அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த -அருளிச் செயல் ரகஸ்யம்- த்வய பிரகரணம் -பூர்வார்த்தம்-நாராயண /சரணவ் / சரண/ப்ரபத்யே/–பதார்த்தம்-ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ரகஸ்ய பூஷணம் –

நாராயண பதார்த்தம்
அபராதத்தாலே அமுக்குண்டு புருஷகாரத்தாலே தலை எடுத்து
சேர்ப்பாரே சித குரைக்கிலும் -பெரியாழ்வார் -4-9-2–மறு தலைத்துக் கை விடாதே நோக்கும் படியான
வாத்சல்யாதிகளை சொல்லுகிறது -நாராயண பதம் –
விட்ட போது கைக் கொண்டு விடுவிக்க ஒண்ணாத படி காட்டிக் கொடுத்தவள் தன்னையும்
விட்டுப் பற்றும் படி இ றே ஈஸ்வரனுடைய குணாதிக்யம் இருப்பது –
ஈறில வண் புகழ் 1-2-10–என்கிற எண்ணில் பல் குணங்களும்–பெரிய திருமொழி -5-7-2- இதுக்கு அர்த்தமே யாகிலும்
உபாய பிரகரணத்திலே -நிகரில் புகழாய் -6-10-10-என்று தொடங்கி ஆழ்வார் அருளிச் செய்த நாலு குணங்களும் இதுக்கு பிரதான அர்த்தமாகக் கடவது
அதில் வாத்சல்யம் ஆவது -அன்று ஈன்ற கன்றின் உடம்பில் அழுக்கை
போக்யமாகக் கொண்டு பாலைச் சுரந்து கொடுத்து வளர்த்து வேறு ஒன்றை நினையாதே தன்னையே நினைத்து குமிறும்படி பண்ணி
முன்னணைக் கன்றையும் -புல்லிட வந்தவர்களையும் -விட்டுக் கட்டுவாரையும்-நலியத் தேடுகிறவர்களையும்
உதைத்து நோக்குகிற தேனு குணம் இறே-அப்படியே இவனும்
இன்று ஞானம் பிறந்தவனுடைய அழுக்கு உடம்பை -உருவமும் ஆர் உயிரும் உடனே -9-6-5–என்னும்படி போக்யமாகக் கொண்டு
-பாலே போல் சீரில் -பெரிய திருவந்தாதி -58- இன்னருள் சுரந்து -பெரிய திருமொழி -5-8-1–கொடுத்து வளர்த்து
தாய் நாடு கன்றே போலே–முதல் திரு -30- தன்னையே -பெரிய திருமொழி -7-3-2–நினைக்கச் செய்து
-மறவாது அழைக்கப் பண்ணி -பெரிய திருமொழி-5-3-1–ஸூ ரிகளையும்
-அனந்தன் பாலும் கருடன் பாலும் -பெரியாழ்வார் -5-4-8–தவம் செய்தார் வெள்கி நிற்ப -திருமாலை -44–என்கிறபடியே
திருமகளையும் உபேக்ஷித்து இவனை நோக்கக் கடவனாய் இருக்கும்

—————————————————————————————-

அநந்தரம்-நாராயண பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் -அபராதத்தாலே என்று தொடங்கி-அதாவது
உபதேசத்தாலும் அழகாலும் கண் அழிவு அற வசீகரித்துக் கார்யம் கொள்ள வல்ல புருஷகார பலத்தால் –
ஆச்ரயண உன்முகனான சேதனன் அநாதி காலம் பண்ணின அபராதங்களைப் பார்த்துச் சீறி -அங்கீ கரியேன் என்று இருக்கும்
ஈஸ்வர ஸ் வா தந்தர்யம் தலை முடிந்தால் -அதன் கீழ் தலை எடுக்கப் பெறாத செறிப்பு தீர்ந்து தலை எடுக்கும் குணங்களான
வாத்சல்யாதி களைச் சொல்லுகிறது நாராயண பதம் என்கை –
புருஷகார உபேக்ஷையா உபாயத்துக்கு உண்டான ஏற்றத்தை அருளிச் செய்கிறார் -விட்ட போது-என்று தொடங்கி –
புருஷகாரமும் மிகை என்னலாம் படியான உபாய வைபவம் என்று இறே மா முனிகள் திரு வாக்கு -மிகை என்றது –
-நாசவ் புருஷ காரேண -இத்யாதியைப் பற்ற என்று கண்டு கொள்வது –
இப்படி அபேக்ஷிதமான புருஷகாரம் தானும் தன்னேற்றமாம் படி இருக்கின்றன -நாராயண பதத்தில் தோற்றுகிற சம்பந்தமும் குணங்களும் என்றபடி –
இது தன்னடியார் -என்கிற பாட்டிலே காணலாம் -ஸ்ரீ தர ஸ்ரீ கர ஸ்ரேய ஸ்ரீ மான் லோக த்ரயாச்ரய-இத்யாதிகளிலே
பகவன் நாமமாக பிரசித்தமான ஸ்ரீ மச் சப்தமே அமையாதா-என்னில்
பூர்வ கண்டத்தில் உபாய பாவத்துக்கு உறுப்பான குண விசேஷ அனுசந்தான அர்த்தமாகவும் –
உத்தர கண்டத்தில் -சர்வ விசிஷ்டனான சேஷி ப்ராப்யனாய் தோற்றுகைக்கும் நாராயண சப்தம் அபேக்ஷிதம் ஆகையால் -இங்கு ஸ்ரீ மச் சப்தம் விசேஷணம் –
பூர்வ கண்டத்தில் நாராயண சப்தத்துக்கு சரண்யத்தையிலே நோக்கான படியால் -நிகரில் புகழாய் -இத்யாதிகளில் சங்க்ருஹீதங்களான
-வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்ய ஸுலப்ய ஞான சக்தி பிராப்தி பூர்த்தி காருண்யாதிகள் இங்கு அனுசந்தேயங்களில் பிரதான தமங்கள்-
இது தன்னை அருளிச் செய்கிறார் -ஈறில என்று தொடங்கி -வாத்சல்யாதி குண சதுஷ்ட்யம் ஆச்ரயண சவ்கர்ய ஆபாதகம் ஆகும்
-ஆஸ்ரயணே –சரண வரணே -சவ்கரஸ்ய -சூ கரத்வஸ்ய-ஆபாதக-ஜஃஞாபகா -என்றபடி –
இங்கே -சாஷூஷ பூர்வக ஆஸ்ரயணே நிக்ரஹ ஆபாதகத்வ-ஸக்யத்வ அந்நிய தரபுத்தி நிவர்த்தன த்வாரா
ஆஸ்ரயண ப்ரவ்ருத்த ஒவ்பயிக ஞான விஷயத்வம் ஆஸ்ரயண உபயோகித்தவம் -என்ற பூர்வர்கள் நிஷ்கர்ஷம் அனுசந்தேயம் –

வாத்சல்யம் -வத்சம் லாலயதி-என்கிற வியுத்பத்தியாலே -அன்று ஈன்ற கன்றின் பக்கல் தாய் பண்ணும் வியாமோஹம் –
அதாவது சுவடுபட்ட புல்லையும் காற்கடையில் கொள்ளும் தசையிலும்-தன் கடையில் நின்றும் புறப்பட்ட கன்றினுடைய வழும்பு நாற்றத்தையே
தனக்கு போக்யமாக ஸ்வீகரித்து -தன்னுடைய ஷீரத்தாலே அத்தை தரிப்பிக்குமா போலே-தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்கிறபடியே
-ஆஸ்ரித கதமான தோஷங்களைத் தன் பேறாக மேல் விழுந்து போக்கித் தன் குணங்களாலே அவர்களைத் தரிப்பிக்கை –
ஆத்ம குண அனுசந்தானம் ஆகையால் ஆஸ்ரயண அநந்தரம் வரும் பாப விமோசனம் வியாபாரத்தோடு விரோதம் பிறவாது –
வத்சத்தின் பக்கல் தேனு இருக்கும் இருப்பு வாத்சல்யம் -அதாவது அதனுடைய தோஷத்தை போக்யமாகக் கொள்ளுகையும் ஷீரத்தைக் கொடுத்து வளர்க்கையும்
-எதிர் இட்டவரைக் கொம்பிலும் குளத்திலும் கொண்டு நோக்குகையும் இறே –
அப்படியே ஈஸ்வரனும் -தோஷத்தை போக்யமாகக் கொண்டு -பாலே போல் சீர் -என்கிற குணங்களாலே தரிப்பித்து -கதஞ்சன ந த்யஜேயம் -என்றும் –
அபயம் சர்வ பூதேப்ய -என்றும் சொல்லுகிற படியே அனுகூலர் நிமித்தமாகவும் -பிரதி கூலர் நிமித்தமாகவும் நோக்கும் -என்றபடி –
இங்கே வத்ஸல-வத்ஸான் ஸ்வோத் ஸூ கான் காமயதே இதி-வத்ஸாம் சாப்யாம் காம பலே-இதி லஸ் ப்ரத்யய -என்கிற ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ பாஷ்யமும் –
வாத்சல்யம் தோஷேஷ்வபி குணத்வ புத்தி -யதா மாதுர் வத்ஸ்ஸே-என்று சமன்வய அதிகரண ஸ்ருத பிரகாசிகா வாக்யமும்-
ப்ரியதமை யுடம்பில் அழுக்கும் வத்சத்தின் உடைய வழும்பும் போலே பிரபன்னனுடைய தோஷம் -என்கிற வார்த்தையும்
துஷ்டரும் சரணாகதரானால் ஈஸ்வரன் கைவிடாதே திருத்தும் என்றபடி -என்ற ரகஸ்ய த்ரய சார வாக்யமும்
ப்ரபந்நான் மாதவ ஸர்வான் தோஷேண பரிக்ருஹ்யதே -அத்ய ஜாதம் யதா வத்சம் தோஷேண ஸஹ வத்சலா -என்ற வசனமும் –
அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை கோன் குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ -எற்றே தன் கன்றின் உடம்பின்
வழு வன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்று உகந்த ஆ –என்ற ஞான ஸாரப் பாசுரமும் அனுசந்தேயங்கள் –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத் அகர்ஹிதம்-என்று இ றே சரண்யன் திரு வாக்கு இருக்கும் படி
ஸ்யாத் -என்று பிரார்த்தநாயாம் லிங் என்றும் -அகர்ஹிதம் -கர்ஹித விரோதி ஸ்லாக்யம்-என்றும் இறே வியாக்கியான சக்கரவர்த்தியின் வியாக்கியான ஸ்ரீ ஸூ க்தி-
கிஞ்ச-ப்ரீதி விசேஷ விசிஷ்ட விஷயத்தில் வத்ஸல சப்தத்துக்கு சக்தி சாப்த்திகராலே நிரூபிக்கப் பட்டு உள்ளது –
காசிகா வ்ருத்தி தத்வ போதி நியாதி களிலே இவ்வர்த்தம் ஸ்பஷ்டம் –
வத்ஸாம் சாப்யாம் காம பலே -இதி லச் ப்ரத்யய -வத்ஸல இதி ஸ்நேஹ வான் உச்யதே -என்று இ றே அவ்விடத்து வாக்கியம்
ப்ரீதி விசேஷத்தை குறிக்குமதாக அறுதியிடப் பட்ட லச் பிரத்யயத்துக்கு அஞ்ஞாந பரமாக வ்யாக்யானம் பண்ணுவது அநுசிதம் –
ஏதேந -அவ்விஞ்ஞாத ப்ரபந்ந அபராதா பரிகண நம் குண ஏவ -த்வம் ஹி அஞ்ஞ ஏவ ஆஸ்ரித தோஷஜோஷண -என்றார் இறே
தாதபாதரும்-என்ற பட்டர் பாஷ்யமும் நிர்வஹிக்கப் பட்டது –
காருண்யாதிகளை பிரசரிக்க ஒட்டாமல் தடுக்கிற தோஷ ஞானம் இல்லை என்று இ றே அவ்வாக்யத்தின் கருத்து -தோஷத்வேந ஞானம் இல்லை
-கின்னு குணத் வேந ஞானம் உண்டு என்றபடி -தத் அதிகம அதிகரண ஸ்ருத பிரகாசிகையில் பகவானுக்கு தோஷ ஞானம் யுக்தம் இ றே –
ந ததோ வி ஜுவ்குப்சதே -என்ற கட வல்லி வாக்யத்துக்கு -தோஷான் போக்யதயா பஸ்யதி வாத்சல்ய அதிசயாத்
-என்று இறே ஸ்ரீ ரெங்கராஜ ஸ்வாமி பாஷ்யம் இட்டு அருளினார்
அஹோபில மடாதிபதி ஸ்ரீ நாராயண முனீந்திரர் அருளிச் செய்த ரகஸ்ய த்ரய ஜீவாதுவிலும் இவ்வர்த்தம் ஸ்பஷ்டம்
மயர்வற மதிநலம் அருள பெற்ற ஆழ்வார்களும் நற்கலைகள் ஆய்ந்து அம் தமிழால் -நன்று செய்தார் -குணம் கொள்ளும் -நற்றமாகவே -என்று அருளிச் செய்து போந்தார்கள்-
ஆலிஹ்ய தான் நிரவசேஷம் அலப்தத்ருப்தி-ஒவ்த ஸூ க்ய பூர்வ முபஹ்ருத்ய மஹா அபராதான்-என்று இ றே கவிதார்க்கிக்க ஸிம்ஹ கோஷம் இருக்கும் படி
சம்சாரிக்கு தன் குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்ய குண தர்சனம் -இதனாலும் பிரபத்தி உபாயம் அன்று என்று தேறுகிறது-
பிரபத்தி உபாயமாகில் -அதனாலேயே தோஷம் வசிக்கும் ஆகையால் வாத்சல்ய பர்ய அலோசனம் நிஷ் பிரயோஜனமாம் –
ப்ரஹ்ம ஹத்யைக்கு பிராயச்சித்தமாக துவாதச வார்ஷிகம் அனுஷ்டிக்குமவனுக்கு வாத்சல்ய குண பர்ய அலோசனம் நிஷ் பிரயோஜனம்
-அவ்வோபாதி இங்கேயும் வரும் -இது கொண்டு பிராப்தி அனுபாயம் என தெளிய பிராப்தம் -இங்கே போக்யமாகக் கூறப்படும் தோஷங்கள் பூர்வ பாபங்கள் ஆகும் –
அன்றிக்கே தோஷமாவது சரீரம் -அதனைப் போக்கியமாக கொள்ளுகிறான் பகவான் என்னவுமாம் -இவ்வர்த்தத்தை -ஞானியை விக்ரகத்தோடே ஆதரிக்கும் -என்று
லோக தேசிகன் அருளிச் செய்தார் -இது தன்னை அருளிச் செய்கிறார் -அழுக்கு உடம்பை -என்று தொடங்கி –
ஆக தோஷமாவது -பூர்வ பாபமும் -பிராமாதிக உத்தர பாவமும் -அழுக்கு உடம்பும் ஆகிறது –
இவற்றை போக்யமாகக் கொள்ளுகிறான் வத்சலன் என்றதாயிற்று –
ஆஸ்ரயண அநந்தரம் புத்தி பூர்வகமாகப் பாபத்தை செய்யான் -புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தை செய்யான் இ றே

——————————————————————————————-

இப்படி செய்கைக்கு அடியான குடல் துவக்கு -ஸ்வாமித்வம் ஆவது
இவன் யாதானும் பற்றி திருவிருத்தம் -95–ஓடும் போதும் விடாதே -நான்முகன் -88-
தொடர்ந்து உரு அழியாமே -ஒரு மா வயிற்றின் உள்ளே -10-7-6-வைத்து நோக்கி அத்வேஷம் தொடங்கி அடிமை எல்லையாகத் தானே உண்டாக்கி
-இழவு பேறு தன்னதாம் படி உடையவனாய் இருக்கும் இருப்பை -ஸ்வாமித்வம் என்கிறது –

——————————————————

ஸ்வாமித்வம் ஆவது -இந்த வாத்சல்யத்துக்கு ஊற்றாய்-ஈஸ்வர பிராப்தி ஆத்மாவுக்கு அன்று -ஆத்மபிராப்தி ஈஸ்வரனுக்கு -என்னும்படி
இச் சேதன வஸ்துவை உடையனாகை-உடையான் இ றே உடைமையைப் பெறுகையில் யத்னம் பண்ணுவான்
-ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று இ றே வேதாந்த சார நிஷ்கர்ஷம் இருக்கிற படி -அதாவது ஸ்வாமித்வம்
-இவன் விமுகனான தசையிலும் விடாதே நின்று சத்தையை நோக்கிக் கொண்டு போ ருகைக்கு ஹேதுவான பந்த விசேஷம் –
அதாவது உடையவனாய் இருக்கும் இருப்பு -அத்வேஷம் தொடங்கி கைங்கர்யம் பர்யந்தமாக உண்டான ஸ்வ பாவ விசேஷங்களை எல்லாம் உண்டாக்குகிறது
-இந்த பந்த விசேஷம் அடியாக என்றபடி -இது தன்னை அருளிச் செய்கிறார் -அத்வேஷம் -என்று தொடங்கி –

———————————————————————————————————————

இந்த குணத்தைக் கண்டு -வானவர் சிந்தையுள் வைத்துச் -1-10-7-சொல்லும் வானோர் இறையைக் -1-5-1-
கள்ளத்தேன் -திருமாலை -34-நானும் எச்சில் வாயால் -திருகி குறுந்தாண்டகம் -12–வாய்க்கொள்ள மாட்டேன் -பெரியாழ்வார் -5-1-1–என்று
அகல்வார் அளவில் பெருமை சிறுமைகள் பாராதே இவர்கள் நினைவை தன் பேறாக மேல் விழுந்து ஒரு நீராகக் கலக்கை-ஸுசீல்யம் –

—————————————————————————–

ஸுசீல்யம் ஆவது -உபய விபூதி யோகத்தாலும்-பெரிய பிராட்டியாரோட்டை சேர்த்தியாலும் -நிரங்குசமாய் இருக்கிற ஈசுவரனுடைய மேன்மையும்
-தங்கள் சிறுமையும் பார்த்து -அவன் எவ்விடத்தான் யானார் என்று பிற்காலியாத படி எல்லோரோடும் ஓக்க மேல் விழுந்து புரை யறக் கலக்கையும்-
அது தன் பேறாக இருக்கையும் -எதிர்தலையிலே அபேக்ஷை இன்றியிலே இருக்க கலக்கையும் இது தன்னை அருளிச் செய்கிறார் –
இந்த குணத்தைக் கண்டு -என்று தொடங்கி -அதாவது வத்சலனுமாய் வகுத்தவனுமாய் இருந்தாலும் தன்னுடைய விஸ்ருங்க லிதமான
ஐஸ்வர்யம் தோற்றும்படி இருக்குமாகில் -அதி ஷூ த்ரனான இச் சேதனனாலே ஆஸ்ரயிக்க ஒண்ணாது என்ன வேண்டாத படி பெரியனான தன்னை
தாழ விட்டு -ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே சகே என்னலாம் படி சிறியாரோடே ஒரு நீராகக் கலந்து பரிமாறுகை -என்றபடி –

———————————————————————————————————————-

கட்கரிய திருமேனியை-7-7-11- நிலைக் கண்களும் -திருச் சந்த-16- -காணும் படி கண்ணுக்கு இலக்காக்குகை -ஸுலப்யம்
சன்மம் பல பல செய்து -3-10-1-கண் காண வந்து –3-10-6-ஓர் ஒருத்தருக்கு ஓர் ஒரு தேச காலங்களிலே வடிவைக் காட்டின
ஸுலப்யம் பரத்வம் என்னலாம் படி எல்லா தேச காலங்களிலும் இம்மட உலகர்-9-2-7- காணலாம் படி பண்ணின அர்ச்சாவதார ஸுலப்யம் விஞ்சி இருக்கும் –

———————————————————————-

ஸுலப்யம் ஆவது -கண்ணுக்கு விஷயம் இன்றிக்கே இருக்கிற தான் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி எளியனாய் இருக்கை-
இது தன்னை அருளிச் செய்கிறார் -கட்கரிய -என்று தொடங்கி –
அதாவது மாம் -என்று சேனா தூளி தூ சரிதமான திருக் குழலும் -கையும் உழவு கோலும் -பிடித்த சிறு வாய்க் கயிறும்
-தேருக்கு கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற ஸுலப்யம் பரத்வம் என்னும்படி இருக்கும் -இந்த நாராயண பதத்தில் ஸுலப்யம் –
எளிவரும் இணைவனாம் என்றவை பரத்வமாம் படி அவனாகும் ஸுலப்ய காஷ்டை -என்று இறே இவர் தாமும் ஆச்சார்ய ஹிருதயத்தில் அருளிச் செய்து அருளினார்
அது தன்னை அருளிச் செய்கிறார் -சன்மம் பல பல -என்று தொடங்கி -பரம பதம் ஷீராப்தி தொடக்கமானவை தேச விப்ர கர்ஷத்தாலே ஆஸ்ரயிக்க ஒண்ணாது –
விபாவாதிகள் இதா நீந்த நர்க்கு கால விப்ர கர்ஷத்தாலே ஆஸ்ரயிக்க ஒண்ணாது
அந்தர் யாமித்வாதிகள் அசஷூர் விஷயம் ஆகையால் ஆஸ்ரயிக்க ஒண்ணாது
இம் மூன்று குற்றங்களும் இன்றிக்கே இருக்குமது பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களம் -என்றும்
அடியோமுக்கே எம்பருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -என்றும் குலாவப் படுகிற அர்ச்சாவதாரம் இறே என்றபடி

—————————————————————————————–

தோஷம் பாராதே கார்யம் செய்யும் என்று –
வெருவாதே கண்டு பற்றினவர்களுக்கு கார்யம் செய்கைக்கு உறுப்பான ஞான சக்தி கிருபைகளும் இதிலே அனுசந்திக்கப்படும் –

நல்கித் தான் காத்து அளிக்கும் -1-4-5–என்று வாத்சல்யமும்
முழு வேழ் உலகுக்கும் நாதன் –2-7-2-என்று ஸ்வாமித்வமும்
நங்கள் பிரான் -9-3-1–என்று ஸுசீல்யமும்
நாவாய் உறைகின்ற -9-8-7-என்று ஸுலப்யமும்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -4-7-1-என்று ஞான சக்திகளும்
நல்லருள் நம் பெருமான் -5-9-10–என்று கிருபையும்
நாராயண சப்தத்துக்கு அர்த்தமாக ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் –

———————————————————-

இக் குணங்களுக்கு இவ்விடத்தில் விநியோகங்கள் இவை என்ன அருளிச் செய்கிறார் -தோஷம் பாராதே -இத்யாதி
உத்தரார்த்தத்தில் சொல்லுகிற விரோதி நிவ்ருத்தி பூர்வகமான ப்ராப்ய சித்திக்கு ஏகாந்தமான -அஹம் சப்தத்தில் உக்தமான
ஞான சக்த்யாதி குண சதுஷ் கமும் -அவற்றுக்கு பெரு நிலை நிற்கும் இரக்கமும் இப்பதத்திலே அனுசந்தேயம்-என்கிறார் -கார்யம் செய்கைக்கு என்று தொடங்கி –
ஸ்வீகாரத்துக்கு உப உக்தங்களான குண விசேஷங்களோ பாதி உபாயத்வ உப யோகிகளான குண விசேஷங்களும் இவ்விடத்தே அனுசந்தேயங்கள் –
பிரதம பாத அனந்தரத்தில் அஸ்மச் சப்தத்துக்கு போலே -இதுக்கு சங்கோசம் இல்லாமையால் அஸ்மச் சப்த த்வயார்த்தமும் இவ்விடத்திலே அனுசந்தேயம் என்றபடி –
இவை இ றே ஆஸ்ரித கார்ய ஆபாதக குணங்கள் –
ஆஸ்ரிதஸ்ய -சரண வரண கர்த்து–கார்யஸ்ய -அநிஷ்ட நிவ்ருத்தியாதே -ஆபாதகா -உபயோகி நா -என்றபடி –
சர்வஞ்ஞத்வம் ஆவது -அஞ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித் –யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ் வத-என்கிறபடியே சர்வத்தையும் சாஷாத் கரிக்கை-
சர்வ சக்தித்வம் ஆவது -அகடி தகடநா சாமர்த்த்யம் -ஹேயரான நித்ய சம்சாரிகளை உபாதேய தமரான நித்ய ஸூ ரிகளோடே ஒரு கோவை யாக்கை வல்ல அத்புத சக்தி
பூர்த்தி யாவது -அவாப்த ஸமஸ்த காமத்வம்
பிராப்தி யாவது -அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத -என்கிறபடியே ஸமஸ்த பதார்த்த அனுபந்தி -சகல அதிசயங்களும் தான் பலியாய் இருக்கை –
கீழ் வாத்சல்யாதி பிரகரணத்தில் சொன்ன ஸ்வாமித் வத்துக்கும் இந்த சேஷித்வத்துக்கும் வாசி என் என்னில் -தன்னை ஒழிந்த ஸமஸ்த வஸ்துக்களையும் தன் உடைமை என அபிமானித்தல் ஸ்வாமித்வம் -அவற்றால் ஆஹிதமான அதிசயத்தை உடைத்தாய் இருக்கை சேஷித்வம் –
ஸ்ரீ பாஷ்யகாரரும் -அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத -அகில ஜகத் ஸ்வாமின்-என்று ஸ்வாமித்வ சேஷித்வங்களை பிரிய அருளிச் செய்தார் இறே
-இங்கே சிலர் சேதன சேஷித்வம் ஸ்வாமித்வம் என்று கொண்டு சேதன அசேதன சாதாரணமாக சேஷித்வத்தையும்
சேதன மாத்ர விஸ்ராந்தமாக ஸ்வ ஸ்வாமி பாவத்தையும் நிர்வஹிப்பர்கள் -அது பொருள் அன்று -கிஞ்சித் கார பிரதி சம்பந்தித்தவமே சேஷித்வம் ஆகையால்
-கிஞித்காரம் இல்லாமலும் ஸ்வ ஸ்வாமி பாவம் காண்கையாலும் பூர்வ யுக்த நிர்வாகமே யுக்தம் என்னத்தகும்
கருணை உன்மேஷம் அடையாத போது இவை இத்தனை குணங்களும் தோஷமாம் இ றே
இந்த்ரியங்களுள் மனசு ஸூ க்கு ப்ராதான்யம் போலே திருக் கல்யாண குணங்களுள் கருணைக்கு பிரதான்யம் –
அருள் கொண்டாடும் அடியவர் என்றார் இ றே ஸ்ரீ மதுரகவிகளும் -அக் குணமும் இங்கே அனுசந்தேயம் -என்கிறார் கிருபை என்று தொடங்கி –
ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கு ஆஸ்ரய நீயத்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் ஆகிற ஆகார த்ரயம் உண்டாக்கடவது ஆகையால் வாத்சல்யாதிகள்
வாத்சல் யாதிகள் ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாய் ஞானாதிகள் சரண்யத் வத்துக்கு உறுப்பாய் -ஸுந்தரயாதிகள் ப்ராப்யத்வத்துக்கு உறுப்பாய் இருக்கும் –
இந்த நாராயண பதம் பூர்வ கண்டத்தில் உள்ளது ஒன்றாகையாலே ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான ஸுலப்யத்திலே நோக்காய் இருக்கும்
சரம ஸ்லோகத்தில் மாம் சப்தம் ஸுலப்ய பரம் ஆகையால் அங்குத்தை ஸுலப்யம் -மய்யா சக்தம நா பார்த்த -என்று தன் பக்கலிலே
ஆஸக்தமான மனசை உடைய அர்ஜுனன் ஒருவனுக்குமாய் இருக்கும் –
அர்ச்சாவதார ஸுலப்யம் சர்வ விஷயமாய் இருக்கும் –நீயே நமக்கு வேண்டா என்றவர்களையும் விட மாட்டாத ஸுலப்யம் இ றே இது
-இந்த ஸுலப்யம் சர்வகாலிகமாய் இ றே இருப்பது -இந்த எளிமைக்கு வாசகம் இ றே நாராயண பதம் –
இவ்வர்த்தங்களை ஆழ்வார் பாசுரம் கொண்டு நிரூபிக்கிறார் -நல்கி -என்று தொடங்கி -இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் பக்கலிலே காணலாம்
ஸுகர்ய ஆபாதகமாயும் -கார்ய ஆபாதகமாயும் சொன்ன இக் குணங்கள் எல்லாம் -இவை காண்கையில் அபேக்ஷையுடைய நமக்கு
நம்முடைய பெருமாள் பக்கலிலே காணலாம் என்றபடி –
திருகி கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சல் என்ற திருக் கையும்
கவித்த முடியும்
முகமும் முறுவலும்
ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே தஞ்சம் என்கை
ஆக நாராயண பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

———————————————————————————————————————————-

சரணவ்–சப்தார்த்தம்
சரணவ்–என்று பிராட்டியும் எம்பெருமானும் விடிலும் விடாத திண் கழலாய் -1-2-10-
முழுதும் வந்து இறைஞ்சும் -பெரிய திருமொழி -5-8-5-
மென் தளிர் போல் அடியாய் வந்து இறைஞ்ச இராதே -பெரிய திருமொழி -7-4-8-
கமல மலர் பாதம் வந்து-அமலனாதி -1- என்னும் படி நீள் கழலாய்
சாது உதைத்த -1-9-11-ஒண் மலர்ச் சேவடி யாகையாலே -1-10-1–
யாவர்க்கும் வன் சரணாய் -6-3-7-
அழும் குழவிக்கும் -பெருமாள் திரு -5-1-பேதைக்கு குழவிக்கும் –பெரியாழ்வார் -1-2-1-தாரகமுமாய் போக்யமுமாய்
இணைத் தாமரை யடி -பெரிய திருமொழி-1-8-3-சேர்த்தி அழகை உடைத்தான் திருவடிகளை சொல்லுகிறது
அவன் மாம் என்று தன்னைப் பற்றச் சொன்னாலும் சேஷ பூதர்
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் -10-5-1-
எந்தை கழலிணை பணிமின் -திருமாலை -9-
ஆயன் அடி யல்லது -பெரிய திருமொழி-1-10-8-
நின்னடி யன்றி மற்று அறியேன் பெரிய திருமொழி-7-7-2-/3/5/6/-என்று
கண்ணனை தாள் -3-10-10-பற்றக் கடவர்கள் இறே –

இணைத் தாமரை கட்கு –7-1-10-அன்புருகி நிற்கும் அது நிற்கச்
சிலம்படியிலே -பெரிய திருமொழி -1-6-2–மண்டுகிறவனுக்கு -அன்ன மென்னடையை –பெரிய திருமொழி -9-7-2-அருவருக்கும் படி
சேவடிக்கே மறவாமையை உண்டாக்கி -பெரிய திருமொழி -3-5-4-அன்பு சூட்டப் பண்ணி -திருவிருத்தம் -2-
பாதமே சரணாகக் கொடுத்து–5-7-10- கழல் காண்டும் கொல் -5-9-3-
தலைக்கு அணியாய்-9-2-2–சரணம் தந்து என் சன்மம் களையாய் -5-8-7-என்று இருக்கிற அபேக்ஷைகளை உண்டாக்கி
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேன் -10-4-3-
காண்டலுமே விண்டே ஒழிந்த -10-4-9-என்கிற பேறுகளைக் கொடுத்து
அங்கு ஓர் நிழல் இல்லை நீரும் இல்லை -பெரியாழ்வார் -5-3-4–என்கிற விடாயை
அடி நிழல் தடத்தாலே ஆற்றி -10-1-2–பாதபோதை உன்னி வழி நடத்த -திருச் சந்த -66-
தாளிணைக் கீழ் புகும் காதலுக்கு ஈடாக –3-9-8-தாளின் கீழ்ச சேர்த்து -7-5-10-
வேறே போக விடாதே–2-9-10- அடிக் கீழ் இருத்தி -5-1-11-
திருவடியே சுமந்து உழலப் பண்ணி -4-9-9-
அடிக் கீழே குற்றேவலிலே மூட்டி -1-4-2-
ருசி ஜனகத்வம் முதலாக நித்ய கைங்கர்யம் எல்லையாக நடத்துவது திருவடிகளைக் கொண்டு இறே

இத்தால் புருஷகாரமான -பனி மா மலராள் பெரிய திருமொழி -2-2-9–வந்து இருக்கும் இடமாய்
-சுடர் வான் காலன் பெய்த மாணிக்கச் செப்பு -பெரிய திருமொழி -7-10-6-போலே ஸ்வரூப ரூப குணங்கள் நிழல் எழும் படியாய்
-திருமேனி கிடந்ததுவே என்னும் படி அவை ஒழியவும் தானே கார்யம் செய்ய வற்றாய்
சிசுபாலனோடு சிந்தயந்தியோடு வாசி அற சித்த சாத்திய ரூபமான உபாயங்களால் செய்யும் காரியத்தையம் தானே செய்து
-அலவலைமை தவிர்த்த -பெரிய திருமொழி -4-3-5–காதல் கடல் புரைய விளைவித்த -5-3-4-என்னும் படி
அத்வேஷத்தையும் பரபக்தியையும் உண்டாக்கி தன்னோடே சேர்த்துக் கொள்ளும் திருமேனியை நினைக்கிறது –

——————————————————————

இனி -சரணவ் -என்கிற பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -சரணவ்-என்று தொடங்கி –
உபாயத்துவத்துக்கு ஏகாந்தமான இதன் குணாதிக்யத்தை அருளிச் செய்கிறார் -பிராட்டியும் எம்பெருமானும் -என்று தொடங்கி –
அதாவது ஸ்ரீ மத்-பதத்திலே-புருஷகார பூதையாகச் சொன்ன பிராட்டியும் -அவள் தானே சித குரைக்கிலும் -என்னடியார் அது செய்யார்
-என்னும்படி நாராயண பதத்தில் சொன்ன குண விசிஷ்டனான அவனும் கை விடிலும்
திருவடிகள் தன் வை லக்ஷண்யத்தாலே துவக்கிக் கொள்ளுகையாலே கை விடாது –
வண் புகழ் நாரணன் திண் கழல் -என்கிறபடியே பற்றினாரை நழுவ விடாதே திண்மையை உடைத்தாய் இருக்கும் என்கை –
சர்வ ஸமாச்ரய நீயத்வத்தை கலியன் பாசுரம் கொண்டு நிரூபிக்கிறார் -முழுதும் என்று -யத் நபலித்தவங்கள்
உபாய பூதனான அவனுக்கே என்று பூர்த்தியை அருளிச் செய்கிறார்
-கமல பாதம் வந்து -என்று தொடங்கி –
ஓடி வந்து தம்மைத் தொடர்ந்த படியும் அயத்ன லப்தமான படியும் சொல்லுகிறது –
வந்து நீள் கழல் -என்று உபாய பூர்த்தியைச் சொல்லுகிறது –
நாள் தோறும் ஆசா லேசம் உடையார் இருந்த இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் இறே –
த்வீ பாந்தரத்தில் சரக்குச் சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் வருதல் ஒரு தலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே
அங்கண் அன்றியே -வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடியே வழி வந்தானும் தானே -பற்றினானும் தானே -என்கிறது –
உனதடியேன் -வருகிற போது புகுருகைக்கு அடியாக அவன் கையோடு கொடு வந்த பிரமாணம் -நீயோ உன் காரியத்துக்கு கடவாய்
-நான் காண் -என்று தானே சர்வ பரங்களையும் நிர்வஹிப்பானாக வாய்த்து ஏறிட்டுக் கொண்டு புகுந்தது –
வந்து புகுரப் புக்கால் இசையாதே -அல்லேன் என்கைக்கு வாய்த்தலையான நெஞ்சிலே வந்து புகுந்தான் யாய்த்து-
யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்று இலன் தான் ஒட்டி வந்து -என்றார் இ றே ஆழ்வார்
இசைவு தன்னாலே வந்ததாகில் அன்றோ விடுகையும் என்னால் வந்தது ஆவது –
ஆழ்வீர் நாம் உம்முடைய பாடே இருப்போம் -என்றால் ஓட்டேன்-என்பரே-ஆகில் இங்கே இருக்கக் கடவோம் என்று ப்ரதிஞ்ஜை பண்ணியாய் ஆயிற்று வந்து இருப்பது –
எனக்கு ஞானம் பிறக்கைக்கு க்ருஷி பண்ணி பிறந்த ஞானம் பலிக்கும் அளவாக கொண்டு -நான் அகன்று போவேன் -என்றால்
அவன் சம்வதிக்குமோ-நான் அவனை விட்டாலும் அவன் தான் என்னை விடான் -பத்தி உழவன் இறே
இவ்வருகு அடங்கலும் பல போக்தாவான ஈஸ்வரன் க்ருஷி பலம் என்றபடி –
த்வி வசனம் இரண்டுக்கு மேல் மற்று ஓன்று புகுர சஹியாமையாலே -சஹா யாந்தர நிரபேஷமான உபாய பூர்த்தியைச் சொல்லுகிறது –
சரணவ்-என்கிற இடத்திலே தமேவம் சரணம் கச்ச -கழல்கள் அவையே சரணாக -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -இத்யாதிகளில் படியே
அவதாரணம் விவஷிதம் என்றும் சொல்லுவர்-
திருவடிகளின் தாரகத்வ போக்யத்வங்களை அருளிச் செய்கிறார் அழும் குழவி-என்று தொடங்கி
அழும் குழவி -சேதனன் -பேதைக்கு குழவி -ஈஸ்வரன்
தாரகத்வ போக்யத்வங்களை- மே திவ்யம் -ஸ்ரீ கீதை 4-9- முதலான இடங்களிலே காணலாம்
திருவடிகளின் சேர்த்தி அழகை அருளிச் செய்கிறார் -இணைத் தாமரை -என்று தொடங்கி
இரண்டு தாமரைப் பூவை நிரைத்து வைத்தால் போலே இருக்கிற சேர்த்தி அழகை சொல்லும் த்வி வசனம் என்றபடி –

இந்த குணாதிக்யத்தை இட்டு மாத்திரம் அல்லாமல் இவன் தன் ஸ்வரூப அநு குணமாகவும் திருவடிகளில் இழிகிறான்
என்னுமத்தை அருளிச் செய்கிறார் -அவன் மாம் -என்று தொடங்கி
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை -பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே -என்று அருளிச் செய்தார் இறே ஸ்ரீ மத் லோக தேசிகன் –
அதாவது சேஷி பக்கல் ஆஸ்ரயிக்க இழியும் சேஷ பூதன் தன் ஸ்வரூப அநு குணமாக இழியும் துறை திருவடிகள்
ஸ்தநந்திய பிரஜை தாயினுடைய அவயவம் எல்லாம் கிடக்க-தனக்கு வகுத்ததாய் உள்ள முலையிலே வாய் வைக்குமா போலே என்கை
சித்த ஆலம்பன ஸுகர்ய க்ருபோத்தம்ப கதாதிபி -உபாயத்வம் இஹ ஸ்வாமி பாத யோர் அநு சம்ஹிதம்
இங்கு தாஸபூதன் ஒவ்சித்ய அதிசயத்தாலும் அநதிக்ரம் அணீயம் ஹி சரணக்ரஹணம் -என்கிறபடியே க்ருபோத்தம்பாக்கத்துவ அதிசயத்தாலும்
-தவம் ருதஸ் யந்தி நீ இத்யாதி களில் படியே -போக்யத்வ அதிசயத்தாலும் திருவடிகளை அவலம்பிக்கிறான்-

இவ்வர்த்தம் -ஸர்வதா சரணத்வந்தம் -த்வத் பாத கமலாத் அந்யத் – மம தே பாதயோ ஸ்திதம் –
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ–ச ப்ராதுஸ் சரணவ் காடம்
தஸ்ய தாம்ர தலவ் தாதா சரணவ் ஸூ ப்ரதிஷ்டதவ் -ஸூ ஜாதம் ருது ரக்தாபி ரங்கு லீபி ரலன்ருதவ்-
ப்ரயதேந மயா மூர்த்தன க்ருஹீத்வா ஹ்யபி வந்திதவ்
சரணவ் சரணம் யாத -ப்ரபந்நா கவ்க வித்வம்ஸி சரணவ் சரணம் கத -இத்யாதிகளிலும் பிரசித்தம்
இவற்றை அடி ஒற்றினவர்களும் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்றும் த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்றும் அருளிச் செய்தார்கள்
சவ்கந்த்ய ஸுகுமார் யாதி குண விக்ரஹவான் ஹரி -தஸ்ய ஸ்வாத்ம ப்ராதேந து சாதனம் ஸ்வ பத த்வயம் -என்று அபியுக்தரும் பிரதிபாதித்தார்கள் –
ருசி ஜனகத்வாதிகள்-திருவடிகளின் வைபவங்கள் -இது தன்னை அருளிச் செய்கிறார் -இணைத் தாமரை கட் க்கு என்று தொடங்கி
சூதனாயக் கள்வனாகி தூர்த்தரோடு இசைந்த காலம் மாதரார் கயல் கண் என்னும் வலையில் பட்டு அழுந்துவேனை-
போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் -என்றார் இ றே ஆழ்வார்
எங்கனேயோ வில் ருசி ஜனகத்வத்தையும்
நோற்ற நோன்பில் உபாயத்வத்தையும்
ஆராவமுதில் உபேயத்வத்தையும்-அருளிச் செய்தார் இ றே நம்மாழ்வாரும்
இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராயப் போரும் சேதனர்க்கு வைமுக்யத்தை மாற்றி
ருசியை விளைவிக்கக் கடவதாய்-ருசி பிறந்தால் உபாயமுமாய் -உபாய பரிக்ரஹம் பண்ணினாள் போக்யமுமாய் இருக்கும் -என்ற
ஸ்ரீ வசன பூஷண சூத்திரமும் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் சரித்திரமும் இங்கே அனுசந்தேயம் –

திருவடிகளை சொன்ன இது -திரு மேனிக்கு உப லக்ஷணம் -என்கிறார் இத்தால் என்று தொடங்கி –
இத்தால் பிராட்டிக்கு இருப்பிடமாய் -குண பிரகாசகமுமாய் -சிசுபாலனையும் அகப்பட திருத்திச் சேர்த்துக் கொள்ளும் திருமேனியை நினைக்கிறது -என்று
அருளிச் செய்தார் இ றே ஸ்ரீ மத் லோகாச்சார்யரும் –
அதாவது -சரணவ் என்று விக்ரஹ ஏக தேசமான திருவடிகளை சொன்ன இத்தால் -திரு விருந்த மார்வன் என்னும்படி
ஸ்ரீ மத் பதத்தில் சொன்ன புருஷகார பூதையான பிராட்டிக்கு இருப்பிடமாய் -நாராயண பதத்தில் சொன்ன குணங்களுக்கு பிரகாசகமாய் –
பல பல நாழம் சொல்லிப் பளித்த சிசுபாலன் என்கிற படியே –
ப்ரத்வேஷ பரனாய் -நிந்த யுக்திகளை பண்ணித் திரிந்த சிசுபாலனையும் உட்பட அலவலைமை தவிர்த்த அழகன் என்கிறபடியே
தன் அழகால் த்வேஷாதிகளை போம்படி திருத்தி -திருவடி தாட்பால் அடைந்த என்கிறபடியே சேர்த்துக் கொள்ளும் ஸ்வபாவத்தை உடைத்தான
திவ்ய மங்கள விக்கிரகத்தை நினைக்கிறது
ஆராத்ய ரூப பிரதர்ச நே ந பகத் யுதபாதனம் அவதாரா சாதாரண பிரயோஜனம்
-பரசதபுருஷ வாதீ ஜென்ம த்ரய சத்ரு சிசுபாலோ அபி ஹி கிருஷ்ண தர்ச நே ந ப்ரீதி மான் பூத்வா முக்திம் கத -இத்யாதி தாத்பர்ய சந்திரிகா வசனம் அனுசந்தேயம் –
திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் கீழ் சொன்ன குணாதிகளிலும் தெளிவு இல்லாதார்க்கும் ஸூ த்த சத்வ த்ரவ்ய மயமாய்
ஸ்வ விஷய ஞானத்தாலே ஞான சாங்கோசகத்துக்கு நிவர்த்தகமாய்
பரத்வ ஸுலப்ய வ்யஞ்ஜகமான திவ்ய மங்கள விக்ரஹமே இலக்காம்
இப் பிரதான்யத்தைப் பற்ற கத்யத்திலே குணங்களுக்கு முன்னே திவ்ய மங்கள விக்ரஹத்தை அருளிச் செய்தார் –
திவ்யாத்மா ஸ்வரூபத்தில் தெளிவுடையராய் இருக்கச் செயதேயும் -மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்பரிய தரம் ரூபம் யதத் புதம் -என்னும் படி ஈஸ்வரன் தனக்கும் போக்யமான திவ்ய விக்ரஹ அனுபவத்தில் ஊற்றத்தாலே திரு மங்கை ஆழ்வார் தம்மை ஈஸ்வர விஷயத்தில் தேஹாத்மவாதிகளாக அருளிச் செய்வர்-சர்வேஸ்வரனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு –
பாபம் ஹரதி யத் பும்ஸாம் ஸ்ம்ருதம் சங்கல்ப நாமயம் -தத் புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம் யஹம் முகம் –
ரூப ஓவ்த்தார்ய குணை பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம்-இத்யாதிகளில் படியே ஸூபத்வமும் ஆஸ்ரயத்வமும் உண்டு
-சதுர்முகாதி விக்ரகத்துக்கு ஆஸ்ரயித்தவம் உண்டாகிலும் ஸூபத்வம் இல்லை -பகவத் ஸ்வரூபத்துக்கு ஸூதத்வம் உண்டே யாகிலும்
ஆஸ்ரயித்தவம் இல்லை -ஆகையால் திவ்ய மங்கள விக்ரகத்துக்கே ஸூ பத்வமும் ஆஸ்ரயித்தவமும் உள்ளது –
ஸ்வரூபாத் ஸ்வாமிநோ ரூபம் உபா தேய தமம் விது என்றதாய்த்து –
நாராயண பதத்தில் சொல்லுகிறபடியே ஈஸ்வரன் குண த்வாரா உபாய பூதனாமோ பாதி விக்ரஹ த்வாராவும் உபாய பூதனாம் என்று விக்கிரகத்தின் உடைய ஸ்வ தந்த்ர உபாயத்வம் தோற்றுகைக்காக தனியே விக்ரகத்தை உபாதானம் பண்ணுகிறது –
ஆகை இ றே ஸ்ரீ பாஷ்யகாரர் -ஸுந்தர்யாதி குண ஆவிஷ் காரேண அக்ரூர மாலாகாரா தீன் பரம பாகவதான் க்ருத்வா -என்று அருளிச் செய்தார்
தெரிவைமார் உருவமே மருவி -என்கிறபடியே இதர விஷயங்களின் உரிய பொறி புரம் தடவின வடிவிலே அகப்பட்டு போருகிற சேதனனுக்கு
ஸ்வ விஷயக ருசி ஜனகமாயும் உபாயமாயும் உபேயமாயும் ஆகிறது பகவத் திவ்ய மங்கள விக்ரஹம் –
ஜிதந்தே புண்டரீகாக்ஷம் -என்றும் சரண த்வந்த்வம் வ்ரஜாமி -என்றும் -ந ஜானே சரணம் பரம் என்றும் -த்வத் பாத கமலாத் அந்யத்-பாத யோஸ் ஸ்திதம் -என்றும்
விக்கிரகத்தின் உடைய ருசி ஜனகத்வத்தையும் உபாய உபேயத்வங்களையும் இ றே ஜிதந்தையில் அடைவே ப்ரதிபாதிக்கிறது
அடிக்க கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும் ஆழ்வாரும் -ச பிராது சரணவ் காடம் நிபீட்ய-என்று ஆழ்வாருக்கு அடியானை இளைய பெருமாளும் திருவடிகளை இறே
உபாயமாக அத்யவசித்தது-ப்ராப்யமும் ஸ்வரூபமும் ஸூரிகளோடு சமானமாய் இருக்குமா போலே ப்ராபகமும் ஸூரி சமானமாய் இறே இருப்பது என்றபடி

——————————————————————————————————————————

சரண சப் தார்த்தம்
சரணம் -என்று திருவடிகளை பற்றும் பற்றும் படியைச் சொல்லுகிறது -அவித்யை முதலாக தாபத்ரயம் முடிவாக
நடுவுள்ள அநிஷ்டங்களையும் போக்கி -பிணி வளர் ஆக்கை நீங்குகை முதலாக –பெரிய திருமொழி -9-8-3–
நின்றே ஆட் செய்கை முடிவாக –8-3-8-நடுவுள்ள இஷ்டங்களையும் தரும் உபாயமாக –

——————————————————————————————

அநந்தரம்-சரண பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் -சரணம் என்று தொடங்கி-சரணம் -உபாயமாக -என்றபடி –
உபாயே க்ருஹ ரஷித்ரோ சப்த சரணம் இத்யயம்-வர்த்ததே சாம்ப்ரதம் ஸைஷ உபாய அர்த்தைக வாசக -என்கிறபடியே
சரண சப்தம் ரக்ஷிதாவுக்கும் க்ருஹத்துக்கும் உபாயத்துக்கும் வாசகமே யாகிலும் உபாய க்ருத்யம் இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிகார கரணம் ஆகையால்
இஷ்ட ப்ராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் தப்பாத உபாயமாக -என்று இப்பத்துக்கு அர்த்தம் என்று திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார்
-அவித்யை என்று தொடங்கி -இஷ்ட அநிஷ்டங்கள் இவ்வதிகாரிக்கு எவை என்பதனை அருளிச் செய்கிறார் -அவித்யை முதலாக -என்று தொடங்கி –
அநிஷ்டமாவது -நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து -என்றும் -அநாத்மன் யாத்தமபுத்திரியா -என்றும் சொல்லுகிறபடியே
அநாத்மன் யாத்மபுத்தி ரூபமாயும் -அஸ்வே ஸ்வ பிரதிபத்தி ரூபமாயும் இருக்கிற அவித்யையும் -அவித்யா கார்யமான ராக த்வேஷங்களும்-
கரண த்ரயத்தாலும் கூடு பூரித்து வைக்கும் தத் கார்யங்களான புண்ய பாப ரூப கர்மங்களும் -கர்ம த்வயத்தின் உடைய பல போகார்த்தமாக
பரிக்ரஹிக்கும் தேவ திர்யக்காதி நாநா வித சரீரங்களும் -அச் சரீரங்களை பரிக்ரஹித்து அனுபவிக்கும் ஆத்யாத்மிகாதி துக்க பரம்பரைகளும் தொடக்கமானவை –
இஷ்டமாவது -புண்ய பாப கர்ம விதூ நன பிரகாரமும் -ஹார்த்த மார்க்க விசேஷ பிரகாசமும் -ஹ்ருதய குஹா நிர் கமனமும்
-அர்ச்சிர் வாஸர உத்தராயண ஸூக்ல பஷாதி யாதிவாஹிக ஸத்காரமும் -சலில தஹன பவநாத்ய வரண சப்தகாதி லங்கநமும் -த்ரி குண அதிக்ரமும்-
விரஜாக்கிய அப்ராக்ருத நதி விசேஷ அவகாஹனமும்-ஸூ ஷ்ம சரீர விமோசனமும் –அமானவ கர ஸ்பர்சமும்
அபஹத பாப்மாத்வாதி குண கண தத் ஆஸ்ரய ஸ்வரூப பிரகாசமும் -பஞ்ச உபநிஷன் மயமான திவ்ய விக்ரஹ பரிக்ரமும்
ஜரம் மதீய திவ்ய சர பிராப்தியும் -திவ்ய அப்சரஸ் சங்க ஸத்காரமும் -ப்ரஹ்ம அலங்கார லங்கரணமும் -ப்ரஹ்ம கந்த ரஸ தேஜ பிரவேசமும்
திவ்ய கோபுர பிராப்தியும் ஸூ ரி சங்க ஸத்காரமும் ராஜ மார்க்க கமனமும் -ப்ரஹ்ம வேஸ்ம பிரவேசமும்
திவ்ய மண்டப பிராப்தியும் திவ்ய ப ர்யங்க நிரீ க்ஷணமும்-ச பத்நீக சர்வேஸ்வர தர்சனமும்-
ஆனந்தமய பரமாத்ம சமீப ஸ்திதியும் -பாத பீட பரியங்க உத்சங்க ஆரோஹணமும் -ஆலோக ஆலாப ஆலிங்க நாத் அனுபவமும்
ஸ்வரூப குண விக்ரஹ ஆதி அனுபவ ஜெனித ப்ரீத்தி பிரகர்ஷமும்
நாநா வித விக்ரஹ பரிக்ரஹ பூர்வக சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தா உசித சர்வ பிரகார கைங்கர்ய கரணமும்

———————————————————————————————————–

சரணவ் சரணம் என்று -மருந்தும் பொருளும் அமுதமும் தானே -மூன்றாம் திரு –என்கிறபடியே அம்ருதமமே ஒளஷதம் ஆமாப் போலே
அங்கண் மா ஞாலத்து அமுதமாய் -இராமா னுச நூற்று -84–அம்ருதத்துக்கு ஊற்று வாயான அடியிணையை
அம்ருத சஞ்சீவினியாக கல்லும் கரிக் கொள்ளியும் பெண்ணும் ஆணுமாம் படி விரோதியைப் போக்கும் என்கிறது –

இத்தால் -பொற்றாமரை -திருப்பாவை -29- அடித்தாமரை -மூன்றாம் திரு -96-
தாமரை யன்ன பொன்னாரடி -பெரிய திருமொழி -7-3-5–என்கிறபடியே ப்ராப்யமே சாதனம் என்று
உபாயாந்தரங்களில் வியாவிருத்தியைச் சொல்கிறது

—————————————————

கீழ் நீர்த்தேசித்த வஸ்துவை உபாயமாகச் சொன்னதின் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார் -சரணவ் சரணம்–என்று தொடங்கி
இத்தால் ப்ராப்யம் தானே ப்ராபகம் ஆகிறது -என்கிறது -இங்கு உபாயத்வம் ஆவது பல கரணத்வ ரூபம் -என்றபடி -ரக்ஷகத்வம் இ றே பலப்ரதத்வம் –
உபாயத்வ பலப்ரதத்வங்களை -சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்கட்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று நம்மாழ்வாரும்
அகிஞ்சன அநந்ய கதி-என்று ஆளவந்தாரும் ப்ரிய அருளிச் செய்தார்கள் இ றே
ஸூ துஷ் கரேண சோ சேத்ய யேந யே ந இஷ்ட ஹேது நா -ச ச தஸ்யாஹம் ஏவதி சரம ஸ்லோக சங்க்ரஹ -தாத் சந்திரிகை -18-66-என்று தேசிகனும்
பகவானுக்கு பல கரணத்வத்தை அருளிச் செய்தார் இ றே
பராதி கரணத்தில் உபாயத்வத்தையும் பலாதி கரணத்தில் பல பிரதத்வ ரூப ரக்ஷகத்வத்தையும் ஸ்ரீ வேத வியாசரும் பிரித்து அருளிச் செய்தார் இ றே
ரக்ஷண கர்த்தாவுக்கு பல கரணத்வம் கொள்ளில் கர்த்ருத்வ கரணத்வங்களுக்கு ஏகத்ர சமாவேசம் என்ற விரோதி பிரசங்கிக்கும் என்ன வேண்டா
சேதன அசேதன விசிஷ்டன் உபாதானம் என்றும் ஞான விசிஷ்டன் நிமித்த பூதன் என்றும் ஏகாஸ்ர யத்திலே உபாதானத்வ நிமித்தங்களை
அவச்சேதக பேதத்தால் கொண்டால் போலே
ரக்ஷகனுக்கே திவ்ய விக்ரக விசிஷ்டத்வ வேஷேண உபாயத்வம் அவிருத்தம் இறே –
அதே போலே ஏகத்ர ப்ராப்யத்வ ப்ராபகத்வங்கள் கூடும் இ றே –
பிரசாத விசிஷ்டன் உபாயம் என்றும் -ப்ரீதி விசிஷ்டன் உபேயம் என்றும் விசேஷண பேதம் கிடக்கச் செய்தே
விசிஷ்ட ஐக்யத்தாலே எம்பெருமானே உபாய உபேய பூதன் என்கிறதாகையாலே எல்லாம் கூடும் இ றே
ஷீரம் பத்யமுமாய் போக்யமுமாய் இருக்கிறாப் போலே -நிர்வாணம் -பேஷஜம்-அம்ருதம் சாதனம் சாத்தியம் -மருந்தும் பொருளும் அமுதமும் தானே
-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ப்ராப்ய பிராப்பகங்கள் ஏகமாய் இ றே இருப்பது -என்றபடி –கீழ் சொன்ன மூன்றும் ப்ராப்யம் இறே
-ஸமஸ்த பதமான பூர்வ பதத்தில் சொன்ன லஷ்மீ விசிஷ்டத்வமும்-கல்யாண குண யோகமும் -திவ்ய மங்கள விக்ரஹ உபேதத்வமும் -ஆகிய மூன்றும்
ச்ரியா ஸார்த்தம் ஆஸ்தே -ஸர்வான் காமான் அஸ்னுதே -சதா பஸ்யந்தி -என்ற இவனுக்கு அனுபவ விஷயமாக
சொல்லப் படுகிறவை யாகையாலே ப்ராப்யமாம் இ றே என்கை -இவன் செயல் அறுதியாலே உபாயம் ஆக்குகிறான் அத்தனை –
அகிஞ்சனனாய் அநந்ய கதியாய் இருக்கிற இவன் தன் செயல் மாட்சியாலே போக்யமான பாலை மருந்து ஆக்குவாராய்ப் போலே
ப்ராப்யமானது தன்னையே ப்ராபகம் ஆக்குகிறான் இத்தனை -என்கை –
கல்லும் -இத்யாதி -கரிக் கொள்ளியாய்க் கிடந்தவன் பரீக்ஷித்து -கல்லாய்க் கிடந்தவள் அஹல்யை என்று விபாகம் கண்டு கொள்வது
அஹல்யையின் ஸ்லாத்த்வம் விலக்ஷண த்வத் அதிகரண பாஷ்யத்திலே ஸ்ரீ பாஷ்யகாரராலே யுக்தம் இறே –

சரணவ் சரணம் என்று ப்ராப்ய வாஸ்து தன்னையே ப்ராபகமாகச் சொல்லுகையாலே ப்ராப்யம் வேறும் தான் வேறுமாயும் இருக்கும்
உபாயாந்தரங்களில் காட்டில் வியாவ்ருத்தமான உபாயம் இது என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் -இத்தால் -என்று தொடங்கி –

——————————————————————————————–

ப்ரபத்யே -சப் தார்த்தம்
ப்ரபத்யே என்று அணையை யுடைத்தான ஆற்றுக் கால் போலே உபாயமான
மதுர வாற்றுக் -திருமாலை -36–கால் போகத்தை விளைக்கைக்கு
உறுப்பான சேதனனுடைய விலக்காமையை தெரிவிக்கிறது –
இவன் நெஞ்சாலே துணிந்தால் இறே உபாயம் தான் கார்யம் செய்வது -வியாசனங்கள் வருதல்
-பேறு தாழ்த்தல் -ஈஸ்வரன் சோதித்தல் செய்தாலும்
துணிந்த சிந்தை குலையாமல் -சரண் அல்லால் சரண் இல்லை -பெருமாள் திருமொழி -5-1–என்று இருக்கில் இறே பேறு உள்ளது –

மனமது ஒன்றித் துணிவினால் வாழ -என்கிறபடியே இந்நினைவு நெஞ்சாலே யமையுமே யாகிலும்
உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன் –
திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
அடியிணை பணிவன்-என்று மூன்றும் நடவா நின்றது இறே
உபாய ஸ்வரூபம் புருஷகார குண விக்ரகங்களோடே
கூடிப் பூர்ணம் ஆகிறாய் போலே சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் ஸ்வீகாரம் உண்டானால்
அதிகாரி அதிகார பூர்த்தி உண்டாக கடவது –

ஸ்வ ஸ்வரூப ஞானமும் -ப்ராப்ய ருசியும் –உபாயாந்தர நிவ்ருத்தியும் பிறந்தார் அடைய
உலகம் அளந்த பொன்னடிக்கு –5-8-9-ஆளாகையாலே பற்றும் அதிகாரியைக் காட்டிற்று இல்லை –

பற்றுகிறேன் என்கிற லட்டு –
வாணாள் சென்னாள் எந்நாள் அந்நாள் -5-8-3–என்று சரீர அவசானத்து அளவும் உபாயாந்தரங்கள் கலசாமைக்கும்
நாள் கடலைக் கழிக்கைக்கும் -1-6-7–சோம்பரை உகத்தி -திருமாலை -38–என்கிற உகப்புக்கும்
நிரந்தரம் நினைக்கை யாகிற திருச் சந்த விருத்தம் 101–பேற்றுக்குமாக நாள் தோறும் ஏக சிந்தையனாய்-5-10-11- செல்லும் இடத்தை வெளியிடுகிறது –

———————————————————-

அநந்தரம் க்ரியா பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -ப்ரபத்யே -என்று தொடங்கி
சேது பங்க ஸ் ரோத ப்ரஸ்ருதி நியாயத்தை அருளிச் செய்கிறார் -அணை -என்று தொடங்கி –
பலத்துக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமுமே -என்கிற ஸ்ரீ வசன பூஷண சூத்திரத்தை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் -விலக்காமை -என்று
இங்கே பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல் திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -பெரியாழ்வார் -5-4-7-என்ற
பாசுரத்தையும் அதன் வியாக்கியான விசேஷத்தையும் அனுசந்திப்பது –
பிரபத்தி தான் உபாய சரீரத்தில் அந்வயியாதே உபாய ஸ்வீகாரத்மகம் ஆகையால் உபேய சரீரத்திலும் அந்வயியாதே
அதிகாரிக்கு விசேஷணமாய் மஹா விச்வாசாத்மகமான பிரபத்தி விசேஷம் இ றே
இது ஸ்வரூப விரோத துஷ் கரத்வாதி தோஷ ரஹிதமானதே யாயினும் வஸ்துத உபாயத்வம் தனக்கு இன்றிக்கே இருக்கச் செய்தே
ஆபாத ப்ரதீதியிலே உபாய பிரதிபத்ய அர்ஹமாய் இருக்கும்
சித்த உபாய வர்ண ரூபமாய் -நிவ்ருத்தி சாத்ய ரூபமாய் -அதிகாரி விசேஷணமாய்
ஸ்வரூப அநதிரேகியாய் இருக்கிற இந்த பிரபத்தி -சித்த சாத்ய உபாய வ்ருத்த வேஷையாய் இருக்கும் ஆகையால் இதற்கு உபாயத்வம் அசம்பாவிதம் -என்றபடி
சரம பதத்தில் சொல்லுகிற பலத்துக்கு -பிரதம பதத்தில் சொல்லுகிற ஆத்ம ஞானமும் மத்யம பதத்தில் சொல்லுகிற
அப்ரதி ஷேதமும் இறே வேண்டுவது -என்றது ஆய்ந்து-
இத்தால் -விலக்காமையே வேண்டுவது என் என்னில் அது அனுப பன்னம் -ஸூ ஷூப்த்யாத்ய அவஸ்தைகளிலே எல்லார்க்கும்
மோக்ஷம் கொடுக்க பிரசங்கிக்கும் -என்கிற சங்கைக்கு பரிஹாரம் கூறப் பட்டதாம் –
அதிகாரமாக அபேக்ஷிதமான ஆத்ம ஞானம் ஸூ ஷூப்த்யாதிகளிலே இல்லாமையால் சர்வ முக்தி பிரசங்கம் இல்லை என்றபடி –
உபாயத்தில் துணிவை அருளிச் செய்கிறார் -இவன் நெஞ்சு -என்று தொடங்கி –
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும் தெளிவுற்ற கண்ணன் -என்று அருளிச் செய்தார் இ றே ஆழ்வார் –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் அவனே என்று அத்யவசித்து பின்னை நாட்டார் செயல்கள் கண்டதால் யுக்தி ஆபாசங்கள் கண்டதால் பிற்காலியாதே நிற்கை என்றபடி –

இது தன்னுடைய காயிகத்வாதிகளை-அருளிச் செய்கிறார் -மனமது -என்று தொடங்கி -இந்த ஸ் வீகாரம் த்ரிவித கரணத்தாலும் உண்டானால் அதிகாரி – ர -பூர்த்தி என்கிறது –
இப்பிரபத நம் கரண த்ரயத்தாலும் உண்டாகவுமாம்-ஏக கரணத்தாலே உண்டாகவுமாம் -பல சித்திக்கு குறை இல்லை –
அதிகார பூர்த்திக்கு கரண த்ரயமும் வேணும் -பல சித்திக்கு ஏக கரணமே அமையும்
உபாய பூர்த்திக்கு -ஸ்ரீ யபதித்தவமும்-வாத்சல்யாதி குண யோகமும் -திவ்ய மங்கள விக்ரகமும்-அபேக்ஷிதமாய்
இருக்குமா போலே அதிகார பூர்த்திக்கு கரண த்ரயமும்
அபேக்ஷிதமாய் இருக்கும் என்றபடி
இதில் ஈதருசனான நான் அத்யவசிக்கிறேன் என்று ஜாதி குண வ்ருத்தாதிகளாலே ஒருவனை விசேஷியாமையாலே
இப்பிரபத்தி அனுஷ்டானம் சர்வாதிகாரம் என்று தோற்றுகிறது-
இது தன்னை அருளிச் செய்கிறார் -ஸ்வ ஸ்வரூப ஞானமும் என்று தொடங்கி –
இப்பதத்திலே அத்யவசிக்கிறேன் என்று அத்யாவசா யாத்மக ஞான விசேஷத்துக்கு ஆஸ்ரயமான அதிகாரி ஸ்வரூபமும் அனுசந்தேயம்-
அதாவது திருமந்திரத்தில் பத த்ரயத்திலும் சொன்ன ஆகார த்ரயமும் அனுசந்தேயம் என்றபடி –
சக்ருதேவ ஹி சாஸ்திரார்த்தா க்ருதோயம் தாரா யே ன்னரம் -சக்ருதேவ பிரபன்னாயா -இத்யாதிகளில் சொல்லுகிற படியே
பிரபத்தி ஸக்ருத் காரணீயையாய் இருக்க –
வர்த்தமானமாக சொல்லுகிறது ஏதுக்கு என்ன அருளிச் செய்கிறார் -பற்றுகிறேன் என்கிற லட்டு -என்று தொடங்கி -அதாவது
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ-நின்னடி இணை அடைந்தேன் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்கிறபடியே சொல்லாதே
ப்ரபத்யே என்று வர்த்தமானமாக சொல்லுகிறது -பிரக்ருதியோடே இருக்கிற இவன் ரஜஸ் தமஸ்ஸூக்களாலே கலங்கி உபாய அபாயங்களில்
ஏதேனும் ஒன்றிலே அன்வயித்து -பின்னை சத்வம் தலை எடுத்து அனுதாபம் பிறந்து பயப்பட்ட காலத்திலே
பிராயச் சித்தி ரியம் ஸாத்ர யத்பு நஸ் சரணம் வ்ரஜேத்-என்கிறபடியே பிரபத்தி ஒழிய அதுக்கு பரிஹாரம் இல்லாமையாலும் அது தான்
சத்ருக் க்ருதமான புன்பு புன கரணம் ஆகாமையாலும் பூர்வ ப்ரபத நத்தை அனுசந் தைக்காக கொழுந்து படக் கிடக்கிறது -என்கை
-உபாயாந்தரங்களில் நெஞ்சு செல்லாமைக்கும் கால ஷேபத்துக்கும் இனிமையாலே விட ஒண்ணாமையாலும் நடக்கும் –

பேற்றுக்குப் பல காலம் வேணும் என்று நினைக்கில் உபாயம் நழுவும் -அதாவது பேற்றுக்கு உறுப்பாக பல காலம் அனுசந்திக்க வேணும் என்று
பிரபத்தி பண்ணில் சஹாயாந்தர -சம்சர்க்க அஸகமான சித்த உபாயம் சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே தன்னைக் கொண்டு நழுவும் -என்கை –
இங்கே சரணாகதி மற்றோர் சாதனத்தைப் பற்றில் அரண் ஆகாது -அஞ்சனை தன் சேயை முரண் அழியக் கட்டியது வேறு ஓர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
–விட்ட படை போலே விடும் -என்ற ஞான ஸாரப் பாசுரமும்
ராக்ஷஸா நாம் அவிஸ்ரம்பாத் ஆஞ்ஞநேயஸ்ய பந்த நே-யதா விகலிதா ஸத்ய த்வ மோகாஸ் அப்யஸ்த்ர பந்த நா -ததா பும் சாம
விஸ்ரம்பாத் பிரபத்தி ப்ரச்யுதா பவேத் -என்ற -ஸநத்குமார சம்ஹிதா வசனமும் அனுசந்தேயம்
பிராய ப்ரபதநே பும்ஸாம் பவ்ந புன்யம் நிவாரயன் ஹஸ்த ஸ்ரீ ரங்க பர்த்துர் மாம் அவ்யாத பயமுத்ரித-என்று நியாஸ திலகத்திலே
தேசிகனும் அருளிச் செய்தார் இறே -நமஸ்காரமும் காயிக பிரபத்தி இறே
த்வயம் அர்த்த அநுஸந்தாநேந சக ச தைவம் வக்தா யாவச்சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரங்க ஸூ க மாஸ்வ -என்று சரண்யன் தானே அருளிச் செய்கையாலும்
ஸ்ரீ யபதித்தவாதி விசிஷ்ட விஷயம் ஆகையால் -ஸூ ஸூ கம் கர்த்தம் அவ்யயம் -என்று சாதன தசையிலும் இனியதாய் இருகையாலும்
அவனே உபாயம் -என்கிற நினைவு மாறாதே செல்லக் கடவது என்றது ஆயிற்று
ஆனால் நிதித்யாசி தவ்ய என்று அஸக்ருதா வ்ருத்தி ரூபமான உபாசனமாத்மக ஞானத்தில் காட்டில் இதுக்கு வாசி ஏது என்னில்
அங்கு அனுசந்தான விச்சேதத்தில் பல விச்சேதம் பிறக்கையாலே விதியாய் இருக்கும் –

இங்கு அப்படி வருவதொரு சங்கடம் இல்லாமையாலும் ஸ்மார்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலும்-ராக ப்ராப்தமாய் இருக்கும் –
பண பந்த்தத் யூதத்துக்கும் லீலாத் யூதத்துக்கும் உள்ள வாசி பக்தி பிரபத்திகளுக்கும் உண்டு இ றே
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் என்றார் இ றே திருமங்கை ஆழ்வார்
இப்போது மறதியாவது-புன ஈஸ்வரனை உபாயமாக அனுசந்திப்பதொரு அனுசந்தானம்
ஆகையால் பூர்வார்த்தத்திலே இழியாதே அனுபவிக்கப் பார் என்கிறார் –
அடியிலே ஈஸ்வரன் கையிலே நம் காரியத்தை சமர்ப்பித்து விட்டோம் ஆகில் –
இனி ஸ்வ உஜ்ஜீவனத்தை சிந்திக்கை யாவது பிறர் காரியத்தில் இழி கை இறே
ஸ்வ ரக்ஷணத்தோடு ஜகத் வியாபாரத்தோடு வாசி இல்லை இ றே பிராப்தி இல்லாமைக்கு –
ஆகையால் பல சித்திக்கு ஸக்ருத் கரணம் அமையும் -கால ஷேபாதிகளுக்கு அஸக்ருத் கரணம் அபேக்ஷிதமாய் இருக்கும் என்றதாயிற்று
அன்றிக்கே-யாவச் சரீர பாதம் அனுஷ்ட்டியா நின்றாலும் பெறுகிற பலத்தின் கனத்தைப் பார்த்தால் ஸக்ருத் என்கைக்கும்
போராத படி காண் இருப்பது -என்று எம்பார் அருளிச் செய்வார்
அங்கண் அன்றியிலே சஹா சப்தத்துக்கு சக்ருதா தேசமாய் -சக்ருதேவ பிரபன்னாய-என்கிறது
சக சைவ பிரபன்னாயா -என்கிற படி என்று ஆழ்வான் பணிக்கும் -அதாவது சம்சாரத்தில் பயாதிசயத்தாலும் -பகவத் விஷயத்தில்
ருசி அதிசயத்தாலும் ஆஜ காம முஹுர்த்தேன என்று சொல்லுகிறபடியே ஸத்வரனாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கை-
ஆக இத்தால் இழிகிறவன் நேரே அகிஞ்சன அதிகாரி ஆகையால் -எதிரி நேரே சர்வ சமாஸ்ரயநீய விஷயம் ஆகையால்
பல வ்யபிசாரியான உபாய அத்யாவசாயத்தை ஸ்வ அனுஷ்டானம் ஆக்கிற்றாய் நின்றது –

ஆக -பூர்வார்த்தத்தாலே -அத்யாவசாயாத்மக ஞான விசேஷத்தையும்
அதுக்கு உபேய அத்யாவசாயத்தில் காட்டில் வியாவ்ருத்தியையும்
அந்த உபாயத்துக்கு சாத்ய உபாய வியாவ்ருத்தியையும்
அந்த சித்த உபாயத்தில் இழிகைக்கு விரோதியான பூர்வ அபாய பயத்துக்கு நிவர்த்தகமான புருஷகார விசேஷத்தையும் சொல்லிற்று ஆயிற்று –
ஆக பூர்வ வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று

—————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீவர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: