பகவத் விஷயம் காலஷேபம் -184- திருவாய்மொழி – -10-5-1….10-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

விஸ்ரம் பதோ-அதி சங்கை போக்கி -10-3
பக்தி ஏக லப்தன் -10-4-
கரண த்ரய ஆச்ரயணீயத்வம் -10-4-

கண்ணன் கழலினை -பிரவேசம் –

பக்தியானது தனது பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்தார் மேல் –
அத்துணை முறையைப் பொறுக்க மாட்டாமல் ஈஸ்வரன் தன்னை கொடு போகையிலே
விரைகிற படியைக் கண்டு -என்றது -மரணமானால் -என்றது-
அவனுக்கு பல நாள்களாய் அத்துனையும் பொறுக்க மாட்டாமல் அவன் கொடு போகையில் விரைகிற படியைக் கண்டு -என்றபடி-
நமக்கு போக்கு தவிராத பின்பு-இனி இவர்களுக்கு-பக்திமான்கள் உடைய செயல்கள் இருக்கிற படியையும்
அறிய வேண்டுவது ஓன்று ஆகையாலே-அதனை உபதேசிப்போம் என்று பார்த்தார்-
இவர் தாம் எம்பெருமானாரைப் போலே பேர் அருள் உடையவர் காணும் –காரேய் கருணை ராமாநுசன் அன்றோ

இது தான் ஓன்று இவர்களுக்கு குறை கிடந்தது ஆகிறது என் -என்று
அது இருக்கும்படியை உபதேசிப்போம் என்று பார்த்து-பரோபதேசத்திலே ஒருப்பட்டு
அவன் தம்மை பரம பதத்துக்கு கொடு போவதாக விரைகிறபடியாலும்
கேட்கிற இவர்கள் அறிவுக்கு புலன் ஆக வேண்டும் என்னும் அதனாலும்-பாசுரப் பரப்பு அறும்படி சுருங்கக் கொண்டு
அந்த பக்திக்கு – -பற்றுக் கோடான -எண்ணும் திரு நாமம்-திருப் பெயரைச் சொல்லி –
இதில் இழிவார்க்கு நினைக்க தகும் மந்த்ரம் -நாரணம் –இன்னது என்றும் –
அதனுடைய பொருள் நினைவே -3/4-பாசுரங்களால் -மோஷத்துக்கு சாதனம் என்றும்-
தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீர் -அவ்வழியாலே பக்தியைப் பண்ணுங்கோள் என்றும் –
முக்கரணங்களாலும் அவனைப் பற்றுங்கோள் என்றும் –5-
இப்படிப் பற்றுவார்க்கு அவன் -மேயான் வேங்கடம் – சுலபன் என்றும் –6-
மாதவன் -திருமகள் கேள்வன் ஆகையாலே எளிதில் ஆராதிக்கத் தக்கவன் -என்றும் –7-
மாதவன் என்று என்று -இவனை இடுவித்து பற்றச் செய்து இதனையே
அவன் திரு உள்ளத்தில் படுத்தி குவால் ஆக்குவாரும் அருகே உண்டு -என்றும்-8-
பேர் ஆர் ஓதுவார் -மனம் உடையீர் -பற்றும் இடத்தில் அதிகாரிகளுக்கு சொன்ன முறைகள் வேண்டா-
ருசி உடையார் எல்லாரும் இதற்கு அதிகாரிகள் என்றும்-9-
சுனை நன் மலரிட்டு -மலர் முதலான சாதனங்களைக் கொண்டு-அடையுங்கோள் என்றும்-10-
இதில் இழிய விரோதிகள் -அமரா வினைகள் -வினை வல் இருள் -தன்னடையே போம் -என்றும்-
இப்புடைகளிலே சொல்லி-
நாம் இன்னமும் சில நாள்கள் இங்கே இருக்கிறோம் அன்றிக்கே
போக்கு அணித்தான பின்பு எல்லோரும் இதனைக் கொள்ளுங்கோள் -என்று-உபதேசித்து-
அதனோடே தொடங்கின பரோபதேசத்தை தலைக் கட்டுகிறார்-

வீடு முன் முற்றவும் -திருவாய் மொழியில்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்று
வணங்குதற்கு பற்றுக் கோடாகச் சொல்லப் பட்ட மந்த்ரத்தை-
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்று காட்டுகிறார் இங்கு-

—————————————————————————————–

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

உபாசனத்துக்கு ஆலம்பனம் -மூல மந்த்ரம் பிரதானமான மந்த்ரத்தை –அனுசந்திக்க அவன் திருவடிகளை பிராபிக்கலாம்-
கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்-சர்வ சுலபன் -ஆஸ்ரித அர்த்தமான திருவடிகளை -அடைவதற்கு ஈடான மனம் உடையீர் –
-தோல் புரையே போமதுக்குப் பழுதிலா யோக்யதை -ஒழுகலாறு -வேணும் -மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த
மர்ம ஸ்பர்சிக்கு நானும் நமரும் என்னும்படி சர்வரும் அதிகாரிகள் -சூர்ணிகை -18-
சரீரம் -வேத முறை உபாசனம் -பிரபத்திக்கு -ஸ்ரத்தையே போதும் த்ரை வர்ண அதிகாரம் -வேத சாரம் திரு மந்த்ரம் -அனைவருக்கும் அதிகாரம் உண்டே –
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே-அனுசந்திக்கைக்கு யோக்கியமான -மந்த்ர பிரதானம் -வியாபக மந்தரங்களுள் ஸ்ரேஷ்டம்
-சார தம காயத்த்ரியில் முன்னோதிய-பிரணவ -நமஸ் -சதுர்த்தி அபேக்ஷிதங்கள் அல்ல -நாராயணம்-அதிலும் சுருக்கி -நாரணமே -என்கிறார்

பக்தியை உடையராய்க் கொண்டு-அவனை நினைப்பார்க்கு-
பற்றுக் கோடானா-திருமந்தரம் -இன்னது –என்கிறார்

கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் –என்று மேலே சொன்னதனையே
இங்கே கண்ணன் கழல் இணை -என்கிறார் –திரியவும் ஒருக்கால் சொல்கிறார்
இவர்கள் கேட்க வேண்டுவதனை சொல்லுகைக்கு உறுப்பாக –
கிருஷ்ணன் திருவடிகளை கிட்ட வேண்டும் என்று இருப்பீர் –
பரம பதத்தில் சென்று காண வேண்டும்படி இருக்கை அன்றிக்கே-
எல்லா வகையாலும் சுலபனானவன் உடைய திருவடிகள் -என்பார் -கண்ணன் கழலிணை -என்கிறார் –
அடியார்கட்கு தூது போதல்-தேர் ஒட்டுதல் செய்யும் திருவடிகள் —
-பிரிந்து கூடினாரைப் போலே இருக்கிறது காணும்-ஆதலின் -நண்ணும் -என்கிறார் -வந்தான் என்பது போலே –
இத் யுக்த பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ஸ லஷ்மண-யுத்தம் -17-1-
ஜகாம என்னாமல் ஆஜகாம -நண்ணும் -ஸூ ஸ்தானம் போலே -இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் -அக்கரையில் இருந்து அநர்த்தப் படாமல் –
கரங்கள் மீச்சுமந்து செல்லும் கதிர்மணி முடியன் கல்லும்
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல்
இரங்கினன்-நோக்குத் தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான்
வரங்களின் வாரி யன்ன தாளிணை வந்து வீழ்ந்தான் –கம்பர்
மனம் உடையீர் -என்கிறார் -நிதி உடையீர் -என்னுமாறு போன்று-இதனையே குவாலாக நினைத்து இருத்தலின் –
இதனால் -இதற்கு அதிகாரம் தேட வேண்டா-ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் -என்பது போதரும் –
சுவர்க்கம் அடைவதற்கு இன்னார் இனியார் என்ற வரை யறையும்-கழுவாயும் -பிராயச் சித்தம் -வேண்டா நின்றது –
மீண்டு வருதல் இல்லாத தன்மையை உடைய மோஷத்திற்கு-அது வேண்டாது ஒழிகிறது-
பெரும் பேற்றுக்குத் தக்கதான அதிகாரம் இவனால் சம்பாதிக்க முடியாமையாலே-
தோல் புரையே போமதுக்கு பழுதிலா யோக்யதை வேணும்-
மனம் உடையீர் என்கிற ச்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு –
நானும் நமரும் -என்னும்படி -சர்வரும் அதிகாரிகள் –-சூர்ணிகை -18-

எண்ணும் திருநாமம் –
நினைக்கப் படும் திருப்பெயர் –சுலபமான அநுஸந்திக்கும் திரு நாமம்
அன்றிக்கே –பக்திமான்களைச் சொல்லுகையாலே அது தான் -அது அது –என்னும்படியாய் ரசமாக இருக்கையாலே சொல்லுதல் -என்னுதல் –
தேனும் பாலும் — நானும் சொன்னேன் நமரும் உரைமின் –
எண்ணும்- திருமந்தரம் -என்னாமல்-நாமம் -என்கிறது-இதற்கு ஒரு அதிகாரி நியதி -அங்க நியதி -வேண்டா-
குழந்தை தாயின் பெயரைச் சொல்லுமாறு போன்று அமையும் -என்கைக்காகா –

அது தான் எது -என்னில் –
நாரணம்
இது தான் இறைவன் திருப் பெயர் ஆகையால் -ஸ்வாமி வாசகம் -–அம்மே -என்பாரைப் போலே இருக்கிறதாயிற்று-
இதுவும் இன்னம் எதுவும் வேண்டுமோ என்றால்-
இத்துணையே அமையும் -என்பார் -நாரணமே -எனத்-தேற்றகாரம் கொடுத்து ஓதுகிறார் –

கனத்த பேற்றுக்கு இவ்வளவு போருமோ -என்னில்
திண்ணம் –
நிச்சயம்
சத்யம் சத்யம்மீண்டும் சத்யம் கையைமேலே உயர்த்தி சொல்லுகிறேன் –
வேதம் ஆகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் மேலான பிரமாணம் கிடையாது –
கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் கிடையாது-என்னுமாறு போலே -திண்ணம் -என்கிறார் –
நாரணமே -என்ற ஏகாரத்தாலே
பிரணவத்தை ஒழியவும்-நமஸை ஒழியவும்-நான்காம் வேற்றுமையை ஒழியவும்-இத்துணையே நிறைந்தது -என்கை –
நாரணம் -என்று இல்லாத மகரத்தையும் கூட்டி-உள்ளவற்றைக் குறைத்துச் சொல்லுகையாலே-
அளத்தில் பட்டன எல்லாம் உப்பு ஆமாறு போன்று-இதனோடு கூடிய வெல்லாம் உத்தேச்யம் -என்றும்-
குறைந்தாலும் -அங்கம் தப்பிற்று -ஸ்வரம் தப்பிற்று என்று-ப்ரஹ்ம ரஷஸ்ஸாகப் போக வேண்டுமவற்றை-
காட்டிலும் இதற்கு உண்டான எல்லா பெருமையும்-சொல்லிற்று ஆயிற்று-
பூமியைப் போலே பொறுமை -தாரை சகாரம் விட்டு சொன்னால் போலே -ஷமாவான் ச காராம் இல்லாமல் சொன்னால் போலே

—————————————————————————————————-

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

திரு நாமம் அர்த்தம் -குண விபூதி யோகம்
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்-ஏஷ நாராயண ஸ்ரீ மான் —ஷீரார்ணவ –மதுராம் புரீம் -கிருஷ்ணன் போலே -எம்மான் –
லீலா விபூதி நாயகன் -பாரணங்கு ஆளன்-நித்ய விபூதி நாயகன் –
வாரணம் தொலைத்த காரணன் தானே-பிரதி பந்தனம் நிரசனம் -ஜகாத் காரண பூதன் கிருஷ்ணன் தானே –
கிருஷ்ண ஏவதி உத்பாத -ஸ்ருதி –

இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்-நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்-
அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் -நாராயணா
நாராயண பரஞ்சோதி இரண்டு வகைகளும் உண்டே

நாரணன் –
மேலே பொருளினை அருளச் செய்ய நினைத்து-பெயரினை எடுத்துச் சொல்கிறார் –
நாரங்கள் ஆவன -முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தி-

எம்மான் –
எனக்கு ஸ்வாமி யானவன் –

பாரணங்கு ஆளன்-
பாரணங்கு உண்டு -ஸ்ரீ பூமிப் பிராட்டி –அவளுக்குத் தலைவன் –
பூமிக்கு உரியவள் ஆதலின் -பாரணங்கு -என்கிறார் –
பாரணங்கு -என்கையாலே -பரம பதத்துக்கு உரியவன் -என்கிறது-
ஸ்ரீ பூமிப் பிராட்டி யைச் சொன்னது நித்ய சூரிகளுக்கு உப லஷணம்
எம்மான் -இது லீலா விபூதிக்கு உப லஷணம்-ஆக உபய விபூதி நாதன் -என்றபடி
குற்றம் செய்தது பொறுக்கைக்கு ஒரு உலகமும்-பொறுப்பிக்கைக்கு ஒரு உலகமும் -ஆயிற்று –
க்ருதா கஸ–ஷாம்யதி -குற்றம் தலை நிரம்பி புறம்பு புகல் இல்லாதாரை காக்கும் ஈஸ்வரன் –
குற்றம் நிரம்பி அனுதாபம் இல்லாதாரை பொறுப்பிக்கும் பிராட்டி
தலை அறுக்கச் சொல்லுகிறது என்-கொடுக்கச் சொல்லுகிறது என்
நம்முடைய தண்டனை யாகில் அதற்கு மூலம் தண்டனை பலிக்கும் படி பண்ணிப் பின்பு-
அனுக்ரஹத்தை செய்ய வேண்டுமோ -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி –

வாரணம் தொலைத்த –
தன்னைப் பெற வேண்டும் என்று இருப்பார் அடைவதற்கு-தடைகளாக உள்ள உள்ள அவர் கர்மங்கள்
குவலயா பீடம் பட்டது படும் –
பகையை அழித்தல் இந்தத் திரு மந்த்ரத்தின் பொருள் ஆமோ -என்னில்
அகாரத்தில் முதலிலே தொடங்கி-அதில் சொல்லிக் கொண்டு போகிறது-ரஷகத்வம் அன்றோ –
ரஷிக்கையாவது விரோதியை போக்குகையும் அபேஷித்தத்தை கொடுக்கையும்
இவை இரண்டும் சேதனர் இன்ற நின்ற அளவுக்கு ஈடாக இருக்கும்
அதற்கு களை பிடுங்கி நோக்க வேண்டுமே –அவ ரஷனே -என்னக் கடவது அன்றோ –

காரணன் தானே –
இவற்றின் உடைய ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள்-தன் அதீனமாய் உடையவனாய் இருக்கையும்
அதற்குப் பொருள் அன்றோ –
இவற்றுக்கு ஆஸ்ரயம்-இவை தனக்கு ஆஸ்ரயமாக –
இவை இரண்டாலும் பலித்தது பரத்வ சௌலப்யங்கள்-
அந்தர்யாமித்வமும் -உபாயத்வமும் -உபேயத்வமும்-

———————————————————————————————————

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

ஸ்ருஷ்டியாதி கர்த்ருத்வம் -இதுவும் திரு நாம அர்த்தம் -ரக்ஷணம் ஸ்வரூப ஸ்திதி ஆதீனம் முன்பு –
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து–நாராயண சப்த வாச்யனான -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
தானே லோகம் -மேலே செய்யும் செயல்கள் -இது தானே எல்லா உலகும் -சர்வமும் ப்ரஹ்ம -சமானாதி கரண்யம்
-அவருடைய உலகு இல்லை அவரே உலகு -முதல் வேற்றுமை -ஐக்கியம் இல்லை -வெல்வேறு தத்வங்கள் –
சரீராத்மா காரண காரிய ரஷ்ய ரக்ஷக ஆதார ஆதேய -நியந்தரு நியாந்தா சம்பந்தம் உண்டே -ஏக பிரகாரி –
அபிருத்தக் சித்த விசேஷணம் -சார்ந்தே இருக்கும் -உலகு எல்லாம் பஹு வசனம் தானே ஏக வசனம் -நித்யோ நித்யானாம் ஏகோ பஹுநாம் –
அஸஹாயம் — சக ஹாரி நிரபேஷமாக தானே படைத்து -இடந்து பிரளயத்தில் மகா வராஹமாய்
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே-பிரளயத்தில் முற் கோலி தானே உண்டு -ஆபத்து வர போகிறது என்று தானே உணர்ந்து -அபேஷா நிரபேஷமாக
அனந்தரம் உமிழ்ந்து -சேஷியாந்தரம் இல்லாமல் தானே கைங்கர்யம் கொண்டு – சர்வாதிகன் தானே நிர்வகிக்கும் –

சர்வேஸ்வரன்-ஸ்வரூபத்துக்கு ஏற்ற-பல வகைப் பட்ட ரஷணங்களை-சொல்லுகிறார்-

தானே உலகு எல்லாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம – தஜ்ஜலான் எல்லா பொருள்களும் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன –
தத் த்வம் அஸி -அது நீ ஆகின்றாய் –என்றும் சொல்லக் கடவது அன்றோ –

தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே –
ஆகையாலே-தானே உலகு எல்லாம் -என்கிறது –
தஜ்ஜலான்-சாந்த உபாசித-
தஜ்ஜத்வ-அந்த பரம் பொருள் இடத்து உண்டாவதாலும் –
தல்லத்வ – அந்த பரம் பொருளில் லயம் அடைவதாலும் –
தத் நத்வ -அந்த பரம் பொருளால் காப்பாற்றப் படுவதாலும்-
இதம் சர்வம் -காணப் படுகிற இவை எல்லாம்
ப்ரஹ்ம கலு -அந்த பரம் பொருள் அல்லவா –
தத் அநத்வம் -உயிர்பித்தல் -காப்பாற்றுதல்-
தஜ்ஜத்வ தல் லத்வங்களில் –
தச் -சப்தம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம பரம்
தத் அநத்வத்தில்-தச் சப்தம் கேவல ஸ்வரூப மாதரம்-
ஸ்வேன ரூபேண நின்று ஸ்திதிப்பிக்க வேண்டுகையாலே –
இங்கு சொல்லுகிற தாதாத்மியம் -ஓன்று பட்டு இருத்தல் -ஸ்வரூபத்தால் ஐக்கியம் சொல்லுகிறது அன்று-
சரீர ஆத்மா பாவத்தால் சொல்லுகிறது –
காரணனாய் இருக்கும் தன்மையை சொல்லில் வேறு படுகின்ற விகாரங்களுக்கு இடமாம் என்று சங்கித்து
சரீர ஆத்மா பாவத்தாலே சொல்லுகிறது
சரீரத்துக்கு உளதாகும் பால்யம் யௌவனம் முதலானவைகள்
ஆத்மாவை அடையாதது போன்று
இவற்றைப் பற்றி வரும் விகாரங்கள் அவனுக்கு வாரா
என்று குற்றம் தீண்டாமை சொல்லுகைக்காக சொல்லுகிறது

தானே படைத்து –
தம பர தேவ ஏகீ பவதி -சுபால உபநிஷத்
மூலப் பிரகிருதி பரம் பொருளில் ஒன்றுகிறது -என்கிறபடியே
சூஷ்ம சித் அசித்துக்களை சரீரமாக உடைய –

தானே எல்லா உலகங்களையும் உண்டாக்கி –
அசித்தினும் வேறுபடாத நிலை உடைத்தாகையாலே-விரும்புவாரும் இன்றிக்கே-அருள் உடையவனாய் தானே உண்டாக்கினான்

தானே இடந்து –
பிரளயத்தால் மூடப் பட்ட பூமி -என்னை எடுக்க வேண்டும் -என்று விரும்பியதால் அன்று –
அழிந்த உலகத்தை நிறுத்தியது

தானே உண்டு –
பிரளயம் வர புகுகின்றது என்று அறிவார் இலரே-

உமிழ்ந்து –
உள்ளே கிடந்தது நோவு படும் இத்தனை அல்லது
எங்களை வெளிநாடு காணப் புறப்பட வேண்டும் -என்று இரவாது இருக்க தானே உமிழ்ந்து

இப்படி பல விதமான பாது காத்தலை பண்ணுகையாலே-
தானே உலகு எல்லாம் –
எல்லா பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன-

சிலந்திப் பூச்சி தானே நூலை கட்டி அழிப்பது போலே -வீட்டைப் பண்ணி விளையாடும் -விமலன்

———————————————————————————————–

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-

ஆபோ நாரா -ஆர்ணவம் பெரிய நீரை படைத்து சாயி -திருவடிகளில் -புஷபங்களை சமர்ப்பித்து -நித்தியமாக ஆஸ்ரயிக்க
ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்–மிடுக்கான ஆதி சேஷ பர்யங்கம் ஜகத் நிர்வாகம் சேஷி -கோள் மிடுக்கு ஒளி -உஜ்ஜ்வல முகம் –
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே -நாள் தோறும் ஆஸ்ரயிக்க அழைக்கிறார் –

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே-அயனம் தஸ்ய தர பூர்வம் தேன நாராயண ஸ்மிருத -விஷ்ணு புராணம் -1-4-6-
தண்ணீர் நரன் என்ற பரம் பொருளின் நின்றும் உண்டாயிற்று-
ஆதலால் தண்ணீர் -நாரம் -என்று சொல்லப் படுகிறது -என்னும்-ஒரு நிர்வசனம் உண்டே அன்றோ இதற்கு-
அவ்வழியாலே திருமந்த்ரத்துக்கு-பொருள் கொண்டு-திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு
மலர்களைக் கொண்டு கை கூப்பி வணங்கி அடையுங்கோள் –என்கிறார்-

ஆள்வான் –
இவற்றை முழுதும் அடிமை கொள்ளுமவன் –

ஆழி நீர் ஆள்வான்-
அடிமை கொள்ளும் வகை இருக்கும்படி-காரணமான தண்ணீரிலே-
படைத்தலில் நோக்கு உள்ளவனாய்-திருக் கண் வளர்ந்து அருளி –அந் நிலையிலே ஆத்மாக்களை காப்பாற்றியவன் –

கோள்வாய் –
மிடுக்கை உடைய வாய் -என்னுதல்-
பகைவர்கட்கு எமனான வாய் -என்னுதல்-

அரவு அணையான் தாள்வாய் மலர் இட்டு-
எளிதில் ஆராதிக்க தக்கவன் -என்றபடி-
ஆதி சேஷனைப் படுக்கையாக உடையவன் திருவடிகளில்-செவ்விப் பூவினை பணி மாறி-

நாள்வாய் நாடீரே –
நாள் தோறும் வணங்குங்கோள்-
அத் திருவநந்த ஆழ்வான் உடைய பேறு நீங்களும் பெறலாம்-

————————————————————————————-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-

சாதன பக்தி இல்லை -நாமம் பாதுகை யாகிய வீடு -மலர் கொண்டு நாடுவதே
மோக்ஷ பிரதன் நாமம் பாடி -அவன் உள்ளம் உகக்க அருளுவான்
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு–பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே-செல்லுகிறார் நாடுகிறார் பிரார்த்தனை -உடன் அர்த்தித்தவம்
-கைங்கர்யம் -ப்ரீதி உந்த நாமம் பாடி -ஆராதனமும் சாம கானமும் தானே வீடே -அவன் உங்கள் பாட்டை சாம காணமாக கொள்வான் –
நிதானப் பாசுரம் -முக் கரணங்களால் ஆராதனம் –

இப்படி செவ்வி மாறாத மலர்களைக் கொண்டு-அவன் திருப் பெயரை உவகைக்கு-போக்குவீடாகச் சொல்லுங்கோள் –
அப்படிச் செய்யவே ஆத்மாவுக்கு ஸ்வரூப அனுரூபமான-கைங்கர்யத்தைப் பெறலாம் –என்கிறார்-

நாடீர் நாள் தோறும் –
பசித்த போது எல்லாம் உண்ணுமாறு போலே –கால நியமம் இல்லை என்றவாறு –

வாடா மலர் கொண்டு –
தகுதியான மலர்களைக் கொண்டு –
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து-மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி-
ஆர்வம் என்பதோர் பூ இட வல்லார்க்கு -அன்பாகிய மலர் –
அன்றிக்கே-ஆன்மாவாகிய மலர் என்னவுமாம்
கந்த மா மலர் எட்டும் இட்டு-இன மலர் எட்டும் இட்டு
செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குருக்கத்தி கருமுகை தாமரை –

பாடீர் அவன் நாமம் –
ஏதத்சாம காயான் ஆஸ்தே –முக்தர் சாமகானம் பண்ணுமாறு போலே-
அவனுடைய திருப் பெயர்களை பக்தி-முன்னாக பாடுங்கோள் –

நாடீர் -என்பதனால் -மானசீகம்
வாடா மலர் இட்டு -காயிகம்
பாடீர் -வாசகம்
ஆக முக் கரணங்களின் தொலையும் சொல்லிற்று –

வீடே பெறலாமே –
ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே -சாந்தோக்யம் –
உயிர்க்கு உரியதாக கைங்கர்யத்தைச் செய்யவே-
தனது உருவத்தோடு தோன்றுகின்றான் -என்றதனைப் பெறலாமே-இனியதனைச் செய்ய

————————————————————————————–

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

ஆஸ்ரித சம் ரக்ஷணம் -அனுபவ துக்காகவும் பிராட்டி உடன் -ரமயாசக-
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்-அநு பாவ்யமாய் சியாமளா ரூபன் -ஸ்வாமி புஷ்காரனி தடத்தில் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே-பிரகிருதி அழித்து அஹங்காரம் மமகாராம் போலே பூதனை முலைகள்
-பசை அற சுவைத்தால் போலே வாசனை ருசிகள் அனைத்தையும் போக்கி
அமுத மயமான வாய் -விஷம் உண்டாலும் -விஷம் அமுதமாகும் முகூர்த்தம்

நீர் சொன்னபடியே செய்யலாவது-அடையத் தக்க இறைவனை கண்டால் அன்றோ-
கண்டு அன்றோ அடைய வேண்டும் என்ன –
பிற்பாடரான நமக்காக திரு மலையிலே நின்று அருளினான்-அவனை அடையுங்கோள்-என்கிறார்-

மேயான் வேங்கடம் –
நீங்கள் சென்று அடையும்படியாக-திருமலையிலே பொருந்தி வசிக்கிறவன் –

கண்ட அளவிலேயே-வணங்கக் கூடியதாக இருக்குமோ -என்னில் –

காயா மலர் வண்ணன் –
துரும்பும் எழுந்து ஆடி-அடிமையில் மீண்டு அல்லது நிற்க-ஒண்ணாதபடியான வடிவு படைத்தவன் –

நம்மைச் சூழ்ந்து உள்ள தீ வினைகள் செய்வன என் என்னில் –

பேயார் முலை உண்ட வாயான் –
பூதனை பட்டது படும் இத்தனை –

மாதவனே –
நம்முடைய செயலைப் பாராதே-அங்கீ கரிப்பதற்கு அருகே இருப்பாரும் உண்டு

——————————————————————————–

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

வேங்கடத்து உறைவார்க்கு -நம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே -போய பிழைகளும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
–மேய் மேல் வினை முற்றவும் சாரா -வேம் கடன்கள் -ஏதம் சாரா -அங்கே எடுத்துக் கோத்து ராமானுஜர் –
சர்வ பிரகார ஆஸ்ரயணம் பண்ணா விடில் -அந்தப்புர வார்த்தை -மாதவன் சொல்லி -என்று என்று -எதிர் ஒலிக்க
-வாடா மலர் நாமம் மனம் எண்ணினால் போலே அவள் ஒன்றை பத்தாக்கி உபாயம் உபேயம் இந்த அந்த புர வார்த்தை
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்-புருஷகார -கைங்கர்ய வர்த்தகத்வம் இரண்டு ஆகாரம் -என்று என்று பூர்வ உத்தர வாக்கியம்
-மாதவன் -உபாயத்வம் பூர்வ கண்டம் -அவனை உபாயம் இவளை புருஷா காரம் -உபேயத்வம் இரண்டு ஆகாரம்
வல்லீரேல் -கிடையாதது கிடைத்தால் போலே மனசில் பட்டு -துர் லபம்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-ஆர்ஜித்த க்ரூர பாவங்கள் அடையா -பல பிரத உன்முகம் கொண்டு வாரா –
நித்யம் த்வயம் சொல்லி -மேலே உள்ள பாபம் வாராது அனுபவமே யாத்திரை –த்வயம் சொல்லி கால ஷேபம் என்றவாறு

ப்ரீதியினாலே தூண்டப் பட்டவர்களாகி அடையவும்-இனிமையோடு திருநாமம் சொல்லவும்-
மாட்டாதார் அந்தப்புர பரிகரமானார்-வார்த்தையைச் சொல்லவே-
பக்தியை செய்தார் அடையும் பலத்தை-நீங்களும் அடையலாம் –என்கிறார் –

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்-
நாராயண நாமத்தோடே-இதனைச் சேர்த்து சொல்லப் பாருங்கோள் –
நாரணமே -என்றாரே மேல்
உங்களுக்கு ருசி இல்லை யாகிலும்-பிறராலே தூண்டப் பட்டவராகி-எப்போதும் சொல்ல வல்லீர் கோளாகில் -என்பார் –
ஓத வல்லீரேல் -என்கிறார்
ஓத -ஒருவர் உச்சாரணம் செய்ய நீங்கள் அநு உச்சாரணம் செய்ய –

தீது ஒன்றும் அடையா –
முன் செய்தவை எல்லாம் அழிந்து விடும் –

ஏதம் சாரவே –
இனித் தீய செயல் அடையாது -என்றது-முன் செய்த இரு வினைகளையும் மறந்து விடும் –
இனி செய்வன வற்றில் தன் நெஞ்சு செல்லாது –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-தீயினில் தூசாகும் செப்பு –

மேலே கூறின திரு மந்த்ரமும்-இப்பாசுரத்தில் சொன்ன ஸ்ரீமத் பதமும்
தனித்தனியே பேற்றுக்கு போதியவாய பின்பு-இரண்டினையும் சேர்த்து சொன்னவர்களுக்கு-பேறு சொல்ல வேண்டாவே அன்றே
மாதவன் என்று என்று-இரட்டித்து சொன்னது-த்வயத்தில் ஸ்ரீ சம்பந்தம் இரண்டு வாக்யத்திலும் உண்டே என்பதால் —
எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி
மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆச்சார்யா ஹிருதய ஸ்ரீ ஸூக்தி பிரகரணம் -4-சூர்ணிகை -10
முற்கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளை உபாயமாக பற்றுகிறது
பிற்கூற்றால் அச் சேர்த்தியில் அடிமையை இரக்கிறது-முமுஷுப்படி -சூர்ணிகை -122
ஆக-திருமந்தரம் த்வயம் இரண்டையும் அனுசந்திக்க வல்லீர் கோளாகில் -என்றது ஆயிற்று –

——————————————————————————————————-

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8-

சர்வ புருஷ போக்ய பூதன் -திரு நாமம் சொல்வார் நித்ய ஸூ ரிகள் சமம்
சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்-துக்கங்கள் சிவாயமே வாரா -அவைகளே வாராவே -ஜல ஸ்தல விபாகம் இல்லாமல் சர்வ ஜன போக்யன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே-திருநாமம் திருப்தி பெறாத அளவாக கொண்டு -வர்ண ஆஸ்ரம நியதி இல்லாமல்
-ப்ரீதி மாத்திரமே -யாராவது ஓதினாலும் -அவர்கள் நித்ய ஸூ ரிகள் -சொல்லி திருப்தி அடையார்

அதிகாரி நியதி இல்லை-யாரேனுமாக திருப் பெயரை-எப்பொழுதும் சொல்லுவார்-நித்ய சூரிகளோடு ஒப்பார்கள் –என்கிறார்

சாரா ஏதங்கள் –
ஏதங்கள் சாரா-எந்த வித பொல்லாங்குகளும் வந்து கிட்ட மாட்டா-

நீரார் முகில் வண்ணன் –
நீராலே நிறைந்த மேகம் போலே இருக்கிற-நிறத்தினை உடையவன் –

பேர் ஆர் ஓதுவார் –
அவன் திருப் பெயரை எப்பொழுதும் சொல்வார்-யாவர் சிலர்-
ஓதுவார் வர்த்தமானம் எப்பொழுதும் சொல்லிக் கொண்டு இருப்பவர் என்றபடி —

ஆரார் அமரரே –
அவர்கள் பிறவிகளில் தாழ்ந்தவர்களாய் இருப்பினும்-அவர்கள் இருந்தபடியே-நித்ய சூரிகளோடு ஒப்பர்
அந்த அந்த பிறவிகளோடு இருக்கும் போதே-நித்ய சூரிகளோடு ஒப்பார்கள் –
பக்திமான்கள் ஏற்றம் அருளிச் செய்கிறார் ஆஸ்ரயம் ருசி வர

————————————————————————————–

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-

அநந்ய பிரயோஜன சுலபன் -பிரதி பந்தகங்கள் கிட்டா
அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை-ப்ரஹ்மாதிகளுக்கு துர் லபன் -சம்பந்த ஞானம் உள்ள அநந்ய பிரயோஜனர்க்கு எளியவன்
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே-பிரயோஜனாந்தரம் கொண்டு அகலாமல் -பொருந்தி தொழுதால்
பிராப்தி பிரதி பந்தகங்கள் ஸ்பர்சியாதே தீண்டாதே –

பிறவி தொடக்கமானவைகள்-காரணங்கள் ஆகாமல் போனாலும்-
பிரயோஜனாந்த பரராய் ஆவதற்கு-காரணமான பாவங்கள் செய்வது என் என்னில்
அநந்ய பிரயோஜனராய் கொண்டு-பற்றவே அவை தாமே போம்-என்கிறார்

அமரர்க்கு அரியானை –
எத்தனையேனும் மேலான ஞானத்தை-உடைய வரான பிரமன் முதலாயினோர்கட்கும்
தங்கள் முயற்சியால் அடைய முடியாதவனை –
யன் நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-59-என்கிறபடியே

தமர்கட்கு எளியானை –
அநந்ய பிரயோஜனர்கட்கு சுலபன் ஆனவனை -என்றது –ஒரு குரங்கு ஆகவுமாம்-ஒரு வேடுவச்சி ஆகவுமாம்-ரிஷிகள் ஆகவுமாம்
அவர்களுக்கு எளியனாக இருக்கும் -என்றபடி
பிதா யஸ்ய புராஹி ஆஸீத் சரண்ய தர்ம வத்சல-தஸ்ய புத்ர சரண்ய ஸ சுக்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -3-20-என்றும்
ஸ அப்ய கச்சத் மகா தேஜா சபரீம் சத்ரு ஸூ தன-சபர்யா பூஜிதா சம்யக் ராம தசரதாத்மஜா -என்றும்
இமௌ ஸ்ம முனி சர்த்தூல கின்கரௌ சாம் உபச்திதௌ-ஆஜ்ஞா பய யதேஷ்டம் வை சாசனம் கரவாவ கிம் -பால காண்டம் -31-4-என்றும்
சுக்ரீவன் சபரி விஸ்வாமித்ரர் போல்வாருக்கு-எளியன் ஆன பெருமாள் போலே –

அமரத் தொழுவார்கட்கு –
ஒரு பயனைக் கணிசியாதே-அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு-தொழுமவர்க்கு –
மிக்க சீர் தொண்டர் -திரு மங்கை மன்னன்

அமரா வினைகளே –
வேறு பயன்களை விரும்புவதற்கு அடியான-தீ வினைகள் வந்து கிட்ட மாட்டா-

————————————————————————————–

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-

ஆஸ்ரித ரக்ஷணத்தில் அளவிறந்த பாரிப்பு ஆஸ்ரயிக்க அவித்யாதி ஸமஸ்த கிலேசங்கள் போகும்
வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்-பூர்வாகம் உத்தராகம் -தமோ விகாரங்கள்
-அந்யதா விபரீத அஞ்ஞானம் -திரள்கள் தேக சம்பந்தம் ருசி வாசனை -பயந்து ஓடி போகுமே
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே-தன்னிலும் -செவ்வித் பூக்கள் சமர்ப்பித்து
-ஆஸ்ரித விஷயத்தில் அளவுக்கு உட்படாத உபகாரகனை நினைக்க –

அவ்வளவே அன்றிக்கே-கைங்கர்யங்களுக்கு தடையாக உள்ளவைகளும் போம்-
ஆனபின்பு அவனை அடையுங்கோள்-என்கிறார் –

வினை –
கர்மம்

வல் இருள் -என்னும் முனைகள்
பிரபலமான அஞ்ஞானம்-அதற்கு அடியான தேக சம்பந்தம்-
இவற்றைப் பற்றி வருகிற ருசி வாசனை யாகிற-இத் திரள்கள்
முனை -திரள்

வெருவிப் போம் –
நமக்கு இது நிலம் அன்று -என்று அஞ்சிப்போம்
அன்றிக்கே-முனை என்று முகமாய்-முகம் கெட்டுப் போம் -என்றுமாம் –

சுனை நல் மலர் இட்டு –
விண்ணுலகில் உள்ள பொருள்களை-தேடி இட வேண்டும் என்ன வேண்டா –
ஆதரவுடன் -நல் மலர் –

நினைமின் –
சிந்திப்பே அமையும் –உங்கள் மனம் நல்ல நிலையில்-இருக்கும் பொழுது ஒரு கால் நினையுங்கோள் –
ஸ்திதே மனசி ஸூ ஸ் வச்தே சரீரே சதியோ நர-நாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபம்ச மாமஜம்
ஒரு கால் நினைத்து இவனைப் போலே கலங்க வேண்டியது இல்லை அன்றோ அவனுக்கு –

நெடியானே –
எல்லா குணங்களாலும் நிறைந்தவனாய்-கர்மங்கட்கு வசப் படாதவனும் ஆகையாலே-
உருவ நினைத்த படியே இருக்கும் அன்றோ அவன் –ஸ்மராமி -நினைத்த படியே -நிகழ் காலம் -இருப்பானே-

——————————————————————————-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

பகவத் பிரசாதம் பலன் –
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்-சர்வாதிகன் -சர்வ பிரகார பிரசாதம் சூடும் ஆழ்வார் -அதிகரித்து மேன் மேலும் அனுபவித்து
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே-சொல் -நொடி பொழுதில் பதிகம் முடியுமே -நொடியான இப்பத்து
-பகவத் சேஷ பூதருக்கு பகவத் பிரசாத லாபமாக இருக்கும் –

நிகமத்தில்-
இப்பத்தும் கற்றவர்களை-ஆழ்வார் தம்மைப் போலே-பகவான் உடைய-திருவருளுக்குப்-பாத்திரமாகும்-என்கிறார்-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் –
சர்வேஸ்வரன் திருவருளுக்கு-பாத்திரமாகும் தன்மையரான-ஆழ்வார் -என்றது-
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் –4-5-5-என்று
தன் குணங்களையும் செயல்களையும்-பொறுக்கப் பொறுக்க-அனுபவிப்பித்துக் கொண்டு போந்த படியை-நினைத்து ஈடுபட்டார் மேல் –
இப்போது அவன் கொடுத்த அருள் எல்லாம் உண்டு-அறுக்க வல்லார் ஆனார் ஆயிற்று -என்றபடி

நொடிதல் -சொல்லுதல்

ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே –
இப்பத்து தானே இதனைக் கற்றார்க்கு-நெடியான் அருள் சூடும் படியான் -என்றதுவே பேறாக்கும்-
ஈஸ்வரன் கொடுத்த பேறு-ஆழ்வாரால் கொடுக்க மாட்டாமை இல்லை யன்றோ –

————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பக்தேக சரீரம் அபி பஞ்சமோ மித ஸூக்தி ஜாலைகி
பிராப்தவ் த்வாராதிசயம் பக்தி சமுசுகானாம்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் பிரதி பாவ நீயும்
ஜகதி ஜிஞ்ஞாசித்தம்

பக்தேக சரீரம் அபி -பிரகாரம் கரண த்ரயத்தால் ஆஸ்ரயம் -உபதேசிக்க வந்து பக்தி அங்கங்கள் அருளிச் செய்கிறார்
பிராப்தவ் த்வாராதிசயம் -பெருமாளுக்கு த்வரை
பக்தி சமுசுகானாம் -ஜகதி நண்ணும் மனம் உடையீர்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் கண்ணன் கழல் இணை

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

நாம்நாம் சங்கீர்த்தனேன ஸ்திர பரிபீடன் தயா பாவ நாதோ
அநு வேலாம் ஸம்ஸ்ப்ருத்யா புஷ்ப த்யான அத்யயனம் நிவாஸனை
தர்மகி வர்ணாஸ்ரம பத்து வித பஜனை கிரியா நிருத்யாயா
ஸ்தோத்ர க்ருத்யை தீர்க்க பந்து அகில த்ரவிட தர்சி

1–நாம்நாம் சங்கீர்த்தனேன—கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே

2–ஸ்திர பரிபீடன் -தயா –நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே

3-பாவ நாதோ –தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–

4-அநு வேலாம் –ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான் தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே

5-ஸம்ஸ்ப்ருத்யா—நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே-நாடீரே த்யானம்

6–புஷ்ப த்யான அத்யயனம்–நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே

7–நிவாஸனை–மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன் பேயார் முலை உண்ட வாயான் மாதவனே

8–தர்மகி வர்ணாஸ்ரம –மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே

9-பத்து வித பஜனை கிரியா–சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே

10-நிருத்யாயா ஸ்தோத்ர க்ருத்யை–அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே

தீர்க்க பந்து –வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம் சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே

அகில த்ரவிட தர்சி–நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 95-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் பக்திமான்கள் பரிமாற்றத்தை சுருங்க அருளிச் செய்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் அது எங்கனே என்னில்
ஸ்ரீ ஈஸ்வரன் தம்மை ஸ்ரீ பரம பதத்திலே கொடு போகையிலே த்வரிக்கிற படியை கண்டு
இவர்களுக்கு இது ஓன்று குறை பட்டு கிடக்க ஒண்ணாது என்று பார்த்து
தம்முடைய பரம கிருபையாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றுகையாலும் இவர்களுக்கு ஸூக்ரஹமாக வேணும் என்று பாசுரப் பரப்பு அறச் சுருக்கத்திலே
பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படியை சம்சாரிகளுக்கு உபதேசித்து பரோபதேசத்தை நிகமிக்கிற
கண்ணன் கழலிணையில் அர்த்தத்தை-கண்ணன் அடி இணையாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————————

கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்–95-

————————————————————-

வியாக்யானம்–

கண்ணன் அடி இணையில்-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே

காதல் உறுவார் செயலை –
பக்தி உக்தராய் இருப்பார்-க்ருத்யத்தை –

திண்ணமுறவே –
த்ருடமாகவே-அதிலே-ஊன்றும்படி-

சுருங்கச் செப்பியே –
சங்க்ரஹமாக அருளிச் செய்து
யே -ஈற்றசை –

மண்ணவர்க்குத் –
பிருத்வியில் யுண்டான-சர்வாத்மாக்களுக்கும் –

தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் –
ஸ்ரீ பிராட்டி-விதித-சுந்தர 21-25- -இத்யாதி யாலே பரோபதேசத்தை முடித்தால் போலே
கீழே உபதேசித்துக் கொடு போந்த-பரோபதேசத்தை பரி சமாப்தி பண்ணி அருளினார்-பெரு மதிப்பரான ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ பகவத் பிரபாவம் ஸ்ரீ சீதை பிராட்டி சொல்லி நிகமிக்க பிராட்டி பாகவத பிரபாவம் சொல்லி இவர் நிகமிக்கிறார் –

ஆன புகழ் சேர் தன்னருள் –
ஸ்லாக்கியமான யசஸ் உடன் கூடின-தம்முடைய பரம கிருபையாலே-பரோபதேசத்தை தலைக் கட்டி அருளினார் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -பிராட்டி ஆழ்வார் உடைய ஒரே க்ருத்யம்

ஆன புகழ்
உலகத்தார் புகழும் புகழ்

தன்னருள்
அருள் கொண்டாடும்படியான அருள்-

கண்ணன் அடி இணையில்
காதல் உறுவார் செயலை-சுருங்கச் செப்புகை யாவது –
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்-எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்றும்
நாரணன் எம்மான் -என்றும்
கோள் வாய் அரவணையான் தாள் வாய் மலரிட்டு-நாள்வாய் நாடீரே -என்றும்
நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு-பாடீர் அவன் நாமம் -என்றும்
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்-பேயார் முலை யுண்ட வாயான் மாதவனே -என்றும்
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -என்றும்
பேரார் ஓதுவார் ஆரார் அமரரே -என்றும்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே -என்றும்
இப்படி-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தை சப்தார்த்தங்களை சுருக்கி- ஸ்ரீ மாதவன் -என்று த்வயமாக்கி-
கரண த்ரய பிரயோஜன வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்தபடி -என்கை-

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: