அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த -அருளிச் செயல் ரகஸ்யம்- த்வய பிரகரணம் -அவதாரிகை -ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ரகஸ்ய பூஷணம் –

அவதாரிகை
பிரியமும் பிரிய தரமுமான ஐஸ்வர்ய கைவல்யங்களில் காட்டில் பிரியதமமாக திரு மந்திரத்தில் அறுதியிட்டு கைங்கர்யம் ஆகிற உத்தம புருஷார்த்தத்திலும்
ஹிதமும் ஹித தரமுமான பக்தி பிரபத்திகளில் காட்டில் ஹித தமமாக சரம ஸ்லோகத்தில் அறுதியிட்டு சித்த ஸ்வரூபமான சரம உபாயத்திலும்
ஆசையும் துணிவும் பிறக்கையாலே ப்ரயோஜ நான்தர பரரிலும்-சாதா நான்தர நிஷ்டரிலும் வியாவ்ருத்தனான அதிகாரி
உபாயத்தைப் பற்றும் படியையும் கைங்கர்யத்தை இரக்கும் படியையும் அறிவிக்கிறது த்வயம் –

————————————————-

திருமந்திரம் ப்ராப்ய பரம் -சரம ஸ்லோகம் ப்ராபக பரம் -த்வயம் இரண்டின் உடைய வரண பிரார்த்தனா ரூப அனுஷ்டான பரம் –
இதில் பிரதிபதிதமான உபாய அனுஷ்டானமும் உபேய பிரார்த்தனையும் -சாதக வ்யாவ்ருத்தியையும் -ஸாத் யாந்தர நிஷ்ட வ்யாவ்ருத்தியையும்
பண்ணிக்க கொடுக்கும் என்று திரு உள்ளம் பற்றி த்வய வ்யாக்யான அவதாரிகை அருளிச் செய்கிறார் -பிரியமும் -என்று தொடங்கி –
புருஷார்த்தங்களில் வைத்துக் கொண்டு -ஐஸ்வர்யம் பிரியம் -கைவல்யம் பிரிய தரம் -பகவத் கைங்கர்யம் பிரிய தர்மம் –
உபாயங்களில் வைத்துக் கொண்டு ஹிதம் பக்தி -ஹித தரம் -பிரபத்தி -ஹித தமவானவன் சித்த உபாய பூதனான பகவான் என்றபடி
-இவனுக்கு உண்டான அதிகாரயந்தர வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் -பிரயோஜ நான்தர-என்று தொடங்கி –
உபாயத்தில் துணிவு -உபாய அத்யாவசியம் -சரம ஸ்லோகார்த்தம் –
உபேயத்தில் ஆசை -பிராப்ய த்வரை -திருமந்த்ரார்த்தம் -என்றபடி –
உபாய வாரணம் உபேய பிரார்த்தனை ஆகிற இவை இரண்டையும் பிரதி பாதிக்கிறது த்வயம் என்று அருளிச் செய்கிறார் -உபாயத்தைப் பற்றும் படி என்று தொடங்கி
ஞானத்துக்கு பலம் தத் அனுரூபமான அனுஷ்டானம் ஆகையால் –
ரகஸ்ய த்வயத்திலும் ப்ரதிபாதிதமான உபாய உபேய விஷய ஞானம் அனுஷ்டான சேஷமாய் இ றே இருப்பது
ஆகையால் உபாய விஷய ஞானத்தின் உடைய சாபல்ய ஹேது பூதமான உபாய அனுஷ்டானத்தை பிரதி பாதிக்கிறது பூர்வ வாக்யம்-
உபேய விஷய ஞான சாபல்ய ஹேதுவாய் இருக்கிற உபேய அனுஷ்டானத்துக்கு பூர்வ பாவியாய் இருக்கிற உபேய பிரார்த்தனத்தை ப்ரதிபாதிக்கிறது உத்தர வாக்யம்
இதில் பிரதிபாதிதமான உபாய அனுஷ்டானமும் உபேய பிரார்த்தனையும் இல்லாத போது இவ்வதிகாரிக்கு சாதக வ்யாவ்ருத்தியும்
சாத்யாந்தர நிஷ்டாதி வியாவ்ருத்தியும் இன்றிக்கே ஒழியக் கடவது
ஆகையால் ஸ்வரூப அனுரூபமான சாதன சாத்யங்கள் இரண்டையும் ப்ரதிபாதிக்கிற வாக்ய த்வயமும் அனுசந்தேயமாய் இருக்கும் என்றபடி –

————————————————————————————————————————–

த்வய நிர்த்தேச ஹேது
இரண்டு அர்த்தத்தையும் -இரண்டு இடத்திலே ஓதுகிற-இரண்டு வாக்கியத்தையும் சேர்த்து -அனுசந்தித்தவாறே த்வயம் ஆகிறது –

———————————————————

த்வய நிர்த்தேச ஹேதுவை அருளிச் செய்கிறார் -இரண்டு அர்த்தத்தையும் -என்று தொடங்கி
இது கடவல்லியில் பிரிய ஓதிச் சேர்த்து அனுசந்திக்க விதிக்கையாலும் –
வாக்ய த்வயம் ஆகையால் -ச பிராது சரணவ் காடம்-பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-என்கிற ஸ்லோக த்வயத்தில் விவசித்தமான
உபாய உபேய ரூபமான அர்த்த த்வயத்தை ப்ரதிபாதிக்கையாலும் த்வயம் என்று பேர் பெற்றது
-இப்படி இருக்கையால் உபாயாந்தரங்களிலும் உபேயாந்தரங்களிலும் துவக்கு அற்றவன் இம் மந்திரத்துக்கு பூர்ண அதிகாரி –
-பூர்வ வாக்ய அனுசந்தானம் இல்லாத போது பகவத் ஏக சாதனத்வ லாபம் இல்லை –
உத்தர வாக்ய அனுசந்தானம் இல்லாத போது பகவத் ஏக சாத்யத்வ லாபம் இல்லை –
உத்தர வாக்ய அனுசந்தானம் சாதகனுக்கு சாதாரணமாய் இருக்கும்
-பூர்வ வாக்ய அனுசந்தானம் ஐஸ்வர்ய கைவல்ய பர அதிகாரி த்வய சாதாரணமாய் இருக்கும்
–ஆகையால் உபய அனுசந்தானம் உண்டால் யாய்த்துஅதிகாரி த்ரய வியாவ்ருத்தியும் உண்டாவது –
வாக்ய த்வயத்திலும் ப்ரதிபாதிக்கப் படுகிற சாதன சாத்தியங்களை ஒழிந்த இதர சாதன சாத்யங்கள் இரண்டுக்கும்
ஸ்வரூப அனுரூபத்வம் அவிசிஷ்டமாய் இருக்கும் ஆகையால் அவை த்யாஜ்யங்களாக கடவன
-இவை இவனுக்கு ஸ்வரூபத்துக்கு அனுரூபங்களாய் இருக்கையாலே அத்யந்தம் உபாதேயமாகக் கடவது
-ஸ்வரூப அனுரூபமாய் இருக்கிற இந்த உபாய உபேயங்கள் இ றே வேத தாத்பர்ய விஷயம் -என்றபடி –

——————————————————————————————————————————————

ரகஸ்ய த்ரய சம்பிரதாய ப்வர்வா பர்ய நிரூபணம் –
மூன்று ரகஸ்யமும்-உபநிஷத்திலும்-கீதா உபநிஷத்திலும் -கட வல்லி யிலும் ஓதப்பட்டு
-மூன்று சிஷ்யர்களுக்கும் எம்பெருமான் தானே வெளியிட்டதாய் இருக்கும் –
ப்ராப்ய ப்ராபக ஞானம் அனுஷ்டான சேஷம் ஆகையால் -மந்த்ரமும் விதியுமான இரண்டு ரகஸ்யத்திலும் அனுஷ்டான ரூபமான த்வயம் பிற்பட்டது
-உபாய வரணம் ப்ராப்யத்துக்கு முற்பட வேண்டுகையாலே பிராப்பகத்தில் நோக்கான மத்யம ரகஸியத்தை வெளியாக்குகிற பூர்வ வாக்யம் முற்பட்டு
ப்ராப்யத்தில் நோக்கான பிரதம ரகஸ்யத்தின் உடைய விசத அனுசந்தானமான உத்தர வாக்யம் பிற்பட்டது –

—————————————————————————————

ரகஸ்ய த்ரய ஸம்ப்ரதாயத்தையும் -ரகஸ்ய த்ரய ப்வர்வாபர்ய க்ரமத்தையும் அருளிச் செய்கிறார் -மூன்று -என்று தொடங்கி –
த்வயம் முன்னாக சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது விவரண விவரணி பாவத்தைப் பற்றி என்றும் –
சரம ஸ்லோகம் முன்னாக த்வயத்தை சொல்லுகிறது விதி அனுஷ்டானங்களுக்கு உள்ள ப்வர்வா பர்யத்தைப் பற்ற என்றும் பூர்வமேவ யுக்தம் –
சிஷ்ய த்ரயத்துக்கும் ஸ்தான த்ரயத்திலே ரகஸ்ய த்ரயத்தை தனித் தனியே சர்வேஸ்வரன் உபதேசித்தானே யாயினும்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கச் செல்வன் இம் மூன்றையும் ஒரு சேர ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு உபதேசிக்க
-ஸ்ரீ விஷ்வக்ஸேன ஸ்ரீ பராங்குச நாத யாமுன ராமானுஜ ரூப சத் சம்பிரதாய முகேன இந்த பரம்பரை பிரவஹித்தது என்கை –
மந்த்ர சரம ஸ்லோகங்கள் ப்ராப்ய ப்ராபகமாய் இருக்க தத் அனந்தர ரகஸ்யமான த்வயம் ப்ராபக ப்ராப்ய பரமாக மாறாடக் காரணம்
என் என்ன அருளிச் செய்கிறார் –உபாய வரணம் -என்று தொடங்கி -வியூத்பத்தி வேளையிலே ப்ராப்யம் முற்பட்டு ப்ராபகம் பிற்பட்டு இருக்கும்
-அனுஷ்டான வேளையில் ப்ராபகம் முற்பட்டு ப்ராப்யம் பிற்பட்டு இருக்கும் -என்றபடி -ஆகையால் இறே நாச்சியாரும் திருப்பாவை முதல் பாட்டில்
வியுத்ப்பத்திக்கு அனுகுணமாக -பறை தருவான் -என்று ப்ராப்ய பிராப்பகங்களாக நிர்த்தேசித்து-முடிவில் அனுஷ்டான அனுகுணமாக
-கறவை -சிற்றம் -என்று ப்ராபக ப்ராப்யங்களாக நிர்தேசித்தது-அனுஷ்டான வேளையில் உபாய அத்யாவசாயத்தை -கறவை என்கிற முன் பாட்டிலும்
-உபேய பிரார்த்தனையை -சிற்றம் என்கிற பின் பாட்டிலும் அருளிச் செய்தாள் இறே ஆண்டாள் –

———————————————————————————————————————-

த்வய உபஷடம்பக பிராமண நிரூபணம்
மேம் பொருளிலே -திருமாலை -38–விசதம் ஆகிற இரண்டு அர்த்தத்தையும் -புலன் ஐந்து மேயும் -2-8-4–என்று உபதேசிக்கக் கேட்டவர்கள்
-அனுஷ்டான ரூபமான திருப்பாவையில் -தாயே தந்தையிலும் -பெரிய திருமொழி -1-9–ஸ்தோத்ர கத்யங்களிலும் -த்வ்யத்தில் அடைவு காணலாம் –

—————————————————————–

த்வயார்த்த ப்ரதிபாதக ப்ரமாணங்களைக் காட்டி அருளுகிறார் -மேம்பொருள் -என்று தொடங்கி –

——————————————————————————————————————–

த்வயத்தின் உடைய வைதிக பரிக்ரஹம்
திரு மந்த்ரத்தை சாஸ்திரங்கள் அங்கீ கரித்தது –
சரம ஸ்லோகத்தை சாஸ்த்ரங்களுக்கு உள்ளீடானவன் ஆதரித்தான் –
த்வயத்தை அவன் தனக்கும் உள்ளீடான ஞானிகள் பரிக்ரஹித்தார்கள் –
பிராமண ப்ரமேயங்களினுடைய அங்கீகாரங்கள் போல் அன்று இறே ப்ராமாணிகரான பிரமாதாக்கள் உடைய பரிக்ரஹம் –

———————————————————–

ரகஸ்ய த்ரயத்திலும் வைத்துக் கொண்டு -ரகஸ்ய த்வய அபேக்ஷயா த்வயத்துக்கு உண்டான வைலக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் -திரு மந்த்ரத்தை -என்று தொடங்கி –
இத்தால் ரகஸ்ய த்ரயத்துக்கு உண்டான வேத வேத்ய வைதிக பரிக்ரஹம் நிரூபிதம் ஆயிற்று –
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -என்கிற ஸ்ரீ கீதா வசனத்தை உட் கொண்டு அருளிச் செய்கிறார் -சாஸ்த்ரங்களுக்குள் உள்ளீடானவன் -என்று
ஞானீ த்வாதமைவ-அறிவார் உயிர் -6-9-8- என்றத்தை உட் கொண்டு அருளிச் செய்கிறார் -அவன் தனக்கும் -இத்யாதி
வைதிக பரிக்ரஹத்துக்கு உண்டான ஏற்றத்தை அருளிச் செய்கிறார் -பிராமண -இத்யாதி –
இவர் அங்கீ காரத்தாலே அதுக்கு உதகர்ஷம் -சூர்ணிகை 194-என்னா நின்றது இ றே –
புத்த முனியாயும் கபில முனியாயும் சொன்ன புத்த சாஸ்திரமும் சாங்க்ய சாஸ்திரமும் அவன் தான் அருளிச் செய்ததாய் இருக்க
வைதிக பரிக்ரஹம் இல்லாமை இ றே அப்ரமாணம் ஆயத்து-என்றபடி –

——————————————————————————————————

த்வயத்தின் பரம குஹ்யத்வம் –
பூர்வாச்சார்யர்கள் இரண்டு ரகஸ்யத்திலும் அர்த்தத்தை மறைத்து சப்தத்தை வெளியிடுவார்கள் –
இதில் அர்த்தத்தை போலவே சப்தத்தையும் மறைப்பார்கள் –
இப்படிச் செய்கைக்கு அடி இது அதிகருத்தாதிகாரமாகை இறே–

——————————————-

த்வயத்துக்கு உண்டான குஹ்யா நாம் குஹ்ய தர்மத்வத்தை உபபாதிக்கிறார் -பூர்வாச்சார்யா -என்று தொடங்கி
-அதிக்ருதாதிகாரம் என்றது பரம குஹ்யம் -என்றபடி –

——————————————————————————–

த்வய வைபவம்
வளம் கொள் மந்திரமும் பெரிய திருமொழி -5-8-9–மெய்ம்மைப் பெரு வார்த்தையும் -நாச் திரு -11-10- அருளிச் செய்த வாயாலே
-த்வய வக்தா -த்வயம் அர்த்த அனுசந்தானே -என்று இரண்டின் ஏற்றம் வெளியிடப் பட்டது இறே –
கற்றவர்கள் சொல்லக் கேட்டாலும் கற்பித்தவர்கள் கை கூப்பிக் காலிலே திரு நெடும் தாண்டகம் -14– வணங்கும்படி இறே இச் சொல்லில் ஏற்றம் –
செல்வ நாரணன் -1-10-8-என்ற சொல் வழிப் போக்கர் சொல்லிலும் அகலாதே-உள்ளே புகுறும்படி பண்ணுமதாய் –
எங்கும் திரு வருள் பெற்று -திருப்பாவை -30–என்னும்படி தோல் கன்றுக்கு இரங்கி சுரக்கும் ஸூரபியைப் போலே
நம்மைப் பாராதே முன்பு சொன்னவர்களை பார்த்து இரங்கும் படி அவன் தன்னையும் பண்ணுமது இறே
நம் முதலிகள் மூன்று ரகஸ்யத்தையும் தங்களுக்கு தஞ்சமாக நினைத்து இருக்கச் செய்தேயும் –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-5-7-10-என்று இருக்கிற தம்மோடு ஓக்க விமுகரையும் –
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ -4-1-1–என்னலாம் படி சர்வாதிகாரம் ஆகையால்
உம்மை யான் கற்ப்பியா வைத்த மாற்றம் -6-8-6–என்னும் படி ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையால்
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் -10-5-7—என்னும்படி புத்தி பூர்வகமான அபசாரத்துக்கும் பரிஹாரம் ஆகையால்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் என்னும் படி-9-10-5- சரீர அவசான காலத்திலே மோக்ஷம் ஆகையால்
த்வத்தையே தஞ்சமாக நினைப்பார்கள் –
சம்வாதங்களும் வியாக்யானங்களும் ஆச்சார்ய வசனங்களும் ருசி விசுவாசங்களுக்கு உறுப்பாக இவ்விடத்தில் அனுசந்திக்கப் படும்

—————————————————————-

திருவரங்கச் செல்வனார் விஷயகமான -துளங்கு நீள் முடி – செம்மையுடைய -என்கிற பாசுரங்களை திரு உள்ளத்தே கொண்டு
அருளிச் செய்கிறார் -வளம் கொள் -இத்யாதி –
சரணாகதி கத்ய ப்ரமேயமான ஸ்ரீ ரெங்க பதி-யதி பதி -சம்வாதத்திலே ஸ்ரீ ரெங்கபதி வாக்கியத்தை அருளிச் செய்கிறார் -த்வய வக்தா -என்று தொடங்கி –
வசநத்வயோ பாதா நாம் சப்தார்த்தயோ வைபவ பிரகாச நாய-என்று கண்டு கொள்வது –
முளைக் கதிரை -என்கிற பாட்டைத் திரு உள்ளத்தே கொண்டு அருளிச் செய்கிறார் -கற்றவர்கள் இத்யாதி –
கற்றவர் -கிளி -கற்பித்தவர் -பரகால நாயிகை-
செல்வ நாரணன் -இத்யாதி -இப்பாசுர வியாக்யானமான ஈட்டில் உள்ள வழிப் போக்கன் சரித்திரம் இங்கே அனுசந்தேயம் –
நல் கன்றுக்கு இரங்கும் தேனு தோல் கன்றுக்கும் இரங்குமா போலே -என்ற பட்டர் திரு வாக்கை அடி ஒற்றி -தோல் கன்று இத்யாதி –
வங்கக் கடல் பாட்டில் உள்ள மாதவன் -திருமால் -என்ற பதங்களில் நோக்கு என்றும் கண்டு கொள்வது –
மெய்க் கன்றுக்கு இரங்கிப் போசன வாசனையால் தோல் கன்றை மடுத்தாலும் ஸூ ரபியானது இரங்கிப் பால் சுரக்குமா போலே-
மெய்யானவர்களுக்கு இரங்கிப் போசன வாசனையால் பொய்யான நமக்கும் இரங்குவது-
இஸ் சப்த விஷயத்தை -ஸ்ரீ மத்-கேட்டால் யாய்த்து -ஆகையால் இதுவே அனுசந்தேயம் -என்று பிள்ளைக்கு ஜீயர் அருளிச் செய்த வார்த்தை –
ஆகையால் த்வயமே ஆதரணீயம் -என்றதாய்த்து
த்வயத்துக்கு உண்டான சர்வாதிகாரத்தவாதி வைபவங்களை அருளிச் செய்கிறார் -நம் முதலிகள் -என்று தொடங்கி –
புத்தி பூர்வகமான -இது -தீது -புத்தி பூர்வக பூர்வ பாவம் -என்றபடி -சம்வாதங்களும் -இத்யாதி –
ஆச்சார்யன் பிரமாதா வென்றும் -அர்ச்சாவதாரம் ப்ரமேயம் என்றும் -த்வயம் பிரமாணம் என்றும் -அருளிச் செய்வார் உய்யக் கொண்டார் –
சம்சார விஷ தஷ்டனுக்கு த்வயம் ரசாயன சேவையாய் இருக்கும் -என்று மணக்கால் நம்பி அருளிச் செய்வார்
அதனனுக்கு மஹா நிதி போலே -என்று பெரிய முதலியார் அருளிச் செய்வார்
ஷூ தார்த்தனுக்கு அம்ருத பானம் போலே -என்று அருளிச் செய்வார் திருமாலை ஆண்டான்
ஸ்தநன்ய பிரஜைக்கு ஸ்தந்யம் போலேயாய் இருக்கும் -என்று அருளிச் செய்வார் திருக் கோட்டியூர் நம்பி
ராஜ குமாரனுக்கு முடியும் மாலையும் போலே பிரபன்ன குலத்துக்கு த்வய உச்சாரணம் -என்று அருளிச் செய்வார் ஸ்ரீ பாஷ்ய காரர் –
சம்சாரத்தில் இரு விலங்கு இட்டவன் தலையிலே முடியை வைத்தால் போலே -என்று எம்பார் அருளிச் செய்வார் –
பெரு மிடியன் கையிலே சிந்தாமணி புகுந்தால் போலே என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் அருளிச் செய்வார்
எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெறுவாரைப் போலே -என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் –
பட்டர் ஜீயர் மடியிலே கண் வளர இரா முடியத் துடை மாறுதல் தூங்குதல் செய்யாதே ஸாவதாநராயிருக்க -ஜீயரைப் பார்த்து
இப்படி நீர் எனக்கு பரிவராய் இருக்கைக்கு அடி நான் சொன்ன த்வயத்தை விசுவசித்த கனம் இறே -என்று அருளிச் செய்தார்
வாஸ்யங்களில் எம்பெருமானுக்கு அவ்வருக்கு இல்லாதப்ப போலே வாசகங்களில் -பிரபத்தி த்வயத்தில் காட்டில் அவ்வருகு இல்லை-என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-
ராஜ குமாரனுக்கு கற்ப்பூர நிகரம் போலே இவனுக்கு விடில் நாக்கு வற்றும் -என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
பெற்றி ஸ்ரீ பாதத்தில் த்வயம் ஸ்ரவணம் பண்ணின கொற்றி யம்மைப் பிராட்டியாரும் திரு மந்த்ரம் அருளிச் செய்ய வேணும் என்ன அது
த்வயத்துக்கு உள்ளே உண்டு காணும் -அது கொண்டு கொள்ளும் காரியத்தையும் த்வயத்தைக் கொண்டு கொள்ளும் -என்று அருளிச் செய்தார் –
பெரிய கோயில் நாராயணன் மகன் ஏகாய நரோடு இருக்கக் கண்டு பாஷ்யகாரர் அவனை அழைத்து -பெருமாள் திரு முன்பு கொண்டு புக்கு
த்வயம் ஒழிய தஞ்சம் இல்லை -அத்தை விஸ்வஸித்து இரும் -என்று ஸ்ரீ சடகோபனை எடுத்து சூழ்த்துக் கொடுத்தார்
ஆழ்வான் திரு நாட்டுக்கு எழுந்து அருள புறவீடு விட்டு இருக்கிற தசையில் -ஆழ்வானுக்கு கர்ப்பூர நிகரத்தை வாயில் இட்டால் போலே
காணும் கோள் என்று அவருக்கு த்வயத்தை அருளிச் செய்தார் –
அனந்தாழ்வான் நஞ்சீயரைப் பார்த்து -திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வயைக நிஷ்ட ராவீர் -என்று வாழ்த்தினார் –
இங்கனே இவை முதலான வார்த்தைகள் இத்தினுடைய ருசி விசுவாசங்களுக்காக இவ்விடத்தில் அனுசந்தேயங்கள் என்றபடி –
ராகு -ராக்ஷஸ சம்வாதம் -நஹூஷ ப்ருஹஸ்பதி சம்வாதம் -வ்யாக்ர வானர சம்வாதம் -மறவன் குட்டியை விட்டுப் போந்தேன் என்ன அது கேட்டு பட்டர் அருளிச் செய்த வார்த்தையும்
பாஷ்யகாரர் சரம சமயத்தில் -த்வயத்தை எப்போதும் அனுசந்திக்கை எனக்கு பிரியம் -என்று அருளிச் செய்த வார்த்தையும்
அம்மங்கி அம்மாள் திரு நாராயண புரத்திலே காணச் செல்ல உடையவர் அருளிச் செய்த வார்த்தையும்
தொடக்கமான பூர்வாச்சார்ய வசனங்களும் இங்கே அனுசந்தேயங்கள் –
திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்த ஞானத்தாலும் துஸ் சாதனமான பலம்-இதில் சப்த உச்சாரணத்தாலே ஸூ லபமாம்
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொண்டேன் என்று என்னுள் புகுந்து தீ தவம் கெடுக்கும் அமுதம் -என்றும்
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே -என்றும் இறே ஆழ்வார் அருளிச் செய்தது

——————————————————————————–

ஸாஸ்த்ர ஸாஸ்த்ர சார தாத்பர்ய நிரூபணம்
சாஸ்திரங்களும் -சரம ஸ்லோகமும் -ஆத்ம ஈஸ்வரர் உடைய ஸ்வா தந்தர்யத்தைக் காட்டும் –
திரு மந்த்ரமும் த்வயமும் ஆத்ம பரமாத்மா பாரதந்தர்யத்தை வெளியிடும் –
சாஸ்த்ரங்களுக்கு ஆத்மாவினுடைய தேஹ பாரதந்தர்யங்களிலே நோக்கு
திரு மந்திரத்துக்கு ஆத்மாவினுடைய தேஹி பாரதந்தர்ய ததீய பாரதந்தர்யத்திலே உறைப்பு –
சரம ஸ்லோகத்துக்கு கர்மங்களினுடைய ஈஸ்வர பாரதந்தர்யத்திலே நினைவு த்வயத்துக்கு ஈஸ்வரனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்திலே கருத்து –

———————————————————————

ஸாஸ்த்ர ஸாஸ்த்ர சார தாத்பர்யங்களை அருளிச் செய்யும் முகத்தால் த்வய வைபவத்தை அருளிச் செய்கிறார் -சாஸ்த்ரங்களும் -என்று தொடங்கி –
திருமந்திரம் ஸாஸ்த்ர ருசி பரிக்ருஹீதம்-சரம ஸ்லோகம் சரண்யா ருசி பரிக்ருஹீதம் -த்வயம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் –
இம் மூன்றுக்கும் மூன்றும் உண்டாய் இருக்கச் செய்தேயும் இப்படிச் சொல்கிறது ஊற்றத்தைப் பற்ற –
த்வயம் கட வல்லியிலே அதீதம் ஆகையால் ஸாஸ்த்ர ருசி பரிக்ருஹீதம்
ப்ரஹ்மாதிகளைக் குறித்து சர்வேஸ்வரன் அருளிச் செய்தான் என்னும் இடம் பகவத் ஸாஸ்த்ர சித்தம் ஆகையால் சரண்யா ருசி பரிக்ருஹீதம்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் என்கைக்காக கீழே ஆச்சார்ய வசனங்களை சொன்னோம்
நிர் அர்த்தகமான சமுத்திர கோஷத்தைக் காட்டில் சார்த்தங்களான கட படாதி சப்தங்கள் ஸ்ரேஷ்டங்கள்
அவற்றில் காட்டில் தேவதாந்த்ர நாமங்கள் ஸ்ரேஷ்டங்கள்
அவற்றில் காட்டில் பகவன் நாமங்கள் ஸ்ரேஷ்டங்கள்
அவற்றில் வைத்துக் கொண்டு மூல மந்த்ரம் ஸ்ரேஷ்டங்கள்
மூல மந்த்ரம் சமுத்திர கோஷ ஸ்தா நீயமாம் படி த்வயம் ஸ்ரேஷ்டம்
அதுக்கு அடி மூல மந்திரத்தில் ஆர்த்தமான அர்த்தம் த்வயத்தில் வாஸ்யமாகை –
வாஸ்யங்களில் சர்வேஸ்வரனுக்கு அவ்வருகு இல்லாதாப் போலே வாசகங்களிலும் இதுக்கு இவ்வருகு இல்லை
இதுவே சித்தாந்தம் –
திருமந்திரம் ஆத்ம பாரதந்தர்ய பிரதானம் -சரம ஸ்லோகம் ப்ராபக பிரதானம் -த்வயம் உபய பிரதானம் –
திருமந்திரம் மந்த்ர ரூபம் -சரம ஸ்லோகம் விதி ரூபம் -த்வயம் அனுஷ்டான ரூபம் -என்றபடி –
ஆத்ம ஈஸ்வரர்களுடைய -இத்யாதி -சாஸ்த்ரங்களுக்கு ஆத்ம ஸ்வாதந்தர்யத்திலும் -திரு மந்திரத்துக்கு ஆத்ம பாரதந்தர்யத்திலேயும் நோக்காக அருளிச் செய்தது –
ஆத்மாவினுடைய ஞாத்ருத்வ சேஷத்வங்கள் ஸாஸ்த்ர ஸாஸ்த்ர சார விஷயங்கள் என்றதை பற்ற என்று கண்டு கொள்வது –
ஈஸ்வரனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யமாவது -மணம் நோக்கம் உண்டான் -அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -என்கிறபடியே
பெரிய பிராட்டியார்க்கு பரதந்த்ரனாய் நிற்கும் நிலை -இவ்வர்த்தம் -ராமஸ்து -என்கிற ஸ்ரீ இராமாயண ஸ்லோகத்தில் வியக்தம்
ஆகை இறே நாச்சியார் பார்ஸ்வத்திலே பவ்யனான அழகிய மணவாளனை பங்குனி உத்தர நன்னாளில் எம்பெருமானார் சரணம் பற்றிற்று
எல்லா பிரமாணங்களிலும் தேஹத்தாலே பேறு என்கிறது –
திருமந்த்ரத்திலே ஆத்மாவால் பேறு என்கிறது
சரம ஸ்லோகத்தில் ஈஸ்வரனாலே பேறு என்கிறது
த்வயத்திலே பெரிய பிராட்டியாராலே பேறு என்கிறது -என்றபடி-

—————————————————————————————————————————————

வாக்யார்த்த நிரூபணம்
இதில் முற்கூறு -மறுக்க ஒண்ணாத புருஷகாரத்தை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை உபாயமாக பற்றும் படியை அறிவிக்கிறது –
பிற்கூறு சேர்வாரோட்டை சேர்த்தியிலே அவனுக்கு செய்யும் அடிமையில் இரப்பை வெளியிடுகிறது –

————————————————————————–

த்வயத்தின் வாக்யார்த்தம் அருளிச் செய்கிறார் -இதில் முற்கூறு என்று தொடங்கி –
ஆக ப்ராப்ய ப்ராபக விசேஷங்களையும் சம்பூர்ணமாக பிரகாசிப்பிக்கிற இத் த்வயமே பிரபத்தி மந்த்ரங்கள் எல்லாவற்றிலும் பிரதானம் என்றது ஆயிற்று –

———————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீவர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: