திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -1-6-

அவாப்த சமஸ்த காமனாய் -நிரபேஷனாய் -பரிபூர்ணனான எம்பெருமானை -அதி ஷூத்ரனும் அதி ஷூத்ர உபகரணனுமாய் இருக்கிறவன்
ஆஸ்ரயிக்கைக்கு உபாயம் உண்டோ -என்று ஆசங்கிப்பாருக்கு-அவன் அத்யந்த பரிபூரணனே யாகிலும் அந்த பூர்த்தி எல்லாம்
ஸ்வாராததைக்கு உறுப்பாம்படி-ஸ்ரீ யபதியாய் ஸூ சிலனாகையாலே-ஆஸ்ரயிக்கப் புக்காருக்கு வித்த அவ்யய ஆயாசங்கள் இல்லாமையாலும் –
பிரத்யவாய பிரசங்கம் இல்லாமையாலும் -ப்பலாதிக்யத்தாலும் -த்ரவ்யாதி கார்யங்கள் யுடைய பிரகார விசேஷம் கொண்டு கார்யம் இல்லாமையாலும்
பகவத் கீத மத்யம ஷட்காதிகளில் பிரதிபாதித்தால் போலே ஆஸ்ரயணம் ஸூ கரம் என்று அருளிச் செய்கிறார் –

———————————————————–

எம்பெருமான் பரிபூர்ணன் ஆகையாலும் -சீலன் ஆகையாலும் ஏதேனும் பத்ர புஷ்பாதி த்ரவ்யங்களாலே த்ருப்தன் ஆவான் ஒருவன் -என்கிறார்

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் ஈசனைப்
ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை
ஹேய ப்ரத்ய நீகத்வம் கல்யாண குணங்களுக்கும் உப லஷணம்-
இத்தால் பிராப்ய ஸ்வரூபம் சொல்லிற்று
பாடி –விரிவது மேவலுறுவீர்
சம்சார முக்தராய் அனுபவித்து -அவ்வனுபவ ஜனித ப்ரீதியாலே -எதத் சாம காயன் நாஸ்தே -என்னும்படியாலே பாடி
விஸ்த்ருதராகையைப் பெற வேண்டி இருப்பீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே
உப கரணங்களிலே குறைவு பார்த்து அகலுகை தவிர்ந்து அசம்ச்க்ருதமான ஜலத்தை ஏதேனும் ஒருபடி பிரயோகித்து
மற்றும் அவனுக்குக் கொடுப்பதுவும் ஏதேனும் ஒரு பூவையும் ஏதேனும் பூவும் –

———————————————————

ஆஸ்ரயணீயத்துக்கு அதிகாரி நியமம் இல்லை என்கிறார் –

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

ஐஸ்வர்ய ஸூசகமாய் திருக் குழலின் ஸ்பர்சத்தாலே மதுஸ் யந்தியான திருத் துழாயை யுடையனாய்
அபௌருஷேயமான வேத பிரதிபாத்யனாய் உள்ளவனுக்கு
இப்படி விலஷணன் ஆனவனுக்கு நான் அடிமை செய்கை அயோக்யன் என்று பாராதே அந்தரங்க வ்ருத்தியோடே
பஹிரங்க வ்ருத்தியோடே வாசி இன்றிக்கே -எல்லா வ்ருத்தியும் செய்யக் கடவனாகை ஆட்செய்கைக்கு அதிகாரம் –

——————————————————–

கீழ் இரண்டு பாட்டாலும் சொன்ன குணங்களை அனுசந்தித்து சர்வேஸ்வரன் பக்கலிலே
தம்முடைய வாங் மனஸ் காயங்கள் பிரவணமாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-

ஆஸ்ரிதரை ஜாத்யாதிகளுடைய அபகர்ஷமும் உத்கர்ஷமும் நிபந்தனமாக விடுதல் பற்றுதல் செய்யக் கடவன் அன்றிக்கே
நிருபாதிக சேஷியானவன் பாடு நின்றும் போகிறது இல்லை என் மனஸ்ஸூ
என்னுடைய வாக்கும் அவனுடைய இந்த குண பிரதிபாதகமான காதையைப் பாடா நின்றது –
அங்கமும் தேவா விஷ்டரைப் போலே ஆடா நின்றது

———————————————————————

நித்ய ஸூரிகளைப் போலே எனக்கு பகவத் ப்ராவண்யம் நித்யமாயிற்று என்கிறார்
பஹூ குணனான ஈஸ்வரனை என் அங்கம் வணங்கி வழிபடும் என்கிறார் என்றுமாம்

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினானே –1-6-4-

தைவா விஸ்டம் ஆனால் போலே பகவத் குண ஜிதமாய்க் கொண்டு ஆடா நின்றுள்ள
என்னுடைய அங்கம் என்றும் வணங்குகையே ஸ்வபாவமாக வுடைத்தாயிற்று
ஒருவருக்கு ஒருவர் நான் முற்பட வேணும் என்று பிணங்கி அயர்வறும் அமரர்கள் சந்நிபதிதரைப் போலே
பிதற்றும் குணங்களை சேருகைக்கு பாத்ரமாய் உள்ள சர்வேஸ்வரனை

——————————————————-

அநந்ய பிரயோஜனருக்கு எம்பெருமான் நிரதிசய போக்யனாம் என்கிறார் –

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
-விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-

ஆஸ்ரிதரோடு தான் பரிமாறும் இடத்தில் அவர்கள் பக்கல் தாரதம்யம் இல்லாதவன் எல்லாரையும் ஒக்க ச்நேஹித்து இருப்பவன்
பிரயோஜா நாந்தரங்களைக் கொண்டு அகலுமோ -அநந்ய பிரயோஜனனாய் அகலாது ஒழியுமோ -என்று மிகவும் அனுசந்தித்து

————————————————————–

நிரதிசய போக்யனான எம்பெருமானை உபாயமாகப் பற்றி ப்ரயோஜநாந்தரங்களைக் கொண்டு அகலுகிறவர்களை இகழ்கிறார் –

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

ஷூத்ர புருஷார்த்தத்தை அபேஷிக்கிறார்-என்று இகழாதே தேவர்களுக்கு கடலைக் கடைந்து அம்ருதத்தையும் கொடுப்பதும் செய்து
நிரவதிக தேஜஸ்கமான திரு வாழியை யுடையனுமாய் -ஆஸ்ரயித்த மாத்ரத்திலே அதிவ்யாமுக்தன் ஆனவன் –
அவர்கள் போக்யமாகப் பற்றுகிற அம்ருதத்தில் காட்டிலும் நிரவதிக போக்யன்-
தூரஸ்தனன் இவர்கள் ஆசைப்பட்ட அம்ருதம் பிறந்த கடலிலே ஆஸ்ரயிப்பார்க்கு உறுப்பாம் படி கண் வளர்ந்து அருளுகிறவன்

—————————————————–

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

பஜமாநரான உங்களுக்கு அவனுக்கு காண்கையில் உள்ள ஆசையாலே ஒரோ திவசம் ஒரோ கடல் போலே நெடிதாய்
கால ஷேபம் அரிதானால் பெருமாளுடைய வீர சரிதத்தை அனுசந்தித்து திருவடிகளை தலையாலே வணங்கி காலத்தை போக்குங்கோள் என்கிறார் –
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனான தசரதாத்மஜனை ஆஸ்ரயித்து நிர்த்துக்கராம் கோள்-என்றுமாம் –

———————————————————-

அநந்ய பிரயோஜ நராய் பஜிக்கும் அவர்களுக்கு விக்நங்களை எல்லாம் போக்கி
அடிமையாகிற அழிவில்லாத சம்பத்தை எம்பெருமான் தரும் என்கிறார்

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8-

பாஹ்ய ருசிகளை விடுங்கோள்
அவசியம் அவற்றை விட்டு எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்
ஆஸ்ரயிக்கும் அவனுக்கு ஆஸ்ரயணம் தானே பிரயோஜனம் போந்து இருக்கச் செய்தே
பகவத் பிராப்திக்கு விக்னமான அவித்யாதிகளைப் போக்கி

—————————————————————-

ஆஸ்ரயிப்பாருடைய விக்னங்களை நீக்கி நித்ய கைங்கர்யத்தைக் கொடுக்கும் போது
-பெரிய பிராட்டியாரோடு கூடி நின்றே சாதரமாகக் கொடுக்கும் என்கிறார் –

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-

உபநிஷத் பிரசித்தமான பரம புருஷார்த்தங்களைத் தரும் பெரிய பிராட்டியாருடைய குணாதிகனாய் யுள்ள நாயகன் –
ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையராய் -ஆஸ்ரித அனுக்ரஹ ஸ்வபாவராய் -அவர்களுடைய புண்ய பாப
ஸ்வரூபமான கர்மங்களைப் போக்கும் ஸ்வபாவரானவர்
தர்மத்தின் யுடைய பரம பிரயோஜன ரூபமான திரு மகளார் என்றுமாம் –

——————————————————–

பெரிய பிராட்டியாரோடு கூட வந்து ஈண்டி பிரதிபந்தகங்களைப் போக்கி அருளும் -என்கிறார் –

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10–

பிரதிபந்தகங்களைப் போக்கும் ஸ்வபாவர் –
ஷண மாத்ரத்திலே –
ஆஸ்ரித சம்ரஷணம் பண்ணுகைக்கு -ப்ரதிபஷ நிரசன ஸ்வபாவனான பெரிய திருவடியைக் கொடியாக எடுக்கையை ஸ்வபாவமாக யுடையவர் –
பெரிய திருவடியை விஷயீ கரிக்குமா போலே இன்று ஆஸ்ரயிப்பாரை விஷயீ கரிக்கும் ஸ்வபாவர் என்றுமாம்
ஸ்ரீ யபதியானவர் –

——————————————————–

நிகமத்தில் -இத்திருவாய்மொழி கற்றார் பெரும் பலத்தை அருளிச் செய்கிறார் –

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

கவி பாடுகிறவனுக்கும்
கவி பாட்டு உண்ணுகிறவனுக்கும்
கவிக்கும் குற்றம் ஆகிற ஏதம் இல்லாதபடி இருக்கிற ஆயிரத்தில் ஸ்ரீ யபதியான தன் பக்கல் உள்ள மேன்மையை
அனுசந்தித்தல் -ஆஸ்ரயித்தவனுடைய சிறுமையை அனுசந்தித்தல் -செய்கை யாகிற தீதும் அவமும் இல்லாத
இத்திருவாய்மொழி கற்க வல்லார் பக்தி யோகத்துக்கு மேட்டு மடையான சம்சாரத்தில் பிறவார்
ஏதமாவது -குற்றம்
கவி பாடுகிறவனுக்கும்-கவி பாட்டு உண்கிறவனுக்கும்-கவிக்கும் உள்ள மூன்று குற்றத்தையும்
தீதும் -அவமும் -ஏதமும் – என்றும் சொல்லுவர் –

——————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: