தாள தாமரை -பிரவேசம் –
முதல் பத்தால் -பகவத் விஷயம் -புருஷார்த்தம் -என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் -களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார்
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார் –
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தால் -விரோதிகளை அழிக்கும் தன்மையான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் – இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியை கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தக்தபட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா உடன் சம்பந்தப் பட்ட-பொருள்களிலும்-நசை அறாத படியாலே -என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்றார் –
ஒன்பதாம் பத்தால் -இப்படி நசை அற்ற பின்பும் பாதுகாவாமல் ஒழிவான் என் -என்று ஐயம் கொள்ள –
நான் நாராயணன்-எல்லா ஆற்றலோடும் கூடினவன்-உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன்
என்று அருளிச் செய்ய -அவனுடைய சீல குணத்தில் ஆழம் கால் பட்டார்
ஆழ்வார் உடைய பதற்றத்தைக் கண்டு-திரு மோகூரிலே-தங்கு வேட்டையாய் வந்து தங்கி
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய விருப்பத்தை நிறைவேற்றின படியை-அருளிச் செய்கிறார் இந்தப் பத்தாம் பத்தால் –
–பக்தி பாரவஸ்யத்தையால் -அர்ச்சையிலே சரணா கதி பண்ணி
திருக் கண்ண புரம் பெருமாள் வார்த்தை அருளி –
திரு மோகூர் –ஆப்தன் வழித்துணை -யாய் இருப்போம் –
திரு வனந்த புரத்தில் -கூட்டிச் சென்று உமக்கு – சாம்யம் காட்டுவோம் –
திரு வாட்டாற்றில் ஆதி கேசவ பெருமாள் -எம் விதி வகை யே -கச்ச லோக -பெருமாள் சொன்னால் போலே –ஆணை இடுவோம் –
திருப் பேர் நகரில் -அப்பால ரெங்கன் ஸ்வாமித்வம் நாம் என்று ஏற்போம் –
திருமால் இரும் சோலை மலையிலே சரீர ஆதார அதிசயம் காட்டுவோம் –
மேலே ஸ்ரீ வைகுந்தம் கூட்டிப் போவோம் –
ஈரரசு ஆகாமல் -அது நமது விதி வகையே –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயை -ஆழ்வார் களுக்கும் அவனுக்கும் -நாலு ஆறும் – உபதேசித்து –
பத்தாம் பத்தால் -ஆர்த்தி ஹரத்வம் காட்டி -அருளுகிறார் –
அவா -கடல் -குளப்படி போலே -தான் திருவடிகளில் சேர்த்துக் கொண்டு இத்தால் புகர் பெற்றான் –
அர்ச்சிராதிகதி நேராக்க கண்டு -அவன் காட்டக் கண்டு -அனுபவித்து அருளிச் செய்கிறார் –
——————————————————————————————-
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன -9-8-4- என்றார்
மரணம் ஆனால் -9-10-5-என்று அறுதி இட்டுக் கொடுத்தான் இறைவன் –
அவன் செய்கிறோம் என்று தலை துலுக்கினால்-அது பெற்ற தாய் மேலே நடக்கலாம் படியாய் இருக்கும் அன்றோ கார்யம் –
ஆகையாலே பெறக் கூடிய கார்யத்தைப் பெற்றாராய்-போக்கிலே ஒருப்பட்டார்-
போமிடத்தில் முகம் பழகின தேகத்தையும் விட்டு
பலகாலம் பழகின பந்துக்களையும் விட்டு
தனியே யாய்ச் செல்ல வேண்டியதாலும்
போகிற இடம் தாம் கண்டு அறியாத நிலம் ஆதலானும்
அதுவும் நெடும் கை நீட்டு ஆதலானும்
வழியிலே தடைகள் பலவாய் இருத்தலானும் –
அதாவது
அவித்யா -அறிவின்மை /கர்மம் /வாசனை / ருசி-என்பன போன்று சொல்லுகிறவற்றைத் தெரிவித்த படி
இவற்றை அடியைப் போக்க வேண்டுமாதாலானும்-வழிக்கு துணையாக கொண்டு போம் போது-சர்வேஸ்வரனையே பற்ற வேண்டும்
அஃது ஏன்
இவன் தானே தனக்கு துணை ஆனாலோ -எனின்
இன்று அளவும் வர-பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிவதற்கு-காரியம் பார்த்து போந்தவன் அன்றோ இவன் –
இச் சரீரத்தோடு இருக்கிற நாளிலே நலத்தைச் செய்ய நினைத்தானே யாகிலும் -அதாவது
சரணாகதி செய்ய -நினைத்தானே யாகிலும் –
இவனுடைய முன் நிலையைப் பார்த்தால் இவன் தான் தனக்கு-துணையாக மாட்டானே –
வழியிலே கொடுபோம் இடத்தில் இவனுக்கு வரும் தடைகளை-அறிகைக்கு சர்வஞ்ஞனாக வேண்டும்-
அறிந்தால் அவற்றைக் கொடு போகைக்கு-சர்வசக்தன் ஆக வேண்டும்
யா சர்வஞ்ஞ சர்வவித்- முண்டக உபநிஷத்
எவன் யாவற்றையும் பொதுப்பட அறிந்தவன் -தனித் தனி அறிந்தவன் -என்பன போன்ற-பிரமாணங்களால்
சர்வேஸ்வரனே சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -என்னா நின்றதே அன்றோ –
எல்லாம் வல்லவனாய் இருந்தானே யாகிலும் -சம்பந்தம் உள்ளவனாய்-இராத போது பயன் இல்லையே
மாதா பிதா பிராதா நிவாச சரணம் ஸூ க்ருத்-கதி நாராயணா -சுபால உபநிஷத் –
தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும்-பாதுகாப்பவனும் சிநேகிதனும் பேறும்
ஆகிய இவை எல்லாம் ஸ்ரீ மன் நாராயணன் ஆகவே இருக்கிறான் -என்பன போன்றவைகளால்
அவனே எல்லா வித உறவினனாக சொல்லா நின்றது இறே-
எம்மானும் எம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததின் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற -பெரிய திருமொழி -7-2-3-என்கிறபடியே
ஆசையாலே அறிவற்றவர்களாய் குழந்தையைப் பெற்று-இளமைக்கு விரோதி -என்று பொகட்டு போமவர்கள்
இவன் தான் பழகிப் போந்த முகத்தாலே -அம்மே -என்ற போதாக
பெண் குரலாலே -ஏன் -என்றும்-அப்பா -என்ற போதாக ஆண் குரலிலே ஏன் என்றும்
இப்படி முகம் கொடுத்துக் கொண்டு போகக் கடவனாய்-இருக்குமவன் அன்றோ -அவன் –
சரீரமானது கட்டுக் குலைந்து பரம பதத்திலே போய்ப் புகும் அளவும் செல்ல நடுவிலே உண்டாகும்
தடைகளை போக்கிக் கொடு போகைக்கு ஈடான விரகு அறியுமவனாக வேண்டும்
விரோதிகளை இரு துண்டமாக இட்டுக் கொடு போக வல்ல ஆற்றல் உடையவனாக வேண்டும்
அசுரரைத் தகர்க்கும்-துணிக்கும் வல்லரட்டன் –
தான் தனக்கு தஞ்சம் அல்லாத அன்று இவன் தனக்கு தஞ்சம் என்று
தன்னை இவன் கையில் காட்டிக் கொடுக்கும்படி நம்பத் தகுந்தவனாக வேண்டும்-
சர்வஞ்ஞான் சர்வ சக்தன் -என்கிறபடியே தானே பிரமாணங்களால் பிரசித்தம் ஆக்கப் பட்டவன்-
தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் -திருவாய்மொழி -9-6-2-என்று இவர் தாமே தஞ்சம் என்றாரே-
மயர்வற மதிநலம் அருளினான் -என்று பேர் அருளினன்-என்னும் இடம்தாமே கைக் கொண்டார்-
இனி சேஷியாய் இருக்கையாலே-தானே சம்பந்தம் உள்ளவனாய் இருக்குமன்றோ –
ஆக –
நம் விரோதிகளைப் போக்கி-பரம பத்து அளவும் கொண்டு போய்
வழி நடத்துவான் காளமேகம் -என்று அறுதி இட்டு
அரு நிலங்களிலே -செல்லுதற்கு அரிய – வழிப்போவார்
அகப்படை -என்று அந்தரங்கமான சேனை -என்று-மிடுக்கராய் இருப்பாரைக் கூட்டிக் கொண்டு
தம் கைப் பொருளை அவர்கள் கையிலே கொடுத்து
அமர்ந்த நிலத்திலே சென்றவாறே வாங்கிக் கொள்ளுவாரைப் போலே
உடலை விட்டு உயிர் பிரிகின்ற காலத்திலேயே-காளமேகத்தின் பக்கலிலே ஆத்மாவை அடைக்கலம் செய்து
பரம பதத்திலே புக்கால்-பின்னர் நமக்கு ஆக்கிக் கொள்ளக் கடவோம் -என்று-வழித் துணையாகப் பற்றுகிறார்-
அவன் கையில் கொடுத்து –
-இது ஆச்ரயணீய ஸ்தலம் அது போக ஸ்தலம் -இங்கே கொடுத்து வைத்து அங்கே அனுபவிக்க –
இங்கு ஆத்ம நிஷேபம் என்றது -வழித்துணைக்கு பிரார்த்தனை -தேக விஸ்லேஷம் போது ஆத்ம சமர்ப்பணம் வேண்டாம்
-ஆர்த்த பிரபன்னர் என்பதால் -துடிப்பால்-அருளிச் செய்கிறார் -சக்தி மதிப்பு பிராப்தி எல்லாம் இவன் இடம் உண்டே –
இந்தத் தன்மைகள் ஒன்றுமே இல்லை யாகிலும்-அவன் முன்னே போக பின்னே போகா நின்றால்
தோளும் நான்குடைச் சுரி குழல் –
அவனுடைய வடிவு அழகினை அனுபவித்துக் கொண்டு-போமதுவே பிரயோஜனமாக போரும்படி ஆயிற்று இருப்பது –
இதனாலே தானே வருஷம் தோறும் திருவடி சேவை சாதித்து மீண்டும் வருகிறார்
நம்பிள்ளை திரு முதுகு சேவிக்க பின்பு அழகராம் பெருமாள் சீயர் போலே –
ஸ்வ புருஷம் அபி வீஷ்யே பாசஹச்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மதுசூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்ய ந்ருனாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-17-13-
திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு –
என்கிறபடியே எதிரிகள் கூசிப் போம்படி பெருமிதம் உடையவனாய் இருப்பான் ஒருவனைப் பற்ற வேண்டும் அன்றோ –
யமன் கையில் பாசத்தை தரித்த தன் வேலையாளைப் பார்த்து
பகவானை அடைந்தவர்களை விட்டு விடுங்கோள்
நான் எனையோர்க்கே தலைவன்-விஷ்ணு பக்தர்களுக்கு தலைவன் அல்லன்
என்று அவர்கள் உடைய காதிலே சொன்னான்-என்கிறபடியே அவனும் சொல்லி வைத்தான் அன்றோ –
மதிப்பு –அவன் தமர்க்கு உண்டானால் அவனுக்கும் உண்டே –
ருத்ரன் சக்திமான் -மதிப்பு இல்லை என்பதால் – மார்கண்டேயன் விழிப்பு உண்டான் –
காள மேகப் பெருமாள் -கீழே நீல மேகப் பெருமாள் -மோஹன புரி -அங்கே அழகு இங்கு உதாரம்
இவனுக்கு -திரு மேனி முழுதும் அழகு மோஹன புரி மருவி திரு மோகூர் –
சர்வாயுத பாணி -திரு மோகூர் ஆப்தனும் சேவை -திருமால் இரும் சோலை பரம ஸ்வாமி போலே –
ப்ரஹ்மா வேதம் தொலைத்து -மது கைடபர் -தொடையில் வைத்து முடித்து சத்ய மூர்த்தி திரு மெய்யம் -கொழுப்பே திவலையாக மது கைடபர் –
திரும்ப வந்து நாளம் அசைத்து -தாள தாமரை -ப்ரஹ்மா கதற -தட்டி -மேதினி -மேதஸ் பட்டு மேதினி – என்றும் ஸ்தல புராணம் உண்டே –
———————————————————————————-
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-
பிரதி கூல நிரசன ஸ்வ பாவன் நிரதிசய போக்யன் -தவிர நமக்கு சகாயம் வேறு கதி இல்லை
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்-வயல் செழிப்பு
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்-ஸ்வயம் பிரயோஜனமாக -பொருந்தி நித்ய வாஸம் –
விரோதிகளை – பொகட்டு-புலஸ்திய முனிவர் பிள்ளை விச்வரஸ் புத்ரன் ராவணன் -புலஸ்திய ரிஷி தவம் பண்ணி சேவை சாதிக்கிறார்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்-வழித்துணைக்கு -கற்பகப் பணை போலே -கிலேச சமனமாய்-கேசம் -சுரிந்து துன்னு குழல் –
சேவித்து போக -கண் அழகை காட்டி ஸ்மித பாஷணம் பண்ணும் திரு அதரம்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-உதார ஸ்வ பாவம் -வேறு கந்தவ்யம் இல்லை -உடையோம் அல்லோம்
தடம் -பொய்கையை தாமரையை அணிந்து கொண்டு என்றுமாம் –
மரணமான மிகப் பெரிய அச்சத்தை நீக்குதற்கு-பகைவர்களை அழிக்கும் தன்மையனான-
காளமேகம் அல்லது துணை இல்லை –என்று அவனைப் பற்றுகிறார் –
தாள தாமரைத் –
சேற்றின் நன்மையாலே-உரத்த தாளை உடைய தாமரை -என்க –
மலையைச் சுமந்தால் போன்று பூமியின் பெருமையை-பொறுக்க வல்ல தாளை உடையதாதலின் –தாள தாமரை -என்கிறார் –
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -பெரியாழ்வார் திருமொழி -4-9-8-
என்னக் கடவது அன்றோ –
சேற்று வாய்ப்பாலே உரம் பெற்று இருக்கிற-கமலமானது ஓங்கி அலர்ந்த போது-திரு உலகு அளந்த போது
எடுத்த திருவடிகளுக்கு போலியாய் இருந்தது-
சங்கை சூராணாம்திவி பூதலஸ்தை ததா மனுஷ்யை ககனே ச கேசரை
ஸ்துது க்ரமான்ய பிரசகார சர்வதா மம அஸ்து மாங்கள்ய விவிருத்தையே ஹரி -விஷ்ணு தர்மம் –
அப்போது தேவர்கள் உடைய கூட்டங்களாலும் -என்றபடியே
தேவர்கள் திரண்டு காலை நீட்டித் தலையாலே வணங்கி தண்டன் இட்டாப் போலே இரா நின்றது -செந்நெல் களானவை
விழுந்து தலை சாய்ந்து கிடக்கிற போது
தட மணி –
அணி தடம் –இப்படிப் பட்ட பூக்களாலே அலங்கரித்தால் போலே-இருக்குமாயிற்றுத் தடம் –
அணி வயல் திரு மோகூர்-
இப்படிப் பட்ட தடங்களையும்-வயல்களையும் உடைய-திரு மோகூர்
ஊரில் இனிமை முழுதும் வயலிலே காணும் –
நாளும் மேவி –
நாள் தோறும் நாள் தோறும்-மிக்க விருப்பத்தைச் செய்து-அவ் ஊரில் விடிந்த விடிவு தோறும் அவனுக்கு-
அத்ய மே சபலம் ஜன்ம சூப்ரபாதாச மே நிச
யத் உந்தித்ராப்ஜ பத்ராஜம் விஷ்ணோ த்ரிஷ்யாமி அஹம் முகம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-8
என்னும்படியாயிற்று இருப்பது –
-இவருடைய குஹ்யதே ரங்க யாத்ரே -அகலகில்லேன் இறையும்-இருக்கும் படி –
நன்கமர்ந்து நின்று –
இவ் ஊரில் வசித்தலை ஒழிய-வேறு ஒரு பிரயோஜனத்தை கணிசியாதே-இது தானே பிரயோஜனமாய் நின்று –
அசுரரைத் தகர்க்கும் தோளும் நான்குடைச் –
அசுரக் கூட்டத்தைத் துணித்து அடுக்கி-விரோதியைப் போக்கிக் கொண்டு போக வல்லவன்
என்று தோற்றும்படியான-திருத் தோள்கள் நான்கினையும் உடைய –
இவர் இப்படி அறிந்தபடி எங்கனே என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க –
விடுகாதானாலும் தோடு இட்டு வளர்த்த காது -என்று தெரியும் காண் -என்று அருளிச் செய்து அருளின வார்த்தை –
சுரி குழல் –
நெடு நாள் பட பிறப்பு இறப்புகளிலே உழன்று வருவதால்-உளவாய எல்லா துன்பங்களும்
ஆறும்படியாக இருக்குமாயிற்று
பின்னே போகிறவனுக்கு முன்னே போகிறவன்-ஒரு கால் திருக் குழலை குலைத்து நுழந்த
கேசவ கிலேச நாசந-மகா பாரதம் –
கேசவன் கிலேசத்தை நாசம் செய்பவன் எண்ணக் கடவது அன்றோ –
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ-
கமலக் கண் கனி வாய்-
மகளிருடைய பொய்யான நோக்கிலும்-பொய்யான முறுவலிலும்-அகப்பட்ட நெஞ்சாறல்-எல்லாம் தீரும்படி –
மெய்யான நோக்கும்-மெய்யான முறுவலும்-இருக்கும்படி சொல்கிறது –
இராஜாக்கள் போகும் போது முன்னே மேகம் நீர் விடுமா போலே-
முன்னே காளமேகம் வனப்பாகிய அமிருதத்தை-பெய்து கொண்டு போக-
பின்னே அக்குளிர் வாசத்தை அனுபவித்துப் போகலாம்படி-இருக்குமாயிற்று
விண்ணீல மேலாப்பு -மேக ஜாதி நீர் -விடுமே -ராஜாக்கள் வரும் முன்னே
-மார்க்க பந்து சைத்யம் மோஹனத்தே மடு விடும் -சூர்ணிகை -182
காருண்யம் மாருதி -சீதலை அபிஷிந்தி மாம் -தேவ பெருமான் கடாக்ஷம் -தூ வானம் வீசும் -ஸ்ரீ பெரும் புதூர் வரை –
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
காளமேகத்தை ஒழிய-வேறு வழித்துணை-உடையோம் அல்லோம் –
—————————————————————————————————————
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-
நிரதிசய போக்ய பூதன் -நிரந்தர அனுபாவ்ய நாம பூர்த்தி உடைய -சர்வேஸ்வரன் திருவடிகளை ஒழிய சர்வ அவஸ்தைகளிலும் வேறே கதி இல்லை
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்–திருத்த துழாய் மாலை -ஈன் இனிய
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்-அசையா நிற்கும் -குணங்களை சொல்லும் -அனுபாவ்யமான திரு நாமங்கள் நிருபாதிக ஸ்வாமி
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்-கிருபை போன்ற விலக்ஷண-வேதங்கள் -அறிந்த -அவனே ரக்ஷகன் உறுதி உடன்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே-ஆஸ்ரித தாரதம்யம் பாராமல் -ரஷிக்கும்-
வீரக் கழல் -பாத நிழல் ஆகிய பெரும் தடாகம் -கந்தவ்யம் வேறே இல்லையே
இன்பத்துக்கு காரணமான ஒப்பனையும்-உய்வு பெறுவதற்கு காரணமான திருப் பெயர்களையும்
உடையவனுடைய திருவடிகளை அல்லது காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்-
வேறு புகழ் உடையோம் அல்லோம் –என்கிறார் –
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் –
இவ்வார்த்தை ஒரு பிறவியில் அன்றி-எல்லா பிறவிகளிலும் இதே வார்த்தை –
எல்லா காலத்துக்கும் இது ஒழிய-வேறு துணை உடையோம் அல்லோம் –
ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி –
தாரையும் குளிர்த்தியையும் உடைய-திருத் துழாயின் ஒளியை உடைத்தான அழகிய மாலை –
அலங்கல் -ஒளி-அசைதலுமாம் –
பின்னே போகா நின்றால்-அடி மாறி இடும் போது –வளையும் அசைந்து வரும்படியைக் கூறியபடி –
திருமேனியிலே சேர்ந்து இருப்பதனாலே வந்த புகரைச் சொன்னபடி –
ஆயிரம் பேருடை –
தோளும் தோள் மாலையுமான அழகைக் கண்டு-இவன் ஏத்தப் புக்கால்
இழிந்த இடம் எல்லாம் துறையாம்படி-கணக்கு இல்லாத திருப் பெயர்களை உடையவன் –
மா மாயன் என்று என்று சகஸ்ர நாமம் -மாதவன் என்று என்று சகஸ்ர நாமம்-வைகுந்தன் என்று என்று சகஸ்ர நாமம்-
யம்மான் –
வடிவு அழகினைக் கண்டு-
சம்பந்தம் இல்லாதவர்களை ஏத்திற்றாக வேண்டாதே –
ஆழி அம் கை அம்மானை ஏத்தாது அயர்த்து வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -பெரிய திருவந்தாதி-82-
என்று ஏத்தாத நாள்களுக்கும் வயிறு பிடிக்க வேண்டும்படியான விஷயம் –
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர் –
அருளுடைமையே வேதாந்தம் -என்று வேதங்களின் கருத்து-கை வந்து இருக்குமவர்களாய்
வேதத்துக்கு வ்யாபதேசம் செலுத்த வல்லவரானவர்கள் வசிக்கிற தேசம்
அவ் ஊரில் வசிப்பதே வாழ்ச்சியாம்-
இதனால் அத் தேசத்தில் வசிப்பதனாலே –அடைந்தவகளை பாது காத்தலே மிக உயர்ந்த தர்மம்
என்று சர்வேஸ்வரனும் அதிலே நிலை நிற்க வேண்டும்படியான நகரம் -என்பதனைத் தெரிவித்தபடி
அவ் ஊரிலே சென்று அடைந்தவர்களை-நம்மோடு ஒத்தவர்கள் ஆகுக -என்னுமவர்கள் –
அஸ்மாத் துல்ய -என்று சுக்ரீவன் அருளிச் செய்தது போலே –
நலம் கழல் அவன் –
அடைந்தவர்கள் உடைய குணங்களையும் குற்றங்களையும்-நினையாத திருவடிகள் –
அன்றிக்கே –
அவர்கள் தாம் அன்பினால் மயங்கினவர்களாய்-இவன் கொல்லத் தக்கவன் -என்றாலும்
நான் விட மாட்டேன் -என்னுமவன் என்னலுமாம்-
வத்யதாம் ஏஷ தண்டேன தீவ்ரேன சசிவை சஹ-ராவனச்ய ந்ருசம்சஷ்ய ப்ராதா ஹி ஏஷ விபீஷண-யுத்தம் -17-27
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யேஜ்யம் கதஞ்சன-தோஷாயத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் ஏதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-
அவனடி நிழல் தடம் அன்றி யாமே –
அவனுடைய திருவடி நிழல் ஆகிற பொய்கையை ஒழிய-நாம் வேறு ஒரு கதியை உடையோம் அல்லோம் –
அவன் -என்பதனை முன்னும் பின்னும் கூட்டுக
—————————————————————————————————-
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-10-1-3-
அகில ஜகத் ரக்ஷண-ஸ்வ பாவம் -நமக்கு துணை -துக்கம் கெட -போற்றுவோம்
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி- -உன்னை ஒழிய வேறு புகல் இடம் இல்லை தளர்த்தி தோன்ற பல முறை கூப்பிட்டு
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட-இவர்கள் நின்று நாட -அலற்றி நின்று நாட -பிரயோஜன லாபத்து அளவும் நின்று
-தேவ ஜாதிகள் தேடி ஆஸ்ரயிக்க
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்-விரோதிகளை வென்று ஜகத் த்ரயத்தையும் ராக்ஷிப்பதே யாத்திரையாக உடைய –
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-அர்ச்சிராதி கதி பெற -கிட்டுமோ கிட்டாதோ மநோ துக்கம் போக்கி –
வழித்துணையாக -ரக்ஷகன் சந்நிஹிதன் ஆனபின்பு அநந்ய பிரயோஜனராக கிட்டப் பெறுவோம்
மூன்று உலகங்களையும் காப்பாற்றுகின்ற இறைவன்-எழுந்து அருளி இருக்கின்ற திரு மோகூரை
நம்முடைய எல்லா துக்கங்களும் கெடச் சென்று அடைவோம்-என்கிறார் –
தஸ்மிந் த்ருஷ்டே -பார்த்தாலே பாப ஷயம் -நேருமே பிரார்த்திக்க வேண்டாமே –
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
பிரயோஜநாந்த பரர்களும்-அநந்ய பிரயோஜனர் கூறுகின்ற பாசுரத்தை சொல்லுவார்கள்-
ஆயிற்று அவன் முகம் காட்டுகைக்காக –
தேவரை ஒழிய நாங்கள் ஒரு புகல் உடையோம் அல்லோம்-என்று எப்பொழுதும் அடைவு கெட சொல்லிக் கூப்பிட்டு நின்று
க்ஷிதி ஷமாவான் பூமி போன்ற பொறுமை சகாராம் விட்டு தாரை -தப்பாக பாடினாலும் பொறுப்பார் சாக்ஷி –
கண்ணன் கழலிணை –நாரணமே -எப்படி சொன்னாலும் பலம் -அதே போலே இங்கும் –
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட –
பிரமன் சிவன் இவர்களோடு கூட தேவ சாதி முழுவதும் வந்து அடைய-
அநந்ய பிரயோஜனர்களைப் போலே-தங்கள் பிரயோஜனம் கை புகுரும் அளவும்–நின்று
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர் –
அவர்களுடைய பகைவர்களை வென்று-அவர்களுக்கு இடமான மூன்று உலகங்களையும் காப்பாற்றி
அதுவே தொழிலாக இருக்குமவன் வந்து வசிக்கிற நகரம் ஆயிற்று —
நன்று நாம் இனி நணுகுதும் –
அவன் எல்லாரையும் காப்பாற்றுவான் ஒருவன் ஆனபின்பு-காப்பாற்ற வேண்டும் என்னும் விருப்பத்தை உடைய நாம்
நன்றாகக் கிட்டுவோம்
ஸ்ரீ மதுரையிலே -காலயாவனன் ஜராசந்தன் – முதலியோர்கள் கிட்டினால் போலே அன்றிக்கே
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் – திரு விருத்தம் -92-என்று
பிரமன் சிவன் முதலியோர்கள் கிட்டினால் போலே அன்றிக்கே-அநந்ய பிரயோஜனர்களாய் கிட்டுவோம்
நமது இடர் கெடவே –
ஆவார் ஆர் துணை -திருவாய் மொழி -5-1-9-என்று-இருக்கிற நம்முடைய துன்பம் கெடும்படியாக-
———————————————————————————————————
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-
அனந்த சாயி திருவடிகளை ஆஸ்ரயிப்போம் தொண்டு செய்வதில் ருசி உள்ளவர்களை அழைக்கிறார்
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி-ரக்ஷிக்க வேணும் ஸ்துதித்து
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர-தேஜோ மயமான -தேவர்கள் ஐஸ்வர்யார்த்தி முனிவர் -அனுவர்த்தித்து ஆஸ்ரயிக்க
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்-நின்ற திருக் கோலம் -சேஷ சாயினே – திருமலை -ஸ்ரீ நிவாஸன் முன்பே வேதார்த்த சங்க்ரஹம் –
ஸ்பரிசத்தால் விகசித்த-மென்மை நாற்றம் குளிர்த்தி -திரு அரவணையில் அசம்பவ துக்கம் -சகாயம்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே-திருவடிகளை ஸ்துதிக்க ருசி உடையீர் வாரும்
நம்முடைய எல்லா துக்கங்களும் கெட-திரு மோகூரிலே வந்து சுலபனாய் நிற்கிறவனை
அடைவதற்கு வாருங்கோள் -என்று-ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார்
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி –
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று ஆயிற்று-
தங்களை தாங்களே ஈச்வரர்களாக மதித்துக் கொண்டு இருக்கிற தேவர்களும்-சாப அனுக்ரகங்களைச் செய்ய வல்ல முனிவர்களுக்கும் வார்த்தை
இடர் கெட –
வேதத்தை பறி கொடுத்தலால் உளதாய துன்பம் முதலானவைகள் போம் படியாக-
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதிகளை -போம் படியாக-
எம்மை –
முன்- ஈச்வரோஹம் – என்று இருந்தவர்கள்-ஆபத்து மிக்கவாறே
ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரை பஹூநாம் பஹதா வனே ஆரண்ய -6-18-
எங்களுடைய இந்த சரீரத்தை பார்த்து அருள வேண்டும் -என்றாப் போலே-
தங்கள் வெறுமையை முன்னிடுவார்கள் இத்தனை –
போந்து அளியாய் –
அவதரித்து வந்து காப்பாற்ற வேண்டும் -என்பார்கள் -என்றது
முன்பு எல்லாம் விருப்பற்று இருந்தவர்கள்-ஓன்று கெட்டவாறே-படி காப்பாரை பிடிக்குமாறு போலே
நாங்கள் ஆபத்தை அடைந்தவர்களாய் வர நீ கிடக்கிறது என் -என்பார்கள் என்றபடி-
என்று என்று ஏத்தி தொடர –
தங்களுக்கு வந்த ஆபத்தாலே இடை விடாதே புகழ்ந்து-வடிம்பிட்டு -நிர்பந்தித்து -அடைவதற்காக –குந்தி பிரார்த்தனை —
சுடர் கொள் சோதியைத் –
ஆபத்து வந்த காலத்திலேயே யாகிலும் நம் பாடே வரப் பெற்றோமே என்று-பேர் ஒளிப் பிழம்பாய் இருக்கிறவனை
அன்றிக்கே
மிக சிறந்த அழகினை உடையவன் ஆகையால்-அவ் வழகினை அனுபவிக்கும் அதுவே பிரயோஜனமாக
உள்ளவனைக் கண்டீர் துக்கத்தைப் போக்குமவனாக நினைத்து என்னுதல் –
தேவரும் முனிவரும் தொடர –
தேவர்களும் இருடிகளும்-ஈச்வரோஹம் -என்று இருப்பாரும்
செல்வத்தின் நிமித்தம் முயற்சி செய்கின்றவர்களும் –
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் –
வேறு பிரயோஜனங்களை கருதாதவர்களை-அநந்ய பிரயோஜனரை-அடிமை கொள்ளுகிறவன் கண்டீர் –
பிரயோஜநாந்த பரர்களுக்காக முகம் கொடுக்கைக்காக-திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிகிறான்-
தன் ஸ்பர்சத்தால் வளரா நின்றுள்ள திரு வநந்த ஆழ்வான்-ஆதலின் -படர் கொள் பாம்பு -என்கிறார் –
தன்னுடைய சேர்க்கையாலே-சர்வஞ்ஞானானவனை அறிவற்றவரைப் போன்று நித்தரைக்கு
இடம் கொடுக்கும்படி பண்ண வல்லவனான திரு வநந்த ஆழ்வான் ஆதலின் -பள்ளி கொள்வான் -என்கிறார்
திரு மோகூர் –
தேவர்கள் முதலாயினார்கட்கு சுலபன் ஆனால் போல்-
நமக்கு சுலபன் ஆகைக்காக திரு மோகூரிலே நின்று அருளினவன் –
இடர் கெட வடி பரவுதும் –
நம்முடைய எல்லா துக்கங்களும் கெடும்படியாக-அவனுடைய திருவடிகளை அடைவோம் –
தொண்டீர் வம்மினே –
நம்மோடு ஒரு குலத்தாராய்-இருப்பார் அடங்க திரளுங்கோள்
———————————————————————————-
தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-
அசேஷ ஜன சம்ச்லேஷ -த்ரிவிக்ரமன் வர்த்திக்கும் -அனுபவித்து பிரித்தார் ஆவோம்
தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்-நிரவாதிக உஜ்வலம் -தேஜஸாம் ராசி மூர்ஜிதாம் -திரு மேனி -த்ரிவித காரணமுமாய்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்-ஸ்ருஷ்ட்டி அங்கத்துக்குள் உள்ள ஜகாத் த்ரயமும் அளந்தவன் -க்ருத அக்ருத க்ருதக்ருத –
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய-எல்லா திக்குகளிலும் –
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே-பிரதக்ஷிணம் செய்து ப்ரீதி பிரகரஷத்தால் கும்பிடு நட்டமிட்டாடி –
அவன் எழுந்து அருளி நிற்கின்ற-திரு மோகூரை அடைந்து அனுபவிக்க வாருங்கோள்-என்கிறார் –
தொண்டீர் வம்மின் –
பகவான் இடத்தில் ஆசை உடையீராய் இருப்பீர்-அனைவரும் வாருங்கோள் –
நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் –
தனக்கு மேல் ஓன்று இல்லாத பேர் ஒளிப் பிழம்பாய்-மூன்று விதக் காரணமும்-தானே யானவன்
தஸ்ய மத்யே வஹ்னி சிகா அணி யோர்த்த்வா வியவச்தித்த
நீலதோயதா மத்யஸ்தா வித்யுல்லேதேவ பாஸ்வர-நீவார சூகவத் தன்வீ பிதாப ஸ்யாத் தநூபாமா -என்றும்
சதைவ சோமய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -என்றும் -என்கிற-பிரமாண சித்தியைப் பற்றி -நம் -என்கிறார்
அன்றிக்கே
தம் வடிவு அழகினையும்-தமப்பனான தம்முடைய சம்பந்தத்தையும் நமக்கு அறிவித்தவன் -என்னுதல் –
அண்ட மூ வுலகளந்தவன் –
அண்டத்துக்கு புறம்பே இருக்கிறவன்-
மகா பலியால் கவரப் பட்ட-அண்டத்துக்கு உள்ளே இருக்கிற-மூன்று வகைப் பட்ட உலகங்களையும் அளந்து கொண்டவன் –
படைத்தது விடுதலே அன்றி-படைக்கப் பட்ட உலகத்தை வலி உள்ளவர்கள் கவர்ந்து கொண்டால்
எல்லை நடந்து கொண்டு காப்பாற்றுகின்றவன்-என்பார்-அளந்து -என்கிறார் –
அணி திரு மோகூர் –
அவனுக்கு ஆபரணமான நகரம் -என்னுதல்
இந்த உலகத்துக்கு ஆபரணமான நகரம் -என்னுதல் –
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய –
எட்டுத் திக்குகளிலும்-ஈன்ற கரும்போடு-பெரும் செந்நெல் விளையும்படி –
கொண்ட கோயிலை –
திரு உள்ளத்தாலே ஏற்ற கோயில்-
கரும்புக்கு நிழல் செய்தால் போல் இருக்கும் -பெரும் செந்நெல் –
அகால பலினொ வ்ருஷா சர்வேச அபி மது ச்ரவா-பவந்து மார்க்கே பகவன் அயோத்யாம் பிரதி கச்சதி -யுத்தம்-17-18-
அவனுடைய திரு முகப் பார்வையாலே ஊரும்-காலம் அல்லாத காலங்களிலும்
மரங்கள் பயனைக் கொடுக்கின்றன -என்றபடியே ஆயிற்று –
வலம் செய்து –
வலம் வந்து –
இங்கு ஆடுதும் கூத்தே –
அங்கு சென்று
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத –
என்று களிக்கும் களிப்பினை-இங்கே களிப்போம் –
——————————————————————————————–
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-
போக்தாக்களுக்கு அனுபவ பிரியன் -ஆப்தன் -அவன் திருவடிகளை ஒழிய ரக்ஷகம் வேறே இல்லை
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்-வல்லார் ஆடினால் போலே -தர்ச நீய
-ரஷ்ய வர்க்கம் பின் சென்று ரக்ஷிக்குமவன் -தானாக தான் பேராகா பசுக்கள் கூப்பிடாமலமேயே –
குதறுதல் -அசுரர்கள் பீடிக்கும் -கேசி தேனுக பிரமுகர்கள் -பூதனை தொடக்கம் இவர்கள் வரை -மிருத்யுவாய்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்-அநந்ய பிரயோஜனராய் ஏத்தும் நங்களுக்கும்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் -தர்ச நியாமான -ஆத்தன்-சப்த பிரயோகம் -நடு பாசுரம்
ஆப்ததமன் -ஆஸ்ரிதர் விசுவாசம் உடன் பற்ற
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே-நிரதிசய போக்யமான திருவடிகள் அல்லது வேறு ரக்ஷகம் இல்லை –
திரு மோகூரிலே நின்று அருளின-பரம ஆப்தன் திருவடிகள் அல்லது
வேறு பாதுகாவல் நமக்கு இல்லை –என்கிறார் –
கூத்தன் –
நடக்கப் புக்கால் -வல்லார் ஆடினால் போல் இருக்கை –
அக்ரத ப்ரயயௌ ராம சீதா மத்யே ஸூ மத்யமா-ப்ருஷ்ட தஸ்து தனுஷ் பாணி லஷ்மண அனுஜகாம ஹ -ஆரண்யம்-11-1-என்கிறபடியே
நடைச் சக்கரவத்து பிடிக்கலாமாய் இருக்கும் ஆயிற்று –
அவன் முன்னே போக பின்னை போகையாவது-கூத்துக் கண்டு போகை யாயிற்று –
ஆடல்பாடல் அவை மாறினார் தாமே -பெரியாழ்வார் திருமொழி -3-6-4- என்னக் கடவது இறே-
அவன் திருக் குழலை வாய் வைத்த போது-அரம்பையர்கள் குழல் ஓசையைக் கேட்டு பாடுதளைத் தவிர்ந்தார்கள் –
அவன் நடை அழகினைக் கண்டு ஆடுதலைத் தவிர்ந்தார்கள் –
கோவலன்-
தன்னை தாள விட்டு அடியார்களை பாதுக்காக்குமவன் -கண்டகர்ணன் -பிசாசத்துக்கு மோஷம் கொடுத்து வழி நடத்தியவன் அன்றோ –
குதற்று வல்லசுரர்கள் கூற்றம் –
மிறுக்குகளைப் பண்ணுகின்றவர்களாய்-பெரு மிடுக்கை உடையராய் உள்ள அசுரர்களுக்கு யமனாக உள்ளவன் –
ஞானக் கண் தா கனம் ஒக்கும் பவம் துடை நஞ்சிருக்கும்
தானக் கண்டா கனல் சோதி என்று ஏத்தும் வன்தாலமுடன்
வானக் கண் தா கன வண்ணா என்றோது ஒலி வந்தடையா
ஈனக் கண்டா கனற்கு ஈந்தான் பரகதி என் அப்பனே – திருவேங்கடத் தந்தாதி
கண்ட கனவின் பொருள் போலே யாவும் பொய் காலன் என்னும்
கண்டாகன் ஆவி கவர்வதுவே மெய் கதி நல்கு எனக்கு
அண்டகனா இப்பொழுதே செல்க என்று அருள் கார் அரங்கன்
கண்டகனாவின் புறக் கண்டு வாழ்த்திக் கடிது உய்ம்மினோ – திரு வரங்க தந்தாதி –
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் –
இன்று அடைகிற நமக்கும்-வைகுந்தத்து அமரரும் முனிவரும் -10-9-9-என்கிறபடியே
எப்பொழுதும் தன்னையே அனுபவித்து கொண்டு இருப்பவர்க்கும்-ஒக்க இனியன் ஆனவன் –
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன் –
அழகிதான நீர் நிலத்தையும்-வளவிதான வயலையும் உடைய-திரு மோகூரிலே நின்று அருளின மேலான பந்து –
தான் தனக்கு இல்லாத மரண சமயத்தில்
தாதா தம் பிரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்-அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் –ஸ்ரீ வராக சரம ஸ்லோஹம்
என்னுடைய பக்தனை நானே நினைக்கிறேன்-என்னும் பரம ஆப்ததமன்
தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே பாரத்தை விட்டவனாய்-பாரம் இல்லாதவனாம் படியான ஆப்த தமன் -என்றபடி –
தாமரை யடி யன்றி –
நம்பத் தகாதவனாய் இருப்பினும்-விட ஒண்ணாத தாயிற்று திருவடிகளின் இனிமை –
மற்று இலம் அரணே –
பாது காப்பவர்களாக வேறு சிலரை உடையோம் அல்லோம் -என்றது
இனிமை இல்லையாகிலும்-விட ஒண்ணாதபடி-புறம்பு புகல் இல்லை -என்கிறார் -என்றபடி –
குண க்ருத தாஸ்யம் மட்டும் இல்லாமல் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் உண்டே -அநசூயை சீதை பிராட்டி சம்வாதம் —
—————————————————————-
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே-10-1-7-
அகில ஜகத் சிரேஷ்டா வான சர்வேஸ்வரன் -அப ஏவ -பெரிய நீர் படைத்து -வர்த்திக்கும் -அனுகூல வ்ருத்திகளை பண்ண நம் துக்கம் சடக்கென போகும்
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா-மூல பிரகிருதி -காரணமாக் கொண்டு தண்ணீர் படைக்க -உத்பத்தியாதிகள் இல்லாத அஜாம் -நாநா வித காரணங்களுக்கு தான் ஏக காரணமாய் -அவ்யக்தம் -வியக்தமாகி -அவிவிபக்தம் விபக்த தமஸ் ஆகும் —
நிரதிசய மகத்தை உடைய வான் -ஆகாசம் -திட விசும்பு -முதலில் படைக்கப் பட்டு -கடைசியில் அழிக்கப் படுமே –
அசேஷ காரியமும் உண்டாக்கும் யோக்யதை உண்டே
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா-எங்கும் ஓக்க காரண நீர் படைத்து -அண்டத்துக்குள்
-விராட் ஸ்வரூபன் -பழையவன் -ஸ்ருஷ்ட்டி பிரகார மனன சீலன் -ப்ரஹ்மா முதலாக
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்-சகல லோகங்களையும் -ஆகாசம் முதல் பஞ்சீ கரணம் வரை –
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே-பிரதக்ஷிணம் வலம் -நன்கு சுற்றி -அநு கூல் வ்ருத்தி போகரூபமாக செய்ய
-துயர் போகும் -அதனால் வேறே ரக்ஷகர் இல்லை –
நம்மை பாது காத்தல் தனக்கே உரியதாய்-எல்லா உலகங்களையும் படைக்கின்ற இறைவன்-
எழுந்து அருளி இருக்கின்ற திரு மோகூரை அடையவே-நம்முடைய துக்கங்கள் அப்போதே போம் –என்கிறார்
மற்று இலம் அரண் –
வேறு ஒரு அரணை உடையோம் அல்லோம் –
அவன் தான் பாது காப்பவன் ஆகத் தக்க வல்லவனோ -என்னில்-இது அன்றோ அவன் படி -என்கிறது மேல் –
வான் பெரும் பாழ் தனி முதலா –
இவ்வருகு உண்டான கார்யக் கூட்டங்கள் முழுதும் அழிந்த அன்றும்-தாம் அழியாமையாலே வலியதாய் – அளவு இல்லாததாய்
போக மோஷங்களை விளைப்பத்தாய்-ஒப்பற்றதான-மூலப் பகுதி தொடக்கமாக-
சுற்றும் நீர் படைத்து –
ஆப ஏவ சசர்ஜா தௌ தாஸூ வீர்யம் அபாஸ்ருஜத்-மனு ஸ்ம்ருதி -1-8-
முதல் முன்னம் தண்ணீரை உண்டாக்கினார் -என்றபடியே-ஆவரண ஜலத்தை உண்டாக்கி –
அதன் வழித் தொல் முனி முதலா –
அவ்வழியாலே-தேவ சாதிகள் முதலான வற்றை நோக்கப் பழையனாய்
மனன சீலனான பிரமன் தொடக்கமாக -முற்றும் தேவரோடு உலகு செய்வான் -திரு மோகூர்
எல்லா தேவ சாதியோடும் கூட-எல்லா உலகங்களையும் உண்டாக்குமவன்-வசிக்கிற திருமோகூர்-
சுற்றி நாம் வலம் செய்ய –
நாம் சென்று-விடாதே வலம் வருதல் முதலானவைகளைச் செய்ய –
நம் துயர் கெடும் கடிதே –
வழித் துணை இல்லை என்கிற நம் துன்பம் சடக்கென போம் –
யதாஹி ஏவ ஏஷா எதஸ்மின் அத்ருச்யே அநாத்ம்யே-
அநிக்ருதே அநிலயதே அபயம் பிரதிஷடாம்-விந்ததே அதச அபயம் கதோபவதி -தைத்ரியம் -7
இந்த பரம் பொருள் இடத்தில்-பயம் இன்மைக்காக-இடைவிடாத நினைவின் ரூபமான த்யானத்தை-எவன் அடைகிறானோ
அவன் பயம் அற்றவனாக ஆகின்றான் -என்னக் கடவது அன்றோ –ஆனபின்பு மற்று இலம் அரண் –
———————————————————————————————
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-
சகல கிலேசம் -தசராத்மஜ தாடாகம் கிட்டி -சீதளம் -சீல குணம்
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்-
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்-சோலை வாய்ப்பு உஜ்வலம்-திவ்ய தேசம்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த-ஜகத் பாதகத்தால் வந்த -ராக்ஷஸ சகஸ்ர நாமம் -விருது பேரை உடையவர்
-மேக நாத ஹரி -இந்திர ஜித் வென்ற லஷ்மணன் –விபீஷண பிரக்ருதிகள் போலே இல்லாமல் -துறை அறியாமல் புக்கு அழுந்த
-சசால சாபஞ்ச -வெறும் கை வீரன் ஆகாமல் வில் கையில் வைத்து மாண்ட -வீரத்துக்கு தோற்ற திருவடி -போலே இல்லாமல் –
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே-குணங்கள் ரத்னம் மாணிக்கம் முத்து -இத்தை அன்றோ சக்கரவர்த்தி பெற்றான் –
கழுத்தில் கல்லைக் கட்டிக்க கொண்டு முடித்தார்கள் ராக்ஷஸர்கள்
விஷகரம் -மணி -மரகதம் -குளிகை -விஷம் போக்கும் -சியாமளா நிறம் -தடாகம் -குனைர் தாஸ்யம் உபாகத்தை-
குணத்துக்கு தொற்று -வந்து கிட்டு தொழ-அசகாயத்தால் -வழி துணை இல்லை என்னும் பயம் நசிக்கும் -பிரதி கூல நிரஸனம் அநு கூல ரக்ஷணம் –
திரு மோகூரிலே நின்று அருளினவனான-ஆண் பிள்ளையான
சக்கரவர்த்தி திருமகனை அடைய-நம்முடைய துக்கம் எல்லாம் போம் –என்கிறார்-
துயர் கெடும் கடிது –
துயர் கடிது கெடும்-விரும்பாது இருக்கச் செய்தே
நம்முடைய துக்கங்கள் தம்மடையே-சடக்கென போகும் –
அடைந்து வந்து –
வந்து அடைந்து-வந்து கிட்டி –
அடியவர் தொழுமின் –
வழித் துணை இல்லை -என்று வருந்துகிற நீங்கள்-அடைந்து வணங்குமின் –
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
உயர்ந்த சோலைகளாலும்-அழகிய தடாகங்களாலும்-அலங்கரிக்கப் பட்ட-ஒளியை உடைய-திரு மோகூர்
சோலையைக் கண்டால் -அவன் வடிவினை நினைப்பூட்டுவதாக இருக்கும்-
தடாகங்களைக் கண்டால் சிரமத்தை போக்குகின்ற அவன் வடிவினை நினைப்பூட்டுவதாக இருக்கும்
வாசத் தடம் போல் வருவான் அன்றோ அவன் தானே –புண்டரீகத் தடாகம் நின்ற சேவை தானே நம்பெருமாள் –
பெயர்கள் ஆயிரம் உடைய-
சர்வேஸ்வரன் அளித்துப் படைத்த-பெயர்களோ பாதி போரும் ஆயிற்று
இவர்கள் பிறர்களை துன்புறுத்தி பெற்ற பெயர்கள்-
யஞ்ஞ சத்ரு – ப்ரஹ்ம சத்ரு -என்பன போன்றவனவே அன்றோ இவர்கள் பெயர்கள் –
வல்லரக்கர் புக்கு அழுந்த –
பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே –
சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே இருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்
பதி தரு மரு வாபீ வாரிவத் சர்வ போக்கியம் -பிரமாணம்
மரு பூமி -நீரும் நிழலும் இல்லாத இடம்-வழியில் உள்ள மரம் என்ன-மரு பூமியில் உள்ள தண்ணீர் என்ன-
இவற்றைப் போன்று எல்லாருக்கும் இனியனை -என்கிறபடியே-அடியவர்கட்கு பாதுகாவலனாய்
சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி-
யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20-
இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே
விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது
மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30-
என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ –
——————————————————————————————————-
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-
விலக்ஷண அவயவ விசிஷ்டன் -நித்ய வாசம் -திவ்ய தேசம் ரக்ஷகமாக கிட்டப் பெற்றோம் ப்ரீதராகிறார்
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்-தெளிந்த தடாகம் போலே குளிர்ந்த திருவடிகள்
-மலர் கண் -மலர்க்கண்-மூன்று காலம் -மலர் கண் வைத்த -தன்னடியார் பாசுரம் –இங்கே மலர்ந்த திருக்கண்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்-ஆபரணம் அணிந்து கொள்ள ஏற்ற திருத் தோள்கள்
-ஈர்க்கும் -விசாலமான -தெய்வம் திவ்ய விக்ரகம் -திவு கிரீடா-தாது -அவயவங்கள் ஏற்க தக்க -புறம்பு ரக்ஷை தேட வேண்டாத படி
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்-பெரு மிடுக்கன் -ஆஸ்ரிதர் அச்சம் போகும் படி நித்ய வாசம்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே-விலக்ஷண ரக்ஷகமான தேசம் -அத்யாஸன்னம் ஆனதே -துணை கிட்டியதே-
பரத்வாஜர் ஆஸ்ரமம் வந்த ஸ்ரீ பரத ஆழ்வான் – -நலன் உடை ஒருவனை நாணுகினம் நாமே -போலே
நமக்கு அரணான திரு மோகூரை நாம் அடையப் பெற்றோம்-என்று தம் லாபத்தை பேசுகிறார்
மணித் தடத்து அடி –
தெளிந்த தடாகம் போல் ஆயிற்று திருவடிகள் இருப்பன -என்றது
சிரமத்தை போக்கக் கூடிய திருவடிகள் -என்றபடி –
மலர்க் கண்கள் –
அத்தடாகம் பூத்தால் போல் ஆயிற்று திருக் கண்கள் இருப்பன –
பவளச் செவ்வாய் –
பவளம் போன்ற சிவந்த திரு அதரத்தை உடையனாய் –
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம்-
தனக்குத் தானே ஆபரணமாய் இருக்கும்-பெரிய நான்கு திருத் தோள்களையும் உடைய தெய்வம்-
அவன் வழித் துணையாகப் போம் போது
சிரமத்தை போக்கக் கூடிய வடிவும்-தன் உகப்பு தோற்றின புன் முறுவலும்-
கடக் கண் நோக்கம்-முதலானவைகளையும் உடையவனாய்-
ஒரு கல் மதிளுக்கு உள்ளே போமாறு போலே-அச்சம் கெட்டுப்போம்படி ஆயிற்று-
தோள் நிழலிலே ஒதுங்கினால் இருக்கும்படி –வெற்றியில் விருப்பத்தோடு ஆயிற்று போவது
திவு கிரீடா விஜிகீஷா -தெய்வம் தாது –
வழியிலே எங்கே என்ன தடை வருகிறதோ என்று ஆசிலே வைத்த-கையும் தானுமாயிற்று போவது-
ஆசு -ஆயுதத்தின் பிடி –
அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன்-
அசுரக் கூட்டத்தை என்றும் துணிக்கும் பெரு மிடுக்கன்-
உறைபொழில் திரு மோகூர் –
வசிக்கின்ற -பொழிலை உடைய -திரு மோகூர்-
சிங்கம் வசிக்கும் முழைஞ்சு என்னுமா போலே –
நணித்து –
கிட்டிற்று –
நம்முடை நல்லரண் –
நம்மை பாதுகாக்கக் கூடிய நகரத்தை –
நாம் அடைந்தனமே –
காப்பாற்ற பட வேண்டும் என்னும்-விருபத்தை உடைய நாம்-கிட்டப் பெற்றோம் –
——————————————————————————————
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-
கால மேகப் பெருமாள் நின்ற திருக் கோலம் -கிடந்த திருக் கோலத்தில் ஷீராப்தி நாதன் சந்நிதியும் உண்டே —
பாம்பணை பள்ளி கொள்வான் மங்களா சாசனம் இவனுக்கே –சக்கரத் தாழ்வார் பிரசித்தம் –
ஆச்ரித விஷயத்தில் அபீஷ்ட விக்ரகம் -இஷ்டப் பட்ட -அபீஷ்ட வரதன் கார்ப்பங்காடு பெருமாள் –
வெவேறு மேக ரூபம் கொண்டு காள மேகம் கொண்டான் -ஸ்தல புராணம் –
திவ்ய தேச திரு நாமமே சொல்லி ஸ்தோத்ரம் பண்ணி அனுசந்தித்து -ஆழ்வார் சம்பந்திகளை கூப்பிட்டு அருளிச் செய்கிறார்
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்-அசாதாரணமான -நமக்கு என்று -விசேஷம் -விலக்ஷணமான அரண்
-சம்பந்த ஞானம் அறிந்து -அடைந்தோம் -நல்லதை அறியும் தேவர்கள் –
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்-பொல்லாங்கு பிரவர்த்திக்கும் அசுரரைக் குறித்து –
அஞ்சி – சென்று ஆஸ்ரயித்ததால்-நாமடைந்த நல்லரண் நமக்கு -என்று சொல்லிக் கொண்டு
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்-விருப்பம் கொண்ட ரூபம் கொள்ளுவான் –
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்
மோஹினி அவதாரம் -அமிர்த பிந்து இங்கே தெளித்து மோஹன க்ஷேத்ரம் என்பர்
அளப்பரிய ஆரமுதை அரங்க மேய அந்தணனை -அந்த அமிர்த திவலை விழுந்து திருவரங்கம் –
-மூன்று கிரியா பாதங்கள் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணி -வாக் வியாபாரங்கள் மநோ வியாபாரம்
பயிலுதல் -நினைந்து -மேலும் ப்ரீதி பிரேரித்ராய் ஏத்துமின் –
மூ வேழ் உலகும்-உலகினுள் -எல்லாவற்றையும் காக்கின்ற இறைவன்
வசிக்கின்ற திரு மோகூரை-நமர்காள் ஆதரித்து-நினைந்து- ஏத்துங்கோள்- என்கிறார்-
நாமடைந்த நல்லரண் நமக்கென்று –
நம்மை பாதுகாக்கும் பொருளாக-நாம் கிட்டின நல் அரண் என்று-அந்த தேவர்கள் பாசுரம் இருக்கிறபடி –
நல்லமரர் –
தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று அறிகையாலே-நல் அமரர் -என்கிறார் –
அசுரர்களைக் காட்டிலும் வேறுபாடு இத்துனையே யாம் –
ஈஸ்வர அபிமானிகளாக இருந்தாலும் நல் அமரர் என்கிறது இத்தைப் பற்றி இறே-
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால் –
பிறரை துன்புறுத்துதலையே தங்களுக்கு-தொழிலாகக் கொண்ட அசுரர்களுக்கு அஞ்சி-வந்து சரணம் புக்கால் –
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் –
காதலுக்கு தகுதியான வடிவம் கொண்டு-புறப்பட்டுக் காப்பாற்றுகிறவன்-வசிக்கிற திரு மோகூர் –
தோள்கள் ஆயிரத்தாய் -அஜிதன் -திருப் பாற் கடல் கடைந்த திரு நாமம் –
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள் –
நம்முடையவர்களே-ஊரின் பெயரை வாயாலே சொல்லி-நினைத்து-உவகையின் மிகுதியால்-ஏத்துங்கோள்
—————————————————————————
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-
பகவத் பிராப்தி விரோதி – நிவ்ருத்தியை -பலமாக அருளிச் செய்கிறார் –
ஏத்துமின் நமர்காள் என்று – தான் குடமாடு-உகப்பு -தோற்றும் படி ஸ்துதித்து — தான் -நம்மாழ்வார் -குடம் கொண்டு கூத்தாடு -அவனை பாடி –
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்-திரு நகருக்கு நிர்வாகம் அந்தரங்க கைங்கர்யம்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு-விலக்ஷண -திவ்ய தேசம்
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே-திரு வேங்கடத்துக்கு இவை பத்து -பிரசாதம் -விநியோகம் போலே –
ஆன்ற தமிழ் மறை ஆயிரமும் திருவரங்கனுக்கு -சமர்ப்பிக்கப் பட்ட திருவாயமொழி -ப்ரீதி பிரேரித்தாராய் பாட –
-சததம் கீர்த்தயந்த -சரீர அவசானத்திலே வழித்துணை இல்லாத துக்கம் போகும் —
நிகமத்தில் –
மேலான வண்மையை உடைய-திரு மோகூருக்கு கொடுத்த-இத் திருவாய் மொழியைக் கற்க வல்லார்க்குத்-
துன்பம் எல்லாம் நீங்கும்-என்கிறார்
ஏத்துமின்-நமர்காள் என்று தான் குடமாடு-கூத்தனை-
நம் செயல்களை உகப்பார் எல்லாரும் கண்டு-வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி ஏத்துங்கோள்-என்று தான் சொல்லி
அதற்கு விஷயமாக தான் குடக் கூத்து ஆடினவனை –
மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நால் திசையும் போற்றத்
தொடர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே -சிலப்பதிகாரம் -ஆய்ச்சியர் குரவை –
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் –
ஆழ்வார் உடைய குற்றேவல்கள் என்றது-
அவன் குடக் கூத்தினை நினைத்து-இவர் நாவினால் பாடுகிற அடிமையிலே மூண்டார் -என்றபடி –
வாய்த்த வாயிரத்துள் இவை –
சர்வேஸ்வரனுக்கு நேர் பட்ட ஆயிரத்துள்ளே-வாய்த்தவை ஆயின இவை –
வண் திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை –
மேலான வண்மையை உடைய திரு மோகூர்க்கு கொடுத்த-பத்து
கவாம் சத சஹஸ்ரேன தீயதாம் சபலாம் மம-ரத்னம் ஹி பகவத் ஏதத் ரத்ன ஹரீச பார்த்திப -பால -58-9-
ஸ்ரீ வசிஷ்ட பகவானைக் குறித்து ஸ்ரீ விஸ்வாமித்ரர் கூறியது
இந்த காம தேனு பசுக்களில் ரத்னம் -போலே-என்பது பிரசித்தம்-
தர்ம சாஸ்திர விதிப்படி -இரத்தினத்துக்கு உரியவன் அரசன் -என்னுமாறு போலே
இத் திருவாய் மொழியின் இனிமையாலே-திரு மோகூர்க்காய் இருந்தன என்று கொடுத்தார் –
இவை-ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே –
இப்பத்தினை கற்க வல்லார்க்கு-உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே-
வழித் துணை இல்லை என்று-வருந்த வேண்டாதபடி-காளமேகம் வழித் துணையாம்
———————————————————————————————-
திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
ஆத்யே அந்திம சதகம் முனி ஸூ யாத்ராம் நிச்சிதய
சகாயம், அபேக்ஷமான ஆப்தம் ஹிதஞ்ஞாம்
அஹித சிதம் அம்புஜாக்ஷம்
மோகூர் அதிசம் முராரி ஆஸ்ரய சஹா –
————————————————————————————–
திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –
தைத்யா நாம் நாசகத்வாத்- வித்திருத்த துளசிதாயா மவ்லி
ஜையித்வாத் சார்பாதீஸே சயதவாத நிரவதிக மஹாத்வாத் பரஞ்சோதி
உல்லாச பாவாத்யாத் லோகா நாம் ஸ்ருஷ்டு பாவாத்
தசரத சுத தாபஸ் சிராந்தி ஹாரத் ஆகாரதை சத் கதி ஜலத தனு ருசி
1–தைத்யா நாம் நாசகத்வாத்–திரு மோகூர் நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
2–வித்திருத்த துளசிதாயா மவ்லி–ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
3-ஜையித்வாத்–நான்முகன் அரனொடு தேவர்கள் நாட வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான்
4–சார்பாதீஸே சயதவாத–சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
5–நிரவதிக மஹாத்வாத் பரஞ்சோதி–நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
6–உல்லாச பாவாத்யாத்–கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம் ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
7–லோகா நாம் ஸ்ருஷ்டு பாவாத்–சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்-
8–தசரத சுத தாபஸ் சிராந்தி ஹாரத்–திரு மோகூர் பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே
9–ஆகாரதை சத் கதி–திரு மோகூர் நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–
10–ஜலத தனு ருசி–காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்-
———————————————————————————
திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 91-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-
அவதாரிகை –
இதில்-நாள் இடப் பெற்று-வழித் துணையோடு போக ஒருப்படுகிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
சரீர அவசானத்தில் பேறு-என்று-ஸ்ரீ சர்வேஸ்வரன் நாள் இட்டுக் கொடுக்கையாலே-போக்கிலே ஒருப்பட்டு
நெடும் காலம் முகம் பழகின சரீரத்தை விட்டு
ஹ்ருதய குகையில் நின்றும் வழி கண்டு மூர்த்தன்ய நாடியாலே சிர கபாலத்தை பேதித்துக் கொண்டு
ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தாலே-ஸ்ரீ பரம பதத்தே ஏறப் போம் இடத்தில்
கேட்ட போதே துளங்க வேண்டும்படியான யாம்ய மார்க்கத்திலே பட்ட இளைப்பு எல்லாம் ஆறும்படி
தன் கடாஷாம்ருத வ்ருஷ்டிகளாலே குளிர வழிய வார்த்து யம படருடைய சரவண கடுகமான கடும் சொற்களை
கேட்ட யுள் வெதுப்பு ஆறும்படி செவிக்கினிய செம் சொற்களாலே செந்தளிப்பித்தும்
உக்ரமான யம தர்சனத்தால் வந்த வெக் காயம் ஆறும்படி
தன்னுடைய சௌம்ய வர்ஷத்தை நிரந்தரம்-வர்ஷித்துக் கொண்டு வழியில் உண்டான இடையூறுகளையும்
திவ்ய ஆயுதங்களாலே இரு துண்டமாக விட்டு
நயாமி பரமாங்கதம் -என்கிற படியே-ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோள்களிலே வைத்துக் கொண்டு
ஆதி வாஹகரைக் காட்டாமல்
தானே கொண்டு போய்-ஸ்ரீ திரு நாட்டிலே விடுகைக்கு
வேடன் -வேடுவிச்சி -பஷி -குரங்கு -பிசாசம் -சராசரம்-18 நாடன் பெரும் கூட்டம் – முதலானாரை வருத்தம் அறக் கொண்டு போய்
ஸ்ரீ வைகுந்தத்து ஏற்றி அருளின-காளமேகமான ஸ்ரீ அரங்கத்து உறையும் இன் துணைவனை ஒழிய-வேறு ஒருவரும் இல்லை என்று
ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாகப் பற்றுகிற-தாள தாமரையில் அர்த்தத்தை
தாள் அடைந்தோர் தங்கட்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –
————————————————–
தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-
————————————————————-
வியாக்யானம்–
தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம் காளமேகத்தைக் கதியாக்கி –
சரணமாகும் தனதாள் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று
தன் திருவடிகளை உபாயமாக அடைந்தவர்களுக்கு தானே மார்க்க பந்துவாம் –
ஆதி வாஹிகர் கையிலும் காட்டிக் கொடாதே
துன்னு குழல் கரு நிறத்தன் என் துணையே -என்கிறபடியே
சுரி குழல் கமல கட்கனிவாய் காளமேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதியே -என்ற-ஸ்ரீ காளமேகம் தானே
நயாமியில் படியே -நடத்தும் –
தாள் அடைந்தோர் -என்கிற இதில் – தாமும் அந்தர்பூதர் – இறே –
காளமேகத்தை கதியாக்கி –
சாம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படி-சௌந்த்ர்ய அம்ருத வர்ஷியான ஸ்ரீ காளமேகத்தை
வழிக்கு ரஷகமான கதி ஆக்கி –
அதாவது –
அவன் நிழல் தடம் அன்றி அறியோமே -என்றும்
அண்ட மூ வுலகு அளந்தவன் -என்றும்
கூத்தன் கோவலன் திரு மோஹூர் ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே -என்றும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -என்றும்
மணித்தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக்கொள்
நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன் -என்றும்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் -என்றும் –
இப்படி வழிக்கு வேண்டும்-நிழல் தடங்கள் முதலானவை எல்லாம்-தானே யானவன் -என்கை –
அக்ரத ப்ரய யௌ ராம -என்று அவர் முன்னே போக –
மன்னன் இராமன் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு
அவர் தோள் நிழலை அண்டை கொண்டு நடந்தால் போலே-நடக்கப் பாரிக்கிறார் இறே-
மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் –
குடி மன்னுமின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் -என்னும்படி
மீளுதல் ஆகிற தோஷம் இன்றிக்கே-ந ச புனராவர்த்ததே -என்றும்
புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே -என்றும்
மீளாப் பொருவரிய விண்ணாடு -என்றும்
மீட்சி இல்லா நாடு -என்றும் சொல்லப்படுகிற-பரம வ்யோம சப்த வாச்யமான -பரமபதத்திலே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்றும்
எழுந்து அருள மனனம் பண்ணுகிற மோஷ லஷ்மியை உடைய
மாறன் -என
ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –
கேதம் உள்ளது எல்லாம் கெடும் –
மனக்கேதம் சாரா -என்னும்படி-துக்கம் என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும் –
பிராப்ய லாப துக்கம் எல்லாம்-நிவ்ருத்தமாம்-
———————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply