Archive for July, 2016

பகவத் விஷயம் காலஷேபம் -186- திருவாய்மொழி – -10-7-1….10-7-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 23, 2016

செஞ்சொல் -பிரவேசம் –

விதி வகையே -என்கிறபடியே அவன் தம்மிடத்தில்-பரதந்த்ரனாய் நிற்கிறபடியை அருளிச் செய்தார் –
அவ்வழியாலே-
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே -என்றும்-
தலை மேலே தாள் இணைகள் -என்றும் –
அவன் தன் திரு மேனியோடு புகுந்து கலந்த படியை அருளிச் செய்தார் –
தம்மோடு வந்து கலந்த இடத்தில் தம்மிடத்தில் பரதந்த்ரனாய்-திரு மேனியை விட மாட்டாதே-
அவன் செய்கிற காதல் பெருக்கினை கண்டார் –
கண்டவர் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று நாம் அடியிலே வேண்டிக் கொள்ளச் செய்தேயும்-
இங்கு நம்மை வைத்தது ஒரு கார்யத்துக்காக என்று இருந்தோம்-
அதாவது இப்பிரபந்தம் தலைக் கட்டு வித்துக் கொள்ளுகை -என்றபடி
அது அவ்வளவில் அன்றிக்கே-நம் உடம்பினை விரும்பி விட மாட்டாமையாலேயாய் இருந்தது –
இவன் வெற்று உடம்பனாய்-சரீர சபலனாய் – இருந்தான்-கவி பாடுவித்துக் கொள்ளுகை ஒரு வ்யாஜ மாத்ரம்-
அது பிரதானம் அன்று-இதுவே இவனுக்கு நினைவு -என்று நினைந்தார் –

நினைந்தவர் -இவ் உடம்பினை விரும்புகிறது நம் இடத்தில் காதலால் அன்றோ –
இப்படி நம்மை விரும்பின இவ்வளவிலே நம்முடைய விருப்பத்தை முடித்துக் கொள்வோம் என்று பார்த்து –
தேவரீர் திரு உள்ளத்தில் ஓடுகிறது என் -என்றார் –
நான் உடம்பனாயே வேறு ஓன்று அறியாமல் படுகிற பாடு அன்றோ -மற்று உண்டோ -என்றான் –
உம் உயிர் வீடுடையான் -உயிரையும் வீடான சரீரத்தையும் உடையான் -ஆத்மாவை வீடான சரீரமாக உடையான் –
அங்கண் ஒண்ணாது -தேவர் -இச் சரீரத்தில் செய்து அருளும் விருப்பத்தை தவிர வேண்டும் –
மங்க ஒட்டு உன் மா மாயை -என்று விண்ணப்பம் செய்தார் –
இவர் விலக்கினது-அவருடைய காதல் பெருகுவதற்கு உடலாயிற்று –
ஒரு மா நொடியும் பிரியான் –
தந்தாமைக் கொண்டு அருமைப் படுத்துவார்கள் அன்றோ மேல் விழுகைக்காக-அது போலே ஆயிற்று-

இப்படி இவன் இவ் உடம்பிலே செய்கிற ஆதரத்தினைக் கண்டு-இவனுடைய காதல் பெருக்கு இருந்தபடியைக் காணில்-
இவ் உடம்போடு நம்மைக் கொடு போக நினைத்து இருக்கிறான் போலே இருக்கிறது-
அப்படிச் செய்யும் போது இவ் உலக வாழ்க்கை நமக்கு என்றும் உள்ளதாய் விடும்-நித்ய மண்டலம் அன்றோ -சரீரமும் நித்தியமாக இருந்து விடுமே –
இங்கே இருந்து இதற்கு ஒரு முடிவு கண்ட தாமத்தை இழந்தோம் ஆவோம் இத்தனை-இதனைக் கழித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்தார்-

பார்த்தவர் –
மங்க ஓட்டே -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயம் -என்றும்-
பொங்கு ஐம்புலனும் -பாசுரம்-என்றும்-
மும்முறை விரும்புவதும் மும்முறையும் தவிரச் சொல்லுகையும் அறியலாம்-
தேவரீர் இச் சரீரத்தை விரும்புகைக்கு அடி-
என்னிடத்தில் செலுத்தும் காதல் பெருக்கே அன்றோ-நான் இதனை விரும்பவில்லை
தேவரீரும் இவ் உடம்பில் செய்கிற விருப்பத்தினைத் தவிர வேண்டும் -என்ன
நீர் உம்முடைய விருப்பத்தை விடாதவாறு-நம் விருப்பத்தை விடுவதாமோ -என்றான்
அம் தண் திருமால் இரும் சோலை வாழி மனமே கை விடேல் -பாசுரம் கொண்டு பிரவேசம்
இவன் இப்படி விரும்புகிறது – இவ் உடம்பின் இழிவுகளை காணாமையால் அன்றோ –
இவனுக்கு இவ் உடம்பின் தாழ்வுகளைக் காட்டுவோம் என்று பார்த்து
இவ் உடம்பாகிறது -பருத்தல் சிறுத்தல் வளர்தல் குறைதல் களை உடையதாய் -விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –
விரும்பப் படும் ஆத்மாவைப் போன்று ஒரே தன்மையதாய்-வேறு பட்ட சிறப்பினை உடையதாய் இருப்பது ஓன்று அன்று
இதனை வெறுத்து அருள வேண்டும் -என்றார்-
அவ்வார்தைகளே இவன் மென்மேலும் விரும்புவதற்கு காரணங்கள் ஆயின –
மனைவினது அழுக்கை உகப்பாரைப் போலே எல்லா காலத்திலும் இவன் விட மாட்டாதவனாய் இருந்தான் –
இவனை கால் கட்டியாகிலும் ‘இக் கால்கட்டினை-அவிழ்த்துக் கொள்வோம் என்று பார்த்து-
இதில் செய்கிற விருப்பத்தினை தேவரீர தவிர வேண்டும்-என்று சரணம் புக்கார் –பிரார்தனாமதி சரணாகதி –
இவர் சொன்னபடியே செய்ய இழிந்தவன் ஆகையாலே
தனக்கு இவ் உடம்பிலே மென்மேலும் விருப்பம் செல்லச் செய்தேயும்
இவர் இதனை விரும்பாத பின்பு நாமும் இதனை வருந்தியாவது வெறுப்போம் -என்று பார்த்தான் –
இவர் இடத்து அவன் காட்டும் பாரதந்த்ர்யத்தாலே
இவ் உடம்பு ஒழிய அவன் கொடு போவானாய் இருந்தான் -மான் ஆங்கார மனம் கெட –
ஆக
இப்படியாலே -அருள் பெறுவார் -திருவாய் மொழியிலே தொடங்கின ஈஸ்வர பாரதந்த்ர்யத்தை முடித்து-
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாய்-எல்லா பொருள்களுக்கும் தலைவனான -சர்வேஸ்வரன்-
தனக்கு இவ் உடம்பில் விருப்பம் செல்லா நிற்கச் செய்தே-
நாம் -இதனைத் தவிர வேண்டும் -என்னத் தவிருவதே –என்ன ஒரு சீல குணம் இருக்கும்படியே –
இவ் விஷயத்தில் ஒருவரும் இழியாதீர்கள்-இழிந்து நான் பட்டதுவே அமையும்-என்று மிகுந்த பிரீதியாலே-
உயிர் காத்து ஆட்செய்மின் -என்று – பிறருக்கு சொல்லித் தலைக் கட்டுகிறார் –

த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலே தழைக்கும் -சூர்ணிகை -185-
நீராடப் போதுவீர்–அனுபவம் அடியார்கள் முன்னிட்டே -இனியது தனி அருந்தேல் -கரீஷ்மா காலத்தில் மடுவில் -செல்வார் துணை தேட்டம் -மூன்றும்
கல்யாண குணாம்ருத சாகரம் -அன்றோ இவன் -பரத்வம் கணுக்கால் அளவு -ஸுலப்யம் இடுப்பு -வாத்சல்யம் நெஞ்சு -ஸுசீல்யம் முழுகப் பண்ணும்
ஸஹ பதன்யா விசாலாஷ்யா சீதா பிராட்டி கூட்டி அன்றோ பெருமாள் இழிந்தார் –
கவி பாட சரீரம் வேண்டுமே -ஸுசீல்யத்தில் இழியாமல் இருக்க உபதேசிக்கிறார் –

—————————————————————————————————–

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

சுந்தர தோளுடையான் -நூபுர கங்கை திருமஞ்சன தீர்த்தம் தினப்படி –
கவி பாடுவித்துக் கொள்ளும் வியாஜ்யத்தால் -ஆழ்வார் திருமேனி ஆதரத்தால்-கண்ட ஹர்ஷம் -தம் தம்மை காக்க வேண்டி இருப்பார்
இவ்விஷயத்தில் அகப்படாமல் ஆத்மாவை நோக்கிக் கொண்டு -கைங்கர்ய நிஷ்டர்கள் வேறே -குண அனுபவம் நிஷ்டர்கள் வேறே –
மங்களா சாசனம் செய்வதே கைங்கர்யம் –தாம் பட்ட படியை அருளிச் செய்கிறார் -இதில் –
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் -மற்ற ஆழ்வார்களுக்கு –ஞான விசேஷ உக்தர்களுக்கு உபதேசம்
திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்-அபகரிக்கும் இடத்தில் -அறியாத படி
-வாமனன் -மகா பலி அறியாமல் பெற்றது போலே மதி மயக்கும் அதி ஆச்சர்ய மான ரூபம் -ஸ்வரூபம் குணம் –பஸ்யதோ ஹரத்வம் –
பக்தர்கள் பரிமாற்றம் கரண த்ரய ஆஸ்ரயம் உபதேசித்தார் கண்ணன் கழலிலே
கிருத்ரிம கவியாய் வந்து -திருவாய்மொழி- பாடுவிக்கும் வியாஜ்யத்தால் நாம் இருக்கும் இடம் வந்து -உள்ளுறை காட்டுவரைப் போலே
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்-சரீரம் ஆத்மாக்குள்ளும் கலந்து ஒரு நீராக கலந்து -நின்றார் –
பரிசர வர்த்திகளான ஸ்ரீ லஷ்மி நித்ய சூரிகள் அறியாதபடி –
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே-பிரித்துக் காண ஒண்ணாத படி க்ரஸித்து
-அசேதனம் போலே போக்த்ருத்வம் இல்லாத படி போக்யமாக கொண்டான் –
தானே போக்தா -வாக இருந்து பெறாப் பேறு பெற்று நிறைந்தான் -அவாப்த ஸமஸ்த காமன் ஆனான்
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின்-செம்மை –
பிரயோஜனமாம் இல்லாமல் -எதிர்பார்க்காமல் -அனன்யா பிரயோஜனமாக பாசுரங்கள் -ஸ்வயம் பிரயோஜனம்
கவி பாட வல்லவர்கள் -உங்கள் ஆத்மாத்மீயங்கள் அகப்படாமல் காத்துக் கொண்டு வாசிக்க கைங்கர்யம் -பல்லாண்டு பாட
அவனால் அபஹ்ருதம் ஆவது அவர்ஜனீயம் இன்றியமையாதது என்று கருத்து -சுமித்ரா தேவி இளைய பெருமாளுக்கு சொன்னால் போலே –

திருவாய் மொழி பாடுவிக்க என்ற ஒரு வ்யாஜத்தாலே புகுந்து-நம் இடத்திலே அவன் செய்த காதல் பெருக்கினைக் கண்டு-
அவனுக்கு அடிமை செய்வார் அவனுடைய சீலம் முதலான-குணங்களிலே அகப்படாதீர்கள்-என்கிறார்-

செஞ்சொற் கவிகாள் –
செவ்விய சொற்களை உடைய புலவீர்காள் –
கவிக்குச் செவ்வையாவது –
வேறு ஒரு பிரயோஜனத்தை விரும்பாது இருத்தல் –பிரயோஜனத்தை விரும்புதல் கவிக்கு குடிலமாம்-
இன் கவி பாடும் பரம கவிகள் -7-9-8-முதல் ஆழ்வார்களை – என்றும் –
செந்தமிழ் பாடுவார் -பெரிய திருமொழி -2-8-2- என்றும்-சொல்லுகிறவர்களை ஆயிற்று நினைக்கிறது –
பெரும் தமிழன் நல்லேன் -இரண்டாம் திருவந்தாதி -74-என்னா-
பெரிய தமிழன் மகா கவி -இங்கே இருந்து கவி பாடுவதால் தமிழ் பாடுவதால் நித்ய ஸூ ரிகளை விட பெரியவன் –
வாய் அவனை தவிர வாழ்த்தாது-முதல் திருவந்தாதி -11-என்றவர்கள் அன்றோ வேறு பிரயோஜனத்தை கருதாதவர்கள் –

உயிர் காத்து ஆட்செய்மின் –-
உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள்-நீங்கள் உளராய்க் கவி பாட வேண்டுமே-
இத்தலை உண்டானால் அன்றோ அத்தலைக்கு மங்களா சாசனம் செய்யலாவது-
ஆட் செய்மின் -என்கிறார் -கவி பாடுதல் வாக்கினால் செய்யப்படும் அடிமை ஆதலாலே-
ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மா மாயன் -9-6-7-அன்றோ –கவி பாட கொள்ளும் வியாஜ்யம் -என்றவாறு –
அடிமை கொள்வாரைப் போலே புகுந்து மற்றைப் படியேயாய்-இருக்கும் பலிப்பது–அடிமை பண்ணி -பாது காத்துக் கொள்ளுங்கோள்-
ஆழம் காலிலே இழிந்து அமிழ்வார் அவ்விடத்தே கொண்டைக்கோல் நாட்டுமாறு போலே-
கொண்டைகோல் நாட்டுகிறார் ஆழ்வார் -என்று சிற்றாள் கொண்டான் -பணிப்பர்-
இவ்விடம் பரப்புத் துறை-இவ்விடம் மடு-என்று-நிலவர் எல்லை குறிக்குமாறு போலே-
உடையவர் -இன்னார் உயிர் என்னாமையாலே-
அவன் உயிரைக் காத்து ஆள் செய்யுங்கோள் -என்று அருளிச் செய்தது -என்றது
அவன் மேல் விழ தாங்கள் இறாய்க்கையாவது அவன் இழத்தலே அன்றோ-அவன் உயிரைக் காத்தலைச் செய்யுங்கோள் -என்றபடி-
அயோக்யதா அனுசந்தானத்தாலே அகன்றால் -சேராமல் அவன் இல்லை நீங்களும் இல்லை –
என்னை அழித்துக் கொள்வேன் -திரு மங்கை ஆழ்வார் திரு நெடும் தாண்டகம் -பெருமாளை அழிக்க திட்டம்
-ரகஸ்யம் புரிந்து கொண்டார் -தன்னைக் காட்டினான்

வம்மின் புலவீர் -8-9-6-என்று முதலில் ருசி இல்லாதாரையும்-இரந்து அழைக்கிற இவர்-
சீலம் முதலான குணங்களில் இழிகிறவர்களையும் விலக்குகிறார் ப்ரீதியின் மிகுதியாலே-
நினைதொறும் சொல்லும் தோறும் நெஞ்சு இடிந்து உகும் -9-6-2-என்றும்-
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -என்றும்-
சீலம் முதலான குணங்களில் புண்பட்டு அன்றோ இவர் இருப்பது –
உங்களை இழத்தற்கு வேண்டிய காரித்தைச் செய்யாதே-
அவனுடைய இறைமைத் தன்மையிலே -நியந்த்ருத்வம் -ஐஸ்வர்யம் –இழிந்து கவி பாடப் பாருங்கோள்-
பஸ்யமே யோக ஐஸ்வர்யம் -விஸ்வ ரூபம் காட்டி -ஐஸ்வர்யம் என்றாலே நியந்த்ருத்வம் —
சீல குணத்திலே இழிய நினையீதீர்கோள் –
கவிகாள் -என்றால் உயிர் காத்து கவி பாடுங்கோள் -என்ன அன்றோ அடுப்பது-
அங்கண் சொல்லாதே ஆள்செய்ம்மின் -என்கிறார் ஆயிற்று
ஆள் செய்கையாவது கவி பாடுதல் -என்று இருக்கும்-புகழும் நல் ஒருவன் -என்கிற திருவாய் மொழியில் தம்வாசனையாலே-

இச் சீல குணத்தில் இழியாதீர்கோள் -என்று அறுதி இட்டு உரைப்பதற்கு காரணம் என் என்னில்
காரணம் சொல்கிறார் -மேல் –
தானேயாகி நிறைந்தானே -என்று தம்மைக் காண்கிலர் காணும் –
தானே -அவதாரணம் -ஆழ்வாரை உண்டான் –ஆழ்வாரைப் பெற்று அவாப்த ஸமஸ்த காமன் ஆனான் -நிறைந்தானே-
திருமால் இரும் சோலை –
திருமலையில் நிற்கிற நிலையும் சீலத்துக்கு உடல் அன்றோ –
வஞ்சக் கள்வன் –
களவு தானும் – மெய் என்னக் – களவு காணும் ஆயிற்று –
என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் இருக்கும் -9-6-6-என்னுமாறு போலே
களவு காணா நிற்கச் செய்தேயும் செவ்விது என்று தோற்றும்படி இருக்கும் –களவு தன்னை களவு காணும் ஆயிற்று –
மாலை கட்டின பா மாலை -மாலைக் கட்டின மாலை -போலே திருட்டை திருடினான்-
இத்தலையில் அடிமையை நிலை நிறுத்துவாரைப் போலே புகுந்து-
தான் அதனை எறட்டுக் கொண்டு-தலைவனாம் தன்மையை இத்தலையிலே வைத்து-
தலைமேல் கொள்வான் -ஆயிற்று – -சேஷத்வம் திருடினான் -கள்வா -ஆத்மபஹாரம் –பிள்ளை பெருமாள் ஐயங்கார்
சேஷித்வம் பட்டம் கொடுத்து இதுவே சேஷத்வம் என்று காட்டிய கள்வன்-எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் என்பர் –

இப்படி அவன் களவை நீர் அறிந்தீர் ஆகில் தப்பாது ஒழிவான் என் என்னில் –
மா மாயன்-
அப்படி அறியச் செய்தேயும் தப்ப ஒண்ணாத படியான-ஆச்சர்யமான செயல்களையும் குணங்களையும் உடையவன் –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் தான் மாய மந்த்ரம் தாம் கொலோ -நாச்சியார் திரு மொழி -2-4-என்கிறபடியே-

நன்று -குணங்களாலும் செயல்களாலும் உம்மை அவன் அகப்படுத்தின வழி தான் யாது -என்ன –

மாயக் கவியாய் –
ஆழ்வீர் உம்மைக் கொண்டு உலகத்தில் நடையாடாத-சில கவிகளைப் பாடுவித்துக் கொள்ளப் பாரா நின்றோம்-
அப்படிச் செய்வோம் -என்று ஆயிற்றுப் புகுந்தது
கவி என்று ஒரு காரணத்தை இட்டுக் கொண்டு வந்தான்-காதலி இருக்கும் இடத்தில் -தண்ணீர் -என்று புகுமாறே போலே –

வந்து
வந்தவனும் தானே ஆயிற்று –நான் தான் இருந்த இடத்தே சென்று-
என்னை இட்டு சில கவிகள் பாடுவித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லச் செய்கை அன்றிக்கே-
தானே வந்தான் –அடையத் தகுந்தவனான தானே ஆயிற்று வந்தான்-இதுவன்றோ சீலம் ஆவது –அபி கம்யனாக தான் இருக்க அபிசரித்தான்–

வந்த இடத்தில் அவன் உமக்கு நலிவாக செய்தது என் என்னில் –
என் நெஞ்சும் உயிரும் –
நெஞ்சினைக் கூறியது உடலுக்கு உப லஷணம்-உயிர் -ஆத்மா-
வரும் பொழுது நான் இருந்தேன் வந்த பின்பு என்னைக் காண்கின்றிலேன்-

உள் கலந்து –
ஒரு நீராகக் கலந்து –சரீரத்தோடு ஆத்மாவோடு வாசி அற அனுபவிக்கிறான் –

நின்றார் அறியா வண்ணம் –
இச் செயலுக்குத் தலைவரான பிராட்டி திரு வநந்த ஆழ்வான்-திருவடி முதலானார்க்கும் அறிய முடியாதபடி-ஆயிற்று என்னோடு கலந்தது –
இப்படிப் பட்ட காதலோடு கூடிய செயல்களில் நிற்பார் அவர்களே அன்றோ –
அவர்களுக்கும் தெரியாதபடி –ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9- என்னுமாறு போலே –

என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு –
சரீரம் வேறு உயிர் வேறு என்று நினைத்திலன் -எனக்கு மயர்வற மதி நலம் அருளினவன் -–தேஹாத்ம விவேகம் அறிந்திலன் –
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான் -9-6-5-என்னுமாறு போலே சரீரத்தையும் உயிரையும் ஒரு சேர அனுபவித்தான் –

தானே யாகி –
தம்மை காண்கின்றிலர் காணும்-
இருவருமாக அனுபவிப்பாரைப் போலே புகுந்து அனுபவிக்கிறவன் தானே யானான்-
மற்று ஒன்றைக் காணா -காண்பனவும் -உரைப்பனவும் மற்று ஒன்றி கண்ணனையே கண்ட –திருப் பாண் ஆழ்வார்
-தன்னையும் -தன் இருப்பிடம் – பலம் -சொல்லாமல் —
என்னை முற்றப் பருகினான் -9-6-10-என்னுமாறு போலே-இத்தலை இனிய பொருளாய் அற்றதாயிற்று-
இத்தலை ஒரு அறிவுடைப் பொருள் என்று தோற்றாதபடி ஆயிற்று செயல் செய்தபடி –பிறருக்கு உறுப்பாய் இருக்குமது ஒழிய-
தனக்கு என ஒரு தகுதி இல்லாத அறிவில்லாப் பொருளைப் போன்று செய்தான்-தனக்கே யாக -2-9-4- என்றபடியே கொண்டான்-
இனிய பொருள்களிலும் ஸ்வரூப பேதங்கள் -உண்டாகா நின்றதன்றோ- சந்தனம் மலர் போலே-அவை போன்றதே விட்டது அறிவுடைப் பொருளும்-
சூஷ்ம ஓட்டும் நீரிலே கழுவி-பைந்தொடி மடந்தயரைக் கொண்டு-ஷட்குண ரசாந்தமாக்கி -ஆசார்ய ஹிருதயம் –
தானேயாகி-
ஈர் அரசு தவிர்த்தான் என்பார் -தானேயாகி -என்கிறார்-
இத்தலையை புள் கவ்வப் பண்ணி -செருக்கு அற்றவனாக்கி –தானே தலைவனாய் நின்றான் -என்றபடி-

நிறைந்தானே –
அவாப்த சமஸ்த காமன் -எனபது இது காறும் பெயர் மாத்ரமேயாய்-இவரைப் பெற்ற பின்பாயிற்று நிறைந்தவன் ஆயிற்று-
இங்கனே இருப்பது அன்றோ சீலமாவது -என்றது-
பெரியவன் சிறியவன் இடத்தில் கலக்கும் இடத்தில்-தன் பெருமையும் அவன் சிறுமையும் தோற்றாத படி-புரை அறக் கலக்கை அன்றோ –
அபிஷிச்ய ஸ லன்காயாம் ராஷசெந்த்ரம் விபீஷணம்-க்ருத க்ருத்யா ததா ராம
விஸ்வர பிரமுமோதா ஹ -சங்ஷேப ஸ்ரீ ராமாயணம் -85 -என்னுமாறு போலே-

————————————————————————————————————————

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-

ஸம்ஸலேஷித்த அதிசயத்தால் நிரதிசய போக்யனாய் கிருதக்ருத்யனாய் ஆனான்
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்-சர்வ பிரகாரத்தாலும் ஆத்மாவை அனுபவித்து -பிரதானமாகக் கொண்டு
-நிறைந்து -பரி பூர்ணனாய் -ஸமஸ்த லோகங்களும் -பிராணிகளும் தானேயாம் படி அந்தராத்மா தயா நிர்வாகனாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்-விசேஷித்து அஹம் புத்தி – விஷய விவகாரமும் தானேயாகி-தனிச் சிறப்பு –
விசிஷ்டமாக இருக்க -அபிருத்தாக் சித்த விசேஷணம் எப்பொழுதும் -சம்பந்தம் உண்டாக்க வேண்டாம் அறிவு ஞானம் தானே வேணும்
ஸ்துத்யனான தன்னை தானே ஸ்துதித்து -ஆத்தாள் தனக்குப் பிறந்த உகப்பை
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்-கோனே யாகி -போக்தாவும் பாக்கியமும் தானேயாகி –

தம்மோடு கலந்த பின்பு-அவனுக்கு பிறந்த நிறைவினைக் கண்டு-இனியர் ஆகிறார்-

தானே ஆகி நிறைந்து –
ஏவகாரம்-இருவரும் சேர்ந்து செயல் செய்யப் புகுந்து-தானே பெற்றானாய் இரா நின்றான் –தான் போக்தா –

எல்லா உலகும் உயிரும் தானே யாய் –
எல்லா உலகங்களும்-அந்த அந்த உலகங்களில் உண்டான மனிதர்கள்-முதலானவர்களும்-தானே யாய் நின்றான் –
ஆழ்வாரைப் பெற்ற பின்பு சர்வேஸ்வரன் ஆனான் -என்றபடி –
சர்வேஸ்வரன் ஆனதும் இப்போதேயோ என்னில்-ஓம் அப்படியே-இப்பொழுது தான் நிறைந்தான் –
பாதுகாப்பவனாக இருப்பதால் அன்றோ அவனுக்கு ஸ்வரூபம் நிலைத்து இருப்பது –
என்று என்று இறைஞ்சி இரு தாமரைத் தாளில்
ஒன்றும் கதிர் முடியார்க்கு ஓம் என்று உரைத்தருளி
இன்று இங்கு இருவேமும் இப்போது உரைத்த மொழி
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக என்றான் -வில்லி பாரதம் கிருஷ்ணன் தூது -40
பாது காக்கப் படுகின்ற பொருள்களை பாது காத்தல் அல்லது-ஏவுகின்றவன் ஆக ஒண்ணாதே –
இவரைப் பெறுவதற்கு முன்பு தன்னுடைய ஏவுகின்ற தன்மை அடைய-
கண் நொந்தார் அகம் போலே காணும் காணும் கிடந்தது-கண் நொந்தாருக்கு விளக்கு அஸஹ்யம் –
அசந்னேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்ம இதி வேத சேத்-அஸ்தி ப்ரஹ்ம இதி சேத் வேத சந்தமேனம் தத விது இதி -தைத்ரியம் –
ஆத்மா நித்யமாக இருக்கச் செய்தே பகவத் ஞானம் பிறவாத போது இல்லாதவனாய் இருக்கிறான் -என்னலாய்-
அது பிறந்த போது அவனை உள்ளவனாக அறிகிறார்கள்-
என்னலாம் படி இருப்பது போலே காணும் அவனும் இருப்பது –
எதிர் தலையைப் பற்றி நிற்றல் இரண்டு தலைக்கும் ஒக்கும் –
நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலை – என்கிறபடியே
இவன் அடியவனைக் கொண்டு உளனாம்-அவன் தலைவனைக் கொண்டு உளனாம் –

தானே யான் என் பான் ஆகி –
யானே என்பான் தானாகி –
எல்லார் இடத்திலும் நிற்கும் நிலை ஒழிய-இவருடைய திரு மேனியில் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது
நான் என்ற பெயர் அளவேயாய் நிற்கிற நான் -தான் என்னலாம் படி ஆனேன்-
சேஷ பூதன்-என்றவன் சேஷி ஆனேன் -என்றவாறு -அப்ருதக் சித்த விசேஷம் தெரிந்து தானே அவன்-
அஹங்காரத்தால் இல்லை -கடல் ஞாலம் செயதேனும் யானே போலே –
தம்மைத் தடவிப் பார்த்த இடத்தில் காண்கின்றிலர் –அவன் தலையிலே சுமக்க காண்கிற இத்தனை –
அவனும் தன் தலையிலே பாரதந்த்ர்யத்தை எறட்டுக் கொண்டு –
இவர் தலையிலே அகங்காரத்தை உண்டாக்குகிற முதன்மையை வைக்கையாலே இவரையே காண்கிற இத்தனை-
சேர்ந்து இருக்கிற பொருளில் விசேடியத்தின் முதன்மையாலே விசேட மாத்ரமான தம்மைக் காண்கின்றிலர் ஆயிற்று-
விசேஷணம் அப்ரதானம் உண்மை -விசிஷ்ட ப்ரஹ்மமே பிரதானம் என்றவாறு –
காரிய நிலையோடு காரண நிலையோடு வாசி அற பொருள் சேர்ந்தே இருக்கச் செய்தேயும்-
ப்ரஹ்மமே முதல் காரணம் என்னக் கடவோம் அன்றோ –
அவற்றுக்கு வரும் விகாரங்கள் முதலானவைகள் வரும் என்று சங்கித்து-
அவற்றை விசேடணத்திலே ஒதுக்குகிறதும் அவனுக்கு குற்றம் வாராமைக்காக-
ஆனாலும் பொருள் தான் ஓன்று என்னலாய் இருக்கும் அன்றோ-
இயல்பாக உள்ள சம்பந்தம் கண் அழிவு அற்று இருக்கையாலே –
கடம் வஸ்த்ரம் -கட படாதிகள் -முதலானவைகளைப் போன்று பிரிந்து இருத்தல் உண்டாய் இருக்கிறது அன்றே-
பிரகார பிரகாரி தன்மையால் சொல்லுகிறது –
ஜாதி குணங்கள் பொருளைப் பற்றி கிடக்குமாறு போலே ஆயிற்று –
தண்டம் குண்டலம் போலே இல்லாமல் -ஜாதி குணம் போலே பிரிக்க முடியாமல் சேதனங்கள் அசேதனங்கள் ப்ரஹ்மத்துடன் விசிஷ்டம் –

இப்படி பொருள் இருக்கையாலே-
தன்னைத் தானே துதித்து –வார்த்தைகளுக்கு முக்கியமான பொருளாயும் –
கார்யாணாம் காரணம் பூர்வம் -வசஸாம் வாஸ்யம் உத்தமம்-யோகாநாம் பரமாம் ஸித்திம்- பரமம் தே பதம் விது -ஜிதந்தா-என்கிறபடியே

அஹம் -என்னும் சொல்லின் பொருள் அவன் அளவும் சென்று காட்டக் கடவதாய் அன்றோ இருப்பது-
இவர் பக்கலிலே பிறக்கச் செய்தேயும் அவன் செய்தான் என்று அவன் தலையிலே ஏறிடாலாம் அன்றோ –
நான் துதிக்கப் படுகின்றவன் ஆகில் துதித்தவன் -நானாவது –தான் துதித்து என்னாமல்- தன்னை -என்கிறார் –

எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே-
சர்வ ரச -என்கிற பொதுவான நிலை அன்றிக்கே-எனக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே –
கொடியேன் பருகு இன்னமுதே -என்கிறபடி-
தன்னைத் தானே துதித்து -என்கிற இடத்தில் தம்மைக் கண்டிலர்-
இங்குத் தாம் உளராகவும்-தமக்கு இனியதாகவும்-தொடங்கிற்று-
தாம் பாடின கவி கேட்டு -அவன் இனியனாய் இருக்கும் இருப்பு-தமக்கு இனியதாய் இருக்கிறபடி –
உபாய பாவத்தில் அந்வயம் இல்லை -உபேயம் -அனுபவத்தில் அந்வயம் உண்டே —

திருமால் இரும் சோலைக் கோனே –
மேலே கூறிய இனிய பொருள்களைப் போலே ஆயிற்று-திருமலையிலே நிற்கிற நிலையும் –
திருமால் இரும் சோலை அம் கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை -பெரிய திருமொழி -7-3-6-என்னக் கடவது அன்றோ –
திருமால் இரும் சோலைக் கோனே -யாகி-
இரண்டு உலகங்களையும் உடையவனாய் இருந்ததால் வந்த ஏற்றத்துக்கும் அவ்வருகே-
ஓர் ஏற்றம் போலே ஆயிற்று திருமலையை உடையனாய் இருக்கையால் வந்த ஏற்றமும் –
இவரைப் பெற்ற பின்பே காக்கும் தன்மை நிறைந்த தாயிற்று-
இல்லையாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்போடு-
திருமலையில் நிலையோடு வாசி அற்று போமோ அன்றோ –

நின்று ஒழிந்தான் –
இங்கு நின்ற பின்பு ஆயிற்றுப் பரகு பரகு-வியாகுலம் -அற்றது-க்ருதகிருத்யனாய் இரா நின்றான் –

என்னை முற்றும் உயிர் உண்டே –
என் உயிரை முற்றும் உண்டே-எங்கும் பரந்து இருக்கிற தான்-அணு அளவிதான ஆத்மாவினை நுகர்தல்-
தனக்கு ஏற்றமாம் படி ஆயிற்று இத்தலையான படி –அவன் தன் அபிப்ராயத்தாலே மதித்து இருந்தபடி –

———————————————————————————————

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என் அளவு அன்றியே என் தூக்கத்திலும் ஆனந்தம் -ஸந்துஷ்டானாக பிரதிஷ்டித்தானாக உளனாக நிலை பெற்றான் ஸ்திதோஸ்மி-
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு-ஜீவனையும் -சரீரத்துக்குள்ளும் சர்வ பிரகாரத்தாலும் அனுபவம் பண்ணி
-மாய ஆக்கை -அஞ்ஞானம் இவற்றுக்கு ஹேது-என்பதால் மாய -பந்தகமான சரீரம் -பிரகிருதி உடைய கார்யம் -முக்குணம் கூட்டுருறவு
-ப்ரத்யக்ஷ சித்த தோஷங்கள் உண்டே -பரமபதத்தில் சங்கல்ப ரூப ஞானத்தால் அனுபவிக்க இங்கே சரீரம் இந்திரியங்கள் வேண்டுமே அனுபவிக்க –
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்-அபிமானி ஜீவன் என்னையும் -அனுபந்தி சரீரம் -தானே அபிமானியாய்
-ஜீவனுக்கு அகங்கார மமகாரங்கள் இல்லாத படி -தானேயாய் -அபிமானித்து -கிருதக்ருத்யனாய் நின்ற
-ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் உடைய நிருபாதிக ஸ்வாமி -பொருந்தி வர்த்திக்கும்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்-தெற்குத் திக்கு ஸ்லாக்கியமான -கை கூப்பிச் சேர்ந்த
-சேஷத்வ அனுரூப வ்ருத்தியைப் பண்ணி –
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே-ப்ரஹ்மத்தின் பிரமம் அதிஷ்டானம் இல்லாமலே
-தனக்காக வந்த மருள் வியாமோஹம் –
இனி மேல் வேறே கந்தவ்ய பூமி உண்டோ -தாண்டி போவேனோ -போக்கிடம் இல்லையே -போக தேவை இல்லை –
அம்மான் நிருபாதிக சேஷி உடைய திரு அருள் என்னவாய் இருக்கு -அபிநிவேசம் என்ன அளவு –
இதில் காட்டில் வேறு சில பிராப்யங்கள் உண்டாய் அவற்றையும் உபகரிப்பானாய் இரா நின்றான் –
தென்னன் -பாண்டிய மன்னன் என்றுமாம்

அவனுக்கு தம் பக்கல் உண்டான காதல்-எல்லை கடந்து இருத்தலை-அருளிச் செய்கிறார்-

என்னை முற்றும் உயிர் உண்டு –
என் உயிரை முற்றும் உண்டு –
அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜ-ந த்வம் சமர்தச்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ர்யாம் வனே -ஆரண்ய -37-108-
என்கிற ஏற்றத்தை போலும் போரும் ஆயிற்று இவர் உயிரை எங்கும் புக்கு அனுபவிக்கப் பெறுகையால் வந்த ஏற்றம் –

என் மாய ஆக்கை –
என்னுடைய உயிரை அனுபவித்து அவ்வளவிலே தான் தவிருவானாய் இருந்தானோ-
அழுக்கு உடம்பு -திரு விருத்தம் -என்றும்-பொல்லா ஆக்கை 3-2-8- என்றும்-
புண்ணை மறைய வரிந்து -5-1-5-என்றும் சொல்லுகிறபடியே இவர் தண்ணிது என்று தாம் அருவருத்து புறப்பட்டு நில்லா நின்றார் –
இவர் இகழா நிற்கச் செய்தே அவன் இது உத்தேச்யம் என்று மேல் விழா நின்றான் என்பார் -உள்புக்கு -என்கிறார் –
புகுந்து -என்னாத புக்கு -என்கிறது-அதனோடு தமக்கு தொற்று அற்று இருக்கிறபடி தோற்றுகைக்காக-
தம் நெஞ்சாலே இதனை இவர் அருவருத்து புறப்பட்டு நின்றார் –
அவன் தலை துலுக்கு பெறும் அளவும் பார்த்தாயிற்று இவர் இருக்கிறது –
மங்க ஒட்டு என்னும் அளவும் அவன் இதனை விட மாட்டாமையாலே உள்ளே புகுரா நின்றான் –
இதனுள் புக்கு –
தொன்று தொட்டு இவ் உடம்போடு முகம் பழகிப் போந்தவன் அன்றோ இவன்-
உயிர் வழியாக குந்தி அடி இட்டு நிற்குமவன் அன்றோ அவன் –அவன் மேல் விழா நின்றான் –
தனக்கு பிரகாரமான உயிருக்கு பிரகாரமாய் இருந்து கொண்டு தனக்கு பிரகாரம் ஆவது அன்றோ இது
அநேக ஜீவேன ஆத்மநா அனுப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக்யம் -8-2-
இந்த உயிரை சரீரமாக உடைய என்னால் அந்தர்யாமியாகப் பிரவேசிக்கப் பட்டு-
நாம ரூபங்கள் உண்டு பண்ணப் படுகின்றன -என்னக் கடவது அன்றோ –

என்னை முற்றும் தானேயாய் –
இப்படி உயிர் உடலோடு வாசி அற எங்கும் புக்குப் பரந்து இருக்கையாலே -தானே -என்ன தட்டு இல்லை-
காரண கார்ய பாவ்யம் ஆகையாலே-
இவர் -நான் -என்னும் அதனையும் கொண்டான்-இவர் – எனது -என்னும் அதனையும் கொண்டான்-
அன்றிக்கே
ஈஸ்வரனுக்கும் கூட விளாக்குலை கொண்டு -கபளீ கரித்து-அனுபவிக்க ஒண்ணாத படி ஆனார் ஆயிற்று -என்னுதல்-
சகல பிரகாரங்களை -ஞானம் ஆனந்தம் சேஷத்வம் குணங்கள் போன்றவை முற்றவும் என்றபடி –

நின்ற –
உள்ளும் புறம்புமான எல்லா இடங்களிலும் நாராயணன் பரந்து-
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித-தைத்ரியம் -11-8-என்னும் பொதுவான நிலை அன்றிக்கே –
மாய அம்மான் சேர் –
ஆச்சர்யமான குணங்களையும் செயல்களையும் உடைய சர்வேஸ்வரனும் கூட-தண்ணீர் தண்ணீர் -என்று கிட்டும்படியான தேசம் ஆயிற்று –
தென்னன் திருமால் இரும் சோலை –
தென்னன் -என்று அங்குத்தை அரசனைச் சொல்லி அவனதான திருமலை -என்னுதல்
அன்றிக்கே-தெற்குத் திக்கிலேயாய் நன்றான திருமலை -என்னுதல்-

திசை கூப்பிச் சேர்ந்த யான் –
அவன் விரும்பின திக்கினை விரும்பினார் ஆயிற்று இவரும்-
நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு முடிவு இல்லை திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்புஎன்றான் -கம்பர் –

திசை நோக்கி மெய்ப்பூசனை புரியும் வேங்கடமே -திருவேங்கடமாலை -18

திசை கூப்பிச் சேர்ந்த யான் –
ஒரு திக்குப் பட அன்றோ இவர் விரும்புவது என்றது –அவனை உகந்து அவ்வழியாலே அவன் விரும்பின தேசத்தை உகந்து-அதனோடு சம்பந்தம்
உடைய திக்கினை உகந்து-இப்படி அவனோடு சம்பந்தம் உடைய சம்பந்திகள் அளவும் உகக்கும்படி கை கழியப் போந்த நான் -என்றபடி –
அவன் தான் இவரை உகந்து-இவருடைய சம்பந்தம் உடைய உடம்பினை விரும்புவது போலே ஆயிற்று-
என் எண் தான் ஆனானே -1-9-7-என்றார் அன்றோ அடியிலே –

இன்னம் போவேனே கொலோ –
எனக்கு இத்திசைக்கு அவ்வருகே ஒரு போக்கிடமுண்டோ-ஒரு திக்குக்கு உட்பட்ட நான் இனி அவ்வருகு போவேனோ-
இவன் இப்படி கிடந்தது படுகைக்கு-இனி அவ்வருகு போகையாவது -திருமலையில் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ளுகை- அன்றோ –

என் கொல் அம்மான் திருவருளே –
அம்மான் திருவருள் என்கொல் –
சர்வேஸ்வரனைப் பற்றி வரும் போது-விஷயம் இல்லாமலே மயக்கம் உண்டாகுமே -அன்றோ –
விடில் செய்வது என் என்று அதிசங்கை பண்ணினான் அன்பினால் என்கை-
சரமாவதி சேஷம் ஆகையால் -தன்னை விட பிரசங்கம் இல்லை -விடில் என் செய்வது -என்று அதிசங்கை பண்ணினான் அன்பினால் என்கை-
அன்றிக்கே-என் செய்யாதானாய்த் தான் இவன் இங்கனே கிடந்தது படுகிறது-
இவர் திறத்தில் எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போலே எதனைச் செய்தோம் என்று இரா நின்றான் ஆயிற்று-
அருள் -அன்பு / கொடை இரண்டு அர்த்தங்களிலும் வியாக்யானம்-

——————————————————————————————

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

அநு வாதம் -வினை சொல் -சரீரம் விரும்புகைக்கு ஹேது வாகையாலே -ப்ராப்யம் இது பிராப்பகம் திருமலை -இரண்டையும் கை விடான் –
என் கொல் அம்மான் திருவருள்கள்
உலகும் உயிரும் தானேயாய்–ஒருவனை -பிடிக்கை ஊரை வளைப்பாரைப் போலே -சர்வ லோகங்களும் சர்வ பிராணிகளில்
அந்தராத்மாவாகக் கொண்டு -ஆழ்வாரை பிடிக்க திட்டம்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி-இதுவும் ஆழ்வாரை விடாமல் பிடித்துக் கொள்ள -லபிக்கைக்கு ஸ்தலம் தேடுவாரைப் போலே
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை-தெற்கு என்னும் திசைக்கு சிரசாவாஹ்யமாக பிரதானம் -திருமலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே-
நம் போல்வாருக்கு அனுபாவ்யமான -அவனுகந்த திருமலை என்பதால் –சம்பந்தம் பொது -நண்ணாத படியால் அசுரர்
-விபரீதம் -விஷ்ணு பக்தன் தேவன் -நசிக்கும் படியாக -த்ரை விக்ரம அவதானம் பண்ணி -ஆழ்வாரை பிடிக்க
-மகா பலி இந்திரன் வியாஜ்யம் ஆக்கி -திருவடியால் கிளறி –
அம்மான் -ஸ்வாமி -நித்ய வாசம் செய்வதால் அசுரர் நலிவு அடைவார்கள் -நண்ணா அசுரர் நலிவு எய்தும்படி குன்றம் கை விடான் என்றபடி
என் கொல் அம்மான் திருவருள்கள்-ஸ்வாமி உடைய உபகாரங்கள் — சீல குணங்கள் எப்படி இருக்கின்றன -கிரியை -வினை சொல்
திருவருள்கள் –என்னவாய் இருக்கின்றன -என்றபடி –

தம்முடைய திருமேனியைக் காட்டிலும்-தம்மோடு கலந்து பழகுவதற்கு-
தக்க நிலம் என்று திருமலையில் அவன் வைத்து இருக்கும்-காதல் பெருக்கினை -அருளிச் செய்கிறார்-

என் கொல் அம்மான் திருவருள்கள் –
சர்வேஸ்வரனுக்கு-ஒரு விஷயம் இல்லாமலே-மயக்கம் உண்டாவதே –

உலகும் உயிரும் தானேயாய் –
என்ன குறை உண்டாய்த் தான் இப்படி படுகிறான் சர்வேஸ்வரன் -அவாப்த சமஸ்ய காமன் –

நன்கு என் உடலம் கை விடான் –
செருக்கனாய் இருக்கும் அரச புத்திரன் இழி குல பெண்ணின் கால்கடையிலே துவளுமாறு போலே-
நன்கு என் உடலம் –
சர்வேஸ்வரன் தன்னைக் கேட்டார்க்கு சொல்லுகிற வார்த்தை இருக்கிறபடி –அத்தை ஆழ்வார் அனுவாதம் செய்கிறார் என்றபடி –
ஆழ்வாரை -நமக்குத் தந்த திருமேனி அன்றோ -என்னா நின்றான் ஆயிற்று –
அன்றிக்கே-
நன்கு -நன்றாக -மிகவும் -என்றபடி-
என் உடலம் –
எனது என்னும் செருக்குடன் கூடிய இவர் உடலம் அன்றோ நமக்கு உத்தேச்யம் -என்னா நின்றான் –
என்னுடைய அடங்கு எழில் சம்பத்தில் ஏதேனும் பாம்பு செத்ததோ -விடத் தக்கது உண்டோ -என்னா நின்றான் –
அடங்கு எழில் சம்பத்து -எனது விபூதியில் தாழ்ந்த வஸ்து உண்டோ என்றபடி –
ததீயத்வ ஆகாரத்தால் லீலா விபூதியை உத்தேச்யம் என்று ஆழ்வார் சொல்வது போலே -ஆழ்வார் சம்பந்தத்தால் சரீரமும் அவனுக்கு உத்தேச்யமானது –

ஞாலத்தூடே நடந்து உழக்கி –
எத்தனை காலம் உண்டு அவன் இப் பேறு பெருகைக்கு உழன்று திரிகின்றது –
எல்லார்க்கும் பொதுவானவனுடைய செயல் எல்லாம் எனக்கு எனக்கு என்று-சொல்லலாம் அன்றோ அடியார் ஆனார்க்கு –
இந்திரனுக்கு இழந்த அரசினைப் பெற்றேன் என்னவுமாய்-
மகா பலிக்கு -வள்ளல் என்னும் பெயர் பெற்றேன் -என்னவுமாம்
சிலருக்கு பொன் பயந்தேன் என்னவுமாய்-மாலாகிப் பொன் பயந்தேன் மன்னன் சரிதைக்கே -திருமங்கை
இவருக்கு எனக்காகச் செய்தான் -என்னவுமாய் இருக்கிறது காணும் –
உவந்த உள்ளதனாய் -கொடையாளி -மகாபலி / இந்திரன் ராஜ்யம் பெற்று உகந்து/-ரிஷிகள் காணப் பெற்றோம்
/அடியார் கார்யம் செய்தோம் அவன் உகக்க /-திருவடி பெறப் பெற்றோம் ஆழ்வார்கள் உகந்து -ஒரே கல்லில் ஐந்து மாங்காய்
சத்யம் விதானம் நிஜ ப்ருத்ய – நரசிம்மன் -அவதாரம் -மெய்ப்படுத்து- பிரகலாதன் வார்த்தை
-ப்ரஹ்மா / வேதங்கள் /ஹிரண்யகசிபு காட்டி /ரிஷிகள் இந்த உருவம் சேவிக்க /

தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை –
தெற்கில் திக்குக்கு ஓர் ஆபரணமான திரு மால் இரும் சோலை –

நங்கள் குன்றம் கை விடான்-
அடியார்கள் அனுபவிக்கும் மலை-நங்கள் குன்றம் கை விடான்-
நன்கு என் உடலம் கை விடான்-திருமலையைப் பிராபகமாகவும்-
ஆழ்வார் திரு மேனியை பிராப்யமாகவும் நினைத்திரா நின்றான் என்றது-
உத்தேச்யம் ஆழ்வார் திருமேனியாய்-அது பெறுகைக்கு ஆயிற்று திரு மலையில் நிலை -என்றபடி –

நண்ணா அசுரர் நலியவே
நெல் செய்ய புல் தேய்ந்தால் போலே நெடும்பகை-தற் செய்ய தானே கெடும் -பழமொழி நானூறு –
என்னுமாறு போலே இவன் இவ்விடத்தே விடாதே வசிக்க-அசுரக் கூட்டம் முடிந்து போயிற்று-
திவ்ய மங்கள விக்ரகம் இல்லை திருக் கல்யாண குணங்கள் இல்லை என்று பிதற்றும் அசுரக் கூட்டங்கள்-
திருமால் இரும்சோலையில் எம்பெருமான் நின்ற நிலை கண்டவாறே தொலைந்தன –
அப்படியே இவன் ஆழ்வார் திருமேனியில் காதல் இப்படி பட்டது என்று அறிந்தவாறே ஆழ்வார் குறைகளை எண்ணுகிற அசுரக் கூட்டம் தொலைந்தன –

உலகும் உயிரும் தானேயாய் –ஞாலத்தூடே நடந்து உழக்கி-
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை நங்கள் குன்றம் –
நண்ணா அசுரர் நலியவே-கை விடான்-நன்கு என் உடலம் கை விடான் –அம்மான் திருவருள்கள் என் கொல்-என்று அந்வயம்-
எவ்வளவு திருவருள்கள் உள்ளன -கிரியா பதம் -இரண்டாவது நிர்வாகம் –அனுவாதம் முந்திய அர்த்தம் —

———————————————————————————

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

சம்ச்லேஷித்து -திருவாய்மொழி பாடக் கேட்டு –
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த-அடைய மாட்டோம் ந நமேயம்-ப்ரத்யுகர் -விநாசம் அடைய அதிசயம் பொறுக்க மாட்டாமல்
-அமரர் பக்தி அக்தர் நல்ல -தேவேந்திரன் பிள்ளை காகாசுரன்
நல்ல அனுகூலர் -ஸம்ருத்தி லபிக்கவும்
எண்ணா தனகள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப- உபய விபூதி கல்யாண குணக் கடல் -இவை போதாதே -என்று
ஆசைப்படும் நல்ல முனிவர்கள் -விருப்பம் ஆழ்வார் பாடல் பெற்றதும்
அவாப்த ஸமஸ்த காமன் குணம் விபூதிக்கு மேலே -அதிசயங்கள் என்னும் பிரேமம் -மங்களா சாசனம் பண்ணும் அனுபவ சீலர் முனிவர் –
அமரர் கைங்கர்ய நிஷ்டர் -கேட்டு அனுபவித்து ஆனந்த நீர்பரராக
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி-ராகத்துடன் சேர்ந்த இனிய -அவனே அவனைப் பாடி
-பிரகார பூதன் நானாகவே தான் நிறைந்து -ஸ்த்வயன் ஸ்தவ ப்ரியன் இரண்டு ஆகாரம்
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே-மேன்மை பாராமல் பாட்டின் ரசத்தால்
-தலை அசைக்கும் ப்ரீதி உள் அடங்காமல் ஆழத்தை வையா நின்றான்

அவன் தம்மோடு கலந்து-தம் திரு வாயாலே திருவாய் மொழி கேட்ட-
ப்ரீதி உள் அடங்காமல் மகிழ்ந்து-ஆளத்தி வையா நின்றான் -என்கிறார் –
ஆளத்தி -இசைக்கு பூர்வாங்கமான ஆலாபம்
அன்றிக்கே-நன்கு என் உடலம் கைவிடான் -என்னும்-அளவு அன்றிக்கே
என் வார்த்தை அளவிலே களியா நின்றான் –என்கிறார் என்னவுமாம் –

நண்ணா அசுரர் நலிவு எய்த- நல்ல அமரர் பொலிவு எய்த – எண்ணா தனகள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப-
ஆயிற்றுத் திருவாய் மொழி அவதரித்தது-
இதில் பேசப் படுகிற பரம்பொருளின் உடைய அவதாரம் போலே ஆயிற்று-துதிப் பாடலாகிய இதனுடைய அவதாரமும் –
பரித்ராணாயா சாதூநாம் விநாசாய துஷ்க்ருதாம்-தர்ம சம்ஸ்த்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-8-
தத அகில ஜகத் பத்மபோதாயா -அச்யுத பாணினா-தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் மகாத்மனா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2-
பகைவர்களை அழிப்பதற்கும் வேறு ஒரு கருவி எடுக்க வேண்டாதபடி-
அடியார்களை பாதுகாப்பதற்கும் வேறு ஓன்று தேடவும் வேண்டாதே-
அநந்ய பிரயோஜனருக்கு தானே பிரயோஜனமாய் இருக்கும் ஆயிற்று-
நண்ணா அசுரர் நலிவு எய்த-
அவ்யபதேச்யனுக்கு -கிருமி கண்டன் -1070-1116-முதல் குலோத்துங்கன் -என்பர் எடுத்துப் பேசத் தகாத நீசன் –
அவன் மகன் விக்கிரம சோழன் -1116-1184-
அனந்தரத்தில் அவன் தமப்பன் செய்ததனைக் கேட்டு-இவன் என் செய்தான் -என்று சிரித்தான்-
ஒரு மதிளை வாங்கும் காட்டில் -திருக் கண்ணபுர திரு மதிளை இடித்து தள்ளியதால் –அத் தர்சனம் குலைந்ததோ –
திருவாய் மொழி என்றும் ஸ்ரீ ராமாயணம் -என்றும்-வலியன இரண்டு மகா பிரபந்தங்கள் உளவாக இருக்க -என்றான் ஆயிற்று –
அவத்த புன் சமயச் சொல் பொய்யை மெய் என்று
அணி மிடறு புழுத்தான் தன் அவையின் மேவி
சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு என்று தீட்டும்
திருக் கூர வேதியர் கோன் செவ்வி பாடப்
பவத்துக்கம் பிணி நீங்க நரகம் தூரப்
பரமபதம் குடிமலியப்பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனிவாய் கரிய மேனி
நம்பெருமாள் அரங்கேசர்ஆசீர் ஊசல் –இப்படி உகவாதார் நெஞ்சு உளுக்கும்படியான பிரபந்தம் ஆயிற்று-
உலகத்தில் தெய்வப் பிறவி என்றும்-அசுரப் பிறவி என்றும் உயிர் களின் படைப்பு இரண்டு விதம்
த்வௌபூத சர்கௌ லோகேஷூ தைவ ஆசுர ஏவச-விஷ்ணு பக்தி பரோதேவ விபரீத ததா சூர-ஸ்ரீ கீதை -16-6-என்னக் கடவது அன்றோ –
பொருந்தாமையை உடைய அசுரர் கூட்டமானது மண் உண்ணும்படியாக-சம்பந்தம் இல்லை என்ன ஒண்ணாதே-
பொருந்தோம் என்கை அன்றோ உள்ளது –

நல்ல அமரர் பொலிவு எய்த –
அனுகூலர் ஆனவர்கள் உண்ணாதே தடிக்க –
இவர்களுக்கு நன்மையாவது பகவான் இடத்தில் பக்தி உடையராய் இருக்கை –
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -9-4-9-என்னக் கடவது அன்றோ-
இந்த திருவாய் மொழியே அவர்களுக்கு தாரகம் -என்றபடி –

எண்ணா தனகள் என்னும் நன் முனிவர் –
புறம்பு ஒருவர் எண்ணாதன சிலவற்றை எண்ணுவார் சிலர் உண்டாயிற்று –அவர்கள் ஆவார் –
-சர்வேஸ்வரன் காப்பாற்றுமவன்-அவனை ஒழிந்த அடங்கலும் அவனாலே பாதிக்கப் படுகின்ற பொருள்கள் -என்று இருக்கை-
அன்றிக்கே-
இரண்டு உலகங்கள் உடைய சர்வேஸ்வரனுக்கு இன்னும் சில உலகங்கள் வேண்டும்-
எல்லா குணங்களும் நிறைந்தவனுக்கு இன்னும் சில குணங்கள் வேண்டும்
என்று இப்புடைகளிலே எண்ணுவார் சிலர் உண்டாயிற்று -அவர்கள் என்றபடி –

இன்பம் தலை சிறப்ப –
திருவாய் மொழி அவதரித்த பின்பு-
அவனுக்கு இந்த குணங்களும் இந்த உலகங்களும் போரா-என்று இருந்த இழவு தீர்ந்து-
அதனால் எல்லை இல்லாத ஆனந்தத்தை அடைந்தவர்களாக-
அவனுடைய செல்வ நிறைவினையே நினைந்து கொண்டு இருக்கும் தன்மையர் ஆகையாலே -நல் முனிவர் -என்கிறது –
அன்றிக்கே –
திருவாய் மொழியை தவிர வேறு ஒரு செல்வம் வேண்டா-என்று இதுவே நினைந்து பேர் உவகையராம்
தன்மையர் ஆகையால் -நல் முனிவர் -என்கிறது என்னுதல் –

பண்ணார் பாடல்-
பண்ணோடு சேர்ந்த பாடல்
ஆர்தல் -சேர்தல் -மிகுதல்
அன்றிக்கே
மலரானது மணத்தோடு மலருமாறு போன்று-பண்ணும் இசையும் மிகுந்து இருந்த பாடல் -பண் -ஸ்வரம் –

இன் கவிகள் –
இசையும் பண்ணும் ஒழியவே-சக்கை -தொக்குக் கழிந்த சுளை போலே கவி தானே இனியதாய் இருக்குமாயிற்று –

யானாய்த் தன்னைத் தான் பாடி –
தந்தையானவன் மகனுக்கு பசுவினை நீர் வார்த்துக் கொடுத்து அவன் பக்கலிலே தான் மீள நீர்-ஏற்றுப் பசுவினைப் பெறுமாறு போலே
மகனுக்கு சொற்களைக் கற்பித்து அவன் சொல்லக் கேட்டு தந்தை இனியர் ஆமாறு போலே –
தான் பாடினான் ஆகில் ஸ்ரீ கீதையோடு ஒத்துப் போம்-
நம்பி திரு வழுதி நாடு தாசர் -அருள் கொண்டாடும் -என்கிற பாட்டிலே
ஸ்ரீ கீதையைக் கற்றான் ஒருவன் காலை நேரத்திலே ஒரு சபைக்குச் சென்றால்-
பலருமாக நாழி அரிசியைக் கொடுத்து நம்ப மாட்டமையாலே-புறத் திண்ணையிலே கிட -என்பார்கள்
திருவாய் மொழியைக் கற்றான் ஒரு விண்ணப்பம் செய்வான் என்றால் சர்வேஸ்வரன் அகப்பட புறப்பட்டு-
எதிர் கொண்டு அகம் ஒழித்துக் கொடுத்து-அமுதுபடியும் எடுத்து விட்டு உபசரிப்பார்கள் -என்றாராம் –
பண்டே பரமன் பனித்த -10-4-9-என்று இவர் அங்கீ கரிக்கையாலே அந்த ஸ்ரீ கீதை தானும் வீறு பெற்றது அன்றோ –

தென்னா என்னும் –
செருக்காலே -தென்னா தென்னா -என்று ஆளத்தி வையா நிற்கும் ஆயிற்று-
பிறப்பு இறப்புகளிலே உழல்கின்ற ஒருவன் பகவானைப் பெற்றால் மேலே சொல்லப் போகிற-
சாமகானம் பாடப் போகின்றான் -என்கிறபடியே
அவாக்ய அநாதர-என்னப்படுமவன் அத்தன்மை நீங்கி-பாடா நிற்பன் ஆயிற்று –

என் அம்மான் –
குழந்தையின் வார்த்தை இனியதாம் போது சம்பந்தம் உண்டாக வேண்டும் அன்றோ
அதற்கு அடியான சம்பந்தத்தைச் சொல்லுகிறது –

திரு மால் இரும் சோலையானே –
இவரைப் பாடுவித்த முக்கோட்டை-தொலை வில்லி மங்கலமும் இவரது முக்கோட்டை –
பாட்டினால் உன் தன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ணபுரத்துறை அம்மானே -பெரிய திரு மொழி -8-10-2-
என்று அவரை பாடுவித்த முக்கோட்டை அன்றோ அது –
தாம் பாடின கவிகளின் இனிமையை நினைந்தார் –இவை தாம் அடியாக பிறந்தன என்று சொல்லலாய் இருந்தன அல்ல –
இதற்கு அடி என்ன -என்று பார்த்தார் –அவன் தன் நெஞ்சினில் புகுந்து இருந்து பாடுவித்தானாய் இருந்தது-
கண்ணபுரத்துறை அம்மான்-என்று கவி பாடுவித்த முக்கோட்டையைச் சொல்லுகிறார்-

—————————————————————————————————

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

ப்ரஹ்மாதிக்ளுக்கும் உபகாரகம் ஸ்ரீ யபதி -கைங்கர்யம் கொள்ள பேர் அன்புடன் இருந்தான்
திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்-நிலையாகி நித்ய வாசம் -அடிமை கொள்ளுவதில் பெரிய பித்தனாகி நின்றான்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்-அக்டி கட நா சாமர்த்யன் -மா விபரீத லக்ஷனை
ஒரு புடையில் ஏக தேசத்தில் வைத்து கல்பம் தோறும் ரக்ஷித்து
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது-காண முடியாமல் –
சேஷி ரக்ஷகன் இரண்டுக்கும் நிதானம் ஸ்ரீ யபதி -உபபாதகம் -ரமா பதியே சேஷி ரக்ஷகன் –
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே-பெறுவதற்கு அரிய பக்தியை -அதிசயித்த பக்தி எய்த
-திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ணும் படி -அம்மான் -சர்வாதிகான் -ஈதல் கொடுத்தல் அபேக்ஷித பிரதானம் பண்ணி –

திருமகள் கேள்வன் ஆனவன்-திருமலையிலே நின்று அருளி-என்னை ஆளுகையிலே-
பெரும் காதலன் ஆனான் –என்கிறார் –

திருமால் இரும் சோலையானே யாகி-என்னை ஆளுமால்-
திருமலையை தனக்கு வசிக்கும் இடமாக கொண்டு நிற்கிறவன்-என்னை அடிமை கொள்ளுகைக்காக என் பக்கல்-
காதலே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிறவன்-

செழு மூஉலகும் –
கட்டளைப் பட்ட மூன்று உலகங்களையும் –

தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி-தலைஅளிக்கும் –
ஒப்பற்றதான-மிகச் சிறிய வயற்றிலே வைத்து-கல்பம் தோறும் கல்பம் தோறும் தலையாய் பாதுகாக்கும் -என்றது –
பிரளய ஆபத்தில் உலகத்திற்கு தன்னை ஒழியச் செல்லாதவாறு போன்று-என்னை ஒழிய தான் செல்லாதானாய் இருக்கையைத் தெரிவித்த படி
மா -விபரீத லஷனை

திருமால் –
திருமகள் கேள்வன் –

என்னை ஆளுமால் –
என்னை அடிமை கொள்ளுகைக்காக பிச்சுத் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் –
மாலை என்னாமல் மால் -என்கிறார் –

சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே –
பிரமன் சிவன் முதலான தேவர்கள் காணப் பெறாமையாலே-எல்லை இல்லாத பக்தியை உடையராய்-திருவடிகளை அடைவு கெட ஏத்த-
அவர்களுக்கு முகம் தோற்றாமே கடக்க நின்று-அருள் செய்கின்ற சர்வேஸ்வரன்-
எனக்கு கண்களுக்கு இலக்காம்படி-திருமலையிலே வந்து நின்று-என்னை அடிமை கொள்ளுகையில்-பெரும் பித்தன் ஆனான்-
ப்ரஹ்மாதிகள் பராத் பரன்– என்று அறியாதவர் பிரதிமாஸு அப்ரபுத்தி ஞானம் மலராதவர்களுக்கும் விக்ரக ரூபம்
-யோகிகளுக்கு ஹிருதயம் சேவை –வேதவித்துக்களுக்கு அக்னியில் சேவை -ஸுலப்யம் அறிந்தவர் தானே இவனை உணர முடியும் என்றவாறு –

———————————————————————————————

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

அஞ்ஞானம் அந்தகாரம் போக்கும் திருமலை -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் போலே –
அங்கேயே கரிக்க அவன் வந்து நின்ற திருமலை வை லக்ஷண்யம் அருளிச் செய்கிறார்
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்–ஈந்து அருள வேணும் ஸ்வாமி என்பர் -ஈஸ்வர அபிமானி யாகிய ருத்ரனும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்-ஸ்ருஷ்டித்தவாதி உபஉக்தமான ஞானாதி குணம் உடைய -தெருள் ஞானம்
-நான்முகனும் -ஸ்ருஜ்ய ஜகத் பாதி -இவனும் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டவன் -தேவர்களுக்கு நிர்வாகம் இந்திரன் -முப்பத்து முக்கோடி தேவர்களும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை-ஸ்வரூப புருஷார்த்த பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் -இருள்கள் -தமஸ்
-சனக சனகாதிகள் –புராணம் முதலானவற்றால் போக்கும் -அல்வழக்குகள் உபதேச முகத்தால் போக்குபவர் -அவர்கள் ஸ்தோத்ரம் பண்ணும்
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே
பிராப்தி பிரதிபந்தகங்கள் அஞ்ஞானம் போக்கி -அவித்யாதி ஜென்ம கர்ம வாசனா ருசி போக்கி நிரதிசய போக்யமான -வி லக்ஷணமான திருமலையே –

தம்முடைய இச் செல்வ நிறைவுக்கு எல்லாம் அடி-திருமலை ஆனபின்பு-
இம் மலையே தான் நாம் அடையத் தக்க பேறு-என்று திரு மலையைக் கொண்டாடுகிறார்-இதுவே பிராப்தம் என்று –

அருளை ஈ என்பார்கள்-
திருவருளைச் செய்தருளாய்- என்பார்கள் –

என் அம்மானே -என்னும் –
இறைமைத் தன்மை தோன்ற-நீ அருளாது ஒழிந்தால் புறம்பு எங்களுக்கு புகல் உள்ளதோ-
சம்பந்தம் உள்ளவனனா நீ அருள வேண்டாவோ -என்பார்கள்-
இப்படி சொல்லுகிறவர்கள் தாம் யார் என்னில் –

முக்கண் அம்மானும் தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் –
நெற்றியிலே கண்ணை உடையனாய் –தன்னைத் தானே ஈஸ்வரனாக நினைத்து இருக்கிற சிவன் –
அவனுக்கும் கூட ஞானத்தினை உபதேசித்தவனாய்-அவனுக்குத் தந்தை யாகையாலே வந்த-ஏற்றத்தினை உடைய நான்முகன்-
தேவர் கூட்டத்தை சனியும் புதனும் மெய்க்காட்டுக் கொள்ளுகின்ற இந்த்ரன்-
தங்களை உடையனாகை அவனுக்கு ஏற்றமாம் படி இருக்கிற தேவர்கள்-
அறிவின்மையாகிற இருட்டினை வாசனையோடு போக்கி இருக்கும் ஸமிருதி கர்த்தாக்களான இருடிகள் –

ஏத்தும் அம்மான் திருமலை-
இவர்களை அடங்கலும் ஒரு மிடறு செய்து ஏத்தும்படியாக-சர்வேஸ்வரன் தான் விரும்பி வந்து-
மேல் விழுந்து படுகாடு கிடக்கும் தேசம் ஆயிற்று –
மருள்கள் கடியும் மணி மலை –
பேற்றினை அடைவதற்கு தடைகளாக உள்ளவற்றை-அடையப் போக்கும் தேசம் ஆயிற்று-
அன்றிக்கே-
திருமலையை ஒழிந்தது ஒன்றே பெறத் தக்க பேறு-என்று பிறக்கும் புத்தியைத் தவிர்த்து தருமாயிற்று -என்னலுமாம்-

அது தான் என் என்னில் –
திருமால் இரும் சோலை மலையே –ஸ்வயம் புருஷார்த்தம் திருமலை -என்றதாயிற்று –

————————————————————————————————

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

திருமலை தொடக்கமான திவ்ய தேசங்களை ஓக்க -சர்வ அவயவங்களை -விரும்பி ஏக தேசமும் பிரியாமல் -இவரும் ஒருவனே
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே-இவற்றுடன் ஓக்க இவர் தலையை -இரண்டு சேர்ந்தால் தான் தலைக்கு சாம்யம் கிட்டலாம் –
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
இவரது உடலுக்கு வடக்குத் திருமலை – ஸ்ரீ வைகுண்டம் இரண்டும் -தெற்குத் திருமலை உடன் சேர்த்தே மங்களா சாசனம்
ஸ்ரீ யபதி ஆஸ்தே வைகுண்ட பரே லோகே பக்தை பாகவத சக –
பஞ்ச பிரகாரங்களில் பிரியாமல் ஸ்ரீ ய சார்த்தம் -சிரமஹரமான திருமலை –
துரியோதனன் -விதுரன் கிம் அர்த்தம் புண்டரீகாக்ஷம் -பீஷ்மர் துரோணர் -சேர்த்து மாம் -க்ருஹம் என்றான் -துர் அபிமானம் சாக்ஷி அங்கு
–இங்கு சாத்விக அபிமானம் -அபிமான துங்கன்-அபிமான பங்கம் –
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே-
பிரகிருதி -அருமை தாண்ட முடியாத அதிசயித்து -மாயாந்து பிரகிருதி -ஸ்வரூபம் திரோதானம் பண்ணுமே -அதற்குள் சிக்கும்
ஆத்மா மனசு வாக்கு கிரியை வினைகளை இவற்றை பிரியாமல்
ஒருமா நொடியும் பிரியான்-தலை முதலிய அனைத்து அவயவங்களையும்
என் ஊழி முதல்வன் ஒருவனே-கால உபலஷித்தமான சகலத்துக்கும் காரண பூதன் -இவற்றை எல்லாம் விட்டு என் அவயவங்கள்
இவரை லபிக்கைக்காக -அனைத்தையும் உண்டாக்கி –
மனமே வாக்கே -ஏகாரங்கள் -எண் ஆதல் -அவையே அசாதாரணமாம் படி -என்றுமாம் -தோள் கண்டார் தோளே கண்டார் போலே
-அமுதினைக் கண்ட கண்கள் மாற்று ஒன்றைக் கானா
மா நொடி -க்ஷணத்தில் சிறிய பகுதி உண்டே -அந்த நேரமும் பிரியான்

திருமலை தொடக்கமான கோயில்கள் எல்லாவற்றிலும்-செலுத்தும் ஆசையை என் உறுப்புக்களிலே செலுத்தி-
ஒரு கண நேரமும் பிரிகின்றிலன் –இவன் படி இருந்தபடி என் –என்கிறார்-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே –
தெற்கில் திருமலையையும்-திருப் பாற் கடலையும்-இவருடைய தலையையும் ஒக்க விரும்பினான் –

திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே –
ஸ்ரீ வைகுண்டத்தையும்-வடக்கில் திருமலையையும்-இவர் திரு மேனியையும் ஒக்க விரும்பா நின்றான் –
ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி -பிராட்டியோடு கூட உலகங்கட்கு எல்லாம் தலைவன் எழுந்தருளி இருக்கிறான்-
என்கிறபடியே இருப்பது ஒன்றாதலின் -திருமால் வைகுந்தம் -என்கிறார் –
ஆக
இரண்டு திருமலைகளிலும்-பரத்வத்திலும்-வியூகத்திலும்-பண்ணும் விருப்பம் முழுவதினையும்-
இவர் திருமேனி ஒன்றிலும் பண்ணா நின்றான் -என்றபடி –

அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே –
இவருடைய ஆத்மாவிலும் மனத்திலும்-மனம் வாக்கு காயங்களிலும்-ஒக்க விரும்பா நின்றான் –
உயிரே -மனமே -வாக்கே -கருமமே-என்பவற்றில் உள்ள ஏகாரத்தாலே-அவற்றிலும் முறையால் அன்றியே
கண நேரமும் இடை விடாதே-சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு நில்லா நின்றான்-என்பதனைத் தெரிவித்த படி –

அருமா மாயத்து எனது உயிரே-
ஆத்மா என்று ஒரு பெயரே மாத்ரமாய்-அநாதி காலம் மூலப் பிரக்ருதியிலே கலந்து-
அதனாலே அசித்தினைப் போன்று இருப்பது ஓன்று ஆகையாலே அதனை-அரு மா மாயத்து எனது உயிர் -என்கிறார் –
தைவீ ஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா -ஸ்ரீ கீதை -7-14-என்கிறபடியே
ஒருவராலும் கடக்க அரியதாய் இருந்துள்ளே-அசித்தோடே கலசிக்கிடக்கிற ஆத்மாவிலும் -என்றபடி-

மனமே வாக்கே கருமமே –
மேல் இவற்றை ஒன்றாக விரும்பின படியை சொன்னார் –எனது உடலே-
இங்கு தனித் தனியே எல்லாவற்றிலும்- ஒக்க- ஒரே காலத்தில்-விருப்பத்தைச் செய்த படியைச் சொல்லுகிறார்-
ஒருமா நொடியும் பிரியான் –ஒரு கண நேரத்திலும்–ஒரு கூற்றிலும்-பிறிகின்றிலன்-என்றது-
கரணங்கள் -காரியம் -கர்த்தா -மூன்றையும் சொல்லி -ஒன்றில் நின்றும் ஒன்றில்- கால் வாங்கிப் போய்-அனுபவிக்கின்றிலன் -என்றபடி –
தலையே உடலே உயிரே மனமே வாக்கே கருமமே -ஒவ் ஒன்றிலும் -ஒரு மா நொடியும் பிரியான் –
இரண்டு திருமலையை சொன்னது உகந்து அருளினை திவ்ய தேசங்களுக்கும் உப லக்ஷணம் –

என் ஊழி முதல்வன் ஒருவனே –
என் இடத்தில் காதலை உடையவன் ஆகைக்காக-காலத்தாலே அறியப் படுகின்ற எல்லா பொருள்களுக்கும்-காரணமான ஒப்பற்றவன் –
அழிவு காலத்தில் -சேதன அசேதனங்கள் எல்லாவற்றிற்கும்-தன்னை ஒழிய செல்லாதவாறு போலே ஆயிற்று-
இவர் திருமேனி ஒழிய தான் செல்லாத படி இருக்கிறபடி –பிரணயித்தவத்துக்கு தாரணம் என்றவாறு –
கார்ய காரணம் என்னும் இரண்டு நிலைகளை உடைய-சித்து அசித்துக்களின் இருப்பு-
தன் அதீனமாக இருக்கின்றவன் -தன்னுடைய இருப்பு-என் சரீரத்தின் அதீனமாம் படி இரா நின்றான் –
ஊழி முதல்வன் ஒருவனே —
இங்கனம் ஆசை உள்ளவனையே பெரிய ஈஸ்வரன் என்கிறது –இவனும் ஒருவனே -என்கிறார் –என் முதல்வன் -ஊழி முதல்வன் -சபலன் –

——————————————————————————————–

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

ஜகத் ஸ்ருஷ்டியாதி -காரண பூதன் -சரீராதிகளை விரும்புவதைக் கண்டு -இவற்றை விட திருமலையை ஆஸ்ரயி என்று
தம் திரு உள்ளத்தை குறித்து சொல்கிறார் -உன்னை விட்டு போக நீயே பிரார்த்திக்க வேண்டும் -என்றபடி –
வாழி-நல்ல நெஞ்சே -முதலில் பலம் கொடுத்து -கை விடாதே திருமலையை -என்கிறார் -முந்துற்ற நெஞ்சு
-பூத சூஷ்மம் கொண்டே ஜீவாத்மா அடுத்த பிறவி -இவை அடங்கி தானே ஜீவாத்மா மோக்ஷம் போக வேண்டும்
-மகா பிரளயம் போது-பிராகிருத பிரளயம் -பூத சூஷ்மம் முடிந்தாலும் கர்ம சூஷ்மம் முடியாது –
மோக்ஷம் கொடுத்து அப்ராக்ருத உடல் இந்திரியங்கள் கிடைக்கும் –
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன்– கால உபலசித்த ஸமஸ்த வஸ்துக்களும் -காரண பூதன் என்னும் ஒருவன்
-ஏக மேவ அத்விதீயம் -என்று வேதாந்தம் சொல்லுமே -ஒரு மிடறாக கோஷிக்கும் –
உலகு எல்லாம்- ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்-ஸமஸ்த லோகங்களையும்
ஸ்ருஷ்ட்டி முதலியவற்றுக்கு அநு கூல காலங்களில் -வியாபாரிக்கைக்கு ஈடாக -சங்கல்ப ஏக தேசத்திலே -இது தானே யாத்திரையாக
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை-அபரிச்சின்ன ஸ்வ பாவன் -கடல் வண்ணன் என்றுமாம் -இந்த பிராப்தி முகத்தால் ஸ்வாமி
-வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே-மங்க -நசிக்க -சிந்தை பண்ணி அனுமதி பண்ண வேண்டும் –
செறிந்து ஆஸ்ரயிக்க பார் திருமலையை ஒட்டு -உடலும் உயிரும் மங்க -இத்தாலே நீ வாழி என்கிறார்

நமக்கு இந்த செல்வம் எல்லாம்-திருமலையாலே வந்தது ஆயிற்று –
அதலால் திருமலையைக் கை விடாதே கொள் –என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து-அருளிச் செய்கிறார்

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன்-என்னும் –
பிரமாண பிரசித்தியைக் காட்டுகிறது –காலத்தாலே அறியப் படுகின்ற எல்லா பொருள்களுக்கும்-காரணமாய் இருப்பவன் ஒருவனே -என்றும்
சத் என்ற ஒன்றே -எனபது போன்ற பிரமாணங்களாலே சொல்லப் படுகிற ஒருவன் –கார்யமான தன்மையை உடைய இவை முழுதும் அழிந்த அன்று
இவற்றைத் தன் மேல் ஏறிட்டுக் கொண்டு நிற்கிறவன் காண் –
இப்போது என் உடம்பில் வந்து தங்குகிறான் –காரண நிலையில் சித் அசித்துக்களின் உடைய நிலை தன் அதீனமாம்படி இருக்குமவன் –

உலகு எல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து –
காரண நிலையில் இவற்றின் உடைய நிலையை நோக்கி விட்டால்-பின்னையோதான் இவை தம்மைத் தாம் நோக்கிக் கொள்ளுகிறது –

காத்துக் கெடுத்து உழலும் –
பெயர்களையும் உருவங்களையும் கொடுத்து விட்டால்-பின்னைத்தான் தாங்கள் தங்கள் கார்யம் செய்கிறார்களோ –
இதனால் சொல்லிற்று ஆயிற்று என் என்னில் –
எல்லா நிலைகளிலும் இவரை ஒழியத் தரிப்பானாய் இருக்கின்றிலன் –பிரளய ஆபத்துக்களில் இவற்றுக்குத் தன்னை ஒழிய-
நிலைத்து இருத்தல்-இல்லாதாவாறு போலே – தான் இவரை ஒழியில்- தரிக்க மாட்டானாய் இரா நின்றான் –
ஆழி வண்ணன் –
கம்பீரமான தன்மையை உடையவன் –
அன்றிக்கே –கடல் போலே ஸ்ரமத்தை போக்கக் கூடிய வடிவை உடையவன் -என்னுதல் –

என் அம்மான் –
அவ் வடிவைக் காட்டி என்னை-சம்சார பிரளயத்தின் நின்றும் எடுத்தவன் –

அம் தண் திரு மால் இரும் சோலை –
அவனுக்கும் கூட காட்சிக்கு இனியதாய்-சிரமத்தை போக்கிகிற தேசம் –

வாழி மனமே கை விடேல் –
மனமே நான் சொல்லுகிற இந்நன்மை உனக்கு மாறாதிடுக-
அவன் இப்படி நம் பக்கலிலே மேல் விழுந்து விரும்புகையாகிற-நன்மைக்கு எல்லாம் காரணம் -திருமலை -ஆயிற்று –
இதனை ஒருகாலும் கை விட நினையாதே காண் -என்கிறார் -தம் திரு உள்ளத்தைப் பார்த்து –
அவனும் தன் திரு உள்ளத்தைக் குறித்து –ஆழ்வாரைத் தந்தது அவருடைய திருமேனியாய் இருக்கும் –
திருமால் இரும் சோலை தானே ஆழ்வார் திருமேனி -நீயும் அதனை ஒருகாலும் விடாதே காண் -என்றான் –
பிரானே அங்கன் ஒண்ணாது -இதனைத் தவிர வேண்டும் -என்று நிர்பந்திக்கிறார் –

உடலும் உயிரும் மங்க ஓட்டே –
உடலும் உயிரும் மங்கும்படி இசைய வேண்டும் –ஒட்டு -இசைதல் –
இது அத் திருமலையைப் போன்று பற்றத் தகுந்தது ஓன்று அன்று –சாலவும் விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –
இதனை மங்க இசைய வேண்டும் -மங்க ஒட்டு -என்கையாலே-இதற்கு முன்புத்தை ஆழ்வார் உடைய இருப்பு -பிராரப்த வினையால் -அன்று
பகவான் உடைய அபிப்ராயத்தாலே -என்னும் இடம் தோற்றுகிறது-
ஈஸ்வரன் பற்றி விடேன் என்று இருக்கையாலே இருந்தார் என்கிறது —உடலம் கைவிடான் -என்றாரே அன்றோ –
உமக்கு வைராக்யம் வந்தது போலே எனக்கு ராகம் வந்தது -என்றான் –
அழிய இசையை வேண்டியது அவன் தானே -கர்ம சேஷம் இருப்பதால் -நாம் இருக்க -வினை தீர்ப்பாய் -என்று கேட்க வேண்டும்
ஆழ்வார் அவன் இசைவாலே தான் இத்தனை காலம் இருந்தார் -கர்ம சேஷத்தால் அல்ல -அவனது இச்சையால் தானே –

————————————————————————————————

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

அதி அபி நிவேசம் நிவர்த்திப்பிக்க -பிரகிருதி ப்ராக்ருதங்கள் உடைய ஹேயதையை -ஏவம் பூதமான உன் மாயை
-மம மாயா துரத்தயாயா -நசிக்கும் படி அனுமதி பண்ணி அருள வேணும் என்கிறார் –
மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய-
நித்ய வாசம் பண்ணி
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே-ஸ்வாமியாய் -நானே நீ -வேறாக நினைக்க முடியாதபடி -ரக்ஷித்து
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
-கிளர்ந்து வரும் -போக்யத்தையால் புலன்களால் அனுபவிக்கும் சப்தாதி –தன்மாத்திரைகள் நேத்ராதி ஞான இந்திரியங்கள்
-பிரவர்திக்கைக்கு ஹேதுபான கர்ம இந்திரியங்கள் சப்தாதி ஆஸ்ரயிக்கும் -பிருத்வியாதி பூதங்கள் -இந்திரியங்களும்
சரீரம் ஆஸ்ரயிக்கும் இதும் பூதங்களால் ஆனதே இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே-24 தத்துவங்களால் ஆனதே ஹேயம்-
ஜீவன் உடன் சேர்ந்த போரக்ருதி மூல பிரகிருதி -விவசாய ஹேதுவான மமகாரங்கள் அஹங்காரங்கள் சங்கல்ப நிதானமான மனஸ்
-பிரகிருதி பிராக்ருதங்கள் தொலையும் படி அருள வேணும்

இப்படி இவர் நிர்ப்பந்திகச் செய்தேயும்-ஆனைக்குப்பு –சதுரங்கம் –இடுவாரைப் போலே-கேளாது இருந்தான் –
அதற்கு அடி -சாந்து பூசுவார் பரணியை உடைத்தோ பூசுவது –இது என் சொன்னீர் ஆனீர் -என்ன-
திரியவும் மங்க ஒட்டு –என்கிறார்

மங்க ஒட்டு உன் மா மாயை –
உன் மா மாயை மங்க ஒட்டு –
ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி-நீ கட்டிய இந்தச் சரீரம் மங்குவதற்கு இசை –விடத்தக்கது -என்று அறிந்த பின்பு உம்முடைய
சரீரத்தினை நீரே விட வேண்டியது அத்தனை அன்றோ –
நாம் இசைய வேண்டுகிறது என் -என்ன –
எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவனான-நீ பிணைத்த பிணையை
ஆற்றல் சிறிதும் இல்லாதவனான நன் விடவோ –என்னுடைய மாயம் ஒருவராலும் தாண்ட முடியாது -என்றிலையோ –
வெண்ணெய் பால் உண்டு வெறும் கலத்தை உடைத்தீரே -அது போலே செய்ய வேண்டும் –

திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே –
திருமலையில் நின்று சேஷித்வம் காட்டி அருளிய நீ பேற்றினையும் தந்து அருள வேண்டும் -என்றபடி –
பரமபதம் கலவிருக்கையாய் இருக்க அவ்விடத்தை விட்டு-நீ திருமலையில் வந்து முற்பாடனாய் நிற்கிறது-
நான் சொன்னபடி கார்யம் செய்வதற்காக அன்றோ –
நீ நினைத்தபடி செய்யப் பார்த்தாய் ஆகில் பின்னை அவ் இருப்பிலே என்னை அழைத்துக் கொள்ளாயோ-
திருமலையிலே வந்து நின்று என்னுடைய சேஷத்வத்தையும்-உன்னுடைய சேஷித்வத்தையும்-எனக்கு அறிவித்தவனே –

யானே நீ ஆகி என்னை அளித்தானே –
என்னுடைய நினைவினை நீ உடையையாய்-என் கார்யம் செய்யக் கூடிய நீ-
இப்பொழுது நான் இரக்க இருக்கிறது என் –
நான் விரும்பாமல் இருக்க-இதற்கு முன்பு எல்லாம் நீயே அன்றோ எனக்கு வேண்டியவற்றைச் செய்து போந்தாய் –
இப்படிச் சொல்லச் செய்தேயும் இதனைத் தவிர்த்துக் கொடுக்க நினையாமையாலே பேசாது இருந்தான் –
நான் நிர்பந்திக்கச் செய்தேயும் கேளாதாரைப் போலே பேசாது இருக்கிறது என் -என்ன-
நான் பேசாது இருக்கிறேன் அல்லேன்-நீர் விடத் தக்கது என்று சொல்லுகிற இது தான் நாம் விரும்பி மேற்கொள்ளத் தக்கதாய் இருக்கின்றது –
ஆகையால் இது விடத்தக்கது இது கொள்ளத் தக்கது என்னும் வேறுபாட்டினை நாம் அறியகில்லோம்-
அறிந்த நீர் விடத் தக்கது என்பதனை எனக்கு இன்னது என்று சொல்லிக் காணீர் -நான் கழித்து தர -என்றான்
ஆகில் கேட்கலாகாதோ -என்று சொல்கிறார் –

பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்-இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே-
-உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம் உணர்வைப் பெற ஊர்ந்து -8-8-3-என்று அவன் தான் இவர் பக்கல் செய்ததனை-
இப்போது அவனுக்கு இவர் தாம் அறிவிக்கிறார் –
ஒரு கர்மம் செய்தது செய்ய மாட்டாமை இல்லை அன்றோ கழி பெரும் காதல் –
அது போலும் அன்றிக்கே -இது நிலை நிற்குமது அன்றோ-உயிர்களைத் தம் தாமுக்கு உரியன அல்லாதபடி-
வேறுபாட்டினை அடையும்படி பண்ண வல்ல-சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் -என்னும் புலன்கள் ஐந்தும் –
வறு நாற்றத்தினைக் காட்டி சில பொருள்களைத் தப்பாதபடி அகப்படுத்துமா போலே-
இந்த உயிரை அவ் விஷயங்களிலே கொடு போய் மூட்டி முடிக்கவற்றான-
மெய் வாய் கண் மூக்கு செவி -என்னும் ஞானேந்த்ரியங்கள் ஐந்தும்-
வாக்கு கால் கை பாயு உபத்தம் -என்னும் கர்மேந்த்ரியங்கள் ஐந்தும்-
நிலம் நீர் தீ கால் விண் -என்கிற ஐம் பெரும் பூதங்களும்-
காரிய நிலையினை அடைந்த உயிர் பொருளை பற்றிக் கிடக்கிற-மூலப் பிரகிருதி –
-மஹான் -அஹங்காரம் -மனம் -என்னும் இவைகளும்-ஆகிய உன்னுடைய மா மாயயை மங்க ஒட்டு-
காரண நிலையை அடைந்து தானே வேறு ஒரு நிலையை அடைதல் அன்றோ காரியமாகை ஆகிறது-
இவ் உயிர் ஏய் பிரகிருதி -மூலப் பிரகிருதி-மா மாயை-சரீரம்-

————————————————————————————————————-

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

ஈஸ்வர விரோதி நிரஸனம் -பலம்
மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க-மஹான் அகங்கார மனசு இவை -கெட இந்திரியங்கள் சூ விஷயங்கள் உடன் மங்கிப் போகும் படி
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்-தானே அபிமானம் அபி நிவேசம் உடன் -ஆத்மாவும் ஆத்மீயம் சரீரமும் தானே
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்-தேன்-செருக்கி -அதனால் பொழில் சிறப்பு
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே-இந்த திருமலைக்கு -மஹத் அகங்காரத்தில் அழிப்பதில் நோக்கு -என்றவாறு –
தானே அகங்காரத்துடன் வந்து அழிப்பார்-என்றவாறு –

நிகமத்தில்
மஹான் அஹங்காரம் இவை-முதலானவற்றின் விஷயமான-இத் திருவாய் மொழி-
திரு மால் இரும் சோலை மலையிலே-சொல்லிற்று -என்கிறார்

மான் ஆங்கார மனம் கெட –
மஹான் அஹங்காரம் மனம் -என்று சொல்லுகிற இவை-கெடும்படியாக-
இவற்றைக் கூறியது மூல பிரக்ருதிக்கும் உப லஷணம் –

ஐவர் வன்கையர் மங்க –
வன்கையர் ஐவர் மங்க –
இவற்றைக் கூறியது-கர்மேந்த்ரியங்கட்கும்-ஐம் புலன்களுக்கும்-ஐம் பெரும் பூதங்களுக்கும்-உப லஷணம் –
பின்னை அவன் இதற்கு சொல்லிற்று என் என்னில் –
இச் சரீரத்தில் செய்கிற விருப்பத்தினை தவிருகிறோம் எண்ணத் தீருமே அன்றோ –
அவன் செய்கிறோம் என்று தலை துலுக்கினால்-பின்னைப் பெற்றதாய் இருக்கத் தட்டில்லையே –

தான் ஆங்கார மாயப் புக்கு –
தான் என்னிடத்தில் ஆசை உடையவனாய் புக்கு -என்னுதல்
பெரிய செருக்குடனே புக்கு -என்னுதல் –

தானேதானே ஆனானைத் –
ஆத்மாவிலும் ஆத்மாவோடு சம்பந்தப் பட்ட பொருள்களிலும்-எனக்கு உண்டான ஆசையைத் தவிர்த்து-
தானே அபிமானத்துக்கு விஷயம் ஆனவனை-
அன்றிக்கே
இத்தலையில் இரக்கும் தன்மை ஒழிய தானே-இரப்பாளனுமாய்-இதனை விரும்புகின்றவனும் தானே ஆனான் -என்னுதல் –
பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானும் தானே ஆனான் என்றவாறு –

தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் மான் ஆங்காரத் திவை பத்தும் –
வண்டுகள் உடைய செருக்கே யான பொழில்களை உடைய-திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்-
அருளிச் செய்த ஆயிரத்திலும்
மகத்து முதலானவற்றின் உருவமான இச் சரீரத்தினை-ஒழித்து அருள வேண்டும் என்று சொன்ன இப்பத்தும்
அன்றிக்கே
மான் ஆங்காரத்து இவை பத்து -என்பதற்கு
பெரிய செருக்கோடு சொன்ன இப்பத்தும் -என்னுதல் –
பராங்குச ப்ருங்க ராஜம் -வண்டுகள் தேனை குடிக்கும் -ஆழ்வார் உடைய கமலப் பாதங்களில் தேனை அருந்தும் எம்பெருமானார் –

திருமால் இரும் சோலை மலைக்கே –
திருமலை விஷயமாய ஆயிற்று சொல்லிற்று –
அழகரைச்சொன்ன இடம் உண்டாகில் அதில் கற்பகத் தருவினை சொன்னதைப் போன்று-
திருமலையில் உள்ளன அடங்க உத்தேச்யமாக கடவன அன்றோ-
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும் சொன்னார்கள் அன்றோ –
திருவேங்கடமுடையானாகவும் ஆவேன் என்றவாறு –

—————————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ததீயே சீலே அதிகம்ய ஹரிம் அஸ்மின் இதம் உபைமி
ஸூ சரீர லோலா தத் தோஷ முக்தமபி
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் சார்த்தாம் சிகீரிஷும்
முனி சகுலு சப்தமதோ –

ததீயே சீலே அதிகம்ய ஹரிம் -அனைத்தையும் போக்கும் மானங்கார கெடும் அபகரிக்க
அஸ்மின் இதம் உபைமி -அடைகிறேன் அணைவேன்
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் பிரார்த்தனையை

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

அத்யாச்சர்ய ஸ்வ பாவாத் ஹ்ருதய கதத்தயா -ஸூவஸ்துதா பிரேரகத்வாத்
ஸ்வாமித்வாத் சர்வ பூதாந்தர அனுகதாதயாத் ஸூ வஸ்துதவ்
கர்த்ரு பாவாத் ஆபத் பந்துத்வ யோகாத் பகுவித ஸவித ஸ்தான
வத்த் வேனா தேவ ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி

1–அத்யாச்சர்ய ஸ்வ பாவாத்- ஹ்ருதய கதத்தயா -திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன்
மாயக் கவியாய் வந்து என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம்

2–ஸூவஸ்துதா பிரேரகத்வாத்-தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து

3–ஸ்வாமித்வாத் —என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்-அடுத்த பதிகார்த்தம் பொசிந்து காட்டுகிறார்

4–சர்வ பூதாந்தர அனுகதாதயாத்–உலகும் உயிரும் தானேயாய் நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி

5–ஸூ வஸ்துதவ் கர்த்ரு பாவாத்–பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே

6–ஆபத் பந்துத்வ யோகாத்–செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும் திருமால்

7–8–9-10–பகுவித ஸவித ஸ்தான வத்த் வேனா தேவ –பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான்-என்றும்
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே–என்றும்
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும் ஆழி வண்ணன் என் அம்மான்–என்றும்

ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி–திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே–

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 97-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-அவன் தேக சபலனாய்-ஆதரிக்க-இவர் -விரோதியான சரீரத்தை விடுவி -என்று
விடுவித்துக் கொண்டமை பேசின பாசுரத்தை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம்மோடு வந்து கலந்து-தமக்கு பரதந்த்ரனாய் தம் திரு மேனியிலே அத்ய அபி நிவிஷ்டனாய்
திரு மேனியோடே தம்மை ஸ்ரீ திரு நாட்டில் கொடு போக வேணும் என்று
அவன் தம் திருமேனியில் மிகவும் பண்ணுகிற சாபலத்தைக் கண்டு
நம் பக்கல் ஆதர அதிசயத்தால் அன்றோ-இவன் நம் உடம்பை ஆதரிக்கிறது என்று பார்த்து
இதன் தோஷம் அறியாமல்-ராகாந்தனாய் இருக்கிற இவனுக்கு
இதன் தோஷத்தை யுணர்த்தவே இத்தை தவிரும் என்று நினைத்து-இதன் தோஷங்களை அவனுக்கு அறிவிக்க
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே
அது தானே அவனுக்கு மேல் விழுகைக்கு உடலாக-எனக்கு இது மிகவும் அநபிமதமாய் இருக்கும்
ஆன பின்பு இத்தைக் கழிக்க வேணும் -என்று
இவர் அவன் திருவடிகளிலே தலையை மடுத்து சரணம் புக
இவர் விதி வகை பார்க்குமவன் ஆகையாலே
இவர்க்கு அநபிமதம் ஆகில்-வருந்தியும் நாம் இத்தை கழித்து கொடுக்கக் கடவோம்-என்று தலை துலுக்க
நம் சொலவைப் பரிபாலிப்பதே
இது ஒரு சீலம் இருந்தபடி என் –என்று தலை துலுக்குகிற-
செஞ்சொல் கவிகாள் லில் அர்த்தத்தை
செஞ்சொல் பரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————–

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—97-

———————————————————–

வியாக்யானம்–

செஞ்சொல் பரன் –
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகன் -என்கிறபடியே
செவ்விய சொல்லால் ஆன இத் திருவாய் மொழியால்-பிரதிபாதிக்கப் படுகிற
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இது தான் செவிக்கு இனிய செஞ்சொல் இறே –

தனது சீராரும் மேனி தனில் –
தனிச் சிறையில் விளப்புற்று
அஸ்நாதையாய் இருந்த பிராட்டி வடிவைக் காண-ஆசைப் பட்டால் போலே
பிறவி அஞ்சிறையிலே
ஜ்ஞான பக்த்யாதிகள் விஞ்சி இருக்கிற-விக்ரஹத்திலே –

வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக் கண்டு –
அதாவது
வஞ்சக் கள்வன் ஆகையாலே
நெஞ்சும் உயிரும் அவை உண்டு-தானே யாகி நிறைந்தான் -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டே -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய வாக்கை யதனுள் புக்கு -என்றும்
என்கொல் அம்மான் திருவருள்கள் நன்கு என் உடலம் கை விடான் -என்றும்
திருமால் இரும் சோலை மலையே -என்று தொடங்கி-ஒரு மா நொடியும் பிரியான் -என்றும்
இப்படி இவர் திரு மேனியை மேல் விழுந்து-அத்யாதரம் பண்ணுகிற படியைக் கண்டு-
உடலும் உயிரும் மங்க வொட்டு -என்றும்
பொங்கு ஐம்புலனும் என்று தொடங்கி –மானாங்கார மனங்கள் மங்க வொட்டு -என்றும்
இதன் தோஷ தர்சன பூர்வகமாக
அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –

கை விடுவித்துக் கொண்ட –
கை விடுவித்துக் கொள்ளுகை யாவது -அவன் காலைக் கட்டி
கை விடுவித்துக் கொண்டார்-என்றபடி –

கை விடுவித்துக் கொண்ட -திண் திறல் மாறன் –
சர்வ சக்தி-சரீரத்துடன் கொடு போக வேணும் என்று-கர க்ரஹணம் பண்ண
இவர்
சரண க்ரஹணம் பண்ணி-விடுவித்துக் கொண்ட த்ருடமான சக்தியை யுடைய-ஆழ்வார் –

நம் திரு –
சம்பச்ச சாத்விக ஜனச்ய -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாரான ஸ்ரீ மாறன்-நம்முடைய சம்பத்து –

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -185- திருவாய்மொழி – -10-6-1….10-6-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 23, 2016

அருள் பெறுவார் -பிரவேசம் –

பொய் நின்ற ஞானம் தொடங்கி -இவ்வளவும் வர –சர்வேஸ்வரனை ஆழ்வார் பின்தொடர்ந்த படி சொல்லிற்று –
இது தொடங்கி ஆழ்வாரைச் சர்வேஸ்வரன் பின் தொடருகிற படியைச் சொல்கிறது –

கண்ணன் கழலிணை யில் -இப்படி பக்தியின் தன்மையை உபதேசித்து-
கை ஒழிந்த பின் தன் பக்கலிலே இவர்க்கு விடாய் பெருகிற படியைக் கண்டு-
இவர்க்கு முன்பே விடாய்த்து திரு வாட்டாற்றிலே தங்கு வேட்டையாக -பரஸ்தானம் போலே -வந்து நிற்கிறவன் ஆகையாலே-
ஸ்வ ஸ்தானம் பரமபதம் அன்றோ -இவரைக் கொண்டு போகையிலே அவன் விரைவு மிக்கவன் ஆனான் –
இவர் விடாயின் அளவு அன்றே அவனுடைய விடாயின் அளவு –
சிரஞ்சீ வதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம்அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர -66-30-
ஒரு கணமும் நான் உயிர் தரித்து இருக்க மாட்டேன் -என்னும் ஏற்றம்-உண்டே அன்றோ அவன் விடாய்க்கு
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம்-பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் -9-6-10-

ஆழ்வாரும் நாமுமாய் அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து-அது செய்யும் இடத்தில்-
அனுபவத்துக்கு ஒரு பிரிவு வாராதபடி தன்னந்தனியே இருப்பது ஒரு தேச விசேடத்திலே கொடு போய் வைத்து-
அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து-அங்கனம் செய்யும் இடத்தில்-
இவருக்கு பர தந்த்ரனாய் இவர் ஏவுகிறபடி செய்தோமாக வேண்டும் என்று-
இவர் அனுமதி ஒழியச் செய்த மாட்டாதவனாய் நின்றான்-
சர்வேஸ்வரனை தாம் ஏவ மாட்டாரே தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே-
இப்படி தம் பக்கலிலே மிக்க காதலைச் செய்கிறவனுடைய மேன்மையையும்-
அப்படி மேன்மையை உடையவன் தம் பக்கல் பாரதந்த்ர்யனாய் தாழ நிற்கிற படியையும் நினைந்து-
இதற்கு உசாத் துணையாக இவ் உலக மக்களை பார்த்த இடத்து-நாட்டார் உடன் இயல் ஒழிந்து –
அவர்கள் ஐம்புல இன்பங்களுக்கு வசப் பட்டவர்களாய் அவற்றோடு பணி போந்து இருந்தார்கள்-
சோஸ்ச்னுதே ஸர்வான் காமான் -என்று அவன் உடன் கூடவே இருந்தே அனுபவிக்கும் முக்த நித்யர் போலே –
அவனைப் பார்த்த இடத்தில் மிக்க காதலை உடையவனாய் முன்னடி தோற்றாதே இருக்கிறவன்-
ஆகையாலே அவன் இதற்கு ஆளாக மாட்டு இற்றிலன்-
இனி அவன் திரு அருளுக்கு இலக்கான தாமும் தம்மோடு-உடன் கேடான நெஞ்சமேயாய் இருந்தது –
அந் நெஞ்சினைக் குறித்து-
அவனுடைய மேன்மை இருந்த படியும்-அப்படி மேன்மை உடையவன் நம் பக்கல் தாழ நின்ற நிலையும்
நாம் பெற்ற பேற்றின் கனம் இருந்தபடியும் எல்லாம் கண்டாயே-
நம் கார்யம் விழுந்தபடி கண்டாயே -என்று இதனை தம் திரு உள்ளத்தோடு கூட்டி இனியர் ஆகிறார் –

இதற்கு முன்பெல்லாம்-
சர்வேஸ்வரன் ஆகிறான் எல்லாரையும் ஏவுகின்றவனாய்ச்-ஸ்வ தந்த்ரனாய் இருப்பான் ஒருவன்-என்று இருந்தார்
இப்போது அங்கன் அன்று –
அடியார்கட்கு பரதந்த்ரப்பட்டு இருப்பதுவே அவனுடைய தன்மை என்கிறார்-
முன்பு எல்லாம் தம்மாலே பாரதந்த்ர்யத்தை இழந்தார்-
இப்போது அவனாலே பார தந்த்ர்யத்தை இழக்கிறார்-
அதுதான் -இருந்தும் வியந்து -என்ற திருவாய் மொழியில் சொல்லிற்று இல்லையே -என்னில்
அதைக் காட்டிலும் இதற்கு வாசி உண்டு –மூன்று தத்துக்கு பிழைத்த பிள்ளை என்ற பிரிவால் அன்றோ அங்கு –
இப்பொழுது -அடியார் தம் அடியனேன் -என்று காரணத்தோடு சொல்லுகிறார்-
சரம தசையில் தாம் நிற்பத்தால் வந்த விளைவு இது என்கிறார் –
நெடுமாற்கு அடிமை -பாடியதன் பயன் பெற்றார் –பாரதந்தர்யம் இழக்க முடியாதே –
நாம் ததீய சேஷத்வத்தில் நிற்கவே -அவனும் ஆஸ்ரித பாரதந்தர்யத்தில் நிலை நிற்கிறான் –

தெற்குக் கோடி திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் -ஆழ்வார் திரு நகருக்கு அருகில் –
கோதா பரளி இரண்டு ஆறுகளுக்கு நடுவில் -இரண்டு ஆற்றுக்கு நடுவில் வட்ட ஆறு -மலைக் குன்றத்தின் மேல் சயனத் திருக் கோலம்
இடது திருக்கையை கீழே வைத்து -நீண்ட கிரீடம் -ஆதி சேஷன் உடன் ஒன்றி
வசிஷ்டர் -ஐந்து மடங்கள் நீண்ட தபஸ் -கேசி தள்ளி கேசனை அழித்து அசுரர் கள்-இரண்டு நதிகள் கூட்டி அவன் மனைவி வந்து
-பூமா தேவி உயர்த்த –மலை மாடம் -மாடாக கோயில் திட்டு -மூவாட்டு புளா முகம் -அவ்விடம் ஆறு பிரிந்து –
ஆதி கேசவன் பெருமாள்
சிவ லிங்கம் ஹதஹீயரிஷி -சோமயாஜி -ரிஷி -சப்த ரிஷி வளர்க்க -வாழை மரம் தான் பெற்றோர் சொல்ல
-நாமே பெற்றோர் கர்ப்ப க்ருஹம் உள்ளே வைத்து அருள -அஷ்டாங்க விமானம் –
சைதன்யர் -கிருஷ்ண பக்தி தொடங்கி இங்கு உலகில் பரவி –
பிரணவ பாரதந்தர்யம் -ஆழ்வார் பிரார்த்தித்த படி -தனது நியமனம் அத்தை சொல்லி -திவ்ய தம்பதி -பின்னை கோல்-பிறந்திட்டாள்-
திவ்ய தேச பிராவண்யம் விட்டு -அவன் உடன் செல்ல -இத்தையே மருள் என்கிறார் -நெஞ்சுக்கு –
இந்த பிராவண்யம் போக்க தானே திரு வாட்டாற்று எம்பெருமான் இடம் –
அவன் தானே இவரை அங்கே கூட்டிச் செல்ல த்வரிக்கின்றான்-
மருள் ஒளி மட நெஞ்சே -இத்தையே அருளிச் செய்கிறார் –
உத்தவர் இடம் கிருஷ்ணன் பத்ரிகாஸ்ரமம் போக சொல்லி தன்னுடைச் சோதி எழுந்து அருளினான் –
தொழுது எழு –மனனே ஆரம்பித்தால் போலே நெஞ்சுக்கு -மருள் ஒழி என்று நிகாமிக்கிறார் இதில் –
-மனமுடையீர் -நெஞ்சு கூட இருந்தால் எத்தையும் சாதிக்கலாம்
இந்த விஷயீ காரத்துக்கு ஈடான தாமும் உடன் கேடான நெஞ்சும் -நாரணனை நண்ணினமே
-பெறாத பயன் பெறுமாறு -கழல் காணுமாறு அருளினான் என்று -நெஞ்சுக்கு அருளிச் செய்கிறார் –

மோக்ஷ தாநத்தில் பிராண பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -சூர்ணிகை -184-

——————————————————————————————–

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

சேஷத்வ காஷ்டையை உடைய – -நமக்கு -நிரவாதிக உபகாரம் பண்ணுவதற்காக உத்தியோகியா நின்றான்
-அது தானும் நாம் நியமித்த படியே செய்வதாக இரா நின்றான்
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
நிரவதிக பிரசாதம் பெரும் -அடையாளம் -இதுவே நிரூபிக்க தர்மம் -கைங்கர்யம் கிட்டே பெயர் –
அதுக்கு அடியானை சேஷத்வ ஞானம் உல்லார்க்கு அசாதாரண சேஷ பூதனான அடியேனுக்கு -திரு ஆழி ஆழ்வானைக் கை விடாமல் இருப்பது போலே
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே-தனது விஷயமாக -உத்தியுக்தனாக தயாராகி -அது ஸ்வ தந்த்ரனாக தான் நினைத்த படி செய்யாமல் –
அது நம் விதி வகையே இதில் -புருஷார்த்தம் ஆகையால் -இப்படி தானே செய்ய வேண்டும் –
வாட்டாற்றான் பணி வகையே மேலே சொல்லி -அவன் பணித்தது இவர் விதி விருப்பம் படியே என்று கொண்டானே –
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்-அஞ்ஞானம் சூழ்ந்த இந்த -நெஞ்சுக்கு –
அவன் இவன் என்று கூழேன் மின் திவ்ய தேச கைங்கர்யமே பிரதானம் என்று சொல்லி மருள் -பரித்யஜ்ய -அவன் அருளிச் செய்தால் போலே -இவரும் -இங்கு இருக்கும் காலத்தில் இதுவே தெருள் -அங்கு போகும் பொழுது இது மருள் ஆகுமே –
ஜகத்தில் -இனி அவன் விஷயீ காரம் பெற்ற பின்பு -இனியும் வேண்டேன் -பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யத்தில் ஈடு பட்டு இருந்தாலும் வேண்டேன்
-இவை எல்லாம் அவன் திரு உள்ளம் உகப்புக்காத தான்
இப்பொழுது நான் அவன் நினைவு அறிந்த நான் இனி இங்கு இருக்க இச்சிக்க மாட்டேன்
மருள் ஒழி மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே-மடப்பம் -பிடித்த பிடி விடாமல் -சபலமாக இருக்க வேண்டும்
-விஷயாந்தரம் இருந்து பகவத் பாகவத பிராவண்யம் -அவன் மனசால் பிறந்த நெஞ்சு சந்த்ர மா மனஸோ ஜாயதா -அன்றோ
அவன் திரு உள்ளம் படி தானே -செய்ய வேண்டும் -அவன் நினைவு ஒழிய அர்ச்சாவதார அனுபவ கைங்கர்யம்
-விபரீத ஞானம் விடு -என்று அன்றோ இங்கே அருளிச் செய்கிறார் –
ஸ்வ தந்த்ர அபி சந்தி கூடாதே -பெருமாள் நாட்டை ஆள சொன்னால் ஆள்வான் பாரதந்த்ர –
தான் நெஞ்சைப் பார்க்காமல் அவன் திரு உள்ளம் பார்த்தே செய்தானே
மோக்ஷ பிரதானத்துக்காக அன்றோ இங்கு எழுந்து அருளி -திவ்ய தேச பிரதான்யம் ஒழிக்க இங்கே வந்து சேவி
அவன் எண்ணமும் உன் எண்ணமும் ஒன்றாக வேணுமே

ஈஸ்வரன் நம்மை ஏற்றுக் கொள்கையில் ஒருப்படா நின்றான்-
அது தானும் நாம் விதித்த படி-செய்வானாய் இரா நின்றான்-என்கிறார்

அருள் பெறுவார் அடியார்-
காரணம் தான் இருக்கிறபடி –
அடியார் தம் அடியார் ஆகையாலே -நமது விதி வகையே அருள் தருவான் அமைகின்றான் –
திரி தந்தாகிலும் -தேவ பிரானுடை கரிய கோலம் திரு உரு காண்பன் –
சர்வேஸ்வரன் செய்யும் மிக்க அருளுக்கு பாத்திரமாக இருப்பவர் சிலர் உளர் –
அவர்கள் நமக்கு ஸ்வாமிகள்-அவர்கள் பக்கலிலே அவன் செய்த அருள்-நம்மளவும் வர வெள்ளம் கோத்தது காண் -என்கிறார்-
தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூநரதமான்-ஷிபாமி அஜஸ்ரம் அஸூபான் ஆஸூ ரிஷ் வேவ யோநிஷூ -ஸ்ரீ கீதை -16-19-
தன்னை வைகின்றவர்களையும் வெறுக்கின்ற வர்களையும் –
கொடிய தன்மை உள்ளவர்களையும் -பரி சுத்தம் இல்லாதவர்களையும்-மனிதரில் தாழ்ந்தவர்களையும்-
என்னை அடைவதற்கு தடைகளாக உள்ள பிறவிகளில்-சம்சாரத்தில் நான் போடுகிறேன்-என்கிறபடியே –
குழந்தை தீம்பிலே கை வளர்ந்தால் மாற்றிக் கொண்டு -வாய் வாய் -என்பாரைப் போலே
அவனால் சீறப் படுவார் சிலர் உளர் -அவர்களைப் போல் அன்றியே-
தேஷாம் சதத யுக்தாயாம் பஜதாம் ப்ரீத்தி பூர்வகம்-ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்தி தே-ஸ்ரீ கீதை -10-10-
என்னை அடைவதற்கு உரிய புத்தி யோகத்தை அவர்களுக்கு நான் கொடுக்கிறேன் –என்கிறபடியே
-அவனுடைய அருளுக்கு பாத்ரமாய் இருப்பார் சிலர் உளர் –அவர்கள் பக்கல் செய்யும் அருளை நம் பக்கலிலே செய்தான் –
அன்றிக்கே –
அரசனுக்கு புறம்பு ஒரு முறையிலே செல்லா நின்றாலும்-
தன் ஐஸ்வர் யத்தையும் கொடுத்து தன் உடம்பையும் கொடுக்குமே அன்றோ மனைவி விஷயத்தில்
அப்படியே அவன் தன்னை முற்றூட்டாக கொடுத்து அனுபவித்து தான் பரதந்த்ரனாய் இருக்கும் படி-இருப்பார் சிலர் உளர் –
அவர்கள் பக்கல் செய்யும் அருளை என் பக்கல் செய்தான் -என்னுமாம் –அஸ்மாத் அஸ்து துல்யோ பவத் -போலே –

அருள் பெறுவார் அடியார் – தன் அடியனேற்கு-
இருவருக்கும் நிரூபகம் இருக்கிறபடி –
இவர் -அருள் பெறுவார் அடியார் தம் அடியார்-
அவன் -ஆழியான்-
இருவருக்கும் நிரூபகர் அடியார்களே காணும் –
அடியனேற்கு –
விடுமாறு என்பது என் -என்றும்
நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் -என்றும்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க -என்றும் –
நான் சொன்ன அவ் வார்த்தையையே நினைத்து இருந்தான் காணும் –
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -பெரிய திருமொழி -2-6-10-என்கிறபடியே
இதனை ஆயிற்று இவர் தமக்கு ஸ்வரூபமாக நினைத்து இருப்பது –

ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் –
சர்வேஸ்வரன் நம் பக்கல் முழு நோக்காக நோக்கி மிக்க அருளிச் செய்வானாகா பாரியா நின்றான் –
திரு வாழியை ஒரு கண்ணாலே பார்ப்பது –
இவரை ஒரு கண்ணாலே பார்ப்பது -ஆகா நின்றான் –
விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல் விடல் இல் -2-9-11–என்கிறபடியே-
கையில் திரு ஆழியை விடல் அன்றோ உம்மை விடுவது -என்னா நின்றான்-
அவர்களை இட்டுத் தன்னை நிரூபிக்க வேண்டும்படி-இருத்தலின் -ஆழியான் -என்கிறார் –
அடியார் அடியனேன் -பன்மை ஒருமைக்கு வியாக்யானம் –
தஸ்மாத் ஷிப்ரம் சஹ அஸ்மாபி துல்யோபவதி ராகவ-விபீஷணோ மகா ப்ராஜ்ஞ்ஞா சஹித்வம் சாப்யுபைது ந-யுத்தம் -19-38
எங்களோடு ஒத்தவர் ஆகக் கடவர் -என்கிறபடியே
அவர்கள் எல்லார் பக்கலிலும் செய்யும் அருளை-என் ஒருவன் பக்கலிலும் செய்யா நின்றான் –
அவர்கள் அருள் பெறுவார் அடியாரான அடியர் ஆயிற்று –
இவனும் அருள் தருவான் அமைகின்றான் ஆயிற்று –ஆனு ரூப்பியம்-இருவருக்கும் -இத்தால் சொல்லிற்றே-

அமைகின்றான் –
பாதி உடன்பாடு குறை அற்றது-அவனுடைய பாரிப்பே மாத்ரமாய்-
அருளை குறை அறத் தருவதாக பாரியா நின்றான் –

அவன் மிக்க அருளை செய்வதாக பாரியா நின்றான் ஆகில் –
அவன் தான் சர்வேஸ்வரன் ஆகில் பின்னைக் கண் அழிவு என் -என்னில்
அது நமது விதி வகையே –
அது செய்யும் இடத்தில் நான் சொன்னபடி செய்தானாக வேண்டி இரா நின்றான் –
அது நமது விதி வகையே -என்பதற்கு
அது நமது புண்ணியத்திற்கு தகுதியாக அன்றோ -என்று முன்னைய பெரியோர்கள் நிர்வஹிப்பர்கள் –தன்னேற்றே ஏவ காரம்
இதனை எம்பெருமானார் கேட்டருளி
இத் திருவாய் மொழியிலே மேல் ஓடுகிற அர்த்தத்தோடு சேராது-
நாம் விதித்த படியே செய்வானாக இருந்தான் -என்கிறார் -என்று அருளிச் செய்வர் –சுரத்தில்-சொல்வதே இந்த பதிக ரசத்துக்கு சேரும் –
நான் செய்வேன் -அடியேனை பணி கொள்ளாயோ-இரண்டுக்கும் வாசி உண்டே -பிரார்த்தனை சுரத்தில் தோன்றுமே –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதச்த தே-அயோத்யா -31-25
பரவாநச்மி காகுத்ச த்வயி வர்ஷசதம் ஸ்திதே-ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -அயோத்யா -15-7-என்கிறபடியே
இவன் சொன்னபடியே செய்யா நின்றான் –
நமது சொல் வகையே -என்னாமல்-நமது விதி வகையே -என்பான் என் என்னில்-
விதியை மீறுவதில் பாபத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்-
தான் ஸ்வதந்த்ரனாய் நினைத்த படி செய்கைக்கு-தன் பக்கல் குறைவற்றாலும் -புருஷார்த்தமாக பிராட்டியும் இருக்க –
இத்தலையில் இச்சை ஒழிய கொடு போகானே அவன் –
புருடோத்தமன் ஆண்மையில் குறை வரும்படி செய்யானே –புருஷார்த்தம் ஆக வேண்டுமே –
நமது விதி வகையே –
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா-த்வயா நிஸ்ருஷ்டாத்மா பிரேன யத் யதா
ப்ரீயேன சேனாபதீனா ந்யயேதி தத்-ததா அனுஜாநத்தம் உதார வீஷணை-ஸ்தோத்ர ரத்னம் -42
சேனாபதி முதலியாராலே எந்தக் காரியம் எந்தப்படி-விண்ணப்பம் செய்யப் பட்டதோ
அந்த கார்யத்தை அந்தப் படியே நிறைந்த அருளாலே அனுமதி செய்கின்றவனான உன்னை -என்கிறபடியே
இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
சேனை முதலியார் சட்டையும் மயிர்க்கட்டும் கையும் பிரம்புமாய் வந்து புகுரப் புக்கவாறே
நாய்ச்சிமாரும் தானும் விரும்பியபடி இருக்குமது தவிர்ந்து-நாய்ச்சிமாரும் சிங்காசனத்திலே ஒரு மூலையிலே ஒதுங்க
தானும் வினயத்தோடே இருக்கும் ஆயிற்று-வயது சென்ற சேனாதிபதியை கண்ட அரசர் போலே
வான் இளவரசு-விண்ணாட்டவர் மூதுவர்-இவர் தாமும் இவ்விருப்புக்கு தண்ணீர் துரும்பாக ஒண்ணாது -என்று
உலகினை நிர்வாகம் செய்ய வேண்டுமவற்றை பாசுரப் பரப்பு அற விண்ணப்பம் செய்வார் ஒருவர் ஆயிற்று –
பிராட்டிமாரோடு இருக்குமதிலும் காட்டிலும் இனிதாய் இருக்குமே அன்றோ அவனுக்கு இவர் தம்மைக் காண-பிரியத்தாலே -அன்றோ
இன்னானை பிரமன் ஆக்க வேண்டாம்-இன்னானை மாற்ற வேண்டும்-என்று வேண்டுமவற்றை சுருங்க விண்ணப்பம் செய்வர்
ஐயர் யாதொன்று சொல்லிற்று அவை எல்லாம் அப்படியே-என்று கண்களாலே மேல் எழுத்து இட்டுக் கொடுக்கும்

இவ்வார்த்தை அருளிச் செய்த போது
கிடாம்பி ஆச்சானோடு அல்லாதாரோடு வாசி அற குமுழி நீர் உண்டது -ஆழம் கால் பட்டது –
ஆச்சான் பட்டர் இடம் மிகுந்த அன்பினை வைத்து இருப்பார்-
இளையாழ்வான் -ஆச்சானின் சிஷ்யர் -ஆச்சானைப் பார்த்து –
பட்டரை அடைந்த அடியவர்கள் எல்லாரைக் காட்டிலும் நீர் தாழ நின்று பழகுவது என் என்ன-நீ அன்று கண்டிலை காண்
எம்பெருமானார் பட்டர் கையிலே புத்தகத்தைக் கொடுத்து-திரு முன்பே ஒரு ஸ்லோகத்தை விண்ணப்பம் செய்வித்து
திருப் பிரம்புக்கு புறம்பாகக் கொண்டு புறப்பட்டு
சுற்றும் முற்றும் பார்த்து அருளி நம்முடையார் அடங்கலும் நம்மை நினைத்து இருக்குமாறு போலே இவனை
நினைத்து இருங்கோள் -என்று அருளிச் செய்தார்-

அருளுகிறான் சர்வேஸ்வரன் ஆகில்-அது தான் நாம் விதித்த படி செய்வானாய் இருந்தானாகில்
இனிக் கண் அழிவு என் -என்ன
இருள் தரும் மா ஞாலத்தே –
இனி நீயும் இசையும் இத்தனையே வேண்டுவது -இதுவே கண் அழிவு –
நான் அவன் வழியே போகதாகப் பார்த்தேன்-நீயும் அவன் வழியே போகப் பாராய்-
நீர் தான் அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன –
இருள் தரும் மா ஞாலமாக இருந்ததே-
இவ் உலகமானது இருக்க இருக்க அறிவின்மையைத் தருவது-ஒன்றாயிற்று –
ஸ்ரீ பிரகலாத ஆழ்வானையும் அன்றோ எதிரிடப் பண்ணிற்று-
வான் உயிர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் -8-1-9- என்று நினைத்து இருந்தது-
ஒரு மயக்கம் உண்டு முன்பு -இப்போது அது தவிர்ந்தேன் -என்பார் -இனி -என்கிறார் –
அது தவிர வேண்டுவான் என்னில் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய சேர்க்கைக்கு உடலாக இருக்கையாலும்-
உகந்து அருளின நிலங்களில் உண்டான அன்பின் மிகுதியாலும் ஆக
அங்கே இருக்கில் என் இங்கே இருக்கில் என்
அவன் எல்லைக்கு உள்ளே கிடக்கும் அத்தனை அன்றோ வேண்டுவது என்று இருந்தோம்
அதுவேயாகப் பெறாதே -மற்றைப் படிக்கு உடலாக இருந்தது –
அதாவது -இச் சரீரத்துக்கு வசப்பட்டவன் ஆக்கி ஐம்புல இன்பங்களிலே கொடு போய் மூட்டும்
இவ் உலகத்தின் தன்மையை நினைந்த பின்பு பின்பு விடுவதாகவே துணிந்தேன் –

யான் வேண்டேன் –
என் புத்தியால் விட்டேன் –
அவன் இருத்தில் செய்யலாவது இல்லை-ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன –

மருள் ஒழி நீ –
உன்னது -ஒரு நினைவு உண்டு -அதனைத் தவிரப் பார் என்றது –
உகந்து அருளின திவ்ய தேசங்களில் உள்ள ஈடுபாட்டை நீக்கு -என்கிறார் –
தீ வினை உள்ளத்தின் சார்வு அல்லவாகித் தெளி விசும்பு ஏறல் உற்றால்-
திரு வாறன் விளை யதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கோல் என் சிந்தனை -என்கிறபடியே
விரோதி கழிந்து போம் வழி எல்லாம் போய்-இது பரமபததுக்கு போம் வழி
இது திரு வாறன் விளைக்குப் போம் வழி -என்றால்
அடையத் தக்க அப் பரம் பொருள் தான் இங்கே வந்து கிட்டிற்று ஆகில் இனி இங்கே அடிமை செய்ய அமையாதோ-
என்று மயங்கி இருப்பது ஓன்று உண்டு –
அதனைத் தவிரப் பார் -என்றபடி –
மருள் -அறிவின்மை –

மட நெஞ்சே –
நாம் அடைய விரும்பிய அப் பரம் பொருள் அண்மையில் இருக்கிறது என்று இதனையே-
பார்க்கிறாய் இத்தனை போக்கி
நம்மையும் பார்க்க வேண்டாவோ –
வாட்டாற்றான் அடி வணங்கு –
நம்முடைய நலத்தையே விரும்புகிறவன் வழியே போய் அவனை அனுபவிக்கப் பாராய்
நம்மை பரம பதத்துக்கு கொண்டு போக இங்கே வந்து இருப்பவன்-
அடி வணங்கு -எனபது அவனுடைய கருத்துக்கு இணங்கு -நமஸ்காரம் பொருள் இல்லை –
உகந்து அருளின நிலங்களிலே வந்து நிற்கிறது நம்மை அவ்வருகே கொடு போகைக்காக இருக்கும் –
நீயும் அவன் நினைவில் போகப் பாராய் –
அடி வணங்குகை யாவது -ஈர் அரசு தவிர்க்கை அன்றோ –

—————————————————————————————————————

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

சர்வ பிரகார உபகாரகன் -நிருபாதிக பந்து -பூர்வ உபகார பரம்பரையை ஸ்மரிக்கிறார்
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்-மகா பிருத்வியில் ஜென்ம சம்பந்தம் -அறுக்கைக்காக-
இங்கே ஆஸ்ரித சுலபனாகி -திருவடிகளை ஆஸ்ரயித்து
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்-பெருமாள் திரு நாமம் -போக பிரதிபந்தகங்கள்
-கேசி அசுரன் -அழித்து -கண்ணன் -இங்கு ஸ்தல புராணம் கேசி அரக்கன் -காமாதி தோஷம் போக்கி அடிமை கொள்ளுவான்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து-பல படிகளால் பஹு வித கீதங்களால் பாடி -கைங்கர்யம் பண்ணி
அவித்யாதி சவாசனமாகப் போக்கி
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே-அஹங்காராதி தூஷித்தார் லோகத்தார் -அடியார்கள் உடன் கூடுவார் –
உண்டியே உடைய -உகந்து ஓடும் மண்டலத்துடன் கூடாமல்
நிருபாதிக பந்து பலம் கொடுக்க வந்த நாரணனைக் கிட்டப் பெற்றோம்
மடப்பம் -முற்சங்கம் 1000/நடு சங்கம் 5000/கடை சங்கம் 2000/வருஷங்கள் -என்னுடன் உடன் பட்டு பவ்யமான நெஞ்சு இங்கு
-முன் பாசுரம் பிடித்த பிடி விடாமல் -உபகாரங்கள் கேட்டாயே –

விதி வகையே -என்று-கேவலம் பகவானுடைய கிருபையால்-வந்ததாகச் சொல்லுகிறது என் என்னில்-
அடியிலே-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றிலோமோ நாம் -என்ன-
நாம் விரும்பிய அளவோ பெற்றது -என்கிறார்-
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியன் -உன் தன்னை பிறவி -புண்ணியம் யாம் உடையோம் -பாக்யம் விதி புண்ணியம் அவனே –

நாம் விரும்பிய அளவோ பெற்றது -என்றதற்கு தகுதியாக-மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –வாட்டாற்றான் அடி வணங்கி-
கேசவன் எம்பெருமானை –பாட்டாயே பல பாடிப் – பழ வினைகள் பற்று அறுத்து-நாட்டாரோடு இயல்வு ஒழிந்து- நாரணனை நண்ணினமே –
கேட்டாயே மட நெஞ்சே-
இவை எல்லாம் அவன் வழியாக வந்தனவாக இருந்தனவோ-
நாம் இரந்து பெற்றனவாக இருந்தனவோ –
இப்பிறவி நீங்க வேண்டும் என்னும் இவ்வளவே அன்றோ நாம் விரும்பியது-
கெடுவாய் -நாம் விரும்பிய அளவு அறிதியே –
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –
மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –வாட்டாற்றான் அடி வணங்கி-
இந்த உடலின் சம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேண்டும் அன்றோ-
நாம் சர்வேஸ்வரன் திருவடிகளைப் பற்றியது –
அதற்கு மேலே நம்மை அவன் அடிமையும் கொண்டானே கண்டாயே-
வாக்கினாலாய அடிமை அன்றோ கொண்டது -பாட்டாய பல பாடுதல் –

கேசவன் எம்பெருமானை –
கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரனை -என்றது
கேசியை கொன்றால் போல் நம் விரோதிகளை நீக்கி-நம்முடைய அடிமைத் திறத்தினை நிலை நிறுத்தி-
நமக்கு ஸ்வாமியாய் உள்ளவனை -என்றபடி –
அன்றிக்கே –நீண்ட மயிரை உடையவன் தன் அழகினைக் காட்டி-நம்மை அடிமை கொண்டவன் -என்றுமாம் –

அவ்வளவேயோ –
பாட்டாயே பல பாடிப் –
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி அன்றோ -1-5-11-
நம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்டபடி –

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை செய்து அடிமை கொள்ள வேண்டும் -என்று நாம் விரும்ப
அதுவும் கிடக்கச் செய்தே அடிமை கொண்டான் கண்டாயே-இங்கேயே இந்த தேகத்துடன் -அடிமை கொண்டான் கண்டாயே-
பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –
நாம் அடிமை செய்ய-அடைவதற்குத் தடைகளாய்-பலகாலமாக ஈட்டப்பட்ட அவித்யை முதலியவைகள்-எல்லாம் போகப் பெற்ற படியைக் கண்டாயே –
இவை வினை அறுக்க குடித்த வேப்பங்குடிநீர் இது காணும் –
கேசவனாகிய மருத்துவனை –
மேரு மந்திர மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண-கேசவம் வைத்தியம் ஆசாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
இவன் பலகாலமாக ஈட்டின இவை -எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த
இறைவன் போக்கப் புக்கால் ஒரு காலே போகலை இருக்கும் அன்றோ –

நாட்டாரோடு இயல்வு ஒழிந்து –
உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு -பெருமாள் திருமொழி -3-4-தொற்று அற பெற்றபடி கண்டாயே –
யானே என் தனதே -2-9-9-என்று யான்-எனது -என்னும் செருக்குகளுக்கு வசப் பட்டவர்களாய்-இருப்பவர்களோடு சம்பந்தம் அறப் பெற்றோம் –
ஒ ஒ உலகினது இயல்பே -திருவாசிரியம் -6
இவை என்ன உலகு இயற்கை -4-9-1-
கொடு உலகம் காட்டேல் -4-9-7-என்னப் பண்ணினபடி கண்டாயே –
உங்களோடு எங்களிடை இல்லை -8-2-7- என்று கழிந்தவரே அன்றோ –

நாரணனை நண்ணினமே –
ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களை விட்ட அளவேயோ-
ஒரு காரணமே இல்லாமல் பந்துவாக இருக்கும் சர்வேஸ்வரனை பற்றவும் பெற்றோம் –
விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே -இதனாலே தானே உபதேசிக்கிறார் –
முக்தனுக்கு இவை எல்லாம் சர்வேஸ்வரன் உடைமைப் பொருள் -என்னும் தன்மையாலே உத்தேச்யம் ஆகின்ற அன்றோ இவைதாம்-
தானே ஆக்கி உண்டு களித்தல் தவிர்ந்து-தந்தையோடு ஒன்றாக உண்டு களித்து ஜீவிப்பாரைப் போலே காணும் –
படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ-
நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி

கேட்டாயே மட நெஞ்சே –
வேண்டுவன கேட்டியேல் -ஆண்டாள் அழகை பார்த்து மயங்கி இருந்தானே கிருஷ்ணன்
-அது போலே இங்கும் நெஞ்சு சப்ததோஸ்மி – திமிர் கொண்டால் போல் நிற்குமே –
பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து-வகாதது வகுத்தது என்று திமிர்த்து இருக்கிறாயோ-இதனை அனுபவியா நின்றாயோ –
கிடையாதது கிடைத்த திருஷ்டாந்தம் சொல்கிறார் மேல்-
சௌமித்ரே புங்க்ஷ்வ போகான் தவம் –சுமத்ரையின் மகனே நீ விரும்பிய இன்பங்களை நுகர்வாய் -என்றும்
வைதேஹி ரமசே கச்சித் சித்ரகூடே மயா சஹ-பஸ்யந்தி விவிதான் பாவான் மனோ வாக்காய சம்யதான் -அயோத்யா -94-18
ஜனக குல த்தில் பிறந்தவளே -நீ முக் கரணங்களையும் ஒருமைப் படுத்தினவளாய் –
பல விதமான பொருள்களையும் பார்த்துக் கொண்டு என்னோடு கூட-சித்ரகூட பர்வதத்தில் களிக்கிறாயா -என்றும் வருமா போலே-

மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –வாட்டாற்றான் அடி வணங்கி-கேசவன் எம்பெருமானை –
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து-நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே –கேட்டாயே மட நெஞ்சே-என்று அந்வயம்

———————————————————————————-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

நாம் தரிக்க வேண்டிய காரியத்தில் அவன் தரிக்க -நாம் நினைத்த அளவு இல்லையே
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி-மேன்மைக்கும் -நீர்மைக்கும் -போக்யத்தைக்கும் -பிரகாசமான திரு நாமங்கள்
-நிருபாதிக பந்துவை கிட்டப் பெற்றோம் மா மாயன் மாதவன் வைகுந்தன் -ஒவ் ஒன்றுக்கும் சகஸ்ர நாமங்கள் உண்டே
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று-பூ லோகத்தில் குண சம்பத்துக்கள் -சீலம் -இத்யாதி இதுவே வளம் இங்கு
-தானே வந்து -நாம் பிரார்த்திக்காமல் -நம் பாக்கள் ஒரு ஹேது இன்றிக்கு இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே-தவறியா நின்றான் -அதுவும் நம் விதிப்படியே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே-பல மடங்கு மேலே அன்றோ அருளுகிறார் -அனுபவ உபயோகியான நெஞ்சு
இவை எல்லாம் -நாம் போக வேண்டும் அர்த்திக்க வேண்டும் த்வரிக்க வேண்டும் -எண்ணினோம்
அவனே வந்து -அவன் த்வரிக்க –அபேக்ஷிக்கையும் -ஆழ்வார் முகம் பார்த்து இருக்கின்றான் –

நெஞ்சே – நம்மை அங்கீ கரிக்க வல்லனே-என்று நாம் இருக்க –அவ்வளவு அன்றிக்கே பலிக்கிற படி-என் -என்கிறார்-
இஷுவாகு வம்ச ராகு குல நாயகன் கிடைப்பானோ என்று நாம் இருக்க ராக்ஷஸ குல தம்பி கிடைப்பானோ என்று அன்றோ பெருமாள் இருந்தார் –

மோஷ தானத்தில் பிரணத பாரதந்த்ர்யம்-வளம் மிக்க நதியிலே கரை புரளும் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-சூர்ணிகை -85

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி –
நாராயணனை நாமங்கள் பல சொல்லி –நண்ணினம்-
அடையத் தக்க சம்பந்தத்தை உடையவனான சர்வேஸ்வரனை கிட்டப் பெற்றோம் –
கிம் தத்ர பஹூபி மந்தரை கிம் தத்ர பஹூபி விரதை-நமோ நாராயணாயேதி மந்திர சர்வார்த்த சாதக -என்கிறபடியே
மோஷ மாகிற பலத்தை விரும்பினால் இதுவே அமையும் –
ப்ரீதியினாலே தூண்டப் பட்டவர்களாகி திரு நாமங்கள் பல வற்றையும் சொல்லி என்பார் -நாமங்கள் பல சொல்லி -என்கிறார் –

மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் –
பரமபதத்தில் காட்டிலும் செல்வம் மிக்கு இருந்துள்ள-திரு வாட்டாற்றினை தனக்கு நிரூபகமாக உடையவன்-
வளம் -செல்வம்-
காக்கப் படுகின்ற பொருள்கள் குறைவற்ற தேசம் ஆகையாலே-
காக்கிரவனுக்கு செல்வம் மிக்கு இருக்கும் இங்கு-
கைங்கர்யத்துக்கு இடையீடு இல்லாமையாலே அடியவனுக்கு செல்வம் மிக்கு இருக்கும் அங்கு –

வந்து –
நாம் செல்ல வேண்டும் தேசம் அடங்கத் தானே வந்து-

இன்று –
நம் பக்கல் இதற்கு அடியாக இருப்பது ஓன்று நென்னேற்று இல்லை
இன்று இங்கனே விடியக் கண்டது இத்தனை –

விண்ணுலகம் தருவானாய்-
அங்கே ஒரு குடி இருப்பு மாத்ரம் கொடுத்து விடுவானாய் இருக்கின்றிலன் –
வானவர் நாடு -8-9-8-
ஆண்மின்கள் வானகம் -10-9-6-
என்கிற பொதுவினை அறுத்து நமக்கே தருவானாக விரையா நின்றான்-
ஆவது அழிவது ஆகிற இந்த உலகம் இவருக்கு தரம் அன்று என்று காணும் அவன் நினைவு-
இவர்க்கே கொடுக்கை யாவது -இவர் வேண்டிக் கொண்டவாறே -வழு விலா அடிமையைக் கொடுக்கையே அன்றோ –

நம்மைப் போலே ஆறி இருக்கின்றிலன் -என்பார்
விரைகின்றான் -என்கிறார்
சிறப்பில் வீடு இறப்பில் எய்துக எய்தற்க –8-9-5-என்று ஒரு ஆற்றல் -பொறை உண்டே -அன்றோ நமக்கு-
தான் முற்பாடனாய் சரக்கு கட்டி புறப்பட்டு நிற்பது-
இவர் தாழ்ந்தார் என்று மீளாப் போய் புக்கு-ஆழ்வீர் போரீரோ போரீரோ-என்று பதரா நின்றான் –
ஒரு கார்யப் பாட்டாலே வைத்தானாய்-தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலை அருள –
அக்கார்யம் முடியும் அளவு ஆனவாறே விரையா நின்றான் –
சர்வ சக்திமான தனக்கும் முறையிலே செய்தல் பற்றாதபடி ஆயிற்று விரைவு இருக்கிறபடி-
நினைத்த கார்யம் செய்யும் அளவும் பொறுக்கிலன் ஆயிற்று-
இப்படிச் செய்ய நினையா நின்றான் ஆகில் நினைக்கிறான் –
தான் சர்வ சக்திமான சர்வேஸ்வரன் ஆகில் பின்னை அங்கன் விரைய வேண்டுகிறது என் -என்னில்-

விதி வகையே –
நாம் சொல்லப் பரமபதம் தந்தானாக வேண்டும் என்று இரா நின்றான்-
எம்மா வீட்டு திறமும் செப்பம் -2-9-1-என்றாரே-அது தவிர்ந்து-
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -10-10-6-
திரு ஆணை நின் ஆணை -10-10-2-
என்று தடுத்தும் வளைத்தும் செய்தால் பின்பு கொடுப்பதாக இரா நின்றான் –

விதி வகையே -விண்ணுலகம் தருவானாய் -விரைகின்றான் –
இவருக்கு ருசி பிறப்பதற்கு முன்பு தான் எதிர் சூழல் புக்கு விரைந்து திரிந்தான்-
ருசி பிறந்த பின்பு இவர் விரையத் தொடங்கினார்-
அது கண்டு அவனும் இவர் அளவு அல்லாதபடி விரைகின்றான்-அது கண்டு இவர் ஆச்சர்யப் படுகிறார்-
இவனுக்கு ருசி பிறக்கும் அளவு அன்றோ அவன் ஆறி இருப்பது –
இவனுக்கு அது உண்டானால் பின்னை பேற்று அளவும் செல்ல விரைவான் அவன் ஆயிற்று –
உடையவன் அன்றோ உடைமையை பெறுகைக்கு விரைவான் –

எண்ணினவாறு ஆகா –
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று இவ்வளவு அன்றோ நாம் எண்ணிற்று-
அவன் விரைய வேண்டும் என்று எண்ணினோமோ –

இக் கருமங்கள் –
பகவத் விஹயத்தில் தாம் தாம் எண்ணி இருந்த அளவு அன்று காண் கார்யம் பலிக்கும் படி-
உலக மக்கள் சிலரை என் கார்யத்துக்கு நீ கடவை என்று சொன்னாலும்-
பின்னையும் பேற்று அளவு செல்ல தானே முடர்ச்சி செய்ய வேண்டுமே-
அப்படியே நினைத்திராதே கொள் இவ்விஷயத்திலும் –அவன் எண்ணம் தானே பலமாகும் -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –
இ -சுட்டிக் காட்டுகிறார் –

என் நெஞ்சே –
அவன் முறையிலே விரைய நாம் பெற்றது-நீ முறையிலே நிற்கையால் அன்றோ-
பிறவிக்கு காரணமாகை தவிர்ந்து-மோஷத்திற்கு காரணமாகை அன்றோ-
உன்னாலே வந்த நிறைவு அன்றோ இவை எல்லாம் –

————————————————————————————————

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

ஆஸ்ரித ரக்ஷணத்தில் பக்ஷ பாதி -நமக்கு நிரவாதிக உபகாரகன் –
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து-அந்நிய பாரமான நெஞ்சை வசீகரித்து
இந்த இருப்பில் இருமை பெருமை -திராவிட சாஸ்திரம் -இவை -மொழிந்து -என்னமாய் பாடினது என்று ஸ்லாக்க்யம்
தானே பிரவர்த்தகராக இருந்து அருளிச் செய்து -மேலும் செய்ய பாரித்து இருக்கிறான்
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்-பிராத்வேஷ பூயிஷ்டம் -நோய் நின்ற இடம் பரிகரிப்பார் போலே
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்-மன்னர் அஞ்சும் படி பாண்டவர்களுக்காக ஆயுதம் எடேன் என்று சொல்லி எடுத்து -பக்ஷ பாதி
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-பகவத் பிரவண்யத்தில் -இந்த ஆபத்தானங்களால் நமக்கு ஸ்வாமி –

சர்வேஸ்வரன் நாம் விதித்த படியே-செய்வானாக சொன்ன இது-நடக்கக் கூடியதாமோ -என்னில்
அவன் அடியார்க்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும்-தன்மையை நினைக்கும் போது-கூடாதது இல்லை காண் –என்கிறார்-

என் நெஞ்சத்து உள் இருந்து-
பல காலம் இவ் உலகத்திலே தன்னை ஒழிந்த ஐம் புலன்-இன்பங்களை உகந்து போந்தது என்றாயிற்று-
இவர் என் நெஞ்சு -என்று இறாய்க்கிறது
இதில் குணமும் குற்றமும் கிடந்தபடி கிடக்க இவர் -என்னது -என்றதுவே காரணமாக-அவன் மேல் விழா நின்றான்-
இவர் -என் நெஞ்சு -என்று புறம்பே கால் வாங்கா நின்றார்-
அவன் அதுவே காரணமாக உள்ளே போக அடி இடா நின்றான் –
விடாயர் மேலில் நீரை நீக்கி உள்ளே ஆழ முழுகிக் கிடக்குமாறு போலே-நெஞ்சின் உள்ளே புகுந்தார் என்பார்-
-உள் என்கிறார் –

இருந்து –
தனக்கு அவ்வருகு ஒரு விபூதி உண்டாகவும் -அங்கே போவானாகவும் நினைக்கின்றிலன் –
நிலையியல் பொருள் போலே இருந்து –

இங்கு –
அங்கே இல்லாத செல்வத்தையும் இங்கே உண்டாக்கினான் –திருவாய் மொழி உண்டாக்கி –

இருந்தமிழ் –
அந்த பரமபதத்துக்கும் அடங்காதபடி ஆயிற்று இவற்றின் பெருமை –
கேட்டு ஆரார் -10-6-11-என்னக் கடவது அன்றோ –

நூல் –
பின்பு உள்ளார்க்கும் இது கொண்டு இலக்கணம் கட்டலாம்படி ஆயிற்று இவை இருப்பது –
இவர் ஆற்றாமையால் சொல்லச் செய்தேயும் -அது எல்லா இலக்கணங்கள் உடன் கூடும்படி சொல்லுவித்தான் ஆயிற்று –

இவை –
இன்னது செய்தான் என்னப் புக்கு-
நடுவே -இவை -என்று அனுபவிக்கிறார் -ஆயிற்று –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி -பேர் முக்கியம் போலே -இங்கும் – இவை -என்று அனுபவிக்கிறார் –
என்ன ஏற்றம் என்று அனுசந்திக்கிறார் இவை என்று –

மொழிந்து –
ஒருவன் பாடின கவியை கற்றுச் சொன்னவனும்-தனக்கு அதிலே குவாளாக சம்பந்தம் உண்டாக தருக்கி இருப்பன் –
அதுவும் நினைத்து இருக்கின்றிலர் காணும் இவர் –
என் முன் சொல்லும் -7-9-2-என்றவற்றையும் ஒன்றாக நினைக்கின்றிலர்-அதனால் மொழிவித்து என்னாமல் மொழிந்து என்கிறார் –

வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் –பகவான் என்றால் அதிர்ந்து இருக்கும்படி-
திண்ணியதான நெஞ்சை உடைய இரணியன் உடைய-முரட்டு நெஞ்சினை
வருத்தம் இன்றியே இடந்த திரு வாட்டாற்றான் –
முன்பு தமப்பன் பகையாக சிறுக்கனுக்கு உதவினவன் நமக்கு உதவனோ -எனபது கருத்து –
செருக்கு கிடந்த இடத்தினை -மார்வினை -குட்டமிட்டு -பள்ளம் எடுத்து -இடந்தான் காணும்
வாட்டாற்றான் –
பிற்பாடற்கு உதவுகைக்காக திரு வாட்டாற்றிலே வசிக்கிறவன்-
அவன் -பிரகலாதன் -நெஞ்சில் குறை தீர்த்தாப் போலே-நம் நெஞ்சில் குறை தீர்க்க வந்து நிற்கிறவன் –

மன் அஞ்சப் –
அதிரதர் மகாரதர் -என்ற பேர் பெற்றவர்கள் அடங்கலும்-சிங்கத்தினைக் கண்ட நரி போலே குலையும்படியாக -என்றது
அரசர் கூட்டம் அடங்கலும் அஞ்சும்படியாக -என்றபடி-
மன் -சாதி ஒருமை

பாரதத்து பாண்டவர்க்காய் –
இன்னார் தூதன் -பெரிய திருமொழி -2-2-3- என்னும்படி அவர்களுக்கு கை ஆளாய் –

படை தொட்டான் –
படை எடுத்தான்-படை விட்டான் -என்னப் பெற்றது இல்லை-
தான் மேற்கொண்ட குறிக்கோளை குலைத்தான் இத்தனையே –கார்யம் கொள்ளப் பெற்றது இல்லை-
சத்ய சங்கல்பன் என்றது அடியார்களை ஒழிந்த இடத்தில் அன்றோ-
விடா விட்டது அர்ஜுனன் -நீ ஆயுதம் விடுகை எனக்கு தாழ்வு என்கையாலே-ஆகில் தவிரலாகாதோ -என்று தவிர்ந்தான் –
மன்னர் மறுக-பெரியாழ்வார் திருமொழி -4-2-7-
அர்ஜுனன் குதிரைகள் இளைத்த அளவிலே கடினமான இடத்திலே நீர் நரம்பு அறிபவன் ஆகையாலே-
வாருண அஸ்த்ரத்தை விட்டு அங்கே நீரை உண்டாக்கி-குதிரைகளை விட்டு நீர் ஊட்டி புரட்டி எழுப்பிக் கொடு போந்து-
பூட்டிக் கொண்டு வந்து-முன்னே நிறுத்தின இதனைக் கண்ட-அரசர்கள் கூட்டம் அடைய-அஞ்சும் படி -குடல் மறுக-

ஆஸ்ரித பாரதந்தர்யம் குணம் உண்டே
நெஞ்சு அநு கூலித்தது-
அல்லேன் என்கைக்கு நீ உண்டு –
ஆவோம் என்கைக்கு அவன் உண்டு –
அவனை பிரேரிக்கைக்கு கிருபை உண்டு -காருண்ய ரூபை ஸ்ரீ மகா லஷ்மி உண்டே –
நமக்கு அருள் பண்ணியே விடும் –
விண்ணுலகம் பேற்றைக் கொடுத்தே தீருவான் –
இசைவிக்க அவன் உண்டு –
இசைந்த பின்பு கார்யம் முடிக்க சம்பந்தம் உண்டே -நம் பெருமான் –
பேறு கிட்டியே தீரும்

———————————————————————————————————————–

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-

அவன் அருளிச் செய்த பிரகாரத்தால் -பரமபதம் -இவர் பிரார்த்தித்தையே தனக்கு யுக்தி ஆக்கி -திருவடிகளை தலை மேல் வைத்தான்
வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே-செல்வதற்கு உறுப்பாக -அர்ச்சிராதி கத்தியை உண்டாக்கிக் தந்து -பாத்தாலே கொண்டு போக
பாண்டே பரமன் பணித்த பணி வகையே என்கிற படியே
நான் ஏறப் பெறுகின்றேன் -அவன் நினைவே நினைவாகும் படி பரதந்த்ரனான நான் -பெறா நிற்கிறேன் -இதற்கு அடியாக
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை-மது -மலர் உடைய திருத்த துழாய் செவ்வி பெற்று விளங்கும் திருவடிகள்
-தர்ச நீய ஆகாரமான பெரிய திருவடி தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-விரும்பி ஏறி ஆஸ்ரித அர்த்தமாக சஞ்சரிக்கும் –
அவனுடைய போக்யமான திருவடிகளை தலை மேலே பெற்ற பின்பு -நரகத்தை நகு நெஞ்சே-சிரித்து -கேலி தோற்ற – அவமரியாதை பண்ணி போ

அவன் பரம பதத்துக்கு போக-அடியார்க்கு வைத்த-அர்ச்சிராதி கத்தியாலே -போகப் பேரா நின்றேன்-
எப்போதும் அடைந்து உள்ள நித்ய சூரிகளைப் போலே-நானும் அங்கீகரிக்கவும் பெற்றேன் –என்கிறார்-

வான் ஏற வழி தந்த –
பரம பதத்தில் பொய் புகுகைக்கு -அர்ச்சிராதி மார்க்கத்தைத் தந்த –
பரமபதத்தை பெறுவதில் காட்டிலும் அவ்வருகே ஒரு பெரும் பேறு என்னும்படி அன்றோ -அர்ச்சிராதி -அடைதல் –
போம் வழியைத் தரும் -3-9-3-என்று ஈடு படும்படி அன்றோ அதனுடைய சிறப்பு இருப்பது –
போவான் போகின்றார் -போவதற்கு என்று போவார் -அர்ச்சிராதி கதியே ஸ்வயம் பிரயோஜனம் -மார்க்கமே -சீர்ஷம் –

வாட்டாற்றான் –
இப் பேற்றுக்கு கிருஷி செய்த இடம் –
வித்யை தாய் ஆச்சார்யன் தந்தை பாலும் அமுதமாகிய திருமால் திரு நாமம் –
திருமந்திரம் சரடு -வானவர் போகம் பெரும் களிப்பாக -உடையவன் இடம் உடைமை போவதால் பெரும் களிப்பு உண்டாகும் -பெரிய திருக்கல்யாணம்

பணி வகையே –
அவன் திரு உள்ளம் ஆனபடியே -என்றது-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்றதனைச் சொல்லுகிறார் –
பண்டே பரமன் பனித்த பணி வகையே -10-4-9-என்றாரே அன்றோ –
அன்றிக்கே-மரணமானால் -9-10-5- என்றதனை சொல்லிற்று ஆகவுமாம் –

நான் ஏறப் பெறுகின்றேன் –
கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரைக் கண்டால் -திரு விருத்தம்-30–என்று-
தூது விட்டு பார்த்து இருக்கக் கூடிய நான் உனக்குச் சொல்ல வேண்டும்படி ஆவதே –
நீ மட்டும் முன்பே பெற்ற பேற்றை நானும் நீயும் சேர்ந்து பெறப் போகிறோமே –
நான் பரம பதத்திலே ஏறப் பெறா நின்றேன்-
ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன –

நரகத்தை நகு நெஞ்சே –
பரமபதம் கிட்டிற்று என்னா-கடுக கால் வாங்கிப் போகப் பாராதே காண் –
பல நாள்கள் நம்மைக் குடி மக்கள் ஆக்கி எளிவரவு படுத்தின-இவ் உலக வாழ்க்கையை புரிந்து-பார்த்து சிரித்து போரு காண் –
உன்னை வென்றோம் அன்றோ -என்று புரிந்து பார்த்து சிரித்து போரு-
பிள்ளை அழகிய பெருமாள் அரையர் -கிரந்தியைப் பார்த்து -கட்டியை பார்த்து-
திருவரங்க நாதன் திருமாலை திருப் பரிவட்டம் முதலானவை வரவிட்டு அருள-
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே -என்று-கிரந்தியைப் பார்த்து சிரித்து சொன்ன வார்த்தையை நினைப்பது –

அண்டை கொண்ட பலம் –
தத அகர்ஜத் ஹரிவர சுக்ரீவ ஹேமபிங்கல-தேன தாதேன மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர-சந்ஷேப ஸ்ரீ ராமாயணம் -68-
என்கிறபடியே மகாராஜர் வந்து அறை கூவ
முன் கணத்திலே மானம் கெட்டு ஓடினவன் இப்போது வந்து அறை கூவும் போது-இது வெறுமன் -அன்று
போது அல்லாப் போதிலே நீ நீ புறப்படக் கடவை அல்லை –என்று தாரை கால் கட்டச் செய்தேயும்
ஷத்ரியன் ஆகையாலே மானக் கேட்டிற்கு பொறுக்க மாட்டாமல் புறப்பட்டு-மிடற்று ஓசை இருந்தபடி என் –
பழைய கோழைத் தனம் அற்று தெளிந்த முழக்கு ஓசையாய் இருந்தது-இதற்கு ஓர் அடி உண்டாக வேண்டும்
உண்டாயிற்றாகில் நமக்கு இரை போருகிறது -என்றானே அன்றோ –
ஹரீஸ்வர-
இதற்கு முன்பு இப்படி பிறர் கூவ கேட்டு இருந்தவன் அல்லன் –
அப்படியே அவனை அண்டை கொண்ட பலத்தாலே இவ் உலக வாழ்க்கையைப் பார்த்து
உன்னை வென்றோமே அன்றோ என்று கையைக் தட்டி சிரித்து காண் பொருவது –
அறிவு கேடர்கு நரகம் என்று எமன் முதலாயினோர் குடி இருப்பினைச் சொல்லிற்று ஆகவுமாம்
இங்கு மற்றை நரகம் -8-1-9- என்கிற இவ் உலக வாழ்க்கையை சொல்லுகிறது-
வான் உயர் இன்பத்துக்கு எதிர் தட்டே அன்றோ

நாம் இப்படி உலக வாழ்கையை கை கொட்டிச் சிரிக்கைக்கு-நாம் நினைத்த பொருள் தான் நமக்கு கை புகுந்ததோ -என்ன –
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் –
கிண்ணகப் பெருக்கு போலே நாட்செல்ல நாட்செல்ல தேன் ஏறி வாரா நிற்பதாய்
மலரை உடைத்தான திருத் துழாய் ஆனது விளங்கா நின்றுள்ள திருவடிகளை உடையவன் –

செழும் பறவை –
அவனுடைய சேர்க்கையாலே குளிர்ந்து -காட்சிக்கு இனிய தன்மையை உடைய திருவடியை
இதனால் சர்வேஸ்வரன் உடைய ஸ்பர்சம் இவனுக்கு இருக்கும் படியை சொல்லிற்று —

தான் ஏறித் திரிவான –
அவனுக்காகவும் அன்றிக்கே-அவன் தோளில் இருப்பு சுகத்திற்கு காரணமாய் இருக்கையாலே-
அவனை மேற்கொண்டு சஞ்சரியா நிற்கும் ஆயிற்று –

தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே –
திருவடி திருத் தோள்களிலும் -என் தலையிலுமான-இது தவிர்ந்து-என் தலையிலே யாயிற்று-
அவன் இழவுக்கு வெறுக்க வேண்டா அன்றோ –அவன் தானே கொடு வந்து கொடுக்கப் பெற்றவர் ஆகையாலே-
ஆகையாலே அன்றோ ஒரு பழு ஏறப் பெற்றது –திருவடி புருஷாகாரமாக பெற்றார் இறே-

—————————————————————————————-

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

திருவடிகள் சேர பெற்றோம்
தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்-திருவடிகள் தலை மேல் -பெற்ற உகப்பால் திருக் கண் மலர
-திரு உள்ளம் உகப்பு காட்டுமே -என்னைப் பெறா ப் பேறாகப் பெற்றானாகக் கொண்டு
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்-ஸ்தாவர பிரதிஷடையாக -சர்வாதிகன் -இப்பொழுது தான் -பெருமான் முழுமை பெற்றதே –
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க-உபகரிக்கைக்காக மலை போன்ற மாடங்கள் -கட்டுமானக் கோயில் -பூமா தேவி உயர்த்த
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே-சபதிக்கும் கழல்கள் –பிராப்தி பிரதிபந்தகங்களை -கொம்புகளை முறித்து
-என் விரோதிகள் -அனுபவிக்க தடுக்கும் -போக்கி அவனைக் கூடப் பெற்றோம்

திருவாட்டாற்றிலே எழுந்து அருளி இருந்து-எல்லா வகையாலும் என்னை விட மாட்டாதவன் உடைய-
திருவடிகளைக் கிட்டப் பெற்றோம் –என்கிறார் –

தலை மேலே தாளிணைகள்-
தாளிணைகள் தலை மேலே –
நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து -2-9-1- என்றும்-
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2- என்றும்-
நான் வேண்டிக் கொண்ட படியே அழகிய திருவடிகளாலே தலை அலங்காரமாகப் பண்ணினான் –

தாமரைக் கண் என் அம்மான் –
என் முன்னே நின்று குளிர நோக்கி-ஜிதந்தே -தோற்றோம் -என்னப் பண்ணினான் –

நிலை பேரான் என் நெஞ்சத்து –
என் நெஞ்சத்து நிலை பேரான் –
மனத்தினை விட்டு போகாதே நின்றாயிற்று இவை எல்லாம் செய்கிறது –
சௌபரி ஐம்பது வடிவு கொண்டால் போலேயும்-
முக்தன் இறைவனை அனுபவிக்க பல வடிவுகளைக் கொள்ளுமாறு போலேயும்-
இறைவன் தான் இவரை அனுபவிக்க பல வடிவுகள் கொள்ளா நின்றான் –

எப்பொழுதும் –
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி -2-5-4- என்று தன்னை அனுபவிக்கைக்கு-
நான் பாரித்த துறைகள் அடையக் கைக் கொண்டான் –
தனது ஆற்றல்கள் எல்லாவற்றையும் காட்டா நின்றான்-
என் நெஞ்சிலே நிற்பது-அப்படியே கண்களுக்கு இலக்காம்படி முன்னே நிற்பது-
திருவடிகளை தலை மேலே வைப்பது-ஆகிய இவை எல்லாம் ஒரு காலே செய்யா நின்றான் –

எம்பெருமான் –
உடைமை உடையவனைப் பெற்றால் இருக்குமாறு போலே அன்றே-
உடையவன் உடைமையைப் பெற்றால் இருக்கும்படி –

மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் –
மலைகளை புடை படத் துடைத்து-நெருங்க வைத்தால் போலே இருக்கிற மாடங்களை உடைத்தான-
திருவாட்டாற்றிலே திரு வநந்த ஆழ்வான் மேலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
இதனால் பெறத் தக்க பரம் பொருளைச் சொல்லுகிறது -பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே –

மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் –
அனுபவத்துக்கு தடைகளாக உள்ளவை அடங்கலும்-குவலயா பீடம் பட்டது படும் இத்தனை –
அவன் இவன் விரோதியைப் போக்க இவன் அனுபவத்தில் சேர்த்தல் தகும் –

குரை கழல்கள் குறுகினமே –
ஆபரணத்தின் ஒலி செவிப்படா நின்றது –
தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -6-9-9- என்று
வேண்டிக் கொண்டது பெற்றோம் –

———————————————————————————————————

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-

ஸம்ஸலேஷித்ததுக்கு அடையாளம் தோன்றும் படி ஆஸ்ரித சுலபம் நெஞ்சகம் பூர்ணமாக புகுந்தான்
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்-அடைய பெற்றோம் -நிலை பேரான் -நமக்கு பவ்யன்
–யோகி ஹிருதயம் -ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் -திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
திலகம் போலே -அலைகள் வந்து மோதும் கடலால் மூன்று பக்கம் சூழ்ந்த தென்னாடு
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்-மலைகள் திரள இருந்தால் போல் -மாடங்கள் -விகசித்த பத்மம் போலே நிரதிசய போக்யம்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே-திரு மேனியில் இருந்து மேல் நோக்கி போக –
என் சரீரத்தில் அவன் திருத் துழாய் -அம் தண் துழாய் -குட்ட நாட்டு திருப்பி புலியூர் –

குறுகினம் -என்ற இது-என் கொண்டு அறிவது -என்னில்-
பார்க்கலாகாதோ உடம்பு கோயில் சாந்து நாறுகிறபடி –என்கிறார்

குரை கழல்கள் குறுகினம் –
அணித்து -என்னும் இதனைப் பற்றிச் சொல்லுகிறேன் அல்லேன்-கிட்டினோம்

நம் கோவிந்தன் –
அடியாருக்கு செல்வமாகப் பாராட்டப் பட்ட கிருஷ்ணன் –

கோவிந்தன் குடி கொண்டான் –
அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்-
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் திருமொழி -5-2-10-
என்கிறபடியே திருவாய்ப் பாடியிலே ஐந்து லஷம் குடிகளோடும் கூடக் காணும் இவர் நெஞ்சிலே புகுந்தது –

திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் –
திரை மிக்கு இருந்துள்ள கடலாலே-சுற்றும் சூழப் பட்டு இருப்பதாய்
தென்னாட்டுக்கு ஒரு திலகம் போலேயாய்-
மலைகளை நெருங்க வைத்தால் போலே மணி மயமான மாடங்களை உடைத்தான
திரு வாட்டாற்றினை கலவிருக்கையாக உடைய-சர்வேஸ்வரன் உடைய –

மலர் அடி மேல் விரை குழுவு நறுந்துளவம்-
செவ்வி குளிர்த்தி வாசனைகளை உடையவான-திருவடிகளின் மேலே வாசனை மிக்கு இருந்துள்ள திருத் துழாய் ஆனது –

மெய்ந்நின்று கமழுமே –
என் உடம்பு முழுவதும் எப்பொழுதும் நாறா நின்றது –
அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-என்று தோழி சொல்லியும்-
வெறி கொள் துழாய் மலர் நாறும் -4-4-3- என்று தாயார் சொல்லியும்-போந்த இது-தன் வாயாலே சொல்லும்படி ஆயிற்று –
என் வார்த்தை அறிய வேண்டுமாகில்-
என் உடம்பை மோந்து பார்க்க மாட்டீர்களா -என்பாள் -மெய்ந்நின்று கமழுமே -என்கிறாள்-

செய்த நன்றி தேடிக் காணாதே-கெடுத்தாய் தந்தாய் என்ற-அத்வேஷ ஆபிமுக்யங்களும்
சத்கர்மத்தால் அல்ல -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்தி -சூர்ணிகை 2-22-இங்கு நினைத்தல் தகும்-

——————————————————————————————

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

நிதான பாசுரம் -கண்டு வந்தேன் என்றானா திருவடி போலே -கண்டேன் என்றேனோ ஜடாயு போலே
நிரதிசய போக்யமான வடிவால் -புகுந்தான் -என் நன்றி செய்தென்
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்-நல்ல மணம் அதிசயித்து திரு அபிஷேகம் வரை ஏற-
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது -திரு உள்ளம் நினைத்த இடம் சென்று -ராம பார்ஸ்வம் ஜகாம சுக்ரீவன் போலே
புனல் மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு-கடல் – அஞ்சனம் போல -ஸ்திரமான அஞ்சனம் -மலை போன்ற திரு உருவம்
-அழகிய வடிவு கொண்டு எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–உயிர் ஒரு தலையாக அடிமை கொண்ட பெரிய உடையார்
த்ருஷ்டா சீதா போலே -சுக்ரீவன் ராவணன் முடிகளை பரித்தால் போலே ஒன்றும் செய்யாமலே பெற்றேன் –

மிக உயர்ந்த மேன்மையினை உடையனான எம்பெருமான்-திரு வாட்டாற்றிலே வந்து சுலபனாய்-
என் மனத்திலே வந்து புகுந்து-பேர் ஒளியன் ஆகைக்கு -நான் என்ன நன்மை செய்தேன் –என்கிறார்-

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன் –
திரு மேனியில் நின்று கமழா நின்றுள்ள திருத் துழாயின் வாசனை யானது-
கொழித்து ஏறா நின்றுள்ள திரு முடியை உடையவன் –
கடலில் நீர் மலையில் ஏறக் கொழித்தால் போலே காணும்-மலரடிமேல் திருத் துழாயின் வாசனையானது
மெய் எல்லாம் கொண்டு தலைக்கு மேலே போனபடி –
மைய்யோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ-ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையான் -கம்பர்

கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது –
கருதுமிடம் பொருது -கைந்நின்ற சக்கரத்தன் –
குறிப்பினை அறிகின்றவன் ஆகையாலே-சர்வேஸ்வரன் திரு உள்ளத்தின் கருத்து அறிந்து
போரிலே புக்கு எதிரிகளை அழியச் செய்து வெற்றி கொண்டு –
சசரோ ராவணம் ஹத்வா ருதிராக்த க்ருதச்சவி-க்ருதகர்மா நிசிதவத் ஹவதூணீம் புதராவிசத் -யுத்தம் 11-20-
மீண்டு வந்து அம்புறாத் துணியை அடைந்தது -என்கிறபடியே
கையிலே வந்து இருக்கும் ஆயிற்று –
ஸ்ரீ ராம பிரானது பக்கத்திலே வந்து நின்றார் -என்றாப் போலே
அதஹரி வர நாத ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம்-நிசிசர பதிம் ஆஜௌ யோஜயித்வா ஸ்ரமேண
ககன மதி விசாலம் லங்கயித்வா அர்க்க ஸூ ந-ஹரிவர கணமத்யே ராம பார்ச்வம் ஜகாம-யுத்தம் -40-29-
அதஹரி வர நாத –
ஒரு முத்தின் குடை நிழலிலே பையல் பெருமாளுக்கு எதிராக வந்து தோற்றினவாறே
பொறுக்க மாட்டாமை மேல் விழுந்து-நெடும் போது பொருது இளைப்பித்து
அவன் மாயப் போர் செய்யத் தொடங்கின அளவானவாறே
இனி நமக்கு அது வேண்டி வரும்-அது நமக்கு தக்கது அன்று
பெருமாள் செய்த சூளுறவை நாம் அழிக்க ஒண்ணாது -என்று மீண்டார் –
ராமேண ஹி பிரதிஜ்ஞ்ஞானம் ஹர்யர்ஷைகண சந்திதௌ-உத்சாதனம் அமித்ரானாம் சீதாயை பரிவஞ்சிதா -சுந்தர 51-32-
திருவடி ராவணன் இடம் அருளியது-சத்ய சங்கல்பரான பெருமாள் சூளுறவு செய்தார்
ஹர்யர்ஷைகண சந்திதௌ-
வீரர்கள் திரள் நடுவே சூளுறவு செய்ததும்-
ஆனபின்பு இவர்க்கு போர் செய்ய இடம் இல்லாமல் ஆக்க ஒண்ணாது என்று பார்த்தார் –
ஹரி வர நாத –
ஹரி நாத என்னாமல் ஹரி வர நாத -என்றது
தாம் செய்த இக்கார்யம் தன் சேனையில் செய்வார் இல்லாமல்-செய்தார் அல்லர்
பொறுக்க மாட்டாமையால் செய்தார் இத்தனை –
ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம்-
பூசல் புண்ணியம் என்று தனியே ஓன்று உண்டே அன்றோ-அதனால் வந்த புகழினைத் தாம் படைத்தார் –
நிசிசர பதிம் –
களவு பூசல் செய்வாருக்கு ஒதுங்க நிழலான பையலை-இராஜ புத்ரர்களை அகற்றி
தனி இடத்திலே பிராட்டியைப் பிரித்த பையல் அன்றோ –
ஆஜௌ –
அவர்களுக்கு நிலம் அல்லாத செவ்வைப் பூசலிலே –
யோஜயித்வா ஸ்ரமேண-
அவனை இளைப்போடே கூட்டினார் –தம்மை புகழோடு கூட்டினார் -கீர்த்திம் பிராப்ய –
ககன மதி விசாலம் லங்கயித்வா –
நாடு இடைவெளி பெருத்து இருக்கிற-ஆகாயத்தை வருத்தம் அறக் கடந்தார் –
அர்க்க ஸூந-
அது செய்த படி -சூர்ய புத்திரன் என்று-தோற்றும்படியாய் இருந்தது –
உதய கிரியில் தோன்றினால் பின்பு மறைந்து நிற்க காணும் இத்தனை அன்றோ –
ராம பார்ச்வம் ஜகாம-
பெருமாளைப் பிரிந்தபடியால்-வந்து கிட்டுவதும் செய்தோம் என்று தோற்றும்படி-மதிக்கத் தக்கது ஓன்று செய்து வராமையாலே
நேர் கொடு நேர் முன் நிற்க மாட்டாதே-பெருமாள் அருகே போய் நின்றார்
பையல் தலையைப் பிடிங்கிக் கொடு வந்து
திருவடிகளில் இடப் பெறாத நாம் என் சொல்லி முன் நிற்பது-என்று பெருமாள் அருகே வந்து நின்றார்-
கொழு மணி முடிகள் தோறும் கொண்டன குழுவின் கூட்டம்
அழுதயர் வுறுகின்றான் தன் அடித்தலம் அதனில் சூட்டித்
தொழுது அயல் நாணி நின்றான் தூயவர் இருவரோடும்
எழுபது வெள்ள யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே -கம்பர் வுயுத் மகுட பங்கம் படலம் -27-

புனல்மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு-
புனல் போலவும் மை போலவும் நின்ற வரை போலவும்-இருக்கிற திரு நிறத்தை-உடைய திரு வாட்டாற்றானுக்கு-
அன்றிக்கே -மை மாறாத வரை போலே -என்னுதல் –
வாட்டாற்றாற்கு-என்றது உயர்வு பன்மை அன்று –
வாட்டாற்றானுக்கு என்றபடி –
எந்நன்றி செய்தேனோ –
என்ன நன்மை செய்தேனாக –
நதர த்ருஷ்ட்யா மயா சீதா ராவனாந்தபுரே சதீ-சந்த்யச்ய த்வயி ஜீவந்தீ ராமா ராம மநோரதம்-சுந்தர -65-10-
பெரிய உடையாரைப் போலே தடையோடே முடிந்தேனோ –
திருவடியைப் போலே -காணப்பட்டாள்சீதையை -என்று வந்தேனோ-
கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்
அண்டர் நாயக இனித் துறத்தி ஐயமும்
பண்டுள துயரும் என்று அனுமன் பன்னுவான்-கம்பர்
அன்றியே-தன்னுடைய ஆணையைப் பின் பற்றினவன் ஆம்படி விதித்த கர்மங்களை செய்து போந்தேனோ
என்ன நன்மை செய்தேனாக-என் நெஞ்சிலே புகுந்த பின்பு-பெறாப் பேறு பெற்றால் போலே விளங்கா நின்றான் –
இறைமைத் தன்மைக்கு அறிகுறியான தார் -அது
நினைத்தது செய்ய முடிக்க வல்ல கருவி அது –
வடிவு அழகு அது –
இப்படி துறை தோறும் தலைமை பெறும்படி இருக்கிறவன்-என் நெஞ்சிலே புகுந்து-பெறாப் பேறு பெற்றானாய் இரா நின்றான் –

—————————————————————————————-

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

நிதான பாசுரம் -மீண்டும் -ஸ்ரீ யபதி -இங்கு சன்னிஹிதன் -என் நெஞ்சை ஒரு காலும் பிரியான்
திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்-ச்வா பாவிகமாக-தேஜஸ் மிக்கு திரு மார்பு
-நித்ய யுவாவான மங்கை -யுவா திஸ்ச்ச குமாரினி -இளகிப் பதித்த -ஸ்ரீ சேர்ந்த திருமார்பன்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு-தான் சன்னிஹிதன் -ஆகி
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்-சேஷத்வம் மாறாத புகழ் பெரிய திருவடி
-நிலையாக நின்ற கீர்த்திக்கு -வாசஸ் ஸ்தானம் -என்றுமாம் -நடத்துவானாய் –
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே
ஹேயமான நெஞ்சில் அநாதாரம் இல்லாமல் நெஞ்சை விட்டு பிரியான்

எல்லாப் பொருள்களாலும் நிறைவு பெற்று இருக்கின்ற தான்-இகழாதே -என் மனத்தினை-
எக்காலத்திலும் விடுகின்றிலன்-ஒருவனுடைய காதல் இருந்தபடி என் –என்று பிரீதர் -ஆகிறார்

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –
வெறும் புறத்திலே விளங்கா நின்றுள்ள திரு மார்விலே-எழுந்து அருளி இருக்கின்ற பெரிய பிராட்டியார் உடைய-
சேர்த்தி அழகாலும் விளங்கா நின்றுள்ள
திருமகள் கேள்வன் ஆனவன் –
ஏனையோரும் -ஸ்ரீ மான்கள் என்று சொல்லப் படுபவர்கள் அன்றோ உபசார வழக்காக
அப்படி அன்று இங்கு –
திருமங்கை தன்னோடும் திகழ்கையாலேயே -ஸ்ரீ யபதி -என்ற பெயரை உடையவன்
திருவும் ஆரமும் அணிந்தனன் சிரீதர மூர்த்தி -கம்பர் -பால -அகலிகை படலம் -26
திருமாலார் -என்ற இந்த பன்மைக்கும் -வாட்டாற்றார்க்கு -போலே பயன் அன்று-திருமால் ஆனவன் -என்றபடி –
புள்ளூர்த்தி -என்றதனைப் போன்று

சேர்விடம் தண் வாட்டாறு –
திருமகள் கேள்வன் -என்றதனைப் போன்றதாயிற்று -அவ் ஊரை இருப்பிடமாக உடையவனாய் இருக்கிற அதுவும் –

புகழ்கின்ற புள்ளூர்தி –
புகழ் நின்ற புள்ளூர்தி –
புகழ் எல்லாம் தன் பக்கலிலே கிடக்கும்படி இருக்கிற பெரிய திருவடியை-வாகனமாக உடையவன்
புகழ் அடங்கலும் கிடப்பதுவும் அவன் பக்கலிலே-அதனை உடையவன் -என்கிற இதுவே இவனுக்கு ஏற்றம் –

போர் அரக்கர் குலம் கெடுத்தான் –
செவ்வைப் பூசலிலே அரக்கர் குலத்தை அடியோடு முடித்தான் –

இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே –
பிறப்பு இறப்புகளிலே உழல்கின்றவன் என்று பிற்காலியாதே-ஒரு கார்யப் பாட்டாலே செய்தானாய்
பின்பு விட்டுக் கைப் பிடிக்கை அன்றிக்கே-எல்லா காலத்திலும் விடுகின்றிலன்
பித்தத்தினால் பீடிக்கப் பட்டவர்கள்-சந்தனச் சேற்றின் நின்றும்
கை வாங்க மாட்டாதால் போலே-காண நேரமும் பிரிய மாட்டுகின்றிலன் –பூசும் சாந்து என் நெஞ்சம் –

பொலந்தார் இராமன் துணையாக போதந்து
இலங்கைக்கு இறைவற்கு இளையான்-இலங்கைக்கே
பேர்ந்து இறையாய தூஉம் பெற்றான் பெரியாரைச்
சார்ந்து கெழீஇ யிலார் இல் -பழமொழி நானூறு செய்யுள்-

———————————————————————————–

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-10-6-10-

எதிர் தலையில் சிறுமை பாராதே பெரியவர்கள் –தமது தரத்துக்குத் தக்கபடி -அனுக்ரஹித்து அருளுவார் என்று பிரகாசிப்பித்தான் –
திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆட் செய்விப்பார்கள் -தங்கள் பெருமை தாங்களே சொல்லார் -ஆழ்வார் எம்பெருமானார் போல்வார்
-ஞானம் கனிந்த நலம் –கொண்டார்க்கு அவன் கொடுக்க அத்தானம் கொடுப்பது தன் தகவு -கொண்டே
பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்-யவாதாத்மபாவி பிரியாமல் -நித்தியமாக -கைங்கர்யம் செய் என்று
-அதுக்கு உறுப்பாக ஜென்ம சம்பந்தம் போக்கி அருளி -அடிமை கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று-ஹிரண்ய கசிபு நலிந்த அன்று பெற்ற தகப்பனால் நலிவு பட்ட அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு-பரம பக்தர்கள் நிழலில் ஒதுங்கி -பெரும் பயனை பெறுவோம் என்பதை காட்டி அருளினான்
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-பஹு முகமாய் -திரு அநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளி

பெரியாரை அடைந்தால் எதிர்தலையைப் பாராதே-தங்கள் தரத்தைக் கொடுப்பர்கள் -என்னும்
இவ் விஷயத்தை-திருவாட்டாற்றில் நாயனார்-என் பக்கலிலே காட்டினார் –என்கிறார்

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
நம்மைப் பிரியாதே நமக்கு அடிமை செய் -என்று அருளிச் செய்து-பிறப்பினையும் போக்கி
நித்யமாக செய்யப் படுகின்ற தொண்டினையும்-எனக்குக் கொடுத்தான் –
1-பிரியாது ஆட்செய்து என்று-எனக்கே ஆட் செய் -என்ன வேண்டும் என்று -நாம்-
எம்மா வீடு -என்ற திருவாய் மொழியிலே வேண்டிக் கொண்டபடியே – செய்தான் –
2-பிறப்பறுத்து-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று-
பொய் நின்ற ஞானமும் -என்ற பாசுரத்திலே விரும்பியபடியே-பிறப்பினை அறுத்தான்
3-ஆள் அறக் கொண்டான்-தனக்கே யாக என்று எம்மா வீடு -திருவாய்மொழியில் வேண்டிக் கொண்ட படியே ஆள் அறக் கொண்டான் –
கால அவதி இல்லாமல் என்றும்-தனக்கே யாக அற என்றுமாம் –

அரியாகி இரணியனை ஆகம் கீண்டான்-
இதனால் இதற்கு முன்னரே தமக்குச் செய்த உபகாரத்தைச் சொல்லுகிறார்-
தாம் அனுபவிப்பதற்காகவே இறைவன் அவதாரங்கள் என்று இருக்கிறார் இவர்-
ஸ்ரீ நரசிங்கமாய் இரணியன் உடைய முரட்டு உடலை வருத்தம் இன்றியே கிழித்தான்-

அன்று –
அப்படி செய்தான் –இன்று இப்படி செய்தான் –
பரவா நஸ்மி காகுத்ஸ்ஸ த்வயி வர்ஷசதம் ஸ்திதே-ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத – ஆரண்ய -15-7-என்கிறபடியே
இதனைச் செய்ய வேண்டும் என்று நியமிக்க வேண்டும்-என்கிறபடியே
என் பிறப்பினை அறுத்து நித்தியமான தொண்டினை செய்யச் செய்தான் –
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-என்றே அன்றோ இவர் வேண்டிக் கொண்டது –

பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான்-
பெரியோர்களைச் சார்வதனால் அரிய பெரிய பிரயோஜனத்தைப் பெறுவார்கள் என்னுமிவ் வர்த்தத்தை –
வரி வாள் அரவணை மேல் வாட்டாற்றான் என் பக்கலிலே காட்டினான் –
ஸ அஹம் புருசார்த்த கருணாம் குரு த்வம்-சம்சார கர்த்தே பத்தி தஸ்ய விஷ்ணோ
மகாத்மநாம் சம்ஸ்ரய அப்யுபேத-நைவா வசீ ததி அதி துர்க்கதோ பி -விஷ்ணு தர்மம் கத்திர பந்து வியாக்யானம் –
விஷ்ணுவே நான் மிகவும் துன்பம் உற்றவன்-அடியேனுக்கு கருணை செய்க-
மிக்க வறியனும் பெரியோர்களை அடைந்தவனுமாய் இருக்கிற ஒருவன் ஒருக்காலும் குறைவு அடைய மாட்டான்-என்கிறபடியே
பெரியோர்களை அடைந்தால்-பின்னை அவர்கள் கொள்ளுகிறவன் சிறுமை பார்த்தல்
கொடுக்கிறவன் பெருமை பார்த்தல் செய்யாதே கொடுப்பார்கள்-என்று இங்கனே நாட்டில் ஓன்று உண்டு
அதனை என் பக்கலிலே காட்டினான் –
பிரகலாதன் முதலாயினார்களைக் கொண்டு-கவி பாடுவித்துக் கொண்டானோ –

———————————————————————————————-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

நித்ய போக்யதை -நித்ய சூ ரிகளுக்கு -பலனாக -அருளிச் செய்கிறார்
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த-நிரதிசய போக்யமான சபதிக்கும் -குரை கழல் -கனை கழல் -காட்டி
-துஸ் சஹமான நரகம் -சம்சார நரயம்-ஒழித்து
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்-உதாரரான ஆழ்வார்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டு –
ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே-பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது
செவிக்கு இனிய -கரண த்ரயமும் ஏக ரூபம் -செவ்வி யாய் இருக்கும் -திருப்தி அடைய மாட்டார் மீண்டும் மீண்டும் கேட்டாலும் –

நிகமத்தில்
இத் திருவாய் மொழியை கற்க உரியவர்கள்-நித்ய சூரிகள் ஆவார்கள்-என்கிறார்-

காட்டித் தன் கனை கழல்கள் –
தன் கனை கழல்களைக் காட்டி-நிர்ஹேதுகமாக தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டி –
கழல் -திரு மேனிக்கு உப லஷணம்-

கடு நரகம் புகல் ஒழித்த-
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று விரும்பியவாறே-செய்தான் ஆயிற்று-
அறிவுடையாருக்கு பொறுக்க முடியாத நரகம்-இவ் உலக வாழ்க்கை அன்றோ –

வளம் குருகூர்ச் சடகோபன் –
அழகியதான திரு நகரியை -தம்மதாக உடையரான ஆழ்வார் –

பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டு-
பாடத்திலும் இசையிலும் இனியதான -பாட்யே கேயோ மதுரம் -பால -4-8-
பாட்டு -இசை
இசையிலே புணர்ப்புண்ட திருவாய் மொழி ஆயிரத்திலும் –இப்பத்தினையும் கேட்டு –

ஆரார் வானவர்கள்-
இதனைச் சொல்ல கேளா நின்றால்-இன்னம் சொல் இன்னம் சொல் -என்னும் இத்தனை போக்கி-
கேட்டவற்றைக் கொண்டு மனம் நினைவு பேரார்கள் ஆயிற்று-
பகவான் உடைய குணங்களை அனுபவித்து-அதற்கு போக்கு விடுகைக்கு பாசுரம் இன்றிக்கே-
விம்மல் பொருமலாய் படுமவர்கள்-இப்பாசுரம் கேட்டால் விடார்கள் அன்றோ –
அதற்கு காரணம் என்-
அவனுடைய சீல குணங்களை அனுபவித்தோ என்னில்-இப்பாசுரத்துக்கு தோற்று -என்கிறார் –

செவிக்கு இனிய-
கேட்ட போதே இன்பம் பயப்பது -என்றபடியே-
ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகா கபி-சம்ச்ரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யஜஹார ஹா -சுந்தர-91-1-என்கிறபடியே-
செவி வழியே புக்கு நெஞ்சுக்கு இனிதாகை அன்றிக்கே-செவியில் பட்ட போதே பிடித்து இனிதாய் இருக்கையாலே-

அதற்க்குக் காரணம் என் என்னில் –
செஞ்சொல்லே –
நினைவும் சொல்லும் செயலும்-ஒருபடிப் பட்டு இருக்கையாலே-
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே -8-5-11-என்னா-செந்தமிழ் பத்தும் -என்றார் அன்றோ இவர் தாமே –

—————————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

வைகுண்ட தாம வி நிவேச ஈஷும் ஈசம்
தச்ச ஸூ கீய விதி விதாது காமம் ஈசம்
ததீயா வாஞ்சாதீ த உபக்ருதீ
ஷ்ஷடே பஸ்யன் முனி –

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சக்ரித்வாத் கேசவத்வாத் நாராயணத் வாத் ஸ்நேஹீத்வாதி
பாண்டாவானாம் அபிமத துளஸீ பூஜை நீயாத்வாத அம்போ
ஜாதீஷயத்வாத் கோவிந்தத்வாத் ஸூ யஷ ஸ்ரீ பாதித்தவை பாவாத்
தீவிர உத்தர மோதம் ஸூ பத விதரணே

1–சக்ரித்வாத்–ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே

2-கேசவத்வாத்–கேசவன் எம்பெருமானைப் பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே

3–நாராயணத் வாத்–நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி-

4–ஸ்நேஹீத்வாதி பாண்டாவானாம் அபிமத–மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே

5–துளஸீ பூஜை நீயாத்வாத-தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே

6–அம்போ ஜாதீஷயத்வாத்–வாட்டாற்றான் மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–

7-8-கோவிந்தத்வாத் –குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்–என்றும்
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன் கைந்நின்ற சக்கரத்தன் –என்றும் –

9-ஸூ யஷ ஸ்ரீ பாதித்தவை பாவாத்–திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு

10-தீவிர உத்தர மோதம்–பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே

ஸூ பத விதரணே–காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்-

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 96-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் – —————96-

த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -அடுத்த பதிகார்த்தம் –
பிரணவ பாரதந்தர்யம் -மோக்ஷ தானத்தில் -ஆஸ்ரித பாரதந்தர்யம் -இதில் –

—————————

அவதாரிகை –

இதில்
பரம பதத்தில் கொடு போகையில்-த்வரிக்கும் இடத்திலும்
விதி பரதந்த்ரனாய் செய்கிறபடியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இப்படி பரோபதேசம் தலைக் கட்டின பின்பு
தம்மை அவன் திரு நாட்டிலே கொடு போகிக்கு த்வரிக்கும் படியையும்
கொடு போகும் இடத்தில் தாம் நியமித்தபடி
கொடு போக வேணும் என்று
தமக்கு அவன் பரதந்த்ரனாய் நிற்கிறபடியையும்
தாம் பெற்ற பேற்றின் கனத்தையும்
தம்முடைய திரு உள்ளத்துக்குச் சொல்லி-இனியராய் பேசுகிற
அருள் பெறுவாரில் அர்த்தத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அருளால் அடியில் -தொடங்கி -என்கை –

—————————————————————————

வியாக்யானம்–

அருளால் அடியில் எடுத்த மால் –
கரண களேபரைர்க் கடயிதும் தயமா நாம நா -என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும்-அடியிலே எடுத்த படியால் –
அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளினான் -என்று-கேவல நிர்ஹேதுக கிருபையாலே
அஜஞாநாவஹமான சம்சாரத்தில் நின்றும்
அடியிலே எடுத்த சர்வேஸ்வரன்-என்றாதல்
அதுவும் அன்றிக்கே
மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் -என்னும்படி
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகன்று-முடியாத படி எடுத்த-என்றாகவுமாம் —

அன்பால் இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து –
அந்தாமத்து அன்பு செய்யும் அன்பாலே-
இருள் தரும் மா ஞாலத்தில் ‘ஜன்மம் ஆகையாலே-இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து
ஜ்ஞானப் பிரசுரமான-தம் தேஹத்தை-வாஞ்சித்து
அன்றிக்கே –
இருளார்ந்து தம்முடம்பை இச்சித்து -ராகாந்தனாய்
நெய்யூண் மருந்தோ மாயோனே -என்று
இவன் திருவாய்ப் பாடியிலே வெண்ணெயை-ஆதரித்தால் போலே
ஜ்ஞான பரிமளம் விஞ்சின-சரம சரீரம் ஆகையாலே
இவர் திரு மேனியை அவன் ஆதரிக்கப் புக்கான்-என்றாகவுமாம்-
இரு விசும்பில் –
பெரிய வானிலே

இத்துடன் கொண்டேக –
இவர் அஜஞாநாவஹம்-என்று அநாதரிக்கிற-இச் சரீரத்துடனே கொண்டு போக-

இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் –
விதி பரதந்த்ரனாய்-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா –இத்யாதிப் படியே
பிராட்டி திரு உள்ளக் கருத்தைப் பின் சென்று செய்தாப் போலே
இவர் அனுமதி பார்த்து இருந்தவனுடைய-சுத்தியை சொல்லும்
ஆழ்வார் உடைய-ஸ்ராவ்யமான சப்தங்கள்-

அதாவது –
என் நெஞ்சத்து உள்ளிருந்து -என்றும்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் -என்றும்
என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே -என்றும்
இகழ்வின்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே -என்றும்
நங்கள் குன்றம் கை விடான் -திருமால் இரும் சோலை கை விடாதவன் போல் இவர் திருமேனியையும் கை விடான் -என்றும்-
இப்படி
இவர் திரு உள்ளத்தை விரும்பி –
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -என்றும்
இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே -என்றும்
இவர் தம் தேஹத்தை ஒழிய கொடு போக வேணும்-என்றபடியே
பரதந்த்ரனாய்
நின்ற குணசுத்தியைப் பேசினபடி-என்கை –

விதி வகையே நடத்துமவனே உபதேச சத்பாத்ரம் என்ற-பாத்ர ஸூத்தி இறே-கரை ஏற்றுமவனுக்கு நாலாறும் உபதேசித்தார் –
இசைவு பார்த்தே இருந்த சுத்தி என்று -அவ்விருத்தாந்தத்தை பேசினபடி-என்றுமாம்-

———————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -184- திருவாய்மொழி – -10-5-1….10-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 22, 2016

விஸ்ரம் பதோ-அதி சங்கை போக்கி -10-3
பக்தி ஏக லப்தன் -10-4-
கரண த்ரய ஆச்ரயணீயத்வம் -10-4-

கண்ணன் கழலினை -பிரவேசம் –

பக்தியானது தனது பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்தார் மேல் –
அத்துணை முறையைப் பொறுக்க மாட்டாமல் ஈஸ்வரன் தன்னை கொடு போகையிலே
விரைகிற படியைக் கண்டு -என்றது -மரணமானால் -என்றது-
அவனுக்கு பல நாள்களாய் அத்துனையும் பொறுக்க மாட்டாமல் அவன் கொடு போகையில் விரைகிற படியைக் கண்டு -என்றபடி-
நமக்கு போக்கு தவிராத பின்பு-இனி இவர்களுக்கு-பக்திமான்கள் உடைய செயல்கள் இருக்கிற படியையும்
அறிய வேண்டுவது ஓன்று ஆகையாலே-அதனை உபதேசிப்போம் என்று பார்த்தார்-
இவர் தாம் எம்பெருமானாரைப் போலே பேர் அருள் உடையவர் காணும் –காரேய் கருணை ராமாநுசன் அன்றோ

இது தான் ஓன்று இவர்களுக்கு குறை கிடந்தது ஆகிறது என் -என்று
அது இருக்கும்படியை உபதேசிப்போம் என்று பார்த்து-பரோபதேசத்திலே ஒருப்பட்டு
அவன் தம்மை பரம பதத்துக்கு கொடு போவதாக விரைகிறபடியாலும்
கேட்கிற இவர்கள் அறிவுக்கு புலன் ஆக வேண்டும் என்னும் அதனாலும்-பாசுரப் பரப்பு அறும்படி சுருங்கக் கொண்டு
அந்த பக்திக்கு – -பற்றுக் கோடான -எண்ணும் திரு நாமம்-திருப் பெயரைச் சொல்லி –
இதில் இழிவார்க்கு நினைக்க தகும் மந்த்ரம் -நாரணம் –இன்னது என்றும் –
அதனுடைய பொருள் நினைவே -3/4-பாசுரங்களால் -மோஷத்துக்கு சாதனம் என்றும்-
தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீர் -அவ்வழியாலே பக்தியைப் பண்ணுங்கோள் என்றும் –
முக்கரணங்களாலும் அவனைப் பற்றுங்கோள் என்றும் –5-
இப்படிப் பற்றுவார்க்கு அவன் -மேயான் வேங்கடம் – சுலபன் என்றும் –6-
மாதவன் -திருமகள் கேள்வன் ஆகையாலே எளிதில் ஆராதிக்கத் தக்கவன் -என்றும் –7-
மாதவன் என்று என்று -இவனை இடுவித்து பற்றச் செய்து இதனையே
அவன் திரு உள்ளத்தில் படுத்தி குவால் ஆக்குவாரும் அருகே உண்டு -என்றும்-8-
பேர் ஆர் ஓதுவார் -மனம் உடையீர் -பற்றும் இடத்தில் அதிகாரிகளுக்கு சொன்ன முறைகள் வேண்டா-
ருசி உடையார் எல்லாரும் இதற்கு அதிகாரிகள் என்றும்-9-
சுனை நன் மலரிட்டு -மலர் முதலான சாதனங்களைக் கொண்டு-அடையுங்கோள் என்றும்-10-
இதில் இழிய விரோதிகள் -அமரா வினைகள் -வினை வல் இருள் -தன்னடையே போம் -என்றும்-
இப்புடைகளிலே சொல்லி-
நாம் இன்னமும் சில நாள்கள் இங்கே இருக்கிறோம் அன்றிக்கே
போக்கு அணித்தான பின்பு எல்லோரும் இதனைக் கொள்ளுங்கோள் -என்று-உபதேசித்து-
அதனோடே தொடங்கின பரோபதேசத்தை தலைக் கட்டுகிறார்-

வீடு முன் முற்றவும் -திருவாய் மொழியில்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்று
வணங்குதற்கு பற்றுக் கோடாகச் சொல்லப் பட்ட மந்த்ரத்தை-
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்று காட்டுகிறார் இங்கு-

—————————————————————————————–

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

உபாசனத்துக்கு ஆலம்பனம் -மூல மந்த்ரம் பிரதானமான மந்த்ரத்தை –அனுசந்திக்க அவன் திருவடிகளை பிராபிக்கலாம்-
கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்-சர்வ சுலபன் -ஆஸ்ரித அர்த்தமான திருவடிகளை -அடைவதற்கு ஈடான மனம் உடையீர் –
-தோல் புரையே போமதுக்குப் பழுதிலா யோக்யதை -ஒழுகலாறு -வேணும் -மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த
மர்ம ஸ்பர்சிக்கு நானும் நமரும் என்னும்படி சர்வரும் அதிகாரிகள் -சூர்ணிகை -18-
சரீரம் -வேத முறை உபாசனம் -பிரபத்திக்கு -ஸ்ரத்தையே போதும் த்ரை வர்ண அதிகாரம் -வேத சாரம் திரு மந்த்ரம் -அனைவருக்கும் அதிகாரம் உண்டே –
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே-அனுசந்திக்கைக்கு யோக்கியமான -மந்த்ர பிரதானம் -வியாபக மந்தரங்களுள் ஸ்ரேஷ்டம்
-சார தம காயத்த்ரியில் முன்னோதிய-பிரணவ -நமஸ் -சதுர்த்தி அபேக்ஷிதங்கள் அல்ல -நாராயணம்-அதிலும் சுருக்கி -நாரணமே -என்கிறார்

பக்தியை உடையராய்க் கொண்டு-அவனை நினைப்பார்க்கு-
பற்றுக் கோடானா-திருமந்தரம் -இன்னது –என்கிறார்

கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் –என்று மேலே சொன்னதனையே
இங்கே கண்ணன் கழல் இணை -என்கிறார் –திரியவும் ஒருக்கால் சொல்கிறார்
இவர்கள் கேட்க வேண்டுவதனை சொல்லுகைக்கு உறுப்பாக –
கிருஷ்ணன் திருவடிகளை கிட்ட வேண்டும் என்று இருப்பீர் –
பரம பதத்தில் சென்று காண வேண்டும்படி இருக்கை அன்றிக்கே-
எல்லா வகையாலும் சுலபனானவன் உடைய திருவடிகள் -என்பார் -கண்ணன் கழலிணை -என்கிறார் –
அடியார்கட்கு தூது போதல்-தேர் ஒட்டுதல் செய்யும் திருவடிகள் —
-பிரிந்து கூடினாரைப் போலே இருக்கிறது காணும்-ஆதலின் -நண்ணும் -என்கிறார் -வந்தான் என்பது போலே –
இத் யுக்த பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ஸ லஷ்மண-யுத்தம் -17-1-
ஜகாம என்னாமல் ஆஜகாம -நண்ணும் -ஸூ ஸ்தானம் போலே -இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் -அக்கரையில் இருந்து அநர்த்தப் படாமல் –
கரங்கள் மீச்சுமந்து செல்லும் கதிர்மணி முடியன் கல்லும்
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல்
இரங்கினன்-நோக்குத் தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான்
வரங்களின் வாரி யன்ன தாளிணை வந்து வீழ்ந்தான் –கம்பர்
மனம் உடையீர் -என்கிறார் -நிதி உடையீர் -என்னுமாறு போன்று-இதனையே குவாலாக நினைத்து இருத்தலின் –
இதனால் -இதற்கு அதிகாரம் தேட வேண்டா-ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் -என்பது போதரும் –
சுவர்க்கம் அடைவதற்கு இன்னார் இனியார் என்ற வரை யறையும்-கழுவாயும் -பிராயச் சித்தம் -வேண்டா நின்றது –
மீண்டு வருதல் இல்லாத தன்மையை உடைய மோஷத்திற்கு-அது வேண்டாது ஒழிகிறது-
பெரும் பேற்றுக்குத் தக்கதான அதிகாரம் இவனால் சம்பாதிக்க முடியாமையாலே-
தோல் புரையே போமதுக்கு பழுதிலா யோக்யதை வேணும்-
மனம் உடையீர் என்கிற ச்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு –
நானும் நமரும் -என்னும்படி -சர்வரும் அதிகாரிகள் –-சூர்ணிகை -18-

எண்ணும் திருநாமம் –
நினைக்கப் படும் திருப்பெயர் –சுலபமான அநுஸந்திக்கும் திரு நாமம்
அன்றிக்கே –பக்திமான்களைச் சொல்லுகையாலே அது தான் -அது அது –என்னும்படியாய் ரசமாக இருக்கையாலே சொல்லுதல் -என்னுதல் –
தேனும் பாலும் — நானும் சொன்னேன் நமரும் உரைமின் –
எண்ணும்- திருமந்தரம் -என்னாமல்-நாமம் -என்கிறது-இதற்கு ஒரு அதிகாரி நியதி -அங்க நியதி -வேண்டா-
குழந்தை தாயின் பெயரைச் சொல்லுமாறு போன்று அமையும் -என்கைக்காகா –

அது தான் எது -என்னில் –
நாரணம்
இது தான் இறைவன் திருப் பெயர் ஆகையால் -ஸ்வாமி வாசகம் -–அம்மே -என்பாரைப் போலே இருக்கிறதாயிற்று-
இதுவும் இன்னம் எதுவும் வேண்டுமோ என்றால்-
இத்துணையே அமையும் -என்பார் -நாரணமே -எனத்-தேற்றகாரம் கொடுத்து ஓதுகிறார் –

கனத்த பேற்றுக்கு இவ்வளவு போருமோ -என்னில்
திண்ணம் –
நிச்சயம்
சத்யம் சத்யம்மீண்டும் சத்யம் கையைமேலே உயர்த்தி சொல்லுகிறேன் –
வேதம் ஆகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் மேலான பிரமாணம் கிடையாது –
கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் கிடையாது-என்னுமாறு போலே -திண்ணம் -என்கிறார் –
நாரணமே -என்ற ஏகாரத்தாலே
பிரணவத்தை ஒழியவும்-நமஸை ஒழியவும்-நான்காம் வேற்றுமையை ஒழியவும்-இத்துணையே நிறைந்தது -என்கை –
நாரணம் -என்று இல்லாத மகரத்தையும் கூட்டி-உள்ளவற்றைக் குறைத்துச் சொல்லுகையாலே-
அளத்தில் பட்டன எல்லாம் உப்பு ஆமாறு போன்று-இதனோடு கூடிய வெல்லாம் உத்தேச்யம் -என்றும்-
குறைந்தாலும் -அங்கம் தப்பிற்று -ஸ்வரம் தப்பிற்று என்று-ப்ரஹ்ம ரஷஸ்ஸாகப் போக வேண்டுமவற்றை-
காட்டிலும் இதற்கு உண்டான எல்லா பெருமையும்-சொல்லிற்று ஆயிற்று-
பூமியைப் போலே பொறுமை -தாரை சகாரம் விட்டு சொன்னால் போலே -ஷமாவான் ச காராம் இல்லாமல் சொன்னால் போலே

—————————————————————————————————-

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

திரு நாமம் அர்த்தம் -குண விபூதி யோகம்
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்-ஏஷ நாராயண ஸ்ரீ மான் —ஷீரார்ணவ –மதுராம் புரீம் -கிருஷ்ணன் போலே -எம்மான் –
லீலா விபூதி நாயகன் -பாரணங்கு ஆளன்-நித்ய விபூதி நாயகன் –
வாரணம் தொலைத்த காரணன் தானே-பிரதி பந்தனம் நிரசனம் -ஜகாத் காரண பூதன் கிருஷ்ணன் தானே –
கிருஷ்ண ஏவதி உத்பாத -ஸ்ருதி –

இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்-நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்-
அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் -நாராயணா
நாராயண பரஞ்சோதி இரண்டு வகைகளும் உண்டே

நாரணன் –
மேலே பொருளினை அருளச் செய்ய நினைத்து-பெயரினை எடுத்துச் சொல்கிறார் –
நாரங்கள் ஆவன -முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தி-

எம்மான் –
எனக்கு ஸ்வாமி யானவன் –

பாரணங்கு ஆளன்-
பாரணங்கு உண்டு -ஸ்ரீ பூமிப் பிராட்டி –அவளுக்குத் தலைவன் –
பூமிக்கு உரியவள் ஆதலின் -பாரணங்கு -என்கிறார் –
பாரணங்கு -என்கையாலே -பரம பதத்துக்கு உரியவன் -என்கிறது-
ஸ்ரீ பூமிப் பிராட்டி யைச் சொன்னது நித்ய சூரிகளுக்கு உப லஷணம்
எம்மான் -இது லீலா விபூதிக்கு உப லஷணம்-ஆக உபய விபூதி நாதன் -என்றபடி
குற்றம் செய்தது பொறுக்கைக்கு ஒரு உலகமும்-பொறுப்பிக்கைக்கு ஒரு உலகமும் -ஆயிற்று –
க்ருதா கஸ–ஷாம்யதி -குற்றம் தலை நிரம்பி புறம்பு புகல் இல்லாதாரை காக்கும் ஈஸ்வரன் –
குற்றம் நிரம்பி அனுதாபம் இல்லாதாரை பொறுப்பிக்கும் பிராட்டி
தலை அறுக்கச் சொல்லுகிறது என்-கொடுக்கச் சொல்லுகிறது என்
நம்முடைய தண்டனை யாகில் அதற்கு மூலம் தண்டனை பலிக்கும் படி பண்ணிப் பின்பு-
அனுக்ரஹத்தை செய்ய வேண்டுமோ -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி –

வாரணம் தொலைத்த –
தன்னைப் பெற வேண்டும் என்று இருப்பார் அடைவதற்கு-தடைகளாக உள்ள உள்ள அவர் கர்மங்கள்
குவலயா பீடம் பட்டது படும் –
பகையை அழித்தல் இந்தத் திரு மந்த்ரத்தின் பொருள் ஆமோ -என்னில்
அகாரத்தில் முதலிலே தொடங்கி-அதில் சொல்லிக் கொண்டு போகிறது-ரஷகத்வம் அன்றோ –
ரஷிக்கையாவது விரோதியை போக்குகையும் அபேஷித்தத்தை கொடுக்கையும்
இவை இரண்டும் சேதனர் இன்ற நின்ற அளவுக்கு ஈடாக இருக்கும்
அதற்கு களை பிடுங்கி நோக்க வேண்டுமே –அவ ரஷனே -என்னக் கடவது அன்றோ –

காரணன் தானே –
இவற்றின் உடைய ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள்-தன் அதீனமாய் உடையவனாய் இருக்கையும்
அதற்குப் பொருள் அன்றோ –
இவற்றுக்கு ஆஸ்ரயம்-இவை தனக்கு ஆஸ்ரயமாக –
இவை இரண்டாலும் பலித்தது பரத்வ சௌலப்யங்கள்-
அந்தர்யாமித்வமும் -உபாயத்வமும் -உபேயத்வமும்-

———————————————————————————————————

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

ஸ்ருஷ்டியாதி கர்த்ருத்வம் -இதுவும் திரு நாம அர்த்தம் -ரக்ஷணம் ஸ்வரூப ஸ்திதி ஆதீனம் முன்பு –
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து–நாராயண சப்த வாச்யனான -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
தானே லோகம் -மேலே செய்யும் செயல்கள் -இது தானே எல்லா உலகும் -சர்வமும் ப்ரஹ்ம -சமானாதி கரண்யம்
-அவருடைய உலகு இல்லை அவரே உலகு -முதல் வேற்றுமை -ஐக்கியம் இல்லை -வெல்வேறு தத்வங்கள் –
சரீராத்மா காரண காரிய ரஷ்ய ரக்ஷக ஆதார ஆதேய -நியந்தரு நியாந்தா சம்பந்தம் உண்டே -ஏக பிரகாரி –
அபிருத்தக் சித்த விசேஷணம் -சார்ந்தே இருக்கும் -உலகு எல்லாம் பஹு வசனம் தானே ஏக வசனம் -நித்யோ நித்யானாம் ஏகோ பஹுநாம் –
அஸஹாயம் — சக ஹாரி நிரபேஷமாக தானே படைத்து -இடந்து பிரளயத்தில் மகா வராஹமாய்
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே-பிரளயத்தில் முற் கோலி தானே உண்டு -ஆபத்து வர போகிறது என்று தானே உணர்ந்து -அபேஷா நிரபேஷமாக
அனந்தரம் உமிழ்ந்து -சேஷியாந்தரம் இல்லாமல் தானே கைங்கர்யம் கொண்டு – சர்வாதிகன் தானே நிர்வகிக்கும் –

சர்வேஸ்வரன்-ஸ்வரூபத்துக்கு ஏற்ற-பல வகைப் பட்ட ரஷணங்களை-சொல்லுகிறார்-

தானே உலகு எல்லாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம – தஜ்ஜலான் எல்லா பொருள்களும் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன –
தத் த்வம் அஸி -அது நீ ஆகின்றாய் –என்றும் சொல்லக் கடவது அன்றோ –

தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே –
ஆகையாலே-தானே உலகு எல்லாம் -என்கிறது –
தஜ்ஜலான்-சாந்த உபாசித-
தஜ்ஜத்வ-அந்த பரம் பொருள் இடத்து உண்டாவதாலும் –
தல்லத்வ – அந்த பரம் பொருளில் லயம் அடைவதாலும் –
தத் நத்வ -அந்த பரம் பொருளால் காப்பாற்றப் படுவதாலும்-
இதம் சர்வம் -காணப் படுகிற இவை எல்லாம்
ப்ரஹ்ம கலு -அந்த பரம் பொருள் அல்லவா –
தத் அநத்வம் -உயிர்பித்தல் -காப்பாற்றுதல்-
தஜ்ஜத்வ தல் லத்வங்களில் –
தச் -சப்தம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம பரம்
தத் அநத்வத்தில்-தச் சப்தம் கேவல ஸ்வரூப மாதரம்-
ஸ்வேன ரூபேண நின்று ஸ்திதிப்பிக்க வேண்டுகையாலே –
இங்கு சொல்லுகிற தாதாத்மியம் -ஓன்று பட்டு இருத்தல் -ஸ்வரூபத்தால் ஐக்கியம் சொல்லுகிறது அன்று-
சரீர ஆத்மா பாவத்தால் சொல்லுகிறது –
காரணனாய் இருக்கும் தன்மையை சொல்லில் வேறு படுகின்ற விகாரங்களுக்கு இடமாம் என்று சங்கித்து
சரீர ஆத்மா பாவத்தாலே சொல்லுகிறது
சரீரத்துக்கு உளதாகும் பால்யம் யௌவனம் முதலானவைகள்
ஆத்மாவை அடையாதது போன்று
இவற்றைப் பற்றி வரும் விகாரங்கள் அவனுக்கு வாரா
என்று குற்றம் தீண்டாமை சொல்லுகைக்காக சொல்லுகிறது

தானே படைத்து –
தம பர தேவ ஏகீ பவதி -சுபால உபநிஷத்
மூலப் பிரகிருதி பரம் பொருளில் ஒன்றுகிறது -என்கிறபடியே
சூஷ்ம சித் அசித்துக்களை சரீரமாக உடைய –

தானே எல்லா உலகங்களையும் உண்டாக்கி –
அசித்தினும் வேறுபடாத நிலை உடைத்தாகையாலே-விரும்புவாரும் இன்றிக்கே-அருள் உடையவனாய் தானே உண்டாக்கினான்

தானே இடந்து –
பிரளயத்தால் மூடப் பட்ட பூமி -என்னை எடுக்க வேண்டும் -என்று விரும்பியதால் அன்று –
அழிந்த உலகத்தை நிறுத்தியது

தானே உண்டு –
பிரளயம் வர புகுகின்றது என்று அறிவார் இலரே-

உமிழ்ந்து –
உள்ளே கிடந்தது நோவு படும் இத்தனை அல்லது
எங்களை வெளிநாடு காணப் புறப்பட வேண்டும் -என்று இரவாது இருக்க தானே உமிழ்ந்து

இப்படி பல விதமான பாது காத்தலை பண்ணுகையாலே-
தானே உலகு எல்லாம் –
எல்லா பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன-

சிலந்திப் பூச்சி தானே நூலை கட்டி அழிப்பது போலே -வீட்டைப் பண்ணி விளையாடும் -விமலன்

———————————————————————————————–

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-

ஆபோ நாரா -ஆர்ணவம் பெரிய நீரை படைத்து சாயி -திருவடிகளில் -புஷபங்களை சமர்ப்பித்து -நித்தியமாக ஆஸ்ரயிக்க
ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்–மிடுக்கான ஆதி சேஷ பர்யங்கம் ஜகத் நிர்வாகம் சேஷி -கோள் மிடுக்கு ஒளி -உஜ்ஜ்வல முகம் –
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே -நாள் தோறும் ஆஸ்ரயிக்க அழைக்கிறார் –

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே-அயனம் தஸ்ய தர பூர்வம் தேன நாராயண ஸ்மிருத -விஷ்ணு புராணம் -1-4-6-
தண்ணீர் நரன் என்ற பரம் பொருளின் நின்றும் உண்டாயிற்று-
ஆதலால் தண்ணீர் -நாரம் -என்று சொல்லப் படுகிறது -என்னும்-ஒரு நிர்வசனம் உண்டே அன்றோ இதற்கு-
அவ்வழியாலே திருமந்த்ரத்துக்கு-பொருள் கொண்டு-திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு
மலர்களைக் கொண்டு கை கூப்பி வணங்கி அடையுங்கோள் –என்கிறார்-

ஆள்வான் –
இவற்றை முழுதும் அடிமை கொள்ளுமவன் –

ஆழி நீர் ஆள்வான்-
அடிமை கொள்ளும் வகை இருக்கும்படி-காரணமான தண்ணீரிலே-
படைத்தலில் நோக்கு உள்ளவனாய்-திருக் கண் வளர்ந்து அருளி –அந் நிலையிலே ஆத்மாக்களை காப்பாற்றியவன் –

கோள்வாய் –
மிடுக்கை உடைய வாய் -என்னுதல்-
பகைவர்கட்கு எமனான வாய் -என்னுதல்-

அரவு அணையான் தாள்வாய் மலர் இட்டு-
எளிதில் ஆராதிக்க தக்கவன் -என்றபடி-
ஆதி சேஷனைப் படுக்கையாக உடையவன் திருவடிகளில்-செவ்விப் பூவினை பணி மாறி-

நாள்வாய் நாடீரே –
நாள் தோறும் வணங்குங்கோள்-
அத் திருவநந்த ஆழ்வான் உடைய பேறு நீங்களும் பெறலாம்-

————————————————————————————-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-

சாதன பக்தி இல்லை -நாமம் பாதுகை யாகிய வீடு -மலர் கொண்டு நாடுவதே
மோக்ஷ பிரதன் நாமம் பாடி -அவன் உள்ளம் உகக்க அருளுவான்
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு–பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே-செல்லுகிறார் நாடுகிறார் பிரார்த்தனை -உடன் அர்த்தித்தவம்
-கைங்கர்யம் -ப்ரீதி உந்த நாமம் பாடி -ஆராதனமும் சாம கானமும் தானே வீடே -அவன் உங்கள் பாட்டை சாம காணமாக கொள்வான் –
நிதானப் பாசுரம் -முக் கரணங்களால் ஆராதனம் –

இப்படி செவ்வி மாறாத மலர்களைக் கொண்டு-அவன் திருப் பெயரை உவகைக்கு-போக்குவீடாகச் சொல்லுங்கோள் –
அப்படிச் செய்யவே ஆத்மாவுக்கு ஸ்வரூப அனுரூபமான-கைங்கர்யத்தைப் பெறலாம் –என்கிறார்-

நாடீர் நாள் தோறும் –
பசித்த போது எல்லாம் உண்ணுமாறு போலே –கால நியமம் இல்லை என்றவாறு –

வாடா மலர் கொண்டு –
தகுதியான மலர்களைக் கொண்டு –
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து-மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி-
ஆர்வம் என்பதோர் பூ இட வல்லார்க்கு -அன்பாகிய மலர் –
அன்றிக்கே-ஆன்மாவாகிய மலர் என்னவுமாம்
கந்த மா மலர் எட்டும் இட்டு-இன மலர் எட்டும் இட்டு
செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குருக்கத்தி கருமுகை தாமரை –

பாடீர் அவன் நாமம் –
ஏதத்சாம காயான் ஆஸ்தே –முக்தர் சாமகானம் பண்ணுமாறு போலே-
அவனுடைய திருப் பெயர்களை பக்தி-முன்னாக பாடுங்கோள் –

நாடீர் -என்பதனால் -மானசீகம்
வாடா மலர் இட்டு -காயிகம்
பாடீர் -வாசகம்
ஆக முக் கரணங்களின் தொலையும் சொல்லிற்று –

வீடே பெறலாமே –
ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே -சாந்தோக்யம் –
உயிர்க்கு உரியதாக கைங்கர்யத்தைச் செய்யவே-
தனது உருவத்தோடு தோன்றுகின்றான் -என்றதனைப் பெறலாமே-இனியதனைச் செய்ய

————————————————————————————–

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

ஆஸ்ரித சம் ரக்ஷணம் -அனுபவ துக்காகவும் பிராட்டி உடன் -ரமயாசக-
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்-அநு பாவ்யமாய் சியாமளா ரூபன் -ஸ்வாமி புஷ்காரனி தடத்தில் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே-பிரகிருதி அழித்து அஹங்காரம் மமகாராம் போலே பூதனை முலைகள்
-பசை அற சுவைத்தால் போலே வாசனை ருசிகள் அனைத்தையும் போக்கி
அமுத மயமான வாய் -விஷம் உண்டாலும் -விஷம் அமுதமாகும் முகூர்த்தம்

நீர் சொன்னபடியே செய்யலாவது-அடையத் தக்க இறைவனை கண்டால் அன்றோ-
கண்டு அன்றோ அடைய வேண்டும் என்ன –
பிற்பாடரான நமக்காக திரு மலையிலே நின்று அருளினான்-அவனை அடையுங்கோள்-என்கிறார்-

மேயான் வேங்கடம் –
நீங்கள் சென்று அடையும்படியாக-திருமலையிலே பொருந்தி வசிக்கிறவன் –

கண்ட அளவிலேயே-வணங்கக் கூடியதாக இருக்குமோ -என்னில் –

காயா மலர் வண்ணன் –
துரும்பும் எழுந்து ஆடி-அடிமையில் மீண்டு அல்லது நிற்க-ஒண்ணாதபடியான வடிவு படைத்தவன் –

நம்மைச் சூழ்ந்து உள்ள தீ வினைகள் செய்வன என் என்னில் –

பேயார் முலை உண்ட வாயான் –
பூதனை பட்டது படும் இத்தனை –

மாதவனே –
நம்முடைய செயலைப் பாராதே-அங்கீ கரிப்பதற்கு அருகே இருப்பாரும் உண்டு

——————————————————————————–

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

வேங்கடத்து உறைவார்க்கு -நம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே -போய பிழைகளும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
–மேய் மேல் வினை முற்றவும் சாரா -வேம் கடன்கள் -ஏதம் சாரா -அங்கே எடுத்துக் கோத்து ராமானுஜர் –
சர்வ பிரகார ஆஸ்ரயணம் பண்ணா விடில் -அந்தப்புர வார்த்தை -மாதவன் சொல்லி -என்று என்று -எதிர் ஒலிக்க
-வாடா மலர் நாமம் மனம் எண்ணினால் போலே அவள் ஒன்றை பத்தாக்கி உபாயம் உபேயம் இந்த அந்த புர வார்த்தை
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்-புருஷகார -கைங்கர்ய வர்த்தகத்வம் இரண்டு ஆகாரம் -என்று என்று பூர்வ உத்தர வாக்கியம்
-மாதவன் -உபாயத்வம் பூர்வ கண்டம் -அவனை உபாயம் இவளை புருஷா காரம் -உபேயத்வம் இரண்டு ஆகாரம்
வல்லீரேல் -கிடையாதது கிடைத்தால் போலே மனசில் பட்டு -துர் லபம்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-ஆர்ஜித்த க்ரூர பாவங்கள் அடையா -பல பிரத உன்முகம் கொண்டு வாரா –
நித்யம் த்வயம் சொல்லி -மேலே உள்ள பாபம் வாராது அனுபவமே யாத்திரை –த்வயம் சொல்லி கால ஷேபம் என்றவாறு

ப்ரீதியினாலே தூண்டப் பட்டவர்களாகி அடையவும்-இனிமையோடு திருநாமம் சொல்லவும்-
மாட்டாதார் அந்தப்புர பரிகரமானார்-வார்த்தையைச் சொல்லவே-
பக்தியை செய்தார் அடையும் பலத்தை-நீங்களும் அடையலாம் –என்கிறார் –

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்-
நாராயண நாமத்தோடே-இதனைச் சேர்த்து சொல்லப் பாருங்கோள் –
நாரணமே -என்றாரே மேல்
உங்களுக்கு ருசி இல்லை யாகிலும்-பிறராலே தூண்டப் பட்டவராகி-எப்போதும் சொல்ல வல்லீர் கோளாகில் -என்பார் –
ஓத வல்லீரேல் -என்கிறார்
ஓத -ஒருவர் உச்சாரணம் செய்ய நீங்கள் அநு உச்சாரணம் செய்ய –

தீது ஒன்றும் அடையா –
முன் செய்தவை எல்லாம் அழிந்து விடும் –

ஏதம் சாரவே –
இனித் தீய செயல் அடையாது -என்றது-முன் செய்த இரு வினைகளையும் மறந்து விடும் –
இனி செய்வன வற்றில் தன் நெஞ்சு செல்லாது –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-தீயினில் தூசாகும் செப்பு –

மேலே கூறின திரு மந்த்ரமும்-இப்பாசுரத்தில் சொன்ன ஸ்ரீமத் பதமும்
தனித்தனியே பேற்றுக்கு போதியவாய பின்பு-இரண்டினையும் சேர்த்து சொன்னவர்களுக்கு-பேறு சொல்ல வேண்டாவே அன்றே
மாதவன் என்று என்று-இரட்டித்து சொன்னது-த்வயத்தில் ஸ்ரீ சம்பந்தம் இரண்டு வாக்யத்திலும் உண்டே என்பதால் —
எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி
மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆச்சார்யா ஹிருதய ஸ்ரீ ஸூக்தி பிரகரணம் -4-சூர்ணிகை -10
முற்கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளை உபாயமாக பற்றுகிறது
பிற்கூற்றால் அச் சேர்த்தியில் அடிமையை இரக்கிறது-முமுஷுப்படி -சூர்ணிகை -122
ஆக-திருமந்தரம் த்வயம் இரண்டையும் அனுசந்திக்க வல்லீர் கோளாகில் -என்றது ஆயிற்று –

——————————————————————————————————-

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8-

சர்வ புருஷ போக்ய பூதன் -திரு நாமம் சொல்வார் நித்ய ஸூ ரிகள் சமம்
சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்-துக்கங்கள் சிவாயமே வாரா -அவைகளே வாராவே -ஜல ஸ்தல விபாகம் இல்லாமல் சர்வ ஜன போக்யன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே-திருநாமம் திருப்தி பெறாத அளவாக கொண்டு -வர்ண ஆஸ்ரம நியதி இல்லாமல்
-ப்ரீதி மாத்திரமே -யாராவது ஓதினாலும் -அவர்கள் நித்ய ஸூ ரிகள் -சொல்லி திருப்தி அடையார்

அதிகாரி நியதி இல்லை-யாரேனுமாக திருப் பெயரை-எப்பொழுதும் சொல்லுவார்-நித்ய சூரிகளோடு ஒப்பார்கள் –என்கிறார்

சாரா ஏதங்கள் –
ஏதங்கள் சாரா-எந்த வித பொல்லாங்குகளும் வந்து கிட்ட மாட்டா-

நீரார் முகில் வண்ணன் –
நீராலே நிறைந்த மேகம் போலே இருக்கிற-நிறத்தினை உடையவன் –

பேர் ஆர் ஓதுவார் –
அவன் திருப் பெயரை எப்பொழுதும் சொல்வார்-யாவர் சிலர்-
ஓதுவார் வர்த்தமானம் எப்பொழுதும் சொல்லிக் கொண்டு இருப்பவர் என்றபடி —

ஆரார் அமரரே –
அவர்கள் பிறவிகளில் தாழ்ந்தவர்களாய் இருப்பினும்-அவர்கள் இருந்தபடியே-நித்ய சூரிகளோடு ஒப்பர்
அந்த அந்த பிறவிகளோடு இருக்கும் போதே-நித்ய சூரிகளோடு ஒப்பார்கள் –
பக்திமான்கள் ஏற்றம் அருளிச் செய்கிறார் ஆஸ்ரயம் ருசி வர

————————————————————————————–

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-

அநந்ய பிரயோஜன சுலபன் -பிரதி பந்தகங்கள் கிட்டா
அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை-ப்ரஹ்மாதிகளுக்கு துர் லபன் -சம்பந்த ஞானம் உள்ள அநந்ய பிரயோஜனர்க்கு எளியவன்
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே-பிரயோஜனாந்தரம் கொண்டு அகலாமல் -பொருந்தி தொழுதால்
பிராப்தி பிரதி பந்தகங்கள் ஸ்பர்சியாதே தீண்டாதே –

பிறவி தொடக்கமானவைகள்-காரணங்கள் ஆகாமல் போனாலும்-
பிரயோஜனாந்த பரராய் ஆவதற்கு-காரணமான பாவங்கள் செய்வது என் என்னில்
அநந்ய பிரயோஜனராய் கொண்டு-பற்றவே அவை தாமே போம்-என்கிறார்

அமரர்க்கு அரியானை –
எத்தனையேனும் மேலான ஞானத்தை-உடைய வரான பிரமன் முதலாயினோர்கட்கும்
தங்கள் முயற்சியால் அடைய முடியாதவனை –
யன் நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-59-என்கிறபடியே

தமர்கட்கு எளியானை –
அநந்ய பிரயோஜனர்கட்கு சுலபன் ஆனவனை -என்றது –ஒரு குரங்கு ஆகவுமாம்-ஒரு வேடுவச்சி ஆகவுமாம்-ரிஷிகள் ஆகவுமாம்
அவர்களுக்கு எளியனாக இருக்கும் -என்றபடி
பிதா யஸ்ய புராஹி ஆஸீத் சரண்ய தர்ம வத்சல-தஸ்ய புத்ர சரண்ய ஸ சுக்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -3-20-என்றும்
ஸ அப்ய கச்சத் மகா தேஜா சபரீம் சத்ரு ஸூ தன-சபர்யா பூஜிதா சம்யக் ராம தசரதாத்மஜா -என்றும்
இமௌ ஸ்ம முனி சர்த்தூல கின்கரௌ சாம் உபச்திதௌ-ஆஜ்ஞா பய யதேஷ்டம் வை சாசனம் கரவாவ கிம் -பால காண்டம் -31-4-என்றும்
சுக்ரீவன் சபரி விஸ்வாமித்ரர் போல்வாருக்கு-எளியன் ஆன பெருமாள் போலே –

அமரத் தொழுவார்கட்கு –
ஒரு பயனைக் கணிசியாதே-அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு-தொழுமவர்க்கு –
மிக்க சீர் தொண்டர் -திரு மங்கை மன்னன்

அமரா வினைகளே –
வேறு பயன்களை விரும்புவதற்கு அடியான-தீ வினைகள் வந்து கிட்ட மாட்டா-

————————————————————————————–

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-

ஆஸ்ரித ரக்ஷணத்தில் அளவிறந்த பாரிப்பு ஆஸ்ரயிக்க அவித்யாதி ஸமஸ்த கிலேசங்கள் போகும்
வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்-பூர்வாகம் உத்தராகம் -தமோ விகாரங்கள்
-அந்யதா விபரீத அஞ்ஞானம் -திரள்கள் தேக சம்பந்தம் ருசி வாசனை -பயந்து ஓடி போகுமே
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே-தன்னிலும் -செவ்வித் பூக்கள் சமர்ப்பித்து
-ஆஸ்ரித விஷயத்தில் அளவுக்கு உட்படாத உபகாரகனை நினைக்க –

அவ்வளவே அன்றிக்கே-கைங்கர்யங்களுக்கு தடையாக உள்ளவைகளும் போம்-
ஆனபின்பு அவனை அடையுங்கோள்-என்கிறார் –

வினை –
கர்மம்

வல் இருள் -என்னும் முனைகள்
பிரபலமான அஞ்ஞானம்-அதற்கு அடியான தேக சம்பந்தம்-
இவற்றைப் பற்றி வருகிற ருசி வாசனை யாகிற-இத் திரள்கள்
முனை -திரள்

வெருவிப் போம் –
நமக்கு இது நிலம் அன்று -என்று அஞ்சிப்போம்
அன்றிக்கே-முனை என்று முகமாய்-முகம் கெட்டுப் போம் -என்றுமாம் –

சுனை நல் மலர் இட்டு –
விண்ணுலகில் உள்ள பொருள்களை-தேடி இட வேண்டும் என்ன வேண்டா –
ஆதரவுடன் -நல் மலர் –

நினைமின் –
சிந்திப்பே அமையும் –உங்கள் மனம் நல்ல நிலையில்-இருக்கும் பொழுது ஒரு கால் நினையுங்கோள் –
ஸ்திதே மனசி ஸூ ஸ் வச்தே சரீரே சதியோ நர-நாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபம்ச மாமஜம்
ஒரு கால் நினைத்து இவனைப் போலே கலங்க வேண்டியது இல்லை அன்றோ அவனுக்கு –

நெடியானே –
எல்லா குணங்களாலும் நிறைந்தவனாய்-கர்மங்கட்கு வசப் படாதவனும் ஆகையாலே-
உருவ நினைத்த படியே இருக்கும் அன்றோ அவன் –ஸ்மராமி -நினைத்த படியே -நிகழ் காலம் -இருப்பானே-

——————————————————————————-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

பகவத் பிரசாதம் பலன் –
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்-சர்வாதிகன் -சர்வ பிரகார பிரசாதம் சூடும் ஆழ்வார் -அதிகரித்து மேன் மேலும் அனுபவித்து
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே-சொல் -நொடி பொழுதில் பதிகம் முடியுமே -நொடியான இப்பத்து
-பகவத் சேஷ பூதருக்கு பகவத் பிரசாத லாபமாக இருக்கும் –

நிகமத்தில்-
இப்பத்தும் கற்றவர்களை-ஆழ்வார் தம்மைப் போலே-பகவான் உடைய-திருவருளுக்குப்-பாத்திரமாகும்-என்கிறார்-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் –
சர்வேஸ்வரன் திருவருளுக்கு-பாத்திரமாகும் தன்மையரான-ஆழ்வார் -என்றது-
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் –4-5-5-என்று
தன் குணங்களையும் செயல்களையும்-பொறுக்கப் பொறுக்க-அனுபவிப்பித்துக் கொண்டு போந்த படியை-நினைத்து ஈடுபட்டார் மேல் –
இப்போது அவன் கொடுத்த அருள் எல்லாம் உண்டு-அறுக்க வல்லார் ஆனார் ஆயிற்று -என்றபடி

நொடிதல் -சொல்லுதல்

ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே –
இப்பத்து தானே இதனைக் கற்றார்க்கு-நெடியான் அருள் சூடும் படியான் -என்றதுவே பேறாக்கும்-
ஈஸ்வரன் கொடுத்த பேறு-ஆழ்வாரால் கொடுக்க மாட்டாமை இல்லை யன்றோ –

————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பக்தேக சரீரம் அபி பஞ்சமோ மித ஸூக்தி ஜாலைகி
பிராப்தவ் த்வாராதிசயம் பக்தி சமுசுகானாம்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் பிரதி பாவ நீயும்
ஜகதி ஜிஞ்ஞாசித்தம்

பக்தேக சரீரம் அபி -பிரகாரம் கரண த்ரயத்தால் ஆஸ்ரயம் -உபதேசிக்க வந்து பக்தி அங்கங்கள் அருளிச் செய்கிறார்
பிராப்தவ் த்வாராதிசயம் -பெருமாளுக்கு த்வரை
பக்தி சமுசுகானாம் -ஜகதி நண்ணும் மனம் உடையீர்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் கண்ணன் கழல் இணை

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

நாம்நாம் சங்கீர்த்தனேன ஸ்திர பரிபீடன் தயா பாவ நாதோ
அநு வேலாம் ஸம்ஸ்ப்ருத்யா புஷ்ப த்யான அத்யயனம் நிவாஸனை
தர்மகி வர்ணாஸ்ரம பத்து வித பஜனை கிரியா நிருத்யாயா
ஸ்தோத்ர க்ருத்யை தீர்க்க பந்து அகில த்ரவிட தர்சி

1–நாம்நாம் சங்கீர்த்தனேன—கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே

2–ஸ்திர பரிபீடன் -தயா –நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே

3-பாவ நாதோ –தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–

4-அநு வேலாம் –ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான் தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே

5-ஸம்ஸ்ப்ருத்யா—நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே-நாடீரே த்யானம்

6–புஷ்ப த்யான அத்யயனம்–நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே

7–நிவாஸனை–மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன் பேயார் முலை உண்ட வாயான் மாதவனே

8–தர்மகி வர்ணாஸ்ரம –மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே

9-பத்து வித பஜனை கிரியா–சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே

10-நிருத்யாயா ஸ்தோத்ர க்ருத்யை–அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே

தீர்க்க பந்து –வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம் சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே

அகில த்ரவிட தர்சி–நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 95-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் பக்திமான்கள் பரிமாற்றத்தை சுருங்க அருளிச் செய்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் அது எங்கனே என்னில்
ஸ்ரீ ஈஸ்வரன் தம்மை ஸ்ரீ பரம பதத்திலே கொடு போகையிலே த்வரிக்கிற படியை கண்டு
இவர்களுக்கு இது ஓன்று குறை பட்டு கிடக்க ஒண்ணாது என்று பார்த்து
தம்முடைய பரம கிருபையாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றுகையாலும் இவர்களுக்கு ஸூக்ரஹமாக வேணும் என்று பாசுரப் பரப்பு அறச் சுருக்கத்திலே
பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படியை சம்சாரிகளுக்கு உபதேசித்து பரோபதேசத்தை நிகமிக்கிற
கண்ணன் கழலிணையில் அர்த்தத்தை-கண்ணன் அடி இணையாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————————

கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்–95-

————————————————————-

வியாக்யானம்–

கண்ணன் அடி இணையில்-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே

காதல் உறுவார் செயலை –
பக்தி உக்தராய் இருப்பார்-க்ருத்யத்தை –

திண்ணமுறவே –
த்ருடமாகவே-அதிலே-ஊன்றும்படி-

சுருங்கச் செப்பியே –
சங்க்ரஹமாக அருளிச் செய்து
யே -ஈற்றசை –

மண்ணவர்க்குத் –
பிருத்வியில் யுண்டான-சர்வாத்மாக்களுக்கும் –

தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் –
ஸ்ரீ பிராட்டி-விதித-சுந்தர 21-25- -இத்யாதி யாலே பரோபதேசத்தை முடித்தால் போலே
கீழே உபதேசித்துக் கொடு போந்த-பரோபதேசத்தை பரி சமாப்தி பண்ணி அருளினார்-பெரு மதிப்பரான ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ பகவத் பிரபாவம் ஸ்ரீ சீதை பிராட்டி சொல்லி நிகமிக்க பிராட்டி பாகவத பிரபாவம் சொல்லி இவர் நிகமிக்கிறார் –

ஆன புகழ் சேர் தன்னருள் –
ஸ்லாக்கியமான யசஸ் உடன் கூடின-தம்முடைய பரம கிருபையாலே-பரோபதேசத்தை தலைக் கட்டி அருளினார் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -பிராட்டி ஆழ்வார் உடைய ஒரே க்ருத்யம்

ஆன புகழ்
உலகத்தார் புகழும் புகழ்

தன்னருள்
அருள் கொண்டாடும்படியான அருள்-

கண்ணன் அடி இணையில்
காதல் உறுவார் செயலை-சுருங்கச் செப்புகை யாவது –
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்-எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்றும்
நாரணன் எம்மான் -என்றும்
கோள் வாய் அரவணையான் தாள் வாய் மலரிட்டு-நாள்வாய் நாடீரே -என்றும்
நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு-பாடீர் அவன் நாமம் -என்றும்
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்-பேயார் முலை யுண்ட வாயான் மாதவனே -என்றும்
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -என்றும்
பேரார் ஓதுவார் ஆரார் அமரரே -என்றும்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே -என்றும்
இப்படி-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தை சப்தார்த்தங்களை சுருக்கி- ஸ்ரீ மாதவன் -என்று த்வயமாக்கி-
கரண த்ரய பிரயோஜன வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்தபடி -என்கை-

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -183- திருவாய்மொழி – -10-4-1….10-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 22, 2016

சார்வே -பிரவேசம் –

தம்மைப் பிரிய நினைவு இன்றிக்கே இருந்த ஐயத்தாலே-பிரிந்தார் படும் துன்பத்தினைப் பட்டு-அதனாலே மயக்கம் உற்றவரை –
உம்மை ஒரு நாளும் பிரியேன் -என்று அவன் தெளியச் செய்ய–செங்கனி வாய் -அதனாலே தரித்து மிகவும் ப்ரீதர் ஆனார் மேல் –

எம்பெருமானார் நிர்வாகம்
முதல் திருவாய் மொழியிலே -1-1-பரம் பொருள் விஷயமாகச் சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி யற்றது –
இனி அந்த பொருள் தானே அடியைக் கூடியதாய் இருக்கும் அன்றோ –ப்ராப்யமாய் -அமரரர்கள் அதிபதி –
அடியைக் கூடியதான அந்த பரம் பொருளின் தன்மையையும்-அடைவதன் பலமான கைங்கர்யத்தையும்-தொழுது ஏழு –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும்-கடைத்தலை சீய்க்கப் பெற்றால் -என்றும்-
அருளிச் செய்தார் -கெடும் இடராய வெல்லாம் -என்ற திருவாய் மொழியிலே –10-2-
அடையக் கூடியதான அப்பொருள் அப்போதே கை புகுரப் பெறாமையாலும்-நெடுநாள் படப் பிரிந்து போந்த வாசனையாலும்
வெருவி இவர் துன்பம் உற்றவராக-இவருக்கு பிரசாங்கிகமாக பிறந்த துன்பத்தினை நினைத்து-
அவனும் தெளிவிக்க தெளிந்தவராய் நின்றார் – வேய் மரு தோளிணை-என்ற திருவாய் மொழியிலே-10-3-

ஆக முதல் திருவாய் மொழியிலே பரம் பொருள் விஷயமாக சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி-
அப்பறம் பொருள் தானே அடியைக் கூடிய பேறாக-ப்ராப்யமாய்- இருக்கையாலே-
அப்பேற்றினைப் பெறுதற்கு உபாயமான பக்தி யோகத்தை வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியிலே சொல்லி
அந்த பக்தி மான்களுக்கு அவன் சுலபனாய் இருக்கும் தன்மையை பத்துடை அடியவர்க்கு -1-3–என்கிற திருவாய் மொழியாலே சொல்லி-
சாத்ய பக்தி -உபாயமாக சொல்லுவது எதனால் –
பிரபத்திக்கு முன்பே பக்தி வேண்டுமே -பரம்பரையா உபாயம் -பரம பிராப்யம் என்கிற ஆசை வர பக்தி வேண்டுமே –
பக்தி அதன் சாத்தியமான பிரபத்தி உடன் பொருந்தி -அது பின் பக்தி உடன் பொருந்தி
பின் சாத்தியமான பிராப்யத்துடன் பொருந்தியதை சொன்னவாறு –
ஆக-வீடுமுன் முற்றத்திலும் பத்துடை அடியவரிலும் சொன்ன பத்தியானது அதன் பலத்தோடு
பொருந்தின படியைச் சொல்லி -தாமோதரன் தாள்கள் தவ நெறிக்குச் சார்வே –10-4-
அத் திரு வாய் மொழிகளிலே பத்தியை வளர்ப்பனவாகச் சொன்ன குணங்களை ஆதரித்துக் கொண்டு –
-உரலினோடு இணைந்து இருந்து -என்றதனை தாமோதரன் என்றும்
புயல் கரு நிறத்தனன் -என்றதனை கார் மேக வண்ணன் என்றும்
அடியவர்க்கு எளியவன் -எளிவரும் இயல்வினன் -என்றதனை சார்வே -என்றும்
பிறர்களுக்கு அறிய வித்தகன் -என்றதனை காண்டற்கு அருமையனே -என்றும்
அமைவுடை முதல் கெடல் -என்றதனை -பெருமையனே வானத்து இமையோர்க்கும் -என்றும்
மலர் மகள் உறையும் -என்றதனை திரு மெய் உறைகின்ற -என்றும்
தாம் தம்முடைய பேற்றுக்கு உபாயமாக-முதல் திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியோடு -அருளினன் -தலைக் கட்டுகிறார் இதில் –

பண்டே பரமன் பனித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் -என்று-
சாத்ய பக்தி பிரபத்தி என்கிற -இவ்விரண்டு கோடியும் இவருக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்-
தம்முடைய பேற்றுக்கு உடலாக இவர் நினைத்து இருப்பது பிரபத்தியே யாம்
முதல் திருவாய் மொழியில் பிரபத்தியைக் காட்ட சொல் உண்டோ என்னில்-அருளினன் -என்றாரே அன்றோ –
அதுவும் அவனது இன்னருளே -9-7-6- என்றபடி –
இனித் தான் இவருடைய பக்தி வேதாந்தங்களில் கூறப் படுகிற பக்தி அன்று-அது சாதன பக்தி அன்றோ –
வேதாங்களில் கூறப் படும் பக்தியாகக் கொள்ளும் இடத்து-அப சூத்ர அதிகரண நியாயத்துக்கு விரோதம் உண்டாகும்-
அது தான் இவ் வாழ்வார் உடைய பிரபாவத்தோடு கூடாதோ என்னில் –அது இவரோடு பாசுரங்களோடு முரண்படும்-
அருளினன் -என்று இப்புடைகளில் அன்றோ இவருடைய பாசுரங்கள்-
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய -ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி-
ஆத்மசித்தி-கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட-
மனத்தினை உடையவனுக்கு உண்டாகும் பக்தி யோகம் ஒன்றினாலே அடையத் தக்கவன் இறைவன் -என்கிறபடியே
ஞான கர்மங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட மனத்தினை உடையவனுக்கு-பிறக்குமது அன்றோ பக்தி யாகிறது –
அந்த ஞான கர்மங்களிடத்து இறைவனுடைய திருவருள் நிற்க-அதற்புப் பின் உண்டான பரபக்தி தொடங்கி பிறந்ததே இருக்கும் இவருக்கு –
இனித் தான் இவர் வழியே போய் இவருடைய பேறே பேறாக-நினைத்து இருந்த ஸ்ரீ பாஷ்யகாரரும்
பிரபத்தியைப் பண்ணி-பின்னர் பக்தி தொடங்கி வேண்டிக் கொண்டார் அன்றோ –
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -இதுவே ஸ்வரூபம் பிராப்தம் -பக்தி ஸ்வரூப விரோதம் என்றவாறு –
அவன் உபாயம் ஆனாலும் – இவனுக்கு ருசி உண்டாய் – பேற்றினைப் பெற வேண்டுமே-இல்லையாகில் புருஷார்த்தம் ஆகாதே –
அவனே சாத்ய உபாயம் என்றாலும் – ருசி வளர்ந்தால் தான் – பிராப்பிய சித்தி -இது அதிகாரி ஆக்குவதற்கு –
பெறுகிற பேறு இன்னது என்று அறுதி இட்டு- அந்த பேற்றிலே ருசி கண் அழிவு அற-உடையவனுக்கு அன்றோ – அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது –
பெறுகிற பேறு இன்னது என்று அறுதி இட்டு- பிரபத்திக்கு முன் பக்தி
அந்த பேற்றிலே ருசி கண் அழிவு அற-உடையவனுக்கு -பிரபத்திக்கு பின் பக்தி
இரண்டும் இருந்தால் தான் அன்றோ – – அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது –
ஆகையால் இவருடைய பக்தி பிரபத்திகள் மாறாடலாம் படி அன்றோ இருப்பன –
ஆக
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியிலும்-பத்துடை அடியவர் -என்ற திருவாய் மொழியிலும் பிறருக்கு உபதேசித்த பக்தி-
தம்முடைய பேற்றுக்கு உடலாய் இருந்தபடியைச் சொல்லி –இது தான் பலத்தோடு சேர்ந்த படியைச் சொல்லி முடிக்கிறார் இதில் –10-4-

நன்று -பிறருக்கு உபதேசித்த இந்த பக்தி யானது பலத்தோடு சேர்ந்து இருப்பது-இறைவனை நேரே கண்டு அனுபவித்தாலே அன்றோ -என்னில் –
கண்கூடாகக் காண்பது போன்று தோற்றாமல்-கண் கூடாக காண்பதாகவே தோற்றுகிற மனத்தின்-அனுபவம் அமையும் அன்றோ இப்போது –
ஸ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபஸ்சிதா-
சர்வஞ்ஞன் உடன் சேர்ந்து முக்தன் அனுபவிக்கிறான் எல்லா குணங்களையும் என்றபடியே-குணங்கள் அனுபவிக்கத் தக்கன ஆனால்
அக் குணங்களோடு கூடியதாக இங்கே இருந்து வணங்குகிறானே அன்றோ
ஆக வணங்குகிற வேளையிலும் அது இருக்கும்படியை நினைக்க தட்டு இல்லை -என்க
ஆனால் மேலும் எல்லாம் கண் கூடாக காணுதலைப் போன்று-மனத்தினால் கண்டு அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ –
கண்ணனை நான் கண்டேனே
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து-சொல்லிக் கொண்டு போந்தது -என்னில்
அவற்றைப் பற்றி -ஒவ் ஒரு குணத்தைப் பற்றி -பிறந்தன சில ரச விசேடங்களை சொன்ன இத்தனை யேயாம் அவ்விடங்களில்
தொடங்கின பொருளை முடிக்கை என்பதும் ஓன்று உண்டே-அதனைச் சொல்லுகிறது இங்கே-
முனியே -அணித்தாகையாலே மானஸ அனுபவம் பூரணமாக இருக்குமே –
மேலே அருளியவை எம்பெருமானார் நிர்வாகம் –

இங்கன் அன்றிக்கே -நீ பசு மேய்க்கப் போக வேண்டா -என்கிறாள்-ஆகில் தவிர்ந்தேன் -என்றான் –
இவனைப் போன்ற சுலபன் இலன் காண் -இவன் பக்தியினால் அடையத் தக்கவன் என்னும் இடம் உறுதி -என்கிறாள்-
-என்று ஒரு உருவிலே பணிப்பர் பிள்ளான் –

இனி ஆளவந்தார் நிர்வாஹம் ஒன்றும் அருளுகிறார் அடுத்து –
முதல் திருவாய் மொழியிலே-1-1- பெறக் கூடிய பேற்றினை அருளிச் செய்தார்-
அந்த பேற்றினை அடைவதற்கு வேதாந்தங்களில் பக்தி என்றும் பிரபத்தி என்றும் இரண்டு வழிகள் விதிக்கப் பட்டன –
அவை இரண்டிலும் பக்தி முதல் மூன்று வருணத்தவர்களே செய்யத் தக்கது-பிரபத்தி எல்லாராலும் செய்யத் தக்கது-
அவற்றில் எல்லாராலும் செய்யத் தக்கதாய்-தாம் தம் திரு உள்ளத்தாலே தமக்கு உபாயமாக ஏற்றுக் கொண்ட பிரபத்தியை-
வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியிலே அருளிச் செய்தார்-
முதல் மூன்று வர்ணத்தவர் உடைய சாதன பக்தியை -பத்துடை அடியவர்க்கு -1-3–திருவாய் மொழியில் அருளிச் செய்தார்-
ஆக இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்த-பக்தி பிரபத்திகள் தம் பலத்தோடு-பொருந்தின படியை அருளிச் செய்கிறார் –
சார்வே தவ நெறி -10-4-–/ கண்ணன் கழலிணை -10-5-–/ என்னும் இரண்டு திருவாய் மொழிகளாலும் –
அவற்றுள் சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியில்-பிரபத்தி அதற்கு உரிய பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார்-

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்று –தவம் -என்னும் சொல்லால் பிரபத்தியைச் சொல்லுகிறது –
தஸ்மாத் ந்யாசம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹூ -தைத்ரிய உபநிஷத்-தவங்களில் மிக்க தவமாக சொல்லிற்றே அன்றோ பிரபத்தியை –
பண்டே பரமன் பணித்த பணி வகையே-கண்டேன் கமல மலர்ப்பாதம் -காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின எல்லாம்-என்றும் –
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றான் -என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா சுச -என்ற-அர்த்தத்தை அருளிச் செய்தார்

இனி ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமலை ஆண்டான் பணிப்பது -ஆவது –
பிரபத்தி விஷயமாக ஆயிற்று -வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழி –
ஸ்ரீ பாஷ்ய காரரும் அப்படியே பிரபத்தி விஷயமாக அருளிக் கொடு போந்து-ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்த பின்பு
இரகசிய உபாயத்தை வெளி இட ஒண்ணாது என்று
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியையும் பக்தி விஷயமாக அருளிச் செய்தார்-

ஆக
முதல் திருவாய் மொழியில் -1-1-சொன்ன பரம்பொருளின் ஸ்வரூபத்தையும்-
அதனைக் காண்பதற்கு பலமான கைங்கர்யத்தையும்
கெடும் இடராய -என்கிற திருவாய் மொழியிலே-10-2-
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும் –
கடைத் தலை சீய்க்கப் பெற்றால் -என்றும் அருளிச் செய்து –
உன் தன் திரு உள்ளமிடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்-என்று-அக் கைங்கர்யத்திலே களை பறித்து
அதாவது-த்வய மகா மந்த்ரத்தில் பின் வாக்கியத்தில் -நம -அர்த்தம் அருளிச் செய்து –
கெடும் இடராய -10-2–என்னும் திருவாய் மொழியாலும்–வேய் மரு தோளிணை -10-3–என்னும் திருவாய் மொழியாலும்
முதல் திருவாய் மொழியில் -1-1-சொன்ன பொருளை முடித்து-
சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியாலும்-10-4-/கண்ணன் கழலிணை -என்கிற திருவாய் மொழியாலும்-10-5-
வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியாலும் /பத்துடை அடியவர் -1-3–என்ற திருவாய் மொழியாலும்-சொன்ன -பக்தி -பிரபத்திகள் –
அதன் அதன் பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார் என்று -ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலை ஆண்டான் பணிப்பார் –

10-4-சாத்ய பக்தி சொல்லப்பட்டது -எம்பெருமானார் நிர்வாகம் -1-2- போலே -10-3- பிராசங்கிகம் –
பிரபத்தி பரம் -1-2- ஆளவந்தார் -பத்துடை அடியவர் 1-3-சாதன பக்தி பரம் –
-சார்வே தவ நெறி பிரபத்தி -பரம்-கண்ணன் கழலிணை பக்தி பரம் –
பிரபதிக்கு முன்னும் பின்னும் பக்தி வேணுமே -ப்ரேமம் வேணும் அவனை சரண் அடைய –
-உபாய பாவனையில் கண் வைக்காமல் கைங்கர்யம் -ப்ராப்ய ருசிக்கு பக்தி வேண்டுமே –
ஸ்தான த்ரயோ பக்தி -சாத்ய பக்தி -சாத்யத்துடன் சேர்ப்பிக்கும் பக்தி பிரார்த்தித்து பெற்றார் -எம்பெருமானார் –
உயர்வற உயர்நலம் -தத்வம் -ப்ராப்யம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -பரத்வம்
அருளினன் -ஹிதம் -உபாயம் –
தொழுது ஏழு -புருஷார்த்தம் -வழி ஆகுமோ –
தொழுகை உபாயம் எழுகை உபேயம் என்றால் என்ன -தொழுகையே எழுகை -சாத்ய பக்தி அன்றோ -அதனால் அருளினன் சாதனம் –
மயர்வற மதி நலம் -பக்தி ரூபாபன்ன ஞானம் -தாரை போலே அனைத்து திருவாய்மொழிகளும் இதில் அடங்கும் –
உபாயம் இருந்தாலும் புருஷார்த்த பிரதான்யம் -முதல் திருவாய்மொழி –
கெடும் இடரில் -கைங்கர்ய பிரதி சம்பந்தி -கைங்கர்ய பிரதானம் இதில் -1-1-பரத்வம் -இருந்தாலும் -அங்கும் கைங்கர்ய பிரதி சம்பந்தி தானே –
அதனால் 1-1 /10-2- சேரும் என்றவாறு -அங்கே தொடங்கி இங்கே நிகமிக்கிறார் –

தாம் உபதேசித்த சாத்ய பக்தி -1-2- பிரபத்தியிலே மூட்ட -சேஷத்வ ஞானம் பரதந்த்ரன் புரிந்து -பிரபத்தி உபாயமாக தலைக் கட்டும் என்றபடி –
சாத்ய பக்தியையே பிரபத்தி என்னலாமோ என்னில்- இருவரும் பக்தி சாதனம் இல்லை என்பார்களே
பேற்றுக்கு உபாயமாக பிரபத்தியைப் பற்றி இருக்கிறார் என்பதுடன் சேராதே
சாத்ய பக்தி எதற்கு -என்றால் பிரபத்தியில் தூண்ட -மேலே ருசி வளரவும் பக்தி வேண்டும் –
அருளினன் -என்றது கர்ம ஞான யோக ஸ்தானங்களில் –
தவ நெறிக்கு சார்வு -சாத்யத்துடன் பொருந்தி பக்தி உபாயம் பலத்துடன் சேர்ந்தது என்றது பிரபத்தியில் மூட்ட என்றவாறு –
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய-ஆளவந்தார்
உபய கர்ம ஞான யோகம் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க –
அந்தக்கரணம் ஐ காந்திக பக்தி ஏக அந்த ஒன்றே முடிவு ஆத் யந்திக முடிவைத் தாண்டி யாவதாத்மா பாவி
பக்தியால் அடைய பெறலாம் -ஆத்மா இருக்கும் அளவும் பக்தி என்றால் -சாதனம் இல்லையே -பரம பாதம் சாத்ய பூமியிலும் உண்டே –
அனுபவம் தானே அங்கே -உபாய பாவம் வழி இல்லையே அங்கே கர்மம் தொலைத்த பின்பு
இங்கு விதி அற்ற படியால் கரு முக்கை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
அந்திம -சரம உபதேசம் -உபாய பாவம் மறந்து உபேய பாவத்தில் கண் வைக்க வேண்டும் உடையவர்
அருளினன் -என்றது கர்ம ஞான யோக ஸ்தானம் -பிரபன்னனுக்கும் அனுபவ த்துக்கும் கைங்கர்யத்துக்கும் -பக்தி வேண்டுமே –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -உபாய புத்தியை விட்டு -சாத்தியமாக ருசி வளர பண்ண வேண்டும் -ஸ்வயம் பிரயோஜன பக்தி —
கிருபையே உபாயம் உறுதி என்பதால் பிரபன்னர் -என்னலாம் -ஆர்த்தி மிகுதியைப் பார்த்தால் சாத்ய பக்தர் என்னலாம்-
கோபிகள் செய்வதை எல்லாம் பண்ணுகிறார் –
சாதன பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க பக்தன் பிரபத்தி அங்கமாக செய்து -இதுவே ஸ்ரீ கீதை யிலே சரம ஸ்லோக அர்த்தம் –
விபீஷணாதிகள் இராவணாதிகளுக்கு உபதேசிக்க அது பக்திக்கு உடலானது போலே வீடு மின் முற்றவும் -நமக்கு உபதேசித்து பக்தி வளர்ந்து பிரபத்தி
ராகவன் சரணம் கத -பல வாக்கியம் இருந்தாலும் ஒரே சரணா கதி -முன்பு எல்லாம் அறிவிப்பு –
சர்வ லோக சரண்யாய ராகவாயா சரணம் -உபதேசிக்க பக்தி வளர அது தானே பிரபத்திக்கு தூண்டு வித்து –
ராவணன் தள்ளி விட்டு அதனால் இல்லை -பிராவண்யம் வளர பிரபன்னன் ஆனான் போலே –
சாத்யம் உடன் சேர்வது பகவத் சாஷாத்காரம் –
ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் -பிரபத்தி அனுஷ்டித்தவனுக்கும் மூன்று அவஸ்தைகளும் உண்டே
கத்ய த்ரயத்தில் மூன்றையும் பிரார்த்தித்தார் -அது சாதன பக்தி இல்லை -ஸாத்ய பக்தி –
யாவதாத்மா பாவி -பக்தி வேண்டும் -பரம பக்தி -அங்கு -நிஜ சாஷாத்காரம் –
பிரத்யக்ஷ சாமானாக சாஷாத்காரம் -பாரா ஞான அவஸ்தையிலும் -ஆழ்வார் ப்ரத்யக்ஷமாகவே
-நீ போகேல் -சாஸ்திரம் -வரம்பு இல்லையே ஆழ்வார் உடைய பிரேம பக்திக்கு –
அங்கும் குண அனுபவம் -உபாசனத்திலும் குண அனுபவம் -பிராப்தி தசை போலே போக ரூபமாக இருக்குமோ எண்ணில்
ஆழ்வார் வேறு ஒன்றிலும் கண் வைக்காமல் சம்சாரம் நினைவில் இல்லாமல் உண்ணும் சோறு இத்யாதி
-பூவை பூம் –யாவையும் திருமால் திரு நாமமே என்று அன்றோ இருப்பார்
எதனால் இனி இனி என்று கதறுவதால் -பிராகிருதம் –
10-4 சாஷாத்கார நிலை -முன்பே இந்த நிலை இருந்தாலும் -அங்கு ஓர் ஓர் குணங்களை பற்றி –
இங்கு முனியே அணித்து-விசத தமமான அனுபவம் -இங்கு தானே பல அனுபவம் பூர்ணம் –
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -சாதன பக்தி உபதேசம் -ஆளவந்தார் நிர்வாகம் படி –
ஆழ்வார் பிரபன்னர் -சாதன பக்தியை உபதேசிக்கிறார் –
அவனாலே அவனை அடைந்து பாட வேண்டும் -காலம் போக்க பிரபன்னர்களாகிய நாம் பாடி ஆடி கழிப்போம் –

———————————————————————————————–

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

சர்வ ஸ்மாத் பரன் -போக்ய பூதன் -பக்தி லப்யன் -சார்வு பிராப்தி தவ நெறி -ஸாத்ய பக்தி
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்-உபய விபூதி நாதன் -தாமோதரன் -தத் ப்ரஹ்ம கசோர பாவம்
-பயந்து கண்ணை உருட்டி -வெண்ணெய் களவிலே -1-3-கட்டுண்டு பேர் பெற்ற -ஆஸ்ரித பவ்யன்
-வனக்குடை தவ நெறி பக்தி மார்க்கத்துக்கு பிராப்யமாக இருக்கும் -பிரபத்தியில் மூட்டும்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-காள மேக ஸ்யாமளன் -பரபாக திருக் கண் அழகு –
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்-அந்த அழகு மட்டும் இல்லை
-பஞ்ச பூதம் ஸமஸ்த -சரீராத்மா நிபந்தம் சாமா நாதி கரண்யம் -அந்தராத்மா தயா நின்ற
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே-அழகுக்கும் பிராப்திக்கும் ரக்ஷகத்வத்துக்கும் -திரு நாமங்கள் -ப்ரீதி உந்த அக்ரமமாக பிதற்றும் –

இரண்டு விபூதிகளையும் உடையவனாய் இருந்து வைத்து-அடியவர்கட்கு சுலபனாவன் உடைய
திருவடிகள் பக்தி மார்க்கத்தாலே அடையத் தக்கன –என்கிறார் –

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
தாமோதரன் தாள்கள் -தவ நெறிக்கு சார்வே –
பத்துடை அடியவர்க்கு எளியவன் –1-3-1-என்றும் –
எளிவரும் இயல்வினன் -1-3-2–என்றும்
சொல்லப் பட்ட அவன் திருவடிகள் சார்வு -என்கிறார் –
சார்வு -பேறு
தவ நெறி -என்றது பக்தி மார்க்கத்தை
மேலே வணக்குடைத் தவ நெறி -1-3-5- என்றார் இறே -அதனைச் சொல்லுகிறார் –
தவ நெறி என்ற அளவில் பக்தியை சொல்லிற்றாமோ -என்னில்
சத்தம் கீர்த்தயந்தோ மாம் யதந்தஸ்ஸ த்ருடவ்ரதா-நமஸ் யந்தஸ்ஸ மாம் பக்த்யா நித்யயுக்தா உபாசதே -ஸ்ரீ கீதை -9-14-
வணக்கத்தை அங்கமாய் உடைத்தாய் இருக்கும் அன்றோ பக்தி-
ஆகையால் இவன் ஒரு வணக்கத்தைச் செய்தால்-இவன் நம்மை நோக்கி குவாலாக வருந்தினான் -என்று-
இதனை பெரிய காய கிலேசமாக நினைத்து இருக்கும்-அவன்கருத்தால் சொல்லுகிறது –
வேங்கடத்து உறைவார்க்கு –நம-வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –
அங்கமான வணக்கத்தை இட்டு அங்கியான பக்தியைத் தவம் என்ற சொல்லால் சொல்கிறது –
அன்றிக்கே-யஸ் சர்வஞ்ஞ சர்வ வித் யஸ்ய ஞானம் அயம் தப -முண்டக உபநிஷத் -என்கிறபடியே
ஞான விசேஷமான பக்தியை தவம் என்று சொல்லிற்று ஆகவுமாம்

தாமோதரன் தாள்கள்-
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -என்றதனைச் சொல்லுகிறார் இங்கு-
யசோதை முதலாயினோர் கைகளிலே கட்டுண்டு தழும்பு சுமந்ததுவே திரு நாமமாக இருக்குமவன் அன்றோ –
யசோதை முதலாயினோர் கைகளிலே கட்டுண்பான் ஒருவன் ஆனபின்பு-வரத வலி த்ரய -பிரதம விபூஷணி வபூவ –
அவனை உகப்பார் அவன் காலைக் கட்டிக் கொள்ளும் இத்தனை அன்றோ –

இந்த திரு ஆபரணத்துக்கு நிகர் இல்லையே -சுலபத்துக்கு அன்றோ ஆபரணம் இது –
எப்படிப் பட்டவன் சுலபன்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-விலக்ஷணவிக்ரகம் -நீர் கொண்டு எழுந்த காள மேகம் –
பக்திக்கு கிருஷி பண்ண வேண்டாம் வந்து நின்றால் போதுமே
ருசிக்கு உத்பாதகமுமாய் –வளர்த்து பக்குவம் ஆனால் அனுபவிக்கவும் அந்த அழகே -பிராப்யம்
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி அன்றோ
கார் காலத்து மேகம்
கருத்த மேகம் என்னுதல்
புயல் கரு நிறத்தனன் -என்றத்தை
கமல நயனத்தன்-
அக வாயில் குண பிரகாசகம் திருக் கண்கள் காட்டும்
அனுக்ரகம் அடைய தோற்ற வாத்சல்யம் பிரகாசகம் அன்றோ திருக் கண்கள் -குற்றங்களையே குணமாக கொள்வான்
வடிவு அழகைக் கண்டு மேல் விழுகை அன்றிக்கே மேன்மையும் உண்டே -இதனாலும் மேல் விழ வேண்டும்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்-
விக்ரக வை லக்ஷண்யத்துக்கு மேலே -ஸ்வரூப வை லக்ஷண்யம் சொல்கிறது
யாவையும் யாவரும் தானாம் அமை உடை நாரணன் -பிரகார பிரகாரி பாவம் -அத்தையே இங்கு சொல்கிறது
பிருதிவி பஞ்ச பூதங்களை -சொல்லி காரணமான தேவாதி விஷயங்களையும் நினைக்கிறது -இத்தால் லீலா விபூதி உக்தன் என்றும்
கையும் திரு ஆழியும்—சொல்லி நித்ய விபூதியையும் சொல்லி –
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே-
பெருத்த வானவர்கள் பெருமை -இவ்வருகில் ஆக்கரான தேவர்கள் அன்றிக்கே பெரு மக்கள் -நித்ய ஸூரிகள்
பேர் திரு நாமம் -பிதற்றும்
ருசி உடையார் பிதற்றுவார்கள் அன்றோ
பிராப்யம் கை புகுந்து அவ்வருக்கு பட்டரும் பிதற்றுவார்கள் -பெருமை உடையவன் அன்றோ
அவராலே -எங்கும் உள்ளாரையும் பிதற்ற வைக்கும்
இப்படிப் பட்ட தாமோதரன் தாள்களே -சார்வே
நிச்சயம் -சங்கை இல்லை –

—————————————————————————————————-

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-

பரத்வாதி ஹேதுவான ஸ்ரீ யா பத்தி -சீலா திசயத்தாலே அடிமை கொண்டான் -ப்ரஹ்மாதிகளுக்கும் அவ்வாறுஇக்கான பெருமை
காண்டற்கருமையனே ஆகத் தணை யாதார்க்கு -நெஞ்சில் அநுஸந்தியாமல் இருப்பார்க்கு காண அரிய
என்றும் திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் -நித்ய வாசம் செய்யும் -மெய்யாக மெய்யில் உறையும் –
அத்தால் நிரதிசய ஐஸ்வர்யம் ஸூ சகம் -திரு வுக்கும் திருவாகிய தேவா தெய்வத்துக்கு அரசே -நீண்ட அப் பெரியவாய கண்கள் –
நாளும்-இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே-புண்ய பாப கர்மங்களை போக்கி இந்த விபூதியில் நாள் தோறும் அடிமை கொள்கிறான் –

சர்வேஸ்வரனாய்-திருமகள் கேள்வனாய்-இருந்து வைத்து-என் இருவினைகளைப் போக்கி –
என்னை இங்கே அடிமை கொள்ளா நின்றான் -என்று-மேலே கூறிய சௌலப்யம்-தமக்கு பலித்த படியை-அருளிச் செய்கிறார்-

பெருமையனே வானத்து இமையோர்க்கும் –
வானத்து இமையோர்க்கும் பெருமையனே –
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை அற நிலம் அதுவாம் அமைவுடை அமரர் -1-8-3-என்றதனைச் சொல்கிறது-
அல்லாதார் கீழே இருக்க -தாங்கள் மேலான லோகங்களில் இருக்கிறார்களாய்-
படைத்தல் முதலானவற்றுக்கும் தாங்களே கடவார்களாக நினைத்து தங்களைக் குவாலாக-
நினைத்து இருக்கும் பிரமன் முதலாயினார்க்கும் தன்னை அடைந்து ஸ்வரூபம் பெற வேண்டும்படியான பெருமையை உடையவன் –
அவ்வாசியே அவர்களுக்கு உள்ளது -என்பார் -வானத்து -என்கிறார் –இவ் உலக விவகாரத்தில் நம்மிலும் கனவியராய் இருப்பார்கள் –
நாம் பற்றின அளவே அன்றோ விட வேண்டுவது –அவர்கள் மூன்று உலகங்களையும் விட வேண்டுமே —

காண்டற்கருமையனே ஆகத் தணை யாதார்க்கு –
ஆகத்து அணையாதார்க்கு காண்டற்கு அருமையனே –
தானே வந்து மேல் விழா நின்றால்-விலக்குகிறவர்களுக்கு காண அரியனாய் இருக்கும் –
சம்பந்தம் இன்று தேட வேண்டா –பெற வேண்டும் என்கையும் வேண்டா என்கையும் அன்றோ உள்ளது-
அவனை பெறுவதற்கும் இழப்பதற்கும் –பிறர்களுக்கு அரிய வித்தகன் -என்றதனைச் சொல்லுகிறது –
நெற்றியைக் கொத்தி பார்த்தால் பசை காணா விடில் மீள்பவன் இல்லையே-
-என்றாவது வருவான் என்று அன்றோ நித்ய வாசம் உள்ளே கிடக்கிறான் –
என்றும் திரு மெய் யுறைகின்ற –
த்வயத்தில் நித்ய சம்பந்தத்தைச் சொல்லுகிறதே அன்றோ-மத் ப்ரத்யாயர்த்தம் –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன் -அன்றோ
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -என்றதனைச் சொல்லுகிறார்
–என்றும் ஒக்க பெரிய பிராட்டியார் வசிக்கின்ற திரு மேனியை உடையவன் –

செங்கண்-
அவளுடைய என்றும் உள்ள சேர்த்தியாலே நீர் பாய்ந்த-பயிர் போலே செவ்வி பெற்ற திருக் கண்களை உடையவன் –

மால் –
அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த்த தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம் வனே -ஆரண்ய -37-18
என்றபடியே வந்த பெருமையைச் சொல்கிறது-
அரும் பெறல் அடிகள் என்றாரே மேல் -அதனைச் சொல்லுகிறார் இங்கு –

நாளும் இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே –
இருமை வினை கடிந்து-நாளும்-இங்கு என்னை ஆள்கின்றானே –
நல்வினை தீவினைகளைப் போக்கி –இதனை விட்டு ஒரு தேச விசேடத்தில் போனால் கொள்ளக் கடவ அடிமையை
இந்த உலகத்திலே நாள் தோறும் கொள்ளா நின்றான் –
அங்குப் போனால் குண அனுபவத்தாலே ஆத்மாவை -சத்தையை-நிர்வகிக்கும்-
இங்கு குண ஞானத்தினால் தரிப்பியா நிற்கும் –

————————————————————————————————

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-

ஆர்த்தி ஹரத்வம் குணம் பத்தாம் பத்தில் -ருசிக்கு தன்னையே விஷயம் ஆக்கி அருளுகிறார் –
பத்துடை அடியவர்க்கு எளியவன் திருவாய் மொழி அர்த்தமே இதிலும் அருளிச் செய்கிறார்
நப்பின்னை பிராட்டி சேர்த்தியால் நிரதிசய அனுபாவ்யன் -கிருஷ்ணன் -திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன்
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்-ரக்ஷகன் அவன் -விரோதிகள் மறுவல் இடாதே
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –
கையும் திரு ஆழியுமாக விரோதிகளை –
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்-ஜென்ம பிரயுக்த -வாசனை ருசி கர்மம் இத்யாதிகளை
-கடிந்தோம் என்று சொல்லும் படி -சம்பந்தம் -நம்மாலும் பிறராலும் குறை உடையோம் அல்லோம்
-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -ரக்ஷணம் -குறை
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்-கூர்மை நெடுமை -வாள்-த்ருஷ்டாந்தம்
-குளிர்த்தி மிளிர்த்தி கெண்டை மீன் -த்ருஷ்டாந்தம் -இவை போலி யாம் படி வி லக்ஷணமான ஒண் -கண்கள்
மடப்பம் ஆத்ம குணங்களால் பூர்ணம் அபிமத நாயகன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே-பூஷணமாக அணிந்து கொண்டேன் -அபரோக்ஷித்து இது காறும் கேட்டே இருந்தேன் –
த்ரயீ வேதங்களால் – இப்படி இல்லை என்றே சொல்லும் நேதி நேதி-எம் ப்ரோஷம் –
-கட் கிலி- கண்ணுக்கு நேராக அப்ரோக்ஷித்து சேவை -தலை மேலே தரிக்கப் பெற்றேன்

மறுவல் இடாதபடி-பிறவிப் பிணியைப் போக்கி-நப்பின்னைப் பிராட்டிக்கு கேள்வன் ஆனவனுடைய
திருவடிகளை தலைக்கு அணியாகப் பெற்றேன் –என்கிறார்-

ஆள்கின்றான் ஆழியான் –
ஆசிலே வைத்த கையும் -தானுமாய்-பிறவிப் பிணியைப் போக்கி-அடிமை கொள்ளா நின்றான் -என்னுதல் –
அன்றிக்கே-வகுத்த ஈஸ்வரன் அடிமை கொள்ளா நின்றான் -என்னுதல் –ஸர்வேச்வரத்வ ஸூ சகம் -ஆழியான் —
பின்னையும் -சதநாந்தரம்-செய்த பின்னையும் – அவன் கை பார்த்து இருக்கும் வேண்டும் படி-
அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டங்களை -கர்மாதி உபாயாந்தரங்கள் -பூண் கட்டா நிற்பர் சிலர்-
கூர் அம்பன் அல்லால் குறை-மற்று இலை துணை -நெஞ்சே -குறை -ரக்ஷணம் -நான் முகன் திருவந்தாதி -8-என்ற அம்பின் கூர்மையையும்-
சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்-என்று திரு ஆழியில் கூர்மையையும் கொண்டு பெற இருப்பர் சிலர் –
ஆற்றல் இல்லாத தன்னாலே செய்யப் பட்ட கர்மங்களின் கூட்டத்தைப் பற்றி பற்றிப் பெற இருப்பர் சிலர்-
என்றும் உள்ள ஸ்வரூபத்தை உடைய சர்வஞ்ஞானான பராத்பரனைப் பற்றி பெற இருப்பர் சிலர் –
கர்மங்களின் கூட்டத்தை நெகிழச் சொல்லி-கெடுவாய் என்னை அன்றோ பற்ற அடுப்பது -என்றான் அன்றோ அவன் சரம ஸ்லோகத்தில் –
சாஸ்திர விஹித-சாதனாந்தரங்கள் -கார்ய சித்தியில் ஈஸ்வர அபேக்ஷையும் -ஸ்வரூப சித்தியில் சேதன அபேக்ஷையும் –
இவற்றை விட்டு அவனைப் பற்ற சரம ஸ்லோகம் அருளி

ஆரால் குறை உடையம் –
என்னாலே இழக்க வேண்டுதல் -இல்லை யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்கையாலே-
என்னால் இழக்க வேண்டுவது இல்லை -என்றபடி –
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை -அத்தையே பச்சையாகக் கொண்டு – வீடு செய்வதால் -என்னால் இழக்க வேண்டுவது இல்லை
எல்லாம் அவனே -ப்ரஹ்மாத்மகம் இல்லாத வஸ்து இல்லையே -ஆகாசாத் பதிதம் தோயத -சர்வ தேவதா நமஸ்காரம் கேசவன் கச்சதி –
ஆராயக் கூடிய யமன் முதலாயினார்க்கும் வந்து கிட்டலாதல் –
அவன் தன் அளவும் சென்றால் பின்னையும் ஒன்றைப்பார்த்து இருத்தல் செய்ய வெண்டும்படியாய்
இருப்பது ஒன்றனையோ நான் பற்றிற்று –கிருபையை பார்த்து இருத்தல் -பக்திக்கு பலப் பிரதானம் அவனே
ஆரால் -என்கிறார் காணும்-என்றும் ஒரு சேதனனாலே பேறு-என்று இருக்குமவர் ஆகையாலே
–எத்தால் -என்னாமல்-அசேதனம் -கர்மாதி உபாயாந்தரங்கள் கூடாதே –

மீள்கின்றதில்லை –
இனி மறுவல் இடுகிறது இல்லை —

பிறவித் துயர் கடிந்தோம் –
பிறவித் துன்பத்தினை ஓட்டினோம் -என்றது –பரம பதத்திலே புகச் செய்தேயும்- ருசி முன்னாக பேறு இல்லாமையாலே-
கடலில் புக்க துரும்பு போலே மீளப்போந்தார்களே அன்றோ-வைதிகனுடைய பிள்ளைகள் –
மயர்வற மதிநலம் அருளினன் -என்று ருசி முன்னாக – அவன் தரப் பெற இருக்கிற நமக்கு-மீண்டு வருதல் என்பது ஓன்று இல்லை என்றபடி –
தாளால் சகம் கொண்ட தார் அரங்கா பண்டு சாந்திபன் சொல்
கேளா கடல் புக்க சேயினை மீட்டதும் கேதமுடன்
மாளாப் பதம்புக்க மைந்தரை மீட்டதும் மாறு அலவே
மீளாப்பதம் புக்க பாலரை நீ அன்று மீட்டதற்கே -திருவரங்கத்து மாலை -72
கடிந்தோம் -என்கிறார் காணும் -இறந்த காலத்தில் திரு மேனி உடன் இருக்கச் செய்தேயும் –
அவன் செய்வானாக ஏறிட்டுக் கொண்ட கார்யத்துக்கு-நிலையாகப் பெற்றேன் -என்ன வேண்டும்படி இருக்கும் அன்றோ –
ஸ்தித அஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம்தவ -ஸ்ரீ கீதை -18-73-நஷ்டோகோ மோஹ – பிரசாததத்தால் இந்த நிலை பெற்றேன் என்றான் –

வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் –
அவனுடைய ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்ததாகில்-அடு குவளம் தடைபடும் போல் காணும்-
அடுகு -என்று பெட்டி மேல் பெட்டியாய்-வளம் -என்று இனிய பொருளாய்-போனகப் பெட்டி-
அடு குவளம்தடைப் படுதல் -நப்பின்னை பிராட்டி கடாஷம் பெறாமை-
இனி என்னால் தான் விடப் போமோ-அவனால் தான் விடப் போமோ-
என்னுடைய பாரதந்த்ர்யம் போலே -அடியாருக்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும் அவனுடைய-தன்மைக்கும் ஏதேனும் கண் அழிவு உண்டோ-
அவன் ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்ததாகில் தன் ஊணை இழக்கிறான்-
மண நோக்கம் உண்டவன் அன்றோ -பெரிய திருமொழி -8-10-1-அவன்-ஒளியை உடைத்தான கெண்டை போலே இளமையாய்-
வைத்த கண் வாங்காதே-கண்டு கொண்டு இருக்க வேண்டும் படியான அழகிய கண்களை உடையளாய்-
ஆத்ம குணங்களை உடையளான நப்பின்னை பிராட்டிக்கு கேள்வன் –

தாள் கண்டு கொண்டு –
காட்சிக்கு காரணம் சொல்லிற்றோ அன்றோ –

என் தலை மேல் புனைந்தேனே –
துயர் அறு சுடர் அடி தொழுது எழு -1-1-1-என்றும்-
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -92-2-என்றும்-
கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்றும்-சொல்லுகிறபடியே-
மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலே இருக்கிற இனிமை சொல்லுகிறது –
நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து -2-9-1-என்று வேண்டிக் கொண்ட அதனை-தலையாகப் பெற்று கிருதகிருத்யன் ஆனேன்
ஸ்ரேஷ்டமாக தலை மேல் பெற்று –

——————————————————————————————

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

ஆஸ்ரித ரக்ஷணம் ஸ்திரம் -நெஞ்சில் அமர்ந்து போகான் –
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்-திருவடிகளை தலை மேல்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க-அக்டி கட நா சமர்த்தன் -ரக்ஷகன் -கிடந்த திருக் கோலம் -ஒரே மார்க்கண்டேயர்
-நித்ய ஸூ ரிகள் தொடர்ந்து வந்து வணங்க -நின்ற திருக் கோலம் -நிறைய சேவார்த்தி வந்து சேவிக்கும் படி
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை-திரு வேங்கடத்தில் -நித்ய வாசம் செய்து அருளி -ஸ்வயம் பிரயோஜனமாக
-நெஞ்சுக்குள் பிரதிஷ்டித்தானாக -இருந்த திருக் கோலம் மூன்றும் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நெல் நெஞ்சே -மூன்றாவது நிலை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே-கதவு அடைத்து தள்ளினாலும் போக மாட்டானே –
இருக்கும் அவனை போனான் என்று அழுத்த ஆழ்வார் -இப்படி அன்றோ ஆச்வாஸப் படுத்தி மாற்றி –
உறுதி குலைக்க முடியாதே -நிச்சயித்து -அதனால் திருப்தியாக இருந்தேன் -கிருதக்ருத்யன் ஆனேன் –

என் மனத்தில் இருக்கிற சர்வேஸ்வரனை-ஒருவராலும் பிரிக்க ஒண்ணாது என்று-
அறுதி இட்டு அதனாலே-கிருதகிருத்யனாய் இருந்தேன்-என்கிறார் –

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் –
அமரர் சென்னிப் பூச் சூடப் பெற்றேன்-
வேண்டிக் கோடலே அன்றி அத் திருவடிகளை என் தலை மேலே வைத்துக் கொள்ளப் பெற்றேன் –

இவர் இப் பேறு பெருகைக்கு அவன் முயற்சி பண்ணின படி சொல்கிறது மேல்-
அவன் வண் தடத்தின் உள் கிடந்து-பெரிய திருமடல் -14-தவம் பண்ணிற்று-வண் தடம் -ஏகார்ணவம்-
கடலில் கிடந்து -கல் மேல் நின்று -உள்ளில் நின்று கோர மா தவம் செய்தனன் கொல்- –
ஆலின் இலைமேல் துயின்றான் –
தன்னைக் கொண்டு கார்யம் உடையார் சிலரைக் கண்டிலன் –
எல்லார்க்கும் ஆராய்ச்சி படும் படியான செயலைச் செய்வோம் -என்று பார்த்தான் –வேண்டா என்பாரைக் கண்டது இல்லை –

இமையோர் வணங்க மலைமேல் தான் நின்று –
அது பொறுத்தவாறே நித்ய சூரிகளும் தானுமாக வந்து திருமலையிலே நின்றான் –

என் மனத்துள் இருந்தானை –
அதுவும் பொறுத்தவாறே -இவர் உடைய மனத்திலே வந்து புகுந்தான் –இங்கு விலக்குவார் இல்லாமையாலே-
நிலை இயல் பொருள் போன்று இருந்தான் –
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்-மூன்றாம் திருவந்தாதி -76-காணும் இவர் நெஞ்சிலே புகுந்து இருந்தது
பனிக் கடலில் பள்ளி கோளை பழக விட்டு ஓடி வந்து-இவருடைய மனக் கடலில் வாழப் புக்கான் -பெரியாழ்வார் திருமொழி -5-4-9-

இப்படி இருந்தவனை –
நிலை பேர்க்கல் ஆகாமை –
இவன் போகைக்கு உறுப்பாக என்னால் ஆவன எல்லாம் செய்தேன்-அதற்கும் கேட்ப்பானாய் இருந்திலன் –

நிச்சித்து இருந்தேனே –
அச்சம் அடைகிறான் இல்லை -என்கிறபடியே இருந்தேன் –அவன் படியை நினைந்தால் இவன் அச்சம் அற்றவனாய் இருக்கத் தட்டில்லை அன்றோ-
ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதஸ்சன இதி -தைத்ரியம் -9-1-
தன் சோகம் மறு நனையும்படியான ஆனந்தம் இவன் பக்கலில் உண்டு என்று அறிந்தால்-பின்னை இவன் சோகம் போகைக்கு குறை இல்லை அன்றோ –
குதஸ்சன –
பின்னர் புத்தி பூர்வகமாக பண்ணின பாபத்துக்கும் அஞ்ச வேண்டா-
ஸஹிஷ்ணு -தேஷாம் ஆபி முக்யாத்-பராக் உத்தர சஞ்சித சகல கரணை ஸர்வதா -விதி நிஷேத -சாசன அதி லங்கன
சித்தி ஸூ அவஜஞ்ஞா நிந்தா தீநாம் சர்வ சகேன விஷயாவகாஞ்ச அபராத்தானாம் ஸஹிஷ்ணு பொறுத்து விடுகிறான் –

———————————————————————————————

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5-

அவன் சொல்லிக் கொடுக்க அன்றோ இவர் மெச்சுகிறார் -அனாசரிதற்கு துர்லபம்
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை-அறுதி இட்டு இருந்தேன்
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்-பரம போக்யம் -ரக்ஷகம் -திரு ஆழி-அசாதாரண ஸ்வாமி -விசேஷ ஸ்வாமி
-நெஞ்சில் இருக்கச் செய்தெ நான் அறியாத படி தான் அறிந்து பேசி ருசி வளர்த்து பாட வைத்து -மறைத்து -நாத முனிகளுக்கு வழங்கி அனைத்துக்கும் திட்டம் போட்டு பாரித்து -பவிஷ்ய கார விக்ரகம் கொடுத்து -நாம், அறிந்து கொண்டாடும் படி பாட வைத்து
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்-பிறர்க்கு இல்லை -ஏதோ இருப்பான் மற்றவர்கள் உள்ளத்தில்
-ஆஸ்ரிதற்கு மெய் அனாசரிதற்கு பொய்-செய்ய வல்லவன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே-ஆஸ்ரித சம்ச்லேஷ பூதன் -நமக்கு பரம பிராப்யமாக கொள்ளுவோம் –

அவன் என் திறத்தில் செய்ய நினைக்கிறவை-ஒருவருக்கும் அறிய நிலம் அன்று-என்கிறார்

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை –
என் நெஞ்சம் கழியாமை -நிச்சித்து இருந்தேன்-
நீரிலே கிடந்தும்-மலை உச்சியிலே நின்றும்-தன் பேறாக தவம் செய்து வந்து-என் நெஞ்சிலே இருக்கையாலே-
இனி ஒரு காலும் விட்டுப் போகான் என்று நிச்சயித்து இருந்தேன் –

கைச் சக்கரத்து அண்ணல் –
கையிலே திரு ஆழியை உடைய சர்வேஸ்வரன்-தன்னைப் பற்றினவர்களை ஒரு காலும் கை விடான் –
எப்போதும் கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87-என்னக் கடவது அன்றோ –

கள்வம் பெரிது உடையவன் –
மனத்தினைக் கை விடாமையே அன்றிக்கே-இங்கே இருந்து நாம் அறியாது இருக்க-
தான் அறிந்ததாகக் கொண்டு அவ்வருகே-குவாலைப் பாரியா நின்றான் -என்றது-
பரம பதத்து ஏறக் கொடு போக ஒருப்படுவது-அமானவனை இடுவித்து தீண்ட நினைப்பது-
மதி முக மடந்தையரை வரக் காட்டி எதிர் கொள்ளப் பார்ப்பதாய்-குவாலைப் பாரியா நின்றான் -என்றபடி –

இது தான் எல்லார்க்கும் பொதுவாகில் செய்வது என்-என்று அஞ்ச வேண்டா
மெச்சப் படான் பிறர்க்கு –
பிறருக்கு மெச்சப் படான் –
நான் தன் குணங்களைப் பேசிப் புகழ்வது போலே-பிறர் தன் குணங்களைப் பேசிப் புகழலாம் படி இரான் –
அவர்களுக்கு அடைய முடியாதவனாய் இருப்பான்-

மெய் போலும் பொய் வல்லன் –
அர்ஜுனன் முதலாயினோர் பக்கல் இருக்குமாறு போலேயோ-துரியோதனன் முதலாயினோர்கள் பக்கலிலும் இருப்பது –
கார்யத்தில் வந்தால் மெய் செய்வாரைப் போலே-பொய் செய்து தலைக் கட்டுவான் –

இது தான் நம் அளவிலும் ஏறின செய்வது என் -என்று அஞ்ச வேண்டா-
நச்சப் படும் நமக்கு –
நமக்கு நச்சப் படும்-உகவாதார் பக்கல் செய்யுமவற்றை நம் பக்கல் செய்யான்-

அதற்கு நம்பிக்கை என் -என்ன
நாகத்து அணையானே –
நம்மோடு வேறு பட்டவர்கள் பக்கல் செய்வது கொண்டு-நமக்கு கார்யம் என்-
நம்மோடு ஒத்தவர்கள் பக்கல் செய்தது அன்றோ நமக்கு எடுத்துக் காட்டு-அநந்யார்ஹத்வம் -சஜாதீயம் –
நம்முடைய பேற்றுக்கு அடியுமாய்-நம்மோடு ஒத்தவர்களும் ஆனாரோடு செய்யும்படி இது அன்றோ –

——————————————————————————————-

நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே-10-4-6-

நித்ய ஆஸ்ரிதர் -முமுஷுக்கள் -பிரயோஜ நாந்த பரர்கள் -மூவருக்கும் ஸுசீல்யம் -வாங்கப் பெற்றேன்
நாகத்து அணையானை -நித்ய கைங்கர்யம்
நாள்தோறும் ஞானத்தால்-சர்வ காலமும் மதி நலத்தால் பக்தி ரூபா பண்ண ஞானம்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை-முமுஷுக்களுக்கு நிரதிசய போக்யன் -உபகாரகன்
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்-பாகத்து வைத்தான்-பெரிய ஆகாசம் -சந்திரன் -தலையில் கொண்ட
-சந்த்ர சேகரன் -போக்த்ருத்வ உபாஸகத்வம் -ருத்ரன் -சடை சாதக வேஷம் -திரு மேனியில் வைத்த ஸூ சீலன்
தன் பாதம் பணிந்தேனே-திருவடிகளை பணிய பெற்றேன் -பாகத்து வைத்தான் தன் பாதம் -பாட பேதம்

இன்று வந்து பற்றுமவரையும்-எப்பொழுதும் தன்னைப் பற்றி நிற்கும்-
அவர்களைப் போலே அங்கீகரிக்கும் அவன்-திருவடிகளிலே செருக்கு அற்றவனாய் விழப் பெற்றேன்-என்கிறார்

நாகத்து அணையானை –
உகந்தாரை படுக்கையாக-கொள்ளுமவன் ஆயிற்று-
திருமேனி முழுவதும் ஆஸ்ரிதற்கு கொடுத்து இதிலும் மெய்யன் -அவர்களுக்கு ஏக தேசம் -பொய்யன் –

நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை –
ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு-நாள் தோறும் அருள் செய்யுமவன் ஆயிற்று-
ஞானம் -பக்தி-
இவனால் எப்போதும் நினைக்கப் போகாதே-
அக்குறை தீர-ஒரே தன்மையான தான் நாள் தோறும் அருள் செய்யும் ஆயிற்று-
நாகத்து அணையானை – ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு –நாள்தோறும்-அருள் செய்யும் அம்மானை –

மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப் பாகத்து வைத்தான் –
சுகத்தை அனுபவிப்பதில் முதன்மை பெற்றவன் என்று தோற்றும்படி-
சந்த்ரனை சூடித் தவ வேடத்திற்கு அறிகுறியான-சடையையும் உடையவனான சிவனுக்கு-திரு மேனியில் ஒரு பக்கத்தில் இடம் கொடுத்தவன் –

தன் பாதம் பணிந்தேனே –
அவனுடைய திருவடிகளை அடைந்தேன் –இனி எனக்கு ஒரு குறை உண்டோ –

———————————————————————————

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-

நிரதிசய போக்யமான விக்ரகம் உடையவன் -விரோதிகளை போக்கி -அடிமை கொள்ளுபவன் -சர்வாதிகன் -அனுபவிப்பாய் நெஞ்சே
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை-பராத்பரனை ப்ரஹ்மாதிகளுக்கும் பரன் நெஞ்சே நித்தியமாக பணிந்து அனுபவிக்கப் பார்
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் -ஜென்மம் போக்கி -சம்சார கிலேசம் கிட்டாமல்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்-நீல ரத்னம் நிறத்தில் -தேஜஸ் -மட்டும் எடுத்து கல்லாக்கி
-மதுவை நிரசித்தால் போலே அனுபவ விரோதிகளை போக்கி -அழகை அனுபவித்த ஸ்வாமி
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே-தனக்குத் தானே ஆபரணம் -ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமாக -உத்யோகம் உடையவன் –

நம் தடைகளை எல்லாம் தானேபோக்கி-அடிமை கொள்ளுமவனை-
நாள்தோறும் அனுபவி -என்று-தன் திரு உள்ளத்தை நோக்கி-அருளிச் செய்கிறார்

பணி நெஞ்சே நாளும் –
நெஞ்சே நாளும் பணி-
நாள் தோறும் அனுபவிக்கப் பார்-நல்ல வாய்ப்பாய் இருந்தது -அவனே மேல் விழுகையாலே-

பரம பரம்பரனை –
இந்த்ரன் முதலாயினர்கட்கும் முதல்வரான-பிரமன் முதலாயினர்கட்கும் முதல்வரான-நித்ய சூரிகளுக்கும் தலைவன் –சர்வேஸ்வரஸ்வரன் –

பிணி ஒன்றும் சாரா –
துன்பங்கள் ஒன்றும் நம்மைத் தீண்டாது –

பிறவி கெடுத்து ஆளும்-
அந்த துன்பங்களுக்கு அடியான பிறவியை-அடி வேரோடு போக்கி-
நம்மை நித்ய கைங்கர்யம் கொள்ளுமவன் –

மணி நின்ற சோதி –
பிறவியை உண்டாக்கினாலும்-விடும்படியாகவோ வடிவின் அழகு இருக்கிற படி-
நீல மணியின் ஒளியை வடிவாக வகுத்தால் போலே-இருக்கிற வடிவை உடையவன் –

மது சூதன் –
அவ் வடிவு அழகினை அனுபவிப்பார்க்கு-வரும் தடைகளை-
மதுவைப் போக்கினால் போல் தள்ளிக் கொடுக்குமவன் –

என் அம்மான் –
இப்படி என் துன்பங்கள் எல்லாம் போக்கி முகம் தந்தவன் –

அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே –
அனுபவிப்பார்க்கு விரோதிகளையும் போக்கி-திருக் கைக்குத் தானே ஆபரணமாய்-
அனுபவிப்பார்க்கு விரும்பத் தக்கதான-வடிவை உடைய திரு ஆழியைக் கையிலே உடையவன் -என்றது –
அனுபவத்துக்கும் தானேயாய்-விரோதிகளை அழிப்பதற்கும்-தானே யான கருவியை உடையவன் -என்றபடி –

——————————————————————————————————-

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

சர்வாதிகன் -சர்வ பிரகார ரக்ஷகன் -திருவடிகளை விஸ்மரியாமல் -மறக்காமல் நினைக்க வேண்டுமே -இதுவே வாழ்வு
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்-ரக்ஷகம் பரிகரம் -ஆழி கடல் கம்பீர ஸ்வ பாவம் உள்ள நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகே மேன்மை உடையவன்
கடல் போன்ற ஸ்வ பாவன் என்றுமாம் ஆழியான் –
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்-சம்ஹரிக்கும் காலத்தில் சதேவ ஏகம்-
காலத்தால் உப லஷிதமான சகல பதார்த்தங்கள் படைத்து ரஷித்து கோபாலன்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்-போக்யமான தோள்கள் கொண்டு குன்றம் எடுத்தவன் உடைய -திருவடிகளை
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்-மறவாமல் -அத்திரு அவனைப் பற்றும் இத்திரு இருவரைப் பற்றும்
வாழி -மங்களா சாசனம் இந்த வாழ்வு நித்தியமாக இருக்கட்டும் -வாழ்த்துதல் பிரார்த்தனை என்றுமாம்

அவனை அனுபவிப்பாய் என்றவாறே-உகந்த நெஞ்சினைக் கொண்டாடி-
அவனை இடைவிடாதே அனுபவி-என்கிறார்

ஆழியான் –
பரத்வ சின்னமான திரு ஆழியைக் கையிலே-உடையவன் –

ஆழி யமரர்க்கும் அப்பாலான் –
அத் திரு வாழி ஆழ்வானைப் போன்று-பெருமிதத்தை உடைய நித்ய சூரிகளுடைய
ஸ்வரூபம் ஸ்திதி-முதலானவைகள் தன் அதீனமாய் இருக்குமவன் –

ஊழியான் –
நித்ய சூரிகளும் தானுமாய் பரம பதத்தில்-பேர் ஒலக்கமாய் இருப்பவன் –
இங்கு உண்டான கார்யப் பொருள்களின் கூட்டம் அடங்கலும்-அழிந்து-
காலம் மாத்ரம்இருக்கும் காலத்திலேயே தான் வந்து தோற்றுமவன் –

ஊழி படைத்தான் –
காலத்தாலே அழிக்கப் பட்ட எல்லா பொருள்களையும்-பகுஸ்யாம் -சங்கல்பத்தாலே உண்டாக்கினவன் –

நிரை மேய்த்தான் –
இப்படி எல்லா பொருள்களையும் தான் படைத்து –தன்னை வேறு சிலர் படைத்தார்கள் -என்னலாம்படி-
வந்து அவதரித்து பசுக்களைகாப்பவன் -என்றது –
தங்களை காத்துக் கொள்வதில் சம்பந்தம் இன்றிக்கே-அவன் பண்ணும் பாதுகாவலை விலக்காத பசுக்களைக்-காத்தவன் -என்றவாறு –

பாழி யம் தோளால் வரை எடுத்தான் –
இவன் இவற்றை இப்படி நோக்கா நிற்க –
இந்த்ரன் பசியின் கொடுமையால் இவை நோவு படும் படியாக-கல் மழையினைப் பெய்விக்க-அதனை மலையை எடுத்து நோக்குமவன்-
பாழி -வலி-புறம்பு எங்கும் மழையினால் நோவு படா நிற்க-இவன் தோள் நிழலிலே ஒதுங்கினவர்களுக்கு-
மதிலுக்கு உள்ளே இருப்பாரைப் போலே-அச்சம் கெட்டு இருக்கலாம் படியான-வலியைச் சொல்கிறது -பாழி யம் தோள் -என்று-
அன்றிக்கே-பாழி -இடம் உடைமை ஆகலுமாம்-என்றது –ஐந்து லஷம் குடியில் உள்ளாறும் இவன் தோள்-நிழலிலே

ஒதுங்கினாலும் திரு ஆய்ப்பாடி அளவன்றிக்கே-இன்னமும் பத்து திரு ஆய்ப்பாடிக்கு இடம்-போரும் என்னும் படியான-
காக்கும் தன்மையின் துடிப்பு இருக்கும்படியைச் சொல்கிறது-என்றபடி-

பாஹூச் சாயம் அவஷ்டப்தோ யஸ்ய லோகோ மகாத்மான-அபக்ருஷ்ய ஆஸ்ரமபதான் ம்ருக ரூபேண ராகவம் -சுந்தர -14-31-
ஒதுங்கினவர்கள் குறைய நிற்க -நிழலே விஞ்சி இருக்கும் என்றவாறு-
அம் தோள் -அழகிய தோள்-
திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்று-
மங்களா சாசனம் செய்யும்படி யாயிற்று தோள் அழகு இருப்பது –சுந்தரத் தோள் -நாச்சியார் திருமொழி -9-1- அன்றோ –

பாதங்கள் –
கோவர்த்தன கிரியை எடுத்து துன்பத்தினை-போக்கினவனுடைய திருவடிகளை –
வாழி –
மேலே சொல்லப் புகுகிற அர்த்தத்தை நினைப்பதற்காக-நடுவே மங்களா சாசனம் செய்கிறார்-மனத்தினை –
யாம் ஒஷதீம் இவ ஆயுஷ்மன் அந்வேஷசி மகா வனே – ஆரண்யம் -67-15-
சீதையை அருமருந்து போலே பெரும்காட்டில் தேடி வருகிற-நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்களாக –என்னுமாறு போலே
உனக்கு இந்த நினைவு மாறாதே சென்றிடுக -என்கிறார் –
பத்ரம் தே -ஸ்ரீ ஜனகர் போலே –
ராவணனால் பிராட்டியும் என் பிராணனும் களவாடப் பட்டன -பெரிய கார்யம் சொல்லப் போவதற்கு முன்பு மங்களா சாசனம்
-இங்கும் மறவாது வாழ் கண்டாய் சொல்வதற்கு முன்பு வாழ் நெஞ்சே என்கிறார் –

என் நெஞ்சே –
புறம்பு எங்கும் ஆத்மாவுக்கு உரிமைப் பட்டுள்ள மனமானது-தாம் சுமை எடுத்தா நிற்க-
என் வழியிலே போந்து முறையிலே நிற்கிற மனமே -என்றது –
ஆத்மாவின் உறுப்புகளில் சேர்ந்ததான மனம் தானே பிறவிக்கு காரணமாய்-நின்றதே அன்றோ புறம்பு உள்ளார்க்கு –
அங்கன் அன்றிக்கே -என் வழியே போந்து -எனக்கு மோஷத்துக்கு காரணமான மனமே -என்றபடி –

மறவாது –
கை புகுந்தது என்னா-மற்றை விஷயங்களிலே செய்வுற்றைச் செய்யாதே காண்-

வாழ் கண்டாய் –
உன்னுடைய வாழ்ச்சிக்கு நான் கால் பிடிக்க வேண்டுகிறது என் –
பால் குடிக்க கால் பிடிக்கிறேனோ அன்றோ –

மறவாது வாழ் கண்டாய் என்கை யன்றோ உள்ளது –
மேலே கூறிய விசேஷணங்களுக்கு பயன் என் -என்னில்-
புறம்பு போய் மணலை முக்க ஒண்ணாதே-பாது காக்க வல்லானைப் பற்ற வேண்டுமே-
பாது காப்பதற்கு வேண்டிய சாதனங்களை உடையவன் பாது காப்பவனாக வேண்டுமே-
அநந்ய பிரயோஜனர்கள் ஸ்வரூபம் ஸ்திதி அனைத்தைக்கும் நிர்வாஹகன் ஆனவன்-பாது காக்குமவனாக வேண்டும் –
ஒருக்கால் உளனாவது இலனாவது ஆகா நிற்கிறவனுக்கு-என்றும் உளனானவன் பாதுகாக்க வேண்டுமே-
இவை இல்லாத அன்று உண்டாக்கினவன் பாதுகாக்குமவனாக வேண்டும்-
உண்டான அன்று பாது காப்பவன் ஆகைக்கு-தம்மை பாது காப்பதில் குறைய நின்றனவற்றையும் நோக்குமவன்-பாது காப்பவனாக வேண்டும்-
இருந்தபடியாமாகில் மறந்து காண் -உன்னாலே மறக்கப் போகாதே –

————————————————————————————————-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

உயிரான பாசுரம் -சரம ஸ்லோகம் படி இதனாலே பிரபத்தி சாதன பக்தி ஸாத்ய பக்தி மூன்று நிர்வாகங்கள் பார்த்தோம் –
தத்வ யாதாம்யாம் -ஆழ்ந்த உண்மைப் பொருள் –
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே-அபரோஷித்தேன் -திருவடிகள் பிரஸ்தாபம் சரம ஸ்லோகம் இல்லை என்றாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
மாம் -ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டன் என்றே கொள்ள வேண்டும்
மோக்ஷயிஷ்யாமி -சர்வ பாபேப்யோ -சொன்னதும் கைங்கர்யமும் உண்டே -த்வயத்தில் சொன்னதை சேர்த்துக் கொள்ள வேண்டுமே
ஞானம் பிறந்த அளவில் அனுபவ விரோதிகள் அஹங்காரம் மமக ஸமஸ்த துரிதங்களும் வாசனை ஒட்டாமல் ஒழிந்தனவே
எது முன்னால் -கண்டேன் –கண்டதும் -விண்டே ஒழிந்தன -அப்புறம் -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் என்பதால்
-பரம பக்தர்களுக்கு சாஸ்திர நியதி இல்லையே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்-கால விளம்பம் இல்லாமல் காண்டலுமே
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே போலே -நாரணர்க்கு ஆளாயினர் –
அசேஷ பாபங்களும் ஒழிந்தன –
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக-கைங்கர்யம் செய்தெ பொழுது போக்கு -கால ஷேபம்
பண்டே பரமன் பணித்த பணி வகையே-நிரதிசய பக்தி செய்து -பக்தி பவ்ய பாவனாத் தொண்டு
-நவ லக்ஷணம் -ஸ்ரவணம் –தாஸ்யம் இத்யாதி -சாதனம் ஆக்கினாள் தான் கைங்கர்யம் வேற பக்தி வேறு
சர்வ காலத்திலும் சேஷ வ்ருத்தி செய்து கொண்டு -சந்தை திரு உள்ளம் படி ஒழுக
அவன் அருளிச் செய்த மந்த்ர ரகசிய பிரகாரத்தில் -திரு மந்த்ரம் தொடக்கமான -சரம ஸ்லோகத்தில் –

அருளினான் – அதனால் –ஸாத்ய பக்தி -பெற்று -அதனால் பிரபத்தி -என்றும் நேராக பிரபத்தி என்றும் -பின்பு அவா பெருகி வழிந்து-
சுவீ க்ருத சித்த சாதனர்-சித்த வஸ்துவை சாதனமாக சுவீகாரம் பண்ணி
இத்தை -பக்தியை -மார்க்க மதியத்தில் பர ஞானம் -அங்கே பரமபக்தி
சாத்தியமாக இரக்க
பகவத் ப்ரஸாதத்தாலே சாத்தியமான
பிராப்திக்கு முன்னே சித்திக்கும் –
இத்தையே பகவத் ராமானுஜர் கத்யத்தில் அருளிச் செய்கிறார் –

ஜன்மாந்திர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-நாராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்னே பக்தி பிரஜாயதே –
பல ஆயிரக் கணக்கான பிறவிகளில்-செய்த கர்ம ஞான பக்தி என்னும் இவைகளால்-
அழிந்த பாபத்தை உடைய மனிதர்களுக்கு-கிருஷ்ண பக்தி உண்டாகிறது -என்கிறபடியே-
பல காலங்களில் சம்பாத்தித்த பக்தியாலே-அடையப் படுமவனை அவன் திருவருளாலே-காணப் பெற்றேன் -என்கிறார் –
இத் திருப் பாசுரத்தில் சொல்லப் படுகிற பிரபத்தியோடு-மாறாடும்படியாக இருக்கிற-பக்தியைச் சொல்லிக் கொண்டு போந்தார் மேல் –
அதற்கும் -ஸாத்ய பக்திக்கும் -அடி அவன் ஆகையாலே சொல்லுகிறார் ஆதல்-மயர்வற மதி நலம் அருள பெற்றார்-
-சாதனாந்தரங்களை விரும்பாமல் -அவனது அருளையே -சொல்லுகிறார் ஆதல் –
தாம் பெற்ற வழியே சொல்லுகிறார் ஆதல் –

கண்டேன் –
என்றும் கேட்டே போகக் கூடிய பொருளை-கண்களால் காணப் பெற்றேன் –
தன்னுடைய பிரபத்தி அதன் பலத்தோடு பொருந்தின படியை-
அதாவது-நேராக கண்ட படியையைச் சொல்கிறார்-
இதனால் புறக் கண்களால் கண்டது போன்று-ஞானக் கண்களால் கண்டபடியைச் சொன்னபடி –விசத தமமான மானஸ சாஷாத் காரம் –

கமல மலர்ப்பாதம் –
பெறுகிற பேறு வேண்டாதபடி-ஞான லாபமே அமையும்படி யாயிற்று-இனிமை இருக்கும் படி-

காண்டலுமே –
கண்ட அளவிலே –

விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-மாசுச -ஸ்ரீ கீதை -18-66-என்கிறபடியே-அவன் அடியாக வருகிறதே அன்றோ
வினை யாயின அடங்கலும் –
இவர் கேவலர் அல்லர் -அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்-
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி -ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –
பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –
பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் –
உயர்வற உயர் நலம் -உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –

தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக –
அந்த சரம ஸ்லோகத்துக்கு இதுவும் கருத்து -என்கிறார்-வந்தேறியான விரோதி யானது-கர்மங்கள் – போகக் கடவதே-
அன்றிக்கே –உபாயத்துக்கு பலத்தைக் கொடுக்கும் தன்மை உண்டே -என்னுதல்-
இனி அடிமை நிலை நின்றதே இருக்குமே-
அடிமை நிலை நின்றதாய் இருந்தால் -அவ் வடிமைக்கு தகுதியான தொண்டும்-நித்தியமாய் இருக்கும் என்பதும் அங்குப் போதருமே-
என்று அங்கு போதரும் பொருளையே இங்கே வாய் விடுகிறார்-
அடிமை நித்தியமான பின்பு அதற்குத் தக்கதான தொண்டும்-நித்யமாகச் செல்லும் படியாக-

பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் –
மாம் ஏகம் சரணம் விரஜ -என்கிறபடியாலே-நான் அவன் திருவடிகளைக் காணப் பெற்றேன்-

கண்டேன் கமலமலர்பதம் பண்டே பரமன் பணித்த வகை-
சரம ஸ்லோகம் வகையிலே கண்டேன்-
ஜன்மாந்த்ர நல் தவங்களாலே -ஆசார்ய ஹிருதயம்-

சரம ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி சொல்ல வில்லை -அநிஷ்ட நிவ்ருத்தி -உபாதி தொலைய இவை தன்னடையே கிட்டுமே-
கிணறு வெட்ட -தண்ணீர் -கிடைக்குமே -ஸ்வரூபம் நித்யம் -மறைந்து இருந்தது -ஸ்வரூப அனுரூப வ்ருத்தியும் கிட்டும் –
மம சஹஜ கைங்கர்யம் -பிரதி பந்தகங்கள் போனால் -தன்னடையே கிட்டும் -இது தான் சேஷத்வம் போலே இயற்க்கை –
ஸ்வயம் நிரபேஷம்-அவன் -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அடியேனும் பணி வகையே காணப் பெற்றேன் என்கிறார் –

—————————————————————————————————————

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-

கைங்கர்யம் செய்யும் வகை -யஜ தேவ பூஜை யஜ்ஞ்ஞம்-
பிரயோஜ நாந்த பரர்க்கும் ஆச்ரய பூதன் -அனன்யா பிரயோஜனர்க்கும் பிராப்யன்
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்-சாஸ்திரம் சொல்லிய படி -அபிமத சித்திக்கு -ஸ்ரீ யபதி தன்னை காலம் தோறும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்-
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்திக்குகள் தோறும் தேவர்கள் -சென்று வணங்கும் படி –
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே-ஸ்வ பாவன் -அநந்ய பிரயோஜனர்களுக்கு பிராப்யம்
-வந்து -அருளும் திருக் கமல பாதம் வந்து -த்வந்த பந்ததி -போட்டி போட்டு இரண்டும் -இணை -ஒலிக்கும்
-கண்டேன் கமல மலர்ப் பாதம் சொல்லும் படி -நிகர் அற்ற -அபாஸ்ரயம் தஞ்சம் புகல்

பிரயோஜனாந்தர பரர்களோடு-பக்திமான்களோடு-பிரபத்திமான்களோடு- -அமரர்கள் -தமர்கள் –
வேற்றுமை அற-அவனே உபாயம் -என்று-மேலே கூறியவற்றை எல்லாம்-முடிக்கிறார்-
கதி த்ரயஸ்ய மூலம் -ஐஸ்வர்யாதி கைவல்யார்த்தி பகவல் லாபார்த்தி மூவருக்கும் –

வகையால் மனம் ஒன்றி –
சாஸ்த்ரங்களில் சொல்லுகிற வழியே-மனம் ஒருமைப் பட்டு –

மாதவனை –
விதிகளை மீறுவதற்கும்-குறிக்கோள் இன்மைக்கும் அஞ்ச வேண்டா –
உலகத்தார் கூறும் பழி பாவங்களுக்கு அஞ்சி-இவன் செய்தவன எல்லாம் என் ஆவன –
அங்கனம் செய்தனவற்றுக்கும் பலம் இவனை வந்து கிட்டாது-
பக்திமானான இவன் வழி போராமையும்-மனம் ஒருப்படாமையும் இவன் தலையில்-
எறட்டுக் கை விடலாமோ -என்பாரும் அருகே உண்டு –
இதனால் அந்த சரம ஸ்லோகத்தில் லஷ்மி சம்பந்தமும்-சொல்லிற்று ஆயிற்று –
ஸ்வரூபத்தோடு கூடி இருக்கிற தர்மங்கள் சொல்லவுமாம்-சொல்லாது ஒழியவுமாம் –
ஆகையாலே அன்றோ த்வயத்தாலே பிரித்து நினைக்கவுமாய்-திரு மந்த்ரத்தாலே ஒன்றாக அனுசந்திக்க்கவுமாய் -இருக்கிறது –
அந்தர்க்கத குணாம் ஸ்வரூப அந்தர்ப்பூத குணாம்-தேவதாமேவ பஜதே -த்யாயதி-என்றபடி-
ஸ்வரூபத்தில் மறைந்து இருக்கிற குணங்களை உடைய தெய்வத்தையே வணங்குகிறான்-
அந்த தெய்வத்தின் ஸ்வரூபத்திலே பாபமின்மை முதலான குணங்களையும் சொல்லுகையாலே –

உபாசனம்
வேத யுக்த பிரகாரம்
ஏகாக்ர சித்தம் -ஏக அக்ர-மனசை வேறு ஒரு பாபம் வழி போகாமல் சர்வேஸ்வரன் இடம் வைத்து –
தமர்கள் -சரணாகதர்கள்
சரம ஸ்லோக யுக்த பிரகாரம்
சாதனாந்தரம் போகாமல் -விஷயாந்தரம் போகாமல் ஒருமைப் பட்டு -பிரயோஜனாந்தரம் கேட்டு போகாமல் இருக்க வேண்டும் –
இப்படி இருந்தான் ஆகிலும்
லோக அபவாதம் -புண்யம் பலம் மோக்ஷ விரோதி -பிராமாதிகமாக விஷயாந்தரம் சம்சர்க்கம் வருமே –
மாதவன் -பிள்ளையை -சின்ன சின்ன குற்றங்களை பொறுக்க அவள் உண்டே
இதனால் வகையால் -மனம் ஒன்றி -மாதவன் -என்கிறார் –
சத் வித்யை -ஸ்வரூபம் உபாஸிக்க
தகர வித்யை -குணம் உபாஸிக்க
அந்தர்க்கத குணாம் ஸ்வரூப அந்தர்ப்பூத குணாம்-தேவதாமேவ பஜதே -த்யாயதி-என்றபடி-
குண உப சம்ஹார பாதம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -குணக் கடல் அன்றோ –
ஸ்வரூபம் உபாஸிக்க- குணம் இல்லை – புத்தி ஆரோஹணத்துக்கு குணம் சொல்லிற்று என்பர் அத்வைதிகள் –
தகர வித்யையில் சொன்னவனே இவனும் -குணம் விட்டுப் பிரியாதே –
சோஸ்நுதே ஸர்வான் காமான் -குணங்கள் உடன் கூடிய ப்ரஹ்மம் அனுபாவ்யம் –
அதே போலே பற்றும் போது அவள் பிரியாமலும்-கைங்கர்யம் செய்வது மிதுனத்தில் –
ஆதலால் ஸ்பஷ்டமாக சொல்லா விடிலும் இவள் பிரியாமல் இருப்பாள் -அஹம் மாம் சப்தத்தில் ஸ்ரீ சம்பந்தமும் உண்டு என்றவாறு –

நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் திகை தோறு அமரர்கள் சென்று-இறைஞ்ச நின்ற தகையான் சரணம் –
கால வரையறை இல்லாமலே-ஆராதிப்பதற்கு உரிய பொருள்களுக்கும் வரையறை இல்லாமலே-
தங்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு-அக்ரமமாக சொல்லி -நீரால் சொல்லி தானே ஆரம்பித்து இருக்க வேண்டும் –
பெரிய திரு நாளுக்கு எல்லா திசைகளிலும் உள்ள மக்கள் வந்து ஏறுமாறு போலே-
பிரமன் முதலான தேவர்கள் வந்து அடையும் படியான தன்மையை உடையவனுடைய திருவடிகள் –

தமர்கட்கு ஓர் பற்றே –
ஓர் பற்று –
தன் திருவடிகளைப் பற்றினார்கட்கு பின்னையும் புறம்பு போய்-ஒரு பற்று தேட வேண்டாதபடியான பற்று-
அநந்ய பிரயோஜன பக்திமான்களுக்கும் பலத்தை கொடுப்பவனாய் உபாயமாய் இருக்கும்-
தன்னையே பற்றினார்க்கும் நேரே உபாயமாய் இருக்கும் –
தமர்கள் -பக்திமான்களையும் பிரபத்திமான்களையும் குறிக்கும்-

—————————————————————————————-

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-

பகவத் சரணாராவிந்தம் பலம்
பற்று என்று பற்றி பரம பரம்பரனை-சர்வ ஸ்மாத் பரன் -பிராப்ய பிராபகன்
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்-மல்லை யுத்தம் -முஷ்டிக சாணூரர்கள் -ஆஸ்ரித வ்யாமுக்தன் –
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்-சப்த சந்தர்ப்ப ரூபம்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே-தாமோதரனான கிருஷ்ணன் -சார்வே தாமோதரன் தாள்கள்
-உபக்ரமம் படியே -இரண்டும் அத்விதீயமான பிராப்யம் –

நிகமத்தில்-
இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு-கிருஷ்ணன் திருவடிகள்-சுலபமாம்-என்கிறார்

பற்று என்று பற்றி பரம பரம்பரனை மல் திண் தோள் மாலை –
பரம்பரனை-மல் திண் தோள் மாலை-பற்று என்று பற்றி-
பரம்பரனை -பிராப்யம்-
மல் திண் தோள் மாலை -பிராபகம்-
பிராப்ய பிராபகம் என்று பற்றி-

இவன் பிரபத்தியைச் செய்து-உறுதி உடையவனாய்-இருக்கும் அத்தனையே வேண்டுவது –
காப்பாற்றுவதில் அவன் இடத்தில் ஒரு குறையும் இல்லை –
இவர்கள் விரோதிகளைப் போக்குக்கைக்கு-தகுதியான மிடுக்கையும் அன்பையும்-
உடையவன் -என்பார் -மல் திண் தோள் மால் -என்கிறார் –

வழுதி வள நாடன் சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் கற்றார்க்கு –
பாட்யே கேயேச மதுரம் ப்ரமாணை த்ரிபி அந்விதம் -பால -4-3-
நீட்டி சுருக்கி மத்யமம் -மூன்று வகையான பிரமாணங்களோடு கூடினதாயும்-பாடத்திலும் கானத்திலும் இனிமை பொருந்தியதாயும் –என்கிறபடியே
அழகிய சொற்களால் தொடுக்கப்பட்ட-அந்தாதியான ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு-இந்தப் பத்தும் கற்றார்க்கு –

ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே –
தாமோதரன் தாள்கள் தவ நெறிக்கே சார்வே -என்கிறபடியே-
கிருஷ்ணன் திருவடிகளே –இனி அவ்வருகு போய் ஓன்று தேடித் பற்ற-வேண்டாதபடியான பற்றாகும்-
இதையும் பற்றி தாண்டி போய் மற்று ஒன்றைப் பற்ற வேண்டாம் -ஏவ காரம் –

————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஹரவ் பூர்வாம் உபதிஷ்ட உஜ்ஜீவனாயா
ஜெகதாம் பலயுதாம் அநு கம்பையா
பக்திம் நிஜகாதா ஸூ பலாமகஸ்ய
சுவார்த்தாத் பரார்த்த ஆஸக்தி –

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்ரீ மத் தாமோதரத்வாத் அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா
சக்ராதீஸ்யாத் வாத வட தள சயநாத் நாக ராஜா சயநாத்
வக்ஷஸ் பரிஷத் முகத்வா பரம புருஷதாய மாதவத்வாத் யோகாதி
துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –

1–ஸ்ரீ மத் தாமோதரத்வாத்–சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-

2–அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா–பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற் கருமையனே-

3–சக்ராதீஸ்யாத் வாத–ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம் மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்

4–வட தள சயநாத்–தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க

5–நாக ராஜா சயநாத்–மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே

6–வக்ஷஸ் பரிஷத் முகத்வா–நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை

7–பரம புருஷதாய -பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்-

8/9-மாதவத்வாத் யோகாதி–ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்–என்றும்
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–என்றும்

10-துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 94-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்
அடியில் உபதேசித்த பக்தி-ஸ்வசாத்தியமான பலத்தோடே தலைக் கட்டினபடியை அருளிச் செய்த
திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ்-ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாக-
ஸ்ரீ தாள தாமரையிலே பற்றி போக்கிலே ஒருப்பட்டவர் ஆகையாலே-
ஸ்ரீ உயர்வற உயர் நலத்தில்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாக அறுதி இட்ட ஸ்ரீ பரத்வமே பரம பிராப்யமாகையாகவே
அந்த பிராப்ய வேஷத்தையும்-
பிராப்ய பலமான கைங்கர்யத்தையும்- ஸ்ரீ கெடும் இடரிலே அனுசந்தித்து-
அந்த பிராப்ய வேஷத்தை பெறுகைக்கு உபாயமாக-
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும்—ஸ்ரீ பத்துடை அடியவரிலும் தொடங்கின-பக்தியானது ஸ்வ சாத்தியத்தோடே பொருந்தின படியை சொல்லி
தமக்கு உபாயமாக
முதல் ஸ்ரீ திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியையும்-சொல்லித் தலைக் கட்டுகிற
ஸ்ரீ சார்வே தவ நெறியில் அர்த்தத்தை–சார்வாகவே அடியில் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை –

————————————————-

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-

—————————————————–

வியாக்யானம்–

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான் –
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும் ஸ்ரீ பத்துடை அடியவரிலும் பரோபதேச ரூபேண எல்லாருக்கும் அபாஸ்ரயமாக அருளிச் செய்த
பிரபத்தி யோடு விகல்பிக்கலாம் படியான பக்தி யானது தான்
சரண்ய -என்றத்தை- சர்வ லோக சரண்யாய -என்றும்-
பாதயோஸ் சரணான் வேஷீ நிபபாத -என்றும்
சாஷாத் பலத்தோடே தலைக் கட்டினால் போலே –

இவரும் –
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்மினே -என்றும்
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்றும்
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்றும்
அம்பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்றும்
நன்றென நலம் செய்வது -என்றும்
இப்படி அருளிச் செய்த பக்தி மார்க்கம் ஆனது-சாத்தியமான பலத்தோடே பொருந்தின படியையும்

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்றும்
அருளினான் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்றும்
வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் -என்றும்
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்றும்
அடியே தொடங்கி அருளிச் செய்து போருகிற-பிரபத்தி-ஸ்வ சாத்தியத்தோடு-பொருந்தினப டியையும் –

பண்டே பரமன் பனித்த பணி வகையே-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாய வெல்லாம் -என்றும்-அருளிச் செய்து
மற்றும்
பக்தி-பிரபக்திக்கு-உக்தமான வற்றையும்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன் -என்றும்
திரு மெய் யுறைகின்ற செங்கண் மால் -என்றும்
மடப்பின்னை தன கேள்வன் தாள் கண்டு கொண்டு -என்றும்
தலை மேல் புனைந்தேனே -என்றும்
நச்சப்படும் நமக்கு -என்றும்
வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் -என்றும்-அருளிச் செய்தார் இறே-

ஏவம் விதமான வர்த்தங்களை –
சோராமல் கண்டுரைத்த மாறன் –
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

கழல் இணையே நாடோறும் –
இப்படி-சூஷ்ம அர்த்த தர்சியான ஸ்ரீ ஆழ்வார்-சேர்த்தி அழகை யுடைய திருவடிகளையே –

கண்டு உகக்கும் –
சேவித்து-ஹ்ருஷ்டமாம் –

என்னுடைய கண் –
மே திருஷ்டி -என்னும்படியான-என் கண்கள் –

ஸ்ரீ தாமோதரன் தாள் யுடைய-ஸ்தானத்திலே-இவர்க்கு-ஸ்ரீ மாறன் தாள்-ஆயிற்று –

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -182- திருவாய்மொழி – -10-3-1….10-3-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 21, 2016

வேய் மரு தோள் -பிரவேசம் –

திரு வனந்த புரத்திலே புக்குப் பாரித்த படியே அடிமை செய்யப் பெறாமையாலே -அதி சங்கை ––ஐயப்பட வேண்டும்படியாய் வந்து விழுந்தது –
ஸ்ரீ வைஷ்ணவர்களும் தாமுமாய் அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்தார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்-காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்னுமவர் ஆகையாலே –
பாரித்த படியே அந்நகரிலே போய் புக்கு அடிமை செய்யப் பெற்றிலர் –
1-அந்நகரிலே அப்போதே சென்று சேரப் பெறாமையாலும்–
2-பாரித்த படி அடிமை செய்யப் பெறாமையாலும்-
-பல காலம் பிரிந்து போன வாசனையாலும் -திருவிருத்தம் -95-
3-தொன்று தொட்டு வருகின்ற சரீரத்தின் சேர்க்கையை நினைந்து அஞ்சின அச்சத்தாலும்-
4-சர்வேஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தை நினைந்து அஞ்சின படியாலும் -அதாவது –
சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்தும்-ஸ்ரீ பரத ஆழ்வான் வளைப்பு கிடக்க மறுத்து மீண்டு போரும்படியும் அன்றோ-ஸ்வா தந்த்ர்யம் இருப்பது -அதனாலும்
5-இனி–சர்வேஸ்வரன் தானே வந்து அங்கீ கரிக்கைக்கு ஈடான பக்தி தமக்கு இல்லை என்று இருக்கையாலும்
இன்னம் இவ் உலகில் வைக்கில் செய்வது என் -என்னும்-அச்சத்தாலே துன்புற்றவராய்
-தமக்குப் பிறந்த நிலை வேறுபாட்டினை-ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

காலைப் பூசல் –கீழும் மேலும் இரண்டு திருவாய் மொழிகளில் பர உபதேசம் –

அச்சம் நீங்குதற்கு உடலான இவை தாமே அன்றோ இப்போது-இவர்க்கு அச்சத்துக்கு காரணங்கள் ஆகின்றன –
1-இப்போதே அந்நகரிலே சென்று சேரப் பெற்றிலோம் -என்று இருக்க வேண்டா –
அவனை நினைந்தால் காலாழும் நெஞ்சழியும் -பெரிய திருவந்தாதி -34-என்கிறபடியே
பத்தியினால் பரவசப் பட்ட காரணத்தால் இப்போது அடி இட மாட்டாதே ஒழிகிறார் ஆகையாலே-
2-அடிமை செய்யப் பெற்றிலோம் என்று அஞ்ச வேண்டா –
புகழும் நல் ஒருவன்-என்கிற திருவாய் மொழியின் படியே
இருந்த இடத்தே இருந்து எதேனுமாக சொன்னவற்றையே-தனக்கு அடிமையாகக் கொள்ளும் தன்மையன் ஆகையாலே
இன்று நினைத்தவற்றையும் செய்தவற்றையும் எல்லாம் தனக்கு அடிமையாக-நினைத்து இருக்குமவன் அன்றோ அவன் –
3-இனித் தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணியன்-என்று வர நின்ற பிரகலாதன் அன்றோ-முடிவில் வந்து எதிர் இட்டான்-
ஆக-மயக்கம் கொண்டவனுக்கு பிறந்த தெளிவு போலே-இச் சரீரத்தோடு சேர்ந்து இருக்கிறவனுக்கு பிறக்கும் ஞானத்தினை நம்ப ஒண்ணாது என்றே அன்றோ
இவர் தாம் இச் சரீர சம்பந்தத்தை நினைந்து-தேறேல் என்னை -2-9-10-என்று அஞ்சிற்றும் –அங்கண் அஞ்ச வேண்டா –
முடியானே -என்ற திருவாய் மொழியிலே கூறப் பட்ட உறுப்புகளை உடையவர் ஆகையாலே-
4-அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தை நினைத்து அஞ்ச வேண்டா–சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-எல்லா பாபங்களில் நின்றும்
உன்னை விடுவிக்கிறேன்-நீ துக்கப் படாதே -என்கிறபடியே –பாபங்களைத் துண்டித்துக் கொண்டு போகைக்கும் உடலாய் இருக்கையாலே ..
5-பக்தி தமக்கு இல்லை என்று இருக்க வேண்டா -பிரபத்தியை உபாயமாக பற்றினவர் ஆகையாலே –
நாராயணாயா – ஏக நிஷ்டை யில் இருந்தால் எத்தை செய்தாலும் கைங்கர்யம் -யோ யோ ஜல்ப -ஜபம் -தது தியானம் —
பிரகலாதன் போலே இவருடைய கரணங்கள் பிராகிருத போகங்களில் இல்லையே –
நெடு நாள் பிரிந்து -போன வாசனை-முடியானே கரணங்கள் உடையவர் -பிரகிருதி சம்பந்தம் நினைத்து அஞ்ச வேண்டாம் என்பதை
அத்தால் வந்த பிரிவையும் கண்டு அஞ்ச வேண்டாம் என்றபடியும் ஆகுமே –

இனி –ச உத்தம புருஷ சதத்ரபர்யேதி ஜஷத் கிரீடன் ராமமான-
ஸ்த்ரீபிர்வா யானைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -சாந்தோக்யம் -8-12-3-என்கிறபடியே
இதனை நினையாதபடியான சாஷாத் காரம் இல்லாமல் படுத்துகிற பாடே அன்றோ இது –
நேரே கண்கூடாக காண்கிற காட்சியும் பயன் இல்லாததாய்-கூட இருக்கச் செய்தே பிரிந்தான் -என்று மயங்கும்படி
பிரிவால் வந்த வாசனை மேற்கொள்ளுகிறது அன்றோ-தகுதி கிடந்து படுத்துகிற பாடே அன்றோ-

கெடும் இடரில் பிரத்யக்ஷ சாமானாகாரம் கிட்டிற்றே -வைகுந்தம் கிட்டினால் போலே -என்றாரே -எதற்க்காக துன்பப பட வேண்டும்
பிரத்யக்ஷமும் அகிஞ்சித் கரமாய் கூட இருக்கச் செய்தே பிரிந்தான் என்று அதி சங்கை
பிரிந்தான் என்று இவள் உடம்பு மெலிய -அத்தைக் கண்டு அவனும் பிரிந்தோமோ என்று அவனும் நினைக்கும் படி
-இப்படி இருவரும் ஊமத்தங்காய் தின்றால் போலே மயங்கி
கலப்பார் பிரிவார் என்கிற வாசனை மேலிட –யோக்யதை கிடந்து படுத்தும் பாடு இது -சரீரம் இருப்பதால் -விஸ்லேஷ ஹேது அன்றோ சரீரம் –
அதி சங்கை பிராந்தி கார்யம் இல்லை -மயர்வற மதி நலம் அருள பெற்றதால் —

மயர்வற மதிநலம் அருளினன் – என்கிறபடியே-பகவானுடைய திருவருளால் கிடைத்ததாய்-
பரபக்தி ரூபமாய்-ருசி கார்யமாய்-இருக்கிற இருட்சி இருக்கிறபடி அன்றோ இது –
இனி ஈஸ்வரனுக்கு கால் நடையாடாதது ஒரு தேசத்தில்-இவரை வைத்து அதனைப் போக்கலாம் அத்தனை –
கலந்து பல நாள் பிரிந்து போந்தாள் ஒரு பிராட்டியாய்-அவ் வாசனையாலே
கிருஷ்ணன் கூடி இருக்கச் செய்தேயும் -நீ கண்ணா -என்கிறாள் இங்கே –
இவன் பண்டு பிரிந்து போந்த விடியில் காலமும் வந்து அக்காலத்துக்கு அடைத்த காற்றுக்கள் அடிக்கையாலும் -வாடை தூவ –
குயில்கள் கூவுகையாலும்-மயில்கள் ஆலிக்கையாலும்-காடு எங்கும் ஒக்க கன்றுகளும் பசுக்களும் பரக்கையாலும்-இக்காலத்தில் அவன் போகை தவிரான்
பசுக்களை ஒரு தலையாக காப்பாற்றுமவன் ஆகையாலே அவற்றை விட்டு நம்மோடு இருப்பான் ஒருவன் அல்லன் –
ஆனபின்பு அவன் போனான் -என்று-கூட இருக்கச் செய்தேயும் அவன் பிரிவினை நிச்சயித்து-
இன்னுயிர் சேவல்-மல்லிகை கமழ் தென்றல்-தொடக்கமான திருவாய் மொழிகளில்
அவன் முன்னம் இல்லாமையால் பட்ட துக்கம் முழுதினையும் அவன் கண் முகப்பே படுகிறாள்-
எல்லா வற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த-அவனாலும் போக்க ஒண்ணாதபடி ஆயிற்று இவ் வாபத்து-
அதாவது-போனானாய் வருகிறவன் அல்லன்-போக நினைத்தானாய் தவிருகிறவன் -அல்லனே -என்றபடி –

இப்படி நோவு பட்டு-நீ பசு மேய்க்கப் போதலை நிச்சயமாக தவிராய்-
நீ போதல் எனக்கு விருப்பம் இல்லாத கார்யம் ஆகையாலே உன் செலவினை விலக்க வேண்டும் என்று நினையா நின்றேன்-
இதற்கு நா நீர் வருகிறது இல்லை
அதற்கு மாற்றாக-உன் கையை என் தலையிலே வைக்க வேண்டும் –அணி மிகு தாமரைக் கையை –
நீபசு மேய்க்கப் போகாது ஒழிய வேண்டும்-வீவ நின் பசு நிரைமேய்க்கப் போக்கு –
தீங்கினை விளைக்கக் கூடிய காட்டில் நீ பசு மேய்க்கப் போனால் அங்குள்ள-அசுரர் இராக்கதர்கள் முதலியோர்களால் என் வருகிறதோ –
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் –என்று அஞ்சா நின்றேன் –என்கிறாள் –
அஞ்சன வண்ணனை -பெரியாழ்வார் திருமொழி –என் செய்யப் பிள்ளையை போக்கினேன் ஏ பாவமே -தாயார் பாசுரம் –
இனி-மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் சூக்ருத் கதி நாராயணா -சுபால உபநிஷத் -என்கிறபடியே
அவன் எல்லா வகையான உறவுமாய் இருப்பதைப்போன்று –
இத்தலைக்கும் சம்பந்த ஞானம் பிறந்தால் எல்லா பிரிவுகளும் உளவாய் இருக்கும் அன்றோ –அதனால் இவளும் தாய் போலே படுகிறாள் என்றவாறு –
யதா யதா ஹி கௌசல்யா தாசிவச்ச சகீவச-பார்யாவத் பைநீவச்ச மர்த்ருவச்ச உபநிஷ்டதே -அயோத்யா -18-68-
ஸ்ரீ கௌசல்யார் சகரவர்த்திக்கு-வேலைக்காரி தோழி மனைவி உடன் பிறந்தவள் தாய் ஆகிய இவர்களைப் போன்று இருந்தாரே -என்கிறபடியே –
ஆனபின்பு–நீ செல்லில் நான் உளளாக மாட்டேன் -என்று-இப்படி நோவுபட-அவனும் இவை முழுதினையும் நினைந்து -நான் போகிறேன் அல்லேன் -என்று
தன் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்தி தரிப்பிக்க-தரிப்பததாய் -செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு –தலைக் கட்டுகிறது -இத் திருவாய் மொழியில்-

இதனால்
திரு மந்த்ரத்தில் கூறிய அடிமைத் தன்மையின் எல்லை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி-
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அவனுக்கே உறுப்பாக பயன் கொடுக்கை -தானே அடிமைத் தனத்தின் எல்லை-
எம்மா வீடு -திருவாய் மொழியில்-தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்று அறுதி இட்டது ஓன்று உண்டே அன்றோ –
அதனை அழிக்கிறதாயிற்று இங்கு –என்னைக் கொள்ள வேண்டும் என்றே அன்றோ அங்குச் சொல்லிற்று-
என்னோடு கலக்கவுமாம்-வேறு சிலரோடு கலக்கவுமாம் –அங்குத்தைக்கு குறை தீரும் அத்தனை வேண்டுவது என்கிறது இங்கு-
அங்கு -எனக்கு என்ற இடம் புருஷார்த்தம் ஆகைக்கு சொன்ன இத்தனை அன்றோ –
உனக்கே நான் ஆட் செய்வோம்-அது அறிவில்லா பொருளின் வேறுபாட்டுக்கு உடலாம் இத்தனை-
இவன் தான் எனக்கு என்னாத அன்று புருஷார்த்தம் ஆகாது-அவன் தான் விரும்பி கார்யத்தை செய்யவும் தொடங்கான்-
உனக்கு நல்லவரோடும் உழி தந்து -உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் –
தாதார்த்தம் -அத்தலைக்கே உறுப்பாக -தாதர்த்த சதுர்த்தி லுப்த சதுர்த்தி -பகவான் பிரயோஜனம் பிரதானம் -எம்மா வீட்டிலும் இதுக்கு ஆதிக்யம் –

————————————————————————————–

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

பிரிய போகிறாய் என்னும் நினைவாலே -குயில் மயில் ஈடுபடுகிற என்னை -உன் கண் அழகைக் கொண்டும் நலிய –
வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ-விரஹம் பொறாமையால் -மூங்கில் -கலந்த பொழுது அழகாக இருந்தவை -மெலிய
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்-எனது மெலிவையையும் என் தனிமையும் –
நீ நோக்கா -மயில் குயில் நோக்க -உலகோர் நோக்கா -பிரியாமல் நீ இருந்து -உலகோர் சேர்ந்து வைக்க -ஆஸ்ரயம் சரீரம் மெலிய -பிரிவு ஆற்றாமை –
காமரு குயில்களும் கூவும் ஆலோ-தர்ச நீயமான குயில்கள் -தனிமைப் பட்டரை நலியாக் கடவோம் என்று இராமல் -மால்யவான் சந்நிதி ரகுராமன் -தனியாக
-கிஷ்கிந்தா வாடை காற்று துன்பம் படுத்த -தம்மில் தாம் சேர்த்திக்கா கூவ –
கா பொழில் மருவு நெருங்கி வர்த்திக்கும் குயில்கள் என்றுமாம்
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ-கூட்டமான மயில்கள் -தம்மில் தாம் கலந்து நடனம் ஆடா நின்றன
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு-பசுக்கள் -செறிந்து -இனம் உற்று இருக்க -திரள்களை மேய்க்க நீ லீலா காரணமாக போனால்
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ-சகஸ்ர யுகங்கள் -கோபிகா கீதம் -ஆனந்தம் மட்டுப் படுத்த மறைய -திருடி யுகாயாதே த்வாம் அப்ஸயதாம் -குடில குந்தளம் –
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ-அதுக்கும் மேலே — புண்டரீகாக்ஷன் -தர்ச நீயமான -ஈர்த்து –
தகவிலை தகவிலையே நீ கண்ணா-கிருபை இல்லை உன்னிடமும் லோகத்திலும்
கண்ணா -பெண் பிறந்தார் பெரும் துயர் அடையாக கூடாது -சாமான்ய கிருபையும் கூட காட்டாமல் –
நோவு பட்டரை நலியக் கூடாது என்ற விசேஷ கிருபையையும் காட்டமாட்டாயே –
இந்த நைர் க்ருண்யம் ஸ்வ பாவமாகவே கொண்டாய் -இதுவே யாத்திரை -ஸ்வ பாவம் –
கொண்டாடும் அழகு -அவன் ஸம்ஸலேஷிக்கும் பொழுது -கொண்டாடிய நினைவால் -ஆலோ விசேஷ ஸூ சகங்கள் –

அவன் பிரிகிறான் என்ற துக்கம் சொல்லா நிற்க-
அதற்கு மேலே குயில் முதலான பொருள்களின் துன்புறுத்தும் ஒலியாலும்-அவன் நோக்காலும்
தனக்குப் பிறந்த துன்பத்தினை தோழி மாருக்கு சொல்லுமாறு போலே-அவனுக்கு சொல்கிறாள்-

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ –
சுற்றுடைமையாலும்-பசுமையாலும்-
மூங்கிலை ஒரு வகைக்கு போலியாக சொல்லலாய் இருக்கின்ற தோள்கள்-இரண்டும் மெலியா நின்றன -என்கிறாள்
செருக்கனாய் இருக்கும் அரச புத்ரனுக்கு-உன் பூந்தோட்டம் அழிகிறது என்னுமா போலே
தன்னுடைய பிரிவில் இவள் ஆற்றாமை கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே-
கைம்மேல் காணலாய் இருக்கிறது காணும் இவள் மெலிவு –
இவளுடைய மயக்கத்தை பின் சென்று-கிண்ணகத்தில் அடிச்சுடுவாரைப் போலே
அவன் கூட இருக்கச் செய்தேயும் மெலியா நின்றன ஆயின தோள்கள் –
கூட இருந்தாலும் பயன் இல்லையே அகவாயிலே பிரிவு உண்டானால்-அதன் கார்யமான மெலிவு பிறந்தன்றி நில்லாதே-
தன் தோள்கள் மெலிகிற இதனை -உன்னுடைய தோள்கள் மெலியா நின்றன -என்பாரைப் போலே-சொல்லுகிறாள் காணும்
தேவதத்தன் என்றதனோடு வாசுதேவன் என்ற சொல்லோடு-வாசி அறும்படி அவனுக்கு சரீரமாக அன்றோ இவ் உயிர்ப் பொருள் இருப்பது-
பர்யவசான விதி -சர்வ சப்த வாச்யன் -நீ கலக்கப் புக்கால் விடாய் ஆறுவது எங்கே-கலந்தால் பிரிவு நிச்சயம் -அதனால் விடாய் ஆறுவது எங்கே -என்றபடி –
இவள் தோள் மெலிந்தால் தன்னுடைய அபிமதம் -வருத்தம் -தனக்கு வந்ததாய் இருக்கையாலும் -வழி -இரட்டிப்பாய் இருக்கும் –
மெல்லியல் தோள் தோய்ந்தே -திரு நெடும் தாண்டகம் -13-அன்றோ விடாய் ஆறுவது-இருவருக்கும் விடாய் ஆற முடியாதே –
நீர் சேர்த்தி அழகு சொல்லி வாய் வெருவும் தோள்கள்-படுகிற பாடு பாராய் -என்பாள் -இணை -என்கிறாள்-
தன் அழகை தான் கொண்டாடுமவள் அல்லளே-அவன் சொல்லக் கேட்டு செவி ஏற்றாலே சொல்கிறாள்-
இனி நீ வந்தாலும் உயிர் இல் பொருளுக்கு சமம் காண் -என்பாள் -மெலியும் -என்கிறாள்
–மெலியும் -காலத்தாலும் -தன்மையாலும்-மெலிவதே ஸ்வ பாவமாக என்றபடி –
ஆலோ-துக்கத்தின் மிகுதியைக் குறித்தபடி –

மெலிவும் என் தனிமையும் –
என் மெலிவும் -என் தனிமையும் –
உலகத்தார் மெலிவும் தனிமையும் போல் அல்லவே என் மெலிவும் என் தனிமையும்-
உன் மெலிவும் உன் தனிமையும் போலே அல்ல –
கூட இருக்கச் செய்தே வருகிற தனிமையும்-பிரியாது இருக்கச் செய்தே வருகிற மெலிவுமே அன்றோ-
இவை –பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே திருவாய்மொழி -4-3-10-என்றும்
மிக மேனி மெலிவு எய்தி -திருவாய்மொழி -9-7-10-என்றும்
தமியம் ஆலோ –8-9-2- என்றும்-சொன்னவற்றின் அளவு அல்லவே அன்றோ
அவன் தன் பக்கல் இல்லாத காலத்தில் பட்டவை அன்றோ அவை –கூட இருக்கச் செய்தே வருகின்றவை அன்றோ இவை-
தாம் தம்மைக் கொண்டு அகறல் தகவு அன்று –9-7-9- என்றபடியே-
தான் ஜீவனம் தேடித் போனவள் என் ஜீவனம் வைத்து போக கூடாதோ என்றாளே திருத் தாயார் -திருக் கோளூர் பதிகத்தில் –
தாம் போவார் தம்மை வைத்தன்றே போக வேண்டும் என்னக் கூடிய அவளுக்கு கூட-
இருக்கச் செய்தே போனான் என்று நினைக்கவுமாம் அன்றோ அன்பின் தன்மையாலே –
லோகத்தில் விரஹினிகள்-அஸஹாயத்வம் காதலன் வந்தால் மெலிவு இல்லை -அவனுக்கு வரவே வராதே -எனக்கு கூடவே இருக்கவே வருகிறதே –
அவன் தான் போனானாய் வருகிறான் அல்லன்-போக நினைத்தானாய் தவிருகிறவன் அல்லன்-
அவனாலும் செய்ய இயலாத கார்யம் அன்றோ இது-
அவன் தானும் இவள் மெலிவில் மெய்ப்பாட்டினைக் கண்டு-நாம் பிரிந்தோமோ -என்று மயங்கும்படி அன்றோ இருக்கிறது –
இருவரும் இருவருக்கும் ஊமத்தங்காய் ஆனால் தெளிய விரகு இல்லை-
இது தானே அவனுடைய புண்ணிய பலம் இருந்தபடி அன்றோ-
முன்பு இவள் பிரிவு ஆற்றாமையால் பட்டவை எல்லாம் தான் கண்டு அறியானே-
தோழிமார் மற்றையார் சொல்லக் கேட்டார் வாய் கேட்கும் இத்தனையே-
ஹி வாத யத காந்தா தாம் ச்ப்ருஷ்ட்வா மாமபி ச்ப்ருச-த்வயி மே காத்ர சம்ஸ்பர்ச சந்த்ரே த்ருஷ்டி சமாகம -யுத்தம் -5-9-
ஏ காற்றே என் அன்புக்கு உரிய சீதை எங்கு இருக்கிறாளோ-
அங்கு சென்று அச் சீதையை தொட்டு மீண்டு வந்து என்னையும் தொடு-என்பது போன்று
இப்போது தன் கண்களாலே காணப் பெற்றானே-இவள் தான் தோழி மாரோடு சொல்லும் அதனை இப்போது அவனோடு சொல்லுகிறாள்-

யாதும் நோக்காக் –
ஒன்றையும் பார்க்கின்றன இல்லை -என்றது
தோள்களின் மெலிவையும் தனிமையையும் இவை ஒன்றும் பார்க்கின்றன இல்லை -என்றபடி –

காமரு குயில்களும் –
கா மருதல் -விருப்பம் உறுத்தல்-
இவற்றின் உடைய சேர்க்கை பிரிவிற்கு உடலாய் இராமையால்-மேன்மேல் என விருப்பத்தை உடைத்தாய் இருக்கும்
சேர்க்கை பிரிவோடு கூடி இருக்கும் என்னும் அச்சம் இல்லை இவற்றுக்கு-
அவனே அன்றி இவையும் துன்புறுத்துகின்றன-என்பாள் -குயில்களும் -என்கிறாள் -என்றது
நீ துன்புறுத்த வர விட்ட குயிலைக் காட்டிலும் இன்னமும் நீ தானே நல்ல என்றபடி –
-கூவும் –
என் நிலையைக் கண்டால் இவற்றுக்கு வாயை புதைக்க வேண்டாவோ -என்றது
பிரிந்து நிறைவு படுகின்ற என் படியைக் கண்டால் –
நஞ்சு போலே நம்முடைய ஒலி இவளைத் துன்புறுத்தும் என்று தவிர வேண்டாவோ -என்றபடி –
அனயா சித்ரயா வாசா த்ரிஸ்தான வ்யஜ்ஞ நச்தையா-கஸ்ய நாராத்யனே சித்தம் உத்யதாசே அரேரபி -கிஷ்கிந்தா -3-32-
கொல்லுதற்கு தூக்கின கத்தியை எந்த பகைவனுடைய மனம் தான் மகிழ்விக்கப் படுகிறது இல்லை -என்றபடியே
திருவடியின் வார்த்தை இனிமையாலே பகைவர்களையும் ஈடுபடுத்துமா போலே –
இவளுடைய நிலையும் பகைவர்களும் இரங்கும் படி -உள்ளதே என்றபடி –
உருவின வாளினை உறையிலே இட வேண்டும் படி காணும் இவளுடைய நிலை –

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூறல்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றோ யார் கொல் இச் சொல்லின் செல்வன்
வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடையலானோ -கம்பர்-

நடுவில் திருவீதிப்பிள்ளை -125000 படி விரித்து எழுதி -நம்பிள்ளை அனுமதி இல்லாமல் எழுதினத்தால் நாட்டில் நடையாடக் கூடாது என்று ஆக்கினார்
அதனால் விரிவான வியாக்யானம் கிடைக்கப் பெற்றோம் அல்லோம்

கணம் மயில்
எதிர் தலையையும் தனியே வைத்து நோவு படுத்தி தாமும் தனியே இருந்து நோவு படுவாரைப் போலே அன்றிக்கே
-சேர்த்தியை உடையையவாய் இரா நின்றன ஆயிற்று இவை –

அவை –
கண் கூடாக காண இருந்தாலும் இவை என்னாமல் அவை என்றது
திருஷ்டி விஷம் போலே இருக்கையாலே முகத்தை மாற வைத்து அவை என்கிறாள் -கண் கொண்டு காணப் போகாமையாலே –
ஒரு திரளாக துன்புறுத்துகின்றன வாயிற்று –
அப்பாஞ்ச ஜன்யம் -உயிர்க்கு அது காலனே-பேதை பாலகன் அது ஆகும் போலே —

கலந்து –
இவ்வளவில் நான் சேர்வது பெண் கொலை என்று அறிந்து மீள்கின்றன இல்லை-
ஆனாலும் சேர்ந்த சேர்க்கையால் வந்த உவகைக்கு போக்கு வீடாக நடனம் செய்யா நின்றன-
என்று கண் கூடாக கண்டு வைத்து -அவை என்னும் போது முகத்தை மாற வைத்து சொல்கிறாள்-என்பது தோற்றுகிறதே அன்றோ-
மயூரச்ய வனே நூனம் ரஷசா நஹ்ருதா ப்ரியா-தஸ்மாத் நருத்யதி ரம்யேஷூ வநேஷூ சஹ காந்தயா-கிஷ்கிந்தா 1-40-
இருவராய் இருப்பார் எல்லாரையும் பிரித்தான் என்றே இருக்கிறார்-
மயிலினுடைய பெண்டாட்டியை இராவணன் கொண்டு போயிற்று இலனோ-
திரு அயோத்தியில் வந்து பிரித்தான் அல்லனே –இன்பத்துக்கு தனி இடமான காட்டில் அன்றோ –
ரஷசா நஹ்ருதா ப்ரியா –
நீர்மை கேடனான அப் படுகொலை காரனால் பிரிக்கப் படாதது இது ஒன்றுமே அன்றோ –

மருவு இனம் ஆ நிரை மேய்க்க –
இவ்வளவில் -இவள் எவ்வாறு இருப்பாளோ -என்ன வேண்டி இருக்க -அது செய்யாதே-
அவன் தன்னாலே காப்பற்றப் படுகின்ற பொருள்களை-பாதுகாத்தலிலே ஒருப்படா நின்றான் –
உன்னோடு சேர்ந்து-திரளாக இருக்கிற-ஆ நிரை உண்டு -பசுக் கூட்டம் -அதனை மேய்க்க –
மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர –பெரியாழ்வார் திருமொழி -3-6-9-அன்றோ -இவன் இடம் மருவி நிற்பன –
வேறு ஓன்று இன்றிக்கே இவனுடைய சேர்த்தி ஓன்று அன்றோ இவற்றுக்கு தாரகம் –
இனம் –
அவனாலே காப்பாற்றப் படுகின்ற பொருள்களிலே சேர்ந்தாலும்-
தனியராய் இருப்பாரை காப்பாற்ற நினையான் –திரளாக இருப்பாரை ஆயிற்று இவன் காப்பாற்ற நினைப்பது –

நீ போக்கு -ஒரு பகல் –
நீ போகிற ஒரு பகல் -என்னுதல்-
உன்னுடைய போக்கான ஒரு பகல் -என்னுதல்-
அன்றிக்கே-பசுக்களை மேய்க்கைக்காக நீ போக விடுகிற ஒரு பகல் -என்னுதல்-

இவை எல்லாம் ஒரு பகல் அளவே அன்றோ -என்றானாம் –
ஆயிரம் ஊழி –
உன்னைப் போலே என்று இராதே கொள்ளை எங்களையும் -என்றது –
இரவு என்றும் பகல் என்றும் உத்தேச்யமாய் இருப்பார் படியாய் இராது காண்-
எல்லா காலத்திலும் ஒன்றே போது போக்காகா இருப்பார்க்கு -என்றபடி –
ச ததா சஹ கோபீ பீராச மதுசூதன-யதாப்த கோடி பிரதம ஷன தேன விநாபவத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-59-
அந்த கிருஷ்ணனை விட்டுப் பிரிந்தால் ஒரு கண நேரமும் கோடி வருஷம் போல் எப்படித் தோன்றுமோ -என்கிறபடியே –
போனோம் அல்லோம்-போக நினைத்தோம் அல்லோம்-நாம் கூட இருக்கச் செய்தே -பிரிந்தோமாகக் கொண்டு
நோவு பட்டு-பார்க்கப் படும் பொருள்கள் எல்லாம் துன்புறுத்தும் படியாக இருப்பதே-
இது ஒரு அன்பின் தன்மை இருக்கும் படி என் -என்று-கண்களாலே குளிர நோக்கினான் –
தாமரைக் கண்டால் கொண்டு ஈர்தி யாலோ –
நீ நோக்காலே நலிவதில் இன்னம் பசு மேக்கப் போக்கையே நன்று –
முன்புத்தை நோக்கு நினைவுக்கு வரவே சொல்லுகிறாள் என்பாரும் உண்டு-
ஈர்தி -என்கையாலே இப்போதே நலியா நின்றாய் என்றே சொல்ல அமையும்-
இப்படி சொல்ல செய்தேயும் நோக்கினை மாற வைத்திலன் –

தகவிலை
உலகத்தில் அருள் இல்லை -காண் -என்கிறாள் –
அவனை விலக்குகிறாள் இல்லையே அன்றோ
நம்மோடு பகைத்தவர்களை இன்னாது ஆகிறது என்
இவன் நம்மை நலியா நிற்க-ஒன்றுக்கு அன்ன தோஷம் உண்டு
ஒன்றுக்கு சேர்க்கை தோஷம் உண்டு
ஆனபின்பு இவை நம்மோடு பகைத்தல் தகுதியே அன்றோ
மயில் சுப்ரமண்யன் வாகனம் என்பதால் சேர்க்கை தோஷம் உண்டு-
குயில் புலி புக்கின் -காகத்தின் உடைய அன்னத்தை உண்கையாலே அன்ன தோஷம் உண்டு-
குயில் காகத்தாலே வளர்க்கப்படுவதால் அதன் அன்னத்தை உண்டது ஆம் –

நீ தகவு இலை –
உனக்கு தகவு இல்லை
தகவுடையவனே -2-4-8 -என்று கூப்பிடுமவள் கண்டீர்-அவன் திரு முன்னே-இப்போது தகவு இல்லை -என்கிறாள்
நீ தகவு உடையை அல்லை –
அன்றிக்கே
இரண்டும் உனக்கு தகவில்லை என்றாய்
அப்போது இரட்டிப்புக்கு கருத்து நீ தகவு உடையை அல்லை -என்பதற்கு கருத்து-
கோடி எடுக்கிறேன் -என்னுதல் -பல உதாரணங்கள் காட்டுகிறார் -உன் பக்கல் கிருபை இல்லை -என்பதற்கு –
உலகில் அருள் இல்லை என்பதற்கு பிரமாணம் காட்டுகிறார்-
அக்ரூர க்ரூர ஹ்ருதய சீக்ரம் பிரேரயதே ஹயாத்-
ஏவம் ஆர்த்தாசூ யோஷித்சூ க்ருபா கஸ்ய ந ஜாயதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-90-
இப்படி பெண்கள் கஷ்டப் படும் கால் யாருக்குத் தான் அருள் உண்டாக மாட்டாது -என்றபடி –

——————————————————————————————————–

தகவிலை தகவிலை யே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-

ஆஸ்ரித பவ்யன் -நீ கிருபை இல்லாமல் இருக்க -உன்னுடைய சம்ச்லேஷ ரசம் கிலேசம் -விஸ்லேஷம் உடன் சேர்ந்தே இருப்பதால்
தகவிலை தகவிலை யே நீ கண்ணா-பவ்யத்தைக்கு உஈடான கிருபையை ஒரு படியாலும் இல்லாமல் -நீ சன்னிஹிதனாய் இருந்து
ஸம்ஸலேஷிக்கும் அளவிலும்
தடமுலை புணர்தொரும் புணர்ச்சிக்கு ஆராச்-நீ ஸ்லாகிக்கும் -முலைகள் -ஸம்ஸலேஷித்துக்கு உள் அடங்காமல் –
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்-அளவிட முடியாத சுக சாகரம் -ஆகாசம் அவ்வருகே சென்று -தாண்டிப் போய்
-அறிவை கபளீ கரித்து-அதனில் பெரிய -என்றபடி –
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே-இத்தனையும் கனவு போலே நீங்கி -அலங்க்ருத்ய சிரைச்சேதம்-அந்த அவஸ்தையில்
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு-இடை வெளி தோறும் ஸூ ஷ்ம பதார்த்தம் -நிரப்பி வடிந்து -சம்ச்லேஷம் விஸ்லேஷம் -பிரவேசித்து –
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ-ஆஸ்ரயமான ஆத்மாவின் பரம் அல்ல -தங்க ஒண்ணாத ஆசை -அபி நிவேசம்
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்-சுக வெள்ளம் -அனுபவ வெள்ளம் -அபி நிவேச வெள்ளம் -கூட இருக்கும்
உனக்கு இத்தை சொல்ல வேண்டி இருப்பதே -உன்னால் பட்டு -இனி நீ செய்ய வேண்டுவது
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே-வீவுதல் தவிர -பிரிவு வாட்டாமல் -பசுக்களை மேய்க்கப் போகாமல்

இவள் தரிப்பதற்க்காக பலகால் அணைத்து அருள –
இச் சேர்க்கையால் ஆய இன்பம் எல்லாம் -நீ நீங்கக் கூடியவன் என்னும் இதனாலே-
கனாக் கண்டு விழித்தால் போலே யாய் நோவு படா நின்றேன் -என்கிறாள்-கோதுமை மாவு கனா கதை -பக்ர பாண்டம் உடைத்தானே –
முன்னர் நிகழ்ந்த கலவியையே சொல்லிற்றாகவுமாம் –

தகவிலை தகவிலை யே நீ கண்ணா-
கண்ணா நீ தகவிலை தகவிலையே –
கிருஷ்ணன் என்றால் பெண்களுக்கு உடைமைப் பொருளாக இருப்பான் எனபது பிரசித்தம் அன்றோ –
பெண்களுக்கு உடைமைப் பொருளாக இருக்கும் நீ அருள் இல்லாதவனே ஆகா நின்றாய் –
நம்மை அருள் இல்லாதவன் -என்பதே –
பிரிய நினைத்தோம் அல்லோம் –பிரிந்தோம் அல்லோம் -என்று இவள் தரித்து இருப்பதற்காக-நெருக்கி அணைத்தான் —

தடமுலை புணர்தொரும் –
நூறாயிரம் தோறும் அணைக்கச் செய்தேயும் –அணைக்கிறது பிரிதலுக்கு அன்றோ –என்று-
அணைத்த கை -நெகிழ்ந்த இடம் -எங்கும் இவள் உடம்பு வெளுப்ப புக்கவாறே -அதனைக் கண்டு-
இவளுடைய சமாதானதிற்க்காக அணைக்க-இங்கனம் ஐயமும் சமாதானமுமாக செல்லும் அத்தனை –
புள்ளிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் அவ்வளவில்-அள்ளிக் கொள் அற்றே பசப்பு -திருக் குறள்-1187
காதலர் தொடு உழி தொடு உழி நீங்கி-விடு உழி விடு உழிப் பரத்தலானே -குறும் தொகை
இது தான் முன் நிகழ்ந்த கலவியை சொல்கிறது என்பாரும் உளர் –இப்போதைய கலவியையே சொல்கிறது –இதுவே முக்கியார்த்தம் –
என் நீர்மை கண்டு இரங்கி–1-4-பொருள் குற்றம் -கூட இருந்தால் -தானே கண்டு -கேட்டு இரங்கி -தமிழன் சொல்லி -முன்பு நெகிழ்த்த இடம் போலே –
தடமுலை –
தன்னை அறியப் புகுந்தவர்கள் படுவதனை ஆயிற்று -இவற்றை நுகரப் புக்கு தானும் படுவது –
தொலைய நுகர்ந்து முடிக்கப் போகாதாயிற்று -என்றது
அனுபவிக்கின்றவனாலும் உண்டு அறுக்க ஒண்ணாத இனிமையின் மிகுதியைச் சொன்னபடி –

புணர்ச்சிக்கு ஆராச் சுகவெள்ளம்-
புணர்ச்சிக்கு அடங்காத இன்பக் கடல் –
புணர்கிற இருவருக்கும் ஈடாக அன்றோ இன்பம் இருப்பது-
அவன் ஸ்வரூபம் இன்னது என்று அளவிட்டு அறிய முடியாதவாறு போலே ஆயிற்று
அவனுடைய இனிமையின் மிகுதியும்-அதனில் பெரிய என் அவா -10-10-10- அன்றோ அவனது
அன்றியே
புணர் தோறும் -புணர்ச்சிக்கு ஆராச் சுகவெள்ளம்–
அதாவது-சேர்க்கை ஏதாவது ஒரு கால விசேடத்தில் உண்டாவதாய்-இன்பம் எல்லை அற்று இருக்கையைத் தெரிவித்த படி –
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று-நீரினும் ஆரளவன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு-பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே -குறும் தொகை -9 என்னக் கடவது இறே-
குறிஞ்சிப் பூக் கொண்டு பெரும் தேன் இழைக்கை-இவ்வின்பம் தான் எவ்வளவு போரும் -என்னில்

விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து –
எல்லா பொருள்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு-இருக்குமது அன்றோ ஆகாசம் –
அதனையும் குளப்படி ஆக்கி -மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அறிவினையும் விளாக்குலை கொள்ளா நின்றதாயிற்று-
அன்றிக்கே-பேரின்பத்துக்கு தாமரைக் கண்ணான் உலகு -திருக் குறள்-1108-என்னக் கடவது அன்றோ –
ஆதலால் -விசும்பு -பரமபதம் ஆமுமாம்-ஆக பரம பதத்தையும் விஞ்சி-
இரண்டு உலகங்களையும் தன்னுள்ளே யாம்படி இருக்கிற அறிவையும்-மேலிடும்படி ஆயிற்று இருக்கிறது –அதனில் பெரிய அவா அன்றோ –
அது கனவு என நீங்கி -அது கனவினைப் போன்றதாம் என்னலாம் படி கழிந்த தாயிற்று –
கண்ட கனாவின் பொருள் போலே யாகும் கொல் காலன் என்னும்-கண்ட கனாவி கவர்வதுவே மெய் -திருவரங்கத் தந்தாதி –
அதன் பரப்பினைக் கண்டவாறே அதற்கு ஒரு முடிவு இல்லை என்னும்படி யாயிற்று இருப்பது
அப்படிக் கலந்தவன் அன்றோ பிரிந்தானும்
கனவு என்னும் இந்திர ஞாலம் என்றும் முடிவு இல்லாத கலவியை சொல்லக் கடவது-
இதுவும் உடனே காண ஒண்ணாததாய் இருக்குமே-
ஆங்கே
அந்த நிலையில்
அகம் உயிர்
உயிர் போன்ற மனம்
அகம் அகம் தோறும்
மனத்தில் உண்டான இடம் தோறும்
முன்பு உண்டான புனர்ச்சியாலும் பிரிவாலும் மனம் புடைபட்டே அன்றே இருப்பது
புணர்ச்சியும் பிரிவும் இடத்தை உண்டாக்கும்-அந்த இடம் உள்ள இடம் எங்கும் ஆற்றாமை புகுந்தது-

ஆவியின் பரம் அல்ல வேட்கை –
அணு அளவிதனா உயிர் பொருளின் அளவன்று காதல் –
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -இரண்டாம் திருவந்தாதி -100-என்றாரே அவரும்
உயிரின் அளவன்று ஆயிற்றுக் காதல் –

அந்தோ –
இன்ப நிலையும் துன்ப நிலையும்-அவை இரண்டும் இன்றிக்கே இருக்கிற நிலையும் -என்று-
ஆத்மாவுக்கு மூன்று நிலைகளும் உண்டே அன்றோ-
அவற்றில் இன்ப துன்பங்கள் இல்லாத நிலையில் தான் நிற்கப் பெற்றதோ
அந்தோ
இதற்கு உபதேசம் கொண்டு அறிய வேண்டுவதே-
கலக்கிற போது இருவரும் வேண்டி பிரிவில் வந்த ஆற்றாமைக்கு நான் சொல்ல வேண்டும்படி ஆவதே -என்றது
கலவிக்கு இருவராய்-ஆற்றாமை ஒரு தலையில் ஆவதே -என்கிறாள் -என்றபடி –
ஆனால் செய்ய வேண்டுவது என் -என்னில்

நின் பசு நிரை மேக்கப் போக்கு வீவ –
அது தான் தவிர வேண்டுவது என் -என்னில் மிக மிக இனி உன்னை பிரிவை ஆம் ஆல் –
மேன்மேல் என உன்னுடைய பிரிவு உண்டாம் –
பிரிவை என்பதில்-ஐகாரம் அசை நிலை -செய்யுட்பாடு-
பிரிவு உண்டாம்படி வருகிற பசு நிரை மேக்கப் போக்கு வீவ-
பசு வந்தன -என்னுமாறு போலே-போக்குகள் தவிரப் படுவானவாக -என்றபடி –போக்கு ஏக வசனம் என்பதற்கு நிதானம் —
இனி வீவ –
இதற்க்கு முன்புள்ள காலம் எல்லாம் பிரிந்து போந்தாயே யாகிலும்
இனி மேல் உள்ள காலம் எல்லாம் தவிர வேண்டும்-

—————————————————————————————-

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3-

தர்ச நீயமான உன் திரு மேனி காணாமல் கிலேசிக்கும்- எங்கள் தனிமை -முடியட்டும் –தனிமை தொலையட்டும் -அன்றிக்கே -தனிமையே மரணம் –
வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு-ஸூ தர்ம அனுஷ்டானம் -போகும் -தவிராமல் -வீதல் ஒழித்தல்-
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்-விரக விதை நெடு மூச்சு -சூடாக்கி ஆத்மா எரிகிறதே -பரி தபியா நிற்க
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்-இந்த அவஸ்தையில் யாரும் துணை இல்லை
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்-நான் இருந்து உனது திருமேனியைக் காண மாட்டாமல் -ஆசா பந்தத்தால் இருக்க -இருந்து முடியா நின்று
-தர்ச நீயமான உன் வடிவை நடை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்–நீ அகன்ற அந்த பகல் மட்டும் போகாமல் இருக்க -ஆயிரம் கல்ப காலம் தானே
-பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இருந்தால் பகல் போகாதே –
கிளம்பு போவாயோ என்று நினைத்து பகல் போகாது என்கிறாள் இவள்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா-தன்னில் தன் சண்டை போட்டு கயல் போன்ற -நீ கொண்டாட கண்கள் இரண்டும் –
நீர் நீரே தணித்தாலும் நீர் நிற்கிறது இல்லை
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்-நீ பிறந்த குலத்தில் கோபிகையாக பிறந்து
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே-சேஷ பூதை-அடிமையாக இருக்கும் எங்கள் உடைய தனி இருப்பு ஒழியட்டும் -தனிமை
ஸ்வ பாவம் என்பதால் அதன் முடிவு தங்கள் முடிவு என்கிறாள் -கூடி இருந்தால் வாழ்ச்சி பிரிந்தால் வீழ்ச்சி –
ஒரு தலைக்கு காமம் தனிமை என்றுமாம் –

நீ விரும்பாது இருக்க-நாங்கள் விரும்புகிற ஒருதலைக் காமம்-நசிக்க வேண்டும் –என்கிறாள்-

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு –
நின் பசு நிரை மேக்கப் போக்கு நிமித்தமாக நான் முடிவன் –
அது எனக்கு தர்மம் அன்றோ -என்று இராதே-உனக்கு ஒரு பெண் கொலையாய் பலிக்கக் காண் புகுகிறது –

இப்போது முடியும்படி வந்தது என் -என்னில் –
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால் –
என்னைப் பார்க்க மாட்டாயோ-உன்னுடைய போக்குக் காரணமாக நெடு மூச்சு எறிந்து-
அதுவே காரணமாக உலர்ந்த என்னுடைய இதயமானது-பிரிவாகிற நெருப்பு பற்றி எரியா நின்றது –
இதிலே நீரைச் சொரிய வல்லையே -என்கிறாள் –
உன்னைப் போலே என்று இராதே கொள்ளாய் அல்லாதாரையும் என்பாள் -எனது ஆவி -என்கிறாள் –

யாவரும் துணை இல்லை-
துணையான நீ தானே போனாய்-நீ போனால் துணையான தோழி மார் தாமே இல்லை –
குயில் மயில் -தொடக்கமானவை தாமே -ஊர்ப் பகை ஆயிற்று –

யான் இருந்து –
நீ போனால் படுவற்றைத் தான் -பிரிந்த அச் சணத்திலே முடிதல் -படப் பெற்றேனோ
எல்லாம் பட்டும் நூறே பிராயமாய் இருந்தது
இன்னும் ஒரு கால் காணலாம் என்னும் நசை முடிய ஒட்டாதே அன்றோ –
பிரிந்த விஷயம் தான் முடியவும் ஒட்டாது-தரித்து இருக்கவும் ஒட்டாது-அர்ஜுனன் பின்பு இருந்து எளிவரவு பட்டால் போலே

உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் –
இருந்தார் அனுபவிக்கும் அனுபவத்தைத் தான் அனுபவிக்கப் பெற்றேனோ-
ஏழையர் ஆவி -தேட்டமாய் இருக்கிறது காணும் இப்போது இவளுக்கு –
உன் –
உன்னைக் கண்ணாடிப் புறத்திலே நீ தான் கண்டு அறுதியே-கண்டாயாகில்
நம்மைப் பிரிந்தவர்கள் பிழையார்கல் என்று இருக்க வேண்டாவோ-
ஸ்வரூபத்தில் ஆதல் குணத்தில் ஆதல் இழியுமவன் அல்லள்-
மேனியை -என்கிறாள்-காதலி உடம்பினை அன்றோ ஆசைப் படுவாள் –
ஆட்டம் காணேன்-
அவ்வடிவோடே என் முன்னே சஞ்சரிக்க காணப் பெறுகின்றிலேன் –
இவை எல்லாம் ஒரு பகலுக்கே என்றான் –போவது அன்று ஒரு பகல் –
உன்னைப் போலே என்று இராதே கொள்ளை எங்களையும்-நீ பெற நின்றாள் நாழிகை முப்பது சென்றாலும்-
மலையாளர் வளைப்பு போலே -ஓரடி பேராது ஆயிற்று –அது பகலின் தன்மை அன்று –
நீ அகன்றால்-உன் தன்மையால் —
பகலின் தன்மை யாகில் கூட இருக்கும் போதும் போகாது ஒழிய வேண்டும் அன்றோ –சேர்ந்து இருக்கும் பொழுது பகல் ஒரு கணமாக கழிகிறதே –
கூட இருக்கும் போது இரவு காண ஒண்ணாத வாறு போலே ஆயிற்று -நீ அகன்றால் பகல் போகாத படி –
அவன் கூட இருக்கும் போது இரவு காண ஒண்ணாதே-
நாரணனைக் கண்டேன் பகல் கண்டேன் -இரண்டாம் திருவந்தாதி -81-
போவது அன்று ஒரு பகல் -என்று இது தானும் சொல்ல மாட்டாதே காணும் அவன் தான் இருக்கிறது-
கலவி செல்லா நிற்கச் செய்தே பிரிவினை நினைக்கை யாவது என் என்பதே அன்றோ அவன் நினைவு-
பிரியேன் -என்ன வல்லன் என்றானே பண்டே –பேதை நின்னை பிரியேன் என்று அகன்றான் -பெரிய திருமொழி -9-3-3-
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா-
உன் போக்கினை நினைத்து பாய்கிற கண்ண நீர் என்னால் தகையப் போகிறது இல்லை –
உன்னைத் தகையிலும் நீரைத் தகைக்க போகிறது இல்லை என்பாள் -நீரும் நில்லா -என்கிறாள் –
பொருகிற கயல் போலே ஆயிற்று பிரிவினை நினைத்து-தடுமாறுகிறபடி-
அதற்குச் செய்ய வேண்டுகிறது என் என்ன –
சாவது -இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே-
நீ போகிலும் போ-இருக்கிலும் இரு-இத் தனிமை நசிப்பது-
இவனுக்கு நான் நூறு பிள்ளை பெற வேண்டும் -என்ற சாவித்ரியை போலே சொல்லுகிறாள் –
அன்றிக்கே-தனிமை தானே சாவது-எங்களுக்கு தனிமை என்றும் சாதல் என்றும் இரண்டு இல்லை காண்-
தனிமை தானே சாக்காடு -என்றுமாம்
நின்னலால் இலேன் -2-3-7- என்னுமவர் அன்றோ-இறப்பதற்கே எண்ணாது-திரு நெடும் தாண்டகம் -1- என்றாரே அவரும்
அன்றிக்கே-தனிமை சாவது-இத்தனிமை சாலப் பொல்லாதது -என்னவுமாம்
இவ் ஒருதலைக் காமம் போவது-கைக் கிளைத் தலைவி பொறை அழிந்தால்-எல்லாம் சொல்லப் பெறுவள் அன்றே-

———————————————————————————–

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4-

ஆஸ்ரித ரக்ஷண ஸ்வ பாவமான -நீ -ரக்ஷகைய -ஏக தேசமான எங்களை போய்ட்டு -உன்னுடைய கிருத்ரிம யுக்திகளை நினைத்து வெந்து போகிறோம்
தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்-உனக்கு ரஷ்ய வர்க்கம் -அடிமைப் பட்ட எங்கள் உடைய தனிமை -பிரிந்தார் துயரமும் நினைக்காமல்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி-தொழுவினில் இருக்கும் பசுக்களையே விரும்பி -எங்கள் ஆற்றாமை நினைக்காமல்
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி-துயரமும் நினைகிலை கோவிந்தா நின்-கோக்களை –
எங்களை அநாதரித்து -இட்டுப் பொகட்டு-ஏவகாரம் -வெள்ளை பறவை இன்றும் அங்கும் -கோவிந்த பட்டாபிஷேகம் இந்திரன் பண்ணி –
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்-பரிபக்குவமாய் நல்ல ரசத்தின் வெள்ளம் ரசகனம் -பொய்யாக பேசின யுக்திகள் –
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு-உள்ளே புகுந்து -அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்-நன்றாக வர்ணித்து –
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்-தாழ்ந்த யுக்திகள் -உன்னை விட்டோ போவேன் போலே

இவன் போக்கினை நினைத்து நோவு படப் புக்கவாறே –
உன்னைப் பிரிகைக்கு காரணம் உண்டோ -என்று-இப்புடையிலே தாழ்வோடு சில வார்த்தைகளைச் சொல்ல –
இவை அன்றோ என்னை அழிக்கின்றன –என்கிறாள் –

தொழுத்தையோம் தனிமையும் –
ஐந்து லஷம் குடியில் பெண்களும் கூடிப் படுகிற தனிமை அன்றோ –
தொழுத்தையும் -என்றும்-அடிச்சியோம் -என்றும்-தாங்கள் தோற்ற தோல்வி தோன்றச் சொல்லுகிறார்கள் –

துணை புரிந்தார் துயரமும் நினைகிலை-
துணை புரிந்தார் -என்றது-உன்னை பிரிந்தார் -என்றபடி –
துணை என்றால் இருவர் இடத்தில் இல்லாததாக அன்றோ இருப்பது -என்று பணிப்பர் ஆச்சான் –
இவர்களும் அவனுக்கு துணையாய்-அவர்களும் இவனுக்கு துணையாய் -அன்றோ இருப்பது –
துணையாக ஒரு தலையில் நிலையாய் உள்ளதாயிற்று –துணையாவான் அவன் ஒருவனுமே ஆயிற்று-
அல்லாதார் அடங்கலும் -கழுத்துக் கட்டியாய் யாயிற்று இருப்பது -கழுத்திலே கட்டப் பட்ட இலிங்கம் –
வன் துணை -பெரிய திருமொழி -8-7-6- என்னக் கடவது இறே

தொழுத்தையும் தனிமையும்-
தொழுத்தையோம் தனிமையும் நினை கின்றிலை-
துணை பிரிந்தார் துயரமும் நினை கின்றிலை –பிரிகின்றோம் நாங்கள் என்றும்-
உன்னை என்றும்-பார்கின்றிலை –

கோவிந்தா –
பசுக்களையும் ஆயர்களையும் காப்பதற்கு அன்றோ கோவிந்த அபிஷேகம் பண்ணிற்று-
பிறவிப்பாடும் பின் தொடரும் அன்றோ -என்றது-
தன் மனைவி துன்புறுமவளாக இருந்தாலும்-
பசுக்களை விரும்பி அவற்றுக்கு புல்லும் நீரும் உள்ள இடம் தேடும் இத்தனை அன்றோ -என்றபடி –

நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி-
ஓர் இடத்தே வளைத்து வைத்த பசுக்களையோ காக்கல் ஆவது –
உன் கைக்குள் அகப்பாட்டாரை காக்கல் ஆகாதோ –
இவர்களை அணைத்து விட்டுப் பின்னை அன்றோ பசு மேய்க்கப் போவது –
பசுக்களையே -என்ற ஏகாரத்தால் –
நீ போனால் பிரிவுக்கு ஆற்றாமை பட அறியாதாரையேயோ நீ ஆதரிப்பது -என்பதனை தெரிவித்த படி
விரும்பி –
இவர்களை அணைத்து கட்டிக் கொடு கிடந்தாலும்-கண்ணி -என்பதாய் -கன்றுகளை விட்டுக் கொடு போகா நின்றது -என்பதாய் –
வாய் வெருவுவது அவற்றையே ஆயிற்று –இங்கு இருக்கும் போது நெஞ்சு அங்கே ஆயிற்று –
இங்கு உள்ளது பொய் ஆலிங்கனமே –
பிள்ளை அமுதனார்-ஒரு பசுவின் காலிலே முள் பாய்ந்தால்-ஆயன் தலை காண் சீய்க்கொள்வது -என்பாராம்-
சரீரத்தில் ஓன்று வந்தால் இன்ப துன்பங்கள் அனுபவிப்பது ஆத்மா அன்றோ –அந்தராத்மா இவன் அன்றோ –
எம்மைத் துறந்து –
அவற்றை விரும்ப விரும்ப-தங்களை துறந்தான் என்று இருக்கிறார்கள் –
பசுப்பால் பால் மனம் சுளிப்ப பராங்குச நாயகி தோள் கை விட்டு அன்றோ இவன் இருப்பது
எம்மை இட்டு
அசேதன பொருள்களை பொகடுமா போலே எங்களைப் பொகட்டு-என்றது
இவர்கள் இருக்கும் பொழுது அவற்றை நினைப்பான்-
அவற்றின் பின்னே போனால் இவர்களை நினையான் -என்ற படி
அவற்றை மேய்க்கப் போதி –
அவற்றைப் பாதுகாப்பதற்கு போகக் கடவை-அவற்றைப் பாது காப்பதில் வருத்தம் உண்டு-
எங்களை பாது காப்பதற்கு முன் நிற்றலே அமையும்
இடற என் பிள்ளையைப் போக்கினேன் -பெரியாழ்வார் திருமொழி -3-2-6- என்றும்
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் -பெரியாழ்வார் திருமொழி -3-2–2-என்றும்
வயிறு பிடிக்க வேண்டும் படியாய் இருக்கும் அது-எங்களைப் பாதுகாப்பதில் வருத்தம் வேண்டா-கூட இருக்கவே அமையும்
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்-பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்-பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்-
நான் போகையாவது என் –சர்வ வியாபகம் எப்படி போவது -உள்ளுவார் உள்ளத்தில் உடன் இருந்து அறிபவன் –
போனால் தான் உங்களை மறப்பது உண்டோ-என் ஆற்றாமை உங்களுக்கு உண்டோ-
நான் தாய் தந்தையர் கட்கு பர தந்த்ரப் பட்டவன் ஆகையாலே-
அவர்கள் சொல்லிற்று செய்ய வேண்டி இருத்தலின் போகிறேன் இத்தனை-
போனாலும் மனம் இங்கே அன்றோ -என்பன போன்ற-சில-பணி மொழி- தண்ணிய சொற்களைச் சொன்னான்-
இவை தான் எங்களை மறக்க ஒண்ணாதபடி பண்ணுகின்றன -என்கிறாள்-
பக்குவமாய் மிக சிறந்த அமுதத்தின் உடைய இனிய சாற்று வெள்ளம் போலே-
இனிமையாம்படி சொல்லுகிற வார்த்தைகள் -என்னுதல்
அன்றியிலே-கலவியில் ஒரு வகையை சொல்லிற்றாகவுமாம் -என்றது வாய் அமுதம் -என்றபடி
வாய் அமிர்தம் தந்து என்னை தளிர்ப்பிக்கின்றான் -பெரியாழ்வார் திரு மொழி -1-7-4-என்னக் கடவது அன்றோ –

பாவியேன் –
அமுதமே நஞ்சாம்படியான பாபத்தை பண்ணினேன்-

கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால்
எஞ்சினான் நராதிபதி ஈதொரு வியப்போ
அஞ்சு தரு தீ வினையினால் அமுதும் நஞ்சாம்
அஞ்சும் அமுதாம் தாம் உரிய நல் வினையின் மாதோ -வில்லி பாத்திரம் –
பிரிவினை நினைத்து பிரியேன் -என்னும் இது நஞ்சுக்கு சமம் அன்றோ –

மனம் அகம் தோறும் உள் புக்கு அழுத்த நின் செம் கனி வாயின்
மனத்தின் இடம் தோறும்-மறக்க ஒண்ணாத படி-அழுந்தப் பண்ண உன் சிவந்த கனி போலே இருக்கிற வாயினுடைய

கள்வம் பணி மொழி –
இச் சாற்று வெள்ளத்துக்கு ஊற்றுவாய் காணும்-எழுதிக் கொள்கிற தாழ்ந்த பேச்சுக்கள்-
பிரிவினை நினைத்து சொல்லுகிற வார்த்தை ஆகையாலே-
மனத்தினை அழிக்கக் கூடியதாய் அன்றோ இருப்பது –நினைவு ஒன்றும் செலவு ஒன்றுமாய் இருக்கை

நினை தொறும் –
இவை தாரகம் ஆகுமோ -என்னும் நினைவாலே நினைக்கப் புகுமே-அது துன்புறுத்துவது ஆகுமே-
பின்னையும் விட மாட்டாளே –இங்கனே உருவச் செல்லும் இத்தனை –

ஆவி வேம் ஆல் –
தனக்கு பற்றுக் கோடான உயிர் ஆனது வேவா நின்றது-நெருப்பு -சேர்ந்தாரை கொல்லியாக அன்றோ இருப்பது-
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்-ஏமப் புணையைச் சுடும்

பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளமான நின்-செங்கனி வாயின் கள்வம் பணி மொழி பாவியேன் மனம் அகம் தோறும்
உள் புக்கு அழுத்த -நீ மறக்க ஒண்ணாதபடி அழுந்தப் பண்ண-அவற்றை நினைக்க நினைக்க ஆவி வேவா நின்றது-

————————————————————————————————-

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-

விஸ்லேஷத்தால் வாடைக் காற்று நலிய -பகல் காற்று -தென்றல் காற்று -மல்லிகை மாலை புஷ்ப்பம் -கால மயக்கு –
ஆர்த்தி தீரும் படி ஸம்ஸலேஷித்து ஆசுவாசம் பண்ண வேண்டும்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்-ஆச்வாஸ யுக்திகள் -நினைக்கும் பொழுதும் நெஞ்சு வேவா நின்றதே –
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா-மேய்க்க -போயிட்ட கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்-காட்டிலே அகப்பட்டு விகஸித்தமான பிணி கட்டு -மது உடைய மல்லிகை -வாடை -வாசனை முகந்து தூவ
பெரு மத மாலையும் வந்தின்றாலோ-வந்து என்றாலோ பாட பேதம் -செருக்குடன் மாலைப் பொழுதும் வர -மத்த கஜம் போலே
-வந்தது அத்தனை -இதில் கையில் அகப்படாத பொழுது
மணி மிகு மார்வினின் முல்லைப் போது-கௌஸ்துப ரத்னம் -அருகில் முல்லை மாலை -வாசனை
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து-பரிஷ் வங்கித்து -நிரதிசய வாக் அமிருதம் கொடுத்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ-மேலும் அழகிய திருக் கையை தலையில் வைத்து -மூன்று கிரியைகள் பிராத்தனை –
அலங்கார உத்தரமான தர்ச நீயமான திருக் கையை –
பிரேமா பாவத்தால் அடிச்சியாம் -சேஷத்வம் மாறாதே -நம்முடன் அணைப்பாய் என்பதை மறைத்து அருளிச் செய்கிறார் -அக்ராமமான நகர பேச்சு போலே –
அடிச்சியோம் தலை மிசை யணியாய்–இவற்றைக் கொடுத்து வேதனை தவிர வேண்டும் –
சம்ச்லேஷ ஸூ சகம் -ஆற்றாமை சொல்லி காட்ட வேண்டி உள்ளதே

நான் உன் முன்னம் இருந்து கொண்டு இருக்க-நீ இப்படி படுகிறது என் என்ன –
நீ பசு மேய்க்கக் கடவனான பின்பு நீயும் போனாய் –
நீ போனால் நலியக் கடவ மாலைக் காலம் முதலிய பொருள்களால்-
நலிவுபடுகிற என்னை நலிவு படா வண்ணம்-செய்து அருள வேண்டும் -என்கிறார்

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் –
பிரிவினை நினைத்து -பிரியேன் -என்று சொல்லுகிற உன் வார்த்தை போலே-
உன்னை பிரியாமைக்காக சொல்லுகிற வார்த்தை அன்று —
உன்னது கள்வப் பணி மொழி யாகையாலே பொய் –
இது அனுபவத்துக்கு பாசுரம் இட்டு சொல்லுகையாலே மெய் –நான் போனேனோ -என்ன —

பகல் நிரை மேய்க்கிய போய –
பகல் எல்லாம் பசு மேய்க்கப் போனாய் –

கண்ணா –
கண்ணா என்று விளித்து -அவன் தன்னையே-நீ போனாய் என்கிறாள் அன்றோ –
மேய்க்கிய -மேய்க்க –
நேராக கண்ணா என்று அவனை விளித்து-நீ போனாய் – -அப்படி தெளிவில்லாமல் தவிக்கும் நிலை அன்றோ இவளுக்கு –

பிணி யவிழ் மல்லிகை வாடை தூவப் –
நீ போனால் துன்புறுத்தக் கூடியதனவான-
மல்லிகை கமழ் தென்றல் தொடக்கமானவை மறுவல் இடுகையாலே நீ சென்றமை நிச்சயம் -என்கிறாள்
கட்டவிழ்கின்ற மல்லிகை உடைய மணத்தை வாடையானது தூவா நின்றது –
இராவணன் துறவி வேடத்தைக் கொண்டு தோற்றினால் போலே-
வாடையானது குளிர் காற்றாய் வந்து நலியா நின்றது –வெக்காயம் தட்டாமல் கடக்க நின்று வீசா நின்றது –
பத்ம கேசா சம்ஸ்ருஷ்ட வ்ருஷாந்தர வினிஸ் ஸ்ருத-நிச்வாச இவ சீதாயா வாதி வாயு மநோ ஹர -கிஷ்கிந்தா -1-17-
தாமரைப் பூக்களின் தாதுக்களின் சேர்ந்ததும்-மரங்களின் நடுவில் இருந்து புறப்பட்டதும்-
சீதையின் மூச்சுக் காற்றைப் போன்று மனத்தை கவர்வதுமான காற்று வீசுகிறது -என்கிறபடியே –

பெரு மத மாலையும் வந்தின்றாலோ –
மதம் பிடித்த யானையானது முன்னே தலைப்பறை கொட்ட-வருமாறு போலே
வாடையானது முன் நடக்க விட்டுக் கொண்டாயிற்று மாலை வருகிறது –
இவளை மதித்த படியால் கூட்டுப் படையாய் வாரா நின்றது –
வந்தன்றாலோ-
வந்தது காண் –உடம்பிலே பட்டு ஒழிந்தது காண்-
பெரிய கிளர்த்தியை உடைய மாலையானது வரும் என்று அஞ்சுகின்றது அன்று -வந்தது
பகதத்தன் விட்ட வேலுக்கு அருச்சுனனை பின்னே இட்டு
உன்மார்பிலே ஏற்றால் போலே நடுவே புகுந்து கட்டிக் கொள்ள வேண்டும் காண் –
ஆனால் செய்ய அடுப்பது என் என்ன –

மணி மிகு மார்வினின் –
ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெறும்படியான மார்பு -என்னுதல்-
திரு மார்பு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்தின் புகரே யாம்படி இருக்கும் -என்னுதல்-
கலவியிலும் கழற்ற ஒண்ணாதபடி அன்றோ கௌஸ்துபம் இருப்பது –
எல்லை இல்லாத இன்பத்தை கொடுக்க கூடியது அன்றோ -என்னக் கடவது இறே –
ச்வோசித விவித விசித்ரானந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய-நிரதிசய சுகந்த நிரதிசய சுகச்பர்ச கௌச்துப -சரணாகதி கத்யம்-5-
இவளுடைய பெண்மைக்கு முலை போலே ஆயிற்று-அவனுடைய ஆண்மைக்கு ஸ்ரீ கௌஸ்துபம்-
புருஷோத்தமன் ஆகும் தன்மைக்கு இலக்கணம் அன்றோ –

முல்லைப் போது என் வன முலை கமழ்வித்து-
அம்மார்வில் முல்லைப் பூவாலே-என்னுடைய அழகிய முலையை மணம் உடையது ஆக்கி –
ஸ்ரீ கௌஸ்துபம் உடன் தோள் மாலை உடன் வாசி இன்றி-இன்பத்துக்கு கருவிகளாய் இருக்கின்றன ஆயிற்று –
தோளில் முல்லை மாலையின் மணத்தை என் முலைக்கு ஆக்க வேண்டும் என்கையாலே-மறை பொருளாக கல்வியைக் கூறியபடி –
குளித்து பூச்சூட இருப்பாரைப் போலே ஆயிற்று இம் முலைகள் –
இவை பிரமச்சாரி முலைகள் ஆகாமே-இம் மாலையின் மணத் தாலே இவை மணம் உடையவையாய்ச் செய்வாய் –
அம்மாலையின் மணம் இங்கும்-கோது அங்கும் ஆகப் பண்ண வேண்டும்-
அம்மாலையின் மணம் முலையில் ஆம்போது-கலவியை ஒழியக்கூடாதோ-
கிம் முகம் வனமாலா சன்க்ரமச்ய-வனமாலையின் சேர்க்கைக்கு என்ன வழி -என்னுமாறு போலே –
வாயமுதம் தந்து –
புணர்ச்சி இன்பம் தலைக்கு மேலே மிக்கவாறே தரித்து இருப்பதற்காக சில பேச்சுக்கள் உண்டே பேசுவது-அப்பேச்சு ஆதல் –
அன்றிக்கே-வாய் அமுதத்தைச் சொல்லவுமாம்–சொற்கள் என்றே கூறிப் போமது –

அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய் –
உன் போக்கினை நினைக்க நா நீர் வருகிறது இல்லை –அதற்கு மாறாக உன் கையை தலை மேலே வைக்க வல்லையே
நா நீர் வருகைக்கு இவர்களுடைய முந்தரி கைப் பழம் இருக்கிறபடி –ஆபரணங்கள் மிகுந்தவையாய் -அவைதாம் மிகை யாம்படியாய்-
ராஜ குமாரர்க்கு நாக்கு வாற்றாமைக்கு பச்சைக் கற்பூரம் போலே- த்வய உச்சாரணம் நம் பூர்வர்களுக்கு-
ஆயதாஸ்த ஸூ வ்ருத்தாஸ்ச பாஹவ பரிகோபமா-சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் நவிபூஷிதா -கிஷ்கிந்தா -3-14-
எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கத் தகுந்தனவான -என்கிறபடியே-தனக்குத் தானே ஆபரணம் என்கிற கையை-
பசு மேய்க்கப் போனால் வரும் அளவும் எனக்குத் தாரகமாக-உன் கையில் ஆபரணத்தைத் தா-
உன் கையில் ஆபரணத்தை தா-என்று அவர்களுக்கு -அத்யந்த பரதந்த்ரனாய் -அற்றுக் காட்டி வாங்கி இட்டு வைக்குமே –
அன்றிக்கே-பசு மேய்க்கப் போவதற்காக தான் ஒப்பித்த படியைச் சொன்னாள் ஆகவுமாம்-
அதனைச் செய்து அவன் போகப் புக்கவாறே வருந்துகிறாள் அன்றோ-
தாமரைக் கை
ஆபரணங்கள் மிகையாகும்படியான கை-சேர்ந்து குளிர்ந்த தண்ணீரை விடாயருக்கு வாராய் என்று சொல்ல வேண்டுவதே உனக்கு –
அடிச்சியோம் –
அழகுக்கு தோற்ற தோல்வியைச் சொல்லுகிறாள்-
தலை மிசை நீ அணியாய் –
ஆபரணத்துக்கு அந்தக் கை போலே ஆயிற்று-இவள் தலைக்கு அந்தக் கை-
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2-எனபது-
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் -என்பதே-காலைக் கையைப் பிடித்து கார்யம் முற்றுவிக்கப் பார்க்கிறார்கள் –
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீயம் மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-என்றே அன்றோ இவர்கள் இருப்பது-
இந்த நிர்பந்தங்கள் எல்லாம் அறிவார் ஆர்-வேண்டுமாகில் எடுத்துக் கொள்வாய் -என்றான் –
நீ கொள்வாய் –
காலன் கொண்டு மோதிரம் இடுவாரைப் போலே என் பேற்றுக்கு நான் முயற்சி செய்யுமவளோ-
நீயே மேல் விழுந்து தரக் கொள்ளுமவள் அன்றோ நான் –ஆற்றாமை மிக்கது என்னா அல் வழக்கு செய்யோம் காண் –
நீ செய்யனவற்றை நாங்கள் செய்யவோ –என்றும் அத்தலையாலே பெற இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் தாம் –
உன் பேற்றுக்கு நீ தானே பிரயத்தனம் பண்ண வேணும் -ப்ரேமையை கை விட்டது நீ செய்த அல்வழக்கு -ராமன் விட்டாலும் ராமானுஜர் விட மாட்டாரே –

————————————————————————————————–

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-

விஸ்லேஷம் கிலேசம் -ஆர்த்தி தீரும் படி ஆகாத ஸ்வ பாவம் -திருவடிகளை
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்-அநந்யார்ஹய்ஹை -தலை மேல் வைத்து அருளாய் –
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்-திருவடிக்கு -அளவிட முடியாத -அலங்காரமான திருவடிகளை –
அபரிச்சசத்யமான கண்கள் என்றுமாம் –
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்-நீ போகும் காரியத்துக்கு நடுவில்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்-பஞ்ச லக்ஷம் பெண்கள் உள்ளார் -உன் பரப்பை சுருக்க புகுகிறோமோ –
அது நிற்க -அந்த பேச்சு வேண்டாம் -எங்கள் ஸ்த்ரீத்வம் ஆற்றி அடக்க முடியாதே -உன்னைப் போலே வலியார் அல்லவே அபலைகள்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா-மா வடு போலே பிளந்த -சிலாகிக்கும் கண்கள் -நீரும்
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே-நெஞ்சும் நில்லா -அதனால்
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு-வெடிப்பு -நாசம் -ஏற்படுத்தும்
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே-வேவா நின்றதே எங்கள் ஆத்மா –

சென்ற சென்ற இடம் எல்லாம் காதலிமார் பலர் உளர் –உனக்கு ஒரு குறை இல்லை-
நாங்கள் உன்னைப் பிரிந்து தரிக்க மாட்டு கிற்றிலோம்-ஆதலால் உன் செலவினை எங்களால் பொறுக்க முடியாது –என்கிறாள்-

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்-
தோற்றாரை ஈரக் கையால் தடவ வேண்டாவோ –

ஆழி அம் கண்ணா –
கடல் போன்று சிரமத்தை போக்கிகிற-காண்பதற்கு இனிய திருக் கண்களை உடையவனே –
நீ அணியாய் -என்பதனை அடுத்து -ஆழி அம் கண்ணா –என்கையாலே-
திருக் கண்களாலே குளிர நோக்க வேண்டும் -என்பது போதரும் –உங்கள் கைகளால் தீண்டுதல் வேண்டும் என்று அன்றோ நான் இருப்பது –
–எனக்கு போக்கு உண்டோ –போனாலும் உங்களை ஒழிய புறம்பு விஷயம் தான் உண்டோ -என்ன-
ஓம் காண் -இது நிற்க –
உன் கோலப் பாதம் பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும் பலர்-
உன் திருவடிகளைப் பற்றி இருப்பார் பலர் –உனக்கு சென்ற இடம் எங்கும் பெரிய திருநாள் அன்றோ –
நடுவு-
போகும் கார்யம் ஒழிய நடுவே-
அரிவையர் –
தங்கள் பருவத்தாலே துவக்க வல்லவர் பலர் -ஒருவர் இருவரா –பெண்கள் பதினாறாம் ஆயிரவர் –
ஷோடசஸ்திரீ சஹஸ்ராணீ சதமேகம் ததோதிகம்-தாவந்தி சக்ரே ரூபாணி பகவான் தேவகீ ஸூ தா – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-18-என்கிறபடியே –
அது நிற்க –
அது கிடக்க-யானைக் கூட்டத்துக்கு கதவிடப் புகுகிறோமோ-

எம் பெண்மை ஆற்றோம்-
நாங்கள் பெண் தன்மையைக் கொண்டு ஆற்ற மாட்டு கிற்றிலோம் -என்றது
நீ சென்றால் நாங்கள் பிழைக்க மாட்டோம் -என்றபடி –
பெண்மை ஸ்வரூபம் ஆனால் வரும் அளவும் வருந்தி தரிக்க வேண்டாவோ -என்ன-

வடித்தடம் கண் இணை நீரும் நில்லா –
எங்களைப் பார்க்க மாட்டாயோ-
பிழைத்து இருக்கின்றவர்கள் உடைய இலக்கணமுண்டோ எங்கள் உடம்பில்-
கூர்த்து பெருத்து இருந்துள்ள கண்கள் நீர் மாறுகின்றன இல்லை-
ஒரு நோக்கும் ஓர் ஆளும் நேராம் படி இது கூர்மையே-
இனிமையில் பரப்பு அனுபவிக்கின்றவர்கள் உடைய அளவு அன்றிக்கே இருக்கும்படியே என்று-
நீ வாய் வெருவும் கண்கள் படுகிறபடி பாராய்-நீ நிற்கிலும் நீர் நிற்கிறது இல்லை-
உன்னைத் தகையிலும் நீரைத் தகைக்க போகிறதில்லை -என்பாள் -நீரும் நில்லா -என்கிறாள் –
நில்லாமை யாவது என் வருந்தி தகைய வேண்டாவோ என்ன-
இது நிற்கும் போது ஊற்றினை தகைய வேண்டுமே என்கிறாள்-
ஆயின் ஊற்றான நெஞ்சினைத் தகையும் இத்தனை அன்றோ-என்ன –

மனமும் நில்லா –
தைரியக் குறைவு உண்டாகி நாங்கள் படுகிற பாடு பாராயோ-
வருந்தி நெஞ்சினை பிடித்து தரிக்க வேண்டாவோ என்ன –

எமக்கு –
நீயாக வேண்டுமே அதற்கு -பிரிகைக்கும் -பிரிவில் நெஞ்சு இளையாமைக்கும் –
யாமுடைய ஆயன் தன் மனம் கல் அன்றோ -9-9-5-

அது தன்னாலே –
இப்படி மனம் நிலை கெடுவதனாலே –

வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு –
நீ பசு மேய்க்கப் போகிற இது வெடிப்பு-வெடிப்பாவது என் என்ன —வெடிப்பு -அழிவு-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே –
எங்களுடைய உயிர் ஆனது நெருப்பின் அருகில் இருக்கும்-மெழுகிலும் காட்டிலும்-உருகி வெந்து போகா நின்றது-

——————————————————————————————-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-

தர்ச நீயமான நீல ரத்னம் போலே முடிந்து ஆளலாம் படி சுலபம் -பசு மேய்க்கப் போனால் அங்கே அசுரர்கள் வந்தால்
என்னாகுமோ என்று ஆத்மா பரிதபிக்க வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு-
வெள் வளை மேகலை கழன்று வீழ-வெளுத்த வலைகள் -பரிவட்டம் கழன்று
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்-அழுக்கு அற்ற -நீ விரும்பிய கண்கள் சோக அஸ்ரு பிந்து -அவசமாக -என் வசம் இல்லாமல் –
துணை முலை பயந்து என தோள்கள் வாட-உன்னால் கொண்டாடப் பட்ட முலைகள் பசலை நோய் -உபகனம் பற்றுக் கொம்பு இல்லாமல் –
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண-சிலாக்யமான -மணி முடிந்து ஆளலாம் படி -தர்ச நீயம் -அழகான –
புஷப காச திருவடிகள் -பிரிவில் தரிப்பவன் நீ தரியாத நாங்கள்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு-ஆ மகிழ்ந்து உகந்து ஆதரித்து -அவை மேய்க்க போகும் பொழுது
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–உன்னுடன் கலகத்தைக் கொண்டு -வத்ஸாசுராதிகள்
-மெழுகில் நெருப்பு பட்டால் போலே ஆவி வேவா நின்றதே

நாங்கள் நோவு பட-உன் மெல்லிய திருவடிகள் நோவ பசு மேய்க்கப் போனால்-
அங்கு அசுரர்கள் கிட்டினால்-என்னை விளையும்-என்கிறாள்-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு-
உனக்கு அன்பு இல்லாமையாலே தெரியா விட்டால்-எங்கள் உபதேசம் கொண்டு அறிந்தால் ஆகாதோ-
எமது உயிர் வேம் -என்கையாலே-உனக்கு அது இல்லை என்று தோன்றுமே அன்றோ –இந்த பாடு எல்லாம் எங்களுக்கே –

வெள் வளை மேகலை கழன்று வீழ –
பிரிவினால் உண்டாகிய மெலிவால்-வெள் வளைகளும் மேகலைகளும்-கழன்று விழும்படியாகவும்-
வெள் வளை -சங்கு வளை-யாமி -நயாமி -சங்கு தங்கு முங்கை நங்கை -பிரிவு பிரசங்கம் இல்லாத ஸ்ரீ மகா லஷ்மி –
பிறர் அறியாதபடி பல் காலும் எடுத்து இடுவது-பேணுவது ஆனாலும்-
அவை பற்றுக் கொடு இன்றி நில்லாவே-ஆகாசத்தில் தொங்காவே –அப்படி காணும் உடம்பு இளைத்தபடி –

தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்-
நாயகன் வார்த்தையால் சொன்னபடி என்-
சரீரம் தானே -தன கண்களை நாயகன் இப்படி சொன்னானோ என்னில்-
கண்களாய துணை மலர் காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல வென்று இருக்குமே -திரு விருத்தம் -67-என்றானே அன்றோ –
கண்கள் ஆகிய பரஸ்பர -ஸத்ருசம்-சிகப்பு-செங்கழு / கறுப்பு- நெய்தல் /-கூர்மை வேல் /-முஃத்யம் மீனை வென்று இருக்கும் –

தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்-
இது காறும் பார்த்து இராத ஓன்று நீ காணலாம்-இப்பொழுது தானே சந்நிஹிதனாக இருக்க நீர் -அதனால் அபூர்வம் –
போகாதே காண் -என்கிறாள் –தாமரைப் பூவிலே முத்துப் பட்டது-கண்ணான முத்தே அன்றோ –
அவனுக்கு தோழி சொல்ல செவி ஏறு கேட்டு சொல்லுகிறாள்-
ஞாலம் எய்தற்கு உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்திற்றின-திரு விருத்தம் -11-என்று -கருத்து அறிந்த படியை தான் சொன்னானே –
நேத்ர பூதம் -முத்து -சிலாக்கியமான முத்து -கண் மணி போலே -என்றவாறு
-கண்ணீர் துளி -உருகி நினைந்து -துர்லபம் தானே -பூமியை பிராபிக்க தக்கபடி –

துணை முலை பயந்து –
நீ சேர்த்தி அழகு சொல்லிக் கொண்டாடும் முலைகள் ஆனவை பசலை நிறத்தை மேற் கொண்டன-
மலராள் தனத்துள்ளான் -மூன்றாம் திருவந்தாதி -8-அவனுடைய கோயில் கட்டணம் அழிகிறது என்கிறாள் –கோயில் ஆழ்வார் -கமலா ஸ்தனம் -இருப்பிடம் தானே

என தோள்கள் வாட –
உடல் இளைத்தால் தோள் இணை பின்னம் வாடும் இத்தனை அன்றோ –
பிரயோஜனம் இல்லாதனவற்றில் நின்று பேசுகிறது என்-இதற்கு முன் அவன் இழவு சொன்னாள்-
மேல் தன் இழவு சொல்கிறாள் –

மா மணி வண்ணா –
நீல மணி போன்ற வடிவை உடையவனே-மா -கருமை-
இவ் வடிவினைக் கொண்டே நீ போகிறது-வெயில் கானல் பொறுக்குமோ இவ்வடிவு –
உன்னை நீ பிரிந்து அறியாயே –

உன் செங்கமல வண்ண மென் மலரடி நோவ –
மலர்த்தி இவைகளால் தாமரையை ஒரு போலியாக சொல்லலாய் இருக்கும் –மென்மைக்கு ஒப்பு இல்லை –

நீ போய்-
தன் காலாலே அவன் போக வேண்டும் என்று இருக்கிறாள் காணும் –
யதித்வம்பிரசிச்தோ துர்க்கம் வனமத்யவை ராகவ-அக்ர தச்தே கமீஷ்யாமி மிருந்னந்தி குச கண்டகான்-அயோத்யா -27-9-
ராமா நீ காட்டுக்கு புறப்படுவாயானால் தருப்புக் கட்டுகளையும் முட்களையும் அழித்து கொண்டு-உனக்கு முன்பே செல்வேன் -என்னுமவள் அன்றோ
போக்கு தவிரா விட்டால் பின்னை வழிக்கு கடவார் வழி திருத்தினால் போக வேண்டாவோ –வழிக்கு கடவாள் சீதா -சக தர்ம சாரிணி-
நீ போய்-
குணங்களால் மேம்பட்ட சக்கரவர்த்தி திருமகனோ வழியே சென்று வழியே வருகைக்கு-
சென்ற சென்ற இடம் எங்கும் பூசல் விளைவிக்குமவன் அன்றோ –

ஆ மகிழ்ந்து –
எங்களை வெறுத்து இருப்பது போன்று வெறுத்து இருக்கிறாய் அல்லையே பசுக்களை –

உகந்தவை மேய்க்கின்று –
அவற்றின் பக்கல் உள்ள விருப்பத்தினாலே-அவற்றை உகந்து மேயா நிற்புதி-
பசுக்கள் மேயா நின்ற இடத்தில் அவற்றின் பக்கல் நோக்கு உள்ளவனாய் இருக்கும் இடையிலே என்பார்-
மேய்க்கின்று -என்கிறார் –

உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் –
கரு முகை மாலையும் யுகாந்தத்தில் நெருப்பும் கூடினால் போல் அன்றோ –
எவன் கொல் ஆங்கே –
ஆங்கு என்னை விளையுமோ -என்றபடி-
நாம் எனக்குச் செல்லிலும் எவர் கிட்டிலும் வெற்றி நம்மது அன்றோ -என்னுமே அவன் –
மாம்வா ஹரேயு த்வத் ஹஸ்தாத் விசஸ் யுரதாபிவா-அவ்ய வச்தௌ ஹி த்ருச்யேதே யுத்தே ஜய பராஜ யௌ -சுந்தர -37-53-
போரில் வெற்றியும் தோல்வியும் நிலை இல்லாதவனாக காணப் படுகின்றன அன்றோ -என்கிறபடியே-ப்ரேமம் கண்ணை மறைக்க இப்படி பேசுகிறாள் –
அது மற்றைப்படியாகில் செய்வது என் -என்று அஞ்சா நின்றேன்-அவர்கள் கிட்டில் அங்கு என்னாய் விளையுமோ-
அதனை தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே -தீங்கு என்னாமல் -என்னாய் விளையுமோ -என்கிறாள்-

————————————————————————————-

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-

பிரபல தர விரோதி இதில் ஆரம்பம் -அடுத்த பாசுரம் விளக்கம் –
ஆகர்ஷகமான அவயவங்கள் காட்டி நீயும் உன் அபிமதைகளுமாக என் சந்நிதியில் இருக்க அமையும் –
உனது ஆனந்துக்காகத் தானே நாங்கள் -பிரமாத ஸ்தலம் போகாதே
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று-அசுரர்கள் வந்து என்ன பூசல் விளையுமா –
ஆளும் என்னார் உயிர் ஆன் பின் போகல்-கடலில் புக்கது போலே கிளேசியா நிற்கும் -கறவைகள் பின் செல்ல வேண்டாம்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து-பிராவண்யத்தால் வந்த ஈடுபாடு -அதுக்கு அனுரூபமான அபி நிவேசமும் –
கலவியும் நலியும் என் கை கழியேல்-அதுக்கு அநு ரூபமான கலந்த கலவியும்-உள் கலந்து நலியா நிற்கும் -என் வசம் இல்லாமல் போகாதே –
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்-கைகளும் பீதக வுடையும் காட்டி வசீகரங்கள் செய்யும் உன்னுடைய
தாமரை போன்ற திருக் கண்கள் திருப் பவளம் திருக் கைகள் திருப் பீதாம்பரம்
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்-தளர்த்தியை விளைவிக்கும் முக்த பருவம் -சத்ருச குலம்-
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-இவ்வளவு இருந்தும் நீ விரும்பும் கோஷ்டியில் இருக்க வேண்டுமே
-எங்களை போல் அன்றியே -அவர்கள் உடன் சஞ்சரிப்பாய் எங்கள் முகப்பே –

நீ சென்றால் தீங்கு விளையுமோ என்று அஞ்சா நின்றேன்-உன்னைப் பிரியவும் மாட்டேன்-
பசு மேய்த்தலை வ்யாஜ்யமாகக் கொண்டு-காதலிமார்களை நினைத்து போகிறாய் ஆகில்-
என் கண் வட்டத்திலே உன் காதலிமார்களோடு-நீ சஞ்சரிக்க வேண்டும்-என்கிறாள்

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆளும் என்னார் உயிர் –
நீ வெற்றியோடு மீண்டாலும் அதற்க்கு முன்னே நான் தரைப் படுவேன் –
நான் உனக்கு வேண்டாவோ -என்கிறாள் –
ஆழும் -அழுந்தும் –

அதற்கு நம்மால் செய்யலாவது என் -என்ன –
ஆன் பின் போகல் –
பசுக்களின் பின்னே போகாதே கொள்-என் வழியே போகப் பார்ப்பது-
காதலி அருகே இருக்க சந்த்யா வந்தனம் செய்யப் போக வேணும் -என்னக் கடவதோ –
பெருமாள் ஸூ ஜனமும் ரக்ஷித்து ஸூ தர்மமும் செய்தார் -ஜாதி உசித தர்மம் செய்ய பிரணயித்தவம் விட்டோ போவது –
தனக்கு உரிய தர்மத்தை செய்யப் போவது தனக்கு உரியாளை விட்டோ –
சாதிக்கு உரிய தர்மத்தை தவிரப் போமோ-வருந்தி யாயினும் தரிக்க வேண்டாவோ -என்ன-
பிரிவில் தரிக்கலாம் படியாய் நீ கலவியில் செய்த செய்கை -என்கிறாள் –

கசிகையும்-
கசிகை -சிநேகம்
வேட்கையும்-
மேன்மேல் உன்னோடு புணர்ந்த புணர்ச்சியால் உண்டான ஆசையும் –

கலவியும் –
புணர்ச்சியும் –

உள் கலந்து நலியும் –
நீ செய்யும் சிநேகமும்-கசிகை வேட்க்கை கலவி -இவ்ளதும் அவனதும் -இரண்டு நிர்வாகங்கள் –
அருகே இருக்கச் செய்தே அகல இருந்தாரைப் போலே-மேன் மேலே எனப் பண்ணும் ஆசையும்-
தலை தடுமாறாக கலப்பதான கலவியும்-நீ பெயர நின்றவாறே மனத்திலே புகுந்து நலியும் –

ஆயின் செய்ய வேண்டுவது என் என்ன –
என் கை கழியேல் –
நான் அணைத்த கைக்குள் நின்று அகலாது ஒழிய வேணும்-சாதிக்கு உரிய தர்மங்களை செய்வது என்னை முடித்தோ-
போகாது ஒழியப் போமோ –
புறம்பேயும் நமக்கு விருப்பமாய் உள்ளவர் உளராய் இராரோ –அவர்கள் உடன் கலக்க வேண்டி இராதோ -என்றான்-
இவள் மேல் சொல்லுமது கேட்கைக்காக-நமஸ் சப்தார்த்தம் அறிவாளோ என்று பார்க்க –
எங்களுக்கு அந்த நிர்பந்தம் உண்டோ-நீ கை கழியப் போகாது ஒழிகை அத்தனை அன்றோ வேண்டுவது-
நீ விரும்பி இருக்கும் அவர்களோடு என் கண் வட்டத்தே சஞ்சரிக்கப் பார் என்ன-
ஆனால் அவர்களை அழைத்து தருவார் யார் என்ன-

வாசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும்-
உனக்கு தூது செய் கண்கள்-9-9-9- உளவாக இருக்க புறம்பே பரிகரம் தேடி அழைக்க வேண்டி இருந்ததோ-
இனிப் பொருந்தோம் என்று இருப்பார் மரத்தை மாற்றி அவர்களை வசீகரித்து தரும் கண்களும்-
அந்நோக்கில் கருத்தினை வெளிப்படுத்தும் வாயும்-
அந்நோக்கிலும் முறுவலிலும் நேர் விழிக்க மாட்டாதே நாணத்தாலே கவிழ்ந்தவர்களை-எடுத்துக் கொள்ளும் கைகளும்
தொடுதலாலே தோற்றவர்களை கீழே போகாதபடி தன் செல்லாமையாலே-மேலே ஏறட்டு கொள்கிற பொன்னாடையும்
தாசாம் ஆவிர்பூத் சௌரி சமயமான முகாம்புஜ-பீதாம்பரதர ஸ்ரக்வீ சாஷாத் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32

காட்டி –
உனக்கு புறம்பே அழைத்து தருவார் வேண்டி இருந்ததோ-பிடாத்தை விழ விட்டு வடிவைக் காட்ட அமையாதோ-

ஓசி செய் நுண்ணிடை –
பண்டே தொட்டாரோடே தோஷமான இடை-அதற்கு மேலே கல்வியால் துவண்ட இடையை உடையவர்கள்-

இள வாய்ச்சியர் –
உன்னோடு ஒத்த பருவத்தை உடையவர்கள் –வடிவு அழகாலும் பருவத்தாலும் உன்னை துவக்க வல்லார்-எத்தனைவர் இருக்கிறார்கள் –
நீ போகா நிற்க இடையிலே தங்கள் பருவத்தாலே துவக்க வல்லார் பலர்-

நீ யுகக்கும் நல்லவர்-
வடிவு அழகு உண்டானாலும் பயன் இல்லையே-எங்களைப் போலே இருக்க ஒண்ணாதே-நீ விரும்புவர்களாகவும் வேண்டுமே-
நீ உகக்கும்படி சிறப்பினை உடையவர்களான-அவர்களோடு – என் கண் வட்டத்திலே-சஞ்சரிக்க அமையும் –

———————————————————————————————-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-

த்வயார்த்தம் -தீர்க்க சரணாகதி -சாரா சங்க்ரஹம் -பிள்ளை லோகாச்சார்யார் -திருவாய்மொழி–விபுலமாக -அருளிச் செய்கிறார் –
உபநிஷத் -சாம வேதம் -சாந்தோக்யம் -த்வய சாம்யம் -பாராயணம் -பரம உபாயம் பரம ப்ராப்யம் -பூர்வ உத்தர வாக்யார்த்தம் –
அஷ்ட ஸ்லோகி -முதல் கிரந்தம் -பத்ய ரூபம் -மற்றவை கத்ய ரூபம் —
தேசிகன் -முக்தக ஸ்லோகம் அங்கு அங்கே சாதித்து ரகஸ்ய த்ரய சாரத்தில் –
வேதாந்தம் – மட்டுமே -சாஸ்திரம் -கேசவன் -ஒருவனே தெய்வம் -மது சூதன் ஒருவனே தத்வம் -தத்வம் நாராயண பர –
ஆரோக்கியத்துக்கு சத்வ குணம் மட்டுமே -த்வய வசனம் மட்டுமே க்ஷேமகரம்
பர ப்ரஹ்மம் – பரமாத்மா -பரஞ்சோதி –
மந்த்ர ரகஸ்யம் -திரு மந்த்ரம்
-விதி ரகஸ்யம் -சரம ஸ்லோகம்
அனுசந்தான அனுஷ்டான ரகஸ்யம் -த்வயம் –
நேத்ருத்வம் -நித்ய யோகம் –இத்யாதி பத்தும் -பிரபல தர விரோதி -பத்தாவது -நாராயணாய நம
-கைங்கர்யம் பண்ணும் பொழுது விரோதி தொலைய வேணுமே –
நம் ஆனந்தத்துக்காக என்பது தொக்கி நிற்குமே –
அநந்யார்ஹ சேஷ பூதன் –
உபாயாந்தரம்-அந்நிய சேஷத்வம் -ஸூ ச்வாதந்திரம் -அபிமானம் -அத்யந்த பாரதந்தர்ய காஷடை –
பிரயோஜனாந்தர சம்பந்தமும் இல்லாமல் தாண்டி –
காம்பற தலை சிரைத்து வாழும் சோம்பர் -நாம் பற்றும் பற்றும் பற்று இல்லை –
அல் வழக்கு ஒன்றும் இல்லாமல் -வந்த பின்பும் -பரம பத சோபனம் போலே -திருப்பாவை 50/பரம பத சோபனம் 10-
பாதகங்கள் தீர்க்கும் -பரமன் அடி காட்டும் –
ஏணி -98 வந்த பின்பு -ஒத்தை விழுந்து 99-பாம்பு மூலம் 2 கட்டம் -2 விழுந்தால் -99 சிக்காமல் 100 போகலாமே –
நம -இரட்டை வேண்டுமே -ஸூ போக்த்ருத்வ புத்தி தவிர்ந்து அவன் ஆனந்தத்துக்காக என்று நினைக்க வேண்டுமே -சரம அவஸ்தை –
அவனே அவன் சொத்தை அவன் ஆனந்துக்காக அவன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வான் –
சப்தம் மறைத்து போவார்கள் பூர்வர்கள் த்வயத்தை –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத-அன்னத்தை புஜிப்பவன்-நான் போக்தா அர்த்தம் இல்லை -படியாய் கிடந்து பவள வாய் காண்பேனே –
உண்டிட்டாய் உண்டு ஒழியாய்-என்று இத்தையே ஆழ்வார் –
ஞாத்ருத்வம் -வந்தால் கர்த்ருத்வ- இவற்றால் – போக்த்ருவங்கள் வருமே -ஞாதாவுக்கு ஞானம் -அவன் போக்தா நாம் போக்யம் -என்பதே –
போக்தா போக்யம் ப்ரேரிதா-மூன்றும் –
அன்னமாய் சமர்ப்பித்து -அவன் உகந்து உண்ண -அத்தைக் கண்டு மகிழ்ந்து -உகப்பது-இதுவே அந்நாத -என்கிறது –
பிரதான ஆனந்தம் அவனுக்கு அமுக்கிய ஆனந்தம் நமக்கு -களை அற்ற கைங்கர்யம் இதுவே –
சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்தர்ய போக்யதைகள் -சூர்ணிகை -21
ஞான சதுர்த்திகளின் மேலே இ றே ஆனந்த ஷஷ்டிகளுக்கு உதயம் -சூர்ணிகை -22-
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -ஜகத் வியாபார வர்ஜம் -குறையோ -தந்தை சொத்தை அனுபவிக்கும் பிள்ளை
-ஸ்ருஷ்டமான ஜீவனுக்கும் ஆனந்தம் -சீதா ராமர் இளைய பெருமாள் -ரம மாணா வன த்ரயா -ஒத்த ஆனந்தம் –
கைங்கர்யம் கொள்ளும் பரமாத்மா ஜாதி பெருமாள் -கைங்கர்யம் பண்ணும் ஜீவாத்மா ஜாதி இவன் –
தாரதம்யம் இல்லையே -சாம்யம் உண்டே -அவாப்த ஸமஸ்த காமன் ஸூ ஆராதனன்- குறைவாகச் செய்தாலும் –
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே -ஆனந்த ஸ்வரூபன் அன்றோ –
உனக்கே நாம் ஆட் செய்வோம் –மற்றை நம் காமங்கள் மாற்று -ஸ்ரீ மதே நாராயணாய நம -அர்த்தம் –

எங்களுக்கு நாதன் -உன் அபிமதைகள் உடன் எங்கள் சந்நிதியில் -வர்த்திக்கும் இதுவே எங்களுக்கு மிகவும் உகப்பாகும் -இல்லாத ஸ்த்ரீத்வம் வேண்டாம் –
புகுத்தி யாகில் கம்ச பிரக்ருதிகள் அசுரர்கள்
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்-எங்கள் சந்நிதியில் ஸூ சஞ்சாரம் பண்ணி
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்-பிரதான அவன் ஆனந்தம் சொல்லி பின்பு நம் ஆனந்தம் –
ஆனந்த மயனுக்கு இடர் வருமோ -காலம் தாழ்தல் –
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்-ப்ரீதி பிரேரிதானாம் போது -உன்னிலும் அவர்களிலும் நாங்கள் வியக்க -சீதா ராமர் விட இளைய பெருமாள் சந்தோஷம் -போலே –
நல் தாதை -சொத்து -புதல்வர் தம்மது அன்றோ -ஆர்த்தி பிரபந்தம் -ராமானுஜ அடியார் என்பதே வேண்டுவது –
தாய முறைப்படி கிடைக்குமே நமக்கு –
ராமானுஜர் நம் பெருமாள் விட நமக்கு அன்றோ உகப்பு இன்று -யதி ராஜர் ரெங்க ராஜர் சம்பாஷணம் நினைத்தாலே நமக்கு உஜ்ஜீவனம் –
நீ பிரிந்தால் எங்கள் பெண்மை தாங்காது
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்-அதுக்கும் மேலே
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு-காம ரூபிக்கள் சகடாசுரன் கொக்கு கழுதை
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ-சஞ்சரியா நிற்பர் -உனக்கு பிடித்த உருவமும் விழாம பழம்-அரிஷ்டாசுரன் –
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே-நீ அகப்படில் அவ்விடத்தில்
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ-பொல்லாங்கு விளையும் -உன் செருக்கால் அநாதரியாமல்
என் வார்த்தை கைக்கு கொள்ள வேண்டும்
பிரிவார் வார்த்தையும் கைக்கு கொள்ளாத அவஸ்தை அந்தோ -பராக்கு இருந்த படி –
ராவணன் விபீஷணன் வார்த்தை கேட்க்காமல் -அவனும் பிரிவார் வார்த்தை சொன்னானே –

உகக்கும் நல்லவரோடும் உழி தராய்-என்று நான் போகாமைக்கு சொன்ன வார்த்தை இத்தனை ஒழிய
உங்கள் முன்னிலையிலே நான் வேறு பெண்கள் சிலரோடு கலந்து பழகுதல்-
உங்களுக்கு விருப்பம் இல்லாதது அன்றோ என்ன –
எங்களோடு கலக்கும் கல்வியால் உண்டாகும் இன்பத்தைக் காட்டிலும்-உன் திரு உள்ளத்தில் பிரியமே எங்களுக்கு மிகப் பெரிய இன்பமாகும்
ஆன பின்பு தீமை விளையும் இடத்திற்கு போகாது ஒழிய வேணும்-என்கிறார்கள் –

மூன்றில் சுருக்கிய ஐந்தையும்
உயர் தினை ஒன்று பயில் /ஏறு கண் கரு வீடு /சொன்னால் ஒருக் கொண்ட/நோற்ற நாலும் /
எம்மா ஒழிவில் நெடு வேய் –என்கிற இருபதிலே விசதமாக்கி
எண்பதிலே பரப்புகையாலே -ஐந்தையும்
அருளினான் வீடு பெற்ற என்கையாலே ஐந்தில் இரண்டையும்
தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்டில் ஒன்றையும்
இதுக்கு ப்ரமேயம் என்னும் -சூர்ணிகை -211-

மூன்றில் சுருக்கிய ஐந்தையும்-எம்மா– ஒழிவில் -நெடு -வேய் நான்கு திருவாய் மொழிகளிலும்-
புருஷார்த்த ஸ்வரூபத்தை விளக்கி இருப்பதாக-அறுதி இடுகிறார்
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்-திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் –இதுவே இத் திருவாய் மொழிக்கு நிதான பாசுரம் என்பர்

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து –
எங்களைப் போல் அன்றிக்கே நீ உகக்கும் சிறப்பினை உடையவர்களோடு-
எங்கள் கண் வட்டத்திலே சஞ்சரித்து –

உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் –
நான் இன்னாளோடு கலக்கப் பெற்றிலோம் என்று உன் திரு உள்ளத்திலே வரும் இடர் கெடும் தோறும் –

நாங்கள் வியக்க இன்புறுதும் –
புறம்பு உள்ளாரைப் போலே அன்றியே-உன் உகப்பையே பிரயோஜனமாக கொண்டுள்ள நாங்கள் மிகவும் உகப்புதோம் –
எதனைக் காட்டிலும் என்னில் –
எங்களோடு கலக்கும் அதில் காட்டிலும் -என்னுதல் –
அன்றிக்கே-நீ அவர்களோடு கலந்தால் உனக்குப் பிறக்கும் ஆனந்தத்தைக் காட்டிலும் -என்னுதல்
ஈண்டு வியப்பு ஆச்சர்யத்திலே யாதல் -மிகுதியிலே யாதல் கிடக்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அன்றோ உன் ஆனந்தம் -அத்தைக் கண்டு அன்றோ நாங்கள் உகக்கிறோம்
நான் இப்படிச் செய்தால் நீங்கள் மிகவும் இன்புருவதாக சொன்ன இது கூடுமோ -என்னில் –

எம் பெண்மை ஆற்றோம்-
உன் உகப்புக்கு புறம்பாய் வரும் பெண் தன்மை நாங்கள் வேண்டாம்-
அன்றிக்கே-நீ உகந்தாரை ஒழிய உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் நாங்கள் -என்னுதல் –
உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சி அன்றோ -சூர்பணகை அன்றோ –
ததீயர் சேஷத்வம் ஞானம் உடையவர்கள் அன்றோ -அவனும் ததீயாரும் சேர்ந்ததே புருஷார்த்தம் –

எம்பெருமான் பசு மேய்க்கப் போகல் –
உனக்கு நாங்கள் அடிமைப் படுகிறோம்-
நீ பசு மேய்க்கப் போகாது ஒழிய வல்லையே-நான் தான் போகா நின்றேனோ-
எனக்கு உரிய தர்மங்களை செய்வதற்கு போனால் வருவது என் -என்ன-வருவது சொல்கிறார்கள் மேல் –

மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் –
மிகவும் பல அசுரர்கள் வேண்டின வடிவு கொண்டு மிகவும் சஞ்சரியா நிற்பார்கள் –
ஸ்ரீ பிருந்தாவனத்திலே எழும் பூண்டுகள் அடங்க அசுர மயமாய் அன்றோ இருப்பன-வேண்டு உருவு கொண்டு -என்பதற்கு
நீ உகக்கும் வடிவைக் கொண்டு -என்னுதல்
உன்னை நலிக்கைக்கு ஈடான வடிவைக் கொண்டு -என்னுதல்
புல் பா முதலா ஒன்று ஒழியாமல் இங்கே விரோதிகள் –

கஞ்சன் ஏவ –
கம்சனால் ஏவப் பட்டு வருகையாலே-தோற்றுப் போகிலும் அங்கும் கொலை தப்பாது -என்று மேல் விழுவார்கள் –
யார் ஏவில் என்-யார் மேல் விழில் என்-நாம் போரிலே வெற்றி கொண்டு அன்றோ மீளுவது -என்ன –

அகப்படில் –
அது மற்றைப்படி யாகில் செய்வது என்-போரில் வெற்றி தோல்விகள் நிலைத்தன அல்லவே
ஆனால் தான் வருவது என் -என்ன –
அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் –அவர்களும் நீயுமான இடத்தில் பொல்லாங்கு விளையும்-
இப்படிச் சொன்ன இடத்திலும்-ஆனைக்குப்பு ஆடுவாரை போலே -சதுரங்கம் ஆடுவாரைப் போலே-விருப்பு அற்று இருந்தான் –

என் சொல் கொள் –
பாராமுகம் செய்யாதே-நான் சொல்லுகிற வார்த்தையை புத்தி பண்ணுவாய் –

அந்தோ —
எங்களை அறியாவிட்டால்-உன்னையும் -சுகுமாரமான -அறியாது ஒழிய வேணுமோ –

—————————————————————————————

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-

ஆஸ்ரித கோபர்களுக்கு நிரதிசய போக்யன் -அசுரர்கள் உள்ள இடம் தனியாக இருக்க –
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ-அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ-பிரபல முன்கை மிடுக்கர்
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்-முனிவர்கள் கூட -பெண்கள் மட்டும் இல்லை நெஞ்சு கலங்கும் படி
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்-அஸஹாயம்-ஆறு குழந்தைகள் விட்டு தனியே -அக்ரூரர் கூட்டி
-துவாரகை தனியே -தோலும் தோள் மாலையும் -பரம பதமும் தனி யாக -நம்பி மூத்த ராமனையும் விட்டு –
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று-வெறுத்து -இல்லாமல் -காளிங்கன் -ஒன்றை அனைத்துக்கும் இவள் ஆக்கி
-அஸ்தானே பய சங்கை -இஷ்டமாக சஞ்சரிக்க -ஊடுற வென்னுடை யாவி வேமால்-இவ்வளவில் -ஆவி வேக
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி-பரமபத நாத்தனாக இருப்பில் காட்டிலும் -அங்கு இருக்கும் பொழுதும் இத்தை உகப்பு
-மாயையினால் அங்கு -ஈட்டிய வெண்ணெய் -செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே-இடையர்களுக்கு எல்லாம் தேவே

முன் கை மிடுக்கரான அசுரர்கள்-கம்சனால் ஏவப் பட்டவர்களாய்-
திரிந்து கொண்டு இருக்கிற காட்டிலே-நம்பி மூத்த பிரானையும் நீங்கித்-
தனியே திரியா நிற்றி -என்று-மிகவும் நோவு படா நின்றேன் –என்கிறாள்-

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்-
நடந்து கொள்ளவே வேண்டும் என்று இருக்க வேண்டா –சொன்ன சொற்களை கேட்க அமையும் –

அந்தோ –
சொன்னபடி நடந்து கோடல் இயலாத கார்யம் என்று இழியாது ஒழிகை அன்றிக்கே-
என் வார்த்தையாக அமைவதே கொள்ளாமைக்கு –

அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ –
பிறவியால் தண்ணியருமாய்-தாங்கள் பலருமாய்-முன்கை மிடுக்கருமாய் இருப்பார்கள்
அதற்கு மேலே தீயோனனா கம்சன் ஏவ ஆயிற்று வருவது –

தவத்தவர் மறுக நின்று உழி தருவர் –
என்னை அன்றோ உனக்கு விடலாவது –
உனக்கு நல்லவர்களான பக்திமான்கள்-குடல் மறுகும்படி சஞ்சரியா நிற்பார்கள் –மங்களா சாசனம் பண்ணுமவர்கள் –
ஈண்டு -பக்திமான்கள் -என்றது –
ஸ்ரீ நாரத பகவான் /ஸ்ரீ சுக்ரீவ மகாராஜர் /பெரியாழ்வார் /பிள்ளை உறங்கா வல்லி தாசர்
தொடக்கமானவர்கள் போல்வாரைச் சொல்லிற்று –
அன்றிக்கே-தவத்தில் நிலை நின்றவர்களான முனிவர்கள்
தங்கள் தவத்திற்கு வரும் இடையூறுகளால் கலங்கும்படி-திரியா நிற்பார்கள் -என்னுதல் –
அன்றிக்கே-தங்களுடைய பாதுகாத்தலுக்கு உன்னுடயை கையை எதிர் பார்த்து இருக்குமவர்கள்
அந்த அசுரர்களால் உனக்கு என் வருகிறதோ என்று கலங்கும்படி திரியா நிற்பார்கள் -என்னுதல் –
தவத்தை தனமாக உடையவர்கள்-கர்ப்பத்துக்கு ஒத்தவர்கள் என்றும் –
நயச்த தண்டா வயம் ராஜன் ஜிதக்ரோதா ஜிதேந்த்ரியா-ரஷிதவ்யா த்வயா சஸ்வத் கர்ப்ப பூதா தபோதனா -ஆரண்யம் -1-20
ஏஹி பஸ்ய சரீராணி முநிநாம் பாவிதாத்மானம்-ஹதாநாம் ராஷசை கோரை பஹூநாம் பஹுதா வனே -ஆரண்ய -6-16-
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்பதே அன்றோ இவர்கள் செயல் –
இப்படி இருக்கும் அவர்கள் –

நன்று -நம்மாட்டு அன்புடையவர்கள் உடைய துன்பத்தை போக்க வேண்டாவா -என்ன-

தனிமையும் பெரிது உனக்கு –
உன் கால் நெடுக நெடுக-தனிமையே மிக்கு விட்டதே உனக்கு-
ஏகதாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் யயௌ-விசசார வ்ருத்தோ கோபி வன்ய புஷ்ப சரக் உஜ்வல -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-1-
நம்பி மூத்த பிரானை ஒழியவே சஞ்சரிக்கும் காலம் பெரிது உனக்கு –

இராமனையும் உவத்திலை –
நம்பி மூத்த பிரான் முன்னே தீம்பு செய்ய ஒண்ணாது -என்று-அவனுடன் மனம் பொருந்தி வசிக்கின்றிலை –

உடன் திரிகிலையும் –
மனத்தில் பொருத்தம் இல்லா விட்டால்-தூரத்தில் கண்ட பகைவர்களுக்கு-
இவர்கள் இருவரும் கூடித் திரியா நின்றார்கள் என்று-அஞ்சும்படி ஒக்க திரிவதும் செய்கின்றிலை –

என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால் -நீ போகிறாய்-
நீ போகிறாய் என்று அன்று –
நம்பி மூத்த பிரான் உடன் கூடத் திரிகிறிலை என்றாயிற்று-என்னுடைய மனம் மாறுபாடு உருவ வேகிறது-
ஊடு உற-உள்ளூற-என்றபடி -என் மனம் ஆனது வேகா நின்றது –

இப்படி நிர்பந்திப்பதற்கு நான் இந்த இருப்பைக் குலைத்து போகா நின்றேனோ -என்ன-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –
ஆமாம் -நீ ஒவ்வோர் இருப்புகளை குலைத்துக் கொண்டு- போந்து அறியாயே-
பரம பதத்தில் இருப்பினைக் குலைத்து அன்றோ பசு நிரை மேய்க்கப் போந்தது –
அங்கே இருக்கவும் பெற்றது இல்லை –
அங்கு நின்றும் போந்தது பொல்லாதாதாக செய்தது என்று இருக்கிறாள் –
அங்கு இருந்தான் ஆகில் என் வயிறு எரிய வேண்டாவே-நாம் பெறுவோம் இழப்போம் –
அங்கே இருந்து வந்தது உன்னை கடாக்ஷிக்க அன்றோ என்ன -நாம் பெறுவோம் இழப்போம் –
இவனுக்கு ஒரு தீங்கு வாராது ஒழியுமே-அவர்களை விட்டும் பசுக்களை விரும்பக் கூடிய நீ எங்களை-
விரும்பாது இருக்கச் சொல்ல வேண்டுமோ-அங்கு நின்றும் போந்திலோம் என்ன சொல்ல ஒண்ணாது இறே அவனாலே-

இது ஒரு அன்பின் தன்மை இருந்தபடி என் -என்று முறுவல் பூத்தான் –
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே –
அதிலே ஈடுபடுகிறார்கள் –அவ்விருப்பு குலைந்து போந்தமை உண்டு-
உங்களை விட்டுப் போந்தேனோ-என்று முறுவல் செய்ய-இவர்களும் வாய்க்கரையிலே -அதரத்தில் -அழுந்துகிறார்கள்-
இத்தை நம்பி திருவாய்மொழி நிகமிக்கிறார் -பரம பதம் விட்டாலும் உம்மை விடும் என்றானே –

———————————————————————————————–

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-

பகவல் லாப பலன் –
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு-திரு ஆதாரம் -போக்ய பூதன் -எங்களுக்கும் ஆயர்களுக்கு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்-கோப குமாரர்களுக்கு ஸ்வாமி -அடியேனுக்கும் ஸ்வாமி -திருவடி மேலே
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்-சங்குகள் சேர்ந்த துறை
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்-சம்பத் அழகு திரு நகரி நிர்வாகக்கர் -உதாரர் ஆழ்வார்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை-இளம் பிராயத்தவர் ஆய்ச்சியர்
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்-பிரிவதற்கு கிலேசித்து-அனுசந்தித்த அர்த்தம்
ஒரு பெண் -ஒருமை -பன்மையில் ஆய்ச்சியர் -பராங்குச நாயகி பிரதி நிதி -தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே-பசுக்களை மேய்க்க போக்க கூடாது என்று உரைத்த -அவன் சம்ச்லேஷம்
-பலன் பெற்றது போலே இந்த திருவாய் மொழி கொடுக்கும் –
மேலும் கீழும் உள்ள 99 திருவாய் மொழிகளின் பலம் என்றுமாம் -வைலக்ஷண்ய ஞானமே பலம் -என்றவாறு –

நிகமத்தில்
அவனை பசு நிரைமேய்க்க போக வேண்டாம்-என்று விலக்கிய பாசுரமான-இத் திருவாய் மொழியும்
மற்றைய திருவாய் மொழியைப் போன்று-ஒரு திருவாய் மொழியே -என்று-ஈடுபடுகிறாள் –

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு –
அவ் வயிர உருக்கான முறுவலாலே-எங்களைத் தோற்பித்தால் போலே-
தன் பருவத்தில் பிள்ளைகளையும் தோற்பித்த-எல்லார்க்கும் ஒக்கத் தெய்வம் ஆனவன்-திருவடிகளில் சொல்லிற்று –
செங்கனி வாய் ஆயர் தேவு -என்கையாலே-தன் பருவத்தில் உள்ளாரை தோற்பித்த படி சொல்லிற்று –
சந்திர காந்தானனம் ராமம் அதீவ பிரிய தர்சனம்-ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிணாம்-அயோத்யா -3-27-
ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்-தாடகை என்பது அச் சழக்கி நாமமே -கம்ப நாட்டு ஆழ்வார் –

அத் திருவடி திருவடி மேல் –
எல்லாருக்கும் தெய்வமான அவ் வெம்பருமான் திருவடிகளில் –
அவன் சேஷியாம் தன்மையை காட்டிக் கொடுத்தான் –
திருவடி மேல் -என்கையாலே இவரும் அடிமையில் நின்றார்-

பொருநல் சங்கணி துறைவன் –
தாம் இருந்த இடத்தில் மேன்மக்கள் அடங்கலும் வந்து சேருமாறு போலே ஆயிற்று –
திருப் பொருநலில் சங்குகள் வந்து சேரும்படி –

மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை –
அவனுடைய பிரிவு பொறுக்க மாட்டாமையாலே-ஒரு பருவத்தில் ஆயர் பெண்கள் கூறிய தொடையாய் –

தையல் அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன –
அவை போன்று எல்லாரும் திரண்டு வார்த்தை சொன்னால் செவிப்படாது -என்று பார்த்து-அவனுக்கு மறுக்க ஒண்ணாதபடி
நப்பின்னை பிராட்டியின் தரமுடையவள் ஒருத்தி-பசு மேய்க்க போகாமை மீட்கைக்காக சொன்னவை ஆயிற்று –
இப்படியானால்-
அடிச்சியோம் -என்றும்-தொழுத்தையோம் -என்றும்
ஆழும் என் ஆர் உயிர் என்றும் –என் சொற்கொள் -என்றும்-
சொன்ன பன்மைக்கும் ஒருமைக்கும் எல்லாம் சேரும் அன்றோ –

இவையும் பத்து அவற்றின் சார்வே –
அவை -என்கிறது மேலே போந்த திருவாய் மொழிகளையாய் –அவற்றின் அருகே இதுவும் ஒரு திருவாய் மொழியே-
என்ற ஆச்சர்யத்தில் ஆக்கி-ஆயிற்று சீயர் அருளிச் செய்ததும் -9000 படி வியாக்யானம் செய்ததும்
அன்றிக்கே –இவையும் பத்து அவற்றின் சார்வே —
மேல் திருவாய் மொழி களுக்கு சொன்ன பலம் இதற்கு பலம்-என்கிறது ஆகவுமாம்-
அன்றிக்கே-அவை -என்கிறது-
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை -என்கிறவற்றையாய்-இவையும் அவற்றோடு ஒக்கும் என்னுதல் -என்றது-
அதனுடைய பலமே இதற்கும் பலம்-அது பலத்தோடு கூடியதாயின் இதற்குபேறு உண்டாம் -என்றபடியாம் –
அவர்கள் நீ போகாதே கொள் -என்ன-அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே-
இது கற்றாரும் அவனோடு நீங்காத கலவியைப் பெறுவார் -என்றவாறு –

செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு -அவனோடு பிரிவதற்கு இரங்கி –
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை -தையல் அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன-
அத் திருவடி திருவடி மேல் பொருநல் சங்கு அணித் துறைவன் வண் தென் குருகூர் சடகோபன் சொல் –
ஆயிரத்துள் இவையும் பத்து- அவற்றின் சார்வே -என்று அந்வயம்-

————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸூ உபேஷகம் ஸ தேனை விஸ்ரம்பித
கோபீ வ்யூக்தம் அபி கோ சபலம் அசிரமேவ
வ்யூக்த தாஸ்யம் ஹரிம் அபி நிஜேஷ்டம்
உபேக்ஷகம் தம் விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-

கோ சபலம் -த்வத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
அசிரமேவ சடக்கென
வ்யூக்த தாஸ்யம் -விடுபட்ட -நித்ய ஸூரிகளை விட்டு
ஹரிம் அபி நிஜேஷ்டம் -தனக்கு இஷ்டம்
உபேக்ஷகம் -தம் -விரும்பாமல்
விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-அடங்கா காதலால் –

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

அம்போஜ அஷதய கீர்த்யா யது குல ஜதயா ஆத்மன ஸ்யாமளத்தவாத
கோவிந்தத்வாத் பிரிய உத்யத் வசன தயா சக்ர தாராயுதத்வாத்
ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத் அதி சுபாக தயா கோப நிர்வாகத்வாத்
அஸ்தான ஸ்நேகா சங்காத பத காரிஜன் உதித ஸ்ரீ பதி

1–அம்போஜ அஷதய கீர்த்யா–தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–

2–யது குல ஜதயா–வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–

3–ஆத்மன ஸ்யாமளத்தவாத–யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்

4–கோவிந்தத்வாத்–கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி

5–பிரிய உத்யத் வசன தயா–பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா

6–சக்ர தாராயுதத்வாத்–அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்

7–ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத்–ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே

8–அதி சுபாக தயா–உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–

9–கோப நிர்வாகத்வாத்–எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்

10-அஸ்தான ஸ்நேகா சங்காத பத–அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ

காரிஜன்-உதித ஸ்ரீ பதி–திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே-

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 93-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் – யதா மநோ ரதம் பெறாமல் சம்சாரத்திலேயே ஸ்ரீ சர்வேஸ்வரன் வைக்க எண்ணினான் என்று சங்கிக்க
அவன் தெளிவித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தம் மநோ ரத அனுகுணமாக அப்போதே அத்தேசத்திலே புக்கு அடிமை செய்யப் பெறாமையாலே-கலங்கி
பழைய படி நமக்கு சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடுகிறதோ -என்று
பிரகிருதி சம்பந்த்தத்தின் கொடுமை ஸ்ரீ ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம்
முதலான ஹேதுக்களால் தமக்கு பிறந்த அதிசங்கையை ஒரு படுக்கையிலே கூட இருக்கச் செய்தே
பண்டு பசு மயக்கப் போகிற ப்ரபாத காலம் வந்து
அக் காலத்துக்கு அடைத்த குயில் மயில் முதலானவற்றின் பாடல் ஆடல் முதலான
அடையாளங்களையும் காண்கையாலே
அவற்றையே கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் பசு மேய்க்கப் போனான் -என்று அதி சங்கை பண்ணி
நோவு படுகிற இடைப் பெண்கள் பேச்சாலே அருளிச் செய்கிற-வேய் மரு தோளிணை யில் அர்த்தத்தை
வேய் மரு தோள் இந்த்ரிரை கோன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————-

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

———————————————-

வியாக்யானம்–

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை –
வேய் போலும் எழில் தோளி பொருட்டா -பெருமாள் திருமொழி –என்னும்படி
அணைக்கைக்கு பணை போல் இருக்கிற தோளை யுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்று ஸ்ரீ அனந்த சாயியாய்-
திரு மாற்கு அரவு -என்கிறபடி இருவருமாய்ச் சேர்த்தியாய் இருக்கிற தேசத்தை –
மாதவா என்ன -என்றார் இறே-

தான் மருவாத் தன்மையினால் –
நாமும் போய் நணுக வேணும் -என்னும் அபி நிவேசத்தை யுடைய தாம்
போய் புகப் பெறாத படியாலே –

தன்னை யின்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்று
தம்மை ஸ்வா தந்த்ர்யாதிகளாலே சம்சாரத்திலே இட்டு வைக்குமோ என்று சங்கித்துப் போர –

அதாவது –
இவர் உடைய ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு சௌஹார்த்த யுக்தன் ஆனவனும்
என் கை கழியேல் -என்னும்படி -பொருந்தி
பிரத்யஷ சாமானாகாரம் போலே இவர் கையிலே இருக்க-அத்தசையிலே
ஸ்வ ரஷணத்திலே கை வாங்கி இருக்குமவர்கள்-விஷயத்திலே ரஷணத்திலே அவன் மண்டி
அங்கே விச்லேஷிக்கும் காலத்தையும்
அவன் கை கழிந்தால்-சப்தாதிகள் பாதகமாகிற படியையும்
கால தைர்க்க்யா சஹதையையும்
ஆஸ்ரித ரஷணத்தில் அந்ய பரதையாலே அந்த ராயங்கள் புகும் படியையும்
அவனுக்கு அறிகிற பிரகாரத்தை-
வேய் மரு தோளிணை -என்று தொடங்கி -ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு-ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்றும்
தகவிலை தகவிலை இனி யுன்னை நீ பிரிவை யாமால் வீவ-நின் பசு நிரை மேய்க்கை போக்கு -என்றும்
வீவ நின் பசு நிரை மேய்க்கை போக்கு-சாவது இவ்வாய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த வித் தொழுத்தையோம் தனிமை தானே -என்றும்
நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து-எம்மை விட்டவை மேய்க்கப் போதி -என்றும்
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தின்றாலோ -என்றும்
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு -என்றும்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள்-தலைப்பெய்யில் யவம் கொல் ஆங்கே -என்றும்
அசுரர்கள் தலைப் பெய்யில்அவம் கொல் ஆங்கு என்று ஆழும்-என் ஆர் உயிர் பிரான் பின் போகல் நீ உகக்கும் நல்லவரோடு உழி தராயே -என்றும்
உகக்கும் நல்லவரோடு -என்று தொடங்கி-அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- என்றும்
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- திவத்திலும்-பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்றும்
இப்படி பஹூ முகமாக சங்கிக்க-

மால் தெளிவிக்கத் தெளிந்த –
அதாவது –
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் ஆனவனும் –என்றும்
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும்படி
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லாதே -என்றும்
அவனோடு பிரிவதற்கு இரங்கும்படியான இவர்கள் பிரேம ஸ்வ பாவத்தைக் கண்டு
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு -என்னும்படி சவிலாத ஸ்மிதம் பண்ணி
அணி மிகு தாமரைக் கையாலே அஞ்சேல் என்று ஆச்வசிபபித்து
உம்முடைய அபேஷித்ததின் படியே செய்கிறோம் என்று அதி சங்கையைத் தீர்த்தான் ஆயிற்று
அதாவது
பசு நிரை மேய்ப்பு ஒழிகை -அத்தைப் பற்ற -தாமோதரன் -என்றார்–

மால் தெளிவிக்க தெளிந்த –
ஸ்ரீ கிருஷ்ணன் தெளிவிக்கத் தெளிந்த-கலங்கினவனை தேற்றுமவன் இறே

தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –
சங்கா ஹேது இன்றிக்கே-கூட இருக்கச் செய்தே சங்கிக்க சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சமாதானம் பண்ண
சமாஹிதராய்
அத்தாலே தமக்கு சத்ருசரான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அநந்ய கதிகளான எங்களுக்கு அபாஸ்ரயம்-

————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -181- திருவாய்மொழி – -10-2-1….10-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 20, 2016

கெடும் இடர் -பிரவேசம் —

ஒரு நல் சுற்றம் -என்ற -10-1-பெரிய திரு மொழியிலே-பல திருப்பதிகளையும் அருளிச் செய்த -இதற்கு கருத்து என் –
என்று சீயர் பட்டரைக் கேட்க –
பிறந்தகத்தின் நின்றும் புக்ககத்துக்கு போகும் பெண் பிள்ளைகள்-பந்துக்கள் இருந்த இடம் எங்கும் கண்டு
வினவப் போமாறு போலே-அடையத் தக்க பரமபதம் அணித்தான வாறே
திருப்பதிகள் தோறும் புகுகிறார் -என்று அருளிச் செய்தார் –
பண்டை நாளாலே தொடங்கி இவரும்-திருப்பதிகள் மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –
திருப் புளிங்குடியிலே புகுவது-9-2-
திரு காட் கரையிலே புகுவது-9-6-
திரு மூழிக் களத்திலே புகுவது-9-7-
திரு நாவாயிலே புகுவது-9-8-
திருக் கண்ணபுரத்திலே புகுவது-9-10
திரு மோகூரிலே புகுவது-10-1-
திரு வநந்த புரத்திலே புகுவதாகிறார் –10-2-
அடையத் தக்க பரமபதம் ஏறப் போவதாக ஒருப்பட்டு-நடுவிலே உண்டான தடைகளைப் போக்கி
வழி கொடு போய் விடுகைக்கு-காளமேகத்தை துணையாகப் பற்றினாராய் நின்றார் மேல் –
அவ்வளவு தான் நமக்கு போக வேண்டுமோ
இங்கே உள்ள திரு வநந்த புரமே அடையத் தக்க பரம பதமாக இருக்க-என்று திரு வநந்த புரத்தை பரம பதமாக அறுதி இட்டார் –
அங்கனம் அறுதி இட்டு
அந் நகரமாகிற இது தான்-வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் ஆகையாலே
அவன் விரும்பி வசிக்க வேண்டும்படி எல்லை இல்லாத இனியதுமாய் -தேசம் செய்து –
அவன் வந்து வசிக்கையாலே சம்சார துக்கமும் தட்டாத இடமுமாய் -தீரும் வினை நோய்கள் எல்லாம் தீரும் –
இச் சரீர சம்பந்தம் அற்று அவ்வருகு போனால் செய்யும் அடிமையை
ருசி பிறந்த போதே இங்கேயே செய்யலாம் படியாய் -கடைத் தலை சீய்க்கப் பெற்றால் –
இனித்தான் –
அமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர் -10-2-6-என்கிறபடியே
நித்ய சூரிகளும் வந்து அடிமை செய்யும் நகரம் ஆகையாலே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10-என்று
ஆசைப் பட்டபடி அவர்களோடு கூடவுமாய்-அவ்வருகு போக வேண்டினாரே ஆகிலும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -பெரிய திருமொழி -7-4-4-என்கிறபடியே-அவர்களோடு போகவுமாய் இருக்கும் அன்றோ –

உகந்து அருளின நிலங்களில் நிலை இது தான் –
முதலிலே பகவான் இடத்தில் ருசியைப் பிறப்பிக்கைக்கு உடலுமாய் –
ருசி பிறந்தால் –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாமி அஹம்-மம வர்த்ம அனுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -ஸ்ரீ கீதை -4-11-
எவர்கள் என்னை இந்த விதமாக வணங்குகிறார்களோ-அவர்களுக்கு அந்த விதமாகவே
நான் அருள் செய்கிறேன் -என்கிறபடியே
சுலபனாய் இருக்கும் தன்மைக்கு எல்லை நிலமும் ஆகையால் –உபாயத்துக்கு உரிய தன்மைகளும் நிறைந்ததாய்
பரம பதத்துக்கு கொடுபோம் இடத்தில்-ஆதி வாஹிக கணத்தில் முதல்வனான தானே-
ஹார்த்த அனுக்ருஹீத சதாதிகயா -உத்தர மீமாம்சம் -4-அத்யாயம் -2-பாதம்
உள்ளத்தில் உறையும் இறைவனால் அருளப் பட்டவன் ஆகிறான் -என்கிறபடியே
வழியில் உண்டாகும் தடைகளையும் போக்கி கொடு போகைக்கும்-முற்பாடானாகைக்கும் உடலாய் –
பிறப்பு இறப்புகளின் தளை நீங்கி அவ்வருகே போனால் செய்யும் அடிமையை-இவ் உடலோடு கிடக்கச் செய்தேயும்
யாதாயினும் ஒரு காலத்தில் செய்கைக்கும் உடலாய் இருக்கும் அன்றோ-ஆகையால் -கூடும் என்க –

ஆக –
ருசியைப் பிறப்பிக்கைக்கும் உடலாய் –
ருசி பிறந்தவாறே உபாயம் ஆகைக்கும் உடலாய் –
ஞானத்தையும் பக்தியையும் வளர்க்கக் கூடியதுமாய் –
இச் சரீரத்தோடு இருக்கச் செய்தே அடிமை செய்கைக்கும் உடலாய் இருக்கையாலே-
திருவனந்த புரமே -அடையத் தக்க மேலான பரமபதம் -என்று-அறுதி இட்ட படியே -நடமினோ நமர்கள் உள்ளீர்-
நம்மோடு சம்பந்தம் உடையவர்கள் எல்லாரும் அங்கே போய் திரளுங்கோள் -என்கிறார்-

இதுதான்
மற்ற திவ்ய தேசங்களுக்கும் ஒவ்வாதோ
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் எண்ணும் என் சிந்தனையே -7-10-9-
என்பது போன்றவைகளும் உண்டே -என்னில்
எல்லாவற்றுக்கும் எல்லாம் உண்டாய் இருந்தாலும்-
ஒவ்வோர் இடங்களிலே ஒவ்வொரு வகையான-
நினைவின் விசேடங்கள் ஓடினால் -அவற்றுக்குச் சேர வார்த்தை சொல்லும் இத்தனை-

ஸ ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூ ரார்ச்ச நத்துக்கு முக நாபி பாதங்களை
த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம் –சூர்ணிகை -183-

திரு நாம சங்கீர்த்தனம் பிரதானம் -அனந்தன் காடி இலுப்ப மரம் தாரு -ப்ரஹ்மம் 1686- நெருப்பு பிடிக்க
-மீண்டும் -மார்த்தாண்ட வர்ம அரசர் 40 வருஷம் வேலை பார்த்து 72 யானைகள் 24000 சாளக்கிராமம் பாகன் இல்லாமல் யானைகள் வர –
பெருமாள் சொப்பனம் பாதி ஜாக்கிரதையாக கீழே -பின்பு ஒரு காலம் ஆபத்து வரும் –
சாளக்கிராமம் கடு சக்கரை பூசி –
சமஷடி ஸ்ருஷ்ட்டி ஆரம்பம் முன்னே திரு வாட்டாறு -நான் முக்கண் இல்லை அங்கே
வில்வ மங்கள சாமியார் -சின்ன பெருமாள் வைத்து ஆராதனை -சின்ன பிள்ளை உடன் இருக்க -காலில் சதங்கை -காட்டுக்கு ஓட
மலை வால் பெண் இருக்க -அனந்தன் காட்டில் போடுவேன் -சதங்கை ஓசை அங்கே -இலுப்ப மரம் -விழுந்து –
12 mile நீளம்
திவாகரன் துளுவ பிராமணர் நம்பூதிரி கலந்து திரு ஆராதனம்
பிரார்த்திக்க -18 அடி நீளம் -குறைத்து –
மூன்று ஊருக்கு காட்சி முதலில் -அதனால் மூன்று துவாரங்கள் –
ஸ ஸைன்ய -விஷ்வக் சீனர் நித்ய ஸூ ரிகள் உடன் -சாத்ய தேவர்கள் முகம் சேவிக்க
புத்திரர் -நான் முக்கண் -சித்த புருஷர் சாரணர் நாபி கமல துவாரம்
சிஷ்யர் நாம் -பூ சூரர்கள் நிலத்தேவர் பரம பக்தர்கள் பாத கமல துவாரம்
சாம்யம் குணம் காட்டி அருளி -சமோஹம் சர்வ பூதேஷூ –
சுதை -சிலா -தாரு -பூரி ஜெகந்நாத பெருமாள் -களேபரம் நவ களே பரம் -12-19 வருஷங்களுக்கு ஒரு முறை –
1726 -முதல் சேவை இந்த திரு மேனி உடன் –
ஒத்தக் கால் மண்டபம் முன் –
பாதாதி கேசம் -சேவிக்க வேண்டும் பாரதந்தர்யம் ஸ்வரூபம் –
பத்ம நாப தாசர் -அரசர்களுக்கு திரு நாமம் –

ஹாடாகமாடம் -ஸ்வர்ண மயமான மண்டபம் ஸ்வர்ணமயமான திருமேனி -மார்த்தாண்ட வர்மா -பத்ம நாப தாசர்கள் –
அரசர்கள் -திருமால் பிரதிநிதிகள் -அமரர்கோன் அர்ச்சிக்கின்று -இன்றும் -அரசர் அர்ச்சிக்கிறார்கள் Rs-160 அபராதம் -வர முடியாவிடில்
ஐப்பசி பங்குனி -ப்ரஹ்ம உத்சவங்கள் சங்க முகத்துறை அளவு
பள்ளி வேட்டை முதல் நாள் -அரசரே அம்பு போட்டு -தேங்காய் மேலே அம்பு -காம க்ரோதங்கள்
ஆராட்டு உத்சவம் தீர்த்தவாரி 9 நாள் நடக்கும்
ஆண்டாள் 9 நாள்
இலுப்ப மரம் பெரிய திரு உருவம் -இருந்த இடம்
குல சேகர மண்டபம் –
வெண்ணெய் காப்பு ஹனுமான் எப்பொழுதும் –
நரசிம்மர் உக்ர ஸ்ரீ ராமாயணம் பாராயணம் உக்ரம் குறைய -ஹிரண்ய வைத்த படலம் கம்பர் –
மார்த்தாண்ட-சூர்ய வம்சம் -ராஜ புத்திரர் -நான்கு கோத்த்ரம் வஸிஷ்ட கோத்ரம் –
நீண்ட கத்தி கீழே வைத்து பத்ம நாப தாசர் -குடும்ப சொத்து ஒன்றும் இல்லை
1008 வேத வித்து நான்கு வேதம் ஏழு தடவை முறை ஜபம் உத்சவம் -என்பர்
கடைசி நாள் லக்ஷ தீபம் நடக்கும் –

—————————————————————————————————

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-

கோபுரம் -படகு போலே -தெற்கு கோடி -இது -திரு நாவாய் வடக்கு கோடி -மலையாள திவ்ய தேசம் -ஆழ்வார் ஆதரித்து
கிலேசம் தீரும் படி பாதேயமாம் -படி -திரு நாம சங்கீர்த்தனம் -போம் வழி கிலேசம் -10-1- முதல் இத்தையே கொண்டு –
போக்கியம் -கிட்டுமின் ஸூ ஜனம் அடியார்களைக் குறித்து அருளிச் செய்கிறார் –
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்-ப்ரசஸ்த கேசம் -போக்யமான பாலை குடிக்கவே பித்தம் போகுமா போலே
-மருந்தும் விருந்தும் -புக்க இடம் தெரியாமல் கேட்டு போகுமே -ப்ரீதி அப்ரீதி -புண்யமும் அ புண்யமும் –
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்-யம பட்டர்கள்-பகவத் பக்தர்கள் அருகில் போகாதே -கமல நயன நாம உச்சாரணத்தால் –
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்-விஷம் -ஆஸ்ரித சம்ச்லேஷ ப்ரீதி தோற்றும் படி -கண் வளர்ந்து அருளி
-குண அனுபவ ப்ரீதர் அக்ரமமாக அலற்றும் படி -தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-பூம் தடங்கள்நிறைந்த திவ்ய தேசம் –

பிரீதியாலே திரு நாமத்தைச் சொல்ல-
திருவனந்த புரத்துக்கு செல்ல தடையாக உள்ளவை-அனைத்தும் அழியும்-
அங்கே புக வாருங்கோள் -என்று-அனுகூலரை அழைக்கிறார்-

கெடும் இடராய வெல்லாம் –
இடராய -எல்லாம் -கெடும் –
இடர் என்று பேர் பட்டவை எல்லாம் கெடும் -என்றது-
ப்ரஹ்மஹத்தி தோஷத்துக்கு கழுவாயாக பன்னிரண்டு ஆண்டுகள் செய்யும் வேள்வியைச் சரித்தால்
மற்று ஒரு பாவத்திற்கு மற்று ஒரு கழுவாய் செய்ய வேண்டி இருக்கும் அன்றோ –இங்கு அது வேண்டா
பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் –
பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி –

கழுவாயும் பலபலவாய் இருக்குமோ -என்ன
கேசவா வென்ன –
அவன் ஒரு விரோதியை போக்கின படியைச் சொல்ல-விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்
இராவணன் ஒருவனும் தீ வினை செய்ய-இராக்கச சாதியாக அழிந்தால் போலே –
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்-
முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்
கார்யத்தில் வந்தால் அதன் பயனைக் கொடுத்தே தீரும் ஆதலின் வார்த்தை மாத்ரமே அமையும் என்பார் -என்னக் கெடும் -என்கிறார் –
இனி கேசவா என்னக் இடராய எல்லாம் கெடும் -என்பதற்கு-
நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே
நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்
க இதி ப்ரஹ்மனொ நாம ஈசோஹம்சர்வ தேஹிநாம்-ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே
பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவனே என்ன-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும் பொருள் கூறலுமாம் –
ஆயினும் சொல்லிப் போருமது முன்னர் கூறிய பொருளே-
கிலேச நாசன கேசி ஹந்தா ப்ரசாஸ்த கேசம் -க ஈச நியாமகன் -நான்கும் உண்டே -ஸ்வரூபம் ரூபம் குண விபவம்-
ஆயினும் இந்த பிரகரணத்துக்கு சேர கிலேச நாசனே உசிதம் என்றவாறு –

நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் –
நாள் தோறும் கொடிய செயலைச் செய்யக் கூடிய-எமனுடைய தூதுவர்களும் வந்து கிட்டப்-பெறார்கள்
எமனுடைய தூதுவர்கள் என்னா சர்வேஸ்வரன் உடையார் பக்கலிலே வந்து கிட்டவோ -என்பார் -தமர்களும் -என்கிறார் –
ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிகர மது சூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்யன் ருணாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-13-

தஸ்ய யஞ்ஞா வராஹச்ய விஷ்ணோ அமித தேஜச-ப்ரணாமம் யேயி குர்வந்தி தேஷாமபி நமோ நம-ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
அளவற்ற ஆற்றலை உடைய அந்த யஞ்ஞா வராக பெருமாளை எவர்கள் வணங்கு கின்றார்களோ
அவர்களை நான் பல முறை வணங்குகிறான் -என்பதே அன்றோ அக் கூற்றுவன் வார்த்தையும் -என்றது
இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் -நான்முகன் திருவந்தாதி -68 -என்கிறபடியே
அவர்களைக் கண்டால் -நாம் கடவோம் அல்லோம் என்று போராதே
அவர்களை அணுகி வணக்கத்தைச் செய்து விட்டு செல்லுங்கள் என்கிறான் என்றபடி
ஸ்வபுருஷம் என்கிற ஸ்லோகத்தில்
எமன் தன் பரிகரம் கையும் சூலமும் நாயுமாகப் போகிற படியை பார்த்து-
பாகவதர்களும் அல்லாதாரும் கலந்து இருப்பர்கள்
பாகவதர்கள் முன்னே இவன் கிட்டில் செய்வது என்-என்று பயந்து சொல்லுகிறான்-
ஸ்வ புருஷம் –
தனக்கு அந்தரங்கனாய் இருக்கையாலே தன் மேன்மை சொல்ல வேண்டும் இடத்தில் தாழ்வு சொல்கிறானாய் ஆயிற்று தவிர ஒண்ணாமையாலே
அபிவீஷ்யே –
அபி வி என்ற இரண்டு உபசர்க்கத்துக்கு -இவன் தான் நாலு இரண்டு ஓலை மறுக்க தர முடையனாய் இருக்கும் ஆயிற்று –
சொல் செல்லுகைக்காக இப்படி இருக்கிறவனை பார்க்கிற பார்வையிலே கார்யத்தின் கௌரவம் எல்லாம்-தோற்றும்படி பார்த்தான் ஆயிற்று –
மது சூதன பிரபன்னான் –
இவர்களை நலிந்தால் அவனுக்கு என் என்ன-இவர்கள் அவன் பக்கலிலே பாரங்களை எல்லாம் போட்டவர்களாய் இருப்பர்கள் –
இவர்களுக்கு வந்தது ஒன்றுக்கு -அவன் மார்வு தட்டிக் கொண்டு வரும் -மோஷ யிஷ்யாமி -என்பானே-
நன்று உனக்கு உடையோமாய் போகிற நாங்கள் வேறு-சிலர்க்கு அஞ்ச வேண்டும்படி இருந்ததாகில்
நீ பின்னை யாராய் இவ்விருப்பு இருந்து ஏவுகிறது -என்ன
பிரபு அஹம் அந்ய ந்ருனாம்
எனக்கு அடைந்த விஷயத்தில் என் சொல் செல்லாதாகில்-அன்றோ எனக்கு குறையாவது-
நாம் கடவோம் அல்லாதவர்கள் இடத்தில் நாம் ஆராயா நிற்கவோ -என்றான் –

இது தன்னை திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தாரே அன்றோ
திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு –என்று
எம்பெருமானார் நுழையாத ஐதிக்யம் -ஸ்வாமி போனாலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயர்க்கு ஆட்பட்டார் பேர் -முதல் திருவந்தாதி –
என்று அவர் தங்களிலே சொல்லி இருக்கும் வார்த்தை அன்றோ இது-
அடியார் -ஆட்பட்டார்க்கு பேர் -பரிகாரபூதர் -அடியார்க்கு அடியார் -பேர் மட்டும் வைத்து இருப்பார் -மூன்றும் –
மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் என்ன வல்லனே -திருச் சந்த விருத்தம் -116
என்கிறபடியே சக்கரவர்த்தி திருமகனார் பெயரை இவன் ஆராயவோ -என்கை-

ஒரு திருவேட்டையிலே பட்டர் திரு ஊற்றம் கரையிலே பேர் ஒலக்கமாய் இருக்க
மாலைப் பொழுது ஆயிற்று என்று சிலர் விண்ணப்பம் செய்ய
நான் பெருமாள் அழகிலே துவக்குண்டு இன்று ஒருநாளும் செய்ய வேண்டிய கார்யத்திலே
சிறிது தாழ நின்றோம் என்றால்-இது குற்றமாக யமன் கேட்கவோ
ஒரு அரசன் இருந்து நாட்டுக் கணக்கு கேட்டுக் கொடு வாரா நின்றால்
அரசனுக்கு அந்தரங்கனாய் இருப்பான் ஒருவன் பெயரை வாசித்தால் -ஓம் காண் அது கிடக்க மேல் செல் -என்றால்
பின்னை ஒரு நாளும் அப் பெயரை எடுத்து வாசிக்கப் பெறான் காண் -என்றாராம்
இந்த விஷயத்திலே
உனக்கு ஆகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ-பெரிய திருமொழி -6-8-9-என்று அருளிச் செய்தார் –
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -பெரிய திருமொழி -8-10-7-என்கிறபடியே
இருவர் ஒரு வழி போகப் பெறார்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா-என்றார் பட்டர் பிரான்
விழுக்காடு அறியாதே வந்து கிட்டில் செய்வது என் என்னில்
தட வரைத் தோள் சக்கர பாணீ –சாரங்க வில் சேவகனே -என்கிறபடியே
திரு ஆழி இட்டு தோளைக் கழித்தல்-ஓர் அம்பாலே தலையை உருட்டுதல் -செய்யும் அத்தனை –
வாணன் பட்டது படுதல் -இராவணன் பட்டது படுதல் -செய்யும் அத்தனை –
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகு ஏழ் ஆண்டான் -பெரிய திரு மொழி -10-6-5-
என்கிறபடியே
யம தூதுவர்கள் நம்முடையாரை வினவப் பெறார்கள்-அதற்கு அடி என் எனில்-
வேண்டாமை –ஊர்க் கணக்கனோ கோயில் கட்டணத்திலே-அந்தப்புரத்திலே –
புக்கு படுக்கைப் பற்று -பெண்கள் இருக்கும் இடம் -ஆராய்வான்
செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்கிறவன் இவர்கள் கையில் காட்டிக் கொடானே
நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை நமன் தமர் தலைகள் மீதே-நாவல் இட்டு உழி தருகின்றோம் -எனபது திருமாலை -1-
அஹம் அமரவரார்சிதென தாத்ரா
யம இதி லோக ஹிதா ஹிதே நியுக்த
ஹரிகுரு வசக அஸ்மி ன் ஸ்வ தந்திர
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-14-
உலக குருவான பகவானுக்கு நான் அடங்கினவனாய் இருக்கிறேன்-நான் ஸ்வ தந்த்ரன் அல்லன்
என்னைத் தண்டிப்பதற்கும் விஷ்ணுவுக்கு ஆற்றல் உண்டு-என்கிறபடியே
உங்களை நியமிக்கப் போந்த என்னைப் போலே அல்லன் காண் என்னை நியமிக்குமவன்
இவ் ஓலக்கத்தில் வந்தால் அன்றோ நான் ஆராய்வது-அவன் -விஷ்ணு -எங்கும் உள்ளவன் அன்றோ –

நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார் –
பழையதாக நலிந்து போந்த வாசனை கொண்டு பகவத் விஷயத்தில்
முதலடி இட்ட இன்றும் -கிட்டவோ -கேசவா -என்றது வார்த்தை மாதரம் என்பதால் முதலடி –
துராசாரோபி சர்வாசீ க்ருதக்னோ நாஸ்திக புரா
சமாசரயேத் ஆதிதேவம் ஸ்ரத்தயா சரணம் யதி
நிர்த்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -பாரதம் –
நிர்த்தோஷம் வித்தி –
சாவது பிறப்பதாய் போந்தவனாவது –
கழுவாய் இல்லாத தீ வினைகளை உடையவன் ஆவது
ஆனாலும் அவனைக் குற்றம் அற்றவன் ஆகவே புத்தி பண்ண வேணும்
குற்றங்கள் இருக்க இப்படி நினைக்க வேண்டுவான் என் -என்ன –
பிரபாவாத் –
இவனையோ பார்ப்பது-இவன் பற்றினவனைப் பார்க்க வேண்டாவோ –
இவனை ஆராய்கை யாவது -பகவானுடைய பெருமையை அளவிட்டு அறிதலாம் அன்றோ
குறுகார் எண்ணாதே குறுக -கில்லார் -என்றது
எரிகிற நெருப்பில் கிட்டுவார் உளரோ -என்றது –
ஏவுகின்ற தலைவனுடைய ஏவலை மேற்கொண்டு கிட்டாமை அன்று-தந்தாமை வேண்டாதார் உளரோ -என்றபடி –

மேலே பெறக் கூடிய பேற்றினை சொல்கிறார்
விடம் உடை –
செந் தெங்கிற்கு -செவ்விளநீர்க்கு-முள் கட்டினால் போலே-ஒருவருக்கும் முகம் கொள்ளாது இருக்கை
வாய்ந்த மது கைடபரும் வயிறு உருகி மாண்டார் -மூன்றாம் திருவந்தாதி -66-என்கிறபடியே
பகைவர்களாய் கிட்டினாரும் முடிந்து போம்படியாய் – இருக்கும்

அரவு –
சாதிக்கு உரியதான மென்மை நாற்றம் குளிர்த்தி -என்னும் இவற்றை உடைத்தாய் இருக்கும்-

பள்ளி விரும்பினான் –
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே ஆயிற்று-அங்கு கண் வளர்ந்து அருளுகிறது

—————————————————————————————————————

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-

சகஸ்ர முகமாக போக்யமாம் –
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா-கால விளம்பம் பிறவாத படி -ருசி பிறந்த அன்றே -ஏழு ஏழு பிறவிகளிலும்
-முக்தன் போலே -யாவதாத்மபாவி சம்சார தோஷம் தட்டாது
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை-பரிசரத்திலே –
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்-மன்றில் அலர்ந்த பொழில் -ஆஸ்ரிதற்கு அனுபாவ்யமான ஸுந்தர்ய ஸுலப்ய -நாமங்கள்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே-வைகுந்தம் -இருக்கும் தேசமே
ஒவ் ஒன்றுமே ஆயிரமாக பணைக்கும்-இதுவே ஸ்ரீ வைகுண்ட அனுபவம் -என்றவாறு -பரமபதம் வர்ஜ நீயம் –

தீ வினைகள் போகைக்கு சொன்ன-திருப் பெயர் தானே -கேசவா என்ன –
ஆயிரம் வகைகளாய் பாது காவலாய் இருக்கும்-என்கிறார் –

இன்று போய்ப் புகுதிராகில் –
போவோம் என்ற இச்சை பிறந்த இன்றே சென்று சேர்வீர்களே யாகில் –
அதிகாரி ஆவதற்கு மற்றைய விஷயங்களில் வைராக்கியம் தொடக்கமானவை வேண்டாவோ –
இச்சை மாத்ரம் போதியதாமோ -என்னில் –
யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜென்-ஜாபாலி ஸ்ம்ருதி –
எவன் வைராக்யம் உள்ளவன் ஆகிறானோ அன்றே துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் -என்கிறபடியே
அவை வேண்டுவன ஒரு சிலர் மேற்கொள்ள கூடியவையான-விஷயங்களுக்கு –
எல்லாரும் மேற்கொள்ளக் கூடியதாய்-சம்பந்தமும் உள்ளதுமாய்-
முன்பே இவனை விரும்பி இவனது விருப்பத்தை பார்த்து இருக்கும் விஷயத்துக்கு தகுதியாக-
அதிகாரி யாகும் தன்மையை இவனால் சம்பாதிக்க முடியாமையாலும்-
சர்வாதிகாரம் பிராப்தம் – முன்பே இவனை இச்சித்து -இசைவு பார்த்து இருக்கும் விஷயத்துக்கு இச்சா மாத்திரமே போதுமே –
ஆள் பார்த்து உழி தருமவன் -நான் முகன் திருவந்தாதி -60 ஆகையாலும்-
ஆனய ஏனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷநோவா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18–84
யதிவா -விபீஷணன் என்ற பெயராய் ராவணனே இருந்தான் என்று மீளாதேயுங்கோள் என்றான் இறே –
ஸ்வயம் –அது என்-அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டதாக அமையாதோ -என்ன வேண்டா-
குறைவாளர்க்கு அன்றோ நம்மால் கார்யம் உள்ளது –அது உள்ளது இராவணனுக்கே அன்றோ –
விபீஷணச்து தர்மாத்மா ததுராஷச சேஷ்டிதர் – ஆரண்யம் -17-24-என்கிறபடியே-
தனக்கு என்ன ஒரு கைம்முதலும் உள்ளவன் ஆகையாலே-நாளை வரவும் ஆம் –
அரைக்கணம் கிட்டா விடில் நாசமாக இருக்கிறது அந்த இராவணனுக்கே அன்றோ
ஆனபின்பு அவனை அன்றோ முற்பட கைக் கொள்ள வேண்டுவது
இனித் தான் இவனைக் கைக் கொண்டால் இவனும் இவன் தன்னோடு வந்த நால்வரும் ஆகப் போம்
இராவணனைக் கைக் கொண்டால் துறுப்புக் கூடாக கைக் கொண்டது ஆகலாம்
மகா ராஜர் ஒருவரையும் அங்கீ கரிக்க வானர சாதியாக வாழ்ந்து போனால் போலே

எழுமையும் ஏதம் சாரா-
ஒரு காலமும் பொல்லாங்கு வந்து கிட்டாது –
சாரா -என்றதனால்-அதற்கு அவனும் தானும் நினைப்பிட வேண்டா -என்றபடி –
சும்மெனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்கிறபடியே-
நாம் இவ்விடத்தில் இருப்பதற்கு உரியோம் அல்லோம் -என்று தன்னடையே வந்து கிட்டாது –
இராஜ குல சம்பந்தத்தாலே விட்டு ஓடிப் போம் –
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆன் ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வான் துயரை ஆ ஆ மருங்கி -பெரிய திருவந்தாதி -54-என்ற திருப் பாசுரம் நினைவு கூர்க

குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை-
ஏதம் சார்ந்தாலும்-சென்று சேர வேண்டும்படி காணும் ஊரின் செல்வமும் இனிமையும் –
மலைகளைப் புடைபடத் தொளைத்து நெருங்க வைத்தால் போலே இருக்கிற மாடங்களும்-
அதன் அருகே அம்மாடங்களுக்கு நிழல் செய்தால் போலே இருக்கிற குருந்து-அதனோடு சேர்ந்த செருந்தி புன்னை –
அன்றிக்கே
சேர் -என்பதற்கு அம் மரங்கள் ஒன்றோடு ஓன்று சேர்ந்து இருக்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம்

மன்றலர் பொழில் –
ஊர் சுற்றிலே அலர்ந்து கிடக்கும் ஆயிற்று பொழில்கள்-
அன்றிக்கே
மன்று -என்று மன்றலாய்-அலர்தல் -என்று பரம்புகையாய்-வாசனை பரம்பா நின்றுள்ள சோலை -என்னுதலுமாம்-
இப்பொருளில் மன்றல் -என்னும் சொல் மன்று -என்று விகாரப் பட்டு கிடக்கின்றது –
குன்று சேர் மாடம் –
பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் உள்ளே புக்கு-வலம் வரா நிற்க-நான் சேவித்துப் போந்தேன் –
அல்லாதார் எல்லாரும் விரைந்து சடக்கென வாரா நிற்க-இவர்கள் திரு மாளிகைகளையும் திரு கோபுரங்களையும்
கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வருகிறபடியைக் கண்டு-
அல்லாதார்க்கும் இவர்களுக்கும் செயல் ஒத்து இருக்கச் செய்தே இவர்களான வாசி இருந்தபடி என் -என்று இருந்தேன் -என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
இனி -சேர் செருந்தி -என்பதற்கு-மரங்கள் ஒன்றோடு ஓன்று ஒத்து இருக்கின்றன -என்னலுமாம் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம்-ராகவ அர்ஹதி வைதேஹிம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5-
என்னுமாறு போலே ஆயிற்று -என்றபடி –
மேல் நித்ய சூரிகளை சொல்லக் கடவதாய் இருக்க-இங்கே தாவரங்களைச் சொல்லுகிறது என் -என்ன
உகந்து அருளின நிலங்களிலே மேன் மக்களோடு தாவரங்களோடு வாசி இல்லை என்று இருக்கும் உத்தேச்ய புத்தியாலே-
நித்ய சூரிகளுக்கு ஆனால் அவ்வருகு போக நினைவு உண்டாகைக்கு தகுதி உண்டு -நினையார்கள் இத்தனை –
ஞானத்தின் கார்யமான அன்பின் மிகுதியாலே நினைக்கைக்கும் தகுதி உண்டே அன்றோ-
வேறு ஒரு இடத்தில் போக நினைக்கைக்கு தகுதி இல்லை அன்றோ இவற்றுக்கு –
பிள்ளை ஜனநாத ப்ரஹ்மராயர் திரு முடிக் குறையிலே மரம் வெட்டுவியா நிற்க-எம்பார் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது –
ஈஸ்வர பிரக்ருதியை அழிக்கவோ -மிதுனம் கூட நீர் வார்த்து வளர்ந்தவை அன்றோ –
தாயார் பெருமாள் கடாஷத்துக்கு உரியவை ஆகையாலே -நீரால் இன்றி -அவர்கள் திருவருளாலே வளர்ந்தவை-
சுரவன் பாக்குகளை -உயர்ந்த பாக்குகளை -சிலவற்றை பட்டருக்கு கொடு வந்து கொடுக்க
அவற்றைக் கண்டு இவை இருந்தபடி என்-திருவருள் கமுகினின்றும் வந்தவையோ -என்று அருளிச் செய்தாராம்
நீரால் வளர்ந்தவை அன்றே-அவனுடைய திருவருள் பார்வையாலே வளர்ந்தவை அன்றோ –

அனந்த புர நகர் மாயன் –
ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு-தாழ்ந்தார்க்கு முகம் கொடுக்கலாம் என்னும் அதனாலே
திரு வனந்த புரத்தை விட மாட்டாதே நிற்கிற-சீல குணத்தின் மிகுதியைச் சொல்லுகிறது –

நாமம் ஓன்றும் ஓர் ஆயிரமாம் –
ஒரு திருப் பெயர் தானே விரோதிகளைப் போக்கி காப்பாற்றும் என்னும் இடம் முன் பாசுரத்தில் சொல்லிற்றே அன்றோ-
அப்படியே ஆயிரம் படி பாதுகாவலாய் இருக்கிற ஆயிரம் திருப் பெயர்களை உடையவன் –

உள்ளுவார்க்கும் –
உத்தேச்யமான பொருள் குறைவற்று இருந்தது –இனி நினைப்பாரே அன்றோ தேட்டம்
உள்ளுவாருக்கு-ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் ஓலக்கம் கொடுக்க
அவர்கள் நடுவே இருக்கக் கூடிய சர்வேஸ்வரன்
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கலாம் என்று -இந்நகரை விரும்பி-வசிக்கிற நீர்மையின் ஏற்றத்தை நினைக்க வல்லவருக்கு –

உம்பரூரே-
திருப் பெயர்களை நினைப்பார்க்கு-அவ்விடம் தானே உம்பரூர் ஆகும்
அன்றிக்கே
உள்ளுவார் பெருமிடம் உம்பர் ஊர் -என்னவுமாம் –
அவ் உம்பர் ஊர் தானும் நம்பால் விரும்பப் படுவதும் அவன் விடாதே வசிப்பதனால் அன்றோ-
அவனே தான் இவ்விடத்தே வசியா நின்றால்-பின்னை இவ்விடமே உத்தேச்யமாக தட்டு இல்லை அன்றோ –

—————————————————————————————————

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-

திவ்ய தேசத்தை பிராபித்த அளவிலே ஸமஸ்த கிலேசங்களும் போகும் -அந்த மார்க்க தர்சி தேசிகனுடைய
திரு நாமங்கள் ஏதேனும் ஒன்றாவது சொல்லி உஜ்ஜீவியுங்கோள் –
ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்-வாகனமும் அவனே த்வஜமும் அவனே -பெரிய திருவடியே
-ரக்ஷணத்துக்கு கட்டிய கொடி-பிரளயத்தில் -சென்று ரக்ஷிக்க ஒண்ணாத சமயத்தில் உண்டு ரக்ஷித்து-
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்–பிற்பாடார் இழக்க ஒண்ணாத படி நித்ய வாசம்
-இங்கே சடக்கென புகுந்தால் -சுலபம் இல்லையே அநந்ய பிரயோஜனராக
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்-பிரயோஜனாந்தர சம்பந்தம் போகும் -அதுக்கு அடியானை கர்மங்களும்
நிஸ் சேஷமாக போகும் -இதில் விசுவாசம் உள்ள நாங்கள் சொல்ல
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-ஸ்ரீ ராம ராமேதி -ராம திரு நாமம் -கேசவ திரு நாமம் -போக்யம் அனைத்தும் என்றவாறு –
-பள்ளியில் -சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்-நாராயண திரு நாமம் -பிரதானம் அப்ரதானம் வாசி இல்லையே இவற்றுள் –

தீய வினைகள் போகைக்கு அந்நகரத்தை அடைதலே போதியதாம்
ஆயிரம் திரு நாமங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லி-அனுபவியுங்கோள்-என்கிறார்

ஊரும் புள் –
புள் ஊரும்-பெரிய திருவடியை வாகனமாக கொண்டு நடத்தும் –

கொடியும் அக்தே-
கொடியும் அந்த திருவடியே –புள்ளினை கூறியது நித்ய சூரிகளுக்கும் உப லஷணம் –
அநேக சேஷ வ்ருத்திகள் நித்ய சூரிகள் அனைவரும் செய்வதற்கு உப லக்ஷணம் -ஏகதா பவதி இத்யாதி
இவ் உலகில் தொடர்பு சிறிதும் இல்லாத நித்ய சூரிகளுக்கு-
சென்றால் குடையாம் -முதல் திருவந்தாதி -53- என்கிறபடியே-உண்டாகச் சொல்லுகிற பல வகைப் பட்ட நிலைகள்-
இன்று சென்று கிட்டனவனுக்கும் வாசி அறக் கொடுக்கும்-என்கைக்காக சொல்லுகிறது –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசானுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ச தே -அயோத்யா -31-25-
இவன் எல்லா தொண்டுகளும் செய்வேன் என்று இருந்தாலும் பயன் இல்லை அன்றோ-
குருஷ்வ மாம் அனுசரம் வைதர்ம்யம் ந இஹ வித்யதே-க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவசார்த்த பிரகல்ப்யதே -அயோத்யா -31-22-
செய்க -என்று அவன் ஏவிக் கொள்ளாத அன்று-
இவன் இறைவனுக்கு தொண்டு செய்யாத அன்று ஆத்மாவுக்கு அடிமைத் தன்மை இல்லை –
ஆகையால் ஒன்றிலும் விருப்பு இல்லாதவனான தான் குறைய நின்று-இவனுடைய குறையைத் தீர்க்குமாயிற்று -என்றது
தான் குறை உடையவனாய் நின்று இவனை குறை இல்லாதவனாகச் செய்வான் -என்றபடி –
இவன் தொண்டு செய்து -அடிமைத் தன்மை உடையவனாம்படி இவனைச் செய்வித்து
குறைவற்றவனாக வேண்டும் அன்றோ அவனுக்கு -என்றது
இவன் தொண்டு செய்து அடிமை தன்மை உடையவனாம் பொருட்டு அவன் தன்னை தாழ விட்டான் என்றால்-
அது தானே நிறை யுடைமைக்கு உடலாக இருக்கும் அன்றோ -அவனுக்கு –என்றபடி –
இன்னார் தூதன் என நின்றான் -பெரிய திருமொழி -2-2-3-என்ற பின்பே அன்றோ சேஷியாம் தன்மை அவனுக்கு உண்டாயிற்று –

உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் –
இவ் உலகத் தொடர்பு இல்லாத நித்ய சூரிகளை எல்லா அடிமை கொள்ளுகை அன்றிக்கே
பிரளய ஆபத்திலே உலகத்தை எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கி
பின்னே உள்ளே கிடந்தது தளர ஒண்ணாது என்று வெளி நாடு காண உமிழ்ந்தவன் –

சேரும் தண்ணனந்தபுரம் –
பிரளய ஆபத்திலே உலகத்துக்கு அவன் வயிற்றில் புகாத போது உண்டான செல்லாமையைப் போலே
ஆயிற்று அவனுக்கு இந்நகரத்திலே புகுராத போது உண்டான தரிப்பறுதி-
பிரளய ஆபத்தின் நின்றும் உலகம் முழுதினையும் பாது காத்தவன் சேரும் –வந்து சேரும்
அன்றிக்கே
பாரம் நீங்கினவனாய்க் கொண்டு வந்து சாய்ந்து அருளுகிற இடம் என்னுதல்-
மயக்கத்தாலே அவன் இப்படி விரும்புகிறான் அல்லன் –
இனிமையால் விட மாட்டாதவனாய் இருக்கிறான்-என்பதனைத் தெரிவிக்கிறார் -தண் -என்ற சொல்லாலே –
உகந்து அருளின நிலமாகில் இப்படி இருக்க வேண்டாவோ –தான் உகந்த ஊர் -திரு நெடும் தாண்டகம் -6-என்னக் கடவது அன்றோ-
தானும் உகந்து நித்ய சூரிகளும் உக்கும் இடம் அன்றோ பரமபதம்-
இங்கு தன் உகப்பு மாத்ரம் அன்றோ இருப்பது -என்றது
இவர்கள் விருப்பு அற்று இருப்பினும் தான் விட மாட்டாதே-காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கிற இடம் அன்றோ -என்றபடி –

சிக்கெனப் புகுதிராகில் –
நச புன ஆவர்த்ததே நாசா புன ஆவர்த்ததே -என்கிறபடியே
மீளாத ருசியை உடையீர்களாய் கொண்டு கிட்டுவீர் கோளாகில் –

தீரும் நோய் வினைகள் எல்லாம் –
துக்கங்களும்-துக்கங்களுக்கு காரணம் ஆனவைகளும் அழியும் –

திண்ணம்-
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜம் உச்யதே
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் -பாரதம்-என்னுமாறு போலே –

நாம் அறியச் சொன்னோம் –
திண்ணமாக அனுபவத்தாலே கை கண்ட நாம்
இதில் வாசி அறியாத நீங்களும் இழக்க ஒண்ணாது என்று உங்கள் நெஞ்சில் படும்படி சொன்னோம்
பல நாள் துன்பப் பட்டு கரை கண்டவர் ஆகையாலே -நாம்-என்கிறார்
இனி
கர்மங்களுக்கு கட்டுப் பட்டவர்களாய் படுமவர்கள்
சொன்ன வார்த்தையை நினையாமையாலே படுகிறார்கள் அத்தனை
நம் மேல் குறையற நாம் சொன்னோம் -என்பார் -சொன்னோம் -என்கிறார்

நன்று -அச் செயலுக்கு அந்நகரத்தை சென்று சேர்த்தாலே போதியதாம் என்றீர்-
இனி சொல்லி இருக்க அடுப்பது என் -என்ன –
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே –
ஒரு திருப் பெயர் தானே-ஆயிரம் படி பாதுகாவலாய் இருக்கின்ற
ஆயிரம் திருப் பெயர்களை உடையவன் -என்று
சொன்னோமே அன்றோ முன்பே -ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் -9-9-3-
அவற்றில் வாய்க்குத் தோற்றிற்று ஒரு திருப் பெயரைச் சொல்லுங்கோள் –
மனத்தின் துணையும் வேண்டா -என்பார் -பேசுமின் -என்கிறார் –

—————————————————————————————————–

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-

ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக நிரதிசய வாத்சல்யம் -இவனை பூஜிக்கும் பாக்யாதிகர்கள் -சிலாக்யத்தை பேசுமின் –
பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து-கடலால் சூழப்பட்டு
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்-பரிமளம் பரப்பி -சோலைகள் வயல்கள்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி-ஆஸ்ரிதர் இடம் நிரதிசய வாத்சல்யம் -சேஷித்வ அநு ரூபமான மார்க்கத்தால்
-நீதி வானவர் போலே -புஷ்பாதி உபகரணங்கள்
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே-கொண்டு பூஜித்து -பாக்யம் செய்த பிரகாரத்தை கூச்சம் இல்லாமல் பேசுமின்
-ஸ்லாகித்து -உங்கள் யோக்யதை பார்க்காமல் -நைச்யம் பாராட்டாமல் -என்றவாறு -ஆராதிப்பவர்கள் உடைய வாத்சல்யத்தை பேசுமின் –

பற்றுகின்றவர்க்கு ருசி பிறப்பதற்காக-திரு வனந்தபுரத்திலே புக்கு அடிமை செய்கின்றவர்கள்-
எத்தகைய புண்ணியம் செய்தவர்கள் -என்கிறார் –
அன்றிக்கே
அவர்கள் புண்ணியம் செய்த படியைப்-பேசுங்கோள் -என்கிறார் -என்னுதல் –

பேசுமின் கூசமின்றிப் –
உங்கள் தாழ்வினை பார்த்து கூசாதே பேசுங்கோள்-
தாம் மயர்வற மதி நலம் அருளப் பெறச் செய்தேயும்-பலகாலம் பிறந்து இறந்து போந்த வாசனையாலே-
அருவினையேன் -1-5-1- என்று பேசுகைக்கு கூசின இது –இவர்களுக்கும் உண்டு -என்று இருக்கிறார் –
பகவானைப் பற்றி பேசும் போது கூசத் தான் வேண்டா அன்றோ-அறியாமையால் அன்றோ பேசாது இருந்தது –
பேசத் தக்க சம்பந்தம் உள்ள விஷயம் என்று அறியவே-கூசாதே பேசலாம் அன்றோ –

பெரிய நீர் வேலை சூழ்ந்து-
மிக்க தண்ணீரை உடைத்தான கடலாலே சூழப் பட்டு –

வாசமே கமழும் சோலை –
நறு மணமே கமழா நிற்கும் ஆயிற்று சோலை –
சூழப் போந்த சோலையிலே நறு மணம் புறம்பு போகாதபடி-மதிள் இட்டால் போலே யாயிற்று இருப்பது கடல்-
கடலில் நாற்றம் மேலிடாதபடி-சோலையின் நறு மணமே விஞ்சி இருத்தலின்-வாசமே கமழும் -என்று ஏகாரம் கொடுத்து ஓதுகிறார் –
சம்சார கந்தம் தட்டாத படி -ஸ் வாபதேசம் –
வயல் அணி அனந்த புரம் –
இப்படிப் பட்ட சோலையை உடைத்தான வயலாலே-அலங்கரிக்கப் பட்டு இருக்கின்ற திரு வனந்த புரத்தை
நேசம் செய்து உறைகின்றானை கூசம் இன்றிப் பேசுமின் -என மேலே கூட்டுக
இப்போது
நேசம் செய்து உறைகின்றானை பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -என்பது வியப்பிலே நோக்கு
அன்றிக்கே –
நேசம் செய்து உறைகின்றானை பூசனை செய்கின்றார்கள்-புண்ணியம் செய்த வாற்றை கூசம் இன்றி பேசுமின் -எனக் கூட்டலுமாம்
அப்போது -பாகவதர்கள் பெருமையை கூசம் இன்றி பேசுதல் ஆவது என் என்னில்
பகவத் விஷயம் போலே வாய் வந்த படி சொல்ல ஒண்ணாது-பாகவத விஷயம் -என்பதனைத் தெரிவித்தபடி –

நேசம் செய்து உறைகின்றானை –
பரம பதத்தில் தவிர ஒண்ணாமை யாலே இருக்கின்றான் அத்தனை-அப்பரம பதத்தை வசை சொல்லி ஆயிற்று இங்கு வசிப்பது-
பிரதம பரிகரத்துக்கு செங்கல் சீறை வைப்பது போலே அன்றோ பரமபதத்தில் –
துன்புறு கின்றவர்களை பாது காப்பதற்கு உடல் அல்லாத இடமும் ஓர் வசிக்கும் இடம் ஆயிற்றதோ -என்று
துன்புற்ற வர்களை பாதுகாப்பதற்கு பாங்கான தேசம் என்று விரும்பி வசிப்பது இங்கே யாயிற்று
தர்சனம் சித்ரகூடச்ய மந்தாக்னி யாச்ய சோபனே-அதிகம் புரவாசாச்ச மன்யே தவச தர்சநாத் -அயோத்யா -95-12-என்கிறபடியே
இந்த சித்ரகூடத்தில் வசிப்பது அயோத்யா வாசம் விட மேலானது –

நெறிமையால் மலர்கள் தூவி -பூசனை செய்கின்றார்கள்-
சர்வேஸ்வரன் சேஷி-இவ் உயிர்கள் எல்லாம் அவனுக்கு சேஷம்-என்கிற சேஷி சேஷ பாவ முறைமையாலே-
மலர் முதலானவற்றை அவன் திருவடிகளிலே பணிமாறி-
அன்றிக்கே
அவன் தான் இந்நகரத்தை விரும்பி இங்கே வசிப்பது போன்று-தாங்களும் பக்தியை உடையவர்களாய் மலர்களைத் தூவி -என்னுதல் –
அன்றிக்கே
இவர்கள் வசிக்கிற இடம் என்று அவன் விரும்பி இங்கு வந்ததைப் போன்று-
தாங்களும் ஒருபிரயோஜனத்தை கணிசியாதே -அநந்ய பிரயோஜனராய் அவனை அடைந்து-என்னலுமாம் –

புண்ணியம் செய்தவாறே –
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -திரு விருத்தம்-21 -அடிமை செய்கிறவர்களுடைய அடிமையும் ஓர் அடிமை யாயற்றதோ –
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே ஆயிற்று அவர்கள் –இளைய பெருமாளைப் போலே ஆயிற்று இவர்கள் –
அவன் விட்டுப் போரச் செய்தேயும்-பாரதந்திரியத்தாலே விட மாட்டாதே கிடக்கிறார்கள் இத்தனை அன்றோ –
இங்கே அடிமை செய்பவர்கள் பாக்ய சாலிகள் என்கிறார்-

——————————————————————————————

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

நிருபாதிக சேஷி யைக் கிட்டினவர்கள் நித்ய சூரிகள் ஆவது திண்ணம் –
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி-ஜல புஷுபாதிகள் -பக்தி உடன் மடி தடவாத -சுருள் நாறாத பூ சுண்ணாம்பு கலவாத சந்தனம் –
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்-உத்பாதகன் -நிரந்தர அனுசந்தானம் பண்ணி அனுபவிக்க
-ஜென்மம் -த்ருஷ்ட தோஷம் -போகும் -மேலும்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து-அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்-
நிருபாதிக ஸ்வாமி -யாவரும் அமரர்களில் அந்நிய தமர் ஆவார் -நித்யர் முக்தர் வாசி இல்லையே –
இது திடம் -உங்களுக்கு அறியும் படி சொன்னோம்

திரு வனந்த புரத்தை அடையுமவர்கள் நித்ய சூரிகள் ஆவார்கள்
ஆகையால் நீங்களும் அடைமின் –என்கிறார்

புண்ணியம் செய்து –
பக்தியைச் செலுத்தி-த்யானம் வர்ண ஆஸ்ரம தர்மங்களை அங்கமாக உடைத்தாய் இருக்கும் அன்றோ
ஆக -வர்ண ஆஸ்ரம தர்மங்களின் பலமான பக்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தை சொல்லுகிறது-
புண்ணியம் -கர்ம யோகம் -அங்கி யான பக்தி -த்யானம் -வர்ணாஸ்ரம தர்மம் புண்ணியம் -சத் கர்மம் புண்ணியம் காரணம் -காரியம் பக்தி –
மத்ம நாபவ மத் பக்த மத் யாஜி மாம் நமஸ்குரு-மாமேவ ஏஷ்யசி யுக்த்வா ஏவம் ஆத்மாநாம் மத் பராயணா-ஸ்ரீ கீதை -18-65-
என்னிடத்திலேயே பக்தியை உடையவனாய் என்னிடத்திலேயே மனத்தை உடையவன் ஆவாய் -என்னக் கடவது அன்றோ
நல்ல புனலொடு மலர்கள் தூவி –
நல்ல புனலொடு கூடின மலர்களை பக்தி பரசமாய்க் கொண்டு பணி மாறி
இத்தால் அர்ச்சனை -முதலியவற்றைச் சொல்லுகிறது
என்னை ஆராதிக்கிற வனும் என்னை வணக்கம் செய்கிறவனும் ஆவாய் -என்னக் கடவது அன்றோ –

எண்ணுமின் –
சததம் கீர்த்தயந்தோ மாம் யதன் தச்த த்ருடவ்ரத-நமச்யந்தச்ய மாம் பக்த்யா நித்ய யுக்தஉபாசதே -ஸ்ரீ கீதை -9-14
எப்பொழுதும் என்னை கீர்த்தனம் செய்கின்ற வர்களாயும் -என்னா நின்றதே அன்றோ –அதனைச் சொல்லுகிறது –

எந்தை நாமம்-
இடறினவன் அம்மே என்னுமா போலே-திருநாமம் சொல்லுகைக்கு ஒரு தகுதியைத் தேடிக் கொள்ள வேண்டா-
நஞ்சீயர் பட்டரை-திரு நாமம் சொல்லும் பொழுது பக்தி உடையனாய் சொல்ல வேண்டுமோ -என்று கேட்க-
கங்கையில் முழுகப் போமவனுக்கு-வேறு உவர்க் குழியிலே முழுகி போக வேண்டுமோ-
மேல் உண்டான நன்மையைத் தருகிற இது-அதிகாரி சம்பத் ஆகிய -தகுதியையும் தர மாட்டாதோ -என்று அருளிச் செய்தாரம் –
திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது-அவர்களே அதிகாரிகள் –

இப்பிறப்பு அறுக்கும் –
இ -சுட்டு எழுத்து
கண்டதே அன்றோ இதனுடைய இழையீடு -நூலாலே தைத்தல்
இழை இட்டால் போலே இருக்கிற அவயவங்களுடைய சேர்த்தி
கவிழ்ந்து பார்க்கவே அமையுமே இதனுடைய அகவாயை-தன்னைடையே வைராக்கியம் பிறக்குமே –
இப்படி கண் கூடாக கண்டு இருக்கச் செய்தேயும் வைராக்கியம் பிறவாது இருக்கிறதே அன்றோ வாசனையின் கனம் –
ஒரு செட்டியை -இவன் தமிழில் சிறந்த புலமை படைத்தவன் -என்று பட்டருக்கு காட்டினார்களாக
பட்டர் அவனைப் பார்த்து -உனக்கு யாதேனும் கேட்க விருப்பம் இருப்பின் கேட்கலாகாதோ -என்ன
சிலர் -காண்கிற இத் தேகத்துக்கு அவ்வருகு ஆத்மாவும் இல்லை –
புண்ணிய பாபங்களும் இல்லை-ஈஸ்வரனும் இல்லை -என்று இரா நின்றார்கள்-
சிலர் -இச் சரீரம் தான் நிலை அற்றது -என்று இதனுடைய தாழ்வினைக் கண்டு-
அவ்வருகே நிலைத்து இருக்குமது ஒன்றனை பற்ற வேண்டும் -என்று இரா நின்றார்கள்-
விஷயம் ஒன்றாக இருக்க வேறுபட்ட இவ்விரண்டு கொள்கைகளும் நடக்கிற படி எங்கனே -என்ன-
தைவீ ஹி ஏஷ குணமயீ மம மாயா துரத்தயா-மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-
என்கிறபடியே
நல்லவர்கள் இதனுடைய தாழ்வினைக் கண்டு இதனைக் கழித்து கோடற்க்கும்-
மற்றையோர்கள் இதிலே இனிமை உண்டு என்று நினைத்து கேடு உறுகைக்கும்-
உடலாம்படி கர்மங்களுக்கு தகுதியாக இதனை எடை எடுத்து காணும் -நிறுத்து -அறுதி இட்டு -காணும் –
ஈஸ்வரன் பண்ணிற்று என்று அருளிச் செய்தார்-
இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தரு கணையா
காரணமும் வல்லையேல் காண் –இரண்டாம் திரு -66-என்னும்படியாய் இருக்கும் அன்றோ-
நாம் நன்றாக நினைத்து இருக்குமது அன்று இதன் தன்மை –அல்பம் அஸ்திரம் -ஆகாரம் பிரத்யஷிக்கலாமே –
ஈஸ்வரன் வெளிச் சிறப்பினை பிறப்பிக்க-இது சிறிது -நிலை அற்றது -என்று அறிந்த இதுவே காண்-
இதுக்கு நிலை நின்ற தன்மை –இப் பிறப்பு அறுக்கும் –
இப்படி தாழ்வு உள்ளதாக அறியப் படுகின்ற இச் சரீர சம்பந்தத்தை அறுக்கும் –

செறி பொழில் அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் –
செறிந்த சோலையை உடைத்தான திரு வனந்த புரத்திலே
வந்து திருக் கண் வளர்ந்து அருளுகிற இறைவனுடைய
எல்லை இல்லாத இனிமை உடைய திருவடிகளை கிட்டுமவர்கள் –

அப்பால் அமரர் ஆவார் –
இப்பிறப்பு அறுக்கும் என்ன வேண்டாத சரீரத்தை-மேற்கொண்டு அடிமை செய்கிறவர்களும்
திரு வனந்த புரத்திலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன்-திருவடியை அடைந்தவர்கள் –
அப்பால் அமரர் ஆனவர்களும் –அணுகுவர்
ஆக –
இதனால் விரோதியைப் போக்கும் அளவே அன்றியே-
விரும்பிய பொருளைப் பெறுகைக்கும்-திரு வனந்த புரமே-அடையத் தக்க தலம் -என்கிறது –

திண்ணம்
-நிச்சயம் –

நாம் அறியச் சொன்னோம் –
அவனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நாம்-
தேகத்தையே ஆத்மாவாக அபிமானித்து இருக்கிற நீங்களும்-அறியும் படி-
உங்கள் கேட்டினைப் பார்த்துச் சொன்னோம்

——————————————————————————————-

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-

சர்வ தேவ நிர்வாகம் -ஸூ ரிகள் ஆதரிக்கும் -நாமும் போவோம்
அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து-தேவர்களுக்கும் உத்பாதகன்
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்-மலையாள பாஷை -சேனை முதலியார் ஆராதிக்கும்
-எடுத்துக் கை நீட்டும் அமரர்கள் –
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்-நாமும் அந்தரங்க கைங்கர்யம் செய்ய வேண்டுமே –
நம் திவ்ய தேசம் அன்றோ -குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-கபாலித்தவம் போக்கி அருளி –

நித்ய சூரிகளும் வந்து அடிமை செய்வது இங்கே ஆகையாலே-
திரு வனந்த புரமே அடையத் தக்க மேலான இடம்-
அங்கே நாம் அடிமை செய்ய வேண்டும் –என்கிறார்

சசைன்ய புத்ர சிஷ்ய-சாத்ய சித்த பூசூரர்-அர்ச்சனத்துக்கு
முக நாபி பாதங்களை-த்வார த்ரயத்தாலே காட்டும்
சாம்யம் -அனந்த சயனத்திலே -வியக்தம் -ஆச்சார்யா ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்தி-3-84-
அமரராய் திரிகின்றார்க்கு ஆதி -பிரமன் முதலான தேவர்கள் -திரு நாபியின் பக்கம்
அமரர்கோன் -விஷ்வக் சேனர் -நித்ய சூரிகளுக்கு திருமுக மண்டலம்-
நமர்களோ –நாமும் போய் நணுக வேண்டும் -திருவடியே புகல்-

அமரராய்த் திரிகின்றார் கட்கு –
மாம்பழத்தோடு ஒரு சம்பந்தம் இல்லாத ஒன்றுக்கு-
மாம்பழ உண்ணி -என்று பெயராய் இருக்குமா போலே-இக்கரையராய்-
அவ்வருகு உள்ளார் காட்டிலும் நாலு நாள் எழப் பிழைத்து இருந்து சாகிற-இவ்வளவினையே கொண்டு
தங்களுடைய ஆயுளுக்கு ஓர் எல்லை உண்டாய் இருக்கச் செய்தே-
அது இல்லாரைப் போலே அகங்காரம் கொண்டு திரிவார்கள் ஆயிற்று-
தளைக் கட்டு கனத்து இருக்கச் செய்தேயும் அச்சம் அற்றவர்களாய் திரிவர்கள் ஆதலின் -திரிகின்றார்கட்கு -என்கிறார்-
இவன் -மனிதன் -அளவு அல்ல ஆயிற்று அவர்களுக்கு –விடும் போது ஒரு சரீரத்தை மாத்ரம் ஆதல்-
ஒரு பெண்பால் ஆதலாய் இருக்கும் இவனுக்கு-பிரமனுக்கு அண்டம் அத்தனையும் விட வேண்டி வரும் அன்றோ –

ஆதிசேர் அனந்த புரத்து –
இவர்களுக்கும் அவர்களுக்கும் ஒப்புமை அவனை காரணனாக உடையும் தன்மையிலே ஆயிற்று-
அவர்களுக்கு ஆத்மாவைப் பாதுகாத்துக் கொடுக்கும்-இவர்களுக்கு சரீரத்தையும் ஆத்மாவையும் சேர்த்து-
இச் சரீரம் கணம் தோறும் நசிக்க-உண்டாக்கி நடத்திக் கொடுக்கும்-
அனுபவிப்பித்து உளராம் தன்மையை நோக்கும்-உலகத்து எல்லாம் காரணனாய்-உள்ளவன் வந்துவசிக்கிற திரு வனந்த புரத்து –
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் -விண்ணோர்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் நித்ய கைங்கர்யம் செய்கிறான் –
நித்ய சூரிகள் எடுத்துக் கை நீட்டுவர் –

நமர்களோ சொல்லக் கேண்மின்-
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-1-1- என்று சொன்னதற்கு உள்ளே அடங்கும்படி-
என்னோடு -நிருபாதிக -காரணம் பற்றி வாராத –சம்பந்தம் உடையார் அடங்கலும் நான் சொல்லுகிற வார்த்தையை கேளுங்கோள் –
பந்துக்களாய் இருப்பார்க்கு நல் வார்த்தை சொல்ல வேண்டும் அன்றோ –

நாமும் –
அடிமையிலே ருசி உடைய நாமும் –
நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகச் சென்று கிட்டி அடிமை செய்ய வேண்டும் –
போய் நணுக வேண்டும்-
இங்கே இருந்து நினைக்குமது போராது-போய் புக வேண்டும் –

அவர்கள் நடுவே பிறவிகளில் உழன்று வருகிற நமக்கு கிட்ட ஒண்ணுமோ -என்னில் –
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே –
தேவர்களுக்கு சேனாதிபதியாய்-முதல்வனான சுப்ரமணியனுக்கும் கூட தந்தையான
சிவ பெருமானுக்கு-பாவத்தால் வந்த துன்பத்தினைப் போக்கின கிருஷ்ணனை-
அன்றிக்கே
தேவர்களும் அசுரர்களும் கூட்டுப் படையாய் எதிரிட்டு வரும் அன்றும்-
அவர்கள் ஆபத்தினைப் போக்கி பாது காப்பவன் ஆயிற்று -என்னுதல் –
ஆனபின்பு நமக்கு அந்நகரத்தை அடைய ஓர் அருமைப் பாடு உண்டோ –
செருக்கு கொண்டவர்களுக்கும் துக்கத்தினை போக்குமவன்-
யான் -எனது -என்ற செருக்கு அற்ற நமக்கு-தன்னைக் கிட்டுகையில் அருமைப் படுத்துமோ –
குமரனார் தாதை துன்பம் துடைத்த-சிவன் முதலாயினோர்க்கு துக்கத்தினை போக்குமவனாய் இருக்கும்-
கோவிந்தனாரே -பசுக்களுக்கும் ஆயர்களுக்கும் கையாளாய் இருக்கும் கோவிந்தனாரை நாமும் போய் நணுக வேண்டும்-

————————————————————————————————

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-

சகல ஜகத் ஸ்ருஷ்டித்து – -ஆதி -ஜகத் காரணன் -வர்த்திக்கும்–கைங்கர்யம் செய்ய -வம்மின் –
ப்ராப்ய அலாப நிபந்தமான கிலேசம் –
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்-லோகங்கள் மனுஷ்யாதிகள் பிராணிகள் -தேவதைகள் -மகதாதி பதார்த்தங்கள்
-ஒன்று ஒழியாமல் படைத்து சம்ஹரித்த -ஸ்ருஷ்ட்டி இரண்டாவது கார்யம் -சம்ஹாரமே முதல் கார்யம் -அநாதி எல்லாம் -சத் கார்ய வாதம் –
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
திருமேனி உடன் -கோவிந்தன் -ஊழி முதல்வன் -ஸ்ருஷ்ட்டி உன்முகனான சர்வேஸ்வரன் –காலத்தால் லஷிக்கப் பட்ட சகல பதார்த்தங்கள்
-கல்பாந்தம் -ஊழி -அவற்றுக்கு முதல்வன் -ஆழி மழைக்கண்ணா -தயா கார்யம் -அனுக்ரகம் -உருவம் சொல்லி
காம் விந்தத்தி கோவிந்தா -சொத்தை அடையும் கோவிந்தன் -தம பர -ஏகி பவதி-
கோவிந்தன் துடைத்தும் படைத்தும் -க்ரஸிக்கிறான் -என்றபடி -துடைப்பது ஆகார அவஸ்தா பேதங்கள் –
ஸ்தூல ஸூஷ்ம ஆகாரங்கள் –கிருஷ்ணனே உத்பத்திக்கும் சம்ஹாரத்துக்கும் காரணம் -சொன்னதால் கோவிந்தனார் –
காரணத்தை பிரகாசிப்பித்ததால் -எம் பரம மூர்த்தி -மயர்வற மதி நலம் அருளி -அமலன் ஆதி பிரான் -உபகாரகன் -சர்வாதிக சேஷி –
ஸ்ருஷ்ட ஜகத் ரக்ஷணம் அர்த்தமாக கண் வளர்ந்து அருளி
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்-அவனுடைய திவ்ய தேசம் -ஜல ஸம்ருத்தி –
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே-பாபங்கள் விலகும் -சம்மார்ஜனம் திரு அலகு இடுதல் –அடிமை செய்யப் பெற்றால்
-கைங்கர்யம் இல்லாத கிலேசம் -கடு வினை -களையலாம் -பிராயச்சித்தம் இல்லை -கைங்கர்யம் செய்வதே –
சேஷத்வ ஞானத்துடன் கைங்கர்யம் செய்யா விடில் கிலேசம் வருமே அத்தைப் போக்கும் என்றபடி –
கைங்கர்ய அலாப -நிபந்தமான அதிசயித துக்கம் களையலாம் –

சர்வேஸ்வரன் திருக் கண் வளர்ந்து அருளுகின்ற-திரு வனந்த புரத்திலே சென்று-அடிமை செய்யப் பெறில்-
ஒரு தேச விசேடத்திலே போய் அடிமை செய்யப் பெற்றிலோம்-என்னும் துக்கம் போம் –என்கிறார்
–கடு வினை -பிராப்ய அலாப அதிசயித துக்கம் –

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்-படைத்த வெம் பரம மூர்த்தி –
துடக்கை -அழித்தல்-அழித்தல் முன்னாக அன்றோ படைத்தல் இருப்பது-
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்தி அபி ச அப்யய-கிருஷ்ணச்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம் -பாரதம் வீட்ம பர்வம் –
உலகின் உடைய தோற்றமும் கிருஷ்ணன் தான் அழிவும் செய்து அருளினான் என்பது – பிரசித்தம் -என்றபடியே
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -பெரியாழ்வார் திருமொழி -1-1-8-என்கிறபடியே-
அவாந்தர நைமித்திக பிரளயம் -ப்ரஹ்மா பகல் பொழுது – முடிந்த உடன் –இதில் தான் வயிற்றில் வைத்து ரக்ஷிப்பார்-
ஏழும் -என்றது உலகு அளந்த பொழுது ரக்ஷிக்கும் பாரிப்பால் அளந்தது போலே இங்கும் –
மூன்றை காண வேண்டியவள் ஏழைக் கண்டாள் -மண்ணை காண வேண்டியவள் காரியத்தை கண்டாள்-

உலகு உயிர் தேவு மற்றும் படைத்த –
உலகத்தையும் தேவ சாதியையும்-மற்றும் உண்டான உயிர்களையும் உண்டாக்கின -என்றது-இவை மிகைத்த அன்று அழித்து-
பின்னர் பேற்றினை அடைவதற்கு கருவியான-கரணங்களைக் கொடுத்து காப்பாற்றினவன் -என்றபடி –

எம் பரமமூர்த்தி-
அடியார்க்கு எளியனான சர்வேஸ்வரன்-ஆஸ்ரித பவ்யன் -எம் -சர்வேஸ்வரன் -பரம மூர்த்தி

பாம்பணைப் பள்ளி கொண்டான் –
படைக்கப் பட்ட உலகத்திலே-பாதுகாக்கும் பொருட்டு-திரு வனந்த ஆழ்வான் மேலே-திருக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய-

மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம் –
தண்ணீர் நிறைந்து இருப்பதனாலே-மடைத் தலைகளிலே களித்து-
வாளைகள் பாயா நின்றுள்ள-வயலாலே அலங்கரிக்கப் பட்டு உள்ள நகரத்திலே-
முக்தர்கள் சாமகானம் செய்து களித்து வசிக்குமாறு போலே ஆயிற்று-அந்நகரிலே திர்யக்குகளும் களித்து வசிப்பது –

கடைத்தலை சீய்க்கப் பெற்றால் –
திருவாசலிலே திரு வலகு திருப் பணி செய்யப் பெற்றால் –

கடு வினை களையலாமே –
அடிமை செய்யப் பெறாமையாலே-உண்டான துயரம் எல்லா போம்-
சேஷத்வ ஞானம் பிறந்தால் –ஸ்வரூபத்துக்கு அனுரூபமான கைங்கர்யத்தை-
பெறாமையால் வரும் துயரம்-கழுவாயால் போக்குமது அன்றே-

—————————————————————————-

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8-

நிரதிசய போக்யம் -அதி பிரியங்கரன் -திருவடிகளை அனுபவிக்க -நம்முடையார் -மாதா பிதா -மத அந்வயானாம் -ஆளவந்தார் -இவர் அவன் இடம் –
பரம ப்ராப்ய புதன் –
அதன் படி நடக்க பாருமின் -அனுஷ்டானம் என்றுமாம்
கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை-குரூரமான பாபங்கள் -பிராப்தி விளம்ப பிரதிபந்தகங்கள் –
பாபம் -முன்பு கிலேசம் -ஆய -கைங்கர்யம் -மன்னவர் விதியே -அடைவது உறுதி -அதனால் விளம்பம் என்கிறார் இதில் –
மன்மதனை பயந்த -பிரசவித்தும் காளை இளகிப் பதித்து –
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்-இருப்பிடமாகக் கொண்ட திவ்ய தேசம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண-சம்ச்லேஷ ஸ்பரிசத்தால் பணைத்து-திருப் பாதம் காண துவாரம் நமக்கு -த்வார த்ரயம் –
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்-நடந்து போக -வழி எல்லாம் -உள்ளார் ஸத்காரம் -அர்ச்சிராதி கதி போலே
அறிவிப்பார் குறை இல்லாமல் -விஷய வை லக்ஷண்யம் அறிந்த நாம் -மயர்வற மதி நலம் அருள பெற்ற நாம் -சொன்னோம் -கேள்மின் -அத்யாகாரம் –

திரு வனந்த புரத்திலே திருக் கண் வளர்ந்து அருளுகிற-சர்வேஸ்வரன் திருவடிகளை
காணப் போருங்கோள் என்று-அனுகூலரை அழைக்கிறார்-

கடுவினை களையலாகும்
நம்மால் போக்க அரியதான பாவங்களைப் போக்கலாம் –

காமனைப் பயந்த காளை-
உங்களுக்கு நான் உபதேசிக்க வேண்டுவது-அப்பரமனை நேரில் காணும் அளவே –
நாட்டினை தன் அழகாலே வெருட்டித் திரிகிற-காமனுக்கும் தமப்பனாய் இருப்பான்-
இருவரையும் ஒரு சேரக் கண்டால்-முறை கெடச் சொன்னார்களே என்று இருக்கும்-
மரனாந்தானி வைராணி பிரசவாந்தம் ச யௌவனம்-குபிதம் பிரணதாந்தம்ச யாசிதாந்தாம்ச கௌரவம் –
கற்றைக் குழலார் கவினெலாம் ஓர் மகவை-பெற்ற கணத்தே பிரியுமே
இளமைப் பருவம் ஒரு குழந்தையை பெறுகிற வரையில் தான் -என்பதும்
இவன் விஷயத்தில் வேறு வகையாக இருக்கிறது காணும் –
காளை –அழகன் -சேவை சாதித்ததும் உங்கள் உடன் நான் இல்லை -சாஷாத் கரிக்கும் அளவு தான் பேச முடியும் —
சாஷாத் மன்மத மன்மதன் -அவனும் மடல் எடுக்கும் படி அன்றோ இவன் அழகு –

இடவகை கொண்ட தென்பர் –
இவ்விடத்தை வசிக்கும் இடமாகக் கொண்டது-என்று அறிவு உடையார் அடங்கலும்
செவி சீப்பாய்ந்து கிடப்பர் -ஈடுபட்டு இருப்பார் -என்றபடி
பத்மநாபம் விதுர்ப்புதா -பிரமாணம்-அறிஞர்கள் பத்ம நாபனை அறிகிறார்கள் -என்றபடி –

எழில் அணி அனந்த புரம் –
பரம பதத்தில் ஒரு புதுமை செய்ய ஒண்ணாது அன்றோ-
அங்குத்தை காட்டிலும் இங்குத்தைக்கு தன்னேற்றம் இருக்கிறபடி –

படமுடை யரவில் –
சர்வேஸ்வரன் சாய்ந்து அருளினால்-அவனுக்கு பிறக்கும் மலர்த்தி சொல்லுகிறது -படமுடை அரவு -என்று –

பள்ளி பயின்றவன் –
இயற்கையிலே முற்றறிவினனான-ஸ்வாபாவிக சர்வஞ்ஞன் -அப் பராத் பரனும்
உணர்த்தி அறும்படி ஆயிற்று அப்படுக்கை வாய்ப்பு –
மெத்தன்ன பஞ்ச சயனம் -பெரும் துயில் தான் தந்தானோ –

பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் –
திருவடிகளைக் காணும்படியாக-
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற-கரியான் கழல் காண கருதும் கருத்து -9-4-5- என்கிறபடியே
என்று இருக்கும் என்னோடு ஒரு குடல் தொடக்குடையார் அடங்கலும்-போகப் பாருங்கோள் –
திரு அத்த்யயனம் பாடா நிற்க -இதனைக் கேட்டருளி-ஆளவந்தார் –
நமக்கு ஆழ்வார் உடன் ஒரு சம்பந்தம் உண்டாக வேண்டும் -என்று-
அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு-எழுந்து அருளினார்-
இத்தைச் செய்தாவது ஆழ்வார் சம்பந்தம் பெறலாம் என்று -நாமோ -ஆழ்வார் சம்பந்திகள் என்று இறுமாப்புடன் போவோமே –
நாம் -திருக் கண் வளர்ந்து அருளுகிற அழகில் சுவடு அறிந்து
எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -8-7-1-என்னக் கடவ நாம் –

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் –
அவ்வடிவினைக் காண வேண்டும் என்னும் விருப்பத்தினைக் உடைய நீங்கள் அறியும்படி சொன்னோம்

————————————————————————————–

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

ப்ராப்தனானவன் -திருவடிகளில் கைங்கர்யம் பண்ண -பிரதி பந்தகங்கள் போகும் –
நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான-வைத்த நாள்கள் எல்லை குறுகிச் சென்று -ஆழ்வார் குறித்த நாள்கள்
-சரீர அவசான-திவசங்களும் அருகில் வர –
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்-பொழில்களை உடைத்த திவ்ய தேசம் -ரக்ஷை உடன் -இருக்க –
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு-தூப பாட பேதம் -ஆராதன உபகரணங்கள் -குற்றம் இல்லாமல் -சேகரித்து
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே-ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவன் திருவடிகள் -சீலாதி குணங்களை ஸ்துதிக்க
திருப் பொலிந்த சேவை என் சென்னியில் மேல் பொருத்தி -வாமனன் சீரை சீலன் எம் ராமானுஜன் -கைங்கர்ய பிரதிபந்த கர்மங்கள் தானே போகுமே –

சரீரத்தின் முடிவு அணித்தாயிற்று-
ஈண்டென திரு வனந்த புரத்திலேபுக்கு அடிமை செய்ய –
அடிமை செய்வதற்கு விரோதியான-கர்மங்கள் தாமே அழியும் –என்கிறார்-

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
நாளேல் அறியேன் –9-8-4-என்றும்-மரணமானால்-9-10-5- என்றும் –
சொல்லிப் போந்த நாள்களும் கிட்டிய ஆயிற்றன-
பிறர்க்கு அப்படி தாம் சொன்னாரோ -என்னில்-
மாலை நண்ணி -என்கிற திரு வாய் மொழியில்
மரணமானால் -என்கிற சர்வேஸ்வரன் எண்ணத்தை தாம் அறிந்து-அதனைப் பிறர்க்கு உபதேசித்தார் அன்றோ-
இதிலும் பரோபதேசம் அன்றோ –
தஸ்மின் அஸ்தமிதே பீஷ்மே கௌரவானாம் துரந்தரே-ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் -பாரதம்
தர்ம புத்திரன் இடம் கிருஷ்ணன் அருளியது-
வீடுமன் முடியா நின்றான்-பின்னை இவ்வர்த்தம் கேட்கலாவார் இலர் -என்று-அவன் அருளிச் செய்த வார்த்தையை
இப்போது இவர் தாம் அருளிச் செய்கிறார்-
அஸ்தமிதே –
கண்களுக்கு வெளிச் சிறப்பைப் பண்ணுவாரும்-நெஞ்சுக்கு வெளிச் சிறப்பினைப் பண்ணுவாரும் ஆக-சூரியர் இருவர் ஆயிற்று
ஞானம் ஆகி ஞாயிறு ஆகி -திருச் சந்த விருத்தம் -114- என்னக் கடவது அன்றோ –
ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி –
ஆத்மாவைப் போன்று நித்யமாக இருக்கும் அன்றோ-தர்ம பூத ஞானமும்
இப்படி இருக்க -ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி -என்பான் என் என்னில் –
இதற்கு தோன்றலும் மறைதலும் ஆகிய செயல்கள்-ஞானம் செல்லுதற்கு உரிய வழியை பற்றியதாய் இருக்கும் அன்றோ –ஆதலால் -என்க –
வீடுமன் போனால் பின்னர் கொள்வாரும் கொடுப்பாரும்-இன்றிக்கே தொடர்ச்சி அறும்-
இதற்கு பட்டர் -அருளிச் செய்ததாக பரிஞை என்கிற ஊரில் -அப்பர் பணிக்கும்
ஒரு மதிப்பன் தலையில் கிடவாத அன்று-கொள்வார் கொடுப்பார் இன்றியே-
எளி விலையனாய்ப் போம் -என்று அருளிச் செய்வார்-
தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் –
ஆகையால் காண் உன்னை விரைவு படுத்தி-அவன் பக்கலிலே போய்க் கேள் -என்கிறது-

சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம் –
எல்லை இல்லாத இனியதான-அந்நகரம் தானே-மரண நிலையில் பாதுகாவலாம் –

தூம நல் விரை மலர்கள்-
நன்றான தூபம்-நறு மணத்தினை உடைய வான நல்ல மலர்கள் -இவற்றை

துவளற வாய்ந்து கொண்டு-
தனக்கும் அவனுக்கும் ஒத்ததாம்படி-சிறப்புடையதாக்கிக் கொண்டு –

வாமனன் அடிக்கென்று ஏத்த-
தன் உடைமை பெறுகைக்கு தான் இரப்பாளனாய் இருக்குமவன்-திருவடிகளுக்கு நன்று ஏத்த –

மாய்ந்து அறும் வினைகள் தாமே –
இவன் தன்மைக்கு தகுதியான தொண்டிலே சேர-விரோதிகள் அடைய ஒழிந்து போகும்-

————————————————————————-

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-

ஆராதன ரூப கைங்கர்யம் பண்ணி ணவத்திகா மாஹாத்ம்யம் உடையவர் ஆவார்
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்-ஸ்ரீ ய பதி என்றதுமே -தாமே போகும் -தன்னடையே போம் -நானும் வேண்டா நீயும் வேண்டா –
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று-பொன் மதிள்கள் -ஸ்வாமிக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல-சந்தனம் தீபம் தூபம் புஷபங்கள் –
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே-குற்றம் -கர்த்ருத்வ -பலம் அபேக்ஷிக்காமல் அஹங்காரம் மமகாராம் இல்லாமல்
த்ரிவித தியாகம் -பல சங்க கர்த்ருத்வம் இல்லாமல் -அங்கேயே கார ஸந்துஷ்டாராக ஏத்தினால் கொள்ளக் குறை வில்லா புகழ் அடைவார்கள்

திரு வனந்த புரத்திலே புக்கு-அடிமை செய்கிறவர்கள் பெருமை-பேச நிலம் அன்று –என்கிறார்

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன-
தாய் தந்தையர்கள் பெயரைச் சொல்ல-பலகாலமாக ஈட்டிய-பாவங்கள் தாமே போகும்-
அப்பா -என்ன உச்சி குளிரும் காணும் –மகனுக்கு இல்லை -அப்பாவுக்கு -அநாதி காலம் இந்த குரல் கேட்க கிருஷி பண்ணினவன் அன்றோ –
கேசவ தொடங்கி மாதவ -இங்கு -வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை –

நாளும்-ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று-சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார்-
அங்குத்தைக்கு ஈடான-பொன் மதிளை உடைய-திரு வனந்த புரத்திலே-
வசிக்கிற என் ஸ்வாமிக்கு-என்று-மலர்கள் முதலான கருவிகளைக் கொண்டு-அடைய வல்லவர் –

அந்தமில் புகழினாரே –
அமரர் ஆவார் -என்கிற அளவு அன்றிக்கே-விண்ணுளாரிலும் சீரியரே -ஆவர்

—————————————————————————————

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

பரமபதத்தில் மதி முக மடந்தையர் –
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை-குறையாத புகழ் -சர்வ காரண பூதன்
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்-பொழில் சூழ்ந்த திரு நகரி
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்-கேவலம் பர உபதேசம் ஐந்து -தம்மையும் கூட்டி அருளிய ஐந்தும் –
நாமும் நணுக வேண்டும் -கூட்டிக் கொண்டு அருளிச் செய்தவை அர்ச்சிராதி கதியில் சென்று
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே-அப்ராக்ருத அப்சரஸ் ஸ்த்ரீகள் ப்ரஹ்மாலங்காரம்
-சூடகமே -பராபர குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் -சத்தம் மாலா ஹஸ்தா -இத்யாதி -அலங்காரம் பெறப் பெறுவர்

நிகமத்தில்
இத் திருவாய் மொழி வல்லார்-திரு நாட்டில் உள்ளாருக்கு-இனியர் ஆவார்-என்கிறார்-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை –
திரு வனந்த புரத்திலே-எல்லை இல்லாத நற் குணங்களை உடையனாய்-உலகத்திற்கு எல்லாம்-காரணனாய் உள்ளவனை –
அடைகின்றவர்களும் அந்தமில் புகழினார்கள் –அடையப் படுகின்றவனும் அந்தமில் புகழினான் காணும் –
பரம பதத்தை விட்டு-திரு வனந்த புரத்திலே வந்து-அடியார்களுக்காக திருக் கண் வளர்ந்து-அருளுகையாலே
புகழிற்கு ஒரு முடிவு இல்லை ஆயிற்று அவனுக்கு –
பற்றினை விட்டு உகந்து அருளின நிலத்தில் அடிமை செய்கையாலே-புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு –
இவனுக்கு அடிமை கொள்ளுகையாலே புகழிற்கு எல்லை-இல்லை ஆயிற்று அவனுக்கு-
அவனுக்கு அடிமை செய்கையாலே புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு-
இந்த உலகத்திலே பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிகிற-இவனுக்கு புகழ் உண்டாகில் ஆயிற்று-பரம பதத்தில் இருந்தால் அவனுக்கு புகழ் உண்டாவது-
இந்நிலத்தை விட விட இவனுக்கு புகழ் உண்டாமாறு போலே-அந்நிலத்தை விட விட அவனுக்குப் புகழ் உண்டாம்-
இருவருக்கும் இரண்டும் கிடைக்காத பேறு ஆம் அன்றோ –

கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள் –
எப்பொழுதும் மலர்களை உடைய சோலைகளால்-சூழப்பட்ட திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –

ஐந்தினோடு ஐந்தும் வல்லார் –
இரத்தினங்களை முகம் அறிந்து கோத்துச் சேர்த்தியைக்-கொண்டாடுமாறு போலே-ஐந்து ஐந்தாக ஆயிற்று அனுபவிக்கிறது –

அணைவர் போய் அமர் உலகில் பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே –
ஸ்ரீ வைகுண்டத்து ஏறப் போய்-
தம் பஞ்ச சதானி அப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -கௌஷீதகி உபநிஷத்
நூறு பேர்கள் மாலைகளைக் கையில் உடையவர்களாய்-
அந்த முத்தனை எதிர் கொண்டு அழைக்கிறார்கள் -என்பது போன்றவைகளில் சொல்லுகிறபடியே-
அங்குத்தை அமர மகளிர்கள் உடைய விருப்பத்துக்குப்-பொருளாக இருப்பார் -என்றபடி-
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ள -10-9-10-என்றதனோடு-
வேய் மரு தோள் இணை அணைவர் -என்கிற இதனோடு-வாசி இல்லை-
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -10-9-10-என்னக் கடவது அன்றோ-

————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தனு வ்ருத்திகளுக்கு அஸ்ய பிராப்யத்வம் துரித ஓகம்
நிவர்த்தனம் வைகுண்ட மேத்ய கரணீய
அசேஷ தாஸ்யம் அத்ரைவ கேவலம்
அநந்த புரே சடஜித் த்வதீயே –

தனு வ்ருத்திகளுக்கு -சரீரம் உடைய சம்சாரிகளுக்கு
அசேஷ தாஸ்யம் அத்ரைவ -இந்த தேகத்துடன் இந்த தேசத்தில்

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்ரீ கேஸவாத்வேனே அத்புத சரிதேனே கதாதீச தாஸ்ய சஹா –
த்ரயீ மயன் ஆஸந்நத்வாத் பதித்வாத் அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்
வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை மதன ஜனனதா
புஜ சாய்த்தவம் முக்யைகி சரித்ரை அத்பத் கிலேச அபஹர்த்தா-

1–ஸ்ரீ கேஸவாத்வேனே–கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்

2–அத்புத சரிதேனே–அனந்த புர நகர் மாயன் நாமம் ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே

3–கதாதீச தாஸ்ய சஹா -த்ரயீ மயன்–தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே

4–ஆஸந்நத்வாத்–அனந்த புரம் நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே

5–பதித்வாத்–அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்

6–அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்–அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்

7–வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை–துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும் படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்

8–மதன ஜனனதா–படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–

9–புஜ சாய்த்தவம்–அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே

10-முக்யைகி சரித்ரை–அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே

அத்பத் கிலேச அபஹர்த்தா–மாய்ந்து அறும் வினைகள் தாமே-

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 92-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை

இதில் – ஸ்ரீ பரமபதத்தில் செய்யும் அடிமையை ஸ்ரீ திருவனந்த புரத்திலே செய்யப் பாரிக்கிற ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
குறைவற ஸ்ரீ பரம பதத்தினில் போனால்- வானிளவரசான வைகுந்த குட்டனுக்குச் செய்யக் கடவ
வழு விலா அடிமைகளை-நித்ய சூரிகளில் தலைவரான ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் எடுத்துக் கை நீட்டும்படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவனந்த புரத்திலே ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் மேலே
பள்ளி கொண்டு அருளுகிற பரம பிராப்ய பூதரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே
அனுகூல ஜனங்களும் தாமுமாய் போய் அடிமை செய்ய வேண்டும் என்று மநோ ரதிக்கிற
கெடும் இடரில் அர்த்தத்தை-கெடும் இடர் வைகுந்தத்தை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை-

——————————————————–

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-

கெடும் இடர் வைகுந்தம் -துக்க ரஹிதமான பரம பதம் -வினைகள் போக்கி தானே -அங்கே போக முடியும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை பற்றி இடர் கெடும் சொல்ல வேண்டாமே –
அதனால் பலன் சொல்லாமல்- பாசுரம் சொல்லவே இடர் கெடுமே –

———————————————————–

வியாக்யானம்–

கெடுமிடர் வைகுந்தத்தைக் –
கைங்கர்ய சித்தியாலே நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே –
துக்க ரஹிதமான ஸ்ரீ வைகுண்டத்தை என்னுதல்-
கிட்டினால் போல் – அத்தை பிராபித்து அடிமை செய்யப் பெற்றால் போலே

தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் –
ஏபிஸ் ச சசிவை -இத்யாதியாலே ஸ்ரீ பரத ஆழ்வான் பாரித்தால் போலே
தடமுடை அனந்த புரம் தன்னில்-படமுடை அரவில் பள்ளி பயின்ற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-

அதாவது –
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -என்றும்
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு-ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -என்றும்
அமரராய் திரிகின்றார்கட்கு -என்று தொடங்கி-நாமும் போய் நணுக வேணும் -என்றும்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ-நமர்கள் உள்ளீர் -என்றும் –
தாமும்-தம் திரு உள்ளத்தோடு ஒத்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் கூட அடிமை செய்த மநோ ரதித்த -என்கை –

படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் -மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே –
சர்வோத்தரமான பரம ஆகாசத்திலுள்ளராய்-ஸ்ரீ கோயில் கொள் தெய்வங்களான
ஸ்ரீ திருவடி-ஸ்ரீ திருவனந்த ஆழ்வான்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் –
நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை
இவர் – இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று விஸ்மயப்ப்படும்படி
ஸ்ரீ சேஷசாயியாய்-ஸ்ரீ யபதியான-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்ய வாதரித்தார் ஸ்ரீ ஆழ்வார் – இவரும் ஒருவரே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது-
அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –

———————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -180- திருவாய்மொழி – -10–1-1….10-1-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 19, 2016

தாள தாமரை -பிரவேசம் –

முதல் பத்தால் -பகவத் விஷயம் -புருஷார்த்தம் -என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் -களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார்
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார் –
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தால் -விரோதிகளை அழிக்கும் தன்மையான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் – இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியை கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தக்தபட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா உடன் சம்பந்தப் பட்ட-பொருள்களிலும்-நசை அறாத படியாலே -என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்றார் –
ஒன்பதாம் பத்தால் -இப்படி நசை அற்ற பின்பும் பாதுகாவாமல் ஒழிவான் என் -என்று ஐயம் கொள்ள –
நான் நாராயணன்-எல்லா ஆற்றலோடும் கூடினவன்-உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன்
என்று அருளிச் செய்ய -அவனுடைய சீல குணத்தில் ஆழம் கால் பட்டார்
ஆழ்வார் உடைய பதற்றத்தைக் கண்டு-திரு மோகூரிலே-தங்கு வேட்டையாய் வந்து தங்கி
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய விருப்பத்தை நிறைவேற்றின படியை-அருளிச் செய்கிறார் இந்தப் பத்தாம் பத்தால் –

–பக்தி பாரவஸ்யத்தையால் -அர்ச்சையிலே சரணா கதி பண்ணி
திருக் கண்ண புரம் பெருமாள் வார்த்தை அருளி –
திரு மோகூர் –ஆப்தன் வழித்துணை -யாய் இருப்போம் –
திரு வனந்த புரத்தில் -கூட்டிச் சென்று உமக்கு – சாம்யம் காட்டுவோம் –
திரு வாட்டாற்றில் ஆதி கேசவ பெருமாள் -எம் விதி வகை யே -கச்ச லோக -பெருமாள் சொன்னால் போலே –ஆணை இடுவோம் –
திருப் பேர் நகரில் -அப்பால ரெங்கன் ஸ்வாமித்வம் நாம் என்று ஏற்போம் –
திருமால் இரும் சோலை மலையிலே சரீர ஆதார அதிசயம் காட்டுவோம் –
மேலே ஸ்ரீ வைகுந்தம் கூட்டிப் போவோம் –
ஈரரசு ஆகாமல் -அது நமது விதி வகையே –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயை -ஆழ்வார் களுக்கும் அவனுக்கும் -நாலு ஆறும் – உபதேசித்து –
பத்தாம் பத்தால் -ஆர்த்தி ஹரத்வம் காட்டி -அருளுகிறார் –
அவா -கடல் -குளப்படி போலே -தான் திருவடிகளில் சேர்த்துக் கொண்டு இத்தால் புகர் பெற்றான் –
அர்ச்சிராதிகதி நேராக்க கண்டு -அவன் காட்டக் கண்டு -அனுபவித்து அருளிச் செய்கிறார் –

——————————————————————————————-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன -9-8-4- என்றார்
மரணம் ஆனால் -9-10-5-என்று அறுதி இட்டுக் கொடுத்தான் இறைவன் –
அவன் செய்கிறோம் என்று தலை துலுக்கினால்-அது பெற்ற தாய் மேலே நடக்கலாம் படியாய் இருக்கும் அன்றோ கார்யம் –
ஆகையாலே பெறக் கூடிய கார்யத்தைப் பெற்றாராய்-போக்கிலே ஒருப்பட்டார்-
போமிடத்தில் முகம் பழகின தேகத்தையும் விட்டு
பலகாலம் பழகின பந்துக்களையும் விட்டு
தனியே யாய்ச் செல்ல வேண்டியதாலும்
போகிற இடம் தாம் கண்டு அறியாத நிலம் ஆதலானும்
அதுவும் நெடும் கை நீட்டு ஆதலானும்
வழியிலே தடைகள் பலவாய் இருத்தலானும் –
அதாவது
அவித்யா -அறிவின்மை /கர்மம் /வாசனை / ருசி-என்பன போன்று சொல்லுகிறவற்றைத் தெரிவித்த படி
இவற்றை அடியைப் போக்க வேண்டுமாதாலானும்-வழிக்கு துணையாக கொண்டு போம் போது-சர்வேஸ்வரனையே பற்ற வேண்டும்

அஃது ஏன்
இவன் தானே தனக்கு துணை ஆனாலோ -எனின்
இன்று அளவும் வர-பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிவதற்கு-காரியம் பார்த்து போந்தவன் அன்றோ இவன் –
இச் சரீரத்தோடு இருக்கிற நாளிலே நலத்தைச் செய்ய நினைத்தானே யாகிலும் -அதாவது
சரணாகதி செய்ய -நினைத்தானே யாகிலும் –
இவனுடைய முன் நிலையைப் பார்த்தால் இவன் தான் தனக்கு-துணையாக மாட்டானே –
வழியிலே கொடுபோம் இடத்தில் இவனுக்கு வரும் தடைகளை-அறிகைக்கு சர்வஞ்ஞனாக வேண்டும்-
அறிந்தால் அவற்றைக் கொடு போகைக்கு-சர்வசக்தன் ஆக வேண்டும்
யா சர்வஞ்ஞ சர்வவித்- முண்டக உபநிஷத்
எவன் யாவற்றையும் பொதுப்பட அறிந்தவன் -தனித் தனி அறிந்தவன் -என்பன போன்ற-பிரமாணங்களால்
சர்வேஸ்வரனே சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -என்னா நின்றதே அன்றோ –

எல்லாம் வல்லவனாய் இருந்தானே யாகிலும் -சம்பந்தம் உள்ளவனாய்-இராத போது பயன் இல்லையே
மாதா பிதா பிராதா நிவாச சரணம் ஸூ க்ருத்-கதி நாராயணா -சுபால உபநிஷத் –
தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும்-பாதுகாப்பவனும் சிநேகிதனும் பேறும்
ஆகிய இவை எல்லாம் ஸ்ரீ மன் நாராயணன் ஆகவே இருக்கிறான் -என்பன போன்றவைகளால்
அவனே எல்லா வித உறவினனாக சொல்லா நின்றது இறே-
எம்மானும் எம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததின் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற -பெரிய திருமொழி -7-2-3-என்கிறபடியே
ஆசையாலே அறிவற்றவர்களாய் குழந்தையைப் பெற்று-இளமைக்கு விரோதி -என்று பொகட்டு போமவர்கள்
இவன் தான் பழகிப் போந்த முகத்தாலே -அம்மே -என்ற போதாக
பெண் குரலாலே -ஏன் -என்றும்-அப்பா -என்ற போதாக ஆண் குரலிலே ஏன் என்றும்
இப்படி முகம் கொடுத்துக் கொண்டு போகக் கடவனாய்-இருக்குமவன் அன்றோ -அவன் –

சரீரமானது கட்டுக் குலைந்து பரம பதத்திலே போய்ப் புகும் அளவும் செல்ல நடுவிலே உண்டாகும்
தடைகளை போக்கிக் கொடு போகைக்கு ஈடான விரகு அறியுமவனாக வேண்டும்
விரோதிகளை இரு துண்டமாக இட்டுக் கொடு போக வல்ல ஆற்றல் உடையவனாக வேண்டும்
அசுரரைத் தகர்க்கும்-துணிக்கும் வல்லரட்டன் –
தான் தனக்கு தஞ்சம் அல்லாத அன்று இவன் தனக்கு தஞ்சம் என்று
தன்னை இவன் கையில் காட்டிக் கொடுக்கும்படி நம்பத் தகுந்தவனாக வேண்டும்-
சர்வஞ்ஞான் சர்வ சக்தன் -என்கிறபடியே தானே பிரமாணங்களால் பிரசித்தம் ஆக்கப் பட்டவன்-
தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் -திருவாய்மொழி -9-6-2-என்று இவர் தாமே தஞ்சம் என்றாரே-
மயர்வற மதிநலம் அருளினான் -என்று பேர் அருளினன்-என்னும் இடம்தாமே கைக் கொண்டார்-
இனி சேஷியாய் இருக்கையாலே-தானே சம்பந்தம் உள்ளவனாய் இருக்குமன்றோ –

ஆக –
நம் விரோதிகளைப் போக்கி-பரம பத்து அளவும் கொண்டு போய்
வழி நடத்துவான் காளமேகம் -என்று அறுதி இட்டு
அரு நிலங்களிலே -செல்லுதற்கு அரிய – வழிப்போவார்
அகப்படை -என்று அந்தரங்கமான சேனை -என்று-மிடுக்கராய் இருப்பாரைக் கூட்டிக் கொண்டு
தம் கைப் பொருளை அவர்கள் கையிலே கொடுத்து
அமர்ந்த நிலத்திலே சென்றவாறே வாங்கிக் கொள்ளுவாரைப் போலே
உடலை விட்டு உயிர் பிரிகின்ற காலத்திலேயே-காளமேகத்தின் பக்கலிலே ஆத்மாவை அடைக்கலம் செய்து
பரம பதத்திலே புக்கால்-பின்னர் நமக்கு ஆக்கிக் கொள்ளக் கடவோம் -என்று-வழித் துணையாகப் பற்றுகிறார்-

அவன் கையில் கொடுத்து –
-இது ஆச்ரயணீய ஸ்தலம் அது போக ஸ்தலம் -இங்கே கொடுத்து வைத்து அங்கே அனுபவிக்க –
இங்கு ஆத்ம நிஷேபம் என்றது -வழித்துணைக்கு பிரார்த்தனை -தேக விஸ்லேஷம் போது ஆத்ம சமர்ப்பணம் வேண்டாம்
-ஆர்த்த பிரபன்னர் என்பதால் -துடிப்பால்-அருளிச் செய்கிறார் -சக்தி மதிப்பு பிராப்தி எல்லாம் இவன் இடம் உண்டே –

இந்தத் தன்மைகள் ஒன்றுமே இல்லை யாகிலும்-அவன் முன்னே போக பின்னே போகா நின்றால்
தோளும் நான்குடைச் சுரி குழல் –
அவனுடைய வடிவு அழகினை அனுபவித்துக் கொண்டு-போமதுவே பிரயோஜனமாக போரும்படி ஆயிற்று இருப்பது –
இதனாலே தானே வருஷம் தோறும் திருவடி சேவை சாதித்து மீண்டும் வருகிறார்
நம்பிள்ளை திரு முதுகு சேவிக்க பின்பு அழகராம் பெருமாள் சீயர் போலே –

ஸ்வ புருஷம் அபி வீஷ்யே பாசஹச்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மதுசூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்ய ந்ருனாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-17-13-
திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு –
என்கிறபடியே எதிரிகள் கூசிப் போம்படி பெருமிதம் உடையவனாய் இருப்பான் ஒருவனைப் பற்ற வேண்டும் அன்றோ –
யமன் கையில் பாசத்தை தரித்த தன் வேலையாளைப் பார்த்து
பகவானை அடைந்தவர்களை விட்டு விடுங்கோள்
நான் எனையோர்க்கே தலைவன்-விஷ்ணு பக்தர்களுக்கு தலைவன் அல்லன்
என்று அவர்கள் உடைய காதிலே சொன்னான்-என்கிறபடியே அவனும் சொல்லி வைத்தான் அன்றோ –
மதிப்பு –அவன் தமர்க்கு உண்டானால் அவனுக்கும் உண்டே –
ருத்ரன் சக்திமான் -மதிப்பு இல்லை என்பதால் – மார்கண்டேயன் விழிப்பு உண்டான் –

காள மேகப் பெருமாள் -கீழே நீல மேகப் பெருமாள் -மோஹன புரி -அங்கே அழகு இங்கு உதாரம்
இவனுக்கு -திரு மேனி முழுதும் அழகு மோஹன புரி மருவி திரு மோகூர் –
சர்வாயுத பாணி -திரு மோகூர் ஆப்தனும் சேவை -திருமால் இரும் சோலை பரம ஸ்வாமி போலே –
ப்ரஹ்மா வேதம் தொலைத்து -மது கைடபர் -தொடையில் வைத்து முடித்து சத்ய மூர்த்தி திரு மெய்யம் -கொழுப்பே திவலையாக மது கைடபர் –
திரும்ப வந்து நாளம் அசைத்து -தாள தாமரை -ப்ரஹ்மா கதற -தட்டி -மேதினி -மேதஸ் பட்டு மேதினி – என்றும் ஸ்தல புராணம் உண்டே –

———————————————————————————-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-

பிரதி கூல நிரசன ஸ்வ பாவன் நிரதிசய போக்யன் -தவிர நமக்கு சகாயம் வேறு கதி இல்லை
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்-வயல் செழிப்பு
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்-ஸ்வயம் பிரயோஜனமாக -பொருந்தி நித்ய வாஸம் –
விரோதிகளை – பொகட்டு-புலஸ்திய முனிவர் பிள்ளை விச்வரஸ் புத்ரன் ராவணன் -புலஸ்திய ரிஷி தவம் பண்ணி சேவை சாதிக்கிறார்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்-வழித்துணைக்கு -கற்பகப் பணை போலே -கிலேச சமனமாய்-கேசம் -சுரிந்து துன்னு குழல் –
சேவித்து போக -கண் அழகை காட்டி ஸ்மித பாஷணம் பண்ணும் திரு அதரம்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-உதார ஸ்வ பாவம் -வேறு கந்தவ்யம் இல்லை -உடையோம் அல்லோம்
தடம் -பொய்கையை தாமரையை அணிந்து கொண்டு என்றுமாம் –

மரணமான மிகப் பெரிய அச்சத்தை நீக்குதற்கு-பகைவர்களை அழிக்கும் தன்மையனான-
காளமேகம் அல்லது துணை இல்லை –என்று அவனைப் பற்றுகிறார் –

தாள தாமரைத் –
சேற்றின் நன்மையாலே-உரத்த தாளை உடைய தாமரை -என்க –
மலையைச் சுமந்தால் போன்று பூமியின் பெருமையை-பொறுக்க வல்ல தாளை உடையதாதலின் –தாள தாமரை -என்கிறார் –
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -பெரியாழ்வார் திருமொழி -4-9-8-
என்னக் கடவது அன்றோ –
சேற்று வாய்ப்பாலே உரம் பெற்று இருக்கிற-கமலமானது ஓங்கி அலர்ந்த போது-திரு உலகு அளந்த போது
எடுத்த திருவடிகளுக்கு போலியாய் இருந்தது-
சங்கை சூராணாம்திவி பூதலஸ்தை ததா மனுஷ்யை ககனே ச கேசரை
ஸ்துது க்ரமான்ய பிரசகார சர்வதா மம அஸ்து மாங்கள்ய விவிருத்தையே ஹரி -விஷ்ணு தர்மம் –
அப்போது தேவர்கள் உடைய கூட்டங்களாலும் -என்றபடியே
தேவர்கள் திரண்டு காலை நீட்டித் தலையாலே வணங்கி தண்டன் இட்டாப் போலே இரா நின்றது -செந்நெல் களானவை
விழுந்து தலை சாய்ந்து கிடக்கிற போது

தட மணி –
அணி தடம் –இப்படிப் பட்ட பூக்களாலே அலங்கரித்தால் போலே-இருக்குமாயிற்றுத் தடம் –

அணி வயல் திரு மோகூர்-
இப்படிப் பட்ட தடங்களையும்-வயல்களையும் உடைய-திரு மோகூர்
ஊரில் இனிமை முழுதும் வயலிலே காணும் –

நாளும் மேவி –
நாள் தோறும் நாள் தோறும்-மிக்க விருப்பத்தைச் செய்து-அவ் ஊரில் விடிந்த விடிவு தோறும் அவனுக்கு-
அத்ய மே சபலம் ஜன்ம சூப்ரபாதாச மே நிச
யத் உந்தித்ராப்ஜ பத்ராஜம் விஷ்ணோ த்ரிஷ்யாமி அஹம் முகம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-8
என்னும்படியாயிற்று இருப்பது –
-இவருடைய குஹ்யதே ரங்க யாத்ரே -அகலகில்லேன் இறையும்-இருக்கும் படி –

நன்கமர்ந்து நின்று –
இவ் ஊரில் வசித்தலை ஒழிய-வேறு ஒரு பிரயோஜனத்தை கணிசியாதே-இது தானே பிரயோஜனமாய் நின்று –

அசுரரைத் தகர்க்கும் தோளும் நான்குடைச் –
அசுரக் கூட்டத்தைத் துணித்து அடுக்கி-விரோதியைப் போக்கிக் கொண்டு போக வல்லவன்
என்று தோற்றும்படியான-திருத் தோள்கள் நான்கினையும் உடைய –
இவர் இப்படி அறிந்தபடி எங்கனே என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க –
விடுகாதானாலும் தோடு இட்டு வளர்த்த காது -என்று தெரியும் காண் -என்று அருளிச் செய்து அருளின வார்த்தை –
சுரி குழல் –
நெடு நாள் பட பிறப்பு இறப்புகளிலே உழன்று வருவதால்-உளவாய எல்லா துன்பங்களும்
ஆறும்படியாக இருக்குமாயிற்று
பின்னே போகிறவனுக்கு முன்னே போகிறவன்-ஒரு கால் திருக் குழலை குலைத்து நுழந்த
கேசவ கிலேச நாசந-மகா பாரதம் –
கேசவன் கிலேசத்தை நாசம் செய்பவன் எண்ணக் கடவது அன்றோ –
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ-

கமலக் கண் கனி வாய்-
மகளிருடைய பொய்யான நோக்கிலும்-பொய்யான முறுவலிலும்-அகப்பட்ட நெஞ்சாறல்-எல்லாம் தீரும்படி –
மெய்யான நோக்கும்-மெய்யான முறுவலும்-இருக்கும்படி சொல்கிறது –
இராஜாக்கள் போகும் போது முன்னே மேகம் நீர் விடுமா போலே-
முன்னே காளமேகம் வனப்பாகிய அமிருதத்தை-பெய்து கொண்டு போக-
பின்னே அக்குளிர் வாசத்தை அனுபவித்துப் போகலாம்படி-இருக்குமாயிற்று
விண்ணீல மேலாப்பு -மேக ஜாதி நீர் -விடுமே -ராஜாக்கள் வரும் முன்னே
-மார்க்க பந்து சைத்யம் மோஹனத்தே மடு விடும் -சூர்ணிகை -182
காருண்யம் மாருதி -சீதலை அபிஷிந்தி மாம் -தேவ பெருமான் கடாக்ஷம் -தூ வானம் வீசும் -ஸ்ரீ பெரும் புதூர் வரை –

காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
காளமேகத்தை ஒழிய-வேறு வழித்துணை-உடையோம் அல்லோம் –

—————————————————————————————————————

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-

நிரதிசய போக்ய பூதன் -நிரந்தர அனுபாவ்ய நாம பூர்த்தி உடைய -சர்வேஸ்வரன் திருவடிகளை ஒழிய சர்வ அவஸ்தைகளிலும் வேறே கதி இல்லை
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்–திருத்த துழாய் மாலை -ஈன் இனிய
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்-அசையா நிற்கும் -குணங்களை சொல்லும் -அனுபாவ்யமான திரு நாமங்கள் நிருபாதிக ஸ்வாமி
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்-கிருபை போன்ற விலக்ஷண-வேதங்கள் -அறிந்த -அவனே ரக்ஷகன் உறுதி உடன்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே-ஆஸ்ரித தாரதம்யம் பாராமல் -ரஷிக்கும்-
வீரக் கழல் -பாத நிழல் ஆகிய பெரும் தடாகம் -கந்தவ்யம் வேறே இல்லையே

இன்பத்துக்கு காரணமான ஒப்பனையும்-உய்வு பெறுவதற்கு காரணமான திருப் பெயர்களையும்
உடையவனுடைய திருவடிகளை அல்லது காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்-
வேறு புகழ் உடையோம் அல்லோம் –என்கிறார் –

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் –
இவ்வார்த்தை ஒரு பிறவியில் அன்றி-எல்லா பிறவிகளிலும் இதே வார்த்தை –
எல்லா காலத்துக்கும் இது ஒழிய-வேறு துணை உடையோம் அல்லோம் –

ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி –
தாரையும் குளிர்த்தியையும் உடைய-திருத் துழாயின் ஒளியை உடைத்தான அழகிய மாலை –
அலங்கல் -ஒளி-அசைதலுமாம் –
பின்னே போகா நின்றால்-அடி மாறி இடும் போது –வளையும் அசைந்து வரும்படியைக் கூறியபடி –
திருமேனியிலே சேர்ந்து இருப்பதனாலே வந்த புகரைச் சொன்னபடி –

ஆயிரம் பேருடை –
தோளும் தோள் மாலையுமான அழகைக் கண்டு-இவன் ஏத்தப் புக்கால்
இழிந்த இடம் எல்லாம் துறையாம்படி-கணக்கு இல்லாத திருப் பெயர்களை உடையவன் –
மா மாயன் என்று என்று சகஸ்ர நாமம் -மாதவன் என்று என்று சகஸ்ர நாமம்-வைகுந்தன் என்று என்று சகஸ்ர நாமம்-

யம்மான் –
வடிவு அழகினைக் கண்டு-
சம்பந்தம் இல்லாதவர்களை ஏத்திற்றாக வேண்டாதே –
ஆழி அம் கை அம்மானை ஏத்தாது அயர்த்து வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -பெரிய திருவந்தாதி-82-
என்று ஏத்தாத நாள்களுக்கும் வயிறு பிடிக்க வேண்டும்படியான விஷயம் –

நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர் –
அருளுடைமையே வேதாந்தம் -என்று வேதங்களின் கருத்து-கை வந்து இருக்குமவர்களாய்
வேதத்துக்கு வ்யாபதேசம் செலுத்த வல்லவரானவர்கள் வசிக்கிற தேசம்
அவ் ஊரில் வசிப்பதே வாழ்ச்சியாம்-
இதனால் அத் தேசத்தில் வசிப்பதனாலே –அடைந்தவகளை பாது காத்தலே மிக உயர்ந்த தர்மம்
என்று சர்வேஸ்வரனும் அதிலே நிலை நிற்க வேண்டும்படியான நகரம் -என்பதனைத் தெரிவித்தபடி
அவ் ஊரிலே சென்று அடைந்தவர்களை-நம்மோடு ஒத்தவர்கள் ஆகுக -என்னுமவர்கள் –
அஸ்மாத் துல்ய -என்று சுக்ரீவன் அருளிச் செய்தது போலே –

நலம் கழல் அவன் –
அடைந்தவர்கள் உடைய குணங்களையும் குற்றங்களையும்-நினையாத திருவடிகள் –
அன்றிக்கே –
அவர்கள் தாம் அன்பினால் மயங்கினவர்களாய்-இவன் கொல்லத் தக்கவன் -என்றாலும்
நான் விட மாட்டேன் -என்னுமவன் என்னலுமாம்-
வத்யதாம் ஏஷ தண்டேன தீவ்ரேன சசிவை சஹ-ராவனச்ய ந்ருசம்சஷ்ய ப்ராதா ஹி ஏஷ விபீஷண-யுத்தம் -17-27
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யேஜ்யம் கதஞ்சன-தோஷாயத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் ஏதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-
அவனடி நிழல் தடம் அன்றி யாமே –
அவனுடைய திருவடி நிழல் ஆகிற பொய்கையை ஒழிய-நாம் வேறு ஒரு கதியை உடையோம் அல்லோம் –
அவன் -என்பதனை முன்னும் பின்னும் கூட்டுக

—————————————————————————————————-

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-10-1-3-

அகில ஜகத் ரக்ஷண-ஸ்வ பாவம் -நமக்கு துணை -துக்கம் கெட -போற்றுவோம்
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி- -உன்னை ஒழிய வேறு புகல் இடம் இல்லை தளர்த்தி தோன்ற பல முறை கூப்பிட்டு
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட-இவர்கள் நின்று நாட -அலற்றி நின்று நாட -பிரயோஜன லாபத்து அளவும் நின்று
-தேவ ஜாதிகள் தேடி ஆஸ்ரயிக்க
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்-விரோதிகளை வென்று ஜகத் த்ரயத்தையும் ராக்ஷிப்பதே யாத்திரையாக உடைய –
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-அர்ச்சிராதி கதி பெற -கிட்டுமோ கிட்டாதோ மநோ துக்கம் போக்கி –
வழித்துணையாக -ரக்ஷகன் சந்நிஹிதன் ஆனபின்பு அநந்ய பிரயோஜனராக கிட்டப் பெறுவோம்

மூன்று உலகங்களையும் காப்பாற்றுகின்ற இறைவன்-எழுந்து அருளி இருக்கின்ற திரு மோகூரை
நம்முடைய எல்லா துக்கங்களும் கெடச் சென்று அடைவோம்-என்கிறார் –
தஸ்மிந் த்ருஷ்டே -பார்த்தாலே பாப ஷயம் -நேருமே பிரார்த்திக்க வேண்டாமே –

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
பிரயோஜநாந்த பரர்களும்-அநந்ய பிரயோஜனர் கூறுகின்ற பாசுரத்தை சொல்லுவார்கள்-
ஆயிற்று அவன் முகம் காட்டுகைக்காக –
தேவரை ஒழிய நாங்கள் ஒரு புகல் உடையோம் அல்லோம்-என்று எப்பொழுதும் அடைவு கெட சொல்லிக் கூப்பிட்டு நின்று
க்ஷிதி ஷமாவான் பூமி போன்ற பொறுமை சகாராம் விட்டு தாரை -தப்பாக பாடினாலும் பொறுப்பார் சாக்ஷி –
கண்ணன் கழலிணை –நாரணமே -எப்படி சொன்னாலும் பலம் -அதே போலே இங்கும் –

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட –
பிரமன் சிவன் இவர்களோடு கூட தேவ சாதி முழுவதும் வந்து அடைய-
அநந்ய பிரயோஜனர்களைப் போலே-தங்கள் பிரயோஜனம் கை புகுரும் அளவும்–நின்று

வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர் –
அவர்களுடைய பகைவர்களை வென்று-அவர்களுக்கு இடமான மூன்று உலகங்களையும் காப்பாற்றி
அதுவே தொழிலாக இருக்குமவன் வந்து வசிக்கிற நகரம் ஆயிற்று —

நன்று நாம் இனி நணுகுதும் –
அவன் எல்லாரையும் காப்பாற்றுவான் ஒருவன் ஆனபின்பு-காப்பாற்ற வேண்டும் என்னும் விருப்பத்தை உடைய நாம்
நன்றாகக் கிட்டுவோம்
ஸ்ரீ மதுரையிலே -காலயாவனன் ஜராசந்தன் – முதலியோர்கள் கிட்டினால் போலே அன்றிக்கே
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் – திரு விருத்தம் -92-என்று
பிரமன் சிவன் முதலியோர்கள் கிட்டினால் போலே அன்றிக்கே-அநந்ய பிரயோஜனர்களாய் கிட்டுவோம்

நமது இடர் கெடவே –
ஆவார் ஆர் துணை -திருவாய் மொழி -5-1-9-என்று-இருக்கிற நம்முடைய துன்பம் கெடும்படியாக-

———————————————————————————————————

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-

அனந்த சாயி திருவடிகளை ஆஸ்ரயிப்போம் தொண்டு செய்வதில் ருசி உள்ளவர்களை அழைக்கிறார்
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி-ரக்ஷிக்க வேணும் ஸ்துதித்து
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர-தேஜோ மயமான -தேவர்கள் ஐஸ்வர்யார்த்தி முனிவர் -அனுவர்த்தித்து ஆஸ்ரயிக்க
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்-நின்ற திருக் கோலம் -சேஷ சாயினே – திருமலை -ஸ்ரீ நிவாஸன் முன்பே வேதார்த்த சங்க்ரஹம் –
ஸ்பரிசத்தால் விகசித்த-மென்மை நாற்றம் குளிர்த்தி -திரு அரவணையில் அசம்பவ துக்கம் -சகாயம்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே-திருவடிகளை ஸ்துதிக்க ருசி உடையீர் வாரும்

நம்முடைய எல்லா துக்கங்களும் கெட-திரு மோகூரிலே வந்து சுலபனாய் நிற்கிறவனை
அடைவதற்கு வாருங்கோள் -என்று-ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார்

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி –
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று ஆயிற்று-
தங்களை தாங்களே ஈச்வரர்களாக மதித்துக் கொண்டு இருக்கிற தேவர்களும்-சாப அனுக்ரகங்களைச் செய்ய வல்ல முனிவர்களுக்கும் வார்த்தை
இடர் கெட –
வேதத்தை பறி கொடுத்தலால் உளதாய துன்பம் முதலானவைகள் போம் படியாக-
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதிகளை -போம் படியாக-
எம்மை –
முன்- ஈச்வரோஹம் – என்று இருந்தவர்கள்-ஆபத்து மிக்கவாறே
ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரை பஹூநாம் பஹதா வனே ஆரண்ய -6-18-
எங்களுடைய இந்த சரீரத்தை பார்த்து அருள வேண்டும் -என்றாப் போலே-
தங்கள் வெறுமையை முன்னிடுவார்கள் இத்தனை –
போந்து அளியாய் –
அவதரித்து வந்து காப்பாற்ற வேண்டும் -என்பார்கள் -என்றது
முன்பு எல்லாம் விருப்பற்று இருந்தவர்கள்-ஓன்று கெட்டவாறே-படி காப்பாரை பிடிக்குமாறு போலே
நாங்கள் ஆபத்தை அடைந்தவர்களாய் வர நீ கிடக்கிறது என் -என்பார்கள் என்றபடி-
என்று என்று ஏத்தி தொடர –
தங்களுக்கு வந்த ஆபத்தாலே இடை விடாதே புகழ்ந்து-வடிம்பிட்டு -நிர்பந்தித்து -அடைவதற்காக –குந்தி பிரார்த்தனை —

சுடர் கொள் சோதியைத் –
ஆபத்து வந்த காலத்திலேயே யாகிலும் நம் பாடே வரப் பெற்றோமே என்று-பேர் ஒளிப் பிழம்பாய் இருக்கிறவனை
அன்றிக்கே
மிக சிறந்த அழகினை உடையவன் ஆகையால்-அவ் வழகினை அனுபவிக்கும் அதுவே பிரயோஜனமாக
உள்ளவனைக் கண்டீர் துக்கத்தைப் போக்குமவனாக நினைத்து என்னுதல் –

தேவரும் முனிவரும் தொடர –
தேவர்களும் இருடிகளும்-ஈச்வரோஹம் -என்று இருப்பாரும்
செல்வத்தின் நிமித்தம் முயற்சி செய்கின்றவர்களும் –

படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் –
வேறு பிரயோஜனங்களை கருதாதவர்களை-அநந்ய பிரயோஜனரை-அடிமை கொள்ளுகிறவன் கண்டீர் –
பிரயோஜநாந்த பரர்களுக்காக முகம் கொடுக்கைக்காக-திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிகிறான்-
தன் ஸ்பர்சத்தால் வளரா நின்றுள்ள திரு வநந்த ஆழ்வான்-ஆதலின் -படர் கொள் பாம்பு -என்கிறார் –
தன்னுடைய சேர்க்கையாலே-சர்வஞ்ஞானானவனை அறிவற்றவரைப் போன்று நித்தரைக்கு
இடம் கொடுக்கும்படி பண்ண வல்லவனான திரு வநந்த ஆழ்வான் ஆதலின் -பள்ளி கொள்வான் -என்கிறார்

திரு மோகூர் –
தேவர்கள் முதலாயினார்கட்கு சுலபன் ஆனால் போல்-
நமக்கு சுலபன் ஆகைக்காக திரு மோகூரிலே நின்று அருளினவன் –

இடர் கெட வடி பரவுதும் –
நம்முடைய எல்லா துக்கங்களும் கெடும்படியாக-அவனுடைய திருவடிகளை அடைவோம் –

தொண்டீர் வம்மினே –
நம்மோடு ஒரு குலத்தாராய்-இருப்பார் அடங்க திரளுங்கோள்

———————————————————————————-

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-

அசேஷ ஜன சம்ச்லேஷ -த்ரிவிக்ரமன் வர்த்திக்கும் -அனுபவித்து பிரித்தார் ஆவோம்
தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்-நிரவாதிக உஜ்வலம் -தேஜஸாம் ராசி மூர்ஜிதாம் -திரு மேனி -த்ரிவித காரணமுமாய்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்-ஸ்ருஷ்ட்டி அங்கத்துக்குள் உள்ள ஜகாத் த்ரயமும் அளந்தவன் -க்ருத அக்ருத க்ருதக்ருத –
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய-எல்லா திக்குகளிலும் –
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே-பிரதக்ஷிணம் செய்து ப்ரீதி பிரகரஷத்தால் கும்பிடு நட்டமிட்டாடி –

அவன் எழுந்து அருளி நிற்கின்ற-திரு மோகூரை அடைந்து அனுபவிக்க வாருங்கோள்-என்கிறார் –

தொண்டீர் வம்மின் –
பகவான் இடத்தில் ஆசை உடையீராய் இருப்பீர்-அனைவரும் வாருங்கோள் –

நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் –
தனக்கு மேல் ஓன்று இல்லாத பேர் ஒளிப் பிழம்பாய்-மூன்று விதக் காரணமும்-தானே யானவன்
தஸ்ய மத்யே வஹ்னி சிகா அணி யோர்த்த்வா வியவச்தித்த
நீலதோயதா மத்யஸ்தா வித்யுல்லேதேவ பாஸ்வர-நீவார சூகவத் தன்வீ பிதாப ஸ்யாத் தநூபாமா -என்றும்
சதைவ சோமய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -என்றும் -என்கிற-பிரமாண சித்தியைப் பற்றி -நம் -என்கிறார்
அன்றிக்கே
தம் வடிவு அழகினையும்-தமப்பனான தம்முடைய சம்பந்தத்தையும் நமக்கு அறிவித்தவன் -என்னுதல் –

அண்ட மூ வுலகளந்தவன் –
அண்டத்துக்கு புறம்பே இருக்கிறவன்-
மகா பலியால் கவரப் பட்ட-அண்டத்துக்கு உள்ளே இருக்கிற-மூன்று வகைப் பட்ட உலகங்களையும் அளந்து கொண்டவன் –
படைத்தது விடுதலே அன்றி-படைக்கப் பட்ட உலகத்தை வலி உள்ளவர்கள் கவர்ந்து கொண்டால்
எல்லை நடந்து கொண்டு காப்பாற்றுகின்றவன்-என்பார்-அளந்து -என்கிறார் –
அணி திரு மோகூர் –
அவனுக்கு ஆபரணமான நகரம் -என்னுதல்
இந்த உலகத்துக்கு ஆபரணமான நகரம் -என்னுதல் –

எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய –
எட்டுத் திக்குகளிலும்-ஈன்ற கரும்போடு-பெரும் செந்நெல் விளையும்படி –

கொண்ட கோயிலை –
திரு உள்ளத்தாலே ஏற்ற கோயில்-
கரும்புக்கு நிழல் செய்தால் போல் இருக்கும் -பெரும் செந்நெல் –
அகால பலினொ வ்ருஷா சர்வேச அபி மது ச்ரவா-பவந்து மார்க்கே பகவன் அயோத்யாம் பிரதி கச்சதி -யுத்தம்-17-18-
அவனுடைய திரு முகப் பார்வையாலே ஊரும்-காலம் அல்லாத காலங்களிலும்
மரங்கள் பயனைக் கொடுக்கின்றன -என்றபடியே ஆயிற்று –

வலம் செய்து –
வலம் வந்து –

இங்கு ஆடுதும் கூத்தே –
அங்கு சென்று
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத –
என்று களிக்கும் களிப்பினை-இங்கே களிப்போம் –

——————————————————————————————–

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-

போக்தாக்களுக்கு அனுபவ பிரியன் -ஆப்தன் -அவன் திருவடிகளை ஒழிய ரக்ஷகம் வேறே இல்லை
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்-வல்லார் ஆடினால் போலே -தர்ச நீய
-ரஷ்ய வர்க்கம் பின் சென்று ரக்ஷிக்குமவன் -தானாக தான் பேராகா பசுக்கள் கூப்பிடாமலமேயே –
குதறுதல் -அசுரர்கள் பீடிக்கும் -கேசி தேனுக பிரமுகர்கள் -பூதனை தொடக்கம் இவர்கள் வரை -மிருத்யுவாய்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்-அநந்ய பிரயோஜனராய் ஏத்தும் நங்களுக்கும்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் -தர்ச நியாமான -ஆத்தன்-சப்த பிரயோகம் -நடு பாசுரம்
ஆப்ததமன் -ஆஸ்ரிதர் விசுவாசம் உடன் பற்ற
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே-நிரதிசய போக்யமான திருவடிகள் அல்லது வேறு ரக்ஷகம் இல்லை –

திரு மோகூரிலே நின்று அருளின-பரம ஆப்தன் திருவடிகள் அல்லது
வேறு பாதுகாவல் நமக்கு இல்லை –என்கிறார் –

கூத்தன் –
நடக்கப் புக்கால் -வல்லார் ஆடினால் போல் இருக்கை –
அக்ரத ப்ரயயௌ ராம சீதா மத்யே ஸூ மத்யமா-ப்ருஷ்ட தஸ்து தனுஷ் பாணி லஷ்மண அனுஜகாம ஹ -ஆரண்யம்-11-1-என்கிறபடியே
நடைச் சக்கரவத்து பிடிக்கலாமாய் இருக்கும் ஆயிற்று –
அவன் முன்னே போக பின்னை போகையாவது-கூத்துக் கண்டு போகை யாயிற்று –
ஆடல்பாடல் அவை மாறினார் தாமே -பெரியாழ்வார் திருமொழி -3-6-4- என்னக் கடவது இறே-
அவன் திருக் குழலை வாய் வைத்த போது-அரம்பையர்கள் குழல் ஓசையைக் கேட்டு பாடுதளைத் தவிர்ந்தார்கள் –
அவன் நடை அழகினைக் கண்டு ஆடுதலைத் தவிர்ந்தார்கள் –

கோவலன்-
தன்னை தாள விட்டு அடியார்களை பாதுக்காக்குமவன் -கண்டகர்ணன் -பிசாசத்துக்கு மோஷம் கொடுத்து வழி நடத்தியவன் அன்றோ –

குதற்று வல்லசுரர்கள் கூற்றம் –
மிறுக்குகளைப் பண்ணுகின்றவர்களாய்-பெரு மிடுக்கை உடையராய் உள்ள அசுரர்களுக்கு யமனாக உள்ளவன் –
ஞானக் கண் தா கனம் ஒக்கும் பவம் துடை நஞ்சிருக்கும்
தானக் கண்டா கனல் சோதி என்று ஏத்தும் வன்தாலமுடன்
வானக் கண் தா கன வண்ணா என்றோது ஒலி வந்தடையா
ஈனக் கண்டா கனற்கு ஈந்தான் பரகதி என் அப்பனே – திருவேங்கடத் தந்தாதி
கண்ட கனவின் பொருள் போலே யாவும் பொய் காலன் என்னும்
கண்டாகன் ஆவி கவர்வதுவே மெய் கதி நல்கு எனக்கு
அண்டகனா இப்பொழுதே செல்க என்று அருள் கார் அரங்கன்
கண்டகனாவின் புறக் கண்டு வாழ்த்திக் கடிது உய்ம்மினோ – திரு வரங்க தந்தாதி –

ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் –
இன்று அடைகிற நமக்கும்-வைகுந்தத்து அமரரும் முனிவரும் -10-9-9-என்கிறபடியே
எப்பொழுதும் தன்னையே அனுபவித்து கொண்டு இருப்பவர்க்கும்-ஒக்க இனியன் ஆனவன் –

வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன் –
அழகிதான நீர் நிலத்தையும்-வளவிதான வயலையும் உடைய-திரு மோகூரிலே நின்று அருளின மேலான பந்து –
தான் தனக்கு இல்லாத மரண சமயத்தில்
தாதா தம் பிரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்-அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் –ஸ்ரீ வராக சரம ஸ்லோஹம்
என்னுடைய பக்தனை நானே நினைக்கிறேன்-என்னும் பரம ஆப்ததமன்
தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே பாரத்தை விட்டவனாய்-பாரம் இல்லாதவனாம் படியான ஆப்த தமன் -என்றபடி –

தாமரை யடி யன்றி –
நம்பத் தகாதவனாய் இருப்பினும்-விட ஒண்ணாத தாயிற்று திருவடிகளின் இனிமை –

மற்று இலம் அரணே –
பாது காப்பவர்களாக வேறு சிலரை உடையோம் அல்லோம் -என்றது
இனிமை இல்லையாகிலும்-விட ஒண்ணாதபடி-புறம்பு புகல் இல்லை -என்கிறார் -என்றபடி –
குண க்ருத தாஸ்யம் மட்டும் இல்லாமல் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் உண்டே -அநசூயை சீதை பிராட்டி சம்வாதம் —
—————————————————————-

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே-10-1-7-

அகில ஜகத் சிரேஷ்டா வான சர்வேஸ்வரன் -அப ஏவ -பெரிய நீர் படைத்து -வர்த்திக்கும் -அனுகூல வ்ருத்திகளை பண்ண நம் துக்கம் சடக்கென போகும்
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா-மூல பிரகிருதி -காரணமாக் கொண்டு தண்ணீர் படைக்க -உத்பத்தியாதிகள் இல்லாத அஜாம் -நாநா வித காரணங்களுக்கு தான் ஏக காரணமாய் -அவ்யக்தம் -வியக்தமாகி -அவிவிபக்தம் விபக்த தமஸ் ஆகும் —
நிரதிசய மகத்தை உடைய வான் -ஆகாசம் -திட விசும்பு -முதலில் படைக்கப் பட்டு -கடைசியில் அழிக்கப் படுமே –
அசேஷ காரியமும் உண்டாக்கும் யோக்யதை உண்டே
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா-எங்கும் ஓக்க காரண நீர் படைத்து -அண்டத்துக்குள்
-விராட் ஸ்வரூபன் -பழையவன் -ஸ்ருஷ்ட்டி பிரகார மனன சீலன் -ப்ரஹ்மா முதலாக
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்-சகல லோகங்களையும் -ஆகாசம் முதல் பஞ்சீ கரணம் வரை –
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே-பிரதக்ஷிணம் வலம் -நன்கு சுற்றி -அநு கூல் வ்ருத்தி போகரூபமாக செய்ய
-துயர் போகும் -அதனால் வேறே ரக்ஷகர் இல்லை –

நம்மை பாது காத்தல் தனக்கே உரியதாய்-எல்லா உலகங்களையும் படைக்கின்ற இறைவன்-
எழுந்து அருளி இருக்கின்ற திரு மோகூரை அடையவே-நம்முடைய துக்கங்கள் அப்போதே போம் –என்கிறார்

மற்று இலம் அரண் –
வேறு ஒரு அரணை உடையோம் அல்லோம் –
அவன் தான் பாது காப்பவன் ஆகத் தக்க வல்லவனோ -என்னில்-இது அன்றோ அவன் படி -என்கிறது மேல் –

வான் பெரும் பாழ் தனி முதலா –
இவ்வருகு உண்டான கார்யக் கூட்டங்கள் முழுதும் அழிந்த அன்றும்-தாம் அழியாமையாலே வலியதாய் – அளவு இல்லாததாய்
போக மோஷங்களை விளைப்பத்தாய்-ஒப்பற்றதான-மூலப் பகுதி தொடக்கமாக-

சுற்றும் நீர் படைத்து –
ஆப ஏவ சசர்ஜா தௌ தாஸூ வீர்யம் அபாஸ்ருஜத்-மனு ஸ்ம்ருதி -1-8-
முதல் முன்னம் தண்ணீரை உண்டாக்கினார் -என்றபடியே-ஆவரண ஜலத்தை உண்டாக்கி –

அதன் வழித் தொல் முனி முதலா –
அவ்வழியாலே-தேவ சாதிகள் முதலான வற்றை நோக்கப் பழையனாய்
மனன சீலனான பிரமன் தொடக்கமாக -முற்றும் தேவரோடு உலகு செய்வான் -திரு மோகூர்
எல்லா தேவ சாதியோடும் கூட-எல்லா உலகங்களையும் உண்டாக்குமவன்-வசிக்கிற திருமோகூர்-

சுற்றி நாம் வலம் செய்ய –
நாம் சென்று-விடாதே வலம் வருதல் முதலானவைகளைச் செய்ய –

நம் துயர் கெடும் கடிதே –
வழித் துணை இல்லை என்கிற நம் துன்பம் சடக்கென போம் –
யதாஹி ஏவ ஏஷா எதஸ்மின் அத்ருச்யே அநாத்ம்யே-
அநிக்ருதே அநிலயதே அபயம் பிரதிஷடாம்-விந்ததே அதச அபயம் கதோபவதி -தைத்ரியம் -7
இந்த பரம் பொருள் இடத்தில்-பயம் இன்மைக்காக-இடைவிடாத நினைவின் ரூபமான த்யானத்தை-எவன் அடைகிறானோ
அவன் பயம் அற்றவனாக ஆகின்றான் -என்னக் கடவது அன்றோ –ஆனபின்பு மற்று இலம் அரண் –

———————————————————————————————

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

சகல கிலேசம் -தசராத்மஜ தாடாகம் கிட்டி -சீதளம் -சீல குணம்
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்-
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்-சோலை வாய்ப்பு உஜ்வலம்-திவ்ய தேசம்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த-ஜகத் பாதகத்தால் வந்த -ராக்ஷஸ சகஸ்ர நாமம் -விருது பேரை உடையவர்
-மேக நாத ஹரி -இந்திர ஜித் வென்ற லஷ்மணன் –விபீஷண பிரக்ருதிகள் போலே இல்லாமல் -துறை அறியாமல் புக்கு அழுந்த
-சசால சாபஞ்ச -வெறும் கை வீரன் ஆகாமல் வில் கையில் வைத்து மாண்ட -வீரத்துக்கு தோற்ற திருவடி -போலே இல்லாமல் –
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே-குணங்கள் ரத்னம் மாணிக்கம் முத்து -இத்தை அன்றோ சக்கரவர்த்தி பெற்றான் –
கழுத்தில் கல்லைக் கட்டிக்க கொண்டு முடித்தார்கள் ராக்ஷஸர்கள்
விஷகரம் -மணி -மரகதம் -குளிகை -விஷம் போக்கும் -சியாமளா நிறம் -தடாகம் -குனைர் தாஸ்யம் உபாகத்தை-
குணத்துக்கு தொற்று -வந்து கிட்டு தொழ-அசகாயத்தால் -வழி துணை இல்லை என்னும் பயம் நசிக்கும் -பிரதி கூல நிரஸனம் அநு கூல ரக்ஷணம் –

திரு மோகூரிலே நின்று அருளினவனான-ஆண் பிள்ளையான
சக்கரவர்த்தி திருமகனை அடைய-நம்முடைய துக்கம் எல்லாம் போம் –என்கிறார்-

துயர் கெடும் கடிது –
துயர் கடிது கெடும்-விரும்பாது இருக்கச் செய்தே
நம்முடைய துக்கங்கள் தம்மடையே-சடக்கென போகும் –

அடைந்து வந்து –
வந்து அடைந்து-வந்து கிட்டி –

அடியவர் தொழுமின் –
வழித் துணை இல்லை -என்று வருந்துகிற நீங்கள்-அடைந்து வணங்குமின் –

உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
உயர்ந்த சோலைகளாலும்-அழகிய தடாகங்களாலும்-அலங்கரிக்கப் பட்ட-ஒளியை உடைய-திரு மோகூர்
சோலையைக் கண்டால் -அவன் வடிவினை நினைப்பூட்டுவதாக இருக்கும்-
தடாகங்களைக் கண்டால் சிரமத்தை போக்குகின்ற அவன் வடிவினை நினைப்பூட்டுவதாக இருக்கும்
வாசத் தடம் போல் வருவான் அன்றோ அவன் தானே –புண்டரீகத் தடாகம் நின்ற சேவை தானே நம்பெருமாள் –

பெயர்கள் ஆயிரம் உடைய-
சர்வேஸ்வரன் அளித்துப் படைத்த-பெயர்களோ பாதி போரும் ஆயிற்று
இவர்கள் பிறர்களை துன்புறுத்தி பெற்ற பெயர்கள்-
யஞ்ஞ சத்ரு – ப்ரஹ்ம சத்ரு -என்பன போன்றவனவே அன்றோ இவர்கள் பெயர்கள் –

வல்லரக்கர் புக்கு அழுந்த –
பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –

தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே –
சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே இருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்