பகவத் விஷயம் காலஷேபம் -183- திருவாய்மொழி – -10-4-1….10-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

சார்வே -பிரவேசம் –

தம்மைப் பிரிய நினைவு இன்றிக்கே இருந்த ஐயத்தாலே-பிரிந்தார் படும் துன்பத்தினைப் பட்டு-அதனாலே மயக்கம் உற்றவரை –
உம்மை ஒரு நாளும் பிரியேன் -என்று அவன் தெளியச் செய்ய–செங்கனி வாய் -அதனாலே தரித்து மிகவும் ப்ரீதர் ஆனார் மேல் –

எம்பெருமானார் நிர்வாகம்
முதல் திருவாய் மொழியிலே -1-1-பரம் பொருள் விஷயமாகச் சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி யற்றது –
இனி அந்த பொருள் தானே அடியைக் கூடியதாய் இருக்கும் அன்றோ –ப்ராப்யமாய் -அமரரர்கள் அதிபதி –
அடியைக் கூடியதான அந்த பரம் பொருளின் தன்மையையும்-அடைவதன் பலமான கைங்கர்யத்தையும்-தொழுது ஏழு –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும்-கடைத்தலை சீய்க்கப் பெற்றால் -என்றும்-
அருளிச் செய்தார் -கெடும் இடராய வெல்லாம் -என்ற திருவாய் மொழியிலே –10-2-
அடையக் கூடியதான அப்பொருள் அப்போதே கை புகுரப் பெறாமையாலும்-நெடுநாள் படப் பிரிந்து போந்த வாசனையாலும்
வெருவி இவர் துன்பம் உற்றவராக-இவருக்கு பிரசாங்கிகமாக பிறந்த துன்பத்தினை நினைத்து-
அவனும் தெளிவிக்க தெளிந்தவராய் நின்றார் – வேய் மரு தோளிணை-என்ற திருவாய் மொழியிலே-10-3-

ஆக முதல் திருவாய் மொழியிலே பரம் பொருள் விஷயமாக சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி-
அப்பறம் பொருள் தானே அடியைக் கூடிய பேறாக-ப்ராப்யமாய்- இருக்கையாலே-
அப்பேற்றினைப் பெறுதற்கு உபாயமான பக்தி யோகத்தை வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியிலே சொல்லி
அந்த பக்தி மான்களுக்கு அவன் சுலபனாய் இருக்கும் தன்மையை பத்துடை அடியவர்க்கு -1-3–என்கிற திருவாய் மொழியாலே சொல்லி-
சாத்ய பக்தி -உபாயமாக சொல்லுவது எதனால் –
பிரபத்திக்கு முன்பே பக்தி வேண்டுமே -பரம்பரையா உபாயம் -பரம பிராப்யம் என்கிற ஆசை வர பக்தி வேண்டுமே –
பக்தி அதன் சாத்தியமான பிரபத்தி உடன் பொருந்தி -அது பின் பக்தி உடன் பொருந்தி
பின் சாத்தியமான பிராப்யத்துடன் பொருந்தியதை சொன்னவாறு –
ஆக-வீடுமுன் முற்றத்திலும் பத்துடை அடியவரிலும் சொன்ன பத்தியானது அதன் பலத்தோடு
பொருந்தின படியைச் சொல்லி -தாமோதரன் தாள்கள் தவ நெறிக்குச் சார்வே –10-4-
அத் திரு வாய் மொழிகளிலே பத்தியை வளர்ப்பனவாகச் சொன்ன குணங்களை ஆதரித்துக் கொண்டு –
-உரலினோடு இணைந்து இருந்து -என்றதனை தாமோதரன் என்றும்
புயல் கரு நிறத்தனன் -என்றதனை கார் மேக வண்ணன் என்றும்
அடியவர்க்கு எளியவன் -எளிவரும் இயல்வினன் -என்றதனை சார்வே -என்றும்
பிறர்களுக்கு அறிய வித்தகன் -என்றதனை காண்டற்கு அருமையனே -என்றும்
அமைவுடை முதல் கெடல் -என்றதனை -பெருமையனே வானத்து இமையோர்க்கும் -என்றும்
மலர் மகள் உறையும் -என்றதனை திரு மெய் உறைகின்ற -என்றும்
தாம் தம்முடைய பேற்றுக்கு உபாயமாக-முதல் திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியோடு -அருளினன் -தலைக் கட்டுகிறார் இதில் –

பண்டே பரமன் பனித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் -என்று-
சாத்ய பக்தி பிரபத்தி என்கிற -இவ்விரண்டு கோடியும் இவருக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்-
தம்முடைய பேற்றுக்கு உடலாக இவர் நினைத்து இருப்பது பிரபத்தியே யாம்
முதல் திருவாய் மொழியில் பிரபத்தியைக் காட்ட சொல் உண்டோ என்னில்-அருளினன் -என்றாரே அன்றோ –
அதுவும் அவனது இன்னருளே -9-7-6- என்றபடி –
இனித் தான் இவருடைய பக்தி வேதாந்தங்களில் கூறப் படுகிற பக்தி அன்று-அது சாதன பக்தி அன்றோ –
வேதாங்களில் கூறப் படும் பக்தியாகக் கொள்ளும் இடத்து-அப சூத்ர அதிகரண நியாயத்துக்கு விரோதம் உண்டாகும்-
அது தான் இவ் வாழ்வார் உடைய பிரபாவத்தோடு கூடாதோ என்னில் –அது இவரோடு பாசுரங்களோடு முரண்படும்-
அருளினன் -என்று இப்புடைகளில் அன்றோ இவருடைய பாசுரங்கள்-
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய -ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி-
ஆத்மசித்தி-கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட-
மனத்தினை உடையவனுக்கு உண்டாகும் பக்தி யோகம் ஒன்றினாலே அடையத் தக்கவன் இறைவன் -என்கிறபடியே
ஞான கர்மங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட மனத்தினை உடையவனுக்கு-பிறக்குமது அன்றோ பக்தி யாகிறது –
அந்த ஞான கர்மங்களிடத்து இறைவனுடைய திருவருள் நிற்க-அதற்புப் பின் உண்டான பரபக்தி தொடங்கி பிறந்ததே இருக்கும் இவருக்கு –
இனித் தான் இவர் வழியே போய் இவருடைய பேறே பேறாக-நினைத்து இருந்த ஸ்ரீ பாஷ்யகாரரும்
பிரபத்தியைப் பண்ணி-பின்னர் பக்தி தொடங்கி வேண்டிக் கொண்டார் அன்றோ –
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -இதுவே ஸ்வரூபம் பிராப்தம் -பக்தி ஸ்வரூப விரோதம் என்றவாறு –
அவன் உபாயம் ஆனாலும் – இவனுக்கு ருசி உண்டாய் – பேற்றினைப் பெற வேண்டுமே-இல்லையாகில் புருஷார்த்தம் ஆகாதே –
அவனே சாத்ய உபாயம் என்றாலும் – ருசி வளர்ந்தால் தான் – பிராப்பிய சித்தி -இது அதிகாரி ஆக்குவதற்கு –
பெறுகிற பேறு இன்னது என்று அறுதி இட்டு- அந்த பேற்றிலே ருசி கண் அழிவு அற-உடையவனுக்கு அன்றோ – அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது –
பெறுகிற பேறு இன்னது என்று அறுதி இட்டு- பிரபத்திக்கு முன் பக்தி
அந்த பேற்றிலே ருசி கண் அழிவு அற-உடையவனுக்கு -பிரபத்திக்கு பின் பக்தி
இரண்டும் இருந்தால் தான் அன்றோ – – அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது –
ஆகையால் இவருடைய பக்தி பிரபத்திகள் மாறாடலாம் படி அன்றோ இருப்பன –
ஆக
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியிலும்-பத்துடை அடியவர் -என்ற திருவாய் மொழியிலும் பிறருக்கு உபதேசித்த பக்தி-
தம்முடைய பேற்றுக்கு உடலாய் இருந்தபடியைச் சொல்லி –இது தான் பலத்தோடு சேர்ந்த படியைச் சொல்லி முடிக்கிறார் இதில் –10-4-

நன்று -பிறருக்கு உபதேசித்த இந்த பக்தி யானது பலத்தோடு சேர்ந்து இருப்பது-இறைவனை நேரே கண்டு அனுபவித்தாலே அன்றோ -என்னில் –
கண்கூடாகக் காண்பது போன்று தோற்றாமல்-கண் கூடாக காண்பதாகவே தோற்றுகிற மனத்தின்-அனுபவம் அமையும் அன்றோ இப்போது –
ஸ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபஸ்சிதா-
சர்வஞ்ஞன் உடன் சேர்ந்து முக்தன் அனுபவிக்கிறான் எல்லா குணங்களையும் என்றபடியே-குணங்கள் அனுபவிக்கத் தக்கன ஆனால்
அக் குணங்களோடு கூடியதாக இங்கே இருந்து வணங்குகிறானே அன்றோ
ஆக வணங்குகிற வேளையிலும் அது இருக்கும்படியை நினைக்க தட்டு இல்லை -என்க
ஆனால் மேலும் எல்லாம் கண் கூடாக காணுதலைப் போன்று-மனத்தினால் கண்டு அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ –
கண்ணனை நான் கண்டேனே
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து-சொல்லிக் கொண்டு போந்தது -என்னில்
அவற்றைப் பற்றி -ஒவ் ஒரு குணத்தைப் பற்றி -பிறந்தன சில ரச விசேடங்களை சொன்ன இத்தனை யேயாம் அவ்விடங்களில்
தொடங்கின பொருளை முடிக்கை என்பதும் ஓன்று உண்டே-அதனைச் சொல்லுகிறது இங்கே-
முனியே -அணித்தாகையாலே மானஸ அனுபவம் பூரணமாக இருக்குமே –
மேலே அருளியவை எம்பெருமானார் நிர்வாகம் –

இங்கன் அன்றிக்கே -நீ பசு மேய்க்கப் போக வேண்டா -என்கிறாள்-ஆகில் தவிர்ந்தேன் -என்றான் –
இவனைப் போன்ற சுலபன் இலன் காண் -இவன் பக்தியினால் அடையத் தக்கவன் என்னும் இடம் உறுதி -என்கிறாள்-
-என்று ஒரு உருவிலே பணிப்பர் பிள்ளான் –

இனி ஆளவந்தார் நிர்வாஹம் ஒன்றும் அருளுகிறார் அடுத்து –
முதல் திருவாய் மொழியிலே-1-1- பெறக் கூடிய பேற்றினை அருளிச் செய்தார்-
அந்த பேற்றினை அடைவதற்கு வேதாந்தங்களில் பக்தி என்றும் பிரபத்தி என்றும் இரண்டு வழிகள் விதிக்கப் பட்டன –
அவை இரண்டிலும் பக்தி முதல் மூன்று வருணத்தவர்களே செய்யத் தக்கது-பிரபத்தி எல்லாராலும் செய்யத் தக்கது-
அவற்றில் எல்லாராலும் செய்யத் தக்கதாய்-தாம் தம் திரு உள்ளத்தாலே தமக்கு உபாயமாக ஏற்றுக் கொண்ட பிரபத்தியை-
வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியிலே அருளிச் செய்தார்-
முதல் மூன்று வர்ணத்தவர் உடைய சாதன பக்தியை -பத்துடை அடியவர்க்கு -1-3–திருவாய் மொழியில் அருளிச் செய்தார்-
ஆக இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்த-பக்தி பிரபத்திகள் தம் பலத்தோடு-பொருந்தின படியை அருளிச் செய்கிறார் –
சார்வே தவ நெறி -10-4-–/ கண்ணன் கழலிணை -10-5-–/ என்னும் இரண்டு திருவாய் மொழிகளாலும் –
அவற்றுள் சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியில்-பிரபத்தி அதற்கு உரிய பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார்-

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்று –தவம் -என்னும் சொல்லால் பிரபத்தியைச் சொல்லுகிறது –
தஸ்மாத் ந்யாசம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹூ -தைத்ரிய உபநிஷத்-தவங்களில் மிக்க தவமாக சொல்லிற்றே அன்றோ பிரபத்தியை –
பண்டே பரமன் பணித்த பணி வகையே-கண்டேன் கமல மலர்ப்பாதம் -காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின எல்லாம்-என்றும் –
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றான் -என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா சுச -என்ற-அர்த்தத்தை அருளிச் செய்தார்

இனி ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமலை ஆண்டான் பணிப்பது -ஆவது –
பிரபத்தி விஷயமாக ஆயிற்று -வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழி –
ஸ்ரீ பாஷ்ய காரரும் அப்படியே பிரபத்தி விஷயமாக அருளிக் கொடு போந்து-ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்த பின்பு
இரகசிய உபாயத்தை வெளி இட ஒண்ணாது என்று
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியையும் பக்தி விஷயமாக அருளிச் செய்தார்-

ஆக
முதல் திருவாய் மொழியில் -1-1-சொன்ன பரம்பொருளின் ஸ்வரூபத்தையும்-
அதனைக் காண்பதற்கு பலமான கைங்கர்யத்தையும்
கெடும் இடராய -என்கிற திருவாய் மொழியிலே-10-2-
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும் –
கடைத் தலை சீய்க்கப் பெற்றால் -என்றும் அருளிச் செய்து –
உன் தன் திரு உள்ளமிடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்-என்று-அக் கைங்கர்யத்திலே களை பறித்து
அதாவது-த்வய மகா மந்த்ரத்தில் பின் வாக்கியத்தில் -நம -அர்த்தம் அருளிச் செய்து –
கெடும் இடராய -10-2–என்னும் திருவாய் மொழியாலும்–வேய் மரு தோளிணை -10-3–என்னும் திருவாய் மொழியாலும்
முதல் திருவாய் மொழியில் -1-1-சொன்ன பொருளை முடித்து-
சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியாலும்-10-4-/கண்ணன் கழலிணை -என்கிற திருவாய் மொழியாலும்-10-5-
வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியாலும் /பத்துடை அடியவர் -1-3–என்ற திருவாய் மொழியாலும்-சொன்ன -பக்தி -பிரபத்திகள் –
அதன் அதன் பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார் என்று -ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலை ஆண்டான் பணிப்பார் –

10-4-சாத்ய பக்தி சொல்லப்பட்டது -எம்பெருமானார் நிர்வாகம் -1-2- போலே -10-3- பிராசங்கிகம் –
பிரபத்தி பரம் -1-2- ஆளவந்தார் -பத்துடை அடியவர் 1-3-சாதன பக்தி பரம் –
-சார்வே தவ நெறி பிரபத்தி -பரம்-கண்ணன் கழலிணை பக்தி பரம் –
பிரபதிக்கு முன்னும் பின்னும் பக்தி வேணுமே -ப்ரேமம் வேணும் அவனை சரண் அடைய –
-உபாய பாவனையில் கண் வைக்காமல் கைங்கர்யம் -ப்ராப்ய ருசிக்கு பக்தி வேண்டுமே –
ஸ்தான த்ரயோ பக்தி -சாத்ய பக்தி -சாத்யத்துடன் சேர்ப்பிக்கும் பக்தி பிரார்த்தித்து பெற்றார் -எம்பெருமானார் –
உயர்வற உயர்நலம் -தத்வம் -ப்ராப்யம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -பரத்வம்
அருளினன் -ஹிதம் -உபாயம் –
தொழுது ஏழு -புருஷார்த்தம் -வழி ஆகுமோ –
தொழுகை உபாயம் எழுகை உபேயம் என்றால் என்ன -தொழுகையே எழுகை -சாத்ய பக்தி அன்றோ -அதனால் அருளினன் சாதனம் –
மயர்வற மதி நலம் -பக்தி ரூபாபன்ன ஞானம் -தாரை போலே அனைத்து திருவாய்மொழிகளும் இதில் அடங்கும் –
உபாயம் இருந்தாலும் புருஷார்த்த பிரதான்யம் -முதல் திருவாய்மொழி –
கெடும் இடரில் -கைங்கர்ய பிரதி சம்பந்தி -கைங்கர்ய பிரதானம் இதில் -1-1-பரத்வம் -இருந்தாலும் -அங்கும் கைங்கர்ய பிரதி சம்பந்தி தானே –
அதனால் 1-1 /10-2- சேரும் என்றவாறு -அங்கே தொடங்கி இங்கே நிகமிக்கிறார் –

தாம் உபதேசித்த சாத்ய பக்தி -1-2- பிரபத்தியிலே மூட்ட -சேஷத்வ ஞானம் பரதந்த்ரன் புரிந்து -பிரபத்தி உபாயமாக தலைக் கட்டும் என்றபடி –
சாத்ய பக்தியையே பிரபத்தி என்னலாமோ என்னில்- இருவரும் பக்தி சாதனம் இல்லை என்பார்களே
பேற்றுக்கு உபாயமாக பிரபத்தியைப் பற்றி இருக்கிறார் என்பதுடன் சேராதே
சாத்ய பக்தி எதற்கு -என்றால் பிரபத்தியில் தூண்ட -மேலே ருசி வளரவும் பக்தி வேண்டும் –
அருளினன் -என்றது கர்ம ஞான யோக ஸ்தானங்களில் –
தவ நெறிக்கு சார்வு -சாத்யத்துடன் பொருந்தி பக்தி உபாயம் பலத்துடன் சேர்ந்தது என்றது பிரபத்தியில் மூட்ட என்றவாறு –
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய-ஆளவந்தார்
உபய கர்ம ஞான யோகம் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க –
அந்தக்கரணம் ஐ காந்திக பக்தி ஏக அந்த ஒன்றே முடிவு ஆத் யந்திக முடிவைத் தாண்டி யாவதாத்மா பாவி
பக்தியால் அடைய பெறலாம் -ஆத்மா இருக்கும் அளவும் பக்தி என்றால் -சாதனம் இல்லையே -பரம பாதம் சாத்ய பூமியிலும் உண்டே –
அனுபவம் தானே அங்கே -உபாய பாவம் வழி இல்லையே அங்கே கர்மம் தொலைத்த பின்பு
இங்கு விதி அற்ற படியால் கரு முக்கை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
அந்திம -சரம உபதேசம் -உபாய பாவம் மறந்து உபேய பாவத்தில் கண் வைக்க வேண்டும் உடையவர்
அருளினன் -என்றது கர்ம ஞான யோக ஸ்தானம் -பிரபன்னனுக்கும் அனுபவ த்துக்கும் கைங்கர்யத்துக்கும் -பக்தி வேண்டுமே –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -உபாய புத்தியை விட்டு -சாத்தியமாக ருசி வளர பண்ண வேண்டும் -ஸ்வயம் பிரயோஜன பக்தி —
கிருபையே உபாயம் உறுதி என்பதால் பிரபன்னர் -என்னலாம் -ஆர்த்தி மிகுதியைப் பார்த்தால் சாத்ய பக்தர் என்னலாம்-
கோபிகள் செய்வதை எல்லாம் பண்ணுகிறார் –
சாதன பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க பக்தன் பிரபத்தி அங்கமாக செய்து -இதுவே ஸ்ரீ கீதை யிலே சரம ஸ்லோக அர்த்தம் –
விபீஷணாதிகள் இராவணாதிகளுக்கு உபதேசிக்க அது பக்திக்கு உடலானது போலே வீடு மின் முற்றவும் -நமக்கு உபதேசித்து பக்தி வளர்ந்து பிரபத்தி
ராகவன் சரணம் கத -பல வாக்கியம் இருந்தாலும் ஒரே சரணா கதி -முன்பு எல்லாம் அறிவிப்பு –
சர்வ லோக சரண்யாய ராகவாயா சரணம் -உபதேசிக்க பக்தி வளர அது தானே பிரபத்திக்கு தூண்டு வித்து –
ராவணன் தள்ளி விட்டு அதனால் இல்லை -பிராவண்யம் வளர பிரபன்னன் ஆனான் போலே –
சாத்யம் உடன் சேர்வது பகவத் சாஷாத்காரம் –
ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் -பிரபத்தி அனுஷ்டித்தவனுக்கும் மூன்று அவஸ்தைகளும் உண்டே
கத்ய த்ரயத்தில் மூன்றையும் பிரார்த்தித்தார் -அது சாதன பக்தி இல்லை -ஸாத்ய பக்தி –
யாவதாத்மா பாவி -பக்தி வேண்டும் -பரம பக்தி -அங்கு -நிஜ சாஷாத்காரம் –
பிரத்யக்ஷ சாமானாக சாஷாத்காரம் -பாரா ஞான அவஸ்தையிலும் -ஆழ்வார் ப்ரத்யக்ஷமாகவே
-நீ போகேல் -சாஸ்திரம் -வரம்பு இல்லையே ஆழ்வார் உடைய பிரேம பக்திக்கு –
அங்கும் குண அனுபவம் -உபாசனத்திலும் குண அனுபவம் -பிராப்தி தசை போலே போக ரூபமாக இருக்குமோ எண்ணில்
ஆழ்வார் வேறு ஒன்றிலும் கண் வைக்காமல் சம்சாரம் நினைவில் இல்லாமல் உண்ணும் சோறு இத்யாதி
-பூவை பூம் –யாவையும் திருமால் திரு நாமமே என்று அன்றோ இருப்பார்
எதனால் இனி இனி என்று கதறுவதால் -பிராகிருதம் –
10-4 சாஷாத்கார நிலை -முன்பே இந்த நிலை இருந்தாலும் -அங்கு ஓர் ஓர் குணங்களை பற்றி –
இங்கு முனியே அணித்து-விசத தமமான அனுபவம் -இங்கு தானே பல அனுபவம் பூர்ணம் –
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -சாதன பக்தி உபதேசம் -ஆளவந்தார் நிர்வாகம் படி –
ஆழ்வார் பிரபன்னர் -சாதன பக்தியை உபதேசிக்கிறார் –
அவனாலே அவனை அடைந்து பாட வேண்டும் -காலம் போக்க பிரபன்னர்களாகிய நாம் பாடி ஆடி கழிப்போம் –

———————————————————————————————–

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

சர்வ ஸ்மாத் பரன் -போக்ய பூதன் -பக்தி லப்யன் -சார்வு பிராப்தி தவ நெறி -ஸாத்ய பக்தி
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்-உபய விபூதி நாதன் -தாமோதரன் -தத் ப்ரஹ்ம கசோர பாவம்
-பயந்து கண்ணை உருட்டி -வெண்ணெய் களவிலே -1-3-கட்டுண்டு பேர் பெற்ற -ஆஸ்ரித பவ்யன்
-வனக்குடை தவ நெறி பக்தி மார்க்கத்துக்கு பிராப்யமாக இருக்கும் -பிரபத்தியில் மூட்டும்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-காள மேக ஸ்யாமளன் -பரபாக திருக் கண் அழகு –
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்-அந்த அழகு மட்டும் இல்லை
-பஞ்ச பூதம் ஸமஸ்த -சரீராத்மா நிபந்தம் சாமா நாதி கரண்யம் -அந்தராத்மா தயா நின்ற
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே-அழகுக்கும் பிராப்திக்கும் ரக்ஷகத்வத்துக்கும் -திரு நாமங்கள் -ப்ரீதி உந்த அக்ரமமாக பிதற்றும் –

இரண்டு விபூதிகளையும் உடையவனாய் இருந்து வைத்து-அடியவர்கட்கு சுலபனாவன் உடைய
திருவடிகள் பக்தி மார்க்கத்தாலே அடையத் தக்கன –என்கிறார் –

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
தாமோதரன் தாள்கள் -தவ நெறிக்கு சார்வே –
பத்துடை அடியவர்க்கு எளியவன் –1-3-1-என்றும் –
எளிவரும் இயல்வினன் -1-3-2–என்றும்
சொல்லப் பட்ட அவன் திருவடிகள் சார்வு -என்கிறார் –
சார்வு -பேறு
தவ நெறி -என்றது பக்தி மார்க்கத்தை
மேலே வணக்குடைத் தவ நெறி -1-3-5- என்றார் இறே -அதனைச் சொல்லுகிறார் –
தவ நெறி என்ற அளவில் பக்தியை சொல்லிற்றாமோ -என்னில்
சத்தம் கீர்த்தயந்தோ மாம் யதந்தஸ்ஸ த்ருடவ்ரதா-நமஸ் யந்தஸ்ஸ மாம் பக்த்யா நித்யயுக்தா உபாசதே -ஸ்ரீ கீதை -9-14-
வணக்கத்தை அங்கமாய் உடைத்தாய் இருக்கும் அன்றோ பக்தி-
ஆகையால் இவன் ஒரு வணக்கத்தைச் செய்தால்-இவன் நம்மை நோக்கி குவாலாக வருந்தினான் -என்று-
இதனை பெரிய காய கிலேசமாக நினைத்து இருக்கும்-அவன்கருத்தால் சொல்லுகிறது –
வேங்கடத்து உறைவார்க்கு –நம-வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –
அங்கமான வணக்கத்தை இட்டு அங்கியான பக்தியைத் தவம் என்ற சொல்லால் சொல்கிறது –
அன்றிக்கே-யஸ் சர்வஞ்ஞ சர்வ வித் யஸ்ய ஞானம் அயம் தப -முண்டக உபநிஷத் -என்கிறபடியே
ஞான விசேஷமான பக்தியை தவம் என்று சொல்லிற்று ஆகவுமாம்

தாமோதரன் தாள்கள்-
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -என்றதனைச் சொல்லுகிறார் இங்கு-
யசோதை முதலாயினோர் கைகளிலே கட்டுண்டு தழும்பு சுமந்ததுவே திரு நாமமாக இருக்குமவன் அன்றோ –
யசோதை முதலாயினோர் கைகளிலே கட்டுண்பான் ஒருவன் ஆனபின்பு-வரத வலி த்ரய -பிரதம விபூஷணி வபூவ –
அவனை உகப்பார் அவன் காலைக் கட்டிக் கொள்ளும் இத்தனை அன்றோ –

இந்த திரு ஆபரணத்துக்கு நிகர் இல்லையே -சுலபத்துக்கு அன்றோ ஆபரணம் இது –
எப்படிப் பட்டவன் சுலபன்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-விலக்ஷணவிக்ரகம் -நீர் கொண்டு எழுந்த காள மேகம் –
பக்திக்கு கிருஷி பண்ண வேண்டாம் வந்து நின்றால் போதுமே
ருசிக்கு உத்பாதகமுமாய் –வளர்த்து பக்குவம் ஆனால் அனுபவிக்கவும் அந்த அழகே -பிராப்யம்
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி அன்றோ
கார் காலத்து மேகம்
கருத்த மேகம் என்னுதல்
புயல் கரு நிறத்தனன் -என்றத்தை
கமல நயனத்தன்-
அக வாயில் குண பிரகாசகம் திருக் கண்கள் காட்டும்
அனுக்ரகம் அடைய தோற்ற வாத்சல்யம் பிரகாசகம் அன்றோ திருக் கண்கள் -குற்றங்களையே குணமாக கொள்வான்
வடிவு அழகைக் கண்டு மேல் விழுகை அன்றிக்கே மேன்மையும் உண்டே -இதனாலும் மேல் விழ வேண்டும்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்-
விக்ரக வை லக்ஷண்யத்துக்கு மேலே -ஸ்வரூப வை லக்ஷண்யம் சொல்கிறது
யாவையும் யாவரும் தானாம் அமை உடை நாரணன் -பிரகார பிரகாரி பாவம் -அத்தையே இங்கு சொல்கிறது
பிருதிவி பஞ்ச பூதங்களை -சொல்லி காரணமான தேவாதி விஷயங்களையும் நினைக்கிறது -இத்தால் லீலா விபூதி உக்தன் என்றும்
கையும் திரு ஆழியும்—சொல்லி நித்ய விபூதியையும் சொல்லி –
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே-
பெருத்த வானவர்கள் பெருமை -இவ்வருகில் ஆக்கரான தேவர்கள் அன்றிக்கே பெரு மக்கள் -நித்ய ஸூரிகள்
பேர் திரு நாமம் -பிதற்றும்
ருசி உடையார் பிதற்றுவார்கள் அன்றோ
பிராப்யம் கை புகுந்து அவ்வருக்கு பட்டரும் பிதற்றுவார்கள் -பெருமை உடையவன் அன்றோ
அவராலே -எங்கும் உள்ளாரையும் பிதற்ற வைக்கும்
இப்படிப் பட்ட தாமோதரன் தாள்களே -சார்வே
நிச்சயம் -சங்கை இல்லை –

—————————————————————————————————-

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-

பரத்வாதி ஹேதுவான ஸ்ரீ யா பத்தி -சீலா திசயத்தாலே அடிமை கொண்டான் -ப்ரஹ்மாதிகளுக்கும் அவ்வாறுஇக்கான பெருமை
காண்டற்கருமையனே ஆகத் தணை யாதார்க்கு -நெஞ்சில் அநுஸந்தியாமல் இருப்பார்க்கு காண அரிய
என்றும் திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் -நித்ய வாசம் செய்யும் -மெய்யாக மெய்யில் உறையும் –
அத்தால் நிரதிசய ஐஸ்வர்யம் ஸூ சகம் -திரு வுக்கும் திருவாகிய தேவா தெய்வத்துக்கு அரசே -நீண்ட அப் பெரியவாய கண்கள் –
நாளும்-இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே-புண்ய பாப கர்மங்களை போக்கி இந்த விபூதியில் நாள் தோறும் அடிமை கொள்கிறான் –

சர்வேஸ்வரனாய்-திருமகள் கேள்வனாய்-இருந்து வைத்து-என் இருவினைகளைப் போக்கி –
என்னை இங்கே அடிமை கொள்ளா நின்றான் -என்று-மேலே கூறிய சௌலப்யம்-தமக்கு பலித்த படியை-அருளிச் செய்கிறார்-

பெருமையனே வானத்து இமையோர்க்கும் –
வானத்து இமையோர்க்கும் பெருமையனே –
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை அற நிலம் அதுவாம் அமைவுடை அமரர் -1-8-3-என்றதனைச் சொல்கிறது-
அல்லாதார் கீழே இருக்க -தாங்கள் மேலான லோகங்களில் இருக்கிறார்களாய்-
படைத்தல் முதலானவற்றுக்கும் தாங்களே கடவார்களாக நினைத்து தங்களைக் குவாலாக-
நினைத்து இருக்கும் பிரமன் முதலாயினார்க்கும் தன்னை அடைந்து ஸ்வரூபம் பெற வேண்டும்படியான பெருமையை உடையவன் –
அவ்வாசியே அவர்களுக்கு உள்ளது -என்பார் -வானத்து -என்கிறார் –இவ் உலக விவகாரத்தில் நம்மிலும் கனவியராய் இருப்பார்கள் –
நாம் பற்றின அளவே அன்றோ விட வேண்டுவது –அவர்கள் மூன்று உலகங்களையும் விட வேண்டுமே —

காண்டற்கருமையனே ஆகத் தணை யாதார்க்கு –
ஆகத்து அணையாதார்க்கு காண்டற்கு அருமையனே –
தானே வந்து மேல் விழா நின்றால்-விலக்குகிறவர்களுக்கு காண அரியனாய் இருக்கும் –
சம்பந்தம் இன்று தேட வேண்டா –பெற வேண்டும் என்கையும் வேண்டா என்கையும் அன்றோ உள்ளது-
அவனை பெறுவதற்கும் இழப்பதற்கும் –பிறர்களுக்கு அரிய வித்தகன் -என்றதனைச் சொல்லுகிறது –
நெற்றியைக் கொத்தி பார்த்தால் பசை காணா விடில் மீள்பவன் இல்லையே-
-என்றாவது வருவான் என்று அன்றோ நித்ய வாசம் உள்ளே கிடக்கிறான் –
என்றும் திரு மெய் யுறைகின்ற –
த்வயத்தில் நித்ய சம்பந்தத்தைச் சொல்லுகிறதே அன்றோ-மத் ப்ரத்யாயர்த்தம் –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன் -அன்றோ
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -என்றதனைச் சொல்லுகிறார்
–என்றும் ஒக்க பெரிய பிராட்டியார் வசிக்கின்ற திரு மேனியை உடையவன் –

செங்கண்-
அவளுடைய என்றும் உள்ள சேர்த்தியாலே நீர் பாய்ந்த-பயிர் போலே செவ்வி பெற்ற திருக் கண்களை உடையவன் –

மால் –
அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த்த தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம் வனே -ஆரண்ய -37-18
என்றபடியே வந்த பெருமையைச் சொல்கிறது-
அரும் பெறல் அடிகள் என்றாரே மேல் -அதனைச் சொல்லுகிறார் இங்கு –

நாளும் இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே –
இருமை வினை கடிந்து-நாளும்-இங்கு என்னை ஆள்கின்றானே –
நல்வினை தீவினைகளைப் போக்கி –இதனை விட்டு ஒரு தேச விசேடத்தில் போனால் கொள்ளக் கடவ அடிமையை
இந்த உலகத்திலே நாள் தோறும் கொள்ளா நின்றான் –
அங்குப் போனால் குண அனுபவத்தாலே ஆத்மாவை -சத்தையை-நிர்வகிக்கும்-
இங்கு குண ஞானத்தினால் தரிப்பியா நிற்கும் –

————————————————————————————————

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-

ஆர்த்தி ஹரத்வம் குணம் பத்தாம் பத்தில் -ருசிக்கு தன்னையே விஷயம் ஆக்கி அருளுகிறார் –
பத்துடை அடியவர்க்கு எளியவன் திருவாய் மொழி அர்த்தமே இதிலும் அருளிச் செய்கிறார்
நப்பின்னை பிராட்டி சேர்த்தியால் நிரதிசய அனுபாவ்யன் -கிருஷ்ணன் -திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன்
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்-ரக்ஷகன் அவன் -விரோதிகள் மறுவல் இடாதே
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –
கையும் திரு ஆழியுமாக விரோதிகளை –
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்-ஜென்ம பிரயுக்த -வாசனை ருசி கர்மம் இத்யாதிகளை
-கடிந்தோம் என்று சொல்லும் படி -சம்பந்தம் -நம்மாலும் பிறராலும் குறை உடையோம் அல்லோம்
-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -ரக்ஷணம் -குறை
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்-கூர்மை நெடுமை -வாள்-த்ருஷ்டாந்தம்
-குளிர்த்தி மிளிர்த்தி கெண்டை மீன் -த்ருஷ்டாந்தம் -இவை போலி யாம் படி வி லக்ஷணமான ஒண் -கண்கள்
மடப்பம் ஆத்ம குணங்களால் பூர்ணம் அபிமத நாயகன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே-பூஷணமாக அணிந்து கொண்டேன் -அபரோக்ஷித்து இது காறும் கேட்டே இருந்தேன் –
த்ரயீ வேதங்களால் – இப்படி இல்லை என்றே சொல்லும் நேதி நேதி-எம் ப்ரோஷம் –
-கட் கிலி- கண்ணுக்கு நேராக அப்ரோக்ஷித்து சேவை -தலை மேலே தரிக்கப் பெற்றேன்

மறுவல் இடாதபடி-பிறவிப் பிணியைப் போக்கி-நப்பின்னைப் பிராட்டிக்கு கேள்வன் ஆனவனுடைய
திருவடிகளை தலைக்கு அணியாகப் பெற்றேன் –என்கிறார்-

ஆள்கின்றான் ஆழியான் –
ஆசிலே வைத்த கையும் -தானுமாய்-பிறவிப் பிணியைப் போக்கி-அடிமை கொள்ளா நின்றான் -என்னுதல் –
அன்றிக்கே-வகுத்த ஈஸ்வரன் அடிமை கொள்ளா நின்றான் -என்னுதல் –ஸர்வேச்வரத்வ ஸூ சகம் -ஆழியான் —
பின்னையும் -சதநாந்தரம்-செய்த பின்னையும் – அவன் கை பார்த்து இருக்கும் வேண்டும் படி-
அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டங்களை -கர்மாதி உபாயாந்தரங்கள் -பூண் கட்டா நிற்பர் சிலர்-
கூர் அம்பன் அல்லால் குறை-மற்று இலை துணை -நெஞ்சே -குறை -ரக்ஷணம் -நான் முகன் திருவந்தாதி -8-என்ற அம்பின் கூர்மையையும்-
சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்-என்று திரு ஆழியில் கூர்மையையும் கொண்டு பெற இருப்பர் சிலர் –
ஆற்றல் இல்லாத தன்னாலே செய்யப் பட்ட கர்மங்களின் கூட்டத்தைப் பற்றி பற்றிப் பெற இருப்பர் சிலர்-
என்றும் உள்ள ஸ்வரூபத்தை உடைய சர்வஞ்ஞானான பராத்பரனைப் பற்றி பெற இருப்பர் சிலர் –
கர்மங்களின் கூட்டத்தை நெகிழச் சொல்லி-கெடுவாய் என்னை அன்றோ பற்ற அடுப்பது -என்றான் அன்றோ அவன் சரம ஸ்லோகத்தில் –
சாஸ்திர விஹித-சாதனாந்தரங்கள் -கார்ய சித்தியில் ஈஸ்வர அபேக்ஷையும் -ஸ்வரூப சித்தியில் சேதன அபேக்ஷையும் –
இவற்றை விட்டு அவனைப் பற்ற சரம ஸ்லோகம் அருளி

ஆரால் குறை உடையம் –
என்னாலே இழக்க வேண்டுதல் -இல்லை யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்கையாலே-
என்னால் இழக்க வேண்டுவது இல்லை -என்றபடி –
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை -அத்தையே பச்சையாகக் கொண்டு – வீடு செய்வதால் -என்னால் இழக்க வேண்டுவது இல்லை
எல்லாம் அவனே -ப்ரஹ்மாத்மகம் இல்லாத வஸ்து இல்லையே -ஆகாசாத் பதிதம் தோயத -சர்வ தேவதா நமஸ்காரம் கேசவன் கச்சதி –
ஆராயக் கூடிய யமன் முதலாயினார்க்கும் வந்து கிட்டலாதல் –
அவன் தன் அளவும் சென்றால் பின்னையும் ஒன்றைப்பார்த்து இருத்தல் செய்ய வெண்டும்படியாய்
இருப்பது ஒன்றனையோ நான் பற்றிற்று –கிருபையை பார்த்து இருத்தல் -பக்திக்கு பலப் பிரதானம் அவனே
ஆரால் -என்கிறார் காணும்-என்றும் ஒரு சேதனனாலே பேறு-என்று இருக்குமவர் ஆகையாலே
–எத்தால் -என்னாமல்-அசேதனம் -கர்மாதி உபாயாந்தரங்கள் கூடாதே –

மீள்கின்றதில்லை –
இனி மறுவல் இடுகிறது இல்லை —

பிறவித் துயர் கடிந்தோம் –
பிறவித் துன்பத்தினை ஓட்டினோம் -என்றது –பரம பதத்திலே புகச் செய்தேயும்- ருசி முன்னாக பேறு இல்லாமையாலே-
கடலில் புக்க துரும்பு போலே மீளப்போந்தார்களே அன்றோ-வைதிகனுடைய பிள்ளைகள் –
மயர்வற மதிநலம் அருளினன் -என்று ருசி முன்னாக – அவன் தரப் பெற இருக்கிற நமக்கு-மீண்டு வருதல் என்பது ஓன்று இல்லை என்றபடி –
தாளால் சகம் கொண்ட தார் அரங்கா பண்டு சாந்திபன் சொல்
கேளா கடல் புக்க சேயினை மீட்டதும் கேதமுடன்
மாளாப் பதம்புக்க மைந்தரை மீட்டதும் மாறு அலவே
மீளாப்பதம் புக்க பாலரை நீ அன்று மீட்டதற்கே -திருவரங்கத்து மாலை -72
கடிந்தோம் -என்கிறார் காணும் -இறந்த காலத்தில் திரு மேனி உடன் இருக்கச் செய்தேயும் –
அவன் செய்வானாக ஏறிட்டுக் கொண்ட கார்யத்துக்கு-நிலையாகப் பெற்றேன் -என்ன வேண்டும்படி இருக்கும் அன்றோ –
ஸ்தித அஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம்தவ -ஸ்ரீ கீதை -18-73-நஷ்டோகோ மோஹ – பிரசாததத்தால் இந்த நிலை பெற்றேன் என்றான் –

வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் –
அவனுடைய ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்ததாகில்-அடு குவளம் தடைபடும் போல் காணும்-
அடுகு -என்று பெட்டி மேல் பெட்டியாய்-வளம் -என்று இனிய பொருளாய்-போனகப் பெட்டி-
அடு குவளம்தடைப் படுதல் -நப்பின்னை பிராட்டி கடாஷம் பெறாமை-
இனி என்னால் தான் விடப் போமோ-அவனால் தான் விடப் போமோ-
என்னுடைய பாரதந்த்ர்யம் போலே -அடியாருக்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும் அவனுடைய-தன்மைக்கும் ஏதேனும் கண் அழிவு உண்டோ-
அவன் ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்ததாகில் தன் ஊணை இழக்கிறான்-
மண நோக்கம் உண்டவன் அன்றோ -பெரிய திருமொழி -8-10-1-அவன்-ஒளியை உடைத்தான கெண்டை போலே இளமையாய்-
வைத்த கண் வாங்காதே-கண்டு கொண்டு இருக்க வேண்டும் படியான அழகிய கண்களை உடையளாய்-
ஆத்ம குணங்களை உடையளான நப்பின்னை பிராட்டிக்கு கேள்வன் –

தாள் கண்டு கொண்டு –
காட்சிக்கு காரணம் சொல்லிற்றோ அன்றோ –

என் தலை மேல் புனைந்தேனே –
துயர் அறு சுடர் அடி தொழுது எழு -1-1-1-என்றும்-
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -92-2-என்றும்-
கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்றும்-சொல்லுகிறபடியே-
மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலே இருக்கிற இனிமை சொல்லுகிறது –
நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து -2-9-1-என்று வேண்டிக் கொண்ட அதனை-தலையாகப் பெற்று கிருதகிருத்யன் ஆனேன்
ஸ்ரேஷ்டமாக தலை மேல் பெற்று –

——————————————————————————————

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

ஆஸ்ரித ரக்ஷணம் ஸ்திரம் -நெஞ்சில் அமர்ந்து போகான் –
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்-திருவடிகளை தலை மேல்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க-அக்டி கட நா சமர்த்தன் -ரக்ஷகன் -கிடந்த திருக் கோலம் -ஒரே மார்க்கண்டேயர்
-நித்ய ஸூ ரிகள் தொடர்ந்து வந்து வணங்க -நின்ற திருக் கோலம் -நிறைய சேவார்த்தி வந்து சேவிக்கும் படி
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை-திரு வேங்கடத்தில் -நித்ய வாசம் செய்து அருளி -ஸ்வயம் பிரயோஜனமாக
-நெஞ்சுக்குள் பிரதிஷ்டித்தானாக -இருந்த திருக் கோலம் மூன்றும் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நெல் நெஞ்சே -மூன்றாவது நிலை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே-கதவு அடைத்து தள்ளினாலும் போக மாட்டானே –
இருக்கும் அவனை போனான் என்று அழுத்த ஆழ்வார் -இப்படி அன்றோ ஆச்வாஸப் படுத்தி மாற்றி –
உறுதி குலைக்க முடியாதே -நிச்சயித்து -அதனால் திருப்தியாக இருந்தேன் -கிருதக்ருத்யன் ஆனேன் –

என் மனத்தில் இருக்கிற சர்வேஸ்வரனை-ஒருவராலும் பிரிக்க ஒண்ணாது என்று-
அறுதி இட்டு அதனாலே-கிருதகிருத்யனாய் இருந்தேன்-என்கிறார் –

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் –
அமரர் சென்னிப் பூச் சூடப் பெற்றேன்-
வேண்டிக் கோடலே அன்றி அத் திருவடிகளை என் தலை மேலே வைத்துக் கொள்ளப் பெற்றேன் –

இவர் இப் பேறு பெருகைக்கு அவன் முயற்சி பண்ணின படி சொல்கிறது மேல்-
அவன் வண் தடத்தின் உள் கிடந்து-பெரிய திருமடல் -14-தவம் பண்ணிற்று-வண் தடம் -ஏகார்ணவம்-
கடலில் கிடந்து -கல் மேல் நின்று -உள்ளில் நின்று கோர மா தவம் செய்தனன் கொல்- –
ஆலின் இலைமேல் துயின்றான் –
தன்னைக் கொண்டு கார்யம் உடையார் சிலரைக் கண்டிலன் –
எல்லார்க்கும் ஆராய்ச்சி படும் படியான செயலைச் செய்வோம் -என்று பார்த்தான் –வேண்டா என்பாரைக் கண்டது இல்லை –

இமையோர் வணங்க மலைமேல் தான் நின்று –
அது பொறுத்தவாறே நித்ய சூரிகளும் தானுமாக வந்து திருமலையிலே நின்றான் –

என் மனத்துள் இருந்தானை –
அதுவும் பொறுத்தவாறே -இவர் உடைய மனத்திலே வந்து புகுந்தான் –இங்கு விலக்குவார் இல்லாமையாலே-
நிலை இயல் பொருள் போன்று இருந்தான் –
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்-மூன்றாம் திருவந்தாதி -76-காணும் இவர் நெஞ்சிலே புகுந்து இருந்தது
பனிக் கடலில் பள்ளி கோளை பழக விட்டு ஓடி வந்து-இவருடைய மனக் கடலில் வாழப் புக்கான் -பெரியாழ்வார் திருமொழி -5-4-9-

இப்படி இருந்தவனை –
நிலை பேர்க்கல் ஆகாமை –
இவன் போகைக்கு உறுப்பாக என்னால் ஆவன எல்லாம் செய்தேன்-அதற்கும் கேட்ப்பானாய் இருந்திலன் –

நிச்சித்து இருந்தேனே –
அச்சம் அடைகிறான் இல்லை -என்கிறபடியே இருந்தேன் –அவன் படியை நினைந்தால் இவன் அச்சம் அற்றவனாய் இருக்கத் தட்டில்லை அன்றோ-
ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதஸ்சன இதி -தைத்ரியம் -9-1-
தன் சோகம் மறு நனையும்படியான ஆனந்தம் இவன் பக்கலில் உண்டு என்று அறிந்தால்-பின்னை இவன் சோகம் போகைக்கு குறை இல்லை அன்றோ –
குதஸ்சன –
பின்னர் புத்தி பூர்வகமாக பண்ணின பாபத்துக்கும் அஞ்ச வேண்டா-
ஸஹிஷ்ணு -தேஷாம் ஆபி முக்யாத்-பராக் உத்தர சஞ்சித சகல கரணை ஸர்வதா -விதி நிஷேத -சாசன அதி லங்கன
சித்தி ஸூ அவஜஞ்ஞா நிந்தா தீநாம் சர்வ சகேன விஷயாவகாஞ்ச அபராத்தானாம் ஸஹிஷ்ணு பொறுத்து விடுகிறான் –

———————————————————————————————

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5-

அவன் சொல்லிக் கொடுக்க அன்றோ இவர் மெச்சுகிறார் -அனாசரிதற்கு துர்லபம்
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை-அறுதி இட்டு இருந்தேன்
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்-பரம போக்யம் -ரக்ஷகம் -திரு ஆழி-அசாதாரண ஸ்வாமி -விசேஷ ஸ்வாமி
-நெஞ்சில் இருக்கச் செய்தெ நான் அறியாத படி தான் அறிந்து பேசி ருசி வளர்த்து பாட வைத்து -மறைத்து -நாத முனிகளுக்கு வழங்கி அனைத்துக்கும் திட்டம் போட்டு பாரித்து -பவிஷ்ய கார விக்ரகம் கொடுத்து -நாம், அறிந்து கொண்டாடும் படி பாட வைத்து
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்-பிறர்க்கு இல்லை -ஏதோ இருப்பான் மற்றவர்கள் உள்ளத்தில்
-ஆஸ்ரிதற்கு மெய் அனாசரிதற்கு பொய்-செய்ய வல்லவன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே-ஆஸ்ரித சம்ச்லேஷ பூதன் -நமக்கு பரம பிராப்யமாக கொள்ளுவோம் –

அவன் என் திறத்தில் செய்ய நினைக்கிறவை-ஒருவருக்கும் அறிய நிலம் அன்று-என்கிறார்

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை –
என் நெஞ்சம் கழியாமை -நிச்சித்து இருந்தேன்-
நீரிலே கிடந்தும்-மலை உச்சியிலே நின்றும்-தன் பேறாக தவம் செய்து வந்து-என் நெஞ்சிலே இருக்கையாலே-
இனி ஒரு காலும் விட்டுப் போகான் என்று நிச்சயித்து இருந்தேன் –

கைச் சக்கரத்து அண்ணல் –
கையிலே திரு ஆழியை உடைய சர்வேஸ்வரன்-தன்னைப் பற்றினவர்களை ஒரு காலும் கை விடான் –
எப்போதும் கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87-என்னக் கடவது அன்றோ –

கள்வம் பெரிது உடையவன் –
மனத்தினைக் கை விடாமையே அன்றிக்கே-இங்கே இருந்து நாம் அறியாது இருக்க-
தான் அறிந்ததாகக் கொண்டு அவ்வருகே-குவாலைப் பாரியா நின்றான் -என்றது-
பரம பதத்து ஏறக் கொடு போக ஒருப்படுவது-அமானவனை இடுவித்து தீண்ட நினைப்பது-
மதி முக மடந்தையரை வரக் காட்டி எதிர் கொள்ளப் பார்ப்பதாய்-குவாலைப் பாரியா நின்றான் -என்றபடி –

இது தான் எல்லார்க்கும் பொதுவாகில் செய்வது என்-என்று அஞ்ச வேண்டா
மெச்சப் படான் பிறர்க்கு –
பிறருக்கு மெச்சப் படான் –
நான் தன் குணங்களைப் பேசிப் புகழ்வது போலே-பிறர் தன் குணங்களைப் பேசிப் புகழலாம் படி இரான் –
அவர்களுக்கு அடைய முடியாதவனாய் இருப்பான்-

மெய் போலும் பொய் வல்லன் –
அர்ஜுனன் முதலாயினோர் பக்கல் இருக்குமாறு போலேயோ-துரியோதனன் முதலாயினோர்கள் பக்கலிலும் இருப்பது –
கார்யத்தில் வந்தால் மெய் செய்வாரைப் போலே-பொய் செய்து தலைக் கட்டுவான் –

இது தான் நம் அளவிலும் ஏறின செய்வது என் -என்று அஞ்ச வேண்டா-
நச்சப் படும் நமக்கு –
நமக்கு நச்சப் படும்-உகவாதார் பக்கல் செய்யுமவற்றை நம் பக்கல் செய்யான்-

அதற்கு நம்பிக்கை என் -என்ன
நாகத்து அணையானே –
நம்மோடு வேறு பட்டவர்கள் பக்கல் செய்வது கொண்டு-நமக்கு கார்யம் என்-
நம்மோடு ஒத்தவர்கள் பக்கல் செய்தது அன்றோ நமக்கு எடுத்துக் காட்டு-அநந்யார்ஹத்வம் -சஜாதீயம் –
நம்முடைய பேற்றுக்கு அடியுமாய்-நம்மோடு ஒத்தவர்களும் ஆனாரோடு செய்யும்படி இது அன்றோ –

——————————————————————————————-

நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே-10-4-6-

நித்ய ஆஸ்ரிதர் -முமுஷுக்கள் -பிரயோஜ நாந்த பரர்கள் -மூவருக்கும் ஸுசீல்யம் -வாங்கப் பெற்றேன்
நாகத்து அணையானை -நித்ய கைங்கர்யம்
நாள்தோறும் ஞானத்தால்-சர்வ காலமும் மதி நலத்தால் பக்தி ரூபா பண்ண ஞானம்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை-முமுஷுக்களுக்கு நிரதிசய போக்யன் -உபகாரகன்
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்-பாகத்து வைத்தான்-பெரிய ஆகாசம் -சந்திரன் -தலையில் கொண்ட
-சந்த்ர சேகரன் -போக்த்ருத்வ உபாஸகத்வம் -ருத்ரன் -சடை சாதக வேஷம் -திரு மேனியில் வைத்த ஸூ சீலன்
தன் பாதம் பணிந்தேனே-திருவடிகளை பணிய பெற்றேன் -பாகத்து வைத்தான் தன் பாதம் -பாட பேதம்

இன்று வந்து பற்றுமவரையும்-எப்பொழுதும் தன்னைப் பற்றி நிற்கும்-
அவர்களைப் போலே அங்கீகரிக்கும் அவன்-திருவடிகளிலே செருக்கு அற்றவனாய் விழப் பெற்றேன்-என்கிறார்

நாகத்து அணையானை –
உகந்தாரை படுக்கையாக-கொள்ளுமவன் ஆயிற்று-
திருமேனி முழுவதும் ஆஸ்ரிதற்கு கொடுத்து இதிலும் மெய்யன் -அவர்களுக்கு ஏக தேசம் -பொய்யன் –

நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை –
ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு-நாள் தோறும் அருள் செய்யுமவன் ஆயிற்று-
ஞானம் -பக்தி-
இவனால் எப்போதும் நினைக்கப் போகாதே-
அக்குறை தீர-ஒரே தன்மையான தான் நாள் தோறும் அருள் செய்யும் ஆயிற்று-
நாகத்து அணையானை – ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு –நாள்தோறும்-அருள் செய்யும் அம்மானை –

மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப் பாகத்து வைத்தான் –
சுகத்தை அனுபவிப்பதில் முதன்மை பெற்றவன் என்று தோற்றும்படி-
சந்த்ரனை சூடித் தவ வேடத்திற்கு அறிகுறியான-சடையையும் உடையவனான சிவனுக்கு-திரு மேனியில் ஒரு பக்கத்தில் இடம் கொடுத்தவன் –

தன் பாதம் பணிந்தேனே –
அவனுடைய திருவடிகளை அடைந்தேன் –இனி எனக்கு ஒரு குறை உண்டோ –

———————————————————————————

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-

நிரதிசய போக்யமான விக்ரகம் உடையவன் -விரோதிகளை போக்கி -அடிமை கொள்ளுபவன் -சர்வாதிகன் -அனுபவிப்பாய் நெஞ்சே
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை-பராத்பரனை ப்ரஹ்மாதிகளுக்கும் பரன் நெஞ்சே நித்தியமாக பணிந்து அனுபவிக்கப் பார்
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் -ஜென்மம் போக்கி -சம்சார கிலேசம் கிட்டாமல்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்-நீல ரத்னம் நிறத்தில் -தேஜஸ் -மட்டும் எடுத்து கல்லாக்கி
-மதுவை நிரசித்தால் போலே அனுபவ விரோதிகளை போக்கி -அழகை அனுபவித்த ஸ்வாமி
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே-தனக்குத் தானே ஆபரணம் -ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமாக -உத்யோகம் உடையவன் –

நம் தடைகளை எல்லாம் தானேபோக்கி-அடிமை கொள்ளுமவனை-
நாள்தோறும் அனுபவி -என்று-தன் திரு உள்ளத்தை நோக்கி-அருளிச் செய்கிறார்

பணி நெஞ்சே நாளும் –
நெஞ்சே நாளும் பணி-
நாள் தோறும் அனுபவிக்கப் பார்-நல்ல வாய்ப்பாய் இருந்தது -அவனே மேல் விழுகையாலே-

பரம பரம்பரனை –
இந்த்ரன் முதலாயினர்கட்கும் முதல்வரான-பிரமன் முதலாயினர்கட்கும் முதல்வரான-நித்ய சூரிகளுக்கும் தலைவன் –சர்வேஸ்வரஸ்வரன் –

பிணி ஒன்றும் சாரா –
துன்பங்கள் ஒன்றும் நம்மைத் தீண்டாது –

பிறவி கெடுத்து ஆளும்-
அந்த துன்பங்களுக்கு அடியான பிறவியை-அடி வேரோடு போக்கி-
நம்மை நித்ய கைங்கர்யம் கொள்ளுமவன் –

மணி நின்ற சோதி –
பிறவியை உண்டாக்கினாலும்-விடும்படியாகவோ வடிவின் அழகு இருக்கிற படி-
நீல மணியின் ஒளியை வடிவாக வகுத்தால் போலே-இருக்கிற வடிவை உடையவன் –

மது சூதன் –
அவ் வடிவு அழகினை அனுபவிப்பார்க்கு-வரும் தடைகளை-
மதுவைப் போக்கினால் போல் தள்ளிக் கொடுக்குமவன் –

என் அம்மான் –
இப்படி என் துன்பங்கள் எல்லாம் போக்கி முகம் தந்தவன் –

அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே –
அனுபவிப்பார்க்கு விரோதிகளையும் போக்கி-திருக் கைக்குத் தானே ஆபரணமாய்-
அனுபவிப்பார்க்கு விரும்பத் தக்கதான-வடிவை உடைய திரு ஆழியைக் கையிலே உடையவன் -என்றது –
அனுபவத்துக்கும் தானேயாய்-விரோதிகளை அழிப்பதற்கும்-தானே யான கருவியை உடையவன் -என்றபடி –

——————————————————————————————————-

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

சர்வாதிகன் -சர்வ பிரகார ரக்ஷகன் -திருவடிகளை விஸ்மரியாமல் -மறக்காமல் நினைக்க வேண்டுமே -இதுவே வாழ்வு
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்-ரக்ஷகம் பரிகரம் -ஆழி கடல் கம்பீர ஸ்வ பாவம் உள்ள நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகே மேன்மை உடையவன்
கடல் போன்ற ஸ்வ பாவன் என்றுமாம் ஆழியான் –
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்-சம்ஹரிக்கும் காலத்தில் சதேவ ஏகம்-
காலத்தால் உப லஷிதமான சகல பதார்த்தங்கள் படைத்து ரஷித்து கோபாலன்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்-போக்யமான தோள்கள் கொண்டு குன்றம் எடுத்தவன் உடைய -திருவடிகளை
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்-மறவாமல் -அத்திரு அவனைப் பற்றும் இத்திரு இருவரைப் பற்றும்
வாழி -மங்களா சாசனம் இந்த வாழ்வு நித்தியமாக இருக்கட்டும் -வாழ்த்துதல் பிரார்த்தனை என்றுமாம்

அவனை அனுபவிப்பாய் என்றவாறே-உகந்த நெஞ்சினைக் கொண்டாடி-
அவனை இடைவிடாதே அனுபவி-என்கிறார்

ஆழியான் –
பரத்வ சின்னமான திரு ஆழியைக் கையிலே-உடையவன் –

ஆழி யமரர்க்கும் அப்பாலான் –
அத் திரு வாழி ஆழ்வானைப் போன்று-பெருமிதத்தை உடைய நித்ய சூரிகளுடைய
ஸ்வரூபம் ஸ்திதி-முதலானவைகள் தன் அதீனமாய் இருக்குமவன் –

ஊழியான் –
நித்ய சூரிகளும் தானுமாய் பரம பதத்தில்-பேர் ஒலக்கமாய் இருப்பவன் –
இங்கு உண்டான கார்யப் பொருள்களின் கூட்டம் அடங்கலும்-அழிந்து-
காலம் மாத்ரம்இருக்கும் காலத்திலேயே தான் வந்து தோற்றுமவன் –

ஊழி படைத்தான் –
காலத்தாலே அழிக்கப் பட்ட எல்லா பொருள்களையும்-பகுஸ்யாம் -சங்கல்பத்தாலே உண்டாக்கினவன் –

நிரை மேய்த்தான் –
இப்படி எல்லா பொருள்களையும் தான் படைத்து –தன்னை வேறு சிலர் படைத்தார்கள் -என்னலாம்படி-
வந்து அவதரித்து பசுக்களைகாப்பவன் -என்றது –
தங்களை காத்துக் கொள்வதில் சம்பந்தம் இன்றிக்கே-அவன் பண்ணும் பாதுகாவலை விலக்காத பசுக்களைக்-காத்தவன் -என்றவாறு –

பாழி யம் தோளால் வரை எடுத்தான் –
இவன் இவற்றை இப்படி நோக்கா நிற்க –
இந்த்ரன் பசியின் கொடுமையால் இவை நோவு படும் படியாக-கல் மழையினைப் பெய்விக்க-அதனை மலையை எடுத்து நோக்குமவன்-
பாழி -வலி-புறம்பு எங்கும் மழையினால் நோவு படா நிற்க-இவன் தோள் நிழலிலே ஒதுங்கினவர்களுக்கு-
மதிலுக்கு உள்ளே இருப்பாரைப் போலே-அச்சம் கெட்டு இருக்கலாம் படியான-வலியைச் சொல்கிறது -பாழி யம் தோள் -என்று-
அன்றிக்கே-பாழி -இடம் உடைமை ஆகலுமாம்-என்றது –ஐந்து லஷம் குடியில் உள்ளாறும் இவன் தோள்-நிழலிலே

ஒதுங்கினாலும் திரு ஆய்ப்பாடி அளவன்றிக்கே-இன்னமும் பத்து திரு ஆய்ப்பாடிக்கு இடம்-போரும் என்னும் படியான-
காக்கும் தன்மையின் துடிப்பு இருக்கும்படியைச் சொல்கிறது-என்றபடி-

பாஹூச் சாயம் அவஷ்டப்தோ யஸ்ய லோகோ மகாத்மான-அபக்ருஷ்ய ஆஸ்ரமபதான் ம்ருக ரூபேண ராகவம் -சுந்தர -14-31-
ஒதுங்கினவர்கள் குறைய நிற்க -நிழலே விஞ்சி இருக்கும் என்றவாறு-
அம் தோள் -அழகிய தோள்-
திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்று-
மங்களா சாசனம் செய்யும்படி யாயிற்று தோள் அழகு இருப்பது –சுந்தரத் தோள் -நாச்சியார் திருமொழி -9-1- அன்றோ –

பாதங்கள் –
கோவர்த்தன கிரியை எடுத்து துன்பத்தினை-போக்கினவனுடைய திருவடிகளை –
வாழி –
மேலே சொல்லப் புகுகிற அர்த்தத்தை நினைப்பதற்காக-நடுவே மங்களா சாசனம் செய்கிறார்-மனத்தினை –
யாம் ஒஷதீம் இவ ஆயுஷ்மன் அந்வேஷசி மகா வனே – ஆரண்யம் -67-15-
சீதையை அருமருந்து போலே பெரும்காட்டில் தேடி வருகிற-நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்களாக –என்னுமாறு போலே
உனக்கு இந்த நினைவு மாறாதே சென்றிடுக -என்கிறார் –
பத்ரம் தே -ஸ்ரீ ஜனகர் போலே –
ராவணனால் பிராட்டியும் என் பிராணனும் களவாடப் பட்டன -பெரிய கார்யம் சொல்லப் போவதற்கு முன்பு மங்களா சாசனம்
-இங்கும் மறவாது வாழ் கண்டாய் சொல்வதற்கு முன்பு வாழ் நெஞ்சே என்கிறார் –

என் நெஞ்சே –
புறம்பு எங்கும் ஆத்மாவுக்கு உரிமைப் பட்டுள்ள மனமானது-தாம் சுமை எடுத்தா நிற்க-
என் வழியிலே போந்து முறையிலே நிற்கிற மனமே -என்றது –
ஆத்மாவின் உறுப்புகளில் சேர்ந்ததான மனம் தானே பிறவிக்கு காரணமாய்-நின்றதே அன்றோ புறம்பு உள்ளார்க்கு –
அங்கன் அன்றிக்கே -என் வழியே போந்து -எனக்கு மோஷத்துக்கு காரணமான மனமே -என்றபடி –

மறவாது –
கை புகுந்தது என்னா-மற்றை விஷயங்களிலே செய்வுற்றைச் செய்யாதே காண்-

வாழ் கண்டாய் –
உன்னுடைய வாழ்ச்சிக்கு நான் கால் பிடிக்க வேண்டுகிறது என் –
பால் குடிக்க கால் பிடிக்கிறேனோ அன்றோ –

மறவாது வாழ் கண்டாய் என்கை யன்றோ உள்ளது –
மேலே கூறிய விசேஷணங்களுக்கு பயன் என் -என்னில்-
புறம்பு போய் மணலை முக்க ஒண்ணாதே-பாது காக்க வல்லானைப் பற்ற வேண்டுமே-
பாது காப்பதற்கு வேண்டிய சாதனங்களை உடையவன் பாது காப்பவனாக வேண்டுமே-
அநந்ய பிரயோஜனர்கள் ஸ்வரூபம் ஸ்திதி அனைத்தைக்கும் நிர்வாஹகன் ஆனவன்-பாது காக்குமவனாக வேண்டும் –
ஒருக்கால் உளனாவது இலனாவது ஆகா நிற்கிறவனுக்கு-என்றும் உளனானவன் பாதுகாக்க வேண்டுமே-
இவை இல்லாத அன்று உண்டாக்கினவன் பாதுகாக்குமவனாக வேண்டும்-
உண்டான அன்று பாது காப்பவன் ஆகைக்கு-தம்மை பாது காப்பதில் குறைய நின்றனவற்றையும் நோக்குமவன்-பாது காப்பவனாக வேண்டும்-
இருந்தபடியாமாகில் மறந்து காண் -உன்னாலே மறக்கப் போகாதே –

————————————————————————————————-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

உயிரான பாசுரம் -சரம ஸ்லோகம் படி இதனாலே பிரபத்தி சாதன பக்தி ஸாத்ய பக்தி மூன்று நிர்வாகங்கள் பார்த்தோம் –
தத்வ யாதாம்யாம் -ஆழ்ந்த உண்மைப் பொருள் –
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே-அபரோஷித்தேன் -திருவடிகள் பிரஸ்தாபம் சரம ஸ்லோகம் இல்லை என்றாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
மாம் -ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டன் என்றே கொள்ள வேண்டும்
மோக்ஷயிஷ்யாமி -சர்வ பாபேப்யோ -சொன்னதும் கைங்கர்யமும் உண்டே -த்வயத்தில் சொன்னதை சேர்த்துக் கொள்ள வேண்டுமே
ஞானம் பிறந்த அளவில் அனுபவ விரோதிகள் அஹங்காரம் மமக ஸமஸ்த துரிதங்களும் வாசனை ஒட்டாமல் ஒழிந்தனவே
எது முன்னால் -கண்டேன் –கண்டதும் -விண்டே ஒழிந்தன -அப்புறம் -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் என்பதால்
-பரம பக்தர்களுக்கு சாஸ்திர நியதி இல்லையே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்-கால விளம்பம் இல்லாமல் காண்டலுமே
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே போலே -நாரணர்க்கு ஆளாயினர் –
அசேஷ பாபங்களும் ஒழிந்தன –
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக-கைங்கர்யம் செய்தெ பொழுது போக்கு -கால ஷேபம்
பண்டே பரமன் பணித்த பணி வகையே-நிரதிசய பக்தி செய்து -பக்தி பவ்ய பாவனாத் தொண்டு
-நவ லக்ஷணம் -ஸ்ரவணம் –தாஸ்யம் இத்யாதி -சாதனம் ஆக்கினாள் தான் கைங்கர்யம் வேற பக்தி வேறு
சர்வ காலத்திலும் சேஷ வ்ருத்தி செய்து கொண்டு -சந்தை திரு உள்ளம் படி ஒழுக
அவன் அருளிச் செய்த மந்த்ர ரகசிய பிரகாரத்தில் -திரு மந்த்ரம் தொடக்கமான -சரம ஸ்லோகத்தில் –

அருளினான் – அதனால் –ஸாத்ய பக்தி -பெற்று -அதனால் பிரபத்தி -என்றும் நேராக பிரபத்தி என்றும் -பின்பு அவா பெருகி வழிந்து-
சுவீ க்ருத சித்த சாதனர்-சித்த வஸ்துவை சாதனமாக சுவீகாரம் பண்ணி
இத்தை -பக்தியை -மார்க்க மதியத்தில் பர ஞானம் -அங்கே பரமபக்தி
சாத்தியமாக இரக்க
பகவத் ப்ரஸாதத்தாலே சாத்தியமான
பிராப்திக்கு முன்னே சித்திக்கும் –
இத்தையே பகவத் ராமானுஜர் கத்யத்தில் அருளிச் செய்கிறார் –

ஜன்மாந்திர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-நாராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்னே பக்தி பிரஜாயதே –
பல ஆயிரக் கணக்கான பிறவிகளில்-செய்த கர்ம ஞான பக்தி என்னும் இவைகளால்-
அழிந்த பாபத்தை உடைய மனிதர்களுக்கு-கிருஷ்ண பக்தி உண்டாகிறது -என்கிறபடியே-
பல காலங்களில் சம்பாத்தித்த பக்தியாலே-அடையப் படுமவனை அவன் திருவருளாலே-காணப் பெற்றேன் -என்கிறார் –
இத் திருப் பாசுரத்தில் சொல்லப் படுகிற பிரபத்தியோடு-மாறாடும்படியாக இருக்கிற-பக்தியைச் சொல்லிக் கொண்டு போந்தார் மேல் –
அதற்கும் -ஸாத்ய பக்திக்கும் -அடி அவன் ஆகையாலே சொல்லுகிறார் ஆதல்-மயர்வற மதி நலம் அருள பெற்றார்-
-சாதனாந்தரங்களை விரும்பாமல் -அவனது அருளையே -சொல்லுகிறார் ஆதல் –
தாம் பெற்ற வழியே சொல்லுகிறார் ஆதல் –

கண்டேன் –
என்றும் கேட்டே போகக் கூடிய பொருளை-கண்களால் காணப் பெற்றேன் –
தன்னுடைய பிரபத்தி அதன் பலத்தோடு பொருந்தின படியை-
அதாவது-நேராக கண்ட படியையைச் சொல்கிறார்-
இதனால் புறக் கண்களால் கண்டது போன்று-ஞானக் கண்களால் கண்டபடியைச் சொன்னபடி –விசத தமமான மானஸ சாஷாத் காரம் –

கமல மலர்ப்பாதம் –
பெறுகிற பேறு வேண்டாதபடி-ஞான லாபமே அமையும்படி யாயிற்று-இனிமை இருக்கும் படி-

காண்டலுமே –
கண்ட அளவிலே –

விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-மாசுச -ஸ்ரீ கீதை -18-66-என்கிறபடியே-அவன் அடியாக வருகிறதே அன்றோ
வினை யாயின அடங்கலும் –
இவர் கேவலர் அல்லர் -அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்-
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி -ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –
பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –
பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் –
உயர்வற உயர் நலம் -உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –

தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக –
அந்த சரம ஸ்லோகத்துக்கு இதுவும் கருத்து -என்கிறார்-வந்தேறியான விரோதி யானது-கர்மங்கள் – போகக் கடவதே-
அன்றிக்கே –உபாயத்துக்கு பலத்தைக் கொடுக்கும் தன்மை உண்டே -என்னுதல்-
இனி அடிமை நிலை நின்றதே இருக்குமே-
அடிமை நிலை நின்றதாய் இருந்தால் -அவ் வடிமைக்கு தகுதியான தொண்டும்-நித்தியமாய் இருக்கும் என்பதும் அங்குப் போதருமே-
என்று அங்கு போதரும் பொருளையே இங்கே வாய் விடுகிறார்-
அடிமை நித்தியமான பின்பு அதற்குத் தக்கதான தொண்டும்-நித்யமாகச் செல்லும் படியாக-

பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் –
மாம் ஏகம் சரணம் விரஜ -என்கிறபடியாலே-நான் அவன் திருவடிகளைக் காணப் பெற்றேன்-

கண்டேன் கமலமலர்பதம் பண்டே பரமன் பணித்த வகை-
சரம ஸ்லோகம் வகையிலே கண்டேன்-
ஜன்மாந்த்ர நல் தவங்களாலே -ஆசார்ய ஹிருதயம்-

சரம ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி சொல்ல வில்லை -அநிஷ்ட நிவ்ருத்தி -உபாதி தொலைய இவை தன்னடையே கிட்டுமே-
கிணறு வெட்ட -தண்ணீர் -கிடைக்குமே -ஸ்வரூபம் நித்யம் -மறைந்து இருந்தது -ஸ்வரூப அனுரூப வ்ருத்தியும் கிட்டும் –
மம சஹஜ கைங்கர்யம் -பிரதி பந்தகங்கள் போனால் -தன்னடையே கிட்டும் -இது தான் சேஷத்வம் போலே இயற்க்கை –
ஸ்வயம் நிரபேஷம்-அவன் -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அடியேனும் பணி வகையே காணப் பெற்றேன் என்கிறார் –

—————————————————————————————————————

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-

கைங்கர்யம் செய்யும் வகை -யஜ தேவ பூஜை யஜ்ஞ்ஞம்-
பிரயோஜ நாந்த பரர்க்கும் ஆச்ரய பூதன் -அனன்யா பிரயோஜனர்க்கும் பிராப்யன்
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்-சாஸ்திரம் சொல்லிய படி -அபிமத சித்திக்கு -ஸ்ரீ யபதி தன்னை காலம் தோறும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்-
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்திக்குகள் தோறும் தேவர்கள் -சென்று வணங்கும் படி –
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே-ஸ்வ பாவன் -அநந்ய பிரயோஜனர்களுக்கு பிராப்யம்
-வந்து -அருளும் திருக் கமல பாதம் வந்து -த்வந்த பந்ததி -போட்டி போட்டு இரண்டும் -இணை -ஒலிக்கும்
-கண்டேன் கமல மலர்ப் பாதம் சொல்லும் படி -நிகர் அற்ற -அபாஸ்ரயம் தஞ்சம் புகல்

பிரயோஜனாந்தர பரர்களோடு-பக்திமான்களோடு-பிரபத்திமான்களோடு- -அமரர்கள் -தமர்கள் –
வேற்றுமை அற-அவனே உபாயம் -என்று-மேலே கூறியவற்றை எல்லாம்-முடிக்கிறார்-
கதி த்ரயஸ்ய மூலம் -ஐஸ்வர்யாதி கைவல்யார்த்தி பகவல் லாபார்த்தி மூவருக்கும் –

வகையால் மனம் ஒன்றி –
சாஸ்த்ரங்களில் சொல்லுகிற வழியே-மனம் ஒருமைப் பட்டு –

மாதவனை –
விதிகளை மீறுவதற்கும்-குறிக்கோள் இன்மைக்கும் அஞ்ச வேண்டா –
உலகத்தார் கூறும் பழி பாவங்களுக்கு அஞ்சி-இவன் செய்தவன எல்லாம் என் ஆவன –
அங்கனம் செய்தனவற்றுக்கும் பலம் இவனை வந்து கிட்டாது-
பக்திமானான இவன் வழி போராமையும்-மனம் ஒருப்படாமையும் இவன் தலையில்-
எறட்டுக் கை விடலாமோ -என்பாரும் அருகே உண்டு –
இதனால் அந்த சரம ஸ்லோகத்தில் லஷ்மி சம்பந்தமும்-சொல்லிற்று ஆயிற்று –
ஸ்வரூபத்தோடு கூடி இருக்கிற தர்மங்கள் சொல்லவுமாம்-சொல்லாது ஒழியவுமாம் –
ஆகையாலே அன்றோ த்வயத்தாலே பிரித்து நினைக்கவுமாய்-திரு மந்த்ரத்தாலே ஒன்றாக அனுசந்திக்க்கவுமாய் -இருக்கிறது –
அந்தர்க்கத குணாம் ஸ்வரூப அந்தர்ப்பூத குணாம்-தேவதாமேவ பஜதே -த்யாயதி-என்றபடி-
ஸ்வரூபத்தில் மறைந்து இருக்கிற குணங்களை உடைய தெய்வத்தையே வணங்குகிறான்-
அந்த தெய்வத்தின் ஸ்வரூபத்திலே பாபமின்மை முதலான குணங்களையும் சொல்லுகையாலே –

உபாசனம்
வேத யுக்த பிரகாரம்
ஏகாக்ர சித்தம் -ஏக அக்ர-மனசை வேறு ஒரு பாபம் வழி போகாமல் சர்வேஸ்வரன் இடம் வைத்து –
தமர்கள் -சரணாகதர்கள்
சரம ஸ்லோக யுக்த பிரகாரம்
சாதனாந்தரம் போகாமல் -விஷயாந்தரம் போகாமல் ஒருமைப் பட்டு -பிரயோஜனாந்தரம் கேட்டு போகாமல் இருக்க வேண்டும் –
இப்படி இருந்தான் ஆகிலும்
லோக அபவாதம் -புண்யம் பலம் மோக்ஷ விரோதி -பிராமாதிகமாக விஷயாந்தரம் சம்சர்க்கம் வருமே –
மாதவன் -பிள்ளையை -சின்ன சின்ன குற்றங்களை பொறுக்க அவள் உண்டே
இதனால் வகையால் -மனம் ஒன்றி -மாதவன் -என்கிறார் –
சத் வித்யை -ஸ்வரூபம் உபாஸிக்க
தகர வித்யை -குணம் உபாஸிக்க
அந்தர்க்கத குணாம் ஸ்வரூப அந்தர்ப்பூத குணாம்-தேவதாமேவ பஜதே -த்யாயதி-என்றபடி-
குண உப சம்ஹார பாதம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -குணக் கடல் அன்றோ –
ஸ்வரூபம் உபாஸிக்க- குணம் இல்லை – புத்தி ஆரோஹணத்துக்கு குணம் சொல்லிற்று என்பர் அத்வைதிகள் –
தகர வித்யையில் சொன்னவனே இவனும் -குணம் விட்டுப் பிரியாதே –
சோஸ்நுதே ஸர்வான் காமான் -குணங்கள் உடன் கூடிய ப்ரஹ்மம் அனுபாவ்யம் –
அதே போலே பற்றும் போது அவள் பிரியாமலும்-கைங்கர்யம் செய்வது மிதுனத்தில் –
ஆதலால் ஸ்பஷ்டமாக சொல்லா விடிலும் இவள் பிரியாமல் இருப்பாள் -அஹம் மாம் சப்தத்தில் ஸ்ரீ சம்பந்தமும் உண்டு என்றவாறு –

நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் திகை தோறு அமரர்கள் சென்று-இறைஞ்ச நின்ற தகையான் சரணம் –
கால வரையறை இல்லாமலே-ஆராதிப்பதற்கு உரிய பொருள்களுக்கும் வரையறை இல்லாமலே-
தங்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு-அக்ரமமாக சொல்லி -நீரால் சொல்லி தானே ஆரம்பித்து இருக்க வேண்டும் –
பெரிய திரு நாளுக்கு எல்லா திசைகளிலும் உள்ள மக்கள் வந்து ஏறுமாறு போலே-
பிரமன் முதலான தேவர்கள் வந்து அடையும் படியான தன்மையை உடையவனுடைய திருவடிகள் –

தமர்கட்கு ஓர் பற்றே –
ஓர் பற்று –
தன் திருவடிகளைப் பற்றினார்கட்கு பின்னையும் புறம்பு போய்-ஒரு பற்று தேட வேண்டாதபடியான பற்று-
அநந்ய பிரயோஜன பக்திமான்களுக்கும் பலத்தை கொடுப்பவனாய் உபாயமாய் இருக்கும்-
தன்னையே பற்றினார்க்கும் நேரே உபாயமாய் இருக்கும் –
தமர்கள் -பக்திமான்களையும் பிரபத்திமான்களையும் குறிக்கும்-

—————————————————————————————-

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-

பகவத் சரணாராவிந்தம் பலம்
பற்று என்று பற்றி பரம பரம்பரனை-சர்வ ஸ்மாத் பரன் -பிராப்ய பிராபகன்
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்-மல்லை யுத்தம் -முஷ்டிக சாணூரர்கள் -ஆஸ்ரித வ்யாமுக்தன் –
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்-சப்த சந்தர்ப்ப ரூபம்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே-தாமோதரனான கிருஷ்ணன் -சார்வே தாமோதரன் தாள்கள்
-உபக்ரமம் படியே -இரண்டும் அத்விதீயமான பிராப்யம் –

நிகமத்தில்-
இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு-கிருஷ்ணன் திருவடிகள்-சுலபமாம்-என்கிறார்

பற்று என்று பற்றி பரம பரம்பரனை மல் திண் தோள் மாலை –
பரம்பரனை-மல் திண் தோள் மாலை-பற்று என்று பற்றி-
பரம்பரனை -பிராப்யம்-
மல் திண் தோள் மாலை -பிராபகம்-
பிராப்ய பிராபகம் என்று பற்றி-

இவன் பிரபத்தியைச் செய்து-உறுதி உடையவனாய்-இருக்கும் அத்தனையே வேண்டுவது –
காப்பாற்றுவதில் அவன் இடத்தில் ஒரு குறையும் இல்லை –
இவர்கள் விரோதிகளைப் போக்குக்கைக்கு-தகுதியான மிடுக்கையும் அன்பையும்-
உடையவன் -என்பார் -மல் திண் தோள் மால் -என்கிறார் –

வழுதி வள நாடன் சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் கற்றார்க்கு –
பாட்யே கேயேச மதுரம் ப்ரமாணை த்ரிபி அந்விதம் -பால -4-3-
நீட்டி சுருக்கி மத்யமம் -மூன்று வகையான பிரமாணங்களோடு கூடினதாயும்-பாடத்திலும் கானத்திலும் இனிமை பொருந்தியதாயும் –என்கிறபடியே
அழகிய சொற்களால் தொடுக்கப்பட்ட-அந்தாதியான ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு-இந்தப் பத்தும் கற்றார்க்கு –

ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே –
தாமோதரன் தாள்கள் தவ நெறிக்கே சார்வே -என்கிறபடியே-
கிருஷ்ணன் திருவடிகளே –இனி அவ்வருகு போய் ஓன்று தேடித் பற்ற-வேண்டாதபடியான பற்றாகும்-
இதையும் பற்றி தாண்டி போய் மற்று ஒன்றைப் பற்ற வேண்டாம் -ஏவ காரம் –

————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஹரவ் பூர்வாம் உபதிஷ்ட உஜ்ஜீவனாயா
ஜெகதாம் பலயுதாம் அநு கம்பையா
பக்திம் நிஜகாதா ஸூ பலாமகஸ்ய
சுவார்த்தாத் பரார்த்த ஆஸக்தி –

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்ரீ மத் தாமோதரத்வாத் அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா
சக்ராதீஸ்யாத் வாத வட தள சயநாத் நாக ராஜா சயநாத்
வக்ஷஸ் பரிஷத் முகத்வா பரம புருஷதாய மாதவத்வாத் யோகாதி
துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –

1–ஸ்ரீ மத் தாமோதரத்வாத்–சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-

2–அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா–பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற் கருமையனே-

3–சக்ராதீஸ்யாத் வாத–ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம் மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்

4–வட தள சயநாத்–தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க

5–நாக ராஜா சயநாத்–மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே

6–வக்ஷஸ் பரிஷத் முகத்வா–நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை

7–பரம புருஷதாய -பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்-

8/9-மாதவத்வாத் யோகாதி–ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்–என்றும்
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–என்றும்

10-துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 94-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்
அடியில் உபதேசித்த பக்தி-ஸ்வசாத்தியமான பலத்தோடே தலைக் கட்டினபடியை அருளிச் செய்த
திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ்-ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாக-
ஸ்ரீ தாள தாமரையிலே பற்றி போக்கிலே ஒருப்பட்டவர் ஆகையாலே-
ஸ்ரீ உயர்வற உயர் நலத்தில்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாக அறுதி இட்ட ஸ்ரீ பரத்வமே பரம பிராப்யமாகையாகவே
அந்த பிராப்ய வேஷத்தையும்-
பிராப்ய பலமான கைங்கர்யத்தையும்- ஸ்ரீ கெடும் இடரிலே அனுசந்தித்து-
அந்த பிராப்ய வேஷத்தை பெறுகைக்கு உபாயமாக-
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும்—ஸ்ரீ பத்துடை அடியவரிலும் தொடங்கின-பக்தியானது ஸ்வ சாத்தியத்தோடே பொருந்தின படியை சொல்லி
தமக்கு உபாயமாக
முதல் ஸ்ரீ திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியையும்-சொல்லித் தலைக் கட்டுகிற
ஸ்ரீ சார்வே தவ நெறியில் அர்த்தத்தை–சார்வாகவே அடியில் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை –

————————————————-

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-

—————————————————–

வியாக்யானம்–

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான் –
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும் ஸ்ரீ பத்துடை அடியவரிலும் பரோபதேச ரூபேண எல்லாருக்கும் அபாஸ்ரயமாக அருளிச் செய்த
பிரபத்தி யோடு விகல்பிக்கலாம் படியான பக்தி யானது தான்
சரண்ய -என்றத்தை- சர்வ லோக சரண்யாய -என்றும்-
பாதயோஸ் சரணான் வேஷீ நிபபாத -என்றும்
சாஷாத் பலத்தோடே தலைக் கட்டினால் போலே –

இவரும் –
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்மினே -என்றும்
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்றும்
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்றும்
அம்பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்றும்
நன்றென நலம் செய்வது -என்றும்
இப்படி அருளிச் செய்த பக்தி மார்க்கம் ஆனது-சாத்தியமான பலத்தோடே பொருந்தின படியையும்

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்றும்
அருளினான் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்றும்
வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் -என்றும்
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்றும்
அடியே தொடங்கி அருளிச் செய்து போருகிற-பிரபத்தி-ஸ்வ சாத்தியத்தோடு-பொருந்தினப டியையும் –

பண்டே பரமன் பனித்த பணி வகையே-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாய வெல்லாம் -என்றும்-அருளிச் செய்து
மற்றும்
பக்தி-பிரபக்திக்கு-உக்தமான வற்றையும்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன் -என்றும்
திரு மெய் யுறைகின்ற செங்கண் மால் -என்றும்
மடப்பின்னை தன கேள்வன் தாள் கண்டு கொண்டு -என்றும்
தலை மேல் புனைந்தேனே -என்றும்
நச்சப்படும் நமக்கு -என்றும்
வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் -என்றும்-அருளிச் செய்தார் இறே-

ஏவம் விதமான வர்த்தங்களை –
சோராமல் கண்டுரைத்த மாறன் –
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

கழல் இணையே நாடோறும் –
இப்படி-சூஷ்ம அர்த்த தர்சியான ஸ்ரீ ஆழ்வார்-சேர்த்தி அழகை யுடைய திருவடிகளையே –

கண்டு உகக்கும் –
சேவித்து-ஹ்ருஷ்டமாம் –

என்னுடைய கண் –
மே திருஷ்டி -என்னும்படியான-என் கண்கள் –

ஸ்ரீ தாமோதரன் தாள் யுடைய-ஸ்தானத்திலே-இவர்க்கு-ஸ்ரீ மாறன் தாள்-ஆயிற்று –

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: