பகவத் விஷயம் காலஷேபம் -179- திருவாய்மொழி – -9-10-1….9-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மாலை நண்ணி -பிரவேசம் –

அறுக்கும் வினையாயின -என்ற திருவாய் மொழியிலே அவனை பெற-வேண்டும் என்ற எண்ணமேயாய்ச் சென்றது –
எண்ணின சமயத்திலே விரும்பியபடி கிடையாமையாலே
மிக்க துன்பத்தை அடைந்தபடி சொல்லிற்று -மல்லிகை கமழ் தென்றல் என்ற திருவாய் மொழியில்-
அது தான் இரவில் விசனமாக நோவு பட்ட படி அன்றோ –
இப்படி எண்ணினவாறு பெறாமையாலே-நோவு படுகிற இவருடைய துன்பத்தினை நினைத்து-
நான்கு திருவாயமொழி தொடர்ந்து நலிய -இதற்கு மேலே ஆழ்வார் பொறுக்க மாட்டார் என்று திரு உள்ளம் கொண்டு –
சர்வேஸ்வரன்-நீரோ இப்படி எண்ணுவீரும்-அது கிடையாமல் துன்பப் படுவீரும்
உம்மைப் பெற வேண்டும் என்று எண்ணுவோரும் நாம் அன்றோ-ஸ்வாமி யன்றோ சொத்தைப் பெற எண்ணுவர் —
-உம்மைப் பெறாமையால் இழவு பட்டோமும் நாம் அன்றோ-உமக்கு ஒரு குறை உண்டோ-
கலங்கா பெரு நகரம் கலவிருக்கையாய் இருக்க-அவ்விடத்தை விட்டு
திருக் கண்ணபுரத்திலே வந்து நாம் எழுந்து அருளி இருப்பதும் உமக்காக அன்றோ
நீர் விரும்பியதை உம்முடைய சரீரத்தின் முடிவிலே -செய்யக் கடவோம் –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –என்று சமாதானம் செய்ய
சமாதானத்தை அடைந்தவராய் இவரும்உவகையர் ஆகிறார் –
அவன் ஓன்று செய்யக் கடவோம் -என்றால்-
அப்போதே பெற்றதாக நினைத்து உவகையர் ஆகலாம்படி அன்றோ அவன்படி இருப்பது –

இப்படி உவகையராய்-அவன்படி இதுவான பின்பு-சர்வேஸ்வரன்-எல்லாராலும் பற்றப்படுபவனாய்க் கொண்டு –
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் –தொழுது எழுமினோ தொண்டீர் –
திருக் கண்ணபுரத்தில் அணித்தாக எழுந்து அருளி இருக்கிறான்
எல்லாரும் ஒரு சேர அவனை அடையுங்கோள்
அடையும் இடத்தில் அவன் திருவடிகளில் பக்தியைப் பண்ணுங்கோள் –முதல் நான்கு பாசுரங்களில் பக்தி பற்றி அருளி –
மேலே பிரபத்தி பற்றி அருளி-பக்திக்கு சாதனம் இல்லாதார் பிரபத்தியை செய்யுங்கோள்-
அதற்கு தகுதியான மன உறுதி இல்லாதார்-திருக் கண்ணபுரம் -என்ற வார்த்தை மாத்ரம் ஆகிலும் சொல்லுங்கோள் –
-பத்தாவது பாசுரத்தில் –அவ்வளவே கொண்டு அவன் தான் கை விடான்-
ஆனபின்பு எல்லாரும் ஒரு சேர அவனை அடையுங்கோள்-என்று பரோபதேசத்தில் மூளுகிறார்
மோகித்துக் கிடப்பார் ஆகில் கிடப்பார் இத்தனை போக்கி-உணர்ந்தார் ஆகில் பிறர்க்கு நலம் சொல்லி அல்லது நிற்க மாட்டார் –

பிராரப்த கர்மங்களின் முடிவில் மோஷமாகக் கடவது -என்று அன்றோ-வேதாந்தங்களில் சொல்லப் பட்டு இருக்கின்றது
சரீரத்தின் முடிவில் நீர் விரும்பியதை செய்யக் கடவோம்-என்று சர்வேஸ்வரன் சொன்ன இடமும்
அதனைக் கேட்டு இவர் உவகையர் ஆன இடமும் பொருந்தா -என்னில்
இத் திருவாய் மொழியில் -பக்தியை செய்யுங்கோள் என்றும்-
அது மாட்டாதார் பிரபத்தியை செய்யுங்கோள் என்றும்-சொல்லிற்றே அன்றோ –
வேதாந்தங்களில் உபாசகன் ஆகிற அதிகாரியை நோக்கிக் சொல்கிறது-இங்குப் பிரபன்னனுக்கு சொல்லுகிறது
தஸ்ய தாவதேவ சிரம யாவன்ன விமோஷ்யே-என்கிற-வாக்கியம் அன்றோ இவ் வர்தத்தைச் சொல்லுகிறது
இந்த உபநிஷ வாக்கியம் தான் சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறதோ-
கர்மங்களின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறதோ-என்று விசாரித்து
கர்மங்களின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறது-என்று -ஸ்ரீ பாஷ்யகாரர்-சித்தாந்திப் படுத்தி உள்ளாரே அன்றோ
தேகாவசேனே முக்தி -ஸ்ரீ தேவ பெருமாள் -அதிகாரி பேதத்தால் முரண்பாடு இல்லை என்றதாயிற்று –

அதனோடு சரீரத்தின் முடிவில் மோஷம் என்று இங்கே சொன்னது முரண் படாதோ என்னில்
நியாயத்தோடு கூடிய வாக்கியம் அன்றோ பொருளை அறிவிப்பதற்கு உரியது ஆவது
உபாசகனுக்கு தான் பற்றின உபாயம் முற்றுப் பெற்ற பின்னரே பலிக்க வேண்டி இருக்கையாலே-அவ்வளவும் நியாயம் நடக்கும்-
பிரபன்னன் முதல் அடியிலே -என்னுடைய எல்லா பாபங்களுக்கும் நீயே கடவாய் -என்று கொண்டு
சர்வேஸ்வரன் பக்கலிலே-பரந்யாசம் செய்தவன் அன்றோ-
இவன் தான் இனி செய்கிறது என்று ஓன்று உண்டாய்-அது முடிந்த பின்பு பெற வேண்டும் என்னும்
கால தாமதத்துக்கு காரணம் இல்லையே
இதனால் பரந்யாசம் பண்ணப் பட்ட சர்வேஸ்வரனுக்கு-ஆற்றல் இல்லை
அதனால் அது விளம்பதுக்கு காரணம் ஆகின்றது என்று சொல்லுவதற்கும் இன்று –
ஆக
இப்படி நியாயங்கள் காட்டினவாறே-இவனுக்கு சரீரத்தின் முடிவிலே பேறு கிடைப்பதற்கு தட்டு இல்லை அன்றோ

இனித் தான்
அதாத்ர மாதலீ சாப தபஸ் தப்த்வா ஸூ துஷ்கரம்
பகவந்தம் பிரபன்னா ஸா பகவந்தம் அவாப ஸா – காருட புராணம் -ஸ்ரீ ரங்க மகாத்மியம் -அத்யா-3
அவள் பகவானைச் சரண் அடைந்தாள்
பகவானை அடைந்தாள் -என்கிறபடியே மாதவி சரணாகதி செய்து மோஷத்தை பெற்றாள் ஆகச் சொல்லப் பட்டுள்ளது அன்றோ-
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று-அதனுக்கே கவல்கின்றேனே -திருமாலை
அவதார ரகஸ்ய ஞானம் உடையவன் இந்த சரீரத்தின் முடிவிலே பேறு பெறக் கடவேன் -என்றே சொல்லா நின்றது அன்றோ –
த்யக்த்வாம் தேஹம் புனர் ஜன்ம நைதிமாம் ஏதிச அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-
த்யக்த்வா தேஹம்-உபாசனனுக்கு விஷயமானாலும் கிம்புநர் நியாயத்தாலே பிரபன்னனுக்கும் சித்திக்கையாலும்
சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதற்கு பிரமாணம் ஆக குறை இல்லை –
புருஷோத்தம வித்யையையும் அவதார ரகஸ்யமும் அறிந்தால் அந்த தேவ அவசானத்திலே முக்தி என்றானே –
சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையே பக்திக்கு -பாரதந்த்ர காஷ்டை என்பதாலே பூர்வாச்சார்யர்கள் -பிரபத்தி நிஷ்டர் ஆனார்கள்
-பார்த்தாவின் கையை எதிர்பார்க்கும் பார்யை போலே –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை –18-66
நன்று
ஆனால் சரணாகதி செய்த உடனே பகவானை அடைதல் வேண்டாவோ-
இந்த விரோதியைப் போக்கி உன் திருவடிகளைத் தர வேண்டும் என்று அன்றோ இவன் விரும்புவது-
பின்பும் தனக்கு விருப்பம் இல்லாத இச் சரீரத்தோடு இருக்கும் இருப்பு-
கர்மங்கள் அனுபவித்து முடிவு பெறாமையாலே ஆவதோ-சர்வேஸ்வரன் வைக்க இருக்கிறான் ஆவதோ -என்னில்
சர்வேஸ்வரன் வைக்க இருக்கிறான் ஆகில் அவனுக்கு சில குற்றங்கள் உண்டாகும்
அவன் தான் நம் இரு வினைகளையும் நடுவே துண்டித்து-அவ்வருகே கொண்டு-போகிறேன் என்று சொன்னதோடும் முரண்படும்
ஆனபின்பு கர்மங்கட்கு கட்டுப் பட்டவர்கள் போன்று இன்ப துன்பங்களை இவனும்-அனுபவித்து இருக்கையாலே கர்மத்தாலே யாம் இத்தனை அன்றோ –
நன்று
இனிக் கர்மம் நடையாடக் கடவது ஆனால்-பிராரப்த கர்மங்களை அனுபவித்து முடிகிற வரையிலும்
போகத் தட்டு என் என்னில்-அதிகாரி விசேடத்தாலே அது வேண்டா-யாங்கனம் எனின்-
இவன் சரணாகதி-செய்த அளவிலே முக்தனாம் ஆகில்-இது தன்னை நச்சுப் பொய்கை போன்றதாக நினைத்து அஞ்சுவார்கள் –
அதனால் ஆள் பற்றாது
இனி அவனை இங்கே சில நாள் வைக்கவே-ஸ்ரீ வீடுமரைக் கொண்டு நாட்டுக்கு வெளிச் சிறப்பைச் செய்து கொடுத்தால் போலே
இவன் சிலருக்கு உபதேசித்தும்-இவனுடைய ஒழுக்கைத்தைக் கண்டு திருந்துவாருமாய்-இங்கனம் சில நன்மைகளும் காரணமாக இருக்கும்
இனித் தான் -இவனை நமக்கு தந்த சரீரம் அன்றோ -என்று-இறுதியாக இந்த சரீரத்தை ஈஸ்வரன் தானாக உபஷிக்கவும் மாட்டான்
சந்தாம் ச யாக் சந்ததே ப்ரஹ்மனைஷ ரமதே தஸ்மின் உத ஜீர்னே-சயாநேன ஏனம் ஜாஹாதி அஹ ஸூ பூர்வயேஷூ-யஜுர் வேதம் ஆருணம்
முதுமை அடைந்த இவன் சரீரத்தை விடாதவன் ஆகி-இறைவன் இச் சரீரத்தில் இன்புற்று வசிக்கிறான் -பிரமாணம்-சரம விமல திருமேனி -அன்றோ –
இது காறும் ஆர்த்த பிரபன்னன் விஷயமாக மூன்று விஷயங்களை அருளி-மேலே த்ருப்த பிரபன்னன் விஷயமாக ஒரு விஷயம் அடுளிச் செய்கிறார்-
இவன் தான் சரணாகதி செய்யும் காலத்தில்-இப்போதே இவ் உடல் நீங்கி உன் திருவடிகளை பெற வேண்டும் -என்னும் விரைவும்
இவனுக்கு உண்டாக காரணம் இல்லை
முகம் பழகினது ஆகையாலே -இச் சரீரத்தை விட -என்றால் கடுக இசையான் –
இனி வேறு ஒரு சரீரத்தை அடைதல் கர்ப்ப வாசம் செய்தல்-செய்யாது ஒழிய வேண்டும் என்னும் அளவாயிற்று இவனுக்கு உண்டாகில் உண்டாவது-
ஆகையாலே -தத் க்ரது-நியாயத்தாலே எங்கனம் நினைத்தானோ அங்கனமே பலித்தல் –அப்படியே பேறாக இருக்கும்
ஆகையால் இவனுடைய நினைவையும் நோக்கி-இவன் தான் இச் சரீரத்தில் ஆசை வைத்து இருந்தானே ஆகில் நாலு நாள் இருந்திடுவானுக்கு
என்று இருப்பன் சர்வேஸ்வரன் –
ஆனால்-இங்கு இருக்கிற நான்கு நாள்களும் ஆதி வியாதிகளுக்கு இடம் கொடாதபடி-
மற்றையோரைக் காட்டிலும் வேறுபாடு தோற்ற மிக உயர்ந்த இன்பத்தினை உடையவனாக-இவனை வையாது ஒழிவான் என் -என்ன
உலகத்து மக்களைப் போன்று ஒன்றனை இழந்த காலத்தில் துன்புற்றும்-விரும்பிய பொருள்களை பெற்ற காலத்தில் இன்புற்றும்
போரும்படிக்கு தகுதியாக வைக்கிறது என் -என்னில்
இவன் தன் சரீரத்தைப் போக்கி உன்னைத் தர வேண்டும்-என்றோ அன்றோ விரும்பியது
இச் சரீரம் தான் தண்ணியது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் விட மாட்டாது-இச் சரீரத்தில் இன்பத்தையே அனுபவிக்குமாறு வைக்கும் அன்று
இது தான் நன்றாய் இருந்ததாகில் ஈனனம் சில நாள் இச் சரீரமே தொடர்ந்து நமக்கு இருந்திடுக-என்று விரும்புவான் அன்றோ
இவனுடைய இச்சைக்கு ஈடாக வைக்கும் அன்று இன்னமும் ஒரு சரீரத்திலே இவனுக்கு ருசி உண்டாகவும் கூடுமே
ஆகையால்
இவனுடைய நலத்திலே நோக்கு உடையவனாய்-இவன் இருந்தபடி இருக்கிறான் என்று இருப்பான் இறைவன்
-ஆகையால் முகம் பழகின இச் சரீரம் தன்னடையே கழிய-இனி வேறு ஒரு சரீரத்திலே இவனுக்கு ருசி பிறப்பதற்கு முன்பே ஈஸ்வரனுக்கு
கார்யம் செய்து தலைக் கட்டலாய் இருக்கும்-
முகம் பழகின இச் சரீரம் தன்னடையே கழிந்து கொடு நிற்கும்-மேல் வரப் புகுகிறது அறியாமையாலே அச் சரீரத்திலே ருசி இல்லை
இது தான் பொல்லாதது என்று போலியாக அறிந்தும் வைக்குமே
இவன் முதலிலே இச் சரீரத்தை நீக்கி அருள வேணும் -என்று ஒரு வார்த்தை சொல்லி வைக்கையாலே
அவன் விரும்பாதது ஒன்றை செய்தானாகவும் சொல்ல ஒண்ணாதே அன்றோ –
விச்வாஸ ஆயாஸ பூம்நா -பக்திக்கு ஆயாசம் -பிரபத்திக்கு விச்வாஸம் -வேணுமே
அனுபவித்து -போகேனே அனுபவனே -பிராரப்த கர்மா முடிந்தால் மோக்ஷம் -முடிக்கும் பொறுப்பை பிரபன்னனுக்கு அவனே ஏறிட்டுக் கொள்கிறான் –
இனி
இறக்கும் நிலையிலே காஷ்ட பாஷானங்களைப் போலே இருப்பானே அன்றோ இவன் தானே-
ஆகையால் முதலில் சொன்ன வார்த்தையை கொண்டு இவன் விலக்க மாட்டாத அளவில்
ஈஸ்வரன் காரித்தைச் செய்து தலைக் கட்டுவான்-
தத தம் ம்ரியமானம்து காஷ்ட பாஷாண சந்நிபம்-அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதம் -ஸ்ரீ வராக சரம ஸ்லோகம்
அறிவில்லாத பொருளைப் போன்று கிடக்கிறவன் தலையிலே ஒரு தேவை இடேன் –
நானே நினைக்கக் கடவேன் -என்று சொல்லி வைத்தானே அன்றோ –
இந்த இரண்டு ஸ்லோகங்களும் எம்பெருமானுடைய முழுச் செல்வம் -என்று சொல்லக் கடவது அன்றோ
மனஸி ஸ்திதே –
நின்றவா நில்லா நெஞ்சம் -பெரிய திருமொழி -1-1-4-ஓர் இடத்திலே நிற்பது-
பட்டி நின்று திரியும் பசு உடையவனுக்கு ஓர் கார்யத்தை செய்யத் தொடங்குவதற்கு முடியாதே அன்றோ –
மனத்தினைக் கொண்டு தொடங்க வேண்டும் அன்றோ புருஷார்த்தத்தை பெறும் போதும் –
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-தச்யாஹம் நிக்னஹம் மன்யே வயோரிவ ஸூ துஷ்கரம் -ஸ்ரீ கீதை -6-34-
காற்றினைப் போன்று அம் மனத்தினை அடக்குதல் எனபது செய்ய முடியாத கார்யம் என்று நான் நினைக்கிறேன்-என்றான் அன்றோ அவனும்

த்ருஷ்ட்வைவச ஊர்வசீம் ப்ராப்தாம் லஜ்ஜாவ்ருத விலோசன-பாதாபி வந்தனம் க்ருத்வா குரு பூஜாம் ப்ரயுக்த வான் -பாரதம் ஸ்லோகம்
-ஆரண்ய பர்வம் அர்ஜுனன் தவ நிலை சுருக்கும் -160-
உலகத்தார் ஊர்வசியின் உலகத்துக்கு செல்ல விரும்பி அதற்கு வேண்டிய சாதனங்களைச் செய்யா நிற்க
அந்த ஊர்வசியே வந்து கிட்டி நிற்க –
நீ என் தாயே அன்றோ -என்று கைகூப்பி வணங்கி கிடக்க வல்ல-விரக்தன் அன்றோ இவ் வார்த்தை சொல்கிறான்-
எந்தை பெயர் புனை யாயு எனும் பேர் முடி இறைவன்
தந்தைக்கு உயிர் நிகராகிய தளவத் திரு நகையாய்
கொந்து உற்றெழு குழலாய் குழல் நிகராகிய மொழியாய்
வந்துற்றது என என அன்னை மலர்த்தாள் களில் வீழ்ந்தான் –வில்லி புத்தூரார் செய்யுள்
ஸூஸ்வஸ்தே சரீரே –
வேறுபாட்டினை அடியைக் கூடியதான இந்த சரீரமும் ஒரு நிலையிலே நிற்பது
தாது சாம்யே ஸ்திதே –
அதற்கு உறுப்பாக தாதுக்களும் ஓன்று முடங்கி-ஓன்று நிமுருகை அன்றிக்கே இவை எல்லாம் சமமாய்
சரீரத்திலே ஒரு நொய்ம்மை பிறந்து-சத்துவம் தலை எடுத்த போதாக-நம்மை யாவன் ஒருவன்
ஸ்மர்த்தா –
நினைக்கிறான் -என்றது-நாம் யார் -சரீரம் ஆகிற இது அறிவில்லாத பொருளாய் இருந்தது –
சரீரத்துக்கு வேறு பட்டதாய் ஒரு ஆத்மா உண்டு-அவ்வாத்மாவானது ஈஸ்வரனுக்கு அடிமைப் பட்ட பொருள்-
சர்வேஸ்வரனைப் பெறுதல் இவ்வாத்மாவுக்கு மோஷம் ஆகிறது -என்று நினைக்கிறவன் -என்றபடி –
விஸ்வ ரூபஞ்ச மாம் –
குடல் தொடக்கத்தால் முள் பாய்ந்தால் வரும் துன்பம் ஆத்துமாவினது ஆமாறு போலே-
இவற்றுக்கு வந்த இன்ப துன்பங்கள் தனக்கு வந்தனவாம்படி-
எல்லா வற்றையும் சரீரமாக உடையனாய் இருக்கிற என்னை –
அஜம் –
இவனைப் போன்று பிறவி காரணமான கலக்கம் இன்றிக்கே இருக்கை அன்றோ –
விஸ்வ ரூபஞ்ச மாம் -அஜம் –
நாராயணன்-ஸ்வாமித்வம் சௌலப்யம் வாத்சல்யம் சௌசீல்யம்
அஜம் -ஞான சக்தியாதிகள் –
தத
ஆகையாலே
தம் காஷ்ட பாஷாண சந்நிபம் ம்ரியமாணம் அஹம் ஸ்மராமி
நடையாடித் திரியும் அன்று இவனுக்கும் உண்டே அன்றோ இந் நினைவு-
அறிவில்லாத பொருளைப் போன்று கிடந்த அன்றும்-இவன் நினைதிலன் -என்ற தேவை இடாதே-
நான் அவனை எப்போதே நினைத்தபடி நிற்பன்-
மத் பக்தம் –
அடைகொடு பாழ் பொகடுமவனையோ அவன் பற்றிற்று -என்றது –
பல நாள்கள் பச்சை இடுவித்துக் கொண்டு-காரிய காலத்தில் வந்தவாறே-
பச்சை இடாத நாள்களை எண்ணி-அகற்றுமவனையோ பற்றிற்று -என்றது-
நயாமி பரமாம் கதிம் –
கள்வன் கொல் -பெரிய திருமொழி – 7-7-1-பிராட்டியை-அத்வாளத்தலையை-முந்தானையின் தலையில் -இட்டு
மறைத்து கொடு போனால் போலே-தானே கையைப் பிடித்து கொடு போமாயிற்று -என்றது
ஆதி வாஹிகரை வரக் காட்டி யாதல்-பெரிய திருவடியை வரக் காட்டி யாதல்-கொடு போகை அன்றிக்கே
ஆதி வாஹிகரில் முதன்மையான தானே கொடு போம் -என்றபடி –

சரண்ய முகுந்தவம் உத்பலா வதகத்திலே பிரசித்தம் -சூர்ணிகை -181-

மற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் –
அதில் துர்பல புத்திகளுக்கு
மாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு-தாள் அடையும் பிரபத்தி –
அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்-
சர்வ உபாய ஸூன்யருக்கு -இப்பத்தும் பாடியிடும் தண்டன் -என்று
கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே
ஆச்சார்ய ஹிருதயத்தில் நாயனாரும் அருளிச் செய்தது-சூர்ணிகை –227-

உத்பல -மாம்சத்தில் விருப்பம் இல்லா ரிஷிகள் -விமானம் -சரண்ய முகுந்தத்வம் -காட்டி அருள
-பர உபதேசம் பண்ணி -அழுகை நின்றால் உடனே உபதேசிப்பாரே –
முதல் 4 பாசுரங்கள் பக்தி பாரமாக
மேலே பிரபத்தி பாரமாக -5 பாசுரம் –
மேலே -திவ்ய தேசம் சொன்னாலே போதும் -மூன்று நிலைகள் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன் -ஆகதோ மதுராம் புரிம்-தனி ஸ்லோக வியாக்யானம் –
ஏஷ -ஸவ்ரி -/நாராயண ஸவ்ரி /ஸ்ரீ மான் ஸவ்ரி -இப்படி ஒவ் ஒன்றும் -கீழை வீடு திருக் கண்ண புரம் -திருமங்கை ஆழ்வாரை பாடுவித்த முக்கோட்டை –
ஆனந்தமாக ஆழ்வார் அருளிச் செய்யும் திருவாய் மொழி -இது –
நீல மேகப் பெருமாள் மூலவர் -புண்டரீக விசாலாக்ஷம் -சரஸ் சந்த்ர ஆனணம்-நீலாத்ரி -நீல மலை போலே
மலை இலங்கு தோள் நான்கே-கருவரை போலே நின்றானை கண்ண புரத் தம்மானை கண்டாள் கொலோ
பதமினி தாயார் -திருக் கல்யாணம் –
பிரயோக சக்கரம் மூலவர் –
சர்வாங்க ஸூ ந்தரன் -அழகியான -திரு நாக்கை ஸூ உத்தர பெருமாள் -அச்சோ ஒரு அழகிய வா -சமுதாய சோபை –
ஸவ்ரி அழகால் இவர் ஈர்ப்பார்
உபரி சரவசூ அரசன் வேட்டை -ரிஷிகள் -சாமைக் கதிர் போலே இளைத்து -இருக்க -16 வயசு பாலகனாய் வந்து -ரக்ஷிக்க
பக்தர்களை காக்க -அவனை அனுக்ரஹித்து -அவன் ஏழு மதிள்கள் இருந்த -வேலை மோதும் மதிள் -அலைகள் வீசா நிற்கும்
திருமலை ராயன் பட்டணம் -மாசி மகம் தீர்த்தவாரி -பல்லக்கில் -மாப்பிள்ளை ஸ்வாமி –
பெற்றக்கால் அவன் ஆகம் பெண் பிறந்தார் -கொற்றப் புள் ஒன்று ஏறி மன்னூடே வருகின்றான்
திருக்கைகள் மேலே -யதாஸ் ஸ்தானம் -இங்கு ஒரு திருவடி மேலும் ஒன்றும் கீழும் பரம பதன் போலே சேவை –
அரையர் -சோழ மன்னன் மதிள்களை இடிக்க -கையில் வில் பொம்மையா -சிலை இலங்கு பொன் ஆழி–தாளம் வீசி திரு முகம் நெற்றியில் வடு –
மயங்கினேன் பாசுர இனிமையால் -அம்பு பொழிந்து ரக்ஷித்தான்
அம்மாவாசை திருக் கைத் தல சேவை -கண்ண புரத்தமுதே என் அவலம் களைவாய் –
ராஜா ஒத்தக்க குழை -காதில் அழகிய மணி சூடி -நாஞ்சிலும் ஒரு பாடு இலக-
ராம சந்நிதியில் கண்ணன் சேவை -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம் -தண்டக மகரிஷிக்கு சேவை -முனியதரையர் பொங்கல் பிரசித்தம்-
அரசன் புத்ர காமோஷடி யாகம் -சுமதி -ராணி உபரி வசூ ராஜா -பதமினி தாயார் -தானம் பெரும் ஹஸ்தம் -64 சதுர் யுகம் கண்ட பெருமாள் –

——————————————————————————————–

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

குளித்து மூன்று -கடல் வண்ணா கதறுகின்றேன் -பக்தி பிரபக்தி பரமாக -இந்த பாசுரம் நிர்வகிப்பர் –
வட தள சாயி மகா உபகாரகன் -திருவடிகளில் பிரேமா உக்தராக சர்வ காலமும் கைங்கர்யம் -திருவாய் மொழிக்கு பிரதிபாத்யமான அர்த்தம்
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்-பிரேமா பாரவஸ்யத்தை கொண்டு அகோ ராத்ர விபாகம் இல்லாமல்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்–புஷ்ப அர்ச்சனை அங்கம் சாதன பக்தி -கைங்கர்யமாக பிரபன்னர்களுக்கு
எப்பொழுதும் -பக்தி மஹாத்ம்யத்தால் கர்மங்கள் தொலையும்
விஸ்லேஷ வினைகள் -அனுபவ அலாப கிலேசம் போகும்
தொழுதால் எழலாம் -பஃதாஞ்சலி -சேஷத்வ அநு வ்ருத்தி செய்து உஜ்ஜீவிமின்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து–அலைகள் –
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே-வட தள சாயி -ரஷித்த அகடிதகடநா சாமர்த்யன் -திருவடிகளை உத்தேசித்து –

இத் திருவாய் மொழியில் சொல்லப் படும் பொருளாவது-
இறைவனைப் பற்றுமின் -என்பது-அதனை இப் பாசுரத்தில் சுருங்க அருளிச் செய்கிறார்-

மாலை நண்ணித் தொழுது எழுமினோ –
சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டு-அடைந்து உய்வு பெறுவதற்கு பாருங்கோள்-
மால் -சர்வேஸ்வரன்
இனி மாலை நண்ணி -என்பதற்கு
சிநேகத்தின் காரியமான அன்பினைப் பொருந்தி -என்று பொருள் கூறலுமாம் -என்றது
பக்தி உடையவர்களாய் -என்றபடி -தொழுது எழுமினோ -என்கிறார் –
தொழுது எழு -என்கிற தம்முடைய வாசனையாலே -என்றது
அருளினான் -என்று பிரபத்தியை பற்றி இழிந்தவர் ஆகையாலே
தன் வாசனை தோற்றச் சொல்லுகிறார் -என்றபடி-
ஆயாஸ சாத்தியமான பக்தியை தொழுது எழு என்பது இவர் அபிப்ராயத்தால் –
சர்வேஸ்வரன் இந்த ஆத்மாக்களின் கூட்டத்துக்கு எல்லாம் சேஷி யாதலானும்
அவனை குறிக்க அடிமையாகும் தன்மை எல்லார்க்கும் ஒத்து இருக்கையாலும்-பலர்க்குமாக எழுமினோ -என்கிறார் –

வினை கெடக் –
பகவானை அடைதற்கு தடையாக உள்ள வினைகளின் கூட்டம் கெடும்படியாக -என்னுதல்
அன்றிக்கே
மல்லிகை கமழ் தென்றல்-என்ற திருவாய் மொழியில் கூறிய பிரிவுத் துன்பம் தீரும்படி -என்னுதல்

காலை மாலை –
இறைவனைப் பற்றுதற்கு கால வரை யறை இல்லை என்கை -காலை-மாலையைக் கூறியது –
ஆதி நடு அந்தி வாய் -இரண்டாம் திருவந்தாதி -73- என்கிறபடியே-எல்லா காலங்கட்கும் உபலஷணம்-

கமல மலர் இட்டு-
எல்லா மலர்கட்கும் உபலஷணம் -என்றது
நீங்கள் விரும்பின இவ் உலகப் பொருள்களே அமையும் -என்றபடி –
கள்ளார் துழாயும் –ஆம்பலும் முன் கண்டக்கால் -உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே -கமலம் தவிர -ஐந்தையும் —

நீர் –
அதிகாரிகளுக்கும் முன்புத்தை நீங்களே அமையும் -என்கை –

வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து-
கடல் அணித்து ஆகையாலே திரைகள் வந்து மோதா நின்றுள்ள-
மதிளாலே சூழப் பட்டு இருந்துள்ள திருக் கண்ணபுரத்திலே –
இத்தாலே -சிரமத்தை போக்கக் கூடிய தேசம் -என்று தெரிவித்த படி –

ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே –
எல்லா உலகங்களையும் வயிற்றிலே வைத்து-
அப்பொழுது தோன்றியது ஒரு ஆலம் தளிரின் மேலே-திருக் கண் வளர்ந்தவன்
இதனால்
உங்களுடைய விரோதியைப் போக்குதல் கூடாத செயல் ஆயினும்
அதனைச் செய்து முடிக்கும் வல்லமை உள்ளவன் என்பதனைத் தெரிவித்தபடி-
ஆல் -நீரும் இடமும்-
தண்ணீரின் மேல் இருக்கிற ஆல் என்னுதல்
ஆலின் மேலிடத்து என்னுதல்
இரண்டாவது பொருளில் -மேல் ஆல் -என்பதில் உள்ள ஆல் அசை நிலை

அடி இணைகள்
அவனுடைய இரண்டு திருவடிகளை-
தொழுது எழுமின் -என்க
ஆல்-செய்யுள் இன்பம்
பவனான உண்டாகும் நிலை -யில் உள்ள ஆலின் இலை –
ஆல்-நீரை சொல்லுமோ -ஆலங்கட்டி -கந்தாடை ஆண்டான் சொல்ல பெரிய ஜீயர் உக்காந்து அருளினார் –
நிகண்டு -திசை சொல்
வழக்கு -விவகார சொல் -பொன்னடிக்கால் சாத்த போலே
செய்யுள் சொல் சாஸ்த்ர பாஷை –
மால் -சர்வேஸ்வரன் -பக்ஷத்தில் -மாலின் அடி இணைகளை-நண்ணி தொழுது எழு-என்றவாறு –

———————————————————————————————–

கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-

ஷேமவத்தையை அனுசந்தித்து சுகிகளாக வர்த்திக்க பாருமின் –
கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்-மது பெருகும்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை-பெண் நண்டுகள் -போக்கிய ஸம்ருத்தியால் -அகழி பரிசரம் -அலவன் -ஆண் நண்டு
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்-சுக்ர பதம் வரை ஓங்கி -சமைந்த -ரக்ஷை உடைய தேசம் –
வெள்ளி போன்ற வண்ணம் என்றுமாம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே-அனுபவ சாபல்யம் உள்ள -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
அடி இணைகள் -தேச பரமாக -இறைஞ்சுமின்-

சர்வேஸ்வரனுக்கு என் வருகிறதோ -என்று
அஞ்சும் ஆசை உடையார்-காவலோடு கூடிய தேசம் என்று-அச்சம் இல்லாதவர்களாய்
நாள் தோறும் தொழுது எழுமின் –என்கிறார்

கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
செவ்விப் பூவைக் கொண்டு அர்ச்சித்து அடி வணங்கும் கோள்-பக்தி உடையவர்கள் செவ்விப் பூவை தேடுவார்கள் அன்றோ-
கள்ளார் துழாயும் கணவலரும் -பெரிய திருமொழி -11-7-6-என்கிறபடியே-
பூக்களின் இனத்தை சார்ந்தவை யாவும் அமையும் அன்றோ –அவன் படியைப் பார்த்தால்
ஆக -பொருள்களின் உயர்வு தாழ்வுகளை நோக்கான்-அடைகின்றவனுடைய அன்பினைப் பார்க்கும் இத்தனை
ஸ்ரீ புருஷோத்தம உடையானுக்கு அரச புத்தரன் சாத்தின செண்பகப் பூ வார்த்தையை நினைப்பது –

நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை –
நிறைந்த தண்ணீர் உடைத்தான வயலாலே சூழப் பட்ட அகழியின் அருகே
நண்டுகள் நீர் மாறாத இடங்களிலே ஆயிற்று வாழ்வது-ஆதலின் – நள்ளி சேரும் வயல்-என்கிறார்-
நள்ளி -பெண் நண்டு-
பள்ளிக் கமலத்திடைப் பட்ட-பகுவாய் அலவன் முகநோக்கி-
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே -பெரிய திருமொழி -6-7-6-
கிடங்கு -அகழி –

வெள்ளி ஏய்ந்த மதிள்-
நட்ஷத்திர லோகம் அளவும் ஓங்கின மதிள் -என்னுதல் -வெள்ளி -சுக்கிரன் -அனைத்துக்கும் உப லஷணம்
அன்றிக்கே
வெள்ளியாலே செய்யப் பட்ட மதிள் என்னுதல்
நமக்கு அங்கனம் தோற்ற வில்லை யாகிலும்-மிக்க அன்போடு நோக்குவார்க்கு மிக உயர்ந்த பொருளாக தோற்றும் அன்றோ –

சூழ் திருக் கண்ணபுரம் -உள்ளி –
மதிள்கள் சொந்த திருக் கண்ணபுரம்-காவல் மிக்கு இருப்பதனால் அச்சம் இல்லாத தேசம்-என்று அதனை நினைத்து –

நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே –
சர்வேஸ்வரன் விஷயத்தில் பக்தியை உடையீராய் இருக்கும்-நாளும் தொழுது-
பிறவிப் பெறும் கடலில் நின்றும் கரை ஏறும் கோள்-
பருவம் அல்லாத காலத்தில் கடல் தீண்டல் ஆகாது என்னுமாறு போலே
சர்வேஸ்வரன் விஷயத்தில் கால வரை யறை இல்லை-ஆதலால் நாளும் -தொழுது -என்கிறார் –

—————————————————————————————

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-

விலக்ஷண விபூதி உக்தன் -சுலபன் -ஏக கண்டமாய் -ஆராதிக்க -அருளிச் செய்கிறார்
தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்-அனுபவ அலாப கிலேசம் -ஏக ஹ்ருதமாய்க் கொண்டு
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்-விகாச உன்முகமாய் -சேஷத்வம் அனுரூபமாக ஆராதிக்க வேணுமே
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே-உபய விபூதி -ஸூ ரி போக்யன் -பரமபத -அமரர்கள் அதிபதி –

திருக் கண்ணபுரத்தில் நின்று அருளினவன்-உபய விபூதி நாதன் ஆயிற்று
உங்கள் துயர் கெட-அநந்ய பிரயோஜனராய்-வேறு ஒரு பயனையும் கருதாதவர்களாய்-ஏகமாய்-
வணங்குங்கோள்-என்கிறார்

தொண்டீர் –
ஆசை சிறிது உடையீரான நீங்கள் -என்னுதல்
அன்றிக்கே –
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்வதற்கு இட்டு பிறந்த -நீங்கள் -என்னுதல்

நும் தம் துயர் போக –
துயர்களும் மேலே கூறிய இவர்களுக்கு வேறுபட்டு அன்றோ இருப்பன –
சிற்றின்பத்தின் ஆசையால் உளதாய துயர் -என்னுதல்
சர்வேஸ்வரனை இறைஞ்சப் பெறாமையால் உளதாய துயர் -என்னுதல் –

நீர் ஏகமாய் –
நீங்கள் அநந்ய பிரயோஜனராய் -என்னுதல்
அன்றிக்கே
நீங்கள் எல்லாரும் ஒரே மிடறாய் -என்னுதல்
தொண்டர் -என்கையாலே எல்லாரும் ஒரே மிடறு ஆகலாம் அன்றோ –

விண்டு வாடா மலரிட்டு -நீர் இறைஞ்சுமின்
அலரத் தொடங்கின அளவாய்-கழிய அலர்ந்து வாடாத பூ -என்றது-ஈஷத் விகசிதம் –
செவ்விப் பூவைக் கொண்டு வணங்கும் கோள் -என்றபடி

வண்டு பாடும் பொழில் சூழ்
வண்டுகள் தேனை உண்டு-அதனால் மயக்கம் கொண்டு-பாடா நின்றுள்ள சோலை சூழ்ந்த தேசம்
ஏதத் சாமகாயான் ஆஸ்தே-தைத்ரியம் -10–அந்த சாம வேதத்தைப் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் -என்றபடியே
வண்டு பாடும் சோலை -என்கிறார் –
இதனால் எல்லை இல்லாத இனிமை உடைய தேசம் -என்பதனை தெரிவித்த படி –

திருக் கண்ணபுரத்து -அண்ட வாணன் அமரர் பெருமானையே-
திருக் கண்ணபுரத்திலே வந்து எளியனாய் இருக்கிறவன்-உபய விபூதி நாதன் ஆயிற்று -என்றது
இவ் உலகத்துக்கு நிர்வாஹகனுமாய்-நித்ய சூரிகளுக்கும் நிர்வாஹகன் -என்றபடி
இங்கே இறைவனைப் பற்றும் விரோதியைப் போக்கிக் கொண்டு-பூர்ண அனுபவம் பண்ண ஒரு தேச விசேடம் தேடித் போக வேண்டா-
நித்ய சூரிகளும் இங்கே வந்து சீல குணத்தை அனுபவிக்கும்படி ஏற்றம் உண்டே அன்றோ இங்கு-
குருடருக்கு வைத்த சாலையிலே விழித்து இருப்பார்க்கு பயன் இல்லை-
அப்படி அன்று இங்குத்தை நிலை-
பிரதிமாசு அப்ரப்புத்தானாம் -ஞானம் இல்லாதார்க்கு விக்கிரகத்தில் இருக்கிறார் -என்ற இதற்கு
அம்மேட்டிலும் ஏறிப் பாயா நின்றால்-தேசிகருக்கு சொல்ல வேண்டுமோ -என்று-ஆளவந்தார் அருளிச் செய்யும்படி
ப்ரதிமாசு அப்ரப்புத்தானாம்-அபி -சேர்த்து -அப்பிரபுத்திகளுக்கும் சேவை -உம்மைத் தொகை சேர்த்து ஆளவந்தார் –
விப்ரர் அக்னியில் -யோகிகள் இருதயத்தில் –ஸர்வத்ர சம தர்சனம் -நால்வரையும் சொல்லும் ஸ்லோகம் –

இனி
திருக் கண்ணபுரத்து அண்டவாணன் அமரர் பெருமானை -என்பதற்கு
பரமபத நிலையனாய்-அயர்வறும் அமரர்கள் அதிபதியும் ஆனவன்-என்னலுமாம் –

———————————————————————————————————–

மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-

அதிசயித்த போக்யனான கிருஷ்ணனை நப்பின்னை பிராட்டி உடன் சேர்ந்து -ஆராதிக்க அருளிச் செய்கிறார்
மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்–மானானது நோக்கை -கண் அழகை – நைந்த -கடைக் குறை
-ஆத்ம குண பூர்ணம் -நப்பின்னை -நோக்கை உடைய பவ்யமான -பிராட்டிக்கு வல்லபன்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்-சர்வ ரச-தேன்- தேன் உடன் கூடிய மலர் என்றுமாம் -தேனை விட்டு விடாத மலர் –
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்–ஆகாசம் அளவும் ஓங்கிய -ஆஸ்ரிதற்கு முகம் கொடுக்கும் யோக்யதை
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே-தானே உகந்து நித்ய வாசம் -ஆச்ரயணம் ஏற்றுக் கொள்வான் -ஆராதனை பிரதி சம்பந்தி –

அடையும் இடத்தில் நப்பின்னை பிராட்டி-புருஷகாரமாக அடைமின் –
அவன் உங்களைக் காப்பாற்றுவான் –என்கிறார் –

மானை நோக்கி –
மான் நை நோக்கி
மானானது நையும்படியான நோக்கை உடையவன் -என்றது
மான் தோற்று நாணும்படி ஆயிற்று நோக்கு இருப்பது -என்றபடி –

மடப்பின்னை தன் கேள்வனைத்-
பெண்மை முதலான குணங்களை உடைய-நப்பின்னை பிராட்டிக்கு கேள்வனை –

தேனை –
எல்லை இல்லாத இனியனை
இதனால்
இவ் வேப்பங்குடி நீரை அன்றோ நான் உங்களைக் குடிக்கச் செய்வது –என்ற குறிப்புத் தோன்றும் –

வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –
செவ்விப் பூவைக் கொண்டு-தூவி நீங்கள் அடையும் கோள்-
தேனையும்-செவ்விப் பூவையும்-சேர்க்கை போலே காணும் பற்றுலதல் ஆவது –

வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்-
ஆகாசத்தோடே பொறாமை கொண்டு அதனைத் தள்ளுமா போலே-இருக்கிற மதிள்களாலே சூழப் பட்ட ஊரை
இதனால்
பகைவர்களுக்கு கிட்ட ஒண்ணாதபடி அரண் அமைந்த ஊர்-என்பதனைத் தெரிவித்தபடி –

தான் நயந்த பெருமான் –
அடியார்களோடு கூடி இருந்து குளிர்வதற்கு பாங்கான தேசம்
என்று அதனை விரும்பி வசிக்கிற-சர்வேஸ்வரன் ஆனவன் –

சரண் ஆகுமே –
உங்களுக்கு ரட்சகன் ஆகும்-
அம் மதிள் அவனுக்கு அரண் ஆனால் போலே-உங்களுக்கு அவன் மதிள் ஆம் -என்றபடி –

——————————————————————————-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

ஆஸ்ரிதற்கு பரம பதம் -பிரதன் ஆனவன் ஸூ விஷயத்தில் கைங்கர்ய நிஷ்டர்க்கு அபி நிவேசமே வடிவாகக் கொண்டவன்
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்-சர்வ அதிகாரிகளுக்கும் தானே உபாய புதன்
திருவடி பற்றினார்களுக்கு உபாயம் தானே என்றுமாம் –
திருவடியே சரணம் ஆகும் என்றுமாம் -திருவடியே உபாயம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-மிரியமான -தசையில் -வைகுந்தம் -ஆக்கி கொடுப்பவன் இல்லை –
மரணம் ஆகும் வரை காத்து இருந்து -ஆனால் -சுரத்தால் -காட்ட வேண்டும் –
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்-ஷேமங்கரமாம் படி
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே-அன்பனாகுமே இல்லாமல் -அன்பு உருவாக கொண்ட -அன்பே அவன்
-ஞானி பிரியோ- அத்யந்த மம பிரிய -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
தரணி பூமியை ரக்ஷிக்க -பூமா தேவிக்கு ஸ்வாமி என்றுமாம் –
பிராவண்யம் உடையார்க்கு பிராவண்யம் வடிவு கொண்டு

இப்படி பக்தி யோகத்தால் அடைவதற்கு-தகுதி இல்லாதவர்களாகி
தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து-அவன் செய்து அருளும் படியை-அருளிச் செய்கிறார்

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிறப்பு ஒழுக்கம் ஞானம்-இவற்றால் குறைய நின்றாரே யாகிலும்
தன் திருவடிகளையே உபாயமாக பற்றினார்க்கு-எல்லாம் பாதுகாப்பவன் ஆம் –
மேலே சொன்ன பாசுரங்களாலும் சொன்ன பக்தி யோகம்-எல்லாருக்கும் செய்யத் தக்கது அன்று
இப்பாசுரத்தில் சொல்லுகிற பிரபத்தி எல்லாராலும் செய்யத் தக்கது -என்கிறார் –
சம அஹம் சர்வே பூதேஷு ந மே த்வேஷ்யா அசதி ந பிரியா
யே பஜந்தி து மாம் பக்த்யா மயிதே தேஷு சாபி அஹம் -ஸ்ரீ கீதை -9-24-
நான் எல்லா பிராணிகளாலும் அடையப் படும் பொழுது-விருப்பு வெறுப்பு இல்லாது -எல்லாருக்கும் ஒத்தவனாய் இருக்கிறேன்
எனக்கு தாழ்வு கருதி விடத் தக்கவனும் இலன் –உயர்வு கருதி கொள்ளத் தக்கவனும் இலன் – என்னக் கடவது அன்றோ –
பகவத் விஷயம் தான் பரிச வேதியாய் இருக்கும் -அன்றோ-இரும்பைக் கூட பொன் ஆக்கும் அன்றோ-
கைசிகத்தில் பகவத் சம்பந்தம் உடையவன் ஒரு சண்டாளன் உடைய கூட்டுறவு-
பிராமணன் உடைய ஒழுக்கக் கேட்டிற்கு பரிகாரம் ஆயிற்று-அவ்விடத்தில் எல்லாம் சொல்லுகிற பொருள் இதுவே யாயிற்று –

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
இவன் தன் பக்கலிலே பரத்தை வைத்த அன்று தொடங்கி-இவனை ஒழிய-தனக்கு செல்லாமை உண்டாய் இருக்கச் செய்தேயும்
இவனுடைய ருசியைப் பின்பற்றி-
சரீரம் பிரியும் அளவும் காலத்தை எதிர் நோக்கினவனாய் நின்று-பின்னர் மரணம் உண்டானால்
பரம பதத்தைக் கொடுக்கும் உபகாரகன்-தன் திருவடிகளைப் பற்றின அன்றே
தான் இருக்கிற இடத்தில் இவனைக் கொடு போய்-சேர வைத்துக் கொள்ள வேண்டி இருக்கச் செய்தேயும்
நடுவில் இவன் இருக்கும் நான்கு நாள்களும்-அவனுக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் இருக்கையாலே –
மரணமானால் -என்கிறார் –
மரணமானால் -என்கிறது தனக்கு ஆற்றல் இல்லாமையால் அன்று –
இவன் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து-முடிக்கப் பெறாமையாலும் அன்று –
இவனுடைய ருசியைக் கடாஷித்து நிற்கிறான் இத்தனை-என்றபடியைத் தெரிவிக்கிறது
இப்பாசுரத்தில் -மரணமானால் -என்றதனைத் திரு உள்ளம் பற்றியே தான் மேல் கூறிய அர்த்த விசேடங்கள் எல்லாம் –

அரண் அமைந்த -மதிள் சூழ் திருக் கண்ணபுரத்-
அரண் ஆம்படி சமைந்த-
இதனால் நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே நின்றான்-என் வருகிறதோ என்று
அஞ்ச வேண்டாது இருக்கையை தெரிவித்தபடி –

தரணி யாளன் –
பூமிக்கு நிர்வாஹகன்-சம்சாரிகளுக்கு ரட்சகன் -என்றபடி –

தனது அன்பர்க்கு அன்பாகுமே –
தன்னிடத்தில் அன்பினை உடையார் பக்கல் தானும்-பேர் அன்பினை உடையவன் ஆம் –
அன்புடையவன் என்று பிரிக்க ஒண்ணாதபடி-அன்பு தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருத்தலின்-அன்பாகும் -என்கிறார் –

—————————————————————————————-

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-

பிரகலாதன் -ஸூ அனுபவ விரோதியை நிரசித்து -பரமார்த்திக உண்மையான அன்பை உடையார்க்கு பரமார்த்த பூதநாம்
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்–வாத்சல்ய உக்தன் -குற்றம் பார்க்காமல்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்-வடிவு -ஹிரண்யாசுரன் -ஆஸ்ரித விரோதிகளை போக்கி அடிமை கொள்ள
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து-நன்றான பொன்னாலே
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே-பாரமார்த்திக பிரயோஜன புத்தி உள்ளவர்க்கு-இவனும் அப்படியே –
பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் -பற்றையே வீடாகக் கொண்டவன்

தன்னை அடைகின்றவர்களுடைய-விரோதிகளைப் போக்கி
அவர்களுக்கு மிகவும் அன்பன் ஆம்-என்கிறார் –

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
தன் திருவடிகளையே உபாயமாக பற்றினார்க்கு
விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல-தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-
இராவணன் இடம் பிராட்டி பெருமாள் பற்றி -சரணம் அடைந்தவர்களுக்கு அன்புடையவர் என்றால் போலே
அவர்கள் உடைய குற்றங்கள் தோற்றாதபடி-அன்புள்ளவனே இருப்பான்
மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன-தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-
விபீஷணன் இடத்தில் குற்றமானது இருந்தாலும் இருக்கட்டும்-என்பவனே அன்றோ
நன்று
இவர்கள் உடைய விரோதி செய்வது என் -என்ன-ப்ரஹ்லாதன் உடைய விரோதி பட்டது படும் என்கிறார் –

செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான் –
இரணியன் ஆகிற அசுரன் உடைய சரீரத்தை-வருத்தம் இல்லாமல் கிழித்தவன் –

நன் பொன் ஏய்ந்த மதிள் -சூழ்
நல்ல பொன்னாலே செய்யப் பட்ட மதிள் -என்றது-விரும்பத் தக்க மதிள் -என்றபடி

திருக் கண்ணபுரத்து அன்பன் –
அடியார்களைப் பாது காப்பதற்கு பாங்கான தேசம்-என்று விரும்பி வசிக்கிற ஊர் –

நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே –
தன் பக்கல் அநந்ய பிரயோஜனராய் இருப்பார்க்கு-தானும் அவர்கள் பக்கல் என்றும் ஒக்க-அநந்ய பிரயோஜனனாய் இருக்கும்
அன்றிக்கே
தன் பக்கல் சிநேக பாவம் உடையாரை-விட மாட்டேன் என்று இருக்குமவன் -என்னுதல் –

—————————————————————————

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-9-10-7-

அநந்ய பிரயோஜனர்க்கு சுலபன் -பிரயோஜநான்தர பரர்களுக்கு பிரயோஜனாந்தரங்கள் கொடுத்து -அனுப்பி –
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்-தனது பாக்கள் பிரயோஜனம் கொண்டு -ஆகாரம் காட்டி பிரகாசிப்பார்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்-புறம்பே வேறு பலன் பெற ஆச்ரயித்தால கேட்டதை கொடுத்து தான் மறையா நிற்கும்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து-தன்னிலும் வாழை மீன் துள்ளித் திரியும் -உபய சாதாரண பந்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-பிராப்யமாக சுவீகரித்தால் -அசாதாரண சுலபன் ஆவான்

அநந்ய பிரயோஜனருக்கு சுலபனாய்-பிரயோஜனாந்தர பரருக்கு அதனைக் கொடுத்து
தான் அகல நிற்பான்-என்கிறார்

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
வேறு பிரயோஜனங்களை கருதாதவர்கள் –அவர்கள் யாரேனும் ஆகிலும்-
அவர்கள் உடைய விருப்பத்தை முடிய நடத்தும் –

பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம் –
புறம்பே பிரயோஜனாந்தரங்களை பெற விரும்பி-அடைகின்றவர்கட்கு-
இவ் உலகில் மேலும் மேலும் ஆசையை உண்டாக்கக் கூடிய-அந்த பேறுகளை விரும்பிக் கொடுத்தவனாய்
தன்னைக் கொண்டு அகலுவான் –
கிருஷ்ண ஆஸ்ரையா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதஸ்ய பாண்டவ-கிருஷ்ண பராயணம் தேஷாம் ஜ்யோதிஷாமிவ சந்த்ரமா -பாரதம் -துரோண பர்வம் -183-24
பாண்டவர்கள் கிருஷ்ணனையே சரணமாக அடைந்தவர்கள்-கிருஷ்ணனையே தங்கட்கு துணையாக உடையவர்கள் -என்கிறபடியே-
இருப்பார்க்கு மெய்யனாய் இருப்பான்-அவர் சம்பந்தத்தால் அதிகாரம் கிட்டும் –
படைத் துணை வேண்டி வந்த துரியோதனனுக்கு –நாராயண கோபாலர்களை அடையக் கொடுத்தானாய்-
தான் பாண்டவர்களுக்காக நின்று-அத்தலையை அழியச் செய்கையாலே பொய்யன் ஆகும் –

செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து ஐயன் –
செய்களிலே வாளையானது உகளித்து வசிக்கிற-திருக் கண்ணபுரத்திலே-நிற்கிற மேலான பந்து-
இதனால் மீன் முதலான பிராணிகளும் களித்து வாழும்படியான-இனிமையை உடைத்தான தேசம் என்பதனைத் தெரிவித்த படி –

ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே –
தன்னை மனத்தில் வைப்பவர்கட்கு-கையாளாய் இருப்பன் –அநந்ய பிரயோஜனருக்கு –
இமௌ ஸ்ம முனி சார்த்தூல கின்கரௌ சமுபச்திதௌ-ஆஜ்ஞ்ஞாபய யதேஷ்டம் வை ஸாசனம் கரவாவ கிம் -பால -31-4-
முனி புங்கவரே-நாங்கள் உம்மை அடைந்தவர்களாய்-உமக்கு வேலையாளாய் இருக்கிறோம்-என்கிற படியே இருப்பன் –

——————————————————————————————–

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-

திருவடிகளையே உபேயம் என்று அடைந்தற்கு அத்யந்த சுலபனாய் சம்சார உச்சேதம் பண்ணிக்க கொடுக்கும்
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்–தனது -விசேஷித்து -இனிமை -உபாயத்வம் -என்பதால் -அத்யந்த ஆசனனனாய்
கலந்து அனுபவிப்பான் -இதனால்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்-பிரயோஜ நாந்தரம் கேட்டு போகும் வியாதிகள் வராதே -அதுக்கு ஹேது வான
ஜென்ம சம்சர்க்கம் போக்கி அருளும் –மேலே அடிமையும் கொள்ளா நிற்கும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்-மணியும் பொன்னும் சேர்ந்த –
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே-பரமபத நாதனே இங்கே சன்னிஹிதன் -எளிமை உடன் இங்கே எழுந்து அருளி இருக்க –
ஏழாம் வேற்றுமை -கண் -இங்கே வந்து என்ற படி -மருவி உள்ளது

அவனை அடையுங்கோள்-உங்கள் துக்கத்தையும்-துக்கத்துக்கு காரணமான பிறப்பினையும்
போக்கி அருளுவான் –என்கிறார்-பிணியும் பிறவியும் காரணம் கார்யம் —

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
தனது திருவடிகளை அடைந்தார்க்கு –இன்னார் இனியார் என்னாதே –எல்லார்க்கும் சுலபன் ஆம்-
தாளை அடைவது சுலபம் போக்யம்- எல்லாரும் அடையலாம் -சர்வ சாதாரண உபாயம் -என்றவாறு —
இதாநீம் மாக்ருதா வீர ஏவம்விதம் அசிந்திதம்-த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம்கார்யம் சீதய மம -யுத்தம் -41-4-
இன்று அடைந்தது ஒரு குரங்காகிய சுக்ரீவனைக் குறித்து-சீதையால் தான் எனக்கு கார்யம் என்ன இருக்கிறது -என்றாரே அன்றோ-
கொஞ்சம் அவமரியாதை பண்ணி ராவணன் முகம் திருப்பினால் -கிஞ்சித் –சீதை மட்டும் இல்லை
-பர தேன-லஷ்மணனே -தம்மையும் -வைத்து என்ன பலன் -என்ன குணம் –

பிணியும் சாரா-
உங்களுடைய எல்லா துன்பங்களை போம் –

பிறவி கெடுத்து ஆளும் –
அந்த துன்பங்களுக்கு காரணமான பிறப்பினைப் போக்கி-அடிமை கொள்ளும் –
சர்வ பாபேப்யோ -அர்த்தத்தால் கர்மம் -பாபா புண்ணியம் -இரண்டையும் சொல்லி -மேலே
இஷ்ட பிராப்தியையும் சேர்த்து கொள்ள வேண்டும் -தன்னடையே கிடைக்கும் -அநிஷ்டம் தொலைந்தால் –

மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
மணியாலும் பொன்னாலும் செய்த மதிளாலே சூழப் பட்ட-திருக் கண்ணபுரத்திலே-
திருக் கண்ணபுரம் பரமேட்டி -என்று கூட்டுக –

பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே –
பரமபதில் இருக்கும் படியில் ஒன்றும் குறை இல்லாத படி-ஆயிற்று இங்கு இருப்பது-
அவன் திருவடிகளில் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான-கைங்கர்யத்தைச் செய்யுங்கோள் –
அங்கு நித்ய சூரிகள் பணிய இருக்குமவன்-இங்கே வந்த பின்பு நீங்களும் அவன் திருவடிகளிலே
பணியப் பாருங்கோள் -என்பர்-
திருக் கண்ணபுரம் பரமேட்டி பாதம் பணிமின் -என்கிறார்-
நாளும் நீங்களும் -என்றது நித்ய சூ ரிகள்-அவனைத் தொடர்ந்து வந்த பின் -என்றவாறு –
நாளும் பிணி தணியும் ஏதம் சாரா -என்னும் இது-
தததிகம உத்தர பூர்வாகயோ அசலேஷ வினாசௌ தத் வ்யபதேசாத் -சரீர மீம்சம் -அதிகா -130-482
என்னும் சூத்ரத்தின் பொருள் என்பர்

—————————————————————————————-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-

பணிந்து தணிந்தேன் -அடைந்து சகல துக்கங்களையும் தீர பெற்றேன் -தனக்கு ஆனதை பர உபதேசம் செய்து அருளுகிறார்
துன்பம் கடலில் எழுந்து முன் நான்கு -இதில் ஒரு தலை துலுக்கலில் நம்பி விசுவாசித்து பாடுகிறார்
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி-நாள் தோறும் அனுபவிக்க – முன்புள்ள பிணிகள் போகுமே –
பணிந்தால் தணியும் என்றால் நிர்ஹேதுகம் ஆகாதே -அதனால் வியாக்யானம் இப்படி –
அனுபவிக்க -பிராப்யத்வம்-என்றவாறு -பூர்வாகங்கள் போகும்
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை-மேலே துக்கங்களும் வாராவே
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து-வேத உச்சாரணம் நிரூபகம்-வேத வேதியன் வர்த்திகையாலே -இவர்கள் விரும்புவார் -பரமேட்டி தானே இவன் –
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே-ஜகத் காரணன் -பற்றி துன்பம் உண்டோ -வேதகி சமைதி கம்யன் -இருப்பதால்
-வேத சம்பந்தம் மூலம் தானே ஜகத் காரணம் அறிகிறோம் -துக்கம் இல்லை
பிணி -பூர்வாகம் -ஏதம் -உத்தராகம் என்றுமாம் -போய பிழையும் -புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் —
தததிகம உத்தர பூர்வாகயோ அசலேஷ வினாசௌ தத் வ்யபதேசாத் -சரீர மீம்சம் -அதிகா -130-482-

ஒருவருடைய உபதேசமும் இல்லாமலே-நான் முன்னம் அவனை அடைந்து-
இன்பத்தினை அடைந்தவன் ஆனேன்-என்று ப்ரீதர் ஆகிறார்-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி –
அவன் திருவடிகளை அடையவே-அவனை அடைவதற்கு முன்னே-
பலகாலமாக ஈட்டிய வினைகள் எல்லாம் -பூர்வாகம் -நசிக்கும்-இனியது செய்ய விரோதியான பாபம் போம் -என்றபடி –
நாளும் பிணி -பூர்வாகம் -நித்யம் சேர்க்கிறோம் –பணிய -நாளும் சேர்த்த பிணி -அநாதி கால ஆர்ஜித பிணி -தணியும் —

ஏதம் சாரா –
புகுதருவான் நின்ற வினைகளும் -உத்தராகம் -அடைய மாட்டா
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் -போலே –

எனக்கேல் இனி என் குறை –
அவன் திருவடிகளில் தலை சாய்க்க-எல்லா துக்கங்களும் போவதான பின்பு-எனக்கு ஒரு குறை உண்டோ –
10-3- மட்டும் காலைப் பூசல் -பெரிய துக்கம் -மேலே -பட்டாலும் நம்பிக்கை போகாமல் தான் அறிந்த நல்லதை உபதேசித்து அருளுவார் –

வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து ஆதியானை –
வேதார்த்த வித்துக்கள் விரும்பி வர்த்தின்ற திருக் கண்ணபுரத்தில்-எழுந்து அருளி இருக்கின்ற உலக காரணனை –
வேதார்த்தம் —வேத சாரம் -சார தாரம் -சார தம காயத்ரி முன்னோதிய-
வேதார்த்தம் திருக் கண்ண புரம்-சம்பந்தம் -திருமந்த்ரார்த்தம் -அருளியதால் –
திரு மங்கை ஆழ்வாரைப் போல்வாரை -வேத நாவர் -என்கிறது –விரும்புகையாவது
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவற்கு உரியேனோ -பெரிய திருமொழி –6-9-3–என்கை –
பிரமாணம் வேதமாய்-பிரமாணத்தால் அறியப் படும் பொருள் உலக காரணனாய் அன்றோ இருப்பது-
பிரமாதா -பாராங்குச பரகால யதிவராதிகள் –
காரணம் து த்யேய- காரணமாய் உள்ள பொருள் த்யானிக்கத் தக்கது -என்கிறபடியே
உலக காரணன் அன்றோ த்யானிக்கத் தக்கவன்

ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே –
தாய் மடியிலே சாய்ந்தார்க்கு கிலேசம் இல்லையே -என்னும் இடம் உறுதி –

———————————————————————————–

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

பிரபத்தியும் செய்ய அசக்தர்களுக்கு -யுக்தி மாத்திரமே அமையும் -விச்வாஸம்-வேணுமே -சங்கா த்ரயம் -பல்கு-உயர்ந்த பலன் -பாப குவியல் மூன்றும் -உண்டே –
நடமினோ நமர்கள் உள்ளீர் -கேட்டதும் ஆளவந்தார் -போல விச்வாஸம் வேண்டுமே
ஸ்ரீ ய பதி நித்ய வாஸம் செய்யும் இந்த திவ்ய தேசம் சொன்னாலே -திருமால் இரும் சோலை மலை என்னேன் என்ன -போலே
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்-தாமரைப் பூவை இருப்பிடம் -ஸ்ரீ மகா லஷ்மி நித்ய வாஸம் செய்யும் திரு மார்பன் -புருஷகார பூதையும் இருக்க
திருக் கண்ண புர நாயகியும் இருக்க -என்ன குறை –
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்-கல்லால் செறிந்த மதிள்கள்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே-சொன்னாலே போதுமே -நம் அருகில் வாராதனவாய் -அனுபவ அலாப துக்கம் இல்லை -அவிச்சின்ன அனுபவம் கிட்டும்

ப்ரீதியின் மிகுதியாலே-மேல் இரண்டு திருப் பாசுரங்களாலே தமது பேற்றினைச் சொல்லி-
பக்தி பிரபக்தி இரண்டுக்கும் தகுதி இல்லாதவர்கள்-திருக் கண்ணபுரம் என்ற வார்த்தையினைச் சொல்லவே-
எல்லா துன்பங்களும் போம் -என்கிறார் –

இல்லை அல்லல் –
எல்லா துன்பங்களும் போம் –

எனக்கேல் இனி என் குறை –
இனி எனக்கு என்ன குறை உண்டு -என்றது –பகவானை அனுபவிப்பதற்கு விரோதியான துன்பங்கள் எல்லாம் போன பின்பு
நான் அனுபவிப்பதற்கு ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டி இருந்தது -என்றபடி –

பக்தியில் இழிய பரிகரம் கர்ம ஞான யோகம் இல்லாமல் -பிரபத்தியில் வியவசாயம் இல்லாமல் -யுக்தி மாத்ரத்தால்
-அல்லல் -போம் -போக்கிட்டு என்ன -என்றால் -எனக்கேல் இனி என் குறை –-என்கிறார் –

அல்லி மாதர் அமரும் திரு மார்பினன் –
பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்கிற-திரு மார்பினை உடையவன்-
அவனைப் பற்றுகிற காலத்தில்-
நம்மிடத்து உண்டான குறைகளை அவன் பாராதபடி-குற்றம் செய்யாதவர் யார் -என்பாரும் அருகே உண்டு என்றபடி-

கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் சொல்ல –
திண்ணியதான மதிளை உடைய திருக் கண்ணபுரத்தை வாயாலே சொல்ல –
நாளும் துயர் பாடு சாராவே –
பக்தியைச் செய்வதற்கு சாதனம் இல்லாமல் –பிரபத்தியைச் செய்வதற்கு மன உறுதி இல்லாமல்-இருக்குமவர்கள்
திருக் கண்ணபுரம் -என்று வாயாலே சொல்லவே-எல்லா துக்கங்களும் போம்-

————————————————————————————————

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-

பலமாக பகவத் அனுபவம் கிட்டும் –
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்-சவாசனமாக போக்க விரும்புவீர்கள் ஆகில்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்-மாடங்கள் உயர்ந்த –
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்-கான ரூபமான திராவிட வேதம்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே-மூன்று வினைச் சொற்கள் -ப்ரீதியால் பாடியும் -ஆடியும் –
சுலபனான அவன் திருவடிகளை வணங்கி அனுபவிக்க –
பகவத் அனுபவம் பண்ணவே ஸமஸ்த துரிதங்களும் போகுமே -ஸூசுகம் கர்த்தவ்யம் –

நிகமத்தில்
உங்களுடைய துன்பங்கள் எல்லாம்-வாசனையோடு போக வேண்டி இருக்கில்-
இத் திருவாய் மொழியில்-ப்ரீதி முன்னாகச் சொல்லிக் கொண்டு-அவன் திருவடியைப் பற்றுங்கோள்-என்கிறார்-
யுக்தி கூட சொல்ல முடியாதவர்கள் -இந்த திருவாய் மொழி சொல்ல அமையும் -இது நான்காவது நிலை —

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
வினைகள் உங்கள் பக்கத்தில் வந்து கிட்டாதபடி-வாசனையோடு போகவேண்டி இருந்தீர்கோள் ஆகில்-

மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல் –
அழியாத மாடங்களை உடைத்தான-திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த-
ஆப்தர் உடைய உபதேசம் ஆகையாலே-திருவாய் மொழியில் பிறந்த வற்றில் அர்த்தவாதம் இல்லை-

பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்-
நம்பத் தகாதவர்கள் சொல்லிலும் விட ஒண்ணாத-இனிமையை உடைத்தான இப்பத்து-
மலர் மணத்தோடு மலருமா போலே-இசையோடு கூடிப் பாடின தமிழ் –

பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே –
ப்ரீதி முன்னாகப் பாடி-இருந்த இடத்தில் இராதே ஆடி-ப்ரீதியினால் தூண்டப் பட்டவர்களாய் கொண்டு-
அவன் திருவடிகளில் விளுங்கோள்-
இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற-வேப்பங்குடி நீர்-
தேனே மலரும் திருப் பாதத்தை அன்றோ சேரச் சொல்லுகிறது –

————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பிராப்தி பிரதான சமயோயம் பிரகாசஸ்ய
அந்நிய உபதேசம்
ஹர்ஷத்
ஈசன் யதா சாதனம் ஆஸ்ரயத இதி
மஹதி கிருஷ்ண புரி வசந்தம் ஈசன்
தசமே முனிந்தரே –

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸர்வஸ்ய சிரேஷ்டாஸ்யது
ஸ்வ கீய-
அண்ட ஷாண்டாதி பத்யாத்
நீளே வல்லபத்யாத்
அம்ருத விதரணாத்-பரம பதம் கொடுப்பவர் -மிருத்யு சம்சாரம்
பக்த சூஸ் முக்த பாவாத் –
தாஸானாம் சத்ய பாவாத்
அதி சுலபாதையா
ஜகத் காரணத்தவாத
ஸ்ரீ மான்
வேலா பிரதீஷா பவ பய ஹரனே -நேரம் எதிர் பார்த்து –

சர்வைக பந்தும்
சிரகிருத கருணம்
சீல சிந்தும்
பதித்வாதி சம்பந்ததா ரஷிதாரம்
சுவ குண கரிம ஸ்ம்ருதியாம்
பிராக கிருஷ்ணம் விஸ்ம்ருத
கடக முக ஸூ விஷ்ராம்பனீயம்
லஷ்ம்யாய ஸஹாயன்
சுவ சித்தி உன்முக சமயம்
அநேகக ப்ரதீஷம் -சுமித்ரம் –

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 90-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு நாள் அவதி பிறக்க அத்தாலே அவர் பரோபதேசம் பண்ணின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
நாளேல் அறியேன் -என்று கேட்டவர்க்கு உம்முடைய த்வரை அனுகுணமாக உம்முடைய சரீர அவசானத்திலே
உம்மை ஸ்ரீ பரம பத்திலே கொடு போய் அடிமை கொள்ளக் கடவோம் –என்று நாளிட்டுக் கொடுக்க-
விலக்ஷணம் அதிகாரி -த்வரை மிக வேணுமே -ஆர்த்தி அதிகார பூர்த்தி வேணுமே —
அத்தாலே ஹ்ருஷ்டராய்-
அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நிற்கிறவன் திருவடிகளிலே
புஷ்பாத் உபகரண்ங்களைப் பணிமாறி பக்தியைப் பண்ணுங்கோள் –
அதுக்கு மாட்டாதார் –
இந்த பத்துப் பாட்டையும் பிரீதி பூர்வகமாம் படி அவன் திருவடிகளிலே வணங்குங்கோள் -என்று
சர்வரையும் தத் சமாஸ்ரயணத்தில்-அதிகார அனுகுணமாக மூட்டுகிற-மாலை நண்ணியில் அர்த்தத்தை
மால் உமது வாஞ்சை முற்றும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம்தமக்குத் தாள் –90-

————————————————

வியாக்யானம்–

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில் சால நண்ணிச் செய்வன் எனத் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் ஆத்மாவுடன் பொருந்தி இருக்கிற
சரீரத்தின் உடைய வியோக அனந்தரத்திலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே மிகவும் கிட்டிச் செய்வன் -என்னுதல்
அன்றிக்கே
உம்மைக் கிட்டி-மிகவும் செய்வன்-என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே
அந்தக் கார்யத்திலே-மிகவும் உற்று -என்னுதல் —

இப்படி செய்வன் என்று
ஸ்ரீ கண்ணபுரம் ஓன்று உடையான் -என்று அருளிச் செய்ய – தான் உகந்து –அவனைக் கொண்டு
நாள் அவதி இட்டுக் கொண்ட தாம்-ஹ்ருஷ்டராய் –

மேல் அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன் –
நாள் அவதி இட்டுக் கொடுத்ததுக்கு மேலாக ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே வந்து
அத்யா சன்னனாய் இருக்கிறவனை –

மேல் அவனை -என்று
மேலான அவனை -என்றுமாம் –
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு-பூர்ணே சதுர்தசே வர்ஷே என்று நாள் அவதி இட்டுக் கொடுத்து
அவதி பார்த்துக் கொண்டு நின்றால் போலே நின்றபடி –

சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்-
ஐஸ்வர் யாதிகளும் – சீலாதி குணங்களும்-புற வெள்ளம் இடும்படியான ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் நிலையில் –

சேரும் என சீர் மாறன்-
ஆஸ்ரயிங்கோள் என்று-அனைவரையும் குறித்து அருளிச் செய்யும்
ஜ்ஞானப் ப்ரேமாதி குணங்களை யுடைய–ஸ்ரீ ஆழ்வார்-
அதாவது –
திருக்கண்ண புரத்து ஆலில் மேலால் அமர்ந்தான் அடி இணைகளை
காலை மாலை கமல மலரிட்டு –மாலை நண்ணித் தொழுது எழுமினோ என்றும்
திருக்கண்ண புரம் உள்ளி -கள்ளவிழும் மலரிட்டு -நாளும் தொழுது எழுமினோ தொண்டீர் -என்றும் –
திருக்கண்ண புரத்து அண்ட வாணன் அமரர் பெருமானை
தொண்டர் நும் தம் துயர் போக -விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும்
வானை யுந்து மதிள் சூழ் திருக்கண்ண புரம் தான் நயந்த பெருமான் –
மடப்பின்னை தன கேள்வனைத் தேனை வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும் –
திருக்கண்ண புரத்து தரணியாளன்–சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -என்றும்
திருக் கண்ணபுரத்து இன்பன் -தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் அன்பனாகும் -என்றும்
செய்யில் வாளை யுகளும் திருக் கண்ணபுரத்து ஐயன் ஆகத்து அணைப்பார் கட்கு அணியனே -என்றும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் பணிமின் -என்றும்
வேத நாவர் விரும்பும் திருக் கன்னபுரத் தாதியானை-அடைந்தார்க்கு அல்லல் இல்லையே -என்றும்
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன் கல்லில் ஏய்ந்த மதிள் சூழ்
திருக் கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே என்றும் –
பாடு சாரா வினை பற்றற வேண்டுவீர் -இப்பத்தும் பாடி யாடிப் பணிமின் அவன் தாள்களையே -என்றும்
இப்படி
சர்வருக்கும்-சர்வாதிகராமாம்படி-சமாஸ்ரயணத்தை-அருளிச் செய்தார் -என்கை –

மற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் –
அதில் துர்பல புத்திகளுக்கு-
மாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு
தாள் அடையும் பிரபத்தி -அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்-
சர்வ உபாய ஸூன்யருக்கு – இப் பத்தும் பாடிடும் தண்டன் -என்று-
ஸ்ரீ கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-

ஏவம் வித வைபவ உக்தரான
சீர் மாறன் -தாரானோ -நம்தமக்குத் தாள் –
இப்படி உபதேசிக்கைக்கு உடலான-ஜ்ஞான ப்ரேமாதிகளை யுடைய ஸ்ரீ ஆழ்வார் நம்முடைய ஸ்வரூப அனுகுணமாக
திருவடிகளை உபாய உபேயமாக உபகரித்து அருளாரோ –

நம் தமக்கு –
தம்முடைய திருவடிகளிலே பிறந்து முற்றுண்டு பெற்று
முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -என்று ஆதரித்துப் போருகிற நமக்கு –

ஆகையால் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே நித்ய பிரார்த்யம் என்றபடி –

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: