அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த -அருளிச் செயல் ரகஸ்யம்-சரம ஸ்லோக பிரகரணம் -பூர்வார்த்தம் -ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ரகஸ்ய பூஷணம் –

பத விபாகம்
பதினோரு பதமான இதில்
முதல் பதம் விடாய் படுகிற உபாயங்களை சொல்லுகிறது –
(யாதவ சிம்மம் இது -ஆறும் ஐந்தும் -உக்ரம் -அது ஐந்தும் ஆறும்
உபாயம் என்று பிரமித்த அர்ஜுனன் புத்தியால் இந்த சப்த பிரயோகம்
தர்ம சப்தமும் அர்ஜுனன் பிரமித்ததால் தானே – )

—————————————————–

மேலே பத சங்க்யா நிர்தேச பூர்வகமாக பிரதம பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் -பதினோரு -இத்யாதிநா –
பூர்வார்த்தம் -ஆறு பதம் -உத்தரார்த்தம் ஐந்து பதம் என்றபடி –
இத்தால் ஸ்ரீ நரசிம்ம சரம ஸ்லோக வ்யாவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று –
அங்கு பூர்வார்த்தம் ஐந்து பதம் -உத்தரார்த்தம் ஆறு பதம் இறே

மாஸூச என்பது ஒரே பதம் என்று இவர்கள் திரு உள்ளம் –
ஸஹ -பாணினி -2-1-4-இதி யோக விபாகாத்-பர்ய பூஷயத் -இதிவத் –
ஸமாஸ-நாஸ் நீதி ஏகம் பதம் இதி வ்யவஹார தர்ச நாத் இதி ததாசய-இத்யாதி நிர்வாகங்களை கண்டு கொள்வது –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற ஸ்லோகத்தில் சொல்லுகிற தர்ம பரித்யாகம்
சாஸ்திர விரோதத்தாலும் –
அனுஷ்டான விரோதத்தாலும்
பிரகரண விரோதத்தாலும் அயுக்தம் –

யாவஜ்ஜீவம் அக்னி ஹோத்ரம் ஜுவ் ஹுயாத்- என்றும் –
தர்மேண பாபம் அப நுததி-என்றும் –
யஜ்ஜேன தானேன தபஸா அனாசகேஸேன ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -என்றும் –
சர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதே அஸ்வவத் -என்றும்
ஞான சாதனமாக கர்மத்தை அவஸ்ய அநுஷ்டேயமாக ஓதுகையாலும்-

(கீழே கர்ம யோகம் அவசியம் -மேலே ஞான யோகம்/பக்தி யோகம் அவசியம் பிரமாணங்கள் )

ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ் மைவ பவதி -என்றும்
ததா வித்வான் புண்ய பா பே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்றும் –
அஸ்தி ப்ரஹ் மேதி சேத் வேத சந்த மேனம் ததோ விது-என்றும்
வித்யாத் து புருஷம் பரம் -என்றும்
வேதன விசேஷத்தை பகவத் பிராப்தி சாதனமாக விதிக்கையாலும் –

யமேவ ஏஷ வ்ருணுதே தேன லப்ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே-தநூம் ஸ்வாம் -என்றும்
பக்த்யா ச த்ருத்யா ச சமா ஹிதாத்மா ஞான ஸ்வரூபம் பரிபஸ்ய தீஹ -என்றும் –
ஹ்ருதா மநீஷா மனஸா அபி க்லுப்த-என்றும்-
பிராப்தி சாதனமாக பக்தியை விதிக்கையாலும் -இவற்றினுடைய தியாகம் சாஸ்திர விருத்தம் –

ஸூகோ முக்த வாம தேவோ முக்த -என்று முக்தராக ஸ்ருதரான ஸூகாதிகளோடு
உபமானம் அசேஷாணாம் சாதூனாம் என்னப் பிறந்த ப்ரஹ்லாதனோடு
பரத சவ்பரி ப்ரப்ருதிகளான அல்லாத முமுஷுக்களோடு வாசி அற (ஆதி ஜடபரதரைச் சொல்லுகிறது)
கர்ம ஞானாதிகளையே அனுஷ்ட்டித்துப் போருகையாலே-தர்ம தியாக விதி அனுஷ்டானத்தோடும் விரோதிக்கும் –

நியதம் குரு கர்ம த்வம்-என்றும் –
கர்ம ஜியாகோ ஹ்ய கர்மண -என்றும் –
கர்மணைவ ஹி சம்சித்தம் ஆஸ்திதா ஜநகாதாய -என்றும்
சர்வம் கர்ம அகிலம் பார்த்த ஞானே பரி சமாப்யதே-என்றும்
ந ஹி ஞானேன சத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே -என்றும்
ஞாநாக்நி சர்வ கர்மாணி பஸ்ம சாத்க்ருதே அர்ஜுனா -என்றும்-
போக்தாரம் யஞ்ஞா தபஸாம் சர்வ லோக மஹேஸ்வரம் ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி- என்றும்
பக்த்யா மாம் அபி ஜா நாதி -என்றும் –
பக்த்யா த்வன் அந்யயா ஸக்ய -என்றும் –
மத் பக்திம் லபதே பராம் -என்றும் –
மன்மனாபவ மத்பக்த -என்றும்
சாதரமாகவும் சவிஸ்தரமாகவும் பதினெட்டு ஒத்தாலும் உபதிஷ்டமான கர்மாதி தியாகம் பிரகரண விருத்தம் –

ஆக -சாஸ்திர விரோதமும் -கர்ம ஞான அனுஷ்டான விரோதமும் -பிரகரண விரோதமும் பிறக்கையாலே
இஸ் ஸ்லோகத்துக்கு இவற்றோடு சேர்ந்த அர்த்தம் அர்த்தமாம் அத்தனை –
விருத்தமான தியாகம் அர்த்தம் ஆக மாட்டாது என்று சிலர் சொன்னார்கள் –
சாஸ்திர விரோதமும் அனுஷ்டான விரோதமும் பிரகரண விரோதமும் பிறவாமையாலே அது அர்த்தமாக மாட்டாது –

யோ பிரஹ்மாணாம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை -தம் ஹ தேவம் ஆத்மபுத்தி
பிரசாதம் முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
தஸ்மான் ந்யாஸ மேஷம் தபஸாம் அதிரிக்த மாஹு என்றும் நியாஸ இதி ப்ரஹ்மா -என்றும் –
தேவா நாம் குஹ்யம் ய ஏவம் வேத ப்ரஹ்மணோ மஹிமா நமாப் நோதி-என்றும் –
தாவதார்த்தி ததா வாஞ்சா தவான் மோஹ ததாஸ் ஸூ கம் -என்றும்
யாவன் நயாதி சரணம் த்வாமஸேஷ அகநாசனம் -என்றும்
சரண்யம் சரணம் யாத கோவிந்தம் நாவ சீதாதி -என்றும் –
வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜென்ம சந்ததி -தஸ்யா மன்யதமம் ஜென்ம சஞ்சித்ய சரணம் வ்ரஜ –
தேஷாம் து தபஸாம் ந்யாஸம் அதிரிக்தம் தப ஸ்ருதம் -என்றும்
சா தேவா அஸ்மின் ப்ரயுஜ்யதாம் -என்றும் சர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக அநுஷ்டேயையான ப்ரபத்தியையும்
பகவத் பிராப்திக்கு ஸ்வ தந்த்ர சாதனமாக சாஸ்திரத்தில் விதிக்கையாலே சாஸ்திர விரோதம் இல்லை –

கர்ம ஞானாதி விதாயக சாஸ்திரங்களுக்கும் தத் தியாக பூர்வகமாக அநுஷ்டேயமான ப்ரபத்தியை விதிக்கிற
சாஸ்திரங்களுக்கும் விரோதம் சொல்லப் பார்க்கில் –
ஸ்யேன விதிக்கும் காமநா விதிக்கும் மோக்ஷ விதிக்கும் அந்யோன்யம் விரோதம் பிறக்கையாலும்
ப்ரஹ்ம சர்யம் கார்ஹஸ்த்யம் வானப்ரஸ்த தர்மம் பிஷூ தர்மம் இவற்றுக்கு அந்யோன்யம் விரோதம் பிறக்கையாலும்
ந ஹிம்ஸ்த்யாத் சர்வா பூதாநி -என்று பூத ஹிம்சையை நிஷேதித்து வைத்து பஸூ விசஸனத்தை விதிக்கையாலும்
யாவஜ் ஜீவம் அக்னி ஹோத்ரம் ஜுவ்ஹூ யாத்-என்று அக்னி ஹோத்ர ஹோமத்தை விதித்து வைத்து
தத் தியாகத்தை சன்யசேத் சர்வ கர்மாணி -என்று விதிக்கையாலும் –
கர்மத்தை அநுஷ்டேயமாகச் சொல்லி வைத்து தத் தியாக பூர்வகமாக ஞான யோகத்தை விதிக்கையாலும்
உபாஸ்ய வஸ்துவை -யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -என்று ச குணமாகச் சொல்லி வைத்து
நிர்குணம் நிரஞ்சனம் என்று குண விதுரமாகச் சொல்லுகையாலும் –
ஆக இவ்வோ முகங்களாலே ஆபாத சூடம் பரஸ்பர விருத்தமாகத் தோற்றுகையாலே சாஸ்திரமாக த்யாஜ்யமாம் –

இவ்விரோதத்தை
குண பேதத்தாலும் -வர்ண பேதத்தாலும் -ஆஸ்ரம பேதத்தாலும் -பாக பேதத்தாலும் – ருசி பேதத்தாலும் –
அதிகாரி பேதத்தாலும் பிறக்கையாலே பரிஹரிக்கிறாவோபாதி
இதுவும் அதிகாரி பேதத்தாலே பரிஹ்ருதம் –
ஆகையால் சாஸ்திர விரோதம் இல்லை –

கர்ம ஞானாதிகளை அனுஷ்டித்த ஸூகாதிகளோபாதி –
கண்டு முசுகுந்த பரப்ருதிகளான முமுஷுக்களோடு –
துர்வாஸஸ் சாப தூஷிதரான தேவதைகளோடு –
வாசி அற பிரபத்தி அனுஷ்டானம் பண்ணி பலிக்கக் காண்கையாலே
அனுஷ்டான விரோதம் இல்லை –

கர்ம யோகாதிகளுக்கு ஸஹ அனுஷ்டானம் இல்லாமையால் பாக க்ரம நிபந்தமான
அதிகாரி பேதத்தாலே பரிஹரிக்கிறாவோபாதி
இதுவும் அதிகாரி பேதத்தாலே பரிஹ்ருதம் –
ஆகையால் பிரகரண விரோதம் இல்லை

———————————————————————————————–

சர்வ தர்ம சப்தார்த்தம் ..
சர்வ தர்மான் -எல்லா தர்மங்களையும் –
தர்மம் என்கிறது , ஆசைப் பட்டவை கை புகுகைக்கு நல் வழியாக சாஸ்திரங்கள் சொல்லுமத்தை

இவ் இடத்தில் தர்மம் என்கிறது –
மோஷம் ஆகிற பெரிய பேறு ,பெருகைக்கு ,சாஸ்த்ரங்களிலும் , பதினெட்டு ஒத்திலும் ,சொல்லப் பட்ட
கர்ம ஞானங்களை பரிகரமாக உடைய ,பக்தி ஆகிற சாதனத்தை
(வேத போதக இஷ்ட சாதனங்கள் தானே தர்மங்கள்)

தர்மான் -என்கிற பஹு வசனம் ,
அற முயல் ஞான சமயிகள் பேசும் ( திரு விருத்தம் -44 ) வித்யா பேதங்களான –

ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை ( பெரியாழ்வார் திருமொழி 1-1-3 ) என்கிற புருஷோத்தம வித்யை
(தொட்டில் குழந்தையை பார்த்தே புருஷோத்தமன் என்று அறிந்த கோபிகள்
அவதார ரஹஸ்ய ஞானமும் புருஷோத்தமன் ஞானமும் உள்ள பக்தனுக்கு அந்த பிறவியிலே பேறு உண்டே )

பிறவி அம் சிறை அறுக்கும் (திரு வாய் மொழி 1-3-11)
நிலை வரம்பு இல்லாத (திரு வாய் மொழி 1-3-2) அவதார ரஹஸ்ய ஞானம்

(நிலை இல்லை வரம்பு இல்லை -இன்ன அவதாரம் இன்ன சேஷிடிதம் என்று இல்லாமல் –
அந்த சமயத்திலும் பரத்வம் காட்டுவான் -இது தான் வரம்பு இல்லாதவன்
யதோ உபாசனம் தத் பலம் -கட்டுண்டான் என்று அனுசந்தித்து உபாஸிக்க சம்சாரக் கட்டு அவிழ்கிறதே –
நியாய சாஸ்திரம் வெட்க்கி ஒழிந்ததாம் )

நற்பால் அயோத்யை ( திரு வாய் மொழி 7-5-1-) தொடக்கமான க்ஷேத்ர வாசம்

பாடீர் அவன் நாமம் (திரு வாய் மொழி 10-5-5-) என்கிற திரு நாம சங்கீர்த்தனம்

கடைத்தலை சீய்க்கை (திரு வாய் மொழி 10-2-7 )
மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்கை -( திருவாய் மொழி 7-10-2 )
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் கொண்டு (திரு வாய் மொழி 5-2-9 )
நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கை (திரு வாய் மொழி 10-2-4 ) தொடக்கமாக
சாதன புத்தியோடே செய்யும் அவற்றைக் காட்டுகிறது –

நெறி எல்லாம் எடுத்து உரைத்த (திரு வாய் மொழி 4-8-6 ) -என்கையாலே அவையும் தனித் தனியே ஸாதனமாய் இருக்கும் இறே ..

(ஆகவே தர்மான்-பஹு சப்தம்
உபாய புத்தியா பேற்றுக்கு சாதனமாக செய்யாமல் இதுவே பேறு-கைங்கர்ய புத்தியாக செய்ய வேண்டும்
உபாசகனுக்கு தானே இவை சாதனம் -பிரபன்னனுக்கு அவனே உபாயம் )

சர்வ சப்தம் –
யஜ்ஞம் /தானம் /தபஸ் /தீர்த்த சேவை முதலானவை கர்ம யோக்கியதை உண்டாகும் படி சித்தியை விளைவிக்கும்

ஓதி உரு எண்ணும் அந்தி (யால் யாம் பயன் என் கொல்-புந்தியால் சிந்தியாது-முதல் திரு வந்தாதி -33 )

ஐந்து வேள்வி (திருச் சந்த விருத்தம்-3- / பெரிய திரு மொழி-5-9-9-/6-7-7-) தொடக்கமானவற்றைச் சொல்லுகிறது –

தர்மத்திலே சொருகாமல் , இவற்றை சர்வ சப்தத்துக்கு பொருளாக தனித்து சொல்லுகிறது –
பிரபத்திக்கு யோக்யதை தேட வேண்டாம் –
இவனையும்
இவன் உடைய ஸ்த்ரீ யையும் போல ,
நீசர் நடுவே கேட்கவும் -அநுஷ்டிக்கவுமாய்
குலங்கள் ஆய ஈர் இரண்டில் ( புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனேதிருச் சந்த விருத்தம் -90)
பிறவாதாரும் இதிலே அந்வயிக்கலாம் -என்று தேறுகைக்காக

முத்து விளக்கி ,முழி , மூக்கு புதைத்து- கிழக்கு நோக்கி கும்பிட்டு ,கீழ் மேலாக புற படுத்து ,
நாள் எண்ணி ,குரு விழி கொண்டு ,சாதனாந்தரங்களிலே நினைவாய் கிடந்ததிறே ..

இவை ஒன்றும் செய்யாதே
சரணா கதனாய்
இக் கரை ஏறினவன் (பெரியாழ்வார் திருமொழி 5-3-7 ) உபதேசிக்கக் கேட்டு
சரணாகத ரக்ஷணம் பண்ணின குலத்தில் பிறந்து ,
உறவை உட்பட கொண்டாடுகிறவர்க்கு ,
பிரபத்தி பழுத்துப் போய் ,அக்கரைப் பட ஒண்ணாது ஒழிந்தது
நன்மை தீமைகள் தேடவும் பொகடவும் வேண்டா ..
இவை விலக்கும் பற்றாசுமாய் இருக்கும் என்று இருக்கையே அதிகாரம் ..

(ஆண்டாள் அர்ஜுனன் திரௌபதி சரணாகதர் குலம் –
உன் தன்னைப் பிறவி புண்ணியம் யாம் உடையோம்
உன் தன்னோடு உறவேல் இங்கே ஒழிக்க ஒழியாதே-
உம்பி எம்பி -ஐவரானோம் இத்யாதி
நன்மையை தேடவும் வேண்டா தீமையும் பொகடவும் வேண்டா
தன்னால் வரும் நன்மை தீமையோ பாதி விலக்காய் ஆகுமே
ஆகவே நன்மை விலக்காய் இருக்கும் தீமையே பற்றாசாக இருக்கும் என்று இருக்கையே அதிகாரம்)

——————————————————

பிரதம பாதத்தை உபாதானம் பண்ணுகிறார் -சர்வ தர்மான் -என்று –
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -எல்லா தர்மங்களையும் என்று –

அது தான் தர்ம பதமும் பஹு வசனமும் -சர்வ சப்தமுமாய் -த்ரி பிரகாரமாய் இருக்கையாலே
இம் மூன்றுக்கும் அர்த்தம் அருளிச் செய்வதாக
பிரமம் தர்ம லக்ஷணத்தை அருளிச் செய்கிறார் –தர்மம் என்கிறது என்று தொடங்கி –

இங்குள்ள தர்ம சப்தம் தர்ம சாமான்ய பரம் அன்று –
தர்ம விசேஷ பரம் -என்று அருளிச் செய்கிறார் -இவ்விடத்தில் -இத்யாதி நா –

பல சாதன தர்மம் தான் –
தர்ம -பர தர்ம -பரம தர்ம -என்கிற பேதத்தால் மூன்று வகைப் பட்டு இருக்கும் –
அதில் அதர்ம வ்யாவருத்தமான ஸ்வர்க்காதி ஷூத்ர புருஷார்த்த சாதனம் தர்மம் ஆகிறது –
பரதர்மம் -ஆகிறது விமோசகம் ஆகையால்
பந்தகமானத்தில் காட்டில் விலக்ஷணமான பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ சாதனம் –
பரம தர்மம் ஆகிறது –
தர்மம் போலே-ஷூத்ர புருஷார்த்தத்தையே சாதித்தல்-
பர தர்மம் போலே சேதன யத்ன சாத்யமாதல் ஆகை யன்றிக்கே
சித்தம் ஆகையால் -பரம பிரயோஜன சாதகம் ஆகையால் தனக்கு அவ்வருக்கு இல்லாத பகவத் விஷயம் –

இந்த தர்ம சப்தத்துக்கு இவை மூன்றுமே அர்த்தம் ஆகையால் இப்போது பர தர்மத்தில் நோக்காகக் கடவது –
இங்கனே ஒதுக்கித் தருவார் ஆர் என்னில்-
அடியிலே முமுஷுவான போதே ஷூத்ர பல சாதனமான தர்மம் கழிகையாலும்-
பரம தர்மத்தை கோபலீ வர்த்த ந்யாயத்தாலே மேலே ஸ்வீ காரியமாக விசேஷிக்கையாலும்
த்யாஜ்யதயா பர தர்மத்தையே உபாதானம் பண்ணுகிறது –

பஹு வசன அர்த்தத்தை அருளிச் செய்கிறார் -தர்மான் -என்கிற இத்யாதி நா –

சர்வ சப்தத்தை அருளிச் செய்கிறார் -சர்வ சப்தம் -என்று
பிரபத்தியின் தேச கால அதிகாரி பல பிரகார நியம அபாவ வைசிஷ்ட்யத்தைப் பற்ற அருளிச் செய்கிறார் –
பிரபத்திக்கு என்று தொடங்கி –

இவன் அர்ஜுனன் -இவன் ஸ்த்ரீ -திரௌபதி -இவர்கள் இருவரும் பிரபத்தி ஸ்ரவண அனுஷ்டான கர்த்தாக்கள் இறே –
ஸூத்தனுக்கு அஸூத்தி சம்பாதிக்க வேண்டா -அஸூத்தனுக்கு ஸூத்தி சம்பாதிக்க வேண்டா –
இருந்தபடியே அதிகாரியும் அத்தனை -என்கிற சத் சம்பிரதாய நிஷ்கர்ஷம் நிரூபிதம் ஆயிற்று –
இவ்விடத்தில் ஸ்ரீ வேல் வெட்டிப் பிள்ளை ஸ்ரீ நம்பிள்ளை சம்வாதத்தை அனுசந்திப்பது
( ஸ்ரீ வசன பூஷணம் -31-/ இதுவே ஸ்ரீ வார்த்தா மாலை -63-இது உண்டே )

(கண்ணன் கழலிணை நண்ணும்)மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு
நானும் நமரும் என்னும்படி சர்வரும் அதிகாரிகள் –
போதுவீர் -என்று இறே -ஸ்ரீ ஆண்டாள் அதிகாரத்தை அறுதி இட்டது –
நன்மை தீமைகள் -இத்யாதி -நன்மை தேட வேண்டா -அது விலக்கு-
தீமை பொகட வேண்டா -அது பற்றாசு என்றபடி

தோஷத்தையும் குண ஹானியையும் பார்த்து உபேக்ஷியாத அளவு அன்றிக்கே அங்கீகாரத்துக்கு
அவை தன்னையே பச்சை யாக்கை இறே -சேஷி தம்பதிகளின் சாதாரண வைபவம் –
பாபத்தோடே வரிலும் அமையும் என்றான் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்
புண்ணியத்தை பொகட்டு வா என்றான் ஸ்ரீ கிருஷ்ணன் –

ஆக பகவானுடைய நிரபேஷ உபாயத்வம் நிரூபிக்கப் பட்டதாகிறது –

————————————————————————————————————————–

பரித்யஜ்ய பதார்த்தம் –
பரித்யஜ்ய -என்று இந்த உபாயங்களை விடும் படியைச் சொல்லுகிறது-
த்யாகமாவது -விடுகை
பரி த்யாகமாவாது -பற்று அற விடுகை
உபாயம் அல்லாதவற்றை உபாயமாக நினைத்தோம் என்று -சிப்பியை வெள்ளி என்று எடுத்தவன் லஜ்ஜித்து
பொகடுமாப் போல புகுந்து போனமை தெரியாத படி விட வேணும் ..
பித்தேறினாலும் அவற்றில் நினைவு செல்லாத படி -விட்டோம் என்கிற நினைவையும் கூட விடச் சொன்ன படி –

தர்ம தேவதை இத்தை பாதகம் என்பது –
ஆழ்வார் –
எய்தக் கூவுதல் ஆவதே (திரு வாய் மொழி 5-7-5) -என்று
புலை அறங்களோ பாதியாகிற (திருமாலை-7- )
இதை தர்மம் என்று விடச் சொல்லுகிறது –

பூசலை அதர்மம் என்றும்
இவற்றை தர்மம் என்றும் பிரமித்த அர்ஜுனன் நினைவாலே ..
நிஷித்தம் செய்கை அசக்தியால் அன்றிக்கே ஆகாதே என்று விடுமா போல
உபாயாந்தரங்களை ஸ்வரூப விருத்தம் என்று இறே –

தபோதனரான ரிஷிகளும்
நெருப்பை நீராக்குகிற தேஜஸ்ஸை உடைய பிராட்டியும் –
ஸ்வ ரக்ஷணத்திலே இழியாதே கர்ப்பத்தில் இருப்பாரைப் போலே இருந்தது –

நாண் தழும்பால் தீ விளையாத விட வாயும் வல் வாயும் ஏறி பர லோகங்களிலே சென்று
படை துணை செய்து அரிய தபசுக்களைச் செய்து வெறுத்துவர் சபையிலே வில் இட்டு அடித்து ஊர் வாசியை முறை கூறுகிறவன்
கர்ம ஞானங்களில் இழிய மாட்டாமை அன்றோ -கலங்குகிறது ..
ஸ்வரூப பாரதந்த்ரயத்தைக் கேட்ட படியாலே இறே –
தன்னை ராஜ மகிஷி என்று அறிந்தவள் உதிர் நெல் பொருக்கவும் ,கோட்டை நூற்கவும் ,குடம் சுமக்கவும் ,லஜ்ஜிக்கும் இறே ..
இவன் தான் சுமப்பேன் என்றான் –( கீதையில் அனைத்தையும் நானே தூங்குகிறேன் -பார்த்தா என்றானே )
இவனை எடுத்தினான் இத்தனை இறே

இவ் உபாயத்தில் ,இழியும் போது உபாயாந்தரங்களை அதர்மம் என்று விட வேண்டும் என்று சாஸ்திரங்கள் பலவும் சொல்லுகையாலும்
உத்தம ஆஸ்ரமத்தில் புகும் அவனுக்கு முன்பில் ஆஸ்ரம தர்மங்களை விடுகை குறை இல்லாமையாலும்
தர்மங்களை விடச் சொல்லுகை தப்பு அல்ல ..

————————————————————

அநந்தரம் த்வதீய பதார்த்தம் அருளிச் செய்கிறார் – பரித்யஜ்ய -என்று தொடங்கி –
இதுவும் தியாகமும் -ல்யப்பும்-உப சர்க்கமுமாய்-த்ரிபிரகாரமாய் இருக்கையாலே –
அதில் தியாகத்தை முந்துற அருளிச் செய்கிறார் -தியாகம் ஆவது -என்று தொடங்கி –

உபசர்க்க அர்த்தத்தை அருளிச் செய்கிறார் -பரித்யாகமாவது -என்று தொடங்கி –
தியாக வேஷத்தை அருளிச் செய்கிறார் -உபாயம் அல்லாத -என்று தொடங்கி

அத பாதக பீதஸ் த்வம் -என்ற தர்ம தேவதா வசனத்தையும் உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -தர்மதேவதை இத்யாதி –

தர்ம அதர்ம தியா குலம் -என்ற ஆளவந்தார் திரு வாக்கைத் திரு உள்ளத்தே கொண்டு அருளிச் செய்கிறார் பூசலை இத்யாதி –

ப்ரபாகாந்தர பரித்யாகத்துக்கு அஞ்ஞான அசக்திகள் அன்று பிரதான ஹேது-என்றத்தை திரு உள்ளத்தே கொண்டு
சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் -நிஷித்தம் என்று தொடங்கி -ஆகாதே -என்று -அப்ராப்தம் -என்றபடி –

இத்தால் நித்தியமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு இவை நாசகங்களாய்க் கொண்டு ஸ்வரூப விருத்தங்கள் என்ன ஒண்ணாது –
ஆகையால் ஆத்ம ஸ்வரூபத்தை பற்ற உபாஸனாதிகளுக்கு -நாஸகாத்வ அசம்பாவிதத்வ -அனர்த்த-அவஹத்வங்கள் இல்லாமையால்
ஒருபடியாலும் ஸ்வரூப விரோத பிரசங்கம் இல்லை -என்கிற பக்ஷம் நிரஸ்தம் –
அப்ராப்தம் -பகவத் அத்யந்த பாரதந்தர்யம் ஆகிற ஸ்வரூபத்துக்கு சேராது என்றபடி –

ஸ்வரூப விரோதம் என்கிற இடத்தில் ஸ்வரூப சப்தம் தர்மியைக் குறிக்குமது அல்ல
அசாதாரண தர்மத்தைக் குறிக்கும் என்றபடி –
சீதோ பவ என்ற பிராட்டி -நஷ்டோ பவ -என்னாதது அபிராப்தியை கணிசித்து இறே –

இங்கே –
அர்த்த ராத்திரியிலே தனி வழி போகா நிற்க துஷ்ட மிருகங்களால் மிடைந்த தொரு காட்டிலே முன்னடி தோற்றாத படி இருண்டு
வர்ஷமும் -இடியும் உண்டாய் -கண்ணுக்கு உள்ளே கொள்ளியை வீசினால் போலே மின்னிக் கொண்டு வாரா நிற்க
அவ் வவஸ்தையிலே
திரு நாம உச்சாரணம் பண்ணாது ஒழிகை பிரபன்ன லக்ஷணம் – பட்டர் சம்வாதம் -வார்த்தா மாலை -417-அனுசந்தேயம்-

கர்ப பூத தபோ தனா-என்றத்தை உட் கொண்டு அருளிச் செய்கிறார் தபோத நரான -இத்யாதி

சீதோ பவ -என்றத்தை உட் கொண்டு அருளிச் செய்கிறார் நெருப்பை -இத்யாதி –

கீதை கேட்ட அர்ஜுனன் கலக்கத்தை உபபாதிக்கிறார் -நாண் இத்யாதி
சரம ஸ்லோகத்தில் கழிக்கிற சோகம்
யதா வஸ்தித ஆத்ம உபதேசாதிகளாலே கழிந்த பந்து வதாதி நிமித்தமான பழைய சோகம் அன்று –
பிரகரண அனுகுண சோகாந்தரம் -எங்கனே என்னில் –
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தயா ஸூரீ மதா-16-5-என்று பிரித்துச் சொன்ன வாறே
நாம் ஆஸூர ப்ரக்ருதிகள் ஆகில் செய்வது என் -என்று சோகித்த அர்ஜுனனைப் பற்ற –

மாஸூச -சம்பதம் தைவீம் அபிஜாதோ அஸி பாண்டவ -16-5-என்றால் போலே
இங்கே கீழே உக்தங்களான உபாயங்கள் அனுஷ்ட்டிக்க அஸக்யங்கள் என்றும்
ஸ்வ சரீரத்வ கத நாதிகளாலே ப்ரதிபாதிக்கப் பட்ட பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு
ஸ்வ யத்ன ரூபங்களான இவை விரோதிகள் என்றும் புத்தி பண்ணி –
இவற்றால் எம்பெருமானைப் பெற என்பது ஓன்று இல்லை -இனி இழந்தே போம் அத்தனை ஆகாதே என்கிற சோகம் –

ஜிதேந்த்ரியரில் தலைவனாய் ஆஸ்திக அக்ரேசரனாய்-கேசவஸ்ய ஆத்மா -என்ற ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தாரகனாய்
இருந்துள்ள அர்ஜுனனுக்கு இப்போது சோகம் –
உபாயாந்தரங்கள்– பகவத் அத்யந்த பாரதந்தர்யம் -பகவத் சரீரத்வம் -ஆகிற ஸ்வ ஸ்வரூபத்துக்கு சேராதவை ஆகையால்
நாம் பகவத் விஷயத்தை இழந்தோம் அத்தனை -என்கிற மஹா ஸோஹம் என்றபடி –

உபாயாந்தர அனுஷ்டான உபயிக ஞான சக்த்யாதிகளை அர்ஜுனனுக்கு உபபாதிக்கிறார் –
நாண் -என்று தொடங்கி –
உத்தம ஆஸ்ரமத்தில் -இத்யாதி -ஜாதி ஆஸ்ரம தீஷைகளில் பேதிக்கும் தர்மங்கள் -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதய
ஸ்ரீ ஸூக்தியை அனுசந்திப்பது –

———————————————————————————————

தியாக விதி –
பரித்யஜ்ய என்கிற இது
விட்டால் அல்லது பற்ற ஒண்ணாது என்னும் இடத்தைக் காட்டுகிறது –
குளித்து உண்பான் என்றால்
உண்டு குளிக்கையும் குளியாமே உண்கையும் தப்பு இறே –

பற்றுகைக்கு அங்கமான போது இறே விடுகையும் நன்மை யாவது –
இவைதான் சுமந்தான் விழ உறங்குவான் கைப்பண்டம் போலே ஆமவை இறே

இவற்றைப் பேற்றுக்கு என்னாதே பேறு என்ற போது
கைங்கர்யத்திலும்
ஸ்வரூப ஞானத்திலும்
ப்ராப்ய ருசியிலும் சொருகும் இறே –

(இந்த தர்மங்களை -பேற்றுக்கு என்று உபாயமாகக் கொள்ளாதே -இவையே
பிரயோஜனம் -புருஷார்த்தம் என்ற பொழுது
கர்ம யோகம்-கைங்கர்யத்திலும்
ஞான யோகம் ஸ்வரூப ஞானத்திலும்
பக்தி யோகம் ப்ராப்ய ருசியிலும்
பிரபத்தி ஸ்வரூப யாதாம்ய ஞானத்திலே புகும் சொருகும் இறே –
விட்டே பற்ற வேண்டும் -சசால சாபஞ்ச வீர -வில் கை வீரனாக இல்லாமல் –வெறும் கை வீரன் ராவணன் -போலே –
ராவணன் இடம் தோற்க ராமனுக்கு பாக்யம் இல்லை -வியாக்யானம்-)

——————————————————————

இனி ல்யப்புக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -பரித்யஜ்ய -என்று தொடங்கி –
ஸ்நாத்வா புஞ்சீத -என்றத்தை உட் கொண்டு அருளிச் செய்கிறார் -குளித்து -இத்யாதி –
அதாவது –
த்யஜ்ய -என்கிற ல்யப்பாலே –
புக்த்வா சந்த்ராயணம் சரேத் —
விளக்கு அணைந்த பின்பும் உண்டால் சாந்த்ராயணம் பிராயச்சித்தம் பண்ண வேண்டும் -என்னுமா போல் அன்றிக்கே —
ஸ்நாத்வா புஞ்சீத –என்கிற விதி –
புஜிக்கும் அளவில் ஸ்நானம் பண்ணியே புஜிக்க வேணும் -என்கிற நியமத்தை சொல்லுமா போலே –
சித்த உபாயத்தை பரிக்ரஹிக்கும் அளவில் த்யாஜ்யமான
உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணும் என்கிற நியமத்தை சொல்லுகிறது என்கை –
இத்தால் தியாக அனுவாத பக்ஷம் அநாதரணீயம்-என்றதாயிற்று –

கைங்கர்யத்திலும் இத்யாதி –
இத்தால் கர்மம் கைங்கர்யத்தில் புகும் –
ஞானம் ஸ்வரூப பிரகாசத்தில் புகும் –
பக்தி ப்ராப்ய ருசியில் புகும் –
பிரபத்தி ஸ்வரூப யாதாம்ய ஞானத்திலே புகும் -என்ற வேதாந்த சார வேத்ய சாரதம நிஷ்கர்ஷம் நிரூபிதம் ஆயிற்று –

இங்கே தியாக சப்தத்தால் சொல்லுகிறது
தர்ம ஸ்வரூப தியாகத்தையோ –
தர்ம பலாதி தியாகத்தையோ –
தர்மத்தில் உபாயத்வ புத்தி தியாகத்தையோ -என்னில் –
இவ்வதிகாரிக்கு யாவச் சரீர பாதம் கால ஷேபத்துக்காக பகவத் சந்தோஷ ஹேது பூதமானவை அநுஷ்டேயம் ஆகையால்
தர்ம ஸ்வரூப தியாகம் ஆக மாட்டாது
பலாதிகள் சாதகனுக்கு கூட த்யாஜ்யமாக கீழே யுக்தமாகையாலே பலாதி தியாகத்தை இங்கே சொல்லுகிறது ஆக ஒண்ணாது –
ஆக இங்கு தர்மங்களினுடைய உபாயத்வ புத்தி தியாகத்தை சொல்லுகிறது –

அந்த உபாயத்வ புத்தி தியாகம் ஆவது –
மோக் லாப ஹேதுவான பகவத் ப்ரீதிக்கு சாதனம் என்கிற பிரதிபத்தியைத் தவிருகை
ஆகையால் ஸ்வரூப தியாகத்தால் வந்த குறையும் –
பலாதி தியாகத்தை சொல்லுகிறது என்கிறதால் வரும் புனர் யுக்தி இன்றியிலே ஒழியும்-
அவன்-உபாசகன்- உபாய புத்தியா அனுஷ்ட்டிக்கும் -இவன்-ப்ரபன்னன்- போக புத்தியா அனுஷ்ட்டிக்கும் –
அவன் விதி பிரேரிதனாய் அனுஷ்ட்டிக்கும் -இவன் ராக பிரேரிதனாய் அனுஷ்ட்டிக்கும்
அவனுக்கு வர்ணாஸ்ரம தர்மம் நியாமேன அனுஷ்ட்டிக்க வேணும் -இவனுக்கு வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானமாகவுமாம் –
வைஷ்ணவ கிஞ்சித் காரகமாகவுமாம்
பிராதி கூல்ய நிவ்ருத்தியிலே நியமம் -ஆனு கூல்யங்களில் ஏதேனுமாம் –
ஆகை இறே நம் ஆச்சார்யர்கள் இவற்றை அனுஷ்ட்டிப்பாரும் அனுஷ்டியாதாருமாய் போருகிறது
ஆகை இறே ஆனு கூலஸ்ய சங்கல்பம் பிராதி கூலஸ்ய வர்ஜனம் என்று ஆனு கூல்ய சங்கல்பத்தோபாதி
பிராதி கூல்ய நிவ்ருத்தியையும் -அவகாகித ஸ்வேதம் போலே -சம்பாவித ஸ்வ பாவமாக சொல்லுகிறது
ஆக காம்ய கர்மத்தோபாதி மோக்ஷ சாதன தர்மமும் இவனுக்கு த்யாஜ்யம் ஆகையால்
சாங்கமான அந்த தர்ம தியாகத்தை தியாக சப்தத்தால் சொல்லிற்று ஆயத்து-

தியாக விசேஷணமான -பரி சப்தம் –
பரி சாகல்யே-என்கிறபடியே -சாகல்ய வாசியாய்க் கிடக்கிறது –
(சகல -சாகல்யம் -அனைத்தும்)
சாகல்ய சப்த வாஸ்யம்– வாசனையாய் சவாசன தியாகத்தைச் சொல்லுகிறது-
அதாவது லஜ்ஜா புரஸ் சர தியாகம் –
ஸ்வ ரக்ஷண அர்த்தையான ஸ்வ ப்ரவ்ருத்தி ஸ்வரூப ஹானி என்று அறிந்தால் –
நெடுநாள் ஸ்வரூப ஹானி யான வற்றை யாகாதே உபாயமாக நினைத்து இருந்ததே -என்ற லஜ்ஜை பிறக்கக் கடவது இறே –
பர்த்ரு போகத்தை உதர போஷணத்துக்கு உறுப்பு ஆக்குகை யாகிறது
பதி வ்ரதைக்கு ஸ்வரூப ஹானி யாமா போலே இறே –
போக ரூபமான ப்ரவ்ருத்தியை சாதனம் ஆக்குகை யாகிறது –

த்யஜ்ய என்கிற ல்யப்பாலே
தர்ம தியாகம் சுவீகாரத்துக்கு அங்கமானவன்று கர்தவ்யம் -அல்லாத போது அயுக்தம் -என்னும் இடத்தைக் காட்டுகிறது
தர்மத்தை விட்டு சுவீகாரத்தில் இழியாதே இருக்குமாகில் உபய பிரஷ்டன் ஆகையால் நாசமே பலமாய் அறும் இறே –
இத்தை பற்ற இறே –
நஞ்சீயர் -ஒன்றில் நாராகிகளுக்கு மூர்த்த அபிஷிக்தன் ஆதல் -இல்லை யாகில் பரமபதம் என் சிறு முறிப்படியே செல்லுதல்
செய்யும் படி இறே நான் நிற்கிற நிலை – என்று அருளிச் செய்தது –
அதாகிறது
தர்ம தியாக பலமான பாபம் மேலிட்டு நரகம் வஸ்த்வய பூமி யாதல் -தியாக பூர்வகமாக ஸ்வீக்ருதமான உபாயம் பலித்தது
பரமபதம் வஸ்த்வய பூமி யாதலாம் இத்தனை இறே என்கை –

ஆக ல்யப்பாலே மேல் சொல்லப் போகிற சுவீகாரம் தியாக அங்ககம் என்னும் இடம் சொல்லிற்று ஆயத்து-

ஸ்வ ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் சாதனாந்தரங்களை விட வேண்டி வரும் –
அவற்றினுடைய ஸ்வரூபங்களைப் பார்த்தாலும் சாதனாந்தரங்கள் த்யாஜ்யமாய் அறும்
பற்றப் புகுகிற உபாய ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் சாதனாந்தரங்கள் த்யாஜ்யமாய் அறும்-

ஸ்வ ஸ்வரூபத்தை பார்த்தால்
நமஸ் சப்தத்தில் சொல்லுகிற படியே -ஸ்வ ரக்ஷண வியாபாரத்தில் இழிகை ஸ்வரூப ஹானியாம் படி
அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கும் –

அவை தன்னைப் பார்த்தால்
பஹு யத்ன சாத்தியம் ஆகையால் துஷ்கரமுமாய்-
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-என்று
சிரகால சாத்யமுமாய்-இந்திரிய ஜயாதிகள் அபேக்ஷிதம் ஆகையாலும்-
ஆதிபரதாதிகள் ப்ரஷ்டராகக் காண்கையாலும் (மான் குட்டி பார்த்து இழந்தார்)
ஸாபாயமுமாய் பிராரப்த கர்ம வாசனை அபேக்ஷம் ஆகையால் விளம்பிய பல பிரதமுமாய் இருக்கும்

உபாயத்தைப் பார்த்தால்
நித்ய அநபாயினியான பிராட்டியும் ஸஹ காரியாக சஹியாதபடி
சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே நிரபேஷமாய் இருக்கும்

ஆக
தான் அநந்ய சாதனன் ஆகையாலும் –
அவை துஷ் கரத்வாதி தோஷ தூஷிதம் ஆகையாலும் –
உபாயம் ஸஹ காரி நிரபேஷம் ஆகையாலும் –
தர்ம தியாகம் உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமாகக் கடவது –
இப்போது இறே ஆகிஞ்சன்ய ரூப அதிகார சித்தி உண்டாவது –

——————————————————————————————————–

மாம் -சப்தார்த்தம் ..
மாம் -என்று பற்றப் படும் உபாயத்தைச் சொல்லுகிறது ..
மாம் -என்னை —
அறம் அல்லனவும் சொல் அல்ல (நான்முகன்–72 ) -என்னும் கழிப்பனான தர்மங்கள் போல் அன்றிக்கே
கைக் கொள்ளப்படும் நல் அறத்தைக் காட்டுகிறான்

வேதத்தில் இரண்டு கூற்றிலும் அறிவுடை யார்க்கும் நல் அறமாக சொல்லுவது
பறை தரும் புண்ணியனான ( திருப் பாவை -10 ) கிருஷ்ணனை இறே-
தர்மங்களை நிலை நிறுத்தப் பிறந்தவன் தானே
தர்மங்களை விடுவித்து ,
அவற்றின் நிலையிலே தன்னை நிறுத்துகையாலே நேரே தர்மம் தான் என்னும் இடத்தை வெளி இட்டான் ஆயிற்று ..

அல்லாத தர்மங்கள்
சேதனனாலே செய்யப் பட்டு ,பல கூடி ஒன்றாய் ,நிலை நில்லாதே ,
அறிவும் மிடுக்கும் அற்று , இவன் கை பார்த்து- தாழ்ந்து – பலிக்கக் கடவனாய் இருக்கும் ..

இந்த தர்மம் –
அறம் சுவராக நின்ற (திரு மாலை -6) என்று
படி எடுத்தார் போல கோயிலாம் படி சித்த ரூபமாய் ,
ஒன்றாய் , நிலை நின்று , ஞான சக்திகளோடு கூடி ,ஒன்றால் அபேக்ஷை அற்று , தாழாமல் பலிக்குமதாய் இருக்கும்

என்னை என்று
வைகுந்தம் கோவில் கொண்ட ( திரு வாய் மொழி 8-6-5 ) என்றும் –
வேலை வாய் கண் வளரும் (பெரிய திரு வந்தாதி -85 ) என்றும் –
ஒழிவற நிறைந்து நின்ற (திரு வாய் மொழி 3-2-7 ) என்றும் –
எம் மாண்பும் ஆனான் ( திரு வாய் மொழி 1-8-2 ) என்கிற தன்னுடைய
பரத்வாதிகளை கழித்து ,கிருஷ்ணனான நிலையைக் காட்டுகிறான் ..

பால பிராயத்தே (பெரியாழ்வார் திரு மொழி 2-6-6 ) இவனைக் கைக் கொண்டு-
(பார்த்ததற்கு அருள் செய்த கோலப் பிரான்–அழகைக் காட்டி கைக் கொண்டு )
ஓக்க விளையாடி ஒரு படுக்கையிலே கிடந்து ஓர் ஆஸனத்திலே கால் மேல் கால் ஏறிட்டு இருந்து
ஓர் கலத்திலே உண்டு ,காட்டுக்கு துணையாக கார்ய விசாரங்களைப் பண்ணி
ஆபத்துக்களிலே உதவி நன்மைகளைச் சிந்தித்து

மண்ணகலம் கூறிடுவான் (பெரிய திருமொழி 11-5-7) ஓலை கட்டி தூது சென்று
ஊர் ஓன்று வேண்டி பெறாத உரோடத்தால் பாரதம் கை செய்து (ரோஷத்தால் -பெரியாழ்வார் திரு மொழி 2-6-5 ),
தேசம் அறிய ஓர் சாரதியாய் ( திரு வாய் மொழி 7-5-9 -சர்வ லோகம் சாக்ஷியாக நடந்த நல்வார்த்தை அறிந்தவர் மாயற்கு அன்று ஆவரோ )
அவர்களையே என்னும் படியான ,
இவனுடைய குற்றங்களைக் காணாக் கண்ணிட்டு நலமான வாத்சல்யத்துக்கு இறை ஆக்கி
சீரிய அர்த்தங்களை வெளி இட்டு

தேவர் தலை மன்னர் தாமே (நான்முகன் திரு வந்தாதி -16-மாற்றாக -பாண்டவர் விரோதி -மம பிராணன் போலே என்பதால்)
என்னும் படியான ஸ்வாமித்வத்தை பின் விஸ்வ ரூப முகத்தாலே காட்டி
பாங்காக முன் ஐவரோடு அன்பளவி ( பெரிய திருமொழி 2-4-4 )
என்னும் படி சௌசீல்யம் தோற்றும் படி புரை அறக் கலந்து

பக்கமே கண்டார் உள்ளார் (பெரியாழ்வார் திருமொழி 4-1-8 ) என்னும் படி சுலபனாய்

கார் ஒக்கும் மேனியைக் ( திரு வாய் மொழி 9-9-7 ) கண்ணுக்கு இலக்கு ஆக்கிக் கொண்டு போருகிறவன் —

சேனா தூளியாலே புழுதி படிந்த கொத்தார் கரும் குழலும் (பெரியாழ்வார் திரு மொழி 2-1-7 )
குறு வேர்ப்பு அரும்பின கோள் இழையாயுடை கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன் கோள் இழை வாள் முகமாய் ( திரு வாய் மொழி 7-7-8 )
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் (திரு மார்பும்- பெரியாழ்வார் திருமொழி 1-2-10 )
திரு மார்வணிந்த வன மாலையும் ( நாய்ச்சியார் திரு மொழி 13-3 )

இடுக்கின மெச்சூது சங்கமும் (-மெச்சு ஊதுதல் -பெரியாழ்வார் திரு மொழி 2-1-1 )
அணி மிகு தாமரைக் கையாலே ( திருக் கையே ஆபரணம் -சர்வ பூஷண பூஷார்ஹம் -திரு வாய் மொழி 10-3-5) கோத்த சிறு வாய்க் கயிறும்
முடை கோலும்
அர்த்த பிரகாசமான ஞான முத்திரையும் ,

கட்டி நன்கு உடுத்த பீதக ஆடையும் (பெரியாழ்வார் திரு மொழி 3-6-10 )

சிலம்பும் செறி கழலும் ( -மூன்றாம் திரு வந்தாதி -90 )
வெள்ளித் தளையும் (பெரியாழ்வார் திரு மொழி 1-2-3 )
சதங்கையும் கலந்து ஆர்ப்ப (பெரியாழ்வார் திரு மொழி 1-2-20 )
தேருக்குக் கீழே நாட்டின
கனை கழலுமாய் ( திரு வாய் மொழி 3-6-10 ) நிற்கிற நிலையை -மாம் -என்று காட்டுகிறான் ..

————————————————————–

அநந்தரம் த்ருதீய பதார்த்தம் அருளிச் செய்கிறார்
மாம் என்று தொடங்கி –
சர்வேஸ்வரனுடைய நிருபாதிக தர்மத்வத்தை உபபாதிக்கிறார்
அறம் என்று தொடங்கி –
இங்கே ராமோ விக்ரஹவான் தர்ம -சாது சத்ய பராக்ரமா
கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் –
அதாதோ தர்ம ஜிஜ்ஞாச -இத்யாதி வசனங்களை அனுசந்திப்பது –

வேத வித -அத்யாத்மவித-என்ற பதங்களைக் கடாக்ஷித்து அருளிச் செய்கிறார் –
வேதத்தில் இரண்டு கூற்றிலும் -என்று தொடங்கி –
(கர்ம காண்டம் ப்ரஹ்ம காண்டம் இரண்டையும் அறிந்தவர்கள் )

தர்மங்களை எல்லாம் விட்டு தன்னைப் பற்றச் சொல்லுகையாலே பலிதமான தொரு அர்த்த விசேஷத்தை அருளிச் செய்கிறார் –
தர்மங்களை நிலை நிறுத்த -இத்யாதி நா –
இப்படிச் சொன்ன இத்தால் கீழ் விட்ட சாதனங்களில் காட்டில் இந்த சாதனத்துக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது
அது தான் எது என்ன அருளிச் செய்கிறார் -அல்லாத -என்று தொடங்கி -அதாவது
ஸித்தமாய்-பரம சேதனமாய் -சர்வ சக்தியாய் -நிரபாயமாய் -ப்ராப்தமாய் -சஹாயாந்தர நிரபேஷமாய் இருக்கும் என்றபடி –

மாம் என்று ஸ்ரீ கிருஷ்ண ரூபத்தைக் காட்டுகையாலே வ்யாவர்த்திக்கப் படுகிறவற்றை அருளிச் செய்கிறார் –
என்னை -என்று தொடங்கி-
இத்தால் தேச விப்ரக்ருஷ்டத்தையாலே காணவும் கிட்டவும் ஒண்ணாதபடி இருக்கிற பர வ்யூஹங்களையும் —
அசாதாரண விக்ரஹ உக்தம் இன்றிக்கே
உபாயாந்தர நிஷ்டருக்கு உத்தேசியமாய் இருக்கிற அக்னி இந்திரியாதி தேவதாந்த்ர அந்தர்யாமித்வத்தையும் -வ்யாவர்த்திக்கிறது என்கை –

அவதாரங்களின் ஸுலப்யம் பரத்வம் என்னலாம் படி இறே ஸ்ரீ கிருஷ்ணன் உடைய ஸுலப்யம் –
அத்தைப் பற்ற
விபவாந்தரங்களும் கழி உண்ணுமத்தை அருளிச் செய்கிறார் எம் மாண்பும் ஆனான் என்று –

இனி இப்பதத்திலே
ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதகங்களான குண விசேஷங்களை எல்லாம் பிரகாசிக்கிற படியை அருளிச் செய்கிறார் –
பாலப் பிராயத்தே என்று தொடங்கி –
இத்தால் மாம் என்று ஆஸ்ரயணீயமான வியக்தியைச் சொல்லுகையாலே
ஆஸ்ரயண உபயோகியான –
நிகரில் புகழாய்-உலகம் மூன்று உடையாய் – என்னை ஆள்வானே -திரு வேங்கடத்தானே -என்று முதல்வரான ஆழ்வாரும்
அனுஷ்டித்த அனுஷ்டான வாக்கியத்தில் நாராயண பதத்தில் அனுசந்தேயங்களான
வாத்சல்யாதி குண சதுஷ்ட்யங்களும் அனுசந்தேயம் என்கை –

வாத்சல்யம் ஆவது -அன்று ஈன்ற கன்றின் பக்கல் தாய் பண்ணும் வியாமோஹம்
ஸ்வாமித்வம் ஆவது ஆஸ்ரிதர் உடைய பேறு இழவுகளிலே உண்டான ஸூக துக்கங்கள் அவர்களுக்கு அன்றிக்கே
தனக்கே யாம் படி அவைகளை உடையனாகை-
ஸுசீல்யமாவது -ஷூத்ர சம்சாரிகளான சேதனரோடு கலக்கும் போது-அவன் சிறுமை யாதல் தன் பெருமை யாதல்
நெஞ்சில் படாதபடி புரை யறக் கலக்கை-
ஸுலப்யமாவது-அதீந்தர்யன் ஆனவன் எல்லாருடைய கண்ணுக்கும் இலக்காய்க் கொண்டு ஸூலபனாய் இருக்கை-

இவை எல்லாவற்றிலும் வைத்துக் கொண்டு மிகவும் அபேக்ஷிதம் ஸுலப்யம் ஆகையால் –
அவதார ப்ரயுக்தமான ஸுலப்யத்வம் அளவன்றிக்கே
சாரத்ய அவஸ்த்திதனாய் நிற்கிற ஸுலப்ய அதிசயத்தை தர்சிப்பித்தமையை அருளிச் செய்கிறார் -சேனா தூளி இத்யாதி –

இத்தால்
சேனா தூளி தூ சரிதமாய் அலைகிற திருக் குழல் கற்றையும்-
ஸ்வேத பிந்து ஸ்தபகிதமான திரு மூக்கும் –
ஆஸ்ரித விரோதி தரிசனத்தால் சீறிச் சிவந்து சீதளமாய் சிதற அலர்ந்த தாமரைத் தடாகம் போலே
கண்டவிடம் எங்கும் அலை எறிகிற திருக் கண்களும்-
காள மேகம் போலே இருண்டு குளிர்ந்த திரு மேனியும் –
அதுக்கு பரிபாகம் ஆம்படி சாத்தின திருப் பீதாம்பரமும் –
தேருக்கு கீழே நாற்றின திருவடிகளை –
அதிலே சாற்றினை சிறு சதங்கைகளும் -தூக்கின உழவு கோலும் –
பிடித்த சிறு வாய்க் கயிறுமாகிய நிற்கிற நிலையை காட்டுகையாலே
விலக்ஷண விக்ரஹ யோகம் தோற்றுகிறது-

தன் சிறுமை கண்டு இறாய்க்க வேண்டா -அவன் ஸூசீலனாகையாலே –
துர்லபம் என்று இறாய்க்க வேண்டா -அவன் ஸூலபன் ஆகையால்-
தன் தோஷம் கண்டு இறாய்க்க வேண்டா அவன் வத்சலன் ஆகையால் –
அப்ராப்தன் என்று இறாய்க்க வேண்டா -சர்வ ஸ்வாமி யாகையாலே –
ஆஸ்ரயிக்கைக்கு ஸூபாஸ்ரயம் ஏது என்று கலங்க வேண்டா -விலக்ஷண விக்ரஹ உக்தன் ஆகையால்

இந்த விலக்ஷண விக்ரஹ யோகத்தை
அந்த விக்ரஹத்துக்கு நிரூபக பூதையாய்-அகலகில்லேன் இறையும்-என்று திரு மார்பிலே எழுந்து அருளி இருக்கிற
பிராட்டியையும் சொல்லிற்றாய் அறுகையாலே
இவனுடைய பூர்வ அபராதத்தை பொறுப்பித்துச் சேர விடுகைக்கு புருஷகார யோகமும் சொல்லிற்று ஆயத்து என்கை –

ஆக -மாம் என்று –
ஸ்ரீ மானுமாய் நாராயணனுமாய் இருக்கிற என்னை -என்றபடி –

இத்தால் அனுஷ்டான வாக்கியத்தில்
ஸ்ரீ மத் சப்தத்தையும் நாராயண சப்தத்தையும் ஸ்மரிப்பிக்கிறது-
அதுக்கு ஹேது விதி அனுஷ்டானங்கள் இரண்டும் ஏகார்த்தம் ஆகையால்
ஆகையால் இத்தால் ஸ்ரீ மானான நாராயணனே சரண்யன் என்றதாயிற்று –
இவ்விசிஷ்ட வேஷத்தில் ஆஸ்ரயித்ததால் ஆயிற்று பல சித்தி உள்ளது –

பிரிய ஆஸ்ரயிக்கை யாவது தேவதாந்தரத்தை ஆஸ்ரயித்த வோபாதி இறே-
அனுசந்தான ரகஸ்யத்தில் ஸ்ரீ மத் பதம் இருக்கக் காண்கையாலே
ஐகார்யத்தைப் பற்ற இந்த விதி ரகஸ்யத்திலும் ஸ்ரீமத்வம் அனுசந்தேயமாகத் தட்டில்லை என்றபடி –

இங்கு மாம் -அஹம் -என்கிற பதங்களுக்கு-அடைவே
அவதார ரகஸ்யத்திலும் புருஷோத்தமத்வ ப்ரதிபாதன பிரகரணத்திலும் சொல்லுகிறபடியே
ஸுலப்யத்திலும் ஸ்வாதந்தர்யத்திலும் பிரதான்யேன நோக்கு –

அவதாரஸ்ய சத்யத்வம் அஜஹத் ஸ்வ ஸ்வபாவதா -ஸூத்த சத்வ மயத்வம் ச ஸ்வேச்சா மாத்ர நிதானதா-
தர்ம க்லா நவ் சமுதய-சாது சம்ரக்ஷணர்த்ததா -இதி ஜென்ம ரகஸ்யம் -யோ வேத்தி நாஸ்ய புனர் பவ-
இவ்வவதார ரகஸ்ய ஞானம் சத்வாராக பிரபத்தி நிஷ்டனுக்கு உபாய பூரகம்

ஸ்வ தந்த்ர பிரபத்தி நிஷ்டனுக்கு ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்யத்தைக் காட்டும் –
இப் பிரகரணங்கள் இரண்டிலும் ஸித்தமான ஸுலப்யமும் ஸ்வாதந்தர்யமும்
ஒன்றுக்கு ஓன்று துணையாய் இருக்கும் –

(ஸ்ரீ கீதை -4-அத்தியாயத்தில் அவதார ரஹஸ்யம் -15-அத்தியாயத்தில் புருஷோத்தம வித்யை
பக்தி தொடங்க உள்ள விரோதி போக்கி பக்தி செய்து அதனால் முக்தி-இது சத்வாராக பிரபத்தி
அத்வாரக பிரபத்தி-ஸ்வ தந்த்ர பிரபத்தி -கீழே போலே பக்திக்கு அங்கம் இல்லை )

ஸ்வதந்த்ரஸ் யாபி நைவ ஸ்யாத் ஆஸ்ரயோ துர்லபஸ் யது -அஸ்வதந்த்ராத் பலம் ந ஸ்யாத் ஸூலபா தாஸ்ரிதாதபி
அஸ்வதந்த்ர ந கைங்கர்யம் ஸித்தயேத் ஸ் வைர பிரசங்கத-துர்லபே ஸாத்ய மப்யேதத் ந ஹ்ருதயம் லோக நீதித-
ஆகையால் கேவல ஸூலபமான த்ருணாதிகளைப் போலே அன்றிக்கே –
சிலாக்யனுமாய் துர்லபமான மேருவைப் போல் அன்றிக்கே
ஸூலபனுமாய் பரனுமான சரண்யன் ஆஸ்ரயணீயனுமாய் ப்ராப்யனும் ஆகிறான் –

இவ்விரண்டு பதத்தாலும்
சர்வ ரக்ஷகனான சர்வ சேஷி ரக்ஷணத்துக்கு அவசரம் பார்த்து நிற்கிற நிலையும் தோற்றுகிறது –

இப்படி அவசர ப்ரதீஷனான ஈஸ்வரன்
ரஷாபேஷம் ப்ரதிக்ஷதே -என்கிறபடியே –
என்றோ இவர்கள் நம்மை அபேக்ஷிப்பது -என்கிற அபிப்ராயத்தாலே அபிமுகனாய் நிற்கிற நிலை மாம் என்கிற பதத்தில் ஸூசிதம்

என்று நாம் இவர்களை அழுக்கு கழற்றின ஆபரணத்தைப் போலே அங்கீகரிப்பது -என்கிற அபிப்ராயத்தாலே
ஸத்வரனாய் தன் பேறாக பலம் கொடுக்க நிற்கிற நிலை -அஹம் -என்கிற பதத்தில் காட்டப் படுகிறது —

இங்கு மாம் என்று -நீ உனக்கு போக்யமான சப்தாதி விஷயங்களை புஜிக்கையாலே உன் உடம்பில் புகரைப் பாராய் –
எனக்குப் போக்யமான உன்னை அனுபவிக்கப் பெறாமையாலே என் உடம்பில் வெளுப்பைப் பார் -என்று
சட்டையை அவிழ்த்துக் காட்டுகிறான் -என்று எம்பார் அருளிச் செய்வார் –

மாம் -என்று தன் வ்யாமோஹத்தைக் காட்டுகிறான் என்று நம்பிள்ளை அருளிச் செய்வார் –
அதாவது
வைகுண்டே து பரே லோகே -இத்யாதிகளில் படியே
பக்தை பாகவதை சக -என்கிற வைகுந்தத்து அமரரும் முனிவருமான அயர்வறும் அமரர்கள் உடன்
ஸ்ரீ பூமி நீளைகள் உடன் எழுந்து அருளி இருந்து நிரந்தர பரிபூர்ண அனுபவம் நடக்கச் செய்தேயும்
லீலா விபூதியில் உள்ளார் உடைய இழவே திரு உள்ளத்தில் பட்டு –
ச ஏகாகீ ந ரமேத -என்று
அவ்வனுபவம் உண்டது உருக்காட்டாதே திரு உள்ளம் புண்பட்டு
இவர்களையும் அவ்வநுபவத்திலே மூட்டலாமோ என்னும் நசையாலே அவதரித்து
தாழ நின்று
அவன் கால் தன் தலையிலே பட நின்று வியாபாரித்த
தன் வ்யாமோஹம் எல்லாம் தோற்றும்படி இருக்கை –

இத்தால்
நீ விமுகனான திசையிலும் அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கியும் –
கரண களேபர விதுரனாய் அசிதவிசேஷித்தனான வன்றும் என் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கியும் –
பின்பு நீ அபிமுகனாய் உஜ்ஜீவிக்கக் கூடுமோ என்று கரண களேபர பிரதானம் பண்ணியும்
பின்பு அவற்றைக் கொண்டு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பண்ணுகைக்காக அநு பிரவேசித்து –
என்னைப் பெறுகைக்கு உடலாய் இருபத்தொரு ஞான விசேஷம் உண்டாமோ என்னும் நசையாலே வேதங்களை பிரவர்த்திப்பித்தும் –
அவதரித்ததும் திரிகிற தன் வியாபாராதிகளைக் காட்டுகிறான் -என்றதாயிற்று

ஆக
ஆஸ்ரித சேதனனுடைய ஸ்வ அபராத பய நிவ்ருத்தி ஹேது பூத
புருஷகாரமும்-
வாத்சல்யாதிகளும் –
விலக்ஷண விக்ரஹ யோகமும்
மாம் என்று ஆஸ்ரய நீய வஸ்துவின் பக்கலிலே அனுசந்தித்தது ஆயிற்று –

———————————————————————————————————

ஏக சப்தார்த்தம் ..
புற பகை அறுத்துக் காட்டின உபாயத்துக்கு -ஏகம் – என்று உட்பகை அறுக்கிறது ..
இந்த உபாயத்தை சொல்லும் இடங்களிலே –
களை கண் நீயே (பெரிய திரு மொழி 4-6-1 ) என்றும்
(மாம் ஏகம் என்று நீ சொன்னதையே உனக்கு நான் நினைவூட்டி சொல்ல வேண்டி உள்ளதே காவளம் பாடி கண்ணா )
சரணே சரண் ( திரு வாய் மொழி 5-10-11 ) என்பதொரு நிர்பந்தம் உண்டு ஆகையாலே
என்னையே என்று –
விரஜ -என்று சொல்லப் படுகிற ஸ்வீகாரத்தில் உபாய புத்தியைத் துடைத்து
உபாயத்தை ஓட வைக்கிறது

(ஸ்வீ காரத்தில் உபாய புத்தி தவிர்க்கிறது -காம்பற தலை சிரைத்து
கேவலம் மதியயைவ தயையால் -மட்டுமே -என்றும் சொல்லி என்னுடைய தயையாலேயே –
உள் பகையும் தவிர்த்து தன்னை சுட்டிக் காட்டி அருளுகிறார்)

அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் (திரு வாய் மொழி 9-3-2 ) என்றும்
அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான் (மூன்றாம் திரு வந்தாதி -51 ) என்னும் படி
ஒன்றிலும் ஒரு சகாயம் பொறாதே -வேறு ஒன்றை காணில் சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே
தன்னைக் கொண்டு நழுவும் படி இறே உபாயத்தின் சுணை உடைமை –

(அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-அடி தோறும் அவனே )

(அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-அடி தோறும் அவனே–

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்–வர்ஷத்தாலே நோவுபட்ட பசுக்கள் தம்முடைய ரக்ஷணத்துக்குத்
தாம் ப்ரவர்த்தித்தது யுண்டோ -அவனே யன்றோ -என்று சஹஹாரி நைரபேஷயத்தைச் சொல்கிறது
அவனே அணி மருதம் சாய்த்தான் –நிரபேஷமாக மருதத்தைச் சாய்த்தானும் அவனே
அவனே-கலங்கா பெரு நகரம் காட்டுவான் -பரம பதம் அவனே காட்டக் காணும் அத்தனை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்குக் காணப் போகாது –
கண்டீர்-இலங்கா புரம் எரித்தான் எய்து ——லங்கையை அழித்து பிராட்டியைப் பெறுகைக்கு யத்னம் பண்ணினானும் தானே –
அறிவில்லாத பசுக்களோடு அறிவில் தலை நின்ற பிராட்டியோடு ஒரு வாசி இல்லை
அறிவுக்கு பிரயோஜனம் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கை
அறியாமைக்கு பிரயோஜனம் -பண்ணுகிற ரக்ஷணத்தை விலக்காமை என்றபடி –
ஒருவர் கூறை எழுவர் குடுக்கிற சம்சாரத்தில் உள்ள கலக்கம் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற
பெரிய ராஜ தானியான பரம பதத்தை நீ கண்டு கொள் என்கிறபடியே அகிஞ்சனரான நமக்கு காட்டித் தருவானும்
நிரபேஷ உபாய பூதனான அவனே கிடீர்)

அதுவும் அவனது இன் அருளே (திரு வாய் மொழி-8-8-3 )–என்று இத்தலையில் நினைவுக்கும் அடி அவன் ஆகையாலே
நீ என்னைக் கைக் கொண்ட பின் ( பெரியாழ்வார் திருமொழி 5-4-2 ) என்னும் படியான
அவனுடைய ஸ்வீகாரம் ஒழிய தன் நினைவாலே பெற இருக்கை ….
என் நினைந்து இருந்தாய் (பெரிய திரு மொழி 2-7-1 ) என்கிற அதிகாரிக்கு கொத்தை இறே ..

விட்டோம்
பற்றினோம்
விடுவித்து பற்று விக்கப் பெற்றோம்
என்கிற நினைவுகளும் உபாயத்துக்கு விலக்கு இறே –

( பெருமாள் ஸ்வாமி தனது சொத்தை தானே தன்னிடம் சேர்த்துக் கொண்டார் –
நமது சைதன்யத்துக்கு பலம் நாம் அவன் சொத்து என்கிற நினைவு ஒன்றே –
படியாய்க் கிடந்தது பவள வாய் காண வேண்டுமே – )

—————————————————————–

அநந்தரம்-சதுர்த்த பதார்த்தம் அருளிச் செய்கிறார் -புறப் பகை -இத்யாதி —
அதாவது உபாயாந்தரங்கள் வ்யாவர்த்தமாம் அளவில் புனர் உக்த்யம் பிரசங்கிக்கையாலும்
தேவ தாந்த்ரங்கள் வ்யாவர்த்தமாம் அளவில் மாம் என்று அசாதாரண ஆகாரத்தைச் சொல்லுகையாலே –
அது கீழே சித்தம் ஆகையால் –
இந்த அவதாரணத்தால்
வ்ரஜ என்று மேல் சொல்லுகிற ஸ்வீ காரத்தில் உபாயத்வத்தைக் கழிக்கிறது -என்கை –

(இது எல்லாம் உபாயம் அல்ல நான் உபாயம்–மாம்
நீ பண்ணும் -வ்ரஜ -ப்ரபத்தியும் உபாயம் அல்ல நானே உபாயம்-ஏகம் என்றவாறு )

இந்த ஸ்வீகாரம் தானும் அந்வய வ்யதிரேகத்தால் சாதனம் என்று நினைக்கலாய் இருக்கையாலே –
(சர்வ தர்மான் பரித்யஜ்ய -வ்யதிரேகம்/ மாம் ஏவம் சரணம் வ்ரஜ-அன்வயம்-பற்றின செயலும் உபாயம் இல்லை -)
இந்த சாதனத்வம் அவசியம் கழிக்க வேணும் இறே-

1-சிலர் ஏகம் என்கிற இதுக்கு பொருள் -கர்த்தாவான என்னை -என்றபடி என்றார்கள் -அதாவது
பராத்து தத் ஸ் ருதே -என்று
ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பகவத் அதீனமாய் இருக்கும் என்கை –
(கர்த்தா சாஸ்த்ரவத்வாத் -சாஸ்திரம் விதிப்பதால் நானே கர்த்தா தோன்றுவதை மாற்ற இந்த ஸூத்ரம்-கர்த்ருத்வமும் அவனது அதீனம் )

2-சிலர் ஏக சப்தம் சத்ருக் ப்ரபத்தியைச் சொல்லுகிறது என்றார்கள் –
(ஏகம் சரணம் -ஒருமுறையே ஸக்ருத் வேண்டுவது )

3-சிலர் உன்னுடைய இச்சை ஒழிய நானே ரக்ஷகன் என்கிறான் என்றார்கள் –

4-சிலர் உபாயம் உபேயம் இரண்டும் ஓன்று என்கிறது என்றார்கள் –
( ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் -சத் ஏவ ஏகம் ஏவ அத்விதீயம் -நிமித்த உபாதானம் சஹகாரி மூன்றுமே அவனே –
அபின்ன நிமித்த காரணம் -உபேயமே அவன்- கரு முகை மாலையை சும்மாடு ஆக்குவது போலே உபாயமாக்குகிறோம் – )

5-சிலர் சரண சப்தத்துக்கு விசேஷணம் ஆக்கி அத்விதீயமான உபாயம் என்கிறது என்றார்கள் –
(ஏகம் சரணம் -அத்விதீயம் தன்னிகர் அற்றது )

ஏக சப்தம் அவதாரண அர்த்தமாய் ஒன்றே உபாயம் என்கிறது என்று நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்வார்கள்
ஏக சப்தம் அவதாரண அர்த்தம் என்பது ஸ்தான ப்ரமாணத்தால் இறே –
(ந்யாஸம் சரணாகதி பிரபத்தி எல்லாம் ப்ரஹ்மத்தையே குறிக்கும்)
அதற்கு பிரமாணம் காட்டுகிறார் -களை கண் -இத்யாதியால் –

ஈஸ்வரன் சர்வ ஆத்மாக்களுக்கு ஸ்வரூப ஆவிர்பாவத்தை உண்டாக்குவதாக பூர்வமேவ சிந்தித்து –
அவசர பிரதீஷனாய் இருக்கையாலே –
அவனுக்கு பிரசாத ஜனகமாக செய்ய வேண்டுவது ஒன்றும் இல்லை –
உண்டு என்று இருக்கில் –
1- தன் ஸ்வரூப பாரதந்தர்யத்தையும் அழித்து-
2-அவனுடைய ரக்ஷகத்வத்தையும் சோபாதிகம் ஆக்குகிறான் அத்தனை –

ஆனால் பிரபத்தி உபாயம் -என்று வ்யவஹிக்கிறது எப்படி எனில் –
பிரபத்தி யாவது -த்வமேவ உபாய பூதோ மே பவ இதி பிரார்த்தனா மதி சரணாகதி – என்று
சேதனனுடைய பிரார்த்தனா ரூப ஞானமாய் இரா நின்றது –
(பிரார்த்தனா கர்ப்ப ஞானம் -அவனே உபாயம் என்ற ஞான மாத்திரம் இல்லை –
அடியேனுக்கு உபாயமாக இருக்க வேணும் என்கிற பிரார்த்தனையை உள் அடக்கிய ஞானமே இது என்றவாறு)

எம்பெருமான் ஆகிறான் பிரார்த்த நீயானாய் இருப்பான் ஒரு பரம சேதனனாய் இரா நின்றான்
ஆகையால் இரண்டுக்கும் நியாஸ சப்த வாஸ்யத்வமும் – உபாயம் என்னும் வியாவஹாரமும் கூடும் –
எங்கனே என்னில்-
பராமருஷ்ட லிங்கம் அனுமானமாய் இருக்க –
லிங்க பராமர்சம் அனுமானம் -என்று பராமர்ச ப்ராதான்யத்தைப் பற்ற உபசாரிகமாக பராமரஸ்யத்தைச் சொன்னால் போலேயும்-

(பராமர்சம் -அறிவு -ஞானம் என்றபடி
மலை பர்வதா -புகை தெரிவதால் நெருப்பு -பக்ஷம் மலை -அதில் சாதிக்க
சாத்தியம் -நெருப்பை வஹ்னி அக்னி
எதனால் ஹேது -புகை -இதுவே அடையாளம்
இது இருக்கவே நெருப்பு -என்கிறோம்
ஞானம் புகையையும் நெருப்பையும் சேர்த்து பார்த்து -புகை இருந்தால் நெருப்பு இருக்கும்
புகை ஹேதுவா ஞானம் ஹேதுவா -புகை இல்லாமல் இருந்தால் நெருப்பு இல்லை
பிரதான ஹேது புகை -அறிவின் பேரிலும் ஹேது -இதுவும் என்று சொல்லுவோமே )

நீலம் ஞானம் பீதம் ஞானம் என்ற விஷய பிரதான்யத்தைப் பற்ற
விஷயியான ஞானத்திலே நைல்ய பீதிமாதிகளை உபசரிக்குமா போலேயும் –
(பீதம் மஞ்சள் ஸ்வதம் வெளுப்பு-பந்தின் நிறம் பார்த்து ஞானத்தின் தலையில் ஏற்றிச் சொல்வது போலே )

ஸ்வீகார ப்ராதான்யத்தைப் பற்ற
ஸ்வீகார விஷயமான பகவத் உபாயத்வ விவகாரத்தை விஷயியான ஸ்வீகார ரூப பிரபத்தி ஞானத்திலே உபசரித்துச் சொல்லுகிறது –
(இது -ஸ்வீகாரம் -செயல் அல்ல அறிவு-ஞானம் -மதி – தானே)
ஆகையால் விரோதம் இல்லை –

இந்த அவதாரணத்தில் வ்யாவர்த்திக்கப் படுகிறது
வ்ரஜ என்று விஹிதமான ஸ்வீகாரத்தின் உடைய அங்க பாவம் -ஸ்வீகாரத்தை ஒழிய அவனுடைய உபாயத்வம் ஜீவியாமையாலே
ஸ்வீகாரத்திலே ஸ்வீகாரத்தில் அங்க புத்தி பிறக்க யோக்யதை உண்டு –
யோக்யதை உண்டாகில் அங்க பாவம் கழிகிற படி என் என்னில் –

அங்கமாவது அங்கிக்கு கிஞ்சித் காரம் ஆவது இறே –
அந்த கிஞ்சித்காரம் தான்
1-ஸ்வரூப உத்பாதக த்வாரத்தாலே யாதல்
2-உத்பன்னமான ஸ்வரூபத்துக்கு வர்த்தகமாயாதல் –
3-வர்த்தித்ததுக்கு பல பிரதான சக்தி முகத்தாலே யாதலாய் இருக்கும் –

அதில் பக்திக்கு சாத்யம் ஆகையால் உத்பத்திய அபேக்ஷை உண்டு –
அஹரஹர் ஆதேய அதிசயம் ஆகையால் வ்ருத்ய அபேக்ஷை உண்டு
தான் சேதனம் அல்லாமையாலே பல பிரதான வேளையிலே சேதன அபேக்ஷை உண்டு –
ஆகையால் அதுக்கு கர்மா ஞானாதி அங்கங்கள் அபேக்ஷிதமாகக் கடவது

இந்த உபாயம் சித்தம் ஆகை யால் உத்பத்திய அபேக்ஷை இல்லை –
ஏக ரூபம் ஆகையால் வ்ருத்த்ய அபேக்ஷை இல்லை
பரம சேதனம் ஆகையால் பல பிரதானத்தில் அந்நிய சாபேஷத்தை இல்லை –

ஆக
அங்கங்களைக் கொண்டு கொள்வதொரு கார்யம் இவ்வுபாயத்துக்கு இல்லாமையால்
இந்த ஸ்வீகாரம் அங்கம் ஆக மாட்டாது

ஸ்வரூப உத்பத்தி யாதிகளிலே அங்க நிரபேஷம் ஆகில் –
இவ்வுபாயம் என்றும் ஓக்க ஜீவிக்கை ஆகாது ஒழிகைக்கு ஹேது என் என்னில் –
உபாயத்வம் ஆவது —
ஒருவனுடைய அநிஷ்டத்தை கழிக்கையும் -இஷ்டத்தை கொடுக்கையும் ஆகையால் ஒரு அதிகாரி அபேக்ஷிதம்
அது பெறாமையாலே உபாயத்வம் ஜீவிக்காது ஒழிந்தது –

அதிகாரி ஆகில் அபேக்ஷிதம் ஸ்வீகாரம் செய்கிற கார்யம் என் என்னில்
ஐஸ்வர் யார்த்தியிலும் –
கைவல்யார்த்தியாலும் –
பகவத் சரணார்த்தியாய் சாதனா அனுஷ்டானம் பண்ணுமவனில் காட்டிலும்
இவ்வதிகாரியை வியாவர்த்தன் ஆக்குகிறது

பகவல் லாபார்த்தமான இந்த ஸ்வீகாரம் -ஆகையால்
அருணயா ஏக ஹா யன்யா பிங்காஷ்யா சோமம் க்ரீணாதி-என்கிற இடத்திலே
அருணத்வ பிங்காக்ஷத்வாதிகள் சோம க்ரயத்துக்கு உறுப்பான பசுவுக்கு பசுவாந்தரத்தில் காட்டில்
(சிகப்பாக உள்ள பசு -ஒரு வயசு பசு -சிவந்த கண் உள்ள பசு )
வியாவர்த்தக விசேஷணம் ஆனால் போலே
இதுவும் அதிகாரிக்கு வ்யாவர்த்தக விசேஷணமாய்க் கிடக்கிறது –

இனி அதிகாரி அங்கமாம் அன்று –
தத் விசேஷணமான இந்த ஸ்வீகாரமும் அங்கமாகக் கடவது –
நநு-
சித்த மேவ ஹி ஸர்வத்ர நியோஜ்யஸ்ய விசேஷணம் –ஆகம ப்ராமாண்யம் -என்பதால்
நியோஜ்யஸ்ய விசேஷணம்-அதிகாரி விசேஷணமாய் இருப்பது -ஸித்தமாகவே இருக்க வேணும் -என்று ஏற்படுவதால் –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று விதேயமாக சொல்லுவது கூடாதே என்னில்
அந்த நியமம் ஸாத்ய உபாய விஷயம் ஆகையால் சித்த உபாய விஷயத்தில் விரோதிக்காது —

அல்லாமல் சித்த உபாய விஷயத்திலும் அதிகாரி விசேஷணம் ஸித்தமாகவே இருக்க வேணும் என்னில்
உபாயமும் ஸித்தமாய் அதிகாரமும் ஸித்தமாய் இருக்கும் பக்ஷத்தில்
சர்வமுக்தி பிரசங்கம் ஏற்படும் ஆதலால் -அது கூடாது –
ஆக அதிகாரி விசேஷணமான ஸ்வீகாரம் விதேயமாகக் தட்டில்லை

ஷூத்து அன்னத்துக்கு சாதனமாம் அன்று இறே இந்த ஸ்வீகாரத்துக்கு சாதனத்வம் உண்டாவது –
ஸ்வீகாரத்துக்கு அங்க தயா உபாயத்வம் கொள்ளப் பார்க்கில் –
த்வமேவ உபாய பூதோ மே பவ இதி பிரார்த்தனா மதி சரணாகதி -என்று
அவனையே நிரபேஷ உபாயமாகப் பற்றுகை -என்கிற லக்ஷண வாக்யத்தோடு விரோதிக்கும் –

ஆகையால் ஈஸ்வரன் கார்யம் செய்கைக்கு ஆபி முக்ய ஸூசகமாய்க் கிடக்கிறது –
இது சர்வ முக்தி பிரசங்க பரிஹாரார்த்தம் –
புத்தி சமானாதார்த்தம் –
சைதன்ய கார்யம் –
ராக பிராப்தம் –
ஸ்வரூப நிஷ்டம் –
அப்ரதிஷேத த்யோதகம் – என்றபடி –
(விலக்காமையை அறிவிப்பதே ஸ்வீ காரம் )

கீழை மேலை வடக்கில் அவை புறம்பாக தன் பற்று உள்ளசல் -என்று இறே
இவர் ஆச்சார்ய ஹிருதயத்தில்-141- அருளிச் செய்தார் இறே –
(கர்ம ஞான பக்தி யோகம் வெளிப்பகை -இது-தன் பற்று- உள் பகை )

————————————————————————————————-

சரண -சப்தார்த்தம் ..
சரணம் -என்று பற்றும் படியைச் சொல்லுகிறது ..
சரணம் -உபாயமாக
இதுக்கு பல பொருள்களும் உண்டே ஆகிலும் இவ் விடத்தில் -விரோதியைக் கழித்து பலத்தைத் தரும்
உபாயத்தைக் காட்டக் கடவது –
மாம் ஏகம் சரணம் -என்கையாலே உபேயமே உபாயம் என்னும் இடம் தோற்றும் —

(சரணம் -உபாயம் க்ருஹம் ரக்ஷணம்-மூன்று அர்த்தங்கள் இருந்தாலும் பற்றும் படி -உபாயமாக புத்தி பண்ணுவது
பறவைகள் சரணாலயம் க்ருஹம் -உம் திருவடியே சரண் -ரக்ஷகம் )

———————————————————————-

இனி பஞ்சம பதார்த்தம் அருளிச் செய்கிறார் -சரணம் என்ற இது –
சரண சப்தம் இந்த ஸ்தலத்தில் உபாயத்தையே காட்டுகிறது
சர்வ தர்மங்களையும் விட்டு தன்னையே பற்றச் சொல்லுகிற பிரகரணம் ஆகையால்
கீழ் உடன் சேர வேண்டுகையாலே -என்றபடி

இப்போது சரண சப்தம்
உபாய வாசகமாய் –
மாம் -என்று ஸுசீல்யாதி விசிஷ்டமாகச் சொன்ன வஸ்துவுக்கு –
சோஸ்னுதே ஸர்வான் காமான் சக ப்ரஹ்மணா விபஸ்ஸிதா-என்றும்
சதா பஸ்யந்தி -என்றும்
ஸ்ரியா ஸார்த்தம் ஆஸ்தே -என்கிறபடியே –
உபேய பாவத்திலும் அந்வயம் உண்டாகையாலே அத்தை வியாவர்த்தித்து உபாய பாவத்தில் ஒதுக்கித் தருகிறது

கீழ் சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற இடத்தில் பிரஸ்துதமான
சாதனாந்தரங்களே இத்தை உபாய பாவத்தில் ஒதுக்கித் தாராதோ என்னில் –
அர்த்த ஸித்தமாய் வருகிறதில் காட்டில் -சப்த ஸித்தமாய் வருமது அழகியது ஆகையால்
ஆற்றுக்கு அக்கரைப் பட்டால் அதுக்கு நிஸ்தரண பரிகரமான தெப்பம் அநபேஷிதம் ஆமா போலே –
சாத்திய பாவே மஹா பாஹோ சாதனை கிம் பிரயோஜனம் -என்று
சாத்யம் சித்தித்தால் சாதனத்தைக் கொண்டு அபேக்ஷிதம் இல்லாமையால்
சாதன தியாகமும் ப்ராப்ய அம்சத்தில் அந்விதம் ஆகையாலேயும்
உபாயத்வத்தில் ஒதுக்கித் தர மாட்டாது –

——————————————————————————————————————-

விரஜ – சப்தார்த்தம்
விரஜ -என்று ஸ்வீ காரத்தைச் சொல்லுகிறது ..
விரஜ -அடை –புத்தியாலே அத்யவசி என்ற படி ..

உன்னை என் மனத்து அகத்தே திறம்பாமல் கொண்டேன் (-திரு விண்ணகரானே-பெரிய திரு மொழி 6-3-2 ) என்கிறபடியே
இவ் உபாயத்துக்கு இவன் செய்ய வேண்டியது
நெஞ்சாலே துணிகை இறே –

(கத்யர்த்தா புத்த்யர்த்தம்-பிரார்த்தனா மதி மானஸ வியாபாரம் )

(துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே
திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே -6-3-2-

துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம்-சர்வ தர்மான் பரித்யஜ்ய
துறந்தமையால்-மீண்டும் சொல்வது பரித்யஜ்ய முக்யஸ்த்வம்
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை-சாஷாத் தர்மம் அவனே
திருமாலே-புருஷகாரமாகப் பற்றி -புருஷனான நான் வந்து உன் தடுமாற்றம் தவிர்த்தேன்
கொண்டேன் -மறுக்காமல் விலக்காமல் இருந்தேன் )———————————————————–

இனி ஷ்ஷட பதார்த்தம் அருளிச் செய்கிறார் -வ்ரஜ -என்று இதி –

———————————————————————————————————————

பூர்வ வார்த்த அர்த்த ஸங்க்ரஹம்..
ஆக முற்கூற்றால் –
தவம் செய்ய வேண்டா (பெரிய திருமொழி 3-2-1 ) -என்றும் –
சிந்திப்பே அமையும் ( திரு வாய் மொழி 9-1-7 )-என்கிற படியே

உன் தலையால் உள்ள வற்றை உதறி என்னையே தஞ்சமாக நினை –
விரகு தலையரைப் போலே அலமாவாதே
மாணிக்கம் பார்ப்பாரைப் போல உன் கண்ணை கூர்க்க விட்டு இரு ..
பதர் கூட்டை விட்டு பர்வதத்தைப் பற்று வாரைப் போல –
அசேதன கிரியா -கலாபங்களை விட்டு –
தேர் முன் நின்று காக்கிற ,கரு மாணிக்க மா மலையான -(பெரிய திருமொழி-9-9-8-}தம்மைப் பற்று என்று
அதிகாரி தொழிலை சொன்னான் ஆயிற்று —

பார்த்தன் தன் தேர் முன் நின்றான்–2-3-1-

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

தவம் செய்ய வேண்டா-சிற்ற வேண்டா- சர்வ தர்மான் பரித்யஜ்ய
சிந்திப்பே -மாம் ஏகம் வ்ரஜ -இங்கும் ஏவகாரம்

———————————————————————————————-

பூர்வர்த்த அர்த்தங்களை சங்க்ரஹிக்கிறார் –
ஆக -என்று தொடங்கி –
தர்ம தியாகம் ஸ்வீகாரத்துக்கு அங்கமாகக் கடவது –
தியாக விசிஷ்டமான ஸ்வீகாரம் அதிகாரி விசேஷணமாகக் கடவது –
ஸ்வீகார விசிஷ்டனான அதிகாரிக்கு வாத்சல்யாதி குண விசிஷ்ட வஸ்து உபாயமாகக் கடவது –

ஆக இப்படி பூர்வார்த்தம் அதிகாரியினுடைய க்ருத்யம்சத்தை சொல்லிற்று -என்றபடி –

———————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: