அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த -அருளிச் செயல் ரகஸ்யம்- த்வய பிரகரணம் -பிரதம பதார்த்தம் -ஸ்ரீ மத்- சப் தார்த்தம்-ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ரகஸ்ய பூஷணம் –

பிரதம பதார்த்தம்
ஆறு பதமான இதில் முதல் பதத்திலே-இரண்டாம் பதத்தை வெளியிடுகிற – மூன்றாம் பதத்தில் உபாயத்துக்கு அபேக்ஷிதமான-
புருஷகார குண விக்ரஹங்கள் மூன்றும் தோன்றும் –

——————————————————————————

பிரத்யூஷாதாம் பஜதி ஸம்ஸ்ருதி கால ராத்ரே பத்மா ஸஹாய சரணாகதி மந்த்ர ஏஷ-என்கிற பிரபாவம் உடைய த்வயத்துக்கு
ப்ரதிபதம் அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி ஸ்ரீ மத் பதார்த்தம் அருளிச் செய்ய உபக்ரமிக்கிறார் -ஆறு பதமான இத்யாதி –
இதன் அர்த்தத்தை ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராண பகவத் சாஸ்திரங்களில் பிரசித்தமான படியே சதாசார்ய சம்பிரதாய க்ரமத்தாலே
கத்யத்திலே விவரித்து அருளினார் -எங்கனே என்னில்-பகவன் நாராயண அபிமத அனுரூப ஸ்வரூப ரூப -என்று தொடங்கி
ஸ்ரீ மச் சப்த அபிப்ராயத்தை அருளிச் செய்தார் -அகில ஹேய ப்ரத்ய நீக-இத்யாதியாலே
ஸ்வரூப ரூப குண விபூதிகளை பரக்க அருளிச் செய்கையாலே நாராயண சப் தார்த்தம் வியாக்யாதம் ஆயிற்று –
முற்படப் பிராட்டியைச் சொல்லக் செய்தே-புருஷகாரத்வ நிர்வாஹ அர்த்தமாக விபூதி மத்யத்திலே நிலை தோற்றுகைக்காக
மீண்டும் நாராயண சப்த வியாக்யானத்திலும் அருளிச் செய்தார் -பிரபத்யே என்கிற இடத்தில் உத்தமனாலே விவஷித்தமான
அதிகாரி விசேஷம் -அநந்ய சரண அஹம் -என்று விவ்ருத்தம் ஆயிற்று –
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் ப்ரபத்யே -என்கையாலே -சரணவ் என்கிற சப்தமும் –
மேல் அர்த்த க்ரமத்தாலே முற்பட நமஸ்சாலே பிரார்த்திக்கிற அநிஷ்ட நிவ்ருத்தியை வியாக்யானம் பண்ணிப் பின்பு இங்கும் உள்ள
பர பக்த்யாதி புருஷார்த்த பூர்வகமாக சதுர்த் யந்த பதங்களில்-விபக்த் தபிப்பிரயாமான பரம புருஷார்த்த லாபத்தை வெளியிட்டு அருளினார்
ஆகையால் கத்யத்திலே அருளிச் செய்தது எல்லாம் த்வயத்திலே விவஷிதம் –
இது த்வயம் அர்த்த அநுசந்தானேன சக சதைவம் வக்தா -என்கிற பாசுரத்தாலும் ஸூசிதம்-
ஆறு பதமான இதி -இங்கே ஷட்பதோயம் த்வி கண்ட -என்கிற அஷ்ட ஸ்லோகீ வசனம் அனுசந்தேயம் –
முதல் பதம் -ஸ்ரீ மன் நாராயண சரணவ் -என்ற பதம் -இதிலே புருஷகார குண விக்ரஹங்கள் மூன்றும் தோன்றும் -என்று அந்வயம் –
ஸ்ரீ மன் நாராயண சரணவ் -என்று சமஸ்தமாகவும் யோஜிப்பார்கள் –
கமல நயன வா ஸூ தேவ பவ சரணம் என்கிற -பிரயோகத்தையும் -த்வமேவ உபாய பூதோ மே பவ-என்கிற வாக்கியத்தையும்
அகலகில்லேன் என்கிற பாட்டையும் -அகிஞ்சன அநந்ய கதி சரண்ய-என்கிற வாக்கியத்தையும் –
ஸ்ரீ மன் நாராயண ஸ்வாமிந்-இத்யாதி -மந்த்ராந்தங்களையும் த்வய விவரணமான கத்யத்தையும் பார்த்து -ஸ்ரீ மன் நாராயண -என்று
இரண்டு சம்புத்திகள் ஆக்கி தவ என்று ஒரு பதத்தை அத்யாஹரித்தும் யோஜிப்பார்கள் -இப்படி வியஸ்தம் ஆனாலும் சமஸ்தம் ஆனாலும்வி
சேஷண விசேஷயங்கள் நிற்கும் நிலைக்கு வைஷம்யம் இல்லை -என்று அனுசந்தேயம் –
த்வயம் ஷட்பதம் என்கிற நிர்வாகத்தை திரு உள்ளம் பற்றி -ஆறு பதமான -என்று அருளிச் செய்கிறார்
இரண்டாம் பதத்தை -சரண -சப்தத்தை -மூன்றாம் பதம் -ப்ரபத்யே என்று க்ரியா பதம் –
உபாயத்துக்கு அபேக்ஷிதம் -என்றது புருஷகார குண விக்ரஹ விசிஷ்டா வஸ்துவிலே சரணாகதி என்றபடி –

——————————————————————————————-

ஸ்ரீ சப் தார்த்தம்
ஸ்ரீ என்கிற இது -புருஷகாரமான விஷ்ணு பத்னியினுடைய ஸ்வரூப நிரூபகமான முதல் திரு நாமம் –
சேவையைக் காட்டுகிற தாதுவிலே யான இப்பதம்-ஸ்ரீ யதே -ஸ்ரயதே -என்று இரண்டு படியாக
-மூன்று வகைப் பட்ட ஆத்ம கோடியாலும் சேவிக்கப் படுகின்றமையையும் –
தான் நிழல் போலே எம்பெருமானை சேவிக்கும் படியையும் காட்டக் கடவது –
சேர விடுவார்க்கு இரண்டு இடத்திலும் உறவு வேண்டுகையாலே சேதனர்க்குத் தாயாய்
-முன்னிலை தேடாமல் பற்றி ஸ்வரூபம் பெறலாய் அவனுக்கு திவ்ய மஹிஷியாய் கிட்டுத் தான் ஸ்வரூபம் பெறலாய் –

——————————————————————————–

பத த்ரயாத்மகமான பிரதம பதத்தில் ஸ்ரீ சப்தம் புருஷகாரத்தைச் சொல்லுகிறது -உபாயம் உபேயார்த்தமாக இருக்கச் செய்தேயும்
வ்யுத்புத்தி வேளை அன்றியிலே-அனுஷ்டான வேளையாய்-உபாய அனுஷ்டான அநந்தரம் உபேய சித்தி யாகையாலே
பிரதமோ பாத்தமான வோபாதி-இவ்வுபாய ஸ் வீகாரத்துக்கு முன்னே வேணுமே சேர விடும் புருஷகாரமும் –
ஆகையால் பிரதமத்திலே புருஷகார பாவத்துக்கு ஏகாந்தமான ஸ்வ பாவ விசேஷங்கள் உடன் கூடி இருக்கிற வஸ்து விசேஷத்தை நிர்த்தேசிக்கிறது-ஸ்ரீ சப்தம்
-இது தன்னை அருளிச் செய்கிறார் -ஸ்ரீ என்று தொடங்கி –
ஸ்ரீ ரிதி ப்ரதமம் நாம லஷ்ம்யா -என்ற வசனத்தை உட் கொண்டு அருளிச் செய்கிறார் -முதல் திரு நாமம் -என்று –
பகவத் வாசகங்களில் அகாரம் பிரதமம் ஆனால் போலே பிராட்டியின் வாசகங்களில் ஸ்ரீ சப்தத்துக்கு ப்ராதாம்யம் -என்றபடி –
தாது -என்று -ஸ்ரீ ஞ் சேவாயாம் -என்ற தாது -தாதுவின் மேல் ஸூ ப் வராது -ஆகையால் கர்மணி யாதல் -கர்த்தரி யாதல் –
க்யுப் -வந்து க்ருதந்த மானதின் மேலே ஸூப் -அத ஸ்ரீ என்பர் யையாகரணர்-
ஸ்ரீ சப்தம் சம்பத்தாதிகளுக்கும் வாசகமாக லோகத்தில் நடந்து போரக் காண்கையாலே-அத்தை வியாவர்த்திக்கைக்காக விஷ்ணு பத்னி -என்றது –
ஆகை இறே -லஷ்மீ பத்மாலாயா பத்மா கமலா ஸ்ரீ ஹரி பிரியா -என்று திரு நாமங்களோடு ஸஹ படிதமாயிற்று –
இது தான் எல்லாத் திரு நாமங்கள் போல் அன்றிக்கே-ஸ்ரீ ரிதி ப்ரதமம் நாம லக்ஷம்யா-என்கிறபடியே இவளுக்கு பிரதம அபிதானமாய் இருக்கும் –
அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதம அபிதானம் -என்று அகாரம் ஈஸ்வரனுக்கு பிரதமம் அபிதானம் ஆனால் போலே ஆயிற்று இவளுக்கும்
இது பிரதம அபிதானமாய் இருக்கும் படி -அது அவனுடைய ரக்ஷகத்வத்துக்கு ஏகாந்தமான ஸ்வ பாவங்களை சொல்லக் கடவதாய் இருக்கும் -என்றபடி –

இனி இந்த ஸ்ரீ சப்தத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக -பிரதமம் இதற்கு உள்ள வியுத்பத்தி த்வயத்தை அருளிச் செய்கிறார்
-ஸ்ரீ யதே-ஸ்ரயதே -என்று -அதாவது -ஸ்ரீஞ்-சேவாயாம் -என்கிற தாதுவிலே -ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -ஸ்ரியதே இதி ஸ்ரீ -என்று
ஸித்தமான கர்மணி வ்யுத் புத்தியையும் கர்த்தரி வ்யுத் புத்தியையும் -சொன்னபடி -இவ் வ்யுத் த்வயத்துக்கும் அர்த்தம் அருளிச் செய்கிறார் -மூன்று இத்யாதி
-அதாவது -இவ் உபய வ்யுத் பத்திக்கும் அர்த்தம் –
ஸ்ரீ யதே என்று எல்லாராலும் சேவிக்கப் படா நின்றாள் என்கையாலே -சகல சேதனர்க்கும் இவளை பற்றித் தங்கள் உடைய சேஷத்வ ரூப ஸ்வரூப லாபமாய்
-ஸ் ரயதே -என்று ஈஸ்வரனை சேவியா நின்றாள்-என்கையாலே இவள் தனக்கும் ஈஸ்வரனைப் பற்றி தன்னுடைய ஸ்வரூப லாபமாய் இருக்கும் என்கை –
இவள் தனக்கு சேதன விஷயத்தில் சேஷித்வமும் -ஈஸ்வர விஷயத்தில் சேஷத்வமும் என்றும் உண்டாய் இ றே இருப்பது –
ஆகையால் இந்த சேவ்யத்வ சேவகத்வங்கள் இரண்டும் இவளுக்கு நித்தியமாய் செல்லா நிற்கும் -என்றதாயிற்று -சேதனர்களாலே ஆஸ்ரயிக்கப் படும் என்றும்
-இவர்களை உஜ்ஜீவிப்பைக்காக சர்வேஸ்வரனை தான் ஆஸ்ரயித்து இருக்கும் என்றும் கூறுகையாலே
பிதேவ த்வத் ப்ரேயான்–விஸ்மார்ய ஸ்வ ஜன யஸி மாதா ததஸி ந -என்கிறபடியே சபராதர் ஆனவர்கள் பக்கல் ஸ்வயம் ஹிதைஷியாய்
தண்ட கரனான சர்வேஸ்வரனுடைய சீற்றத்தை ஆற்றி அவருடைய சஹஜ காருண்யம் இவர்களுக்கு உஜ்ஜீவகமாம் படி பண்ணிக் கொடுக்கையாலே –
மாத்ருத்வ ப்ரயுக்த வாத்சல்யாதிசயத்தாலே புருஷகாரமாய் நிற்கிற நிலை சொல்லிற்றாம் –
அவ்விஞ்ஞாதா -இத்யாதிகளில் போலே -இங்கு விஸ்மார்ய -என்றதுக்கும்-அல்லி மலர் மகள் போக மயக்குகள் -இத்யாதிகளுக்கும்
சதா சர்வஞ்ஞனான ஈஸ்வரனுடைய நிக்ரஹ அபிசந்தி நிவ்ருத்தியில் தாத்பர்யம் –
சாபேஷனான புருஷனுக்கு அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொடுக்க வல்ல சேதனன் அபிகம்யன் ஆகைக்காக உபாயமாக வரிக்கப் பட்ட சேத நாந்தரத்தை
புருஷகாரம் என்று வியவஹரிப்பார்கள் -இப் புருஷகாரம் பலத்துக்கு பரம்பரயா காரணம்-
அர்த்த ஸ்வபாவா அனுஷ்டான லோக த்ருஷ்ட்டி குரூக்திபி –ஸ்ருத்ய ஸ்ம்ருதியா ச சம்சித்தம் கடகார்த்தா வலம்பனம் –
இவற்றில் அர்த்த ஸ்வபாவமாவது
-ஈஸ்வரனைப் போலே பித்ருத்வ அனுரூபமான பிரதாபோஷ் மலத்வம் கலாசாதே
மாத்ருத்வ ப்ரயுக்தங்களான வாத்சல்யாதிகள் அதிசயித்து -ந கச்சின் ந அபராத்யதி -க குப்யேத் வானரோத்தம -மர்ஷ்யா மீஹ துர்பலா -என்கையை
ஸ்வபாவமாய் இருக்கையும் -வாலப்யாதிசயத்தாலே இவளை முன்னிட்டால் அவன் மறுக்க மாட்டாது ஒழி கையும்
-இவ்வார்த்தை ஸ்வபாவத்தால் இவளை பற்றுவார்க்கு புருஷகாராந்தர அபேக்ஷை உண்டாய் அனவஸ்தை வாராது
-அனுஷ்டானம் ஆவது -ப்ரஹ்லாத விஷயத்தில் பிரேமாதிசயத்தாலே -பிரதி கூல விஷயத்தில் பிறந்த சீற்றத்தின் கனத்தைக் கண்டு
அணுக அஞ்சின ப்ரஹ்மாதிகள் இவளை சரணமாகப் பற்றி இவள் முன்னிலையாக ஸ்ரீ நரசிம்ஹ ரூபனான சர்வேஸ்வரனைக் கிட்டி
ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்று புராண ப்ரசித்தம் –
சீதாம் உவாச அதியசா ராகவம் ச மஹா வ்ரதம்–சீதா சமஷம் காகுத்ஸவம் -இத்யாதிகளிலும் கண்டு கொள்வது –
லோக த்ருஷ்டியாவது
-அந்தப்புர பரிஜனத்தை அபராத பூயஸ்த்தை உண்டானாலும் ராஜாக்கள் அல்பங்களான பிரசாதநங்களாலே க்ஷமிக்க காண்கை-
இவ்வர்த்தம் மாதர் லஷ்மீ யதைவ மைதிலி ஜன -என்கிற ஸ்லோகத்திலும் விவஷிதம் –
குரு உக்தியாவது –
நம்மாழ்வார் முதலான ஆச்சார்யர்கள் உடைய -அகலகில்லேன் -முதலான பாசுரங்கள் -இவற்றுக்கு மூலமான ஸூ க்தி விசேஷ ரூபைகளான
ஸ்ருதிகளையும் கண்டு கொள்வது -இவை அடியாக வந்த ஸ்ம்ருதிகள் ஆவன –
வாச பரம் பிரார்த்தயிதா பிரபத்யேன் நியத ஸ்ரியம் -இத்யாதிகளான சவ்கநாதி வாக்கியங்கள் –
இப்படி இவளுக்கு சர்வேஸ்வரன் திருவடிகளில் கடகத்வம் பஹு பிராமண சித்தம் ஆகையால் இங்கும் இவ்விவஷை கொள்ள உசிதம் –
வ்யுத் பத்தி த்வயத்தாலும் -சேவிக்கப் படா நின்றாள் -சேவியா நின்றாள் என்று சேவா விஷயமாய் இருக்கும் சேவைக்கு ஆஸ்ரயமுமாய் இருக்கும் என்கிறது
-ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -விஷ்ணு பத்னீ -என்னக் கடவது இ றே –
சேதனர்களால் சேவிக்கப் படா நின்றாள் -ஆகையால் சேவா விஷயமாய் இருக்கும் -தான் ஈஸ்வரனை சேவியா நின்றாள் -ஆகையால் சேவ்ய ஆஸ்ரயமாய் இருக்கும் –
ஆனபோது இ றே கர்ம கர்த்ரு பாவ விரோதம் இன்றிக்கே ஒழிவது-
புருஷகாரமான -என்று நேத்ருத்வம்-என்று அருளிச் செய்தார் இ றே ஸ்ரீ பராசர பட்டர்
இத்தால் பிராட்டிக்கு புருஷகாரத்வமே அசாதாரணம் என்று தோற்றுகிறது-இத்தால் இவளுக்கு உபாயத்வம் இல்லை என்கிறது
-உபாயத்வம் இல்லை என்கிறது எங்கனே என்னில் –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -தமேவ சரணம் கச்ச -மாம் ஏவ யே ப்ரபத் யந்தே -தமேவ சாத்யம் புருஷம்-
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸஸ ப்ரஹிநோதி தஸ்மை -தம் ஹ தேவம் ஆத்மபுத்தி பிரசாதம் முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் -களை கண் மற்றிலேன் -இத்யாதிகளில்
வ்யக்த் யந்த்ர நிஷேத பூர்வகமாக சர்வ காரண வஸ்துவுக்கே உபாயத்வத்தை விதிக்கையாலே –
ஆக பிராட்டிக்கு புருஷகாரத்வம் விசேஷம் -அசாதாரண ஆகாரம் -பகவானுக்கு விசேஷம் -அசாதாரண ஆகாரம் உபாயத்வம் -என்றபடி –

ஸ்ரீ மன் நாராயண சரணவ்-என்று உபாயதயா வஷ்யமானனான நாராயணனுக்கு விசேஷணமாக ஸ்ரீ மத்யைச் சொல்லா நின்றால்
நாராயண சப்தத்தினால் சொல்லப் புகுகிற குண விசேஷங்கள் விசேஷணத்வேன உபாய சரீரத்தில் அன்விதம் ஆகிறவோபாதி
-இவளும் உபாய அவயவமாக -ப்ராப்த்தையுமாய்-மாதா பிதாக்கள் இருவரும் சேர இருந்து பிரஜா ரக்ஷணம் பண்ணுகை பிராப்தமுமாய்
-அதுக்கு மேலே -வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் என்று உபாய க்ருத்யமான விரோதி நிவர்த்தகம் இவ்வர்த்தத்திலே நிஷ்டரான நம்மாழ்வார்
திரு உள்ளத்தாலும் உண்டாய் -பிரதேசாந்தரங்களில் இவளை புருஷகாரமாக நினைத்து சொல்லுகிறார்கள் என்கிற அவையும்
உபாய பாவத்தில் அந்வயிக்க யோக்யமுமாய் -அதுக்கு மேலே -அரி பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய-என்று மேலே அனுஷ்ட்டிக்கப் புகுகிற பிரபத்தி தானே
புருஷகார க்ருத்யத்தை செய்யவற்று ஆகையால் -மாட்டாதாகில் இவள் ஸ்வா தந்தர்யத்தை ஆற்றிச் சேர விட
-உபாய பூதனான ஈஸ்வரன் ரக்ஷிக்க அமைந்து இருக்க உபாய அந்விதமான இவனுடைய பிரபத்தி அனுஷ்டானம் நிஷ்பலமாம் படியுமாய் இருக்க
-இவளுக்கு உபாய சரீரத்தில் அந்வயம் இல்லை -புருஷகாரத்திலே என்று ஒதுக்கித் தருவார் ஆர் என்னில் –
விசேஷண த்வம் உண்டே யாகிலும் விசேஷண பூதமான குண விசேஷங்களோ பாதி உபாய உபயோகித்தவம் அவளுக்கு இல்லாமையாலும்
ஸமாச்ரயணை காந்தமான ஸுசீல்யாதி குண உதய விரோதி ஸ் வா தந்தர்யத்தை புருஷகார பூதையான இவள் ஆற்றினாலும்
அவள் கார்யம் செய்யும் போதைக்கு -ரஷ்ய அபேஷாம் பிரதீஷதே -என்கிறபடியே உபாய பிரார்த்தனா ரூபமான பிரபத்தி வேண்டுகையாலும்
-வினை தீர்க்கும் -என்கிற இடம் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்கிறவருடைய யுக்தி யாகையாலே
இத்திருவாய் மொழி அனுசந்தித்தவர்கள் பக்கல் இவளுக்கு உண்டான ஆதாராதிசய ப்ரகாசகம் ஆகையால் இவளுக்கு புருஷகார பாவத்தில் நோக்காகக் கடவது –
இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயம் உண்டாகில் -சாதன பூதமான கர்மா ஞானாதிகளுக்கு -பலமத-ஸ ப்ரீ தோலம் பலாய-என்று
ஆராதன ப்ரீதனான ஈஸ்வர முகத்தால் இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார ரூபமான பல சித்தி இவளால் யாதல் –
அங்கண் இன்றியிலே பல உபபாதான ஹேதுவான ஞான சக்தியாதிகளுக்கு உத்பாதகை யாதலாக வேண்டும் -தான் பல பிரசாதகை ஆகில்
-யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வபாவிகீ ஞான பலக்ரியா ஸ
-தேஜஸ் பல ஐஸ்வர்ய மஹாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி -என்று சுருதி ஸ்ம்ருதிகளிலே ஈஸ்வரனுக்குச் சொல்லுகிற
ஞான சக்த்யாதி குண விசேஷங்கள் இன்றியிலே ஒழிய வேணும் -உண்டாகில் இவளை ஒழிய ஈஸ்வரன் தானே கார்யம் செய்ய ஷமனே-
அக் குணங்களை உத்பாதிக்கிறாள் ஆகில் குணங்களுக்கு ஸ்வாபாவிகத்வம் இன்றியிலே ஒழியும்-
ஸுசீல்யாதிகளோ பாதி திரோஹிதம் ஆனவற்றை பிரகாசிப்பிக்கிறாள் என்னில்-ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சமஹாராதிகளிலே இடைவிடாமல்
விநியோகம் கொண்டு போருகிற ஞான சக்த்யாதிகளுக்கு -ஸுசீல்யாதி திரோதாயகமான ஸ்வாதந்தர்யத்தோபாதி ஒரு திரோதானம் இல்லையே
-உண்டாகில் ஸ்ருஷ்டியாதிகள் நடவாது ஒழிய வேணும் -ஸர்வதா அன்விதையாமாகில்-ஸ்வ விரோதி நிவ்ருத்தியில்
-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கக் கூடாதே -குண விசேஷங்களே அமைகை அன்றோ –
ஆஸம்ஸேயம் ஹரி ஸ்ரேஷ்ட க்ஷிப்ரம் மாம் ப்ராபஸ்யதே பதி -அந்த ராத்மா ஹி மே ஸூ த்தஸ் தஸ்மிம்ஸ்ச பாஹ்வோ குணா-என்று
தன் பக்கல் அநந்ய உபாயத்வமும் அவன் பக்கல் குண விசேஷங்களுமே பல சித்திக்கு அபேக்ஷிதமாக தான் அறுதியிட்டு வைத்தது –
நாம் உபாயமாக யாதொரு வஸ்துவை ஸ்வீகரிக்கிறோம் -அவ் வஸ்துவுக்கு இவள் ஸ்வரூபம் நிரூபகம் ஆகையால் –
பிரணவத்தில் பிரதம பதத்தில் போலே-யத்யபி சச்சித்த -என்கிற குண சித்தி நியாயத்தாலே -அவர்ஜ நீயமாய் அந்வயியாதோ -என்னில்
ஸ்வரூப நிரூபகத் வேன அவர்ஜ நீய பந்தம் உண்டே யாகிலும் உபாய தசையில் கண்டு கொள்வதொரு பிரயோஜனம் இல்லாமையால் –
ஸ்வரூப நிரூபகங்களான ஞான ஆனந்தகளோ பாதியும் ஸ்வரூப ஆஸ்ரயமான குணாந்தரங்களோ பாதியும் குமார் இருந்து போம் இத்தனை –
இவற்றுக்கு பிரயோஜனம் இன்றிக்கே-ஒழிகைக்கு ஹேது அவனுடைய நைரபேஷ்யம் ஆகில் சில குண விசேஷங்கள்
உபாயதயா அந்வயிக்கிற படி என் என்னில்-அவை கார்ய உபயோகி யாகையாலும் குணத்வேன அப்ருதக் புத்தி பிரவர்த்திகம் ஆகையாலும்-
குணி குணத்வாரா கார்யம் செய்கை நைரபேஷயத்துக்கு குறை இல்லாமையாலும் அவற்றுக்குத் தட்டு இல்லை -இவள் கார்ய அனுபயுக்தை யாகையாலும்
-த்ரவத்யேந ப்ருதக் புத்தி ப்ரவ்ருத்தி யோக்யதை உண்டாகை யாகையாலும் பாத்தாலே உபாய நைரபேஷயத்துக்கு கொத்தையாய் அறுகையாலும்-
உபாய பாவத்தில் அந்வயம் இல்லை -ஆகையால் சேஷித்வ தசையிலும்-ப்ராப்யத்வ தசையிலும் ஒரு மிதுனமேயாக வேண்டினவோ பாதி
-உபாய தசையில் ஸ்வ இதர சகல சஹா யாஸஹமாய் இருக்கையாலே -இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயம் இன்றியிலே புருஷகார பாவத்தில் யாகக் கடவது –
இச் சேதனனோட்டை சம்பந்தம் -ஈஸ்வரனுக்கும் பிராட்டிக்கும் ஒத்து இருக்க அவன் புருஷகாரத்வாரா ஸமாச்ரய ணீயன் ஆகைக்கும்-
இவள் புருஷகார பூதை யாகைக்கும் ஹேது என் என்னில்
அவன் புருஷோத்தமனாய் பும்ஸத்வ ப்ரயுக்தமாய் வரும் காடின்யம் நடையாடுகையாலும் -தேவ தேவோ ஹரி பிதா -என்கிறபடியே
பித்ருத்வ ப்ரயுக்தமாய் வரும் ஹித பரவத்தாலும்-
அதுக்கு மேலே ஸ்வ இதர சகல பதார்த்த சார்த்த நிருபாதிக நிர்வாஹகன் ஆகையால் -தஹ பேச -என்னும் படியான க்ரூர்யத்தாலும் –
அவனை ஆஸ்ரயிக்கும் போது புருஷகாரத்வாரா ஆஸ்ரயிக்க வேண்டும் –
இவள் நாரீணாம் உத்தமை யாகையாலே ஸ்த்ரீத்வ பிரயுக்தமாய் வரும் மார்தவத்தாலும்-த்வம் மாதா சர்வ லோகா நாம் -என்கிறபடியே
மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்யாதிசயத்தாலும் -தத்தம் கர்ம அனுகுண நிர்வஹணம் இல்லாமையால் வரும் மாதுர்யத்தாலும் –
அவனில் காட்டில் இவளுக்கு நெடு வாசி உண்டாகையாலே இவள் புருஷகாரபூதை யாகக் கடவள் –
புருஷகார பூதையான பிராட்டி உத்பவித்த வாத்சல்யாதி குண விசிஷ்டன் உபாயம் என்றபடி –
இந்த குண உதயத்துக்கு புருஷகார அபேக்ஷை உண்டாகில் உபாயம் சாத்யமுமாய்-சாபேஷமுமாம் -அநுத் பூதமான குணங்கள் உத்ப்பூதங்கள் ஆகிறது ஆகையால்
உபாயத்துக்கு சாத்யத்வம் உண்டாகும் -உபாய ஸ்வரூப உத்பத்திக்கு சஹகாரி சாபேஷத்வமும் உண்டாகையாலே பக்தியோபாதி அங்க சாபேஷத்வமும் ஆம்
-ஸ்வரூப கதமாய் திரோஹிதமாய் கிடந்ததை பிரகாசிப்பிக்கும் காட்டில் புருஷகாரத்துக்கு அங்க சாதனத்வம் உண்டாமோ என்ன ஒண்ணாத படி
-ஆத்மதர்மமான பக்தி விசேஷத்துக்கு ப்ரகாசகமான கர்ம யோகாதிகளை அங்க சாதனமாக சொல்லா நின்றது –
அதுக்கு மேலே ஆத்மதர்மமாய் அப்ரகாசமான அபஹத பாப்மத்வாதி குணங்களை பிரகாசிப்பிக்கிற ஈஸ்வரனுக்கு
பிரதான சாதனத்வ வியவஹாரம் உண்டாகா நின்றது -ஆகையால் உபாயாந்தர வியாவ்ருத்தி ரூபமான சித்ததவ நைரபேஷ்யங்கள் இரண்டும் குலையுமே என்னில் –
உபாயமாவது இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார கரமாய் இருப்பதொன்றாய் -அப்படிப்பட்ட உபாயமாவது-
ஞான சக்த்யாதி குண விசிஷ்டனான ஈஸ்வரன் ஆகையால் வாத்சல்யாதி குணங்களுக்கு உபாயத்வம் இல்லை -உள்ளது ஆஸ்ரயனை காந்ததையே-
ஆகையால் உபாய பூதமான ஞான சக்த்யாதிகள் உடைய உத்பத்தி யாதிகளுக்கு புருஷகார அபேக்ஷை இல்லாமையால் உபாயாந்தர வியாவ்ருத்தி ரூபமான
சித்தத்வத்துக்கும் நிரபேஷத்வத்துக்கும் ஒரு குறை இல்லை –ஆகை இ றே மாம் என்கிற ஸ்வீகார விஷயத்திலே ஸ்வீகார உபயோகியான ஸுசீல்யாதிகளை அனுசந்தித்து
-அஹம் என்கிற பாப விமோசகன் பக்கலிலே ஞான சக்த்யாதிகளை அனுசந்தித்து –
ப்ரஹ்ம ஸ்வரூப க்ராஹக பிரமாணம் -யே ந ஜாதானி ஜீவந்தி-இத்யாதிகளிலே -உபாயத்வேன க்ரஹிக்கை யாகையாலும் –
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற யுக்தி அநந்தரம் சோக நிவ்ருத்தி பிறக்கையாலும் -இவ் உக்திக்கு முன்பு சோக நிவ்ருத்தி பிறவாமையாலும்
-அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்தி நிர்ஹேதுக கிருபா விசிஷ்டனான சர்வேஸ்வரன் தன்னாலே உபபன்னம் ஆகையாலும்
சர்வ லோக சரண்யாய -என்று சர்வ சரண்யனாக சொல்லுகையாலும் -இவள் ஸ்வரூபத்தை உபாயத்வேந க்ரஹிப்பதொரு பிரமாணம் இல்லாமையாலும்
-இவளுடைய யுக்தியை ஒழிய பகவத் உக்தியாலே சோக நிவ்ருத்தி பிறக்கையாலும் -இவள் சஹகாரியாத போதும் உபாயத்வம் உபபன்னம் ஆகையாலும்
இவளுக்கு உபாயத்வம் இல்லை என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்-
இவளுக்கு புருஷகாரத்துவமே ஸ்வரூபம் என்றும் தனக்கு உபாயத்வமே ஸ்வரூபம் என்றும் -பகவத் சாஸ்திரத்தில் எம்பெருமான் தானே அருளிச் செய்தான் இ றே –
மத் ப்ராப்திம் பிரதி ஐந்தூ நாம் சம்சாரி பததாமத -லஷ்மீ புருஷகாரத்வே நிரதிஷ்டா பரமர்ஷிபி-மமாபி ஸ மதம் ஹ்யேதத் நான்யதா லக்ஷணம் பவேத் –
அஹம் மத் ப்ராப்த யுபாயோ வை சாஷாத் லஷ்மீபதி ஸ்வயம் -லஷ்மீ புருஷ காரேண வல்லபா பிராப்தி யோகி நீ –
ஏதஸ்யாஸ்ஸ விசேஷ அயம் நிகமானதேஷூ சப்தயதே –
ஆகிஞ்சன்யை கசரணா கேசித் பாக்யாதிகா புன -மத்பதாம் போருஹத்வந்த்வம் பிரபத்ய ப்ரீதி மானசா-
லஷ்மீம் புருஷ காரேண வ்ருதவந்தோ வராநன-மத் ஷமாம் ப்ராப்ய சேனேசப்ராப்யம் ப்ராபகம் ஏவ மாம் –
லப்த்தவா க்ருதார்த்தா ப்ராப்ஸ்யந்தே மாமேவ நன்யமாநசா -இத்யாதிகளாலே –
இத்தால் -ஷமாத் யுதபாவநத்வாரா பகவதீய உபாய பாவ பிரயோஜகத்வம் ஆகிற புருஷகாரத்வம் பிராட்டிக்கு தத் இதர ஆவ்ருத்தியாய்
-தத் வ்ருத்தியான தர்மம் என்றும் –
உபாய நபேஷை உபாயத்வம் ஆதல் -பல பிரதத்தவே சாதிபல கரணத்வம் ஆதல் ஆகிற உபாயத்வம் ஈஸ்வரனுக்கு அசாதாரண தர்மம் என்றும் சொல்லிற்று ஆயத்து-
அன்யதா லக்ஷணம் ந பவேத் –
பிராப்தி பூர்வ பாவியாய் -புருஷகாரத்வா திரிகிதமாய் -ப்ராப்தயுபயோகியான -அசாதாரண தர்மம் இல்லை -என்றபடி
இங்கே அந்யத் லக்ஷணம் நாஸ்தி -என்கிற இத்தாலே புருஷகாரத்வ லக்ஷணம் -என்று சித்தம் என்று கருத்து
அஹம் மத் ப்ராப்த யுபாயோ வை சாஷாத் –
லஷ்மீ பதி அஹம் சாஷாத் ஸ்வயம் மத் ப்ராப்த யுபாய –
லஷ்மீபதி -என்று விச்வாஸ ஹேது புருஷகார சம்பந்தமும்
சாஷாத் -என்று லஷ்மீ வியாவ்ருத்தியும் சித்தம் –
லஷ்மீ புருஷ காரேண வல்லபா பிராப்தி யோகி நீ -புருஷகாரத்வம் ஆகிற பிராப்தி சம்பந்தத்தை உடையவள் -என்றபடி –
இங்கே மம வல்லபா -என்று புருஷகார ஹேது வால்லப்யம் சொல்லிற்று –
இங்கே ரதாந்த்ரே ப்ரஸ்த்தூய மா நே சம்மீல யேத் -ப்ருஹதிம் ப்ரஸ்த்தூய மா நே சமுத்திரம் மனசா த்யாயேத் -இத்யத்ர
ரதந்த்ர சாமம் ப்ரஸ்தூயமானமாய் இருந்துள்ள அளவிலே சம்மீல நமும்-பிருஹத் சாமம் ப்ரஸ்தூயமானமாய் இருந்துள்ள அளவிலே சமுத்ரத்யா நமும்
சாம் நோர் வ்யவஸ்த்தயா யஸ்மாத் நிர்தேசோ மீல நாதிஷூ -தஸ்மான் ந சங்கரோ யுக்த ந த்வேவம் ப்ரோஷணாதிஷூ -என்று
வியவஸ்தாம் நானத்தாலே வியவஸ்தித்தங்கள் என்று –
ஏகார்த்தத்வாத் விபாக ஸியாத் -என்கிற நாவாமிகாதி கரணத்திலே நிர்ணயிக்கப் பட்டது –
அந்த நியாயத்தாலே -அஹம் மத் ப்ராப்த யுபாய லஷ்மீ புருஷகாரேண வல்லபா பிராப்தி யோகி நீ -என்று
வியவஸ்தாம் நா நத்தாலே-ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் பிராட்டிக்கு புருஷகாரத்வமும் வியவஸ்திதம் என்று ஸ்பஷ்டம்
ஏதஸ்யாஸ்ஸ விசேஷ அயம் நிகமானதேஷூ சப்தயதே -இத்யாதி
அஹம் மத் பிராப்தி இத்யாதி பூர்வ வாக்யத்திலே பிரதி நியதி தர்ம த்வயம் பிராப்தம் ஆகையால்
ப்ராபக வாக்யாவகதத் வித்வ விருத்தைகத்வமும்-ப்ராபக வாக்ய அவகத பஹு த்வ விருத்தக்ர ஹை கத்வம் போலே அவிவஷிதம்
ஆக -மம ஏதஸ் யாஸ்ஸ இமவ் விசேஷவ் -உபாயத்வ புருஷகாரத்வ ரூப பிரதி நியதி தர்மவ்-என்று பர்யவசித்தம்-
வேதாந்த ப்ரதிபாத்யமான அர்த்தம் இந்த பிரதி நியதி தர்மங்கள் என்கிற இத்தால் ஸர்வத்ர உபாய பிரகரணங்களிலே
உதாராம் — அம்ருதம் துஹா நா -பர நிர்வாண தாயி நீ –சம்சார ஆர்ணவ தாரிணீ –விமுக்தி பலதாயி நீ –
அஹம் ஹி சரணம் ப்ராப்தா –சரணம் பவ மே அம்புஜ-ஏஷா பிரசாத ஸூ முகீ ஸ்வ பதம் பிராபாயிஷ்யதி -அலமேஷா பரித்ராதும் –
-வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் -பூ வளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் —
அரவிந்த லோசன மன காந்த ப்ரஸாதாத் -அஞ்சலி பரம் வஹதே விதீர்ய –பத்மாயா தவ சரணவ் ந சரணயன் –
-அந்நிய கல்யாண காரணம் -இத்யாதி ரூபேண -உபாயத்வ ப்ரதிபாதகங்களாக ப்ரதீய மானங்களான வாக்யங்களுக்கு இந்த பிரதி நியதி தர்மங்களே அர்த்தம் என்று
பிரபல பிரமணமான பகவச் சாஸ்திரமே வேதாந்த தத் உப ப்ரும்ஹணஸ்த வாக்யங்களுக்கு வியாக்யானம் பண்ணின படியால் தத் விருத்த கல்பனம் கூடாது இ றே
ஏதஸ்யா அயம் ஸ விசேஷ-என்று அந்வயிக்கில்-சமூச்சேதவ்யம் ப்ரக்ருதம் அல்லாமையாலே சமுச்சயம் வ்யர்த்தமாம்
-ஏதஸ்யா அயம் து விசேஷ-என்னப் பார்க்கில் -சகாரத்துக்கு து சப் தார்த்த்வம் க்லிஷ்ட்டம் -சகாரத்துக்கு பின்ன க்ரமத்வமும் க்லிஷ்டம்
அயமேவ விசேஷ -என்னப் பார்க்கில் விசேஷாந்தரங்கள் பலவும் இருக்கையாலே பாதமும் பிரசங்கிக்கும்
இருவருக்கும் தர்ம பிரதி நியமம் ப்ராக்ராந்தம் ஆகையால் புருஷகாரத்வ மாத்ரத்துக்கு நிகமாந்த ப்ரதிபாத்யத்வ கதனம் ந்யூனம் ஆகையால்
ஏதஸ் யாஸ்து அயம் விசேஷ நிக மான்தேஷூ சப்தயதே -என்னவும் கூடாது –
ஆகையால் மம ஏதஸ் யாஸ்ஸ இமவ் விசேஷவ் நிக மான்தேஷூ சப்த் யேதே -என்றே பொருளாகக் கடவது –
உபாயத்வத்தில் பிரமாணமாக ப்ரத்யாசா விஷய வசனங்கள் எல்லாம் உபாய அப்யுபேத புருஷகாரத்துவத்திலே உப ஷீணங்கள் ஆகையால்
அந்யதா சித்த பிரமாணமும் இல்லை -ஸ பிராது சரணவ் காட்டும் நிபீடிய-இத்யாதிகளில் பூர்வ உக்தரீதியா பிராட்டிக்கு உபாயதயா வரணம் இல்லாமையாலும்
-ஸீதாம் உவாச -என்கிற இத்தை உபாயதயா வரணம் என்னில் புருஷகாரத்தயா வரணம் அத்யாஹரித்துக் கொள்ள வேண்டி வருகையாலும்
இத்தை புருஷகாரத்தயா வரணம் என்னில் உபாயதயா வரணம் அத்யாஹாரிக்க வேண்டி வருகையாலும்
உபாய அப்யுபேதமான புருஷகாரத்துவமே பிராட்டிக்கு பிரமாணிகம் ஆகையாலும் புருஷகாரத்தயா வரணமே -ஸீதாம் உவாச -சீதா சமஷம் -என்கிற இடத்தில் விவஷிதம் –
ஆக இத்தால் சொல்லிற்று ஆயத்து -லஷ்மீ விசிஷ்டமாய் -குண விசிஷ்டமா
யாதொருபடி வாத்சல்யாதி குணங்கள் உபாய கார்யமான அநிஷ்ட நிவ்ருத்தியாதிகளுக்கு உறுப்பான ஞான சக்த்யாதிகள் போல் அன்றிக்கே
ஆஸ்ரயண ஸுகர்யம் ஆகிற காரியாந்தரத்துக்கு உறுப்பாய் இருக்கும் -விக்ரஹங்களும் ஸூ பாஸ்ரயத்துக்கு உறுப்பாய் இருக்கும் –
இக் குணங்களில் தான் ஒன்றின் கார்யம் ஒன்றுக்கு இல்லையே -தனித்த தனியே கார்ய பேதத்தை உடைத்தாய் இருக்குமா போலே லஷ்மீ சம்பந்தமும்
இக்குண உன்மேஷத்தைப் பண்ணி கார்யம் செய்வித்துத் கொடுக்கை யாகிற புருஷகாரத்வம் ஆகிற கார்யத்திலே உபயுக்தமாய் இருக்கும் என்றதாயிற்று
ஸ்ரீ ஸ ஸ்ரீ யா கடிகயா த்வத் உபாய பாவே ப்ராப்யே த்வயி ஸ்வயம் உபேயதயா ஸ் புரந்தயா-என்று ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமியும் அருளிச் செய்தார் இறே
மற்றை பிராட்டிமார்க்கும் ஸூ ரிகள் முதலான ததீயருக்கும் இவள் சம்பந்தம் அடியாக வருகிற புருஷகாரத்துவமே உள்ளது –
இவளை போலே ஸ்வ தஸ் சித்தம் அன்றே -ஆகை இ றே
-ஏதத் சாபேஷா சம்பந்தாத் அன்யேஷாம் மமலாத்ம நாம் -தேவீ ஸூரி குரூணாம் ஸ கடகத்வம் ந து ஸ் வத-என்று தீப சங்க்ரஹத்திலே ஜீயர் அருளிச் செய்தது
ஆக புருஷகாரத்வம் பிராட்டிக்கு அசாதாரணம் என்றது ஆயத்து -ஆனால் பரதந்த்ர வஸ்துவுக்கு சம பிரதான க்ருத்யமான புருஷகாரத்வம் விருத்தம் அன்றோ என்னில்
-ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தன்னுடைய நிருபாதிக ஸுஹார்த்தத்தாலே அத்வேஷாதி ஸமஸ்த ஆத்ம குணங்களையும் ஆச்சார்ய ஸமாச்ரயணத்தையும் உண்டாக்கி
தத்த்வாரா ப்ராப்ய வை லக்ஷண்ய ஞானத்தையும் பிறப்பித்து சம்சார தோஷத்தையும் பிரகாசிப்பித்து புருஷகார பூர்வகமாக ஆஸ்ரயிக்க வேணும்
என்கிற சங்கல்ப அனுரூபம் ஆகிற ஆஸ்ரயிப்பிக்கிறான் ஆகையால் அவனுடைய ஹிருதய அநுதாவனம் பண்ணி
புருஷீ கரித்து-சேஷியான ஈஸ்வரனுக்கு -சேஷ பிரதானம் பண்ணி அவன் இவர்களையும் ரக்ஷித்து தானும் உளனாம் படி அவன் ஸ்வரூப ரூப குணாதிகளுக்கு
அதிசயம் உண்டாக்குகிறான் ஆகையால் சேஷத்வ பாரதந்தர்யங்கள் உடைய கார்யம் இத்தனை அல்லது அவற்றுக்கு விருத்தம் அன்று –
ஆனாலும் அந்நிய அதீன அதிசயம் ஸ்வதந்த்ர வஸ்துவுக்கு அனுரூபம் அன்றே என்னில் -ஸ்வரூப அந்தர் கதையாய்க் கொண்டே இவளுக்கு
வஸ்துத்வம் ஆகையால் அந்யத்வம் இல்லாமையால் ஸ்வ அதீன விபாவமே யாகக் கடவது -ஆகையால் அனுரூபமாய் இருக்கும்
ஸ்வதஸ் ஸ்ரீ ஸ் த்வம் விஷ்ணோ ஸ் வ மஸி–பிர ஸூ நம் புஷ்யந்தீ மபி பரிமளர்த்திம்-என்று இவ்வர்த்த விசேஷங்களை பட்டர் அருளிச் செய்தார் இறே
இவள் அபராதங்களைப் பொறுப்பித்து சேர விட்டு நாம் கைக் கொள்ளக் கடவோம்-என்கிற ஈஸ்வர சங்கல்பத்தாலும் இவள் புருஷகாரமாக குறை இல்லை
இவை இத்தனையும் திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் -மூன்று இத்யாதி–

————————————————————————————————————————————————-

நங்கள் திரு -இராமுச திரு -56-உன் திரு -10-10-2-என்னலாம் படி இரண்டு இடத்திலும் விட ஒண்ணாத படி பந்தம் உண்டு –
செல்வர் பெரியார் -நாச் திரு -10-10-அவன் எவ்விடத்தான் யான் யார் -5-1-7-செய் வினையோ பெரிதால் -4-7-1-என்று
அவன் பெருமையையும் தங்கள் தண்மையையும் அபராதத்தின் கனத்தையும்-நினைத்து அஞ்சினவர்கள்
இலக்குமனோடு மைதிலியும்-பெரிய திருமொழி -2-3-7–என்னும் படி தன்னோடு ஒரு கோர்வையான இளைய பெருமாளோபாதி-
கீழ் மகன் மற்று ஓர் சாதி-பெரிய திருமொழி-5-8-1-சிறு காக்கை -பெரியாழ்வார் -3-10-6–புன்மை யாளன் -பெரிய திருமொழி-10-2-8-
-அடியார் –பெரியாழ்வார்-4-9-2—என்று தண்மை பாராமல் நாடும் காடும் மேடும் கல்லும் கடலும் ஒரு வெளுப்பாம் படி
பங்கயத்தாள் திருவருள் -9-2-1-என்ற தன்னுடைய காருண்ய வர்ஷத்தை சொல்லுகிற மழைக் கண்களை -திருவிருத்தம் -52–உடைய
பார் வண்ண மட மங்கையாய் -பெரிய திருமொழி-2-6-2–அசரண்ய சரண்யை யான இவளே நமக்குத் புகல் என்று புகுந்து
கைங்கர்ய பிராப்தி உபாயத்தில் அபேக்ஷைகள் தோற்ற விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளைக் கேட்டு -அஸ்து தே -என்று தொடங்கி-இவர்கள்
வினைகள் தீர்த்து -தூவி சேர் அன்னமான பெரிய திருமொழி -3-7-9–தன் சிறகிலே இட்டுக் கொண்டு -ஈஸ்வரன் இத்தலையில் பிழைகளை நினைத்து –
எரி பொங்கி -நான் முகன்-21- –அழல விழித்து பெரியாழ்வார் -1-8-5—சலம் புரிந்து -திரு நெடும் தாண்டகம் -6–அங்கு அருள்
இன்றிக்கே சீறிக் கலங்கின அளவிலே நல் நெஞ்ச வன்னம் மானமே தோற்ற கால் வாங்கிக் கடக்க நின்று இரண்டு தலையும் பட்டது பட
நம் கோலறையான குடி இருப்பை முதல் திருத்த வேணும் என்று பார்த்து ஹிரண்ய வர்ணையான தன்னுடைய பான் மொழிகளால் -பெரியாழ்வார் -3-10-5
-பிரிய ஹிதங்கள் குலையாத படி இடம் அற வார்த்தை சொல்லி ஆற விட்டு
வடிக் கோல வாள் நெடும் கண்களாலே-இராமானுச -82– தேற்றி திரு மகட்கே தீர்ந்த வாறு -முதல் திரு -42 என்னும் படி
திரு உள்ளம் மாறாடின அளவிலே ஓடம் ஏற்றிக் கூலி கொள்வாரைப் போலே அபராதங்களைப் பொறுப்பித்து –
பொன் பாவையானமை -நான் முகன் -59–தோற்றும் படி விளக்குப் பொன் போலே இரண்டு தலையையும் பொருந்த விட்டு
நமக்கும் பூவின் மீசை நங்கைக்கும் இன்பன் -4-5-8-என்னும் படி ஏக ரசமாக்கிப் பின்பு அந்தப் புரத்தில் ஆளாய் நின்று
இரந்து உரைப்பது உண்டு -திருச்சந்த -101–வேறு கூறுவது உண்டு -பெரிய திரு மொழி -6-3-7–நின்று கேட்டு அருளாய்
-திருவிருத்தம் -1-போற்றும் பொருள் கேளாய் -திருப்பாவை -29
என்று விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளை -திரு மங்கை தங்கிய -நாச் திரு -8-4–என் திரு மார்வற்கு -6-8-10–
ஒரு வாய் சொல்-1-4-7- என் வாய் மாற்றம் -9-7-6-என்னும் படி சேர இருந்து
திருச் செவி சாத்துகையாலே -ஸ்ருணோதி -ஸ்ராவயதி -என்கிற இரண்டாலும் -புருஷகாரமான இவளுடைய செயல்களை சொல்லுகிறது –
செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று பெரிய திருமொழி -5-8-2–இரண்டு தலைக்கும் தலை தாறுமாறாக உபகரித்து
தன் சொல் வழி போக வேண்டும்படியான திருவடியோடே மறுதலைக்கும் அவள்
தான் முயங்கும்படியான மூன்றாம் திரு -100- போக்யத்தைக்குத் தோற்று எத்தைச் செய்வோம் என்று தலை தடுமாறி
நின்னன்பின் வழி நின்று -பெரியாழ்வார் -3-10-7–அதனின் பின்னே படர்ந்தான் பெரிய திருமொழி -2-5-6—என்னும்படி
விளைவது அறியாதே முறுவலுக்குத் தோற்று
தன் சொல் வழி வருமவனை பொறுக்கும் என்னும் இடம் சொல்ல வேண்டா இறே

——————————————————————————————

பார்த்தாவினுடைய படுக்கையையும் பிரஜையினுடைய தொட்டிலையும் விடாதே இருக்கும் மாதாவைப் போலே
புருஷகார பூதையான இவளுக்கும் உண்டான அகார மகார்த்த பூத ஜீவ ஈஸ்வர சம்பந்தத்தை
ஸ பிரமாணமாக அருளிச் செய்கிறார் -நங்கள் திரு உன் திரு என்று –
வ்யுத்பத்தி த்வ்யத்தால் உண்டான அர்த்தத்தை -யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் -இத்யாதியால் ஆழ்வான் அருளிச் செய்தார் –
பெரிய பிராட்டியாருக்கு உண்டான கமலா என்னும் திரு நாமம் இவ்வர்த்தத்தை வலியுறுத்தும் –
கஸ்ஸ மஸ்ஸ கமவ் -தவ் லாதீதி கமலா -என்று இ றே வ்யுத்பத்தி -ஆக இவளுக்கு உண்டான உபய சம்பந்தம் சொன்ன படி –
சம்சாரி ஜீவாத்மாக்கள் உடைய அநாதி கால பிரவ்ருத்த விபரீத ஆசாரங்களையும்-நிரங்குச ஸ்வதந்த்ரனான ஈஸ்வரனுடைய தண்ட கரத்வத்தையும் –
நித்ய அநபாயினியான பிராட்டியுடைய புருஷகார க்ருத்யத்தையும் அருளிச் செயல் சந்தைகளைக் கொண்டு
தொகுத்து அருளிச் செய்கிறார் -செல்வர் பெரியார் -என்று தொடங்கி –
ஸ்ருணோதி -ஸ்ராவயதி -என்கிற இரண்டாலும் -இத்யாதி -ஸ்ருணோதி -ஸ்ராவயதி -என்கிற வ்யுத்பத்திகளில்
-சாபராதரான அடியோங்களை சர்வேஸ்வரன் திருவடிகளில் காட்டிக் கொடுத்து அருள வேணும் -என்று இப்புடைகளிலே ஆஸ்ரிதர் உடைய
ஆர்த்த த்வனியைக் கேட்டு சர்வேஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து இவர்கள் உடைய ஆர்த்தியை சமிப்பிக்கும் என்றதாம்
ஸ்ருணோதி –என்றது கேளா நிற்கும் என்றபடி /ஸ்ராவயதி – -என்றது கேட்ப்பியா நிற்கும் என்றபடி
புருஷகார பாவத்துக்கு ஏகாந்தமான இவளுக்குச் சொன்ன உபய சம்பந்தத்துக்கும் உண்டான பிரயோஜன விஷயத்தை சொல்லுகிறது
-ஸ்ருணோ தீ தி -ஸ்ரீ -ஸ்ராவயதீ தி -ஸ்ரீ -என்கிற நிருத்தம்-
ஸ்ருணோதி -என்று கேட்க்கும் என்கையாலே சேதனரோடு உண்டான பந்த கார்யத்தைச் சொல்லுகிறது
-ஸ்ராவயதி -என்று கேட்ப்பியா நிற்கும் என்கையாலே ஈஸ்வரனோடு உண்டான பந்த காரியத்தை சொல்லுகிறது –
அதாவது -இவன் ஈஸ்வர தத்வம் இல்லை என்று எழுத்து இடும் அன்றும் -இவன் உரு மாயாதபடி இரா மடமூட்டுவாரோ பாதி –
கண் காணாமல் நோக்கிப் போருவது-கரண களேபர விதுரமாய்-அசித் கல்பமாய் கிடக்க-அபேஷ நிரபேஷமாகவே தயமான மனாவாய்க் கொண்டு
கரண களேபரங்களைக் கொடுப்பது -பின்பு இவற்றுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தி உண்டாகுகைக்காக அநு பிரவேசிப்பது
-பின்பு அசுர ராக்ஷஸிகள் கையில் துகை உண்ணும் போது -நாட்டில் பிறந்து படாதன பட்டு -ராம கிருஷ்ணாதி ரூபேண மார்பிலே அம்பு ஏற்று
-எதிரிகளை இடறிக் கொடுப்பது -நம்மைப் பெறுகைக்கு ஈடாய் இருபத்தொரு அறிவு உண்டாமோ என்னும் நோயாசையாலே
-வேதங்களையும் வைதிகரையும் ப்ரவர்த்திப்பித்து -இவை படுகிற நோவைக் கண்டு -இவர்களிலும் -ப்ருசம் பவதி துக்கித-என்று
திரு உள்ளம் மிகவும் உடை குலைப் படுவது -சாதனங்களாகக் கொடுத்த கரண களேபரங்களே பாதகங்கள் ஆனால் அவற்றைக் கொண்டு
அதிபதியாமைக்காக -அவற்றை ஓடித்திட்டு வைப்பது -பின்பு ஸ ஏகாகீ ந ரமேத -என்று நித்ய விபூதி உக்தனான தான் இவற்றை ஒழியச் செல்லாமை
உடம்பு வெளுப்பதாம் படியான நிருபாதிக பந்தமும் -ரஷ்ய அபேக்ஷம் பிரதீஷதே -என்கிறபடியே இவை படுகிற நோவு பொறுக்க மாட்டாமையாலே
-நாம் இழிந்து நோக்குகைக்கு சிறிது இடம் பண்ணித் தருவது காண்-என்று அவசர ப்ரதீஷன் ஆவது –
அரி பிராணன் பரித்யஜ்ய ரஷித்வய -என்று நான் அழிந்தே யாகிலும் ஆஸ்ரிதரை ரஷிக்கக் க டவேன்-என்பது
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்–ந த்யஜேயம் கதஞ்சன–சமோஹம் சர்வ பூதேஷூ -என்னும் ஸ்வபாவ விசேஷமும் –
ஏவமாதிகள் அடைய ஆஸ்ரய நீயனான சர்வேஸ்வரன் பக்கலிலே சமவேதமாய் இரா நிர்க்கச் செயதேயும்-அப்படிப் பட்டு இருக்கிற அவனுடைய
வாத்சல்ய சீதளமான திரு உள்ளத்தை -க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் -என்கிறபடியே க்ரோதத்துக்கு இரையாக்கி கடல் கொதித்தால் போலே
கொதிக்கும் படி பண்ணுவது -பிரியம்வத என்கிறபடியே ம்ருத சஞ்சீவியான -வாக் அம்ருதத்தை -ஷிபாமி -ந ஷமாமி -ஹந்யாம்-என்கிறபடியே
விஷ தாரை போலே ஸ்ரவண கடுகமாம் படி பண்ணுவது –
சர்வ உஜ்ஜீவன ஹேதுவான அவனுடைய திவ்ய வியாபாரங்களை நரகாதிகளிலே தள்ளிக் குட்டிக் கொலையாக நிறுத்து அறுத்து
தீர்த்துகையிலே அதிக்ருதமாம் படியும்
அநாதி காலம் பண்ணிப் போரு கிற-பகவத் அபசார -பாகவத அபசார -அஸஹ்ய அபசார -நாநாவித அநந்த அபசார அனுசந்தானத்தாலே குடல் கரிந்து
அநாதி காலம் கர்மங்களை நிறுத்து அறுத்து தீர்த்து போரு கிற அவனை ஆஸ்ரயிக்கப் புகுகிறது –
அவன் உதிரக்கை கழுவாத படி பண்ணிப் போந்த நான் நான் ஆஸ்ரயிக்கப புகுகிறேன் -அதுக்கு கை தொடுமான கர்மம் இலச்சினைப் படியே
குறி அழியாமல் கிடக்கிறது -என்கிற பய அதிசயத்தாலே தேங்கி -சம்சாரத்தில் வெம்மையும் -பகவத் விஷயத்தில் வை லக்ஷண்யமும் வடிம்பு இடுகையாலே
-பண்டு போலே ஆஸ்ரயண விமுகன் ஆக மாட்டாதே -துஷ் கரத்வாதிகளாலே சாதா நாந்தரங்களிலே கால் இடக் கூசி -புறம்பே போக்கடி அற்று தெகிடாடுகிற
இச் சேதனன்-ஈஸ்வரன் திரு உள்ளத்தில் நடையாடுகிற அழல் தீயை ஆற்றி நம்மைச் சேர விடுகைக்கு நம்மோடும் அவனோடும் நிருபாதிக சம்பந்தத்தை உடையளாய்
ந கச்சின் ந அபராத்யதி -என்னும் இவளை ஒழிய புகு வாசல் இல்லை என்று காக வ்ருத்தாந்தி முகத்தால் அறுதியிட்டு
பிரணிபாத ப்ரசன்னாஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்று புருஷகார நிரபேஷமாக அஞ்சலி மாத்திரை ஸூ லபையான இவளை வந்து கிட்டி –
மாதர் மைதிலி ராக்ஷசீஸ் த்வயி ததைவார்த்தராபாராதாஸ் த்வயா ரஷந்த்யா பவநாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா -என்கிறபடியே
புறம்புள்ள பொருத்தம் அடைய அற்று ஈஸ்வரனுக்கு ஆளாகாத படி பூர்வ அபராதத்தாலே அஞ்சின எனக்கு நிருபாதிக ஜனனியான தேவரீர் திருவடிகள்
ஒழிய புகல் இல்லை -இனி நான் ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய் ரஷிதன் ஆதல் –
அவனுக்கு ஸ்வாதந்தர்ய பாத்திரமாய் நாசத்தோடே தலைக் கட்டுதல் ஒழிய இளைப்பாறுகைக்கு இடம் இல்லாத படி அநந்ய கதி-இனி அடியேனுக்கு
ஹிதம் இன்னது என்று அறிந்து ரக்ஷித்து அருளுகை தேவரீருக்கே பரம் என்று இவன் சொன்ன வார்த்தையை கேட்க்கையும் –
அதுக்கு மேலே வெந்நீருக்கு குளிர் நீர் போலே நிராங்குச ஸ்வாதந்தர்யத்தாலே -அபித பாவ கோபமாம்-என்கிறபடியே -அனபிபாவ நீயனான
-ஈஸ்வரனைத் தன்னுடைய போக்கியாதிசயத்தாலே பதமாக்கி நாயந்தே-இச் சேதனனை அங்கீ கரித்து அருளினீர் என்னும் -ஆவது என்
-ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஞ்ஞா -என்று நம்முடைய ஆஞ்ஞா ரூபமான சாஸ்த்ரா மரியாதையை அதிலங்கித்து நம் நெஞ்சு புண் படும்படி தீரக் கழிய
அபராதம் பண்ணிப் போந்தவன் அல்லனோ -இவனை அங்கீ கரிக்கை யாவது என் என்னும் ஈஸ்வரன் -அவனுடைய பூர்வ அபராதங்களை
உம்முடைய பொறைக்கு இலக்காக்கி ரக்ஷித்து அருளீர் -என்னும் பிராட்டி-
பொறையை நோக்குகைக்காக சாஸ்திர மரியாதையை குட நீர் வழியவோ -என்னும் ஈஸ்வரன் -சாஸ்திர மரியாதையை நோக்குகைக்காக
உம்முடைய ஸ்வாபாவிகமான ஷமாதத்வத்தை குடநீர் வழியவோ -என்னும் பிராட்டி –
க்ஷமையை நோக்கில் சாஸ்திர மரியாதை குலையும் -சாஸ்திர மரியாதையை நோக்கில் ஷமா தத்வம் குலையும் -இரண்டும் குலையாது
ஒழிய வேண்டும் -செய்ய அடுத்து என் -என்னும் ஈஸ்வரன் –
கிங்கர்த்த வ்யதாகுலனாய் இருந்தால் அத்தனையே -அவை இரண்டும் குலையாத படி வழி சொல்லுகிறேன் -அப்படியே செய்து அருளீர் -என்னும் பிராட்டி –
இரண்டும் குலையாமல் இச் சேதனனை நோக்க வழி உண்டாகில் நமக்குத் பொல்லாததோ -சொல்லிக் காண் -என்னும் ஈஸ்வரன் –
ஆனால் சாஸ்திர மரியாதையை விமுகர் விஷயம் ஆக்குவது -உம்முடைய க்ஷமையை அபிமுக விஷயம் ஆக்குவது
-இரண்டும் ஜீவித்ததாய் அறும்-என்னும் விஷய விபாகம் பண்ணிக்க கொடுக்கும் பிராட்டி –
அத்தைக் கேட்டு -அழகிய விபாகம் -என்று இச் சேதனனை அங்கீ கரித்து அருளும் ஈஸ்வரன்
ஆக இப்படி சாபராத ஜந்துவை ஈஸ்வரன் அங்கீ கரித்து அருளும்படியான வார்த்தைகளைக் கேடப்பித்து அருளுகையும்
ஆக புருஷகாரத்வ சமர்ப்பகமான ஸ்வ பாவ விசேஷங்களும் -தத் காரியங்களும் தர்மிக் ராஹகமான ஸ்ரீ சப்தத்தாலே சொல்லிற்று ஆயிற்று –
இப்படிப் புருஷகார க்ருத்யத்தை சொல்லுகிற இதுக்கும் புருஷகார பாவத்தில் நோக்கு -மத் பக்த்வந்தம் ஏகம் யே பிரபத்யந்தே பராயணம்
-உத்தரிஷ்யாம் யஹம் தேவி சம்சாராத் ஸ்வயம் ஏவ தான் –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -இத்யாதிகளை அவன் பக்கலிலே கேட்டு கபோதத்தை கபோதி கேட்பித்தால் போலே அவசரத்தில் கேட்பிக்கும் என்னவுமாம் –
சர்வேஸ்வரன் பக்கலிலே லோக ஹிதத்தைக் கேட்டு -மித்ரமவ் பயிகம் கருத்தும் இத்யாதிகளில் படியே விபரீதரையும் கூடக் கேட்பிக்கும் என்னவுமாம் –
விமுகானாம் அபி பகவத் ஆஸ்ரயண ஸ்ராவயித்ருத்வம் புருஷகார பாவ அநு ப்ரவிஷ்டாம் இ றே
எல்லாம் செய்தாலும் நிராங்குச ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன் சேதனருடைய அபராதங்களை நிறுத்து அறுத்து தீர்த்துவன் என்று நிற்கும் அளவில்
-இவளாலே பொறுப்பிக்கப் போமோ -என்ன அருளிச் செய்கிறார் -செய்தகவினுக்கு இத்யாதி —
சொல்ல வேண்டா வி றே -இதயந்தம் -திருவடியைப் பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வருமவனை
பொறுப்பிக்கச் சொல்ல வேண்டா விறே -என்று அருளிச் செய்தார் இ றே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாரும் –
ஆக ஸ்ரீ மத் பதத்தில் பிரக்ருத் வம்சத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

————————————————————————————————————————————-

மதுப்
இவனும் அவளுமான சேர்த்தி எப்போதும் உண்டு என்கிறது

————————————————————–

இனி ஸ்ரீ மத் பதத்தில் -ப்ரத்யய அம்சத்தை அருளிச் செய்கிறார் -மதுப் -என்று தொடங்கி -மதுப்பு தான் –
பூமி நிந்தா ப்ரஸம்சாஸூ நித்ய யோக அதிசாயனே-சம்ஸர்க்கே அஸ்தி விவஷாயம் பவந்தி மதுபாதய -என்று
தனவான் -மஹ்திதம் கௌசலம் ஆயுஷ்மதாம் –புத்திமான் —பிரபாவான்-வீர்யவான்
-ஸ்படிகோ ரக்திமவான்-பர்வதோ வஹ்மிமான்–இத்யாதிகளிலே அநேக அர்த்தங்களில் பிரசித்தம் இறே -அவற்றில் இங்கு விவஷிதார்த்தம் எது என்னில் –
லஷ்மீம் அநபகாமினீம்-அநந்ய ராகவேணாகம் பாஸ்கரேண பிரபாயதா-அநந்யா ஹி மாயா சீதா பாஸ்கரேண பிரபாயதா-
தஸ்யா அநபாயினீ சக்தி தேவீ தத் தர்ம தர்மணீ-
மம சர்வாத்ம பூதஸ்ய நிதியைவைஷ அநபாயினீ -நித்யைவை ஷா ஜெகன் மாதா விஷ்ணோஸ் ஸ்ரீ ர் அநபாயினீ –
அப்ருதக் சாரிணீ சத்தா மஹா நந்த மயீ பரா -இத்யாதி பிரமானாந்தர சித்த நித்ய யோக மதுப்பு ஆகிறது
இத்தால் புருஷகார பூதையான பிராட்டியும் ஈஸ்வரனுமான இவருடைய சேர்த்தியும் எப்போதும் உண்டு என்றபடி –
பூம நிந்தா ப்ரஸம்ஸா ஸூ -என்று அநேக அர்த்தமாய் இருந்ததே யாகிலும் -இங்கே மதுப் உத்யோக விசேஷத்தாலே பிராமண ஸித்தமான நித்ய யோகத்தை சொல்லுகிறது –
விக்ரஹத்தில் ப்ரஹ்மசர்ய அவஸ்தையிலும் கூட -கிருஷ்ணா ஜிநேந சம்வ்ருண் வன் வதூம் வக்ஷஸ் தலாலயாம் -என்னும் படியாய் இ றே நித்ய யோகம் இருப்பது
அப்ருதக் சித்த வஸ்துவுக்கு -ஸ்ரீ மான் என்று மத்வர்த்தீய ப்ரத்யய சாபேஷமாக சாமா நாதி கரண்யம் கூடுமோ -என்றும் –
ப்ருதக் சித்தமாகில் -கீர்த்தி ஸ்ரீ வாக் ஸ நாரீணாம் -என்றும் பூவில் வாழ் மகளாய் -என்றும் –
மத்வர்த்தீய ப்ரத்யய நிரபேஷமாக சாமா நாதி கரண்யம் கூடுமோ என்றும் சிலர் சொல்லும் சோத்யங்கள் இரண்டும் மந்தங்கள்-
எங்கனே என்னில் -தத் குண சாரத்வாத்-து தத் வ்யபதேச பிராஜ்ஞவத்-என்கிற நியாயத்தாலே ஞான குணத்தை இட்டு ஆத்மாவை ஞானம் என்று சொல்லா நிற்கச் செய்தே-
ஞானவான் என்று மத்வர்த்தீய ப்ரத்யய அன்விதமாகவும் சாமா நாதி கரண்யம் உண்டாகிறாப் போலே இங்கும் குறை இல்லை –
ஆகையால் மத்வர்த்தீய ப்ரத்யய மாத்ரத்தைக் கொண்டு ப்ருதக் சித்தம் என்று நிச்சயிக்கப் போகாது
நரபதிரேவ சர்வே லோகா -இத்யாதிகளில் போலே விவஷாந்தரம் சம்பாவிதமான விடத்தில் இப்பிரத்யயம் இல்லாத
சாமா நாதி காரண்ய மாத்ரத்தைக் கொண்டு ப்ருதக் சித்தம் அன்று என்ன ஒண்ணாது
ஆனபின்பு விசதமாக ப்ரதிபாதிக்கும் பிரமானாந்தரங்களைக் கொண்டு இவ்வஸ்து ஸ்திதி இருக்கும் படி தெளிய பிராப்தம்
இங்கு உபாய தசையிலும் பல தசையிலும் பிரமாணங்கள் நித்ய யோகத்தை சொல்லுகையாலும்
இம்மந்த்ரத்தில் இவ்வர்த்தம் பிரகாசிப்பிக்கை அபேக்ஷிதம் ஆகையாலும் -பூர்வ உத்தர கண்டங்களில் மதுப்பாலே
ஸ பிராது சரணவ் காடம்–பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா-என்கிறபடியே பிரிவு அற்றபடி சொல்லிற்று ஆயிற்று –
நம்மாழ்வாரும் -அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை யுறை மார்பா -என்றும்
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப -என்றும் -இங்கும் அங்கும் திருமால் அன்றி யின்மை கண்டு -என்றும்
உபாய தசையிலும் பல தசையிலும் ஸ்ரீ மச்-சப்தத்தில் சொன்ன நித்ய யோகத்தை அனுசந்தித்தார் –
இவ்வநுஸந்தானம் சாபராதர்க்கு அணியிடாதே நினைத்த போதே ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாம் –
ஆஸ்ரயண வேளையோடு போக வேளையோடு வாசி யற ஒரு மிதுனமே உத்தே
ஸ்ரீ யபதி-நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா நா -ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண அநந்த ஞானானந்தைக ஸ்வரூப -என்று –
ஸ்வரூப நிரூபகமான ஞான ஆனந்தாதிகளுக்கு முன்னே ஸ்ரீ யபதித்தவத்தை சொல்லும்படி அவன் ஸ்வரூபத்துக்கு பிரதான நிரூபகையாய் இருக்கையாலே
இவளோடு கூடிய வஸ்துவினுடைய ஸத்பாவம் இருப்பது என்றபடி -ஆக இந்நித்ய யோகம் ஸ்வரூப அனுபந்தித்தவ ப்ரயுக்தம் என்றதாயிற்று –
இப்படி புருஷகார பூதையாய் அற்றாலும் இவள் சந்நிஹிதையாய் இருக்குமாகில் -சஞ்சலம் ஹி மன –சலசித்தம் -நின்றவா நில்லா நெஞ்சு -என்கிறபடியே
-சூறாவழிக் காற்று போலே சுழன்று வருகிற இஸ் சம்சாரி சேதனருடைய நெஞ்சு தளமாக அங்குரித்த ருசியாகையாலே க்ஷண பங்குரையாய் இருக்குமாகையால்
-அது தீவதற்கு முன்னே ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கைக்கு விரகு அற்று பழைய குருடே யாய் விடும் என்கிற சங்கையிலே ருசி பிறந்த போதே
ஆஸ்ரயிக்கலாம் படி ஆஸ்ரயணீய வஸ்துவோடு இவள் நித்ய சம்யுக்தையாய் இருக்கும் என்கிறது மதுப்பு –
இம்மதுப்பு -நித்ய யோகி மதுப் ஆகையால் இவள் நித்ய அநபாயினியாய் இருக்கும் என்கிறது -அதுக்கு ஹேது என் என்னில்
ஞானானந்த லக்ஷணமான பகவத் ஸ்வரூபத்துக்கு ஞானானந்த லக்ஷணமான ஆத்ம ஸ்வரூபத்தில் காட்டில் வ்யாவர்த்தகமான
ஹேய ப்ரத்ய நீக த்வ -விபுத்வ -சேஷித்வாதிகளோ பாதி -ஸ்ரீ யபதித்தவமும்-
ம்ருதுபாதா நகமான கடகரகாதிகளில் ப்ருது புத் நோதரா கார ரூபையான கடத்வ ஜாதி கடத்துக்கு கரகாதி வியாவருத்தியை பண்ணுகிறவோ பாதி
வியாவ்ருத்தியைப் பண்ணித் தரும் படி ஸ்வரூப நிரூபக பூதை யாகையாலும் -ஸ்வாபாவிகமாகவும்-ஓவ்பாதிகமாகவும் பகவத் ஸாரூப்யம்
பெற்று இருக்கிற நித்யர் உடையவும் முக்தர் உடையவும் விக்கிரஹங்களில் காட்டில் வியாவ்ருத்தராம் படியே -ஸ்ரீ வத்ஸவஷா -என்கிறபடியே
-அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு நிரூபக பூதை யாகையாலும் -ஒரு மிதுன விஷய கிஞ்சித் காரத்தை ஒழியில் க்ஷண காலமும்
தரிக்க மாட்டாத படியான நித்யரையும் முக்தரையும் நித்ய கைங்கர்யம் கொள்ளுகைக்காக -ச்ரியா சார்த்த மாஸ்த்தே-என்கிறபடியே
நிரந்தர சம்ச்லேஷம் பண்ணிக் கொண்டு இருக்கையாலும்-
விபவாதிகளிலும் வந்தால் -தேவத்வே தேவ தேஹேயம் மனுஷத்யேவ ஸ மானுஷீ -விஷ்ணோர் தேஹ அனுரூபாம் வை காரோத்யேஷாத் மனஸ் தனும்-என்கிறபடியே
அவ்வோ அவ்வோ அவதார சஜாதீயமான விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி வந்து அவதரிக்கையாலும் -அதுக்கு மேலே அகலகில்லேன் இறையும் என்று
மார்பிலே இருந்து மடல் எடுக்கும் படி பகவத் போகத்திஎன்கிறபடியே க்ஷண காலம் விஸ்லேஷ அசைஹை யாய் இருக்கையாலும்
ஸ்வ வைஸ்வரூப்யேண சதா அநுபூத யாப்ய பூர்வவத் விஸ்மய மாத தா நயா -என்கிறபடியே பகவத் அனுபவ அவகாஹனம் பண்ணி நித்ய முக்த சங்கங்கள்
-ஏகதா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி சததா பவதி சகஸ்ரதா பவாதி -என்று அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி -நிரந்தர அனுபவம் பண்ணினாலும்
நிரவத்ய பர ப்ராப்தே-என்கிறபடியே அநுபூத அம்சம் அல்பமாய் அனுபாவ்ய அம்சமே அபரிச்சின்னமாம் படியான பெரிய வைபவத்தை உடைய
தானும் தன்னுடைய ஞான சக்த்யாதிகளையும் -ஸ்வ வைஸ்வரூபியத்தையும் நேர்ந்து ஒரு கால கலைகதேசமும் மலடு பற்றாதபடி நிரந்தர அனுபவம்
பண்ணா நின்றாலும் ஆனைக்கு குதிரை வைத்து அந்த வைஸ்வரூப்ய அனுபவம் அடைய போகோ போத்காத கேளீ சுளகிதாம் படி பண்ண வற்றான
அவளுடைய நிரவதிக போக்கிய அதிசயத்தாலே மார்பிலே இருத்தி மடல் எடுக்கும் படி க்ஷண காலமும் விரஹ அஸஹாயன் ஆகையாலும்
இவள் நித்ய சம்யுக்தையாய் இருக்கும் –
ஸ்ரீ யதே என்கிற வ்யுத்பத்தியாலே த்ரிவித ஆத்ம வர்க்கத்தில் காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லிற்று -மதுப்பாலே அல்லாத நாச்சிமாரில் காட்டில்
வியாவ்ருத்தி சொல்லிற்று -அல்லாதவர்களுக்கு நித்ய சம்யோக ஹேது பூதங்களான ஸ்வரூப நிரூபகத் வாதிகள் இல்லையே
ஆக இவள் சொன்னது ஒன்றை மேல் விழுந்து கேட்க்கும் படியான இவனோடு உண்டான நிரூபகத்வ பந்துத்வத்தாலும் நித்ய அநபாயினியாய் நின்று
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்னும்படி பண்ணும் தன்னுடைய வால்லப் யாதிசயத்தாலும் நிருத்தரமாம் படியான
தன்னுடைய யுக்தி விசேஷங்களாலும் அவனுடைய ஸ் வா தந்தர்யத்தை ஆற்றிச் சேர விட க்ஷமை யாகையாலும் புருஷகார பாவம் சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————————————

ஒருவரை ஒருவர் பிரிந்த போது -நீரைப் பிரித்த மீனும் -தாமரையும் போலே -சத்தை அழிவது முகம் வாடுவது ஆகையால்
அவனும் இவளோடு அன்பளவி பெரிய திருமொழி -2-4-1–இவளும் செவ்விப் படிக் கோலம் -இராமானுச நூற்று -82–
அகலகில்லேன் என்று இருக்கையாலே -6-10-10–என்றும் திரு விருந்த மார்வன் சிரீதரன்-நான்முகன் -92– என்னும் படி
நித்ய யோகம் குலையாது –
பிரிந்த போது ஜகத்தைப் பரிவர்த்திப்பன்
யுகாந்தாக்னி கூற்று அறுத்தோ சுடுவது என்னும் படி நாடி குடி கிடவாதே
கூடின போது -ஏழ் உலகை இன்பம் பயக்க –7-10-1-என்னும் படி நாடு வாழ்கையாலே இச் சேர்த்தி தானே ஜகத் ரக்ஷணத்துக்கு உறுப்பாய் இருக்கும்
அபராதம் கனத்து இருக்க இவள் சந்நிதியாலே காக சூர்பணகைகளுக்கு தலை பெறலாயிற்று
அபராதம் மாட்டாய் இருக்க இவள் அருகு இல்லாமையால் ராவண தாடகைகள் முடித்தார்கள் –
சேர்ந்த திருமால் -மூன்றாம் திரு -30–என்கிறபடியே பரத்வம் முதலாக ஈஸ்வர கந்தம் உள்ள இடம் எல்லாம் விடாதே
சேர்த்தியும் அனுபவமும் உகப்பும் மாறாமையாலே காலம் பாராதே ருசி பிறந்த போதே திருமாலை -4-1-2-விரைந்து அடி சேரக் குறை இல்லை
இவள் சேர நிற்கையாலே ஸ் வ தந்த்ரனுக்கும் பிழை நினைந்து கை விட ஒண்ணாது
சாபராதனுக்கும் உடன் இருக்கின்றமையை நினைத்துக் கால் வாங்க வேண்டா –

—————————————————————

உபய விபூதி நாதனான ஈஸ்வரனுக்கு நலம் அந்தம் இல்லாதோர் நாடான நித்ய விபூதியில் அயர்வறும் அமரர்கள் உடைய நிரந்தர அனுபவ ஜெனித
ஹர்ஷ ப்ரகர்ஷ பலாத்கார காரிதமான நித்ய கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தியாய் கொண்டு -அவர்களோட்டை அனுபவம் நடவா நிற்கச் செய்தே
-நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் எழும் என்கிறபடியே லீலா விபூதியில் ரக்ஷணம் குலையாமல் நடத்துக் கொண்டு போகிறாப் போலே
இவளும் மாத்ருத்வ ரூபேணவும் மஹிஷீத்வ ரூபேணவும் சேதனரோடும் ஈஸ்வரனோடும் அவர்ஜனீய சம்பந்தம் உடையவள் ஆகையால்
அவனோட்டை அனுபவம் நடவா நிற்கச் செயதேயும் ஜகத் ரக்ஷண அர்த்தமான புருஷகாரத்வம் -ஸ்வ போக்யாதிசயத்தாலே-
இவளுக்கு என்ன உபகாரம் பண்ணுவோம் -என்று உபகாரம் பண்ணி அல்லது தரிக்க மாட்டாதானான ஈஸ்வரனை உபகாரம் கொண்டு தரிப்பித்த பிரகாரம் ஆகையால்–
ஸ்வதந்த்ர வஸ்துவுக்கு பர தந்தரையான இவள் புருஷகாரமாகப் போருமோ என்கிற சங்கைக்கும்
பகவத் ஸ்வரூப ரூப குணங்களை இடைவிடாமல் அசங்குசிதமாக அனுபவித்துப் போரு கிற இவளுக்கு
பர துக்க தரிசனமும் தன் நிவ்ருத்ய அபேக்ஷையும் உபபன்னம் ஆகுமோ -என்கிற சங்கைக்கும் அவகாசம் இல்லை –
ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருத்வ்–கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவி – என்கிற பிரமாணங்களை திரு உள்ளத்தே கொண்டு
அருளிச் செய்கிறார் -நீரைப் பிரித்த மீனும் -தாமரையும் போலே -என்று –
ஜகத்தைப் பரிவர்த்திப்பன்-இதி-இங்கே புரேவ மே சாருததீ ம நிந்தித்தாம் திசந்தி ஸீதாம் யதி நாத்ய மைதிலீம் –
சதேவ கந்தர்வ மனுஷ்ய பன்னகம் ஜகத் ஸ சைலம் பரிவர்த்தயாம் யஹம் -என்ற ஸ்ரீ இராமாயண வசனம் அனுசந்தேயம்
இனி இவள் புருஷகாரத்வத்தின் அவஸ்ய அபேஷித்வத்தை அறிவிக்கைக்காக இவள் சந்நிதிக்கும் அசந்நிதிக்கும் உண்டான
வாசியை அருளிச் செய்கிறார் –அபராதம் என்று தொடங்கி -காக சூர்பணகைகள் இதி –
இவர்கள் அங்க வைகல்யம் அடைந்தது -அங்கமான பிராட்டி திறத்தில் அபசாரம் பட்ட படியால் என்றும்
ராவண தாடகைகள் அங்கி விநாசத்தை அடைந்தது அங்கியான பெருமாள் திறத்தில் அபசாரப் பட்ட படியால் என்றும் கண்டு கொள்வது
-பெருமாளுக்கும் பிராட்டிக்கு அங்கி அங்க பாவம் -பிரகார பிரகாரி பாவம் இ றே
காக -இதி -புத்ர கில ஸ சக்ரஸ்ய -என்கிற ஸ்ரீ இராமாயண வசனத்தில் உண்டான -ஜயந்த வால்யந்தரனோ அபூர்வ புத்திரனோ என்கிற
விசேஷ ஆகாங்ஷயை அபூர்வ கல்ப நா விரஹ அநுக்ரஹீதமான புராண வசன சமர்பித்த ஜயந்த ரூப விசேஷம் சமிபிக்கையாலே
சாமான்ய விசேஷ நியாயத்தாலும் சர்வ சாகா ப்ரத்யய நியாயத்தாலும் ஜெயந்தன் காக ரூபேண வந்தான் என்னும் இடம் சித்தம்
பாத்ம உத்தரத்திலே-திவ்ய அஷ்டோத்தர சத நாம விஷய அத்தியாயத்தில் -ஜயந்த த்ராண வரத-என்றுக்காக வ்ருத்தாந்த ஸ்தானத்தில் சொல்லுகையாலே
காகம் ஜெயந்தன் என்னும் இடம் லப்தம்
பூர்வ வாசிஷ்டத்தில் ஹனுமத் விஜயத்தில் கௌதம சாபத்தால் இந்திரனுக்கு வந்த காகத்வத்தை தேவதைகள் ஜெயந்தன் இடத்தில்
மாற்றினார்கள் என்கையாலும் காகம் ஜெயந்தம் என்னும் இடம் ஸ்புடம்
நாகாக்ரை கே ந தே பீரு-ராதி தஞ்ச ஸ் தா நாந்தரே-என்று நக ரூப கரண சாமர்த்யத்தாலும்-ஸ்தன ரூபாதி கரண சாமர்த்யத்தாலும்
-ரத்தன சப்தித விலேகன ரூப க்ரியா சாமர்த்யத்தாலும் -ஸ்ரீ ராமாயணத்தில் வியஞ்சிதமாய்-கந்தர்ப்ப சர பீடித-என்று பாத்ம புராணத்தில்
கண்ட யுக்தமான காமுகத்தவமும் -பஷார்த்தீ என்று ஸ்ரீ ராமாயணத்தில் கண்ட யுக்தமான பஷார்த்தித்தவமும் ஜெயந்துத்வ ப்ரயுக்த வாசனையால்
காக சரீர சம்பந்த நிபந்தன வாசனையாலும்-ஜாதி ஸ்மர ந்யாயேன ஏகத்ர சங்கட நார்ஹம் ஆகையாலும்
காகம் அபூர்வ புத்ரன் என்று யத்ர சொல்லி இராமையாலும்
இத்தைக் கொண்டே கல் பிக்கில் கல் ப நா கௌரவம் பிரசங்கிக்கையாலும் -கில சப்த ஸ்வாரஸ் யத்தாலும் -இந்த்ராய புத்ரினே -என்கிற இடத்தில்
புத்ர சப்தம் ஜயந்த பரமாக கண்ட படியாலும் ஜெயந்தன் காமுகத்தயா காக ரூபேண வந்தான் என்று சித்தம் –
இம்மதுப்பின் தாத்பர்ய அம்சத்தை அருளிச் செய்கிறார் -காலம் பாராதே -என்று -அதாவது இப்படி புருஷகார உபாய வஸ்துக்களினுடைய
நித்ய யோகத்தை பிரதிபாதிக்கிற இம் மதுப்பால் -இவ்விஷயத்தை ஆஸ்ரயிப்பார்க்கு ஆஸ்ரயிக்கையில் ருசியே வேண்டுவது
-இரண்டு தலையும் கூடி இருக்கும் தசையில் ஆஸ்ரயிக்க வேணுமே -என்று ஆஸ்ரய நீயத்துக்கு காலம் பார்த்து இருக்க வேண்டா -என்கை
-இத்தால் ஜீவ ஈஸ்வரர்களுக்கு பலிக்குமத்தை அருளிச் செய்கிறார் -இவள் சேர நிற்கையால் இத்யாதி –

ஸ்ரீ யதே என்கிற கர்மணி வியுத்பத்தியாலே கிருபையும்
ஸ் ரயதே என்கிற கர்த்தரி வியுத்பத்தியாலே பாரதந்தர்யமும்
நித்ய யோக வாசியான மதுப்பாலே அநந்யார்ஹத்வமும்
ஆகிற புருஷகாரத்துக்கு அபேக்ஷிதமான குண த்ரயமும் ஸ்ரீ மத் பதத்தாலே யுக்தம் –
உபய விபூதிக்கும் ஈஸ்வரியான பிராட்டி ஸ்வரூபம் அசித் கோடியிலேயோ-ஆத்ம கோடியிலேயோ -ஈஸ்வர கோடியிலேயோ என்று நிரூபித்தால்
அறிவு உண்டாகையாலே அசித் கோடியில் அன்று –
ஐஸ்வர் யத்தாலே ஆத்ம கோடியில் அன்று
நித்ய பாரதந்தர்யத்தாலே ஈஸ்வர கோடியில் அன்று
ஆனால் தத்வம் நாலாகிறதோ என்னில் -அதுக்கு பிராமண உத்பத்திகள் இல்லை
ஆனால் இவளுடைய ஸ்வரூபம் அறுதியிடும் படி என் என்னில் -நிரூபக விசேஷணம் -நிரூபித்த விசேஷணம் என்று இரண்டாய்
சேதனன் நிரூபித்த விசேஷமாய் இவள் நிரூபக விசேஷணமாய் இருக்கும்
ஆனால் அஸ்ய ஈஸா நா ஜகத் -என்றும் -ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் என்றும் ஸ்ருதிகளிலே ஈஸ்வரியாக ஓதி போ ருகையாலே
ஈஸ்வர கோடியிலேயாக குறை என் என்னில் -அப்போது நாட்டுக்கு இரண்டு ஈஸ்வரர் கூடாமையாலும்
பதில் விசுவாஸ்ய ஆதமேஸ்வரம் -ஷராத் மானவ் ஈசதே தேவ ஏக -என்று தொடங்கி உண்டான பிராமண பரம்பரைகளுக்கு
விரோதம் பிறக்கையாலும் யுக்தி இல்லாமையாலும் ஈஸ்வரத்வம் கூடாது
அங்கு ஓதிப் போ ருகிற ஈஸ்வரீத்வம் பத்நீத்வ நிபந்தமாகக் கடவது -ராஜ மஹிஷியை சோபசாரமாகச் சொல்லாத போது
அவனுடைய ரோஷத்துக்கு இலக்காம் இத்தனை இ றே
பும்பிரதாநேஸ் வரேஸ் வரீம் -என்று தொடங்கி இவளுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்கிற பிரதேசங்களில்
அவளுடைய போக்ய அதிசயத்தை சொல்லுகிறது அத்தனை –
ஆனால் இவள் சேதன சாமானியையோ என்னில் அப்படி அன்று -பத்தரைக் காட்டில் முக்தர் வியாவ்ருத்தர்-
முஃதரைக் காட்டில் நித்யர் வியாவ்ருத்தர்-நித்யரைக் காட்டில் அநந்த கருடாதிகள் வியாவ்ருத்தர்-அவர்களில் காட்டில் தேவீ ஜனங்கள் வியாவ்ருத்தர்
-தேவீ ஜனங்களில் காட்டில் பூ நீ ளை கள் வியாவ்ருத்தர்-பூ நீ ளை கள் காட்டில் இவள் வியாவ்ருத்தை
ஆகையால் உபய விபூதிக்கும் ஈஸ்வரியாய் போ ருகிறது
இவளுக்கு ஸ்வரூபத்தாலே சேதன சாம்யம் உண்டு -ஸ்வ பாவத்தால் ஈஸ்வர சாம்யம் உண்டு
இது நித்யருக்கும் முக்தருக்கும் உண்டோ என்னில் இவர்களுக்கும் இன்றியிலே தேவீ ஜனங்களுக்கும் இன்றியிலே ஈஸ்வரன் தனக்கும் இன்றியிலே
இருப்பன சில குண விசேஷங்கள் உண்டு
அவை என் என்னில் 1- நிரூபகத்வம் -2- ஆனு ரூப்யம் -3-அபிமதத்வம் -4-அசேஷ சேஷித்வ சம்பந்த த்வாரபாவம்
5- ஆஸ்ரயண சித்தி -6-ப்ராப்ய பூரகத்வம்
இவ்வர்த்தங்களை அபியுக்தரும் வெளியிட்டார்கள் -திருவினுக்கு அரசே -திருமாலே -என்று நிரூபகத்வத்தையும்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -என்று ஆனு ரூப்யத்தையும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் என்று போக்யத்தையும்
பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்று அபிமதத்வத்தையும்
திரு மா மகளால் அருள் மாரி -திருமாலால் அருளப் பட்ட சடகோபன் -என்று அசேஷ சேஷித்வ சம்பந்த த்வரபாவத்தையும்
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்று ஆஸ்ரயண சித்தியையும்
திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே -என்று ததீய பர்யந்தமாக ப்ராப்ய பூரகத்வத்தையும் வெளியிட்டார்கள் –
ஈஸ்வர விஷயத்தில் இவளுடைய பாரதந்தர்ய அநந்யார்ஹத்வங்களும் ஸ்வரூப பிரயுக்தமான மாத்ரம் அன்றிக்கே
ஹ்ரீஸ்ஸ தே லஷ்மீஸ்ஸ பத்நயவ்-என்றும் விஷ்ணு பத்னீ என்றும் சொல்லுகிற பத்நீத்வ ப்ரயுக்தமாயும்
அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய ஸ அஹம் அஸ்மி ஸ நாத நீ -என்றும்
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -என்றும் சொல்லுகிற ஸ்வரூப நிரூபகத்வாதி ஸித்தமான அநந்யத்வ ப்ரயுக்தமாயும் இருக்கும்
இப்படி இருக்கையாலே இ றே அல்லா தார்க்கு அடைய மிதுன சேஷத்வமும் இவள் ஒருத்திக்கு தத் ஏக சேஷத்வமும் யாய்த்து-
இவ் அவ்யவதாநேந உண்டான சம்பந்தத்தாலே இ றே இவளுக்கு ஈஸ்வரனை வசீகரிக்கும் அளவில் புருஷகாரம் வேண்டாது ஒழிகிறது
ஆக இந்த குணங்களால் இ றே இவள் சர்வாதிசய காரியாயும் இருக்கிறது
திரு மா மகள் கேள்வா தேவா என்றும் திரு மகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரானார் -என்றும்
எம்பெருமானுக்கு சேஷித்வ பூர்த்தி பிறப்பது இவளாலே
இவள் உடைய சத்தை எம்பெருமான் இட்ட வழக்காய் இருக்கும்
இவருடைய ஸ்வரூபமும் பூவும் மணமும் போலே இ றே
பூவை ஒழிய மணத்துக்கு நிலை இல்லை -மணத்தை ஒழிய பூவுக்கு ஏற்றம் இல்லை
இருவரையும் பிரித்து காண்பாரும் உண்டாகில் சூர்பணகையும் ராவணனும் பட்டது படுவார்கள்
ஆகை இ றே திருமாலும் நானு உனக்கு பழ வடியேன்-என்று சேஷத்வ பிரதிசம்பந்தி ஒரு மிதுனமாய்
நாளும் நம் திருவுடை அடிகள் நலம் கழல் வணங்கி -என்று ஆஸ்ரயண பிரதி சம்பந்தி ஒரு மிதுனமாய்
அடிமை செய்வார் திரு மாலுக்கே -என்று கைங்கர்ய பிரதிசம்பந்தி ஒரு மிதுனமேயாய் இருப்பது –
இத்தாலே இ றே ஸ்ரீ பாஷ்ய காரரும் ஒரு மிதுனம் ஒழிய வஸ்து இல்லை என்று அறுதி இட்டது
மத்ஸ்யத்தின் உடைய ஆகாரம் எல்லாம் ஜலமாய் இருக்குமோ பாதி ஸ்ரீ மானுடைய வடிவு எல்லாம் ஸ்ரீ மயமாய் இருக்கும் என்று
பெரிய முதலியாரும் நஞ்சீயரும் அருளிச் செய்து போரு வார்கள்
ஆக ஸ்ரீ மத் பதத்தாலே புருஷகாரமும்
புருஷகாரத்தின் உடைய ஈஸ்வர நித்ய யோகமும் சொல்லிற்று ஆயிற்று
ஆக இப்படி ஸ்ரீ மத் பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

—————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீவர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: