திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -1-5-

தூத ப்ரேஷண வியாஜத்தாலே அபராத சஹத்வத்தை அறிவித்த சமனந்தரம்-எம்பெருமான் வந்து சம்ச்லேஷ உன்முகனான வாறே
அவனுடைய வைலஷண்யத்தையும்-தம்முடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து –
அம்ருதத்தை விஷத்தால் தூஷிக்குமா போலே விலஷணர்க்கு போக்யனான எம்பெருமானை சம்சாரியான நான்
தூஷிக்கை ஈடு அன்று -என்று பார்த்து அருளி
ஆழ்வார் -நான் சம்ச்லேஷித்து அவனுக்கு அவத்யத்தை விளைவித்து உஜ்ஜீவிப்பதில் காட்டிலும் விச்லேஷித்து முடிந்தேன் ஆகிலும்
முடிய அமையும் -என்று பார்த்து அருளி
பெருமாளுக்கும் தேவ தூதனுக்கும் மந்த்ரம் பிரவ்ருத்தமான தசையிலே -துர்வாசர் பெருமாளை சபிக்கும் -என்னும் பயத்தாலே
அவனுடைய ஆகமனத்தை விண்ணப்பம் செய்து பெருமாளுடைய பிரதிஜ்ஞா அனுகுணமாக தம்முடைய வியசனம் பாராதே
இளைய பெருமாள் விடை கொண்டால் போலே
தம்முடைய வி நாசத்தையே அங்கீ கரித்து-அவனை சம்ச்லேஷிக் கையிலே ஆசை அற்று
பண்டு அவனோடு பரிமாறின பரிமாற்றமும் தப்பச் செய்தோம் -என்று இவர் அகலப் புக
இவரோட்டை சம்ச்லேஷம் தனக்கு அவத்யாவஹம் அன்றிக்கே சௌசீல்ய வர்த்தகமாய் இருக்கிற படியைக் காட்டி அருள
இவர் தன்னோடு சம்ச்லேஷிக்கையிலே துக்கேன இசைந்து அருளி -மீளவும் தம் படியை ஆராய்ந்தும் எம்பெருமான் படியைப் பார்த்தும்
என்னுடைய ஸ்பர்சத்தால் வரும் சௌசீல்யம் எம்பெருமானுக்கு வேண்டா -என்று அகல உத்யோகிக்க
யுத்த அப்ரவர்த்தனாய் வைத்து கஸ்மலாவிஷ்டனான அர்ஜுனனை
தத்வ உபதேசத்தால் யுத்தத்திலே மூட்டினால் போலே -மித்ர பாவேன சம்ப்ராப்தம் -இத்யாதி பிரக்ரியையாலே
தன் பிரக்ருதியைக் காட்டி மீளவும் சேர்த்து கொண்டு அருளினான் என்கிறார்

——————————————————————————

அத்யந்த நிக்ருஷ்டனான நான் -அத்யந்த வி லஷணனான எம்பெருமானை -என்னுடைய மநோ வாக் காயங்களாலே -தூஷித்தேன் -என்று சோகிக்கிறார்

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை-பகவத் போகத்துக்கு ஈடான வைலஷண்யத்தை யுடையராய்
-ஏழ் உலகுக்கும் முதலாய் உள்ள அவரவரும் அமரர்களுக்கு நாயகனை
வளவிதான ஏழ் உலகம் என்றுமாம்
தொடங்கின வாக்கியம் பூரிப்பதற்கு முன்பே தம்முடைய மௌர்க்க்யத்தை அனுசந்தித்து
அரு வினையேன் -என்கிறார் –
அநிஷ்டமான பகவத் சம்ச்லேஷத்தை விளைக்கையாலே பக்தியை -அருவினையேன் -என்கிறது
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன்
களவு பிரசித்தமாம் படி வெண்ணெய் களவு கண்ட கள்வா என்று யசோதைப் பிராட்டி அவனைக் களவிலே கண்டு பிடித்துச் சொல்லும் சொல்லைச் சொன்னேன்
பின்னையும் தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய் இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே-
அதுக்கும் மேலே முல்லை யரும்பு போலே இருக்கிற முறுவலை யுடைய நப்பின்னை பிராட்டியோடு சம்ச்லேஷிக்கைக்காக
வலியை யுடைய இடையருக்கு பிரதானனாய் வந்து பிறந்து எருது ஏழு அடர்த்த படியை நினைத்து சிதிலனாய் அது உள் அடங்காமையாலே
இளவேறேழும் தழுவின இச் சேஷ்டிதத்தாலே என்னை அடிமை கொண்டவனே என்பதும் செய்தேன் –

———————————————————————————————-

அர்ஹன் அல்லேன் என்கைக்கு நான் ஆர் -ப்ரேமார்த்த சித்தரான ப்ரஹ்ம ருத்ராதிகள் அன்றோ அது சொல்ல அடுப்பது -என்கிறார் –

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
த்வத் குண ஸ்மரணத்தாலே அத்யந்தம் சிதிலராய்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
சாதரமாகத் தொடுத்த மாலை
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே —
சம்ஹார சமயத்திலே -புருஷார்த்த உபயோகியான கரண களேபரங்களை இழந்து நோவு பட்டன –என்று ஸ்மரிக்கப் பட்ட சகல பதார்த்தங்களுக்கும் காரணமாய்
ஸ்வ கார்யங்களைப் பிறப்பிக்கும் போது தான் முதல் அழியாத படியான சங்கல்ப ரூப ஞானத்தை யுடைய உன் பெருமை மழுங்காதோ
-ஆச்சர்யமான வைலஷண்யத்தை யுடையவனே-

—————————————————————————————–

இப்படி அனர்ஹன் என்கைக்கும் தகேன் என்று பகவத் தாஸ்யத்தின் நின்றும் அத்யந்தம் விப்ரக்ருஷ்டரான ஆழ்வார் தம்மை
த்ரைவிக்ரமமான சௌசீல்ய வாத்சல்யாதிகளை காட்டி யருளி மீளும் படியாக வசீகரித்து அருளினான் என்கிறார்

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும் நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
மனுஷ்யாதிகளில் காட்டில் அதிகமான யோனிகளில் பிறந்து அதுக்கீடான மரியாதைகள் கற்றுள்ள வானோர் பலரும்
முனிவருமான யோனிகளை நீ படை என்று அதிக சக்தியான ப்ரஹ்மாவைப் படைத்தவன்

சேயோன் எல்லா வறிவுக்கும்
எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகள் உடைய ஜ்ஞானத்துக்கும் கோசரம் அல்லாதானாய்

திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே —
உத்கர்ஷம் அபகர்ஷம் பாராதே சகல பதார்த்ததோடும் தன திருவடிகள் ஸ்பர்சிக்கும் படி லோகங்களை எல்லாம் அளப்பதும் செய்து
ஜன்ம வ்ருத்தாதிகளால் நிஹீனரானாரும் அகப்பட எல்லாருக்கும் பரிவனானவன் ஒருவனே என்று
அவன் குணத்தை அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –

——————————————————————————————-

அத்யந்த நிரபேஷனாய் இருந்து வைத்து -ச்ருஷ்ட்யாத் அநேக யத்னங்களை பண்ணி என்னை விஷயீ கரித்தவன்
இனி நான் அல்லேன் என்னிலும் தன்னுடைய சுசீல்ய குணத்தாலே விடான் என்று சமாஹிதர் ஆகிறார் –

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே -1-5-4-

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
நிமித்த உபாதான சஹகாரிகளான மூன்று வகைப்பட்ட காரணமும் தானேயாய்
-தன்னோடு மூவரானவர்கள் முதலான தேவ திர்யக் ச்தாவரங்கள் உள்ளிட்ட சகல பதார்த்தங்களையு உண்டாக்குகைக்காக
தன்னில் -சங்கல்ப்பத்திலே என்னவுமாம் –

தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும் -வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே-
தன்னுடைய சங்கல்ப வசத்தாலே ஏகார்ணவத்தைத் தோன்றுவித்து-அதிலே கண் வளர்ந்து அருளும் ஸ்வ பாவனாய்
வைகுந்தனாய் – வானோர் பெருமானாய் இருந்து வைத்து-எனக்குத் தப்ப ஒண்ணாத படி அத்யாச்சர்யமான சீலவத்தை யுடையவன்
எனக்கு ஸ்வாமியே -நான் அவனுக்கு அடிமை –

—————————————————————————————

இப்படி இசைந்த ஆழ்வார் -சடக்கென முகம் காட்ட பழைய படிக்கே அகலுவர் -இவர் தாமே அர்த்திக்கும் தனையும்
செல்ல முகம் காட்டாதே நிற்போம் என்று எம்பெருமான் பேர நிற்க -மீண்டு -உன் திருவடிகளிலே சேர்ந்து
அடிமை செய்யும் படி பார்த்து அருள வேணும் -என்று பிரார்த்திக்கிறார் –

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய்
மானின் நோக்குப் போலே முக்க்தமான நோக்கை யுடைய பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையை யாகையாலே
மாதவன் என்னும் திரு நாமத்தை முக்யமாக உடையையே
அநு லேபதாயி நியான கூனியினுடைய மற்றோர் அவயவதுக்கும் வாட்டம் வராமே கூனே நிமிரும்படி
சுண்டு வில் தெறித்தால் போல் அநாயாசேன நிமிர்த்தவனே
ஆஸ்ரிதருடைய அவத்யம் பாராதே அவர்களை விஷயீ கரித்து அவர்களுடைய அவத்யத்தை பின்னையும் போக்கும் என்று கருத்து –

கோவிந்தா
திர்யக்குகளோடும் சம்ச்லேஷிக்கும் ஸ்வ பாவன் ஆனவனே
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறிக்கை யாவது -கூனியுடைய கூன் போம்படி மர்மத்திலே பெருமாள் சுண்டு வில் எடுத்துத் தெறித்த படி
தீம்பு சேர்வது ஸ்ரீ நந்தகோபர் திருமகனுக்கு ஆகையாலே பெருமாள் தெம்பை அவன் பக்கலிலே வைத்து கோவிந்தா என்றும் சொல்லுவர் –

வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே
திருநாடு எல்லாம் நிறையும்படியான தேஜச்சையும் ச்ப்ருஹணீயமான நிறத்தையும் யுடையையாய்
சமாஸ்ரிதர் உடைய விரோதிகளைப் போக்கும் ஸ்வபாவனான நீ
உன்னுடைய நிரதிசயமான போக்யமான திருவடிகளை வினையேனான நான் பெறும்படி பார்த்து அருள வேணும்
எம்பெருமானுடைய திருவடிகளிலே அடிமை செய்வோம் என்று இவர் இசைந்த பின்பும் கிடையாமையாலே நலிவு பட்டு -வினையேன் -என்கிறார் –

———————————————————————————————————-

எம்பெருமான் இவர் அபேஷித்த போதே அபேஷிதத்தை செய்யாத தசையிலே அவனுடைய
குண சேஷ்டிதங்கள் ஸ்ம்ருதி விஷயமாய் நின்று இவரை நலிய இவற்றாலே நலிவு பட்டு மிகவும் சிதிலர் ஆகிறார் –

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

உனக்கு அவத்யாவஹம் என்று அடிமை செய்ய வல்லேன் என்று நான் அகல -எனக்கு உத்கர்ஷ ஹேதுவாம் அத்தனை -என்று
என்னை தெளிவித்து அடிமையிலே சேர்த்துக் கொண்டவனே –
-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் உத்பாதகனாய் வைத்து
இடையர் தம் மனைகளிலே நீயே வந்து சேர்ந்து அவர்கள் குலத்துக்கு உஜ்ஜீவன ஹேதுவாய்-
சகல ஜன மநோ நயன ஹாரியான நவநீத சௌர்யாதி திவ்ய சேஷ்டிதங்களை யுடையையாய்
-இப்படி ஆஸ்ரித பவ்யன் ஆகைக்கு நிதானமான ஸ்ரீயபதித்வத்தை யுடையையாய்
மனை சேர் ஆயர் என்றது -பல மனைகளும் சேர யுடைய இடையர் என்றுமாம் –
ஸ்ரீ ஸூ கரீவ மகா ராஜரை விஸ்வசிப்பித்து அடிமை கொள்ளுகைக்காக -பெரும் பணைகளை யுடைத்தாய்
தழைத்து இருக்கையாலே இலக்கு குறிக்க ஒண்ணாது இருக்கிற மரா மரம் ஏழையும் எய்தவனே
சிரீதரா -எய்கிற போதை வீர லஷ்மியைச் சொல்லுகிறது
ஏவம் வித குண சேஷ்டிதங்களை யுடையையாய் இவற்றுக்கு வாசகமான திரு நாமங்களை யுடையவனே –

——————————————————————————————————

இப்படி எம்பெருமானை காண வேணும் என்று அபி நிவேசித்த ஆழ்வார் அவன் சம்ச்லேஷ உன்முகன் ஆனவாறே
மீளவும் அவன் தம்முடைய வைலஷண்யத்தையும் நிகர்ஷத்தையும் அனுசந்தித்து அகலுகிறார்

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

அடியேன்
அடிமை தவிர்ந்து இருக்கிறவர் அடியேன் என்பான் என் -என்னில் பூர்வ வாசனையால்
அறிதலார்க்கும் அரியானை கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
எத்தனை யேனும் அளவுடையார்க்கும் அறிய நிலம் அன்றிக்கே ஐஸ்வர்யத்துக்கு ஸூசகமாய் நிரதிசய போக்யமான
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய் மிகவும் குணவானவனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை –
கர்மங்களாலே நிரந்தரமான தேக சம்பந்தம் துரிதம் ஆஸ்ரிதர் பக்கல் சேராமே காக்கும் ஸ்ரீ யபதியை
கைவல்யார்த்திகளை அடியார் என்கிறது -தம்மைப் போலே அவனோடு பரிமாறி அவனுக்கு அவத்யத்தை விளையாதே
ப்ரயோஜ நாந்தரங்களை கொண்டு அகலுகையாலே
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –
நான் காண வேணும் என்று அலற்றா நின்றேன் -இதுக்கு மேற்பட அறிவு கேடு உண்டோ சில –

———————————————————————————

இப்படி ஆழ்வார் அகல இவரைச் சேர்த்து கொள்ளுகைக்காக ஆஸ்ரிதர் உடன் சம்ச்லேஷித்து அல்லது
தரிக்க மாட்டாத தன்னுடைய படியை காட்டி யருளக் கண்டு விஸ்மிதர் ஆகிறார்-

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-

இஜ் ஜகத்தை எல்லாம் பண்டே உன் திரு வயிற்றிலே வைத்தாய்
அந்த லோகத்தை உமிழ்ந்து அதினுள்ளே உன்னுடைய அப்ராக்ருதமான திருமேனியை ஷூத்ரரான மனுஷ்யர் உடைய
ஹேய தேஹங்களோடு சஜாதீயம் ஆக்கி கொண்டு திரு வவதாரம் பண்ணி அபி நிவேசத்தாலே வெண்ணெயை யுண்டாய்
லோகங்களை திரு வயிற்றிலே வைத்து உமுழுகிற போது சேஷித்தது ஏதேனும் மண் உண்டாகிலும் அத்யல்பமும்
மனுஷ்யருக்கு சேஷியாதபடி நெய்யூண் மண் கரைய மருந்தோ
அங்கன் அன்றே ஆஸ்ரிதர் த்ரவ்யத்தை புஜித்து அல்லது ஆத்ம தாரணம் இல்லை என்று கருத்து
வைவர்ண்யம் ஒன்றும் இன்றியே ஒழியும் படி என்னவுமாம்
நிரதிசய ஆச்சர்ய பூதனே

————————————————————————-

பரிவரான யசோதாதிகள் உடைய வெண்ணெய் உனக்கு அம்ருத சமம் -என்னுடைய ஸ்பர்சம் உனக்கு
நஞ்சோடு ஒக்கும் -நான் அகலுகையே உக்தம் -என்று ஆழ்வார் விண்ணப்பம் செய்ய
பூதனை நஞ்சு பாதகம் அன்றிக்கே ஒழிந்தால் போலே உம்முடைய தோஷம் பாதகம் அன்று -என்று எம்பெருமான் அருளிச் செய்ய
அங்கனேயாகில் அகல்வேன் அல்லேன் -என்று சமாஹிதர் ஆகிறார் –

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-

மாயோம் –
மாயக் கடவோம் அல்லோம்
தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட மாயன்
பொல்லாத நெஞ்சை யுடையளாய் வைத்து யசோதைப்
ஈச்வரனான தனக்கும் இன்னாள் என்று தெரியாதபடி மிகுத்து இருந்த வஞ்சனையும் யுடையாளாய் உள்ள பூதனை
முடியும்படி ஈச்வரத்வ ஜ்ஞானம் கலவாதபடி வெறும் பிள்ளையாய் இருக்கச் செய்தே
நச்சுப்பாலே அம்ருதமாம் படி அமுது செய்து நம்மை உளவாக்கின ஆச்சர்ய பூதன்
வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும் தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே-
அயர்வறும் அமரர்களுக்கு அத்விதீயனான அதிபதியுமாய் -ஸ்ரீ யபதியுமாய் -எல்லா உயிருக்கும் தாய் போலே பரிவனுமாய் –
சர்வேஸ்வரனுமாய் – வைத்து -தன்னுடைய குணவத்தையைக் காட்டி என்னை அடிமை கொண்ட பெரியோனைப் பற்றி –

—————————————————————————

அடிமை செய்கையில் உன்முகராம் படி பண்ணித் தம்மை திரு நாட்டில் கொண்டு போக உத்யோகியா நின்றுள்ள
எம்பெருமானுக்கு தம் பக்கல் உண்டான வ்யாமோஹத்தை பேசுகிறார் –

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்து யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி
ஆத்மாவோடு அவி நா பூதமான புண்ய பாப ரூபங்களான கர்மங்களை அநாயாசேன போக்கி விஷயங்களில் உள்ள
ருசி வாசனைகளை அறுத்து அத்தாலே க்ருதக்ருத்யனாய் தன்னுடைய சௌந்தர்யாதிகளைக் காட்டித் தன் பக்கலிலே
மனஸ்ஸூ ப்ரவணனாம் படி பண்ணி
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி-என்றத்தால் -அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு
தன் பாடே மனசை வைக்கும் படி திருத்தி என்றுமாம்
வீடு திருத்துவான்
ஆழ்வார் எழுந்து அருளுகிற மகோத்சவத்துக்கு திருநாடி கோடிக்கத் தொடங்கினான் –
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து நேர்ந்து யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே-
பரிபூர்ண ஜ்ஞான பிரபனாய் சர்வகதனாய் அதி ஸூஷ்மமான சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாய்
ஆஸ்ரித விஷயத்தில் நிரதிசய வ்யாமோஹத்தை யுடையவன்
ஆழ்வாரை இப்படி திருத்துகைக்காக வ்யாப்தனாய் இருந்தான் என்றும்
-அவரைப் பெற்ற பின்பு வியாப்தி பூர்ணமாயிற்று என்றும் வியாப்திக்கு பிரயோஜனம் சொல்லுவர் –

————————————————————————–

நிகமத்தில் இத்திருவாய்மொழி கற்றார்க்கு உள்ள பலம் அருளிச் செய்கிறார் –

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –1-5-11-

பெரியானே என்றும் -ஆச்சர்யமான குணங்களை யுடையவனே என்றும் -ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவனே என்றும் –
அவனுடைய வைலஷண்யத்தை அனுசந்தித்து -எம்பெருமானுக்கு அடிமை செய்வோம் அல்லோம் -என்று ஏங்கி
அடிமை செய்யப் பெறாமையாலே அவசன்னராய் -மீளவும் அவனுடைய நிரவதிக கிருபையாலே சேர்ந்து
அடிமை செய்யப் பெற்றுத் தாம் உளரான ஆழ்வார் –
இயல் அறிந்து கொண்டார் -இசை அறிவார் -பகவத் குண வித்தர்-விரும்பும் ஆயிரத்திலும் இத் திருவாய்மொழி வல்லார்க்கு
எம்பெருமானுடைய வைலஷண்யத்தைக் கண்டு -தாம் அயோக்யர் என்று அகலும் துக்கம் இல்லை
பால் என்று தமிழ் நூல்
பாலேய் தமிழ் -பால் போன்ற தமிழ்

———————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: