அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த -அருளிச் செயல் ரகஸ்யம்-சரம ஸ்லோக பிரகரணம் -உத்தரார்த்தம் -ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ரகஸ்ய பூஷணம் –

உத்தரார்த்த நிரூபணம் –
இப்படி தன்னைப் பற்றினவனுக்கு உபாயமான தான் செய்யுமது சொல்லுகிறான் பிற்கூற்றால் –

———————————————-

உத்தரார்த்த ப்ரமேயத்தை சங்க்ரஹிக்கிறார் -இப்படி -என்று தொடங்கி -உத்தரார்த்தம் உபாயத்தினுடைய க்ருத்ய அம்சத்தைச் சொல்லி
அதிகாரியினுடைய க்ருத்ய அம்ச லேசத்தையும் சொல்லுகிறது -என்பர்

—————————————————————————————————

அஹம் பதார்த்தம்
அஹம் -நான் –தனக்கு ஏவிற்றுச் செய்கிறது -பெரியாழ்வார் -4-2-6-ஸ்வாதந்தர்யத்தின் மிகுதியால் –
எளிமையாக நினைத்து அஞ்சுகிறவன் தேறும் படி -அந்தமில் ஆதியம் பகவானான -1-3-5-தன் நிலையை -நான் -என்று வெளியிடுகிறான்-
மாம் என்றால் பற்றுகைக்கு உறுப்பான வாத்சல்யாதிகள் நாலும் தோன்றுமா போலே -அஹம் என்றால்
கார்யம் செய்கைக்கு உறுப்பான ஞானமும் சக்தியும் கிருபையும் பிராப்தியும் தோன்றும் இறே
நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -4-8-6–ஆற்றல் மிக்கான் 7-6-10–அருள் செய்த நெடியோன் -3-7-11–இரு நிலத்து அவித்த வெந்தாய்–3-2-3-என்று
தேர்த் தட்டின் நிலையிலே இந்த நாலு குணத்தையும் ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் –
இவை எல்லாவற்றிலும் இவ்விடத்தில் சக்தியிலே நோக்கு -எல்லா பொருளும் கருத்தில் உண்டாக்குவதிலும்
எப் பொருட்க்கும் எண் பாலும் சோராமல் நிற்பதிலும் –2-8-8-முழுவதும் அகப்படக் கரந்து–திருவாசிரியம் -7-ஓர் ஆலிலைச் சேர்வதிலும்
-மறுவின் மூர்த்தியோடு -4-10-10-ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கும் நிலையிலும் அரியது–தான் ஒட்டி -1-7-7-
-இவனுடைய நீங்கும் விரதத்தை குலைத்து-திருவிருத்தம் -95-மேவும் தன்மையும் மாயனாகி ஆயனாகி -2-7-4-திருத்திப் பணி கொள்ள வல்லனாகை இறே -3-5-11-
மாம் என்றால் கோல் கையில் கொண்டு பெரிய திரு -2-3-1-தேவாரம் கட்டி யவிழ்க்கிற அர்ஜுனன் கால் பொடி தன் முடியில் உதிர-
ரத்யங்களை விடுவித்துக் கொண்டு – சொலவுக்கு சேராதபடி நிற்கிற ஸுலப்யம் தோன்றும் –
அஹம் என்றால் -திருச் சக்கரம் ஏந்து கையனாய் பெரியாழ்வார் 4-1-7–தார் மன்னர் தங்கள் தலையிலும் -பெரிய திரு -11-5-8-
-சிவன் முடியிலும் -2-8-6–ஆன தன் காலில் உதறி- விழ பாபங்களை அறுக்கிறேன்-என்று கொண்டு -செயலுக்குச் சேரும்படியான பரத்வம் தோன்றும் –

——————————————————————————–

மேலே உத்தரரார்த்திலே -பிரதம பத அர்த்தம் -அருளிச் செய்கிறார் -அஹம் -என்று தொடங்கி –
இவ்விடத்தில் மோக்ஷயிஷ்யாமி -என்கிற உத்தமனாலே நான் -என்று தோற்றா நிற்க -மிகுதியான -அஹம் -என்னும் பதம்
-அர்த்த ஸ்வபாவத்தாலே சர்வ பாப விமோசனத்துக்கு உறுப்பான அகடிதகடநா சக்த்யாதிகளை விவஷித்து சப்ரயோஜனம் ஆகிறது
-அபராதம் பண்ணினவனை விலங்கு இட்டு வைத்த சமாதிக தரித்ரனான நான் அப்ரதிஷேத மாதரத்தையே கொண்டு
அபராதத்தை பொறுத்து விடும் போது விலக்க வல்லார் இல்லை -வேறு ஒருவனாலே இவனை முக்தனாக்கவும் ஒண்ணாது -என்று இங்கு தாத்பர்யம்
–இவ்வர்த்தம் -மோக்ஷ தோ பகவான் விஷ்ணு -என்றும் -பஸவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வ லீலையா
-தே நைவ மோச நீ யாஸ்தே நான்யைர் மோஸயிதும் ஷமா -இத்யாதிகளிலே பிரசித்தம் –
கீழில் பாரதந்தர்யம் இந்த ஸ்வாதந்தர்யத்தினுடைய எல்லை நிலம் -என்று அருளிச் செய்கிறார் -தனக்கு -என்று தொடங்கி –
இப்பதத்தில் மாம் என்கிற இடத்தில் சாரதியாய் நின்ற பாரதந்தர்யத்துக்கு எதிர்த்தட்டான தன் ஸ்வாதந்தர்யத்தை பிரகாசிப்பித்தமைக்கு
ஹேதுவை அருளிச் செய்கிறார் -எளிமையாக -இத்யாதி –
அதாவது மாம் -என்று சாரத்ய வேஷத்தோடே நிற்கிற தன்னைப் பற்றச் சொன்ன போது அர்ஜுனன் -தன்னுடைய ரக்ஷண அர்த்தமாக ஏறிட்டுக் கொண்ட
சாரத்ய வேஷத்தை -சர்வாதிகன் ஆனவன் இப்படித் தாழ நின்றது தன் குணத்தால் இ றே -என்று அவனை இட்டுப் பாராதே
நமக்கு இழி தொழில் செய்து சாரதியாய் நிற்கிறவன் அன்றோ -என்று தன்னை இட்டுப் பாராதே -சர்வ தர்மங்களையும் விட்டு என்னை பற்று
என்னா நின்றான் இது என்னாக கடவது -என்று அஞ்சின அச்சம் தீர -ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகனாய்க் கொண்டு
நிராங்குச ஸ் வ தந்திரனாய் இருக்கிற தன்னுடைய யதாவஸ்தித வேஷத்தை அஹம் என்று -தர்சிப்பிக்கிறான் -என்கை
இப்பதத்தில் பிரகாசிக்கும் குணங்களை சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் -மாம் என்றால் என்று தொடங்கி –
இதில் அஹம் சப்தம் வ்ரஜ வில் ஆர்த்தமாகப் புகுந்த அதிகாரியினுடைய மஹா விசுவாசத்துக்கு ஊற்றாய்-மேல் சொல்லப் புகுகிற
பாப விமோசனத்துக்கு பரிகரமான ஞான சக்த்யாதி குண விசேஷங்களை -கீழ் மாம் -என்று ஆஸ்ரய ணீயமாக யுக்தமான வஸ்துவுக்கு பிரகாசிப்பிக்கிறது –
ஆஸ்ரயிக்கைக்கு வாத்ஸல்யாதிகள் வேணும் -கார்யம் செய்கைக்கு ஞான சக்த்யாதிகள் வேணும் -நிவர்த்ய அம்சம் இன்னது -நிவர்த்தன பிரகாரம் யின்னது
– நிவர்த்தன அதிகாரி இன்னான் -என்று அறிகைக்கு சர்வஞ்ஞனாக வேணும் – ஞானம் பிறந்தால் மாத்திரம் பிரயோஜனம் இல்லை –
பங்கு கல்பனாய் அசக்தனாய் இருக்குமாகில் –ஆகையால் ஞான அனுகுணமாக கார்யம் செய்கைக்கு சர்வ சக்தியாக வேணும்
-சர்வ சக்தியானாலும் இவன் இடும் பச்சை கொண்டு குறை தீர வேண்டும்படி அபூரணனாய் இருக்குமாகில் -அவனுக்கு ஈடாக இவனால்
இடலாவது ஓன்று இல்லாமையால் -அவை இரண்டும் அகிஞ்சித்க்கரம் இ றே -அங்கண் அன்றியிலே ஒழியும் போது அவாப்த ஸமஸ்த காமன் ஆக வேணும்
-சர்வஞ்ஞன் ஆனாலும் சர்வ சக்தன் ஆனாலும் அவாப்த ஸமஸ்த காமன் ஆனாலும் இச் செத்தான் உடன் சம்பந்தம் இல்லாத அன்று
அவை மூன்றும் கார்யகரம் ஆகாதே -அதுக்கு சர்வ ஸ்வாமி யாக வேணும் -இவை நாலும் விபரீத பலம் ஆகாதே இவனுடைய ரக்ஷணத்துக்கு
உறுப்பாம் போதைக்கு பர துக்க அஸஹத்வ லக்ஷணமான பரமத்தையை உடையனாகை வேணும்-இல்லாத வன்று சர்வஞ்ஞத்வம்
இச் சேதனன் பண்ணின குற்றங்களை தப்பாமல் கணக்கு இடுகைக்கு உறுப்பாய் அறும்-சர்வ சக்தித்வம் அக் குற்றங்களுக்கு ஈடாக
நரகாதிகளில் தள்ளி அறுத்து அறுத்து தீற்றுகைக்கு உறுப்பாய் அறும் -நீற்றா நின்றால் கண் பார்த்து நெகிழமைக்கு உறுப்பாய் அறும் –
அவாப்த ஸமஸ்த காமத்வ நிபந்தமான நைரபேஷ்யம்-இங்கண் செய்யா நின்றால் கடவதல்ல என்று நியமிப்பார் இல்லாமைக்கு ஹேதுவாம் இத்தனை
-சர்வ ஸ்வாமித்வ ப்ரயுக்தமான நிரங்குச ஸ்வாதந்தர்யம் -ஆகையால் சர்வஞ்ஞத்வத்தை ரக்ஷண விதயா விஷயம் ஆக்குகைக்கும்
-சர்வ சக்தித்வத்தை ரக்ஷண வியாபாரத்தில் ஆக்குகைக்கும் -அவாப்த ஸமஸ்த காமதையை பிரயோஜன நிரபேஷமாக ரஷிக்கைக்கு உறுப்பு ஆக்குகைக்கும்
-சர்வ ஸ்வாமித்வத்தை தன் பேறாக கார்யம் செய்கைக்கு உறுப்பு ஆக்குகைக்கும் தயை வேணும்
தோஷா பவே யுரேதே நாம தயே த்வயா விநா பூதா -இ றே -ஆகையால் இக்காரியம் செய்கைக்கு உறுப்பான இந்த ஐந்து குணங்களும் –
அஹம் -சப்தத்தில் அனுசந்தேயம் –
ஆக சர்வஞ்ஞனுமாய் -சர்வ சக்தியுமாய்-அவாப்த ஸமஸ்த காமனுமாய் -சர்வ ஸ்வாமியுமாய் -பரம தயாவானுமான -நான் என்றதாயிற்று –

சரம ஸ்லோகத்தில் -மாம் -அஹம் -என்கிற -பதங்களால் சொல்லப் படுகிறது உபய வித குணம் இறே -அதாவது
உச்சார யித்திருத்வோ பலஷித தர்மா வச்சின்ன வாசியான -அஸ்மத் -பதம் -வ்ரஜ -மோக்ஷயிஷ்யாமி -என்கிற வ்ரஜ நமோஷண ரூப க்ரிய
அந்வய யோக்ய தாவச் சேதகங்களான வாத்சல்யாதிகளையும் ஞானாதிகளையும் சொல்லும் என்றபடி -இந்த அஹம் பதத்துக்கு எக்குணத்திலே
நோக்கு என்பதனை அருளிச் செய்கிறார் -இவை -என்று -தொடங்கி –இப்பதத்துக்கு சக்தியிலே நோக்கு என்றது இங்கு சக்தி விசேஷத்திலே நோக்கு என்றபடி
-சக்த்யந்தரங்களை கழித்து சக்தி விசேஷத்தை சப்தார்த்தமாக அறுதி இடுகிறார் எல்லா பொருளும் என்று தொடங்கி –
அவற்றுக்கு தன் நினைவே அமையும் -இங்கு எதிர்தலையை இசைவிக்க வேணும் –
ஆகையால் அவற்றைக் காட்டிலும் இதுக்கு ஆதிக்யம் உண்டு என்றபடி -இந்த ஞானாதி குணங்கள் சேதனனுடைய அநந்ய சாதனத்வ
விவசாயத்துக்கு அடியாகவும் -ஈஸ்வரனுடைய விரோதி நிரசனத்துக்கு பரிகரமாகவும் இருக்கும் –
மாம் என்று தன் ஸுலபயத்தைக் காட்டினான் -அஹம் என்று பரத்வத்தைக் காட்டுகிறான் -மாம் என்கிற நிலையில் –
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் -என்னும் ஸுலப்யம் தோற்றும் –அஹம் என்கிற நிலையில் தார் மன்னர் தங்கள் தலை மேலான் -என்னும் பரத்வம் தோற்றும் –
மாம் என்று -பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றான் -என்று கொல்லா மாக் கோலான
உழவு கோலும் கையுமாக நிலையைக் காட்டினான் -அஹம் என்று வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்து கையன் -என்று
கையும் திரு வாழியுமான வடிவைக் காட்டுகிறான் -என்னும் இவ்வர்த்தத்தை அருளிச் செய்கிறார் -மாம் என்றால் என்று தொடங்கி –
தேவாரம் கட்டி அவிழ்க்கிற -சிவ பூஜை செய்கிற –
இத்தால் பூர்வ உத்தர அர்த்தங்களில் பகவத் வாசகங்களான -மாம் -அஹம் சப்தங்களுக்கு அர்த்த பேதம் அருளிச் செய்து அருளினார் ஆயிற்று –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் என்கையாலே -தர்ம நிவர்த்தகமான வேஷத்தைக் காட்டினான் –
அஹம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கையாலே அதர்ம நிவர்த்தகமான வேஷத்தைக் காட்டுகிறான் –
மாம் என்று சரணம் என்கிற யுக்தி மாத்ரத்தையும் சஹியாத நிரபேஷமான நிலையாகையாலே உக்திக்கு விபரீதமான நிலையைக் காட்டினான் –
அஹம் என்று பாப விமோசகத்துவத்தாலே அனுஷ்டானத்துக்கு விபரீதமான நிலையைக் காட்டுகிறான் -என்றபடி –
அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்கையாலே பந்தகனான நானே விமோசகன் ஆனால் வேறு நிவாரகனும் உண்டோ என்று தன்னுடைய
சாமாப்யதிக ராஹித்யத்தை சொல்லுகிறான் -அம்ருதத்வாய ச ஏவ ஜிஜ் ஞாஸ்ய -இ றே
ஆக இவ்வளவால் உத்தரராத்த பிரதம பதார்த்தம் அருளிச் செய்தார் யாயிற்று –

——————————————————————————————————————————

த்வா -பதார்த்தம்
த்வா என்று உபாயத்தை பற்றினவனுடைய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது -த்வா -உன்னை
-அறிவிலேனுக்கு அருளாய் -6-9-8-அறியோமை என் செய்வான் எண்ணினாய் -பெரிய திருவந்தாதி -6–என் நான் செய்கேன் -5-8-3-என்று
அஞ்ஞாநத்தையும் அசக்தியையும் அப்ராப்தியையும் அபூர்த்தியையும் முன்னிட்டுக் கொண்டு என்னையே உபாயமாகப் பற்றின
உன் பற்றை உபாயம் என்று இராதே -என்னுடைய ஞான சக்திகளில் அதிசங்கை அற்று இருக்கிற உன்னை –

—————————————————————————

அநந்தரம் த்வதீய பதார்த்தம் அருளிச் செய்கிறார் -த்வா -என்று தொடங்கி –
அஹம் சப்தத்தாலே பாப சத்ருவையும் -த்வா -என்கையாலே பாப ஆஸ்ரயத்தையும் சொல்லிற்று ஆயத்து –

————————————————————————————————————————–

சர்வ பாபேப்யோ -சப்தார்த்தம் –
இவனுக்குத் தான் கழிக்கும் விரோதிகளை -சர்வ பாபேப்யோ -என்கிறான்
-எல்லா பாபங்களிலும் நின்றும் -பாபமாவது-இஷ்டத்தைக் குலைத்து -அநிஷ்டத்தை தருமது-
இவ்விடத்தில் ஞானத்துக்கும் ருசிக்கும் உபாயத்துக்கும் விலக்கு கழிந்த பின்பு -ப்ராப்திக்கு இடைச் சுவராய் கிடக்குமவற்றை பாபம் என்கிறது
-முமுஷுவுக்கு பாவம் போலே புண்ணியமும் -6-3-4-துயரமே தருகையாலே -3-6-8–இரு வல் வினைகள் 1-5-10–என்று
புண்ணியத்தையும் பாபத்தையும் சேரச் சொல்லுகையாலே இவை இரண்டையும் பாபம் என்கிறது –
பாபங்கள் என்கிற பன்மை -பொய் நின்ற ஞானம் -திருவிருத்தம் -1-என்கிற அவித்யை முதலாக பிரகிருதி சம்பந்தம் முடிவாக
நடுவு பட்டவை எல்லா வற்றையும் காட்டுகிறது
-சர்வ சப்தம் -உபாயத்தை பற்றியும் உடம்போடு இருக்கைக்கு அடியான வற்றையும்
-இருக்கும் நாள் நினைவறப் புகுருமவற்றையும் -கருத்து அறியாதே உத்தேச்ய விஷயங்களில் உபசாரம் என்று பண்ணும்
அவற்றையும் உகப்பாகச் செய்யுமவற்றில் உபாய புத்தியையும் -நாட்டுக்குச் செய்யுமவற்றை தனக்கு என்று இருக்கையும்
-வாசனையால் விட்டவற்றில் மூளுகையும் -அவற்றை உபாயம் என்று அஞ்சாது இருக்கையும்
-துணிவு குலைந்து மீளவும் உபாய வரணம் பண்ணுகையையும் சொல்லுகிறது –
இப்படி உபாயத்திலும் அதிகாரத்திலும் குறைவு அற்ற பின்பு விரோதிகளில் கிடப்பது ஓன்று இல்லை இறே

——————————————————————

மேலே த்ருதீய -பதார்த்தம் அருளிச் செய்கிறார் -இவனுக்குத் தான் -என்று தொடங்கி -இப்படி பந்த மோக்ஷ சக்தனான
மோக்ஷ ப்ரதனையும்-அசக்தனாய் -அவன் பக்கலிலே ந்யஸ்த பரனான-முமுஷுவையும் சொல்லி
மேல் சர்வ பாபேப்யோ -என்று பந்தகங்களை சொல்லுகிறது என்றபடி –
இதுவும் பாப பதமும் -பஹு வசனமும் -சர்வ சப்தமுமாய் -த்ரிபிரகாரமுமாய் இருக்கையாலே இம் மூன்றையும் உட் கொண்டு
இப்பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -பாபமாவது -என்று தொடங்கி
-பூர்வார்த்தத்தில் தர்ம சாமான்ய வாசகமான தர்ம சப்தத்துக்கு பர தர்ம ரூப விசேஷத்தில் சங்கோசம் சொன்னால் போலே
உத்தரார்த்தில் பாப சாமான்ய வாசியான பாப சப்தத்துக்கு பாப விசேஷத்தில் சங்கோசத்தை அருளிச் செய்கிறார் –இவ்விடத்தில் என்று -தொடங்கி –
இங்கு பாப சப்தம் புண்ணியத்தையும் சொல்லுகிறது என்கிறார் -முமுஷுவுக்கு -என்று தொடங்கி –
அதாவது -இங்கு பாப சப்தம் -முமுஷுவைப் பற்ற அநிஷ்ட பலங்களான சாம்சாரிக புண்யங்களையும் சொல்லுகிறது
-ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தாநஸ்ய பரமாத்மன -என்கையாலே ஸ்வர்க்காதிகளும் முமுஷுவுக்கு நரகம் ஆகையால் இவனுக்கு
ஸ்வர்க்க ஹேதுவோடு நரக ஹேதுவோடு வாசி இல்லை -ஆகையால் இ றே முமுஷுவுக்கு பாபங்களை விடச் சொல்லுகிறாய் போலே –
த்ரை வர்க்கி கான் த்யஜேத் தர்மான் -என்று விதிக்கிறது -இரு வல் வினைகளும் சரித்து -1-5-10-என்கிறபடியே
ஸூ க்ருத துஷ் க்ருதங்கள் இரண்டும் முமுஷுவுக்கு நிராகரநீயங்களாக இ றே ஸ்ருதி ஸ்ம்ருதிகள் சொல்லுகின்றன என்றபடி –
பஹு வசன அர்த்தம் அருளிச் செய்கிறார் -பாபங்கள் -என்ற பன்மை -என்று -சர்வ சப் தார்த்தம் அருளிச் செய்கிறார்
-சர்வ -என்று தொடங்கி -அதாவது சர்வ சப்தத்தாலே இந்த அதிகாரிக்கு ஈஸ்வரன் விசேஷித்து கழிக்கும் பாபத்தைச் சொல்லுகிறது -என்றபடி –

——————————————————————————————————–

மோக்ஷயிஷ்யாமி -சப்தார்த்தம் –
மோக்ஷயிஷ்யாமி என்று பாபங்களை விடுவிக்கும் படி யைச் சொல்லுகிறது -மோக்ஷயிஷ்யாமி -முக்தன் ஆக்குகிறேன் –
பண்டை வினையாயின 9-4-9–சும்மெனாதே கைவிட்டு -பெரியாழ்வார் -5-4-3–விண்டே ஒழிந்த 10-4-9-
-கண்டிலமால் -பெரிய திருவந்தாதி –என்னும்படி பாபங்கள் உன்னைக் கண்டு
அஞ்சிப் போனவிடம் தெரியாதே போம்படி பண்ணுகிறேன் -ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-திருப்பாவை -5- பாபங்களை போக்கும் போது
-தீயினில் தூசாகும் -திருப்பாவை -5-என்கிறபடி பிண முகம் காண ஒண்ணாது இறே
வல்வினை மாள்வித்து 1-6-8–தன் தாளின் கீழ் சேர்த்து –7-5-10-என்று விரோதி கழிகையும் தன்னைக் கிட்டுகையும் பேறாய் இருக்க ஒன்றைச் சொல்லிற்று –
மற்றையது தன்னடையே வாராதோ வென்று –
மாணிக்கத்தை மாசு அறுத்தால் ஓளி வரச் சொல்ல வேணுமோ -சம்பந்தம் தேடுகிறோம் அன்றே
-தடை விடுகை அன்றோ தேட்டம் -வானே தருவான் அன்றோ -தடுமாற்ற வினைகள் தவிர்க்கிறது -இறந்தால் தங்குமோர் அண்டம் அன்றோ
-முன்பில் உபாயத்துக்குச் சொன்ன பலமே இதற்கும் பேறான பின்பு இதற்குத் தன்னேற்றம் விரோதி கழிகை அன்றோ என்று அவ்வளவைச் சொல்லுகிறான் –

————————————————————————–

இந்த சதுர்த்த பதார்த்தம் அருளிச் செய்கிறார் -மோக்ஷயிஷ்யாமி -என்று தொடங்கி –
இந்த ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி ரூப பலத்தைச் சொல்லாமையாலே வரும் குறையைப் பரிஹரிக்கிறார் -வல்வினை -என்று தொடங்கி
-அதாவது விரோதி நிவ்ருத்தியும் -அபிமத பிராப்தியும் -இரண்டும் பலமாய் இருக்க ஒன்றைச் சொல்லுவான் என் என்னில்
-ஓன்றைச் சொன்னால் மற்றையது தன்னடையே வருகையால் சொல்லிற்று இல்லை -இங்கே சேது பங்க ஸ்ரோத ப்ரவ்ருத்தி நியாயம் அனுசந்தேயம் –
மாமேவைஷ்யஸி-என்று கீழில் உபாயத்துக்குச் சொன்ன பலம் ஒழிய இவ்வுபாயத்துக்கு வேறு பலம் இல்லாமையால் சொல்லிற்று இல்லை என்னவுமாம் -என்றபடி

ஆனால் விரோதி நிவ்ருத்தி தன்னை சொல்லுவான் என் என்ன அருளிச் செய்கிறார் -முன்பில் என்று தொடங்கி -அது அதிகம் ஆகையால் சொல்லிற்று என்றபடி
-ஆகை இறே -ஆ விஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய-என்று அஷ்ட ஸ்லோகியில் பட்டர் அருளிச் செய்தது –
இத்தால் சாதா நான்தர நிஷ்டனுக்கு -போகேனே து இதரே ஷபயித்வா அத சம்பத்யதே-என்று பூர்வ உத்தர ராகங்களை ஒழிந்த
ப்ராரப்தமான புண்ய பாபங்கள் இரண்டையும் போகத்தாலே கழித்து அநந்தரம் ப்ராப்தியைப் பெறும் என்கையாலே
-பிராரப்த கர்ம அனுபவ அபேக்ஷை உண்டு -அது பிரபன்னனுக்கு இல்லையாய் இருக்கும் என்று கொண்டு அவனுடைய நிஸ் சேஷ
பிரதிபந்தக நிவ்ருத்தியினாலே பலத்தினுடைய அவ்விளம்பம் ஸூ சிப்பிக்கப் பட்டதாயிற்று -ஆனால் எல்லா பாபமும் ஸக்ருத் பிரபதன அனந்த்ரத்திலே
பகவானால் நிஸ் சேஷமாக போக்கப் படும் ஆகையால் -அந்த பிரபத்ய அனுஷ்டான க்ஷணத்துக்கு அனந்தரத்திலே பல பிராப்தி விளம்பியாமல்
சித்திக்கையால் வர்த்தமான சரீர ஸ்திதி அனுவர்த்திக்கிற படி எங்கனே -அதுவும் பிராப்தி பிரதிபந்தகம் ஆகையால் சோகத்துக்கு நிமித்தம் அன்றோ
-ஆகையால் அது போகாத போது மா ஸூ ச என்கிற வசனம் சங்கதம் ஆகாதீ என்னில் -அப்படிச் சொல்லப் போகாது –
இவ்விடத்தில் உபாய வைக்கலயத்தாலே விளம்பிக்கிறது என்று கொள்ள ஒண்ணாது -நிரபாயமான உபாயமானது சர்வ சக்தி உக்தம் ஆகையால்
-இனி உபாய சுவீகாரம் பண்ணின அதிகாரியினுடைய அபி சந்தி பேதத்தாலே விளம்பமும் அவிளம்பமும் சம்பன்னம் ஆகிறது –
அதாவது -யாவன் ஒருவனுக்கு வர்த்தமான தேஹ சம்பந்தம் தானே நெருப்பில் இருந்தால் போலே அத்யந்தம் அஸஹ்யமாய் இருக்கும் —
அவனுக்கு தத் தேஹ சம்பந்தமும் சோக நிமித்தம் ஆகையால் அப்போதே நிவர்த்திக்கப் படும் -யாவன் ஒருவனுக்கு அந்த தேஹ சம்பந்தம் துக்கம் அன்றியே
தேகாந்தர சம்பந்தம் அநிஷ்டமாம் -அவனுக்கு தேகாந்தர சம்பந்தமே சோக நிமித்தமாய்க் கொண்டு நிவர்த்யம் ஆகையால் வர்த்தமான
சரீரம் அனுவர்த்திக்கிறது என்று விசேஷம் -ஆகையால் அதிகாரி வைக்கலயத்தாலே விளம்பம் உண்டாயிற்று -உபாய வைக்கலயத்தால் அன்று
-என்னும் இடம் சம்பிரதிபன்னம்-ஆர்த்தா நாம் ஆ ஸூ பலதா சக்ருதேவ க்ருதா ஹ்ய சவ்-திருப்தா நாமபி ஐந்தூ நாம் தேகாந்தர நிவாரிநீ-என்னக் கடவது இறே
-பரமார்த்தரான ஆழ்வாருடைய சரீர ஸ்திதிக்கு ஹேது கேவல பகவத் இச்சை இ றே -திருப்த விஷயத்திலும் பகவத் இச்சை பிராரப்த கர்மம் அடியாக உண்டாகையாலே
அத்தை வ்யாவர்த்திக்கிறது கேவல சப்தத்தாலே -ஆக பிராப்தி விரோதி சகல பாபங்கள் தானே உன்னை விட்டுப் போம்படி பண்ணுகிறேன் என்றதாயிற்று –
மோக்ஷயிஷ்யாமி -என்கிற நிச்சாலே-நெடுநாள் உன்னைப் பற்றி -விடாதே கிடக்கிற பாபங்கள் தானே நமக்கு ஆஸ்ரயம் இல்லை என்று விட்டு போம்படி பண்ணுகிறேன்
-நெடுநாள் பாப தர்சனத்தாலே உனக்குப் பிறந்த பயம் உன்னைக் கண்டு அதுக்குப் பிறக்கும்படி பண்ணைக் கடவேன்-என்னும் இடம் தோற்றுகிறது
-நரகத்தை நகு நெஞ்சே -என்றார் இ றே -ஆனீன்ற கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்த ஆழ்வார் -மோக்ஷயிஷ்யாமி என்கிற
உத்தமனில் அபிபிரேதமான -ஓர் அர்த்த விசேஷம் உண்டு -அதாவது இனி உன் கையிலும் உன்னைக் காட்டித் தாரேன் –
என் உடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -என்கை -என் உடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -என்றது
யத்ன பலித்வங்கள் இரண்டும் தன்னது என்று தோற்றுகைக்காக-அகமேனியில் அழுக்கு அறுக்கை அபிமானி க்ருத்யம் இறே –
ஆகையால் உன்னுடைய விரோதியில் கிடப்பது ஓன்று இல்லை என்றபடி

————————————————————————————————————–

மாஸூச -சப் தார்த்தம் –
சோகியாமைக்கு வேண்டுவது எல்லாம் சொல்லி -மாஸூச -என்று நீ சோகியாதே கொள்-என்கிறான்
-இவன் சொன்ன உபாயங்கள் நமக்குச் சேராது -ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த உபாயம் கண்டிலோம் –
விரோதி கனத்து இருந்தது என்று இறே சோகித்தாய்-சேராத உபாயங்களை விடச் சொன்னோம் –நம்மை உபாயமாக நினை என்றோம் –
நாம் விரோதிகளில் நின்றும் விடுக்கிறோம் என்றோம் -இனி சோகிக்கிறது என் –
செயல் தீரச் சிந்தித்து வாழ்கிற-நான்முகன் -88- உனக்கு செய்ய வேண்டுவது இல்லை –ஜன்ம சன்மாந்தரம் காத்துக் கொண்டு போய்-3-7-7-
விசும்பு ஏற வைக்கை -பெரிய திரு மொழி -2-1-4-நம் பணியாய் இருந்தது –
நல்வினையும் தீவினையும் -நான்முகன் -57-வினை பற்று அறுக்கும் விதி-பெரிய திரு மொழி -11-4-9- நாம் இட்ட வழக்காய் இருந்தது –
உன்னைப் பார்த்தோ நம்மைப் பார்த்தோ விரோதிகளை பார்த்தோ நீ எதுக்கு சோகிக்கிறாய்-

——————————————————

அநந்தரம் சரம பதமான பஞ்சம பதத்தின் அர்த்தம் அருளிச் செய்கிறார் -சோகியாமைக்கு -என்று தொடங்கி
-த்வா -என்று நிர்தேசித்த அதிகாரியினுடைய க்ருத்யம்ச லேசத்தை சொல்லுகிறது – மாஸூச -என்ற பதம் -என்றபடி
-சோக நிவ்ருத்தி ஹேதுக்களை அருளிச் செய்கிறார் -இவன் என்று தொடங்கி -நிரபாய உபாய பூதனான நான் உன்னுடைய விரோதி நிவ்ருத்தி பூர்வகமான
அபிமத சித்தியை சாதித்துத் தரக் கடவனாக ஏறிட்டுக் கொண்ட பின்பு ஸாபாயமான சாதநாந்தரங்களினுடைய துஷ்கரத்வாதிகளை அனுசந்தித்து
சோகிக்கக் கடவை அல்லை -அந்த சாதன விஷயங்களை ஒழிய நிரபாய உபாயம் இல்லாத வன்று அன்றோ உனக்கு சோகிக்க வேண்டுவது –
அவற்றை விட்டு என்னை ஆஸ்ரயிக்கையாலும் நீ சோகிக்க வேண்டா -ஆஸ்ரய நீயானான நான் வத்சலன் ஆகையால் உன்னுடைய தோஷம் கண்டு சோகிக்க வேண்டா
-ஸூ லபன் ஆகையால் துர்லபம் என்று சோகிக்க வேண்டா -ஸூ சீலன் ஆகையால் உன்னுடைய சிறுமை கண்டு சோகிக்க வேண்டா –
சர்வ ஸ்வாமி ஆகையால் அப்ராப்தன் என்று சோகிக்க வேண்டா -அவாப்த ஸமஸ்த காமன் ஆகையால் உன்னுடைய அபூர்த்தி கண்டு சோகிக்க வேண்டா
-சர்வ சக்தி யாகையாலே உன்னுடைய சக்தி கண்டு சோகிக்க வேண்டா -நிருபாதிக பந்து வாகையாலும் -பரம தயாவான் ஆகையால்
கார்யம் செய்யுமோ செய்யானோ என்று சோகிக்க வேண்டா -சர்வ பாப விமோசகன் ஆகையாலும் சோகிக்க வேண்டா
-உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா -என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா -விரோதியைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா
-நீ என் பக்கல் சர்வ பரந்யாசம் பண்ணுகையாலே உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா -நான் சர்வஞ்ஞத்வாதி குண விசிஷ்டன் ஆகையால்
என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
விரோதி யாகிறது என்னுடைய நிக்ரஹ ரூபம் ஆகையால் பொறுத்தோம் என்னத்த தீரும் -ஆகையால் விரோதியைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –

——————————————————————————————————————

பிரபத்த்யதிகாரி
மற்ற உபாயங்களைக் கேட்டால் சோகிக்குமவன்-ஞானவானுமாய் -தன்னையும் அறிந்து -இவ்வுபாயத்தின் நன்மையையும் அறிந்து
-அவற்றின் குறைகளையும் கண்டு -இவ்வுபாயத்தையும் பெற்று -அவற்றையும் விட்டு -இவற்றை இத்தை பெறுகைக்கு அதிகாரியுமாம் –

சோக நிவ்ருத்தி விதி
சித்த உபாயத்தைக் கேட்டால் சோகிக்குமவன் அறிவு கேடனுமாய் -தன்னையும் அறியாதே -இவ்வுபாயத்தின் நன்மையையும் அறியாதே
-பேர் இழவோடே-இவ்வுபாயத்துக்கு அதிகாரியும் அன்றிக்கே ஒழியும் –
ஆனபின்பு முன்பு சோகித்த நீ இனி சோகிக்கல் ஆகாது காண்-உடைமையின் பேறு உடையவனது-
பேறு உடையவனுக்கு இழவு-உடையவன் இழவுக்கு வெறுக்கவும் -பேற்றுக்கு வழி கேட்கவும் -பெற்றால் உகக்கவும் கடவன் –
ஆனபின்பு நான் செய்யுமவை மற்றை நீ செய்யவோ -என் உடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ
-நீ உன்னை அறியாமை காண் சோகித்தாய் என்று கண்ணில் நீரைத் துடைக்கிறான்-

சரம ஸ்லோகார்த்த சங்க்ரஹம் –
விடுமது இன்னது -அவற்றை இன்னபடி விடு -பற்றுமது இன்னது -அவற்றை இன்னபடி பற்று –
விடுவித்து பற்றுவித்த நான் -விட்டுப் பற்றின உன்னை விலக்கடிகளில் நின்றும் விடுக்கிறேன் –
நீ கலங்காதே கொள்-என்று உபாயாந்தர பரித்யாகத்தையும் -சித்த உபாய பரிக்ரஹத்தையும் -உபாய நைர பேஷ் யத்தையும் –
அதிகாரி பூர்த்தியையும் விரோதி நிவ்ருத்தியையும் -சுமை போட்ட சோம்பர் இருக்கும் படியையும் சொல்லி
வருந்தாது இரு நீ -பெரிய திருமொழி -8-6-6- வருந்தேல் உன் வளைத் திறம் -திரு விருத்தம் -69-
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி திருச் சந்த விருத்தம் -115- -என்கிறபடியே அர்ஜுனனைத் தேற்றி அருளுகிறார் –

—————————————————————————-

சரம ஸ்லோகார்த்த ஸ்ரவண அனுஷ்டான அதிகாரியை நிர்தேசிக்கிறார்-மற்ற -என்று தொடங்கி –

மா ஸூ ச என்கிற இது -விதி என்று திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் -சித்த உபாயத்தைக் கேட்டால் -என்று தொடங்கி –
இத்தால் சிலர் -மா ஸூ ச என்கிற இது விதி யாகையாலே ப்ரபன்னனான பின்பு சோகிக்கை விதி அதி லங்கநமாய் –
இவனை உபாய பூதனான சரண்யன் நெகிழ்ந்து தன் காரியத்துக்கு தானே கடவன் ஆகை யாகிற ப்ரத்யவாயம் உண்டாம் என்று
சொன்னவிடம் விருத்தம் -என்னும் பக்ஷம் அனாதரணீயம் -என்றபடி -ஆக நீயும் இப்படி என் பக்கலிலே ந்யஸ்த பரனாய் விரோதியும்
இப்படி துர்லபமான பின்பு சோகம் அனுவர்த்திக்குமாகில்-நீயும் எனக்கு இன்றியிலே -நானும் உனக்கு இன்றியிலே –
உன்னையும் -ந நமேயம் -என்னப் பண்ணி என்னையும் – ஷிபாமி -ந ஷமாமி -என்னப் பண்ணின பாபம் மூர்த்த அபி ஷிக்தமாய் இருக்க
சோகியாதே அநாதி காலம் ஆனைக் கழுத்திலே இருக்கிறாயாய்ப் போந்த அஞ்ஞானத்தோ பாதி போரும்-கிம் பஹு நா –
நான் உன் காரியத்துக்கு கடவனாய் இருக்க நீ சோகிப்பு தியாகில் உன் காரியத்துக்கு நீயே கடவையாம் அத்தனை -என்றதாயிற்று –
இத்தால் -வ்ரஜ -என்கிற விதியோ பாதி சோக நிஷேத விதியும் கர்தவ்யம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –

இனி சோகிக்கை யாவது -இஷ்ட ப்ராப்த்திய அநிஷ்ட நிவ்ருத்தி பல ரூபத்துக்கு ஸ்வ இதர சகல சஹாயாந்தர அஸஹமாய்
-வாத்சல்யாதி குண விசிஷ்டமாய் இருக்கிற வஸ்துவை உபாயமாகப் பற்றி ஸ்வ பர நிவ்ருத்தி பூர்வகமாக அவன் பக்கலிலே சர்வ பரங்களையும் ந்யஸித்து
நிற்கிற நிலைக்கு விருத்தம் இறே என்றதாயிற்று –

மாஸூச -என்கிற இடத்தில் நிஷேத வாசகம் முன்னே கிடக்கத் தாத்பர்யம் ஆவது என் என்னில்
பிரணவத்தில்-பகவத் ஏக ரஷ்ய பூதனாகவும் பகவத் அநந்யார்ஹ சேஷ பூதனாகவும் சொல்லப்பட்ட ஆத்மாவுக்கு ஞாத்ருத்வ நிபந்தமாக வருகிற
ஸ்வ ரக்ஷகத்வ அபிமானமும் -ஸ்வ சேஷத்வ அபிமானமும் -ஸ்வ ஸ் வா தந்தர்ய அபிமானமுமான விரோதிகளை நிஷேதிக்கிற இடத்தில்
-நமஸ் சப்தத்தில் -நிஷேத்ய வாசியான மகாரத்துக்கு முன்னே நிஷேத வாசியான நகாரம் முற்பட்டால் போலேயும்-
புருஷார்த்தத்தில் ஸ்வ கீயத்வாதி நிஷேதம் பண்ணுகிற நமஸ் சப்தம் கைங்கர்ய பிரார்த்தனா வாசி பதத்துக்கு முற்பட்டால் போலேயும் –
சர்வதர்ம பரித்யாகம் சொல்லுகிற இடத்தில் தியாகத்தின் உடைய அத்யந்த அபாவத்தில் அல்லது ஸ்வரூப பூர்த்தி இல்லாமையாலும்
ஸ்வ கார்ய உபாயத்துக்கு உதயம் இல்லாமையாலும் -தத் வாசகமான பரி சப்தம் தியாக சப்தத்துக்கு முற்பட்டால் போலேயும் –
வ்ரஜ என்று விஹிதமான உபாய ஸ்வீகாரம் சித்த உபாய விஷயமான பிரதிபத்தி மாத்ரமாய் -தாம் உபாயமும் இன்றிக்கே-சஹகாரியும் இன்றிக்கே ஒழிகையாலே
-தத் வியாவர்த்தகமான ஏக பதம் ஸ்வீகார விதானம் பண்ணுகிற வ்ரஜ என்கிற பதத்துக்கு முற்பட்டால் போலேயும்
-ந்யஸ்த பரனான இவனுக்கு உண்டான சோக உதயமும் -ஸ்வ பல அன்வயத்தைக் காட்டுகையாலே
-சோகம் பிரசுத்துதம் ஆவதற்கு முன்னே -மாஸூச -என்று நிஷேத அக்ஷரம் முற்படுகிறது என்கை –
ஆகை இ றே இவ்வதிகாரிக்கு யாவத் பல பிராப்தி நிர்பரனுமாய் நிர் பயனுமாய் இருக்கையே கர்த்தவ்யம் -என்கிறது –அதாவது
தன்னுடைய பாரதந்தர்ய அனுசந்தானத்தாலும் -உபாய பூதனுடைய நிருபாதிக ரக்ஷகத்வ அனுசந்தானத்தாலும் நிர் பரனாய் இருக்கையும்
-தன்னுடைய ஆகிஞ்சன்ய அனுசந்தானத்தாலும் -உபாய பூதனுடைய ஞான சக்த்யாதி குண அனுசந்தானத்தாலும் நிர் பயனாய் இருக்கையும் –
தான் சேஷ பூதன் ஆகையால் பலித்வம் இல்லை -பரதந்த்ரன் ஆகையால் உபாய கர்த்ருத்வம் இல்லை –ஆகையால் பல அலாப நிபந்தமாகவும் சோகிக்க பிராப்தி இல்லை
-உபாயாந்தர ஸ்ரவணத்தில் சோகித்திலன் ஆகில் அவற்றின் உடைய துஷ்கரத்வ ஸ்வரூப அனுரூபத்வாதி தோஷங்களையும் –
அவற்றின் உடைய தியாகத்தில் அல்லது சித்த உபாயம் அன்வயம் உண்டாகாது என்னும் இடம் அறிந்திலன் ஆகும் -ஆகையால் உபாயம் அதிகாரம் இல்லை
-சித்த உபாய ஸ்ரவணத்தில் சோகித்தான் ஆகில் அதனுடைய சஹாயாந்தர அஸஹத்வமும் ஸ்வரூப பிராப்தத்தையும் முதலான குணங்களையும்
அதில் தனக்கு கர்த்தவ்ய அம்சம் ஒன்றும் இல்லை என்கிற ஆகாரமும் அறிந்திலனாம் -ஆகையால் உபாய அதிகாரம் இல்லை –
-ஆகையால் முன்புற்றை சோக அனுவ்ருத்தி சாத்ய சாதன யாதாத்ம்ய ஞான கார்யம்-பின்புற்றை சோக நிவ்ருத்தி சித்த சாதன யாதாத்ம்ய ஞான கார்யம்
-சித்த உபாய ஸ்வீகார அநந்தரம் சோகம் அனுவர்த்தித்தது ஆகில் தியாக ஸ்வீகாரங்களில் அந்வயம் இல்லை
-அதுக்கு முன்பு சோகித்திலன் ஆகிலும் தியாக ஸ்வீகாரங்களில் அந்வயம் இல்லை –
ஆக -துஷ்கரங்களாய்-ஸ்வரூப விருத்தங்களான சாதநாந்தரங்களினுடைய தர்சனமும் -ஸூ கரமுமாய் ஸ்வரூப அனுரூபமான சாதனா தர்சனமும்
-தத் சாபேஷைதையும்-வியவகித்தவமும் -அதில் அருமையும் -அசாமர்த்யமும் -ஸ்வீகர்த்தாவினுடைய ஆகிஞ்சன்யமும் -விரோதி பாஹுள்யமும்
-தன் நிவ்ருத்தியில் அசக்தியும் இ றே -சோக காரணம் -இவை இத்தனையும் இல்லாமையால் சோகிக்க வேண்டா என்கிறது -என்றதாயிற்று –

சரம ஸ்லோகார்த்த சங்க்ரஹம் பண்ணி அருளுகிறார் -விடுமது -என்று தொடங்கி-

————————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீவர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: