பகவத் விஷயம் காலஷேபம் -186- திருவாய்மொழி – -10-7-1….10-7-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

செஞ்சொல் -பிரவேசம் –

விதி வகையே -என்கிறபடியே அவன் தம்மிடத்தில்-பரதந்த்ரனாய் நிற்கிறபடியை அருளிச் செய்தார் –
அவ்வழியாலே-
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே -என்றும்-
தலை மேலே தாள் இணைகள் -என்றும் –
அவன் தன் திரு மேனியோடு புகுந்து கலந்த படியை அருளிச் செய்தார் –
தம்மோடு வந்து கலந்த இடத்தில் தம்மிடத்தில் பரதந்த்ரனாய்-திரு மேனியை விட மாட்டாதே-
அவன் செய்கிற காதல் பெருக்கினை கண்டார் –
கண்டவர் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று நாம் அடியிலே வேண்டிக் கொள்ளச் செய்தேயும்-
இங்கு நம்மை வைத்தது ஒரு கார்யத்துக்காக என்று இருந்தோம்-
அதாவது இப்பிரபந்தம் தலைக் கட்டு வித்துக் கொள்ளுகை -என்றபடி
அது அவ்வளவில் அன்றிக்கே-நம் உடம்பினை விரும்பி விட மாட்டாமையாலேயாய் இருந்தது –
இவன் வெற்று உடம்பனாய்-சரீர சபலனாய் – இருந்தான்-கவி பாடுவித்துக் கொள்ளுகை ஒரு வ்யாஜ மாத்ரம்-
அது பிரதானம் அன்று-இதுவே இவனுக்கு நினைவு -என்று நினைந்தார் –

நினைந்தவர் -இவ் உடம்பினை விரும்புகிறது நம் இடத்தில் காதலால் அன்றோ –
இப்படி நம்மை விரும்பின இவ்வளவிலே நம்முடைய விருப்பத்தை முடித்துக் கொள்வோம் என்று பார்த்து –
தேவரீர் திரு உள்ளத்தில் ஓடுகிறது என் -என்றார் –
நான் உடம்பனாயே வேறு ஓன்று அறியாமல் படுகிற பாடு அன்றோ -மற்று உண்டோ -என்றான் –
உம் உயிர் வீடுடையான் -உயிரையும் வீடான சரீரத்தையும் உடையான் -ஆத்மாவை வீடான சரீரமாக உடையான் –
அங்கண் ஒண்ணாது -தேவர் -இச் சரீரத்தில் செய்து அருளும் விருப்பத்தை தவிர வேண்டும் –
மங்க ஒட்டு உன் மா மாயை -என்று விண்ணப்பம் செய்தார் –
இவர் விலக்கினது-அவருடைய காதல் பெருகுவதற்கு உடலாயிற்று –
ஒரு மா நொடியும் பிரியான் –
தந்தாமைக் கொண்டு அருமைப் படுத்துவார்கள் அன்றோ மேல் விழுகைக்காக-அது போலே ஆயிற்று-

இப்படி இவன் இவ் உடம்பிலே செய்கிற ஆதரத்தினைக் கண்டு-இவனுடைய காதல் பெருக்கு இருந்தபடியைக் காணில்-
இவ் உடம்போடு நம்மைக் கொடு போக நினைத்து இருக்கிறான் போலே இருக்கிறது-
அப்படிச் செய்யும் போது இவ் உலக வாழ்க்கை நமக்கு என்றும் உள்ளதாய் விடும்-நித்ய மண்டலம் அன்றோ -சரீரமும் நித்தியமாக இருந்து விடுமே –
இங்கே இருந்து இதற்கு ஒரு முடிவு கண்ட தாமத்தை இழந்தோம் ஆவோம் இத்தனை-இதனைக் கழித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்தார்-

பார்த்தவர் –
மங்க ஓட்டே -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயம் -என்றும்-
பொங்கு ஐம்புலனும் -பாசுரம்-என்றும்-
மும்முறை விரும்புவதும் மும்முறையும் தவிரச் சொல்லுகையும் அறியலாம்-
தேவரீர் இச் சரீரத்தை விரும்புகைக்கு அடி-
என்னிடத்தில் செலுத்தும் காதல் பெருக்கே அன்றோ-நான் இதனை விரும்பவில்லை
தேவரீரும் இவ் உடம்பில் செய்கிற விருப்பத்தினைத் தவிர வேண்டும் -என்ன
நீர் உம்முடைய விருப்பத்தை விடாதவாறு-நம் விருப்பத்தை விடுவதாமோ -என்றான்
அம் தண் திருமால் இரும் சோலை வாழி மனமே கை விடேல் -பாசுரம் கொண்டு பிரவேசம்
இவன் இப்படி விரும்புகிறது – இவ் உடம்பின் இழிவுகளை காணாமையால் அன்றோ –
இவனுக்கு இவ் உடம்பின் தாழ்வுகளைக் காட்டுவோம் என்று பார்த்து
இவ் உடம்பாகிறது -பருத்தல் சிறுத்தல் வளர்தல் குறைதல் களை உடையதாய் -விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –
விரும்பப் படும் ஆத்மாவைப் போன்று ஒரே தன்மையதாய்-வேறு பட்ட சிறப்பினை உடையதாய் இருப்பது ஓன்று அன்று
இதனை வெறுத்து அருள வேண்டும் -என்றார்-
அவ்வார்தைகளே இவன் மென்மேலும் விரும்புவதற்கு காரணங்கள் ஆயின –
மனைவினது அழுக்கை உகப்பாரைப் போலே எல்லா காலத்திலும் இவன் விட மாட்டாதவனாய் இருந்தான் –
இவனை கால் கட்டியாகிலும் ‘இக் கால்கட்டினை-அவிழ்த்துக் கொள்வோம் என்று பார்த்து-
இதில் செய்கிற விருப்பத்தினை தேவரீர தவிர வேண்டும்-என்று சரணம் புக்கார் –பிரார்தனாமதி சரணாகதி –
இவர் சொன்னபடியே செய்ய இழிந்தவன் ஆகையாலே
தனக்கு இவ் உடம்பிலே மென்மேலும் விருப்பம் செல்லச் செய்தேயும்
இவர் இதனை விரும்பாத பின்பு நாமும் இதனை வருந்தியாவது வெறுப்போம் -என்று பார்த்தான் –
இவர் இடத்து அவன் காட்டும் பாரதந்த்ர்யத்தாலே
இவ் உடம்பு ஒழிய அவன் கொடு போவானாய் இருந்தான் -மான் ஆங்கார மனம் கெட –
ஆக
இப்படியாலே -அருள் பெறுவார் -திருவாய் மொழியிலே தொடங்கின ஈஸ்வர பாரதந்த்ர்யத்தை முடித்து-
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாய்-எல்லா பொருள்களுக்கும் தலைவனான -சர்வேஸ்வரன்-
தனக்கு இவ் உடம்பில் விருப்பம் செல்லா நிற்கச் செய்தே-
நாம் -இதனைத் தவிர வேண்டும் -என்னத் தவிருவதே –என்ன ஒரு சீல குணம் இருக்கும்படியே –
இவ் விஷயத்தில் ஒருவரும் இழியாதீர்கள்-இழிந்து நான் பட்டதுவே அமையும்-என்று மிகுந்த பிரீதியாலே-
உயிர் காத்து ஆட்செய்மின் -என்று – பிறருக்கு சொல்லித் தலைக் கட்டுகிறார் –

த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலே தழைக்கும் -சூர்ணிகை -185-
நீராடப் போதுவீர்–அனுபவம் அடியார்கள் முன்னிட்டே -இனியது தனி அருந்தேல் -கரீஷ்மா காலத்தில் மடுவில் -செல்வார் துணை தேட்டம் -மூன்றும்
கல்யாண குணாம்ருத சாகரம் -அன்றோ இவன் -பரத்வம் கணுக்கால் அளவு -ஸுலப்யம் இடுப்பு -வாத்சல்யம் நெஞ்சு -ஸுசீல்யம் முழுகப் பண்ணும்
ஸஹ பதன்யா விசாலாஷ்யா சீதா பிராட்டி கூட்டி அன்றோ பெருமாள் இழிந்தார் –
கவி பாட சரீரம் வேண்டுமே -ஸுசீல்யத்தில் இழியாமல் இருக்க உபதேசிக்கிறார் –

—————————————————————————————————–

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

சுந்தர தோளுடையான் -நூபுர கங்கை திருமஞ்சன தீர்த்தம் தினப்படி –
கவி பாடுவித்துக் கொள்ளும் வியாஜ்யத்தால் -ஆழ்வார் திருமேனி ஆதரத்தால்-கண்ட ஹர்ஷம் -தம் தம்மை காக்க வேண்டி இருப்பார்
இவ்விஷயத்தில் அகப்படாமல் ஆத்மாவை நோக்கிக் கொண்டு -கைங்கர்ய நிஷ்டர்கள் வேறே -குண அனுபவம் நிஷ்டர்கள் வேறே –
மங்களா சாசனம் செய்வதே கைங்கர்யம் –தாம் பட்ட படியை அருளிச் செய்கிறார் -இதில் –
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் -மற்ற ஆழ்வார்களுக்கு –ஞான விசேஷ உக்தர்களுக்கு உபதேசம்
திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்-அபகரிக்கும் இடத்தில் -அறியாத படி
-வாமனன் -மகா பலி அறியாமல் பெற்றது போலே மதி மயக்கும் அதி ஆச்சர்ய மான ரூபம் -ஸ்வரூபம் குணம் –பஸ்யதோ ஹரத்வம் –
பக்தர்கள் பரிமாற்றம் கரண த்ரய ஆஸ்ரயம் உபதேசித்தார் கண்ணன் கழலிலே
கிருத்ரிம கவியாய் வந்து -திருவாய்மொழி- பாடுவிக்கும் வியாஜ்யத்தால் நாம் இருக்கும் இடம் வந்து -உள்ளுறை காட்டுவரைப் போலே
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்-சரீரம் ஆத்மாக்குள்ளும் கலந்து ஒரு நீராக கலந்து -நின்றார் –
பரிசர வர்த்திகளான ஸ்ரீ லஷ்மி நித்ய சூரிகள் அறியாதபடி –
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே-பிரித்துக் காண ஒண்ணாத படி க்ரஸித்து
-அசேதனம் போலே போக்த்ருத்வம் இல்லாத படி போக்யமாக கொண்டான் –
தானே போக்தா -வாக இருந்து பெறாப் பேறு பெற்று நிறைந்தான் -அவாப்த ஸமஸ்த காமன் ஆனான்
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின்-செம்மை –
பிரயோஜனமாம் இல்லாமல் -எதிர்பார்க்காமல் -அனன்யா பிரயோஜனமாக பாசுரங்கள் -ஸ்வயம் பிரயோஜனம்
கவி பாட வல்லவர்கள் -உங்கள் ஆத்மாத்மீயங்கள் அகப்படாமல் காத்துக் கொண்டு வாசிக்க கைங்கர்யம் -பல்லாண்டு பாட
அவனால் அபஹ்ருதம் ஆவது அவர்ஜனீயம் இன்றியமையாதது என்று கருத்து -சுமித்ரா தேவி இளைய பெருமாளுக்கு சொன்னால் போலே –

திருவாய் மொழி பாடுவிக்க என்ற ஒரு வ்யாஜத்தாலே புகுந்து-நம் இடத்திலே அவன் செய்த காதல் பெருக்கினைக் கண்டு-
அவனுக்கு அடிமை செய்வார் அவனுடைய சீலம் முதலான-குணங்களிலே அகப்படாதீர்கள்-என்கிறார்-

செஞ்சொற் கவிகாள் –
செவ்விய சொற்களை உடைய புலவீர்காள் –
கவிக்குச் செவ்வையாவது –
வேறு ஒரு பிரயோஜனத்தை விரும்பாது இருத்தல் –பிரயோஜனத்தை விரும்புதல் கவிக்கு குடிலமாம்-
இன் கவி பாடும் பரம கவிகள் -7-9-8-முதல் ஆழ்வார்களை – என்றும் –
செந்தமிழ் பாடுவார் -பெரிய திருமொழி -2-8-2- என்றும்-சொல்லுகிறவர்களை ஆயிற்று நினைக்கிறது –
பெரும் தமிழன் நல்லேன் -இரண்டாம் திருவந்தாதி -74-என்னா-
பெரிய தமிழன் மகா கவி -இங்கே இருந்து கவி பாடுவதால் தமிழ் பாடுவதால் நித்ய ஸூ ரிகளை விட பெரியவன் –
வாய் அவனை தவிர வாழ்த்தாது-முதல் திருவந்தாதி -11-என்றவர்கள் அன்றோ வேறு பிரயோஜனத்தை கருதாதவர்கள் –

உயிர் காத்து ஆட்செய்மின் –-
உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள்-நீங்கள் உளராய்க் கவி பாட வேண்டுமே-
இத்தலை உண்டானால் அன்றோ அத்தலைக்கு மங்களா சாசனம் செய்யலாவது-
ஆட் செய்மின் -என்கிறார் -கவி பாடுதல் வாக்கினால் செய்யப்படும் அடிமை ஆதலாலே-
ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மா மாயன் -9-6-7-அன்றோ –கவி பாட கொள்ளும் வியாஜ்யம் -என்றவாறு –
அடிமை கொள்வாரைப் போலே புகுந்து மற்றைப் படியேயாய்-இருக்கும் பலிப்பது–அடிமை பண்ணி -பாது காத்துக் கொள்ளுங்கோள்-
ஆழம் காலிலே இழிந்து அமிழ்வார் அவ்விடத்தே கொண்டைக்கோல் நாட்டுமாறு போலே-
கொண்டைகோல் நாட்டுகிறார் ஆழ்வார் -என்று சிற்றாள் கொண்டான் -பணிப்பர்-
இவ்விடம் பரப்புத் துறை-இவ்விடம் மடு-என்று-நிலவர் எல்லை குறிக்குமாறு போலே-
உடையவர் -இன்னார் உயிர் என்னாமையாலே-
அவன் உயிரைக் காத்து ஆள் செய்யுங்கோள் -என்று அருளிச் செய்தது -என்றது
அவன் மேல் விழ தாங்கள் இறாய்க்கையாவது அவன் இழத்தலே அன்றோ-அவன் உயிரைக் காத்தலைச் செய்யுங்கோள் -என்றபடி-
அயோக்யதா அனுசந்தானத்தாலே அகன்றால் -சேராமல் அவன் இல்லை நீங்களும் இல்லை –
என்னை அழித்துக் கொள்வேன் -திரு மங்கை ஆழ்வார் திரு நெடும் தாண்டகம் -பெருமாளை அழிக்க திட்டம்
-ரகஸ்யம் புரிந்து கொண்டார் -தன்னைக் காட்டினான்

வம்மின் புலவீர் -8-9-6-என்று முதலில் ருசி இல்லாதாரையும்-இரந்து அழைக்கிற இவர்-
சீலம் முதலான குணங்களில் இழிகிறவர்களையும் விலக்குகிறார் ப்ரீதியின் மிகுதியாலே-
நினைதொறும் சொல்லும் தோறும் நெஞ்சு இடிந்து உகும் -9-6-2-என்றும்-
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -என்றும்-
சீலம் முதலான குணங்களில் புண்பட்டு அன்றோ இவர் இருப்பது –
உங்களை இழத்தற்கு வேண்டிய காரித்தைச் செய்யாதே-
அவனுடைய இறைமைத் தன்மையிலே -நியந்த்ருத்வம் -ஐஸ்வர்யம் –இழிந்து கவி பாடப் பாருங்கோள்-
பஸ்யமே யோக ஐஸ்வர்யம் -விஸ்வ ரூபம் காட்டி -ஐஸ்வர்யம் என்றாலே நியந்த்ருத்வம் —
சீல குணத்திலே இழிய நினையீதீர்கோள் –
கவிகாள் -என்றால் உயிர் காத்து கவி பாடுங்கோள் -என்ன அன்றோ அடுப்பது-
அங்கண் சொல்லாதே ஆள்செய்ம்மின் -என்கிறார் ஆயிற்று
ஆள் செய்கையாவது கவி பாடுதல் -என்று இருக்கும்-புகழும் நல் ஒருவன் -என்கிற திருவாய் மொழியில் தம்வாசனையாலே-

இச் சீல குணத்தில் இழியாதீர்கோள் -என்று அறுதி இட்டு உரைப்பதற்கு காரணம் என் என்னில்
காரணம் சொல்கிறார் -மேல் –
தானேயாகி நிறைந்தானே -என்று தம்மைக் காண்கிலர் காணும் –
தானே -அவதாரணம் -ஆழ்வாரை உண்டான் –ஆழ்வாரைப் பெற்று அவாப்த ஸமஸ்த காமன் ஆனான் -நிறைந்தானே-
திருமால் இரும் சோலை –
திருமலையில் நிற்கிற நிலையும் சீலத்துக்கு உடல் அன்றோ –
வஞ்சக் கள்வன் –
களவு தானும் – மெய் என்னக் – களவு காணும் ஆயிற்று –
என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் இருக்கும் -9-6-6-என்னுமாறு போலே
களவு காணா நிற்கச் செய்தேயும் செவ்விது என்று தோற்றும்படி இருக்கும் –களவு தன்னை களவு காணும் ஆயிற்று –
மாலை கட்டின பா மாலை -மாலைக் கட்டின மாலை -போலே திருட்டை திருடினான்-
இத்தலையில் அடிமையை நிலை நிறுத்துவாரைப் போலே புகுந்து-
தான் அதனை எறட்டுக் கொண்டு-தலைவனாம் தன்மையை இத்தலையிலே வைத்து-
தலைமேல் கொள்வான் -ஆயிற்று – -சேஷத்வம் திருடினான் -கள்வா -ஆத்மபஹாரம் –பிள்ளை பெருமாள் ஐயங்கார்
சேஷித்வம் பட்டம் கொடுத்து இதுவே சேஷத்வம் என்று காட்டிய கள்வன்-எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் என்பர் –

இப்படி அவன் களவை நீர் அறிந்தீர் ஆகில் தப்பாது ஒழிவான் என் என்னில் –
மா மாயன்-
அப்படி அறியச் செய்தேயும் தப்ப ஒண்ணாத படியான-ஆச்சர்யமான செயல்களையும் குணங்களையும் உடையவன் –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் தான் மாய மந்த்ரம் தாம் கொலோ -நாச்சியார் திரு மொழி -2-4-என்கிறபடியே-

நன்று -குணங்களாலும் செயல்களாலும் உம்மை அவன் அகப்படுத்தின வழி தான் யாது -என்ன –

மாயக் கவியாய் –
ஆழ்வீர் உம்மைக் கொண்டு உலகத்தில் நடையாடாத-சில கவிகளைப் பாடுவித்துக் கொள்ளப் பாரா நின்றோம்-
அப்படிச் செய்வோம் -என்று ஆயிற்றுப் புகுந்தது
கவி என்று ஒரு காரணத்தை இட்டுக் கொண்டு வந்தான்-காதலி இருக்கும் இடத்தில் -தண்ணீர் -என்று புகுமாறே போலே –

வந்து
வந்தவனும் தானே ஆயிற்று –நான் தான் இருந்த இடத்தே சென்று-
என்னை இட்டு சில கவிகள் பாடுவித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லச் செய்கை அன்றிக்கே-
தானே வந்தான் –அடையத் தகுந்தவனான தானே ஆயிற்று வந்தான்-இதுவன்றோ சீலம் ஆவது –அபி கம்யனாக தான் இருக்க அபிசரித்தான்–

வந்த இடத்தில் அவன் உமக்கு நலிவாக செய்தது என் என்னில் –
என் நெஞ்சும் உயிரும் –
நெஞ்சினைக் கூறியது உடலுக்கு உப லஷணம்-உயிர் -ஆத்மா-
வரும் பொழுது நான் இருந்தேன் வந்த பின்பு என்னைக் காண்கின்றிலேன்-

உள் கலந்து –
ஒரு நீராகக் கலந்து –சரீரத்தோடு ஆத்மாவோடு வாசி அற அனுபவிக்கிறான் –

நின்றார் அறியா வண்ணம் –
இச் செயலுக்குத் தலைவரான பிராட்டி திரு வநந்த ஆழ்வான்-திருவடி முதலானார்க்கும் அறிய முடியாதபடி-ஆயிற்று என்னோடு கலந்தது –
இப்படிப் பட்ட காதலோடு கூடிய செயல்களில் நிற்பார் அவர்களே அன்றோ –
அவர்களுக்கும் தெரியாதபடி –ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9- என்னுமாறு போலே –

என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு –
சரீரம் வேறு உயிர் வேறு என்று நினைத்திலன் -எனக்கு மயர்வற மதி நலம் அருளினவன் -–தேஹாத்ம விவேகம் அறிந்திலன் –
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான் -9-6-5-என்னுமாறு போலே சரீரத்தையும் உயிரையும் ஒரு சேர அனுபவித்தான் –

தானே யாகி –
தம்மை காண்கின்றிலர் காணும்-
இருவருமாக அனுபவிப்பாரைப் போலே புகுந்து அனுபவிக்கிறவன் தானே யானான்-
மற்று ஒன்றைக் காணா -காண்பனவும் -உரைப்பனவும் மற்று ஒன்றி கண்ணனையே கண்ட –திருப் பாண் ஆழ்வார்
-தன்னையும் -தன் இருப்பிடம் – பலம் -சொல்லாமல் —
என்னை முற்றப் பருகினான் -9-6-10-என்னுமாறு போலே-இத்தலை இனிய பொருளாய் அற்றதாயிற்று-
இத்தலை ஒரு அறிவுடைப் பொருள் என்று தோற்றாதபடி ஆயிற்று செயல் செய்தபடி –பிறருக்கு உறுப்பாய் இருக்குமது ஒழிய-
தனக்கு என ஒரு தகுதி இல்லாத அறிவில்லாப் பொருளைப் போன்று செய்தான்-தனக்கே யாக -2-9-4- என்றபடியே கொண்டான்-
இனிய பொருள்களிலும் ஸ்வரூப பேதங்கள் -உண்டாகா நின்றதன்றோ- சந்தனம் மலர் போலே-அவை போன்றதே விட்டது அறிவுடைப் பொருளும்-
சூஷ்ம ஓட்டும் நீரிலே கழுவி-பைந்தொடி மடந்தயரைக் கொண்டு-ஷட்குண ரசாந்தமாக்கி -ஆசார்ய ஹிருதயம் –
தானேயாகி-
ஈர் அரசு தவிர்த்தான் என்பார் -தானேயாகி -என்கிறார்-
இத்தலையை புள் கவ்வப் பண்ணி -செருக்கு அற்றவனாக்கி –தானே தலைவனாய் நின்றான் -என்றபடி-

நிறைந்தானே –
அவாப்த சமஸ்த காமன் -எனபது இது காறும் பெயர் மாத்ரமேயாய்-இவரைப் பெற்ற பின்பாயிற்று நிறைந்தவன் ஆயிற்று-
இங்கனே இருப்பது அன்றோ சீலமாவது -என்றது-
பெரியவன் சிறியவன் இடத்தில் கலக்கும் இடத்தில்-தன் பெருமையும் அவன் சிறுமையும் தோற்றாத படி-புரை அறக் கலக்கை அன்றோ –
அபிஷிச்ய ஸ லன்காயாம் ராஷசெந்த்ரம் விபீஷணம்-க்ருத க்ருத்யா ததா ராம
விஸ்வர பிரமுமோதா ஹ -சங்ஷேப ஸ்ரீ ராமாயணம் -85 -என்னுமாறு போலே-

————————————————————————————————————————

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-

ஸம்ஸலேஷித்த அதிசயத்தால் நிரதிசய போக்யனாய் கிருதக்ருத்யனாய் ஆனான்
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்-சர்வ பிரகாரத்தாலும் ஆத்மாவை அனுபவித்து -பிரதானமாகக் கொண்டு
-நிறைந்து -பரி பூர்ணனாய் -ஸமஸ்த லோகங்களும் -பிராணிகளும் தானேயாம் படி அந்தராத்மா தயா நிர்வாகனாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்-விசேஷித்து அஹம் புத்தி – விஷய விவகாரமும் தானேயாகி-தனிச் சிறப்பு –
விசிஷ்டமாக இருக்க -அபிருத்தாக் சித்த விசேஷணம் எப்பொழுதும் -சம்பந்தம் உண்டாக்க வேண்டாம் அறிவு ஞானம் தானே வேணும்
ஸ்துத்யனான தன்னை தானே ஸ்துதித்து -ஆத்தாள் தனக்குப் பிறந்த உகப்பை
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்-கோனே யாகி -போக்தாவும் பாக்கியமும் தானேயாகி –

தம்மோடு கலந்த பின்பு-அவனுக்கு பிறந்த நிறைவினைக் கண்டு-இனியர் ஆகிறார்-

தானே ஆகி நிறைந்து –
ஏவகாரம்-இருவரும் சேர்ந்து செயல் செய்யப் புகுந்து-தானே பெற்றானாய் இரா நின்றான் –தான் போக்தா –

எல்லா உலகும் உயிரும் தானே யாய் –
எல்லா உலகங்களும்-அந்த அந்த உலகங்களில் உண்டான மனிதர்கள்-முதலானவர்களும்-தானே யாய் நின்றான் –
ஆழ்வாரைப் பெற்ற பின்பு சர்வேஸ்வரன் ஆனான் -என்றபடி –
சர்வேஸ்வரன் ஆனதும் இப்போதேயோ என்னில்-ஓம் அப்படியே-இப்பொழுது தான் நிறைந்தான் –
பாதுகாப்பவனாக இருப்பதால் அன்றோ அவனுக்கு ஸ்வரூபம் நிலைத்து இருப்பது –
என்று என்று இறைஞ்சி இரு தாமரைத் தாளில்
ஒன்றும் கதிர் முடியார்க்கு ஓம் என்று உரைத்தருளி
இன்று இங்கு இருவேமும் இப்போது உரைத்த மொழி
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக என்றான் -வில்லி பாரதம் கிருஷ்ணன் தூது -40
பாது காக்கப் படுகின்ற பொருள்களை பாது காத்தல் அல்லது-ஏவுகின்றவன் ஆக ஒண்ணாதே –
இவரைப் பெறுவதற்கு முன்பு தன்னுடைய ஏவுகின்ற தன்மை அடைய-
கண் நொந்தார் அகம் போலே காணும் காணும் கிடந்தது-கண் நொந்தாருக்கு விளக்கு அஸஹ்யம் –
அசந்னேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்ம இதி வேத சேத்-அஸ்தி ப்ரஹ்ம இதி சேத் வேத சந்தமேனம் தத விது இதி -தைத்ரியம் –
ஆத்மா நித்யமாக இருக்கச் செய்தே பகவத் ஞானம் பிறவாத போது இல்லாதவனாய் இருக்கிறான் -என்னலாய்-
அது பிறந்த போது அவனை உள்ளவனாக அறிகிறார்கள்-
என்னலாம் படி இருப்பது போலே காணும் அவனும் இருப்பது –
எதிர் தலையைப் பற்றி நிற்றல் இரண்டு தலைக்கும் ஒக்கும் –
நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலை – என்கிறபடியே
இவன் அடியவனைக் கொண்டு உளனாம்-அவன் தலைவனைக் கொண்டு உளனாம் –

தானே யான் என் பான் ஆகி –
யானே என்பான் தானாகி –
எல்லார் இடத்திலும் நிற்கும் நிலை ஒழிய-இவருடைய திரு மேனியில் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது
நான் என்ற பெயர் அளவேயாய் நிற்கிற நான் -தான் என்னலாம் படி ஆனேன்-
சேஷ பூதன்-என்றவன் சேஷி ஆனேன் -என்றவாறு -அப்ருதக் சித்த விசேஷம் தெரிந்து தானே அவன்-
அஹங்காரத்தால் இல்லை -கடல் ஞாலம் செயதேனும் யானே போலே –
தம்மைத் தடவிப் பார்த்த இடத்தில் காண்கின்றிலர் –அவன் தலையிலே சுமக்க காண்கிற இத்தனை –
அவனும் தன் தலையிலே பாரதந்த்ர்யத்தை எறட்டுக் கொண்டு –
இவர் தலையிலே அகங்காரத்தை உண்டாக்குகிற முதன்மையை வைக்கையாலே இவரையே காண்கிற இத்தனை-
சேர்ந்து இருக்கிற பொருளில் விசேடியத்தின் முதன்மையாலே விசேட மாத்ரமான தம்மைக் காண்கின்றிலர் ஆயிற்று-
விசேஷணம் அப்ரதானம் உண்மை -விசிஷ்ட ப்ரஹ்மமே பிரதானம் என்றவாறு –
காரிய நிலையோடு காரண நிலையோடு வாசி அற பொருள் சேர்ந்தே இருக்கச் செய்தேயும்-
ப்ரஹ்மமே முதல் காரணம் என்னக் கடவோம் அன்றோ –
அவற்றுக்கு வரும் விகாரங்கள் முதலானவைகள் வரும் என்று சங்கித்து-
அவற்றை விசேடணத்திலே ஒதுக்குகிறதும் அவனுக்கு குற்றம் வாராமைக்காக-
ஆனாலும் பொருள் தான் ஓன்று என்னலாய் இருக்கும் அன்றோ-
இயல்பாக உள்ள சம்பந்தம் கண் அழிவு அற்று இருக்கையாலே –
கடம் வஸ்த்ரம் -கட படாதிகள் -முதலானவைகளைப் போன்று பிரிந்து இருத்தல் உண்டாய் இருக்கிறது அன்றே-
பிரகார பிரகாரி தன்மையால் சொல்லுகிறது –
ஜாதி குணங்கள் பொருளைப் பற்றி கிடக்குமாறு போலே ஆயிற்று –
தண்டம் குண்டலம் போலே இல்லாமல் -ஜாதி குணம் போலே பிரிக்க முடியாமல் சேதனங்கள் அசேதனங்கள் ப்ரஹ்மத்துடன் விசிஷ்டம் –

இப்படி பொருள் இருக்கையாலே-
தன்னைத் தானே துதித்து –வார்த்தைகளுக்கு முக்கியமான பொருளாயும் –
கார்யாணாம் காரணம் பூர்வம் -வசஸாம் வாஸ்யம் உத்தமம்-யோகாநாம் பரமாம் ஸித்திம்- பரமம் தே பதம் விது -ஜிதந்தா-என்கிறபடியே

அஹம் -என்னும் சொல்லின் பொருள் அவன் அளவும் சென்று காட்டக் கடவதாய் அன்றோ இருப்பது-
இவர் பக்கலிலே பிறக்கச் செய்தேயும் அவன் செய்தான் என்று அவன் தலையிலே ஏறிடாலாம் அன்றோ –
நான் துதிக்கப் படுகின்றவன் ஆகில் துதித்தவன் -நானாவது –தான் துதித்து என்னாமல்- தன்னை -என்கிறார் –

எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே-
சர்வ ரச -என்கிற பொதுவான நிலை அன்றிக்கே-எனக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே –
கொடியேன் பருகு இன்னமுதே -என்கிறபடி-
தன்னைத் தானே துதித்து -என்கிற இடத்தில் தம்மைக் கண்டிலர்-
இங்குத் தாம் உளராகவும்-தமக்கு இனியதாகவும்-தொடங்கிற்று-
தாம் பாடின கவி கேட்டு -அவன் இனியனாய் இருக்கும் இருப்பு-தமக்கு இனியதாய் இருக்கிறபடி –
உபாய பாவத்தில் அந்வயம் இல்லை -உபேயம் -அனுபவத்தில் அந்வயம் உண்டே —

திருமால் இரும் சோலைக் கோனே –
மேலே கூறிய இனிய பொருள்களைப் போலே ஆயிற்று-திருமலையிலே நிற்கிற நிலையும் –
திருமால் இரும் சோலை அம் கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை -பெரிய திருமொழி -7-3-6-என்னக் கடவது அன்றோ –
திருமால் இரும் சோலைக் கோனே -யாகி-
இரண்டு உலகங்களையும் உடையவனாய் இருந்ததால் வந்த ஏற்றத்துக்கும் அவ்வருகே-
ஓர் ஏற்றம் போலே ஆயிற்று திருமலையை உடையனாய் இருக்கையால் வந்த ஏற்றமும் –
இவரைப் பெற்ற பின்பே காக்கும் தன்மை நிறைந்த தாயிற்று-
இல்லையாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்போடு-
திருமலையில் நிலையோடு வாசி அற்று போமோ அன்றோ –

நின்று ஒழிந்தான் –
இங்கு நின்ற பின்பு ஆயிற்றுப் பரகு பரகு-வியாகுலம் -அற்றது-க்ருதகிருத்யனாய் இரா நின்றான் –

என்னை முற்றும் உயிர் உண்டே –
என் உயிரை முற்றும் உண்டே-எங்கும் பரந்து இருக்கிற தான்-அணு அளவிதான ஆத்மாவினை நுகர்தல்-
தனக்கு ஏற்றமாம் படி ஆயிற்று இத்தலையான படி –அவன் தன் அபிப்ராயத்தாலே மதித்து இருந்தபடி –

———————————————————————————————

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என் அளவு அன்றியே என் தூக்கத்திலும் ஆனந்தம் -ஸந்துஷ்டானாக பிரதிஷ்டித்தானாக உளனாக நிலை பெற்றான் ஸ்திதோஸ்மி-
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு-ஜீவனையும் -சரீரத்துக்குள்ளும் சர்வ பிரகாரத்தாலும் அனுபவம் பண்ணி
-மாய ஆக்கை -அஞ்ஞானம் இவற்றுக்கு ஹேது-என்பதால் மாய -பந்தகமான சரீரம் -பிரகிருதி உடைய கார்யம் -முக்குணம் கூட்டுருறவு
-ப்ரத்யக்ஷ சித்த தோஷங்கள் உண்டே -பரமபதத்தில் சங்கல்ப ரூப ஞானத்தால் அனுபவிக்க இங்கே சரீரம் இந்திரியங்கள் வேண்டுமே அனுபவிக்க –
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்-அபிமானி ஜீவன் என்னையும் -அனுபந்தி சரீரம் -தானே அபிமானியாய்
-ஜீவனுக்கு அகங்கார மமகாரங்கள் இல்லாத படி -தானேயாய் -அபிமானித்து -கிருதக்ருத்யனாய் நின்ற
-ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் உடைய நிருபாதிக ஸ்வாமி -பொருந்தி வர்த்திக்கும்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்-தெற்குத் திக்கு ஸ்லாக்கியமான -கை கூப்பிச் சேர்ந்த
-சேஷத்வ அனுரூப வ்ருத்தியைப் பண்ணி –
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே-ப்ரஹ்மத்தின் பிரமம் அதிஷ்டானம் இல்லாமலே
-தனக்காக வந்த மருள் வியாமோஹம் –
இனி மேல் வேறே கந்தவ்ய பூமி உண்டோ -தாண்டி போவேனோ -போக்கிடம் இல்லையே -போக தேவை இல்லை –
அம்மான் நிருபாதிக சேஷி உடைய திரு அருள் என்னவாய் இருக்கு -அபிநிவேசம் என்ன அளவு –
இதில் காட்டில் வேறு சில பிராப்யங்கள் உண்டாய் அவற்றையும் உபகரிப்பானாய் இரா நின்றான் –
தென்னன் -பாண்டிய மன்னன் என்றுமாம்

அவனுக்கு தம் பக்கல் உண்டான காதல்-எல்லை கடந்து இருத்தலை-அருளிச் செய்கிறார்-

என்னை முற்றும் உயிர் உண்டு –
என் உயிரை முற்றும் உண்டு –
அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜ-ந த்வம் சமர்தச்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ர்யாம் வனே -ஆரண்ய -37-108-
என்கிற ஏற்றத்தை போலும் போரும் ஆயிற்று இவர் உயிரை எங்கும் புக்கு அனுபவிக்கப் பெறுகையால் வந்த ஏற்றம் –

என் மாய ஆக்கை –
என்னுடைய உயிரை அனுபவித்து அவ்வளவிலே தான் தவிருவானாய் இருந்தானோ-
அழுக்கு உடம்பு -திரு விருத்தம் -என்றும்-பொல்லா ஆக்கை 3-2-8- என்றும்-
புண்ணை மறைய வரிந்து -5-1-5-என்றும் சொல்லுகிறபடியே இவர் தண்ணிது என்று தாம் அருவருத்து புறப்பட்டு நில்லா நின்றார் –
இவர் இகழா நிற்கச் செய்தே அவன் இது உத்தேச்யம் என்று மேல் விழா நின்றான் என்பார் -உள்புக்கு -என்கிறார் –
புகுந்து -என்னாத புக்கு -என்கிறது-அதனோடு தமக்கு தொற்று அற்று இருக்கிறபடி தோற்றுகைக்காக-
தம் நெஞ்சாலே இதனை இவர் அருவருத்து புறப்பட்டு நின்றார் –
அவன் தலை துலுக்கு பெறும் அளவும் பார்த்தாயிற்று இவர் இருக்கிறது –
மங்க ஒட்டு என்னும் அளவும் அவன் இதனை விட மாட்டாமையாலே உள்ளே புகுரா நின்றான் –
இதனுள் புக்கு –
தொன்று தொட்டு இவ் உடம்போடு முகம் பழகிப் போந்தவன் அன்றோ இவன்-
உயிர் வழியாக குந்தி அடி இட்டு நிற்குமவன் அன்றோ அவன் –அவன் மேல் விழா நின்றான் –
தனக்கு பிரகாரமான உயிருக்கு பிரகாரமாய் இருந்து கொண்டு தனக்கு பிரகாரம் ஆவது அன்றோ இது
அநேக ஜீவேன ஆத்மநா அனுப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக்யம் -8-2-
இந்த உயிரை சரீரமாக உடைய என்னால் அந்தர்யாமியாகப் பிரவேசிக்கப் பட்டு-
நாம ரூபங்கள் உண்டு பண்ணப் படுகின்றன -என்னக் கடவது அன்றோ –

என்னை முற்றும் தானேயாய் –
இப்படி உயிர் உடலோடு வாசி அற எங்கும் புக்குப் பரந்து இருக்கையாலே -தானே -என்ன தட்டு இல்லை-
காரண கார்ய பாவ்யம் ஆகையாலே-
இவர் -நான் -என்னும் அதனையும் கொண்டான்-இவர் – எனது -என்னும் அதனையும் கொண்டான்-
அன்றிக்கே
ஈஸ்வரனுக்கும் கூட விளாக்குலை கொண்டு -கபளீ கரித்து-அனுபவிக்க ஒண்ணாத படி ஆனார் ஆயிற்று -என்னுதல்-
சகல பிரகாரங்களை -ஞானம் ஆனந்தம் சேஷத்வம் குணங்கள் போன்றவை முற்றவும் என்றபடி –

நின்ற –
உள்ளும் புறம்புமான எல்லா இடங்களிலும் நாராயணன் பரந்து-
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித-தைத்ரியம் -11-8-என்னும் பொதுவான நிலை அன்றிக்கே –
மாய அம்மான் சேர் –
ஆச்சர்யமான குணங்களையும் செயல்களையும் உடைய சர்வேஸ்வரனும் கூட-தண்ணீர் தண்ணீர் -என்று கிட்டும்படியான தேசம் ஆயிற்று –
தென்னன் திருமால் இரும் சோலை –
தென்னன் -என்று அங்குத்தை அரசனைச் சொல்லி அவனதான திருமலை -என்னுதல்
அன்றிக்கே-தெற்குத் திக்கிலேயாய் நன்றான திருமலை -என்னுதல்-

திசை கூப்பிச் சேர்ந்த யான் –
அவன் விரும்பின திக்கினை விரும்பினார் ஆயிற்று இவரும்-
நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு முடிவு இல்லை திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்புஎன்றான் -கம்பர் –

திசை நோக்கி மெய்ப்பூசனை புரியும் வேங்கடமே -திருவேங்கடமாலை -18

திசை கூப்பிச் சேர்ந்த யான் –
ஒரு திக்குப் பட அன்றோ இவர் விரும்புவது என்றது –அவனை உகந்து அவ்வழியாலே அவன் விரும்பின தேசத்தை உகந்து-அதனோடு சம்பந்தம்
உடைய திக்கினை உகந்து-இப்படி அவனோடு சம்பந்தம் உடைய சம்பந்திகள் அளவும் உகக்கும்படி கை கழியப் போந்த நான் -என்றபடி –
அவன் தான் இவரை உகந்து-இவருடைய சம்பந்தம் உடைய உடம்பினை விரும்புவது போலே ஆயிற்று-
என் எண் தான் ஆனானே -1-9-7-என்றார் அன்றோ அடியிலே –

இன்னம் போவேனே கொலோ –
எனக்கு இத்திசைக்கு அவ்வருகே ஒரு போக்கிடமுண்டோ-ஒரு திக்குக்கு உட்பட்ட நான் இனி அவ்வருகு போவேனோ-
இவன் இப்படி கிடந்தது படுகைக்கு-இனி அவ்வருகு போகையாவது -திருமலையில் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ளுகை- அன்றோ –

என் கொல் அம்மான் திருவருளே –
அம்மான் திருவருள் என்கொல் –
சர்வேஸ்வரனைப் பற்றி வரும் போது-விஷயம் இல்லாமலே மயக்கம் உண்டாகுமே -அன்றோ –
விடில் செய்வது என் என்று அதிசங்கை பண்ணினான் அன்பினால் என்கை-
சரமாவதி சேஷம் ஆகையால் -தன்னை விட பிரசங்கம் இல்லை -விடில் என் செய்வது -என்று அதிசங்கை பண்ணினான் அன்பினால் என்கை-
அன்றிக்கே-என் செய்யாதானாய்த் தான் இவன் இங்கனே கிடந்தது படுகிறது-
இவர் திறத்தில் எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போலே எதனைச் செய்தோம் என்று இரா நின்றான் ஆயிற்று-
அருள் -அன்பு / கொடை இரண்டு அர்த்தங்களிலும் வியாக்யானம்-

——————————————————————————————

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

அநு வாதம் -வினை சொல் -சரீரம் விரும்புகைக்கு ஹேது வாகையாலே -ப்ராப்யம் இது பிராப்பகம் திருமலை -இரண்டையும் கை விடான் –
என் கொல் அம்மான் திருவருள்கள்
உலகும் உயிரும் தானேயாய்–ஒருவனை -பிடிக்கை ஊரை வளைப்பாரைப் போலே -சர்வ லோகங்களும் சர்வ பிராணிகளில்
அந்தராத்மாவாகக் கொண்டு -ஆழ்வாரை பிடிக்க திட்டம்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி-இதுவும் ஆழ்வாரை விடாமல் பிடித்துக் கொள்ள -லபிக்கைக்கு ஸ்தலம் தேடுவாரைப் போலே
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை-தெற்கு என்னும் திசைக்கு சிரசாவாஹ்யமாக பிரதானம் -திருமலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே-
நம் போல்வாருக்கு அனுபாவ்யமான -அவனுகந்த திருமலை என்பதால் –சம்பந்தம் பொது -நண்ணாத படியால் அசுரர்
-விபரீதம் -விஷ்ணு பக்தன் தேவன் -நசிக்கும் படியாக -த்ரை விக்ரம அவதானம் பண்ணி -ஆழ்வாரை பிடிக்க
-மகா பலி இந்திரன் வியாஜ்யம் ஆக்கி -திருவடியால் கிளறி –
அம்மான் -ஸ்வாமி -நித்ய வாசம் செய்வதால் அசுரர் நலிவு அடைவார்கள் -நண்ணா அசுரர் நலிவு எய்தும்படி குன்றம் கை விடான் என்றபடி
என் கொல் அம்மான் திருவருள்கள்-ஸ்வாமி உடைய உபகாரங்கள் — சீல குணங்கள் எப்படி இருக்கின்றன -கிரியை -வினை சொல்
திருவருள்கள் –என்னவாய் இருக்கின்றன -என்றபடி –

தம்முடைய திருமேனியைக் காட்டிலும்-தம்மோடு கலந்து பழகுவதற்கு-
தக்க நிலம் என்று திருமலையில் அவன் வைத்து இருக்கும்-காதல் பெருக்கினை -அருளிச் செய்கிறார்-

என் கொல் அம்மான் திருவருள்கள் –
சர்வேஸ்வரனுக்கு-ஒரு விஷயம் இல்லாமலே-மயக்கம் உண்டாவதே –

உலகும் உயிரும் தானேயாய் –
என்ன குறை உண்டாய்த் தான் இப்படி படுகிறான் சர்வேஸ்வரன் -அவாப்த சமஸ்ய காமன் –

நன்கு என் உடலம் கை விடான் –
செருக்கனாய் இருக்கும் அரச புத்திரன் இழி குல பெண்ணின் கால்கடையிலே துவளுமாறு போலே-
நன்கு என் உடலம் –
சர்வேஸ்வரன் தன்னைக் கேட்டார்க்கு சொல்லுகிற வார்த்தை இருக்கிறபடி –அத்தை ஆழ்வார் அனுவாதம் செய்கிறார் என்றபடி –
ஆழ்வாரை -நமக்குத் தந்த திருமேனி அன்றோ -என்னா நின்றான் ஆயிற்று –
அன்றிக்கே-
நன்கு -நன்றாக -மிகவும் -என்றபடி-
என் உடலம் –
எனது என்னும் செருக்குடன் கூடிய இவர் உடலம் அன்றோ நமக்கு உத்தேச்யம் -என்னா நின்றான் –
என்னுடைய அடங்கு எழில் சம்பத்தில் ஏதேனும் பாம்பு செத்ததோ -விடத் தக்கது உண்டோ -என்னா நின்றான் –
அடங்கு எழில் சம்பத்து -எனது விபூதியில் தாழ்ந்த வஸ்து உண்டோ என்றபடி –
ததீயத்வ ஆகாரத்தால் லீலா விபூதியை உத்தேச்யம் என்று ஆழ்வார் சொல்வது போலே -ஆழ்வார் சம்பந்தத்தால் சரீரமும் அவனுக்கு உத்தேச்யமானது –

ஞாலத்தூடே நடந்து உழக்கி –
எத்தனை காலம் உண்டு அவன் இப் பேறு பெருகைக்கு உழன்று திரிகின்றது –
எல்லார்க்கும் பொதுவானவனுடைய செயல் எல்லாம் எனக்கு எனக்கு என்று-சொல்லலாம் அன்றோ அடியார் ஆனார்க்கு –
இந்திரனுக்கு இழந்த அரசினைப் பெற்றேன் என்னவுமாய்-
மகா பலிக்கு -வள்ளல் என்னும் பெயர் பெற்றேன் -என்னவுமாம்
சிலருக்கு பொன் பயந்தேன் என்னவுமாய்-மாலாகிப் பொன் பயந்தேன் மன்னன் சரிதைக்கே -திருமங்கை
இவருக்கு எனக்காகச் செய்தான் -என்னவுமாய் இருக்கிறது காணும் –
உவந்த உள்ளதனாய் -கொடையாளி -மகாபலி / இந்திரன் ராஜ்யம் பெற்று உகந்து/-ரிஷிகள் காணப் பெற்றோம்
/அடியார் கார்யம் செய்தோம் அவன் உகக்க /-திருவடி பெறப் பெற்றோம் ஆழ்வார்கள் உகந்து -ஒரே கல்லில் ஐந்து மாங்காய்
சத்யம் விதானம் நிஜ ப்ருத்ய – நரசிம்மன் -அவதாரம் -மெய்ப்படுத்து- பிரகலாதன் வார்த்தை
-ப்ரஹ்மா / வேதங்கள் /ஹிரண்யகசிபு காட்டி /ரிஷிகள் இந்த உருவம் சேவிக்க /

தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை –
தெற்கில் திக்குக்கு ஓர் ஆபரணமான திரு மால் இரும் சோலை –

நங்கள் குன்றம் கை விடான்-
அடியார்கள் அனுபவிக்கும் மலை-நங்கள் குன்றம் கை விடான்-
நன்கு என் உடலம் கை விடான்-திருமலையைப் பிராபகமாகவும்-
ஆழ்வார் திரு மேனியை பிராப்யமாகவும் நினைத்திரா நின்றான் என்றது-
உத்தேச்யம் ஆழ்வார் திருமேனியாய்-அது பெறுகைக்கு ஆயிற்று திரு மலையில் நிலை -என்றபடி –

நண்ணா அசுரர் நலியவே
நெல் செய்ய புல் தேய்ந்தால் போலே நெடும்பகை-தற் செய்ய தானே கெடும் -பழமொழி நானூறு –
என்னுமாறு போலே இவன் இவ்விடத்தே விடாதே வசிக்க-அசுரக் கூட்டம் முடிந்து போயிற்று-
திவ்ய மங்கள விக்ரகம் இல்லை திருக் கல்யாண குணங்கள் இல்லை என்று பிதற்றும் அசுரக் கூட்டங்கள்-
திருமால் இரும்சோலையில் எம்பெருமான் நின்ற நிலை கண்டவாறே தொலைந்தன –
அப்படியே இவன் ஆழ்வார் திருமேனியில் காதல் இப்படி பட்டது என்று அறிந்தவாறே ஆழ்வார் குறைகளை எண்ணுகிற அசுரக் கூட்டம் தொலைந்தன –

உலகும் உயிரும் தானேயாய் –ஞாலத்தூடே நடந்து உழக்கி-
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை நங்கள் குன்றம் –
நண்ணா அசுரர் நலியவே-கை விடான்-நன்கு என் உடலம் கை விடான் –அம்மான் திருவருள்கள் என் கொல்-என்று அந்வயம்-
எவ்வளவு திருவருள்கள் உள்ளன -கிரியா பதம் -இரண்டாவது நிர்வாகம் –அனுவாதம் முந்திய அர்த்தம் —

———————————————————————————

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

சம்ச்லேஷித்து -திருவாய்மொழி பாடக் கேட்டு –
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த-அடைய மாட்டோம் ந நமேயம்-ப்ரத்யுகர் -விநாசம் அடைய அதிசயம் பொறுக்க மாட்டாமல்
-அமரர் பக்தி அக்தர் நல்ல -தேவேந்திரன் பிள்ளை காகாசுரன்
நல்ல அனுகூலர் -ஸம்ருத்தி லபிக்கவும்
எண்ணா தனகள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப- உபய விபூதி கல்யாண குணக் கடல் -இவை போதாதே -என்று
ஆசைப்படும் நல்ல முனிவர்கள் -விருப்பம் ஆழ்வார் பாடல் பெற்றதும்
அவாப்த ஸமஸ்த காமன் குணம் விபூதிக்கு மேலே -அதிசயங்கள் என்னும் பிரேமம் -மங்களா சாசனம் பண்ணும் அனுபவ சீலர் முனிவர் –
அமரர் கைங்கர்ய நிஷ்டர் -கேட்டு அனுபவித்து ஆனந்த நீர்பரராக
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி-ராகத்துடன் சேர்ந்த இனிய -அவனே அவனைப் பாடி
-பிரகார பூதன் நானாகவே தான் நிறைந்து -ஸ்த்வயன் ஸ்தவ ப்ரியன் இரண்டு ஆகாரம்
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே-மேன்மை பாராமல் பாட்டின் ரசத்தால்
-தலை அசைக்கும் ப்ரீதி உள் அடங்காமல் ஆழத்தை வையா நின்றான்

அவன் தம்மோடு கலந்து-தம் திரு வாயாலே திருவாய் மொழி கேட்ட-
ப்ரீதி உள் அடங்காமல் மகிழ்ந்து-ஆளத்தி வையா நின்றான் -என்கிறார் –
ஆளத்தி -இசைக்கு பூர்வாங்கமான ஆலாபம்
அன்றிக்கே-நன்கு என் உடலம் கைவிடான் -என்னும்-அளவு அன்றிக்கே
என் வார்த்தை அளவிலே களியா நின்றான் –என்கிறார் என்னவுமாம் –

நண்ணா அசுரர் நலிவு எய்த- நல்ல அமரர் பொலிவு எய்த – எண்ணா தனகள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப-
ஆயிற்றுத் திருவாய் மொழி அவதரித்தது-
இதில் பேசப் படுகிற பரம்பொருளின் உடைய அவதாரம் போலே ஆயிற்று-துதிப் பாடலாகிய இதனுடைய அவதாரமும் –
பரித்ராணாயா சாதூநாம் விநாசாய துஷ்க்ருதாம்-தர்ம சம்ஸ்த்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-8-
தத அகில ஜகத் பத்மபோதாயா -அச்யுத பாணினா-தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் மகாத்மனா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2-
பகைவர்களை அழிப்பதற்கும் வேறு ஒரு கருவி எடுக்க வேண்டாதபடி-
அடியார்களை பாதுகாப்பதற்கும் வேறு ஓன்று தேடவும் வேண்டாதே-
அநந்ய பிரயோஜனருக்கு தானே பிரயோஜனமாய் இருக்கும் ஆயிற்று-
நண்ணா அசுரர் நலிவு எய்த-
அவ்யபதேச்யனுக்கு -கிருமி கண்டன் -1070-1116-முதல் குலோத்துங்கன் -என்பர் எடுத்துப் பேசத் தகாத நீசன் –
அவன் மகன் விக்கிரம சோழன் -1116-1184-
அனந்தரத்தில் அவன் தமப்பன் செய்ததனைக் கேட்டு-இவன் என் செய்தான் -என்று சிரித்தான்-
ஒரு மதிளை வாங்கும் காட்டில் -திருக் கண்ணபுர திரு மதிளை இடித்து தள்ளியதால் –அத் தர்சனம் குலைந்ததோ –
திருவாய் மொழி என்றும் ஸ்ரீ ராமாயணம் -என்றும்-வலியன இரண்டு மகா பிரபந்தங்கள் உளவாக இருக்க -என்றான் ஆயிற்று –
அவத்த புன் சமயச் சொல் பொய்யை மெய் என்று
அணி மிடறு புழுத்தான் தன் அவையின் மேவி
சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு என்று தீட்டும்
திருக் கூர வேதியர் கோன் செவ்வி பாடப்
பவத்துக்கம் பிணி நீங்க நரகம் தூரப்
பரமபதம் குடிமலியப்பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனிவாய் கரிய மேனி
நம்பெருமாள் அரங்கேசர்ஆசீர் ஊசல் –இப்படி உகவாதார் நெஞ்சு உளுக்கும்படியான பிரபந்தம் ஆயிற்று-
உலகத்தில் தெய்வப் பிறவி என்றும்-அசுரப் பிறவி என்றும் உயிர் களின் படைப்பு இரண்டு விதம்
த்வௌபூத சர்கௌ லோகேஷூ தைவ ஆசுர ஏவச-விஷ்ணு பக்தி பரோதேவ விபரீத ததா சூர-ஸ்ரீ கீதை -16-6-என்னக் கடவது அன்றோ –
பொருந்தாமையை உடைய அசுரர் கூட்டமானது மண் உண்ணும்படியாக-சம்பந்தம் இல்லை என்ன ஒண்ணாதே-
பொருந்தோம் என்கை அன்றோ உள்ளது –

நல்ல அமரர் பொலிவு எய்த –
அனுகூலர் ஆனவர்கள் உண்ணாதே தடிக்க –
இவர்களுக்கு நன்மையாவது பகவான் இடத்தில் பக்தி உடையராய் இருக்கை –
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -9-4-9-என்னக் கடவது அன்றோ-
இந்த திருவாய் மொழியே அவர்களுக்கு தாரகம் -என்றபடி –

எண்ணா தனகள் என்னும் நன் முனிவர் –
புறம்பு ஒருவர் எண்ணாதன சிலவற்றை எண்ணுவார் சிலர் உண்டாயிற்று –அவர்கள் ஆவார் –
-சர்வேஸ்வரன் காப்பாற்றுமவன்-அவனை ஒழிந்த அடங்கலும் அவனாலே பாதிக்கப் படுகின்ற பொருள்கள் -என்று இருக்கை-
அன்றிக்கே-
இரண்டு உலகங்கள் உடைய சர்வேஸ்வரனுக்கு இன்னும் சில உலகங்கள் வேண்டும்-
எல்லா குணங்களும் நிறைந்தவனுக்கு இன்னும் சில குணங்கள் வேண்டும்
என்று இப்புடைகளிலே எண்ணுவார் சிலர் உண்டாயிற்று -அவர்கள் என்றபடி –

இன்பம் தலை சிறப்ப –
திருவாய் மொழி அவதரித்த பின்பு-
அவனுக்கு இந்த குணங்களும் இந்த உலகங்களும் போரா-என்று இருந்த இழவு தீர்ந்து-
அதனால் எல்லை இல்லாத ஆனந்தத்தை அடைந்தவர்களாக-
அவனுடைய செல்வ நிறைவினையே நினைந்து கொண்டு இருக்கும் தன்மையர் ஆகையாலே -நல் முனிவர் -என்கிறது –
அன்றிக்கே –
திருவாய் மொழியை தவிர வேறு ஒரு செல்வம் வேண்டா-என்று இதுவே நினைந்து பேர் உவகையராம்
தன்மையர் ஆகையால் -நல் முனிவர் -என்கிறது என்னுதல் –

பண்ணார் பாடல்-
பண்ணோடு சேர்ந்த பாடல்
ஆர்தல் -சேர்தல் -மிகுதல்
அன்றிக்கே
மலரானது மணத்தோடு மலருமாறு போன்று-பண்ணும் இசையும் மிகுந்து இருந்த பாடல் -பண் -ஸ்வரம் –

இன் கவிகள் –
இசையும் பண்ணும் ஒழியவே-சக்கை -தொக்குக் கழிந்த சுளை போலே கவி தானே இனியதாய் இருக்குமாயிற்று –

யானாய்த் தன்னைத் தான் பாடி –
தந்தையானவன் மகனுக்கு பசுவினை நீர் வார்த்துக் கொடுத்து அவன் பக்கலிலே தான் மீள நீர்-ஏற்றுப் பசுவினைப் பெறுமாறு போலே
மகனுக்கு சொற்களைக் கற்பித்து அவன் சொல்லக் கேட்டு தந்தை இனியர் ஆமாறு போலே –
தான் பாடினான் ஆகில் ஸ்ரீ கீதையோடு ஒத்துப் போம்-
நம்பி திரு வழுதி நாடு தாசர் -அருள் கொண்டாடும் -என்கிற பாட்டிலே
ஸ்ரீ கீதையைக் கற்றான் ஒருவன் காலை நேரத்திலே ஒரு சபைக்குச் சென்றால்-
பலருமாக நாழி அரிசியைக் கொடுத்து நம்ப மாட்டமையாலே-புறத் திண்ணையிலே கிட -என்பார்கள்
திருவாய் மொழியைக் கற்றான் ஒரு விண்ணப்பம் செய்வான் என்றால் சர்வேஸ்வரன் அகப்பட புறப்பட்டு-
எதிர் கொண்டு அகம் ஒழித்துக் கொடுத்து-அமுதுபடியும் எடுத்து விட்டு உபசரிப்பார்கள் -என்றாராம் –
பண்டே பரமன் பனித்த -10-4-9-என்று இவர் அங்கீ கரிக்கையாலே அந்த ஸ்ரீ கீதை தானும் வீறு பெற்றது அன்றோ –

தென்னா என்னும் –
செருக்காலே -தென்னா தென்னா -என்று ஆளத்தி வையா நிற்கும் ஆயிற்று-
பிறப்பு இறப்புகளிலே உழல்கின்ற ஒருவன் பகவானைப் பெற்றால் மேலே சொல்லப் போகிற-
சாமகானம் பாடப் போகின்றான் -என்கிறபடியே
அவாக்ய அநாதர-என்னப்படுமவன் அத்தன்மை நீங்கி-பாடா நிற்பன் ஆயிற்று –

என் அம்மான் –
குழந்தையின் வார்த்தை இனியதாம் போது சம்பந்தம் உண்டாக வேண்டும் அன்றோ
அதற்கு அடியான சம்பந்தத்தைச் சொல்லுகிறது –

திரு மால் இரும் சோலையானே –
இவரைப் பாடுவித்த முக்கோட்டை-தொலை வில்லி மங்கலமும் இவரது முக்கோட்டை –
பாட்டினால் உன் தன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ணபுரத்துறை அம்மானே -பெரிய திரு மொழி -8-10-2-
என்று அவரை பாடுவித்த முக்கோட்டை அன்றோ அது –
தாம் பாடின கவிகளின் இனிமையை நினைந்தார் –இவை தாம் அடியாக பிறந்தன என்று சொல்லலாய் இருந்தன அல்ல –
இதற்கு அடி என்ன -என்று பார்த்தார் –அவன் தன் நெஞ்சினில் புகுந்து இருந்து பாடுவித்தானாய் இருந்தது-
கண்ணபுரத்துறை அம்மான்-என்று கவி பாடுவித்த முக்கோட்டையைச் சொல்லுகிறார்-

—————————————————————————————————

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

ப்ரஹ்மாதிக்ளுக்கும் உபகாரகம் ஸ்ரீ யபதி -கைங்கர்யம் கொள்ள பேர் அன்புடன் இருந்தான்
திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்-நிலையாகி நித்ய வாசம் -அடிமை கொள்ளுவதில் பெரிய பித்தனாகி நின்றான்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்-அக்டி கட நா சாமர்த்யன் -மா விபரீத லக்ஷனை
ஒரு புடையில் ஏக தேசத்தில் வைத்து கல்பம் தோறும் ரக்ஷித்து
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது-காண முடியாமல் –
சேஷி ரக்ஷகன் இரண்டுக்கும் நிதானம் ஸ்ரீ யபதி -உபபாதகம் -ரமா பதியே சேஷி ரக்ஷகன் –
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே-பெறுவதற்கு அரிய பக்தியை -அதிசயித்த பக்தி எய்த
-திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ணும் படி -அம்மான் -சர்வாதிகான் -ஈதல் கொடுத்தல் அபேக்ஷித பிரதானம் பண்ணி –

திருமகள் கேள்வன் ஆனவன்-திருமலையிலே நின்று அருளி-என்னை ஆளுகையிலே-
பெரும் காதலன் ஆனான் –என்கிறார் –

திருமால் இரும் சோலையானே யாகி-என்னை ஆளுமால்-
திருமலையை தனக்கு வசிக்கும் இடமாக கொண்டு நிற்கிறவன்-என்னை அடிமை கொள்ளுகைக்காக என் பக்கல்-
காதலே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிறவன்-

செழு மூஉலகும் –
கட்டளைப் பட்ட மூன்று உலகங்களையும் –

தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி-தலைஅளிக்கும் –
ஒப்பற்றதான-மிகச் சிறிய வயற்றிலே வைத்து-கல்பம் தோறும் கல்பம் தோறும் தலையாய் பாதுகாக்கும் -என்றது –
பிரளய ஆபத்தில் உலகத்திற்கு தன்னை ஒழியச் செல்லாதவாறு போன்று-என்னை ஒழிய தான் செல்லாதானாய் இருக்கையைத் தெரிவித்த படி
மா -விபரீத லஷனை

திருமால் –
திருமகள் கேள்வன் –

என்னை ஆளுமால் –
என்னை அடிமை கொள்ளுகைக்காக பிச்சுத் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் –
மாலை என்னாமல் மால் -என்கிறார் –

சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே –
பிரமன் சிவன் முதலான தேவர்கள் காணப் பெறாமையாலே-எல்லை இல்லாத பக்தியை உடையராய்-திருவடிகளை அடைவு கெட ஏத்த-
அவர்களுக்கு முகம் தோற்றாமே கடக்க நின்று-அருள் செய்கின்ற சர்வேஸ்வரன்-
எனக்கு கண்களுக்கு இலக்காம்படி-திருமலையிலே வந்து நின்று-என்னை அடிமை கொள்ளுகையில்-பெரும் பித்தன் ஆனான்-
ப்ரஹ்மாதிகள் பராத் பரன்– என்று அறியாதவர் பிரதிமாஸு அப்ரபுத்தி ஞானம் மலராதவர்களுக்கும் விக்ரக ரூபம்
-யோகிகளுக்கு ஹிருதயம் சேவை –வேதவித்துக்களுக்கு அக்னியில் சேவை -ஸுலப்யம் அறிந்தவர் தானே இவனை உணர முடியும் என்றவாறு –

———————————————————————————————

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

அஞ்ஞானம் அந்தகாரம் போக்கும் திருமலை -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் போலே –
அங்கேயே கரிக்க அவன் வந்து நின்ற திருமலை வை லக்ஷண்யம் அருளிச் செய்கிறார்
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்–ஈந்து அருள வேணும் ஸ்வாமி என்பர் -ஈஸ்வர அபிமானி யாகிய ருத்ரனும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்-ஸ்ருஷ்டித்தவாதி உபஉக்தமான ஞானாதி குணம் உடைய -தெருள் ஞானம்
-நான்முகனும் -ஸ்ருஜ்ய ஜகத் பாதி -இவனும் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டவன் -தேவர்களுக்கு நிர்வாகம் இந்திரன் -முப்பத்து முக்கோடி தேவர்களும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை-ஸ்வரூப புருஷார்த்த பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் -இருள்கள் -தமஸ்
-சனக சனகாதிகள் –புராணம் முதலானவற்றால் போக்கும் -அல்வழக்குகள் உபதேச முகத்தால் போக்குபவர் -அவர்கள் ஸ்தோத்ரம் பண்ணும்
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே
பிராப்தி பிரதிபந்தகங்கள் அஞ்ஞானம் போக்கி -அவித்யாதி ஜென்ம கர்ம வாசனா ருசி போக்கி நிரதிசய போக்யமான -வி லக்ஷணமான திருமலையே –

தம்முடைய இச் செல்வ நிறைவுக்கு எல்லாம் அடி-திருமலை ஆனபின்பு-
இம் மலையே தான் நாம் அடையத் தக்க பேறு-என்று திரு மலையைக் கொண்டாடுகிறார்-இதுவே பிராப்தம் என்று –

அருளை ஈ என்பார்கள்-
திருவருளைச் செய்தருளாய்- என்பார்கள் –

என் அம்மானே -என்னும் –
இறைமைத் தன்மை தோன்ற-நீ அருளாது ஒழிந்தால் புறம்பு எங்களுக்கு புகல் உள்ளதோ-
சம்பந்தம் உள்ளவனனா நீ அருள வேண்டாவோ -என்பார்கள்-
இப்படி சொல்லுகிறவர்கள் தாம் யார் என்னில் –

முக்கண் அம்மானும் தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் –
நெற்றியிலே கண்ணை உடையனாய் –தன்னைத் தானே ஈஸ்வரனாக நினைத்து இருக்கிற சிவன் –
அவனுக்கும் கூட ஞானத்தினை உபதேசித்தவனாய்-அவனுக்குத் தந்தை யாகையாலே வந்த-ஏற்றத்தினை உடைய நான்முகன்-
தேவர் கூட்டத்தை சனியும் புதனும் மெய்க்காட்டுக் கொள்ளுகின்ற இந்த்ரன்-
தங்களை உடையனாகை அவனுக்கு ஏற்றமாம் படி இருக்கிற தேவர்கள்-
அறிவின்மையாகிற இருட்டினை வாசனையோடு போக்கி இருக்கும் ஸமிருதி கர்த்தாக்களான இருடிகள் –

ஏத்தும் அம்மான் திருமலை-
இவர்களை அடங்கலும் ஒரு மிடறு செய்து ஏத்தும்படியாக-சர்வேஸ்வரன் தான் விரும்பி வந்து-
மேல் விழுந்து படுகாடு கிடக்கும் தேசம் ஆயிற்று –
மருள்கள் கடியும் மணி மலை –
பேற்றினை அடைவதற்கு தடைகளாக உள்ளவற்றை-அடையப் போக்கும் தேசம் ஆயிற்று-
அன்றிக்கே-
திருமலையை ஒழிந்தது ஒன்றே பெறத் தக்க பேறு-என்று பிறக்கும் புத்தியைத் தவிர்த்து தருமாயிற்று -என்னலுமாம்-

அது தான் என் என்னில் –
திருமால் இரும் சோலை மலையே –ஸ்வயம் புருஷார்த்தம் திருமலை -என்றதாயிற்று –

————————————————————————————————

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

திருமலை தொடக்கமான திவ்ய தேசங்களை ஓக்க -சர்வ அவயவங்களை -விரும்பி ஏக தேசமும் பிரியாமல் -இவரும் ஒருவனே
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே-இவற்றுடன் ஓக்க இவர் தலையை -இரண்டு சேர்ந்தால் தான் தலைக்கு சாம்யம் கிட்டலாம் –
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
இவரது உடலுக்கு வடக்குத் திருமலை – ஸ்ரீ வைகுண்டம் இரண்டும் -தெற்குத் திருமலை உடன் சேர்த்தே மங்களா சாசனம்
ஸ்ரீ யபதி ஆஸ்தே வைகுண்ட பரே லோகே பக்தை பாகவத சக –
பஞ்ச பிரகாரங்களில் பிரியாமல் ஸ்ரீ ய சார்த்தம் -சிரமஹரமான திருமலை –
துரியோதனன் -விதுரன் கிம் அர்த்தம் புண்டரீகாக்ஷம் -பீஷ்மர் துரோணர் -சேர்த்து மாம் -க்ருஹம் என்றான் -துர் அபிமானம் சாக்ஷி அங்கு
–இங்கு சாத்விக அபிமானம் -அபிமான துங்கன்-அபிமான பங்கம் –
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே-
பிரகிருதி -அருமை தாண்ட முடியாத அதிசயித்து -மாயாந்து பிரகிருதி -ஸ்வரூபம் திரோதானம் பண்ணுமே -அதற்குள் சிக்கும்
ஆத்மா மனசு வாக்கு கிரியை வினைகளை இவற்றை பிரியாமல்
ஒருமா நொடியும் பிரியான்-தலை முதலிய அனைத்து அவயவங்களையும்
என் ஊழி முதல்வன் ஒருவனே-கால உபலஷித்தமான சகலத்துக்கும் காரண பூதன் -இவற்றை எல்லாம் விட்டு என் அவயவங்கள்
இவரை லபிக்கைக்காக -அனைத்தையும் உண்டாக்கி –
மனமே வாக்கே -ஏகாரங்கள் -எண் ஆதல் -அவையே அசாதாரணமாம் படி -என்றுமாம் -தோள் கண்டார் தோளே கண்டார் போலே
-அமுதினைக் கண்ட கண்கள் மாற்று ஒன்றைக் கானா
மா நொடி -க்ஷணத்தில் சிறிய பகுதி உண்டே -அந்த நேரமும் பிரியான்

திருமலை தொடக்கமான கோயில்கள் எல்லாவற்றிலும்-செலுத்தும் ஆசையை என் உறுப்புக்களிலே செலுத்தி-
ஒரு கண நேரமும் பிரிகின்றிலன் –இவன் படி இருந்தபடி என் –என்கிறார்-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே –
தெற்கில் திருமலையையும்-திருப் பாற் கடலையும்-இவருடைய தலையையும் ஒக்க விரும்பினான் –

திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே –
ஸ்ரீ வைகுண்டத்தையும்-வடக்கில் திருமலையையும்-இவர் திரு மேனியையும் ஒக்க விரும்பா நின்றான் –
ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி -பிராட்டியோடு கூட உலகங்கட்கு எல்லாம் தலைவன் எழுந்தருளி இருக்கிறான்-
என்கிறபடியே இருப்பது ஒன்றாதலின் -திருமால் வைகுந்தம் -என்கிறார் –
ஆக
இரண்டு திருமலைகளிலும்-பரத்வத்திலும்-வியூகத்திலும்-பண்ணும் விருப்பம் முழுவதினையும்-
இவர் திருமேனி ஒன்றிலும் பண்ணா நின்றான் -என்றபடி –

அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே –
இவருடைய ஆத்மாவிலும் மனத்திலும்-மனம் வாக்கு காயங்களிலும்-ஒக்க விரும்பா நின்றான் –
உயிரே -மனமே -வாக்கே -கருமமே-என்பவற்றில் உள்ள ஏகாரத்தாலே-அவற்றிலும் முறையால் அன்றியே
கண நேரமும் இடை விடாதே-சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு நில்லா நின்றான்-என்பதனைத் தெரிவித்த படி –

அருமா மாயத்து எனது உயிரே-
ஆத்மா என்று ஒரு பெயரே மாத்ரமாய்-அநாதி காலம் மூலப் பிரக்ருதியிலே கலந்து-
அதனாலே அசித்தினைப் போன்று இருப்பது ஓன்று ஆகையாலே அதனை-அரு மா மாயத்து எனது உயிர் -என்கிறார் –
தைவீ ஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா -ஸ்ரீ கீதை -7-14-என்கிறபடியே
ஒருவராலும் கடக்க அரியதாய் இருந்துள்ளே-அசித்தோடே கலசிக்கிடக்கிற ஆத்மாவிலும் -என்றபடி-

மனமே வாக்கே கருமமே –
மேல் இவற்றை ஒன்றாக விரும்பின படியை சொன்னார் –எனது உடலே-
இங்கு தனித் தனியே எல்லாவற்றிலும்- ஒக்க- ஒரே காலத்தில்-விருப்பத்தைச் செய்த படியைச் சொல்லுகிறார்-
ஒருமா நொடியும் பிரியான் –ஒரு கண நேரத்திலும்–ஒரு கூற்றிலும்-பிறிகின்றிலன்-என்றது-
கரணங்கள் -காரியம் -கர்த்தா -மூன்றையும் சொல்லி -ஒன்றில் நின்றும் ஒன்றில்- கால் வாங்கிப் போய்-அனுபவிக்கின்றிலன் -என்றபடி –
தலையே உடலே உயிரே மனமே வாக்கே கருமமே -ஒவ் ஒன்றிலும் -ஒரு மா நொடியும் பிரியான் –
இரண்டு திருமலையை சொன்னது உகந்து அருளினை திவ்ய தேசங்களுக்கும் உப லக்ஷணம் –

என் ஊழி முதல்வன் ஒருவனே –
என் இடத்தில் காதலை உடையவன் ஆகைக்காக-காலத்தாலே அறியப் படுகின்ற எல்லா பொருள்களுக்கும்-காரணமான ஒப்பற்றவன் –
அழிவு காலத்தில் -சேதன அசேதனங்கள் எல்லாவற்றிற்கும்-தன்னை ஒழிய செல்லாதவாறு போலே ஆயிற்று-
இவர் திருமேனி ஒழிய தான் செல்லாத படி இருக்கிறபடி –பிரணயித்தவத்துக்கு தாரணம் என்றவாறு –
கார்ய காரணம் என்னும் இரண்டு நிலைகளை உடைய-சித்து அசித்துக்களின் இருப்பு-
தன் அதீனமாக இருக்கின்றவன் -தன்னுடைய இருப்பு-என் சரீரத்தின் அதீனமாம் படி இரா நின்றான் –
ஊழி முதல்வன் ஒருவனே —
இங்கனம் ஆசை உள்ளவனையே பெரிய ஈஸ்வரன் என்கிறது –இவனும் ஒருவனே -என்கிறார் –என் முதல்வன் -ஊழி முதல்வன் -சபலன் –

——————————————————————————————–

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

ஜகத் ஸ்ருஷ்டியாதி -காரண பூதன் -சரீராதிகளை விரும்புவதைக் கண்டு -இவற்றை விட திருமலையை ஆஸ்ரயி என்று
தம் திரு உள்ளத்தை குறித்து சொல்கிறார் -உன்னை விட்டு போக நீயே பிரார்த்திக்க வேண்டும் -என்றபடி –
வாழி-நல்ல நெஞ்சே -முதலில் பலம் கொடுத்து -கை விடாதே திருமலையை -என்கிறார் -முந்துற்ற நெஞ்சு
-பூத சூஷ்மம் கொண்டே ஜீவாத்மா அடுத்த பிறவி -இவை அடங்கி தானே ஜீவாத்மா மோக்ஷம் போக வேண்டும்
-மகா பிரளயம் போது-பிராகிருத பிரளயம் -பூத சூஷ்மம் முடிந்தாலும் கர்ம சூஷ்மம் முடியாது –
மோக்ஷம் கொடுத்து அப்ராக்ருத உடல் இந்திரியங்கள் கிடைக்கும் –
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன்– கால உபலசித்த ஸமஸ்த வஸ்துக்களும் -காரண பூதன் என்னும் ஒருவன்
-ஏக மேவ அத்விதீயம் -என்று வேதாந்தம் சொல்லுமே -ஒரு மிடறாக கோஷிக்கும் –
உலகு எல்லாம்- ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்-ஸமஸ்த லோகங்களையும்
ஸ்ருஷ்ட்டி முதலியவற்றுக்கு அநு கூல காலங்களில் -வியாபாரிக்கைக்கு ஈடாக -சங்கல்ப ஏக தேசத்திலே -இது தானே யாத்திரையாக
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை-அபரிச்சின்ன ஸ்வ பாவன் -கடல் வண்ணன் என்றுமாம் -இந்த பிராப்தி முகத்தால் ஸ்வாமி
-வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே-மங்க -நசிக்க -சிந்தை பண்ணி அனுமதி பண்ண வேண்டும் –
செறிந்து ஆஸ்ரயிக்க பார் திருமலையை ஒட்டு -உடலும் உயிரும் மங்க -இத்தாலே நீ வாழி என்கிறார்

நமக்கு இந்த செல்வம் எல்லாம்-திருமலையாலே வந்தது ஆயிற்று –
அதலால் திருமலையைக் கை விடாதே கொள் –என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து-அருளிச் செய்கிறார்

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன்-என்னும் –
பிரமாண பிரசித்தியைக் காட்டுகிறது –காலத்தாலே அறியப் படுகின்ற எல்லா பொருள்களுக்கும்-காரணமாய் இருப்பவன் ஒருவனே -என்றும்
சத் என்ற ஒன்றே -எனபது போன்ற பிரமாணங்களாலே சொல்லப் படுகிற ஒருவன் –கார்யமான தன்மையை உடைய இவை முழுதும் அழிந்த அன்று
இவற்றைத் தன் மேல் ஏறிட்டுக் கொண்டு நிற்கிறவன் காண் –
இப்போது என் உடம்பில் வந்து தங்குகிறான் –காரண நிலையில் சித் அசித்துக்களின் உடைய நிலை தன் அதீனமாம்படி இருக்குமவன் –

உலகு எல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து –
காரண நிலையில் இவற்றின் உடைய நிலையை நோக்கி விட்டால்-பின்னையோதான் இவை தம்மைத் தாம் நோக்கிக் கொள்ளுகிறது –

காத்துக் கெடுத்து உழலும் –
பெயர்களையும் உருவங்களையும் கொடுத்து விட்டால்-பின்னைத்தான் தாங்கள் தங்கள் கார்யம் செய்கிறார்களோ –
இதனால் சொல்லிற்று ஆயிற்று என் என்னில் –
எல்லா நிலைகளிலும் இவரை ஒழியத் தரிப்பானாய் இருக்கின்றிலன் –பிரளய ஆபத்துக்களில் இவற்றுக்குத் தன்னை ஒழிய-
நிலைத்து இருத்தல்-இல்லாதாவாறு போலே – தான் இவரை ஒழியில்- தரிக்க மாட்டானாய் இரா நின்றான் –
ஆழி வண்ணன் –
கம்பீரமான தன்மையை உடையவன் –
அன்றிக்கே –கடல் போலே ஸ்ரமத்தை போக்கக் கூடிய வடிவை உடையவன் -என்னுதல் –

என் அம்மான் –
அவ் வடிவைக் காட்டி என்னை-சம்சார பிரளயத்தின் நின்றும் எடுத்தவன் –

அம் தண் திரு மால் இரும் சோலை –
அவனுக்கும் கூட காட்சிக்கு இனியதாய்-சிரமத்தை போக்கிகிற தேசம் –

வாழி மனமே கை விடேல் –
மனமே நான் சொல்லுகிற இந்நன்மை உனக்கு மாறாதிடுக-
அவன் இப்படி நம் பக்கலிலே மேல் விழுந்து விரும்புகையாகிற-நன்மைக்கு எல்லாம் காரணம் -திருமலை -ஆயிற்று –
இதனை ஒருகாலும் கை விட நினையாதே காண் -என்கிறார் -தம் திரு உள்ளத்தைப் பார்த்து –
அவனும் தன் திரு உள்ளத்தைக் குறித்து –ஆழ்வாரைத் தந்தது அவருடைய திருமேனியாய் இருக்கும் –
திருமால் இரும் சோலை தானே ஆழ்வார் திருமேனி -நீயும் அதனை ஒருகாலும் விடாதே காண் -என்றான் –
பிரானே அங்கன் ஒண்ணாது -இதனைத் தவிர வேண்டும் -என்று நிர்பந்திக்கிறார் –

உடலும் உயிரும் மங்க ஓட்டே –
உடலும் உயிரும் மங்கும்படி இசைய வேண்டும் –ஒட்டு -இசைதல் –
இது அத் திருமலையைப் போன்று பற்றத் தகுந்தது ஓன்று அன்று –சாலவும் விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –
இதனை மங்க இசைய வேண்டும் -மங்க ஒட்டு -என்கையாலே-இதற்கு முன்புத்தை ஆழ்வார் உடைய இருப்பு -பிராரப்த வினையால் -அன்று
பகவான் உடைய அபிப்ராயத்தாலே -என்னும் இடம் தோற்றுகிறது-
ஈஸ்வரன் பற்றி விடேன் என்று இருக்கையாலே இருந்தார் என்கிறது —உடலம் கைவிடான் -என்றாரே அன்றோ –
உமக்கு வைராக்யம் வந்தது போலே எனக்கு ராகம் வந்தது -என்றான் –
அழிய இசையை வேண்டியது அவன் தானே -கர்ம சேஷம் இருப்பதால் -நாம் இருக்க -வினை தீர்ப்பாய் -என்று கேட்க வேண்டும்
ஆழ்வார் அவன் இசைவாலே தான் இத்தனை காலம் இருந்தார் -கர்ம சேஷத்தால் அல்ல -அவனது இச்சையால் தானே –

————————————————————————————————

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

அதி அபி நிவேசம் நிவர்த்திப்பிக்க -பிரகிருதி ப்ராக்ருதங்கள் உடைய ஹேயதையை -ஏவம் பூதமான உன் மாயை
-மம மாயா துரத்தயாயா -நசிக்கும் படி அனுமதி பண்ணி அருள வேணும் என்கிறார் –
மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய-
நித்ய வாசம் பண்ணி
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே-ஸ்வாமியாய் -நானே நீ -வேறாக நினைக்க முடியாதபடி -ரக்ஷித்து
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
-கிளர்ந்து வரும் -போக்யத்தையால் புலன்களால் அனுபவிக்கும் சப்தாதி –தன்மாத்திரைகள் நேத்ராதி ஞான இந்திரியங்கள்
-பிரவர்திக்கைக்கு ஹேதுபான கர்ம இந்திரியங்கள் சப்தாதி ஆஸ்ரயிக்கும் -பிருத்வியாதி பூதங்கள் -இந்திரியங்களும்
சரீரம் ஆஸ்ரயிக்கும் இதும் பூதங்களால் ஆனதே இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே-24 தத்துவங்களால் ஆனதே ஹேயம்-
ஜீவன் உடன் சேர்ந்த போரக்ருதி மூல பிரகிருதி -விவசாய ஹேதுவான மமகாரங்கள் அஹங்காரங்கள் சங்கல்ப நிதானமான மனஸ்
-பிரகிருதி பிராக்ருதங்கள் தொலையும் படி அருள வேணும்

இப்படி இவர் நிர்ப்பந்திகச் செய்தேயும்-ஆனைக்குப்பு –சதுரங்கம் –இடுவாரைப் போலே-கேளாது இருந்தான் –
அதற்கு அடி -சாந்து பூசுவார் பரணியை உடைத்தோ பூசுவது –இது என் சொன்னீர் ஆனீர் -என்ன-
திரியவும் மங்க ஒட்டு –என்கிறார்

மங்க ஒட்டு உன் மா மாயை –
உன் மா மாயை மங்க ஒட்டு –
ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி-நீ கட்டிய இந்தச் சரீரம் மங்குவதற்கு இசை –விடத்தக்கது -என்று அறிந்த பின்பு உம்முடைய
சரீரத்தினை நீரே விட வேண்டியது அத்தனை அன்றோ –
நாம் இசைய வேண்டுகிறது என் -என்ன –
எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவனான-நீ பிணைத்த பிணையை
ஆற்றல் சிறிதும் இல்லாதவனான நன் விடவோ –என்னுடைய மாயம் ஒருவராலும் தாண்ட முடியாது -என்றிலையோ –
வெண்ணெய் பால் உண்டு வெறும் கலத்தை உடைத்தீரே -அது போலே செய்ய வேண்டும் –

திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே –
திருமலையில் நின்று சேஷித்வம் காட்டி அருளிய நீ பேற்றினையும் தந்து அருள வேண்டும் -என்றபடி –
பரமபதம் கலவிருக்கையாய் இருக்க அவ்விடத்தை விட்டு-நீ திருமலையில் வந்து முற்பாடனாய் நிற்கிறது-
நான் சொன்னபடி கார்யம் செய்வதற்காக அன்றோ –
நீ நினைத்தபடி செய்யப் பார்த்தாய் ஆகில் பின்னை அவ் இருப்பிலே என்னை அழைத்துக் கொள்ளாயோ-
திருமலையிலே வந்து நின்று என்னுடைய சேஷத்வத்தையும்-உன்னுடைய சேஷித்வத்தையும்-எனக்கு அறிவித்தவனே –

யானே நீ ஆகி என்னை அளித்தானே –
என்னுடைய நினைவினை நீ உடையையாய்-என் கார்யம் செய்யக் கூடிய நீ-
இப்பொழுது நான் இரக்க இருக்கிறது என் –
நான் விரும்பாமல் இருக்க-இதற்கு முன்பு எல்லாம் நீயே அன்றோ எனக்கு வேண்டியவற்றைச் செய்து போந்தாய் –
இப்படிச் சொல்லச் செய்தேயும் இதனைத் தவிர்த்துக் கொடுக்க நினையாமையாலே பேசாது இருந்தான் –
நான் நிர்பந்திக்கச் செய்தேயும் கேளாதாரைப் போலே பேசாது இருக்கிறது என் -என்ன-
நான் பேசாது இருக்கிறேன் அல்லேன்-நீர் விடத் தக்கது என்று சொல்லுகிற இது தான் நாம் விரும்பி மேற்கொள்ளத் தக்கதாய் இருக்கின்றது –
ஆகையால் இது விடத்தக்கது இது கொள்ளத் தக்கது என்னும் வேறுபாட்டினை நாம் அறியகில்லோம்-
அறிந்த நீர் விடத் தக்கது என்பதனை எனக்கு இன்னது என்று சொல்லிக் காணீர் -நான் கழித்து தர -என்றான்
ஆகில் கேட்கலாகாதோ -என்று சொல்கிறார் –

பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்-இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே-
-உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம் உணர்வைப் பெற ஊர்ந்து -8-8-3-என்று அவன் தான் இவர் பக்கல் செய்ததனை-
இப்போது அவனுக்கு இவர் தாம் அறிவிக்கிறார் –
ஒரு கர்மம் செய்தது செய்ய மாட்டாமை இல்லை அன்றோ கழி பெரும் காதல் –
அது போலும் அன்றிக்கே -இது நிலை நிற்குமது அன்றோ-உயிர்களைத் தம் தாமுக்கு உரியன அல்லாதபடி-
வேறுபாட்டினை அடையும்படி பண்ண வல்ல-சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் -என்னும் புலன்கள் ஐந்தும் –
வறு நாற்றத்தினைக் காட்டி சில பொருள்களைத் தப்பாதபடி அகப்படுத்துமா போலே-
இந்த உயிரை அவ் விஷயங்களிலே கொடு போய் மூட்டி முடிக்கவற்றான-
மெய் வாய் கண் மூக்கு செவி -என்னும் ஞானேந்த்ரியங்கள் ஐந்தும்-
வாக்கு கால் கை பாயு உபத்தம் -என்னும் கர்மேந்த்ரியங்கள் ஐந்தும்-
நிலம் நீர் தீ கால் விண் -என்கிற ஐம் பெரும் பூதங்களும்-
காரிய நிலையினை அடைந்த உயிர் பொருளை பற்றிக் கிடக்கிற-மூலப் பிரகிருதி –
-மஹான் -அஹங்காரம் -மனம் -என்னும் இவைகளும்-ஆகிய உன்னுடைய மா மாயயை மங்க ஒட்டு-
காரண நிலையை அடைந்து தானே வேறு ஒரு நிலையை அடைதல் அன்றோ காரியமாகை ஆகிறது-
இவ் உயிர் ஏய் பிரகிருதி -மூலப் பிரகிருதி-மா மாயை-சரீரம்-

————————————————————————————————————-

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

ஈஸ்வர விரோதி நிரஸனம் -பலம்
மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க-மஹான் அகங்கார மனசு இவை -கெட இந்திரியங்கள் சூ விஷயங்கள் உடன் மங்கிப் போகும் படி
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்-தானே அபிமானம் அபி நிவேசம் உடன் -ஆத்மாவும் ஆத்மீயம் சரீரமும் தானே
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்-தேன்-செருக்கி -அதனால் பொழில் சிறப்பு
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே-இந்த திருமலைக்கு -மஹத் அகங்காரத்தில் அழிப்பதில் நோக்கு -என்றவாறு –
தானே அகங்காரத்துடன் வந்து அழிப்பார்-என்றவாறு –

நிகமத்தில்
மஹான் அஹங்காரம் இவை-முதலானவற்றின் விஷயமான-இத் திருவாய் மொழி-
திரு மால் இரும் சோலை மலையிலே-சொல்லிற்று -என்கிறார்

மான் ஆங்கார மனம் கெட –
மஹான் அஹங்காரம் மனம் -என்று சொல்லுகிற இவை-கெடும்படியாக-
இவற்றைக் கூறியது மூல பிரக்ருதிக்கும் உப லஷணம் –

ஐவர் வன்கையர் மங்க –
வன்கையர் ஐவர் மங்க –
இவற்றைக் கூறியது-கர்மேந்த்ரியங்கட்கும்-ஐம் புலன்களுக்கும்-ஐம் பெரும் பூதங்களுக்கும்-உப லஷணம் –
பின்னை அவன் இதற்கு சொல்லிற்று என் என்னில் –
இச் சரீரத்தில் செய்கிற விருப்பத்தினை தவிருகிறோம் எண்ணத் தீருமே அன்றோ –
அவன் செய்கிறோம் என்று தலை துலுக்கினால்-பின்னைப் பெற்றதாய் இருக்கத் தட்டில்லையே –

தான் ஆங்கார மாயப் புக்கு –
தான் என்னிடத்தில் ஆசை உடையவனாய் புக்கு -என்னுதல்
பெரிய செருக்குடனே புக்கு -என்னுதல் –

தானேதானே ஆனானைத் –
ஆத்மாவிலும் ஆத்மாவோடு சம்பந்தப் பட்ட பொருள்களிலும்-எனக்கு உண்டான ஆசையைத் தவிர்த்து-
தானே அபிமானத்துக்கு விஷயம் ஆனவனை-
அன்றிக்கே
இத்தலையில் இரக்கும் தன்மை ஒழிய தானே-இரப்பாளனுமாய்-இதனை விரும்புகின்றவனும் தானே ஆனான் -என்னுதல் –
பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானும் தானே ஆனான் என்றவாறு –

தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் மான் ஆங்காரத் திவை பத்தும் –
வண்டுகள் உடைய செருக்கே யான பொழில்களை உடைய-திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்-
அருளிச் செய்த ஆயிரத்திலும்
மகத்து முதலானவற்றின் உருவமான இச் சரீரத்தினை-ஒழித்து அருள வேண்டும் என்று சொன்ன இப்பத்தும்
அன்றிக்கே
மான் ஆங்காரத்து இவை பத்து -என்பதற்கு
பெரிய செருக்கோடு சொன்ன இப்பத்தும் -என்னுதல் –
பராங்குச ப்ருங்க ராஜம் -வண்டுகள் தேனை குடிக்கும் -ஆழ்வார் உடைய கமலப் பாதங்களில் தேனை அருந்தும் எம்பெருமானார் –

திருமால் இரும் சோலை மலைக்கே –
திருமலை விஷயமாய ஆயிற்று சொல்லிற்று –
அழகரைச்சொன்ன இடம் உண்டாகில் அதில் கற்பகத் தருவினை சொன்னதைப் போன்று-
திருமலையில் உள்ளன அடங்க உத்தேச்யமாக கடவன அன்றோ-
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும் சொன்னார்கள் அன்றோ –
திருவேங்கடமுடையானாகவும் ஆவேன் என்றவாறு –

—————————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ததீயே சீலே அதிகம்ய ஹரிம் அஸ்மின் இதம் உபைமி
ஸூ சரீர லோலா தத் தோஷ முக்தமபி
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் சார்த்தாம் சிகீரிஷும்
முனி சகுலு சப்தமதோ –

ததீயே சீலே அதிகம்ய ஹரிம் -அனைத்தையும் போக்கும் மானங்கார கெடும் அபகரிக்க
அஸ்மின் இதம் உபைமி -அடைகிறேன் அணைவேன்
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் பிரார்த்தனையை

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

அத்யாச்சர்ய ஸ்வ பாவாத் ஹ்ருதய கதத்தயா -ஸூவஸ்துதா பிரேரகத்வாத்
ஸ்வாமித்வாத் சர்வ பூதாந்தர அனுகதாதயாத் ஸூ வஸ்துதவ்
கர்த்ரு பாவாத் ஆபத் பந்துத்வ யோகாத் பகுவித ஸவித ஸ்தான
வத்த் வேனா தேவ ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி

1–அத்யாச்சர்ய ஸ்வ பாவாத்- ஹ்ருதய கதத்தயா -திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன்
மாயக் கவியாய் வந்து என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம்

2–ஸூவஸ்துதா பிரேரகத்வாத்-தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து

3–ஸ்வாமித்வாத் —என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்-அடுத்த பதிகார்த்தம் பொசிந்து காட்டுகிறார்

4–சர்வ பூதாந்தர அனுகதாதயாத்–உலகும் உயிரும் தானேயாய் நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி

5–ஸூ வஸ்துதவ் கர்த்ரு பாவாத்–பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே

6–ஆபத் பந்துத்வ யோகாத்–செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும் திருமால்

7–8–9-10–பகுவித ஸவித ஸ்தான வத்த் வேனா தேவ –பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான்-என்றும்
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே–என்றும்
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும் ஆழி வண்ணன் என் அம்மான்–என்றும்

ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி–திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே–

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 97-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-அவன் தேக சபலனாய்-ஆதரிக்க-இவர் -விரோதியான சரீரத்தை விடுவி -என்று
விடுவித்துக் கொண்டமை பேசின பாசுரத்தை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம்மோடு வந்து கலந்து-தமக்கு பரதந்த்ரனாய் தம் திரு மேனியிலே அத்ய அபி நிவிஷ்டனாய்
திரு மேனியோடே தம்மை ஸ்ரீ திரு நாட்டில் கொடு போக வேணும் என்று
அவன் தம் திருமேனியில் மிகவும் பண்ணுகிற சாபலத்தைக் கண்டு
நம் பக்கல் ஆதர அதிசயத்தால் அன்றோ-இவன் நம் உடம்பை ஆதரிக்கிறது என்று பார்த்து
இதன் தோஷம் அறியாமல்-ராகாந்தனாய் இருக்கிற இவனுக்கு
இதன் தோஷத்தை யுணர்த்தவே இத்தை தவிரும் என்று நினைத்து-இதன் தோஷங்களை அவனுக்கு அறிவிக்க
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே
அது தானே அவனுக்கு மேல் விழுகைக்கு உடலாக-எனக்கு இது மிகவும் அநபிமதமாய் இருக்கும்
ஆன பின்பு இத்தைக் கழிக்க வேணும் -என்று
இவர் அவன் திருவடிகளிலே தலையை மடுத்து சரணம் புக
இவர் விதி வகை பார்க்குமவன் ஆகையாலே
இவர்க்கு அநபிமதம் ஆகில்-வருந்தியும் நாம் இத்தை கழித்து கொடுக்கக் கடவோம்-என்று தலை துலுக்க
நம் சொலவைப் பரிபாலிப்பதே
இது ஒரு சீலம் இருந்தபடி என் –என்று தலை துலுக்குகிற-
செஞ்சொல் கவிகாள் லில் அர்த்தத்தை
செஞ்சொல் பரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————–

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—97-

———————————————————–

வியாக்யானம்–

செஞ்சொல் பரன் –
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகன் -என்கிறபடியே
செவ்விய சொல்லால் ஆன இத் திருவாய் மொழியால்-பிரதிபாதிக்கப் படுகிற
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இது தான் செவிக்கு இனிய செஞ்சொல் இறே –

தனது சீராரும் மேனி தனில் –
தனிச் சிறையில் விளப்புற்று
அஸ்நாதையாய் இருந்த பிராட்டி வடிவைக் காண-ஆசைப் பட்டால் போலே
பிறவி அஞ்சிறையிலே
ஜ்ஞான பக்த்யாதிகள் விஞ்சி இருக்கிற-விக்ரஹத்திலே –

வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக் கண்டு –
அதாவது
வஞ்சக் கள்வன் ஆகையாலே
நெஞ்சும் உயிரும் அவை உண்டு-தானே யாகி நிறைந்தான் -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டே -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய வாக்கை யதனுள் புக்கு -என்றும்
என்கொல் அம்மான் திருவருள்கள் நன்கு என் உடலம் கை விடான் -என்றும்
திருமால் இரும் சோலை மலையே -என்று தொடங்கி-ஒரு மா நொடியும் பிரியான் -என்றும்
இப்படி இவர் திரு மேனியை மேல் விழுந்து-அத்யாதரம் பண்ணுகிற படியைக் கண்டு-
உடலும் உயிரும் மங்க வொட்டு -என்றும்
பொங்கு ஐம்புலனும் என்று தொடங்கி –மானாங்கார மனங்கள் மங்க வொட்டு -என்றும்
இதன் தோஷ தர்சன பூர்வகமாக
அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –

கை விடுவித்துக் கொண்ட –
கை விடுவித்துக் கொள்ளுகை யாவது -அவன் காலைக் கட்டி
கை விடுவித்துக் கொண்டார்-என்றபடி –

கை விடுவித்துக் கொண்ட -திண் திறல் மாறன் –
சர்வ சக்தி-சரீரத்துடன் கொடு போக வேணும் என்று-கர க்ரஹணம் பண்ண
இவர்
சரண க்ரஹணம் பண்ணி-விடுவித்துக் கொண்ட த்ருடமான சக்தியை யுடைய-ஆழ்வார் –

நம் திரு –
சம்பச்ச சாத்விக ஜனச்ய -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாரான ஸ்ரீ மாறன்-நம்முடைய சம்பத்து –

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: