பகவத் விஷயம் காலஷேபம் -187- திருவாய்மொழி – -10-8-1….10-8-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

திருமால் இரும் சோலை -பிரவேசம் –

அருள் பெறுவார் -என்கிற திருவாய் மொழியிலே-தம்மைக் குறித்து சர்வேஸ்வரனுக்கு உண்டான பாரதந்த்ர்யத்தைப் பேசினார் –
அந்த பார தந்த்ர்யத்தை முடிய நடத்தினபடி சொன்னார் செஞ்சொல் கவிகாள் -என்ற திருவாய் மொழியிலே –
நீர் சொன்னபடி செய்யக் கடவோம் -என்று தலை துலுக்கினான் அன்றோ –
இவரைத் திரு மேனியோடு கொடு போவதாக தேங்கின தேக்கம் அன்றோ நடுவே உள்ள பாசுரங்கள் –
அது ஒழியக் கொடு போவதாக அற்ற அன்றே பதறத் தொடங்கினான்-
சிலரை ஆதி வாஹிக கர்த்தாக்களை வரவிட்டுக் கொடு போம்-
சிலரை பெரிய திருவடியை வரக் காட்டி கொடு போம் –
திருவடி திருத் தோளிலே வந்து தானே கொடு போகத் தக்கவர் அன்றோ -இவர்
மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்-என்னுடைய அடியவனை இறுதிக் காலத்திலேயே நானே நினைக்கிறேன் -கொண்டு போகிறேன் -என்கிறபடியே-
கள்வன் கொல் -பெரிய திருமொழி -8-7-1-என்ற திருவாய் மொழியில் பிராட்டியை ஆள் இட்டுக் கொண்டு போகும் அன்றே அன்றோ-
இவரையும் ஆள் இட்டுக் கொடு போவது-

நானிலம் வாய்க்கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்கா உது அம்பூந்
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே -திரு விருத்தம் -26-

மாலை நண்ணி சுருக்கமான பாசுரம் இது –
நானிலம் வாய்க்கொண்டு -நான்கு வித குறிஞ்சி முல்லை மதம் நெய்தல் -உண்ட பின்பு
நன்னீர் அறம் என்று கோது கொண்ட-வேனிலம் செல்வன் -ஆதித்யன் -சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
-நாயகியைக் கூப்பிட்டு -மீதி பாலை வானம் தாண்டி போக
தானே சோலை வானம் கூப்பிட்டு போக -சம்சாரம் பாலை வானம் தாண்டி
புணர்ந்து உடன் போக்கு துறை –
ஈஸ்வரன் வைஷ்ணவர் –
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்கா உது அம்பூந்-இது அது உது -தள்ளி இல்லை கிட்டவும் இல்லை திரு வெக்கா
கால் நிலம் தோய்ந்து -தேவர்கள் காலை வைத்து பற்ற
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே-எல்லா அவஸ்தைகளிலும் க்ஷேமம் –

இவ் உலக வாழ்க்கையாகிற பாலை நிலத்தைக் கழித்துப் போந்தோம்-
நச புன ஆவர்த்ததே -என்கிற தேசத்திலே புகுந்தோம்-என்று தானே சொல்லித் தேற்றிக் கொண்டே அன்றோ போவது –

முன்னம் ஏழ் புரவியார் இரவிகாய் வெயிலினால்
முத்தரும் பியகிலா முழு மதித் திரு முகத்து
அன்னமே இன்னமோர் காவதம் போது மேல்
அகலும் இப்பாலை அப்பால் அரைக் காவதம்
என்னை யான் உடையவன் துயில் அரா அமளியும்
இலகு பொற் கோயிலும் இந்துவின் பொய்கையும்
புன்னை வாய் நீழலும் புரிசையும் மதுகரப்
பூ விரித் துறையும் அக் காவிரித் துறையுமே -திருவரங்க கலம்பகம்-50-
ஆக
இப்படி தம்மை அவ்வருகே கொடு போகையிலே பதருகிறபடியை அருளிச் செய்தார்-
இவன் இப்படி நம் பக்கலிலே பதருகைக்கு அடி என் என்று பார்த்தார்-
தம்பக்கல் ஒன்றும் கண்டிலர் -என்றது –பலம் கண்டோம் சாதனம் கண்டிலம் –
முதலிலே தம்பக்கலிலே -அத்வேஷம் -வெருப்பின்மையும் பிறப்பித்து-
அது அடியாக -விசேஷ கடாக்ஷம் -விசேடமான திரு வருளைச் செய்து –
நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய்-வெருப்பின்மையும் பிறப்பித்து-
அமலங்களாக விழிக்கும்-விசேடமான திரு வருளைச் செய்து
மருவித் தொழும் மனமே தந்தாய்-தம்பக்கலிலே இச்சையும் பிறப்பித்து-
நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-தானே உபாயம் என்னும் புத்தியையும் பிறப்பித்து
விண்டே ஒழிந்தன வினையாயின வெல்லாம்-
நின் அலால் இலேன் காண்-தன்னால் அல்லது செல்லாமையைப் பிறப்பித்து-
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றேன்-தானே வந்து அவ்வருகு கொடு போவனாக விரைகிறபடியை
தம்பக்கலிலே இச்சையும் பிறப்பித்து-தானே உபாயம் என்னும் புத்தியையும் பிறப்பித்து-அசஹ்ய அபச்சாரத்திலே மிக்கராய்-
அசஹ்ய அபசாரம் ஆவது -நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால்-
அசஹமானனாய் இருக்கையும் ஆச்சார்ய அபச்சாரமும்-தத் பக்த அபச்சாரமும் -ஸ்ரீ வசன பூஷணம் -3-305-
இவர் தம்முடைய அபசாரங்கள் அனைத்தையும் பொறுத்து-ஐம்புல இன்பங்களில் ஆசை உடையவராய் போந்த தம்மை-
பல நீ காட்டிப் படுப்பாயோ -என்று தாமே சொல்லும்படி செய்து-
தன்னால் அல்லது செல்லாமையைப் பிறப்பித்து-தானே வந்து அவ்வருகு கொடு போவனாக விரைகிறபடியை நினைத்து –
இன்று இப்படி நம்மை விரும்புகிற இவன் -இன்று என்னைப் பொருளாக்கி –
பலகாலமாக நம்மை விட்டு ஆறி இருந்த படி எங்கனே-இன்று நம்மை விரும்புகைக்கு காரணம் என் -என்று பார்த்தார் –
தம் பக்கல் ஒரு காரணத்தையும் கண்டிலர்-
இப் பேறு – தாம் அடியாக வந்தது ஓன்று அல்லாமையாலே-தம் பக்கல் ஒரு வாசி கண்டிலர்-
முன்புத்தையில் காட்டிலும் இப்போது தமக்கு ஒரு ஏற்றம்-உண்டாக நினைத்து இருக்குமவர் அன்றே –

முன்பே தொடங்கி பல காலம் இவரைப்பெற வேண்டும் என்று இருக்கிறவன்-இப்போது இவர்க்கு ஒன்றனைச் செய்தானாக நினைத்து இரானே-
தாங்களும் அறியாதே சாஸ்திரமும் அறியாதே -ஈஸ்வரன் அறிந்த ஸூ ஹ்ருதம் –
ஊரைச் சொன்னாய் -மடி மாங்காய் இட்டு -தலையில் பொகட்டு ஒன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போவான் –

இனி -சர்வஞ்ஞன் ஆகிலும்-இதற்கு ஒரு போக்கு சொல்லுமாகில் அவனைக் கேட்போம் -என்று பார்த்து-
இன்று இப்படி இவனைத் தலையாலே தாங்கும் தேவரீர்-முன்பு பலகாலம் இதனைக் கை விட்டு இருப்பான் என்-
இப்போது இதனை விரும்புவான் என் -என்று கேட்டார்-
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே –உம் பக்கல் உண்டான வெறுப்பின்மை அடியாகச் செய்தோம் என்ன -மாட்டானே-
தான் அறிய அதுவும் தன்னாலே வந்தது ஆகையாலும்-
அது தான் பேற்றுக்கு ஈடான சாதனமாகப் போராமையாலும்-
இனி பாதுகாக்கின்றவனுக்கு பாது காக்கப் படும் பொருள்களை பல காலம் விட்டு இருந்த இதற்கு சொல்லலாவது ஓன்று இல்லையே
ஸ்வதந்த்ரம் அன்றோ இப்படி கெடுத்தது என்று -பிற்பாடன் ஆனதற்கு நாணம் உறுவதற்கு மேற்பட –
ஆகையால் சொல்லலாவது ஒரு மாற்றம் காணாமையாலே கவிழ்ந்து நின்று காலாலே தரையைக் கீறினான் –
ஊர்தல் உற்றேன் -ஒன்பதாவது பாசுரத்துக்கு இறைவன் பதில் இல்லை-
அடுத்து உற்றேன் உகந்து பணி செய்ய -தானே சமாதனம் அடைகிறார்-
ப்ராப்யாந்தகதம் இது வரை பண்ணியவை எல்லாம் –

அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணினன் எல்லழீ முகத்தனன் தலையன்
வெறுங்கை நாற்றினன் விழுதுடை ஆய் அன்ன மெய்யன் – கம்பர் –

முதலிலே
உலகத்தை படைத்தல் முதலானவைகளைச் செய்து-தன் பக்கலில் இச்சையைப் பிறப்பிக்கைக்கு வழி இட்டு வைத்தான் –
அவ் வழியாலே இச்சையைப் பிறப்பித்தான் –
தன்னிடத்திலே உபாயத் தன்மையை எறட்டுக் கொண்டு-
பொய் நின்ற ஞானம் தொடங்கி-இவ்வளவாகத் தன் பக்கலிலே வர நிறுத்தினான் –
பர பக்தி தொடங்கி பரம பக்தி முடிய உள்ள நிலை விசேடங்களைப் பிறப்பித்தான் –
இதனை முன்பே செய்யா விட்டது என் -என்ன –இதற்கு சொல்லலாவது ஓன்று இல்லாமையாலே-
செயல் அற்றவனாய் நிற்கிறான் இத்தனை-என்று பார்த்து-
இப்படி-என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
அவன்தம் பக்கல் செய்த அங்கீகாரத்தையும் –அதற்கு அடியான அவனுடைய கிருபை முதலான குணங்களையும் நினைந்து-
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை-
இது நிர் ஹேதுகமாக -ஒரு காரணம் இல்லாமலே-இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தாரே –
–அங்கீ கரிக்கும் அங்கீ காரம் இருக்கும் படியே -என்று
அதிலே ஆழம் கால் பட்டு -ஆச்சர்யத்தை உடையராய்-அமுதம் உண்டு களித்தேனே –உவகை மீதூர்ந்தவராக களிக்கிறார்-

அப்பால ரெங்கம் -கோயில் அடி -காவேரி தாயார் திருவடி வருட -கல்லணை அருகில்-
உபமன்யு துர்வாசர் சாபம்
ஸ்ரீ வைஷ்ணவ ததீயாராதனம் – நெய் சமர்ப்பித்த அப்பம் -அபி நிவேசத்துடன் குடத்தை கட்டிக் கொண்டு –
மேற்கு நோக்கி திரு கண் வளர்ந்து
ஸ்வாமித்வம் -அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -சூர்ணிகை -186-
ஸ்வாமித்வம் -பெரு நகரிலே பேர் பெற்றது -திரு மங்கை ஆழ்வார் -பெரு நகர் -சப்தம்
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவணை மேல் கருவரை வண்ணன் தென் பேர் கருதி நான் உய்ந்தவாறே -பெரிய திருமொழி 5-9-3-
-அங்கீ கரிக்க அவகாசம் -மோக்ஷம் கூட்டிப் போக -என்ற அர்த்தம் இல்லை -யாதிருச்சிகமாக -இசைவு பார்த்து -திருத்த சந்தர்ப்பம் பார்த்து மா முனிகள் –
-யுக்தி மாத்ரமாக -பாசுரம் அடி ஒற்றி -வியாஜ்யம் மாத்ரமாக -கொண்டு ஸ்வாமி தானே சொத்தை கொள்ள அவகாசம் பார்த்து இருக்க வேண்டும் –
மலைக் கட்டு பிரதேசம் -மாட விளக்கு -என்பதால் பேர் பெற்றது -ஹர்மீதளம்-

—————————————————————————————————-

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

யாதிருச்சிகமாக -ஈஸ்வரன் இச்சை -யால் திருமலையில் சன்னிஹிதனாக கிட்டும் காட்டில் –
லஷ்மீ ஸஹாயனாகக் கொண்டு என் நெஞ்சில் புகுந்தான் –
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன-நாட்டுவார்த்தை மரியாதையால் -திருமால் இரும் சோலை
-நகரம் -தேன் திருப்பேரையில்–செல்வர் நாகரீகர் நாகை அழகியர் நாகை பட்டணம்
பேச்சுவாக்கில் சொன்ன வார்த்தை -விராலி மலை பரங்கி மலை போலே இத்தையும் சொன்னேன் திருமலை ஏற்றம் அறிந்து சொன்னேன் அல்லேன்
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-ஸ்ரீ ய பதி பரி பூர்ணன் அபாப்தா ஸமஸ்த காமன் –
சாபேஷனாக வந்து -உக்திக்கு கூட்டுப் படாத என் நெஞ்சில் -மனஸ் சகாயம் இல்லாமல் நுனி நாக்கால் சொன்னேன்
வாக்குக்கு பூர்வ பாவி அன்றோ மனஸ் என்று நினைத்து பரி பூர்ணனாக புகுந்தான் -மனஸ் பூர்வோ வாக் உத்தர சாஸ்திரம் –
திருமால் ஆகையால் பூர்ணமாக புகுந்தான் -என்றவாறு -நெஞ்சில் வருகைக்காக -தபஸ் இருந்த பிரகாரம் மேல் அருளிச் செய்கிறார்
-தேச விசேஷத்தில் இருக்கிறவன் -ஸ்ரீ யா சார்த்தம் ஜகத் பதி -சென்று கண் வளரும் தேசம்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்-அதி ஸ்லாக்க்யமான மாணிக்கங்கள் –
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-தர்ச நீயமான திவ்ய தேசம் -வேண்டிற்று எல்லாம் கோதிலா மா மணி வண்ணன் –

நான் அறியாமையிலே திருமலையைச் சொன்ன அளவிலே-ஒன்றனையும் விரும்பாத தான்-
பிராட்டியோடே கூட வந்து-என்னுள்ளே புகுந்து அருளினான் –என்கிறார்-

திருமால் இரும் சோலை மலை என்றேன் –
முன்பு பல காலம் ஈஸ்வரனுக்கு தன பக்கல் பேர் இட்டுக் கொள்ளலாவது-ஓன்று இன்றிக்கே இருக்க –
இப்போது அவனுக்கு பேர் இட்டு கைக் கொள்ளுகைக்கு அடியானது இன்னது என்கிறார் –
ஒரோ இடங்களில் மலைகளைச் சொல்லா நின்றால் ஒவ்வோர் அடை மொழிகளை-இட்டுச் சொல்லக் கடவதே இருக்கும் அன்றோ –
அப்படியே -திருமால் இரும் சோலை மலை என்றேன் —

என்ன –
மனத்தின் துணையும் இல்லை காண்-வார்த்தை மாத்ரமே என் பக்கலில் உள்ளது-
இவன் அடியவனாய் இருந்தான் ஆகில்-
உபாயம் ஆகும் தன்மை நம் பக்கலிலேயாய் இருந்ததாகில்-
இவனுடைய பேறு நம் பேறாக இருந்ததாகில்-
அறிவுடைய சேதனன் என்கிற வேறு பாட்டுக்கு -வார்த்தை மாத்ரம் உண்டாயிற்றாகில் –
இதற்கு அவ்வருகு கொண்டு கார்யம் என் -என்று இருக்குமவன் அன்றோ-
இது தான் ஒரு மலை அன்றோ அவனுக்கு -என்ன ரசோக்தி –வார்த்தையை இல்லை என்ன ஒண்ணாது இறே அவனுக்கு-
யுக்தியே பாரமாக நினைப்பவன் -நாம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –
இதற்கு அடி ஆராயுமவன் அல்லனே-
வாயால் சொன்னதுக்கு அடி நெஞ்சில் உள்ளதா என்று பார்ப்பவன் அல்லன் –
கை விடும் பொழுது – தானே பார்ப்பான் -உளம் தொட்டு -பார்ப்பவன் –
இராவணன் தம்பிக்கு நண்பன் என்ற சொல்லே அமையும் என்னுமவன்-இதற்கு அவ்வருகு ஓன்று வேண்டும் என்று இரானே-
மலைகளில் உள்ள பொதுவான தன்மைகள் கிடக்க இந்த சிறப்புத் தன்மையைச் சொல்லிற்று –
இதில் உண்டான மிக விருப்பம் அன்றோ என்று இரா நின்றான் ஆயிற்று அவன் –
ஆக –
இவருக்கு ஓன்று இல்லை என்னவுமாய்-அவனக்கு இது ஓன்று உண்டு என்னவுமாம் படி-இருக்கிறது இது தானே-
பலத்துக்கு சத்ருசமாக ஒன்றும் இல்லை என்று இவர் -அவன் யுக்தி என்றாலே மனசால் சொல்லி இருப்பான் என்று எண்ணுபவன் அன்றோ –

மனத்தோடு படாமல் சொன்னது தன்னை-மனத்தோடு பட்டதாக்கிக் கொடுப்பாரும் அருகே உண்டு என்பார் –
திருமால் –
என்கிறார் –

வந்து –
அவன் வருவதே -என்று இவர் ஆச்சர்யப் படுவதாய் நிற்க-
நீர் வேட்கை கொண்டவன்
தண்ணீர் இருந்த இடத்தை வரும் அத்தனை அன்றோ என்றாயிற்று அவன் வார்த்தை-
கிருபணனாய் இருப்பான் வள்ளலாய் இருப்பார் இருந்த இடத்தே வரும் இத்தனை அன்றோ என்று இரா நின்றான் –
எல்லார்க்கும் அபிகம்யன்-அடையத் தக்கவனாய் இருப்பவனுக்கு-நான் அடையத் தக்கவன் ஆனேன்-
ச அப்யகச்சத் மகா தேஜோ சபரீம் சத்ரு ஸூதன-சபர்யா பூஜித சம்யக் ராம தசரதாத் மஜ-ஸ்ரீ சங்ஷேப ராமாயணம் -58
சபரியை சென்று அடைந்தார் என்னுமா போலே –

என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
நிறைய -ஐம் புல இன்பங்களுக்கு இடம் இல்லாத படி புகுந்தான்-
அத்திரி பகவான் ஆஸ்ரமத்தில்-நான் இராமன் – இவள் மைதிலி- இவன் இலக்குமணன் -என்று வணங்கி-
நின்றாப் போலே-வினயத்தோடு புகுந்தான் –
அக்காட்டில் பாழடைய தீரும்படி புக்காப் போலே-என் நெஞ்சிலே பாழ் தீரப் புகுந்தான் –

திருமால் சென்று சேர்விடம் -குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால் – தென் திருப் பேரே –
தான் விரும்பிச் சென்று சேரும் இடம் அதுவாய் இருக்கக் காண்-என் நெஞ்சிலே வந்து புகுந்தது -என்கிறார் –
எல்லாருக்கும் அடையப் படுபவனாக இருப்பவன் காண்-என்னை அடையத் தக்கவனாக கொள்ளுகிறான்-
பெரு விலையனாய்-காட்சிக்கு இனியதாய் இருக்கின்ற-
ரத்னங்களைக் கொண்டு-தள்ளா நின்றுள்ள புனலை உடைய காவிரியின் தென் கரையிலே-
சிறப்பு வாய்ந்த நகரம் -என்றபடி –
பாற் கடல் தந்தை -நான் தாய் -இலக்குமி மகள் -அரங்க நாதன் நாயகன் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -பூர்வ சதகம் -21-எனபது போலே-
புனல்-
சிரமத்தை போக்கக் கூடிய இடத்தினை உடையவன் காண் இங்கே வந்து புகுகிறான் –
திருமால் சென்று சேர் இடம்-
சுவையன் திருவின் மணாளன் – சால இன்பம் துய்ப்பவன் ஆனவன்-தானும் பிராட்டியுமாக விரும்பிச் சென்று சேரும் தேசம் அதுவாய் இருக்கச் செய்தே-
அது கிடக்க -திரு மால் இரும் சோலை மலை என்றேன்-
அந்த மனத்தோடு படாத வார்த்தை மாத்ரத்தையே கொண்டு-என்னுடைய மனத்திலே வந்து புகுந்தான் –
இரண்டாம் அடியில்- திரு மால் என்றது -புருஷகாரத்தின் தன்மையைச் சொல்லிற்று-
நான்காம் அடியில் -திருமால் -என்றது -த்வயத்தில் பின் வாக்யத்தில் கூறப் பட்ட-திருமகள் சம்பந்தத்தை சொல்லுகிறது –

உபாய வேஷம் -ஸ்வாமித்வம் -கார்யம் செய்யும் என்று துணிகைக்கு-திரு அபிஷேகம் சொல்லும் –
நீரில் இட்ட நெருப்பு போலே -கிளறி விட -ஸ்வாதந்தர்யம் தலை சாய்த்து இவை தலை எடுக்க பிராட்டி புருஷகாரம் பண்ணி
-வாத்சல்யம் ஸுசீல்யம் ஸுலப்யம்
உத்தர வாக்கியம் ஸ்ரீ மதே -நாராயண -ஸ்வாமித்வம் –மிதுனத்தில் கைங்கர்யம் -சர்வஞ்ஞான் பிராப்தன் பூர்ணன் -ஸ்வாமித்வம்
-ஸ்வாமித்வம் பொது இரண்டுக்கும் -ஆய பிரார்த்தனை –

————————————————————————————————————

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

நீண்ட அப்பெரிய வாய கண்கள் -ரஷ்ய வர்க்கம் குறைய ரஷ்யன் பாரிப்பு அதிகம் -மஹா வராஹம் -நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
-அதே போலே ஆரா வயிற்றான் –
அவனை இவர் தம் திரு உள்ளத்தில் அடங்கப் பிடித்தார் -திருமால் நெஞ்சு நிறைய பரிகரங்கள் உடன் புகுந்தான் –
முன்பு குறைவாளர் போலே இன்று ஒரு காலும் பேரேன் என்று நெஞ்சுக்குள் புகுந்தான்
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து-நித்ய வாசம் செய்யும் சர்வேஸ்வரன் -தானே சாபேஷனாய் -நான் பிரார்த்திக்காமலே –
இன்று -நேற்று வரை குறைவாளனாய் -நின்றார் அறியா வண்ணம் –
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-ஒரு காலும் போகேன் -பொ சொன்னாலும் -பரி பூர்ணனாக புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்-புஷ்கலா வர்த்தகாதிகள் மேகங்கள் –குல பர்வதங்கள் கடல்கள் –
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே-ரக்ஷணம் பாரிப்பால் ஆரா வயிறு -சர்வ பிரகார பரி பூர்ணனாகும் படி அனுபவிக்கப் பெற்றேன் –

தான் சர்வேஸ்வரனாய் வைத்து-என்னோடு கலக்கப் பெறாமையாலே குறைவாளனானவன்-
இன்று வந்து-நிர்ஹேதுகமாக என் மனத்தின் கண் புகுந்து-நிறைவாளன் ஆனான் -என்கிறார்

பேரே உறைகின்ற பிரான் –
திருப் பேரிலே வந்து எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன்-

இன்று வந்து –
என்று நென்நேற்று அறிவது -தாம் ஒரு சாதனத்தை செய்து இருந்தார் ஆகில் அன்றோ –

பேரேன் என்று –
பேரேன் -பேரேன் -என்னா நின்றான் ஆயிற்று
நீ போவுதியோ இருப்புதியோ -என்று கேட்பாரும் இன்றிக்கே-உதாசீனராக – இருக்கச் செய்தே-
இங்கு பிராட்டி தன் விஷயத்தில் -அகலகில்லேன் இறையும் -சொல்லும் வார்த்தையை-என் விஷயத்தில் சொல்லா நின்றான்-
நான் போகேன் போகேன் -என்று சூழ்த்துக் கொடா நின்றான் ஆயிற்று-தன்னை ஐயப் படுவாரும் இன்றிக்கே இருக்க-
அஹத்வா ராவணம் சங்க்யே சபுத்ர ஜனபாந்தவம்-அயோத்யாம் நப்ரவேஷ்யாமி த்ரிபிஸ்தை ப்ராத்ருபி சபே -யுத்தம் 19-21-
அந்த தம்பி மார் மூவருடன் இராவணனைக் கொல்லாமல்-அயோத்யைக்கு மீளேன் -என்கிறபடியே –

என் நெஞ்சு –
இவன் பேரில் என் -இருக்கில் என் – என்று -உதாசீனராக-இருக்கிற என் நெஞ்சு-

நிறையப் புகுந்தான் –
நிறையும் படி புகுந்தான் –

காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும் ஆரா வயிற்றானை –
புஷ்கலாவர்த்தம் முதலான மேகங்கள் ஏழும்-கடல் ஏழும்-மலைகள் ஏழும்-ஆன உலகத்தை எல்லாம் திரு வயிற்றிலே வைத்து
பின்னையும்
தன்னை நம்பி உடன் கிடந்தவனை மடி தடவினவனைப் போலே-நாம் என் செய்தோம் ஆனோம் -என்று இருக்குமவனை -என்றது
படைத்தல் தொடக்கமாக மோஷம் இறுதியாக-காக்கப் படுகின்ற-பொருள்கள் உடைய எல்லா விதமான பாதுகாவலையும் செய்து –
பின்னையும் -ஒன்றையும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்குமவனை என்றபடி –உண்டும் உம்மைத் தொகைக்கு வியாக்யானம் –

அடங்கப் பிடித்தேனே –
அவனுடைய நிறைந்த அங்கீகாரத்துக்கு பாத்ரம் ஆனேன் –
பிரளயத்தில் அகப்பட்ட உலகத்தை எடுக்கை யாவது-பின்னையும் இவ் உலக வாழ்வினைப் பூண் கட்டுகை அன்றோ-
பரம பதத்தளவும் செல்ல நடத்த பெறாமையாலே குறைப் பட்டு அன்றோ கிடப்பது –
நாம் எல்லாம் செய்தோம் என்று அவன் தெகுட்டும்படி செய்து கொண்டேன் –
அவன் என்னை அவ்வளவும் கொண்டு போம் படி நான் உடன் படுகையாலே-அவனுடைய பெரும் காதல் தீர்ந்ததாயிற்று-

————————————————————————————————————–

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

ஆச்ரித சுலபம் சர்வேஸ்வரன் திருவடிகளை பெற்றேன்
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்-மாடங்கள் –
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே-சுலபன் திருவடிகளை பிடிப்பது எளிதானதே -அதனால்
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்-ஜென்ம சம்பந்தம் இல்லாதபடி ஆனதே -இத்தைப் பிடித்து
-அற்றது பற்று எனில் புல்கு பற்று அற்றே –பற்றின படியால் விட்டேன் -துக்கங்களில் சேரேன்-
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை-சம்சார அஞ்ஞானம் நிவர்த்தகம் ஆனதே –

அவன் தம்மோடு-நிர்ஹேதுகமாக வந்து கலந்த படியை நினைந்து
இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிது ஆவதே –என்கிறார்-

பிடித்தேன் –
தலை மேலே தாள் இணைகள் -10-6-6-என்று-அவன் திருவடிகளை தலை மேல் கொண்டு வந்து வைக்கையாலே
அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் –

பிறவி கெடுத்தேன் –
பிறவியை மறுவல் இடாதபடி போக்கினேன் –ஸ்தூல சரீர விமோசனம்-
கானோ ஒருங்கிற்றும் கண்டிலோம் -பெரிய திருவந்தாதி -54-என்கிறபடியே-எங்கே போயிற்று -கண்டிலேன் –

பிணி சாரேன் –
பிறவி புக்க இடத்தே புகக் கூடிய-பிணியைக் கிட்டேன் –
தஸ்ய பிரிய -புண்ணியம் பிரிய தாயாதிகளுக்கும் – அப்ரிய தாயாதிகளுக்கு பாபம் போகும் சாஸ்திரம் -தாத் காலிக பாப புண்ணியங்கள்

மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை –
மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை மடித்தேன் –சூஷ்ம சரீர விமோசனம் –
இவ் உலக வாழ்கையில் நிற்கைக்கு அடியான மாயை உண்டு -மூல பிரகிருதி-அதனைத் திரிய விடுவித்தேன்-நிவர்த்தம் ஆக்கினேன் –
சூஷ்ம சரீரத்தின் நாசம் சொன்னபடி –தொடருகிற பாம்பினைத் திரிய விடுவிப்பாரைப் போலே-
எம்பெருமானார் -உலாவி அருளுகிறவர் முடியப் போகாதே-நடுவே மீண்டு அருள-
எம்பார் கதவினை ஒருச்சரித்து-திருமால் இரும் சோலை ஆகாதே திரு உள்ளத்தில் ஓடுகிறது-என்ன-
ஆம் அப்படியே -என்று அருளிச் செய்தார் –

கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே –
கொடிகளை உடைத்தான கோபுரங்களையும் மாடங்களையும்-
உடைத்தான திருப் பேரிலே நிற்கிறவன் அடி சேருகை யாகிறது எனக்கு எளிது ஆயினவாறே
அறுகம் புல்லை இட்டு கண்ணை புதைத்து கொள்-சாணகச் சாற்றைக் குடி-
தலையைக் கீழே நடு-காலை மேலே எடு-என்று அருந்தேவைகளை சாஸ்திரம் சொல்லா நிற்க-
எனக்கு இங்கனே இருப்பதொரு மூலை யடி வழி உண்டாவதே –
ஐம்புல இன்பங்களின் கால் கடையிலே துவண்டு போந்தவர்-அவன் திருவடிகளில் கிட்டிக் கொடு-நிற்கக் கண்ட இத்தனை-

——————————————————————————————-

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

பரமபதம் தருவானாய் விரைய நெஞ்சும் கண்ணும் மகிழ காலாந்தரத்தில் தேகாந்தரத்தில் கிடைப்பதை இக்காலத்தில்
என் கண்கள் துர்லபமான ப்ராப்யம் சுலபம் ஆனதே ஹர்ஷா விஷ்ட சிந்தை -இதுக்கு அடி
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்-சோலைகள் சூழ்ந்த
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே-வைகுந்த மா நகரம் -தர -பரம சத்வ மயம்-ப்ரகாசாத்மகம் -மிக உயர்ந்த
எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்-உபாய பாவத்தில் கண் வைக்க வேண்டாமே -இப்படி சுலபமானதே என்று கண்கள் களிக்க-
-அவன் உபாய பாவம் ஏற்றதால் ஹர்ஷிக்கின்றேன் -ஆனந்த கைங்கர்யம் செய்ய வேண்டும்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்-பகவத் த்வராயை நம போலே -மனஸ் ஆர்ப்பரிக்க -நீர்மையை அனுசந்தித்து –

தமக்கு பரம பதத்தை தருவானாய்-இருக்கிறவனுடைய நீர்மையை நினைந்து
என் உறுப்புகளும் களிக்க-நானும் களியா நின்றேன் –என்கிறார்

எளிது ஆயினவாறு –
அரியது எளிது ஆகும் -இரண்டாம் திருவந்தாதி -22-பெறுதற்கு அரியனான பகவானை பெறுதலும் எளிதாகும் –
எங்கே கண்டோம் -என்றால்
கரியது ஒரு வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே-தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து –
அவன் தானே அரை குலையத் தலை குத்திய-மடுவின் கரையிலே விழ அன்றோ யானை பெற்றது –
புண்டரீக மகரிஷி பெற்றார் -கைகளால் கடல் நீரை இரைக்கப் புக்கு-
அரியதான பகவல் லாபம் -சக்தி யோகம் -ஸூ ரக்ஷண அர்த்தமாக இவன் பண்ணும் பிரவர்திகளை மாற்றி
நம்மை பெறுக அவன் முயல்வானாக இருக்க –
எளிது ஆயினவாறு -என்று என் கண்கள் களிப்பக் –
காண்பதற்கு அரிய விஷயம் இங்கனே எளிது ஆவதே என்று-காணக் கருதும் என் கண்ணே -9-4-1-என்கிறபடியே
விடாய்த்த கண்கள் களிக்கும் படி –

களிது ஆகிய சிந்தையனாய்க் –
களித்த மனத்தினை உடையனாய் -என்றது-
-நெடியானே என்று கிடக்கும் என் மனம் களிக்கப் பெற்றது-8-8-1- என்றபடி

களிக்கின்றேன் –
கூவியும் காணப் பெற்றேன் -8-8-7-என்று நானும்-களியா நின்றேன்-
உறுப்புகளும் தாமும் ஒக்க விடாய்த்தவர்-உறுப்புகளும் தாமும் ஒக்க களிக்கப் பெற்றார் –

கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான் –
எப்பொழுதும் மலர்களோடு கூடி இருக்கிற-சோலைகளாலே சூழப் பட்ட திருப் பேரான் –நித்ய வசந்தம் –

தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே
இருள் தரும் மா ஞாலம் போல் அன்றிக்கே-நாள் செல்ல நாள் செல்ல தெளிவினை செய்யக் கூடியதாய்
மீண்டு வருதல் இல்லாத தாய் இருக்கிற-சேண் விசும்பு-உண்டு
பிரமன் சிவன் முதலாயினோர்கள் குடி இருப்புக்கும்-அவ்வருகான பரம பதம்-
அதனை எனக்கு தருகையிலே துணிந்து இருந்தான் –

————————————————————————————————

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

புருஷார்த்தம் தருவானாய் கோலி ஸமஸ்த விரோதிகளை போக்கி அருளினான் –
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி-பரம பதம் தர சங்கல்பித்து என்னுடன் பிரதிக்ஞ்சை பண்ணி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று-மாம்சம் செறிந்த சரீரம் என்பு நாட்டி ரோமம் -புகுந்து அபேஷா நிரபேஷமாக
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்-பிரிந்து தடுமாறும் பிரதிபந்தகங்கள் போக்கி அருளினான் –
புகுந்ததும் இன்று -தவிர்ந்ததும் இன்று –
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே-வண்டுகள் -பொருந்திய பொழில் -மதுவுமாம் –

திருப் பேர் நகரான் பரம பதத்தை எனக்கு-தருவானாக-என்னோடு பூணித்து-
தானே இரு வினைகளையும் போக்கினான் –என்கிறார் –

வானே தருவான் எனக்காய் –
எனக்கு வானே தருவானாய் –
இங்கே வைத்து கார்யம் கொள்ளும் அதனையும் தவிர்ந்தான் –இன்னம் ஒரு பிரபந்தம் இடுவித்துக் கொள்ளுகையும் தவிர்ந்தான்-
வானே -ஏவகாரம்-பிரமன் முதலாயினோர்கள் குடி இருப்பும்-இவருக்குத் தரம் அன்று -என்று அதனையும் தவிர்ந்தான்-
இவ் உலகுள் உழன்று திரிகின்ற எனக்கு-நித்ய சூரிகள் இருப்பை தருவானாக –

என்னோடே ஒட்டி –
என்னோடே பூணித்து –நான் விரும்பாது இருக்க –
அஸ்மின் முகூர்த்தே ந சிரான் சத்யம் பிரதி ஸ்ருனோமி வ-அராவணம் அராமம் வா ஜகத் த்ரஷ்யத வானர -யுத்தம் -21
என்கிறபடியே -என்னோடு சூளுறவு -என்றது –இன்றே என்று சமயம் பண்ணி –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் –2-9-1-என்ற-என்னோடு உமக்கு -எம்மா வீடே -தரக் கடவோம் என்று ஒட்டி -என்றபடி –

ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று –
ஊனேய் குரம்பை இதனுள் -இன்று -புகுந்து -செஞ்சொல் கவியின் பிரமேயம் -–இவ் உடம்போடு உம்மைக் கொடு போக வேண்டும் -என்று-
விளம்பித்தேன் ஆகில் இதனை ஒழியக் கொடு-போகப் பார்த்த பின்பு-ஆறி இருப்பேனோ -என்னா நின்றான்-

தசைகள் மிக்கு இருப்பதாய்-
ஆத்மாவுக்கு இருப்பிடமாய் இருக்கும் சரீரத்தில்-மேல் எழக் கலக்கை அன்றிக்கே-
விடாயர் மடுவிலே புகுமாறு போலே புகா நின்றான் –
எனது உடலே அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே-ஒரு மா நொடியும் பிரியாதே இதனுள் புகுந்து நின்றான் –

இன்று –
நேற்று ஒரு நினைவு இல்லை-

தானே
கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –இவர் பல காலம் தேகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்-
இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே-
இதனோடு தொற்று அல்லாத தானே-இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்-இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-
இதன் தண்மையை நினைந்து -இதனுள் -என்கிறார் –காதல் கண்ணை மறைத்தது அவனுக்கு- இவர் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் அன்றோ
தானே-
புகுகிற போது தானே யாய்-பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –

தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் –
தன் பக்கல் நின்றும் என்னை பிரித்து தடுமாறும்படி-செய்ய வல்ல பாபங்களைப் போக்கினான் –
அவை யாவன
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்-இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்கள் –

தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே –
தேன் மிக்க பொழிலை உடைத்தான-திருப் பேர் நகரை உடையவன் காண்
என்னுடைய சரீரத்திலே புகுந்து
கண நேரமும் விட மாட்டாதே ஒழிகிறான்-என்ன குறை உண்டாய் இப்படிப் பட்டான் –

தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே-வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று-தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்-என்று அந்வயம்

————————————————————————————

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

மூன்று இடங்கள் அயோத்தியை சித்ரகூடம் ஜடாயு பரிசரம்/
ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா -வட வேங்கடமா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் சென்று திருவரங்கம் கிடந்தான் –
அல்லாத உகந்து அருளினை தேசங்களில் காட்டில் நெஞ்சில் புகுந்து அவன் அனுபவிப்பிக்க -நான் ஆனந்தப் பட்டேன் –
திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து–மகா உபாகாரகன் தானே வந்து மூன்று திருக் கோலம்
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-பூர்ணமாகும் படி இருக்கக் கடவேன் என்று சங்கல்ப்பித்து-
ஜகத் உத்தாரண ஹேது -மிதுனம் திருக் கல்யாண மந்த்ரம் -உபாய புருஷகார சம்பந்தம் -போலே
இங்கு ஆழ்வார் திரு உள்ளம் விட மாட்டேன் என்று சங்கல்பித்துக் கொண்டானாம் –
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே -நிரதிசய பகுமானம் ஒருபடியாகப் பெற்று குண அனுபவ ரூபமான அமுத பானம் பெற்றேன் –
தாண்ட காருண்யம் ரிஷிகள் ஆஸ்ரமம் ஒவ் ஒன்றாக போனால் போலே இவரும் ரிஷி முனி பிரார்த்தனை இல்லாமல் உள்ளே வந்து இருந்தான் –

தனக்கு இருப்பிடமான கோயில்கள்-பல உளவாக இருக்க –ஓர் இடம் இல்லாதாரைப் போலே-
என் மனத்திலே ஒரு காரணமும் இல்லாமல்-வேண்டிக் கொண்டு வந்து புகுந்தான்-என்று பிரீதர் ஆகிறார்

திருப் பேர் நகரான் –
திரு அயோத்தியை போலே ஆயிற்று –
திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்-
ஊரையையும் மலையையும் சொல்லி-பொருப்பே – ஏவகாரத்தால் திருமலை இருப்பை விரும்புகின்றதையும் சொல்லி –
சித்ர கூடத்தில் வசிப்பது -அயோத்தியில் வாசிப்பதைக் காட்டிலும் மேலாக விரும்பிய பெருமாளைப்போலே-
ஸூ ரம்யம் ஆசாத்யது சித்ரகூடம் நதீஞ்ச தாம் மால்யவதீம் ஸூ தீர்த்தாம்
நநந்த ராம ம்ருகபஷி ஜூஷ்டாம் ஜஹௌ ச துக்கம் ப்ரவிப்ரவாசாத் -அயோத்யா -57-38-
மால்யவதி என்னும் நதியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த பெருமாள் போலே யும் –
ஸூ பக சித்ரகூட அயம் கிரிராஜோபமோ கிரி-யஸ்மின் வசதி காகுத்ச்த குபேர இவ நந்ததே -அயோத்யா -99-12-
குபேரன் போலே மகிழ்ந்தார் பெருமாள்-
குறைவு அற்றவன் நந்தவனத்திலே வசிக்குமாறு போல ஆயிற்று
எல்லா வகையாலும் குறைவு அற்றவனுக்கு அன்றோ லீலா ரசத்தில் தொடர்பு உள்ளது –

இன்று வந்து –
இவ்வத்மாவுக்கு நேற்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க-வந்து கொடு நிற்கக் கண்ட இத்தனை –

இருப்பேன் என்று –
இருப்பேன் இருப்பேன் -என்னா நின்றான் ஆயிற்று
யதீஹ சரத அநேக த்வயா சார்த்தம் அநிந்திதே-லஷ்மனேந ச வத்ச்யாமி ந மாம் சோக பிரதர்ஷயதி -அயோத்யா -94-15
இதம் புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்-இஹ வத்ச்யாமி சௌமித்ரே சார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-
ஐயர் கோல் கீழே வசிக்க வேண்டும் -என்று நினைத்து இருந்தோம் –
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் இல்லாமையாலே போந்தோம்-
இனி மேல் உள்ள காலம் எல்லாம் இவர் சிறகின் கீழே வசிக்கப் பாரா நின்றோம் -என்றான் அன்றோ –

என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
இருந்திடுவானுக்கு -என்று இராத என் நெஞ்சிலே நிறையப் புகுந்தான் –

விருப்பே பெற்று –
ஆணையைப் பின் பற்றாமையாலே உண்டான வெறுப்பு-கார்யமாக அன்றிக்கே –
தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான்-ஷிபாமி அஜஸ்த்ரம் அசூபான் ஆசூரீஷ் வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -18-19
அந்தப் பகைவர்களான கொடியவர்களை அசுரப் பிறவியில் தள்ளுகிறேன்-என்று இருப்பதும் ஒரு இருப்பு உண்டு அன்றோ –
அங்கன் அன்றிக்கே –அவனுடைய விருப்பத்தை உடையவனாய் –

அமுதம் உண்டு களித்தேனே –
விஷ உணவினை உண்டு நரகத்துக்குப் போகா நிற்க-
நடுவே நின்று களிக்கை அன்றிக்கே -அமுதம் உண்டு களித்தேனே —
அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேனே –என்னுதல் –
அவனுடைய குணங்கள் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேன்-என்னுதல்-
ஐம் புல இன்பங்களில் ஆசை உள்ளவனாய்-நரகத்துக்கு கிருஷியைப் பண்ணி வைத்து களிக்குமது அன்றோ அது-
அதாவது-அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார் -4-1-5-என்றபடி –
களித்தேனே –
நாவல் இட்டு உழி தருகின்றோம் -என்கிறபடியே
செருக்காலே களிக்கிற களிப்பே அன்றோ இது-நமன் முதலானோர் தலைகளிலே அடி இட்டுக் களிக்கப் பெற்றேன்-

————————————————————————————————

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

நித்ய அனுபவம் பண்ணும் படி சந்நிஹிதன் -அனுபவிப்பதால் மேல் என்ன வேண்டும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்-தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
அதிகமான தாஸ்யம் -முடிவிலே நம தொழுகைக்கு வாசகம் சொல்லப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்-வண்டுகள் மது பானம் பண்ணி
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே -கண்டு ஹர்ஷிக்கும் படி -கண்ணுக்கு விஷயம் ஆன பின்பு

அவனுடைய ஆதாரத்தால்-தமக்கு குறை இல்லாமையை-அருளிச் செய்கிறார் –

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை –
இப்படி அனுபவித்துக் களிக்கப் பெற்ற-எனக்கு ஒரு குறை உண்டோ –
மயர்வற மதிநலம் அருளப் பெற்று-
அவனுடைய குணங்களை அனுபவித்த எனக்கு மேலே வேண்டுவது ஓன்று உண்டோ -என்கிறார் –
ஞானத்தை அடைந்த பிறகு -அவ்வருகில் உள்ள பரம பதத்தை-பெற்றிலோம் என்று வருவது ஒரு குறை உண்டோ –
உம்பர் -என்றது -மேல் -என்றபடி –

மேலைத் தொண்டு உகளித்து –
மேலான அடிமை இன்பம் மிகுந்து-
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி – பரம சம்ஹிதை –
பரம் பொருள் எந்த எந்த வழியில் செல்கிறானோ அவ்வவ் வழியிலே உயிரும் செல்கிறது –என்கிற இன்பத்தை அனுபவித்து –
சேவா ஸ்வவ்ருத்தி ஆக்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜயேத் – மனு ஸ்ம்ருதி -4-4-8
ஒருவனுக்கு அடிமையாக இருப்பது இழிந்த செயல் -என்றது போல் அன்றே –ஸ்வரூப அனுரூபமாக உள்ளதன்றோ இது –
தொண்டு உகளித்து –
தொண்டாலே உகப்புத் தலை மண்டை இட்டு –

அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்-
அந்தி தொழும் -என்கையாலே பலம் சொல்லிற்று
கைங்கர்ய ஏக ரச இன்பம் மிகுந்தால் -அதனுடைய முடிவிலே நம -என்று சொல்லுகின்றவர்கள் -என்று
மனம் அறியச் சொல்லுவது ஓன்று உண்டு-அப் பாசுரத்தைச் சொல்லப் பெற்றேன் –
முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்-பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின -பாரதம் மோஷம் -என்கிறபடியே –
அந்தி தொழும் -சரம நிலை -நம -பிராப்ய-விரோதி -ஸூ போக்துத்வ புத்தி -தவிர -கைங்கர்யம் செய்யும் பொழுது
எப்போதாவது வரலாம் என்பதால் எப்பொழுதும் ஸ்வேத தீப வாசிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்
யவாதாத்மபாபி -மற்றை நம் காமங்கள் மாற்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமே
மேலைத் தொண்டு –
அதாவது-ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய்மொழி பாடி-அடிமை செய்யப் பெறுகையைத் தெரிவித்த படி –

வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான் –
வண்டுகள் தேனைக் குடித்துக் களிக்கிற பொழிலாலே சூழப்பட்ட திருப் பேரிலே வசிக்கிறவன் -என்றது –
ஞானத்தாலே மேம்பட்டவர்களோடு-திர்யக்குகளோடு வாசி அறக் – களிக்கும் தேசம் -என்றபடி –

கண்டு களிப்ப –
மெய் கொள்ள காண விரும்பும் என் கண்கள் -3-8-4-என்று-விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –

கண்ணுள் நின்று அகலானே –
நான் போகச் சொல்லினும் கண் வட்டத்தில்-நின்றும் அகலுகின்றிலன்-
ஐம் புல இன்பங்களில் ஆசை உள்ளவர்கள் போகச் சொன்னாலும்-தூணைக் கட்டிக் கொண்டு போகாதவாறு போலே –
இப்படி அவனை அனுபவித்து களிக்கப் பெற்ற எனக்கு-மேல் ஒரு குறை உண்டோ –

————————————————————————————————————–

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

சர்வ பிரகாரத்தாலும் செறிந்து –நிரதிசய போக்யனாகக் கொண்டு புகுந்தான்
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்-பாஹ்யமான கண்ணுக்கு விஷயமாகி -நித்யம் விஷயமாய் -விபவ வடிவத்திலே –
நினைவைப் பார்த்த இடத்தில் பெரிய பாரிப்புடன் இருந்தான் -பரம பதம் கூட்டிப் போக -வீடு திருத்தி வைத்து
-பெரிய திட்டம் -தேச விசேஷம் கொண்டு போய் அனுபவிக்கைக்கு ஈடாக
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே-தாம் தாம் அறிய எண்ணும் அளவில் அதி ஸூஷ்மமான
நுண்ணிய ஸ்வ பாவன்-சப்த ராகங்களின் சுவையுடன் -சாரஸ்யம் -இவனை அனுபவித்தே ஆழ்வார் பல பண்களால் திருவாய் மொழி அருளி
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்-நாநா வர்ணம் -மாணிக்கங்களால் சமைந்த மாடங்கள்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே-இன்றே புகுந்தான் -செறிந்து புகுந்தான் -திண்ணம் புகுந்தான் –
நிர்ஹேதுகமாக -நிச்சயமாக திரும்பிப் போகாத படி புகுந்தான் –

எல்லை இல்லாத இனியனான-திருப் பேர் நகரான்-என் பக்கலிலே காதலை வைத்து
ஒரு நாளும் போகாதபடி-என் நெஞ்சிலே வந்து புகுந்தான் –என்கிறார் –

கண்ணுள் நின்று அகலான் –
எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயம் ஆகா நின்றான் -என்றது –
சதா பஸ்யந்தி -எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு-வேறு தனக்கு ஒரு உலகம் உண்டு என்று இருக்கின்றிலன் -என்றபடி –

கருத்தின் கண் பெரியன் –
உபய விபூதி நாதனாய் இருத்தலால் வரும்-வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவனாய் இருத்தல் முழுதும் தீர்ந்து
இவரை அவ்வருகே கொண்டு போகையிலும் -ஆதி வாஹிகரை ஏவுகையிலும்-
வீடு திருத்த -தான் முற்பாடனாய்க் கொண்டு போகையிலும் -பாரியா நின்றான் –
அன்றிக்கே -நம் கார்யத்தில் இவன் விரைகிறபடி நம்மால் எண்ணி முடியும் அளவு அன்று -என்னுதல் -என்றது –
இவ்வளவினன் -என்று எண்ண முடியாதவன் -என்றபடி –
யச்யாமதம் தஸ்ய மதம் –அவிஞ்ஞாதம் விஜாநதாம் – கௌஷீகிதி உபநிஷத்
இது தான்- எவனுக்கு அறியப் படாதது -என்கிற -ஸ்வரூபத்தால் -பொது நோக்கால் அன்று -பின்னர் எதில் எண்ணில்
நம் கார்யத்தில் இங்கனே இருக்கும்-
என் மனத்துப் புகுந்தான் -என்றதனோடு சேர வேண்டும் அன்றோ -கருத்தின் கண் பெரியன் -என்கிற இதுவும்

எண்ணில் நுண் பொருள் –
அவன் தானே இப்படி மேல் விழில்-விழும் அத்தனை போக்கி-தம் தாமே அறியப்பார்ப்பார்க்கு-அறியப் போகாது –

பஹூ மநோ ரத்தங்களைப் பண்ணுகிறான் –
பாரிப்பு எண்ண முடியாத அளவு / என் கார்ய விஷயத்தில் பெரியவன் / இயத்தா ரஹிதன் அப்படிப்பட்டவன் என்ற அளவு அல்லன் -/
ஸ்வரூப அபரிச்சின்னன் என்று சொல்ல முடியாதே மனத்தில் செறிந்தான் திண்ணம் என்பதால் பிரகரணத்துக்கு சேராது – என்றவாறு /
விசார அவ்விஷய பூதன்-என்று சொன்னாலோ என்னில்-ஸூ ஷ்ம விஷயம் -எண்ணில் நுண் பொருள் –

அறிய அரியன் என்று கை வாங்கி இருக்கலாம் பொருள் அன்று –
ஏழிசையின் சுவை தானே –
வருந்தியும் மேல் விழ வேண்டும் பொருள் ஆயிற்று-இது இனிமை இருந்தபடி –

வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான் –
இது மேன்மை இருந்தபடி –

என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –
சக்யா லோபயிதம் ந அஹம் ஐஸ்வர்யேண நநேநவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15-
பிராட்டி போலே பிரிக்க ஒண்ணாதபடி புகுந்தான்-
எனது ஆவியுள் கலந்த -8-8-4- என்னுமாறு போலே-
அறப் பெரியவன் ஆனவன் இப்படி நம் பக்கல் மேல் விழக் கூடுமோ -என்று தாமும் ஐயம் கொண்டார்-
அதற்கு வேறு போக்கடி கண்டிலர்-

—————————————————————————————————-

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

நிதான பாசுரம் -இன்று நிர்ஹேதுகமாக உபகரித்தவன் -முன்பு உபேக்ஷித்தத்துக்கு ஹேது என் -என்று கேட்க வேண்டி இருந்தேன்
-பதில் சொல்லாமல் பதில் கிடைக்கப் பெற்றேன் -சிரிக்க -புரிந்து கொண்டார் -மயர்வற மதி நலம் அருள பெற்றார் அன்றோ –
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்-பிரதம கடாக்ஷம் பெற்ற -மயர்வற மதிநலம் அருள பெற்ற பின்
-இக்காலம் -முன்பு அசன்னேவா -என்று கிடந்த என்னை -சந்தமேவ -வஸ்துவாக்கி -ஹேயமான என் நெஞ்சுக்குள் அவனை தானே வைத்தான்
-அனுமதி கெடுக்காமல் எதுவும் செய்யாது இருக்க இன்று செய்தாய் என்றால்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்-முன்பு உபேக்ஷித்து- தான் இட்ட வழக்காக பராதீனனான என்னை –
எப்பொழுதும் அடிமைப் பட்டவன் தானே ஜீவாத்மா -ருசி எதிர் பார்த்து இருந்தேன் சொல்லலாமே –
இன்று எதனால் கொடுக்கிறாய் கேட்க்கிற நான் முன்பு கேட்க வில்லையே –
பராதீனப் பட்டதாக சொல்ல வில்லையே -சோற்றை உண்ண பசி வேண்டுமே -ருசி வேண்டுமே
தன் பக்கல் விமுகனாய் விஷயாந்தரங்களில் கை கழிந்து போம் படி சங்கல்பித்தது எதனால்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்-மாடங்கள் சூழ்ந்த திவ்ய தேசம்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே-இன்று அருளியவற்றுக்கு ஹேதுவோ அன்று உபேக்ஷித்தத்துக்கு ஹேதுவோ
ஒன்றை உணர்த்தி அருள வேணும் -நித்ய தத்வம் காருண்யம் நித்யம் சாதன பாவம் என்னிடம் அன்றும் இன்றும் இல்லையே
இத்தை கேட்க நினைத்து இருக்கிறேன் -உணர்த்தல் உற்றேன் -உத்தியோகித்து இருந்தேன்
ஒன்று சொல்ல மற்றவற்றுக்கு விரோதிக்கும் -நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ஹேது பிரஸ்னம் பண்ணில் சர்வஞ்னுக்கும் உத்தரம் இல்லையே –

இன்று என்னை அங்கீ கரிக்கைக்கும் முன்பு-என்னை பாராமுகம் செய்தமைக்கும் காரணம் என்
என்று கேட்க வேண்டி இருந்தேன் –இது தனக்குத் தானே சிந்தித்தலில் நோக்கு –
அன்றிக்கே
சர்வேஸ்வரன் தன்னை பரமபததுக்கு கொடு போகையில்-விரைகிறபடியைக் கண்டு
இன்று என் அளவு அல்லாதபடி விரைகிற தேவர்-இதற்கு முன்பு பல காலம் விட்டு ஆறி இருந்தமை எங்கனே
என்று அவனைக் கேட்கிறார் -என்னவுமாம் –
அன்றிக்கே
மூன்றாவது அவதாரிகை அதி சங்கையிலே நோக்கு –
இப்படி விரைகிறமை மெய்யாகில் முன்பு விட்டு ஆறி இருக்கக் கூடாது -என்கிறார்-

நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே-தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-
பிராட்டி திருவடியைப் பார்த்து அருளியது –
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே-
தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே-நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று-
எழுந்து அருளிய இடம் அறியாமையாலே-ஆறி இருந்தார் இத்தனை போக்கி –
அறிந்தால் ஒரு கணம் ஆறி இருப்பாரோ –இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே-
உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-
அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10-
கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு கணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –கமலா பத்ராஷா ரம்யய்தி ராமயா –
அவரை அறியாமையும் இல்லை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —
அன்றிக்கே-யார் எதிராகத் தான்-இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்
பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல்

இன்று என்னைப் பொருள் ஆக்கி –
அசேதனத்தைப் போலே இருந்த என்னை-ஒரு பொருளாம் படி செய்து-
பொருள் அல்லாத என்னை -5-7-8- என்றாரே” அன்றோ -தன்னை-

தன்னை –
பெரு மக்களால் விரும்பத் தக்கவனான தன்னை –

என்னுள் வைத்தான் –
பிறர்க்கு இடம் இல்லாதபடி தன்னை-முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான் –

அன்று –
என்று அவன் திருவருளைப் பெறுவதற்கு-முன்புள்ள நாள்கள் எல்லாவற்றையும்சொல்கிறார் –
இன்று -என்கிறது-மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அதற்கு பின்புள்ள காலத்தை`-

என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் –
பரதந்த்ரனான என்னை-புறம்பு போகப் பண்ணிற்று என் செய்கைக்காக-
புறம்போகப் பண்ணுகையாவது-பராமுகம் செய்தல் –
இழந்த நாள் இழந்ததும் அவனாலே –
பெற்ற இன்ற பெற்றதும் அவனாலே -என்று இருக்கிறார் –
ஸ்வதந்த்ரம் இல்லாத பொருள் செல்ல நிற்க வற்றோ –வர நிற்க வற்றோ –

குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் –
இப்படி மதிப்பனானவன்-மலைகளை சேர வைத்தால் போலே விளங்கா நின்றுள்ள-
மாடங்கள் சூழ்ந்த திருப் பேரான் –

ஓன்று எனக்கு அருள் செய்ய –
முன்பு கை விட்டதற்கு காரணம் சொல்லவுமாம் –
இன்று என்னை அங்கீகரித்ததற்கு காரணம் சொல்லவுமாம் –

உணர்த்தல் உற்றேனே –
இதற்கு ஒரு மறு மாற்றம் அருளிச் செய்ய வேண்டும்-என்று திரு உள்ளத்தில் படும் படி-
விண்ணப்பம் செய்ய வேண்டி இரா நின்றேன்-

உணர்த்தல் உற்றேன் என்ற இவரே
அடுத்த பாசுரத்தில் உற்றேன் உகந்து பனி செய்து -என்று சமாதானம் அடைகிறார்-
ஆகையால் அவன் விடை கூறாது ஒழிந்தது போதருதலால்-அது தன்னை விரித்து பேசுகிறார்
இது நாம் சொல்ல வேண்டுமோ -நீர் அறியீரோ -என்றான் –
அடியேன் அறியேன் -சர்வஞ்ஞனான நீயே அருள வேண்டும் -என்றார்
ஆனால் நாம் உம்முடைய நெஞ்சில் புகுந்த காலத்தில் உடன் பட்டு இருந்தீர் -அதனாலே காணும் -என்றான்
ஓம் அது தான் உண்டோ -யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7-என்றார்
அது இல்லை யாகிலும் புகுந்த பின்பு நம்மை விரும்பினீரே -என்றான்
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே அதுவும் தேவர் செய்த இத்தனை -என்றார் –
ஓம் காணும் அது இல்லை யாகிலும் நம்மை விரும்பும் போது நம்மோடு கூட வேறு விஷயங்களை விரும்பாது இருந்தீரே -என்றான் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8-என்கிறபடியே அதுவும் தேவரே அன்றோ செய்தது -என்றார் –
இவை ஓன்று இன்றே யாகிலும் நாம் தந்த மதி நலத்தை வளர்த்துப் போந்தீரே -என்றான்-
காதல் கடல் புரைய விளைவித்த கார் அமர் மேனிக் கண்ணன் -5-3-4-என்கிறபடியே-
அதுவும் தேவர் அன்றோ செய்தது -என்றார்
இப்படி இவர் முடியத் தொடர்ந்தவாறே-பெரும் கடல் மண்டினாரைப் போலே போக்கற்றான் –

இதற்கு ஈஸ்வரன் சொன்ன விடை தான் என்ன-என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க –
இவர் தலையிலே ஒரு பழியினை ஏறட்டு-பல காலம் இழந்து இருந்த நாம் சொல்லுவது என் -என்று
நாணம் உற்றவனாய்-காலாலே தரையைக் கீறி நிற்கும் இத்தனை போக்கி-வேறு விடை உண்டோ என்று அருளிச் செய்தார்-
மாமியர் குழுவில் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப -கம்பர் -தாரை முன்னால் இளைய பெருமாள் நிலை –
அதாவது -முன்பு ருசி இல்லாமையாலே -என்ன மாட்டான்-
இப்பொழுது சாதனங்களைச் செய்கையாலே -என்ன மாட்டான்-
ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு உயர்வு தாழ்வுகளுடன்-படைத்தல் -அருள் அற்று இருத்தல் முதலிய குற்றங்கள் வருதல்-வைஷம்யம் நைர்கருண்யம் வருமே –
எல்லார்க்கும் மோஷத்தை கொடுக்க வேண்டி வருதல் செய்யாதோ என்னில் -அது செய்யாது-சர்வ முக்தி பிரசங்கம் வருமே –
அடியிலே வெறுப்பின்மையும்-இச்சையும் பிறப்பதற்கு தான் கிருஷி பண்ணி-அது பக்குவமாம் அளவும் பார்த்து இருப்பவன் ஆகையாலே –அதிகாரி விசேஷணம் -ருசி –

கேட்டதற்கு அவன் மறுமாற்றம் சொல்லக் காணாமையாலே-
அறிந்தோம் -இதற்கு காரணம் இங்கனே ஆக வேண்டும் என்று பார்த்தார்-
தன்னுடைய ரஷணம் வெறுப்பிற்கு விஷயமாகி தவிர்ந்து-விலக்காத சமயம் பார்த்திருந்தான் ஆதல்-
தன்னை ஒழிந்த வற்றில் சாதனா புத்தி தவிரும் அளவும் பார்த்து இருந்தான் ஆகில் ஆக அடுக்கும் -என்று பார்த்தார் –
ஆனால் இதனை அவன் உத்தரமாக அருளிச் செய்யாதது என் என்னில்-
அறிவு காரணமாக வருகிற வெறுப்பின்மையை சாதனம் என்ன மாட்டானே-
உபாயமாக இருக்கும் தன்மை தன் தலையிலே ஆயிற்று-
பல காலம் இவர் தலையிலே பழி இட்டு இருந்த நாம் எதனைச் சொல்லுவது-என்று பேசாதே இருந்தான் –
ப்ரசீதந்து பவந்த மே ஹ்ரீ ஏஷா ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்தேயை உபஸ்தித -ஆரண்யம் -10-9-
என்னால் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட-அந்தணர்களால் நான் அடையப் பட்டேன் எனபது எனக்கு-மிக்க நாணமாய் இருக்கிறது
என்கிறபடியே பிறபாட்டுக்கு நாணமுற்று நிற்குமவன் அன்றோ-
இவர் தாம் -லஜ்ஜித்த அவனை -எடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படி ஆயிற்று அவன் நிலை-
அறிவு பற்றி வருகின்ற ருசி தான் ஸ்வரூபத்தின் வேறுபாடு ஆகாதே-
சைத்தன்ய பிரயுக்தமான ருசி -ஸ்வரூபத்துடன் சேர்ந்தது -உபாயம் ஸ்வரூபம் உடன் சேராதே -பற்ற வேண்டுமே –
நீர் பெற வேண்டிய பேற்றினை பெற்றீர் ஆகில் அதுவே அமையாதோ -என்ன-அதுவே அமையும் -என்கிறார்-
தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்தோ-விடாய்த்தவன் இள நீர் குடிப்பது-வரவாறு ஒன்றி இல்லை -வாழ்வு இனிதானதே என்றாரே –

பசியும் ருசியும் உபாயம் ஆகாதே -அனுபவத்துக்கு வேண்டிய அதிகாரி விசேஷணம் தானே –

———————————————————————————————–

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

கைங்கர்ய பிரதி சம்பந்தியான அவன் திருவடிகளில் அடிமை செய்வதும் -கைங்கர்யம் செய்வதும் பிராப்தம் –
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்-நிர்ஹேதுகமாக -அத்தால் ஆனந்தம் உந்த வாசிக்க திருவாய் மொழி பாடி –
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்-குடல் துவக்கு உள்ள ஸ்வாமி -இது ஒன்றுமே ஆத்மாவுக்கு வேண்டியது –
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு-இந்த எண்ணம் வரவே உகந்து அருளினை தேசங்கள் -இத்தையே வேதம் சொல்லும்
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–அநந்யார்ஹ சேஷ புதர்களுக்கு அனுபவ பிரதி பந்தகங்கள் நிற்காதே –
சேஷமாக இருப்பிற்கு சேஷ புத்தர் அற்றார்க்கு அடியார் –

இவர் கேட்ட இதற்கு காரணம் காணாமையாலே-விடை அளித்தால் அற்றவனாய்-உமக்கு மேல் செய்ய வேண்டுவது என் -என்ன-
ப்ரீதி முன்னாக அடிமை செய்யப் பெற்றேன் இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார்-
அவன்தானே செய்தான் -என்னும் அன்று-அவனுக்கு உயர்வு தாழ்வு காண்டலும்-
அருள் பெற்ற தன்மையும்-எல்லார்க்கும் மோஷம் கொடுத்தலும்-என்னும் இவை வாராவோ -என்னில்-
இத்தலையில் ருசியை விரும்பிச் செய்கையாலே-அவனுக்கு அவை உண்டாக மாட்டா-
அதுவே காரணம் என்று ஈஸ்வரன் அதனைச் சொன்னாலோ என்னில்-அது உபாயம் ஆக மாட்டாது
பலத்தோடு கூடி இருப்பது அன்றோ உபாயம் ஆவது-
இந்த ருசி அதிகாரியின் உடைய ஸ்வரூபம் ஆகையாலே-அவனுக்கு விசேஷணம் ஆம் இத்தனை-
உபாயம் வேறு துணையை விரும்பாதது ஆகையாலும்-இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது-
ஆக
இது உபாயம் ஆகாமையாலே இவர்க்கு இல்லை என்னவுமாம்-
சர்வ முக்தி பிரசங்கம் நீங்குவதற்காக அவனுக்கு உண்டு -என்னவுமாம் –

உற்றேன் –
கெடுமரக்கலம் கரை சேர்ந்தால் போல்-கிட்டிக் கொடு நின்றேன் –

உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் –
ப்ரீதியினால் தூண்டப் பட்டவனாய்க் கொண்டு-திரு வாய் மொழி பாடி-
உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன்-
உகந்து பணி செய்கை சாதனமாக-மேல் சாதனத்தால் அடையக் கூடிய பேற்றினைச் சொல்லுகிறது அன்று-
இரண்டும் ஒரே காலத்திலே உள்ளன ஆகையாலே-

ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் –
இது தானே மாறி மாறி உயிர் உள்ள அளவும் செல்லுகையே அன்றோ வேண்டுவது-
மீண்டு வருகை இன்றி ஒழிகை யாவது -மீளாது ஒழிகை-சம்பந்தம் இல்லாததாக இருக்கிறதோ என்னில்-
எந்தாய் –
இவ் வநுபவம் ஆத்மாவோடு கூடியது என்கிறது –ஸ்வரூப பிராப்தம் –
இத்தலைக்கு அடிமையும்-தேவர்க்கு ஏவும் தனமையை உடைய தலைமைத் தன்மையும் அன்றோ ஸ்வரூபம்-
இவர் விரும்பிய போது அவனும் செய்கிறோம் என்ன-ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

கற்றார் –
ஒரு ஆசனத்தின் கீழே இருந்து கற்றவர்கள்-

மறை வாணர்கள் வாழ் –
வேதத்திற்கு -வியாச பதம் -வியபதேசம் செலுத்த வல்லவர்கள்-அனுபவித்து வசிக்கிற நகரம்-

திருப் பேராற்கு –
ப்ரீதியின் மிகுதியாலே முகத்தை மாற்றி-தனக்குத் தானே சொல்லுகிறார் -என்னுதல்-
அன்றிக்கே –திருப் பேரரான உனக்கு -என்கிறார் -என்னுதல் –எந்தாய் -சம்போதனம் என்றவாறு –

அற்றார் அடியார் தமக்கு-
திருப் பேர் நகரானுக்கு அற்றாரான அடியார் -என்னுதல்
அவனுக்கு அற்றவர்களுக்கு அடியார் என்னுதல்-
அல்லால் நில்லாவே –
ஒரு துக்கமும் இவர்கள் பக்கல் நில்லாது-

———————————————————————————————————-

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்து – சக்தி பிராப்தி பூர்த்தி -முன் மூன்று பதிகங்களில்
-சக்தத்வம் சத்ய காம்தவம் ஆபத் ஸகாத்வம் அன்றோ இவற்றுக்கு –
ஆத்ம தரிசன பல பிராப்தி மரணாவதியாகப் பெற்று காலாசத்தி பல கதிக்குத் துணை கூட்டின தம் பேற்றை
பிறர் அறிய பத்துத் தோறும் வெளியிடுகிறார் -அன்றோ
அர்ச்சிராதி மார்க்கம் வழி போவார்கள் நச புன பார்த்ததே -லேசான மோக்ஷம் அடைவோம் –
ஆனால் நச புன பார்த்ததே என்று அங்கு சென்றவர்கள் எல்லாம் அர்ச்சிராதி கதி வழியே போக வேண்டாம்
-சத்ய லோகம் -12 வைத்து லோகம் -அங்கே இருந்தே அவன் போகலாமே -அர்ச்சிஸ் முதலில் உள்ள மார்க்கம் போக வேண்டாமே -அவனுக்கு –
சரீரமாக இருப்பவை -எல்லாம் -பிரகாரமாக இருப்பவை -தான்
பிரகாரமாக இருக்கும் எல்லாம் சரீரம் ஆக வேண்டாம் புஷபம் மணம் போலே -மணம் குணம் தானே த்ரவ்யம் இல்லை –
யஸ்ய சேதனஸ்ய ய த்ரவ்யம் -சேதனத்வமும் த்ரவ்யமும் வேணும் -சரீராத்மா பாவம் சொல்ல –
சுவீக்ருத சித்த சாதனர்-இத்தை சாத்தியமாக இரக்க-பிராப்திக்கு முன்னே சித்திக்கும்
-பர பக்தி பர ஞானம் பரம பக்தி -என்பதை இத்தை என்கிறார் நாயனார் –
பகவத் இச்சா ஆதீனமாக ஆவிர்பவித்த ஆழ்வார் அர்ச்சிராதிகதி அறிந்து -அவன் காட்டக் கண்டு அருளிச் செய்கிறார்
-கடோ உபநிஷத் சாந்தோக்யம் -சொல்லும்
பிடித்தார் பிடித்தாரை பற்றி அல்லல் தீர பெறலாம் என்றார் முன்னம் -உகந்து பணி செய்வதையும் உனபாதம் பிடிப்பதையும் பெற்றேன் —
ஸூ ராஜ்ய பலம் -எல்லாரும் இந்நாட்டு மன்னர் -பரம ஸ்வராட் -ச ப்ரஹ்ம ச சிவ ச இந்திரா –அங்கு தான் -கர்மாதீனம் இல்லையே -பகவத் அதீனம்-
திருப் பேர் -பேரில் மணாளனை ஒரு நாள் சுற்றம் கடைசியில் அங்கும் -திவ்ய தேச பதிகங்கள் முற்றும் இத்துடன் –
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்-துக்கம் வாஸ் ஸ்தானம் இல்லா தேசம் நீண்ட வயல்களால் சூழப்பட்ட
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன் வி லக்ஷணர் வாழும் -திருவாய் மொழி கேட்டு வாழும் -தொழுவதும் எழுவதும் ஒன்றே போலே
திருவாயமொழி கேட்டு பாடுவதே வாழ்வே
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்-சொல்லாய் செறிந்த தமிழ் -செந்தமிழ் -இலக்கிய தமிழ்
-27 சொல் பொருள் எழுத்து -இலக்கணம் -தொல்காப்பியம் -அகஸ்தியர் சிஷ்யர் -எழுத்து
சொல் வாக்கியம் பொருள் பாடல் -யாப்பு இலக்கணம் பொருந்தி
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே-பொன் சூழ் விசும்பு ஹிரண்மயமான விஷ்ணோ பரமம் பதம் -ஆளுவார்கள்
பாகவதர்கள் தாங்களே நிர்வாகராக நடத்துவது பரமபதம் -அபரிச்சின்னமான -வியாப்தமாய் நித்ய விபூதிக்கு மேல் எல்லை இல்லை
லீலா விபூதிக்கு கீழ் எல்லை என்பர் எங்கும் சூழ்ந்து –
சப்தாவரணங்கள் -மூலப் பிரகிருதி பாழ்- தாண்டி விரஜா நதி – ஸ்வயம் பிரகாசம் -அங்கு எல்லாம் -கோடி சூர்ய பிரகாசத்தை இருளாக்கும் படி
-சுத்த சத்வம் பொன் சூழ்ந்த -தேஜோ மயம்-பரம வ்யோமம் மா க வைகுந்தம் -ஆள்வார்கள்

நிகமத்தில்
இத் திருவாய் மொழியினை கற்க வல்லவர்கள்-இட்ட வழக்கு பரம பதம் -என்கிறார் –
இவர்களும் உடையவர் போலே ஆவார்கள் என்றவாறு —

நில்லா அல்லல் –
துக்கங்கள் ஆனவை-இது நமக்கு இடம் அன்று என்று தாமே விட்டுப் போம் –அநிஷ்ட நிவ்ருத்தி

நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்-
பெருத்த வயல்கள் சூழ்ந்துள்ள திருப்பேர் மேல்-ஆயிற்றுச் சொல்லிற்று-

நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்-
பெரியார் பலரும் தம்மை அனுபவித்து-இனியராய் இருக்கும் திரு நகரியை உடையராய்-இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது
நல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-அன்றோ
சர்வதா அபிகத சத்பி சமுத்ர இவ சிந்துபி-ஆர்ய சர்வ சமச்சைவ சதைக பிரியதர்சன -ஸ்ரீ சங்ஷேப ராமாயணம்-
நதிகளால் அடையப் படுகின்ற கடல் போன்று சத் புருஷர்கள் ஆகிய பெரியோர்களால் அடையப் படுகின்றவர் என்றபடி –
திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –

சொல்லார் தமிழ் ஆயிரத்துள் –
சொற்கள் தாமே வந்து சேர்ந்த தமிழான ஆயிரம் -என்னுதல்
அன்றிக்கே-இனிமைக்கு சொல்லே அமைந்த தமிழான ஆயிரம் -என்னுதல் –

இவை பத்தும் வல்லார் தொண்டர் –
இப்பத்தினை கற்க வல்லவர்கள்-செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே-வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –

ஆள்வது சூழ் பொன் விசும்பே-
எல்லை இல்லாத தேஜோ மயமான பரம பதத்தை-ஆயிற்று ஆளுவது-இஷ்ட பிராப்தி –
இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள் சென்றால்-
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று-அங்கு உள்ளார் சொல்லுவது-

———————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அஷ்டமே அபூத் முனி
தத்த உத்தரம்
வியாமோஹம் ஆத்மனி விபோ-அவேலா-அத்யாதரம்
மயி பிராக் -முன்பு -கதம் தும் அநாதார
ஹேதும் வைத்த உசிதமிக்க
அனுப்பிருச்ச்ய விடாமல் கேட்டு –

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

லஷ்மி காந்தஸ்ய யோகாத்
விபதி சகிதயா
திவ்ய தேச ஸ்திதித்யாத்
மோக்ஷ உத்யோகாத்
தத்தர்த்தம் க்ரியா சபதத்வாத்
ஸர்வதாகா சந்நிஹிதாத்
த்ருஷ்யந்த சந்நிவாசாத்
அதி விதாரணக
ஸூ ஸ்வபாவ பிரகாசாத் -ஸ்வ தந்த்ரன் -ஸ்வ அதீனன்
ஸ்வாமித்வாத் துஷ்யந்தி
இத்தம்

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 98-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-இப்போது ஆதரிக்கிற தேவர்-அநாதி அநாதர ஹேது சொல்லும் என்று-மடி பிடித்துக் கேட்க
அவன் அதுக்கு ஒன்றும் சொல்லாமல்
நிருத்தனனான படியை அருளிச் செய்கிற ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
முதலிலே
அத்வேஷத்தைப் பிறப்பித்து-ஆபிமுக்யத்தை யுண்டாக்கி-ஆஸ்ரயண ருசியை விளைத்து
தானே யுபாயமாய்-தன் திருவடிகளிலே பிரேமத்தையும்-பரம பக்தி பர்யந்தமாக முற்றுவித்து
தன்னால் அல்லாது செல்லாதபடி பண்ணி
நாம் சொன்னபடியே செய்வானாக சமைந்து
நம்மை இவன் இப்படி தலையாலே-சுமவா நின்றதுக்கு அடி ஏது என்று அவனைக் கேட்க –
அவன் நிருத்தரனாய்-கவிழ் தலை இட்டு நிற்க
நிர்ஹேதுகமாகாதே -என்று ப்ரீதராய்
தம்மை அவன் அங்கீ கரித்த படியையும்
அங்கீகார ஹேதுவானவன் கிருபாதி குணங்களையும்-அனுசந்தித்து
இது ஒரு நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்தபடியே-என்று வித்தராகிற
திரு மால் இரும் சோலை மலை யில் அர்த்தத்தை
திருமால் தம்பால் -இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————-

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-

————————————————–

வியாக்யானம்–

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு –
அதிகம் புரவா சாச்சம் மன்யே தவச தர்சநாத் -என்னும்படி-ஸ்ரீ யபதியானவன்
தம் விஷயத்தில்-அத்யாதாரம் பண்ணுகிற படியைக் கண்டு –
அதாவது
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
திருப் பேரான் அடி சேர்வது எனக்கு எளிதாயினவாறே -என்றும்
தெளிதாகிய தேண் விசும்பு தருவானே -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
யூனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் -என்றும்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
உண்டு களித்தேற்கு -என்று தொடங்கி-கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -என்றும்
கருத்தின் கண் பெரியன் -என்றும்
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே -என்றும்
இப்படி-மேல் மேல் என-அத்யாதாரத்தை பண்ணின படி என்கை –

ஏவம் வித நிர்ஹேதுக வ்யாமோஹத்தை தர்சித்து
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ இன்று என்பால் செய்வான் என் என்ன-
அன்று-அநாதி காலம்-துரத்யயமான பிரக்ருதியிலே இட்டு வைத்து அகற்றி விடுவான் என் –
இன்று நிர்ஹேதுகமாக-நிரவதிக வ்யாமோஹத்தை
சர்வஞ்ஞனாய் சர்வசக்தனாய் நிரஸ்த சமஸ்த ஹேயனான நீ
அஞ்ஞனாய் அசக்தனாய் ஹேய சம்சர்க்க அர்ஹனாய் இருக்கிற என் விஷயத்தில்
இப்படிச் செய்வான் என் என்று கேட்க
இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம போகப் புணர்த்தது என் செய்வான்
குன்றன்ன திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரா ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேன் –
என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி —

இப்படி அநாதி அநாதர ஹேது சொல் என்று மடியைப் பிடித்து கேட்க
அவனும் சில ஹேது பரம்பரைகளை இவர் உத்தரத்துக்கு பிரத்யுத்தரமாக சொல்லிக் கொடு போர
இவர் தம் நா வீருடைமையாலே அவனை நிருத்தனாம்படி பண்ண –

இடருற்று நின்றான் –
இப்படி இவர் அருளிச் செய்ய மேல் போக்கடி காணாமல்
தரைக் கீறி கவிழ தலை இட்டு ஸ்தப்தனாய் நின்றான்
இடராவது-அதிகோக்தி சொல்ல முடியாத ஆகுலம் –

துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து –
இது நிர்ஹேதுகமாகாதே -என்று அவன் விஷயீ காரத்திலே விக்ருதராய்
அத்தாலே வந்த சம்ருத்தமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வாரை –
அந்த யசஸ் ஸோபாதியாகத் தானும் சூழ்ந்து -இடருற்று நின்றான்
ஸ்ரீ சர்வஞ்ஞனும் நிருத்தனாய் நிற்பதே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது –

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

One Response to “பகவத் விஷயம் காலஷேபம் -187- திருவாய்மொழி – -10-8-1….10-8-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–”

  1. Thirumalai Ramanuja dasan Says:

    சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாத படி க்ருபை கரை புரண்டு இருக்கையாலே –
    அர்த்தத்தின் சீர்மை பாராதே அநர்த்தத்தையே பார்த்து வெளியிட்டு அருளினார் எம்பெருமானார் – இந்த வாக்கியத்துக்கு என்ன பொருள். மேலும் ஒரே பக்கத்தில் தொடர்ச்சியாக பலவற்றை வெளியிட்டால் தேடிக் கண்டு கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது. பிரித்து வேளியிடுவதோ, அல்லது தேடுதலுக்குண்டான பட்டன் இருப்பதோ நன்மையாக இருக்கும்.
    அடியேன், திருமலை ராமானுஜதாஸன்
    14.02.19

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: