பகவத் விஷயம் காலஷேபம் -182- திருவாய்மொழி – -10-3-1….10-3-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

வேய் மரு தோள் -பிரவேசம் –

திரு வனந்த புரத்திலே புக்குப் பாரித்த படியே அடிமை செய்யப் பெறாமையாலே -அதி சங்கை ––ஐயப்பட வேண்டும்படியாய் வந்து விழுந்தது –
ஸ்ரீ வைஷ்ணவர்களும் தாமுமாய் அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்தார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்-காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்னுமவர் ஆகையாலே –
பாரித்த படியே அந்நகரிலே போய் புக்கு அடிமை செய்யப் பெற்றிலர் –
1-அந்நகரிலே அப்போதே சென்று சேரப் பெறாமையாலும்–
2-பாரித்த படி அடிமை செய்யப் பெறாமையாலும்-
-பல காலம் பிரிந்து போன வாசனையாலும் -திருவிருத்தம் -95-
3-தொன்று தொட்டு வருகின்ற சரீரத்தின் சேர்க்கையை நினைந்து அஞ்சின அச்சத்தாலும்-
4-சர்வேஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தை நினைந்து அஞ்சின படியாலும் -அதாவது –
சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்தும்-ஸ்ரீ பரத ஆழ்வான் வளைப்பு கிடக்க மறுத்து மீண்டு போரும்படியும் அன்றோ-ஸ்வா தந்த்ர்யம் இருப்பது -அதனாலும்
5-இனி–சர்வேஸ்வரன் தானே வந்து அங்கீ கரிக்கைக்கு ஈடான பக்தி தமக்கு இல்லை என்று இருக்கையாலும்
இன்னம் இவ் உலகில் வைக்கில் செய்வது என் -என்னும்-அச்சத்தாலே துன்புற்றவராய்
-தமக்குப் பிறந்த நிலை வேறுபாட்டினை-ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

காலைப் பூசல் –கீழும் மேலும் இரண்டு திருவாய் மொழிகளில் பர உபதேசம் –

அச்சம் நீங்குதற்கு உடலான இவை தாமே அன்றோ இப்போது-இவர்க்கு அச்சத்துக்கு காரணங்கள் ஆகின்றன –
1-இப்போதே அந்நகரிலே சென்று சேரப் பெற்றிலோம் -என்று இருக்க வேண்டா –
அவனை நினைந்தால் காலாழும் நெஞ்சழியும் -பெரிய திருவந்தாதி -34-என்கிறபடியே
பத்தியினால் பரவசப் பட்ட காரணத்தால் இப்போது அடி இட மாட்டாதே ஒழிகிறார் ஆகையாலே-
2-அடிமை செய்யப் பெற்றிலோம் என்று அஞ்ச வேண்டா –
புகழும் நல் ஒருவன்-என்கிற திருவாய் மொழியின் படியே
இருந்த இடத்தே இருந்து எதேனுமாக சொன்னவற்றையே-தனக்கு அடிமையாகக் கொள்ளும் தன்மையன் ஆகையாலே
இன்று நினைத்தவற்றையும் செய்தவற்றையும் எல்லாம் தனக்கு அடிமையாக-நினைத்து இருக்குமவன் அன்றோ அவன் –
3-இனித் தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணியன்-என்று வர நின்ற பிரகலாதன் அன்றோ-முடிவில் வந்து எதிர் இட்டான்-
ஆக-மயக்கம் கொண்டவனுக்கு பிறந்த தெளிவு போலே-இச் சரீரத்தோடு சேர்ந்து இருக்கிறவனுக்கு பிறக்கும் ஞானத்தினை நம்ப ஒண்ணாது என்றே அன்றோ
இவர் தாம் இச் சரீர சம்பந்தத்தை நினைந்து-தேறேல் என்னை -2-9-10-என்று அஞ்சிற்றும் –அங்கண் அஞ்ச வேண்டா –
முடியானே -என்ற திருவாய் மொழியிலே கூறப் பட்ட உறுப்புகளை உடையவர் ஆகையாலே-
4-அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தை நினைத்து அஞ்ச வேண்டா–சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-எல்லா பாபங்களில் நின்றும்
உன்னை விடுவிக்கிறேன்-நீ துக்கப் படாதே -என்கிறபடியே –பாபங்களைத் துண்டித்துக் கொண்டு போகைக்கும் உடலாய் இருக்கையாலே ..
5-பக்தி தமக்கு இல்லை என்று இருக்க வேண்டா -பிரபத்தியை உபாயமாக பற்றினவர் ஆகையாலே –
நாராயணாயா – ஏக நிஷ்டை யில் இருந்தால் எத்தை செய்தாலும் கைங்கர்யம் -யோ யோ ஜல்ப -ஜபம் -தது தியானம் —
பிரகலாதன் போலே இவருடைய கரணங்கள் பிராகிருத போகங்களில் இல்லையே –
நெடு நாள் பிரிந்து -போன வாசனை-முடியானே கரணங்கள் உடையவர் -பிரகிருதி சம்பந்தம் நினைத்து அஞ்ச வேண்டாம் என்பதை
அத்தால் வந்த பிரிவையும் கண்டு அஞ்ச வேண்டாம் என்றபடியும் ஆகுமே –

இனி –ச உத்தம புருஷ சதத்ரபர்யேதி ஜஷத் கிரீடன் ராமமான-
ஸ்த்ரீபிர்வா யானைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -சாந்தோக்யம் -8-12-3-என்கிறபடியே
இதனை நினையாதபடியான சாஷாத் காரம் இல்லாமல் படுத்துகிற பாடே அன்றோ இது –
நேரே கண்கூடாக காண்கிற காட்சியும் பயன் இல்லாததாய்-கூட இருக்கச் செய்தே பிரிந்தான் -என்று மயங்கும்படி
பிரிவால் வந்த வாசனை மேற்கொள்ளுகிறது அன்றோ-தகுதி கிடந்து படுத்துகிற பாடே அன்றோ-

கெடும் இடரில் பிரத்யக்ஷ சாமானாகாரம் கிட்டிற்றே -வைகுந்தம் கிட்டினால் போலே -என்றாரே -எதற்க்காக துன்பப பட வேண்டும்
பிரத்யக்ஷமும் அகிஞ்சித் கரமாய் கூட இருக்கச் செய்தே பிரிந்தான் என்று அதி சங்கை
பிரிந்தான் என்று இவள் உடம்பு மெலிய -அத்தைக் கண்டு அவனும் பிரிந்தோமோ என்று அவனும் நினைக்கும் படி
-இப்படி இருவரும் ஊமத்தங்காய் தின்றால் போலே மயங்கி
கலப்பார் பிரிவார் என்கிற வாசனை மேலிட –யோக்யதை கிடந்து படுத்தும் பாடு இது -சரீரம் இருப்பதால் -விஸ்லேஷ ஹேது அன்றோ சரீரம் –
அதி சங்கை பிராந்தி கார்யம் இல்லை -மயர்வற மதி நலம் அருள பெற்றதால் —

மயர்வற மதிநலம் அருளினன் – என்கிறபடியே-பகவானுடைய திருவருளால் கிடைத்ததாய்-
பரபக்தி ரூபமாய்-ருசி கார்யமாய்-இருக்கிற இருட்சி இருக்கிறபடி அன்றோ இது –
இனி ஈஸ்வரனுக்கு கால் நடையாடாதது ஒரு தேசத்தில்-இவரை வைத்து அதனைப் போக்கலாம் அத்தனை –
கலந்து பல நாள் பிரிந்து போந்தாள் ஒரு பிராட்டியாய்-அவ் வாசனையாலே
கிருஷ்ணன் கூடி இருக்கச் செய்தேயும் -நீ கண்ணா -என்கிறாள் இங்கே –
இவன் பண்டு பிரிந்து போந்த விடியில் காலமும் வந்து அக்காலத்துக்கு அடைத்த காற்றுக்கள் அடிக்கையாலும் -வாடை தூவ –
குயில்கள் கூவுகையாலும்-மயில்கள் ஆலிக்கையாலும்-காடு எங்கும் ஒக்க கன்றுகளும் பசுக்களும் பரக்கையாலும்-இக்காலத்தில் அவன் போகை தவிரான்
பசுக்களை ஒரு தலையாக காப்பாற்றுமவன் ஆகையாலே அவற்றை விட்டு நம்மோடு இருப்பான் ஒருவன் அல்லன் –
ஆனபின்பு அவன் போனான் -என்று-கூட இருக்கச் செய்தேயும் அவன் பிரிவினை நிச்சயித்து-
இன்னுயிர் சேவல்-மல்லிகை கமழ் தென்றல்-தொடக்கமான திருவாய் மொழிகளில்
அவன் முன்னம் இல்லாமையால் பட்ட துக்கம் முழுதினையும் அவன் கண் முகப்பே படுகிறாள்-
எல்லா வற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த-அவனாலும் போக்க ஒண்ணாதபடி ஆயிற்று இவ் வாபத்து-
அதாவது-போனானாய் வருகிறவன் அல்லன்-போக நினைத்தானாய் தவிருகிறவன் -அல்லனே -என்றபடி –

இப்படி நோவு பட்டு-நீ பசு மேய்க்கப் போதலை நிச்சயமாக தவிராய்-
நீ போதல் எனக்கு விருப்பம் இல்லாத கார்யம் ஆகையாலே உன் செலவினை விலக்க வேண்டும் என்று நினையா நின்றேன்-
இதற்கு நா நீர் வருகிறது இல்லை
அதற்கு மாற்றாக-உன் கையை என் தலையிலே வைக்க வேண்டும் –அணி மிகு தாமரைக் கையை –
நீபசு மேய்க்கப் போகாது ஒழிய வேண்டும்-வீவ நின் பசு நிரைமேய்க்கப் போக்கு –
தீங்கினை விளைக்கக் கூடிய காட்டில் நீ பசு மேய்க்கப் போனால் அங்குள்ள-அசுரர் இராக்கதர்கள் முதலியோர்களால் என் வருகிறதோ –
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் –என்று அஞ்சா நின்றேன் –என்கிறாள் –
அஞ்சன வண்ணனை -பெரியாழ்வார் திருமொழி –என் செய்யப் பிள்ளையை போக்கினேன் ஏ பாவமே -தாயார் பாசுரம் –
இனி-மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் சூக்ருத் கதி நாராயணா -சுபால உபநிஷத் -என்கிறபடியே
அவன் எல்லா வகையான உறவுமாய் இருப்பதைப்போன்று –
இத்தலைக்கும் சம்பந்த ஞானம் பிறந்தால் எல்லா பிரிவுகளும் உளவாய் இருக்கும் அன்றோ –அதனால் இவளும் தாய் போலே படுகிறாள் என்றவாறு –
யதா யதா ஹி கௌசல்யா தாசிவச்ச சகீவச-பார்யாவத் பைநீவச்ச மர்த்ருவச்ச உபநிஷ்டதே -அயோத்யா -18-68-
ஸ்ரீ கௌசல்யார் சகரவர்த்திக்கு-வேலைக்காரி தோழி மனைவி உடன் பிறந்தவள் தாய் ஆகிய இவர்களைப் போன்று இருந்தாரே -என்கிறபடியே –
ஆனபின்பு–நீ செல்லில் நான் உளளாக மாட்டேன் -என்று-இப்படி நோவுபட-அவனும் இவை முழுதினையும் நினைந்து -நான் போகிறேன் அல்லேன் -என்று
தன் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்தி தரிப்பிக்க-தரிப்பததாய் -செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு –தலைக் கட்டுகிறது -இத் திருவாய் மொழியில்-

இதனால்
திரு மந்த்ரத்தில் கூறிய அடிமைத் தன்மையின் எல்லை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி-
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அவனுக்கே உறுப்பாக பயன் கொடுக்கை -தானே அடிமைத் தனத்தின் எல்லை-
எம்மா வீடு -திருவாய் மொழியில்-தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்று அறுதி இட்டது ஓன்று உண்டே அன்றோ –
அதனை அழிக்கிறதாயிற்று இங்கு –என்னைக் கொள்ள வேண்டும் என்றே அன்றோ அங்குச் சொல்லிற்று-
என்னோடு கலக்கவுமாம்-வேறு சிலரோடு கலக்கவுமாம் –அங்குத்தைக்கு குறை தீரும் அத்தனை வேண்டுவது என்கிறது இங்கு-
அங்கு -எனக்கு என்ற இடம் புருஷார்த்தம் ஆகைக்கு சொன்ன இத்தனை அன்றோ –
உனக்கே நான் ஆட் செய்வோம்-அது அறிவில்லா பொருளின் வேறுபாட்டுக்கு உடலாம் இத்தனை-
இவன் தான் எனக்கு என்னாத அன்று புருஷார்த்தம் ஆகாது-அவன் தான் விரும்பி கார்யத்தை செய்யவும் தொடங்கான்-
உனக்கு நல்லவரோடும் உழி தந்து -உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் –
தாதார்த்தம் -அத்தலைக்கே உறுப்பாக -தாதர்த்த சதுர்த்தி லுப்த சதுர்த்தி -பகவான் பிரயோஜனம் பிரதானம் -எம்மா வீட்டிலும் இதுக்கு ஆதிக்யம் –

————————————————————————————–

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

பிரிய போகிறாய் என்னும் நினைவாலே -குயில் மயில் ஈடுபடுகிற என்னை -உன் கண் அழகைக் கொண்டும் நலிய –
வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ-விரஹம் பொறாமையால் -மூங்கில் -கலந்த பொழுது அழகாக இருந்தவை -மெலிய
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்-எனது மெலிவையையும் என் தனிமையும் –
நீ நோக்கா -மயில் குயில் நோக்க -உலகோர் நோக்கா -பிரியாமல் நீ இருந்து -உலகோர் சேர்ந்து வைக்க -ஆஸ்ரயம் சரீரம் மெலிய -பிரிவு ஆற்றாமை –
காமரு குயில்களும் கூவும் ஆலோ-தர்ச நீயமான குயில்கள் -தனிமைப் பட்டரை நலியாக் கடவோம் என்று இராமல் -மால்யவான் சந்நிதி ரகுராமன் -தனியாக
-கிஷ்கிந்தா வாடை காற்று துன்பம் படுத்த -தம்மில் தாம் சேர்த்திக்கா கூவ –
கா பொழில் மருவு நெருங்கி வர்த்திக்கும் குயில்கள் என்றுமாம்
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ-கூட்டமான மயில்கள் -தம்மில் தாம் கலந்து நடனம் ஆடா நின்றன
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு-பசுக்கள் -செறிந்து -இனம் உற்று இருக்க -திரள்களை மேய்க்க நீ லீலா காரணமாக போனால்
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ-சகஸ்ர யுகங்கள் -கோபிகா கீதம் -ஆனந்தம் மட்டுப் படுத்த மறைய -திருடி யுகாயாதே த்வாம் அப்ஸயதாம் -குடில குந்தளம் –
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ-அதுக்கும் மேலே — புண்டரீகாக்ஷன் -தர்ச நீயமான -ஈர்த்து –
தகவிலை தகவிலையே நீ கண்ணா-கிருபை இல்லை உன்னிடமும் லோகத்திலும்
கண்ணா -பெண் பிறந்தார் பெரும் துயர் அடையாக கூடாது -சாமான்ய கிருபையும் கூட காட்டாமல் –
நோவு பட்டரை நலியக் கூடாது என்ற விசேஷ கிருபையையும் காட்டமாட்டாயே –
இந்த நைர் க்ருண்யம் ஸ்வ பாவமாகவே கொண்டாய் -இதுவே யாத்திரை -ஸ்வ பாவம் –
கொண்டாடும் அழகு -அவன் ஸம்ஸலேஷிக்கும் பொழுது -கொண்டாடிய நினைவால் -ஆலோ விசேஷ ஸூ சகங்கள் –

அவன் பிரிகிறான் என்ற துக்கம் சொல்லா நிற்க-
அதற்கு மேலே குயில் முதலான பொருள்களின் துன்புறுத்தும் ஒலியாலும்-அவன் நோக்காலும்
தனக்குப் பிறந்த துன்பத்தினை தோழி மாருக்கு சொல்லுமாறு போலே-அவனுக்கு சொல்கிறாள்-

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ –
சுற்றுடைமையாலும்-பசுமையாலும்-
மூங்கிலை ஒரு வகைக்கு போலியாக சொல்லலாய் இருக்கின்ற தோள்கள்-இரண்டும் மெலியா நின்றன -என்கிறாள்
செருக்கனாய் இருக்கும் அரச புத்ரனுக்கு-உன் பூந்தோட்டம் அழிகிறது என்னுமா போலே
தன்னுடைய பிரிவில் இவள் ஆற்றாமை கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே-
கைம்மேல் காணலாய் இருக்கிறது காணும் இவள் மெலிவு –
இவளுடைய மயக்கத்தை பின் சென்று-கிண்ணகத்தில் அடிச்சுடுவாரைப் போலே
அவன் கூட இருக்கச் செய்தேயும் மெலியா நின்றன ஆயின தோள்கள் –
கூட இருந்தாலும் பயன் இல்லையே அகவாயிலே பிரிவு உண்டானால்-அதன் கார்யமான மெலிவு பிறந்தன்றி நில்லாதே-
தன் தோள்கள் மெலிகிற இதனை -உன்னுடைய தோள்கள் மெலியா நின்றன -என்பாரைப் போலே-சொல்லுகிறாள் காணும்
தேவதத்தன் என்றதனோடு வாசுதேவன் என்ற சொல்லோடு-வாசி அறும்படி அவனுக்கு சரீரமாக அன்றோ இவ் உயிர்ப் பொருள் இருப்பது-
பர்யவசான விதி -சர்வ சப்த வாச்யன் -நீ கலக்கப் புக்கால் விடாய் ஆறுவது எங்கே-கலந்தால் பிரிவு நிச்சயம் -அதனால் விடாய் ஆறுவது எங்கே -என்றபடி –
இவள் தோள் மெலிந்தால் தன்னுடைய அபிமதம் -வருத்தம் -தனக்கு வந்ததாய் இருக்கையாலும் -வழி -இரட்டிப்பாய் இருக்கும் –
மெல்லியல் தோள் தோய்ந்தே -திரு நெடும் தாண்டகம் -13-அன்றோ விடாய் ஆறுவது-இருவருக்கும் விடாய் ஆற முடியாதே –
நீர் சேர்த்தி அழகு சொல்லி வாய் வெருவும் தோள்கள்-படுகிற பாடு பாராய் -என்பாள் -இணை -என்கிறாள்-
தன் அழகை தான் கொண்டாடுமவள் அல்லளே-அவன் சொல்லக் கேட்டு செவி ஏற்றாலே சொல்கிறாள்-
இனி நீ வந்தாலும் உயிர் இல் பொருளுக்கு சமம் காண் -என்பாள் -மெலியும் -என்கிறாள்
–மெலியும் -காலத்தாலும் -தன்மையாலும்-மெலிவதே ஸ்வ பாவமாக என்றபடி –
ஆலோ-துக்கத்தின் மிகுதியைக் குறித்தபடி –

மெலிவும் என் தனிமையும் –
என் மெலிவும் -என் தனிமையும் –
உலகத்தார் மெலிவும் தனிமையும் போல் அல்லவே என் மெலிவும் என் தனிமையும்-
உன் மெலிவும் உன் தனிமையும் போலே அல்ல –
கூட இருக்கச் செய்தே வருகிற தனிமையும்-பிரியாது இருக்கச் செய்தே வருகிற மெலிவுமே அன்றோ-
இவை –பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே திருவாய்மொழி -4-3-10-என்றும்
மிக மேனி மெலிவு எய்தி -திருவாய்மொழி -9-7-10-என்றும்
தமியம் ஆலோ –8-9-2- என்றும்-சொன்னவற்றின் அளவு அல்லவே அன்றோ
அவன் தன் பக்கல் இல்லாத காலத்தில் பட்டவை அன்றோ அவை –கூட இருக்கச் செய்தே வருகின்றவை அன்றோ இவை-
தாம் தம்மைக் கொண்டு அகறல் தகவு அன்று –9-7-9- என்றபடியே-
தான் ஜீவனம் தேடித் போனவள் என் ஜீவனம் வைத்து போக கூடாதோ என்றாளே திருத் தாயார் -திருக் கோளூர் பதிகத்தில் –
தாம் போவார் தம்மை வைத்தன்றே போக வேண்டும் என்னக் கூடிய அவளுக்கு கூட-
இருக்கச் செய்தே போனான் என்று நினைக்கவுமாம் அன்றோ அன்பின் தன்மையாலே –
லோகத்தில் விரஹினிகள்-அஸஹாயத்வம் காதலன் வந்தால் மெலிவு இல்லை -அவனுக்கு வரவே வராதே -எனக்கு கூடவே இருக்கவே வருகிறதே –
அவன் தான் போனானாய் வருகிறான் அல்லன்-போக நினைத்தானாய் தவிருகிறவன் அல்லன்-
அவனாலும் செய்ய இயலாத கார்யம் அன்றோ இது-
அவன் தானும் இவள் மெலிவில் மெய்ப்பாட்டினைக் கண்டு-நாம் பிரிந்தோமோ -என்று மயங்கும்படி அன்றோ இருக்கிறது –
இருவரும் இருவருக்கும் ஊமத்தங்காய் ஆனால் தெளிய விரகு இல்லை-
இது தானே அவனுடைய புண்ணிய பலம் இருந்தபடி அன்றோ-
முன்பு இவள் பிரிவு ஆற்றாமையால் பட்டவை எல்லாம் தான் கண்டு அறியானே-
தோழிமார் மற்றையார் சொல்லக் கேட்டார் வாய் கேட்கும் இத்தனையே-
ஹி வாத யத காந்தா தாம் ச்ப்ருஷ்ட்வா மாமபி ச்ப்ருச-த்வயி மே காத்ர சம்ஸ்பர்ச சந்த்ரே த்ருஷ்டி சமாகம -யுத்தம் -5-9-
ஏ காற்றே என் அன்புக்கு உரிய சீதை எங்கு இருக்கிறாளோ-
அங்கு சென்று அச் சீதையை தொட்டு மீண்டு வந்து என்னையும் தொடு-என்பது போன்று
இப்போது தன் கண்களாலே காணப் பெற்றானே-இவள் தான் தோழி மாரோடு சொல்லும் அதனை இப்போது அவனோடு சொல்லுகிறாள்-

யாதும் நோக்காக் –
ஒன்றையும் பார்க்கின்றன இல்லை -என்றது
தோள்களின் மெலிவையும் தனிமையையும் இவை ஒன்றும் பார்க்கின்றன இல்லை -என்றபடி –

காமரு குயில்களும் –
கா மருதல் -விருப்பம் உறுத்தல்-
இவற்றின் உடைய சேர்க்கை பிரிவிற்கு உடலாய் இராமையால்-மேன்மேல் என விருப்பத்தை உடைத்தாய் இருக்கும்
சேர்க்கை பிரிவோடு கூடி இருக்கும் என்னும் அச்சம் இல்லை இவற்றுக்கு-
அவனே அன்றி இவையும் துன்புறுத்துகின்றன-என்பாள் -குயில்களும் -என்கிறாள் -என்றது
நீ துன்புறுத்த வர விட்ட குயிலைக் காட்டிலும் இன்னமும் நீ தானே நல்ல என்றபடி –
-கூவும் –
என் நிலையைக் கண்டால் இவற்றுக்கு வாயை புதைக்க வேண்டாவோ -என்றது
பிரிந்து நிறைவு படுகின்ற என் படியைக் கண்டால் –
நஞ்சு போலே நம்முடைய ஒலி இவளைத் துன்புறுத்தும் என்று தவிர வேண்டாவோ -என்றபடி –
அனயா சித்ரயா வாசா த்ரிஸ்தான வ்யஜ்ஞ நச்தையா-கஸ்ய நாராத்யனே சித்தம் உத்யதாசே அரேரபி -கிஷ்கிந்தா -3-32-
கொல்லுதற்கு தூக்கின கத்தியை எந்த பகைவனுடைய மனம் தான் மகிழ்விக்கப் படுகிறது இல்லை -என்றபடியே
திருவடியின் வார்த்தை இனிமையாலே பகைவர்களையும் ஈடுபடுத்துமா போலே –
இவளுடைய நிலையும் பகைவர்களும் இரங்கும் படி -உள்ளதே என்றபடி –
உருவின வாளினை உறையிலே இட வேண்டும் படி காணும் இவளுடைய நிலை –

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூறல்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றோ யார் கொல் இச் சொல்லின் செல்வன்
வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடையலானோ -கம்பர்-

நடுவில் திருவீதிப்பிள்ளை -125000 படி விரித்து எழுதி -நம்பிள்ளை அனுமதி இல்லாமல் எழுதினத்தால் நாட்டில் நடையாடக் கூடாது என்று ஆக்கினார்
அதனால் விரிவான வியாக்யானம் கிடைக்கப் பெற்றோம் அல்லோம்

கணம் மயில்
எதிர் தலையையும் தனியே வைத்து நோவு படுத்தி தாமும் தனியே இருந்து நோவு படுவாரைப் போலே அன்றிக்கே
-சேர்த்தியை உடையையவாய் இரா நின்றன ஆயிற்று இவை –

அவை –
கண் கூடாக காண இருந்தாலும் இவை என்னாமல் அவை என்றது
திருஷ்டி விஷம் போலே இருக்கையாலே முகத்தை மாற வைத்து அவை என்கிறாள் -கண் கொண்டு காணப் போகாமையாலே –
ஒரு திரளாக துன்புறுத்துகின்றன வாயிற்று –
அப்பாஞ்ச ஜன்யம் -உயிர்க்கு அது காலனே-பேதை பாலகன் அது ஆகும் போலே —

கலந்து –
இவ்வளவில் நான் சேர்வது பெண் கொலை என்று அறிந்து மீள்கின்றன இல்லை-
ஆனாலும் சேர்ந்த சேர்க்கையால் வந்த உவகைக்கு போக்கு வீடாக நடனம் செய்யா நின்றன-
என்று கண் கூடாக கண்டு வைத்து -அவை என்னும் போது முகத்தை மாற வைத்து சொல்கிறாள்-என்பது தோற்றுகிறதே அன்றோ-
மயூரச்ய வனே நூனம் ரஷசா நஹ்ருதா ப்ரியா-தஸ்மாத் நருத்யதி ரம்யேஷூ வநேஷூ சஹ காந்தயா-கிஷ்கிந்தா 1-40-
இருவராய் இருப்பார் எல்லாரையும் பிரித்தான் என்றே இருக்கிறார்-
மயிலினுடைய பெண்டாட்டியை இராவணன் கொண்டு போயிற்று இலனோ-
திரு அயோத்தியில் வந்து பிரித்தான் அல்லனே –இன்பத்துக்கு தனி இடமான காட்டில் அன்றோ –
ரஷசா நஹ்ருதா ப்ரியா –
நீர்மை கேடனான அப் படுகொலை காரனால் பிரிக்கப் படாதது இது ஒன்றுமே அன்றோ –

மருவு இனம் ஆ நிரை மேய்க்க –
இவ்வளவில் -இவள் எவ்வாறு இருப்பாளோ -என்ன வேண்டி இருக்க -அது செய்யாதே-
அவன் தன்னாலே காப்பற்றப் படுகின்ற பொருள்களை-பாதுகாத்தலிலே ஒருப்படா நின்றான் –
உன்னோடு சேர்ந்து-திரளாக இருக்கிற-ஆ நிரை உண்டு -பசுக் கூட்டம் -அதனை மேய்க்க –
மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர –பெரியாழ்வார் திருமொழி -3-6-9-அன்றோ -இவன் இடம் மருவி நிற்பன –
வேறு ஓன்று இன்றிக்கே இவனுடைய சேர்த்தி ஓன்று அன்றோ இவற்றுக்கு தாரகம் –
இனம் –
அவனாலே காப்பாற்றப் படுகின்ற பொருள்களிலே சேர்ந்தாலும்-
தனியராய் இருப்பாரை காப்பாற்ற நினையான் –திரளாக இருப்பாரை ஆயிற்று இவன் காப்பாற்ற நினைப்பது –

நீ போக்கு -ஒரு பகல் –
நீ போகிற ஒரு பகல் -என்னுதல்-
உன்னுடைய போக்கான ஒரு பகல் -என்னுதல்-
அன்றிக்கே-பசுக்களை மேய்க்கைக்காக நீ போக விடுகிற ஒரு பகல் -என்னுதல்-

இவை எல்லாம் ஒரு பகல் அளவே அன்றோ -என்றானாம் –
ஆயிரம் ஊழி –
உன்னைப் போலே என்று இராதே கொள்ளை எங்களையும் -என்றது –
இரவு என்றும் பகல் என்றும் உத்தேச்யமாய் இருப்பார் படியாய் இராது காண்-
எல்லா காலத்திலும் ஒன்றே போது போக்காகா இருப்பார்க்கு -என்றபடி –
ச ததா சஹ கோபீ பீராச மதுசூதன-யதாப்த கோடி பிரதம ஷன தேன விநாபவத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-59-
அந்த கிருஷ்ணனை விட்டுப் பிரிந்தால் ஒரு கண நேரமும் கோடி வருஷம் போல் எப்படித் தோன்றுமோ -என்கிறபடியே –
போனோம் அல்லோம்-போக நினைத்தோம் அல்லோம்-நாம் கூட இருக்கச் செய்தே -பிரிந்தோமாகக் கொண்டு
நோவு பட்டு-பார்க்கப் படும் பொருள்கள் எல்லாம் துன்புறுத்தும் படியாக இருப்பதே-
இது ஒரு அன்பின் தன்மை இருக்கும் படி என் -என்று-கண்களாலே குளிர நோக்கினான் –
தாமரைக் கண்டால் கொண்டு ஈர்தி யாலோ –
நீ நோக்காலே நலிவதில் இன்னம் பசு மேக்கப் போக்கையே நன்று –
முன்புத்தை நோக்கு நினைவுக்கு வரவே சொல்லுகிறாள் என்பாரும் உண்டு-
ஈர்தி -என்கையாலே இப்போதே நலியா நின்றாய் என்றே சொல்ல அமையும்-
இப்படி சொல்ல செய்தேயும் நோக்கினை மாற வைத்திலன் –

தகவிலை
உலகத்தில் அருள் இல்லை -காண் -என்கிறாள் –
அவனை விலக்குகிறாள் இல்லையே அன்றோ
நம்மோடு பகைத்தவர்களை இன்னாது ஆகிறது என்
இவன் நம்மை நலியா நிற்க-ஒன்றுக்கு அன்ன தோஷம் உண்டு
ஒன்றுக்கு சேர்க்கை தோஷம் உண்டு
ஆனபின்பு இவை நம்மோடு பகைத்தல் தகுதியே அன்றோ
மயில் சுப்ரமண்யன் வாகனம் என்பதால் சேர்க்கை தோஷம் உண்டு-
குயில் புலி புக்கின் -காகத்தின் உடைய அன்னத்தை உண்கையாலே அன்ன தோஷம் உண்டு-
குயில் காகத்தாலே வளர்க்கப்படுவதால் அதன் அன்னத்தை உண்டது ஆம் –

நீ தகவு இலை –
உனக்கு தகவு இல்லை
தகவுடையவனே -2-4-8 -என்று கூப்பிடுமவள் கண்டீர்-அவன் திரு முன்னே-இப்போது தகவு இல்லை -என்கிறாள்
நீ தகவு உடையை அல்லை –
அன்றிக்கே
இரண்டும் உனக்கு தகவில்லை என்றாய்
அப்போது இரட்டிப்புக்கு கருத்து நீ தகவு உடையை அல்லை -என்பதற்கு கருத்து-
கோடி எடுக்கிறேன் -என்னுதல் -பல உதாரணங்கள் காட்டுகிறார் -உன் பக்கல் கிருபை இல்லை -என்பதற்கு –
உலகில் அருள் இல்லை என்பதற்கு பிரமாணம் காட்டுகிறார்-
அக்ரூர க்ரூர ஹ்ருதய சீக்ரம் பிரேரயதே ஹயாத்-
ஏவம் ஆர்த்தாசூ யோஷித்சூ க்ருபா கஸ்ய ந ஜாயதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-90-
இப்படி பெண்கள் கஷ்டப் படும் கால் யாருக்குத் தான் அருள் உண்டாக மாட்டாது -என்றபடி –

——————————————————————————————————–

தகவிலை தகவிலை யே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-

ஆஸ்ரித பவ்யன் -நீ கிருபை இல்லாமல் இருக்க -உன்னுடைய சம்ச்லேஷ ரசம் கிலேசம் -விஸ்லேஷம் உடன் சேர்ந்தே இருப்பதால்
தகவிலை தகவிலை யே நீ கண்ணா-பவ்யத்தைக்கு உஈடான கிருபையை ஒரு படியாலும் இல்லாமல் -நீ சன்னிஹிதனாய் இருந்து
ஸம்ஸலேஷிக்கும் அளவிலும்
தடமுலை புணர்தொரும் புணர்ச்சிக்கு ஆராச்-நீ ஸ்லாகிக்கும் -முலைகள் -ஸம்ஸலேஷித்துக்கு உள் அடங்காமல் –
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்-அளவிட முடியாத சுக சாகரம் -ஆகாசம் அவ்வருகே சென்று -தாண்டிப் போய்
-அறிவை கபளீ கரித்து-அதனில் பெரிய -என்றபடி –
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே-இத்தனையும் கனவு போலே நீங்கி -அலங்க்ருத்ய சிரைச்சேதம்-அந்த அவஸ்தையில்
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு-இடை வெளி தோறும் ஸூ ஷ்ம பதார்த்தம் -நிரப்பி வடிந்து -சம்ச்லேஷம் விஸ்லேஷம் -பிரவேசித்து –
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ-ஆஸ்ரயமான ஆத்மாவின் பரம் அல்ல -தங்க ஒண்ணாத ஆசை -அபி நிவேசம்
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்-சுக வெள்ளம் -அனுபவ வெள்ளம் -அபி நிவேச வெள்ளம் -கூட இருக்கும்
உனக்கு இத்தை சொல்ல வேண்டி இருப்பதே -உன்னால் பட்டு -இனி நீ செய்ய வேண்டுவது
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே-வீவுதல் தவிர -பிரிவு வாட்டாமல் -பசுக்களை மேய்க்கப் போகாமல்

இவள் தரிப்பதற்க்காக பலகால் அணைத்து அருள –
இச் சேர்க்கையால் ஆய இன்பம் எல்லாம் -நீ நீங்கக் கூடியவன் என்னும் இதனாலே-
கனாக் கண்டு விழித்தால் போலே யாய் நோவு படா நின்றேன் -என்கிறாள்-கோதுமை மாவு கனா கதை -பக்ர பாண்டம் உடைத்தானே –
முன்னர் நிகழ்ந்த கலவியையே சொல்லிற்றாகவுமாம் –

தகவிலை தகவிலை யே நீ கண்ணா-
கண்ணா நீ தகவிலை தகவிலையே –
கிருஷ்ணன் என்றால் பெண்களுக்கு உடைமைப் பொருளாக இருப்பான் எனபது பிரசித்தம் அன்றோ –
பெண்களுக்கு உடைமைப் பொருளாக இருக்கும் நீ அருள் இல்லாதவனே ஆகா நின்றாய் –
நம்மை அருள் இல்லாதவன் -என்பதே –
பிரிய நினைத்தோம் அல்லோம் –பிரிந்தோம் அல்லோம் -என்று இவள் தரித்து இருப்பதற்காக-நெருக்கி அணைத்தான் —

தடமுலை புணர்தொரும் –
நூறாயிரம் தோறும் அணைக்கச் செய்தேயும் –அணைக்கிறது பிரிதலுக்கு அன்றோ –என்று-
அணைத்த கை -நெகிழ்ந்த இடம் -எங்கும் இவள் உடம்பு வெளுப்ப புக்கவாறே -அதனைக் கண்டு-
இவளுடைய சமாதானதிற்க்காக அணைக்க-இங்கனம் ஐயமும் சமாதானமுமாக செல்லும் அத்தனை –
புள்ளிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் அவ்வளவில்-அள்ளிக் கொள் அற்றே பசப்பு -திருக் குறள்-1187
காதலர் தொடு உழி தொடு உழி நீங்கி-விடு உழி விடு உழிப் பரத்தலானே -குறும் தொகை
இது தான் முன் நிகழ்ந்த கலவியை சொல்கிறது என்பாரும் உளர் –இப்போதைய கலவியையே சொல்கிறது –இதுவே முக்கியார்த்தம் –
என் நீர்மை கண்டு இரங்கி–1-4-பொருள் குற்றம் -கூட இருந்தால் -தானே கண்டு -கேட்டு இரங்கி -தமிழன் சொல்லி -முன்பு நெகிழ்த்த இடம் போலே –
தடமுலை –
தன்னை அறியப் புகுந்தவர்கள் படுவதனை ஆயிற்று -இவற்றை நுகரப் புக்கு தானும் படுவது –
தொலைய நுகர்ந்து முடிக்கப் போகாதாயிற்று -என்றது
அனுபவிக்கின்றவனாலும் உண்டு அறுக்க ஒண்ணாத இனிமையின் மிகுதியைச் சொன்னபடி –

புணர்ச்சிக்கு ஆராச் சுகவெள்ளம்-
புணர்ச்சிக்கு அடங்காத இன்பக் கடல் –
புணர்கிற இருவருக்கும் ஈடாக அன்றோ இன்பம் இருப்பது-
அவன் ஸ்வரூபம் இன்னது என்று அளவிட்டு அறிய முடியாதவாறு போலே ஆயிற்று
அவனுடைய இனிமையின் மிகுதியும்-அதனில் பெரிய என் அவா -10-10-10- அன்றோ அவனது
அன்றியே
புணர் தோறும் -புணர்ச்சிக்கு ஆராச் சுகவெள்ளம்–
அதாவது-சேர்க்கை ஏதாவது ஒரு கால விசேடத்தில் உண்டாவதாய்-இன்பம் எல்லை அற்று இருக்கையைத் தெரிவித்த படி –
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று-நீரினும் ஆரளவன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு-பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே -குறும் தொகை -9 என்னக் கடவது இறே-
குறிஞ்சிப் பூக் கொண்டு பெரும் தேன் இழைக்கை-இவ்வின்பம் தான் எவ்வளவு போரும் -என்னில்

விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து –
எல்லா பொருள்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு-இருக்குமது அன்றோ ஆகாசம் –
அதனையும் குளப்படி ஆக்கி -மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அறிவினையும் விளாக்குலை கொள்ளா நின்றதாயிற்று-
அன்றிக்கே-பேரின்பத்துக்கு தாமரைக் கண்ணான் உலகு -திருக் குறள்-1108-என்னக் கடவது அன்றோ –
ஆதலால் -விசும்பு -பரமபதம் ஆமுமாம்-ஆக பரம பதத்தையும் விஞ்சி-
இரண்டு உலகங்களையும் தன்னுள்ளே யாம்படி இருக்கிற அறிவையும்-மேலிடும்படி ஆயிற்று இருக்கிறது –அதனில் பெரிய அவா அன்றோ –
அது கனவு என நீங்கி -அது கனவினைப் போன்றதாம் என்னலாம் படி கழிந்த தாயிற்று –
கண்ட கனாவின் பொருள் போலே யாகும் கொல் காலன் என்னும்-கண்ட கனாவி கவர்வதுவே மெய் -திருவரங்கத் தந்தாதி –
அதன் பரப்பினைக் கண்டவாறே அதற்கு ஒரு முடிவு இல்லை என்னும்படி யாயிற்று இருப்பது
அப்படிக் கலந்தவன் அன்றோ பிரிந்தானும்
கனவு என்னும் இந்திர ஞாலம் என்றும் முடிவு இல்லாத கலவியை சொல்லக் கடவது-
இதுவும் உடனே காண ஒண்ணாததாய் இருக்குமே-
ஆங்கே
அந்த நிலையில்
அகம் உயிர்
உயிர் போன்ற மனம்
அகம் அகம் தோறும்
மனத்தில் உண்டான இடம் தோறும்
முன்பு உண்டான புனர்ச்சியாலும் பிரிவாலும் மனம் புடைபட்டே அன்றே இருப்பது
புணர்ச்சியும் பிரிவும் இடத்தை உண்டாக்கும்-அந்த இடம் உள்ள இடம் எங்கும் ஆற்றாமை புகுந்தது-

ஆவியின் பரம் அல்ல வேட்கை –
அணு அளவிதனா உயிர் பொருளின் அளவன்று காதல் –
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -இரண்டாம் திருவந்தாதி -100-என்றாரே அவரும்
உயிரின் அளவன்று ஆயிற்றுக் காதல் –

அந்தோ –
இன்ப நிலையும் துன்ப நிலையும்-அவை இரண்டும் இன்றிக்கே இருக்கிற நிலையும் -என்று-
ஆத்மாவுக்கு மூன்று நிலைகளும் உண்டே அன்றோ-
அவற்றில் இன்ப துன்பங்கள் இல்லாத நிலையில் தான் நிற்கப் பெற்றதோ
அந்தோ
இதற்கு உபதேசம் கொண்டு அறிய வேண்டுவதே-
கலக்கிற போது இருவரும் வேண்டி பிரிவில் வந்த ஆற்றாமைக்கு நான் சொல்ல வேண்டும்படி ஆவதே -என்றது
கலவிக்கு இருவராய்-ஆற்றாமை ஒரு தலையில் ஆவதே -என்கிறாள் -என்றபடி –
ஆனால் செய்ய வேண்டுவது என் -என்னில்

நின் பசு நிரை மேக்கப் போக்கு வீவ –
அது தான் தவிர வேண்டுவது என் -என்னில் மிக மிக இனி உன்னை பிரிவை ஆம் ஆல் –
மேன்மேல் என உன்னுடைய பிரிவு உண்டாம் –
பிரிவை என்பதில்-ஐகாரம் அசை நிலை -செய்யுட்பாடு-
பிரிவு உண்டாம்படி வருகிற பசு நிரை மேக்கப் போக்கு வீவ-
பசு வந்தன -என்னுமாறு போலே-போக்குகள் தவிரப் படுவானவாக -என்றபடி –போக்கு ஏக வசனம் என்பதற்கு நிதானம் —
இனி வீவ –
இதற்க்கு முன்புள்ள காலம் எல்லாம் பிரிந்து போந்தாயே யாகிலும்
இனி மேல் உள்ள காலம் எல்லாம் தவிர வேண்டும்-

—————————————————————————————-

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3-

தர்ச நீயமான உன் திரு மேனி காணாமல் கிலேசிக்கும்- எங்கள் தனிமை -முடியட்டும் –தனிமை தொலையட்டும் -அன்றிக்கே -தனிமையே மரணம் –
வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு-ஸூ தர்ம அனுஷ்டானம் -போகும் -தவிராமல் -வீதல் ஒழித்தல்-
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்-விரக விதை நெடு மூச்சு -சூடாக்கி ஆத்மா எரிகிறதே -பரி தபியா நிற்க
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்-இந்த அவஸ்தையில் யாரும் துணை இல்லை
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்-நான் இருந்து உனது திருமேனியைக் காண மாட்டாமல் -ஆசா பந்தத்தால் இருக்க -இருந்து முடியா நின்று
-தர்ச நீயமான உன் வடிவை நடை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்–நீ அகன்ற அந்த பகல் மட்டும் போகாமல் இருக்க -ஆயிரம் கல்ப காலம் தானே
-பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இருந்தால் பகல் போகாதே –
கிளம்பு போவாயோ என்று நினைத்து பகல் போகாது என்கிறாள் இவள்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா-தன்னில் தன் சண்டை போட்டு கயல் போன்ற -நீ கொண்டாட கண்கள் இரண்டும் –
நீர் நீரே தணித்தாலும் நீர் நிற்கிறது இல்லை
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்-நீ பிறந்த குலத்தில் கோபிகையாக பிறந்து
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே-சேஷ பூதை-அடிமையாக இருக்கும் எங்கள் உடைய தனி இருப்பு ஒழியட்டும் -தனிமை
ஸ்வ பாவம் என்பதால் அதன் முடிவு தங்கள் முடிவு என்கிறாள் -கூடி இருந்தால் வாழ்ச்சி பிரிந்தால் வீழ்ச்சி –
ஒரு தலைக்கு காமம் தனிமை என்றுமாம் –

நீ விரும்பாது இருக்க-நாங்கள் விரும்புகிற ஒருதலைக் காமம்-நசிக்க வேண்டும் –என்கிறாள்-

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு –
நின் பசு நிரை மேக்கப் போக்கு நிமித்தமாக நான் முடிவன் –
அது எனக்கு தர்மம் அன்றோ -என்று இராதே-உனக்கு ஒரு பெண் கொலையாய் பலிக்கக் காண் புகுகிறது –

இப்போது முடியும்படி வந்தது என் -என்னில் –
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால் –
என்னைப் பார்க்க மாட்டாயோ-உன்னுடைய போக்குக் காரணமாக நெடு மூச்சு எறிந்து-
அதுவே காரணமாக உலர்ந்த என்னுடைய இதயமானது-பிரிவாகிற நெருப்பு பற்றி எரியா நின்றது –
இதிலே நீரைச் சொரிய வல்லையே -என்கிறாள் –
உன்னைப் போலே என்று இராதே கொள்ளாய் அல்லாதாரையும் என்பாள் -எனது ஆவி -என்கிறாள் –

யாவரும் துணை இல்லை-
துணையான நீ தானே போனாய்-நீ போனால் துணையான தோழி மார் தாமே இல்லை –
குயில் மயில் -தொடக்கமானவை தாமே -ஊர்ப் பகை ஆயிற்று –

யான் இருந்து –
நீ போனால் படுவற்றைத் தான் -பிரிந்த அச் சணத்திலே முடிதல் -படப் பெற்றேனோ
எல்லாம் பட்டும் நூறே பிராயமாய் இருந்தது
இன்னும் ஒரு கால் காணலாம் என்னும் நசை முடிய ஒட்டாதே அன்றோ –
பிரிந்த விஷயம் தான் முடியவும் ஒட்டாது-தரித்து இருக்கவும் ஒட்டாது-அர்ஜுனன் பின்பு இருந்து எளிவரவு பட்டால் போலே

உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் –
இருந்தார் அனுபவிக்கும் அனுபவத்தைத் தான் அனுபவிக்கப் பெற்றேனோ-
ஏழையர் ஆவி -தேட்டமாய் இருக்கிறது காணும் இப்போது இவளுக்கு –
உன் –
உன்னைக் கண்ணாடிப் புறத்திலே நீ தான் கண்டு அறுதியே-கண்டாயாகில்
நம்மைப் பிரிந்தவர்கள் பிழையார்கல் என்று இருக்க வேண்டாவோ-
ஸ்வரூபத்தில் ஆதல் குணத்தில் ஆதல் இழியுமவன் அல்லள்-
மேனியை -என்கிறாள்-காதலி உடம்பினை அன்றோ ஆசைப் படுவாள் –
ஆட்டம் காணேன்-
அவ்வடிவோடே என் முன்னே சஞ்சரிக்க காணப் பெறுகின்றிலேன் –
இவை எல்லாம் ஒரு பகலுக்கே என்றான் –போவது அன்று ஒரு பகல் –
உன்னைப் போலே என்று இராதே கொள்ளை எங்களையும்-நீ பெற நின்றாள் நாழிகை முப்பது சென்றாலும்-
மலையாளர் வளைப்பு போலே -ஓரடி பேராது ஆயிற்று –அது பகலின் தன்மை அன்று –
நீ அகன்றால்-உன் தன்மையால் —
பகலின் தன்மை யாகில் கூட இருக்கும் போதும் போகாது ஒழிய வேண்டும் அன்றோ –சேர்ந்து இருக்கும் பொழுது பகல் ஒரு கணமாக கழிகிறதே –
கூட இருக்கும் போது இரவு காண ஒண்ணாத வாறு போலே ஆயிற்று -நீ அகன்றால் பகல் போகாத படி –
அவன் கூட இருக்கும் போது இரவு காண ஒண்ணாதே-
நாரணனைக் கண்டேன் பகல் கண்டேன் -இரண்டாம் திருவந்தாதி -81-
போவது அன்று ஒரு பகல் -என்று இது தானும் சொல்ல மாட்டாதே காணும் அவன் தான் இருக்கிறது-
கலவி செல்லா நிற்கச் செய்தே பிரிவினை நினைக்கை யாவது என் என்பதே அன்றோ அவன் நினைவு-
பிரியேன் -என்ன வல்லன் என்றானே பண்டே –பேதை நின்னை பிரியேன் என்று அகன்றான் -பெரிய திருமொழி -9-3-3-
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா-
உன் போக்கினை நினைத்து பாய்கிற கண்ண நீர் என்னால் தகையப் போகிறது இல்லை –
உன்னைத் தகையிலும் நீரைத் தகைக்க போகிறது இல்லை என்பாள் -நீரும் நில்லா -என்கிறாள் –
பொருகிற கயல் போலே ஆயிற்று பிரிவினை நினைத்து-தடுமாறுகிறபடி-
அதற்குச் செய்ய வேண்டுகிறது என் என்ன –
சாவது -இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே-
நீ போகிலும் போ-இருக்கிலும் இரு-இத் தனிமை நசிப்பது-
இவனுக்கு நான் நூறு பிள்ளை பெற வேண்டும் -என்ற சாவித்ரியை போலே சொல்லுகிறாள் –
அன்றிக்கே-தனிமை தானே சாவது-எங்களுக்கு தனிமை என்றும் சாதல் என்றும் இரண்டு இல்லை காண்-
தனிமை தானே சாக்காடு -என்றுமாம்
நின்னலால் இலேன் -2-3-7- என்னுமவர் அன்றோ-இறப்பதற்கே எண்ணாது-திரு நெடும் தாண்டகம் -1- என்றாரே அவரும்
அன்றிக்கே-தனிமை சாவது-இத்தனிமை சாலப் பொல்லாதது -என்னவுமாம்
இவ் ஒருதலைக் காமம் போவது-கைக் கிளைத் தலைவி பொறை அழிந்தால்-எல்லாம் சொல்லப் பெறுவள் அன்றே-

———————————————————————————–

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4-

ஆஸ்ரித ரக்ஷண ஸ்வ பாவமான -நீ -ரக்ஷகைய -ஏக தேசமான எங்களை போய்ட்டு -உன்னுடைய கிருத்ரிம யுக்திகளை நினைத்து வெந்து போகிறோம்
தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்-உனக்கு ரஷ்ய வர்க்கம் -அடிமைப் பட்ட எங்கள் உடைய தனிமை -பிரிந்தார் துயரமும் நினைக்காமல்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி-தொழுவினில் இருக்கும் பசுக்களையே விரும்பி -எங்கள் ஆற்றாமை நினைக்காமல்
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி-துயரமும் நினைகிலை கோவிந்தா நின்-கோக்களை –
எங்களை அநாதரித்து -இட்டுப் பொகட்டு-ஏவகாரம் -வெள்ளை பறவை இன்றும் அங்கும் -கோவிந்த பட்டாபிஷேகம் இந்திரன் பண்ணி –
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்-பரிபக்குவமாய் நல்ல ரசத்தின் வெள்ளம் ரசகனம் -பொய்யாக பேசின யுக்திகள் –
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு-உள்ளே புகுந்து -அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்-நன்றாக வர்ணித்து –
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்-தாழ்ந்த யுக்திகள் -உன்னை விட்டோ போவேன் போலே

இவன் போக்கினை நினைத்து நோவு படப் புக்கவாறே –
உன்னைப் பிரிகைக்கு காரணம் உண்டோ -என்று-இப்புடையிலே தாழ்வோடு சில வார்த்தைகளைச் சொல்ல –
இவை அன்றோ என்னை அழிக்கின்றன –என்கிறாள் –

தொழுத்தையோம் தனிமையும் –
ஐந்து லஷம் குடியில் பெண்களும் கூடிப் படுகிற தனிமை அன்றோ –
தொழுத்தையும் -என்றும்-அடிச்சியோம் -என்றும்-தாங்கள் தோற்ற தோல்வி தோன்றச் சொல்லுகிறார்கள் –

துணை புரிந்தார் துயரமும் நினைகிலை-
துணை புரிந்தார் -என்றது-உன்னை பிரிந்தார் -என்றபடி –
துணை என்றால் இருவர் இடத்தில் இல்லாததாக அன்றோ இருப்பது -என்று பணிப்பர் ஆச்சான் –
இவர்களும் அவனுக்கு துணையாய்-அவர்களும் இவனுக்கு துணையாய் -அன்றோ இருப்பது –
துணையாக ஒரு தலையில் நிலையாய் உள்ளதாயிற்று –துணையாவான் அவன் ஒருவனுமே ஆயிற்று-
அல்லாதார் அடங்கலும் -கழுத்துக் கட்டியாய் யாயிற்று இருப்பது -கழுத்திலே கட்டப் பட்ட இலிங்கம் –
வன் துணை -பெரிய திருமொழி -8-7-6- என்னக் கடவது இறே

தொழுத்தையும் தனிமையும்-
தொழுத்தையோம் தனிமையும் நினை கின்றிலை-
துணை பிரிந்தார் துயரமும் நினை கின்றிலை –பிரிகின்றோம் நாங்கள் என்றும்-
உன்னை என்றும்-பார்கின்றிலை –

கோவிந்தா –
பசுக்களையும் ஆயர்களையும் காப்பதற்கு அன்றோ கோவிந்த அபிஷேகம் பண்ணிற்று-
பிறவிப்பாடும் பின் தொடரும் அன்றோ -என்றது-
தன் மனைவி துன்புறுமவளாக இருந்தாலும்-
பசுக்களை விரும்பி அவற்றுக்கு புல்லும் நீரும் உள்ள இடம் தேடும் இத்தனை அன்றோ -என்றபடி –

நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி-
ஓர் இடத்தே வளைத்து வைத்த பசுக்களையோ காக்கல் ஆவது –
உன் கைக்குள் அகப்பாட்டாரை காக்கல் ஆகாதோ –
இவர்களை அணைத்து விட்டுப் பின்னை அன்றோ பசு மேய்க்கப் போவது –
பசுக்களையே -என்ற ஏகாரத்தால் –
நீ போனால் பிரிவுக்கு ஆற்றாமை பட அறியாதாரையேயோ நீ ஆதரிப்பது -என்பதனை தெரிவித்த படி
விரும்பி –
இவர்களை அணைத்து கட்டிக் கொடு கிடந்தாலும்-கண்ணி -என்பதாய் -கன்றுகளை விட்டுக் கொடு போகா நின்றது -என்பதாய் –
வாய் வெருவுவது அவற்றையே ஆயிற்று –இங்கு இருக்கும் போது நெஞ்சு அங்கே ஆயிற்று –
இங்கு உள்ளது பொய் ஆலிங்கனமே –
பிள்ளை அமுதனார்-ஒரு பசுவின் காலிலே முள் பாய்ந்தால்-ஆயன் தலை காண் சீய்க்கொள்வது -என்பாராம்-
சரீரத்தில் ஓன்று வந்தால் இன்ப துன்பங்கள் அனுபவிப்பது ஆத்மா அன்றோ –அந்தராத்மா இவன் அன்றோ –
எம்மைத் துறந்து –
அவற்றை விரும்ப விரும்ப-தங்களை துறந்தான் என்று இருக்கிறார்கள் –
பசுப்பால் பால் மனம் சுளிப்ப பராங்குச நாயகி தோள் கை விட்டு அன்றோ இவன் இருப்பது
எம்மை இட்டு
அசேதன பொருள்களை பொகடுமா போலே எங்களைப் பொகட்டு-என்றது
இவர்கள் இருக்கும் பொழுது அவற்றை நினைப்பான்-
அவற்றின் பின்னே போனால் இவர்களை நினையான் -என்ற படி
அவற்றை மேய்க்கப் போதி –
அவற்றைப் பாதுகாப்பதற்கு போகக் கடவை-அவற்றைப் பாது காப்பதில் வருத்தம் உண்டு-
எங்களை பாது காப்பதற்கு முன் நிற்றலே அமையும்
இடற என் பிள்ளையைப் போக்கினேன் -பெரியாழ்வார் திருமொழி -3-2-6- என்றும்
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் -பெரியாழ்வார் திருமொழி -3-2–2-என்றும்
வயிறு பிடிக்க வேண்டும் படியாய் இருக்கும் அது-எங்களைப் பாதுகாப்பதில் வருத்தம் வேண்டா-கூட இருக்கவே அமையும்
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்-பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்-பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்-
நான் போகையாவது என் –சர்வ வியாபகம் எப்படி போவது -உள்ளுவார் உள்ளத்தில் உடன் இருந்து அறிபவன் –
போனால் தான் உங்களை மறப்பது உண்டோ-என் ஆற்றாமை உங்களுக்கு உண்டோ-
நான் தாய் தந்தையர் கட்கு பர தந்த்ரப் பட்டவன் ஆகையாலே-
அவர்கள் சொல்லிற்று செய்ய வேண்டி இருத்தலின் போகிறேன் இத்தனை-
போனாலும் மனம் இங்கே அன்றோ -என்பன போன்ற-சில-பணி மொழி- தண்ணிய சொற்களைச் சொன்னான்-
இவை தான் எங்களை மறக்க ஒண்ணாதபடி பண்ணுகின்றன -என்கிறாள்-
பக்குவமாய் மிக சிறந்த அமுதத்தின் உடைய இனிய சாற்று வெள்ளம் போலே-
இனிமையாம்படி சொல்லுகிற வார்த்தைகள் -என்னுதல்
அன்றியிலே-கலவியில் ஒரு வகையை சொல்லிற்றாகவுமாம் -என்றது வாய் அமுதம் -என்றபடி
வாய் அமிர்தம் தந்து என்னை தளிர்ப்பிக்கின்றான் -பெரியாழ்வார் திரு மொழி -1-7-4-என்னக் கடவது அன்றோ –

பாவியேன் –
அமுதமே நஞ்சாம்படியான பாபத்தை பண்ணினேன்-

கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால்
எஞ்சினான் நராதிபதி ஈதொரு வியப்போ
அஞ்சு தரு தீ வினையினால் அமுதும் நஞ்சாம்
அஞ்சும் அமுதாம் தாம் உரிய நல் வினையின் மாதோ -வில்லி பாத்திரம் –
பிரிவினை நினைத்து பிரியேன் -என்னும் இது நஞ்சுக்கு சமம் அன்றோ –

மனம் அகம் தோறும் உள் புக்கு அழுத்த நின் செம் கனி வாயின்
மனத்தின் இடம் தோறும்-மறக்க ஒண்ணாத படி-அழுந்தப் பண்ண உன் சிவந்த கனி போலே இருக்கிற வாயினுடைய

கள்வம் பணி மொழி –
இச் சாற்று வெள்ளத்துக்கு ஊற்றுவாய் காணும்-எழுதிக் கொள்கிற தாழ்ந்த பேச்சுக்கள்-
பிரிவினை நினைத்து சொல்லுகிற வார்த்தை ஆகையாலே-
மனத்தினை அழிக்கக் கூடியதாய் அன்றோ இருப்பது –நினைவு ஒன்றும் செலவு ஒன்றுமாய் இருக்கை

நினை தொறும் –
இவை தாரகம் ஆகுமோ -என்னும் நினைவாலே நினைக்கப் புகுமே-அது துன்புறுத்துவது ஆகுமே-
பின்னையும் விட மாட்டாளே –இங்கனே உருவச் செல்லும் இத்தனை –

ஆவி வேம் ஆல் –
தனக்கு பற்றுக் கோடான உயிர் ஆனது வேவா நின்றது-நெருப்பு -சேர்ந்தாரை கொல்லியாக அன்றோ இருப்பது-
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்-ஏமப் புணையைச் சுடும்

பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளமான நின்-செங்கனி வாயின் கள்வம் பணி மொழி பாவியேன் மனம் அகம் தோறும்
உள் புக்கு அழுத்த -நீ மறக்க ஒண்ணாதபடி அழுந்தப் பண்ண-அவற்றை நினைக்க நினைக்க ஆவி வேவா நின்றது-

————————————————————————————————-

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-

விஸ்லேஷத்தால் வாடைக் காற்று நலிய -பகல் காற்று -தென்றல் காற்று -மல்லிகை மாலை புஷ்ப்பம் -கால மயக்கு –
ஆர்த்தி தீரும் படி ஸம்ஸலேஷித்து ஆசுவாசம் பண்ண வேண்டும்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்-ஆச்வாஸ யுக்திகள் -நினைக்கும் பொழுதும் நெஞ்சு வேவா நின்றதே –
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா-மேய்க்க -போயிட்ட கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்-காட்டிலே அகப்பட்டு விகஸித்தமான பிணி கட்டு -மது உடைய மல்லிகை -வாடை -வாசனை முகந்து தூவ
பெரு மத மாலையும் வந்தின்றாலோ-வந்து என்றாலோ பாட பேதம் -செருக்குடன் மாலைப் பொழுதும் வர -மத்த கஜம் போலே
-வந்தது அத்தனை -இதில் கையில் அகப்படாத பொழுது
மணி மிகு மார்வினின் முல்லைப் போது-கௌஸ்துப ரத்னம் -அருகில் முல்லை மாலை -வாசனை
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து-பரிஷ் வங்கித்து -நிரதிசய வாக் அமிருதம் கொடுத்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ-மேலும் அழகிய திருக் கையை தலையில் வைத்து -மூன்று கிரியைகள் பிராத்தனை –
அலங்கார உத்தரமான தர்ச நீயமான திருக் கையை –
பிரேமா பாவத்தால் அடிச்சியாம் -சேஷத்வம் மாறாதே -நம்முடன் அணைப்பாய் என்பதை மறைத்து அருளிச் செய்கிறார் -அக்ராமமான நகர பேச்சு போலே –
அடிச்சியோம் தலை மிசை யணியாய்–இவற்றைக் கொடுத்து வேதனை தவிர வேண்டும் –
சம்ச்லேஷ ஸூ சகம் -ஆற்றாமை சொல்லி காட்ட வேண்டி உள்ளதே

நான் உன் முன்னம் இருந்து கொண்டு இருக்க-நீ இப்படி படுகிறது என் என்ன –
நீ பசு மேய்க்கக் கடவனான பின்பு நீயும் போனாய் –
நீ போனால் நலியக் கடவ மாலைக் காலம் முதலிய பொருள்களால்-
நலிவுபடுகிற என்னை நலிவு படா வண்ணம்-செய்து அருள வேண்டும் -என்கிறார்

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் –
பிரிவினை நினைத்து -பிரியேன் -என்று சொல்லுகிற உன் வார்த்தை போலே-
உன்னை பிரியாமைக்காக சொல்லுகிற வார்த்தை அன்று —
உன்னது கள்வப் பணி மொழி யாகையாலே பொய் –
இது அனுபவத்துக்கு பாசுரம் இட்டு சொல்லுகையாலே மெய் –நான் போனேனோ -என்ன —

பகல் நிரை மேய்க்கிய போய –
பகல் எல்லாம் பசு மேய்க்கப் போனாய் –

கண்ணா –
கண்ணா என்று விளித்து -அவன் தன்னையே-நீ போனாய் என்கிறாள் அன்றோ –
மேய்க்கிய -மேய்க்க –
நேராக கண்ணா என்று அவனை விளித்து-நீ போனாய் – -அப்படி தெளிவில்லாமல் தவிக்கும் நிலை அன்றோ இவளுக்கு –

பிணி யவிழ் மல்லிகை வாடை தூவப் –
நீ போனால் துன்புறுத்தக் கூடியதனவான-
மல்லிகை கமழ் தென்றல் தொடக்கமானவை மறுவல் இடுகையாலே நீ சென்றமை நிச்சயம் -என்கிறாள்
கட்டவிழ்கின்ற மல்லிகை உடைய மணத்தை வாடையானது தூவா நின்றது –
இராவணன் துறவி வேடத்தைக் கொண்டு தோற்றினால் போலே-
வாடையானது குளிர் காற்றாய் வந்து நலியா நின்றது –வெக்காயம் தட்டாமல் கடக்க நின்று வீசா நின்றது –
பத்ம கேசா சம்ஸ்ருஷ்ட வ்ருஷாந்தர வினிஸ் ஸ்ருத-நிச்வாச இவ சீதாயா வாதி வாயு மநோ ஹர -கிஷ்கிந்தா -1-17-
தாமரைப் பூக்களின் தாதுக்களின் சேர்ந்ததும்-மரங்களின் நடுவில் இருந்து புறப்பட்டதும்-
சீதையின் மூச்சுக் காற்றைப் போன்று மனத்தை கவர்வதுமான காற்று வீசுகிறது -என்கிறபடியே –

பெரு மத மாலையும் வந்தின்றாலோ –
மதம் பிடித்த யானையானது முன்னே தலைப்பறை கொட்ட-வருமாறு போலே
வாடையானது முன் நடக்க விட்டுக் கொண்டாயிற்று மாலை வருகிறது –
இவளை மதித்த படியால் கூட்டுப் படையாய் வாரா நின்றது –
வந்தன்றாலோ-
வந்தது காண் –உடம்பிலே பட்டு ஒழிந்தது காண்-
பெரிய கிளர்த்தியை உடைய மாலையானது வரும் என்று அஞ்சுகின்றது அன்று -வந்தது
பகதத்தன் விட்ட வேலுக்கு அருச்சுனனை பின்னே இட்டு
உன்மார்பிலே ஏற்றால் போலே நடுவே புகுந்து கட்டிக் கொள்ள வேண்டும் காண் –
ஆனால் செய்ய அடுப்பது என் என்ன –

மணி மிகு மார்வினின் –
ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெறும்படியான மார்பு -என்னுதல்-
திரு மார்பு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்தின் புகரே யாம்படி இருக்கும் -என்னுதல்-
கலவியிலும் கழற்ற ஒண்ணாதபடி அன்றோ கௌஸ்துபம் இருப்பது –
எல்லை இல்லாத இன்பத்தை கொடுக்க கூடியது அன்றோ -என்னக் கடவது இறே –
ச்வோசித விவித விசித்ரானந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய-நிரதிசய சுகந்த நிரதிசய சுகச்பர்ச கௌச்துப -சரணாகதி கத்யம்-5-
இவளுடைய பெண்மைக்கு முலை போலே ஆயிற்று-அவனுடைய ஆண்மைக்கு ஸ்ரீ கௌஸ்துபம்-
புருஷோத்தமன் ஆகும் தன்மைக்கு இலக்கணம் அன்றோ –

முல்லைப் போது என் வன முலை கமழ்வித்து-
அம்மார்வில் முல்லைப் பூவாலே-என்னுடைய அழகிய முலையை மணம் உடையது ஆக்கி –
ஸ்ரீ கௌஸ்துபம் உடன் தோள் மாலை உடன் வாசி இன்றி-இன்பத்துக்கு கருவிகளாய் இருக்கின்றன ஆயிற்று –
தோளில் முல்லை மாலையின் மணத்தை என் முலைக்கு ஆக்க வேண்டும் என்கையாலே-மறை பொருளாக கல்வியைக் கூறியபடி –
குளித்து பூச்சூட இருப்பாரைப் போலே ஆயிற்று இம் முலைகள் –
இவை பிரமச்சாரி முலைகள் ஆகாமே-இம் மாலையின் மணத் தாலே இவை மணம் உடையவையாய்ச் செய்வாய் –
அம்மாலையின் மணம் இங்கும்-கோது அங்கும் ஆகப் பண்ண வேண்டும்-
அம்மாலையின் மணம் முலையில் ஆம்போது-கலவியை ஒழியக்கூடாதோ-
கிம் முகம் வனமாலா சன்க்ரமச்ய-வனமாலையின் சேர்க்கைக்கு என்ன வழி -என்னுமாறு போலே –
வாயமுதம் தந்து –
புணர்ச்சி இன்பம் தலைக்கு மேலே மிக்கவாறே தரித்து இருப்பதற்காக சில பேச்சுக்கள் உண்டே பேசுவது-அப்பேச்சு ஆதல் –
அன்றிக்கே-வாய் அமுதத்தைச் சொல்லவுமாம்–சொற்கள் என்றே கூறிப் போமது –

அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய் –
உன் போக்கினை நினைக்க நா நீர் வருகிறது இல்லை –அதற்கு மாறாக உன் கையை தலை மேலே வைக்க வல்லையே
நா நீர் வருகைக்கு இவர்களுடைய முந்தரி கைப் பழம் இருக்கிறபடி –ஆபரணங்கள் மிகுந்தவையாய் -அவைதாம் மிகை யாம்படியாய்-
ராஜ குமாரர்க்கு நாக்கு வாற்றாமைக்கு பச்சைக் கற்பூரம் போலே- த்வய உச்சாரணம் நம் பூர்வர்களுக்கு-
ஆயதாஸ்த ஸூ வ்ருத்தாஸ்ச பாஹவ பரிகோபமா-சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் நவிபூஷிதா -கிஷ்கிந்தா -3-14-
எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கத் தகுந்தனவான -என்கிறபடியே-தனக்குத் தானே ஆபரணம் என்கிற கையை-
பசு மேய்க்கப் போனால் வரும் அளவும் எனக்குத் தாரகமாக-உன் கையில் ஆபரணத்தைத் தா-
உன் கையில் ஆபரணத்தை தா-என்று அவர்களுக்கு -அத்யந்த பரதந்த்ரனாய் -அற்றுக் காட்டி வாங்கி இட்டு வைக்குமே –
அன்றிக்கே-பசு மேய்க்கப் போவதற்காக தான் ஒப்பித்த படியைச் சொன்னாள் ஆகவுமாம்-
அதனைச் செய்து அவன் போகப் புக்கவாறே வருந்துகிறாள் அன்றோ-
தாமரைக் கை
ஆபரணங்கள் மிகையாகும்படியான கை-சேர்ந்து குளிர்ந்த தண்ணீரை விடாயருக்கு வாராய் என்று சொல்ல வேண்டுவதே உனக்கு –
அடிச்சியோம் –
அழகுக்கு தோற்ற தோல்வியைச் சொல்லுகிறாள்-
தலை மிசை நீ அணியாய் –
ஆபரணத்துக்கு அந்தக் கை போலே ஆயிற்று-இவள் தலைக்கு அந்தக் கை-
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2-எனபது-
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் -என்பதே-காலைக் கையைப் பிடித்து கார்யம் முற்றுவிக்கப் பார்க்கிறார்கள் –
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீயம் மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-என்றே அன்றோ இவர்கள் இருப்பது-
இந்த நிர்பந்தங்கள் எல்லாம் அறிவார் ஆர்-வேண்டுமாகில் எடுத்துக் கொள்வாய் -என்றான் –
நீ கொள்வாய் –
காலன் கொண்டு மோதிரம் இடுவாரைப் போலே என் பேற்றுக்கு நான் முயற்சி செய்யுமவளோ-
நீயே மேல் விழுந்து தரக் கொள்ளுமவள் அன்றோ நான் –ஆற்றாமை மிக்கது என்னா அல் வழக்கு செய்யோம் காண் –
நீ செய்யனவற்றை நாங்கள் செய்யவோ –என்றும் அத்தலையாலே பெற இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் தாம் –
உன் பேற்றுக்கு நீ தானே பிரயத்தனம் பண்ண வேணும் -ப்ரேமையை கை விட்டது நீ செய்த அல்வழக்கு -ராமன் விட்டாலும் ராமானுஜர் விட மாட்டாரே –

————————————————————————————————–

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-

விஸ்லேஷம் கிலேசம் -ஆர்த்தி தீரும் படி ஆகாத ஸ்வ பாவம் -திருவடிகளை
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்-அநந்யார்ஹய்ஹை -தலை மேல் வைத்து அருளாய் –
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்-திருவடிக்கு -அளவிட முடியாத -அலங்காரமான திருவடிகளை –
அபரிச்சசத்யமான கண்கள் என்றுமாம் –
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்-நீ போகும் காரியத்துக்கு நடுவில்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்-பஞ்ச லக்ஷம் பெண்கள் உள்ளார் -உன் பரப்பை சுருக்க புகுகிறோமோ –
அது நிற்க -அந்த பேச்சு வேண்டாம் -எங்கள் ஸ்த்ரீத்வம் ஆற்றி அடக்க முடியாதே -உன்னைப் போலே வலியார் அல்லவே அபலைகள்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா-மா வடு போலே பிளந்த -சிலாகிக்கும் கண்கள் -நீரும்
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே-நெஞ்சும் நில்லா -அதனால்
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு-வெடிப்பு -நாசம் -ஏற்படுத்தும்
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே-வேவா நின்றதே எங்கள் ஆத்மா –

சென்ற சென்ற இடம் எல்லாம் காதலிமார் பலர் உளர் –உனக்கு ஒரு குறை இல்லை-
நாங்கள் உன்னைப் பிரிந்து தரிக்க மாட்டு கிற்றிலோம்-ஆதலால் உன் செலவினை எங்களால் பொறுக்க முடியாது –என்கிறாள்-

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்-
தோற்றாரை ஈரக் கையால் தடவ வேண்டாவோ –

ஆழி அம் கண்ணா –
கடல் போன்று சிரமத்தை போக்கிகிற-காண்பதற்கு இனிய திருக் கண்களை உடையவனே –
நீ அணியாய் -என்பதனை அடுத்து -ஆழி அம் கண்ணா –என்கையாலே-
திருக் கண்களாலே குளிர நோக்க வேண்டும் -என்பது போதரும் –உங்கள் கைகளால் தீண்டுதல் வேண்டும் என்று அன்றோ நான் இருப்பது –
–எனக்கு போக்கு உண்டோ –போனாலும் உங்களை ஒழிய புறம்பு விஷயம் தான் உண்டோ -என்ன-
ஓம் காண் -இது நிற்க –
உன் கோலப் பாதம் பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும் பலர்-
உன் திருவடிகளைப் பற்றி இருப்பார் பலர் –உனக்கு சென்ற இடம் எங்கும் பெரிய திருநாள் அன்றோ –
நடுவு-
போகும் கார்யம் ஒழிய நடுவே-
அரிவையர் –
தங்கள் பருவத்தாலே துவக்க வல்லவர் பலர் -ஒருவர் இருவரா –பெண்கள் பதினாறாம் ஆயிரவர் –
ஷோடசஸ்திரீ சஹஸ்ராணீ சதமேகம் ததோதிகம்-தாவந்தி சக்ரே ரூபாணி பகவான் தேவகீ ஸூ தா – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-18-என்கிறபடியே –
அது நிற்க –
அது கிடக்க-யானைக் கூட்டத்துக்கு கதவிடப் புகுகிறோமோ-

எம் பெண்மை ஆற்றோம்-
நாங்கள் பெண் தன்மையைக் கொண்டு ஆற்ற மாட்டு கிற்றிலோம் -என்றது
நீ சென்றால் நாங்கள் பிழைக்க மாட்டோம் -என்றபடி –
பெண்மை ஸ்வரூபம் ஆனால் வரும் அளவும் வருந்தி தரிக்க வேண்டாவோ -என்ன-

வடித்தடம் கண் இணை நீரும் நில்லா –
எங்களைப் பார்க்க மாட்டாயோ-
பிழைத்து இருக்கின்றவர்கள் உடைய இலக்கணமுண்டோ எங்கள் உடம்பில்-
கூர்த்து பெருத்து இருந்துள்ள கண்கள் நீர் மாறுகின்றன இல்லை-
ஒரு நோக்கும் ஓர் ஆளும் நேராம் படி இது கூர்மையே-
இனிமையில் பரப்பு அனுபவிக்கின்றவர்கள் உடைய அளவு அன்றிக்கே இருக்கும்படியே என்று-
நீ வாய் வெருவும் கண்கள் படுகிறபடி பாராய்-நீ நிற்கிலும் நீர் நிற்கிறது இல்லை-
உன்னைத் தகையிலும் நீரைத் தகைக்க போகிறதில்லை -என்பாள் -நீரும் நில்லா -என்கிறாள் –
நில்லாமை யாவது என் வருந்தி தகைய வேண்டாவோ என்ன-
இது நிற்கும் போது ஊற்றினை தகைய வேண்டுமே என்கிறாள்-
ஆயின் ஊற்றான நெஞ்சினைத் தகையும் இத்தனை அன்றோ-என்ன –

மனமும் நில்லா –
தைரியக் குறைவு உண்டாகி நாங்கள் படுகிற பாடு பாராயோ-
வருந்தி நெஞ்சினை பிடித்து தரிக்க வேண்டாவோ என்ன –

எமக்கு –
நீயாக வேண்டுமே அதற்கு -பிரிகைக்கும் -பிரிவில் நெஞ்சு இளையாமைக்கும் –
யாமுடைய ஆயன் தன் மனம் கல் அன்றோ -9-9-5-

அது தன்னாலே –
இப்படி மனம் நிலை கெடுவதனாலே –

வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு –
நீ பசு மேய்க்கப் போகிற இது வெடிப்பு-வெடிப்பாவது என் என்ன —வெடிப்பு -அழிவு-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே –
எங்களுடைய உயிர் ஆனது நெருப்பின் அருகில் இருக்கும்-மெழுகிலும் காட்டிலும்-உருகி வெந்து போகா நின்றது-

——————————————————————————————-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-

தர்ச நீயமான நீல ரத்னம் போலே முடிந்து ஆளலாம் படி சுலபம் -பசு மேய்க்கப் போனால் அங்கே அசுரர்கள் வந்தால்
என்னாகுமோ என்று ஆத்மா பரிதபிக்க வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு-
வெள் வளை மேகலை கழன்று வீழ-வெளுத்த வலைகள் -பரிவட்டம் கழன்று
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்-அழுக்கு அற்ற -நீ விரும்பிய கண்கள் சோக அஸ்ரு பிந்து -அவசமாக -என் வசம் இல்லாமல் –
துணை முலை பயந்து என தோள்கள் வாட-உன்னால் கொண்டாடப் பட்ட முலைகள் பசலை நோய் -உபகனம் பற்றுக் கொம்பு இல்லாமல் –
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண-சிலாக்யமான -மணி முடிந்து ஆளலாம் படி -தர்ச நீயம் -அழகான –
புஷப காச திருவடிகள் -பிரிவில் தரிப்பவன் நீ தரியாத நாங்கள்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு-ஆ மகிழ்ந்து உகந்து ஆதரித்து -அவை மேய்க்க போகும் பொழுது
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–உன்னுடன் கலகத்தைக் கொண்டு -வத்ஸாசுராதிகள்
-மெழுகில் நெருப்பு பட்டால் போலே ஆவி வேவா நின்றதே

நாங்கள் நோவு பட-உன் மெல்லிய திருவடிகள் நோவ பசு மேய்க்கப் போனால்-
அங்கு அசுரர்கள் கிட்டினால்-என்னை விளையும்-என்கிறாள்-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு-
உனக்கு அன்பு இல்லாமையாலே தெரியா விட்டால்-எங்கள் உபதேசம் கொண்டு அறிந்தால் ஆகாதோ-
எமது உயிர் வேம் -என்கையாலே-உனக்கு அது இல்லை என்று தோன்றுமே அன்றோ –இந்த பாடு எல்லாம் எங்களுக்கே –

வெள் வளை மேகலை கழன்று வீழ –
பிரிவினால் உண்டாகிய மெலிவால்-வெள் வளைகளும் மேகலைகளும்-கழன்று விழும்படியாகவும்-
வெள் வளை -சங்கு வளை-யாமி -நயாமி -சங்கு தங்கு முங்கை நங்கை -பிரிவு பிரசங்கம் இல்லாத ஸ்ரீ மகா லஷ்மி –
பிறர் அறியாதபடி பல் காலும் எடுத்து இடுவது-பேணுவது ஆனாலும்-
அவை பற்றுக் கொடு இன்றி நில்லாவே-ஆகாசத்தில் தொங்காவே –அப்படி காணும் உடம்பு இளைத்தபடி –

தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்-
நாயகன் வார்த்தையால் சொன்னபடி என்-
சரீரம் தானே -தன கண்களை நாயகன் இப்படி சொன்னானோ என்னில்-
கண்களாய துணை மலர் காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல வென்று இருக்குமே -திரு விருத்தம் -67-என்றானே அன்றோ –
கண்கள் ஆகிய பரஸ்பர -ஸத்ருசம்-சிகப்பு-செங்கழு / கறுப்பு- நெய்தல் /-கூர்மை வேல் /-முஃத்யம் மீனை வென்று இருக்கும் –

தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்-
இது காறும் பார்த்து இராத ஓன்று நீ காணலாம்-இப்பொழுது தானே சந்நிஹிதனாக இருக்க நீர் -அதனால் அபூர்வம் –
போகாதே காண் -என்கிறாள் –தாமரைப் பூவிலே முத்துப் பட்டது-கண்ணான முத்தே அன்றோ –
அவனுக்கு தோழி சொல்ல செவி ஏறு கேட்டு சொல்லுகிறாள்-
ஞாலம் எய்தற்கு உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்திற்றின-திரு விருத்தம் -11-என்று -கருத்து அறிந்த படியை தான் சொன்னானே –
நேத்ர பூதம் -முத்து -சிலாக்கியமான முத்து -கண் மணி போலே -என்றவாறு
-கண்ணீர் துளி -உருகி நினைந்து -துர்லபம் தானே -பூமியை பிராபிக்க தக்கபடி –

துணை முலை பயந்து –
நீ சேர்த்தி அழகு சொல்லிக் கொண்டாடும் முலைகள் ஆனவை பசலை நிறத்தை மேற் கொண்டன-
மலராள் தனத்துள்ளான் -மூன்றாம் திருவந்தாதி -8-அவனுடைய கோயில் கட்டணம் அழிகிறது என்கிறாள் –கோயில் ஆழ்வார் -கமலா ஸ்தனம் -இருப்பிடம் தானே

என தோள்கள் வாட –
உடல் இளைத்தால் தோள் இணை பின்னம் வாடும் இத்தனை அன்றோ –
பிரயோஜனம் இல்லாதனவற்றில் நின்று பேசுகிறது என்-இதற்கு முன் அவன் இழவு சொன்னாள்-
மேல் தன் இழவு சொல்கிறாள் –

மா மணி வண்ணா –
நீல மணி போன்ற வடிவை உடையவனே-மா -கருமை-
இவ் வடிவினைக் கொண்டே நீ போகிறது-வெயில் கானல் பொறுக்குமோ இவ்வடிவு –
உன்னை நீ பிரிந்து அறியாயே –

உன் செங்கமல வண்ண மென் மலரடி நோவ –
மலர்த்தி இவைகளால் தாமரையை ஒரு போலியாக சொல்லலாய் இருக்கும் –மென்மைக்கு ஒப்பு இல்லை –

நீ போய்-
தன் காலாலே அவன் போக வேண்டும் என்று இருக்கிறாள் காணும் –
யதித்வம்பிரசிச்தோ துர்க்கம் வனமத்யவை ராகவ-அக்ர தச்தே கமீஷ்யாமி மிருந்னந்தி குச கண்டகான்-அயோத்யா -27-9-
ராமா நீ காட்டுக்கு புறப்படுவாயானால் தருப்புக் கட்டுகளையும் முட்களையும் அழித்து கொண்டு-உனக்கு முன்பே செல்வேன் -என்னுமவள் அன்றோ
போக்கு தவிரா விட்டால் பின்னை வழிக்கு கடவார் வழி திருத்தினால் போக வேண்டாவோ –வழிக்கு கடவாள் சீதா -சக தர்ம சாரிணி-
நீ போய்-
குணங்களால் மேம்பட்ட சக்கரவர்த்தி திருமகனோ வழியே சென்று வழியே வருகைக்கு-
சென்ற சென்ற இடம் எங்கும் பூசல் விளைவிக்குமவன் அன்றோ –

ஆ மகிழ்ந்து –
எங்களை வெறுத்து இருப்பது போன்று வெறுத்து இருக்கிறாய் அல்லையே பசுக்களை –

உகந்தவை மேய்க்கின்று –
அவற்றின் பக்கல் உள்ள விருப்பத்தினாலே-அவற்றை உகந்து மேயா நிற்புதி-
பசுக்கள் மேயா நின்ற இடத்தில் அவற்றின் பக்கல் நோக்கு உள்ளவனாய் இருக்கும் இடையிலே என்பார்-
மேய்க்கின்று -என்கிறார் –

உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் –
கரு முகை மாலையும் யுகாந்தத்தில் நெருப்பும் கூடினால் போல் அன்றோ –
எவன் கொல் ஆங்கே –
ஆங்கு என்னை விளையுமோ -என்றபடி-
நாம் எனக்குச் செல்லிலும் எவர் கிட்டிலும் வெற்றி நம்மது அன்றோ -என்னுமே அவன் –
மாம்வா ஹரேயு த்வத் ஹஸ்தாத் விசஸ் யுரதாபிவா-அவ்ய வச்தௌ ஹி த்ருச்யேதே யுத்தே ஜய பராஜ யௌ -சுந்தர -37-53-
போரில் வெற்றியும் தோல்வியும் நிலை இல்லாதவனாக காணப் படுகின்றன அன்றோ -என்கிறபடியே-ப்ரேமம் கண்ணை மறைக்க இப்படி பேசுகிறாள் –
அது மற்றைப்படியாகில் செய்வது என் -என்று அஞ்சா நின்றேன்-அவர்கள் கிட்டில் அங்கு என்னாய் விளையுமோ-
அதனை தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே -தீங்கு என்னாமல் -என்னாய் விளையுமோ -என்கிறாள்-

————————————————————————————-

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-

பிரபல தர விரோதி இதில் ஆரம்பம் -அடுத்த பாசுரம் விளக்கம் –
ஆகர்ஷகமான அவயவங்கள் காட்டி நீயும் உன் அபிமதைகளுமாக என் சந்நிதியில் இருக்க அமையும் –
உனது ஆனந்துக்காகத் தானே நாங்கள் -பிரமாத ஸ்தலம் போகாதே
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று-அசுரர்கள் வந்து என்ன பூசல் விளையுமா –
ஆளும் என்னார் உயிர் ஆன் பின் போகல்-கடலில் புக்கது போலே கிளேசியா நிற்கும் -கறவைகள் பின் செல்ல வேண்டாம்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து-பிராவண்யத்தால் வந்த ஈடுபாடு -அதுக்கு அனுரூபமான அபி நிவேசமும் –
கலவியும் நலியும் என் கை கழியேல்-அதுக்கு அநு ரூபமான கலந்த கலவியும்-உள் கலந்து நலியா நிற்கும் -என் வசம் இல்லாமல் போகாதே –
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்-கைகளும் பீதக வுடையும் காட்டி வசீகரங்கள் செய்யும் உன்னுடைய
தாமரை போன்ற திருக் கண்கள் திருப் பவளம் திருக் கைகள் திருப் பீதாம்பரம்
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்-தளர்த்தியை விளைவிக்கும் முக்த பருவம் -சத்ருச குலம்-
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-இவ்வளவு இருந்தும் நீ விரும்பும் கோஷ்டியில் இருக்க வேண்டுமே
-எங்களை போல் அன்றியே -அவர்கள் உடன் சஞ்சரிப்பாய் எங்கள் முகப்பே –

நீ சென்றால் தீங்கு விளையுமோ என்று அஞ்சா நின்றேன்-உன்னைப் பிரியவும் மாட்டேன்-
பசு மேய்த்தலை வ்யாஜ்யமாகக் கொண்டு-காதலிமார்களை நினைத்து போகிறாய் ஆகில்-
என் கண் வட்டத்திலே உன் காதலிமார்களோடு-நீ சஞ்சரிக்க வேண்டும்-என்கிறாள்

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆளும் என்னார் உயிர் –
நீ வெற்றியோடு மீண்டாலும் அதற்க்கு முன்னே நான் தரைப் படுவேன் –
நான் உனக்கு வேண்டாவோ -என்கிறாள் –
ஆழும் -அழுந்தும் –

அதற்கு நம்மால் செய்யலாவது என் -என்ன –
ஆன் பின் போகல் –
பசுக்களின் பின்னே போகாதே கொள்-என் வழியே போகப் பார்ப்பது-
காதலி அருகே இருக்க சந்த்யா வந்தனம் செய்யப் போக வேணும் -என்னக் கடவதோ –
பெருமாள் ஸூ ஜனமும் ரக்ஷித்து ஸூ தர்மமும் செய்தார் -ஜாதி உசித தர்மம் செய்ய பிரணயித்தவம் விட்டோ போவது –
தனக்கு உரிய தர்மத்தை செய்யப் போவது தனக்கு உரியாளை விட்டோ –
சாதிக்கு உரிய தர்மத்தை தவிரப் போமோ-வருந்தி யாயினும் தரிக்க வேண்டாவோ -என்ன-
பிரிவில் தரிக்கலாம் படியாய் நீ கலவியில் செய்த செய்கை -என்கிறாள் –

கசிகையும்-
கசிகை -சிநேகம்
வேட்கையும்-
மேன்மேல் உன்னோடு புணர்ந்த புணர்ச்சியால் உண்டான ஆசையும் –

கலவியும் –
புணர்ச்சியும் –

உள் கலந்து நலியும் –
நீ செய்யும் சிநேகமும்-கசிகை வேட்க்கை கலவி -இவ்ளதும் அவனதும் -இரண்டு நிர்வாகங்கள் –
அருகே இருக்கச் செய்தே அகல இருந்தாரைப் போலே-மேன் மேலே எனப் பண்ணும் ஆசையும்-
தலை தடுமாறாக கலப்பதான கலவியும்-நீ பெயர நின்றவாறே மனத்திலே புகுந்து நலியும் –

ஆயின் செய்ய வேண்டுவது என் என்ன –
என் கை கழியேல் –
நான் அணைத்த கைக்குள் நின்று அகலாது ஒழிய வேணும்-சாதிக்கு உரிய தர்மங்களை செய்வது என்னை முடித்தோ-
போகாது ஒழியப் போமோ –
புறம்பேயும் நமக்கு விருப்பமாய் உள்ளவர் உளராய் இராரோ –அவர்கள் உடன் கலக்க வேண்டி இராதோ -என்றான்-
இவள் மேல் சொல்லுமது கேட்கைக்காக-நமஸ் சப்தார்த்தம் அறிவாளோ என்று பார்க்க –
எங்களுக்கு அந்த நிர்பந்தம் உண்டோ-நீ கை கழியப் போகாது ஒழிகை அத்தனை அன்றோ வேண்டுவது-
நீ விரும்பி இருக்கும் அவர்களோடு என் கண் வட்டத்தே சஞ்சரிக்கப் பார் என்ன-
ஆனால் அவர்களை அழைத்து தருவார் யார் என்ன-

வாசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும்-
உனக்கு தூது செய் கண்கள்-9-9-9- உளவாக இருக்க புறம்பே பரிகரம் தேடி அழைக்க வேண்டி இருந்ததோ-
இனிப் பொருந்தோம் என்று இருப்பார் மரத்தை மாற்றி அவர்களை வசீகரித்து தரும் கண்களும்-
அந்நோக்கில் கருத்தினை வெளிப்படுத்தும் வாயும்-
அந்நோக்கிலும் முறுவலிலும் நேர் விழிக்க மாட்டாதே நாணத்தாலே கவிழ்ந்தவர்களை-எடுத்துக் கொள்ளும் கைகளும்
தொடுதலாலே தோற்றவர்களை கீழே போகாதபடி தன் செல்லாமையாலே-மேலே ஏறட்டு கொள்கிற பொன்னாடையும்
தாசாம் ஆவிர்பூத் சௌரி சமயமான முகாம்புஜ-பீதாம்பரதர ஸ்ரக்வீ சாஷாத் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32

காட்டி –
உனக்கு புறம்பே அழைத்து தருவார் வேண்டி இருந்ததோ-பிடாத்தை விழ விட்டு வடிவைக் காட்ட அமையாதோ-

ஓசி செய் நுண்ணிடை –
பண்டே தொட்டாரோடே தோஷமான இடை-அதற்கு மேலே கல்வியால் துவண்ட இடையை உடையவர்கள்-

இள வாய்ச்சியர் –
உன்னோடு ஒத்த பருவத்தை உடையவர்கள் –வடிவு அழகாலும் பருவத்தாலும் உன்னை துவக்க வல்லார்-எத்தனைவர் இருக்கிறார்கள் –
நீ போகா நிற்க இடையிலே தங்கள் பருவத்தாலே துவக்க வல்லார் பலர்-

நீ யுகக்கும் நல்லவர்-
வடிவு அழகு உண்டானாலும் பயன் இல்லையே-எங்களைப் போலே இருக்க ஒண்ணாதே-நீ விரும்புவர்களாகவும் வேண்டுமே-
நீ உகக்கும்படி சிறப்பினை உடையவர்களான-அவர்களோடு – என் கண் வட்டத்திலே-சஞ்சரிக்க அமையும் –

———————————————————————————————-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-

த்வயார்த்தம் -தீர்க்க சரணாகதி -சாரா சங்க்ரஹம் -பிள்ளை லோகாச்சார்யார் -திருவாய்மொழி–விபுலமாக -அருளிச் செய்கிறார் –
உபநிஷத் -சாம வேதம் -சாந்தோக்யம் -த்வய சாம்யம் -பாராயணம் -பரம உபாயம் பரம ப்ராப்யம் -பூர்வ உத்தர வாக்யார்த்தம் –
அஷ்ட ஸ்லோகி -முதல் கிரந்தம் -பத்ய ரூபம் -மற்றவை கத்ய ரூபம் —
தேசிகன் -முக்தக ஸ்லோகம் அங்கு அங்கே சாதித்து ரகஸ்ய த்ரய சாரத்தில் –
வேதாந்தம் – மட்டுமே -சாஸ்திரம் -கேசவன் -ஒருவனே தெய்வம் -மது சூதன் ஒருவனே தத்வம் -தத்வம் நாராயண பர –
ஆரோக்கியத்துக்கு சத்வ குணம் மட்டுமே -த்வய வசனம் மட்டுமே க்ஷேமகரம்
பர ப்ரஹ்மம் – பரமாத்மா -பரஞ்சோதி –
மந்த்ர ரகஸ்யம் -திரு மந்த்ரம்
-விதி ரகஸ்யம் -சரம ஸ்லோகம்
அனுசந்தான அனுஷ்டான ரகஸ்யம் -த்வயம் –
நேத்ருத்வம் -நித்ய யோகம் –இத்யாதி பத்தும் -பிரபல தர விரோதி -பத்தாவது -நாராயணாய நம
-கைங்கர்யம் பண்ணும் பொழுது விரோதி தொலைய வேணுமே –
நம் ஆனந்தத்துக்காக என்பது தொக்கி நிற்குமே –
அநந்யார்ஹ சேஷ பூதன் –
உபாயாந்தரம்-அந்நிய சேஷத்வம் -ஸூ ச்வாதந்திரம் -அபிமானம் -அத்யந்த பாரதந்தர்ய காஷடை –
பிரயோஜனாந்தர சம்பந்தமும் இல்லாமல் தாண்டி –
காம்பற தலை சிரைத்து வாழும் சோம்பர் -நாம் பற்றும் பற்றும் பற்று இல்லை –
அல் வழக்கு ஒன்றும் இல்லாமல் -வந்த பின்பும் -பரம பத சோபனம் போலே -திருப்பாவை 50/பரம பத சோபனம் 10-
பாதகங்கள் தீர்க்கும் -பரமன் அடி காட்டும் –
ஏணி -98 வந்த பின்பு -ஒத்தை விழுந்து 99-பாம்பு மூலம் 2 கட்டம் -2 விழுந்தால் -99 சிக்காமல் 100 போகலாமே –
நம -இரட்டை வேண்டுமே -ஸூ போக்த்ருத்வ புத்தி தவிர்ந்து அவன் ஆனந்தத்துக்காக என்று நினைக்க வேண்டுமே -சரம அவஸ்தை –
அவனே அவன் சொத்தை அவன் ஆனந்துக்காக அவன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வான் –
சப்தம் மறைத்து போவார்கள் பூர்வர்கள் த்வயத்தை –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத-அன்னத்தை புஜிப்பவன்-நான் போக்தா அர்த்தம் இல்லை -படியாய் கிடந்து பவள வாய் காண்பேனே –
உண்டிட்டாய் உண்டு ஒழியாய்-என்று இத்தையே ஆழ்வார் –
ஞாத்ருத்வம் -வந்தால் கர்த்ருத்வ- இவற்றால் – போக்த்ருவங்கள் வருமே -ஞாதாவுக்கு ஞானம் -அவன் போக்தா நாம் போக்யம் -என்பதே –
போக்தா போக்யம் ப்ரேரிதா-மூன்றும் –
அன்னமாய் சமர்ப்பித்து -அவன் உகந்து உண்ண -அத்தைக் கண்டு மகிழ்ந்து -உகப்பது-இதுவே அந்நாத -என்கிறது –
பிரதான ஆனந்தம் அவனுக்கு அமுக்கிய ஆனந்தம் நமக்கு -களை அற்ற கைங்கர்யம் இதுவே –
சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்தர்ய போக்யதைகள் -சூர்ணிகை -21
ஞான சதுர்த்திகளின் மேலே இ றே ஆனந்த ஷஷ்டிகளுக்கு உதயம் -சூர்ணிகை -22-
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -ஜகத் வியாபார வர்ஜம் -குறையோ -தந்தை சொத்தை அனுபவிக்கும் பிள்ளை
-ஸ்ருஷ்டமான ஜீவனுக்கும் ஆனந்தம் -சீதா ராமர் இளைய பெருமாள் -ரம மாணா வன த்ரயா -ஒத்த ஆனந்தம் –
கைங்கர்யம் கொள்ளும் பரமாத்மா ஜாதி பெருமாள் -கைங்கர்யம் பண்ணும் ஜீவாத்மா ஜாதி இவன் –
தாரதம்யம் இல்லையே -சாம்யம் உண்டே -அவாப்த ஸமஸ்த காமன் ஸூ ஆராதனன்- குறைவாகச் செய்தாலும் –
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே -ஆனந்த ஸ்வரூபன் அன்றோ –
உனக்கே நாம் ஆட் செய்வோம் –மற்றை நம் காமங்கள் மாற்று -ஸ்ரீ மதே நாராயணாய நம -அர்த்தம் –

எங்களுக்கு நாதன் -உன் அபிமதைகள் உடன் எங்கள் சந்நிதியில் -வர்த்திக்கும் இதுவே எங்களுக்கு மிகவும் உகப்பாகும் -இல்லாத ஸ்த்ரீத்வம் வேண்டாம் –
புகுத்தி யாகில் கம்ச பிரக்ருதிகள் அசுரர்கள்
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்-எங்கள் சந்நிதியில் ஸூ சஞ்சாரம் பண்ணி
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்-பிரதான அவன் ஆனந்தம் சொல்லி பின்பு நம் ஆனந்தம் –
ஆனந்த மயனுக்கு இடர் வருமோ -காலம் தாழ்தல் –
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்-ப்ரீதி பிரேரிதானாம் போது -உன்னிலும் அவர்களிலும் நாங்கள் வியக்க -சீதா ராமர் விட இளைய பெருமாள் சந்தோஷம் -போலே –
நல் தாதை -சொத்து -புதல்வர் தம்மது அன்றோ -ஆர்த்தி பிரபந்தம் -ராமானுஜ அடியார் என்பதே வேண்டுவது –
தாய முறைப்படி கிடைக்குமே நமக்கு –
ராமானுஜர் நம் பெருமாள் விட நமக்கு அன்றோ உகப்பு இன்று -யதி ராஜர் ரெங்க ராஜர் சம்பாஷணம் நினைத்தாலே நமக்கு உஜ்ஜீவனம் –
நீ பிரிந்தால் எங்கள் பெண்மை தாங்காது
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்-அதுக்கும் மேலே
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு-காம ரூபிக்கள் சகடாசுரன் கொக்கு கழுதை
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ-சஞ்சரியா நிற்பர் -உனக்கு பிடித்த உருவமும் விழாம பழம்-அரிஷ்டாசுரன் –
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே-நீ அகப்படில் அவ்விடத்தில்
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ-பொல்லாங்கு விளையும் -உன் செருக்கால் அநாதரியாமல்
என் வார்த்தை கைக்கு கொள்ள வேண்டும்
பிரிவார் வார்த்தையும் கைக்கு கொள்ளாத அவஸ்தை அந்தோ -பராக்கு இருந்த படி –
ராவணன் விபீஷணன் வார்த்தை கேட்க்காமல் -அவனும் பிரிவார் வார்த்தை சொன்னானே –

உகக்கும் நல்லவரோடும் உழி தராய்-என்று நான் போகாமைக்கு சொன்ன வார்த்தை இத்தனை ஒழிய
உங்கள் முன்னிலையிலே நான் வேறு பெண்கள் சிலரோடு கலந்து பழகுதல்-
உங்களுக்கு விருப்பம் இல்லாதது அன்றோ என்ன –
எங்களோடு கலக்கும் கல்வியால் உண்டாகும் இன்பத்தைக் காட்டிலும்-உன் திரு உள்ளத்தில் பிரியமே எங்களுக்கு மிகப் பெரிய இன்பமாகும்
ஆன பின்பு தீமை விளையும் இடத்திற்கு போகாது ஒழிய வேணும்-என்கிறார்கள் –

மூன்றில் சுருக்கிய ஐந்தையும்
உயர் தினை ஒன்று பயில் /ஏறு கண் கரு வீடு /சொன்னால் ஒருக் கொண்ட/நோற்ற நாலும் /
எம்மா ஒழிவில் நெடு வேய் –என்கிற இருபதிலே விசதமாக்கி
எண்பதிலே பரப்புகையாலே -ஐந்தையும்
அருளினான் வீடு பெற்ற என்கையாலே ஐந்தில் இரண்டையும்
தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்டில் ஒன்றையும்
இதுக்கு ப்ரமேயம் என்னும் -சூர்ணிகை -211-

மூன்றில் சுருக்கிய ஐந்தையும்-எம்மா– ஒழிவில் -நெடு -வேய் நான்கு திருவாய் மொழிகளிலும்-
புருஷார்த்த ஸ்வரூபத்தை விளக்கி இருப்பதாக-அறுதி இடுகிறார்
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்-திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் –இதுவே இத் திருவாய் மொழிக்கு நிதான பாசுரம் என்பர்

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து –
எங்களைப் போல் அன்றிக்கே நீ உகக்கும் சிறப்பினை உடையவர்களோடு-
எங்கள் கண் வட்டத்திலே சஞ்சரித்து –

உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் –
நான் இன்னாளோடு கலக்கப் பெற்றிலோம் என்று உன் திரு உள்ளத்திலே வரும் இடர் கெடும் தோறும் –

நாங்கள் வியக்க இன்புறுதும் –
புறம்பு உள்ளாரைப் போலே அன்றியே-உன் உகப்பையே பிரயோஜனமாக கொண்டுள்ள நாங்கள் மிகவும் உகப்புதோம் –
எதனைக் காட்டிலும் என்னில் –
எங்களோடு கலக்கும் அதில் காட்டிலும் -என்னுதல் –
அன்றிக்கே-நீ அவர்களோடு கலந்தால் உனக்குப் பிறக்கும் ஆனந்தத்தைக் காட்டிலும் -என்னுதல்
ஈண்டு வியப்பு ஆச்சர்யத்திலே யாதல் -மிகுதியிலே யாதல் கிடக்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அன்றோ உன் ஆனந்தம் -அத்தைக் கண்டு அன்றோ நாங்கள் உகக்கிறோம்
நான் இப்படிச் செய்தால் நீங்கள் மிகவும் இன்புருவதாக சொன்ன இது கூடுமோ -என்னில் –

எம் பெண்மை ஆற்றோம்-
உன் உகப்புக்கு புறம்பாய் வரும் பெண் தன்மை நாங்கள் வேண்டாம்-
அன்றிக்கே-நீ உகந்தாரை ஒழிய உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் நாங்கள் -என்னுதல் –
உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சி அன்றோ -சூர்பணகை அன்றோ –
ததீயர் சேஷத்வம் ஞானம் உடையவர்கள் அன்றோ -அவனும் ததீயாரும் சேர்ந்ததே புருஷார்த்தம் –

எம்பெருமான் பசு மேய்க்கப் போகல் –
உனக்கு நாங்கள் அடிமைப் படுகிறோம்-
நீ பசு மேய்க்கப் போகாது ஒழிய வல்லையே-நான் தான் போகா நின்றேனோ-
எனக்கு உரிய தர்மங்களை செய்வதற்கு போனால் வருவது என் -என்ன-வருவது சொல்கிறார்கள் மேல் –

மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் –
மிகவும் பல அசுரர்கள் வேண்டின வடிவு கொண்டு மிகவும் சஞ்சரியா நிற்பார்கள் –
ஸ்ரீ பிருந்தாவனத்திலே எழும் பூண்டுகள் அடங்க அசுர மயமாய் அன்றோ இருப்பன-வேண்டு உருவு கொண்டு -என்பதற்கு
நீ உகக்கும் வடிவைக் கொண்டு -என்னுதல்
உன்னை நலிக்கைக்கு ஈடான வடிவைக் கொண்டு -என்னுதல்
புல் பா முதலா ஒன்று ஒழியாமல் இங்கே விரோதிகள் –

கஞ்சன் ஏவ –
கம்சனால் ஏவப் பட்டு வருகையாலே-தோற்றுப் போகிலும் அங்கும் கொலை தப்பாது -என்று மேல் விழுவார்கள் –
யார் ஏவில் என்-யார் மேல் விழில் என்-நாம் போரிலே வெற்றி கொண்டு அன்றோ மீளுவது -என்ன –

அகப்படில் –
அது மற்றைப்படி யாகில் செய்வது என்-போரில் வெற்றி தோல்விகள் நிலைத்தன அல்லவே
ஆனால் தான் வருவது என் -என்ன –
அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் –அவர்களும் நீயுமான இடத்தில் பொல்லாங்கு விளையும்-
இப்படிச் சொன்ன இடத்திலும்-ஆனைக்குப்பு ஆடுவாரை போலே -சதுரங்கம் ஆடுவாரைப் போலே-விருப்பு அற்று இருந்தான் –

என் சொல் கொள் –
பாராமுகம் செய்யாதே-நான் சொல்லுகிற வார்த்தையை புத்தி பண்ணுவாய் –

அந்தோ —
எங்களை அறியாவிட்டால்-உன்னையும் -சுகுமாரமான -அறியாது ஒழிய வேணுமோ –

—————————————————————————————

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-

ஆஸ்ரித கோபர்களுக்கு நிரதிசய போக்யன் -அசுரர்கள் உள்ள இடம் தனியாக இருக்க –
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ-அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ-பிரபல முன்கை மிடுக்கர்
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்-முனிவர்கள் கூட -பெண்கள் மட்டும் இல்லை நெஞ்சு கலங்கும் படி
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்-அஸஹாயம்-ஆறு குழந்தைகள் விட்டு தனியே -அக்ரூரர் கூட்டி
-துவாரகை தனியே -தோலும் தோள் மாலையும் -பரம பதமும் தனி யாக -நம்பி மூத்த ராமனையும் விட்டு –
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று-வெறுத்து -இல்லாமல் -காளிங்கன் -ஒன்றை அனைத்துக்கும் இவள் ஆக்கி
-அஸ்தானே பய சங்கை -இஷ்டமாக சஞ்சரிக்க -ஊடுற வென்னுடை யாவி வேமால்-இவ்வளவில் -ஆவி வேக
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி-பரமபத நாத்தனாக இருப்பில் காட்டிலும் -அங்கு இருக்கும் பொழுதும் இத்தை உகப்பு
-மாயையினால் அங்கு -ஈட்டிய வெண்ணெய் -செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே-இடையர்களுக்கு எல்லாம் தேவே

முன் கை மிடுக்கரான அசுரர்கள்-கம்சனால் ஏவப் பட்டவர்களாய்-
திரிந்து கொண்டு இருக்கிற காட்டிலே-நம்பி மூத்த பிரானையும் நீங்கித்-
தனியே திரியா நிற்றி -என்று-மிகவும் நோவு படா நின்றேன் –என்கிறாள்-

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்-
நடந்து கொள்ளவே வேண்டும் என்று இருக்க வேண்டா –சொன்ன சொற்களை கேட்க அமையும் –

அந்தோ –
சொன்னபடி நடந்து கோடல் இயலாத கார்யம் என்று இழியாது ஒழிகை அன்றிக்கே-
என் வார்த்தையாக அமைவதே கொள்ளாமைக்கு –

அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ –
பிறவியால் தண்ணியருமாய்-தாங்கள் பலருமாய்-முன்கை மிடுக்கருமாய் இருப்பார்கள்
அதற்கு மேலே தீயோனனா கம்சன் ஏவ ஆயிற்று வருவது –

தவத்தவர் மறுக நின்று உழி தருவர் –
என்னை அன்றோ உனக்கு விடலாவது –
உனக்கு நல்லவர்களான பக்திமான்கள்-குடல் மறுகும்படி சஞ்சரியா நிற்பார்கள் –மங்களா சாசனம் பண்ணுமவர்கள் –
ஈண்டு -பக்திமான்கள் -என்றது –
ஸ்ரீ நாரத பகவான் /ஸ்ரீ சுக்ரீவ மகாராஜர் /பெரியாழ்வார் /பிள்ளை உறங்கா வல்லி தாசர்
தொடக்கமானவர்கள் போல்வாரைச் சொல்லிற்று –
அன்றிக்கே-தவத்தில் நிலை நின்றவர்களான முனிவர்கள்
தங்கள் தவத்திற்கு வரும் இடையூறுகளால் கலங்கும்படி-திரியா நிற்பார்கள் -என்னுதல் –
அன்றிக்கே-தங்களுடைய பாதுகாத்தலுக்கு உன்னுடயை கையை எதிர் பார்த்து இருக்குமவர்கள்
அந்த அசுரர்களால் உனக்கு என் வருகிறதோ என்று கலங்கும்படி திரியா நிற்பார்கள் -என்னுதல் –
தவத்தை தனமாக உடையவர்கள்-கர்ப்பத்துக்கு ஒத்தவர்கள் என்றும் –
நயச்த தண்டா வயம் ராஜன் ஜிதக்ரோதா ஜிதேந்த்ரியா-ரஷிதவ்யா த்வயா சஸ்வத் கர்ப்ப பூதா தபோதனா -ஆரண்யம் -1-20
ஏஹி பஸ்ய சரீராணி முநிநாம் பாவிதாத்மானம்-ஹதாநாம் ராஷசை கோரை பஹூநாம் பஹுதா வனே -ஆரண்ய -6-16-
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்பதே அன்றோ இவர்கள் செயல் –
இப்படி இருக்கும் அவர்கள் –

நன்று -நம்மாட்டு அன்புடையவர்கள் உடைய துன்பத்தை போக்க வேண்டாவா -என்ன-

தனிமையும் பெரிது உனக்கு –
உன் கால் நெடுக நெடுக-தனிமையே மிக்கு விட்டதே உனக்கு-
ஏகதாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் யயௌ-விசசார வ்ருத்தோ கோபி வன்ய புஷ்ப சரக் உஜ்வல -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-1-
நம்பி மூத்த பிரானை ஒழியவே சஞ்சரிக்கும் காலம் பெரிது உனக்கு –

இராமனையும் உவத்திலை –
நம்பி மூத்த பிரான் முன்னே தீம்பு செய்ய ஒண்ணாது -என்று-அவனுடன் மனம் பொருந்தி வசிக்கின்றிலை –

உடன் திரிகிலையும் –
மனத்தில் பொருத்தம் இல்லா விட்டால்-தூரத்தில் கண்ட பகைவர்களுக்கு-
இவர்கள் இருவரும் கூடித் திரியா நின்றார்கள் என்று-அஞ்சும்படி ஒக்க திரிவதும் செய்கின்றிலை –

என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால் -நீ போகிறாய்-
நீ போகிறாய் என்று அன்று –
நம்பி மூத்த பிரான் உடன் கூடத் திரிகிறிலை என்றாயிற்று-என்னுடைய மனம் மாறுபாடு உருவ வேகிறது-
ஊடு உற-உள்ளூற-என்றபடி -என் மனம் ஆனது வேகா நின்றது –

இப்படி நிர்பந்திப்பதற்கு நான் இந்த இருப்பைக் குலைத்து போகா நின்றேனோ -என்ன-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –
ஆமாம் -நீ ஒவ்வோர் இருப்புகளை குலைத்துக் கொண்டு- போந்து அறியாயே-
பரம பதத்தில் இருப்பினைக் குலைத்து அன்றோ பசு நிரை மேய்க்கப் போந்தது –
அங்கே இருக்கவும் பெற்றது இல்லை –
அங்கு நின்றும் போந்தது பொல்லாதாதாக செய்தது என்று இருக்கிறாள் –
அங்கு இருந்தான் ஆகில் என் வயிறு எரிய வேண்டாவே-நாம் பெறுவோம் இழப்போம் –
அங்கே இருந்து வந்தது உன்னை கடாக்ஷிக்க அன்றோ என்ன -நாம் பெறுவோம் இழப்போம் –
இவனுக்கு ஒரு தீங்கு வாராது ஒழியுமே-அவர்களை விட்டும் பசுக்களை விரும்பக் கூடிய நீ எங்களை-
விரும்பாது இருக்கச் சொல்ல வேண்டுமோ-அங்கு நின்றும் போந்திலோம் என்ன சொல்ல ஒண்ணாது இறே அவனாலே-

இது ஒரு அன்பின் தன்மை இருந்தபடி என் -என்று முறுவல் பூத்தான் –
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே –
அதிலே ஈடுபடுகிறார்கள் –அவ்விருப்பு குலைந்து போந்தமை உண்டு-
உங்களை விட்டுப் போந்தேனோ-என்று முறுவல் செய்ய-இவர்களும் வாய்க்கரையிலே -அதரத்தில் -அழுந்துகிறார்கள்-
இத்தை நம்பி திருவாய்மொழி நிகமிக்கிறார் -பரம பதம் விட்டாலும் உம்மை விடும் என்றானே –

———————————————————————————————–

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-

பகவல் லாப பலன் –
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு-திரு ஆதாரம் -போக்ய பூதன் -எங்களுக்கும் ஆயர்களுக்கு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்-கோப குமாரர்களுக்கு ஸ்வாமி -அடியேனுக்கும் ஸ்வாமி -திருவடி மேலே
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்-சங்குகள் சேர்ந்த துறை
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்-சம்பத் அழகு திரு நகரி நிர்வாகக்கர் -உதாரர் ஆழ்வார்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை-இளம் பிராயத்தவர் ஆய்ச்சியர்
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்-பிரிவதற்கு கிலேசித்து-அனுசந்தித்த அர்த்தம்
ஒரு பெண் -ஒருமை -பன்மையில் ஆய்ச்சியர் -பராங்குச நாயகி பிரதி நிதி -தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே-பசுக்களை மேய்க்க போக்க கூடாது என்று உரைத்த -அவன் சம்ச்லேஷம்
-பலன் பெற்றது போலே இந்த திருவாய் மொழி கொடுக்கும் –
மேலும் கீழும் உள்ள 99 திருவாய் மொழிகளின் பலம் என்றுமாம் -வைலக்ஷண்ய ஞானமே பலம் -என்றவாறு –

நிகமத்தில்
அவனை பசு நிரைமேய்க்க போக வேண்டாம்-என்று விலக்கிய பாசுரமான-இத் திருவாய் மொழியும்
மற்றைய திருவாய் மொழியைப் போன்று-ஒரு திருவாய் மொழியே -என்று-ஈடுபடுகிறாள் –

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு –
அவ் வயிர உருக்கான முறுவலாலே-எங்களைத் தோற்பித்தால் போலே-
தன் பருவத்தில் பிள்ளைகளையும் தோற்பித்த-எல்லார்க்கும் ஒக்கத் தெய்வம் ஆனவன்-திருவடிகளில் சொல்லிற்று –
செங்கனி வாய் ஆயர் தேவு -என்கையாலே-தன் பருவத்தில் உள்ளாரை தோற்பித்த படி சொல்லிற்று –
சந்திர காந்தானனம் ராமம் அதீவ பிரிய தர்சனம்-ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிணாம்-அயோத்யா -3-27-
ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்-தாடகை என்பது அச் சழக்கி நாமமே -கம்ப நாட்டு ஆழ்வார் –

அத் திருவடி திருவடி மேல் –
எல்லாருக்கும் தெய்வமான அவ் வெம்பருமான் திருவடிகளில் –
அவன் சேஷியாம் தன்மையை காட்டிக் கொடுத்தான் –
திருவடி மேல் -என்கையாலே இவரும் அடிமையில் நின்றார்-

பொருநல் சங்கணி துறைவன் –
தாம் இருந்த இடத்தில் மேன்மக்கள் அடங்கலும் வந்து சேருமாறு போலே ஆயிற்று –
திருப் பொருநலில் சங்குகள் வந்து சேரும்படி –

மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை –
அவனுடைய பிரிவு பொறுக்க மாட்டாமையாலே-ஒரு பருவத்தில் ஆயர் பெண்கள் கூறிய தொடையாய் –

தையல் அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன –
அவை போன்று எல்லாரும் திரண்டு வார்த்தை சொன்னால் செவிப்படாது -என்று பார்த்து-அவனுக்கு மறுக்க ஒண்ணாதபடி
நப்பின்னை பிராட்டியின் தரமுடையவள் ஒருத்தி-பசு மேய்க்க போகாமை மீட்கைக்காக சொன்னவை ஆயிற்று –
இப்படியானால்-
அடிச்சியோம் -என்றும்-தொழுத்தையோம் -என்றும்
ஆழும் என் ஆர் உயிர் என்றும் –என் சொற்கொள் -என்றும்-
சொன்ன பன்மைக்கும் ஒருமைக்கும் எல்லாம் சேரும் அன்றோ –

இவையும் பத்து அவற்றின் சார்வே –
அவை -என்கிறது மேலே போந்த திருவாய் மொழிகளையாய் –அவற்றின் அருகே இதுவும் ஒரு திருவாய் மொழியே-
என்ற ஆச்சர்யத்தில் ஆக்கி-ஆயிற்று சீயர் அருளிச் செய்ததும் -9000 படி வியாக்யானம் செய்ததும்
அன்றிக்கே –இவையும் பத்து அவற்றின் சார்வே —
மேல் திருவாய் மொழி களுக்கு சொன்ன பலம் இதற்கு பலம்-என்கிறது ஆகவுமாம்-
அன்றிக்கே-அவை -என்கிறது-
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை -என்கிறவற்றையாய்-இவையும் அவற்றோடு ஒக்கும் என்னுதல் -என்றது-
அதனுடைய பலமே இதற்கும் பலம்-அது பலத்தோடு கூடியதாயின் இதற்குபேறு உண்டாம் -என்றபடியாம் –
அவர்கள் நீ போகாதே கொள் -என்ன-அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே-
இது கற்றாரும் அவனோடு நீங்காத கலவியைப் பெறுவார் -என்றவாறு –

செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு -அவனோடு பிரிவதற்கு இரங்கி –
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை -தையல் அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன-
அத் திருவடி திருவடி மேல் பொருநல் சங்கு அணித் துறைவன் வண் தென் குருகூர் சடகோபன் சொல் –
ஆயிரத்துள் இவையும் பத்து- அவற்றின் சார்வே -என்று அந்வயம்-

————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸூ உபேஷகம் ஸ தேனை விஸ்ரம்பித
கோபீ வ்யூக்தம் அபி கோ சபலம் அசிரமேவ
வ்யூக்த தாஸ்யம் ஹரிம் அபி நிஜேஷ்டம்
உபேக்ஷகம் தம் விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-

கோ சபலம் -த்வத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
அசிரமேவ சடக்கென
வ்யூக்த தாஸ்யம் -விடுபட்ட -நித்ய ஸூரிகளை விட்டு
ஹரிம் அபி நிஜேஷ்டம் -தனக்கு இஷ்டம்
உபேக்ஷகம் -தம் -விரும்பாமல்
விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-அடங்கா காதலால் –

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

அம்போஜ அஷதய கீர்த்யா யது குல ஜதயா ஆத்மன ஸ்யாமளத்தவாத
கோவிந்தத்வாத் பிரிய உத்யத் வசன தயா சக்ர தாராயுதத்வாத்
ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத் அதி சுபாக தயா கோப நிர்வாகத்வாத்
அஸ்தான ஸ்நேகா சங்காத பத காரிஜன் உதித ஸ்ரீ பதி

1–அம்போஜ அஷதய கீர்த்யா–தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–

2–யது குல ஜதயா–வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–

3–ஆத்மன ஸ்யாமளத்தவாத–யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்

4–கோவிந்தத்வாத்–கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி

5–பிரிய உத்யத் வசன தயா–பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா

6–சக்ர தாராயுதத்வாத்–அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்

7–ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத்–ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே

8–அதி சுபாக தயா–உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–

9–கோப நிர்வாகத்வாத்–எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்

10-அஸ்தான ஸ்நேகா சங்காத பத–அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ

காரிஜன்-உதித ஸ்ரீ பதி–திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே-

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 93-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் – யதா மநோ ரதம் பெறாமல் சம்சாரத்திலேயே ஸ்ரீ சர்வேஸ்வரன் வைக்க எண்ணினான் என்று சங்கிக்க
அவன் தெளிவித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தம் மநோ ரத அனுகுணமாக அப்போதே அத்தேசத்திலே புக்கு அடிமை செய்யப் பெறாமையாலே-கலங்கி
பழைய படி நமக்கு சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடுகிறதோ -என்று
பிரகிருதி சம்பந்த்தத்தின் கொடுமை ஸ்ரீ ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம்
முதலான ஹேதுக்களால் தமக்கு பிறந்த அதிசங்கையை ஒரு படுக்கையிலே கூட இருக்கச் செய்தே
பண்டு பசு மயக்கப் போகிற ப்ரபாத காலம் வந்து
அக் காலத்துக்கு அடைத்த குயில் மயில் முதலானவற்றின் பாடல் ஆடல் முதலான
அடையாளங்களையும் காண்கையாலே
அவற்றையே கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் பசு மேய்க்கப் போனான் -என்று அதி சங்கை பண்ணி
நோவு படுகிற இடைப் பெண்கள் பேச்சாலே அருளிச் செய்கிற-வேய் மரு தோளிணை யில் அர்த்தத்தை
வேய் மரு தோள் இந்த்ரிரை கோன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————-

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

———————————————-

வியாக்யானம்–

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை –
வேய் போலும் எழில் தோளி பொருட்டா -பெருமாள் திருமொழி –என்னும்படி
அணைக்கைக்கு பணை போல் இருக்கிற தோளை யுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்று ஸ்ரீ அனந்த சாயியாய்-
திரு மாற்கு அரவு -என்கிறபடி இருவருமாய்ச் சேர்த்தியாய் இருக்கிற தேசத்தை –
மாதவா என்ன -என்றார் இறே-

தான் மருவாத் தன்மையினால் –
நாமும் போய் நணுக வேணும் -என்னும் அபி நிவேசத்தை யுடைய தாம்
போய் புகப் பெறாத படியாலே –

தன்னை யின்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்று
தம்மை ஸ்வா தந்த்ர்யாதிகளாலே சம்சாரத்திலே இட்டு வைக்குமோ என்று சங்கித்துப் போர –

அதாவது –
இவர் உடைய ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு சௌஹார்த்த யுக்தன் ஆனவனும்
என் கை கழியேல் -என்னும்படி -பொருந்தி
பிரத்யஷ சாமானாகாரம் போலே இவர் கையிலே இருக்க-அத்தசையிலே
ஸ்வ ரஷணத்திலே கை வாங்கி இருக்குமவர்கள்-விஷயத்திலே ரஷணத்திலே அவன் மண்டி
அங்கே விச்லேஷிக்கும் காலத்தையும்
அவன் கை கழிந்தால்-சப்தாதிகள் பாதகமாகிற படியையும்
கால தைர்க்க்யா சஹதையையும்
ஆஸ்ரித ரஷணத்தில் அந்ய பரதையாலே அந்த ராயங்கள் புகும் படியையும்
அவனுக்கு அறிகிற பிரகாரத்தை-
வேய் மரு தோளிணை -என்று தொடங்கி -ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு-ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்றும்
தகவிலை தகவிலை இனி யுன்னை நீ பிரிவை யாமால் வீவ-நின் பசு நிரை மேய்க்கை போக்கு -என்றும்
வீவ நின் பசு நிரை மேய்க்கை போக்கு-சாவது இவ்வாய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த வித் தொழுத்தையோம் தனிமை தானே -என்றும்
நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து-எம்மை விட்டவை மேய்க்கப் போதி -என்றும்
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தின்றாலோ -என்றும்
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு -என்றும்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள்-தலைப்பெய்யில் யவம் கொல் ஆங்கே -என்றும்
அசுரர்கள் தலைப் பெய்யில்அவம் கொல் ஆங்கு என்று ஆழும்-என் ஆர் உயிர் பிரான் பின் போகல் நீ உகக்கும் நல்லவரோடு உழி தராயே -என்றும்
உகக்கும் நல்லவரோடு -என்று தொடங்கி-அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- என்றும்
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- திவத்திலும்-பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்றும்
இப்படி பஹூ முகமாக சங்கிக்க-

மால் தெளிவிக்கத் தெளிந்த –
அதாவது –
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் ஆனவனும் –என்றும்
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும்படி
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லாதே -என்றும்
அவனோடு பிரிவதற்கு இரங்கும்படியான இவர்கள் பிரேம ஸ்வ பாவத்தைக் கண்டு
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு -என்னும்படி சவிலாத ஸ்மிதம் பண்ணி
அணி மிகு தாமரைக் கையாலே அஞ்சேல் என்று ஆச்வசிபபித்து
உம்முடைய அபேஷித்ததின் படியே செய்கிறோம் என்று அதி சங்கையைத் தீர்த்தான் ஆயிற்று
அதாவது
பசு நிரை மேய்ப்பு ஒழிகை -அத்தைப் பற்ற -தாமோதரன் -என்றார்–

மால் தெளிவிக்க தெளிந்த –
ஸ்ரீ கிருஷ்ணன் தெளிவிக்கத் தெளிந்த-கலங்கினவனை தேற்றுமவன் இறே

தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –
சங்கா ஹேது இன்றிக்கே-கூட இருக்கச் செய்தே சங்கிக்க சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சமாதானம் பண்ண
சமாஹிதராய்
அத்தாலே தமக்கு சத்ருசரான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அநந்ய கதிகளான எங்களுக்கு அபாஸ்ரயம்-

————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: