பகவத் விஷயம் காலஷேபம் -188- திருவாய்மொழி – -10-9-1….10-9-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

சூழ் விசும்பு -பிரவேசம் –

மேலான யோகிகளுக்கு பிறக்கக் கூடியதான பரபக்தி இவருக்கு பிறக்க –
அதனால் உளவாகும் தன்மைகளை இத் திருவாய் மொழி அளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிக்குமது ஓன்று இல்லாமையாலே-
பரம பதத்துக்கு ஏறப் போக வேண்டும் -என்று எண்ணுகிற இவரை
தம்மிற்காட்டிலும் சடக்கென கொடு போக வேண்டும் என்று விரைகின்ற ஈஸ்வரன்
அங்குத்தை அனுபவத்துக்கு ஈடாம்படி மிக்க விடாய் பிறக்கைக்காக-
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை கண்களாலே கண்டால் போன்று-பிரத்யக்ஷ சமானஹார சாஷாத்காரம் —
தெளிவாக விளங்கும்படி செய்து அருளினான் –
பரஞானம் -தர்சன -தசை –தர்சன -சமா நாகாரமான தசை -இடைப்பட்ட நிலை —

அதாவது
வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி நெறியையும்-
சரீரம் பிரியும் போது வரும் துக்கம் எல்லாம் ஆறும்படி தான் வந்து முகம் காட்டும் படியையும் –
போகும் நெறியில் உள்ளவர்களான தேவர்கள் செய்யும் உபசாரங்களையும்-
அந் நெறியாலே சென்று புகக் கூடிய பரமபதத்தையும்-
நித்ய சூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும்-
பிராட்டி மாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும்-
நித்ய சூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடே வீற்று இருந்து அருளுகிறபடியையும்-
அடையத் தகுந்தவர்களில் மேலான வர்களான நித்ய சூரிகள் நடுவே தாம் பாரம் அற்றவராய்
ஆனந்தத்தை உடையவராய் இருக்கும்படியையும்-
காட்டி அருளக் கண்டு ப்ரீதராய்
அதனை அன்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –
தமக்கு அவன் செய்து கொடுத்த பேற்றினை ஸ்ரீ வைஷ்ணவர் எல்லாரும்-பெற்றாராக பேசின இது அன்யாபதேசம் ஆவது-
அதற்குப் பிரயோஜனம் -இங்கு உள்ளார் நமக்கும் ஆழ்வார் பேறு தப்பாது -என்று இருக்கை-

தூமாதி மார்க்கம் அர்ச்சிராதி மார்க்கம் —சுக்ல கிருஷ்னே –தேவயான மார்க்கம் -முக்தி அபிலாஷை -ஹார்த்தா அனுக்ரஹ தானே வந்து முகம் காட்டி –
7 பாசுரம் வரை பிரகிருதி ஸத்காரம் 8-11- மேலே –
மாதவன் வைகுந்தம் புகவே -அந்த மார்க்கம்
முடி உடை வானவர் எதிர் கொள்ள -நித்ய ஸூ ரிகள்-ஸத்காரம்
பிராட்டிமாரும் -தானுமாக – வந்தவர் –மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை –
மாதவன் தமர் -என்பதால் அந்யாபதேசம் –
ஸோஸ்ச்னுதே ஸர்வான் காமான் -சக ஸ்ருதி
பரமம் சாம்யம் உபைதி -சாம்ய ஸ்ருதி
மம சமதர்மம் -சமதர்ம ஸ்ருதி –
சூர்ய கிரணம் பிடித்தே –தேக சம்பந்தம் நீங்கிய பின்பு உடனே -மோக்ஷம் -பகலோ இரவோ -தஷிணாயனமோ உத்தரணமோ –
அர்ச்சிஸ் /பகல்/சுக்ல /உத்தர அயனம் /-சம்வத்சரம் / வாயு லோகம் -முதல் ஆறு –
சூர்ய லோகம் / சந்த்ர லோகம் /வித்யுத் -அமானவான்-/வருண லோகம் /-சுவர்க்கம் /சத்ய லோகம் -ஆகிய 12 -தாண்டி
இவ்வளவையும் காட்டி -மேலும் ருசியை வளர்க்க -நமக்கு அருளிச் செய்ய –
அர்ச்சிராதி மார்க்க பிரதர்சனம் -மார்க்கம் காட்டிக் கொடுத்த குணம் –

28 சூர்ணிகைகள் -கல்யாண குணங்கள் -காட்டி -30 திவ்ய தேசங்கள் -நவ திருப்பதி கணக்கில் 8 திவ்ய தேசம் –
தெளிந்த என் சிந்தை -ஒரே சூர்ணிகை மூன்று திவ்ய தேசங்கள் –
வன் பெரு வானக முதல் உய்ய இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவாளர் திருப்பதி வடிவுடை கடலிடம் கட்கிலீ என்னுமவற்றில்
இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ ஸுஹார்த்த பிரதானம் -159
மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழ் உலகுக்குக் உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் -160
உபய பிரதான ப்ரணவமான உறை கோயிலிலே எத்தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-161 –
வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் -162-
ருசி விவசரக்குப் பாதமே சரணாக்கும் உதாரயம் வானமா மலையிலே கொழுந்து விடும் -163-
களை கண் அற்றாரை உருக்கும் மாதுர்யம் கூட மூக்கிலே ப்ரவஹிக்கும் -164
மெலிவிலும் சேமம் கோள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம் -165
வ்யவசா யஜ்ஞர் ரக்ஷண ஸ்தைரியம் பம்பா உத்தர தேசஸ்த்தம் -166-
விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கட நா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீரணம் -167-
கடி தகட கவி கடநா பாந்தவம் அவ்வூரிலே த்வி குணம் -168-
கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் -169
சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும் ஸுந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும் -170
ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆனந்த வ்ருத்தி நீணகரிலே -171-
சாதராரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித்த ஆஸ்ச்சர்யம் குளத்தே கொடி விடும் -172-
ஸ்ரம மனம் சூழும் ஸுகுமார்யா பிரகாசம் ஆய்ச்சேரியிலே -173
மஹா மத்தியில் அச்சம் கேட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -174-
சாத்ய ஹ்ருதி ஸ்த்தனாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே -175-
அவகாஹித்தாரை அநந்யார்ஹம் ஆக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழமூரிலே கூட்டமிடும் -176-
போக்ய பாகத் த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னிலை மூன்றிலும் பிறக்கட்டும் -177
போகத்தில் தடுமாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -178
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -179
பிரிந்த துன்பக் கடல் கடத்துக் விஷ்ணு போது ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -180
சரண்ய முகுந்தத்வம் உத்பலாவதாகத்திலே பிரசித்தம் -181-
மார்க்க பந்து சைத்யம் மோஹ நத்தே மடுவிடும் -182-
ச ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூரார்ச்சிநத்துக்கு முக நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம் -183-
மோக்ஷ தானத்தில் ப்ரண பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -184-
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தலைக்கும் -185
அங்கீ கரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -186-
12 மலை நாட்டு திவ்ய தேசங்கள் / 5 சோழ நாட்டு திவ்ய தேசங்கள் / 1 வட நாட்டு திவ்ய தேசம் / 12 பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் /-ஆக 30 –
38 திவ்ய தேசங்கள் –ஊரகம் / பாடகம்/ வெக்கா/ அயோத்யா/ த்வாரகா / வட மதுரை / பாற்கடல் / பரம பதம் -சேர்த்து -38-

அது வரை தான் கால தாமதம் -பிராரப்த கர்மம் தொலையும் வரை -ஞானம் ஆதித்யவது -கர்மங்களால் மூடப்படாமல் -விளங்கி –
சூஷ்ம சரீரம் -நுண்ணிய மேனி உடன் சென்று -ஸத்காரம் -பெரிய கல்யாணம் போலே
-பரன் போலே சஜாதீயம் தானே ஞாத்ருத்வம் -ஆனந்தமயத்வம் -சேஷத்வம் -பாரதந்தர்யம் –
சக சாம்யா சமதர்ம சுருதிகள்
இடத்தால் கூடி இருந்து -சாமியாபுத்தி பெற்று -சமதர்மம் பெற்று -ஞானா ஆனந்தங்களில் சாம்யம் -போக மாத்ர சாம்ய லிங்காசா -ஸூ த்ரம்-
ஜகத் வியாபாரம் வர்ஜம் -ஏக போக உரிமை அவனுக்கு -யுக பத்தாக அனுக்கிரக கார்யம் –
சேஷி மற்ற சேஷ பூதர்களையும் இப்படி ஆக்க பரம காருண்யத்தால் செய்யும் கிரியைகள் –
ஆனந்தம் இங்கே -அங்கு எதிர்பார்ப்பு -மகிழ்ச்சி -ஆழ்வார் திரு அடி சேவை -கைகளில் எழுந்து அருளி -பெருமாள் திருவடிகளில் –
பிரத்யக்ஷ மாக பிரமாணம் காட்டி -நம்பிக்கை கொடுத்து நமக்கும் இந்த பேறு-சூழ் விசும்பு -பாசுரம் அனுசந்தித்து
நம்பெருமாள் அனைத்தையும் களைந்து ஆழ்வாருக்கு சம்பாவனையாக கொடுத்து அருளி
செம்மா பாத பற்பு தலை மேல்சேர்த்து -இளையவர்க்கு கவித்த மௌலி – சர்வ ஸ்வதானம்-பண்ணி – பிரபன்ன ஜன கூடஸ்தர் –
பிரபத்தி ஏற்றம் காட்டி அருளி -திருத் துழாய் வைத்து மறைத்து -அவா அற ச் சூழ் -சாத்து முறை பாசுரம் சாதித்து பிரசாதம் சாதிப்பார்கள் –
பிரகிருதி உள்ளார் ஆர்ப்பாராம் முதல் இரண்டு பாசுரங்கள் –

———————————————————————————————————-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

அர்ச்சிராதி மார்க்கம் கமனத்தில் ஒருப்பட்டவராய் -சர அசர ஸ்தாவரங்கள் ஜங்கங்கள் ப்ரீதியால் விகாரம் அடைந்து –
தமர்கள் -அந்யாபதேசம்-போக்கிய குண பூர்ணன் சர்வேஸ்வரன் குணங்களை அனுபவிக்க –
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-எல்லா இடமும் சூழ்ந்து -சர்வ பிரகாரத்தாலும் –
ஆகாசத்துக்கு அலங்காரமாக மேகங்கள் தூரிய வாத்யம் போலே முழங்க
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின-ஆகாத பகவத் பக்தி சிந்த -ஆழ்ந்த -அலைகள் ஆர்ப்பரிக்க
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்-சப்த தீபங்களை உபகார வஸ்துக்கள் சமர்ப்பித்து -புதுக் கணிப்பு என்றுமாம் –
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –
கல்யாண குணங்கள் பாட வாழ்க்கை கிட்டும் இதுவே திருவாய் மொழி உடைய சாரம் –
அசாதாரண பந்து -ஆனந்தாவாஹமான குணங்கள் சீர்மை -அசாதாரண பந்துக்கள் சேஷ பூதர் –

ஸ்தாவர ஜங்கமங்கள்-கடல் முகில் விகாரம் அடைந்ததை அருளிச் செய்கிறார் –

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-
பூமியை சூழ்ந்த ஆகாசத்தில்
ஆபரணமாக -விசும்புக்கு -முகில்
ஆகாசப் பரப்பு அளவிலிலும் அணியப்பட்ட முகில் -ஒப்பனை செய்தால் போலே வியாபிக்கப் பட்ட
தூரியம்-முழங்க -கந்தர்வர்கள் -அப்சரஸ் கணவர்கள் —
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
மத்திய ராத்ரீ புஷப வ்ருஷடீ-ஜாய மானே ஜனார்த்தனே -விஷ்ணு தர்மம் –தூ வானம் போலே மழை பொழிய –
இயற்க்கை மேகம் -விகாரம் –
இவன் போக்குக்கு அடியான அவன் வரவிலே பிறந்த விக்ருத்தி – இ றே- இவன் போகும் போகும் பொழுது சொல்ல வேண்டுமோ
அவற்றுக்கு அபிமானிகள் இந்திரன் வருணன் -பர்ஜன்யங்கள் -சொன்னதாகவுமாம்
எல்லா வற்றையும் தன்னுள்ளே அடக்க வல்ல கடல்கள் -தைர்ய பங்கம் பிறந்து –
அஷோபியாம் -கலக்க முடியாத கடல் -சமுத்திர இவை காம்பீர்யம்
-அலையா நிற்கும் அலைகள் கைகள் கொண்டு ஆர்ப்பரிக்க
அவன் அவதாரம் நம்மை அங்கே கூட்டிச் செல்லவே –
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
புதுக் கணித்தன -உபகாரங்களை தரித்தன
அப்பன் வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-
என் ஸ்வாமி உடைய -பரம பந்து -நிருபாதிக்க சம்பந்த -சம்பந்திகளையும் -ஆத்ம பந்து -ஆதரிக்க வேண்டி இருக்கும்
யாரையும் எள்ளி நடையாடக் கூடாதே -பகவத் சம்பந்தம் வெட்டக் கூடாதே -சம்பந்தம் சாதாரணம் –
தாழ்ந்தவர்கள் என்று கீழ் நோக்கி பார்க்கக் கூடாது –
பிரகிருதி மண்டலம் முழுவதும் ஆர்பரித்தவாறு
ராஜா புத்ரன் போகா நின்றால்-ஆனந்தமாக -செய்ய வேண்டுமே –
சர்வேஸ்வரன் ஆழ்வார் சம்பந்திகளை பின் தொடர்ந்து விஷயீ கரிப்பானே
அடியார்கள் வாழும் படியான கல்யாண குணங்கள்
கேட்க்கும் என்னும் பீதியாலேயோ
உகந்தே –

—————————————————————————–

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

முதல் பாசுர சேஷம் -7 பாசுரம் வரை பிரகிருதி மண்டல ஸத்காரம்
நிருபாதிக சேஷி நாராயணன் சேஷ பூதர்களைக் கண்டு லோகத்தார் சதிகரிக்க
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-நிருபாதிக சேஷி உடைய சேஷ பூதர்கள் -சுத்தமான நீர்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்-உயர்ந்த ஆகாசத்தில் பூரணமான பொன் குடம் போலே பூரிக்க
-நீல வர்ணம் -ஆழ்வாரை கண்ட பள பளப்பு –
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்-நீரை வகிக்கும் கடல்கள் ஒருபடிப் படி நின்று கோஷிக்க
நெடு வரையில் மலைகள்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே-தோரணம் கட்டி -உலகில் உள்ளார் எல்லா பக்கமும் தொழ
முகில் ஒருமை ஜாதி பரம் -முகில்கள் அனைத்தும்
அந்தரிக்ஷ பர்யந்தம் பூ லோகம் உகந்து சதிகரிப்பதை சொல்லிற்றே -உலகு -உயர்ந்தோர் மாட்டே –

மேல் உள்ள உலகங்கள்-செய்த உபகாரங்களை அருளிச் செய்கிறார் –

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது -உயர் விண்ணில்-
நிர்ஹேதுகமான சேஷியாய் இருக்கின்றவனுடைய-அடியார்களைக் கண்டு
நல்ல நீரை உடையனவான மேகங்கள் ஆனவை-
உகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக-சமைந்தன –முற்பட கண்டு உகந்தன-
பின்பு அவை தானே பூர்ண கும்பங்கள் ஆயின -என்கை-
ஒரு கால் வாத்திய ஒலியைச் செய்தோம் -என்று இருக்கின்றன இல்லை –
அன்றிக்கே-ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவர்களான தேவர்களாலே-ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப் பட்டன —என்றுமாம் –

நீரணி கடல்கள் நின்றார்த்தன-
நீராலே அணியப்பட்ட கடல்கள்-ஒரு கால் ஆடினோம் என்று இராமல்-உவகையால் எப்பொழுதும் ஆர்த்துக் கொண்டன –

உலகே- நெடுவரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் –
அவ்வவ் உலகங்களில் உள்ளார் நெடிய வரை போலே இருந்துள்ள தோரணங்களை நட்டு-

தாங்களும் தொழுதார்கள் –
உலகம் எனபது உயர்ந்தோரை அன்றோ –
அன்றிக்கே-அங்கு உள்ளாரைச் சொன்னபடியுமாம்-
சத்ர சாமர பணிஸ்து லஷ்மன அனுஜகாம ஹ-ஜூ கோப பிராதரம் பிராதா ரதம் ஆஸ்தாய ப்ருஷ்டத -அயோத்யா -18-92-
இலக்குமணர் குடை சாமரம் இவற்றைக் கையிலே உடையவராய்-
தமையனாரோடு தேரிலே ஏறிக் கொண்டு தமையனாரைக் காத்து வந்தார்-
என்கிறபடியே உவகையாலே எல்லா அடிமைகளையும் செய்யா நின்றார்கள் –

—————————————————————————————

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

அநந்யார்ஹதா ஆபாதகன் த்ரிவிக்ரமன் -எல்லை நடந்து –சேஷ பூதர் -ஆதி வாஹிக லோகத்தில் உள்ளார் ஸத்காரம்
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை-அகில் புகை தூபம் -புஷ்ப்ப வர்ஷம் -மென்மை பரிமளம் -புகை இல்லை மணம் மட்டும்
-சுற்றும் விளக்கு -விளக்கு தெரியாது வெளிச்சம் மட்டும் -புகை இல்லை பரிமளம்க மழும் –
அஞ்சலி -சேஷத்வ அனுரூபம் -அவர்கள் எல்லாம் பக்தாத்மா-தானே முக்தரை பார்த்து தொழுதனர்
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே-மகாபலி என்னது என்று அபிமானித்த அன்று -ஓங்கி உலகு அளந்த உத்தமன் உடைய சேஷ பூதர்கள்
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்-
மௌன விரதம் கலைத்து -வாக் நியதி உடையவர் –
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே-போவார்க்கு வழிஇது என்று சொல்லி -எழுந்து அருளல் ஆகாதோ என்று
இரு பக்கமும் சாதாரமாக கனிவுடன் இசைத்து -பகர்ந்தார் -ஆதரவு உடன் –

ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார்-எதிரே வந்து மலர் மழையைப் பொழிந்து-கொண்டாடுகிற படியை-அருளிச் செய்கிறார்-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்-
உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்–தொழுதனர்-
ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனத்தைப் பெற்றோம் -என்று-
தூபத்தையும் நல்ல மலர் மழையையும்-பொழிந்து-தொழா நின்றார்கள் –

பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே –
ஸ்ரீ வாமனனாய் திரு உலகு அளந்து அருளின செயலுக்கு தோற்று அடிமை புக்கவர்கள் என்று ஆயிற்று-அவர்கள் ஆதரிக்கிறது –
மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் -பெரிய திரு மொழி -3-4-2-என்னுமவர் போல்வர் உண்டே –
அவன் திரு உலகு அளந்து அருளின நினைவைப் பயன் உடையதாகச் செய்தவர்கள் என்று ஆயிற்று-அவர்கள் ஆதரிக்கிறது –
திருவடியால் தீண்டி சம்பந்தம் கொடுத்து தன்னிடம் சேர்த்துக் கொள்ள பட்ட பலன் அன்றோ இவர்கள் அங்கு செல்வது –

எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள் –
இங்கே எழுந்து அருள வேண்டும் -என்று இரண்டு அருகும்-நின்று சொன்னார்கள்
முனிவர்கள் -என்றது -பேசலாகாது -என்று இருந்தமை தவிர்ந்தமைக்கு அறிகுறி –மௌனத்துக்கு விஷயம் புறம்பே என்று இருந்தார்கள் –
சம்பாஷணாதி பூஜாந்த்தம் – -ஜெப மத்யே -வைஷ்ணவோ சமாகதா –

வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே –
பரமபதம் செல்வார்க்கு வழி இது -என்று எதிரே வந்து சொன்னார்கள்-
சுக்ல கிருஷ்ண கதீஹ்யதே ஜகத சாஸ்வதே மத-ஏகயா யாதி அநாவ்ருத்திம் அத்யயாவர்த்ததே புன -ஸ்ரீ கீதை -8-26-
உலகத்திற்கு பழைமையானவை -என்கிறபடியே-குறித்தவர் எல்லாரும் போகக் கூடியதாய் கிடக்கிற வழி-
இன்று இது உண்டாகிறது அன்றோ-பிரசித்தமாக இருந்தாலும் இவர்கள் சொல்வது தங்கள் ஸத்காரம் பெற –
பாகவதர் விஷயத்திலே தொண்டு செய்து நாம் நிலை பெற வேண்டும் என்று-
எதிரே தம் தாமுடைய நிலைகளைக் கடந்து வந்து ஆதரித்தார்கள் –
முதலிகள் தங்கள் சத்தை இழக்க கூடாது என்று அன்றோ பெருமாள் இடம் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் வரவை சொன்னால் போலே —
வைகுந்தர்க்கு-
வேறு தேசத்திற்கு சென்று இருந்த அரசன் தன் தேசத்திலே புகுமாறு போலே-
அங்கு நின்றும் பிரிகதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி –
ஆஜகாம -ஸ்ரீ விபீஷணன் பெருமாள் இடம் -சேர்ந்தால் போலே -அக்கரை -அநர்த்தம் சம்சாரம் இக்கரை -ஸ்ரீ வைகுந்தம்
எதிர் எதிர் -எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர்
பூமி அன்று அளந்தவர் தமர் முன்னே-தூப நல் மலர் மழை பொழிவனராய்க் கொண்டு-
முனிவரான உலகர் தொழுதனர் –
வைகுந்தர்க்கு வழி இது என்று எதிரே வந்து-எழுமின் என்று இரு மருங்கும் இருந்தனர் -என்க-

————————————————————————————————

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

போக்யதா பூர்ணர் ஸ்ரீ யப்பத்தி உடைய -சேஷ பூதரைக் கண்டு தேவ லோகத்தார் ஸத்கரிக்க –
தமர்கள் பெற்ற பேற்றை அருளிச் செய்கிறார் -ஆசை உடையார்க்கு எல்லாம் -ஆசையே தகுதி -இந்த பேற்றைப் பெற –
கருணை உடன் சேர்ந்த காதல் -பிரி கதிர் பட்டு அன்றோ பிரிந்து உள்ளோம் -கிருஷிகன் மகிழ்ந்து அன்றோ திரட்டி எடுத்துக் கொண்டு போவான் –
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்-அநிமிஷர் -வாசல் ஸ்தானம் -நீர்ப்பந்தல் கூடாரங்கள் -இருப்பிடம் சமைத்து
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்-துவாதச ஆதித்யர்கள் -தேஜஸ் கை காட்டி -அடுத்து அடுத்து நின்று -கிரணங்கள் ஆகிற கை –
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த-பிரவர்த்திப்பித்த முரசங்கள்-கடல் ஓசைக்கு சமமாக இருக்க
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-மதுவை பிரவஹிக்கும் -திரு அபிஷேகம் -ஸ்ரீ யபதி

மேலே உள்ள உலகங்களில் தேவர்கள்-இவர்கள் போகிற வழிகளிலே-
தங்குகைக்காக தோப்புக்கள் அமைத்தும்-
வாத்தியம் முதலானவற்றால் ஒலியை உண்டாக்கியும்-கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார்-

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் –
பரந்த இடம் எங்கும் -இவர்கள் இங்கே தங்கிப் போவார்களோ-இங்குத் தங்கிப் போவார்களோ என்னும்-
நசையால் தேவர்கள் தோப்பு சமைத்தார்கள்-
இமையவர் என்றது -இயற்கையைச் சொன்னது அன்று-
தோப்பு சமைக்கையில் உண்டான விரைவாலே கண் விழித்து இருக்கிற படியைச் சொல்கிறது-
இளைய பெருமாள் அடிமை செய்வதற்கு உறுப்பாக உறங்காமல் இருந்தது போன்று –
இவர்கள் அங்கே புக்கு தங்குகிறார்கள் அன்று –
தங்கள் தங்கள் ஸ்வரூப லாபத்திற்கு தொண்டு செய்கிற படி அன்றோ இது-
அரசர்கள் ஒரு கால் கண்டு சிரித்து அழகிது என்று புகைக்காக மாநாவி சமைப்பாரைப் போலே-
மஹா நவமி அன்று ராஜா துவாரம் அலங்காரம் பண்ணுவாரைப் போலே –

கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் –
சூர்யர்கள் நிலை விளக்கு போலே-இங்கனே எழுந்தருள இங்கனே எழுந்தருள-தேஜோ விசிஷ்டர் -நிலை விளக்கு –
பார்த்தருள- பார்த்தருள என்று – கைகளை நிறையே காட்டினார்கள்-
அன்றிக்கே அர்ச்சிராதிகளான ஆதி வாஹிக கூட்டங்கள் ஆகவுமாம்-

அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த –
அங்கே கால் தாழ்வார்கள் என்று-அது கேளாதபடி-அதிரா நின்றுள்ள ஒலியை உடைய முரசங்கள்-
அலையை உடைய கடல் போலே முழங்கின-
அன்றிக்கே
இங்கு தங்குகையில் உண்டான ஆசையின் மிகுதி தோற்ற வாத்தியங்களை ஒலிக்கச் செய்தார்கள் என்றுமாம் –

மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே –
கொட்டு ஓசையாலும்-
ஆள்கள் எதிரே சென்று சொல்லுகையாலும்-
சென்ற இவர்களுக்கு ஒப்பித்த படியே கொடுக்கைக்காக-பிராட்டியோடு கூட அழித்து அழித்து ஒப்பிக்கிறபடி-
விரி என்பதால் -அலங்காரம் மாற்றி -என்றவாறு-
மாதவன் தமர்க்கே
பிராட்டி யினுடைய புருஷகாரம் மூலமாக பற்றியவர்கள்-
பிராட்டி முன்னாக அடிமை செய்வதற்கு வாரா நின்றார்கள்-என்று ஒப்பிக்கிறபடி –
திருமகள் கேள்வனுடைய ஒப்பனை அழகிலே அகப்பட்டு-அடிமை புக்கவர்களுக்கு -என்னுதல்-
இங்கு-பூமியிலே – ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றதே காரணமாக பங்கு பெறாதே-
திரியுண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ளார் எதிர் கொண்டு இருப்பிடங்களை கொடுக்கிறபடி-

மிளகு ஆழ்வான் படை வீட்டிலே அகரத்துக்கு -அக்ரகாரகதுக்கு – செல்ல-
நீ ஆந்தராளிகன்-சம்சார்யும் இன்றி முக்தனும் இன்று நடு நிலையாளன் – -உனக்கு பங்கு இல்லை -என்ன-
நன்மையில் குறை உண்டாய்ச் சொல்லுகிறீர்களோ அன்றோ -என்ன-
நன்மையில் குறை இல்லை -இது அன்றோ கரணம் என்ன-
நம் நெஞ்சில் இல்லையாகிலும் இவர்களால் ஸ்ரீ வைஷ்ணவன் என்று கை விடப் பெற்றோமே அன்றோ –
என்று புடைவையை முடிந்து எறட்டுக் கூத்தாடினார்-

—————————————————————————————————————

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

கைவல்யார்த்தி -முக்தி அடைந்தாலும் அர்ச்சிராதி கதியில் போக வில்லை -அங்கே உபாசனமோ பிரபத்தியோ பண்ண முடியாதே –
அத்துடன் ஆத்மாவை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் -ஏடு நிலைத்து இடுவதன் முன்னம் —சரீரம் முடிந்தால் திரும்ப முடியாதே –
குருகா நீளா- பற்று அற்றது எனில் வீடு பெறும்-உற்றது வீடு உயிர் -பெற்றது அது மண் உரில்–
விரஜைக்கு இப்பால் தான் கைவல்யார்த்தி திரும்பலாம் என்பர் தேசிக சம்ப்ரதாயம் –
ப்ரஹ்ம நிஷ்டன் -பஞ்சாக்கினி நிஷ்டன் -உபாசனம் படியே பலன் -பிரதீக உபாலம்பம் -அவயவங்கள் உடன் சேர்ந்து –
ஜைமினி வேத வியாசர் -ஸுமந்து பைலர் வைசம்பாயனர் ஜைமினி -நான்கு சிஷ்யர்
ஜைமினி -பஞ்சாக்கினி நிஷ்டர்
வியாசர் ப்ரஹ்ம நிஷ்டர் -ப்ரதீக உபாலம்பம் பண்ண மாட்டான் -ஆறு வித உபாசகர் -அசேதனம் -ப்ரஹ்மம் உடைய அவயவம்
கைவைளயார்த்தி ஆத்மா
ஆத்மா அசேதனம்
கூடிய ப்ரஹ்மம் உபாசனம்
ஆறு பேருக்கும் பரம பத பிராப்தி இல்லை
அவயவம் இல்லாத நிஷ்டர்க்கு உண்டு -பரமாத்மாவை விசேஷமாக -கொண்டு தன்னை பிரதானமாகக் கொண்டு
இருவரும் பேறு பெறுவார்கள் -நேராக கொண்டால் ப்ரஹ்ம நிஷ்டர்
பிராப்தியில் தாரதம்யம் உண்டு பிள்ளை லோகாச்சார்யார்
தேசிகன் -இல்லை என்பர்
ஜீவனை முக்கியமாக கொண்ட பஞ்சாக்கினி நிஷ்டனுக்கு ப்ரஹ்மம் அடைந்தாலும் வாசி உண்டு
பாதராயனார் இருவரும் அர்ச்சிராதி மார்க்கம் –
ஜைமினி பஞ்சாக்கினி நிஷ்டர்க்கு இல்லை என்பர் –
குரு சிஷ்ய கிரந்த விரோதம் –
இவை எல்லாம் உபாசகனைப் பற்றியே -நமக்கு சம்பந்தம் இல்லையே -பிரபன்னர் ஆண்மின்கள் வானகம் என்று ப்ரீதனாய் அளிக்கிறான்
கௌஷீதகி உபநிஷத் –
ப்ருஹதாரணீயம்
சாந்தோக்யம் –
கொஞ்சம் வாசி சம்வத்சரம் அப்புறம்
வருஷம் -அப்புறம் வாயு -ஆறாவது வியாசர் -தேவ லோகம் தேவர்கள் உடைய வாயு பகவான் –
அவிசேஷ சொல்லாலும் வாயு விசேஷ சொல்லாலும் சொன்னதால்
மின்னல் லோகம் மேலே வருணன் சம்பந்தத்தால் –
மின்னல் தான் அமானவன் –சத்ய லோகம் அடைந்தால் குருக்கே வருணன் -இந்திரன் –
கூடி வருவார்களாம் -சத்ய லோகம் வரை -பரஞ்சோதி ஸ்வரூபம் அடைகிறான் -ஜோதி சப்தம் ப்ரஹ்மாவை குறிக்காதே –
சத்ய லோகம் போனால் திரும்பி வருவானே-
வித்யுத் இந்திரன் வருணன் -கூட வந்து -விராஜா தாண்ட முடியாதே -போக ஆசை கொள்ளலாம் –
ஆதிவாஹிஹா தத் லிங்காத்-
அடையாளங்கள் -என்பர்
போக பூமி என்பர்
இவை இல்லை ஆதி வாஹ்யகர்கள் -தான் குறிக்கும் –

பிரகிருதி மண்டலம் -வருண இந்திர பிரஜாபதிகள் -சுக்ல பக்ஷ சம்வத்சர வாயு சொல்லாமல் இங்கு -ஸ்ரீ யபதி சேஷ பூதர் –
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்-தலை வாசலில் வந்து நின்று ஸ்ரீ யாபதிக்கு சேஷ பூதர் என்று பொன்னடி சாத்தி தங்கு வேட்டையாக –
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்-இங்கு புகுந்து பஹு மானம் சதிகரித்து-
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே-வேதங்களை ஓத கூடியவர்கள் -திருவடியில் யாக பலம் சமர்ப்பித்து
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்–குதிரை வடிவம் கின்னர்கள் -ஆனந்த வல்லி-பெருக்கி பெருக்கி -கர்மஜ தேவர்

ஆதி வாஹிகத் தலைவர்களான-வருணன் இந்த்ரன் முதலானவர்களும்-மற்றும் உள்ளாறும்-
இவனுக்குச் செய்யும் உபகாரங்களை-அருளிச் செய்கிறார் –

மாதவன் தமர் என்று –
பிராட்டி புருஷகாரமாக பற்றின -அந்தப் புரத்துக்கு உரியவர்கள் அன்றோ –என்று ஆயிற்று அவர்கள் சொல்லுவது-
ப்ரஹ்மசாரி எம்பெருமானைப் பற்றினவர்கள் அன்றே –

வாசலில் வானவர் –
வழியில் தேவர்கள்-
வாசல் -வழி-அவர்கள் ஆவார் -வருண இந்திர பிரஜாபதிகள் –

போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் –
இங்கனே எழுந்தருள வேண்டும்-
எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேண்டும்-என்று வேண்டிக் கொள்கிற அளவிலே –

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் –
கின்னர்களும் கருடர்களும் பாட்டுக்களைப் பாடினார்கள் –
கின்னர தேசத்தில் உள்ளாறும் கெருட தேசத்தில் உள்ளாறும் பாடினார்கள் –

வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே –மடுக்க -எச்சத திரிபு
மேலே உள்ள லோகங்களிலே-வைதிகராய்க் கொண்டு யாகங்களைச் செய்கின்றவர்கள்-
தங்கள் யாகங்களின் பலன்களை-இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –
விருப்பம் இல்லாதவராய் போகின்ற இவர்களுக்கு-
தம் தம் அதிகாரங்களைக் கொடுப்பார் பாடுவார்-
யாகங்களின் பலன்களை சமர்ப்பிப்பார் ஆகிறார்கள்-தங்கள் தங்கள் விருப்பத்தாலே –
அதனைக் கேட்டு-
பிரீத கஸ்சித் முநி தாப்யாம் சம்ஸ்தித கலசம் ததௌ-பிரசன்ன வல்கலாம் கஸ்சித் ததௌ தாப்யாம் மகாயஸா -பால 4-20-
ஒரு முனிவர் மகிழ்ந்து அவர்களுக்கு கலசத்தை கொடுத்தார்-
புகழ் பெற்ற மற்று ஒரு முனிவர் எதிரே வந்து மர உரியை கொடுத்தார் -என்கிறபடியே-
தங்கள் தங்களுக்கு உள்ளனவற்றை கொடுக்கும் அத்தனை -அன்றோ –

———————————————————————————————

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

ஆதி வாஹிக பத்நிகள்-சேஷித்வ சிஹ்னம்-அடியார் -மஹிஷிகள் –
வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை-வைதிகர் தங்கள் யாக பலன்களை சமர்ப்பித்த வாறே -ஸூ கந்தமான தூபம் கலந்து
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்-வாத்தியங்கள் சங்குகள் த்வநித்து
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று-ஸ்வர்க்காதி லோகங்களை இதுவும் லீலா விபூதி தானே -ப்ரீதி
முன்பே செங்கோலைக் கொடுத்து புருஷர்கள் -இங்கு இவர்களும் கை ஓலை போட்டு கொடுத்தபடி –
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே-ஒளி தர்ச நீயமான தேவ ஸ்த்ரீகள் –

உபசரித்தல் முன்னாக-தெய்வப் பெண்கள் உகந்து-இவர்களை வாழ்த்தினார்கள் –என்கிறார் –

வேள்வி உள் மடுத்தலும்
-அவர்கள் தங்கள் யாகத்தின் பலன்களை சமர்ப்பித்த அளவிலே-வேறே சிலர் –

விரை கமழ் நறும் புகை –
வாசனை மிக்கு இருந்தமையால் விரும்பத் தக்கவான-
அகில் தொடக்கமான பொருள்களைக் கொண்டு-நல்ல புகைகளை உண்டாக்கினார்கள் –

காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் –
அவர்கள் கொடுக்கிறவற்றை இவர்கள் கைக் கொள்ளுகிற அளவில் வேறே சிலர்-
காளங்களையும் வலம் புரி களையும் கலந்து ஒலிக்கச் செய்தனர்-
கலந்து எங்கும் இசைத்தல் ஆவது-
மாறி மாறி எங்கும் ஒக்க ஒலிக்கச் செய்தல் –

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –
சர்வேஸ்வரனுக்கு அடியவர்களான நீங்கள்-
இவ்விடத்தை ஆளீர் கோள்-என்று ஆயிற்று துதிப்பது –
நதேரூபம் நசாகார நாயுதானி ந சாஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் தவம் பிரகாசச -ஜிதந்தா -5-
பக்தர்களுக்காகவே என்றோ அன்றோ இருப்பது –
ஆளுகைக்கு குறை என் என்பார்கள் –
பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ என்றார் அன்றோ –

வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே –
ஆதி வாஹிகத் தலைவர்கள் உடைய மனைவிமார்கள் வாழ்த்தினார்கள்-
வேறு தேசத்துக்கு போன குழந்தையை தாய் மார்-குளிரப் பார்க்குமாறு போலே-
ஓளியை உடையைவாய அழகிய கண்களாலே குளிர நோக்கின்படி-
கணவன்மார்கள் பணி செய்கையாலே -நாமும் செய்யத் தகும் -என்று-கருதிச் செய்கிறார்கள் அன்று –
ப்ரீதியாலே செய்கிறார்கள் இத்தனை ஆதலின் -மகிழ்ந்து -என்கிறார் –
இங்குப் பகவான் உடைய சம்பந்தமே காரணமாக நீசராலே-பரிபவம் செய்யப் பட்டவன்-
சரீரத்தை விட்டு பிரிந்த காலத்தில் தங்களுக்கு மேலே ஒருவர் இல்லாதாரான-
தேவர்கள் கொண்டாடும்படி அன்றோ இவன் பேறு-

———————————————————————————–

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

ஷீரார்ணவ சாயி -சர்வாதிகன் -அர்ச்சாவதார சுலபம் -கோவலன் -வைபவம் -அனைத்தையும் சேர்த்து சொல்லி –
பர வாசுதேவன் விஷயமாக -என் கேசவன் -அந்தர்யாமி -சொல்லி –
சேஷ பூதர்களுக்கு மருத் கணங்கள் -திதி தேவி கர்ப்பம் -இந்திரனை வெல்ல -ஆசாரம் குறைந்தால் வீணாகும்
-காலை மடித்து மாலை படுக்க தலை கூந்தல் காலில் பட்டு ஆசார குறைவு -இந்திரன் வஜ்ராயுதம் ஏழாக வெட்டி மீண்டும் ஏழாக
வாயு கணங்கள் -அஷ்ட வசுக்கள் –
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்-தம் தாம் ஸ்த்ரீகள் வாழ்த்த -அனுபவ த்வரையால்-
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்-
வேகமாக தொடர்ந்து சென்று -முக்தன் -பகவத் அனுபவ த்வரையால் போலே இவர்களும் தொடர்ந்து ஸ்தோத்ரம் பண்ண –
தொடு -தொண்டப் பட்டதால் சாகரம் -சகரன் பிள்ளை தோண்டிய தொடு கடல்
ஆழம் காண முடியாத கடல் -ப்ரஹ்மாதிகள் உத்பாதகன் என் போல்வாருக்கும் உத்பாதகன் –
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி-அனுபாவ்யமான திரு அபிஷேகம் சேஷிக்கு அடையாளம் -சர்வாதிகன் ஆதிராஜ்ய -ரத்னகசிதமான திரு அபிஷேகம் –
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே-திருக் குடந்தை -குடந்தை கிடைத்த மாலை அடி நாயேன் நினைந்திட்டேனே
தொடக்கமும் -சூழ் புனல் குடந்தையே தொழுது -ஆறு பிரபந்தங்களும் இவனுக்கே -இதனால் தானே
திவ்ய பிரபந்தம் கிடைக்க மூல கர்த்தா -திராவிட ஸ்ருதி தர்சனகாயா நம -அர்ச்சனை உண்டே –
குடைத்தையன் -கோவலன் -கண் வளர்ந்து அருளி -கிருஷ்ணன் -சந்தானமாக அடிமை -குடி குடி வந்து ஆட் செய்த –

மருத்துக் கணங்களும்-வசுக் கணங்களும்-தங்கள் எல்லைக்கு இப்பாலும் தொடர்ந்து சென்று
இவர்களை துதி செய்தார்கள்-என்கிறார் –

மடந்தையர் வாழ்த்தலும் –
அத் தெய்வப் பெண்கள் புகழ்ந்த அளவிலே-

மருதரும் வசுக்களும் –
மருத்துக் கணங்களும் வசுக் கணங்களும் –

தொடர்ந்து எங்கும் –
தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாம் இடம் எங்கும் சென்று-

தோத்திரம் சொல்லினர் –
புகழ்ந்தார்கள் –
ஒரு காண நேரத்தில்-ஒரு உலகத்தின் நின்றும் வேறு உலகத்துக்கு ஏறப் போமவர்கள் ஆகையாலே
தங்கள் எல்லைக்குள்ளில் புகுந்த அளவால் மனம் நினைவு பிறவாமையாலே
தொடர்ந்து புகழ்கின்றார்கள் ஆகையால் -எங்கும் தொடர்ந்து -என்கிறார் –
அவர்கள் தாம் சடக்கென போகிற இதற்கு அடி என் என்னில் –
தாங்கள்-
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்ற சங்கம் -திரு விருத்தம் -47 -என்றும்
காண்பது எஞ்ஞான்று கொலோ -5-9-4- என்றும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் -9-8-7-என்றும்
உடன் கூடுவது என்று கொலோ-8-9-10-என்றும் இருக்கையாலே-
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷ ணாம் -சுந்தர 66-10-
பிராட்டியைப் பிரிந்து காண நேரமும் உயிர் வாழேன் என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் ஆம் –

தொடு கடல் கிடந்த-
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் அதனை விட்டு-பிரமன் முதலாயினார்கட்கு முகம் கொடுக்கைக்காக-
திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிற படி-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ -இத்யாதி –
தொடு கடல்-
தோண்டப்பட்ட கடல்-ஆழ்ந்த கடல் -என்றபடி –

எம் கேசவன்-
அடியார்களுக்காக கிருஷ்ணனாய் வந்து பாதுகாத்தவன் –

-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே —
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவாதபடி-திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே-கண் வளர்ந்து அருளுகிறான் -என்கிறது-

கிளர் ஒளி மணி முடி-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே-
பரத்வன்- ஷீராப்தி நாதனாகவும்- ஸ்ரீ கிருஷ்ணனாகவும் -அந்தர்யாமியாகவும் -அர்ச்சாவதாராமாகவும்
ஆவிர்பவித்து பட்ட பாடு எல்லாம் பலித்ததே -நீர்மை சொல்லப் பட்டது –
அவன் சென்று பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று அன்றோ ஸ்தோத்ரம் செய்வார்கள் –
ஆதி ராஜ்யம் -கோள் சொல்லிக் கொடுக்கும் -நீர்மையில் தோற்று சந்தானமாக எழுதிக் கொடுத்த அடியவர்கள் அன்றோ இவர்கள் –
அடியார்களை தொடர்ந்து எங்கும் ஸ்தோத்ரம் சொன்னார்கள் என்றபடி
குடந்தையன் கோவலன் -குடந்தை எம் கோவலன் பாட பேதங்கள்

——————————————————————————–

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

சுத்த சத்வமயம் -கீழே மிஸ்ர சத்வம் -பிரகிருதி வரைக்கும் –
தமஸ் தாண்டி –
ஆஸ்ரித சுலப கிருஷ்ண அடியார்கள் -நித்ய ஸூ ரிகள் நாட்டு எல்லையில் வந்து எதிர் கொள்ள
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று-கோவலன் -அவனுக்கே ஆட் பட்டு
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள-நித்ய ஸூ ரிகள்-ஸாரூப்யம் கொண்ட நித்ய ஸூ ரிகள்
-தம் தாம் தரங்கள் தப்பாமல் -நீதி வானவர்கள் அன்றோ -முறை மாறாமல்
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
கொடிகளால் அலங்க்ருதம் -கோபுரம் நோக்கி -முக்தர்களும் நித்யர்களும் தலை வாசலுக்கு வந்து எதிர் கொள்ளுகிறபடி
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே-அலங்க்ருதமான வடிவு -புதுசாக -கொண்ட அலங்காரம் -ந கால இருந்தாலும்
-எல்லாம் உண்டே -விஸ்வரூபம் – புது பரிவட்டம் -காலம் இல்லை என்றாலும் –
முக்த ஜீவன் வர -விஷ்வக் சேனர்-பட்டியல் கொடுத்து -அவனும் அவளும் -சேர்ந்து -கூட எழுந்து அருளி
-மாதவன் -மிதுனத்தில் தானே ப்ராப்யம் -ஒரே ஆசனம் -கைங்கர்யம் கொடுக்க வேண்டும் -புதுசாக உருவாக்க முடியாதே
-அது தான் அவளது சாமர்த்தியம் -காந்தஸ்ய புருஷோத்தம -தாஸ தாஸீ கணம் -சர்வேஸ்வரன் உடைய ஸ்ரீ வைகுந்தம் –

இவ் உலகங்கட்கு எல்லாம் அவ்வருகே-பரமபததுக்கு புறம்பாக-
நித்ய சூரிகள் இவர்களை-எதிர் கொள்ளுகிறபடியை-அருளிச் செய்கிறார் –

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று –
கோவிந்தன் தனக்கு -இவர் -குடி அடியார் -என்று –அவனுடைய எளிமையில் தோற்று-
உற்றார் உறவினர்களோடு எழுதிக் கொடுத்தவர்கள் என்றாயிற்று-நித்ய சூரிகள் ஆதரிப்பது –
குடந்தை எம் கோவலன் குடி அடியார் -என்றார் மேலே –
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு -என்றது இங்கே –
இதற்கு கருத்து என் என்னில்
இவர்கள் அவதாரங்களைப் பற்றினவர்கள்-
இவர்கள் உகந்து அருளின நிலங்களைப் பற்றினவர்கள் என்று ஆயிற்று அவர்கள் சிறப்பிப்பது –

முடி யுடை வானவர் –
அவனைப் போன்ற பெருமையில் குறைவு அற்றவர்கள் ஆயிற்று இவர்களை ஆதரிப்பார்கள்-
திருமுடி அவனுக்கும் நித்ய சூரிகளுக்கும் ஒக்குமாகில் வாசி என் என்னில்-
அவன் சேஷித்வத்துக்கு முடி சூடி இருப்பான்-
இவர்கள் சேஷத்வத்துக்கு முடி சூடி இருப்பவர்கள் –

முறை முறை எதிர் கொள்ள –
வகை வகையாக தாம் தப்பாமல் எதிர் கொள்ள –
யத்ர பூர்வே சாத்யா -புருஷ சூக்தம்-
எவ்விடத்தில் முன்னோர்கள் பற்றத் தக்கவர்கள்-
சாத்யா -உத்தேச்யர்-
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -3-3-10- என்றும்-சொல்லுகிறபடியே-
தங்களுக்கு உத்தேயர் ஆனவர்களுக்கு உத்தேச்யர் ஆகிறார் அன்றோ இவர்கள்-

கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் –
இவர்கள் வருகிறார்கள் என்று கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதாய்-
ஒக்கத்தை உடைத்தாய் -பரம பதத்துக்கு எல்லையான-திரு மதிளிலே திருக் கோபுரத்தை சென்று கிட்டினார்கள் –

வடிவுடை மாதவன்-
மகோத்சவம் இவ ஆசாத்யா புத்ரானன விலோகனம்-
யுவவே வாசுதேவ அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-52-
கிழத்தன்மை விட்டு வாசுதேவன் காளைப் பருவத்தை அடைந்தான் -என்கிறபடியே-
கம்சனைக் கொன்ற பின்பு பிள்ளையைக் கண்ட-ஸ்ரீ வசுதேவரும் தேவகி பிராட்டியாரும் போலவும் –
நந்தாமி பஸ்யநபி தர்சனேன பவாமி த்ருஷ்ட்வாச புன யுவா-அயோத்யா -12-105-
பெருமாளைக் கண்ட சக்கரவர்த்தி மீண்டும் இளமைப் பருவம் அடைந்தார்-என்று சொல்லப் பட்டால் போலவும் –
வா போகு-இத்யாதி -சுப்ரமண்யன் போன்ற அழகன் -ரிஷி கரி பூசுகிறான் –
அன்றிக்கே –
வடிவுடை மாதவன் –
தங்கள் வரவால் உண்டான உவகையாலே புதுக் கணித்த-வடிவை உடைய-திருமகள் கேள்வன் -என்னுதல் –

வைகுந்தம் புகவே –
பரம பதத்தில் புகுகைக்காக-வந்து கிட்டினார் -என்றவாறே
தனக்கும் பிராட்டிக்கும் வடிவு இட்டு மாறினால் போலேயாம் -என்றபடி-
வைகுந்தம் புகவே மாதவன் வடிவுடை ஆனார்கள் -என்றபடி -திருவா மாலா வாசி தெரியாதபடி மாறினால் போலே –

—————————————————————————————-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

திருவாசல் காக்கும் முதலிகள் ஸத்காரம் –
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்-புக்க அளவில் கோயில் வாசல் காக்கும் முதலிகள்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று-எங்களுக்கு சேஷி -பொன்னடி சாத்தி அருள வேணும் -புகுத்துக என்று -அகத்தில் அதிகாரத்தில்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்-கைங்கர்ய நிஷ்டர்கள் குணானுபவ நிஷ்டர்கள் -அனுபவித்து உருகி –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-பாக்யம் -என்றவாறு -கிருபையால் -பூமியிலே சப்தாதி பிரவணராய்
-இங்கே வருவதே என்று உகந்து -ஆச்சரியமாக எமது இடம் புகுந்து வியந்தனர் என்றவும் –
அமரரும் முனிவரும் வியந்தனர் என்றும் -கொள்ளவுமாம்

பரமபதத்தில் சென்று திரு வாசலில்-முதலிகளால் உபசரிக்கப் பட்டவர்களாக-
அங்குள்ள நித்ய சூரிகள்
பரம பதத்தில் வருவதே –இது என்ன புண்ணியத்தின் பலம் –என்று ஈடுபட்டார்கள் -என்கிறார் –

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் –
பரம பதத்தை சென்று கிட்டின அளவில்-திரு வாசல் காக்கும் முனிவர்கள் –

வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று –
ஸ்ரீ வைகுண்ட நாதன் உடையார் எங்கள் உடைய ஸ்வாமிகள்-
எங்கள் பதத்தினைக் கைக் கொள்ள வேண்டும் -என்று ஆயிற்று அவர்கள் பாசுரம் –
பயிலும் திரு உடையீர் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -2-7-1- என்ற இவரைப் போலே ஆயிற்று -அங்கு உள்ளாறும் இருப்பது -என்றது
திருவாசலில் முதலிகள் எதிரே வந்து உபசரித்து கையைக் கொடுத்து-கொண்டு புக்கு தங்கள் கைப் புடைகளிலே இருத்தி
திருக் கையில் பிரம்பையும் கொடுப்பார்கள் -ஆயிற்று -என்றபடி –
சென்று புகுகிற வர்களுக்கும் அடிமை வேலையே உத்தேச்யம்-
அங்கு இருக்கிற வர்களுக்கும் அடிமை வேலை செய்தலே தொழில் ஆகையாலே-
கைங்கர்யமே உத்தேச்யம் கைங்கர்யமே யாத்திரை என்றவாறு -இவர்கள் கொள்ளுவதும் அது-
–புகுத -என்றது -புகுதுக -என்றபடி –

வைகுந்தத்து அமரரும் முனிவரும் –
ஸ்ரீ பரத ஆழ்வானையும் இளைய பெருமாளையும் போலே-குணநிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டரும் –

வியந்தனர்-
ஈடுபட்டார்கள் –

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –
கடலிலே உள்ள நீர் மலையிலே ஏறக் கோத்தால் போன்று-இப்பிறவியிலே உழன்று திரிகின்றவர்கள்-
பரம பதத்தில் புகுரும்படிக்கு ஈடாக-புண்ணியத்தை பண்ணுவதே -என்று ஆழம் கால் பட்டார்கள் –

————————————————————————————–

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

ஸ்ரீ வைகுண்ட நாதன் ஆணையால் சூரிகளும் திவ்ய அப்சரஸ் களும் ஆதரித்த படி
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்-ஈஸ்வரன் நியோகப்படி ஆனைப் படி -இதில் தான் புகுந்தனர் –
விலக்ஷண வேதாந்தம் பிரசித்த ஸூ ரிகள் -பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்-தங்கள் திவ்ய ஸ்தானங்களில்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்-தானம் மதியம் -ஆஸ்ரிதர்களுக்கு திருவடி -திருச் சூரணம் பூர்ண கும்பம் மங்கள தீபம்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே-இவர்கள் தரிசனத்தால் ஒளி பெற்ற முகம் -எதிரே வந்து ஏந்தினார்கள் -பாரதந்தர்யம் ஸூ சகம் -மடப்பம் –

நித்ய சூரிகள் இவர்களை-கொண்டாடும் படியை-அருளிச் செய்கிறார் -.

விதி வகை புகுந்தனர் என்று —
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்று இவர்கள் சொல்லுகிற வார்த்தை அன்று என்று-வேறு சிலர் –
இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது-
நாம் செய்த புண்ணியத்தின் பலம் அன்றோ -என்பர் -என்றது-
விஷயங்கள் நடை யாடுகிற இவ் உலகத்தில் இருந்து வைத்து-வேறு பயனைக் கருதாதவராய் –
பகவானுடைய குணங்களை அனுபவிக்கிற மகா புருஷர்களாய்-விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுகிற-
இவர்கள் வந்து புகுரப் பெற்றது நாம் செய்த புண்ணியத்தின் பலம் என்றோ என்பார்கள் என்றபடி –
மேலே -வைகுந்தம் புகுவது -என்றார் –
இங்கு புகுந்தனர் -என்கையாலே தங்கள் புண்யத்தைக் காட்டுகிறது –

நல் வேதியர் –
ஸ்ரீ புருஷ ஸூ க்தாதிகளில் பிரதிபாத்யம் -சொல்லப் பட்டவர்கள் -என்றபடி –
யத்ர ரிஷய பிரதம ஜாயே புராணா-
எவ்விடத்தில் காண்கின்றவர்களும் முன் தோன்றியவர்களும்-பழமையானவர்களும் –
புராணர்-புரா நவ -பகவத் அனுபவத்தால் இளகிப் பதித்தவர்கள் -ஸ்துதி பண்ணி அனுபவத்தில் ஏக சிந்தையராய்
யத்ர பூர்வே சாத்யா சந்திதேவ –
எங்கும் உள்ளவர்களும் பற்றத் தக்கவர்க்களுமான தேவர்கள்-
தத் விப்ராச விபத்யவ ஜாகுயாம்ச சமிந்ததே விஷ்ணோ யத் பரமம் பதம்-
எங்கும் பரந்து இருக்கின்ற திரு மாலுக்கு யாதொரு சிறந்த இடம் உண்டோ

அந்த பரம பதத்தை -ஞானம் நிறைந்தவர்களும்-துதிப்பதையே தன்மையாய் உடையவர்களும்
எப்பொழுதும் ஜாக்ரதையோடு கூடினவர்களுமான
நித்ய சூரிகள் அடைகிறார்கள் -என்று-வேதங்களால் சொல்லப் பட்டவர்கள் –

பதியினில் –
ஆதி சேடன் -பெரிய திருவடி முதலானவர்கள்
தங்கள் திரு மாளிகைகளிலே கொடு புக்கு –

பாங்கினில் பாதங்கள் கழுவினர் –
இவன் பிறப்பு இறப்புகளில் உழன்று திரிந்து போந்த ஒருவன்-
நாம் சம்சாரத்தின் வாசனை தீண்டப் பெறாதவர்கள்-என்ற வாசி வையாதே-
இவனை சிங்காசனத்திலே உயர வைத்து-
அவர்களுக்கு பாங்காக தாங்கள் இருந்து-திருவடிகளை விளக்குவார்கள் –
சிஷ்யர்கள் ஆகவுமாம் புத்திரர்கள் ஆகவுமாம் -பகவத் சம்பந்திகள் கௌரவம் பண்ணப் படுபவர்கள் -நீராடப் போதுவீர்-
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் –
கண்ணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறுவரோ
பராசர பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம் திருத்த தாயார் ஆண்டாள் சுவீகரித்துக் கொண்டாளே

நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
அவ்வளவிலே பகவானுக்கு தொண்டு செய்கிறவர்கள் வந்து-எதிர் நிற்ப்பார்கள்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செல்வமான திருவடி நிலைகளையும்
திருச் சுண்ணப் பிரசாதத்தையும்
நிறை குபங்களையும்-மங்கள தீபங்களையும் -ஏந்தி –

மதி முக மடந்தையர் -ஏந்தினர் வந்தே
வேறு தேசத்திற்கு போன பிள்ளைகள் வந்தால்-தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே
உவகையாலே பூர்ண சந்தரனைப் போலே
இருக்கிற முகங்களை உடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் —

—————————————————————————-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

பகவத் அனுபவம் பலம் -மனன சீலர் முனிவர் -பகவத் அனுபவம்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து-வந்து அவர் எதிர் கொள்ள -பெருமாளும் பிராட்டியும் சேர்ந்து -லஷ்மீ ஸஹாயர் அவரே –
பிரதான விஷ்வக் சேனர் முதலானோர் என்றுமாம் –
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை-நித்ய முக்தர்கள் உடன் இருந்தமையை -முடிவு இல்லாதவாகவும் அபரிச்சின்னமானவாகவும் -இருந்த பிரகாரத்தை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-பூ கொத்து -திரு நகரிக்கு நிர்வாகர்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே-ஆயிரத்து பத்து -இங்கு இவை பத்தும் சொல்லாமல் -பர பக்தி தசையில் -அப்படி
விருத்தம் பேதங்கள் உண்டே வெண்பா பா இனம் போல்வன -இவை இந்த பத்தையும் அனுசந்திக்க வல்லார்
-வைகுந்தது அமரர் முனிவர் -குண நிஷ்டர் -குண மனன சீலர் ஆவார்கள்
சந்தஸ் -வேதம் ஆகவுமாம் -தமிழ் வேதரூபம் என்றவாறு –

நிகமத்தில்
இத் திருவாய் மொழியைக் கற்றவர்-நித்ய சூரிகளோடு ஒப்பர்-என்கிறார்-

வந்தவர் எதிர் கொள்ள –
அவர் வந்து எதிர் கொள்ள –
வடிவுடை மாதவன் -அவர் -பிராட்டி யோடு கூட எம்பெருமான்-தானே வந்து எதிர் கொள்ள –
அன்றிக்கே –
இந்த பிரகிருதி சம்பந்தம் இல்லாத -நல் வேதியர் -அயர்வறும் அமரர்கள் எதிர் கொள்ள -என்னவுமாம் –

மா மணி மண்டபத்து –
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே –

அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –
இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-
பாண்டு ஒருவன் மேல் -மான் உருக் கொண்ட மனைவி உடன் சேர்ந்த முனிவன் -மேல் அம்பை விட-சாபம் -கொடுத்து –
இவ் உலக வாழ்க்கையில் ஆயிரம் கூற்றில் ஒரு கணம் ஆயிற்று சுகம் உள்ளது-
அதனையும் அனுபவிக்க ஒட்டிற்று இல்லையே -என்றானே அன்றோ –ரிஷிகளையும் மயக்கும் படி அன்றோ ஐம்புலன் இன்பங்கள் –
பர்வத பரமாணு வாசி இதனால் தானே -ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் —
அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது என்றவாறு –

அடியரொடு இருந்தமை –
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –

கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-
எப்பொழுதும் மலர்களை உடைத்தான சோலையாலே-சூழப் பட்ட-திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –
போக்கிலே ஒருப்பட்ட வாறே திரு நகரியே தொடங்கி போலே காணும் சோலை செய்வது -அலர் –
அந்தமில் பேர் இன்பத்து -ஆழ்வாருக்கும் கொள்ளலாம்

சந்தங்கள் ஆயிரத்து –
விருத்தங்களை உடைத்தான ஆயிரம் -என்னுதல்
சந்தோ ரூபமான -வேதத்தின் உருவான ஆயிரம் -என்னுதல் –

இவை வல்லார் முனிவரே –
இப்பதத்தினை கற்க வல்லார்-
அப் பரம பதத்திலே பகவான் உடைய குணங்களை அனுபவித்து-அவற்றிலே ஈடுபட்டவராய்-
அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே-இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்- இங்கேயே முக்தர்களைப் போலே ஆவார்கள் –

வகுள மாலை -சாத்தி -சேஷத்வ ஸூ சகம் -குறவன் கொண்டை -கிளி கொண்டை நித்யம் சாத்தி சேவை சாதிப்பார் –
குறட்டில் எழுந்து அருளி -கொட்டு வந்ததா -என்பர் -ஆச்சர்யமான உத்சவம் –
நாலாயிரம் -ஸ்ரீ வசன பூஷணம் -ஆச்சார்ய ஹிருதயம் பெண்கள் நித்ய அனுசந்தானம் ஆழ்வார் திருநகரியில்
-ஞானம் பிரேமம் மிக்கு -ஆழ்வார் மேலே வெய்யில் படாமல் –

————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

நவமே சடாரி
ஆசாதீதோ முனி ரபோத்
தத்ர ஸ்திதிக்கு சுகமயீஞ்ச ஹரி பிரியாணாம் ததீய ஜனீ
ஸத்காரம் சுரைர் அபி
அத்வனி
சந்நிஹ்ருஷ்டே-குறுகினர்
பிரதி உத் கதிம் பரம தாம்நி ததீயர் –

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்வாமி த்வாத்-
ஸ்ரீ சன் நாராயணன் இதி
விக்ரமாது விஷ்டமானாம் பூமி அன்று அளந்தவன் தமர்
ஸ்ரீ மத்வாத்-மாதவன் தமர் 4/5-மதுரா மது -லவணாசுரன் மது அப்பா பிள்ளை
சக்ரவத்வாத்
ஜல நிதி சயநாச்சாபீ
கோவிந்தன் பாவாத்
வைகுண்ட ஸ்வாமி பாவாத் அபிச
நிஜ ஜன அர்ச்சிராதி கம்ய
ஸ்ரீ சடாரி பபூவ-கதயாமாச

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 99-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி —————99-

——————————————————————————–
அவதாரிகை –

இதில்
அர்ச்சிராதி மார்க்க சத்காரத்தை-அடையக் காட்ட
அனுபவித்து அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –
இவரை அமர்ந்த நிலமான பரம பதத்திலே கொடு போய் வைத்து
இவரும் தானுமாக அனுபவிப்பதாக சர்வேஸ்வரன் விசாரித்து
இவருக்கு அர்ச்சிராதி மார்க்கத்தையும்
அங்கு உள்ளார் பண்ணும் சத்கார விசேஷங்களையும்
பரமபத பிராப்தியையும்
அங்கு உள்ளார் வந்து எதிர் கொண்டு சத்கரிக்கும் கட்டளைகளையும்
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும்
இவருக்கு கண்டு அனுபவிக்கலாம்படி
பர ஜ்ஞான தசையை பிறப்பித்துக்-காட்டிக் கொடுக்க
இவரும் கட்டடங்க கண்டு அனுபவித்து
தாம் பெற்ற பேற்றை அன்யாபதேசத்தாலே-அருளிச் செய்கிற
சூழ் விசும்பு அணி முகிலில் அர்த்தத்தை
சூழ்ந்து நின்ற மால் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை-

————————————————————————————————-

வியாக்யானம்–

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட –
கீழ்
இவரைச் சூழ்ந்து கொண்டு
நிவ்ருத்தனாய் நின்ற சர்வேஸ்வரன்
ஏஷா சாத்ருச்யதே -இத்யாதி படியே
பரம ஆகாசத்திலே தேஜக்ரச்சாச்வதே மதே -என்று
பூர்வ மார்க்கமான அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்ட
அமந்திர ஜோஸ்த்வ கோஷம் போலே
ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற
மேக சமுத்திர பேரீ கீத காஹள சங்கா சீச்துதி-கோலாஹலம்-செவிப்படும் படியையும் –
அலங்கார விதிம்க்ருதச்னாம் காரயமாச வேசமான -என்கிறபடியே
அங்குள்ள ஆதிவாஹிக சத்கார க்ரமத்தையும்
மேல் ‘நித்ய சூரிகள் பிரத்யுக்தராய்
சத்கரிக்கும் க்ரமத்தையும்
த்வாராத்ய ஷரர்சத்கரிக்கும் க்ரமத்தையும்
திவ்ய அப்சரஸ் சத்கார க்ரமத்தையும்
சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாரும் ஆதரிக்கும் படியையும்
திவ்ய சூரி பரிஷத்தில் இருந்து
ஆனந்த நிர்பரராய் அனுபவிக்கும் படியையும்
தொல்லை வழி காட்ட -என்ற அதிலே
இவ்வளவும் அனுவர்த்தித்த படி –
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து —
அதிலே ஆழம் கால் பட்டு
அவன் காட்டின எல்லாவற்றையும் கட்டடங்க அனுபவித்து
அதாவது –
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின-என்றும்
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-பூரண பொற் குடம் பூரித்த உயர் விண்ணில் -என்றும்
தொழுதனர் உலகர்கள் -என்று தொடங்கி வழி இது வைகுந்ததற்கு என்று வந்து எதிர் எதிர் -என்றும்
எதிர் எதிர் இமையவர் என்று தொடங்கி-மது விரி துழாய் முடி மாதவன் தமர்கே-என்றும்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் -என்று தொடங்கி-வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே -என்றும்
வேள்வியுள் மடுத்தலும் -என்று தொடங்கி -வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் -என்றும்
மடந்தையர் வாழ்த்தலும் -என்று தொடங்கி -குடந்தையன் கோவலன் குடி குடி யார்க்கே -என்றும்
குடியடியார் -என்று தொடங்கி-வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே -என்றும்
வைகுந்தம் புகுதலும் -என்று தொடங்கி-வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்றும்
விதிவகை -என்று தொடங்கி -மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி –பேரின்பத் தடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி-முழுவதும் அனுபவித்த படி -என்கை –

அனுபவித்து வாழ்ந்து –
இவ்வனுபவத்தை அடைவே அனுபவித்து
க்ருதார்த்தராய் –

அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் –
பரம பதத்திலே
ஆனந்த மயமான
திரு மா மணி மண்டபத்திலே
அனந்த கருட விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு
ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்
முடி மகிழ் சேர் ஞான முனி –
முடியுடை வானவரோடேகூடுகையாலே
முடியை யுடையராய்
பிரபந்தம் தலைக் கட்டுகையாலே
ஆழ்வாரும்
அளக பந்தத்திலே வகுள பந்தத்தை யுடையராய்
தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார் –
அவன் –
மது விரி துழாய் மாதவன் –
இவர் –
முடி மகிழ் சேர் ஞான முனி
பர ஜ்ஞானத்தை உடைய பராங்குச முனியானவர் –

அடியருடனே இருந்த வாற்றை யுரை செய்தான் –
சூழ் விசும்பு அணி முகில் தொடங்கி-அடியரோடு இருந்தமை என்னும் அளவும்-அருளிச் செய்தார் –
எல்லாரும் விஸ்வசித்து உஜ்ஜீவிக்கைக்காக –

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: