பகவத் விஷயம் காலஷேபம் -181- திருவாய்மொழி – -10-2-1….10-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

கெடும் இடர் -பிரவேசம் —

ஒரு நல் சுற்றம் -என்ற -10-1-பெரிய திரு மொழியிலே-பல திருப்பதிகளையும் அருளிச் செய்த -இதற்கு கருத்து என் –
என்று சீயர் பட்டரைக் கேட்க –
பிறந்தகத்தின் நின்றும் புக்ககத்துக்கு போகும் பெண் பிள்ளைகள்-பந்துக்கள் இருந்த இடம் எங்கும் கண்டு
வினவப் போமாறு போலே-அடையத் தக்க பரமபதம் அணித்தான வாறே
திருப்பதிகள் தோறும் புகுகிறார் -என்று அருளிச் செய்தார் –
பண்டை நாளாலே தொடங்கி இவரும்-திருப்பதிகள் மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –
திருப் புளிங்குடியிலே புகுவது-9-2-
திரு காட் கரையிலே புகுவது-9-6-
திரு மூழிக் களத்திலே புகுவது-9-7-
திரு நாவாயிலே புகுவது-9-8-
திருக் கண்ணபுரத்திலே புகுவது-9-10
திரு மோகூரிலே புகுவது-10-1-
திரு வநந்த புரத்திலே புகுவதாகிறார் –10-2-
அடையத் தக்க பரமபதம் ஏறப் போவதாக ஒருப்பட்டு-நடுவிலே உண்டான தடைகளைப் போக்கி
வழி கொடு போய் விடுகைக்கு-காளமேகத்தை துணையாகப் பற்றினாராய் நின்றார் மேல் –
அவ்வளவு தான் நமக்கு போக வேண்டுமோ
இங்கே உள்ள திரு வநந்த புரமே அடையத் தக்க பரம பதமாக இருக்க-என்று திரு வநந்த புரத்தை பரம பதமாக அறுதி இட்டார் –
அங்கனம் அறுதி இட்டு
அந் நகரமாகிற இது தான்-வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் ஆகையாலே
அவன் விரும்பி வசிக்க வேண்டும்படி எல்லை இல்லாத இனியதுமாய் -தேசம் செய்து –
அவன் வந்து வசிக்கையாலே சம்சார துக்கமும் தட்டாத இடமுமாய் -தீரும் வினை நோய்கள் எல்லாம் தீரும் –
இச் சரீர சம்பந்தம் அற்று அவ்வருகு போனால் செய்யும் அடிமையை
ருசி பிறந்த போதே இங்கேயே செய்யலாம் படியாய் -கடைத் தலை சீய்க்கப் பெற்றால் –
இனித்தான் –
அமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர் -10-2-6-என்கிறபடியே
நித்ய சூரிகளும் வந்து அடிமை செய்யும் நகரம் ஆகையாலே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10-என்று
ஆசைப் பட்டபடி அவர்களோடு கூடவுமாய்-அவ்வருகு போக வேண்டினாரே ஆகிலும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -பெரிய திருமொழி -7-4-4-என்கிறபடியே-அவர்களோடு போகவுமாய் இருக்கும் அன்றோ –

உகந்து அருளின நிலங்களில் நிலை இது தான் –
முதலிலே பகவான் இடத்தில் ருசியைப் பிறப்பிக்கைக்கு உடலுமாய் –
ருசி பிறந்தால் –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாமி அஹம்-மம வர்த்ம அனுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -ஸ்ரீ கீதை -4-11-
எவர்கள் என்னை இந்த விதமாக வணங்குகிறார்களோ-அவர்களுக்கு அந்த விதமாகவே
நான் அருள் செய்கிறேன் -என்கிறபடியே
சுலபனாய் இருக்கும் தன்மைக்கு எல்லை நிலமும் ஆகையால் –உபாயத்துக்கு உரிய தன்மைகளும் நிறைந்ததாய்
பரம பதத்துக்கு கொடுபோம் இடத்தில்-ஆதி வாஹிக கணத்தில் முதல்வனான தானே-
ஹார்த்த அனுக்ருஹீத சதாதிகயா -உத்தர மீமாம்சம் -4-அத்யாயம் -2-பாதம்
உள்ளத்தில் உறையும் இறைவனால் அருளப் பட்டவன் ஆகிறான் -என்கிறபடியே
வழியில் உண்டாகும் தடைகளையும் போக்கி கொடு போகைக்கும்-முற்பாடானாகைக்கும் உடலாய் –
பிறப்பு இறப்புகளின் தளை நீங்கி அவ்வருகே போனால் செய்யும் அடிமையை-இவ் உடலோடு கிடக்கச் செய்தேயும்
யாதாயினும் ஒரு காலத்தில் செய்கைக்கும் உடலாய் இருக்கும் அன்றோ-ஆகையால் -கூடும் என்க –

ஆக –
ருசியைப் பிறப்பிக்கைக்கும் உடலாய் –
ருசி பிறந்தவாறே உபாயம் ஆகைக்கும் உடலாய் –
ஞானத்தையும் பக்தியையும் வளர்க்கக் கூடியதுமாய் –
இச் சரீரத்தோடு இருக்கச் செய்தே அடிமை செய்கைக்கும் உடலாய் இருக்கையாலே-
திருவனந்த புரமே -அடையத் தக்க மேலான பரமபதம் -என்று-அறுதி இட்ட படியே -நடமினோ நமர்கள் உள்ளீர்-
நம்மோடு சம்பந்தம் உடையவர்கள் எல்லாரும் அங்கே போய் திரளுங்கோள் -என்கிறார்-

இதுதான்
மற்ற திவ்ய தேசங்களுக்கும் ஒவ்வாதோ
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் எண்ணும் என் சிந்தனையே -7-10-9-
என்பது போன்றவைகளும் உண்டே -என்னில்
எல்லாவற்றுக்கும் எல்லாம் உண்டாய் இருந்தாலும்-
ஒவ்வோர் இடங்களிலே ஒவ்வொரு வகையான-
நினைவின் விசேடங்கள் ஓடினால் -அவற்றுக்குச் சேர வார்த்தை சொல்லும் இத்தனை-

ஸ ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூ ரார்ச்ச நத்துக்கு முக நாபி பாதங்களை
த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம் –சூர்ணிகை -183-

திரு நாம சங்கீர்த்தனம் பிரதானம் -அனந்தன் காடி இலுப்ப மரம் தாரு -ப்ரஹ்மம் 1686- நெருப்பு பிடிக்க
-மீண்டும் -மார்த்தாண்ட வர்ம அரசர் 40 வருஷம் வேலை பார்த்து 72 யானைகள் 24000 சாளக்கிராமம் பாகன் இல்லாமல் யானைகள் வர –
பெருமாள் சொப்பனம் பாதி ஜாக்கிரதையாக கீழே -பின்பு ஒரு காலம் ஆபத்து வரும் –
சாளக்கிராமம் கடு சக்கரை பூசி –
சமஷடி ஸ்ருஷ்ட்டி ஆரம்பம் முன்னே திரு வாட்டாறு -நான் முக்கண் இல்லை அங்கே
வில்வ மங்கள சாமியார் -சின்ன பெருமாள் வைத்து ஆராதனை -சின்ன பிள்ளை உடன் இருக்க -காலில் சதங்கை -காட்டுக்கு ஓட
மலை வால் பெண் இருக்க -அனந்தன் காட்டில் போடுவேன் -சதங்கை ஓசை அங்கே -இலுப்ப மரம் -விழுந்து –
12 mile நீளம்
திவாகரன் துளுவ பிராமணர் நம்பூதிரி கலந்து திரு ஆராதனம்
பிரார்த்திக்க -18 அடி நீளம் -குறைத்து –
மூன்று ஊருக்கு காட்சி முதலில் -அதனால் மூன்று துவாரங்கள் –
ஸ ஸைன்ய -விஷ்வக் சீனர் நித்ய ஸூ ரிகள் உடன் -சாத்ய தேவர்கள் முகம் சேவிக்க
புத்திரர் -நான் முக்கண் -சித்த புருஷர் சாரணர் நாபி கமல துவாரம்
சிஷ்யர் நாம் -பூ சூரர்கள் நிலத்தேவர் பரம பக்தர்கள் பாத கமல துவாரம்
சாம்யம் குணம் காட்டி அருளி -சமோஹம் சர்வ பூதேஷூ –
சுதை -சிலா -தாரு -பூரி ஜெகந்நாத பெருமாள் -களேபரம் நவ களே பரம் -12-19 வருஷங்களுக்கு ஒரு முறை –
1726 -முதல் சேவை இந்த திரு மேனி உடன் –
ஒத்தக் கால் மண்டபம் முன் –
பாதாதி கேசம் -சேவிக்க வேண்டும் பாரதந்தர்யம் ஸ்வரூபம் –
பத்ம நாப தாசர் -அரசர்களுக்கு திரு நாமம் –

ஹாடாகமாடம் -ஸ்வர்ண மயமான மண்டபம் ஸ்வர்ணமயமான திருமேனி -மார்த்தாண்ட வர்மா -பத்ம நாப தாசர்கள் –
அரசர்கள் -திருமால் பிரதிநிதிகள் -அமரர்கோன் அர்ச்சிக்கின்று -இன்றும் -அரசர் அர்ச்சிக்கிறார்கள் Rs-160 அபராதம் -வர முடியாவிடில்
ஐப்பசி பங்குனி -ப்ரஹ்ம உத்சவங்கள் சங்க முகத்துறை அளவு
பள்ளி வேட்டை முதல் நாள் -அரசரே அம்பு போட்டு -தேங்காய் மேலே அம்பு -காம க்ரோதங்கள்
ஆராட்டு உத்சவம் தீர்த்தவாரி 9 நாள் நடக்கும்
ஆண்டாள் 9 நாள்
இலுப்ப மரம் பெரிய திரு உருவம் -இருந்த இடம்
குல சேகர மண்டபம் –
வெண்ணெய் காப்பு ஹனுமான் எப்பொழுதும் –
நரசிம்மர் உக்ர ஸ்ரீ ராமாயணம் பாராயணம் உக்ரம் குறைய -ஹிரண்ய வைத்த படலம் கம்பர் –
மார்த்தாண்ட-சூர்ய வம்சம் -ராஜ புத்திரர் -நான்கு கோத்த்ரம் வஸிஷ்ட கோத்ரம் –
நீண்ட கத்தி கீழே வைத்து பத்ம நாப தாசர் -குடும்ப சொத்து ஒன்றும் இல்லை
1008 வேத வித்து நான்கு வேதம் ஏழு தடவை முறை ஜபம் உத்சவம் -என்பர்
கடைசி நாள் லக்ஷ தீபம் நடக்கும் –

—————————————————————————————————

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-

கோபுரம் -படகு போலே -தெற்கு கோடி -இது -திரு நாவாய் வடக்கு கோடி -மலையாள திவ்ய தேசம் -ஆழ்வார் ஆதரித்து
கிலேசம் தீரும் படி பாதேயமாம் -படி -திரு நாம சங்கீர்த்தனம் -போம் வழி கிலேசம் -10-1- முதல் இத்தையே கொண்டு –
போக்கியம் -கிட்டுமின் ஸூ ஜனம் அடியார்களைக் குறித்து அருளிச் செய்கிறார் –
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்-ப்ரசஸ்த கேசம் -போக்யமான பாலை குடிக்கவே பித்தம் போகுமா போலே
-மருந்தும் விருந்தும் -புக்க இடம் தெரியாமல் கேட்டு போகுமே -ப்ரீதி அப்ரீதி -புண்யமும் அ புண்யமும் –
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்-யம பட்டர்கள்-பகவத் பக்தர்கள் அருகில் போகாதே -கமல நயன நாம உச்சாரணத்தால் –
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்-விஷம் -ஆஸ்ரித சம்ச்லேஷ ப்ரீதி தோற்றும் படி -கண் வளர்ந்து அருளி
-குண அனுபவ ப்ரீதர் அக்ரமமாக அலற்றும் படி -தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-பூம் தடங்கள்நிறைந்த திவ்ய தேசம் –

பிரீதியாலே திரு நாமத்தைச் சொல்ல-
திருவனந்த புரத்துக்கு செல்ல தடையாக உள்ளவை-அனைத்தும் அழியும்-
அங்கே புக வாருங்கோள் -என்று-அனுகூலரை அழைக்கிறார்-

கெடும் இடராய வெல்லாம் –
இடராய -எல்லாம் -கெடும் –
இடர் என்று பேர் பட்டவை எல்லாம் கெடும் -என்றது-
ப்ரஹ்மஹத்தி தோஷத்துக்கு கழுவாயாக பன்னிரண்டு ஆண்டுகள் செய்யும் வேள்வியைச் சரித்தால்
மற்று ஒரு பாவத்திற்கு மற்று ஒரு கழுவாய் செய்ய வேண்டி இருக்கும் அன்றோ –இங்கு அது வேண்டா
பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் –
பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி –

கழுவாயும் பலபலவாய் இருக்குமோ -என்ன
கேசவா வென்ன –
அவன் ஒரு விரோதியை போக்கின படியைச் சொல்ல-விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்
இராவணன் ஒருவனும் தீ வினை செய்ய-இராக்கச சாதியாக அழிந்தால் போலே –
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்-
முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்
கார்யத்தில் வந்தால் அதன் பயனைக் கொடுத்தே தீரும் ஆதலின் வார்த்தை மாத்ரமே அமையும் என்பார் -என்னக் கெடும் -என்கிறார் –
இனி கேசவா என்னக் இடராய எல்லாம் கெடும் -என்பதற்கு-
நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே
நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்
க இதி ப்ரஹ்மனொ நாம ஈசோஹம்சர்வ தேஹிநாம்-ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே
பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவனே என்ன-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும் பொருள் கூறலுமாம் –
ஆயினும் சொல்லிப் போருமது முன்னர் கூறிய பொருளே-
கிலேச நாசன கேசி ஹந்தா ப்ரசாஸ்த கேசம் -க ஈச நியாமகன் -நான்கும் உண்டே -ஸ்வரூபம் ரூபம் குண விபவம்-
ஆயினும் இந்த பிரகரணத்துக்கு சேர கிலேச நாசனே உசிதம் என்றவாறு –

நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் –
நாள் தோறும் கொடிய செயலைச் செய்யக் கூடிய-எமனுடைய தூதுவர்களும் வந்து கிட்டப்-பெறார்கள்
எமனுடைய தூதுவர்கள் என்னா சர்வேஸ்வரன் உடையார் பக்கலிலே வந்து கிட்டவோ -என்பார் -தமர்களும் -என்கிறார் –
ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிகர மது சூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்யன் ருணாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-13-

தஸ்ய யஞ்ஞா வராஹச்ய விஷ்ணோ அமித தேஜச-ப்ரணாமம் யேயி குர்வந்தி தேஷாமபி நமோ நம-ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
அளவற்ற ஆற்றலை உடைய அந்த யஞ்ஞா வராக பெருமாளை எவர்கள் வணங்கு கின்றார்களோ
அவர்களை நான் பல முறை வணங்குகிறான் -என்பதே அன்றோ அக் கூற்றுவன் வார்த்தையும் -என்றது
இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் -நான்முகன் திருவந்தாதி -68 -என்கிறபடியே
அவர்களைக் கண்டால் -நாம் கடவோம் அல்லோம் என்று போராதே
அவர்களை அணுகி வணக்கத்தைச் செய்து விட்டு செல்லுங்கள் என்கிறான் என்றபடி
ஸ்வபுருஷம் என்கிற ஸ்லோகத்தில்
எமன் தன் பரிகரம் கையும் சூலமும் நாயுமாகப் போகிற படியை பார்த்து-
பாகவதர்களும் அல்லாதாரும் கலந்து இருப்பர்கள்
பாகவதர்கள் முன்னே இவன் கிட்டில் செய்வது என்-என்று பயந்து சொல்லுகிறான்-
ஸ்வ புருஷம் –
தனக்கு அந்தரங்கனாய் இருக்கையாலே தன் மேன்மை சொல்ல வேண்டும் இடத்தில் தாழ்வு சொல்கிறானாய் ஆயிற்று தவிர ஒண்ணாமையாலே
அபிவீஷ்யே –
அபி வி என்ற இரண்டு உபசர்க்கத்துக்கு -இவன் தான் நாலு இரண்டு ஓலை மறுக்க தர முடையனாய் இருக்கும் ஆயிற்று –
சொல் செல்லுகைக்காக இப்படி இருக்கிறவனை பார்க்கிற பார்வையிலே கார்யத்தின் கௌரவம் எல்லாம்-தோற்றும்படி பார்த்தான் ஆயிற்று –
மது சூதன பிரபன்னான் –
இவர்களை நலிந்தால் அவனுக்கு என் என்ன-இவர்கள் அவன் பக்கலிலே பாரங்களை எல்லாம் போட்டவர்களாய் இருப்பர்கள் –
இவர்களுக்கு வந்தது ஒன்றுக்கு -அவன் மார்வு தட்டிக் கொண்டு வரும் -மோஷ யிஷ்யாமி -என்பானே-
நன்று உனக்கு உடையோமாய் போகிற நாங்கள் வேறு-சிலர்க்கு அஞ்ச வேண்டும்படி இருந்ததாகில்
நீ பின்னை யாராய் இவ்விருப்பு இருந்து ஏவுகிறது -என்ன
பிரபு அஹம் அந்ய ந்ருனாம்
எனக்கு அடைந்த விஷயத்தில் என் சொல் செல்லாதாகில்-அன்றோ எனக்கு குறையாவது-
நாம் கடவோம் அல்லாதவர்கள் இடத்தில் நாம் ஆராயா நிற்கவோ -என்றான் –

இது தன்னை திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தாரே அன்றோ
திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு –என்று
எம்பெருமானார் நுழையாத ஐதிக்யம் -ஸ்வாமி போனாலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயர்க்கு ஆட்பட்டார் பேர் -முதல் திருவந்தாதி –
என்று அவர் தங்களிலே சொல்லி இருக்கும் வார்த்தை அன்றோ இது-
அடியார் -ஆட்பட்டார்க்கு பேர் -பரிகாரபூதர் -அடியார்க்கு அடியார் -பேர் மட்டும் வைத்து இருப்பார் -மூன்றும் –
மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் என்ன வல்லனே -திருச் சந்த விருத்தம் -116
என்கிறபடியே சக்கரவர்த்தி திருமகனார் பெயரை இவன் ஆராயவோ -என்கை-

ஒரு திருவேட்டையிலே பட்டர் திரு ஊற்றம் கரையிலே பேர் ஒலக்கமாய் இருக்க
மாலைப் பொழுது ஆயிற்று என்று சிலர் விண்ணப்பம் செய்ய
நான் பெருமாள் அழகிலே துவக்குண்டு இன்று ஒருநாளும் செய்ய வேண்டிய கார்யத்திலே
சிறிது தாழ நின்றோம் என்றால்-இது குற்றமாக யமன் கேட்கவோ
ஒரு அரசன் இருந்து நாட்டுக் கணக்கு கேட்டுக் கொடு வாரா நின்றால்
அரசனுக்கு அந்தரங்கனாய் இருப்பான் ஒருவன் பெயரை வாசித்தால் -ஓம் காண் அது கிடக்க மேல் செல் -என்றால்
பின்னை ஒரு நாளும் அப் பெயரை எடுத்து வாசிக்கப் பெறான் காண் -என்றாராம்
இந்த விஷயத்திலே
உனக்கு ஆகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ-பெரிய திருமொழி -6-8-9-என்று அருளிச் செய்தார் –
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -பெரிய திருமொழி -8-10-7-என்கிறபடியே
இருவர் ஒரு வழி போகப் பெறார்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா-என்றார் பட்டர் பிரான்
விழுக்காடு அறியாதே வந்து கிட்டில் செய்வது என் என்னில்
தட வரைத் தோள் சக்கர பாணீ –சாரங்க வில் சேவகனே -என்கிறபடியே
திரு ஆழி இட்டு தோளைக் கழித்தல்-ஓர் அம்பாலே தலையை உருட்டுதல் -செய்யும் அத்தனை –
வாணன் பட்டது படுதல் -இராவணன் பட்டது படுதல் -செய்யும் அத்தனை –
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகு ஏழ் ஆண்டான் -பெரிய திரு மொழி -10-6-5-
என்கிறபடியே
யம தூதுவர்கள் நம்முடையாரை வினவப் பெறார்கள்-அதற்கு அடி என் எனில்-
வேண்டாமை –ஊர்க் கணக்கனோ கோயில் கட்டணத்திலே-அந்தப்புரத்திலே –
புக்கு படுக்கைப் பற்று -பெண்கள் இருக்கும் இடம் -ஆராய்வான்
செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்கிறவன் இவர்கள் கையில் காட்டிக் கொடானே
நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை நமன் தமர் தலைகள் மீதே-நாவல் இட்டு உழி தருகின்றோம் -எனபது திருமாலை -1-
அஹம் அமரவரார்சிதென தாத்ரா
யம இதி லோக ஹிதா ஹிதே நியுக்த
ஹரிகுரு வசக அஸ்மி ன் ஸ்வ தந்திர
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-14-
உலக குருவான பகவானுக்கு நான் அடங்கினவனாய் இருக்கிறேன்-நான் ஸ்வ தந்த்ரன் அல்லன்
என்னைத் தண்டிப்பதற்கும் விஷ்ணுவுக்கு ஆற்றல் உண்டு-என்கிறபடியே
உங்களை நியமிக்கப் போந்த என்னைப் போலே அல்லன் காண் என்னை நியமிக்குமவன்
இவ் ஓலக்கத்தில் வந்தால் அன்றோ நான் ஆராய்வது-அவன் -விஷ்ணு -எங்கும் உள்ளவன் அன்றோ –

நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார் –
பழையதாக நலிந்து போந்த வாசனை கொண்டு பகவத் விஷயத்தில்
முதலடி இட்ட இன்றும் -கிட்டவோ -கேசவா -என்றது வார்த்தை மாதரம் என்பதால் முதலடி –
துராசாரோபி சர்வாசீ க்ருதக்னோ நாஸ்திக புரா
சமாசரயேத் ஆதிதேவம் ஸ்ரத்தயா சரணம் யதி
நிர்த்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -பாரதம் –
நிர்த்தோஷம் வித்தி –
சாவது பிறப்பதாய் போந்தவனாவது –
கழுவாய் இல்லாத தீ வினைகளை உடையவன் ஆவது
ஆனாலும் அவனைக் குற்றம் அற்றவன் ஆகவே புத்தி பண்ண வேணும்
குற்றங்கள் இருக்க இப்படி நினைக்க வேண்டுவான் என் -என்ன –
பிரபாவாத் –
இவனையோ பார்ப்பது-இவன் பற்றினவனைப் பார்க்க வேண்டாவோ –
இவனை ஆராய்கை யாவது -பகவானுடைய பெருமையை அளவிட்டு அறிதலாம் அன்றோ
குறுகார் எண்ணாதே குறுக -கில்லார் -என்றது
எரிகிற நெருப்பில் கிட்டுவார் உளரோ -என்றது –
ஏவுகின்ற தலைவனுடைய ஏவலை மேற்கொண்டு கிட்டாமை அன்று-தந்தாமை வேண்டாதார் உளரோ -என்றபடி –

மேலே பெறக் கூடிய பேற்றினை சொல்கிறார்
விடம் உடை –
செந் தெங்கிற்கு -செவ்விளநீர்க்கு-முள் கட்டினால் போலே-ஒருவருக்கும் முகம் கொள்ளாது இருக்கை
வாய்ந்த மது கைடபரும் வயிறு உருகி மாண்டார் -மூன்றாம் திருவந்தாதி -66-என்கிறபடியே
பகைவர்களாய் கிட்டினாரும் முடிந்து போம்படியாய் – இருக்கும்

அரவு –
சாதிக்கு உரியதான மென்மை நாற்றம் குளிர்த்தி -என்னும் இவற்றை உடைத்தாய் இருக்கும்-

பள்ளி விரும்பினான் –
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே ஆயிற்று-அங்கு கண் வளர்ந்து அருளுகிறது

—————————————————————————————————————

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-

சகஸ்ர முகமாக போக்யமாம் –
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா-கால விளம்பம் பிறவாத படி -ருசி பிறந்த அன்றே -ஏழு ஏழு பிறவிகளிலும்
-முக்தன் போலே -யாவதாத்மபாவி சம்சார தோஷம் தட்டாது
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை-பரிசரத்திலே –
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்-மன்றில் அலர்ந்த பொழில் -ஆஸ்ரிதற்கு அனுபாவ்யமான ஸுந்தர்ய ஸுலப்ய -நாமங்கள்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே-வைகுந்தம் -இருக்கும் தேசமே
ஒவ் ஒன்றுமே ஆயிரமாக பணைக்கும்-இதுவே ஸ்ரீ வைகுண்ட அனுபவம் -என்றவாறு -பரமபதம் வர்ஜ நீயம் –

தீ வினைகள் போகைக்கு சொன்ன-திருப் பெயர் தானே -கேசவா என்ன –
ஆயிரம் வகைகளாய் பாது காவலாய் இருக்கும்-என்கிறார் –

இன்று போய்ப் புகுதிராகில் –
போவோம் என்ற இச்சை பிறந்த இன்றே சென்று சேர்வீர்களே யாகில் –
அதிகாரி ஆவதற்கு மற்றைய விஷயங்களில் வைராக்கியம் தொடக்கமானவை வேண்டாவோ –
இச்சை மாத்ரம் போதியதாமோ -என்னில் –
யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜென்-ஜாபாலி ஸ்ம்ருதி –
எவன் வைராக்யம் உள்ளவன் ஆகிறானோ அன்றே துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் -என்கிறபடியே
அவை வேண்டுவன ஒரு சிலர் மேற்கொள்ள கூடியவையான-விஷயங்களுக்கு –
எல்லாரும் மேற்கொள்ளக் கூடியதாய்-சம்பந்தமும் உள்ளதுமாய்-
முன்பே இவனை விரும்பி இவனது விருப்பத்தை பார்த்து இருக்கும் விஷயத்துக்கு தகுதியாக-
அதிகாரி யாகும் தன்மையை இவனால் சம்பாதிக்க முடியாமையாலும்-
சர்வாதிகாரம் பிராப்தம் – முன்பே இவனை இச்சித்து -இசைவு பார்த்து இருக்கும் விஷயத்துக்கு இச்சா மாத்திரமே போதுமே –
ஆள் பார்த்து உழி தருமவன் -நான் முகன் திருவந்தாதி -60 ஆகையாலும்-
ஆனய ஏனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷநோவா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18–84
யதிவா -விபீஷணன் என்ற பெயராய் ராவணனே இருந்தான் என்று மீளாதேயுங்கோள் என்றான் இறே –
ஸ்வயம் –அது என்-அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டதாக அமையாதோ -என்ன வேண்டா-
குறைவாளர்க்கு அன்றோ நம்மால் கார்யம் உள்ளது –அது உள்ளது இராவணனுக்கே அன்றோ –
விபீஷணச்து தர்மாத்மா ததுராஷச சேஷ்டிதர் – ஆரண்யம் -17-24-என்கிறபடியே-
தனக்கு என்ன ஒரு கைம்முதலும் உள்ளவன் ஆகையாலே-நாளை வரவும் ஆம் –
அரைக்கணம் கிட்டா விடில் நாசமாக இருக்கிறது அந்த இராவணனுக்கே அன்றோ
ஆனபின்பு அவனை அன்றோ முற்பட கைக் கொள்ள வேண்டுவது
இனித் தான் இவனைக் கைக் கொண்டால் இவனும் இவன் தன்னோடு வந்த நால்வரும் ஆகப் போம்
இராவணனைக் கைக் கொண்டால் துறுப்புக் கூடாக கைக் கொண்டது ஆகலாம்
மகா ராஜர் ஒருவரையும் அங்கீ கரிக்க வானர சாதியாக வாழ்ந்து போனால் போலே

எழுமையும் ஏதம் சாரா-
ஒரு காலமும் பொல்லாங்கு வந்து கிட்டாது –
சாரா -என்றதனால்-அதற்கு அவனும் தானும் நினைப்பிட வேண்டா -என்றபடி –
சும்மெனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்கிறபடியே-
நாம் இவ்விடத்தில் இருப்பதற்கு உரியோம் அல்லோம் -என்று தன்னடையே வந்து கிட்டாது –
இராஜ குல சம்பந்தத்தாலே விட்டு ஓடிப் போம் –
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆன் ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வான் துயரை ஆ ஆ மருங்கி -பெரிய திருவந்தாதி -54-என்ற திருப் பாசுரம் நினைவு கூர்க

குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை-
ஏதம் சார்ந்தாலும்-சென்று சேர வேண்டும்படி காணும் ஊரின் செல்வமும் இனிமையும் –
மலைகளைப் புடைபடத் தொளைத்து நெருங்க வைத்தால் போலே இருக்கிற மாடங்களும்-
அதன் அருகே அம்மாடங்களுக்கு நிழல் செய்தால் போலே இருக்கிற குருந்து-அதனோடு சேர்ந்த செருந்தி புன்னை –
அன்றிக்கே
சேர் -என்பதற்கு அம் மரங்கள் ஒன்றோடு ஓன்று சேர்ந்து இருக்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம்

மன்றலர் பொழில் –
ஊர் சுற்றிலே அலர்ந்து கிடக்கும் ஆயிற்று பொழில்கள்-
அன்றிக்கே
மன்று -என்று மன்றலாய்-அலர்தல் -என்று பரம்புகையாய்-வாசனை பரம்பா நின்றுள்ள சோலை -என்னுதலுமாம்-
இப்பொருளில் மன்றல் -என்னும் சொல் மன்று -என்று விகாரப் பட்டு கிடக்கின்றது –
குன்று சேர் மாடம் –
பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் உள்ளே புக்கு-வலம் வரா நிற்க-நான் சேவித்துப் போந்தேன் –
அல்லாதார் எல்லாரும் விரைந்து சடக்கென வாரா நிற்க-இவர்கள் திரு மாளிகைகளையும் திரு கோபுரங்களையும்
கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வருகிறபடியைக் கண்டு-
அல்லாதார்க்கும் இவர்களுக்கும் செயல் ஒத்து இருக்கச் செய்தே இவர்களான வாசி இருந்தபடி என் -என்று இருந்தேன் -என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
இனி -சேர் செருந்தி -என்பதற்கு-மரங்கள் ஒன்றோடு ஓன்று ஒத்து இருக்கின்றன -என்னலுமாம் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம்-ராகவ அர்ஹதி வைதேஹிம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5-
என்னுமாறு போலே ஆயிற்று -என்றபடி –
மேல் நித்ய சூரிகளை சொல்லக் கடவதாய் இருக்க-இங்கே தாவரங்களைச் சொல்லுகிறது என் -என்ன
உகந்து அருளின நிலங்களிலே மேன் மக்களோடு தாவரங்களோடு வாசி இல்லை என்று இருக்கும் உத்தேச்ய புத்தியாலே-
நித்ய சூரிகளுக்கு ஆனால் அவ்வருகு போக நினைவு உண்டாகைக்கு தகுதி உண்டு -நினையார்கள் இத்தனை –
ஞானத்தின் கார்யமான அன்பின் மிகுதியாலே நினைக்கைக்கும் தகுதி உண்டே அன்றோ-
வேறு ஒரு இடத்தில் போக நினைக்கைக்கு தகுதி இல்லை அன்றோ இவற்றுக்கு –
பிள்ளை ஜனநாத ப்ரஹ்மராயர் திரு முடிக் குறையிலே மரம் வெட்டுவியா நிற்க-எம்பார் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது –
ஈஸ்வர பிரக்ருதியை அழிக்கவோ -மிதுனம் கூட நீர் வார்த்து வளர்ந்தவை அன்றோ –
தாயார் பெருமாள் கடாஷத்துக்கு உரியவை ஆகையாலே -நீரால் இன்றி -அவர்கள் திருவருளாலே வளர்ந்தவை-
சுரவன் பாக்குகளை -உயர்ந்த பாக்குகளை -சிலவற்றை பட்டருக்கு கொடு வந்து கொடுக்க
அவற்றைக் கண்டு இவை இருந்தபடி என்-திருவருள் கமுகினின்றும் வந்தவையோ -என்று அருளிச் செய்தாராம்
நீரால் வளர்ந்தவை அன்றே-அவனுடைய திருவருள் பார்வையாலே வளர்ந்தவை அன்றோ –

அனந்த புர நகர் மாயன் –
ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு-தாழ்ந்தார்க்கு முகம் கொடுக்கலாம் என்னும் அதனாலே
திரு வனந்த புரத்தை விட மாட்டாதே நிற்கிற-சீல குணத்தின் மிகுதியைச் சொல்லுகிறது –

நாமம் ஓன்றும் ஓர் ஆயிரமாம் –
ஒரு திருப் பெயர் தானே விரோதிகளைப் போக்கி காப்பாற்றும் என்னும் இடம் முன் பாசுரத்தில் சொல்லிற்றே அன்றோ-
அப்படியே ஆயிரம் படி பாதுகாவலாய் இருக்கிற ஆயிரம் திருப் பெயர்களை உடையவன் –

உள்ளுவார்க்கும் –
உத்தேச்யமான பொருள் குறைவற்று இருந்தது –இனி நினைப்பாரே அன்றோ தேட்டம்
உள்ளுவாருக்கு-ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் ஓலக்கம் கொடுக்க
அவர்கள் நடுவே இருக்கக் கூடிய சர்வேஸ்வரன்
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கலாம் என்று -இந்நகரை விரும்பி-வசிக்கிற நீர்மையின் ஏற்றத்தை நினைக்க வல்லவருக்கு –

உம்பரூரே-
திருப் பெயர்களை நினைப்பார்க்கு-அவ்விடம் தானே உம்பரூர் ஆகும்
அன்றிக்கே
உள்ளுவார் பெருமிடம் உம்பர் ஊர் -என்னவுமாம் –
அவ் உம்பர் ஊர் தானும் நம்பால் விரும்பப் படுவதும் அவன் விடாதே வசிப்பதனால் அன்றோ-
அவனே தான் இவ்விடத்தே வசியா நின்றால்-பின்னை இவ்விடமே உத்தேச்யமாக தட்டு இல்லை அன்றோ –

—————————————————————————————————

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-

திவ்ய தேசத்தை பிராபித்த அளவிலே ஸமஸ்த கிலேசங்களும் போகும் -அந்த மார்க்க தர்சி தேசிகனுடைய
திரு நாமங்கள் ஏதேனும் ஒன்றாவது சொல்லி உஜ்ஜீவியுங்கோள் –
ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்-வாகனமும் அவனே த்வஜமும் அவனே -பெரிய திருவடியே
-ரக்ஷணத்துக்கு கட்டிய கொடி-பிரளயத்தில் -சென்று ரக்ஷிக்க ஒண்ணாத சமயத்தில் உண்டு ரக்ஷித்து-
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்–பிற்பாடார் இழக்க ஒண்ணாத படி நித்ய வாசம்
-இங்கே சடக்கென புகுந்தால் -சுலபம் இல்லையே அநந்ய பிரயோஜனராக
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்-பிரயோஜனாந்தர சம்பந்தம் போகும் -அதுக்கு அடியானை கர்மங்களும்
நிஸ் சேஷமாக போகும் -இதில் விசுவாசம் உள்ள நாங்கள் சொல்ல
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-ஸ்ரீ ராம ராமேதி -ராம திரு நாமம் -கேசவ திரு நாமம் -போக்யம் அனைத்தும் என்றவாறு –
-பள்ளியில் -சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்-நாராயண திரு நாமம் -பிரதானம் அப்ரதானம் வாசி இல்லையே இவற்றுள் –

தீய வினைகள் போகைக்கு அந்நகரத்தை அடைதலே போதியதாம்
ஆயிரம் திரு நாமங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லி-அனுபவியுங்கோள்-என்கிறார்

ஊரும் புள் –
புள் ஊரும்-பெரிய திருவடியை வாகனமாக கொண்டு நடத்தும் –

கொடியும் அக்தே-
கொடியும் அந்த திருவடியே –புள்ளினை கூறியது நித்ய சூரிகளுக்கும் உப லஷணம் –
அநேக சேஷ வ்ருத்திகள் நித்ய சூரிகள் அனைவரும் செய்வதற்கு உப லக்ஷணம் -ஏகதா பவதி இத்யாதி
இவ் உலகில் தொடர்பு சிறிதும் இல்லாத நித்ய சூரிகளுக்கு-
சென்றால் குடையாம் -முதல் திருவந்தாதி -53- என்கிறபடியே-உண்டாகச் சொல்லுகிற பல வகைப் பட்ட நிலைகள்-
இன்று சென்று கிட்டனவனுக்கும் வாசி அறக் கொடுக்கும்-என்கைக்காக சொல்லுகிறது –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசானுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ச தே -அயோத்யா -31-25-
இவன் எல்லா தொண்டுகளும் செய்வேன் என்று இருந்தாலும் பயன் இல்லை அன்றோ-
குருஷ்வ மாம் அனுசரம் வைதர்ம்யம் ந இஹ வித்யதே-க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவசார்த்த பிரகல்ப்யதே -அயோத்யா -31-22-
செய்க -என்று அவன் ஏவிக் கொள்ளாத அன்று-
இவன் இறைவனுக்கு தொண்டு செய்யாத அன்று ஆத்மாவுக்கு அடிமைத் தன்மை இல்லை –
ஆகையால் ஒன்றிலும் விருப்பு இல்லாதவனான தான் குறைய நின்று-இவனுடைய குறையைத் தீர்க்குமாயிற்று -என்றது
தான் குறை உடையவனாய் நின்று இவனை குறை இல்லாதவனாகச் செய்வான் -என்றபடி –
இவன் தொண்டு செய்து -அடிமைத் தன்மை உடையவனாம்படி இவனைச் செய்வித்து
குறைவற்றவனாக வேண்டும் அன்றோ அவனுக்கு -என்றது
இவன் தொண்டு செய்து அடிமை தன்மை உடையவனாம் பொருட்டு அவன் தன்னை தாழ விட்டான் என்றால்-
அது தானே நிறை யுடைமைக்கு உடலாக இருக்கும் அன்றோ -அவனுக்கு –என்றபடி –
இன்னார் தூதன் என நின்றான் -பெரிய திருமொழி -2-2-3-என்ற பின்பே அன்றோ சேஷியாம் தன்மை அவனுக்கு உண்டாயிற்று –

உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் –
இவ் உலகத் தொடர்பு இல்லாத நித்ய சூரிகளை எல்லா அடிமை கொள்ளுகை அன்றிக்கே
பிரளய ஆபத்திலே உலகத்தை எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கி
பின்னே உள்ளே கிடந்தது தளர ஒண்ணாது என்று வெளி நாடு காண உமிழ்ந்தவன் –

சேரும் தண்ணனந்தபுரம் –
பிரளய ஆபத்திலே உலகத்துக்கு அவன் வயிற்றில் புகாத போது உண்டான செல்லாமையைப் போலே
ஆயிற்று அவனுக்கு இந்நகரத்திலே புகுராத போது உண்டான தரிப்பறுதி-
பிரளய ஆபத்தின் நின்றும் உலகம் முழுதினையும் பாது காத்தவன் சேரும் –வந்து சேரும்
அன்றிக்கே
பாரம் நீங்கினவனாய்க் கொண்டு வந்து சாய்ந்து அருளுகிற இடம் என்னுதல்-
மயக்கத்தாலே அவன் இப்படி விரும்புகிறான் அல்லன் –
இனிமையால் விட மாட்டாதவனாய் இருக்கிறான்-என்பதனைத் தெரிவிக்கிறார் -தண் -என்ற சொல்லாலே –
உகந்து அருளின நிலமாகில் இப்படி இருக்க வேண்டாவோ –தான் உகந்த ஊர் -திரு நெடும் தாண்டகம் -6-என்னக் கடவது அன்றோ-
தானும் உகந்து நித்ய சூரிகளும் உக்கும் இடம் அன்றோ பரமபதம்-
இங்கு தன் உகப்பு மாத்ரம் அன்றோ இருப்பது -என்றது
இவர்கள் விருப்பு அற்று இருப்பினும் தான் விட மாட்டாதே-காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கிற இடம் அன்றோ -என்றபடி –

சிக்கெனப் புகுதிராகில் –
நச புன ஆவர்த்ததே நாசா புன ஆவர்த்ததே -என்கிறபடியே
மீளாத ருசியை உடையீர்களாய் கொண்டு கிட்டுவீர் கோளாகில் –

தீரும் நோய் வினைகள் எல்லாம் –
துக்கங்களும்-துக்கங்களுக்கு காரணம் ஆனவைகளும் அழியும் –

திண்ணம்-
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜம் உச்யதே
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் -பாரதம்-என்னுமாறு போலே –

நாம் அறியச் சொன்னோம் –
திண்ணமாக அனுபவத்தாலே கை கண்ட நாம்
இதில் வாசி அறியாத நீங்களும் இழக்க ஒண்ணாது என்று உங்கள் நெஞ்சில் படும்படி சொன்னோம்
பல நாள் துன்பப் பட்டு கரை கண்டவர் ஆகையாலே -நாம்-என்கிறார்
இனி
கர்மங்களுக்கு கட்டுப் பட்டவர்களாய் படுமவர்கள்
சொன்ன வார்த்தையை நினையாமையாலே படுகிறார்கள் அத்தனை
நம் மேல் குறையற நாம் சொன்னோம் -என்பார் -சொன்னோம் -என்கிறார்

நன்று -அச் செயலுக்கு அந்நகரத்தை சென்று சேர்த்தாலே போதியதாம் என்றீர்-
இனி சொல்லி இருக்க அடுப்பது என் -என்ன –
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே –
ஒரு திருப் பெயர் தானே-ஆயிரம் படி பாதுகாவலாய் இருக்கின்ற
ஆயிரம் திருப் பெயர்களை உடையவன் -என்று
சொன்னோமே அன்றோ முன்பே -ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் -9-9-3-
அவற்றில் வாய்க்குத் தோற்றிற்று ஒரு திருப் பெயரைச் சொல்லுங்கோள் –
மனத்தின் துணையும் வேண்டா -என்பார் -பேசுமின் -என்கிறார் –

—————————————————————————————————–

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-

ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக நிரதிசய வாத்சல்யம் -இவனை பூஜிக்கும் பாக்யாதிகர்கள் -சிலாக்யத்தை பேசுமின் –
பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து-கடலால் சூழப்பட்டு
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்-பரிமளம் பரப்பி -சோலைகள் வயல்கள்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி-ஆஸ்ரிதர் இடம் நிரதிசய வாத்சல்யம் -சேஷித்வ அநு ரூபமான மார்க்கத்தால்
-நீதி வானவர் போலே -புஷ்பாதி உபகரணங்கள்
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே-கொண்டு பூஜித்து -பாக்யம் செய்த பிரகாரத்தை கூச்சம் இல்லாமல் பேசுமின்
-ஸ்லாகித்து -உங்கள் யோக்யதை பார்க்காமல் -நைச்யம் பாராட்டாமல் -என்றவாறு -ஆராதிப்பவர்கள் உடைய வாத்சல்யத்தை பேசுமின் –

பற்றுகின்றவர்க்கு ருசி பிறப்பதற்காக-திரு வனந்தபுரத்திலே புக்கு அடிமை செய்கின்றவர்கள்-
எத்தகைய புண்ணியம் செய்தவர்கள் -என்கிறார் –
அன்றிக்கே
அவர்கள் புண்ணியம் செய்த படியைப்-பேசுங்கோள் -என்கிறார் -என்னுதல் –

பேசுமின் கூசமின்றிப் –
உங்கள் தாழ்வினை பார்த்து கூசாதே பேசுங்கோள்-
தாம் மயர்வற மதி நலம் அருளப் பெறச் செய்தேயும்-பலகாலம் பிறந்து இறந்து போந்த வாசனையாலே-
அருவினையேன் -1-5-1- என்று பேசுகைக்கு கூசின இது –இவர்களுக்கும் உண்டு -என்று இருக்கிறார் –
பகவானைப் பற்றி பேசும் போது கூசத் தான் வேண்டா அன்றோ-அறியாமையால் அன்றோ பேசாது இருந்தது –
பேசத் தக்க சம்பந்தம் உள்ள விஷயம் என்று அறியவே-கூசாதே பேசலாம் அன்றோ –

பெரிய நீர் வேலை சூழ்ந்து-
மிக்க தண்ணீரை உடைத்தான கடலாலே சூழப் பட்டு –

வாசமே கமழும் சோலை –
நறு மணமே கமழா நிற்கும் ஆயிற்று சோலை –
சூழப் போந்த சோலையிலே நறு மணம் புறம்பு போகாதபடி-மதிள் இட்டால் போலே யாயிற்று இருப்பது கடல்-
கடலில் நாற்றம் மேலிடாதபடி-சோலையின் நறு மணமே விஞ்சி இருத்தலின்-வாசமே கமழும் -என்று ஏகாரம் கொடுத்து ஓதுகிறார் –
சம்சார கந்தம் தட்டாத படி -ஸ் வாபதேசம் –
வயல் அணி அனந்த புரம் –
இப்படிப் பட்ட சோலையை உடைத்தான வயலாலே-அலங்கரிக்கப் பட்டு இருக்கின்ற திரு வனந்த புரத்தை
நேசம் செய்து உறைகின்றானை கூசம் இன்றிப் பேசுமின் -என மேலே கூட்டுக
இப்போது
நேசம் செய்து உறைகின்றானை பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -என்பது வியப்பிலே நோக்கு
அன்றிக்கே –
நேசம் செய்து உறைகின்றானை பூசனை செய்கின்றார்கள்-புண்ணியம் செய்த வாற்றை கூசம் இன்றி பேசுமின் -எனக் கூட்டலுமாம்
அப்போது -பாகவதர்கள் பெருமையை கூசம் இன்றி பேசுதல் ஆவது என் என்னில்
பகவத் விஷயம் போலே வாய் வந்த படி சொல்ல ஒண்ணாது-பாகவத விஷயம் -என்பதனைத் தெரிவித்தபடி –

நேசம் செய்து உறைகின்றானை –
பரம பதத்தில் தவிர ஒண்ணாமை யாலே இருக்கின்றான் அத்தனை-அப்பரம பதத்தை வசை சொல்லி ஆயிற்று இங்கு வசிப்பது-
பிரதம பரிகரத்துக்கு செங்கல் சீறை வைப்பது போலே அன்றோ பரமபதத்தில் –
துன்புறு கின்றவர்களை பாது காப்பதற்கு உடல் அல்லாத இடமும் ஓர் வசிக்கும் இடம் ஆயிற்றதோ -என்று
துன்புற்ற வர்களை பாதுகாப்பதற்கு பாங்கான தேசம் என்று விரும்பி வசிப்பது இங்கே யாயிற்று
தர்சனம் சித்ரகூடச்ய மந்தாக்னி யாச்ய சோபனே-அதிகம் புரவாசாச்ச மன்யே தவச தர்சநாத் -அயோத்யா -95-12-என்கிறபடியே
இந்த சித்ரகூடத்தில் வசிப்பது அயோத்யா வாசம் விட மேலானது –

நெறிமையால் மலர்கள் தூவி -பூசனை செய்கின்றார்கள்-
சர்வேஸ்வரன் சேஷி-இவ் உயிர்கள் எல்லாம் அவனுக்கு சேஷம்-என்கிற சேஷி சேஷ பாவ முறைமையாலே-
மலர் முதலானவற்றை அவன் திருவடிகளிலே பணிமாறி-
அன்றிக்கே
அவன் தான் இந்நகரத்தை விரும்பி இங்கே வசிப்பது போன்று-தாங்களும் பக்தியை உடையவர்களாய் மலர்களைத் தூவி -என்னுதல் –
அன்றிக்கே
இவர்கள் வசிக்கிற இடம் என்று அவன் விரும்பி இங்கு வந்ததைப் போன்று-
தாங்களும் ஒருபிரயோஜனத்தை கணிசியாதே -அநந்ய பிரயோஜனராய் அவனை அடைந்து-என்னலுமாம் –

புண்ணியம் செய்தவாறே –
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -திரு விருத்தம்-21 -அடிமை செய்கிறவர்களுடைய அடிமையும் ஓர் அடிமை யாயற்றதோ –
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே ஆயிற்று அவர்கள் –இளைய பெருமாளைப் போலே ஆயிற்று இவர்கள் –
அவன் விட்டுப் போரச் செய்தேயும்-பாரதந்திரியத்தாலே விட மாட்டாதே கிடக்கிறார்கள் இத்தனை அன்றோ –
இங்கே அடிமை செய்பவர்கள் பாக்ய சாலிகள் என்கிறார்-

——————————————————————————————

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

நிருபாதிக சேஷி யைக் கிட்டினவர்கள் நித்ய சூரிகள் ஆவது திண்ணம் –
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி-ஜல புஷுபாதிகள் -பக்தி உடன் மடி தடவாத -சுருள் நாறாத பூ சுண்ணாம்பு கலவாத சந்தனம் –
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்-உத்பாதகன் -நிரந்தர அனுசந்தானம் பண்ணி அனுபவிக்க
-ஜென்மம் -த்ருஷ்ட தோஷம் -போகும் -மேலும்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து-அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்-
நிருபாதிக ஸ்வாமி -யாவரும் அமரர்களில் அந்நிய தமர் ஆவார் -நித்யர் முக்தர் வாசி இல்லையே –
இது திடம் -உங்களுக்கு அறியும் படி சொன்னோம்

திரு வனந்த புரத்தை அடையுமவர்கள் நித்ய சூரிகள் ஆவார்கள்
ஆகையால் நீங்களும் அடைமின் –என்கிறார்

புண்ணியம் செய்து –
பக்தியைச் செலுத்தி-த்யானம் வர்ண ஆஸ்ரம தர்மங்களை அங்கமாக உடைத்தாய் இருக்கும் அன்றோ
ஆக -வர்ண ஆஸ்ரம தர்மங்களின் பலமான பக்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தை சொல்லுகிறது-
புண்ணியம் -கர்ம யோகம் -அங்கி யான பக்தி -த்யானம் -வர்ணாஸ்ரம தர்மம் புண்ணியம் -சத் கர்மம் புண்ணியம் காரணம் -காரியம் பக்தி –
மத்ம நாபவ மத் பக்த மத் யாஜி மாம் நமஸ்குரு-மாமேவ ஏஷ்யசி யுக்த்வா ஏவம் ஆத்மாநாம் மத் பராயணா-ஸ்ரீ கீதை -18-65-
என்னிடத்திலேயே பக்தியை உடையவனாய் என்னிடத்திலேயே மனத்தை உடையவன் ஆவாய் -என்னக் கடவது அன்றோ
நல்ல புனலொடு மலர்கள் தூவி –
நல்ல புனலொடு கூடின மலர்களை பக்தி பரசமாய்க் கொண்டு பணி மாறி
இத்தால் அர்ச்சனை -முதலியவற்றைச் சொல்லுகிறது
என்னை ஆராதிக்கிற வனும் என்னை வணக்கம் செய்கிறவனும் ஆவாய் -என்னக் கடவது அன்றோ –

எண்ணுமின் –
சததம் கீர்த்தயந்தோ மாம் யதன் தச்த த்ருடவ்ரத-நமச்யந்தச்ய மாம் பக்த்யா நித்ய யுக்தஉபாசதே -ஸ்ரீ கீதை -9-14
எப்பொழுதும் என்னை கீர்த்தனம் செய்கின்ற வர்களாயும் -என்னா நின்றதே அன்றோ –அதனைச் சொல்லுகிறது –

எந்தை நாமம்-
இடறினவன் அம்மே என்னுமா போலே-திருநாமம் சொல்லுகைக்கு ஒரு தகுதியைத் தேடிக் கொள்ள வேண்டா-
நஞ்சீயர் பட்டரை-திரு நாமம் சொல்லும் பொழுது பக்தி உடையனாய் சொல்ல வேண்டுமோ -என்று கேட்க-
கங்கையில் முழுகப் போமவனுக்கு-வேறு உவர்க் குழியிலே முழுகி போக வேண்டுமோ-
மேல் உண்டான நன்மையைத் தருகிற இது-அதிகாரி சம்பத் ஆகிய -தகுதியையும் தர மாட்டாதோ -என்று அருளிச் செய்தாரம் –
திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது-அவர்களே அதிகாரிகள் –

இப்பிறப்பு அறுக்கும் –
இ -சுட்டு எழுத்து
கண்டதே அன்றோ இதனுடைய இழையீடு -நூலாலே தைத்தல்
இழை இட்டால் போலே இருக்கிற அவயவங்களுடைய சேர்த்தி
கவிழ்ந்து பார்க்கவே அமையுமே இதனுடைய அகவாயை-தன்னைடையே வைராக்கியம் பிறக்குமே –
இப்படி கண் கூடாக கண்டு இருக்கச் செய்தேயும் வைராக்கியம் பிறவாது இருக்கிறதே அன்றோ வாசனையின் கனம் –
ஒரு செட்டியை -இவன் தமிழில் சிறந்த புலமை படைத்தவன் -என்று பட்டருக்கு காட்டினார்களாக
பட்டர் அவனைப் பார்த்து -உனக்கு யாதேனும் கேட்க விருப்பம் இருப்பின் கேட்கலாகாதோ -என்ன
சிலர் -காண்கிற இத் தேகத்துக்கு அவ்வருகு ஆத்மாவும் இல்லை –
புண்ணிய பாபங்களும் இல்லை-ஈஸ்வரனும் இல்லை -என்று இரா நின்றார்கள்-
சிலர் -இச் சரீரம் தான் நிலை அற்றது -என்று இதனுடைய தாழ்வினைக் கண்டு-
அவ்வருகே நிலைத்து இருக்குமது ஒன்றனை பற்ற வேண்டும் -என்று இரா நின்றார்கள்-
விஷயம் ஒன்றாக இருக்க வேறுபட்ட இவ்விரண்டு கொள்கைகளும் நடக்கிற படி எங்கனே -என்ன-
தைவீ ஹி ஏஷ குணமயீ மம மாயா துரத்தயா-மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-
என்கிறபடியே
நல்லவர்கள் இதனுடைய தாழ்வினைக் கண்டு இதனைக் கழித்து கோடற்க்கும்-
மற்றையோர்கள் இதிலே இனிமை உண்டு என்று நினைத்து கேடு உறுகைக்கும்-
உடலாம்படி கர்மங்களுக்கு தகுதியாக இதனை எடை எடுத்து காணும் -நிறுத்து -அறுதி இட்டு -காணும் –
ஈஸ்வரன் பண்ணிற்று என்று அருளிச் செய்தார்-
இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தரு கணையா
காரணமும் வல்லையேல் காண் –இரண்டாம் திரு -66-என்னும்படியாய் இருக்கும் அன்றோ-
நாம் நன்றாக நினைத்து இருக்குமது அன்று இதன் தன்மை –அல்பம் அஸ்திரம் -ஆகாரம் பிரத்யஷிக்கலாமே –
ஈஸ்வரன் வெளிச் சிறப்பினை பிறப்பிக்க-இது சிறிது -நிலை அற்றது -என்று அறிந்த இதுவே காண்-
இதுக்கு நிலை நின்ற தன்மை –இப் பிறப்பு அறுக்கும் –
இப்படி தாழ்வு உள்ளதாக அறியப் படுகின்ற இச் சரீர சம்பந்தத்தை அறுக்கும் –

செறி பொழில் அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் –
செறிந்த சோலையை உடைத்தான திரு வனந்த புரத்திலே
வந்து திருக் கண் வளர்ந்து அருளுகிற இறைவனுடைய
எல்லை இல்லாத இனிமை உடைய திருவடிகளை கிட்டுமவர்கள் –

அப்பால் அமரர் ஆவார் –
இப்பிறப்பு அறுக்கும் என்ன வேண்டாத சரீரத்தை-மேற்கொண்டு அடிமை செய்கிறவர்களும்
திரு வனந்த புரத்திலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன்-திருவடியை அடைந்தவர்கள் –
அப்பால் அமரர் ஆனவர்களும் –அணுகுவர்
ஆக –
இதனால் விரோதியைப் போக்கும் அளவே அன்றியே-
விரும்பிய பொருளைப் பெறுகைக்கும்-திரு வனந்த புரமே-அடையத் தக்க தலம் -என்கிறது –

திண்ணம்
-நிச்சயம் –

நாம் அறியச் சொன்னோம் –
அவனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நாம்-
தேகத்தையே ஆத்மாவாக அபிமானித்து இருக்கிற நீங்களும்-அறியும் படி-
உங்கள் கேட்டினைப் பார்த்துச் சொன்னோம்

——————————————————————————————-

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-

சர்வ தேவ நிர்வாகம் -ஸூ ரிகள் ஆதரிக்கும் -நாமும் போவோம்
அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து-தேவர்களுக்கும் உத்பாதகன்
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்-மலையாள பாஷை -சேனை முதலியார் ஆராதிக்கும்
-எடுத்துக் கை நீட்டும் அமரர்கள் –
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்-நாமும் அந்தரங்க கைங்கர்யம் செய்ய வேண்டுமே –
நம் திவ்ய தேசம் அன்றோ -குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-கபாலித்தவம் போக்கி அருளி –

நித்ய சூரிகளும் வந்து அடிமை செய்வது இங்கே ஆகையாலே-
திரு வனந்த புரமே அடையத் தக்க மேலான இடம்-
அங்கே நாம் அடிமை செய்ய வேண்டும் –என்கிறார்

சசைன்ய புத்ர சிஷ்ய-சாத்ய சித்த பூசூரர்-அர்ச்சனத்துக்கு
முக நாபி பாதங்களை-த்வார த்ரயத்தாலே காட்டும்
சாம்யம் -அனந்த சயனத்திலே -வியக்தம் -ஆச்சார்யா ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்தி-3-84-
அமரராய் திரிகின்றார்க்கு ஆதி -பிரமன் முதலான தேவர்கள் -திரு நாபியின் பக்கம்
அமரர்கோன் -விஷ்வக் சேனர் -நித்ய சூரிகளுக்கு திருமுக மண்டலம்-
நமர்களோ –நாமும் போய் நணுக வேண்டும் -திருவடியே புகல்-

அமரராய்த் திரிகின்றார் கட்கு –
மாம்பழத்தோடு ஒரு சம்பந்தம் இல்லாத ஒன்றுக்கு-
மாம்பழ உண்ணி -என்று பெயராய் இருக்குமா போலே-இக்கரையராய்-
அவ்வருகு உள்ளார் காட்டிலும் நாலு நாள் எழப் பிழைத்து இருந்து சாகிற-இவ்வளவினையே கொண்டு
தங்களுடைய ஆயுளுக்கு ஓர் எல்லை உண்டாய் இருக்கச் செய்தே-
அது இல்லாரைப் போலே அகங்காரம் கொண்டு திரிவார்கள் ஆயிற்று-
தளைக் கட்டு கனத்து இருக்கச் செய்தேயும் அச்சம் அற்றவர்களாய் திரிவர்கள் ஆதலின் -திரிகின்றார்கட்கு -என்கிறார்-
இவன் -மனிதன் -அளவு அல்ல ஆயிற்று அவர்களுக்கு –விடும் போது ஒரு சரீரத்தை மாத்ரம் ஆதல்-
ஒரு பெண்பால் ஆதலாய் இருக்கும் இவனுக்கு-பிரமனுக்கு அண்டம் அத்தனையும் விட வேண்டி வரும் அன்றோ –

ஆதிசேர் அனந்த புரத்து –
இவர்களுக்கும் அவர்களுக்கும் ஒப்புமை அவனை காரணனாக உடையும் தன்மையிலே ஆயிற்று-
அவர்களுக்கு ஆத்மாவைப் பாதுகாத்துக் கொடுக்கும்-இவர்களுக்கு சரீரத்தையும் ஆத்மாவையும் சேர்த்து-
இச் சரீரம் கணம் தோறும் நசிக்க-உண்டாக்கி நடத்திக் கொடுக்கும்-
அனுபவிப்பித்து உளராம் தன்மையை நோக்கும்-உலகத்து எல்லாம் காரணனாய்-உள்ளவன் வந்துவசிக்கிற திரு வனந்த புரத்து –
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் -விண்ணோர்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் நித்ய கைங்கர்யம் செய்கிறான் –
நித்ய சூரிகள் எடுத்துக் கை நீட்டுவர் –

நமர்களோ சொல்லக் கேண்மின்-
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-1-1- என்று சொன்னதற்கு உள்ளே அடங்கும்படி-
என்னோடு -நிருபாதிக -காரணம் பற்றி வாராத –சம்பந்தம் உடையார் அடங்கலும் நான் சொல்லுகிற வார்த்தையை கேளுங்கோள் –
பந்துக்களாய் இருப்பார்க்கு நல் வார்த்தை சொல்ல வேண்டும் அன்றோ –

நாமும் –
அடிமையிலே ருசி உடைய நாமும் –
நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகச் சென்று கிட்டி அடிமை செய்ய வேண்டும் –
போய் நணுக வேண்டும்-
இங்கே இருந்து நினைக்குமது போராது-போய் புக வேண்டும் –

அவர்கள் நடுவே பிறவிகளில் உழன்று வருகிற நமக்கு கிட்ட ஒண்ணுமோ -என்னில் –
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே –
தேவர்களுக்கு சேனாதிபதியாய்-முதல்வனான சுப்ரமணியனுக்கும் கூட தந்தையான
சிவ பெருமானுக்கு-பாவத்தால் வந்த துன்பத்தினைப் போக்கின கிருஷ்ணனை-
அன்றிக்கே
தேவர்களும் அசுரர்களும் கூட்டுப் படையாய் எதிரிட்டு வரும் அன்றும்-
அவர்கள் ஆபத்தினைப் போக்கி பாது காப்பவன் ஆயிற்று -என்னுதல் –
ஆனபின்பு நமக்கு அந்நகரத்தை அடைய ஓர் அருமைப் பாடு உண்டோ –
செருக்கு கொண்டவர்களுக்கும் துக்கத்தினை போக்குமவன்-
யான் -எனது -என்ற செருக்கு அற்ற நமக்கு-தன்னைக் கிட்டுகையில் அருமைப் படுத்துமோ –
குமரனார் தாதை துன்பம் துடைத்த-சிவன் முதலாயினோர்க்கு துக்கத்தினை போக்குமவனாய் இருக்கும்-
கோவிந்தனாரே -பசுக்களுக்கும் ஆயர்களுக்கும் கையாளாய் இருக்கும் கோவிந்தனாரை நாமும் போய் நணுக வேண்டும்-

————————————————————————————————

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-

சகல ஜகத் ஸ்ருஷ்டித்து – -ஆதி -ஜகத் காரணன் -வர்த்திக்கும்–கைங்கர்யம் செய்ய -வம்மின் –
ப்ராப்ய அலாப நிபந்தமான கிலேசம் –
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்-லோகங்கள் மனுஷ்யாதிகள் பிராணிகள் -தேவதைகள் -மகதாதி பதார்த்தங்கள்
-ஒன்று ஒழியாமல் படைத்து சம்ஹரித்த -ஸ்ருஷ்ட்டி இரண்டாவது கார்யம் -சம்ஹாரமே முதல் கார்யம் -அநாதி எல்லாம் -சத் கார்ய வாதம் –
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
திருமேனி உடன் -கோவிந்தன் -ஊழி முதல்வன் -ஸ்ருஷ்ட்டி உன்முகனான சர்வேஸ்வரன் –காலத்தால் லஷிக்கப் பட்ட சகல பதார்த்தங்கள்
-கல்பாந்தம் -ஊழி -அவற்றுக்கு முதல்வன் -ஆழி மழைக்கண்ணா -தயா கார்யம் -அனுக்ரகம் -உருவம் சொல்லி
காம் விந்தத்தி கோவிந்தா -சொத்தை அடையும் கோவிந்தன் -தம பர -ஏகி பவதி-
கோவிந்தன் துடைத்தும் படைத்தும் -க்ரஸிக்கிறான் -என்றபடி -துடைப்பது ஆகார அவஸ்தா பேதங்கள் –
ஸ்தூல ஸூஷ்ம ஆகாரங்கள் –கிருஷ்ணனே உத்பத்திக்கும் சம்ஹாரத்துக்கும் காரணம் -சொன்னதால் கோவிந்தனார் –
காரணத்தை பிரகாசிப்பித்ததால் -எம் பரம மூர்த்தி -மயர்வற மதி நலம் அருளி -அமலன் ஆதி பிரான் -உபகாரகன் -சர்வாதிக சேஷி –
ஸ்ருஷ்ட ஜகத் ரக்ஷணம் அர்த்தமாக கண் வளர்ந்து அருளி
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்-அவனுடைய திவ்ய தேசம் -ஜல ஸம்ருத்தி –
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே-பாபங்கள் விலகும் -சம்மார்ஜனம் திரு அலகு இடுதல் –அடிமை செய்யப் பெற்றால்
-கைங்கர்யம் இல்லாத கிலேசம் -கடு வினை -களையலாம் -பிராயச்சித்தம் இல்லை -கைங்கர்யம் செய்வதே –
சேஷத்வ ஞானத்துடன் கைங்கர்யம் செய்யா விடில் கிலேசம் வருமே அத்தைப் போக்கும் என்றபடி –
கைங்கர்ய அலாப -நிபந்தமான அதிசயித துக்கம் களையலாம் –

சர்வேஸ்வரன் திருக் கண் வளர்ந்து அருளுகின்ற-திரு வனந்த புரத்திலே சென்று-அடிமை செய்யப் பெறில்-
ஒரு தேச விசேடத்திலே போய் அடிமை செய்யப் பெற்றிலோம்-என்னும் துக்கம் போம் –என்கிறார்
–கடு வினை -பிராப்ய அலாப அதிசயித துக்கம் –

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்-படைத்த வெம் பரம மூர்த்தி –
துடக்கை -அழித்தல்-அழித்தல் முன்னாக அன்றோ படைத்தல் இருப்பது-
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்தி அபி ச அப்யய-கிருஷ்ணச்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம் -பாரதம் வீட்ம பர்வம் –
உலகின் உடைய தோற்றமும் கிருஷ்ணன் தான் அழிவும் செய்து அருளினான் என்பது – பிரசித்தம் -என்றபடியே
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -பெரியாழ்வார் திருமொழி -1-1-8-என்கிறபடியே-
அவாந்தர நைமித்திக பிரளயம் -ப்ரஹ்மா பகல் பொழுது – முடிந்த உடன் –இதில் தான் வயிற்றில் வைத்து ரக்ஷிப்பார்-
ஏழும் -என்றது உலகு அளந்த பொழுது ரக்ஷிக்கும் பாரிப்பால் அளந்தது போலே இங்கும் –
மூன்றை காண வேண்டியவள் ஏழைக் கண்டாள் -மண்ணை காண வேண்டியவள் காரியத்தை கண்டாள்-

உலகு உயிர் தேவு மற்றும் படைத்த –
உலகத்தையும் தேவ சாதியையும்-மற்றும் உண்டான உயிர்களையும் உண்டாக்கின -என்றது-இவை மிகைத்த அன்று அழித்து-
பின்னர் பேற்றினை அடைவதற்கு கருவியான-கரணங்களைக் கொடுத்து காப்பாற்றினவன் -என்றபடி –

எம் பரமமூர்த்தி-
அடியார்க்கு எளியனான சர்வேஸ்வரன்-ஆஸ்ரித பவ்யன் -எம் -சர்வேஸ்வரன் -பரம மூர்த்தி

பாம்பணைப் பள்ளி கொண்டான் –
படைக்கப் பட்ட உலகத்திலே-பாதுகாக்கும் பொருட்டு-திரு வனந்த ஆழ்வான் மேலே-திருக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய-

மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம் –
தண்ணீர் நிறைந்து இருப்பதனாலே-மடைத் தலைகளிலே களித்து-
வாளைகள் பாயா நின்றுள்ள-வயலாலே அலங்கரிக்கப் பட்டு உள்ள நகரத்திலே-
முக்தர்கள் சாமகானம் செய்து களித்து வசிக்குமாறு போலே ஆயிற்று-அந்நகரிலே திர்யக்குகளும் களித்து வசிப்பது –

கடைத்தலை சீய்க்கப் பெற்றால் –
திருவாசலிலே திரு வலகு திருப் பணி செய்யப் பெற்றால் –

கடு வினை களையலாமே –
அடிமை செய்யப் பெறாமையாலே-உண்டான துயரம் எல்லா போம்-
சேஷத்வ ஞானம் பிறந்தால் –ஸ்வரூபத்துக்கு அனுரூபமான கைங்கர்யத்தை-
பெறாமையால் வரும் துயரம்-கழுவாயால் போக்குமது அன்றே-

—————————————————————————-

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8-

நிரதிசய போக்யம் -அதி பிரியங்கரன் -திருவடிகளை அனுபவிக்க -நம்முடையார் -மாதா பிதா -மத அந்வயானாம் -ஆளவந்தார் -இவர் அவன் இடம் –
பரம ப்ராப்ய புதன் –
அதன் படி நடக்க பாருமின் -அனுஷ்டானம் என்றுமாம்
கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை-குரூரமான பாபங்கள் -பிராப்தி விளம்ப பிரதிபந்தகங்கள் –
பாபம் -முன்பு கிலேசம் -ஆய -கைங்கர்யம் -மன்னவர் விதியே -அடைவது உறுதி -அதனால் விளம்பம் என்கிறார் இதில் –
மன்மதனை பயந்த -பிரசவித்தும் காளை இளகிப் பதித்து –
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்-இருப்பிடமாகக் கொண்ட திவ்ய தேசம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண-சம்ச்லேஷ ஸ்பரிசத்தால் பணைத்து-திருப் பாதம் காண துவாரம் நமக்கு -த்வார த்ரயம் –
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்-நடந்து போக -வழி எல்லாம் -உள்ளார் ஸத்காரம் -அர்ச்சிராதி கதி போலே
அறிவிப்பார் குறை இல்லாமல் -விஷய வை லக்ஷண்யம் அறிந்த நாம் -மயர்வற மதி நலம் அருள பெற்ற நாம் -சொன்னோம் -கேள்மின் -அத்யாகாரம் –

திரு வனந்த புரத்திலே திருக் கண் வளர்ந்து அருளுகிற-சர்வேஸ்வரன் திருவடிகளை
காணப் போருங்கோள் என்று-அனுகூலரை அழைக்கிறார்-

கடுவினை களையலாகும்
நம்மால் போக்க அரியதான பாவங்களைப் போக்கலாம் –

காமனைப் பயந்த காளை-
உங்களுக்கு நான் உபதேசிக்க வேண்டுவது-அப்பரமனை நேரில் காணும் அளவே –
நாட்டினை தன் அழகாலே வெருட்டித் திரிகிற-காமனுக்கும் தமப்பனாய் இருப்பான்-
இருவரையும் ஒரு சேரக் கண்டால்-முறை கெடச் சொன்னார்களே என்று இருக்கும்-
மரனாந்தானி வைராணி பிரசவாந்தம் ச யௌவனம்-குபிதம் பிரணதாந்தம்ச யாசிதாந்தாம்ச கௌரவம் –
கற்றைக் குழலார் கவினெலாம் ஓர் மகவை-பெற்ற கணத்தே பிரியுமே
இளமைப் பருவம் ஒரு குழந்தையை பெறுகிற வரையில் தான் -என்பதும்
இவன் விஷயத்தில் வேறு வகையாக இருக்கிறது காணும் –
காளை –அழகன் -சேவை சாதித்ததும் உங்கள் உடன் நான் இல்லை -சாஷாத் கரிக்கும் அளவு தான் பேச முடியும் —
சாஷாத் மன்மத மன்மதன் -அவனும் மடல் எடுக்கும் படி அன்றோ இவன் அழகு –

இடவகை கொண்ட தென்பர் –
இவ்விடத்தை வசிக்கும் இடமாகக் கொண்டது-என்று அறிவு உடையார் அடங்கலும்
செவி சீப்பாய்ந்து கிடப்பர் -ஈடுபட்டு இருப்பார் -என்றபடி
பத்மநாபம் விதுர்ப்புதா -பிரமாணம்-அறிஞர்கள் பத்ம நாபனை அறிகிறார்கள் -என்றபடி –

எழில் அணி அனந்த புரம் –
பரம பதத்தில் ஒரு புதுமை செய்ய ஒண்ணாது அன்றோ-
அங்குத்தை காட்டிலும் இங்குத்தைக்கு தன்னேற்றம் இருக்கிறபடி –

படமுடை யரவில் –
சர்வேஸ்வரன் சாய்ந்து அருளினால்-அவனுக்கு பிறக்கும் மலர்த்தி சொல்லுகிறது -படமுடை அரவு -என்று –

பள்ளி பயின்றவன் –
இயற்கையிலே முற்றறிவினனான-ஸ்வாபாவிக சர்வஞ்ஞன் -அப் பராத் பரனும்
உணர்த்தி அறும்படி ஆயிற்று அப்படுக்கை வாய்ப்பு –
மெத்தன்ன பஞ்ச சயனம் -பெரும் துயில் தான் தந்தானோ –

பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் –
திருவடிகளைக் காணும்படியாக-
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற-கரியான் கழல் காண கருதும் கருத்து -9-4-5- என்கிறபடியே
என்று இருக்கும் என்னோடு ஒரு குடல் தொடக்குடையார் அடங்கலும்-போகப் பாருங்கோள் –
திரு அத்த்யயனம் பாடா நிற்க -இதனைக் கேட்டருளி-ஆளவந்தார் –
நமக்கு ஆழ்வார் உடன் ஒரு சம்பந்தம் உண்டாக வேண்டும் -என்று-
அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு-எழுந்து அருளினார்-
இத்தைச் செய்தாவது ஆழ்வார் சம்பந்தம் பெறலாம் என்று -நாமோ -ஆழ்வார் சம்பந்திகள் என்று இறுமாப்புடன் போவோமே –
நாம் -திருக் கண் வளர்ந்து அருளுகிற அழகில் சுவடு அறிந்து
எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -8-7-1-என்னக் கடவ நாம் –

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் –
அவ்வடிவினைக் காண வேண்டும் என்னும் விருப்பத்தினைக் உடைய நீங்கள் அறியும்படி சொன்னோம்

————————————————————————————–

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

ப்ராப்தனானவன் -திருவடிகளில் கைங்கர்யம் பண்ண -பிரதி பந்தகங்கள் போகும் –
நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான-வைத்த நாள்கள் எல்லை குறுகிச் சென்று -ஆழ்வார் குறித்த நாள்கள்
-சரீர அவசான-திவசங்களும் அருகில் வர –
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்-பொழில்களை உடைத்த திவ்ய தேசம் -ரக்ஷை உடன் -இருக்க –
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு-தூப பாட பேதம் -ஆராதன உபகரணங்கள் -குற்றம் இல்லாமல் -சேகரித்து
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே-ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவன் திருவடிகள் -சீலாதி குணங்களை ஸ்துதிக்க
திருப் பொலிந்த சேவை என் சென்னியில் மேல் பொருத்தி -வாமனன் சீரை சீலன் எம் ராமானுஜன் -கைங்கர்ய பிரதிபந்த கர்மங்கள் தானே போகுமே –

சரீரத்தின் முடிவு அணித்தாயிற்று-
ஈண்டென திரு வனந்த புரத்திலேபுக்கு அடிமை செய்ய –
அடிமை செய்வதற்கு விரோதியான-கர்மங்கள் தாமே அழியும் –என்கிறார்-

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
நாளேல் அறியேன் –9-8-4-என்றும்-மரணமானால்-9-10-5- என்றும் –
சொல்லிப் போந்த நாள்களும் கிட்டிய ஆயிற்றன-
பிறர்க்கு அப்படி தாம் சொன்னாரோ -என்னில்-
மாலை நண்ணி -என்கிற திரு வாய் மொழியில்
மரணமானால் -என்கிற சர்வேஸ்வரன் எண்ணத்தை தாம் அறிந்து-அதனைப் பிறர்க்கு உபதேசித்தார் அன்றோ-
இதிலும் பரோபதேசம் அன்றோ –
தஸ்மின் அஸ்தமிதே பீஷ்மே கௌரவானாம் துரந்தரே-ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் -பாரதம்
தர்ம புத்திரன் இடம் கிருஷ்ணன் அருளியது-
வீடுமன் முடியா நின்றான்-பின்னை இவ்வர்த்தம் கேட்கலாவார் இலர் -என்று-அவன் அருளிச் செய்த வார்த்தையை
இப்போது இவர் தாம் அருளிச் செய்கிறார்-
அஸ்தமிதே –
கண்களுக்கு வெளிச் சிறப்பைப் பண்ணுவாரும்-நெஞ்சுக்கு வெளிச் சிறப்பினைப் பண்ணுவாரும் ஆக-சூரியர் இருவர் ஆயிற்று
ஞானம் ஆகி ஞாயிறு ஆகி -திருச் சந்த விருத்தம் -114- என்னக் கடவது அன்றோ –
ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி –
ஆத்மாவைப் போன்று நித்யமாக இருக்கும் அன்றோ-தர்ம பூத ஞானமும்
இப்படி இருக்க -ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி -என்பான் என் என்னில் –
இதற்கு தோன்றலும் மறைதலும் ஆகிய செயல்கள்-ஞானம் செல்லுதற்கு உரிய வழியை பற்றியதாய் இருக்கும் அன்றோ –ஆதலால் -என்க –
வீடுமன் போனால் பின்னர் கொள்வாரும் கொடுப்பாரும்-இன்றிக்கே தொடர்ச்சி அறும்-
இதற்கு பட்டர் -அருளிச் செய்ததாக பரிஞை என்கிற ஊரில் -அப்பர் பணிக்கும்
ஒரு மதிப்பன் தலையில் கிடவாத அன்று-கொள்வார் கொடுப்பார் இன்றியே-
எளி விலையனாய்ப் போம் -என்று அருளிச் செய்வார்-
தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் –
ஆகையால் காண் உன்னை விரைவு படுத்தி-அவன் பக்கலிலே போய்க் கேள் -என்கிறது-

சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம் –
எல்லை இல்லாத இனியதான-அந்நகரம் தானே-மரண நிலையில் பாதுகாவலாம் –

தூம நல் விரை மலர்கள்-
நன்றான தூபம்-நறு மணத்தினை உடைய வான நல்ல மலர்கள் -இவற்றை

துவளற வாய்ந்து கொண்டு-
தனக்கும் அவனுக்கும் ஒத்ததாம்படி-சிறப்புடையதாக்கிக் கொண்டு –

வாமனன் அடிக்கென்று ஏத்த-
தன் உடைமை பெறுகைக்கு தான் இரப்பாளனாய் இருக்குமவன்-திருவடிகளுக்கு நன்று ஏத்த –

மாய்ந்து அறும் வினைகள் தாமே –
இவன் தன்மைக்கு தகுதியான தொண்டிலே சேர-விரோதிகள் அடைய ஒழிந்து போகும்-

————————————————————————-

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-

ஆராதன ரூப கைங்கர்யம் பண்ணி ணவத்திகா மாஹாத்ம்யம் உடையவர் ஆவார்
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்-ஸ்ரீ ய பதி என்றதுமே -தாமே போகும் -தன்னடையே போம் -நானும் வேண்டா நீயும் வேண்டா –
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று-பொன் மதிள்கள் -ஸ்வாமிக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல-சந்தனம் தீபம் தூபம் புஷபங்கள் –
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே-குற்றம் -கர்த்ருத்வ -பலம் அபேக்ஷிக்காமல் அஹங்காரம் மமகாராம் இல்லாமல்
த்ரிவித தியாகம் -பல சங்க கர்த்ருத்வம் இல்லாமல் -அங்கேயே கார ஸந்துஷ்டாராக ஏத்தினால் கொள்ளக் குறை வில்லா புகழ் அடைவார்கள்

திரு வனந்த புரத்திலே புக்கு-அடிமை செய்கிறவர்கள் பெருமை-பேச நிலம் அன்று –என்கிறார்

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன-
தாய் தந்தையர்கள் பெயரைச் சொல்ல-பலகாலமாக ஈட்டிய-பாவங்கள் தாமே போகும்-
அப்பா -என்ன உச்சி குளிரும் காணும் –மகனுக்கு இல்லை -அப்பாவுக்கு -அநாதி காலம் இந்த குரல் கேட்க கிருஷி பண்ணினவன் அன்றோ –
கேசவ தொடங்கி மாதவ -இங்கு -வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை –

நாளும்-ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று-சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார்-
அங்குத்தைக்கு ஈடான-பொன் மதிளை உடைய-திரு வனந்த புரத்திலே-
வசிக்கிற என் ஸ்வாமிக்கு-என்று-மலர்கள் முதலான கருவிகளைக் கொண்டு-அடைய வல்லவர் –

அந்தமில் புகழினாரே –
அமரர் ஆவார் -என்கிற அளவு அன்றிக்கே-விண்ணுளாரிலும் சீரியரே -ஆவர்

—————————————————————————————

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

பரமபதத்தில் மதி முக மடந்தையர் –
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை-குறையாத புகழ் -சர்வ காரண பூதன்
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்-பொழில் சூழ்ந்த திரு நகரி
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்-கேவலம் பர உபதேசம் ஐந்து -தம்மையும் கூட்டி அருளிய ஐந்தும் –
நாமும் நணுக வேண்டும் -கூட்டிக் கொண்டு அருளிச் செய்தவை அர்ச்சிராதி கதியில் சென்று
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே-அப்ராக்ருத அப்சரஸ் ஸ்த்ரீகள் ப்ரஹ்மாலங்காரம்
-சூடகமே -பராபர குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் -சத்தம் மாலா ஹஸ்தா -இத்யாதி -அலங்காரம் பெறப் பெறுவர்

நிகமத்தில்
இத் திருவாய் மொழி வல்லார்-திரு நாட்டில் உள்ளாருக்கு-இனியர் ஆவார்-என்கிறார்-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை –
திரு வனந்த புரத்திலே-எல்லை இல்லாத நற் குணங்களை உடையனாய்-உலகத்திற்கு எல்லாம்-காரணனாய் உள்ளவனை –
அடைகின்றவர்களும் அந்தமில் புகழினார்கள் –அடையப் படுகின்றவனும் அந்தமில் புகழினான் காணும் –
பரம பதத்தை விட்டு-திரு வனந்த புரத்திலே வந்து-அடியார்களுக்காக திருக் கண் வளர்ந்து-அருளுகையாலே
புகழிற்கு ஒரு முடிவு இல்லை ஆயிற்று அவனுக்கு –
பற்றினை விட்டு உகந்து அருளின நிலத்தில் அடிமை செய்கையாலே-புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு –
இவனுக்கு அடிமை கொள்ளுகையாலே புகழிற்கு எல்லை-இல்லை ஆயிற்று அவனுக்கு-
அவனுக்கு அடிமை செய்கையாலே புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு-
இந்த உலகத்திலே பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிகிற-இவனுக்கு புகழ் உண்டாகில் ஆயிற்று-பரம பதத்தில் இருந்தால் அவனுக்கு புகழ் உண்டாவது-
இந்நிலத்தை விட விட இவனுக்கு புகழ் உண்டாமாறு போலே-அந்நிலத்தை விட விட அவனுக்குப் புகழ் உண்டாம்-
இருவருக்கும் இரண்டும் கிடைக்காத பேறு ஆம் அன்றோ –

கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள் –
எப்பொழுதும் மலர்களை உடைய சோலைகளால்-சூழப்பட்ட திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –

ஐந்தினோடு ஐந்தும் வல்லார் –
இரத்தினங்களை முகம் அறிந்து கோத்துச் சேர்த்தியைக்-கொண்டாடுமாறு போலே-ஐந்து ஐந்தாக ஆயிற்று அனுபவிக்கிறது –

அணைவர் போய் அமர் உலகில் பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே –
ஸ்ரீ வைகுண்டத்து ஏறப் போய்-
தம் பஞ்ச சதானி அப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -கௌஷீதகி உபநிஷத்
நூறு பேர்கள் மாலைகளைக் கையில் உடையவர்களாய்-
அந்த முத்தனை எதிர் கொண்டு அழைக்கிறார்கள் -என்பது போன்றவைகளில் சொல்லுகிறபடியே-
அங்குத்தை அமர மகளிர்கள் உடைய விருப்பத்துக்குப்-பொருளாக இருப்பார் -என்றபடி-
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ள -10-9-10-என்றதனோடு-
வேய் மரு தோள் இணை அணைவர் -என்கிற இதனோடு-வாசி இல்லை-
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -10-9-10-என்னக் கடவது அன்றோ-

————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தனு வ்ருத்திகளுக்கு அஸ்ய பிராப்யத்வம் துரித ஓகம்
நிவர்த்தனம் வைகுண்ட மேத்ய கரணீய
அசேஷ தாஸ்யம் அத்ரைவ கேவலம்
அநந்த புரே சடஜித் த்வதீயே –

தனு வ்ருத்திகளுக்கு -சரீரம் உடைய சம்சாரிகளுக்கு
அசேஷ தாஸ்யம் அத்ரைவ -இந்த தேகத்துடன் இந்த தேசத்தில்

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்ரீ கேஸவாத்வேனே அத்புத சரிதேனே கதாதீச தாஸ்ய சஹா –
த்ரயீ மயன் ஆஸந்நத்வாத் பதித்வாத் அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்
வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை மதன ஜனனதா
புஜ சாய்த்தவம் முக்யைகி சரித்ரை அத்பத் கிலேச அபஹர்த்தா-

1–ஸ்ரீ கேஸவாத்வேனே–கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்

2–அத்புத சரிதேனே–அனந்த புர நகர் மாயன் நாமம் ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே

3–கதாதீச தாஸ்ய சஹா -த்ரயீ மயன்–தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே

4–ஆஸந்நத்வாத்–அனந்த புரம் நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே

5–பதித்வாத்–அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்

6–அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்–அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்

7–வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை–துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும் படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்

8–மதன ஜனனதா–படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–

9–புஜ சாய்த்தவம்–அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே

10-முக்யைகி சரித்ரை–அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே

அத்பத் கிலேச அபஹர்த்தா–மாய்ந்து அறும் வினைகள் தாமே-

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 92-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை

இதில் – ஸ்ரீ பரமபதத்தில் செய்யும் அடிமையை ஸ்ரீ திருவனந்த புரத்திலே செய்யப் பாரிக்கிற ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
குறைவற ஸ்ரீ பரம பதத்தினில் போனால்- வானிளவரசான வைகுந்த குட்டனுக்குச் செய்யக் கடவ
வழு விலா அடிமைகளை-நித்ய சூரிகளில் தலைவரான ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் எடுத்துக் கை நீட்டும்படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவனந்த புரத்திலே ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் மேலே
பள்ளி கொண்டு அருளுகிற பரம பிராப்ய பூதரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே
அனுகூல ஜனங்களும் தாமுமாய் போய் அடிமை செய்ய வேண்டும் என்று மநோ ரதிக்கிற
கெடும் இடரில் அர்த்தத்தை-கெடும் இடர் வைகுந்தத்தை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை-

——————————————————–

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-

கெடும் இடர் வைகுந்தம் -துக்க ரஹிதமான பரம பதம் -வினைகள் போக்கி தானே -அங்கே போக முடியும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை பற்றி இடர் கெடும் சொல்ல வேண்டாமே –
அதனால் பலன் சொல்லாமல்- பாசுரம் சொல்லவே இடர் கெடுமே –

———————————————————–

வியாக்யானம்–

கெடுமிடர் வைகுந்தத்தைக் –
கைங்கர்ய சித்தியாலே நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே –
துக்க ரஹிதமான ஸ்ரீ வைகுண்டத்தை என்னுதல்-
கிட்டினால் போல் – அத்தை பிராபித்து அடிமை செய்யப் பெற்றால் போலே

தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் –
ஏபிஸ் ச சசிவை -இத்யாதியாலே ஸ்ரீ பரத ஆழ்வான் பாரித்தால் போலே
தடமுடை அனந்த புரம் தன்னில்-படமுடை அரவில் பள்ளி பயின்ற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-

அதாவது –
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -என்றும்
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு-ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -என்றும்
அமரராய் திரிகின்றார்கட்கு -என்று தொடங்கி-நாமும் போய் நணுக வேணும் -என்றும்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ-நமர்கள் உள்ளீர் -என்றும் –
தாமும்-தம் திரு உள்ளத்தோடு ஒத்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் கூட அடிமை செய்த மநோ ரதித்த -என்கை –

படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் -மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே –
சர்வோத்தரமான பரம ஆகாசத்திலுள்ளராய்-ஸ்ரீ கோயில் கொள் தெய்வங்களான
ஸ்ரீ திருவடி-ஸ்ரீ திருவனந்த ஆழ்வான்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் –
நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை
இவர் – இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று விஸ்மயப்ப்படும்படி
ஸ்ரீ சேஷசாயியாய்-ஸ்ரீ யபதியான-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்ய வாதரித்தார் ஸ்ரீ ஆழ்வார் – இவரும் ஒருவரே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது-
அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –

———————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: