அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த -அருளிச் செயல் ரகஸ்யம்-திருமந்திர பிரகரணம் -ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ரகஸ்ய பூஷணம் –

ஸ்ரீ யபதியான -சர்வேஸ்வரனாலே-சகல ஜகத் உஜ்ஜீவன அர்த்தமாக திருவவதரித்து அருளின
அழகிய மணவாள பெருமாள் நாயனார் -சம்சார சேதனர்க்கு தத்வ ஞானம் பிறந்து -அவர்களுக்கு உஜ்ஜீவிகைக்கு உடலாக
தம்முடைய பரம கிருபையாலே -அருளிச் செயல் ரகஸ்யம் -என்று பிரசித்தமான ரகஸ்ய த்ரய வியாக்யானத்தை அருளிச் செய்தார் –
அதற்கு பூர்வர்கள் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே பூஷணம் -என்ற விவரணம் அருளிச் செய்து உள்ளார் –
ஸ்ரீ யபதியாய் ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அனுபாவ்யனாய் -இருக்கிற சர்வேஸ்வரன் –
அந்த நித்ய ஸூரிகளோபாதி-தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய் வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும்
-அத்தை இழந்து அசந்நேவ-என்கிறபடியே அசத் கல்பராய் கிடக்கிற சம்சார சேதனர் உடைய இழவை அனுசந்தித்து
அத்யந்த வியாகுல சித்தனாய் இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த பஷி போலே கிடக்கிற தசையிலே
கரணாதிகளைக் கொடுத்து அவற்றைக் கொண்டு வியபசரியாதே தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கைக்கு உடலாக
அபௌருஷேயமாய் -நித்ய நிர்தோஷமாய்-ச்வத பிரமாணமான வேதத்தையும் –
தத் உப ப்ரும்கணங்களான ஸ்ம்ருதி இதிகாச புராணாதிகளையும்
பிரவர்த்திப்பித்த இடத்திலும்
அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு அநேக யோக்யதை வேண்டுகையாலே -அவ்வழியாலே ஜ்ஞானம் பிறந்து சேதனர் உஜ்ஜீவிக்கை
அரிதாய் இருக்கிறபடியைத் திரு உள்ளம் பற்றி
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் ஸூக்ரஹமாக இவர்கள் அறியலாம்படி பண்ண வேணும் என்று
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான ரகஸ்ய த்ரயத்தையும் ஸ்வயம் ஏவ ஆச்சார்யனாக நின்று பிரகாசிப்பித்தது அருளினான் –
அதில் திருமந்த்ரத்தை பத்ரிகாஸ்ரமத்திலே ஸ்வ அம்ச பூதனான நரன் விஷயமாகப் பிரகாசிப்பித்தான்
த்வயத்தை விஷ்ணு லோகத்திலே ஸ்வ விஷயமாக பிராட்டி விஷயமாக பிரகாசிப்பித்தான்
சரம ஸ்லோகத்தை திருத்தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரிதனான அர்ஜுனன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
ஆகையால் இ றே-லஷ்மீ நாத சமாரம்பம் என்று குரு பரம்பர ஆதியிலே ஈஸ்வரனை அனுசந்திக்கிறது –
முமுஷு வாகிறான் -அவிச்சின்ன பகவத் அனுபவ பிரதிபந்தக சம்சார நிவ்ருத்தியில் இச்சை யுடையான் ஒருவன் –
இவனுக்கு ரகஸ்ய த்ரய ஜ்ஞானம் அவஸ்ய அபேஷிதம்
-இனி இந்த ரகஸ்ய த்ரயம் தான் சபதம் ஸூக்ரஹமாய் இருந்ததே யாகிலும் அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும்
அத்தை அறிந்தே எல்லாரும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும்
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பூர்வாச்சார்யர்களுடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை
சர்வர்க்கும் ஸூக்ரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும் அழகிய மணவாள பெருமாள் நாயனார்
தம்முடைய பரம கிருபையாலே இப் பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –
இப் பிரபந்தத்தில் இவள் அருளிச் செய்கிற வாக்யங்களில் எல்லாம் அருளிச் செயல் சந்தைகளையே சேர்த்து அருளிச் செய்கிறது
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் பேசின திவ்ய ஸூ க்திகள் ஆகையாலே ஆப்த தமமுமாய் அத்யந்த போக்யமுமாய்
இருக்கிற இதுவே நமக்கு அநவரதம் அபிமதம் ஆகையாலும்
முகம் அறிந்தவன் கோத்த முத்து பெரு விலையனமாம் போலே சந்தைகளை தாம் சேர்த்த
சாதுரியாலே அருளிச் செயலில் ரசஜ்ஞ்ர்க்கு இதில் அர்த்தத்தில் காட்டிலும் சப்தம் தானும் மிகவும் இனிதாய் இருக்கும் என்னும் அபிப்ராயத்தாலும் –
ஆகையால் இப்பிரபந்தம் சப்தம் அர்த்தம் ஆகிய இரண்டின் ரசத்தாலும் விசேஷ ஜன மநோ ஹரமாய் இருக்கும் –
இன்னமும் பிரபந்தாந்தரங்களில் அனுக்தமான அர்த்த விசேஷங்களும் இப்பிரபந்தத்தில் உண்டாகையாலும் இது எல்லாருக்கும் ஆதரநீயமாய் இருக்கும் –
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இப்பிரபந்தம் வெளியிட பிரதான ஹேது காருண்யம் ஆகும் –

——————————————– ————

தனியன்கள் –

திராவிடம் நாய ஹ்ருதயம் குரு பர்வ க்ரமாகதம்
ரம்யஜா மாத்ரு தேவே ந தர்சிதம் கிருஷ்ண ஸூ நா-

தலையான வெட்டெழுத்தில் பிறந்து சரணாகதித்தாய்
முலை யாரமுதில் வளர்ந்த பிரான் முடும்பைக்கு அதிபன்
மலையார் திருபுயத்தான் மணவாளன் மலர் அடிக்கே
நிலையான நெஞ்சம் பெற்றே யும்பர் வாழ்வு நிலை பெற்றதே–

——————————————————-

1-திருமந்திர பிரகரணம் –
அவதாரிகை –
1-1-ஆத்மத்ரைவித்யம் –

ஒரு கடல் துறையிலே படுகிற முத்து மாணிக்கங்களிலே சில ஒளியை யுடையவாய் -சில கொத்தை பற்றி அவற்றிலே
சிலவற்றைக் கடைந்து சேர்த்தவாறே நல்ல வற்றோடு கூட ஒரு கோவையாமாம் போலே
-பெரும் புறக்கடலான நாராயணனுடைய சங்கல்பத்தாலே சத்தையைப் பெறுகிற ஆத்மாக்களில் சிலர்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து நல்லமரர் -என்னும்படி நித்யராய்-சிலர் –
வன் சேற்று அள்ளலிலே அழுந்தி அழுக்கு ஏறி ஆப்புண்டு பத்தராய்-அவர்களிலே சிலர் மலமறக் கழுவி மாசு அறுக்கப் பட்டு
-ஒளிக் கொண்ட சோதியோடு -வானத்து அணி அமரர் ஆக்குவிக்க வானவர்க்கு நல் கோவையாம் படி முத்தராகக் கடவர்கள் –
நல் சரக்குக்கு ஒளியினுடைய மிகுதி குறைவால் உள்ள பெருமை சிறுமை ஒண் பொருளான ஆத்மாவுக்கும்
இந்த ஞானத்தின் உடைய ஏற்றச் சுருக்கத்தாலே உண்டாக்கக் கடவது –

———

இப்பிரபந்தத்தை வெளியிட்டு அல்லது தரிக்க ஒண்ணாதபடி விசரிப்பித்த சம்சாரி சேதனர்கள் உடைய ஸ்வரூப பிராப்த
பரம புருஷார்த்த அனுபவத்துக்கு இடைச்சுவரான அப்ராப்த அநந்த அப்ருஷார்த்தங்கள் உடைய அநாதி கால அனுபவமும்
அதனுடைய அநாகத அநுகால அனுவர்த்த அநார்ஹதையும் ஆகிற அனர்த்தங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டு
சர்வாத்மாக்களின் உடையவும் பரம புருஷார்த்த அனுபவ யோக்யதா ஹேதுவை
ச பிரமாணமாகவும் ச த்ருஷ்டாந்தமாகவும் அருளிச் செய்கிறார் -ஒரு கடல் -என்று தொடங்கி –
அதாவது -கடல் -திருஷ்டாந்தம் -சர்வேஸ்வரன் தார்ஷ்டாந்திகம் –
முத்து மாணிக்கங்கள் -திருஷ்டாந்தம் –ஜீவாத்மாக்கள் தார்ஷ்டாந்திகம் –
முத்து மாணிக்கங்களில் த்ரை விதயம் போலே ஜீவாத்ம த்ரை விதயம்
முத்து மாணிக்கங்களில் சில ஸ்வத ஒளி யுடையன – அவ்வோபாதி ஜீவாத்மாக்களில் நித்யர்கள் ஸ்வ பாவத ஸூ த்தர்கள் –
முத்து மாணிக்கங்களில் சில கொத்தை பற்றியவை -அஸூத்தங்கள் -அவ்வோபாதி ஜீவாத்மாக்களில் சம்சாரிகள் அஸூத்தர்கள் –
முத்து மாணிக்கங்களில் சில கடையப் பட்டு ஸூத்தி அடைந்து நல்லவற்றோடு ஒரு கோவையாக சேர்க்கப் பட்டவை –
அவ்வோபாதி பத்தர்களிலே சிலர் அஜ்ஞநாதிகள் கழியப் பெற்று நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக சேர்க்கப் பட்டவர் முக்தர் -என்றபடி
ஆத்ம ஸ்வரூபம் நிர்விகாரம் -சங்கோச விகாச பாஜனம் அல்ல என்று சித்தாந்தம் ஆகையாலே ஜீவாத்மாக்களுக்கு சிறுமை பெருமை
தர்மபூத ஜ்ஞானத்வாரா என்று திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் -இந்த ஞானத்தின் உடைய ஏற்றச் சுருக்கத்தாலே -என்று –

—————————————————————————–

1-2-சம்சாரிகளின் பகவத் அனுபவ யோக்யதை –

அயர்வறும் அமரர்களான நித்தியரும்
கரை கண்டோர் என்கிற முக்தரும்
எம்பெருமானையும் தங்களையும் உள்ளபடி உணர்ந்து அறிவுக்குச் சேர்ந்த போகமும் அடிமையும் பெற்று –
பெரு மக்கள் உள்ளவர் -என்னும் படி உளர் ஆகிறார் போலே
மறந்தேன் உன்னை -யானே என்னை அறிய கில்லாது -என்னும் படி -இரண்டு தலையையும் மறந்து –
மறந்த மதியும் இன்றிக்கே -அஹங்கார மமகாரங்களும் -ராகத்வேஷங்களும் –புண்ய பாபங்களும் -தேக சம்பந்தமும் -பந்து சங்கமும்
-விஷய ப்ராவண் யமும் -அர்த்த ஆர்ஜனமும் -தேக போஷணமும்-பிரயோஜ நாந்தர ஸ்ரத்தையும் -தேவ தாந்திர பஜனமும் -சமயாந்த்ர ருசியும் –
சாதா நாந்தர நிஷ்டையுமாய் -ஸ்வர்க்க நரக கர்ப்பங்களிலே வளைய வளைய வந்து –
வழி திகைத்து -நின்று இடறி -அனந்தக் கடலுள் அழுந்தி –
நானிலாத முன் எலாம் -பொருள் அல்லாத என்னும் படி -உருவு அழிந்த மா நிலத்து உயிர்களான சம்சாரிகளும்
எம்பெருமான் சேஷியாய்-தாங்கள் அடியாராய் இருக்கிற -ஒழிக்க ஒழியாத உறவை உணர்ந்து
ஆம் பரிசான அனுபவமும் அடிமையும் பெற்றால் இறே
அடியேனைப் பொருள் ஆக்கி –யானும் உளன் ஆவன்-என்கிறபடி சத்தை பெற்றார்கள் ஆவது

—————————–

ஒரு நிலத்திலே ஒரு கூறு உவர்ந்து கிடக்க மற்றைக் கூறு விளைவது அறுப்பது ஆம்போலே -நித்ய விபூதியும் நித்ய ஸூரிகளும்
பகவத் அனுபவமே யாத்ரையாகச் செல்லா நிற்க
நித்ய முக்தரோபாதி பகவத் அனுபவ யோக்யதை இருக்கச் செய்தே சம்சாரம் ஆகிற பாலை நிலத்தில் உள்ளார் சப்தாதி விஷயங்களில்
பிரவணராய்-இவற்றின் உடைய லாப அலாபங்களே பேறும் இழவுமாய்-பகவத் விமுகராய் -பகவத் அனுபவத்தை இழந்து கிடக்கிறபடியை
அருளிச் செய்கிறார் -அயர்வறும் என்று தொடங்கி –
இரண்டு தலை -ஜீவ பரர்கள்

——————————————————————–

1-3-பகவத் கிருஷி –

இந்த மெய்ஜ்ஞ்ஞானம் இன்றியே வினையியல் பிறப்பு அழுந்து கிற இவர்களுக்குத் தாமரையால் கேள்வன் ஒருவனையே
நோக்குகிற ஞானத்தை அறிவிக்கைக்கு -நீர்மையினால் அருள் செய்த -சரணம் ஆகிய வேத சாஸ்திரங்கள் -நூற் கடல் என்னும் படி பரந்து
–மன்னா விப் பிறவி யுள் -மதியிலா மாநிடங்களான இவர்களுக்கு கரை காணா ஒண்ணாமையாலே
-ஒத்தின் பொருள் முடிவை ஒத்தின் சுருக்காய் இருப்பது ஒன்றாலே அறிவிக்க வேணும் என்று
தெய்வ வண்டாய்-அன்னமாய் அமுதம் கொண்ட -மைத்த சோதி எம்பெருமான்
வேத சாகைகளிலும் -ஓதம் போல் கிளர்-நால் வேதக் கடலிலும் –
தேனும் பாலும் அமுதுமாகச் சேர்த்து பிரித்து எடுத்து -அற நூல் சிங்காமை விரித்தவன் -என்னும்படி
நர நாராயண ரூபத்தைக் கொண்டு சிஷ்யாச்சார்ய க்ரமம் முன்னாக பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே
பெரிய திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான்

——————————

காருணிகனான சர்வேஸ்வரன் நீர்மையினால் சத்வாரகமாகவும் அத்வாரகமாகவும் வெளியிட்டு அருளின பிரமாணங்கள் பல பல –
அவற்றில் முனிவரை இடுக்கி வெளியிட்டு அருளினவை -வேத வேதாந்தங்களும் -ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களும் -திவ்ய பிரபந்தங்களும் ஆகும் –
முந்நீர் வண்ணனாய் வெளியிட்ட சாஸ்திரம் ரகஸ்ய த்ரயம் ஆகும்
சம்சாரிகளுக்கு தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய பிரதிபாதமாக வெளியிடப்பட்ட சாஸ்த்ரங்களில் வேதங்களின்
தத்வ ஜ்ஞான அப்ரயோஜகத்வத்தை அருளிச் செய்கிறார் -வேத சாஸ்திரங்கள் -என்று தொடங்கி
ஒத்தின் பொருள் முடிவை -ஒத்தின் சுருக்காய் -இருப்பது ஒன்றாலே -என்றது
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே -மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -என்கிறபடியே
வேதாந்த தார்பர்யமாய் -ருசோ யஜூம்ஷி சாமா நி ததைவாதர்வணா நிச -சர்வம் அஷ்டாந்தர அந்தஸ்ச்தம்-என்கிறபடியே
சகல வேத சங்க்ரஹமான திரு மந்த்ரத்தாலே -என்றபடி –
தெய்வ வண்டாய் -இத்யாதி வேத சாரமாய் –தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் என்னும் படி
இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் க்ரஹிக்கிற போது-கிரஹித்த பிரகாரத்தை த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார்
அதாவது -தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு ஆகையாலே -ஷட் பதமானது சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே
சார பூத சம்ஸ்த்தார்த்த போத கதயா சர்வ ரசமான தேன் போலே இருக்கிற இத்தை வேத சாகைகளிலே கிரஹித்த படியும்
அன்னமாய் அங்கு அருமறை பயந்தான் என்கிறபடியே ஹம்ச ரூபியானவன் ஆகையாலே –
அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற பாலை விவேகித்து எடுக்குமா போலே
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னும் படி -இருக்கையாலே சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை
ஓதம் போல் கிளர் வேத நீரில் நின்றும் க்ரஹித்த படியும்
அமுதம் கொண்ட பெருமான் என்கிறபடியே அஸூர பய பீதராய் -அமரத்வ சாபேஷரான தேவர்களுடைய ரஷணம்ர்த்தமாக
-விலஷன போக்யமாய் விநாச ஹரம் ஆகையாலே அம்ருதம் போல் இருக்கிற இத்தை
நால் வேதக் கடலிலே க்ரஹித்த படையையும் சொல்லுகிறது -அற நூல் சிங்காமை விரித்தவன் என்னும் படி –இத்யாதி
ஆக -இப்படி வேத சாரமான இத்தை ஸ்வ மேய எடுத்து
அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் வதரியாச்சிரமத்து உள்ளான் என்கிறபடியே –
நித்ய ஸூரிகளுக்கு போக்யமாய் பரம ஆகாச வாச்ய சப்தமான பரமபதத்தைக் கொடுப்பதான நிர்துஹேக கிருபையாலே
நர நாராயணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் -என்கிறபடியே
ஸ்வரூப சாஸ்திரம் சங்குசிதம் ஆகாமல் உபதேச அனுஷ்டங்களாலே விஸ்த்ருதமாம் படி பண்ணினான் -என்கை-

————————————————————————————————–

1-4-மூல மந்த்ரத்தின் ருஷிச் சந்தோ தேவதைகள் -பெருமை –

இது தனக்கு -அந்தர்யாமியான நாராயணன் ருஷி
தேவி காயத்ரி சந்தஸ் ஸூ –
பரமாத்மாவான நாராயணன் தேவதை –
பிரணவம் பீஜம் -ஆய சக்தி -ஸூ க்ல வர்ணம் -மோஷத்திலே விநியோகம்
சிந்தை பிரியாத –பரமாத்மா -என்கிற படியே அந்தர்யாமியும் பரமாத்மாவுமான தானே இதுக்கு ருஷியும் தேவதையுமாய் –
வைப்பும் நாங்கள் வாழ்வும் ஆனான் என்கிறபடியே பிரம குருவாய் ஜ்ஞானத்தைக் கொடுத்து பிராப்யனுமாய் இருக்கையாலும்
நாராயண பரங்களான வேதங்களும் -அதுக்கு பொருள் சொல்லக் கடவ மந்தரைக சரணரான ருஷிகளும்
நா வாயில் உண்டே -என்றும் -நாத்தழும்பு எழ -என்றும் -நள் இருள் அளவும் பகலும் -என்றும்
ஓவாதே நமோ நாரணா என்றும் -நாரணன் தமரான ஆழ்வார்களும்
வைதிக விதிகளும் தங்கள் நினைவைப் பின் செல்லும் படியான ஆழ்வார்களை அடி ஒற்று
திராவிட வேதத்துக்கு கருத்து அறிவிக்கும் நம் ஆச்சார்யர்களும் –இத்தையே ஒரு மிடறாக விரும்புகையாலும்
நம்பி நாமம் என்னும் படி அர்த்தி பூர்த்தியை உடைத்தாகையாலும் முமுஷுக்களுக்கு கழிப்பனான ஷூத்ர மந்த்ரங்களிலும்
ஒக்க ஓதா நிற்க -ஓடித் திரியும் யோகிகளாலே விரும்பப்பட்டு அர்த்த பூர்த்தியை உடைத்து அல்லாத மற்ற மந்த்ரங்களிலும் ஏற்றத்தை யுடைத்தாய் –
குலம் தரும் என்கிறபடியே -தர்மம் அர்த்தம் இஹலோக பரலோக போகம் ஆத்ம பரமாத்ம பாகவத் அனுபவங்கள் என்கிற
புருஷார்த்தங்களையும் சாதித்திக் கொடுக்கக் கடவதாய்
எட்டினாய பேதமோடு என்றும் -ஆர்வமோடு இறைஞ்சி நின்று -என்கிறபடியே அல்லாத உபாயங்களுக்கும் துணை செய்யக் கடவதாய் –
சித்தோ உபாயத்தில் இழிவார்க்கு -அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே -என்கிறபடி ஸ்வரூப ஞானத்துக்கும்
தொழில் எனக்கு -என்கிறபடியே பொழுது போக்குக்கும் -மந்த்ரத்தால் மறவாது -என்கிறபடியே -இங்குற்றை அனுபவத்துக்கும் பரிகாரமாய் –
பெற்ற தாயினும் ஆயின செய்யுமதான படியாலே -இடறினவன் அம்மே என்னுமா போலே -நானும் சொன்னேன் என்னும் படி சர்வாதிகாரமாய்
ஓவாது உரைக்கும் உரை -என்னும் படி சொல்லி இளைப்பாறலாய்
வாயினால் நமோ நாராணா என்கிறபடியே -துஞ்சும் போதைக்கு மோர்க்குழம்பு போலே இளைப்பாறலாய்
செல்கதிக்கு நல் துணையாக -என்கிறபடி அர்ச்சிராதி கதிக்கும் பொதி சோறாய் -நமோ நாராயணாய என்கிறபடியே
தெளி விசும்பில் போகத்தையும் வளர்க்கக் கடவதாய் தேனாகிப் பாலாம் திருமாலானவனுள் ளீடு போலே
தேனும் பாலும் அமுதுமாய்த் திருமால் திரு நாமமாய்-எப்பொழுதும் தித்திக்கக் கடவதாய்
மற்று எல்லாம் பேசிலும் -என்கிறபடியே அறிய வேண்டுமவை எல்லாவற்றையும் உடைத்தாய்
எம்பெருமான் -தெய்வத்துக்கு அரசு -என்னும் படி கழி பெரும் தெய்வமாய் இருக்குமா போலே
மந்த்ராணாம் மந்திர ராஜ -என்கிறபடியே எல்லா மந்த்ரங்களிலும் மேலாய் -பெரும் தேவன் பேரான பெருமையையும் யுடைத்தாய் இருக்கும் –
பொருள் இல்லாத கடல் ஓசையில் பஷிகள் சொல் மேலாய் -அதில் நாட்டு வழக்குச் சொல் மேலாய் -அதில் தொண்டரைப் பாடும் சொல் மேலாய் –
அதில் இஷ்ட தேவதைகளை யேத்துமது மேலாய் -அதில் வேதார்த்தம் சொல்லுமது மேலாய் -அதில் வேதம் மேலாய் -அதில் வேதாந்தம் மேலாய் –
அதில் நாராயண அனுவாகம் மேலாய் -அதில் பகவன் மந்த்ரங்கள் மேலாய் –
அதில் மற்றை இரண்டும் கடலோசையோபாதியாம் படி மேலாய் இருக்கும் –
வளம் கொள் பேர் இன்பமான பெரிய திருமந்தரம் -தனி மாப் புகழே எஜ்ஞ்ஞான்றும் நிற்கும் படி என்கிறபடியே –
தான் அறிந்த உறவாலே எல்லார் பக்கலிலும் நடக்கிற சௌசஹார்த்தத்தாலே-பொருள் என்று சரீரங்களைக் கொடுத்து
ஒழிவற நிறைந்து அந்தர்யாமியாய் சத்தையை நோக்கி -சன்மம் பல பல செய்து -கண் காண வந்து –
ஆள் பார்த்து அவதரித்து -அருள் புரிந்த சிந்தை யடியார் மேல் வைத்து முகம் மாறுகிற சேதனரைச் சேர விட்டுக் கொள்ளுகைக்கு
இடம் பார்க்கிற எம்பெருமானுடைய உய்வதோர் பொருளான அருளாலே யாரேனும் ஒருவருக்கு பொய்ந்நின்ற ஞானத்துக்கு அடியான
முக்குணத்து இரண்டவை அகற்றி உய்யும் வகை யுணரும் ஒன்றினில் ஒன்றி -உணர்வு எனும் பெரும் பதம் நாடி
அறியாத அறிவிக்கும் ஞானத் துறையான ஆச்சார்யனைக் கிட்டினால் அவன் செயல் நன்றாகத் திருத்தி –
பிறர் கேட்பதன் முன் -என்று தனியிடத்தே கொண்டிருந்து -உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து -பாடி நீர் உய்ம்மின் -என்று அருளிச் செய்யும் –
இத்திரு மந்த்ரத்தின் உடைய ஏற்றத்தை அறிந்து பேணி அதுகுள்ளீடான-அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்திலே பக்தியைப் பண்ணி
இத்தை யுபகரித்தவன் பக்கலிலே -நீ செய்தன -என்று க்ருதஜ்ஞ்ஞானாய் போருமவனுக்கு உஜ்ஜீவனம் உண்டாகக் கடவது

————————————————

அவிதித்வா ருஷிம் சந்த-என்கிற ஸ்லோகத்திலே சொன்னபடி பாபாதிகள் ஒன்றும் வாராமைக்கு திரு மந்த்ரத்தின் உடைய
ருஷிச் சந்தோ தேவதா பீஜ சக்தி வர்ண விநியோக ஸ்தான ந்யாசாதிகள்-அவ்வோ கல்ப சம்ப்ரதாயங்களுக்கு ஈடாகக் கண்டு கொள்ள வேணும் –
திருமந்தரம் தன்னை அனுசந்திப்பார்க்கு ப்ரதிபாத்யமான வஸ்துவோ பாதி ருஷிச் சந்தோ தேவதைகளும் -பீஜ சக்திகளும்
-சோஷண தாஹ நாதிகளும் ஆகிய இவை எல்லாம் அனுசந்தேயமாகக் கடவது –
அது வேண்டுவான் என் என்னில் -நமோ நாராயணாய வென்று பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்று –
இம் மந்திர அனுசந்தானம் பண்ணுவார் நித்ய ஸூ ரிகளாய்-அவர்களுடைய யாத்ரை யாயிற்று இது –
அத்தை இ றே குண த்ரயாத்மிகையான பிரகிருதி வச்யனான இவன் அனுசந்திக்கப் பார்க்கிறது –
ஆகையாலே ஒரு பாவனையாலே அவர்களோபாதியாக தன்னுடைய சரீரத்தையும் பாவித்து அனுசந்திக்கைக்காக சோஷணாதிகள் வேண்டுகிறது –
இனி ருஷிச் சந்தோ தேவதைகளை அனுசந்திக்கிறது -இம் மந்த்ரத்தில் உண்டான ஆதர அதிசயத்தாலே –
பீஜ சக்திகளை அனுசந்திக்கிறது -மோஷப்ரதம் என்று அவ்வழியாலே இவனுக்கு இதில் விஸ்வாசம் பிறக்கைக்காக-
இவை இத்தனையும் திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் –இது தனக்கு அந்தர்யாமியான நாராயணன் ருஷி -என்று தொடங்கி-
திரு மந்த்ரத்துக்கு உண்டான பரிக்ரஹ அதிசயத்தை அருளிச் செய்கிறார் –நாராயண பரங்களும் -என்று தொடங்கி –
திரு மந்த்ரத்தின் உடைய அர்த்த பூர்த்தியையும் மந்த்ராந்தரங்களின் அர்த்த அபூர்த்த்யாதிகளையும்
அருளிச் செய்கிறார் -நம்பி நாமம் -என்னும் படி -என்று தொடங்கி –
ஷூத்ர மந்த்ரங்களிலும் -பகவன் மந்த்ரங்களை -ஷூத்ர மந்த்ரங்கள் என்கிறது பலத்வாரா -அர்த்த காம புத்ர வித்யாதி ஷூத்ர பலங்களை
கொடுக்கிற வழியாலே என்கை-
ஒக்க ஓதா நிற்க -விஷ்ணு காயத்ரியில் -நாராயணாய வித்மஹே என்று தொடங்கி -விஷ்ணு வாசுதேவ சப்தங்கள்
நாராயண சப்தத்தோடு ஒக்க ஓதப்படா நின்றது இறே
ஓடித்திரியும் யோகிகள் -நிர்விசேஷ சின் மாத்ர வஸ்து வாதிகளான குத்ருஷ்டிகள் –
நாராயண சப்தம் போலே ஸ்வரூப ரூப குணாதி களை எல்லாம் பிரதிபாதியாதே ஸ்வரூப மாத்ரத்தை பிரதிபாதிக்கையாலே
விஷ்ணு சப்தம் குத்ருஷ்டிகளாலே ஆதரிக்கப் படுகிறது –
அர்த்த பூர்த்தியை உடைத்து அல்லாத வாசூதேவ மந்த்ரம் வ்யாப்ய அத்யாஹாராதி சாபேஷதையாகிற அபூர்த்தியை யுடையது –
ஷடஷரி -வியாப்த பதார்த்தங்களையும் -வியாபன பிரகாரத்தையும் -வியாப்தி பலத்தையும் -வியாபகனுடைய குணங்களையும் சொல்லாதே
வியாப்தி மாத்ர பிரகாசகம் ஆகையாலே அபூர்ணம் –
வியாபன பிரகாரத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும் வியாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் அல்லாமையாலும்
சர்வம் வசதி -என்று அர்த்த பலத்தாலே -சர்வ சப்தம் -புகுந்தாலும் -அதில் குணம் அன்வயியாமையாலும் –
இனி குண சித்திக்காக பகவச் சப்தத்தை கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் -வியாப்தி பலத்தை சொல்லாமையாலும் திருத் த்வாதசாஷரியும் அபூர்ணம் –
மற்ற மந்த்ரங்களிலும் ஏற்றம் -என்றது -இம்மந்த்ரம் அவை போல் அன்றியிலே -வ்யாப்த பதார்த்தங்களோடு -வியாபன பிரகாரத்தோடு-
வியாப்தி பலத்தோடு -வியாபகனுடைய குணங்களோடு வாசி அற சாப்தமாகக் காட்டுகையாலே
அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் உண்டு என்றபடி –
திரு மந்த்ரத்தின் உடைய வைபவத்தை பல படியாக அருளிச் செய்கிறார் –
குலம் தரும் என்கிறபடியே -இத்யாதி –
மந்திர மந்த்ராந்தங்களின் ராஜத்வத்தை அருளிச் செய்கிறார் -எம்பெருமான் தெய்வத்துக்கு அரசு -இத்யாதி –
சப்த சாமான்யத்தில் திரு மந்த்ரத்தின் சீர்மையை விவரித்து அருளிச் செய்கிறார் -பொருள் இல்லாத -இத்யாதி –
வதரியாஸ்ரமித்துள்ளான் திருமந்த்ரத்தை வெளியிட்டு அருளினாலும் அதனை நாம் பெறுவது ஓர் ஆச்சார்யன் மூலமாக இறே –
அது பெறாமல் விலகிப் போருகிற நம்மை சர்வேஸ்வரன் நல் வழிப்படுத்தி ஆச்சார்ய சம்பந்தத்தை உண்டாக்கும்
சோபனா க்ரமத்தை அருளிச் செய்கிறார் -தனி மாப் புகழே-என்று தொடங்கி –
இவ்விடத்தில் ஈச்வரஸ்ய ச சௌஹார்த்தம் யத்ருச்சா ஸூ ஹ்ருதம் ததா -விஷ்ணோ கடாஷம் -அத்வேஷம் ஆபிமுக்யம் ச சாத்விகை –
சம்பாஷணம் ஷடேதா நி ஹ்யாசார்யா ப்ராப்தி ஹேதவே-என்கிற வசனம் அனுசந்தேயம்
மந்த்ரே தத் தேவதாயாம் ச ததா மந்திர ப்ரதே குரௌ–என்கிற வசனத்தையும் –
மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திர பிரதனான ஆச்சார்யன் பக்கலிலும் பிரேமம் கனக்க உண்டானால்
கார்யகரம் ஆவது -முமுஷுப்படி -சூர்ணிகை 4-என்கிறவற்றையும் அடி ஒற்றி அருளிச் செய்கிறார் -இத் திருமந்த்ரத்தின் உடைய ஏற்றத்தை -என்று தொடங்கி

——————————————————————————————

திரு மந்த்ரத்தில் அர்த்த பஞ்சக பிரதிபாதனம்

எம்பெருமானோடு இவ்வாத்மாவுக்கு உண்டான உறவை அறிய ஒட்டாத விரோதியை ஒரு வழியாலே கழித்துப் பெரும் பேற்றை
இது வெளியிடுகையாலே முமுஷுக்கு அறிய வேண்டும் அஞ்சு அர்த்தமும் இதுக்கு உள்ளே உண்டு –

அர்த்த பஞ்சக பிரதிபாதன பிரகாரம் –

இதில் ஸ்வரூபம் சொல்கிறது பிரணவம் –
விரோதியையும் -அது கழிகைக்கு உபாயத்தையும் சொல்லுகிறது நமஸ் ஸூ –
பர ஸ்வரூபம் சொல்லுகிறது நாராயண பதம் –
புருஷார்த்தம் சொல்லுகிறது சதுர்த்தி –
பிராப்யமும் -விரோதியும் -உபாயமும் -பலமும் -ஆத்மாவுக்கு ஆகையாலே -ஸ்வரூபம் சொல்லுகையிலே இதுக்கு நோக்கு –

—————————————————–

மற்று எல்லாம் பேசிலும் -என்கிறபடியே -அறிய வேண்டும் அர்த்தங்கள் எல்லாம் இதுக்கு உள்ளே உண்டு என்கிறார் -எம்பெருமானோடு -என்று தொடங்கி
எம்பெருமானோடு என்ற பர ஸ்வரூபமும் –இவ்வாத்மாவுக்கு என்று ஸ்வ ஸ்வரூபமும் –
உண்டான உறவை அறிய -என்று அநாதி சித்த சம்பந்தத்தைப் பற்றின ஜ்ஞானம் ஆகிற உபாயமும்
அறிய ஒட்டாத விரோதி என்று விரோதி ஸ்வரூபமும் -கழித்துப் பெரும் பேற்றை என்று அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக
இஷ்ட பிராப்தி ரூப புருஷார்த்த ஸ்வரூபமும் பிரதிபாதிதம் –
திருமந்த்ரத்தின் உடைய ஜ்ஞாதவ்ய பஞ்சக பிரதிபாதன பிரகாரத்தை அருளிச் செய்கிறார் -இதில் -என்று தொடங்கி –
திரு மந்த்ரத்துக்கு அர்த்த பஞ்சகத்தில் இன்னதில் நோக்கு என்கிறார் பிராப்யம் -என்று தொடங்கி

———————————————————————————

திருமந்த்ரத்தின் வாக்யார்த்தம் –
சேஷத்வம் போலே அவனே உபாயமும் உபேயமும் என்று இருக்காய் ஸ்வரூபம் ஆகையாலும்
அந்ய சேஷத்வமும் ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் குலைகை கைங்கர்யம் போலே பேறாகையாலும்-
ஸ்வ ஸ்வரூபத்தையும் சொல்லி புருஷார்த்தத்தையும் சொல்லுகிறது என்று வாக்யார்த்தம் –

திருமந்த்ரத்தின் அஷர பத சங்க்யைகள்-

பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் என்கிறபடியே –
இது திரு வெட்டு வெழுத்தாய்-ஓம் என்றும் நம என்றும் -நாராயணாய என்றும் -மூன்று பதமாய் இருக்கும் –

ப்ரணவார்த்தம் –

இதில் முதல் பதமான பிரணவம் -அ என்றும் -உ என்றும் -ம் என்றும் மூன்று திரு எழுத்தாய்
நால் வேதாக கடல் அமுது -என்னும்படி வேத சாரமாய் -மூன்று எழுத்தாக்கி -என்கிறபடியே –
மூன்று பதமாய் -மூன்று பொருளை வெளியிடக் கடவதாய்-
மூலமாகிய ஒற்றை எழுத்தாய் -ஒரு பதமாய் -ஒரு பொருளைக் காட்டக் கடவதாய் இருக்கும் –
சப்தார்த்தங்கள் இரண்டாலும் ஜீவ பர ப்ராதான்யம் கொள்ளக் கடவது இறே –
ஓங்கார ரதம்-பார்த்தன் செல்வத் தேர் போலே இறே இருப்பது-
அடியேன் அடியாவி படைக்கலம் -என்கிறபடியே ஆத்ம சமர்ப்பணத்துக்கு மந்திரமாய்
-சந்தஸ்ஸூ வேதங்களில் பிரணவம் நான் என்ற மூன்று எழுத்தாய முதல்வனோடே
வேறு செய்யாமல் ஒரு பேரிலே இருப்பாக்குகையாலே
இரண்டு பங்குக்கு ஒரு மூல பிரமாணம் போலேயாய்-வேதத்துக்கு கீழும் மேலும் செப்பும் முடியும் போலே
செஞ்சொல் மறைப் பொருளை இது சேமித்துக் கொண்டு இருக்கும் –

————————————-

திருமந்த்ரார்த்தத்துக்கு வாக்யார்த்தம் அருளிச் செய்கிறார் -சேஷத்வம் -என்று தொடங்கி –
இங்கே இது தன்னில் சொல்லுகிற அர்த்தம் ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமும் -முமுஷுப்படி -சூர்ணிகை -26-என்கிற
உலகாரியன் திரு வாக்கும் -இம்மந்திரம் தன்னில் சொல்லுகிற அர்த்தம் இவ்வாத்மாவினுடைய சேஷத்வ பாரதந்தர்யங்கள் ஆகிற ஸ்வரூபமும்
-அந்த ஸ்வரூபத்துக்கு அனுரூபமாய் இருந்துள்ள கைங்கர்யம் ஆகிற ப்ராப்யமும் -என்கிற மா முனிகள் திருவாக்கும் அனுசந்தேயங்கள்
ப்ராப்யத்தின் ஸ்வரூப அனுரூபவத்வம் ஆவது -சேஷத்வ பாரதந்தர்யங்களுக்குத் தகுதியாய் இருக்கை
அதாவது ஸ்வ ப்ரயோஜ நத்வ ஸ்வ கர்த்ருத்வ பிரதிபத்தி கந்த ரஹிதமாய் இருக்கை -அதாவது
அவன் முக மலர்த்திக்கு உறுப்பாக அவன் நியமித்தபடி பண்ணுகை –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலம் –
பராதீன ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகத்வம் பாரதந்தர்யம் -என்று இறே பூர்வர்கள் அருளிச் செய்தது
திரு மந்திரத்தின் உடைய அக்ஷர ஸங்க்யையும் பாத ஸங்க்யையும் ஸ பிரமாணமாக அருளிச் செய்கிறார் -பேசுமின் -என்று தொடங்கி –

இனி பிரணவத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி அதனுடைய அக்ஷர த்ரயாத்மகதையை
அருளிச் செய்கிறார் -இதில் முதல் பதமான -என்று தொடங்கி –
இவர் தாமே உபய பிரதானமான பிரணவம் -ஆச்சார்ய சூர்ணிகை -161- என்று இ றே அருளிச் செய்தது –
ஓமித் யாத்மாநம் யுஜ்ஜீத -என்றும் -ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் சொல்லுகிறபடியே சப்தார்த்தங்களினுடைய ப்ராதான்யத்தாலே
ஜீவ ஈஸ்வரர் இருவருக்கும் வாசகமாய்க் கொண்டு இருவருடைய பிரதான்யம் தோன்றுவிக்கிற பிரணவம் போலே -என்றபடி –
அர்ஜுன ரதம் போலே பிரணவம் சேஷ பிரதானம் ஆகையால் -ராஸ மண்டலம் போலே நாராயண சப்தம் சேஷி பிரதானம் ஆகையால் புநக்ருதி இல்லை –
கோனாரை அடியேன் -திருவாய் -5-9-1-என்று இறே ஆழ்வார் அருளிச் செய்தது –
நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே இந்த நிர்த்தேசம் -அவனைச் சொல்லும் போது தம்மை இட்டு அல்லது சொல்லப் போகாது –
தம்மைச் சொல்லும் போதும் அவனை இட்டு அல்லாதது சொல்ல ஒண்ணாது –
கோனாரை என்ற இடம் நாராயணா சப்தார்த்தம் -அடியேன் என்ற விடம் ப்ரணவார்த்தம் –
பிரணவம் ஜீவ பிரதானம் -நாராயண சப்தம் ஈஸ்வர பிரதானம் –
பிரணவம் தன்னுள் சாப்த பிரதான்யம் ஜீவனுக்கு ஆனாலும் ரக்ஷகனான சேஷிக்கே ஆர்த்த பிரதான்யம் –
பிரணவத்துக்கு ஆத்ம சமர்ப்பணமும் அர்த்தம் ஆகையால் அத்தை அருளிச் செய்கிறார் அடியேனடியாவி -என்று தொடங்கி –
பிரதம அக்ஷரத்தில் சதுர்த்தி ஸம்ப்ரதானத்திலேயாய் –
ப்ரஹ்மணே த்வா மஹஸே -ஓமித்யாத்மநாம் யுஞ்ஜீத-அடியேனடியாவி யடைக்கலமே-என்கிறபடியே
விரோதி பயத்தால் கலங்கின தசையில் செய்யப்படும் ஆத்ம சமர்ப்பணம் -என்றபடி
பிரணவத்தின் சகல வேத சங்க்ரஹத்தை அருளிச் செய்கிறார் -சந்தஸ் -என்று தொடங்கி –
கீழும் மேலும் செப்பும் முடியும் போலே -என்றது –
ப்ராஹ்மண ப்ரணவம் குர்யாத் ஆதாவந்தே ச ஸர்வதா -ஸ்ரவதி அநோங்க்ருதம் பூர்வம் பரஸ்தாச்ச விசீரியதே -என்று
வேதம் கீழ் ஒழுகிப் போகாமைக்காகவும் மேல் சிதறிப் போகாமைக்காகவும் -கீழும் மேலும் செப்புப் போலே மூடிக் கொண்டு கிடக்கத் தக்கதாய்
சகல மந்திரங்களுக்கும் ஸ்வ சம்பந்தத்தால் உன்மேஷ கரமாய் இருக்கும் என்றபடி –

——————————————————————————————————————–

அகாரார்த்தம்
ஓர் எழுத்து ஓர் உரு -என்னும் படி இதுக்கு பிரக்ருதியாய் -முதல் எழுத்தாய் -எல்லா வற்றிலும் ஏறி சொல் நிரப்பத்தை உண்டாக்குகிற
துளக்கமில் விளக்கான அகாரம் -நான் மறையின் சொற் பொருளுக்கு அடியாய் -அவையவை தோறு நிறைந்து நின்ற
அக்ஷரங்களில் அகாரம் நான் என்ற மேல் இருந்த விளக்கான எம்பெருமானைக் காட்டுகிறது –
இது அவ-ரக்ஷணே என்கிற தாதுவில் பதமாகையாலே இந்த ரக்ஷணம் ஆகிற தொழில்
காக்கும் இயல்வினனான சர்வேஸ்வரன் பக்கலிலே கிடைக்கையாலே
மூவாத்தனி முதலாய் மூ உலகுக்கும் காவலோன் -என்கிறபடியே காரண வஸ்துவே ரக்ஷகமும் என்று தோற்றும் –
தேச கால அவஸ்தா பிரகார அதிகாரிகளையிட்டு ரக்ஷணத்தை சுருக்காமையாலே
துளிக்கின்ற வான் இந்நிலம் –
வருங்காலம் நிகழ் காலம் கழி காலமாய் –
ஞாலத்தூடே நடந்து நின்றும் கிடந்து இருந்தும் –
மன்னுயிர்க்கு எல்லாம் அரணாய –
என்கிறபடியே -எல்லாத் தேசத்திலும் -எல்லாக் காலத்திலும் -எல்லா அளவிலும் எல்லா வழியாலும்-
எல்லாரையும் ரஷிக்கும் படியைக் காட்டுகிறது –
அருளால் அளிப்பாரார்
உவந்து எம்மைக் காப்பாய் -என்கிறபடி
அருளையும் உகப்பையும் பரிகரமாகக் கொண்டு
மலர்கதிரின் சுடர் உடம்பாலும் -வருந்தாத ஞானத்தாலும் -எழுவார்க்கு உடம்பை பூண் கட்டியும்
விடை கொள்வாருக்கு-செட்டியார் ஆக்கை கழித்தும்
வழுவா வகை நினைந்தார்க்கு -தன் தாள் இணைக் கீழ் சேர்த்தியை உண்டாக்கியும்
சேர்ந்தார்களை என்றும் மகிழப் பண்ணியும்
பிரிந்து கூடாதார் பணிவும் பண்பும் தாமேயாயும் பண்ணும் ரக்ஷணம் சேதனர் நின்ற நின்ற அளவுக்கு ஈடாக இருக்கும் –

அகாரார்த்தம் -ஸ்ரீ யபதியே-
திருவுக்கும் திருவாகிய செல்வன் -பெரிய திருமொழி -7-7-1-
திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –திருவாயமொழி -10-6-9–என்று அவனுக்கு நிரூபகம் ஆகையால்
த்யு மணியையும் மாணிக்கத்தையும் பூவையும் விடாத ப்ரபையும் ஒளியும் மணமும் போலே
மணியை யணி யுருவில் -பெரிய திருமொழி-8-9-2–திருமாலை –பெரிய திருமொழி-5-6-7-என்னும் படியே
தன்னோடும் பிரிவில்லாத திரு மகள் -பெரிய திருமொழி-4-5-5-ஆகையால்
ஊழி ஊழி தலையளிக்கும் திருமால் -திருவாயமொழி-10-7-6–என்னும் படி ரக்ஷண தர்மத்துக்கு இவள் தர்ம பத்னி யாகையாலும்
திருமாலே நானும் உனக்கு –திருப்பல்லாண்டு -11-
திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட -பெரிய திருமொழி-6-3-9- -என்னும் ஆத்மாவுக்கு மிதுன சேஷத்வம் ஸ்வரூபம் ஆகையால்
ஸ்வரூப ரூப விபவங்களைப் போலே ப்ரக்ருதி ப்ரத்யய தாதுக்களையும் விடாமையாலே இதிலே ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்திக்கப்படும்

—————————————————-

இவ்வக்ஷர த்ரயத்துக்கும் அடைவே அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி பிரமம் அகரார்த்தத்தை
அருளிச் செய்கிறார் -ஓர் எழுத்து என்று தொடங்கி –
அக்ஷராணாம் அகாரோஸ்மி-என்றத்தையும் பற்ற அக்ஷரங்களில் அகாரம் நான் -இத்யாதி –
இவ்வாகாரத்தில் பிரக்ருத் யர்த்தமான காரணத்வமும் -தாதவர்த்தமான ரக்ஷகத்வமும் இறே சொல்லப் படுகிறது –
இதனை அருளிச் செய்கிறார் -இது அவ ரக்ஷணே -என்று தொடங்கி –
இந்த ரக்ஷகத்வம் அவச்சேதகம் இல்லாமையால் -அநுபாதிக நிர்தேச ஹி அசங்ககோசோ மநீஷீணாம் கத்யதே -என்கிற நியாயத்தாலே சர்வ விஷயம் –
இது தன்னை அருளிச் செய்கிறார் -தேச கால -என்று தொடங்கி –
ரஷா பிரகாரங்கள் விஷயங்கள் தோறும் பிரமாணங்கள் காட்டின படியில் விசித்ரங்களாய் இருக்கும்
இது தன்னை அருளிச் செய்கிறார் -அருளால்-என்று தொடங்கி –
எழுவார் -ஐஸ்வர்யார்த்திகள்
விடை கொள்வார் -கைவல்யார்த்திகள்
வழுவா வகை நினைந்து இருப்பார் -பகவத் சரணார்த்திகள்
சேர்ந்தார் -முக்தர்
பிரிந்து கூடாதார் -நித்ய ஸூ ரிகள்
இங்கே இவை இரண்டும் சேதனர் நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும் -முமுஷுப்படி -37-என்ற உலகாரியன் திரு வாக்கு அனுசந்தேயம் –

இனி இப்பதத்தில் அர்த்த பலத்தால் அனுசந்திக்கப்படும் ஸ்ரீயபதித்வத்தை அருளிச் செய்கிறார் -திருவுக்கும் -என்று தொடங்கி –
அநன்யாஹி மயா ஸீதா பாஸ்கரேண பிரபாயதா-என்றும் அநன்யா ராகவேணாகம் பாஸ்கரேண பிரபாயதா -என்றும்
இருவர் வாக்காலும் இருவரும் இருவருக்கும் ப்ருதக் ஸ்திதி இல்லை என்னும் இடம் சித்தம்
பிராட்டிக்கு உண்டான அந்நயத்வம் உபய சம்மதம் இறே-இந்த அப்ருதக் சித்தியை த்ருஷ்டாந்த த்ரயத்தாலே நிரூபிக்கிறார் த்யுமணி என்று தொடங்கி –
பாஸ்கரேண பிரபாயதா -என்கிற ஸ்ரீ ராமாயண வசங்களை அடியொற்றி த்யுமணி த்ருஷ்டாந்தம் –
ப்ரஸூ நம் புஷ்யந்தீம் –ஸ்வயா தீப்தயா ரத்னம் -என்ற பட்டர் திரு வாக்கை அடியொற்றி மாணிக்க புஷ்ப்ப த்ருஷ்டாந்தம் —
இத்தால் பிராட்டிக்கு பகவத் ஸ்வரூப நிரூபகத்வமும் -பகவத் அப்ருதக் சித்தியும் -பகவத் பத் நீத்தவமும் -சேஷத்வ பிரதி சம்பந்தித்தவமும் ப்ரகடிதம்-
பிராட்டியினுடைய ப்ரமேய த்ரய சம்பந்தம் போலே உள்ள பிராமண த்ரய சம்பந்தத்தை அருளிச் செய்கிறார் -ஸ்வரூப என்று தொடங்கி –
இருவரையும் பிரித்து விரும்பினால் ராவண ஸூர்ப்பணகைகளைப் போலே அநர்த்தமே பலிக்கும் இத்தனை-
இருவரையும் பற்றினால் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே வாழல் ஆவது -ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு
ஸ்ரீ ரெங்க விமான லாபத்துக்கு மேல்பட வாழ்ச்சி இல்லை இறே

—————————————————————————————————-

லுப்த சதுர்த்த்யர்த்தம்
இதில் ஏறிக் கழிந்த சதுர்த்தி -ரக்ஷிக்கப் படுகிற வஸ்துக்கள் அடைய அவனுக்கு சேஷம் என்று
கண்ட வாற்றால் தனதே யுலகு -திருவாய் -4-5-10-என்னும்படி ரஷிக்கைக்கு அடியான உறவை அறிவிக்கிறது
-ரக்ஷிக்கிறவன் ஸ்வாமியாய் ரக்ஷிக்கப் படுகிறவர்கள் தாச பூதராய் இருக்கை இறே
இரண்டு தலைக்கும் நிலை நின்ற ஸ்வரூபம் –
அடியேன் என்று இசையாதவனை ஆத்மாவை இல்லை செய்த கள்ளனாக விறே -திருவாய் -8-8-2-சொல்லுவது

——————————————-

இனி மேல் இதில் விபக்தி தன்னை நீர்த்தேசித்து விபக்த்யார்த்தம் அருளிச் செய்கிறார் –இதில் ஏறிக் கழிந்த சதுர்த்தி -இத்யாதியால் –
இவ்விடத்தில் சதுர்த்தீ விபக்தி கொள்ள பிராப்தம் -பிரதம த்ருதீய அக்ஷரங்களை சாமாநாதி கரணங்களாகக் கொண்டு
ஜீவ பரமாத்மாக்கள் உடைய ஸ்வரூப ஐக்யம் இங்கே சொல்லப் படுகிறது என்னும் குத்ருஷ்ட்டி பக்ஷத்துக்கு பஹு பிராமண விரோதமும்
சமபி வ்யாஹ்ருத நமஸ் சப்த நாராயண சப்த வ்யக்த சதுர்த்தியில் உடைய ஸ்வ ரஸார்த்த விரோதமும் வரும் –
அதாவது –சதுர்த்த்யந்தம் ஆகாதே ப்ரதமாந்தமாய்-தத்வமஸி போலே ஆத்ம பரமாத்மாக்களுடைய ஐக்ய பரமாகிறது -என்னும்
சதுர்த்யந்தமான நாராயணாயா என்னும் விவரணத்தோடே விரோதிக்கும் –
அதுக்கு மேலே நாராயண பதத்தில் சொல்லுகிற சரீராத்ம பாவத்தோடும் விரோதிக்கும் –
அஹமபி நமம பகவத ஏவ அஹமஸ்மி -என்று ஸ்வ ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தி பூர்வகமாக பகவத ஏக பாரதந்தர்யத்தை சொல்லுகிற
நமஸ் சப்தத்தோடு விரோதிக்கும் –
பதிம் விஸ்வஸ்ய –
ஜ்ஞாஜ்ஞவ் த்வ் அஜவ் ஈஸநீசவ்-
ஷராத்மாநவ் ஈசதே தேவ ஏக –
யஸ் யாஸ்மி –
பரவா நஸ்மி –
தாஸ பூதா ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மான
பரமாத்மனா
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம்
தாஸோஹம் வா ஸூ தேவஸ்ய
உத்தம புருஷஸ் த்வந்ய-என்று
ஈஸ்வரனுடைய சேஷித்வத்தையும் சேதனனுடைய சேஷத்வத்தையும் சொல்லுகிற ஸ்ருதி ஸ்ம்ருதிகளோடே விரோதிக்கும்
ஆக அகார விவரணமான நாராயண பதம் சதுர்த்யந்தம் ஆகையால் சங்க்ரஹமான இதுவும் சதுர்த்த்யந்தம் ஆகவேண்டும் என்றபடி
விபக்த்யர்த்த்தை அருளிச் செய்கிறார் -உறவை -என்று –
ஸ்வ விஷயக பகவத் சேஷத்வ ஞானம் இல்லாத போது ஆத்ம அபஹார ரூபமான ஸ்வாதந்தர்ய புத்தி நடக்கையாலே
ஸ்வரூபம் அழிந்து விடும் என்று அருளிச் செய்கிறார் -அடியேன் -என்று தொடங்கி –
ஆக –
ப்ரக்ருத்யர்த்தமான ஈஸ்வரனுடைய காரணத்வமும்
தாத்வர்த்தமான ரக்ஷகத்வமும்
அர்த்த பலத்தால் வந்த ஸ்ரீ யபதித்வமும்
ப்ரத்யய ஸித்தமான சேதன சேஷத்வ பிரதி சம்பந்தியான சேஷித்வமும்
ஆகிற அகாரார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

——————————————————————————————-

உகாரார்த்தம்-
உகாரம் -அறுதிப்பாட்டைக் காட்டுகையாலே
எம்பெருமானுக்கே சேஷம் என்று பிறர்க்கான நிலையைக் கழிக்கிறது
ஒருவனுக்கு அடிமையான க்ருஹ க்ஷேத்ரம் முதலானவை பிறர்க்கு ஆக்கலாம் படி வந்தேறியாய் நிலை நில்லாதே
கழிக்கிறாப்போல அன்று இறே ஆத்மாவினுடைய சேஷத்வம்
சாயை போலே -பெரியாழ்வார் -5-4-11–நிழலும் அடி தாறும்–பெரிய திருவந்தாதி -31-என்னும் படி
நிழல் போல்வனரான –திருவிருத்தம் -2- -நாய்ச்சிமார் உடைய சேஷத்வம் போலே அநந்யார்ஹமமுமாய் இருக்கும்
பிறர்க்கு அடைந்து தொண்டு படுகை -பெரிய திருமொழி -2-5-2-ஆத்ம நாசமாய் –
புறம் தொழாது ஒழிகை -நான்முகன் திருவந்தாதி -68–தேட்டம் ஆகையால்
மாற்றாரானும் அல்லேனே-சிறிய திருமடல்-61–என்று தேறும் படி -அவன் முகத்தன்றி விழியின் -நாச்சியார் திரு -12-4–என்று இருக்கையாயிற்று ஸ்வரூபம்
என்னை முற்றும் உயிர் உண்டு என்னும் படி-திருவாய்மொழி-10-7-3- எம்பெருமானுக்கு வாய் புகு சோறான ஆத்மாவை பிறர்க்கு ஆக்குகையாவது
மறையவர் வேள்வியில் புரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே -நாச்சியார் திரு -1-5- -இருப்பது ஒன்று இறே

—————————————-

அநந்தரம் மத்யம அக்ஷரமான-உகாரத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -உகாரம் -என்று தொடங்கி –
அதாவது -அவதாரண வாசகமான -இவ்வுகாரத்தில் கீழ் ஈஸ்வர சேஷமாக சொன்ன இவ்வாத்ம வஸ்து
அந்நியருக்கு சேஷம் அன்று என்னும் இடத்தைச் சொல்லுகிறது -என்கை –
சதுர்த்தியாலே ஈஸ்வர சேஷத்வம் ப்ரதிபாதிதமாகச் செய்தே-அந்நிய சேஷத்வம் பிரஸ் துதம் ஆமோ என்னில்
லோகத்தில் ஒருவனுக்கு சேஷமான க்ருஹ க்ஷேத்ர புத்ர தாஸாதிகள் வேறேயும் சிலருக்கு சேஷமாய் இருக்கக் காண்கையாலே
அப்படிப்பட்ட அந்நிய சேஷத்வம் இந்த ஸ்தலத்திலும் உண்டோ என்ற ஒரு சங்கை உதிக்கும் இறே-
ஆகையால் தாத்ருசமான அந்நிய சேஷத்வம் இங்கு இல்லை என்னும் இடத்தை பிரதிபாதிக்கிறது உகாரம் –
வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி-இத்யாதியை
உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -மறையவர் -என்று தொடங்கி
அதாவது -ஆராத்யரான இந்திராதி தேவர்களுக்கு போக்யதா சேஷமாக கல்பிதமான புரோடாசத்தை தர்சன் ஸ்பர்ச நாதிகளுக்கு
அநர்ஹமாம் படி நிஹீனமாய் இருக்கிற நாய்க்கு இடுமா போலே இருபத்தொன்று –
பிராப்த சேஷியான ஈஸ்வரனுக்கு சேஷமான ஆத்ம வஸ்துவை சர்வ பிரகாரத்தாலும் ஹேயரான சம்சாரிகளுக்கு சேஷமாக்குகை -என்கை –
ஈஸ்வரனுக்கு இவ்வாத்ம வாஸ்து சேஷமாய் இருக்கும் இடத்தில் ஷேத்ராதிகளைப் போலே அன்றியிலே கிரய விக்ரய அநர்ஹமாய் இருக்கும் –
புத்ராதிகளைப் போலே சர்வ சாதாரணம் அன்றியிலே அநந்ய சாதாரணமாய் இருக்கும் –
பார்யையைப் போலே ஓவ்பாதி சம்பந்தம் அன்றியிலே ஸ்வ பாவிக்க சம்பந்தத்தை உடைத்தாய் இருக்கும் –
தேகத்தோபாதி பிறர்க்கு ஆக்கலாய் இருக்கை அன்றியிலே ஒழிக்க ஒழியாத சம்பந்தத்தை யுடைத்தாய் இருக்கும் –
குணங்கள் போல் அன்றியிலே குணியாய் அநந்யார்ஹ சேஷமாய் இருக்கும் –
க்ருஹ ஷேத்ராதிகள் ப்ருதக் ஸ்திதி யோக்யமான த்ரவ்யம் ஆகையால் க்ரய விக்ரயாதி களாலே அநந்யார்ஹம் ஆகைக்கு யோக்யதை உண்டு
இங்கு ப்ருதக் ஸ்தித்ய யோக்ய த்ரவ்யம் ஆகையால் அநந்யார்ஹம் ஆகைக்கு யோக்யதை இல்லை –
ஆக
அகாரத்திலும் சதுர்த்தியிலும் உகாரத்திலும்
ஈஸ்வரனுடைய ரக்ஷகத்வமும் -சேதனனுடைய ரஷ்யத்வமும்
ஈஸ்வரனுடைய சேஷித்வமும் சேதனனுடைய சேஷத்வமும்
சேஷத்வத்தினுடைய அநந்யார்ஹதையும் சொல்லிற்று ஆயிற்று
ஆக
உகார அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

———————————————————————————————————-

மகாரார்த்தம்
மகாரம் ககாரம் -முதலான இருபத்து நாலு எழுத்தும் –
பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமும் -பெரிய திருமொழி -1-8-7-
துன்னு கர சரணம் முதலாக வெல்லா வுதுப்பும்-திருவாயமொழி -7-8-9-
செவி வாய் கண் மூக்கு உடல் -முதல் திருவந்தாதி -12
உன்னு சுவை யொளி யூரு ஒலி நாற்றம் –திருவாய் -7-8-9-என்றும்
பிரகிருதி மானாங்கார மனங்கள் –திருவாய் -10-7-10-என்றும்
என்கிற இருபத்து நான்கு தத்துவத்தையும் காட்டி தான் இருபத்து ஐந்தாவரான ஆத்மாவைக் காட்டாக கடவதாகையாலும்
மன ஜஃநானே என்கிற தாது ஞானத்துக்கு இருப்பிடமான ஆத்மாவைக் காட்டுகையாலும்
சென்று சென்று பரம்பரமாய் -திருவாய் -8-8-5- என்னும்படி
முன்னுருவில் பின்னுருவாய் விஞ்ஞானம் -திரு நெடும் -1- என்னும்படி அறிவால் மிக்கு
ஞானம் மாத்திரம் அன்றிக்கே-உணர்ந்து உணர்ந்து -திருவாய் -1- 3-6- என்னும்படி நிலை நின்ற ஞாதாவாய்
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகி தித்தித்து 8-8-4- என்னும் படி ஆனந்த ரூபமான ஆத்மவஸ்துவைப்
பிறர்க்கு உரித்து அல்லாத படி சேஷமாகச் சொல்லப் பட்டது என்கிறது –
கண்கள் சிவத்தில் 8-8-படியே ஞான ஆனந்தாதிகளுக்கு முன்னே சேஷத்வம் சொல்லிற்று –
மணத்தையும் ஒளியையும் கொண்டு விரும்பப்படும் பூவும் மாணிக்கமும் போலே
அவனுக்கான போது விரும்பப் பட்டு பிறர்க்கான போது -ஏறாளும் இறையோனில்- 4-8-படியே கைவிடப்படும் ஆத்மா வென்று தோற்றுகைக்காக-
அடியோம் என்று எழுத்துப் பட்ட அன்று — திருப்பல்லாண்டு -10-சேஷத்வம் எல்லார்க்கும் பொதுவாகையாலே
-ஆத்மாக்கள் திரளையும்-என்னுடைமையையும் –பெரியாழ்வார் -5-4-1-என்னும் படி ஆத்மாவுக்கு சேஷமான அசித்தையும் இம்மகாரம் தான் காட்டக் கடவது

—————————–

அநந்தரம் த்ருதீய அக்ஷரமான மகாரத்தின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் -மகாரம் -என்று தொடங்கி –
காகராதி மகாராந்தமான அக்ஷரங்களில் மகாரம் இருபத்தஞ்சாம் அக்ஷரம் ஆகையால் தத்துவங்களில் இருபத்தைந்தாம்
தத்துவமான ஆத்மாவைக் காட்டும் –
முதல் இருபத்து நாலு அக்ஷரங்களும் இருபத்து நாலு அசேதன தத்துவங்களைக் காட்டும் -இவ்விடத்தில்
பூதாநி ச க வர்க்கேண ச வர்க்கேண இந்திரியாணி ச – ட வர்க்கேண த வர்க்கேண ஜ்ஞான கந்தாத யஸ் ததா-
மன பகா ரே ணை வோக்தம் பகாரேண த்வஹன்ருதி-பகாரேண பகாரேண மஹான் ப்ரக்ருதி ருச்யதே
-ஆத்மா து ச மகாரேண பஞ்ச விம்ச ப்ரகீர்த்தித-என்கிற பாத்திமா உத்தர புராண வசனம் அனுசந்தேயாம்
ஜீவாத்மாக்களுடைய ஸ்வரூபமான ஞாத்ருத்வ சேஷத்வங்களிலே சேஷத்வமே பிரதானம் –
ஆகை இறே ஆழ்வார் ஆத்ம ஸ்வரூபத்தை அடியேன் -8-8-2- என்று நிர்த்தேசித்தார்
இங்கே அஹம் ப்ரத்யய வேத் யதவாத் மந்த்ரே பிரதம மீரணாத் பாஷ்ய காரஸ்ய வஸனாத்-இத்யாதி பூர்வர்கள் வசனம் அனுசந்தேயாம்
ஜீவாத்மா ஸ்வரூப பரமான நான்கு திருவாய்மொழிகளில் ஒன்றான ஏறாளும் இறையோனில் ஆழ்வார்
ஏறு திருவுடையை ஈசன் உகப்புக்குவேறுபடில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா -திருவாயமொழி நூற்றந்தாதி -38-என்று அருளிச் செய்கிறார் –
சேஷத்வ பஹிர்ப்பூதம் அஸஹ்யம் -என்று இறே எதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவன் ஸ்தோத்ர ரத்ன நிஷ்கர்ஷம்-
இவற்றை அருளிச் செய்கிறார் -கண்கள் சிவத்தில் படியே -என்று தொடங்கி –
சேஷத்வம் சர்வ ஆத்ம சாதாரணம் ஆகையால் மகாரம் ஆத்ம சாமான்ய பரம் என்கிறார் அடியோம் என்று தொடங்கி –
தத் உபகரணம் வைஷ்ணவ மிதம் -அஷ்ட ஸ்லோகீ-1-என்ற ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூ க்தியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார்
-அசித்தையும் காட்டக் கடவது -என்று -அதாவது பிரதானரான சேதனரைச் சொன்ன போதே அவர்களுக்கு
போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண சேஷமான அசித் வர்க்கமும் பகவத் சேஷத்தயா இப்பதத்தில் அனுசந்தேயம் என்றபடி –
சேதனத்வாரா அசித்தை உபலஷிக்கும் படி சேதன வாசியான பாதத்தை எடுக்கிறது
-அந்த அசித்தில் காட்டிலும் சேதனனுடைய ப்ராதான்யம் தோற்றுகைக்காக –
ஆக
பத த்ரயாத்மகமான ப்ரணவத்தில்-பிரதம சரம பதங்கள் சம்பந்தி த்வய விசேஷத்தைச் சொல்லிற்று –
மத்யம பதம் அவற்றினுடைய சம்பந்த விசேஷத்தைச் சொல்லிற்று

———————————————————————————-

நமஸ் சப்தார்த்தம்
சர்வ ரக்ஷகனான ஸ்ரீ யபதிக்கு அநந்யார்ஹ சேஷமாகையாகிற நிலை நின்ற உறவை ஆத்மாவை அறிய ஒட்டாத விரோதியை நம என்று கழிக்கிறது –
நமஸ் ஸூ -ந என்றும் ம என்றும் இரண்டு பதமாய் இருக்கும் –
ம என்ற எனக்கு என்ற இத்தை ந என்று கழித்து -வீடுமின் முற்றத்திலே -1-2-போலே கழித்துக் கொண்டு கழிக்கப் படுமத்தைக் காட்டுகிறது –
அவன் உடையனாய் தான் உடைமை யானமை நிலை நிற்பது -தனக்குத்தான் கடவனாகவும் தன்னது அல்லாத ஆத்மாத்மீயங்களை
என்னது என்றும் நினைக்கிற அஹங்கார மமகாரங்களை வேர் முதல் மாய்த்தாலாகையாலே-1-2-3-
உகாரத்திலே கழியுண்ட பிறரிலே சொருகின தன்னை நம என்று வெளியாகத் கழிகிறது –
சம்சாரத்துக்கு விதையாய் காட்டுத் தீயும் மிருத்யுவும் போலே ஸ்வரூபத்தைச் சுட்டு உருவு அழிக்கிற நான் -எனது –
என்கிறவை கழிந்தால் இறே ஸ்வரூப சித்தி உள்ளது
தனக்கும் பிறர்க்கும் அல்லன் ஆனால் அவனுக்கும் அவனுடையார்க்குமாக வேண்டுகையாலே பகவத் சேஷத்வம்
பிராட்டி அளவும் சென்றால் போலே மிதுன சேஷத்வமும் -திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் அளவும் ஓடி -6-9-11-
மெய்யடியார்கள் தம் –பெருமாள் திருமொழி –2-10–எல்லையில் அடிமையையும் இது காட்டக் கடவது –
ஒருவன் தனக்கு என்று எழுதிக் கொண்ட அடிமையும் காணியும்
பார்யா புத்ராதிகளுக்கும் விற்று விலை செல்லும் படி யாக்கினால்
அவனுக்கு நிலை நின்றதாமா போலே அற விலை செய்த -திருவாய் -8-1-10- அடிமை அறக் கொண்ட
ஆத்ம ஆத்மீயங்களை எம் தம்மை விற்கவும் பெறுவார்கள் -பெரியாழ்வார் -4-4-10-
இது எல்லாம் உனதேயாக -திரு நெடும் தாண்டகம் -27- என்னும் படி அடியார்க்கு ஆட்படுத்தால் –திருப்பள்ளி எழுச்சி -10- இறே
அவன் நிலையாளாக உகந்தானாவது -பெரிய திருமொழி -3-6-9-
எல்லாரும் தாஸ பூந்தராய் இருக்க -அவர்கட்க்கு அங்கு அருள் இல்லா -பெரிய திருமொழி -5-6-8–என்னும் படி
சிலரை த்விஷுத்துக்கள் என்று அழல விழித்து -பெரியாழ்வார்-1-8-5-
சிலர் பக்கலிலே-என்றும் அருள் நடந்து –என் தமர் -பெரிய திருமொழி-3-10-1–என்னடியார் -பெரிய திருமொழி-10-6-5–பெரியாழ்வார்-4-9-2-
என்னுடைய பிராணங்கள்-என்னுடைய ஆத்மா -இரண்டாம் அந்தராத்மா -என்று அவன் விரும்புகையாலே
-அவனை உள்ளத்தே –பெரிய திருமொழி-11-6-7–எண்ணாதே இருப்பாரோடும் –பெரிய திருமொழி-12-6-1-
-உறவு அறவும் எண்ணும் நெஞ்சு உடையார்க்கு – பெரிய திருமொழி– 2-6-2-
அடிமைப் படுகையும் ஸ்வரூபம் என்னும் இடத்தை உகாரமும் நமஸ்ஸூம் அறிவிக்கிறது என்று இறே
திரு எட்டு எழுத்தும் கற்ற ஆழ்வார் மற்று மோர் தெய்வம் உள்ளது என்று இருப்பாரோடு உற்றிலேன்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -பெரிய திருமொழி-8-10-3- என்றது
ஆத்மாவினுடைய சேஷத்வம் இவ்வளவும் சென்று நிலை நின்றால் போலே அவனுடைய ரக்ஷகத்வமும் நிலை நிற்பது
ஸ்வ ரக்ஷணத்தில் தான் அந்வயியாது ஒழிந்தால் ஆகையால்
இந்த ச்வாதந்தர்யத்தை அறுத்து அவனே உபாயம் என்னும் இடத்தையும் வெளியிடுகிறது நமஸ்ஸூ-
நடுவே கிடந்து ஸ்வரூபத்துக்கும் உபாயத்துக்கும் பிராப்யத்துக்கும் களை அறுத்து
-நல் வகையால் -திருப்பல்லாண்டு -11-
வேங்கடத்து உறைவார்க்கு -திருவாய் -3-3-6-
மேலைத் தொண்டு களித்து -திருவாய் -10-3-7-
என்று ஸ்வரூபமும் உபாயமும் ப்ராப்யமும் தானாய்
உற்று எண்ணில் ஆத்ம சமர்ப்பணத்துக்கும் தான் உரியன -திருவாய் -7-9-10-
அல்லாத பாரதந்தர்யத்தின் மிகுதியை
எனதாவியும் உனதே -திருவாய் -5-7-10-
என்னுடைமையும் நீயே –திருவாய் -2-9-9–என்கிறபடியே காட்டி
ஸ்வரூபத்தையோட வைக்கையாலே இத்தை ஆந்தராளிக வைஷ்ணவ பதம் என்று பூர்வாச்சார்யர்கள் விரும்புவார்கள்

————————————————————

இனி திருமந்திரத்தில் மத்யம பதமான நமஸ்ஸூக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -சர்வ என்று தொடங்கி –
அதில் அவாந்தர பத பேதத்தை அருளிச் செய்கிறார் -நமஸ் ஸூ என்று தொடங்கி –
வீடுமின் முற்றவும் -என்னுமா போலே -நம-என்று நிஷேத பூர்வகமாக நிஷேத்யத்தைச் சொல்லுகிறது –
இதில் மகாரம் -மன ஞானே-என்கிற தாதுவிலே -ஷஷ்ட்யந்தமாய் -எனக்கு நான் உரியேன் -என்கிறது
-நகாரம் இதை நிஷேதித்து -யானே நீ என்னுடைமையும் நீயே -என்கிறபடியே –
தன்னுடைய மமதா நிவ்ருத்தியையும் -மமதைக்கு ஊற்றான அகங்கார நிவ்ருத்தியையும் அனுசந்திக்கிறது –
கீழே சதுர்த்தியில் சொல்லுகிற பாரதந்தர்யத்தாலே ஸ்வதந்தர்யம் கழி உண்டு இருக்க -இங்கு நிவ்ருத்தம் ஆகிற
அஹங்காரம் மமகாராம் ஆகிறது என் என்னில்-
அங்கு பகவத் பாரதந்தர்ய விரோதியான ஸ்வ ஸ்வா தந்தர்யத்தை கழிக்கிறது –
இங்கு ஸ்வ ரக்ஷணத்தில் தான் இழிகை இறே அதுக்கு விரோதியாய் அறுவது –
அதாகிறது -ஸ்வ ரக்ஷணமாக சாதன அனுஷ்டானம் பண்ணுகை -அது ஸ்வரூப ஹாநியாய் இ றே இருப்பது –
பார்த்தாவுக்கு சேஷமான சரீரத்தை அவகாதாதி வியாபாரங்களாலே பதிவிரதை ரஷிக்கை யாகிறது
-பார்த்தாவுக்கு ஸ்வரூப ஹானியாய்-தனக்கும் ஸ்வரூப ஹானியாய் இறே இருப்பது –
ஆகையால் நவ த்வார புரமான லங்கா புரத்திலே நிருத்தையான பிராட்டி -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று
சக்கரவர்த்தி திருமகன் பாக்களில் ந்யஸ்த பரையாய் இருந்தால் போலே இருக்கை இவனுக்கு ஸ்வரூபம் –
ஆக இத்தால் ஸ்வ ரக்ஷணத்தில் இழிகை ஸ்வரூப ஹாநியாம் படி ஈஸ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரம் இந்த ஆத்மவஸ்து என்றதாயிற்று –
ஸ்வ ரக்ஷண ஷமனான பர்த்தா இருக்க -ஸ்வ ரக்ஷணத்தில் நின்றும் பதிவிரதை கை வாங்கினால் பர்த்தாவே ரக்ஷகனாய் அறுமோ பாதி
இவனும் அத்யந்த பரதந்த்ரனாய் அற்றால் ஈஸ்வரனே இ றே ரக்ஷகனாய் அறுவான்-
ஆகையால் ஈஸ்வரனுடைய உபாய பாவமும் ஆர்த்தமாகச் சொல்லிற்று ஆயிற்று –
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று திரு மங்கை ஆழ்வார் அனுசந்தித்து
அருளிச் செய்கிறார் -தனக்கும் பிறர்க்கும் -என்று தொடங்கி –
ஈஸ்வரனுக்கு இவன் அத்யந்த பரதந்த்ரனாவது -அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆகில் இறே –
அவனுக்கு இஷ்டர் ஆகிறார் -ஞானி த்வாதமைவ -என்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் இறே –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகிறார் -ஜங்கம ஸ்ரீ விமா நானி-என்கிறபடியே -ஈஸ்வரனுக்கு திவ்ய மங்கள விக்ரஹத்தோபாதி
சரீர பூதராய் அறுகையாலே-பர்த்ரு சரீரத்தில் மேல் விழுகிற ஸ்த்ரீக்கு பாதிவ்ரத்ய பங்கம் இல்லாதவோபாதி
அநந்யார்ஹ சேஷத்வத்துக்கு பங்கம் வாராது –
அநந்யார்ஹ சேஷத்வத்தினுடைய அப்ரசுயுத்திக்கு சரீரத்வம் ப்ரயோஜகம் ஆகில் -சேதன அசேதன விபாகம் அற-
சர்வமும் சரீரமாய் அன்றோ இருப்பது –
ஆனால் சரவர்க்கும் சேஷ பூதனாக வேண்டி வந்ததீ என்னில் -அவனுக்கு பிரசாத பாத்ரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
சேஷமாய் இருக்கும் இருப்பு சரீரத்வ சாமான்யத்தாலே வியபிசரியாது-
பார்த்தாவோடு பார்யைக்கு அவ்யவதா நேநா சம்பந்தம் உண்டாகா நிற்கச் செய் தேயும் -ஆர்த்த வாதி தோஷ தூஷிதை யானவன்று –
பார்த்தாவோடு ப்ரஜைகளோடு வாசி அற எல்லார்க்கும் அஸ்புருசையாய்-குளித்தவாறே ஸம்ஸ்லேஷிக்க லாம்படி இருக்கிறாய்ப்போலே
அகங்கார மாமகராதி கள் உண்டான வென்று த்யாஜ்யமாய் -அவை போனவன்று இவை தானே உபேதாயமாகக் கடவது –
ஆக பிரயோஜகமாய் அற்றது -ஈஸ்வரனுக்கு பிரசாத பாத்ரமான சரீரம் உத்தேச்யமாகக் கடவது –
நிக்ரஹ பாத்ரமான சரீரம் த்யாஜ்யமாகக் கடவது -இத்தை அருளிச் செய்கிறார் -எல்லாரும் -என்று தொடங்கி –
நமஸ் சப்தத்தால் ஸ்வரூபம் சொல்லப் பட்டால் போலே உபாயமும் சொல்லப்படுகிறது -இது தன்னை அருளிச் செய்கிறார்
-ஆத்மாவினுடைய என்று தொடங்கி –
கச்சத்வம் ஏனம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா-என்று சரணம் புகுறுங்கோள் -என்று உபதேசிக்க
-திரௌபதியா சஹிதா சர்வே நமஸ் சக்ரு ஜனார்த்தனம் -என்று அனுஷ்டான வேளையிலே நமஸ்காரத்தை பண்ணினார்கள் -என்கிற
ஸ்தான பிரமாணத்தாலே நமஸ் சப்தம் சாப்தமாகவே உபாய வாசகமாகக் கடவது -இத்தை அருளிச் செய்கிறார் -சரணம் என்று தொடங்கி-
ஆக பிரணவத்தாலும் -நமஸ் -சப்தத்தாலும் -ஸ்வரூபமும் ஸ்வரூப அனு ரூபமான உபாயமும் சொல்லிற்று ஆயிற்று –
மந்த்ர ப்ரஹ்மணி-என்கிற பட்டர் ஸ்ரீ ஸூ க்தியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் -நடுவே கிடந்தது -என்று தொடங்கி –
காகாஷி நியாயத்தாலே நமஸ் ஸூ கீழும் மேலும் -ஸ்வ ஸ்தானத்திலும் அன்வயித்து ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை
சிக்ஷிக்கிறது என்று இறே பட்டர் அருளிச் செய்தது –
இத்தால் பிரதம பதத்தில் சொன்ன ஸ்வரூபத்துக்கு விரோதியும் -நம பதத்தில் அர்த்தமாக சித்திக்கிற உபாயத்துக்கு விரோதியும்
-உத்தர பதத்தில் சொல்லுகிற ப்ராப்யத்துக்கு விரோதியும் கழிக்கக் கடவதாய் இறே இருப்பது என்றபடி –
ஆத்மாத்மீயங்கள் இரண்டும் ப்ரகாரத்தயா சேஷம் -என்றும் -துக்கத்தை போக்குவாய் போக்காது ஒழிவாய் –
வேறு ஒரு ரக்ஷக வஸ்துவை உடையேன் அல்லேன் என்றும் -உன் உகப்புக்கு புறம்பான எங்களுடைய ஆசையைப் -போக்கு என்றும்
நமஸ் சப்தத்தாலே சொல்லிற்று ஆயிற்று என்றபடி -ஸ்வரூப உபாய புருஷார்த்தக்ங்கள் மூன்றுக்கும்
விரோதி அகங்கார மமகாரங்கள் ஆகையால் தன்நிவ்ருத்தி யைச் சொல்லுகிறது -நமஸ் சப்தம் என்றதாயிற்று –

———————————————————————————————————-

நாராயண பதார்த்தம் –
நாராயண பதம் -தன்னை அடியானாக உணர்ந்தவன் -சேஷி பக்கல் அடிமையை இரக்கும் படியைச் சொல்லுகிறது –
நாராயணன் என்றது அகாரத்தில் சொன்ன சேஷியை வெளியிடுகிறது –
நர /நார/ நாரா -என்றும் அழியாத சேஷ வஸ்துக்களின் உடைய திரளைக் காட்டுகிறது –
நரன் என்று சொல்லப்படுகிறவன் பக்கல் நின்றும் பிறந்தவற்றையும்
-தத்துவங்களில் முற்பட்ட பிரதானமான அப்புக்களையும் நாரங்கள்-என்னக் கடவது –
என்றும் உண்டாய் -ஒருபடிப்பட்டு ஆவது அழிவதாக நிற்க -ஸ்வரூப நாசம் இன்றிக்கே இருக்கிற
இரண்டு விபூதியில் உள்ளவற்றை எல்லாம் சொன்னபடி
-உணர் முழு நலம் -1-1-2–என்கிற ஞான ஆனந்தாதிகளும்
மழுங்காத -3-1-9-என்றும் -உயர்வற உயரும் -2-7-11-என்கிற ஞான சக்தியாதிகளும் —
ஆசறு சீலாதிகளும் -5-3-1-இவற்றை வெளியிடுகிற மணியுருவில் பூதம் ஐந்தான -திரு நெடும் தாண்டகம் -1-
-நீலச் சுடர் விடு மேனியும் -திரு விருத்தம் -14-
வெறி கொள் சோதி -6-9-8–மலர் புரையும் -திரு நெடும் தாண்டகம் -5-என்கிற ஸுகந்த்ய ஸுகுமார்யாதிகளும் –
முகச் சோதி மலர்ந்ததுவோ -3-1-1-என்னும் படியாய் இருக்கிற -சென்னி நீண் முடி யாதியாய பூஷணங்களும் -5-5-9-
அந்தாம வாள் முடி சங்காழி நூலாரம் -2-5-1–என்கிற ஆபரணங்களோடு ஒரு கோவையான ஆயுதங்களும் –
பார்மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இருபால் -பெரிய திரு-2-10-9-என்னும்படி ஆழ்வார்கள் உடன் ஓக்க அனுபவிக்கிற நாய்ச்சிமார்களும்
திருமகள் பூமி -8-1-1–என்கிற சேர்த்தியிலே -ஏவிற்றுச் செய்கிற நித்ய ஸூ ரிகளும் -பெரியாழ்வார் -4-2-6-
அடியாரோடு இருந்தமை -10-9-11–என்னும்படி இவர்களோடு சாம்யம் பெற்ற முக்தரும் –
சென்றால் குடையாம்–முதல் திரு -53- –என்று அவர்கள் உபகரண ரூபமாக கொண்ட சத்ர சாமராதிகளும்
தேவர் குழாத்துக்கு இருப்பிடமான திரு மா மணி மண்டபமும் –5-5-10-அதைச் சூழ்ந்த கொடியணி நெடு மதிள்கோபுரமும்-10-9-8-
-அதில் வாசலில் வானவரும் -10-9-5–வைகுந்த மா நகரும்-4-10-11-கோயில் கொள் தெய்வங்களின் உடைய திவ்ய விமானங்களும் -8-6-5-
மாட மாளிகை நாச்சியார் -4-5–என்னும் படி -நல் வேதியர் பதிகளை -10-9-10- சூழ்ந்த ஆராமங்களும் -சிறிய திருமடல் –
-அந்த பூவியல் பொழிலை 6-7-5-வளர்க்கிற ஓத நெடும் தடங்களும்–5-9-7-
அவற்றுக்கு அடியானை விரஜையும்-வைகுந்த வாநாடும்-பெரிய திரு -68-சூழ் பொன் விசும்பான பரம ஆகாசமும் -10-8-11-
சுரர் அறிவரு நிலையான –1-1-8-மூல பிரக்ருதியும் -மங்கிய வருவான பத்த வர்க்கமும் 8-1-6–கால சக்கரமும் -4-3-5-
-மானங்காரம் முதலான தத்துவங்களும் -10-7-1-அவற்றால் சமைந்த பத்தினால் திசைக் கண் நின்ற -திருச்சந்த -79-
புரா இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையும் -4-9-8- மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமான பதார்த்தங்களும் -3-6-1-
எண் மீதியன்ற புற அண்டங்களுமாக-6-9-5- சொல்லப்படுகிற இவை நாரங்கள் ஆகின்றன –
நலம் திகழ் நாரணன்- பெருமாள் திரு -1-11—வண் புகழ் நாரணன் -1-2-10–வாழ் புகழ் நாரணன் -10-9-1-
நன்மேனியினன் நாராயணன் -9-3-1-என்றும் -பல்கலன் நடையாவுடைத் திரு நாரணன் -3-7-4-என்றும்
தெய்வ நாயகன் நாரணன் -5-7-11- என்றும் -நாராயணனுக்கு -பெரியாழ்வார் -3-7-11-என்றும் –
ஏக மூர்த்தி இரு மூர்த்தி -4-3-3- /1-3-3- என்று தொடங்கி-நடுக்கடலுள் துயின்ற நாராயணன் /
தானாமமைவுடை நாரணன் -நாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன் -10-5-2- என்றும் -நீரார் பேரான்-பெரிய திரு -2-4-6- என்றும்
பல இடங்களிலும் நாரங்களாக தோற்றுகிறவற்றை
பொங்கு புணரிக் கடல் சூழாடை-பெரிய திரு -6-10-9-என்கிற பாட்டில் திரள அருளிச் செய்து அருளினார் –

—————————————————–

அநந்தரம் -நாராயண பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் -நாராயண பதம் என்று தொடங்கி –
அகார நாராயண பதங்களுக்கு உண்டான சங்க்ரஹ விஸ்தர பாவத்தை அருளிச் செய்கிறார் –நாராயணன் என்றது தொடங்கி –
அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம்-சுருங்கச் சொன்ன அர்த்தம் தன்னை அஞ்ஞானம் சம்சயம் விபர்யயங்கள் கழியும் படி
முகாந்தரத்தாலே தெளிவிக்கை விவரணம் –
இஸ் சங்க்ரஹ விவரண பாவம் பிரதம அக்ஷரம் முதலாக யதா சம்பவம் கண்டு கொள்வது –
உகாரத்தை விவரிக்கிறது நமஸ் ஸூ -அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம் -மகாரத்தை விவரிக்கிறது சதுர்த்தி
-நார பதம் -என்றும் சொல்லுவார்கள் -என்றபடி –
ரஷ்ய அம்சமும் ரக்ஷண பிரகாரமும் இ றே அகாரத்தில் விவர ணீயமான அம்சம் –
அதில் நார சப்தத்தாலே ரஷ்ய அம்சத்தை விவரிக்கிறது -நாராயணன் என்கிற ஸமஸ்த பதத்தாலே ரக்ஷண பிரகாரத்தை விவரிக்கிறது
-அதில் ரஷ்ய விவரணம் பண்ணுகிறது நார பதம் -ரிங்ஷயே -என்கிற தாதுவிலே -ர-என்ற பதமாய் -க்ஷயிக்கும் வஸ்துவைச் சொல்லி
-நகாரம் அத்தை நிஷேதித்து -நர -என்று ஷயம் இல்லாத நித்ய வஸ்துவைக் காட்டி ஸமூஹ அர்த்தத்தில் அண் பிரத்யமும்
-ஆதி வ்ருத்தியுமாய் -நார என்று நித்ய வஸ்து சமூகத்தைச் சொல்லி -நாரா -என்று பஹு வசனம் ஆகையால் ஸமூஹ பாஹுள்யத்தைச் சொல்லுகிறது-
இத்தை அருளிச் செய்கிறார் -நர -நார நாரா -என்று தொடங்கி
இங்கு சொல்லப்படும் நித்யத்வம் ஸ்வரூபேண நித்யத்வம் -ப்ரவாஹ ரூபேண நித்யத்வம் என்று த்விவிதம் –
ஸ்வரூபேண நித்யத்தை யாவது -சத்தான பதார்த்தத்தை உடைய உத்பத்தி விநாச அத்யந்தபாதம்
பிரவாஹா ரூபேண நித்யத்தை யாவது -உத்பத்தி விநாச யோகியா நிற்கச் செயதேயும் பூர்வ காலத்தில் உண்டான
நாம ரூப லிங்காதிகள் உடைய அந்யதாபாவம் –
ஆக நாரா என்று நித்ய பதார்த்தங்களின் சமூகங்களை சொல்லுகிறது –
ஸ்ருஷ்ட்வா நாரம் -என்கிற வராஹ புராண வசனத்தையும் -ஆபோ நாரா -என்கிற மனு வசனத்தையும் உட்க்கொண்டு
அருளிச் செய்கிறார் -நரன் -என்று தொடங்கி – அப்புக்களை எடுத்தது ததவாந்தரங்களுக்கும் உப லக்ஷணம் என்னும் இடம்
-நராஜ் ஜாதானி -இத்யாதிகளாலே சித்தம் –
இந்த பஹு வ்ரீஹி சமாசமான நிர்வசனத்தில் நாராயணன் உடைய சர்வவித காரணத்வமும் –
அயன சப்தத்தில் -ஈயத இத்யயனம்-என்கிற கர்மணி வுயத்பத்தியாலே இவற்றை வியாப்பியமாக வுடையவனுடைய சர்வ வியாபகத்வமும் –
அதுக்கு உபயுக்தமான நிரதிசய ஸூ ஷுமத்வமும் சொல்லிற்று ஆயத்து –
இப் பொருள்கள் -ஈயதே அஸ்மின் -என்கிற அதிகரண வுயுத்பத்தியிலும் வரும் –
ஆகாசம் கடாதிகளாலே வியாபிக்குமா போலே தன் ஸ்வரூப ஏக தேசங்களாலே வியாபிக்கை அன்றிக்கே-ஜாதி வியக்தி தோறும்
வியாபிக்குமா பாதி சமாப்ய ஆத்மதயா வியாபித்து தரிக்கும் என்கிறது நாராயண பதம் –
இந்த அந்தர் வியாப்தியையும் பஹிர் வியாப்தியையும் நினைத்து இ றே அனோர் அணீயான் மஹதோ மஹீயான் -என்றது –

நித்ய வஸ்துக்களை ஸ பிரமாணமாக அருளிச் செய்கிறார் -உணர் முழு நலம் -என்று தொடங்கி –
பிராட்டியினுடைய -நார கோடி கடிதத்வத்தை அருளிச் செய்கிறார் -பார் மகள்-என்று தொடங்கி –
உடையவரும் கத்யத்திலே இங்கனே இறே அருளிச் செய்தது –
-இத்தால் நாராயண பதத்தில் கைங்கர்ய பிரதிசம்பந்தி ஒரு மிதுனம் என்றதாயிற்று –

————————————————————————

அயன–சப்தார்த்தம் –
அயனம் -என்று இருப்பிடமாய் -நாரங்களுக்கு இருப்பிடம் என்றும் -நாரங்களை இருப்பிடமாக உடையவன் என்றும் சொல்லக் கடவது –
நான் உன்னை அன்றி இலேன் -நீ என்னை அன்றி இலை-நான்முகன் -7-என்று ஒன்றை ஓன்று குலையில்
இரண்டு தலையும் இல்லையாம் படி இருக்கையாலே
தன்னுள்ளத்து அனைத்து உலகும் நிற்க நெறிமையாலே தானும் அவற்றுள் நிற்கும் -9-6-4–என்கிற
மேன்மையையும் நீர்மையையும் சொல்லிற்று ஆயிற்று –
எல்லாவற்றுக்கும் காரணமாய் -அந்தராத்மாவாய் -அவற்றின் தோஷம் தட்டாமே -நின்று நியமித்து -தான் ஒளியை உடையனாய்
-ஸ்வாமியாய் -எல்லா உறவுமாய் -உபாயமுமாய் -உபேயமுமாய் -இருக்குமது எல்லாம் இதிலே தோற்றும் –

—————————————————————–

தத்புருஷ பஹு வ்ரீஹீ சமாஜ த்வயத்தை அருளிச் செய்கிறார் -அயனம் -என்று தொடங்கி –
தன் குணங்களில் ஈஸ்வரன் வியாபிக்கும் போது குண விசிஷ்டானாயே வியாபிக்க வேணும் –
நிர்குணமாய் வஸ்து இராமையாலே – அப்போது வ்யாப்ய குணங்களே வ்யாபகங்களாய் -வியாபக குணங்களே வ்யாபயங்களாய் வருகையால்
ஆத்ம ஆஸ்ரய தோஷம் உண்டாகும் -அதுக்கு மேலே தன் குணங்களில் குணி வியாபிக்க வேணும் என்று புக்கால்
தத் ஆஸ்ரயமான குணங்களையும் குணி வியாபிக்க வேணும் -ஆகையால் அனவஸ்தாதுஸ் தமாம் –
ஆகையால் நாரங்களுக்கு ஆஸ்ரயம் என்கிற இடத்தில் குணங்களை சொல்லிற்றே யாகிலும் -நாரங்களை ஆஸ்ரயமாக உடையவன்
என்கிற இடத்தில் குணங்களை ஒழிய சொல்ல வேணும் என்றதாயிற்று
ஆக ஸமஸ்த கல்யாண குணாத்மகத்வம் -உபாயவிபூதி நாதத்வம் -சர்வ ஸ்மாத் பரத்வம் -சர்வ சரீரத்வம் -உள்ளிட்டவை யுக்தமாய் நின்றது –
ஸமாஸ த்வயத்தாலும் பலித்த அம்சத்தை அருளிச் செய்கிறார்-நான் உன்னை -என்று தொடங்கி -அந்தரத்தில் அந்தணனை -என்றும் –
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன்-என்றும் சர்வ பூத அந்தராத்மா -அபஹத பாப்மா -இத்யாதி
பிரமாணங்களை உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -அந்தராத்மாவாய் அவற்றின் தோஷம் தட்டாமே நின்று -என்று –
அதாவது வியாப்பியகத தோஷை-அச்மஸ்ப்ருஷ்ட ஸ்வ பாவன்-என்றபடி –
எம்பிரான் எந்தை -சேலேய் கண்ணியரும்-பிராதா பர்த்தா ச -மாதா பிதா -என்றத்தை உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -எல்லா உறவுமாய் -என்று –
இண்-க தவ்-என்கிற தாதுவிலே யாதல் -அய-கதவ்-என்கிற தாதுவிலே யாதல் -ஸித்தமான அயன பதத்தில் -கரனே வ்யுத்பத்தியாலும் –
கர்மணி வுயுத்பத்தியாலும் ப்ரகாசிதமான உபாயத்வ உபேயத்வங்களை அருளிச் செய்கிறார் -உபாயமுமாய் உபேயமுமாய் -என்று –
பஹு வ்ரீஹீ யோஜனை கொள்ளுகிற இடத்தில் யோக்யதா அனுகுணமாக நார சப்தத்தை குணங்களை ஒழிந்த வஸ்துக்களுக்கு
வாசகமாக கொண்டால் போலே -தத் புருஷ யோஜனையிலும் அயன சப்தத்தை உபாய உபேய வாசியாகக் கொள்ளும் அளவில்
யோக்யதா அனுகுணமாக நார சப்தத்தை அசேதனங்களை ஒழிந்த சேதன வஸ்துக்களுக்கு வாசகமாகக் கொள்ளக் கடவது –
நாரஸ்த் விதி சர்வ பும்ஸாம் சமூஹ பரிகத்யதே-கதிரா லம்பாநம் தஸ்ய தேன நாராயண ஸ்ம்ருத -என்றும்
நார சப்தேன ஜீவா நாம் சமூஹே ப்ரோச்யதே புதை -தேஷாம் அயன பூதத்வாத் நாராயண இஹோச்யதே-என்றும்
இத்யாதிகளாலே இவ்வர்த்தம் சொல்லப் படா நின்றது இறே

——————————————————————————————————

வ்யக்த சதுர்த் யர்த்தம்
ஆய -என்று மகாரத்தில் சொன்ன ஆத்மாவுக்கு அகாரத்தில் சொன்ன சேஷத்வம் நிலை நிற்பது கைங்கர்யத்தில்
தான் அந்வயித்தால் ஆகையால் அடிமையை இரப்பைக் காட்டுகிறது –
தொடர்ந்து குற்றேவல் –9-2-3-என்றும் -ஆடச்செய்து குற்றேவல் 2-9-4–என்றும் -சென்றால் இருந்தால் நின்றால் -முதல் திரு -53–என்றும்
-ஊரும் புட்கோடியும் அஃதே -10-2-3-என்கிற படியே எல்லா தேசங்களிலும் திரைக்கு உள்ளொடு புறம்போடு வாசி அற எல்லா அடிமைகளையும்
முகப்பே கூவிப் பணி கொண்டு அருள வேணும் -8-5-7-என்கிற இரப்பை-ஒழிவில் காலத்தில் படியே -3-3-1–காட்டக் கடவது –

—————————————————–

இனி இதில் விபக்தி அம்சத்தாலே கைங்கர்யத்தை பிரார்த்திக்கிற படியை ச பிரமாணமாக அருளிச் செய்கிறார் -ஆய -என்று தொடங்கி
நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் –என்றத்தை உட்க்கொண்டு -சேஷத்வம் இத்யாதி அருளிச் செய்கிறார்
ஆக -லுப்த வ்யக்த சதுர்த்தி அர்த்தங்கள் நிரூப்ய நிரூபக பாவம் நிரூபிதம் –

—————————————————————————————————————-

மூல மந்த்ரார்த்த சங்க்ரஹம் –
ஆக -இத் திருமந்திரம் -சர்வ ரக்ஷகனான ஸ்ரீ யபதிக்கு-அநந்யார்ஹ சேஷ பூதனாய் சரீர இந்திரியாதிகளில் வேறு பட்டு –
ஞானா நந்த மயனாய் -ஸ்வ தந்த்ரன் அன்றிக்கே-சர்வ பிரகார பரதந்த்ரனான நான் உபய விபூதி நாயகனான நாராயணனுக்கு
சர்வவித்த கைங்கர்யங்களிலும் அந்வயிக்கப் பெறவேனாக வேணும் என்று இருக்கை ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்கிறது –

——————————————————-

இனி இம் மந்திரத்தால் ப்ரதிபாதிக்கப் பட்ட அர்த்தங்களை சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -ஆக என்று தொடங்கி -அதாவது
-சேதனனுடைய ப்ரக்ருதே பரத்வமும் –ப்ரக்ருதே பரனுடைய சேஷத்வமும் -சேஷத்வத்தினுடைய அநந்யார்ஹதையும் –
அநந்யார்ஹ சேஷத்வ பிரதிசம்பந்தியையும் -அநந்யார்ஹ சேஷபூதனுடைய அஹங்கார மமகார நிவ்ருத்தியையும் –
தன் நிவ்ருத்தமான ஸ்வரூபத்தின் உடைய அத்யந்த பாரதந்தர்யத்தையும் -பாரதந்தர்ய காஷடையான-ததீய சேஷத்வத்தையும் –
பரதந்த்ரனுக்கு அனுரூபமான உபாயத்தையும் -உபாய பலமான கைங்கர்யத்தையும் -கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் சொல்லுகிறது -என்றபடி
ஆக -திருமந்த்ரத்தால் -பிராணவத்தால் சேஷத்வம் சொல்லி -நமஸ் சப்தத்தால் தத் விரோதியான ஸ்வாதந்த்ரன் உடைய நிவ்ருத்தி சொல்லி
-நாராயண பதத்தாலே அந்த சேஷத்வத்தை சரீர ஆத்ம பாவ சம்பந்த முகேன த்ருடீ கரிக்கையாலே திருமந்திரம் ஸ்வரூப யாதாம்ய பரமாய் இருக்கும் –

———————————————————————————————————————-

திரு மந்திரத்தின் ஆபன் நிவர்த்தன பிரகாரம் –
எம்பெருமானை ஒழிந்த பிறரை ரக்ஷகர் என்று இருத்தல் -தேஹாத்ம அபிமானம் -அந்நிய சேஷத்வம் -ஸ்வ ஸ்வாதந்தர்யம்
-மமகாராம் நடத்தல் -ஸ்ரீ வைஷ்ணவர்களை சஜாதீயர் என்று இருத்தல் -தன் பேற்றுக்கு தான் யத்னித்தல் –
பகவத் விபூதியில் சிலரோடு வெறுப்பு நடத்தல் -சம்சாரிகளை உறவு என்று இருத்தல் –
ஷூ த்ர போகங்களில் நெஞ்சு கிடத்தல் செய்யில் திருமந்திரத்தில் அன்வயம் இல்லையாகக் கடவது

————————————————

தேஹா சக்தாத்ம புத்தி -என்கிற பட்டர் திருவாக்குப் படி -சம்சாரிகள் ஸ்வரூப அனுபந்திகளான ஆபத்துக்களையும்
-திரு மந்திரத்துக்கு உண்டான தன் நிவர்த்தகத்வத்தையும் வியதிரேக முகத்தால் அருளிச் செய்கிறார் -எம்பெருமானை -என்று தொடங்கி –

———————————————————————————————————————

மூல மந்த்ரார்த்த நிகமனம்
மூன்று எழுத்து -பெரியாழ்வார்எ -4-7-10-ன்றும் -விடை ஏழு அன்று அடர்த்து –பெரிய திரு -8-9-3-என்றும்
-யானே என்னை -2-9-9-என்றும் -எண் பெருக்கு அந்நலம் -1-2-10-என்றும் –
எம்பிரான் எந்தை –பெரிய திரு -1-1-6–என்றும் -ஒழிவில் காலம் எல்லாம் -3-3-1-என்றும் -வேங்கடங்கள் -3-3-6- என்றும்
-நாட்டினான் என்னை -பெரிய திரு -8-10-9-என்கிற பாட்டுக்களை திருமந்த்ரார்த்தமாக பூர்வர்கள் அனுசந்திப்பார்கள் –

திருமந்திர பிரகரணம் முற்றிற்று –

———————————————————————–

திருமந்திர ப்ரதிபாதகமான பாசுரங்களைக் காட்டி நிகமிக்கிறார்-மூன்று எழுத்து என்று தொடங்கி –
இத்திருமந்த்ரத்தில் -தெளிவுற்று வீவின்றி நின்றவர் -என்கிறபடியே பாஹ்ய குத்ருஷ்ட்டி மதங்களால் கலக்க ஒண்ணாத
தெளிவும் நிஷ்டையும் உடையவனை ஆதரிக்கும் தேசத்திலும் கூட
யத்ர அஷ்டாக்ஷர சம்சித்த மஹா பாகோ மஹீயதே -ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா -என்கிறபடியே
த்ருதீய பதார்த்த விரோதியான விஷயாந்தர ருசி ரூப வியாதியும் –
மத்யம பதார்த்த விரோதியான ஸ்வ ரஷனே ஸ்வ அந்வய ரூப துர் பிஷமும்
-பிரதம பதார்த்த விரோதியான ஆத்ம அபஹார ஹிந்து அஹங்காராதி ரூப மஹாதஸ்கரனும் -ஆகிற தோஷங்கள் நடையாடா என்றதாயிற்று –
ஆக -அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியில் வாழலாம் என்றதாயிற்று

——————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீவர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: