திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-5-

தூத ப்ரேஷண் வியாஜத்தாலே அபராத சஹத்வத்தை அறிவித்த சமனந்தரம் வந்து சம்ச்லேஷ உன்முகனாக-
ஸூரிபோக்யமான அவன் வை லஷண்யத்தையும் நித்ய சம்சாரியான தம்முடைய நிகர்ஷத்தையும் பார்த்து
அம்ருதத்தை விஷத்தாலே தூஷிக்குமா போலே நாம் சம்ச்லேஷித்து அவத்யத்தை விளைப்பதில் காட்டிலும் விச்லேஷித்து முடிகை நன்று என்று பார்த்து
பெருமாளுக்கும் தேவ தூதனுக்கும் மந்த்ரம் பிரவர்த்தமான தசையில் துர்வாசர் பெருமாளை சபிக்கும் -என்னும் பயத்தாலே
அவன் வரவை இளைய பெருமாள் சென்று விண்ணப்பம் செய்து
யதி ப்ரீதிர் மகாராஜ யத்ய நுக்ராஹ்ய தாமயி -ஐஹிமாம் நிர்வி சங்கஸ் த்வம் பிரதிஜ்ஞ அனுபாலய -என்று
அவருடைய பிரதிஜ்ஞ அனுகுணமாக தம்மைப் பாராதே இளைய பெருமாள் விடை கொண்டால் போலேயும்
நகல்வத் யைவ சௌ மித்ரே -என்ற பிராட்டியைப் போலேயும் இவர் அகலப் புக -அவனும்
உம்மோட்டை சம்ச்லேஷம் அவத்யாவஹம் அன்று -சௌசீல்ய வர்த்தகம் -என்ற பின்பும்
என்னுடைய சம்ச்லேஷத்தால் அங்குத்தைக்கு வரும் சௌசீல்யமும் வேண்டா என்று இவர் அகல
மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே தன் பிரக்ருதியைக் காட்டி -நீர் சம்ச்லேஷியாத அன்று நம்முடைய சத்தையே இல்லை -என்று
யுத்தான் நிவ்ருத்தனான அர்ஜுனனை கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணினால் போலே
-தன்னோடு சேர்த்துக் கொண்டான் என்கிறார் –

————————————————————————————–

அத்யந்த விலஷணனான அவனை -அத்யந்த நிக்ருஷ்டனான நான் மநோ வாக் காயங்களாலே தூஷித்தேன் -என்கிறார் –

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை
வளவியனாய் ஏழ் உலகுக்கும் காரண பூதனாய்-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்துள்ளவனை
வளவியனாகை யாவது -ஸ்வரூபா திகளால் வந்த வைலஷண்யத்தை யுடையனாகை-
வளவியதாய் இருந்துள்ள ஏழ் உலகுக்கு -என்னவுமாம் –
வளவியராய் ஏழ் உலகுக்கும் காரண பூதராய் இருந்துள்ள நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் என்னவுமாம்
நித்ய ஸூரிகளுக்கு காரணத்வம் உண்டோ என்னில் -அஸ்த்ர பூஷண அத்யாயத்தின் படியே ஸ்ரீ கௌஸ்துபத்தாலே ஜீவ சமஷ்டியைத் தரிக்கும் என்றும்
ஸ்ரீ வத்சத்தாலே பிரகிருதி ப்ராக்ருதங்களைத் தரிக்கும் என்றும் சொல்லுகிறது
இவர்கள் வளவியர் ஆகையாவது பகவத் அனுபவத்தில் குசலராகை –

அரு வினையேன்
வாக்கியம் பூரிப்பதற்கு முன்பே தம்முடைய மௌர்க்க்யத்தைப் பார்த்து -அரு வினையேன் -என்கிறார்
இவர் இப்போது அருவினையேன் என்கிறது -பகவத் ப்ராவண்யத்தை
இப்போது பகவத் விஷயத்தை கிட்டுகை அநிஷ்டம் ஆகையாலே கடவது இறே-அநிஷ்டாவஹம் இ றே பாவம் –

களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன்
களவிலே வேழ்க்கையை யுடையவனே -ஆசைப்பாட்டை யுடையவனாய்க் கொண்டு வெண்ணெய் களவு கண்ட –
கள வெழு-என்கிற இத்தை -களவேழ்-என்று நீட்டிற்றாய் -களவு பிரசித்தமாம் படி என்னவுமாம்
பிரசித்தமாகை யாவது -சிசுபாலாதிகள் கோஷ்டியிலும் பிரசித்தமாம் படி இருக்கை
கள்வா என்பான்
சர்வேஸ்வரனைப் பிள்ளையாகப் பெறுகைக்கு ஈடான சௌபாக்யத்தை யுடையளான யசோதைப் பிராட்டி
வெண்ணெய் களவு காண்கிற சமயத்திலே கண்டு ப்ரேமாதிசயத்தாலே அவள் சொன்ன வார்த்தையை சொன்னேன்
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -என்று நித்ய ஸூரிகளுக்கும் மேலாகப் பேசக் கடவது இறே
அவர்கள் தாங்கள் தொழ இருக்கும் மேன்மை இறே கண்டது-அவன் தானே தொழும் நீர்மை கண்டு அறியார்கள் இறே
என்பன் -என்கிற இது கால த்ரய வர்த்தி யானாலும் -இப்போது பூதார்த்திலே யாய் என்றேன் -என்றபடி –

பின்னையும் –
அதுக்கும் மேலே பிராட்டிமார் பாசுரத்தையும் சொன்னேன் என்கிறார் –
தளவேழ் முறுவல் பின்னைக்காய்
முல்லை அரும்பு போலே இருக்கிற முறுவலை யுடைய நப்பின்னை பிராட்டிக்காய்
எழுகை -தோற்கை
தளவு -முல்லை
எழுகை யாவது -முறுவலைக் கண்டால் முல்லை அரும்பு ஸ்ம்ருதி விஷயமாகை
பின்னைக்காய்
தவாஸ்மி-என்று முறுவலுக்குத் தோற்ற படி
வல்லானாயர் தலைவனாய்
க்ருஷ்ணாஸ்ரய -என்கிறபடி வலியை யுடையரான இடையருக்குத் தலைவனாய்
அதவா -துல்ய ஷீலா வயோ வ்ருத்தாம் -என்று இரண்டு தலையும் குறை வற்று இருக்க -எருதுகளை முன்னிட்ட வன் நெஞ்சர் என்னவுமாம்
தலைவனாய்
நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாய் இருக்குமா போலே யாயிற்று இடையர்க்கும் அவ்வருகாய் இருக்கும் படி
அபிஜாதனுக்கு அல்லது பெண் கொடார்கள் இறே

இளவேறேழும்
பருவத்தின் இளமையால் ம்ருத்யுவைப் போலே இருக்கை
நப்பின்னை பிராட்டியை அணைக்கைக்கு உள்ள அபிநிவேசத்தாலே ஓர் ஒன்றாக அன்றிக்கே ஒரு காலே நெரிக்கை
தழுவிய
அவற்றினுடைய நிரசனத்துக்குப் பலம் -அவளை அணைக்கை யாகையாலே இதுவும் போக ரூபமாய் இருந்த படி
எந்தாய் என்பன்
அவள் இச்செயலுக்குத் தோற்று -என்னாயன் -என்று சொல்லும் அத்தையும் சொன்னேன்
நினைந்து
அஹ்ருதயமாக சொல்லி விட்டேனோ -நெஞ்சாலும் தூஷித்தேன்
நைந்தே
மானசமாய் பிறர் அறியாதபடி இருந்ததோ –
இவ்விஷயத்தே இவன் சிதிலனானான் என்று நாடு அறியும் படி காயிகமாயும் தூஷித்தேன்
அவதாரத்தில் அணைய ஆசைப்படுவார் அவள் பாசுரத்தாலே இறே சொல்வது
முதல் திருவாய் மொழியில் நித்ய ஸூ ரிகளுக்கு அனுபாவ்யமான மேன்மையை தூஷித்தேன்
பத்துடை அடியவரில் யசோதைப் பிராட்டிக்கு அனுபாவ்யமான நீர்மையை தூஷித்தேன்
அஞ்சிறைய மட நாரையில் பிராட்டிமார் பாசுரத்தைச் சொன்னேன்
நினைந்து -மானசம் /நைந்து – காயிகம் /என்பன் -வாசிகம் /

நினைந்து நைந்தே-வள வேழுலகின் முதலாய வானோர் இறையை களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன்
பின்னையும் தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய் இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் -அரு வினையேன் -என்று அந்வயம் –

—————————————————————————————————

அர்ஹன் அல்லேன் என்கைக்கு நான் ஆர் -ப்ரேமார்த்த சித்தரான ப்ரஹ்ம ருத்ராதிகள் அன்றோ அது சொல்ல பெறுவர் என்கிறார்

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-

நினைந்து
முந்துற பகவத் குணங்களை ஸ்மரிப்பர்கள்
நைந்து
அந்த ஸ்ம்ருதியாலே சாரீரமான சைதில்யம் பிறக்கும்
உள்கரைந்து
நினைக்கைக்கும் பரிகரம் இல்லாத படி மனஸ் அழியும்
உருகி
பின்னை ஒரு அவயவி ஆக்க ஒண்ணாத படி மங்கும்
இமையோர் பலரும் முனிவரும்
ப்ரஹ்மாதிகளும்-சனகாதிகளும்
புனைந்த கண்ணி
இந்த சைதில்யம் -தொடுகிற போதே யுண்டாகை
மாலை -என்ற போதே புனைந்து இருக்கும் என்று தோற்றா நிற்க -விசேஷித்தது சிதிலராய்க் கொண்டு தொடுத்தார்கள் என்று தோற்றுகைக்காக
நீர்
அர்க்க்யாதி ஜலம்
சாந்தம்
கந்தத்ரவ்யம்
புகையோடு
அகிற்புகை
ஏந்தி
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி என்னுமா போலே ஏந்துகை தானே போக ரூபமாய் இருக்கை
பூர்ணன் ஆகையாலே அவனுக்கும் இவர்களுடைய உத்யோகமே அமையும்
ஏந்தி வணங்கினால்
ஆராதன சமாப்தியிலே வணங்குகை அன்றிக்கே இவற்றை ச்வீகரிக்கிற நீர்மையைக் கண்டு நிர்மமராய் விழுவார்கள்
இது சனகாதிகள் படி அன்றோ என்னில்
உபயபாவ நிஷ்டர் ஆகையாலே சத்வம் தலை எடுத்தால் சனகாதிகளோ பாதி ப்ரஹ்மாதிகளுக்கும் இவை எல்லாம் உண்டாய் இறே இருப்பது

நினைந்த வெல்லாப் பொருள்கட்கும்
சம்ஹார சமயத்திலே புருஷார்த்த உபயோகியான கரணங்களை இழந்து கிடக்கிற தய நீய தசையைக் கண்டு
ஐயோ என்று நினைப்பதொரு நினைவு உண்டு -அத்தைச் சொல்லுகிறது
அசித விசேஷிதான் ப்ரலய ஸீம நிசம்சரத கரண கலேபரைர் கடயிதுந்தயமாநமநா
வித்தாய்
தேவாதி சகல பதார்த்தங்களுக்கும் காரணமாய்
முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை –
ஸ்வ கார்யத்தைப் பிறப்பிக்கும் போது தான் முதல் அழியாத படியான மநோ வியாபார ரூப சங்கல்ப ஞானத்தை யுடைய உன் வைலஷண்யம்
ஆனால் சங்கல்பமோ ஜகத் காரணம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ -என்னில்
ஆனாலும் காரணமாம் போது சங்கல்ப பூர்வகமாக வேணும்
சங்கல்ப விசிஷ்டன் காரணம் ஆனாலும் பஹூச்யாம் என்கிற சங்கல்ப ப்ராதான்யத்தாலே சொல்லுகிறது
மாசூணாதோ
தங்களோடு -உப கரணங்களோடு வாசியற உனக்கு போக உபகரணமாம் படி இருக்கும் நித்ய ஸூ ரிகளுடைய அனுகூல பிரவ்ருத்திகளை
கர்மம் -அத்தால் வந்த அசித் சம்சர்க்கம் -அத்தால் வந்த அஹங்காராதிகள்-இவற்றை யுடைய ப்ரஹ்மாதிகள் பண்ணப் புக்கால் உன் பெருமை மழுங்காதோ
மாயோனே
ப்ரஹ்மாதிகளையும் சூத்ர மனுஷ்யர்களுடைய ஸ்தானத்திலே யாக்க வல்ல உன்னுடைய ஆச்சர்யமான வை லஷண்யம் இருந்த படி என்

நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை
இமையோர் பலரும் முனிவரும் நினைந்து நைந்து உள்கரைந்து உருகி புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு
ஏந்தி வணங்கினால் மாசூணாதோ மாயோனே-என்று அந்வயம்

———————————————————————————————————

இப்படி நீர் அகலுகைக்கு அடி நம் மேன்மையைப் பார்த்தாயிற்று -அவ்வோபாதி நம் நீர்மையையும் பாரீர் என்று
த்ரிவிக்ரம அபதானத்தைக் காட்டக் கண்டு இருந்த படி என் என்று அகலுகை தவிர்ந்து கால் தாழுகிறார் –

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-

மாயோனிகளாய்
விலஷண ஜென்மத்தை யுடையராகை
நடை கற்ற
தங்கள் ஜன்ம அனுகூலமான ஸ்ருஷ்ட்யாதி மரியாதைகள் கற்று உள்ள
வானோர் பலரும்
தச பிரஜாபதிகள் -ஏகா தச ருத்ரர்கள் -அஷ்ட வஸூக்கள் -முதலான சர்வ தேவதைகளும்
முனிவரும்
ருஷிகளும்
நீ யோனிகளைப் படை என்று
வானோர் பலரும் முனிவருமான யோனிகளை நீ படை என்று
அவ்வருகு உள்ளது எல்லாம் தானே சிருஷ்டித்து -தேவாதிகளை எல்லாம் நீயே சிருஷ்டி என்று
நிறை நான்முகனைப் படைத்தவன்
ஜ்ஞான சக்த்யாதிகளால் பூர்ணனான ப்ரஹ்மாவைப் படைத்தவன்

சேயோன் எல்லா வறிவுக்கும்
ஜ்ஞாநாதிகரரான ப்ரஹ்மாதிகள் உடைய ஜ்ஞானத்துக்கும் கோசரம் அல்லாதான்
யன்நாயம் பகவான் ப்ரஹ்ம ஜ்ஞாநாதி புருஷோத்தமம்
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன்
லோகங்களை எல்லாம் திருவடிகளாலே அளந்து கொண்டவன்
நாய்ச்சிமாரும் தொடும் போது கூச வேண்டும்படியான திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் ஓடையும் அளந்தது
இங்கனம் செய்வான் என் என்னில்

எல்லா எவ்வுயிர்க்கு தாயோன்
எல்லாரோடும் சம்பந்தம் ஒத்து இருக்கை
எல்லாம் என்று சாகல்ய பரம் –
எவ்வுயிர் என்று விலஷணம் அவிலஷணம் -என்று பாராது ஒழிந்தபடி

தாயோன்-
தாய் போலே பரிவன் ஆனவன்

தான்ஓர் உருவனே
இது ஒரு பிரகாரமே
மேன்மைக்கு ஒப்பு இல்லாதா போலே நீர்மைக்கும் அவதி இன்றிக்கே இருக்கிறபடி என் -என்று விஸ்மிதர் ஆகிறார் –

——————————————————————————————–

தான் நிரபேஷனாய் இருந்து வைத்து -ச்ருஷ்ட்யாத் அநேக யத்னங்களை பண்ணி என்னை விஷயீ கரித்தவன்
நான் அல்லேன் என்னிலும் தன்னுடைய சுசீல்ய குணத்தாலே விடான் என்று சமாஹிதர் ஆகிறார் –

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே -1-5-4-

தானோர் உருவே தனிவித்தாய்த்
நிமித்த உபாதான சஹாகாரிகளான மூன்று காரணமும் தானேயாய் -வித்தாய் என்று உபாதானம் சொல்லிற்று
தனி வித்தாய் என்று நிமித்தாந்திர நிஷேதம் பண்ணிற்று
ஓர் தனி வித்தாய் -என்று சஹகார்யந்திர நிஷேதம் பண்ணிற்று
சதேவ ஏகமேவ அத்விதீயம் -என்கிற சுருதி சாயையாலே அருளிச் செய்கிறார்
நாட்டிலே இவை வேறு பட்டு இறே இருப்பது –

தன்னில் மூவர் முதலாய
இஷ்வாகு வம்ச்யர் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு எண்ணலாம்படி இருக்குமா போலேயும்
யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு எண்ணலாம்படி இருக்குமா போலேயும்
ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணி அவர்களுக்கு அந்தராத்மாவாய் நின்று சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணி போருகையாலே
தன்னோடு கூடின மூவர் முதலாய என்னுதல்
தன்னில் -தன்னுடைய சங்கல்ப்பித்திலே
மூவர் முதலாய -ப்ரஹ் மேந்த்ர ருத்ரர்களுக்கு முதலாய் என்றுமாம் –

வானோர் பலரும்
தேவ ஜாதியும்
முனிவரும்
மந்திர சூத்ர த்ரஷ்டாக்களான மகார்ஷிகளும்
மற்றும் மற்றும்
மனுஷ்ய திர்யக்குகளும்
முற்றுமாய்
அனுக்தமான ஸ்தாவராதிகளும்
இவை எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக
ஆய்-என்கிறது பஹூச்யாம் -என்றால் போலே –

தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி
நிரபேஷனான தான் ஒப்பில்லாத ஏகார்ணவத்தை தன் சங்கல்ப்பத்தினால் தோற்றுவித்து
அதனுள் கண் வளரும்
அதுக்கு உள்ளே ஸ்ருஷ்ட் யுன்முகனாய் இவற்றினுடைய ரஷண சிந்தையைப் பண்ணிக் கொண்டு சாய்ந்து அருளும்
இப்படிச் செய்கிறவன் ஆர் என்னில்
வானோர் பெருமான்
நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனானவன்
வைகுந்தன்
-அவர்களும் தானுமாய் அனுபவிக்கைக்கு நித்தியமான விபூதியை யுடையவன்
மா மாயன்
அங்கு அங்கனே இருக்கச் செய்தே இவ் விபூதியிலே வந்து இவர்களோடு ஒரு நீராகக் கலந்த அத்யார்ச்ச்யமான சீலாதிகளைக் காட்டி
என்னை அகலாமல் சேர விட்டுக் கொண்டவன்
எம்பெருமானே
இவர் எனக்கு ஸ்வாமியே
நானும் அவனுக்கு அடிமை
இத்தலை இறாயா நிற்க -தன் பேறாகச் சேர விட்டுக் கொள்ளுமவன் இறே ஸ்வாமி யானவன் –

—————————————————————————————————

இவ்வளவிலே முகம் காட்டில் பழையபடியே அகலும் -அவர் தாமே அர்த்திக்கும் தனையும் முகம் காட்டக் கடவோம் அல்லோம் -என்று
அகல நிற்க -உன்னைச் சேருமாறு அருளாய் என்கிறார் –

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
மானின் நோக்குப் போலே முக்க்தமான நோக்கை யுடையளாய்-நிரந்தர சம்ச்லேஷத்தாலே துவட்சியை யுடையளான
பிராட்டியைத் திரு மார்பிலே யுடையானாகையாலே மாதவன் என்கிற திரு நாமத்தை முக்யமாக யுடையவனே
ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவல் சந்நிஹிதையாய் இருக்க உனக்கு அருளாது ஒழியப் போமி

கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் நிமிரும்படி சுண்டு வில்லை தெறித்தார் போலே அநாயாசேன நிமிர்த்தாய்
சிருஷ்டி காலத்திலேயே மூட்டுவாய் அறியுமவன் இறே
தெறிக்கை யாவது கிரியையாய்-இப்போது நிமிர்த்தாய் என்றபடி
ஆஸ்ரிதரை அவத்யம் பாராதே விஷயீ கரித்து பின்னை அவர்களுடைய அவத்யத்தை போக்குமவனே-

கோவிந்தா
திர்யக்குகளோடும் பொருந்துமவன் -என்கை
அங்கன் இன்றிக்கே பெருமாளுடைய பால்யத்தில் சுண்டு வில்லையிட்டு கூனியுடைய கூன் சிதையும் படி
மர்மத்தில் தெறித்த படியைச் சொல்லிற்று ஆகவுமாம்
கோவிந்தா -பூமிக்கு ரஷகன் -என்கை
அப்பஷத்தில் தீம்பு சொல்வது கிருஷ்ணனுக்கு ஆகையாலே பெருமாள் தெம்பை அவன் பக்கலிலே வைத்து கோவிந்தா என்கிறது என்றும் சொல்வர்

வானார் சோதி மணி வண்ணா
த்ரிபாத் விபூதி நிரம்பும் படியான தேஜஸ் சையும் -நீல மணி போலே ச்ப்ருஹணீயமான நிறத்தையும் யுடையவனே
மதுசூதா
மதுவை நிரசித்தால் போலே -நான் அயோக்யன் -என்று அகலுகையை தவிர்த்தவனே

நீ யருளாய் உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே
விஷ்ணோ பதே பரமே மத்தவ உத்ச -என்னும்படியே நிரதிசய போக்யமான திருவடிகளை
வினையேனான நான் பேரும் படி கிருபை பண்ணி அருள வேணும்
தாம் இசைந்த பின்பும் கிடையாமையாலே வினையேன் என்கிறார் –

—————————————————————————————-

இவர் அபேஷித்த போதே முகம் காட்டாமையாலே அவனுடைய குண சேஷ்டிதங்கள் ஸ்ம்ருதி விஷயமாய் நலிய சிதிலர் ஆகிறார் –

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

வினையேன் வினை –
இவரை ஒழிய வேறு ஒருவருக்கு உள்ளது ஓன்று அன்று இந்த வினை –
நித்ய ஸூ ரிகளுக்கு நிரந்தர அனுபவத்தாலே இல்லை –
யஸ்த்வயா சஹச ஸ்வர்க்க-என்று சம்ச்லேஷம் ஸூ கமாக இறே பிரிவுக்கு சம்பாவனை யுடையாருடைய வார்த்தையும் –
சம்சாரிகள் அந்ய பரர
பிரத்யாசத்தியிலே அயோக்யன் என்று அகலுவது இவர்க்கே உள்ளது ஓன்று
தீர் மருந்தானாய்
சீலாதிகளைக் காட்டி அகன்று போகிற என்னை மீட்டவனே -அகலுகிற இவரைக் கால் பிடிக்கிறவன் தான் ஆர் என்னில்
விண்ணோர் தலைவா –
நிரந்தர அனுபவம் பண்ணுவாரை ஒரு நாடாக யுடையவனே –
கேசவா –
அவர்களால் பர்யாப்தி பிறவாதே திருத்தி அடிமை கொள்ளுகைக்கு -ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான் -என்று
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு உத்பாதகனுமாய் -தன் மத்யச்தனாய் வந்து அவதரிக்கும் படி –

மனை சேர் ஆயர் குல முதலே –
பஞ்ச லஷம் குடியாகையாலே மனையோடு மனை சேர்ந்த -என்னுதல்
இவ்வருகே இடையர் இருந்த மனைகளிலே வந்து அவர்கள் குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே
மனை சேர்ந்த ஆயர் என்னவுமாம்
மூங்கில்களை கையோடு கொண்டு போய் பசுக்களுக்கு புல் உள்ள விடத்தே வளைத்துக் கொண்டு இருக்கும் அத்தனை என்கை
புலவிக் குல வானவர் தம் கோ -என்னும் அதுக்கு அவ்வருகே யாயிற்று ஆயர் குல முதலே -என்கிற இது
மா மாயனே
சர்வ சக்தியாய் இருந்து வைத்து வெண்ணெய் களவிலே இழிந்து அதை தலைக் கட்ட மாட்டாதே கட்டுண்டு நிற்கும் ஆச்சர்யம்
மாதவா –
இவ் வெளிமைக்கு நிதானம் இருக்கிற படி -அவளை உகப்பிக்கை யாகிறது -ஆஸ்ரிதற்கு எளியன் ஆகை இறே
-ரஷணத்தில் அதி சங்கை பண்ணுவார்க்கு மழு வேந்தி ரஷிக்கும் படி சொல்லுகிறது மேல்

சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
சினை -கவடு -நெருங்கின பணைகளை யுடைத்தாய் தழைத்து இருக்கையாலே இலக்குக் குறிக்க அரிதான மரா மரங்கள் ஏழையும் எய்தவனே
சிரீதரா -எய்கிற போதை வீர லஷ்மியைச் சொல்லுகிறது
இனையாய்
இப்படிப்பட்ட குண சேஷ்டிதங்களை யுடையவனே
இனைய பெயரினாய் ‘
இக் குண சேஷ்டிதங்களிலே இழியும் துறையான திரு நாமங்களை யுடையவனே
என்று நைவன் -அருளாய் என்னவும் மாட்டாதே சிதிலன் ஆகா நின்றேன்
அடியேனே
இது ஸ்வ தந்திர வஸ்துவாய் படுகிறதோ
பிறருக்கு உரிய வஸ்துவாய் அழிகிறதோ –

———————————————————————————————————

நைவன் என்றவாறே மெய்யாகக் கருதி முகம் காட்டினான் -முகம் –

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

அடியேன்
இப்போது அடியேன் என்கிறது அடிமைக்கு இசைந்து அன்று
ஜ்ஞானா நந்தகளோபாதி நிரூபகமாக சேஷத்வத்தை பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே
அஹம் என்கிறவோ பாதி -அடியேன் -என்கிறார்
சிறிய ஞானத்தன்
அல்ப ஜ்ஞானத்தை யுடையவன்
அறிதலார்க்கும் அரியானை
ஜ்ஞானாதிகரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அறிய அரியவனை
ஷூத்ர விஷயங்களையும் பரிச்சேதிக்க மாட்டாதவன் நான் –
அவன் அதிகராலும் அபரிச்சேத்யன்
ஸ்வ தஸ் சர்வஜ்ஞனான தனக்கும் அறியப் போகாது -தனக்கும் தன் தன்மை அரியான் இ றே
பர்வத பரமாணுக்களுக்கு உண்டான சேர்த்தி போலே இ றே –

கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக்
சர்வாதிக வஸ்துவுக்கு அடையாளம் இருக்கிறபடி
சர்வ கந்த -என்கிற விஷயம் ஆகையாலே பரிமளம் அலை எறியா நிற்கும்
திரு மேனியில் குளிர்த்தியாலே செவ்வி மாறாதே இருக்கும்
இப்படி இருக்கிற திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதன் ஆனவனை
கண்ணனை
அறிவரிதான நிலை தான் அவதரித்து நின்ற இடத்திலே
கடல் கிட்டிற்று என்றால் பரிச்சேதிக்கலாமோ-
மனுஷ்யத்வே பரத்வம் இருக்கிற படி
அன்றிக்கே
ஐஸ்வர்யத்தாலே எட்டாது இருக்குமோ என்னில் ஆஸ்ரிதற்கு ஸூ லபனாய் இருக்கும் என்னவுமாம் –

செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியாரை செடியார் யாக்கை சேர்த்தல் தீர்க்கும்
இங்கு அடியார் என்கிறது கேவலரை
தம்மைப் போலே கிட்டி அவத்யத்தை விளைக்காதே பிரயோஜ நாந்தரங்களை கொண்டு அகலுகையாலே
அடிமை யாவது ஸ்வாமிக்கு அதிசயத்தை பண்ணுகை இ றே
தூறு மண்டின சரீரம் அவர்களைச் சேராதபடி பண்ணும்
ஜரா மரண மோஷாயா-என்று இ றே அவர்கள் புருஷார்த்தம் இருப்பது
திருமாலை
அவர்கள் சரீரம் சம்பந்தம் அறுத்துக் கொடுப்பான் ஸ்ரீ யபதி இ றே
அவர்களில் காட்டில் நீர் நீர் குறைய நின்ற இடம் என் என்னில்

அடியேன் காண்பான் அலற்றுவன்
அடியேன் ய்ந்பது ஸ்வாமிக்கு அதிசயத்தைப் பண்ணப் பார்த்தால் அன்றோ
மாம்பழ யுண்ணி போலே பேரைச் சுமந்து காண வேணும் என்று கூப்பிடா நின்றேன்
அவ்விஷயத்தைக் கிட்டி தூஷிக்கப் பாரா நின்றேன்

இதனின் மிக்கதோர் அயர்வுண்டே —
இதுக்கு மேற்பட்ட அறிவு கேடு உண்டே
இப்போது அறிந்தேனாய் அத்தலைக்கு அவத்யத்தை பண்ணுகிற இதில் காட்டில் முன்பு சம்சரித்துப் போந்த அறிவு கேடு நன்றாய் இருந்ததே
அன்று அவனை அழிக்கப் பார்த்திலேன்
சம்சார தசையிலே அஜ்ஞ்ஞானம் தன்னை அழிக்குமது இ றே
இது அவனை அழிக்குமது இ றே –

——————————————————————————————————————–

இப்படி அகன்ற இவரைச் சேர்த்துக் கொள்ளுகைக்காக ஆஸ்ரிதரை ஒழியச் செல்லாத தன் படியைக் காட்ட கண்டு விஸ்மிதர் ஆகிறார்

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-

உண்டாய் உலகு ஏழ் முன்னமே
லோகங்கள் ஏழையும் எடுத்து வயிற்றிலே வைத்தாய் -முன்பு ஒரு காலத்திலே
வெண்ணெய் அமுது செய்தது மண் கரைய மருந்தாகில் சம காலத்திலே யாக வேண்டாவோ
யுமிழ்ந்து
ஒன்றும் சேஷியாத படி யதா பூர்வ மகல்பயத்-என்கிறபடியே லோகங்களை உண்டாக்கி சேஷிக்கில் இன்றி மருந்து செய்ய வேண்டுவது
உண்கிற போது சேஷித்தது உண்டாகில் இ றே உமிழ்கிற போதும் சேஷிப்பது
மாயையால் புக்கு
இச்சையாலே -இந்த லோகத்திலே
சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி புக்கு
அப்ராக்ருதமான திரு மேனியை ஷூத்ர மனுஷ்யருடைய ஹேய சரீர சமஸ்தானம் ஆக்கிக் கொண்டு அவதரித்து
உவலை யாக்கை எய்தி என்னாதே-நிலை எய்தி என்கையாலே -திவ்ய சமஸ்தானத்தை இதர சமஸ்தானம் ஆக்கினான் என்கை-

உண்டாய் வெண்ணெய்
ஈச்வரனாய் புக்கு வெண்ணெய் அமுது செய்ய ஒண்ணாதே –
அதுக்காக சஜாதீயனாகப் புக்கு அமுது செய்தாய்
மண்ணை அமுது செய்தது அதின் சத்தைக்காக –
வெண்ணெய் அமுது செய்தது தன் சத்தைக்காக –

மண் தான் சோர்ந்தது உண்டேலும்
மண்ணை அமுது செய்து உமிழ்கிற போது அதில் சோர்ந்தது உண்டே யாகிலும்
யதா பூர்வ மகல்பயத்-என்கையாலே சேஷிக்கைக்கு பிரசங்கம் இல்லை
மனிசர்க்காகும்
மனுஷ்யர்களுக்கும் பிரயோஜனப் படுக்கைக்கு
பீர் சிறிதும்
பீர் -என்றும் -அல்பம் –
சிறிது என்றும் அல்பம்
அத்யல்பம் -என்றபடி
அண்டா வண்ணம்
சேஷியாத படி

மண் கரைய நெய்யூண் மருந்தோ
அன்று இ றே
ஆஸ்ரிதர் உகந்ததொரு த்ரவ்யத்தாலே யல்லது செல்லாமை இ றே
சேஷித்தால் மருந்தாகாதோ
அன்றிக்கே
மனிசர்க்காகும் பீர்
மனுஷ்யருக்கு வரும் வைவர்ண்யம் அத்யல்பமும் சேஷியாத படி -என்னவுமாம்
மாயோனே
ஆச்சர்ய பூதனே
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யமே தாரகமாய் இருக்கிறதொரு ஆச்சர்யம் இருக்கிறபடி என் –

—————————————————————————————————————–

பரிவரான யசோதாதிகள் வெண்ணெய் உனக்கு அம்ருத சமம் -என்னுடைய ஸ்பர்சம் விஷ சமம் -நான் அகலுகையே உக்தம் -என்ன
பூதனை நஞ்சு பாதகம் ஆகாதாப் போலே உம்முடைய தோஷமும் பாதகம் அன்று –
பெற்ற தாய் போலே வந்த பேய்ச்சி -என்று போலியும் அமையும் -என்ன
ஆகில் அகல்வேன் அல்லேன் என்று சமாஹிதர் ஆகிறார் –

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-

மாயோம் –
இரண்டு தலையும் அழித்துக் கொள்ளக் கடவோம் அல்லோம் –
பிரிகை என்றும் -மாய்கை என்றும் பர்யாயம் –
தீய
தீமை யாவது -நெஞ்சில் திண்மை
வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
யசோதைப் பிராட்டியைப் போலே பரிவு தோற்ற ஏத்திக் கோடு வருகை
பெரிய வஞ்சம் -மா வஞ்சம் -இரண்டாலும் ஆதிக்யமேயாய்-அற மிக்க வஞ்சனத்தை யுடையவள் –
‘ஈஸ்வரனும் தாய் என்று பிரமிக்கும் படி மறைத்துக் கோடு வருகை
வீய -முடிய
தூய குழவியாய் –
ஈஸ்வரத்வம் நடையாடாத படியான பிள்ளைத் தனத்தில் சுத்தி –
அடியறிவார் நீ ஈஸ்வரன் என்றால் -ஆத்மாநம் மானுஷம் மன்யே – அஹம் வ -இத்யாதி என்னும்படியாய் இருக்கை
விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
இவன் பிள்ளைத் தனத்தில் குறை வில்லையாகில் பின்னை அதன் கார்யம் காணாது ஒழிவான் என் என்னில்
-விஷம் அம்ருதமாம் முஹூர்த்தத்திலே யாயிற்றுப் பிறந்தது
தர்மியை வேறு ஒன்றாகக ஒண்ணாமை யாலே விரோதித்த ஆசூர பிரக்ருதிகள் முடிய பிராப்தம் –
மாயன்
விஷம் அம்ருதமாம் படி அமுது செய்து
தன்னைத் தந்து நம்மை உண்டாக்கின ஆச்சர்ய பூதன்
இப்படி பூதனுடைய வஞ்சனத்தில் அகப்பட்டு இருகிறவன் தான் ஆர் என்னில்

வானோர் தனித்தலைவன்-
நித்ய சூரிகளுக்கு அத்விதீயனான நிர்வாஹகன் -த்ரிபாத் விபூதியாக பரிந்து நோக்க இருக்கிறவன் கிடீர்
-பூதனை கையில் அகப்பட்டு இருக்கிறவன்
மலராள் மைந்தன்
நித்ய சூரிகள் ஜீவனம் இருக்கிற படி
மைந்தன் -நித்ய யௌவன ஸ்வ பாவன்
எவ்வுயிர்க்கும் தாயோன்
நித்ய சூரிகள் பக்கல் இருக்கும் இருப்பு சகல ஆத்மாக்கள் பக்கலிலும் ஒத்து இருக்கும் அவன்
சகல ஆத்மாக்களுக்கும் தாய் போலே பரிவன் ஆனவன் –
தம்மான்
இந்த வாத்சல்யத்துக்கு அடியான சம்பந்தம் இருக்கும் படி
தம்மான் -சர்வேஸ்வரன்
என்னம்மான்
நித்ய சூரிகளும் மற்றும் உள்ள சகல ஆத்மாக்களும் ஒரு தட்டும் -நான் ஒரு தட்டும் ஆம்படி
என் பக்கலிலே விசேஷ கடாஷத்தை பண்ணினவன்
அம்மா மூர்த்தியைச் சார்ந்தே
புருஷோத்தமனை கிட்டியே மாயக் கடவோம் அல்லோம்
விலஷணமாய் பூஜ்யமான திரு மேனியை யுடையவன் –

—————————————————————————

மாயோம் என்றவாறே ஹ்ருஷ்டனாய் -அடிமை செய்கையிலே உன்முகராம்படி-தம்மை அயோக்யன் என்று அகலாத தேசத்து
ஏறக் கொடு போவதாகப் பரமபதத்தை கோடிக்கத் தொடங்கினான் என்கிறார் –

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்து யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

சார்ந்த –
இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தியோ என்னலாம் படி பொருந்தி இருக்கை
விரு வல்வினைகளும் சரிந்து
இருவகைப்பட்ட புண்ய பாப ரூபமான கர்மங்களை விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே அநாயாசேன போக்கி
வல்வினை
சர்வ சக்தியானவனும் அனுசந்தித்தால் நெஞ்சு உளுக்க வேண்டும்படி இருக்கை
சார்ந்த
எள்ளும் எண்ணெயும் போலே சேர்ந்து இருக்கை
மாயப் பற்று அறுத்து
விஷயங்களில் ருசி வாசனைகளைப் போக்கி
மாயை -அஜ்ஞ்ஞானம் –அத்தாலே ருசியை நினைக்கிறது -பற்று -வாசனை
தீர்ந்து
க்ருதக்ருத்யனாய் என்னுதல்
அநந்ய பிரயோஜனனாய் என்னுதல் –

தன்பால் மனம் வைக்கத் திருத்தி
விரோதியைப் போக்கும் அளவு அன்றிக்கே மனஸ் ஸூ க்குத் தானே விஷயமாம் படி அண்ணி
வீடு திருத்துவான்
பரமபதத்தை கோடிக்கத் தொடங்குவான்
அதாகிறது -ஆழ்வார் எழுந்து அருளி இருக்கிற மகோத்சவத்தாலே ஒரு புதுமை தோற்றி இருக்கை

ஆர்ந்த ஞானச் சுடராகி
பரிபூர்ண ஞான பிரபனாய்
யகலம் கீழ் மேல்அளவிறந்து
பத்துத் திக்கையும் வியாபித்து சர்வகதனாய் என்றபடி
நேர்ந்து யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம்
அதி ஸூ ஷ்மமான சேதன அசேதனங்கள் ஆகிற இவற்றுக்கு அந்தராத்மாவாய்
இப்போது வியாப்தி சொல்லுகிறது என் என்னில்
ஒருவனைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே இவரை அகப்படுத்துகைக்காக வியாப்தன் ஆகிறது
அன்றியே
இவர் கிட்டின பின்பு வியாப்தியும் சபிரயோஜனம் ஆயிற்று என்னவுமாம்
நெடுமாலே
என் பக்கலிலே அதி வியாமோஹத்தை யுடையவன்
இவர் பக்கல் பண்ணின வியாமோஹம் முனியே நான்முகன் அளவும் செல்லுகிறது ஆயிற்று
அவன் தெளிந்து வந்து முகம் காட்டி க்ரமத்தாலே கொடுபோகப் பற்றாத கலக்கத்தின் கார்யம் நடுவடைய
நெடுமால் –வீடு திருத்தும் ஸ்வபாவன்-என்று அந்வயம் –

————————————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி கற்றார்க்கு அயோக்யன் என்று அகலும் துக்கம் இல்லை என்கிறார் –

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –1-5-11-

மாலே
ஸ்வரூபத்தாலும் ஐஸ்வர்யத்தாலும் யுண்டான வை லஷன்யத்தை யுடையவனே
மாயப் பெருமானே
ஆச்சர்யமான குணங்களை யுடையவனே
மா மாயனே
ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடையவனே
என்று என்று மாலே ஏறி
இவற்றை அனுசந்தித்து பிச்சேறி-அதகிறது -அயோக்யன் என்று அகலுகை
மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
அவனும் தன் வியாமோஹத்தால் யாயிற்று இவரைச் சேர்த்துக் கொண்டது
அவன் தன் செல்லாமையைக் காட்டி சேர்த்து கொண்ட படியைக் கண்டு ப்ரீதராய்
அது உள்ளடங்காமையாலே வழிந்து புறப்பட்ட இத் திருவாய்மொழி க்கு உண்டான லோக பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது

பாலேய் தமிழர்
பாலோடு ஒத்து உள்ள தமிழ் அறிவார்
இசைகாரர்
இசை அறிவார்
பத்தர் பரவும்
சர்வேஸ்வரனும் ஆழ்வாருமான பரிமாற்றத்திலே கால் தாழ்ந்து இருக்குமவர்கள்
பாலேய் தமிழர் -என்கிறது முதல் ஆழ்வார்களை
இசைகாரர் -என்கிறது ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை
பத்தர் -என்கிறது பெரியாழ்வார் போல்வாரை
ஸ்ரீ பராங்குச நம்பி -ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பிள்ளை யுறங்கா வல்லி தாசர் போல்வர் என்னுமாம் -ஆழ்வான் ஓர் உருவிலே
பரவும் ஆயிரத்தின்
அக்ரமாக கூப்பிடுகை
பாலே பட்ட
ஆயிரத்தின் அருகே பட்ட -உள்ளே உண்டான
பட்ட -முத்துப் பட்டது என்றால் போலே
இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே
அயோக்யன் என்று அகலும் துக்கம் இல்லை –

———————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: