ்வில் வந்தால் அவர்களுக்கு தலைவன் ஆனவன்
கோபால சஜாதீயனாய் வந்து அவதரித்து -தன் பக்கலிலே நியஸ்த பரரானவரை விஷயங்கள் நலியாமைக்கு அன்றோ

———————————————————————————-

எம்பெருமானைத் தமக்கு இனிதாக புஜியா நிற்கச் செய்தெ சாம்சாரிக சகல துக்கங்களும் போயிற்று என்கிறார் –
ஷூ த்ரமான பிரயோஜனத்துக்காக பற்றினேன் அல்லேன்
அவனைப் பரம பிரயோஜனத்துக்கு உபாயமாகப் பற்றினேன் அல்லேன் –
இனிய விஷயம் என்று அனுபவிக்க இழிந்தேன் -விரோதியானது தானே போகக் கண்டேன் -என்கிறார் –

ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

ஆயர் கொழுந்தாய்
ஆயர் வேராக-தான் கொழுந்தாய் -வேரிலே நோவு உண்டானால் கொழுந்து வாடுமா போலே -அவர்களுக்கு ஒரு நலிவு வரில் தன் முகம் வாடும் என்கை
காட்டிலே உடையார்க்கு அடி கொதித்தால் கிருஷ்ணன் முகம் இறே வாடுவது
அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை
வெண்ணெய் களவு காணப் புக்கு -அகப்பட்டு அவர்கள் எல்லாராலும் புடை உண்ணும் ஆச்சர்ய பூதனை
அவ் ஊரில் பரிவரில் வந்தால் தாயாரின் குறைந்தார் இல்லை என்கை –
மாயப்பிரானை
அவாப்த ஸமஸ்த காமனுக்கு களவு கண்டு ஜீவிக்க வேண்டி -களவிலே இழிந்து சத்ய சங்கல்பனாய் இருந்து வைத்து
அது தலைக் கட்ட மாட்டாதே வயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அவர்களால் அடியுண்டு போக்கடி அற்று நிற்கிற நிலை
பிரானை –
செய்தவை அடங்க உபகாரமாய் இருக்கை
என் மாணிக்கச் சோதியை
அவர்கள் நெருக்க நெருக்க சாணையிலே ஏறிட்டுக் கடைந்த மாணிக்கம் போலே புகர் மிக்குச் செல்கிற படி
என் –
அப்புகரை எனக்கு முற்றூட்டாக்கித் தந்தவனை
தூய வமுதைப்
அந்த அம்ருதம் அதிக்ருதாதிகாரம்-இது சர்வாதிகாரம் –
ப்ரஹ்மசர்யாதி நியதி உண்டு அதுக்கு -இருந்த படியிலே அனுபவிக்க அமையும் இதுக்கு
பருகிப் பருகி
ஸக்ருத் சேவ்யம் அது -சதா சேவ்யம் இது
என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே
பிரகிருதி சம்பந்த பிரயுக்தமான ஜென்மத்தாலே சஞ்சிதமான அஞ்ஞானத்தை சவாசனமாகப் போக்கினேன்
அந்த அம்ருதம் சம்சாரத்தைப் பூண் கட்டும்-

————————————————————————-

தன் படியைக் காட்டி என்னை இசைவித்து -அயர்வறும் அமரர்களோடு கலக்குமா போலே என்னோடே கலந்த உபகாரகனை
நினைத்து விட உபாயம் உண்டோ -என்கிறார் –
முன்பு அயோக்கியன் என்று அகன்றவர் ஆகையால் இனி விட்டேன் என்கிறார் –

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-

மயர்வற
அஞ்ஞானம் சவாசனமாக போம்படி
என் மனத்தே மன்னினான் தன்னை
அஞ்ஞானம் பின்னாட்டாத படி என் ஹிருதயத்திலே வந்து புகுந்தான்
மன்னினான் தன்னை
இனி கந்தவ்ய பூமி இல்லை என்று ஸ்த்தாவர பிரதிஷ்டை போலே இருந்தான்-
-உயர்வினையே தரும்
ஞான விஸ்ரம்ப பக்திகளை மேன் மேல் எனத் தரும்
தந்து சமைந்தானாய் இருக்கிறிலன்
ஒண் சுடர்க் கற்றையை
உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே-உபகாரம் கொண்டானாய் இருக்கும்
கொள்கின்றவன் வடிவில் புகர் தன் வடிவிலே தோற்றி இருக்கை
ச சர்வா நர்த்தி நோ த்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நந்தியச –
ஒண் சுடர்க் கற்றையை –
என்று தம்மை வசீகரித்த அழகைச் சொல்லிற்று ஆகவுமாம்-

அயர்வில் அமரர்கள்
பகவத் விஷயத்தில் விஸ்ம்ருதியும் இன்றிக்கே-விச்சேதமும் இன்றிக்கே இருப்பது ஒரு நாடாக உண்டாய் இருக்கக் கிடீர்
ஆள் இல்லாதாரைப் போலே என்னை விடாதே இருக்கிறது –

ஆதிக் கொழுந்தை
அவர்கள் சத்தாதிகளுக்கு -ஹேதுவாய் -பிரதானனுமாய் இருக்காய் –
என் இசைவினை
அப்படி இருக்கிறவன் என்னையும் அவர்களோடு ஒக்கப் பண்ணுகைக்கு இசைவும் தானாய் வந்து புகுந்தான்
என் சொல்லி யான் விடுவேனோ
என்ன கண் அழிவைச் சொல்லி -நான் கை வாங்குவது –
அஞ்ஞானம் அனுவர்த்தித்து விடவோ –
அஸந்நிஹிதன் என்று விடவோ –
அந்நிய பரன் என்று விடவோ –
நன்மைகளை பண்ணித் தந்திலன் என்று விடவோ –
பிரதியுபகாரம் கொள்ள இருந்தான் என்று விடவோ –
மேன்மை போராது என்று விடவோ –
இசைவுக்கு கிருஷி பண்ணினேன் நான் என்று விடவோ –
எத்தைச் சொல்லி விடுவது –

—————————————————————————–

தன்னை அறியாதே மிகவும் அந்நிய பரனாய் இருக்கிற என்னை தன் திருக் கண்களின் அழகாலே இடைப் பெண்களை
அகப்படுத்தினால் போலெ நிர்ஹேதுகமாக என்னை வசீகரித்தவனை விடுவேனோ என்கிறார் –

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–

விடுவேனோ என் விளக்கை-
ஸ்வ விஷயமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி பண்ணி
தன்னுடைய கல்யாண குணங்களை பிரகாசிப்பித்தவனை விடுவேனோ
என் ஆவியை –
அசன்னேவ ச பவதி-என்கிறபடியே உரு மாய்ந்து போன என் ஆத்மாவை
நடுவே வந்து
விஷய பிரவணனாய் போகா நிற்க நடுவே வந்து -நிர்ஹேதுகமாக என்னவுமாம்
வந்து
நான் இருந்த இடத்தே தானே வந்து
உய்யக் கொள்கின்ற
அஸத் கல்பனான என்னை -சந்தமேனன் ததோ விது-என்னப் பண்ணின படி
கொள்கின்ற
கொண்டு விட்டிலன்
மேன் மேல் எனக் கொள்ளா நிற்கிற அத்தனை
நாதனை
உய்யக் கொள்கைக்கு நிபந்தனம் சொல்லுகிறது
இழவு பேறு தன்னதான குடல் துடக்கைச் சொல்லுகிறது
இப்படி தன் பேறாக க்ருஷி பண்ணின இடம் உண்டோ -என்னில்
தொடுவே செய்து
வெண்ணெய் அவர்கள் கொடுக்கிலும் -வேண்டா என்று களவிலே இழிந்து -பிடி பட்டது கேட்டுத் திரண்டு -சிலு கிடுமதுக்காக வந்த
இள வாய்ச்சியர் –
புருஷர்களுக்கும் வ்ருத்தைகளுக்கும் ஒரு பயமும் இல்லை
இவனால் நெஞ்சாறல் பட்டவர்கள் -இவன் பிடிபட்டுக் கட்டுண்டான் என்றவாறே ப்ரீதிகளாய் காண வருவார்கள்
கண்ணினுள்ளே
மற்று இவர்களுக்கும் தெரியாத படி
விடவே செய்து விழிக்கும்
தூதாக விழிக்கும் -தூது செய் கண்கள் இ றே
விஷமமான சேஷ்டிதங்கள் என்னவுமாம்
விடர் உண்டு தூர்த்தர் -அவர்களுடைய செயலைச் செய்து என்றுமாம்
பிரானையே
அந்த நோக்காலே அவர்களை அநன்யார்ஹைகள் ஆக்கினால் போலே -என்னையும் அநந்யார்ஹன் ஆக்கின உபகாரகனை –

—————————————————————————————

அவன் தான் விடில் செய்வது என் -என்னில் -தன் நீர்மையாலே என்னைத் தோற்பித்தவனை நான் விட இசைவேனோ என்கிறார்

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னையான் ஒட்டுவேனோ –1-7-6-

பிரான்
நிலா தென்றல் போலே தன் படிகளை பரார்த்தமாக்கி வைக்குமவன்
இதினுடைய உபபாதனம் மேல்
பெரு நிலம் கீண்டவன்
ரஷ்ய வர்க்கம் பரப்புண்டு என்னக் கை விடானே-பிரளய ஆர்ணவத்திலே புக்கு பூமியைத் தன் பேறாக தன்னை அழிய மாறி எடுத்தால் போலே
-சம்சார ஆர்ணவத்திலே அகப்பட்ட என்னை எடுத்தவன்
பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
ஒப்பனையோடே யாயிற்று பிரளயத்தில் முழுகிற்று
நெருங்கத் தொடையுண்டு பரிமளத்தை உடைத்தாய் செவ்வி பெற்றுள்ள திருத் துழாய்
விரையை விராய் என்று நீட்டிக் கிடக்கிறது
அன்றிக்கே -மலர் விரவிய திருத் துழாய் என்னவுமாம்
வேய்ந்த முடியன்
சூழப்பட்ட திரு முடியை உடையவன்
ஏய்ந்த என்ற பாடமான போது-சேர்ந்த முடி
மராமரம் எய்த மாயவன்
ரக்ஷணத்திலே அதிசங்கை பண்ணினவனுக்கு மழு வேந்திக் கொடுத்தும் அவன் காரியத்தை முடியச் செய்யும் வியாமோஹ அதிசயத்தை உடையவன்
என்னுள் இரான் எனில்
இப்படி ஆஸ்ரிதர் தன் பக்கலிலே சேருகைக்கு க்ருஷி பண்ணுமவன் என் பக்கல் இரான் என்னில்
எனில் -என்கையாலே -விட சம்பாவனை இல்லை என்கை
பின்னையான் ஒட்டுவேனோ
பின்னை நான் இசைவேனோ
பின்னைநான் தொங்குவனோ -என்னும் ஆச்சான் –

————————————————————————————

எனக்கு இசைவு இன்றிக்கே இருக்க வருந்திச் சேர்த்துக் கொண்டவன் -நான் போவேன் என்னிலும் போக போட்டான் என்கிறார்

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
நான் இசைந்து என் ஹிருதயத்திலே இருத்துவேன் என்றிலேன்
இசைவு என்னாலே வந்ததாகில் அன்றோ விடுகை என்னாலே வந்ததாவது
இசைவு இன்றிக்கே இருக்கக் கிட்டின படி என் என்னில் –
தான் ஒட்டி வந்து
நிரபேஷனான தான் -உம்முடைய பக்கலிலே இருக்கை தவிரேன் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணி வந்து
அத்ய மே மரணம் வா அபி தரணம் ஸாகரஸ் யவா
என் தனி நெஞ்சை
எனக்கு பவ்யமாய் -தன்னாலும் திருத்த ஒண்ணாத படி ஸ் வ தந்திரமான நெஞ்சை
வஞ்சித்து
தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் என்னை அறியாமே அகப்படுத்தி மனஸ் ஸூ பிடிபட்ட பின்பு செய்வது என் என்னில்
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே எனக்கு த்யாஜ்யமான சரீரத்தை தனக்கு போக்யமாகப் பற்றி நின்று
விலக்காத தொரு சமயம் பெற்றவாறே என் ஆத்மாவோடு வந்து சம்ச்லேஷித்தான்
இயல் வான்
வியாமோஹத்தை ஸ்வ பாவமாக உடையவன் -என்னுதல்
இப்படி உத்ஸஹிக்குமவன் என்னுதல்
ஓட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–
முன்பு த்வேஷம் பண்ணித் திரிந்த நாள் என்னை என் கை வசத்தே விட்டுத் திரிந்தான்
இப்போது இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தவன்
பல தசையில் நான் நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் சம்வத்திக்குமோ –

—————————————————————————————

என்னை விடுவித்தான் ஆகிலும் தன் கல்யாண குணங்களில் அகப்பட்ட என் நெஞ்சை இனி விடுவிக்க சக்தன் அல்லன் என்கிறார் –

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-

என்னை நெகிழ்க்கிலும்
என்னால் அன்றிக்கே -ஊன் ஒட்டி நின்று -என்றபடியே அத்தலையாலே கிட்டின என்னை நெகிழ்க ஒண்ணாது
அவ்வரிய செயலைச் செய்யினும் மயர்வற்ற என்னை பிரிக்கை அரிது -அச் செயலைச் செய்யிலும் என்னவுமாம்
என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத்
நெஞ்சே இயற்றுவா எம்மோடு நீ கூடி -என்றும் -தொழுது எழு என் மனனே -என்றும் சொல்லலாம் படி தன் பக்கலிலே
அவகாஹித்த விலக்ஷணமான என்னுடைய மனசை விடுவிக்க
தானும் கில்லான்
சர்வ சக்தனான தானும் சக்தன் அல்லன் -சர்வ சக்தியான தான் பண்ணி வைத்த வியவஸ்தை தன்னால் தான் அழிக்கப் போமோ
சர்வ சக்தித்வத்தோ பாதி சத்யா சங்கல்பத்துவமும் வியவஸ்த்தை
இனி
முன்பு செய்யலாம் -இனிச் செய்யப் போகாது -எத்தாலே என்னில்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை
நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக நித்ய ஸூ ரிகள் ஓலக்கம் இருக்க -அச் சேர்த்தி அழகிலே தோற்று அடிமை புக்க என் நெஞ்சை மீட்கப் போகாது என்கை
அந்தப்புர பரிகரத்தை ராஜாவாலும் அநாதரிக்க ஒண்ணாது
ஹர்யர்ஷ கண சந்நிதவ் -என்கிறபடியே நித்ய ஸூ ரிகள் முன்பு பண்ணின ப்ரதிஜ்ஜை முடிய நடத்த வேணும் என்கை
நப்பின்னை பிராட்டி உடைய நெடிதாய் பணைத்து இருந்துள்ள தோளோடு அணைகையாலே ஆனந்திக்கிற முதன்மை உடையவன்
பணை-என்று வேயாய் -பசுமைக்கும் சுற்று உடைமைக்கும் செவ்வைக்கும் மூங்கில் போலே இருக்கை என்னவுமாம்
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத்தேஜ
முன்னை யமரர்
பழைய அமரர் -யத் ரர்க்ஷய ப்ரதமஜா யே புராணா-என்கிற பழைமை உடையராகை
முழு முதலானே
அவர்களுடைய ஸ்வரூபாதிகள் எல்லாம் ஸ்வ அதீனமாய் இருக்கை –

————————————————————————————-

தாம் அவனோடு சம்ச்லேஷித்த படி பிரிக்க யோக்யம் அன்று -என்கிறார்

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-

அமரர் முழு முதல் ஆகிய
நித்ய ஸூ ரிகளுக்கு ஸ்வரூபாதிகள் எல்லா வற்றுக்கும் தானே காரணமாகை
வாதியை –
லீலா விபூதியில் உள்ளாருக்கு புருஷார்த்த உபயோகியான கரண களேபரங்களை கொடுக்குமவனை
இவ்வருகு உள்ளார்க்கும் ஸூ ரிகளோபாதி பிராப்தி உண்டாய் இருக்க இச்சை இல்லாமையால் யோக்யதை பண்ணிக்க கொடுக்கும் அளவு இறே செய்யலாவது
அமரர்க்கு அமுதீந்த
அந்தக் கரணங்களைக் கொண்டு ஷூ த்ர பிரயோஜனங்களை அபேக்ஷிப்பார்க்கு அவற்றையும் செய்யுமவனை
ஆயர் கொழுந்தை
அனன்யா பிரயோஜனர்க்காக வந்து அவதரித்து ஸூலபனாய் தன்னைக் கொடுக்குமவனை
பரித்ராணாயா ஸாதூ நாம் இத்யாதி
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று
இப்படி உபய விபூதி உக்தனை கிட்டிச் செறிந்து எங்கும் புக்கு அனுபவித்து என் ஆத்மா ஏக த்ரவ்யம் என்னலாம் படி கலந்தது
இனி யகலுமோ
ப்ருதக் ஸ்திதி யுபலம்பம் இல்லாதபடி ஸ்வரூபம் ஸ்வரூப அனுரூபமாக சம்ச்லேஷித்தும் அகல பிரசங்கம் உண்டோ
பிரகார பிரகாரிகளுக்கு ஏகத்துவ புத்தி பிறந்தால் பிரிக்கப் போமோ
ஜாதி குணங்களை பிரிக்க ஒண்ணாதாப் போலே த்ரவ்யத்துக்கும் நித்ய தாதாஸ்ரயத்வம் உண்டாகையாலே பிரிக்க ஒண்ணாதாய் இறே இருப்பது

——————————————————————————

இப்படிப்பட்ட இவ்வனுபவத்தை கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தாலும் திருப்தன் ஆகிறிலேன்-என்கிறார் –

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–

அகலில் அகலும்
தன்னை ஆஸ்ரயித்து பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போகில்-தானும் இழவாளனாய்க் கொண்டு அகலும் –
ந நமேயம் என்கிறபடியே அகலில் யதி வா ராவண ஸ்வயம் என்கிற சாபலம் உள்ளே கிடக்க கண்ண நீரோடு கொல்லும் எனினுமாம்
அணுகில் அணுகும்
நாலடி வர நின்றாரை ஆக்யாஹி மம தத்வேன ராக்ஷஸா நாம் பலாபலம்-என்கிறபடியே அவர்கள் படியைப் பாராதே
இளைய பெருமாளோ பாதி தம் காரியத்துக்கு கடவராம் படி கூட்டிக் கொள்வன்
முதல் பாட்டில் அகலில் அகலும் என்கிற இடம் சொல்லிற்று -இரண்டாம் பாட்டில் அணுகில் அணுகும் என்கிற இடம் சொல்லிற்று
புகலும் அரியன்
பிரதி கூலர்க்கு கிட்டச் செய்தே அணுக அரியன்
துரியோதனன் அர்ஜுனனோபாதி கூடி வரச் செய்தே இஞ்சிப் பயிரில் தழை கூறு கொள்வாரைப் போலே தன்னை ஒழிந்தவற்றை கொண்டு போம்படி பண்ணும்

பொருவல்லன்
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்
பொரு என்று ஒப்பு -எதிராய் நேர் நிற்குமதுவாய்-அத்தாலே தடையைச் சொல்லிற்றாய் தலைக் கட்டுகிறது
யத்ர க்ருஷ்ணவ் ச கிருஷ்ணா ச சத்யபாமா ச பாமி நீ நாஸாபி மன்யுர் நயமவ் தத்தேச மபிஜக்மது
பிரஜைகளுக்கு புக ஒண்ணாத தசையில் சஞ்சயனுக்கு தடை இன்றிக்கே இருக்கை
எம்மான்
இஸ் ஸ்வ பாவங்களைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
நிகரில் அவன்
நீர்மைக்கு ஒப்பு இல்லாதவனுடைய
புகழ் பாடி இளைப்பிலம்
கல்யாண குணங்களை பாடி விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்
இளைக்கை யாகிறது விடுகை -அதாவது விச்சேதம்
பகலும் இரவும்
அனுபவ காலம் சாவாதியோ என்னில்-திவாராத்ரி விபாகம் அற காலம் எல்லாம் அனுபவித்தா லும் கூட ஷமன் ஆகிறிலேன்
படிந்து குடைந்தே
இவ்விஷயத்தில் அவகாஹனம் அளவு பட்டோ இருப்பது -என்னில்
படிந்து -கிட்டி -குடைந்து -எங்கும் புக்கு -அவகாஹித்து விட மாட்டு கிறிலேன்

————————————————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழி பகவத் அனுபவ விரோதியான பிரயோஜ நான்தர ருசிகளை உன்மூலிதம் ஆக்கும் என்கிறார் –

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை -அடைந்த தென் குருகூர் ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை யாயிரத்து இப்பத்து -உடைந்து நோய்களை யோடுவிக்குமே–1-7-11-

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
வண்டுகள் உள்ளே அவகாஹித்து மது பானம் பண்ணும் படி மது சமர்த்தியை உடைய திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு அபிஷேகத்தை உடையவனை
இத்தால் நிரதிசய போக்ய பூதன் என்கிறது
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மதுவிலே அவ் வண்டுகள் படிந்தால் போலே யாயிற்று இவர் பகவத் குணங்களில் அவகாஹித்த படி
மிடைந்த சொல் தொடை
செறிந்த சொல் தொடையை உடைய
தனித் தனியே என்னைக் கொள் என்னைக் கொள்-என்று மேல் விழுந்த சொல் என்னவுமாம்
யாயிரத்து இப்பத்து -உடைந்து நோய்களை யோடுவிக்குமே
இப்பத்து தானே நோய்களை உடைந்தோடும் படி பண்ணும்
நோயாகிறது -ஷூ த்ர புருஷார்த்த ருசி
உடைந்து ஓடுகை-ஆஸ்ரயாந்தரங்களுக்கும் ஆகாதபடி உரு அழிகை –

—————————————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: