அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த -அருளிச் செயல் ரகஸ்யம்- த்வய பிரகரணம் -உத்தர வாக்யார்த்தம் —ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ரகஸ்ய பூஷணம் –

உத்தர வாக்யார்த்தம்
திருமாலைக் கை தொழுவர் -முதல் திரு -52–அடியாரைச் சேர்க்கும் திருமாலை- 1-5-7–என்கிறபடியே
புருஷகாரம் முன்னாகப் பற்றி பிரயோஜனங்களைக் கொண்டு அகலாதே
அவற்றை ஒழிந்து ஒண் டொடியாள் திருமகளும் -4-9-10–அவனுமான சேர்த்தியிலே அடிமையைப் பேறு என்று
கீழ்ச் சொன்ன உபாய பலத்தைக் காட்டுகிறது பிற் கூற்று

——————————————————————————————————-

இனி உத்தர வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக உபக்ரமிக்கிறார் -திருமாலை -என்று தொடங்கி
உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது என்றபடி -ப்ராப் யாந்தரத்துக்கு அன்று -என்கை –
பூர்வ வாக்கியத்தில் ப்ரதிபாதிதமான சாதனம் பல சதுஷ்ட்ய சாதாரணம் ஆகையால்
கீழ்ப் பண்ணின ப்ராபக வரணம் ப்ராப் யாந்தரத்துக்கு அன்று என்னும் இடம் சொல்லுகை -இப்போது ப்ராப்யம் சொல்லுகிற இதுக்கு பிரயோஜனம் என்றபடி –
உபயாந்தரங்களை விட்டு சரம உபாயத்தை பற்றினால் போலே உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு எல்லையான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது-
அதாவது உபாய வரணம் பண்ணுகிற அளவில் அநந்ய சரணத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு அனுகுணமாக கர்ம ஞான பக்திகள் ஆகிற
உபாயாந்தரங்களை விட்டு சரமமான சித்த உபாயத்தை பற்றினால் போலே உபேய பிரார்த்தனை பண்ணுகிற அளவிலும்
அநந்ய போகத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு அனுகுணமாக உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு சரமமான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது என்கை –
உபேயதயா வரணமும் உபாயதயா வரணமும் இ றே இரண்டுக்கும் க்ருத்யம் –
உபேயத்வேந வரித்த போது உபாய அபேக்ஷை உண்டு -ஆகையால் உபயமும் அபேக்ஷிதமாகக் கடவது
உபேயத்வ வரணமாவது -ஈஸ்வரன் திருவடிகளில் கைங்கர்யத்தையே உபேயமாக அத்யவசிக்கை –
உபாயத்வ வரணமாவது அவன் திருவடிகளை உபாயமாக அத்யவசிக்கை -அத்யாவசாய த்வயமும் இவ்வதிகாரிக்கு அபேக்ஷிதம் –
அநந்ய சாதநத்வ சித்திக்கு உபாய அத்யாவசாயம் வேணும் -அநந்ய போகத்வ சித்திக்கு உபேய அத்யாவசாயம் வேணும்
உபாய விசேஷ அத்யாவசாயம் பிரயோஜ நான்தர பரனுக்கும் உண்டாகையாலே தத் வியாவ்ருத்தி சித்திக்கு உபேய அத்யவாசாயம் வேணும்
சாதகனுக்கும் உபேய அத்யவசாயம் உண்டாகையாலே தத் வியாவ்ருத்தி சித்திக்கு உபாய அத்யவசாயம் வேணும்
அந்தரிக்ஷகத ஸ்ரீ மான் -சது நாகவர ஸ்ரீ மான் -என்கிறபடியே உபாய உபேய அத்யாவசாயங்கள் ஆகிற மஹத் ஐஸ்வர்யம் இவ்வதிகாரிக்கு அபேக்ஷிதம்
அத்தைப் பற்ற வி றே முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்று ச்ருதமாயிற்றும் என்றபடி
இது தன்னை அருளிச் செய்கிறார் அவற்றை ஒழிந்து என்று –
ஒண் டொடியாள் இத்யாதி -ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் ஒழிந்தேன் -ஒண் டொடியாள் திருமகளும் நீயும் நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு -என்று அருளிச் செய்தார் இ றே ஆழ்வார்
ஐங்கருவி கண்ட இன்பம் -அசித் தத்வ அனுபவமான ஐஸ்வர்ய அனுபவம்
சிற்றின்பம் -அணுவான சித் தத்வத்தைப் பற்றி வருகிற போகமான கைவல்யம்
பூர்வ கண்டத்தில் அர்த்தம் பலாந்தரங்களுக்கும் பல ப்ரதம் ஆகையால் -இவன் நம்மை உபாயமாகப் பற்றி பிரயோஜ நாந்தரங்களை
கொண்டு போகிறான் ஆகாதே -என்று ஈஸ்வர ஹிருதயம் கடல் கலக்கினால் போலே கலங்கும்
உத்தர கண்டத்தாலே -உன்னையே உபாயமாகப் பற்றி பிரயோஜ நாந்தரங்களை கொண்டு போவான் ஒருவன் ஆலன் என்று ஈஸ்வரன் மா ஸூ ச என்று
சேதனன் உடைய கண்ண நீரைத் துடைத்தால் போலே சேதனனும் ஈஸ்வரனை மாஸூச -என்கிறான் என்றதாயிற்று –
இப்படி தோற்றின சரணாகதி -தாவ தார்த்தி ததா வாஞ்சா தாவன் மோஹ ததாஸ் ஸூ கம் -இத்யாதிகளில் படியே சகல பல சாதனம் ஆகையால்
தத் அந்நிய கோ மஹோதாரா -என்கிறபடியே பரம உதாரனான சரண்யன் அர்த்திதார்த்த பரிதான தீஷிதனாய் –
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் என்னும் படி நிற்கையாலும் இங்கு என்ன பலத்துக்காக பிரபத்தி பண்ணுகிறது என்கிற அபேக்ஷையில்
மஹா உதாரனான சரண்யனுக்கும் சர்வ உத்க்ருஷ்ட விஷயமான இவ்வசீ கரண விசேஷத்துக்கும் சேஷத்தைக ரசனான தன் ஸ்வரூபத்துக்கும்
அனுரூபமான பல விசேஷத்தை உத்தர கண்டம் -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே-என்கிறபடியே ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக பிரார்த்திக்கிறது
இத்தாலே அநந்ய பிரயோஜனத்வமும் சித்திக்கிறது -என்னவுமாம்

————————————————————————————————————-

உத்தர வாக்ய பிரதம பதார்த்தம்
ஸ்ரீ மதே-பெரிய பிராட்டியாரோடே கூடி இருக்கிறவனுக்கு -நீ திருமாலே -என்னும் படி
-மாம் -அஹம்-என்கிற இடத்தில் ஸ்ரீ சம்பந்தத்தை வெளியிடுகிறது –

முன்னில் ஸ்ரீ மச் சப்தம் சேர்க்கைக்கு உறுப்பான சேர்த்தியைச் சொல்லிற்று
கட்டிலும் தொட்டிலும் விடாத தாயைப் போலே அகாரதத் விவரணங்களில் உண்டான லஷ்மீ சம்பந்தத்தை விசதம் ஆக்குகிற
இந்த ஸ்ரீ மச் சம்பந்தம் அடிமையை வளர்க்கைக்கு கூடி இருக்கும் படியைக் காட்டுகிறது –

திவ்யாத்ம ஸ்வரூபத்தை விடாதே -திருவில்லாத் தேவரில் நான்முகன் திரு -53–தான் நின்ற பக்கத்துக்குப் -நான்முகன் திரு -62-
பெருமையை உண்டாக்கி ஸ்வாமி நியாய்-
தன்னாகத் திரு மங்கை நாச் –8-4–என்னும்படி மார்பைப் பற்றி சத்தை பெற்று
திருமார்பில் மன்னத்தான் வைத்து உகந்தான் -பெரிய திருமொழி -6-9-6- மலர் அடியே அடை-என்று மார்பைப் பார்த்து காலைக் கட்டலாம் படி
புருஷகாரமாய் திரு மா மகளிரும் -6-5-8- தாம் மலிந்து இருந்து என்னும் படி
படுக்கையிலே ஓக்க இருந்து பிரியா வடிமையைக் கொண்டு -5-8-7-ப்ராப்யையாய்
மூன்று ஆகாரத்தோடு கூடின ஞான தசையில் தன்னைப் போலே அநன்யார்ஹர்யாக்கி
வரண தசையில் தன்னைப் போலே அநந்ய சாதனராக்கி
ப்ராப்ய அவஸ்தையில் தன்னைப் போலே அநந்ய போகர் ஆக்குகையாலே
சார்வு நமக்கு மூன்றாம் திரு -100–என்னும்படி யாயிற்று இவள் இருப்பது
சயமே யடிமை தலை நின்றார் 8-10-2–திருமாற்கு அரவு -முதல் திரு -53-மலிந்து திருவிருந்த மார்பன் மூன்றாம் திரு-57-என்னும்படி
செய்கிற அடிமை அல்லாதார்க்கும் ஸித்தித்து வர்த்தித்து ரசிப்பது
கோலத் திரு மா மகளோடு–6-9-3-என்கிற சேர்த்தியிலே ஆசைப் பட்டால் இறே
காதல் செய்து பெரிய திருமொழி -2-2-2- பொன்னிறம் கொண்டு -பெரிய திருமடல் -105- எழா நிற்கத் தனித் தனியே விரும்புகையால் இறே
தங்கையும் தமையனும் கொண்டு போந்து கெட்டான்-பெரிய திரு மொழி -10-2-3-
-கதறி அவளோடி–பெரிய திரு மொழி -3-9-4–என்னும் படி தலை சிதறி முகமும் கெட்டது
அவன் தம்பியே சொன்னான் -பெரிய திரு மொழி -10-2-4–என்னும் படி சேர்த்தியிலே நினைவாய் இறே
செல்வ விபீடணன் பெரிய திரு மொழி -6-8-5- நீடரசு பெற்று பெரியாழ்வார் -3-9-10-
அல்லல் தீர்ந்தேன்-பெரிய திரு மொழி-4-3-6- என்னும் படி வாழ்ந்தது –

———————————————————————–

இனி இவ்வாக்கியத்துக்கு ப்ரதிபதம் அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி பிரதம பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார்
-ஸ்ரீ மதே -என்று தொடங்கி
இங்கும் ஸ்ரீ சப் தத்துக்கு பூர்வ வாக்கியத்தில் சொன்ன வ்யுத்பத்தி த்வயமும் -அதில் அர்த்தமும் -மதுப் அர்த்தமான நித்ய யோகமும் அனுசந்தேயம்
-இரண்டு இடத்திலும் நித்ய யோகம் ஒத்து இருக்கச் செய்தே அவ்வவ தச அனுகுணமான இவள் இருக்கும் இருப்பை
அருளிச் செய்கிறார் -முன்னில் என்று தொடங்கி –
அவன் உபாயமாம் இடத்தில் தான் புருஷகாரமாய் இருக்கும் –
அவன் ப்ராப்யனாம் இடத்தில் தான் ப்ராப்யையுமாய் -கைங்கர்ய வர்த்தகையுமாய் இருக்கும் -அதாவது அவன் சேதனர்க்கு அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்திகளுக்கு
உபாயமாம் இடத்தில் சஹாயாந்தர சம்சர்க்கத்தை சஹியாமையாலே -தான் உபாய பாவத்தில் அந்வயம் இன்றிக்கே-சாபராத சேதனர் உடைய அபராதங்களைப் பார்த்து
அவன் சீறும் அளவில் அத்தை ஸஹித்து-அங்கீ கரிக்கும் படியாக பண்ணும் புருஷகாரமாயும் இருக்கும்
அவன் சேதனர்க்கு கைங்கர்ய பிரதிசம்பந்தி தயா பிராப்யனாம் இடத்தில் அவனோபாதி கைங்கர்ய பிரதி சம்பந்தியாய்க் கொண்டு தான் ப்ராப் யையுமாய்
-இவர்கள் செய்யும் கைங்கர்யத்தை அவன் திரு உள்ளத்திலே ஓன்று பத்தாகப் படுத்தி உகப்பிக்கையாலே கைங்கர்ய வர்த்தகையுமாய் இருக்கும் -என்கை –
சேஷித்வ பிரதிசம்பந்தி ஒரு மிதுனம் ஆனவோபாதி-கைங்கர்ய பிரதி சம்பந்தியும் ஒரு மிதுனமாய் இ றே இருப்பது-
மிதுன வேஷம் ஸ்வரூபம் ஆனால் மிதுன கைங்கர்யம் இ றே ஸ்வரூப பிராப்தம்
பிராட்டியின் ஆகார த்ரயத்தை விசத்தமாக அருளிச் செய்கிறார் -திவ்யாத்ம ஸ்வரூபத்தை என்று தொடங்கி-
அடிமை தான் ஸித்திப்பதும் வளர்வதும் ரசிப்பதும் அச் சேர்த்தியிலே இ றே -இத்தை அருளிச் செய்கிறார் -சயமே என்று தொடங்கி –
திவ்ய தம்பதிகளில் ஏக தேச மாத்ரத்தைப் பற்றுவார்க்கு ஏற்படும் அனர்த்தத்தை சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் -தனித்தனியே -என்று தொடங்கி
தங்கை -சூர்ப்பணகை–தமையன் -இராவணன் -என்றபடி
இவ்விஷயத்தில் ஒன்றைப் பிரித்து ப்ராப்யமாக நினைக்கும் அன்றும் -பல அபாவம் மாத்ரம் அன்றிக்கே ஸ்வ நாசத்தையும் பலிப்புக்கும் ஆகையால்
-தன்னை நயந்தாளை என்று விசேஷண வ்யதிரேகேண விசேஷய மாத்ரத்தை ப்ராப்ய மாக நினைத்த சூர்ப்பணகைக்கு முக் யாங்க ஹானி பிறந்ததும்
-பொல்லா வரக்கன் என்னும் படி விசேஷண மாத்ரத்தை ப்ராப்யமாக நினைத்த ராவணனுக்கு அங்க ஹானி அளவில் போகாமல் அங்கியான தேகத்தை நசிப்பித்ததும்
அநந்யா ராகவேணாகம் -ந ச சீதா த்வயா ஹீ நா -என்கிற உடலையும் உயிரையும் பிரித்து விட்டார்
இருவரையும் பற்றி வாழ்ச்சி உற்றான் இ ரே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-அது தன்னை அருளிச் செய்கிறார் அவன் தம்பி என்று தொடங்கி
ஆக அன்வய வ்யதி ரேகங்களால் மிதுனம் உத்தேச்யம் என்றதாயிற்று
மாதா பிதாக்கள் இருவரும் சேர விருக்க ஸூஷ்ருஷிக்கும் புத்ரனைப் போலெ இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்யக் கடவன் என்றதாயிற்று

—————————————————————————————————————–

நாராயண சப்தார்த்தம் –
நாராயண பதம் அடிமை கொள்ளுகிறவனுடைய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
எழில் மலர் மாதரும் தானுமான சேர்த்தியிலே –7-10-1-இன்பத்தை விளைக்கிறாப் போலே
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த-4-5-3- என்கிறபடியே ஸ்வரூப குண விக்ரஹ விபூதிகளோடே கூடி
ஆனந்தத்தை விளைத்து அடிமையிலே மூட்டுமவனுடைய பூர்த்தியைக் காட்டுகிறது –
பிணங்கி யமரர் -1-6-4–பேதங்கள் சொல்லும் –4-2-4-குணங்கள் எல்லாம் அனுபாவ்ய விஷயங்களே யாகிலும்
வகுத்த விஷயத்தில் இனிமைக்குத் தோற்று -ஏவிற்றுச் செய்ய வேண்டுமையாலே -பெரியாழ்வார் -4-2-6-
எழில் கொள் சோதி -3-3-1–மலர் புரையும் திரு நெடும் தாண்டகம் -5–என்கிற ஸ்வாமித்வ போக்யதைகளிலே இதுக்கு நோக்கு –

————————————————————–

இனி இரண்டாம் பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -நாராயண பதம் -என்று தொடங்கி-
அடிமை தான் அனுபவ ஜெனித ப்ரீதி ஊற்றாக விளையாதாகையாலும் அனுபவ ஜெனித ப்ரீதி தான் அனுபாவ்ய விஷய அதீனம் ஆகையாலும்
அந்தக் கைங்கர்யத்துக்கு அடியான ப்ரீதிக்கு நாற்றங்காலான -ஸ்வ ஸ்வரூப குண விபூதி பூர்த்தியைச் சொல்லுகிறது நாராயண பதம் –
சர்வ வித கைங்கர்யத்துக்கும் ப்ரயோஜகமான ப்ரீதி விசேஷத்தை பிறப்பிக்கும் சம்பந்த குண விபூத் யாதி
பரிபூர்ண அனுபவ சித்திக்காக இங்கே நாராயண பதம் ப்ரயுக்தம் ஆகிறது -என்கிறபடி –
இனி இப்பத்துக்கு தாத்பர்யம் இன்னத்திலே என்று அருளிச் செய்கிறார் பிணங்கி -என்று தொடங்கி –
ஆஸ்ரயமான ஸ்வரூப விசேஷத்துக்கு ஆகாரத் த்வயம் உண்டாகிறாப் போலே ஆஸ்ரயிக்களான குண விசேஷங்களுக்கும் ஆகார த்வயம் உண்டாய் இ றே இருப்பது –
பூர்வ வாக்யத்திலே நாராயண பதத்தில் உபாய வரணத்துக்கு -உபயுக்ததயா அநுசந்தேயங்களான குண விசேஷங்களும்
இப்பதத்திலே ப்ராப்யத்தயா அனுசந்தேங்கள்
அனுபாவ்யத்வம் அவிசிஷ்டம் ஆகையால் சகல குணங்களும் ப்ரதிபாதிதமாய் இருந்ததே யாகிலும் சதுர்த்யந்தத்தில் சொல்லுகிற வ்ருத்தி விசேஷத்துக்கு
மிகவும் அந்தரங்கமாய் இருப்பது ஸ்வாமித்வ போக்யத்வங்கள் இறே –
கீழே ஸுலப்ய ப்ரதிபாதனத்திலே நோக்கு -இங்கு ஸ்வாமித்வ போக்யத்வ ப்ரதிபாதனத்திலே நோக்கு -என்றபடி –

————————————————————————————————————————————–

விபக்த் யர்த்தம்
ஆய என்கிற சதுர்த்தி -கைங்கர்யத்தில் இரப்பைக் காட்டுகிறது –
எய்தியும் மீள்வர்கள்–4-1-9-என்கிற போகம் போல் அன்றிக்கே-மீளா வடிமைப்-4-9-10-போலே அன்றிக்கே –
அந்தமில் அடிமையாய் –2-6-5–வந்தேறி யன்றிக்கே-தொல்லடிமை -9-2-3-என்னும் படி சகஜமாய்
உகந்து பணி செய்து -10-8-10-என்னும் படி ப்ரீதியாலே வரக் கடவதாய் இருக்கிற
அடிமையைக் கருத்து அறிவார்-ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் -8-1-1–என்னும்படி சொற் பணி செய்யுமா போலே
முகப்பே கூவிப் பணி கொண்டு அருள வேணும் -8-5-7-என்கிற இராப்போடே பெற வேணும் –

—————————————————————

இனி இப்பதத்திலே விபக்த் யம்சத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -ஆய -என்று தொடங்கி -இரப்பைக் காட்டுகிறது என்று –
பிரார்த்தனை சதுர்த்யர்த்தம் என்றபடி -ஆகையால் பவேயம்-என்ற அத்யாஹார பிரசங்கம் இல்லை என்றதாயிற்று –
ஆதமேஸ்வரா யர்த்தாயா கர்த்தும் தாஸ்யம் -என்று இறே ஸ்ரீ பராசர பட்டர் சதுர்த்திக்கு கைங்கர்ய பிராத்தனா பிரகாசத்வத்தை அருளிச் செய்தார்
பவானி என்றும் அடிமை செய்ய வேண்டும் நாம் என்று இறே ஸ்ரீ பாஷ்யகாரமும் ஆழ்வாரும் பிரார்த்திகையாலே
இங்கும் பிரார்த்தனா பர்யந்தமாக அர்த்தம் என்னப் பட்டது –
ப்ராப் யாந்தரங்களில் காட்டிலும் மிதுன கைங்கர்யத்துக்கு உள்ள வாசியை அருளிச் செய்கிறார் -எய்தியும் என்று தொடங்கி –
முமுஷுவுக்கு பலம் சொல்லுகிற இடத்தில் -தரதி சோகமாத்மவித் -என்று சோக நிவ்ருத்தியும்
தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தூ நூதே என்று புண்ய பாப ரூபா கர்ம விமோசனமும்
தத் விஷ்ணோ பரமம் பதம் சோஸ் த்வன பாரமாப் நோதி-என்று ஒரு தேச விசேஷ பிராப்தியும்
ஸ் வே ந ரூபேணே அபி நிஷ்யதே -என்று ஸ்வ ஸ்வரூப பிராப்தியும்
பரமம் சாம்யம் உபைதி -என்று பரம சாம்யாபத்தியும்
ஆனந்த மயம் ஆத்மானம் உப சங்க்ராமதி-என்று பகவத் சாமீப்யத்தையும்
சோஸ்னுதே ஸர்வான் காமான் -என்று பகவத் குண அனுபவத்தையும்
ஆனந்தீ பவதி-என்று பகவத் அனுபவ ஜெனித மான பரம ஆனந்தத்தையும்
யேந யே ந தாதா கச்சதி தேந தே ந ஸஹ கச்சதி -என்று பகவத் அநு வ்ருத்தி ரூபமான கைங்கர்யத்தையும் பலமாகச் சொல்லிற்று இறே
தத் தத் வாக்ய விசேஷங்களிலே சரம புருஷார்த்த நிஷ்கர்ஷம் பிறவாமையாலே அந்தப் புருஷார்த்த விசேஷத்தை பிரகாசிப்பிக்கிறது இவ்வுத்தர வாக்கியம் என்றபடி –
த்வத் சாம்யம் ஏவ பஜதாம் அபி வாஞ்சசி-த்வம் தத் சாத்க்ருதை-விபவ ரூப குனைஸ் த்வ தீயை –
முக்திம் ததோ ஹி பரமம் தவ சாம்யமாஹு த்வத் தாஸ்யம் ஏவ விதுஷாம் பரமம் மதம் தத் என்று ஆழ்வான் அருளிச் செய்தார் இறே
அபிமத லாபம் விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக அன்றிக்கே உதியாமையாலே இங்கு பண்ணுகிற கைங்கர்ய அபேக்ஷையாலே விரோதி நிவிருத்தியும்
பிரார்த்திக்கையாகக் கடவது -இரண்டும் அபேக்ஷிதமாகில்-இரண்டையும் பிராத்தியாதே -கைங்கர்யத்தையே பிரார்த்திப்பான் என் என்னில்-
கைங்கர்ய பிரார்த்தனையை பரம பிரயோஜனம் -அதுக்கு பிரதிபந்தகம் ஆகையால் விரோதியினுடைய நிவ்ருத்தி அபேக்ஷிதம் ஆகிறது அத்தனை போக்கி
ஜரா மரண மோஷார்த்தமாக இழிந்த கேவலனைப் போலே ஸ்வயம் உத்தேச்யம் அல்லாமையாலே வந்த அப்ராதான்யம் தோற்ற அத்தை எடாது ஒழி கிறது
-விரோதி நிவ்ருத்தியை அவன் ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து இருக்கும் -இவன் கைங்கரிய விரோதிதயா த்யாஜ்யம் என்று நினைத்து இருக்கும் –
சம்சார பயம் இ றே அவனுக்கு உள்ளது -பகவத் பிராவண்யம் உள்ளது இவனுக்கே இறே
சரம ஸ்லோகத்தில் விரோதி நிவ்ருத்தியையே பிரதானமாகச் சொல்லிற்று -ஸ்வயம் உத்தேச்யமாக அன்று
ஆத்மாவுக்கு ஸ்வாபாவிக தர்ம மான கைங்கர்யம் பிரகாசிகைக்கு நடுவில் இடைச்சுவர் போக வேண்டுவது என்னும் நினைவாலே-
ஆகையால் கைங்கர்ய பிரார்த்தனையை சொன்ன இது விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனைக்கும் உப லக்ஷணம் என்றதாயிற்று
ஆக இச் சதுர்த்தி -அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி -என்கிறபடியே -சேஷத்வ பலமான சேஷ வ்ருத்தியைச் சொல்லுகிறது என்றபடி –
ஞானம் இல்லாத வன்று ஸ்வரூபம் -அசன்னேவ ஆமோபாதி யும்-அனுஷ்டானம் இல்லாத போது அந்த ஞானமும் அசன்னேவ ஆமோபாதி யும்
சேஷ வ்ருத்தி இல்லாத போது சேஷத்வமும் அஸத் கல்பமாக கடவது -ஆகையால் இ றே மகாரத்துக்கு மேலே சதுர்த்தி விவரணம் ஆயிற்று
உபாய சுவீகாரத்துக்கு முன்னே உண்டே சேஷத்வ ஞானம் -ஆகை இ றே திரு மந்திரத்துக்கு பின்பு த்வயமாக வேண்டியது
ஆகையால் சேஷத்வ ஞானம் முற்படக் கடவது -அனந்தரம் உபாய சுவீகாரமாகக் கடவது -அனந்தரம் கைங்கர்ய ரூபமான
ப்ராப்யத்தின் உடைய பிரார்த்தனையாகக் கடவது -என்றதாயிற்று –
கிங்குர்ம இதி கைங்கர்யம் என்று -யாது ஓன்று எதிர் முக மலர்த்திக்கு உறுப்பு -அது இ றே கைங்கர்யம் ஆவது –
ஆகை இ றே கூடப் போன இளையபெருமாளோடு -படை வீட்டில் ஒருந்த ஸ்ரீ பரத ஆழ்வானோடே
இங்கு ஒழி என்ற சொல் படியே இருந்த ஸ்ரீ குஹப் பெருமாளோடே வாசி அற ஸ்வரூபம் குலையாது இருந்தது –
எங்கள் திருத்த தமப்பனார் இறைக்கத் திரு நந்தவனத்துக்கு மடையிட்டு அடிமை செய்யவுமாம் -திருமாலை கட்டி அடிமை செய்யவுமாம்
தமிழ் மாலை செய்து அடிமை செய்யவுமாம் -கட்டின மாலையை சூட்டித் தந்து அடிமை செய்யவுமாம் -இதில் பிரகார நியதி இல்லை
-பிரதி சம்பந்தி நியதியே உள்ளது -என்று ஆண்டாள் வார்த்தையாக ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த வார்த்தையையும்
மரவடிகளோபாதி திருவடிகளில் கிடக்கவுமாம்-மாலையோபாதி மயிர் முடியில் ஏறவுமாம் – இளைய பெருமாளோபாதி கூடப் போகவுமாம்-
ஸ்ரீ பாரத ஆழ்வானைப் போலே முடியை வைக்கவுமாம் -என்று -நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த வார்த்தையையும் நினைப்பது
இத்தாலே ஸ்வ இச்சஅதீன கைங்கர்யம் ஸ்வரூபம் அன்று என்கிறது –
உபேயத்துக்கு பிரேமமும் -தன்னைப் பேணாமையும் -தறியாமையும் வேணும் இறே என்றதாயிற்று

——————————————————————————————————————————————

நமஸ் -சப் தார்த்தம்
நம -என்று அடிமைக்கு கலையான அகங்கார மமகாரங்களைக் கழிக்கிறது
நலமந்தம் இல்லாதோர் நாட்டிலே -2-8-4–அந்தமில் பேரின்பத்திலே -10-9-11-இன்புற்று இருந்து
வேத விமலர் விழுங்குகிற -2-9-8-அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமான விஷயத்துக்கு -2-5-4-
தான் நிலையாளாக உகக்கப் பண்ணுகிற அடிமை தனக்கு போக ரூபமாக இருக்குமாகில் –
கண்ணி-எனதுயிர் 4-3-5- என்னும் படி போகத்துக்கு பூ மாலையோபாதி இருக்கிற ஸ்வரூபத்துக்கு கொத்தை யாகையாலே
நான் எனக்கு இனிதாகச் செய்கிறேன் என்கிற நினைவு கிடக்குமாகில்
ஆட் கொள்வான் ஒத்து –9-6-7-உயிர் உண்கிறவனுடைய ஊணிலே புழுவும் மயிரும் பட்டாப் போலே போக விரோதி என்று இவற்றைக் கழிக்கிறது
ஆவி யல்லல் மாயத்தது 4-3-3–உன்தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -10-3-9-என்று அத்தலை உகப்பே பேறானால்
தனக்கு என்று இருக்குமது கழிக்க வேணும் இறே
ஞான தசையில் சமர்ப்பணம் போலே போக தசையில் சேஷத்வமும் ஸ்வரூபத்துக்கு சேராது
திருவருள் செய்பவன் போலே -9-6-5- ஆட் கொள்வான் ஒத்து -9-6-7-
நீர்மையால் வஞ்சித்து-9-6-3- புகுந்து முறை கெடப் பரிமாறப் புக்கால் தன்னை உணருகை படுக்கையில் முறை கேடு இறே
கைங்கர்ய தசையில் தன ஸ்வரூபத்திலும் அவன் ஸுந்தர்யத்திலும் கண்ணும் நெஞ்சும் போகாமல் அடக்க வேண்டும்
இதில் அருமை இ றே மற்றை நம் காமங்கள் மாற்று -திருப்பாவை -29–என்று அவனை அபேக்ஷித்ததும்
அந்தி தொழும் சொல்லுப பெற்றேன் –10-8-7-என்று களிக்கிறதும்

—————————————————————

அநந்தரம் சரம பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் -நம -என்று தொடங்கி-இத்தால் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது -என்கிறது -என்கிறார் அடிமை -இதி –
அதாவது நமஸ் -சப்தம் -சாமான்யேந -அஹங்காரம் மமகாரங்களைக் கழிக்கை யாலே -திரு மந்திரத்தில் மத்யம பதமான நமஸ் சப்தம் போலே
ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகள் மூன்றையும் கழிக்க வற்றாய் இருந்ததே யாகிலும்
இங்கு அங்கண் அன்றிக்கே கைங்கர்ய பிரார்த்தனம் அநந்தரம் யுக்தம் ஆகையால் இந்தக் கைங்கர்யத்தில் விரோதியைக் கழிக்கிறது என்கை –
கைங்கர்யத்துக்கு களை ஏது என்ன அருளிச் செய்கிறார் -களையான அஹங்காரம் என்று தொடங்கி –
அதாவது போக்தா அஹம் மாமா போகோஸ்யம் -என்கிறபடியே இத்தை தன்னுடைய ரசத்துக்கு உறுப்பாக நினைத்துப் பண்ணுகை –
பகவான் முக விகாச ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயம் என்கிற பிரதிபத்தி ஒழிய
இதில் போக்த்ருத்வ புத்தியும் மதீயத்வ பிரதிபத்தியும் நடக்குமாகில் அபுருஷார்த்தமாய் இறே இருப்பது -என்றபடி –
இந்த நமஸ் சப்தம் ஹேய கந்த ராஹித்யத்தை சொல்லுகிறது -அதில் போகத்துக்கு ஹேய அந்வயம் உண்டாவது -போக்ய வஸ்துவின் பக்கல் குறையால் யாதல்
போக்தாவின் பக்கல் குறையால் யாதல் இறே
அதில் இங்குச் சொன்ன போக்யம் சர்வ மங்களாய தன பூதையான பிராட்டிக்கு மங்கள்ய கரமாய்
தான் மங்களாநாம் ச மங்களம் -என்கிறபடியே ஸ்வரூப ரூபாதிகளாலே சர்வ மங்களங்களும் அவ்வருகு பட்டு இருக்கையாலே குறைவற்று இருந்தது
-இனி போக்ருத்வ தோஷமே உள்ளது -அத்தைக் கழிகிறது இப்பதம்-அதாவது அஹங்கார மமகாரங்கள் –
ஸ்வரூப யாதாம்ய ஞான ஜனகமான திருமந்திரத்தில் அஹங்கார மமகாரங்கள் நிவ்ருத்தமாய் இருக்க இப்போது நிவர்த்யம் ஆகிற அஹங்கார மமகாரங்கள் எவை என் என்னில்
அநாத்மன் யாத்ம புத்தியான அஹங்காரம் மகார நிவர்த்யம் -அஸ்வ தந்த்ரே ஸ்வதந்த்ர புத்தியான அஹங்காரம் சதுர்த்தீ நிவர்த்யம்
சாதா நான்தர அந்வயம் ஆகிற அஹங்காரம் நம பாத நிவர்த்த்யம் –
இங்கு நிவர்த்யமான அஹங்காராதிகள்-நான் போக்தா என்னுடைய போகம் -என்று இருக்கை-இத்தைக் கழிக்கிறது இங்குத்தை நம பதம் -என்கை
இவனுக்கு ஞாத்ருத்வத்தில் காட்டில் சேஷத்வ பாரதந்தர்யங்கள் அந்தரங்க நிரூபகம் ஆனால் போலே ஞாத்ருத்வ பலாயாத போத்ருத்வத்தில் காட்டில்
போக்யத்வம் இ றே அந்தரங்கமாய் இருப்பது
அஹம் அன்னம் என்ற பிறகு இ றே அஹம் அந்நாத என்ற முக்தர் பாசுரம் இருப்பது -இவன் அவனுக்கு ஷட் குண ரஸ அன்னமாம் அறுசுவை அடிசில் இறே
எதிர் விழி கொடுக்கை இ றே இவனுடைய போக்யத்வம் -போக தசையில் அவனுக்கு எதிர் விழி கொடாதே அசித்துப் போலே கிடக்கைக்கு உறுப்பான
கேவல பாரதந்தர்யமும் போக விரோதி என்றதாயிற்று -படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே -என்னா நின்றது இ றே
அஹங்கார மமகாரங்களின் உடைய த்யாஜ்யத்வே திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் – பூ மாலை– கொத்தை —ஊணிலே புழுவும் மயிரும் பட்டாப் போலே-என்று –
பரார்த்த கைங்கர்யம் பரம புருஷார்த்தம் என்பதனை –ஜிதம்தே புண்டரீகாக்ஷ –ஹ்ருஷீ கேச என்று ஜிதந்தையிலும்
பரவா நஸ்மி காகுத்ஸத-ஸ்வயம் து ருசிரே –க்ரியாமிதி மாம் வத -என்று இளைய பெருமாள் திருவாக்கிலும்
தனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே-என்று ஆழ்வார் திருவாக்கிலும் ஆம் பரிசு அறிந்து கொண்டு ஐம் புலன் அகத்து அடக்கி என்ற
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திரு வாக்கிலும் காணலாம்
தனக்கே யாக என்றத்தை விவரிக்கிறார் -போக தசையில் சேஷத்வம் என்று தொடங்கி -இத்தால் அத்தலைக்கே ரசமாம் படி –
விநியோகப் படுகை இ றே –
அதாவது தன்னோடே கலந்து பரிமாறும் தசையில் போக்தாவான ஈஸ்வரன் -ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் -என்கிறபடியே
அடிமை கொள்வாரைப் போலே புகுந்து தன் வ்யாமோஹத்தாலே தாழ நின்று பரிமாறி இத்தலையில் சேஷத்வத்தை அழிக்கும் போது –
நாம் சேஷத்வத்தை நோக்க வேணும் என்று நைச்யம் பாவித்து இறாய்த்து-அவன் போகத்தை அழியாது ஒழிகை என்கை –
இத்தால் கேவல சேஷத்வமே போக விரோதி என்றதாயிற்று -பார தந்தர்யத்தோடே கூடின சேஷத்வமே உத்தேச்யம் என்றபடி
தனக்குத் தானே தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் -அழுக்குக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதியாமாம் போலே -ஹாரோ அபி –
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை -ஈஸ்வரன் தனக்கே யாக இருக்கும் -அசித்து பிறர்க்கே யாக இருக்கும்
ஆத்மா தனக்கும் பிறருக்கும் பொதுவாய் இருக்கும் என்ற முற்பட்ட நினைவு -அங்கண் அன்றிக்கே அசித்தைப் போலே தனக்கே யாக
எனைக் கொள்ள வேணும் என்கிறது நமஸாலே-என்று ஸ்ரீ மல் லோகாச்சார்யன் அருளிச் செய்தார் இறே
இதன் அருமையை ஆழ்வார் பாசுரம் கொண்டு நிரூபிக்கிறார் -இதில் அருமை -என்று தொடங்கி –

————————————————————————————————————————-

நிவர்த்ய விரோதி நிரூபணம்
உகார நமஸ் ஸூ க்களிலே -ஸ்வரூப விரோதம் கழிந்தது
பரித்யஜ்ய ஏகம்-என்கிற இதில் உபாய விரோதி தடை உண்டது –
அஹம் -மோக்ஷயிஷ்யாமி -என்கிற இதுவில் ப்ராப்திக்கு இடைச்சுவர் தள்ளுண்டது –
இந்த நமஸ் ஸூ ப்ராப்யத்தில் களை அறுக்குகிறது

——————————————-

த்வய விவரணமான கத்யத்திலே நமஸ் சப் தார்த்தத்தை அனுசந்திக்கிற அளவிலே -மநோ வாக் காயை இத்யாதி
சூரணை யாலே அக்ருத் கரணத்யாதி அகில கர்ம நிவ்ருத்தியையும்-அநாதி கால ப்ரவ்ருத்தி -இத்யாதி சூரணையாலே-அவித்யா நிவ்ருத்தியையும்
-மதீயா நாதி -இத்யாதி சூரணையாலே-ப்ரக்ருதி சம்பந்த நிவ்ருத்தியையும் -ஸ்ரீ பாஷ்யகாரர் பிரார்த்தித்து அருளிற்று –
ஆனாலும் இதுக்கு பிரதான அர்த்தம் கைங்கர்யத்தில் ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி என்பதனை
பாரிசேஷ நியாயத்தாலே உபபாதிக்கிறார் மேலே -உகார -என்று தொடங்கி
ஸ்வரூப விரோதி என்றும் -சாதன விரோதி என்றும் பிராப்தி விரோதி என்றும் ப்ராப்ய விரோதி என்றும் சதுஷ்டயமாய் இருக்கும் விரோதி –
அதில் திருமந்திரம் ஸ்வரூப விரோதி நிவ்ருத்தியைப் பிரதிபாதிக்கிறது –
சரம ஸ்லோகம் அர்த்த த்வயத்தாலும் சாதன விரோதி நிவ்ருத்தியையும் பிராப்தி விரோதி நிவ்ருத்தியையும் ப்ரதிபாதிக்கிறது
இது ப்ராப்ய விரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிறது என்றபடி –
பிரணவத்தில் பகவத் அநந்யார்ஹ சேஷமான ஆத்மவஸ்துவை ஞாதாவாகச் சொன்ன அநந்தரம் அஹம் மமதைகளை நிவர்ப்பித்தது திரு மந்திரத்தில் நமஸ் சப்தம்
இதர உபாய பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ஏக உபாயத்வ பிரதிபத்தியை சர்வ தர்மான் பரித்யஜ்ய –மாம் வ்ரஜ -என்று
விதித்த அநந்தரம் -அதில் அஹம் மமதைகளை நிவர்த்திப்பத்து ஏகம் -பதம்
பகவத் கைங்கர்ய பிரார்த்தனா வாசகமான நாராயண பதத்துக்கு அனந்தரமான இந்த நமஸ் சப்தம் இதில் அஹம் மமதைகளை நிவர்த்திப்பிக்கிறது
ஆச்சார்ய சேவா பலம் இவ்வவதாரண த்ரயத்திலும் அர்த்த ஞானம் பிறந்து உஜ்ஜீவிக்கை காணும் என்ற
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது –

—————————————————————————————————————————————————-

த்வய வாக்யார்த்த நியமனம்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகளை உபாயமாக அத்யாவசிக்கிறேன்
ஸ்ரீ மன் நாராயணனுக்கு சர்வவித சேஷ வ்ருத்தியிலும் அவனுக்குப் பேறாம் படி செய்யப் பெறுவேனாக வேணும் என்று தலைக் கட்டுகிறது

பிராமண உபன்யாசம்
ஏழை ஏதலனும்–பெரிய திருமொழி -5-8-1-அகலகில்லேன் -6-10-10-இரண்டும் முற் கூற்றில் அர்த்தம்
எனக்கே யாட் செய் -2-9-4–சிற்றம் சிறுகாலே -திருப்பாவை -29–என்கிற பாட்டுக்கள் பிற் கூற்றுக்கு அர்த்தம் –

—————————————————————————-

த்வய வாக்யார்த்தம் அருளிச் செய்கிறார் -ஸ்ரீ மன் நாராயணனுடைய -என்று தொடங்கி –
வாக்ய த்வயார்த்த பிரதி பாதகங்களான பாசுரங்களை இவ்வர்த்தத்துக்கு பிரமாணமாக உதாஹரித்து அருளுகிறார் -ஏழை ஏத்தலான் -என்று தொடங்கி
ந வேதாந்தாத் சாஸ்திரம் ந மது மத நாத் சாத்விக பதம் ந சத்வாத் ஆரோக்யம் ந புத பஜனாத் போத ஜனகம் ந முக்தே ஸுக்யம்
ந த்வய வஸனாத் ஷேம கரணம் -என்றார் இ றே ஸ்ரீ மன் நிகமாந்த மஹா தேசிகன் –
பூர்வாச்சார்யர்கள் மற்றை இரண்டிலும் அர்த்தத்தையே மறைத்துக் கொண்டு போருவர்கள்-இதில் சப்த அர்த்தங்கள் இரண்டையும்
மறைத்துக் கொண்டு போருவர்கள்-மந்த்ர ஸ்லோகங்கள் இரண்டிலும் சப்தத்தை வெளியிட்டு அர்த்தத்தை மறைத்துக் கொண்டு போருவர்கள்-
த்வயத்தில் இரண்டையும் மறைத்துக் கொண்டு போருவர்கள்
மந்த்ராணாம் பரமோ மந்த்ர குஹ்யானாம் குஹ்யம் உத்தமம் -ரகஸ்யானாம் ரகஸ்யம் ச சத்யஸ் சம்சார தாரணம்
-சரணாகதி மந்த்ரஸ்து சர்வ சம்பச் சுபாவக -என்றது இறே
ஆக த்வய வியாக்யானம் அருளிச் செய்தார் யாயிற்று –

————————————————————————————————————————————————–

சாற்றுக் கவிகள்
திருத் தாழ் வரை தாதன் தேவன் தாள் வாழி
மருத்தார் கொடைப் பெற்றோர் வாழி -கருத்தாபம்
தீர்த்த மணவாளன் வாழியரோ வாழியவன்
கோத்த தமிழ் மாறன் குறிப்பு –

மணவாளன் மாறன் மனம் உரைத்தான் வாழி
மணவாளன் மன்னு குலம் வாழி -மணவாளன்
வாழ் முடும்பை வாழி வட வீதி தான் வாழி
தேன் மொழியான் சொல் வாழி தேர்ந்து –

தந்து அருள வேணும் தவத்தோர் தவப் பயனாய்
வந்த முடும்பை மணவாளா -சிந்தையினால்
நீ யுரைத்த மாறன் நினைவின் பொருள் அனைத்து என்
வாய் உரைத்து வாழும் வகை –

—————————————————————————————————————————

ரகஸ்யார்த்த சாரார்த்த சங்க்ரஹம் –
இவ்வளவால் நிரூபிதமான ரகஸ்யார்த்த சாரங்களின் சங்க்ரஹம் இருக்கும் படி
ரகஸ்யங்கள் மூன்றும் நமக்கு ஞான அனுஷ்டான பல நிதானங்களாய்க் கொண்டு தாரக போஷக போக்யங்கள்-
வ்யக்தம் ஹி பகவான் தேவ -சாஷான் நாராயண -ஸ்வயம் அஷ்டாக்ஷர ஸ்வ ரூபேண முகேஷூ பரிவர்த்ததே -என்கிறபடியே
தேசிக ஜிஹ்வையிலே இருந்து -சிஷ்ய ஹ்ருதய குஹ அந்தகாரத்தைக் கழித்து -பரிசுத்த ஸ்வ ரூபத்தை வெளியிட்டு
சத்தா லாபத்தை பண்ணுகையாலே திருமந்திரம் தாரகம் –
சரம உபாயத்தில் ப்ரவர்த்திக்கும் படியான ஞான விசேஷ உபசய ஹேதுவாகையாலே ஸ்ரோதவ்ய சேஷம் இல்லாத படி உபாய உபதேச பர்யவசனமான சரம ஸ்லோகம் போஷகம்
ஸக்ருத் உச்சாரணத்தாலே பரம புருஷ ஹேதுவாய்க் கொண்டு சதா அனுசந்தானத்தாலே க்ருதார்த்தன் ஆகையால் த்வயம் போக்யம்-
இப்படி இறே ரகசிய த்ரய வைபவம் இருக்கும் படி -இவற்றின் சாரார்த்த சங்க்ரஹமாவது –
விவேகம் தான் மூன்று படியாய் இருக்கும் -ஆத்ம அநாத்ம விவேகம் என்றும் -உபாய அனுபாய விவேகம் என்றும் -புருஷார்த்த அபுருஷார்த்த விவேகம் என்றும்
இந்த விவேகத்துக்கு ஸ்தானமாய் இருப்பதும் மூன்று படியாய் இருக்கும் -தத்வம் என்றும் விதானம் என்றும் அபிமதம் என்றும்
இதில் ஸ்வரூப ப்ரதிபாதகமான திருமந்திரம் தத்வமாவது -ஹித விதாயகமாய் சரண்ய அபிமதயாலே ப்ரவ்ருத்தமான
சரம ஸ்லோகம் விதானம் ஆகிறது -புருஷார்த்த ப்ரதிபாதகமான மந்த்ர ரத்னம் அபிமதம் ஆவது –

—————————————————————————————————————-

திரு மந்த்ரார்த்த சங்க்ரஹம்
இதில் தத்வ ரூபமான திருமந்திரமும் பத ரூபத்தாலே மூன்று படியாய் இருக்கும் –
இதில் பிரதம பதத்தாலே சேதனனுடைய ஸ்வரூபம் சொல்கிறது -மத்யம பதத்தாலே ஸ்திதி சொல்லுகிறது -த்ருதீய பதத்தாலே வ்ருத்தி சொல்லுகிறது
இந்த ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகள் மூன்றும் எம்பெருமான் இட்ட வழக்காய் இருக்கும் –
பிரதம பதத்தாலே இவனுடைய அநந்யார்ஹத்வம் சொல்லுகிறது -மத்யம பதத்தாலே அநந்ய சரண்யத்வம் சொல்லுகிறது
-த்ருதீய பதத்தாலே அநந்ய போக்யத்வம் சொல்லுகிறது
இவனுக்கு பிரதிசம்பந்தியாய் இருக்கிறவனுடைய சேஷித்வம் சொல்லுகிறது பிரதம பதத்தாலே –
அவனுடைய சரண்யத்வம் சொல்லுகிறது மத்யம பதத்தாலே -அவனுடைய போக்யத்வம் சொல்லுகிறது த்ருதீய பதத்தாலே
பிரதம பதத்தில் சொல்லுகிற ஞாத்ருத்வமும் மத்யம பதத்தில் சொல்லுகிற கர்த்ருத்வமும் த்ருதீய பதத்தில் சொல்லுகிற
போக்த்ருத்வமும் எம்பெருமான் இட்ட வழக்காய் இருக்கும் –
திருமந்திரம் சாமான்யேந ஸ்வரூப பரமாய் இருக்கும் -சிலர் வாக்ய த்ரயம் என்று நிர்வஹிப்பர்கள்
-சிலர் வாக்ய ஏக வாக்யத்தாலே ஏக வாக்கியம் என்று நிர்வஹிப்பர்கள் –
சிலர் ஸ்வரூப புருஷார்த்த பரம் என்று நிர்வஹிப்பர்கள்-
சிலர் அர்த்த பஞ்சக பரம் என்று நிர்வஹிப்பர்கள் –
சிலர் பிரபத்தியையும் கூட்டி ஷட் அர்த்த பரம் என்று நிர்வஹிப்பர்கள் -சிலர் ஆத்ம சமர்ப்பண பரம் என்று நிர்வஹிப்பர்கள் –
திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று பத த்ரயத்துக்கும் தாத்பர்யம் ததீய சேஷத்வம் என்று அருளிச் செய்தார் திருமங்கை ஆழ்வார் –
பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வாரும் பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமைகளில் இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இறே
ஆக பிரதம பத ஸித்தமான சேஷிகளும் ததீயரே யாய் -மத்யம பத ஸித்தமான சரண்யரும் ததீயாராய் -த்ருதீய பத ஸித்தமான ப்ராப்யரும்
ததீயரே யானபடியால் -திருமந்த்ரத்துக்கு தாத்பர்யமான அர்த்தம் ததீய சேஷத்வம் என்று அறிகை –
பிரணவம் தான் அக்ஷர ஸ் வ பாவத்தாலே மூன்று படியாய் இருக்கும் -அகாரம் என்றும் உகாரம் என்றும் மகாரம் என்றும் –
அதில் அகாரம் காரணத்வத்தையும் ரக்ஷகத்வத்தையும் சேஷித்வத்தையும் ஸ்ரீ யபதித் வத்தையும் சொல்லக் கடவதாய் இருக்கும் –
இதில் காரணத்வத்தாலும் ரக்ஷகத்வத்தாலும் உபாய பாவத்தை வெளியிடுகிறது
சேஷித்வத்தாலும் ஸ்ரீ யபதி த்வத்தாலும் உபேய பாவத்தை வெளியிடுகிறது –
அகாரம் பிரகிருதி என்றும் ப்ரத்யயம் என்றும் இரண்டாய் -இதில் பிரக்ருதியான அகாரம் உபாயத்தைச் சொல்லுகிறது
பிரத்யயமான சதுர்த்தி உபேயத்தை சொல்லுகிறது -என்றபடி –
உகாரத்தாலே பிறர்க்கு உரியன அன்று என்னும் இடம் சொல்லி நமஸ்ஸ்சாலே தனக்கு உரியன அன்று என்னும் இடம் சொல்லுகிறது
நாராயண பதத்தில் உண்டான பஹு வ்ரீஹி சமாசத்தாலும் தத் புருஷ சமாசத்தாலும் அந்தர்யாமித்வமும் ஆதாரத்வமும் சொல்லுகிறது
அந்தர்யாமித்வத்தாலே எம்பெருமானுடைய சரீரத்வம் சொல்லுகிறது -ஆதாரத் வத்தாலே அதிசயம் சொல்லுகிறது –
ஆக இப்படி பிரணவத்தாலே தன் ஸ்வரூபம் பகவத் அநந்யார்ஹ சேஷத்வம் என்று பிரதிக்ஞ்ஜை பண்ணி
ஸ்வ ஸ்வாதந்தர்ய நிவர்த்தகமான மத்யம பதத்தாலே அத்யந்த பாரதந்தர்யம் என்று உபபாதித்து
த்ருதீய பதத்தாலே இதுவும் சரீரத்வ நிபந்தம் என்று உபபாதித்து –
கீழ் பிரஸ்துதமான சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்கிறது –
பிரதம பதத்தாலே பாணிக்ரஹணம் பண்ணுகிறது -மத்யம பதத்தாலே மண நீராட்டுகிறது
-த்ருதீய பதத்தாலே சதுர்த்தி படுக்கையாய் இருக்கிறது -என்று பிள்ளை உறங்கா வல்லி தாஸர் நிர்வஹிப்பர்-
திருமந்த்ரத்துக்கு தாத்பர்யம் சகல வேத சாஸ்திர ருசி பரிக்ருஹீதம் -வாக்யார்த்தம் ப்ராப்ய ஸ்வரூப நிரூபணம்
-பிரதான அர்த்தம் ஆத்ம ஸ்வரூப நிரூபணம் -அனுசந்தான அர்த்தம் சம்பந்த அனுசந்தானம் –

——————————————————————————————————————

சரம ஸ்லோகார்த்த சங்க்ரஹம் –
சரம ஸ்லோகம் மூன்று படியாய் இருக்கும் -பரித்யாகம் என்றும் -ஸ் வீகாரம் என்றும் -சோக நிவ்ருத்தி என்றும் –
ப்ராப்த ஹேதுத்வ புத்தி விட்டு ப்ரீதி ஹேது வென்று அனுஷ்ட்டிப்பார் -என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்-
மாம் என்கிற பதத்தாலே சாத்ய உபாயங்களில் காட்டில் சித்த உபாயமான தன்னுடைய வ்யாவ்ருத்தியைத் சொல்லுகிறான்
பதர்க் கூட்டத்தை விட்டு பர்வதத்தை அண்டை கொள்ளுமா போலெ -என்றும் நம்பிள்ளை அருளிச் செய்வர்
இந்த சித்த உபாயத்தை விட்டு சாத்ய உபாயங்களில் அந்வயித்தான் ஆகில் மரக்கலத்தை விட்டு தெப்பத்தைப் பற்றுமோபாதி -என்று நிர்வஹிப்பர் சோமாசி ஆண்டான்
அன்று உன் முகம் காணில் முடிவேன்-என்கையாலே முகம் தோற்றாமல் நடத்தினேன் -இன்று உன்முகம் காணாவிடில் முடிவேன் என்கையாலே
முகம் தோற்றி நின்று நடத்தினேன் என்று தன் வியாபாராதிகளை காட்டுகிறான்
அதாகிறது -என் கையில் மடல் உன் கையில் வரும்படியாகவும் -என் தலையில் முடி உன் தலையில் வரும்படியாகவும் வேணும் என்று ஆசைப் பட்டு
உன் கால் என் தலையிலே படும்படி தாழ நின்றேன் என்று தன் ஸுலப்யத்தைக் காட்டுகிறான் -மாம் என்று -என்றபடி –
அவதாரண ரூபமான ஏக சப்தத்தாலே சாத்ய சாதனங்களினுடைய ப்ருதகபாவ ஜன்யமான த்வித் வத்தையும்
ஸ் வீ கர்த்தாவினுடைய அன்வயத்தால் வருகிற த்வித் வத்தையும் வியாவர்த்திக்கையாலே சரண்யன் உடைய சுணை யுடைமையைச் சொல்லுகிறது
மா ஸூச என்கிற பதத்தாலே-வ்ரஜ என்கிற விதியோபாதி மா ஸூ ச என்கிற இதுவும் விதி யாகையாலே ஸ் வீ காரத்தோபாதி சோக நிவ்ருத்தியும் கர்த்தவ்யம் என்கை
அதாவது உன்னைப் பார்த்து நிர்ப்பரனாய் என்னைப் பார்த்து நிர்பயனாய் இரு என்கை –
முன்பு சோகித்திலை யாகில் அதிகார சித்தி இல்லை -பின்பு சோகித்தாய் ஆகில் பல சித்தி இல்லை -என்றபடி
ஸ்ரீ பாஷ்யகாரர் ஆழ்வானுக்கு சரம ஸ்லோகத்தை உபதேசித்து -இருந்தபடி என் -என்று கேட்டு அருள ஒரு ஜென்மத்தில் நின்று
ஒரு ஜென்மத்தில் போந்தால் போலே இருந்ததே -என்று பணித்தார்
நஞ்சீயர் சரம ஸ்லோகார்த்தத்தைக் கேட்டு அருளி -தலைச்சுமை போட்டால் போலே இருந்ததே -என்கிறார்
திருமந்திரம் திரு முகப் பாசுரமாய் இருக்கும் -சரம ஸ்லோகம் வேட்டாய் இருக்கும் -த்வயம் படி எடுப்பாய் இருக்கும்
சரம ஸ்லோகத்துக்கு தாத்பர்ய அர்த்தம் சரண்ய ருசி பரிக்ருஹீதம்-வாக்யார்த்தம் பிராபக ஸ்வரூப நிரூபணம் –
பிரதான அர்த்தம் ஈஸ்வர ஸ்வரூப நிரூபணம் அனுசந்தான அர்த்தம் நிர்பரத்வ அனுசந்தானம் –

—————————————————————————————————

த்வயார்த்த சங்க்ரஹம்
த்வயம் இருபத்தைந்து திரு அக்ஷரமாய் -வாக்ய த்வயமாய் -ஆறு பதமாய் பத்து அர்த்தமாய் இருக்கும் –
இதில் பூர்வ கண்டத்திலும் உத்தர கண்டத்திலும் மா மலர் மங்கை யாகிற ஸ்ரீ ரத்னத்தோடே கூடுகையாலே இரு தலை மாணிக்கமாய் இருக்கும் –
அவன் தேவகி புத்ர ரத்னமாய் இருக்குமோ பாதி இதுவும் மந்த்ர ரத்னமாய் இருக்கும்
இந்த மந்த்ர ரத்னம் தான் ஸ்ரீ மத் பராங்குச முனிகள் -ஸ்ரீ மத் நாத முனிகள் யாமுன முனிகள் ராமானுஜ முனிகள் ஆகிய முனிவர்கள் உடைய
நெஞ்சாகிற செப்பிலே வைத்து சேமிக்கப் பட்டு இருக்கும் –
இந்த த்வயம் அர்த்த ப்ராதான்யத்தாலே மூன்று படியாய் இருக்கும் -விசேஷண பிரதான்யம் என்றும் -விசேஷிய பிரதானம் என்றும் -விசிஷ்ட பிரதானம் என்றும் –
ஆஸ்ரயண தசையில் விசேஷண பிரதான்யமாய் இருக்கும் -உபாய தசையில் விசேஷிய பிரதான்யமாய் இருக்கும் -போக தசையில் விசிஷ்ட பிரதான்யமாய் இருக்கும் –
பிரதம பதத்தில் விசேஷண பலத்தால் பிராயச்சித்த வியா வ்ருத்தியைச் சொல்லுகிறது –
பிரதம பதத்தாலே உபாயாந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது -த்விதீய பதத்தாலே உபேய வியாவ்ருத்தியைச் சொல்லுகிறது
க்ரியா பதத்தாலே அதிகாரி வியாவ்ருத்தியைச் சொல்லுகிறது -உத்தர வாக்கியத்தில் பிரதம பதத்தாலே ப்ராப்யாந்தர வியாவ்ருத்தியைச் சொல்லுகிறது
-த்விதீய பதத்தாலே தேவதாந்த்ர வியாவ்ருத்தியைச் சொல்லுகிறது
இதில் சதுர்த்தியாலே ப்ரயோஜ நான்தர வியாவ்ருத்தியைச் சொல்லுகிறது
த்ருதீய பதத்தாலே ஸ்வபாவ வியாவ்ருத்தியைச் சொல்லுகிறது –

பிரதம பத விசேஷணத்தில் பிரதம அஷரத்தாலே புருஷகாரத்ய அபாவவாதிகளை நிரசிக்கிறது –
பிரதம பதாந்தமான த்வி வசனாந்த பதத்தாலே நிர் விக்ரஹ வாதிகளை நிரசிக்கிறது
அனந்தர பதத்தாலே உபாயத்வித்வவாதிகளை நிரசிக்கிறது-க்ரியா பதத்தாலே அத்யாவசாய அபாய வாதிகளை நிரசிக்கிறது
மதுப்பாலே அநித்ய யோகவாதிகளை நிரசிக்கிறது
உத்தர வாக்கியத்தில் பிரதம பதத்தாலே ஆத்ம சாம்யாவாதிகளை நிரசிக்கிறது
அனந்தர பதத்தாலே ஈஸ்வர சாம்யாவாதிகளை நிரசிக்கிறது
இதில் சதுர்த்தியாலே கிஞ்சித்க்கார புருஷார்த்த பிரதிபட வாதிகளை நிரசிக்கிறது
அனந்தர பதத்தாலே ஸ்வ பிரயோஜன வாதிகளை நிரசிக்கிறது -என்று நிர்வஹிப்பர் நடுவில் திரு வீதிப் பிள்ளை –

க்ரியா பதத்தாலே உபாய பிரார்த்தனை -சதுர்த்தியாலே உபேய பிரார்த்தனை -இவை இரண்டும் அதிகாரி க்ருத்யம்
த்வயத்துக்கு தாத்பர்ய அர்த்தம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்
வாக்யார்த்தம் -பிரார்த்தனா -பிராபக -ஸ்வரூப நிரூபணம்
பிரதான அர்த்தம் மிதுன கைங்கர்யம் -அனுசந்தான அர்த்தம் ஸ்வ தோஷ அனுசந்தானம்
ஏவம் பூதமான த்வயத்தில் நிஷ்டை யாவது -ஸ் வா ச்சார்ய புரஸ் சரமாகக் கோவலர் பொற் கொடியான பிராட்டி இருக்க
சரணம் புக்கு கொடி வழியாகச் சென்று ப்ரஹ்ம தருவை ஆஸ்ரயித்து இளைப்பாறி இருக்கை-

———————————————————————————

ஆச்சார்ய வைபவம்
இவ்வதிகாரிக்கு கீழ்ச சொன்ன அர்த்த விசேஷங்களுக்கு எல்லாம் உபதேஷடா ஆச்சார்யன் ஆகிறான்
நேரே ஆச்சார்யன் என்பது சம்சார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை உபதேசித்தவனை
சம்சார வர்த்தகங்களுமாய் ஷூத்ரங்களுமான பகவத் மந்த்ரங்களை உபதேசித்தவர்களுக்கு ஆச்சார்யத்வ பூர்த்தி இல்லை
பகவன் மந்த்ரங்களை ஷூத்ரங்கள் என்கிறது பலத்வாரா சம்சார வர்த்தகங்கள் என்கிறதும் அத்தாலே
மற்ற ரகஸ்ய த்வயமும் பிரதம ரகஸ்யத்தோடே அநன்யமாய் இருக்கையாலே ரகஸ்ய த்ரய உபதேஷடா ஆச்சார்யன் என்று சொல்லிற்று ஆயிற்று
இவ்வர்த்தத்தை இன்னார் சொல்லி இன்னார் கேட்க வேணும் என்கிற நியதி இல்லை
பிதாவுக்கு புத்ரன் உபதேசம் பண்ணினான் -அகஸ்தியனுக்கு லோபா முத்திரை உபதேசம் பண்ணினாள்
கௌரிக்கு ருத்ரன் உபதேசம் பண்ணினான் -ஆச்சார்ய புத்திரனான சுக்ரனுக்கு ஜனகன் உபதேசித்தான்
-பராமரிஷிகளுக்கு தர்ம வியாதன் உபதேசித்தான் -ஆண்டாள் பட்டர் பக்கலிலே ஸ்ரவணம் பண்ணி இருந்தாள்-
ஸ்ரீ குஹப் பெருமாள் ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் சொன்னான்
நாச்சியார் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கேட்டாள்-
ஆகையால் பகவத் வைபவம் சொல்லுமவன் ஆச்சார்யன் கேட்க்குமவன் சிஷ்யன் என்றதாயிற்று –
தேவு மற்று அறியேன் என்றும் -விட்டுசித்தர் தங்கள் தேவர் என்றும்
ஸ்ரீ மதுரகவிகளும் நாச்சியாரும் ஆச்சார்ய பர ந்யாஸம் பண்ணினார்கள் இ றே
ஆகை இறே இவர்களை ஏகத்ர நிர்த்தேசம் பண்ணி அருளினார் உபதேச ரத்ன மாலையில் ஸ்ரீ மத் வர வர முனிகள்
ஸ்ரீ மத் சாரீரக அத்யாய சதுஷ்ட யர்த்தங்களான -காரணத்வ சேஷித்வ ப்ராபகத்வ ப்ராப்யத் வங்கள்
ரகஸ்ய த்ரயமான சாஸ்திர சாரத்தாலே இங்கனே நிஷ்கர்ஷிக்கப் பட்ட தாயிற்று –
ரஹஸ்ய த்ரய சாரார்த்த சங்க்ரஹம் நிறைவு பெற்றது –

————————————————————————————————-

ஸ்ரீ மல் லோகாச்சார்ய சம்பிரதாய நிஷ்கர்ஷம் இருக்கும் படி –
சேக்ஷத்வாதிகளும்-ஞாத்ருத்வாதிகளும் -ஆத்ம தர்மங்களாக இருக்கச் செய்தே-சேக்ஷத்வாதிகளை பிரதானம் ஆக்கி
ஞாத்ருத்வாதிகளை தத் அனுகுணமாக யோஜிக்கைக்கு நியாமகம் ஏது-மற்றைப் படி தான் ஆனாலோ என்ன அருளிச் செய்கிறார் –
அஹம் அர்த்தத்துக்கு என்று தொடங்கி-
அஹம் அர்த்தத்துக்கு ஞானாநந்தங்கள் தடஸ்தம் என்னும்படி தாஸ்யம் இ றே அந்தரங்க நிரூபகம் -சூர்ணிகை -73- ஸ்ரீ வசன பூஷணம் –
அஹம் அர்த்தமாவது -ப்ரத்யக்த் வேந அஹம் புத்தி வியவஹாரார்ஹமான ஆத்மவஸ்து
ஞானா நந்தங்கள் ஆவன-தத்கதகமான ப்ரகாசத்வ அநு கூலத்வங்கள்
ஞானானந்த மயஸ் த்வாத்மா–ஸ்வரூபம் அணுமாத்ரம் ஸ்யாத் ஞானா நந்தைக லக்ஷணம் -என்று இவற்றை இட்டு இ றே வஸ்துவை நிரூபிப்பது
தடஸ்த்தம் என்னும் படி என்றது -பஹிரங்க நிரூபக தயா புற விதழ் என்னும் படி -என்றபடி –
தாஸ்யம் ஆவது -சேஷத்வம்
இது அந்தரங்க நிரூபகம் ஆகையாவது -பகவத் ஸ்வரூபத்துக்கு பிரகாரத்தயா சேஷமாகக் கொண்டு தன் சத்தையும் படி இருக்கும் வஸ்து வாகையாலே
பிரமம் சேஷத்வத்தை இட்டு நிரூபித்துக் கொண்டே மற்றுள்ள ஆகாரங்களை இட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்கை
இத்தால் நிரூபகம் ஆகையாவது -வஸ்துவை வஸ்தாந்தரங்களில் காட்டில் வியாவர்த்திப்பிக்குமது ஆகையால்
தாஸ்யம் ஈஸ்வர வியாவர்த்தகமாய் ஞானா நந்தங்கள் அசித் வியாவர்த்தங்களாய் இருக்கும்
இப்படி நிரூபக த்வயமும் வஸ்துவுக்கு அபேக்ஷிதமாய் இருக்கச் செய்தே-பகவத் பிரகாரத்தயா லப்த சத்தாகமான
வஸ்துவுக்கு அசித்தைக் காட்டில் உண்டான வாசியை அறிவிக்கிற மாத்ரமான ஞானா நந்தங்கள் புற இதழாம் படி
பிரகாரத்வ பிரயுக்தமான சேஷத்வமே அந்தரங்க நிரூபகமாய் இருக்கும் என்றதாயிற்று –
இ றே -என்று இவ்வர்த்தத்தில் பிரசித்த பிராமண சித்தி
பிரதமம் சேஷத்வத்தை இட்டு வஸ்துவை நிரூபித்திக் கொண்டு பின்னை
ஞானா நந்த லக்ஷணமுமாய் -ஞான குண கமுகமாய்-அசித் வியாவ்ருத்தமுமாய் இருக்கும் என்னும் இடத்தை
த்ருதீய பதத்தாலே நிரூபிக்கிற பிரணவமும்
ஸமஸ்த வஸ்துக்களும் சர்வேஸ்வரனுக்கு பிரகாரம் என்னுமத்தை ப்ரதிபாதிக்கிற நாராயண பதமும் முதலானவை இதில் பிரமாணம்
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மான பரமாத்மன- நான்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோஷே ததைவ ச -இத்யாதிகளும் உண்டு இ றே
அடியேன் உள்ளான் என்றார் இ றே ஆழ்வார் -திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் ஆறு மாசம் ஆழ்வான் சேவித்து நின்று மஹா நிதியாகப் பெற்ற அர்த்தம் இ றே இது
இப்படி சேஷத்வம் அந்தரங்க நிரூபகம் ஆகையால் நிரூபித்த ஸ்வரூப விசேஷங்க ளான ஞாத்திருத் வாதிகளையே தத் அநு குணமாக யோஜிக்க வேணும் என்று கருத்து –

அயமத்ர சங்காபிப்ராய
ஞாத்ருத் வாதிகள் தர்மி க்ராஹக மான சித்தங்கள் ஆகையால் சேக்ஷத்வாதி அபேக்ஷயா பிரபலங்கள் -என்று கொள்ள வேணும் –
உபக்ரமகத லுப்த சதுர்த்தி யுக்தம் ஆகையால் சேஷத்வம் பிரபலம் என்னில்-தத் உபமர்த்தேந மகாரத்தாலே உக்தங்கள் ஆகையால் ஞாத்ருத் வாதிகள் பிரபலம் –
அவற்றையும் உபமர்த்தித்திக் கொண்டு வியக்த சதுர்த்தி அர்த்தான்வித்ரு பிரார்த்தனையால் போக்த்ருத்வம் லபிக்கையாலே-அது பிரபலம் –
ஞானா நந்த மயஸ் த்வாத்மா சே ஷோ ஹி பரமாத்மன-என்று ஞாத் ருத்வாதிகள் பிரதம உத்பாத்தம் ஆகையால் பிரபலம்
ஆத்ம ஸ்வரூபம் பகவத் ஸ்வரூப ஆதீனம் ஆகையால் பகவத் சேஷத்வம் பிரபலம் என்னில் ஸ்வ ஸ்வரூபமும் ஸ்வ ஆதீனம் ஆகையால் ஸ்வ சேஷத்வமும் துல்யம்
ஞாத் ருத்வாதிகள் ஸூ ஷூ ப்தி பிரளயங்களில் இன்றிக்கே இருக்கையாலே அப்ரதானங்கள் என்னில்
பகவத் சேஷத்வமும் சம்சார தசையில் இல்லாமையால் அப்ராதான்யம் துல்யம்
பல உபாதானம் காதாசித்கம் ஆனாலும் ஸ்வரூப யோக்யத்வம் நித்யம் என்னில் அது ஞாத் ருத்வ சத்தை நித்யம் ஆகையால் இதுக்கும் துல்யம்
பகவச் சேஷத்வம் ப்ரத்யக்த்வத் அஹம் ப்ரத்யய கோசாரம் ஆகையால் ஸ்வரூப நிரூபகத்வாத் பிரபலம்
வேதாந்த வ்யுத்பத்தி மான்களுக்கு பகவச் சேஷத்வம் அஹம் ப்ரத்யயத்தில் ஸ்புரிக்கும் என்னில்
அஹம் பிரத்யயம் தர்மி ஸ்வரூபம் ஆனால் அதுக்கு ஸ்வகத ப்ரத்யக்த அநு கூலத்வாதி நியத விஷயகத்வத்தாலே நாநா பதார்த்த கடித
பகவத் சேஷத்வ விஷயகத்வம் கூடாது-அப்படி அப்யுபகமும் இல்லை -தர்மி ஸ்வரூபத்தில் சேஷத்வம் தோற்றும் போது வேதாந்த வியுத்பத்தியும்
அநபேஷிதை-தர்மி ஸ்வரூபம் நித்யம் ஆகையால் வ்யுத்பத்தியால் கிஞ்சித்காரமும் அநபேஷிதம் -உபாஸ நாத்மகமான தர்ம பூத ஞானத்திலே
-ஆத்மேதி தூப கச்சந்தி -என்கிற நியாயத்தாலே சரீரத்வ ப்ரயுக்த சேஷத்வம் தோற்றும் என்னில் ஜஃஞானமும் ஸ்வயம் பிரகாசகம் ஆகையால்
சேஷத்வத்தோடு யுகபதேவ தோற்றும் ஆகையால் துல்யம் -பகவத் பிரகார தயைவ லப்த சாத்தாகமான ஆத்மவஸ்துவுக்கு நிரூபித்த
ஸ்வரூப விசேஷண ஞாத்ருத்வாதிகள் பிரகாரத்வத்தைப் பற்ற அப்ரதானம் என்னில் ப்ரகாரத்தயைவ லப்த சத்தாகத்வம் பிரகாரத்வ
வியாப்பிய சத்தாகத்வ ரூபமானால் ஞான த்ரவ்யம் ஆத்மாவில் நித்தியமாய் இருக்கையாலே ஆத்ம சத்தா வியாபகத்வம் ஞானாதிகளுக்கும் துல்யம் –
ப்ரகாரத்தாதீ ந சத்தாகத்வ ரூபமானால் பகவத் ஸ்வரூப அதீன ஆத்ம சத்தைக்கு ஆத்ம தர்ம பூத பிரகாரத்வாயத்தத்வம் கூடாது –
ஆகையால் ஞாதிருத்தவாயத்த கர்த்த்ருத்வ போக்த்ருத்வ பலாயாத ஸ்வ சேஷத்வ அநு குணியே ந வே பகவச் சேஷத்வத்தை யோஜிக்கை உசிதம்
அதாவது -ஸ்வ போகார்த்தம் சாதன அனுஷ்டானமாய் -பகவத் உபாசனமும் அனுபவ கைங்கர்யங்களும்
ஸ்வ போக்த்ருத் வர்த்தமாய் இருக்கை -என்று சங்க அபிப்ராயம் விவஷிதம் –

அயமத்ர பரிஹார அபிப்ராய
பகவத் ஸ்வரூப அதீனையான-ஸ்வ சத்தை ஸ்வ தர்ம பூத பகவத் ப்ரகாரத்வாயத்தை என்கை அனுப பன்னம் என்ன ஒண்ணாது –
ஆஸ்ரய ஆஸ்ரயி பாவ சப்தித சம்யோகாத் மகாதேயதா ரூப அப்ருதக் சித்த தர்மதா லக்ஷண பகவத் பிரகாரதை ஆஸ்ரய சம்பந்த ரூபை யாகையாலே
ஸ்வ ஆஸ்ரயமாய் பகவத் ஆஸ்ரிதமுமான சேதன ஸ்வரூபத்தின் உடைய சத்தா நிர்வாஹகை என்கை அத்யந்த முப பன்னம் –
இந்த பகவத் பிரகாரதை சேதன ஸ்வரூபம் ஆகிற ஆஸ்ரிதத்துக்கு பகவத் ஸ்வரூபம் ஆகிற ஆஸ்ரயித்தினுடைய சம்பந்த ரூபையாய் இருக்கும்
ஆஸ்ரய சம்பந்தம் ஆஸ்ரித சத்தா நிர்வாகம் என்னும் இடம் சம்பிரதிபன்னம் என்றபடி –
ஆகை இ றே -ஸ்வ சம்பந்தி தயா ஹயஸ்யா சத்தா விஞ்ஞப்தி தாதி ச -என்கிற இடத்துக்கு -சத்தாயா ஆஸ்ரய சம்பந்தாதீ நத்வாத் ஸ்வரூப
லாபே சதி சர்வம் தத் அதீனம் இத்யர்த்த -என்று ஸ்ருத பிரகாசிகை இருக்கிறது –
பிரதியோகிதா விசேஷத்தாலே சேதன ஸ்வரூப வ்ருத்தியான ஆஸ்ரய சம்பந்தமாய் இருக்கிற இந்த பகவத் பிரகாரதை ஆஸ்ரய சம்பந்த ரூபை யாகையாலே
சேதன ஸ்வரூபத்துக்கு சத்தா நிர்வாஹகமாய் ஈஸ்வரா வ்ருத்தி யாகையாலே ஈஸ்வர வியாவர்த்தகமாய் இருக்கும்
ஞான ஆனந்தத்வங்கள் ஆஸ்ரய சம்பந்த ரூப பகவத் ப்ரகாரதா நிர்வாஹ்யமான சத்தையை உடைத்தாய் இருக்கிற சேதன ஸ்வரூபாத்மக தர்ம அதீன சத்தாகும் ஆகையால்
நிரூப்பிய வஸ்துவினுடைய சத்தா நிர்வாஹகம் இன்றிக்கே இருந்து கொண்டு அசித் வ்ருதித்வா பாவத்தாலே அசித் வியாவர்த்தக மாத்ரமாய் இருக்கும் –
ஆக நிரூபக காந்தரங்களின் உடையவும் நிரூப்பியத்தின் உடையவும் சத்தா காரணமாய் இருக்கை –
இதுக்கு நிரூப காந்தரங்களைப் பற்ற வாசி -சத்தானதுக்கே லக்ஷண அபேக்ஷை யாகையாலே லக்ஷணத்தை அநுஸந்திக்கும் இடத்தில்
லக்ஷண அபேஷா ஜனக ஞான விஷய சத்தா நிர்வாஹ கத்வேன புத்திஸ் த்தமாய் இருக்கிற இந்த பகவத் ப்ரகாரத்தையே பகவத்
வியாவர்த்த கத்வத்தாலே பிரதமம் லக்ஷண தளமாக அனுசந்திக்க உசிதை –
அநந்தரம் தன் நிர்வாஹ்ய சத்தா கங்களான ஞானத்வாதிகள் அசித் வியாவர்த்த கங்களாக அனுசந்திக்க உசிதை –
அநந்தரம் தன் நிர்வாஹய சத்தா கங்களான ஞானத் வாதிகள் அசித் வியாவர்த்த கங்களாக அனுசந்திக்க உசிதங்களாக கடவன –
மநாகுப காரிதா ச சர்வஸ் யாஸ்தி தத் பரிகரத்வேன ஞாயமா நத்வாத் -என்கிறபடியே -இந்த பகவத் பிரகாரதை ததீயத்வேன ஞாயமான
த்வ ரூபாதிசய ஹேதுதா பிரயோஜம் ஆகையால் -லீலா ரஸ சம்பாதகத்வ உதார்ய பிரகாசத்வ கைங்கர்ய ராசாதாயகத்வாதி ரூப
சேஷத்வ அபேக்ஷயா சர்வாத்ம வியாபி சர்வகாலிக சேஷதா ரூபையாய் இருக்கும் –
ஆகையால் சேஷத்வ சாமான்யத்துக்கு அந்தரங்கத்வம் உண்டு என்னும் இவ்வளவே அபேக்ஷிதம் –
தர்மத்துக்கு தர்மி சத்தா நிர்வாஹ கத்வா பாவம் ஆஸ்ரய சம்பந்தாத்ம கத்வாபாவ ப்ரயுக்தம் –
இத்தால் தர்மி க்ராஹக மான சித்தத்தவ ரூப ப்ராபல்யம் ப்ரத்யுக்தம் –
தர்மிக்கும் நிர்வாஹகம் ஆகையால் சேஷத்வம் அத்யந்தம் பிரபலமாய் இ றே இருப்பது -கிஞ்ச-திரு மந்த்ரத்திலே லுப்த சதுர்த்த யுக்தம் ஆகையால்
உபக்ரம நியாயத்தாலே ஞாத்ருத்வாத் அபேக்ஷயா சேஷத்வமே பிரபலம்
பிரதம ஸ்ருத நாராயண சப்தம் யுக்தம் ஆகையால் -அனந்தர ஸ்ருத சதுர்த்தீ லப்த பிரார்த்தனா பலாயாத போக்த்ருத்வ
அபேக்ஷயா சரீரத்வ பிரயுக்த பாரதந்தர்யம் பிரபலம்
அந்தர்யாமி அதிகரணாதிகளிலே பிரதம அத்தியாயத்தில் பாரதந்தர்ய சேஷத்வங்களை சொல்லி த்வீத அத்தியாயத்தில் –
ஞாத ஏவ -கர்த்தா சாஸ்த்ராத் தவத்வாத் -என்று ஞாத்ருத்வாதிகளை சாரீரகத்திலே சொல்லிற்று
சேதன ஸ்வரூப கதமான பகவச் சேஷத்வம் சேஷி மாத்ர பிரதியோகி கத்வாத் பிரபலம்
ஸ்வ சேஷத்வம் சேஷத்வ ஆஸ்ரய பிரதியோகி கத்வாத் துர்பலம் –
தர்மிகளுக்கு ப்ராபல்ய துர்பலய விபாகம் -தர்மங்களுக்கு ப்ராபல்ய துர்பலய நிபந்தனம் என்னுமது முக்கிய க்ரம நியாய சித்தம் –
ஜனக பும்ஸத்வ ஜன்ய பும்ஸத்வாதி ரூப பித்ரு புத்ராதி பத ப்ரவ்ருத்தி நிமித்தங்களிலே பும்ஸவாத் அபேக்ஷயா ஜனகத்வாதிகள் பிரதம நிரதிஷ்டங்கள் ஆகிறாப் போலே
தாஸ சப்த பிரவ்ருத்தி நிமித்தத்திலும் -சேஷ சேதனத்வம் தாஸத்வம் என்று சேதனத்வ அபேக்ஷயா சேஷத்வமே பிரதமம் என்கை உசிதம் ஆகையால்
-சேதனத்வே சதி சேஷத்வம் தாஸத்வம் என்று வியுத்க்ரம யுக்தியும் அனுசிதை
நிஸ் சிதே பர சேஷத்தவே சேஷம் சம்பரி பூர்யதே -அனிஸ் சிதே புனஸ் தஸ்மிந் சர்வ அந்யத் அஸத் சமம் -என்கிறபடியே
சேஷத்வ ஞானம் இல்லாவிடில் நிரூப்பியத்துக்கும் நிரூபகாந்தரங்களுக்கும் அசத்தை சொல்லுகையாலும் சேஷத்வமே பிரபலம்
பராசர ஸ்ம்ருதியிலும் -அகார வாஸஸ்ய விபோ ஹரே சேஷம் அஹம் சதா -என்று அஹந்தவ அபேக்ஷயா சேஷத்வம் பிரதம யுக்தம் –
ஸ்ரீ பாஷ்ய காரரும் -சேஷத்தவே சதி ஞாத்ருத்வம் சேதன லக்ஷணம் -என்று அருளிச் செய்தார்
இப்படி தர்மி சத்தா நிர்வாஹக ஆஸ்ரய சம்பந்த ஆத்மகத்வ ரூப வஸ்து சாமர்த்திய சசிவ உபக்ரம பிரதிபன்னத்வாதி நியாயங்களாலே
சேஷத்வ ப்ராதாம்யம் சித்திக்கையாலே -ஞானா நந்த மயஸ்வாத்த்மா சேஷோ ஹி பரமாத்மன-என்று க்வசித் ஞாத்ருத்வாதிகளுக்கு ப்ராதாம்யம்
சாகா சந்த்ர நியாயத்தாலே அன்னமயாத்ய அநுக்ரமம் போலே புத்த்ய ஆரோஹண ஸுகர்யார்த்தம் என்று சித்திக்கும் –
ப்ராதாம்ய மாத்ரத்தைக் கொண்டு ப்ராபல்யம் சொல்ல நினைக்கில் -ஸ்வரூப அணு மாத்ரம் ஸ்யாத் ஞான ஆனந்தைக லக்ஷணம் -என்று
அணுத்துவத்துக்கு ஞானா நந்த அபேக்ஷயா ப்ராபல்யம் பிரசங்கிக்கும்
புருஷார்த்த அன்வய பிரயோஜம் அல்லாத அணுத்துவத்தைப் பற்ற தத் பிரயோஜனங்களான ஞானா நந்த வாதிகள் வஸ்து சாமர்த்யத்தாலேயும்
தத் சஹக்ருத புரோ நிர்தேசத்தாலும் பிரபலங்கள் என்னில் அது சேஷத்வத்துக்கும் துல்யம்
பிரதம நிர்தேசத்துக்கு பாஹுள்யமும் -சகல பிராமண சங்க்ரஹ மூல மந்த்ர சங்க்ரஹ-ப்ரணவஸ்தமும் அதிகம்
அநியத பூர்வாபர்ய அனுஷ்டாநாவதிக க்ரம விஷயத்தில் ப்ரவர்த்திக்கத் தக்கதான-பூர்வா பாதேந நோத்பத்தி-உத்தரஸ்ய ஹி சித்த்யதி -என்கிற நியாமமும்
நியத க்ரமமான மூல மந்த்ர பதத்ரய பிரதிபன்ன சேக்ஷத்வாதி விஷயத்திலே ப்ரவர்த்தியாது
பிரதம ரீதியைக் கொண்டு ப்ரவர்த்திக்கும் என்று கொள்ளிலும்-தத்துவ தேவ நிஷேத அபேக்ஷித நிஷேத்ய சமர்ப்பக வியக்த சதிர்த்தீ லப்த
போக்த்ருவ அபேக்ஷயா தன் நிஷேதக -வ்யக்த சதுர்த்ய நந்தரா நு ஷக்த-நமஸ் சப்த யுக்த போக்த்ருத்வ பாவமே பிரபலம் என்று சித்திக்கும்
ஆக பிரணவத்திலே பிரதம நிர்த்தேசத்தாலே ஞானத்தவாத்ய அபேக்ஷயா அப்யர்ஹிதமும் தத்தேதுபூத தர்மி சத்தா நிர்வாஹ கத்வ
நியாமக ஆஸ்ரய சம்பந்த ரூபமும் ஆன பகவத் பிரகாரத்வம் நாராயண பதத்தாலும் சொல்லிற்று என்று கருத்து
ஆக ஞானத்வ அபேக்ஷயா சேஷத்வ பாரதந்தர்யங்களே பிரபலங்கள் ஆகையால் சேஷத்வ அனுகுணமாகவே ஞாத்ருத்வாதிகளை யோஜிக்க வேணும் என்றதாயிற்று
ஆக ஜீவன் பகவத் அத்யந்த பரதந்த்ரன் என்றபடி -இது இ றே நமஸ் சப் தார்த்தம் –

—————————————–

நமஸ்ஸாலே விரோதி நிவ்ருத்தி சொல்லப் படுகிறது -விரோதி தான் மூன்று -அதாவது ஸ்வரூப விரோதியும் உபாய விரோதியும் ப்ராப்ய விரோதியும்
ஸ்வரூப விரோதி கழிகை யாவது -யானே நீ என் உடைமையும் நீயே என்று இருக்கை
உபாய விரோதி கழிகை யாவது-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்று இருக்கை –
ப்ராப்ய விரோதி கழிகை யாவது -மற்றை நம் காமங்கள் மாற்று என்று இருக்கை –
ம என்கை ஸ்வரூப நாசம் -நம என்கை ஸ்வரூப உஜ்ஜீவனம் என்னா நின்றது இ றே
அஹம் ப்ரத்யய வேத் யத்வாத் மந்த்ரே பிரதம மீரணாத்-பாஷ்ய காரஸ்ய வசனாத் சேஷி க்ரம நயாதபி
சேஷத்வம் முக்யதா சித்தே -கர்த்ருதா போக்ருதா பவேத்
பராதிசய ஸித்யர்த்தா நோ சேத் ஞாத்ருத்வ சேஷதா -என்றது இ றே
பாரதந்தர்யம் தான் -பராதீன பலத்வம்-பராதீன கர்த்ருத்வம் -ஸ்வ ரக்ஷண உபாய ப்ரவர்த்தய நர்ஹத்வம்-என்று இப்படி அநேக விதமாய் இருக்கும் –
ராஜாவுக்கு ப்ருத்யன் ஸ்வ கர்ம அனுகுண பல மாத்திரத்திலே பராதீனன் ஆகையால் பரதந்த்ரன்
பராதீன ஸ் வீயக்ருதி சாத்ய சாதன ப்ரீதி பராதீன பலகனாகை யாலே உபாசகன் ஈஸ்வரனுக்கு அதி பரதந்த்ரன்
பராதீன அகில ஸ்வ வியாபார அதீன சாதனதாக பராதீன பலகன் ஆகையால் பிரபன்னன் ஈஸ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரன்
ஆக அத்யந்த பாரதந்தர்யமாவது -ஸ்வ ரக்ஷண உபாய ப்ரவர்த்ய நர்ஹத்வம் -என்றும் ஜீவ ஸ்வரூப யாதாம்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்கள் இறே
நைஷடிக்க ப்ரஹ்மசாரிகளாயும் -ஜீவ பர யாதாம்ய தர்சிகளாயும் லோகாச்சார்ய பிரதம ஆச்சார்ய அனுக்ரஹ பலாவதாரராயும் உள்ள பிரதாக்கள் –
ஸ்வ யத்ன நிவ்ருத்தி பாரதந்தர்ய பலம் -ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலம்
பர பிரயோஜன பிரவ்ருத்தி பிரயத்தன பலம் -தத் விஷய ப்ரீதி சைதன்ய பலம்
சாஸ்திரிகள் தெப்பக் கையரைப் போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த
சாரஞ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்
இவை ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும் உணர்வைப் பெற ஊர மிக உணரவும் உண்டாம் -என்று அருளிச் செய்தார்கள் இறே

அஷ்டாக்ஷராதி ஸத்வித்யா தாத்பர்யம் அகிலம்க்ரமாத்
ரம்யஜா மாத்ரு தேவேந தர்சிதம் கிருஷ்ண ஸூ நு நா –

ஆரண நூல் வாழ்க அருளிச் செயல் வாழ்க
தாரணியும் விண்ணுலகும் தான் வாழ்க -பூரணமாய்
பின்னும் உள்ளோர் தான் வாழ்க பிள்ளை உலகாரியனே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

————————————————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீவர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: