அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த -அருளிச் செயல் ரகஸ்யம்-சரம ஸ்லோக பிரகரணம் -அவதாரிகை -ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ரகஸ்ய பூஷணம் –

அவதாரிகை
சரம ஸ்லோகம் முன்னாக த்வயமும் -த்வயம் முன்னாக சரம ஸ்லோகமும் ஆகிற இரண்டு பிரகாரமும் அருளிச் செய்யலாய் இருக்கும் –
ஆச்சான் பிள்ளை ஜீயர் முதலானோர் த்வயம் முன்னாக சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார்கள் –
இப்பிரபந்தத்தில் நாயனார் சரம ஸ்லோகம் முன்னாக த்வயார்த்தங்களை அருளிச் செய்கிறார் –
பிள்ளை உலகாரியன் இரண்டு பிரகாரமும் அருளிச் செய்துள்ளார் -இவ்விரண்டு பிரகாரங்களுக்கும் கருத்து என் என்னில்-சரம ஸ்லோகம் முன்னாக த்வயத்தைச் சொல்லுகிறது -விதி அனுஷ்டான ரூபங்களாய் இருக்கும் இவ்விரண்டில் விதி முன்னாக அனுஷ்டானத்தை சொல்லுகை ப்ராப்தமாய் இருக்கையாலும்
திருமந்திரம் ப்ராப்ய பரமாய் -சரம ஸ்லோகம் ப்ராபக பரமாய் -த்வயம் உபயத்தினுடையவும் அனுஷ்டான ப்ரதிபாதகமாய் இருக்கையாலும் –
த்வயம் முன்னாக சரம ஸ்லோகத்தைச் சொல்லுகிறது –
திருமந்திரத்தில் மத்யம த்ருதீய பதங்களுக்கு வாக்ய த்வயம் விவரணமாய் -அது தனக்கு சரம ஸ்லோகத்தில் அர்த்த த்வயம் விவரணமாய் இருக்கும்
ஆகாரத்தாலே -ஆனபின்பு இரண்டு பிரகாரமும் அனுசந்திக்கத் தட்டு இல்லை –
சர்வேஸ்வரன் தானே வ்ரஜ என்று விதிக்கையாலே உபாய வரணம் ததபிமதம் என்னுமத்தையும் -வரண அங்கமான சாதா நான்தர பரித்யாகத்தையும்
-வரணத்தில் சாதா நத்வ புத்தி ராஹித்வத்தையும் சாப்தமாக பூர்வ அர்த்தத்தாலே ப்ரதிபாதிக்கிறது –
கைங்கர்யத்துக்கு பூர்வபாவியான பிராப்தி பிரதிபந்தக சகல பாப விமோசனத்தை உத்தர அர்த்தத்தாலே ப்ரதிபாதிக்கிறது –
பஞ்சம வேத சாரபூத கீதா உபநிஷத் தாத்பர்யமாய் -சரம ரகஸ்யமாய்இருந்துள்ள சரம ஸ்லோகத்தின் உடைய அர்த்தத்தை
சம்சய விபர்யயம் அற அருளிச் செய்கிறார் நாயனார் இப்பிரகரணத்தில் –
இதில் அர்த்தம் கேட்க்கைக்காக இ றே எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம் திருக் கோட்டியூர் நம்பி பக்கல் எழுந்து அருளிற்று –
நம்பி தாமும் இதில் அர்த்தத்தை உடைய கௌரவத்தையும் -இதுக்கு அதிகாரிகள் இல்லாமையும் பார்த்து இறே
இவருடைய ஆஸ்திக்ய ஆதர பரீஷ அர்த்தமாக பலகால் நடந்து துவள பண்ணி சூளுறவு கொண்டு மாச உபவாசம் கொண்டு
அருமைப் படுத்தி அருளிச் செய்து அருளிற்று –
நிஷ்க்ருஷ்ட சத்வ நிஷ்டனாய்-பரமாத்மனி ரக்தனாய் -அபாரமாத்மனி வைராக்யம் உடையவனாய் -பிராமண பரதந்த்ரனாய்
-பகவத் வைபவம் -ச்ருதமானால் அது உபபன்னம் என்னும் படியான விஸ் ரம்ப பாஹுள்யம் உடையனாய்
ஆஸ்திக அக்ரேசரனாய் இருப்பான் ஒருவன் உண்டாகில் அவன் இந்த ஸ்லோகார்த்த ஸ்ரவண அனுஷ்டானத்துக்கு அதிகாரி ஆகையால் –
அதிகாரி துர் லபத்துவத்தாலும் -அர்த்த கௌரவத்தாலும் -இத்தை வெளியிடாதே மறைத்துக் கொண்டு போந்தார்கள் எம்பெருமானார்க்கு முன்பு உள்ளார் –
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாத படி க்ருபை கரை புரண்டு இருக்கையாலே –
அர்த்தத்தின் சீர்மை பாராதே அநர்த்தத்தையே பார்த்து வெளியிட்டு அருளினார் எம்பெருமானார் –
அப்படி உபதேசித்து விடுகிற மாத்ரம் இன்றிக்கே இவ்வர்த்தத்தை எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்க வேணும் என்னும் பரம கிருபையால் இறே
இவ்வர்த்தத்தை ஸ்த்ரீ பாலர்களுக்கும் அதிகரிக்கலாம் படி தெளிய அருளிச் செய்கிறார் நாயனார் இப்பிரபந்தத்தில் –

————————————————————————

அவதாரிகை
மூல மந்த்ர சரம ஸ்லோக பவ்ர்வாபர்யம்
திருமந்திரத்தை நரனுக்கு உபதேசித்து -நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணன் -நாச் திரு -2-1—என்றும்
-பாரோர் புகழும் வதரியில் நின்றும் -சிறிய திருமடல் –என்றும் –
-வடமதுரை ஏறவந்து -பெரியாழ்வார் -1-9-4-கிருஷ்ணனாக நிலையில் நரனுடைய அம்சமாய் –
நம்பி சரண் என்று சிஷ்யனான அர்ஜுனனைக் குறித்து- திரு மந்திரத்தில் ஸ்வரூபத்துக்குச் சேர –
அறுதியிட்டு புருஷார்த்தத்துக்கு தகுதியான சாதனத்தை சரம ஸ்லோக முகத்தால் வெளியிட்டு அருளினான் –

——————————————————-

பிரதம ரகஸ்யமான திரு மந்திரத்தின் உடைய அர்த்தத்தை அருளிச் செய்த அநந்தரம் – சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை
அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி பிரதமம் திருமந்திர சரம ஸ்லோகங்களின் பவ்ர்யாபர்ய ஹேதுவை அவதார ரகஸ்ய
கதன பூர்வகமாக அருளிச் செய்கிறார் -திரு மந்த்ரத்தை -என்று தொடங்கி –
ஸ்வரூப புருஷார்த்த பரம் -திருமந்திரம் -தத் அநு குண சாதன பரம் சரம ஸ்லோகம் என்னும் இவ்வர்த்தத்தை –
இவற்றுக்கு மந்த்ர விதி அனுசந்தான ரகஸ்யங்களோடே சேர்த்தி -அளிப்பான் அடைக்கலம் சூடிய பொய்யாதானும் அழுந்தார் என்று
ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் -தாமரை யுந்திப் பெரு மா மாயன் ஆளாகவே வாழிய என்று ப்ராப்ய பலன்களையும் –
நெறி காட்டி மனத்துக்கு கொண்டு கண்ணனால் அடித்து கண்டிலமால் யாதாகில் என்று உபாயத்தை சொன்னவை
மந்த்ர ஸ்லோகங்களோடே சேரும் -என்று இவர் தாமே ஆச்சார்ய இருதயத்திலே அருளிச் செய்தார் இ றே –
நம்மாழ்வார் பிரபந்தங்கள் நாலுக்கும்-சகல சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தையும் சம்சய விபர்யயம் அற
ப்ரதிபாதிக்குமதான-சர்வம் அஷடார ந்தஸ்ஸ்தம் -என்னும்படி சகல சாஸ்திர சங்க்ரஹமான திரு மந்த்ரமும் –
விதித்த உபாய வர்ணத்தை சங்கமாக விதிக்கிற சரம ஸ்லோகமும் –
உபாய உபேய பிரார்த்தனைகளை சக்ரமமாக பிரகாசிப்பியா நின்று கொண்டு கால ஷேபத்துக்கும் போகத்துக்குமாக
சாரஞ்ஞாராலே சதா அனுஷ்டானம் பண்ணப் படும் த்வயமும் ஆகிற ரகஸ்ய த்ரயத்தோடே சேர்த்தி என்றபடி –
சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாய் -ஞானா நந்த லக்ஷணமாய் -ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கும்
ஆத்ம ஸ்வரூபத்தையும் -சம்சார ஹேது பூத அவித்யாதிகளான விரோதிகளுடைய நிவ்ருத்தியையும் பிரதிபாதிக்கிற திரு விருத்தம்
பிரதம மத்யம பதங்கள் இரண்டோடும் சேர்ந்து இருக்கையாலும் –
ப்ராப்ய பலன்கள் இரண்டையும் பிரதிபாதிக்கிற திருவாசிரியம் ப்ரக்ருதி ப்ரத்யய அம்சங்களால் தாதுபய ப்ரதிபாதகமான
த்ருதீய பதத்தோடே சேர்ந்து இருக்கையாலும் இரண்டு பிரபந்தமும் திரு மந்திரத்தோடே சேரும் –
உபாய ப்ரதிபாதிகமாய் இருந்த திருவந்தாதி சரம ஸ்லோகத்தோடே சேரும் என்றபடி
ஆக ஸ்வரூபமும் -ஸ்வரூப அனுரூபமான பிராப்யமும் -மூல மந்த்ர ப்ரதிபாத்யம் என்றும் –
ஸ்வரூப ப்ராப்ய உபய அனுகுண உபாயம் சரம ஸ்லோக ப்ரதிபாத்யம் என்றும்
திருமந்திர சரம ஸ்லோகங்களுக்கு உண்டான பவ்ர்வாபர்ய ஹேது நிரூபிதம் ஆயிற்று –

——————————————————————————————-

பரம ப்ராப்ய ப்ராபக நிர்ணயம்
ஆத்ம பரமாத்ம சம்பந்தத்தை உணராதே -உடம்பையே தானாக நினைத்து -அத்தைப் பற்றி வருகிற பந்துக்களுக்கு ஸ்நேஹித்து-
அவர்கள் ஸ்நேஹம் பொறுக்க மாட்டாதே தன்னுடைய தர்மத்தை பாபம் என்று கலங்கின -அர்ஜுனனை –
செங்கண் அலவலையான – பெரியாழ் -2-1-2-கிருஷ்ணன் -அமலங்களாக விழிக்கிற நோக்காலும்–1-9-9-தூ மொழிகளாலும்
-9-9-9–உருமகத்தே வீழாமே குருமுகமாய் -பெரியாழ் -4-8-3-அறியாதன அறிவித்து -2-3-2-
உடம்பையையும் ஆத்மாவையும் பற்றி வருகிற ஐங்கருவி கண்டவின்பம் –தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம் -4-9-10-என்கிற ஐஸ்வர்ய
கைவல்யங்களினுடைய பொல்லாங்கையும் -இன்பக் கதி செய்து -7-5-11-தொல்லை இன்பத்து இறுதி -பெருமாள் திருமொழி -7-8-காட்டுகிற
தன்னை மேவுகை யாகிற மோக்ஷத்தின் உடைய நன்மையையும் அறிவித்து பெறுகைக்கு வழியாக கர்ம ஞான பக்திகளை அருளிச் செய்யக் கேட்ட அர்ஜுனன்
-ஊன் வாட -பெரிய திரு -3-2-1-என்றும் – நீடு கனியுண்டு -பெரிய திரு -3-2-2–என்றும் –பொருப்பிடையே நின்றும் -மூன்றாம் -76-என்றும்
இளைப்பினை இயக்கம் நீக்கி விளக்கினை வீதியில் கண்டு -திருக் கூறும் தாண்டகம்-18-குறிக் கொள் ஞானங்களால் -2-3-8-என்றும்-
– ஊழி ஊழி தோறு எல்லாம் திருச் சந்த -75–யோக நீதி நண்ணி -திருச் சந்த -63–என்பில் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து திருச் சந்த -76-
என்றும் -ஜன்மாந்தர சகஸ்ரங்களிலே செய்து முடிக்க வேண்டின அந்த உபாயங்களினுடைய அருமையையும் –
மெய்க்குடி ஏறிக் குமைந்து -7-7-9- வலித்து எற்றுகிற -7-1-10-இந்த்ரியங்களினுடைய கொடுமையையும் –
ஐம்புலன் கருதும் பெரிய திரு -1-1-8–கருத்துள்ளே மூட்டப்பட்டு -நின்றவா நில்லா நெஞ்சின்- பெரிய திரு -1-1-4–திண்மையையும்-செடியார்-2-3-9-
கொடு வினைத் -3-2-9-தூற்றுள் நின்று வழி திகைத்து அலமருகின்ற தன்னால் அறுக்கல் அறாத பழ வினையின் -3-2-4-கனத்தையும்
-தன்னுள் கலவாதது -2-5-3-ஒன்றும் இல்லை என்னும்படி முற்றுமாய் நின்று -7-6-2-சர்வ பூதங்களையும் மரப்பாவை போல் ஆட்டுகின்றவன்
-வேறு வேறு ஞானமாய்-திருச் சந்த -2- உபாயாந்தரங்களுக்கு உள்ளீட்டாய் நிற்கிற நிலையையும் -என்னாருயிர் நீ -7-6-3-என்னும் படி தன்
காரியத்தில் தான் இழிய ஒண்ணாத படி உபதேசித்த ஸ்வரூப பாரதந்தர்யத்தையும் அனுசந்தித்து -நாம் இவ் உபாயங்களைக் கொண்டு
நம் விரோதிகளைக் கழித்து அவனைக் கிட்டுகை கூடாது -உனக்கு ருசித்தது ஒன்றைச் செய் என்ற போதே தமயந்திக்கு அல்வழி காட்டின
நளனைப் போலே இவனும் நம்மை நெறி காட்டி நீக்கினான் -பெரிய திரு -6–அத்தனை என்று வெறுத்து -என்னுடைக் கோவலனே-7-6-5-
-என்னுடை ஆருயிரார் எங்கனே கொல் வந்து எய்துவர் -என்னை நீ புறம் போக்கால் உற்றால் –10-10-5-என் நான் செய்கேன்-5-8-3- என்று
கண்ணும் கண்ணீருமாய் கையில் வில்லோடு சோர்ந்து விழ-மண்ணின் பாரம் -9-1-10-நீக்குதற்கு தான் இருள் நாள் பிறந்த கார்யம்-பெரிய திரு -8-8-9-
இவனைக் கொண்டு தலைக் கட்டவும் பரிபவ காலத்தில் தூர வாசியான தன்னை நினைத்த மைத்துனன் மார் காதலியை
மயிர் முடிக்கும் படி-பெரியாழ்வார் -4-9-6- பாரதப் போர்-இராமானுச -51 முடித்து திரௌபதியினுடைய அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும்
எய்தி நூல் இழப்ப வென்ற- பெரிய திரு-2-3-6- பரஞ்சுடராய்- பெரிய திரு-1-8-4- தன் ஸ்வரூபம் பெறவும் இருக்கிற கிருஷ்ணன் இவனுக்கு இவ்வளவும்
பிறக்கப் பெற்றோமே என்று -உகந்து அர்ஜுனனைப் பார்த்து-கீழ்ச சொன்ன உபாயங்களை விட்டு என்னையே உபாயமாகப் பற்று –
நான் உன்னை விரோதிகளின் நின்றும் விடுவிக்கிறேன்-நீ சோகியாதே கொள்-என்று ஸ்வரூப அனுரூபமான உபாயத்தை வெளியிடுகிறேன் –

——————————————————————

திருமந்திரத்தில் அறுதியிடப் பட்ட ப்ராப்யத்தின் பரமத்வத்தையும் -சரம ஸ்லோகத்தில் அறுதியிடப்படுகிற பிராபகத்தின்
பரமத்வத்தையும் அருளிச் செய்கிறார் -ஆத்ம பரமாத்ம-இத்யாதி நா –
அதாவது இந்த ஸ்லோகத்துக்கு கீழே அநேக அத்யாயங்களிலே கர்மா ஞானாதிகளான சில உபாய விசேஷங்களை
ஸ்வ பிராப்தி லக்ஷண மோக்ஷ சாதனமாக விஸ்தரேண உபதேசிக்கக் கேட்டருளி -காய கிலேச ரூபம் ஆகையால்
-இந்திரிய ஜெயம் அரிதாகையாலும் -சாதனமாக -சாவதானமாக -சிரகாலம் சாதிக்க வேண்டி இருகையாலும் –
அவை அனுஷ்ட்டிக்க அஸஹ்யங்கள் என்றும் ஸ்வ சரீரத்வ கத நாதிகளாலே ப்ரதிபாதிக்கப் பட்ட பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு
ஸ்வ யத்ய ரூபங்களான இவை விரோதிகள் என்றும் புத்தி பண்ணி –
இவற்றால் எம்பெருமானை பெற என்பது ஓன்று இல்லை -இனி இழந்தே போம் அத்தனை ஆகாதே -என்கிற சோகத்தால்
ஆவிஷ்டனான அர்ஜுனனைக் குறித்து அந்த சோகம் போகைக்காக-ஸூ சகதவத்தாலும் -ஸ்வரூப அனுரூபதயையாலும்
-இனி இதுக்கு மேல் இல்லை என்னும்படியான சிரமமான உபாயத்தை இந்த ஸ்லோகத்தாலே வெளியிடுகிறேன் -என்றபடி –

பக்தியிலும் பிரபதிக்கு நெடு வாசி உண்டு -ஆச்சார்ய ருசி பரிக்ரகம் -சர்வாதிகாரம் -தேஹ வாசா நத்திலே பலம்
-அந்திம ஸ்ம்ருதி வேண்டா -பரம சேதனம் சித்த ஸ்வரூபம் -சஹா யாந்தர நிரபேஷம் -அவிலம்பிய பலப்ரதம் –
ஸ்வரூப அனுரூபமான உபாயம் -ப்ராப்ய அனுரூபமான உபாயம் -என்றபடி –

பிரணவ யுக்த பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ஞானவானாய் -அதாவது -அதில் அகாரத்தில் தாத்வார்த்தத்தாலே ப்ரதிபாதிக்கிற
பகவன் நிருபாதிக ரக்ஷகத்வத்தையும் -தத் விஷயமாய் தத் ஏக ரஷ்யமான ஸ்வரூபத்தையும் -அதில் விபக்தியாலே ப்ரதிபாதிக்கிற
தத் இஷ்ட விநியோக அர்ஹ சேஷத்வத்தையும் -அந்த ஸ்வரூபத்துக்கு அனுரூபமாக நமஸ் சப்த யுக்தமான அத்யந்த பாரதந்தர்யத்தையும்
-சவிபக்திக நாராயண பத யுக்தமான பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யத்தில் ஸ்வ பிரயோஜன விதுர
பகவத் பிரயோஜன ஏக ரசிக்த்தவ ரூபமான தத் ஏக போகத்வத்தையும் யாதாவாக அனுசந்தித்தவனுக்கு மத்யம பதமான நமசில்
பிரதிபாதிக்கிற பாரதந்தர்ய அனுரூபமாக பிரதிபாதிக்கிற சித்த உபாயத்தை உபாயமாக வரிக்கிறவனுடைய உபாய வரணத்தை
தத் அங்கமான கர்மா ஞானாதி சாதனாந்தர தியாக பூர்வகமாக விதித்து திருமந்திரத்தில் சரம பத யுக்தமான உபேய பிரார்த்தனையையும்
நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தனுக்கு அல்லது கூடாமையாலே -பகவத் பிராப்தி விரோதி சகல பாபங்களையும் நிஸ் சேஷமாக
நிவர்த்திப்பிக்கிறேன் -என்று சொல்லித் தலைக் கட்டுகையாலும்-சரம ஸ்லோக ப்ரதிபாதித சரம உபாயம் ஸ்வரூப பிராப்ய அனு ரூப உபாயம் -என்றபடி –

கீதை பதினெட்டு ஒத்துக்களின் அர்த்தத்தையும் சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் -பந்துக்களுக்கு -இத்யாதி -இவ்விடத்தில்
அஸ்தானே ஸ்னேஹா காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்-பார்த்தம் ப்ரபந்ந முத்திஸ்ய சாஸ்த்ர அவதரணம் க்ருதம் -என்ற
ஆளவந்தார் கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோகத்தை அனுசந்திப்பது –
பார்த்தம் உத்திஸ்ய -வ்யாஜீ க்ருத்ய -என்றபடி -அகல் ஞாலத்தவர் அறிய என்று இறே ஆழ்வார் அருளிச் செய்தது –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன-நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஹயாகாதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் சாது பரித்ராண துஷ்க்ருத் விநாச தர்ம ஸம்ஸ்தாபனங்களுக்காக -வண் துவராபதி மன்னனாய்
வந்து அவதரித்து அருளி சர்வ ஸூ லபனாய்-திரௌபதியா சஹிதா சர்வே நமஸ் சக்ரு ஜனார்த்தனம் -என்கிறபடியே
சரணாகதரான பாண்டவர்களுக்கு இன்னார் தூதன் என நின்று அர்ஜுனனை ரதியாக்கி தான் சாரதியாய் அவனுக்கு விதேயனாய் நின்ற அளவிலே –

இவ்வர்ஜுனன் தன்னை நிமித்த மாத்ரமாகக் கொண்டு சர்வேஸ்வரன் தண் பிரதிபக்ஷங்களை நிரசிக்க நின்ற நிலையைக் கண்டு
பந்து விநாசம் சித்தம் என்று நிச்சயித்து -அஸ்தானே ஸ்நேஹத்தால் பிறந்த சோகத்தாலும் அஸ்தானே கிருபையால் –
ஆச்சார்யாதிகள் யுத்த உன்முகரே யாகிலும் அவர்கள் வதத்தாலே பாபம் வருகிறது என்கிற பயத்தாலும் கலங்கி -எது ஹிதம் -என்று
தெளிய வேணும் என்று பார்த்து –
யஸ் ஸ்ரேய ஸ்யான் நிச்சிதம் ப்ரூஹி தன்மே சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் -என்று விண்ணப்பம் செய்ய –
அவனுடைய சோகத்தை நிவர்திப்பிக்கைக்காக -தேஹாதி விலக்ஷணமாய் -பர சேஷத ஏக ரசமான நித்யாத்ம ஸ்வரூபத்தையும்
-இஸ் ஸ்வரூபம் தெளிந்தவனுக்கு பரம புருஷார்த்த லாபத்துக்கு உபாயங்களான கர்மா ஞான பக்தியாதிகளையும் உபதேசிக்க
தத் ஸ்ரவண ஜெனித நிரதிசய சோகா விஷ்டனான இவனுக்கு ஸ்வரூப அனுரூபமான சரம உபாயத்தை
உபதேசிக்கிறார் இச் சரம ஸ்லோகத்தில் -என்றபடி –
அசித் தத்வ அனுபவம் ஐஸ்வர்யம் -சித் அனுபவம் கைவல்யம் -என்றதை பற்ற உடம்பையும் ஆத்மாவையும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
புருஷார்த்தங்களில் அதமம் ஐஸ்வர்யம் -மத்யமம் கைவல்யம் -உத்தமம் பகவத் அனுபவ கைங்கர்யம் -என்ற நஞ்சீயர் வார்த்தையை நினைப்பது –
பொல்லாங்கு -இத்யாதி -ஐஸ்வர் யத்துக்கு பொல்லாங்கு அஸ்திரத்வம் -ஸ்திரமான கைவல்யத்துக்கு பொல்லாங்கு அல்பத்தவம்
-இரண்டுக்கும் பொதுவான தீமை ஸ்வரூப அந்நரூபத்வம்-இவை இரண்டும் -நாராயணாய பத யுக்தமான அநந்ய பிரயோஜனத்வ
ரூபமான ஸ்வ ஸ்வரூபத்துக்கு விருத்தம் இறே
நன்மை -இதி -ஸ்வரூப அனுரூபம் நன்மை என்றபடி -அநந்தமாய் ஸ்திரமாய் ஸ்வரூப அனுரூபமாய் இறே பகவத் அனுபவம் இருக்கிற படி –
சகஸ்ர யுக பர்யந்தம் -ஆ ப்ரஹ்ம புவ நால் லோகா -மாம் உபேத்ய -இத்யாதி -கீதா வசனங்களிலே ப்ராப்யாந்த ரத்தின் பொல்லாங்கும்
பகவத் அனுபவத்தின் நன்மையையும் கூறப்பட்டது அனுசந்தேயம்-
ஆக இவ்வளவால் ப்ராப்யத்தின் பரமத்வம் நிரூபிதம் –
ப்ராபகத்தின் பாரம்யத்தை உபபாதிக்கிறார் -பெறுகைக்கு என்று தொடங்கி –
ஸூ சவ் தேசே -6-11-யுத்தா ஹார விஹாரஸ்ய -6-17-இத்யாதி ஸ்ரீ கீதா ஸ்லோகங்களை திரு உள்ளத்தே கொண்டு அருளிச் செய்கிறார்
-உபாயங்களினுடைய அருமை -என்று யாததோ ஹ்யபி-2-60-சஞ்சலம் ஹி மன -6-34-அஸம்சயம் மஹா பாஹோ-6-35- இத்யாதி
ஸ்ரீ கீதா ஸ்லோகங்களைத் திரு உள்ளத்தே கொண்டு அருளிச் செய்கிறார் -இந்த்ரியங்களினுடைய கொடுமை நெஞ்சின் திண்மை என்று –
கர்மங்களின் பாஹு ள்ய ப்ராபல்யங்களை அருளிச் செய்கிறார் -செடியார் என்று தொடங்கி -பூமிராபி -7-4 ஸர்வஸ்ய சாஹம் -16-15-
ஈஸ்வர சர்வ பூதானாம் -18-61-இத்யாதி ஸ்ரீ கீதா வசனங்களை திரு உள்ளத்தே கொண்டு அருளிச் செய்கிறார் -தன்னுள் -இத்யாதி –
யதா தாரு மயீ யோஷித் ந்ருத்யதே குஹகேச்சயா -ஏவம் ஈஸ்வர தந்தரோ அஹம் ஈஹதே ஸூ க துக்கயோ -ஸ்ரீ பாகவதம் -10-54-12-
என்பதையும் உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -மரப்பாவை -என்று தொடங்கி –
அர்ஜுனனுடைய மஹா சோக ஹேது நிரூபணம் -என்னாருயிர் நீ –என்னும் படி–என்று தொடங்கி -உனக்கு ருசித்தது ஒன்றத்தைச் செய் -என்று
இங்கு யத்தேச்சசி ததா குரு -18-63-என்ற ஸ்ரீ கீதா வசனம் அனுசந்தேயம் –
விஸ்ருஜ்ய சசரம் சாபம் ரதோபஸ்த உபாவிச்த-1-47-இத்யாதி ஸ்ரீ கீதா வசனத்தை உட்க்கொண்டு அருளிச் செய்கிறார்
-கண்ணும் கண்ணீருமாய் கையில் வில்லோடு சோர்ந்து விழ-என்று

——————————————————————————–

சரம உபாயம் –
இது ஒழிந்த உபாயங்களிலே பரந்தது இப்பாகம் பிறந்தால் அல்லது இவ்வுபாயம் வெளியிடல் ஆகாமையாலே –
முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றி வழி கெட -திருச்சந்த -68–நடக்கிறவர்களையும் வாத்சல்யத்தின் மிகுதியால் –
பித்தனைத் தொடரும் மாதா பிதாக்களைப் போலே மீட்கவிடம் பார்க்கிற சாஸ்திரம் கோடிய மனத்தால் சினத் தொழில் -பெரிய திரு -1-6-5-
புரிகிற நாஸ்திகனுக்கும் சத்ருவை அழிக்கைக்கு அபிசாரம் ஆகிற வழியைக் காட்டித் தன்னை விசுவசிப்பித்து த்ருஷ்ட போகத்துக்கு வழிகளை –
ஸ்வர்காதி பலன்களுக்கு வழி காட்டி தேஹாத்ம அபிமானத்தைக் குலைத்து-ஆத்ம போகத்துக்கு வழி காட்டி -அந்நிய சேஷத்வத்தை அறுத்து
-பரமாத்ம போகத்துக்கு வழி காட்டி -ஸ்வ தந்தர்யத்தைப் போக்கி -ஸ்வரூப பாரதந்தர்யத்தை உணர்த்தி -சித்த உபாயத்தில் மூட்டுமா போலே
-முந்தைத் தாய் தந்தையான இவனும் -5-7-7- நெறியுள்ளி -1-3-5- என்றும் எல்லாப் பொருளும் விரிக்கிறான் -4-5-5- ஆகையால்
பூசலுக்கு ஏறிக் கொலைக்கு அஞ்சி வில் பொகட்டவனுக்குத் தன்னைப் பெறுகைக்கு தானே உபாயம் என்கை சேராது என்று
புறம்பே பரந்து மோக்ஷ அதிகாரி யாக்கி உபாயாந்தரங்களைக் கேட்டுக் கலங்கின அளவிலே
இவனை உளன் ஆக்குகைக்காக பரம ரகஸ்யத்தை வெளியிட்டு அருளினான்

————————————————————————-

இது ஒழிந்த இத்யாதி -புறம்பு பிறந்தது -பரந்தது -எல்லாம் இவன் நெஞ்சைச் சோதிக்கைக்காக -என்று இ றே உலகாரியன் அருளிச் செய்தது -அதாவது –
யச்ஸ்ரேய ஸ்யான் நிச்சிதம் ப்ரூஹி தன்மே சிஷ்யஸ் தேஹம் சாதி நாம் த்வாம் ப்ரபன்னம் -2-7-என்ற இவனுக்கு உபாய உபதேசம் பண்ணத்தொடங்குகிற
அளவிலே முதலிலே இத்தை உபதேசியாதே உபாயாந்தரங்களை பரக்க நின்று உபதேசித்தது எல்லாம் அவ்வளவில் பர்யவசித்து விடுமோ –
அவற்றினுடைய தோஷ தர்சனத்தாலே இவ்வுபாய உபதேசத்துக்கு அதிகாரியாமோ என்று இவனுடைய ஹ்ருதயத்தை சோதிக்கைக்காக என்றபடி –
முத்திறத்து -இத்யாதி ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -4-5-5-என்று இ றே ஆழ்வார் அருளிச் செய்தது -எல்லா பொருளும் விரித்தானை -என்று
முதல் வார்த்தையிலே -தர்மா தர்மங்கள் இன்னது என்று அறிகிலேன் -உனக்கு நான் சிஷ்யன் -ப்ரபன்னனான எனக்கு நல்லதைச் சொல்லுவாய் -என்ற
அர்ஜுனனுக்கு -பிரகிருதி புருஷ விவேகத்தைப் பிறப்பித்து -கர்மா யோகத்தை விதித்து -அது தன்னை கர்த்ருத்வத்தைப் பொகட்டு-
பல அபிசந்தி ரஹிதமாக அனுஷ்டி-என்று அநந்தரம் ஆத்ம ஞானத்தைப் பிறப்பித்து -அநந்தரம் பகவத் ஞானத்தைப் பிறப்பித்து
-அனவரத பாவனா ரூபமான உபாசன க்ரமத்தை அறிவித்து இவ்வளவும் கொண்டு போந்து இதன் அருமையை இவன் நெஞ்சில் படுத்தி
-இவை சக்யம் என்று சோகித்த அநந்தரம் -ஆகில் என்னைப் பற்று நிர்ப்பரனாய் இரு -என்று தலைக் கட்டுகிறான் என்றபடி –
இவ்விடத்தில் மஹாக்ரம -676- என்ற திரு நாமத்தின் வ்யாக்யானமான –
பரமதுங்கம் ஆத்மாநம் பரம நிம் நபவ பாதாளாத் ஜீவன் ஆரோஹயத-மஹதீ ஆரோஹண சோபா ந பர்வா நு பூர்வீ அஸ்ய இதி மஹாக்ரம
-யதா ஜன நீ ஸ்தநந்த்யம் ஆதவ் ஸ் தன்யம் தாபயதி அத துக்தம் அத ஆஹாரம் அத போகான் கமயதி ஏவமயம் ஸூக்ருதிநம்
அத்வேஷ ஆஸ்திக்ய ஆபிமுக்ய அனுவர்த்தன ஞான பக்தி விஸ்ரம்ப க்ரமேணைவ ப்ராப்யதி அப்யுத்தா நார்த்தம் சந்த அனுவர்த்த நார்த்தம் ச -என்ற
பட்டர் பாஷ்யத்தையும் –
தத் தத் அதிகாரி விசேஷ அபேக்ஷயா புருஷார்த்தம் அஸ்தி –பஷ்ய விசேஷை பாலா நிவ சடான் வசீ கர்த்தும் -என்ற வேதார்த்த சங்க்ரஹ தாத்பர்ய தீபிகா வாக்யத்தையும் –
தம பிரசுராணாம் ரஜ பிரசுராணாம் சத்வ பிரசுராணாம் ச வத்சலதர தயைவ ஹிதம் அவபோத யந்தி வேதா -என்ற ஸ்ரீ கீதா பாஷ்ய வாக்யத்தையும்
தாம்பூலாத் யர்த்தி ந புத்ரா பித்ராதிபி தத் பிரதா நா பாவே ஸுர்யாதி நா ப்ரணச்யந்தி ததா அத்ராபி -என்ற தாத்பர்ய சந்திரிகா வாக்யத்தையும்
சாஸ்திரமானது வத்சலதரம் ஆகையால் –அவர்கள் அபேத ப்ரவ்ருத்தராய் நசிக்க விட ஷமம் அல்லாமையாலே –கொள் கொம்பிலே யேற்றுகைக்கு
சுள்ளிக் கால் நட்டுவாரோபாதி–இவ்வோ முகங்களாலே தன்னுடைய தாத்பர்ய அம்சத்தில் ஆரோபிக்கைக்காக ப்ரவர்த்திப்பிக்கிறது -என்ற
மா முனிகள் ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஸூ க்தியையும் கண்டு கொள்வது –
வத்ஸலையான மாதா பிள்ளை பேகணி யாமல் மண் தின்ன விட்டு ப்ரத் ஒளஷதம் இடுமா போலே எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணமான இவனும்
ருசிக்கு ஈடாக பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டும் இ றே -அது தானும் ஆஸ்திக்ய விவேக அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தி
பாரதந்தர்யங்களை உண்டாக்கின வழி -என்று இ றே இவர் தாமும் ஆச்சார்ய ஹிருதயத்தில் அருளிச் செய்தது

—————————————————————————————————–

சரம ஸ்லோகார்த்தம் -பரம ரகஸ்யம் –
ஐந்தாம் வேதத்துக்கு உபநிஷத்தான ஸ்ரீ கீதையில் பரக்கத் சொல்லி குஹ்ய தமம் என்று தலைக் கட்டின பக்தி யோகத்துக்கு மேலாக
ஒரு வார்த்தையைச் சொல்லி ஒருத்தியுடைய சரணாகதி நம்மை நெஞ்சை அழித்தது என்கிற துணுக்கத்தோடே இது ஒருவருக்கும் சொல்லாதே கொள்
என்று மறைத்த போதே இது பரம குஹ்ய தமம் என்று தோற்றும் –

சரம ஸ்லோகார்த்த வைபவஞ்ஞர் –
இதின் ஏற்றம் அறிவார் -பரமன் பணித்த பணி வகை -10-4-9–என்றும் -திறன் உரை -முதல் திரு -41–என்றும் -பெரு வார்த்தை -நாச் திரு -11-10–என்றும் –
கிடக்கும் உள்ளத்து எனக்கு -நான்முகன் -50—என்று இருக்கும் -வார்த்தை அறிபவர் -7-5-10-இறே –

சரம ஸ்லோக அர்த்த கௌரவம்
இதுக்கு அதிகாரிகள் கிடையாமையாலே -தேர்த் தட்டினையும் -சேர பாண்டியனையும் சீர் தூக்கிச் செய்ய வடுப்பது என் என்று
பலகால் நடந்து துவளப் பண்ணி சூழரவு கொண்டு மாச உபவாசம் கொண்டு மூன்று தத்துக்குப் பிழைத்தால் சொல்லுகிறோம் என்றும்
-இவனுக்குச் சொல்ல எளிது காண் என்றும் -நம் முதலிகள் பேணிக் கொண்டு போருவர்கள்-

சரம ஸ்லோக அதிகாரிகள்
இதில் சொல்லுகிற அர்த்தம் எவ்வுயிக்குமாய்-1-5-3- இருந்ததே யாகிலும் -முக்குணத்து இரண்டு அவை அகற்றி -திரு எழு கூற்று இருக்கை -9-பரம சாத்விகனாய்
மால் பால் மனம் சுழிப்ப -மூன்றாம் -14- சம்சாரத்தில் அருசியை உடையவனாய் திருவரங்கர் தாம் பணித்தது -நாச் திரு -11-10- என்றால்
-துணியேன் இனி பெரிய திரு -11-8-8- வியவசாயம் உடையவனாய் -நாஸ்திகனும் ஆஸ்திக நாஸ்திகனும் அன்றிக்கே
ஓள் வாள் உருவி எறியும் படி – பெரிய திரு -6-2-4- ஆஸ்திக அக்ரேஸர் ஆனவன் இதுக்கு அதிகாரியும் படியாய் இருக்கும் –

சரம ஸ்லோக வாக்யார்த்தம்
கீழே உபாயங்களை வெளியிட்டு -அவற்றுக்கு உள்ளீடாய் நின்று கார்யம் செய்கிற தன்னை உபாயமாகச் சொல்லி -மேல்
ஒரு உபாயம் சொல்லாமையாலே -சரம ஸ்லோகம் என்று பேரான இது -இவ்வுபாயத்துக்கு இவன் செய்ய வேண்டுமவற்றையும்
இவ்வுபாயம் இவனுக்கு செய்யுமவற்றையும் சொல்லுகிறது –

சரண்ய சராணாகத க்ருத்யம்
விடுவித்து பற்றுவித்து -விலக்கடி அறுக்கை உபாய க்ருத்யம்
விட்டுப் பற்றித் தேறி இருக்கை அதிகாரி க்ருத்யம் –

————————————————-

சரம ஸ்லோகத்தின் பரம ரகஸ்யத்தை அருளிச் செய்கிறார் -ஐந்தாம் வேதத்துக்கு என்று தொடங்கி –
கோவிந்தேதி-ஸ்லோக அர்த்தத்தை உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -ஒருத்தி -இத்யாதி -துணுக்கத்தோடே -என்று
-இங்கே மால் என்கோ-3-4-6- என்கிற இடத்து ஈடு அனுசந்தேயம் –
இதம் தே நாத பஸ்காயா-18-67-என்றத்தையும் உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -இது ஒருவருக்கும் சொல்லாதே கொள் -என்று -தே -த்வயா என்றபடி –
அருளிச் செய்கிறார் -ஒருத்தி -இத்யாதி -துணுக்கத்தோடே -என்று -இங்கே மால் என்கோ-3-4-6- என்கிற இடத்து ஈடு அனுசந்தேயம் –
இதம் தே நாத பஸ்காயா-18-67-என்றத்தையும் உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -இது ஒருவருக்கும் சொல்லாதே கொள் -என்று -தே -த்வயா என்றபடி
சரம ஸ்லோகார்த்த வைபஞ்ஞர் இன்னார் என்பதனை அருளிச் செய்கிறார் -இதின் ஏற்றம் அறிவார் -இத்யாதி —
எம்பெருமானார் முதலியாண்டான் போன்ற மஹாச்சார்யர்கள் சரிதத்தை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் இதுக்கு இத்யாதி
மாச உபவாசம் இத்யாதி -ஆழ்வான் சரித்ரத்திலே மாச உபவாசம் கொண்டதும் -ஆண்டான் சரித்ரத்திலே மூன்று தத்து இத்யாதியும் பிரசித்தம்
மூன்று தத்து -வித்யா -தான -ஆபீ ஜாத்ய மதங்கள்-
இது தனக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தை -அருளிச் செய்கிறார் இதில் என்று தொடங்கி –
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -என்கிறபடியே அதிகாரிகள் நியதர் -அதாவது செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -நாச் -11-10-என்று கரண த்ரயத்தாலும் செவ்வியராய் அது தன்னை அர்த்த க்ரியா காரியாய்க் கொண்டு
கோயிலிலே சாய்ந்து அருளினவர் தாம் -அர்ஜுனன் வ்யாஜத்தாலே திருத் தேர் தட்டிலே நின்று அருளிச் செய்த -யதார்த்தமுமாய் -சீரியதுமாய் -ஸூலபமுமான
-மாம் ஏகம் சரணம் வ்ரஜ -18-66- என்கிற வார்த்தையை பெரியாழ்வார் கேட்டு -தன் நிஷ்டராய் இருப்பர் என்கிறபடி –
இவ்வர்த்தத்துக்கு அதிகாரிகள் இது கேட்டால் இதின் படியே நியதராய் இருக்குமவர்கள் என்றபடி –

சரம ஸ்லோக நாம நிர்தேச ஹேதுவை அருளிச் செய்கிறார் -கீழே -என்று தொடங்கி –
சரம ஸ்லோகத்தின் வாக்யார்த்தத்தை அருளிச் செய்கிறார் -இவ்வுபாயத்துக்கு என்று தொடங்கி –
பூர்வ அர்த்தத்தாலே அதிகாரி க்ருத்யத்தையும் -உத்தர அர்த்தத்தாலே உபாய க்ருத்யத்தையும் அருளிச் செய்கிறான் -என்றபடி
உத்தர அர்த்தத்தில் அதிகாரி க்ருத்ய அம்ச லேசமும் கூறப்படுவதாக பரந்த ரகஸ்யம் கூறுகிறது –
சரண்ய சரணாகத க்ருத்யங்களை அருளிச் செய்கிறார் -விடுவித்து என்று தொடங்கி

—————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீவர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: