பகவத் விஷயம் காலஷேபம் -178- திருவாய்மொழி – -9-9-1….9-9-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மல்லிகை –பிரவேசம் –

திரு நாவாயில் ஆனந்த அனுபவம் -மநோ ரதித்த இவருக்கு -பாதக வர்க்கங்களுக்கு அஞ்சி கூப்பிடும் படி அமைந்ததே –
மாலைப் பூசல் என்பர் இந்த திருவாய்மொழி –
பிராப்ய வஸ்து பெற மனோ ரதித்தார்-கீழில்
உடன் பெற கிடைக்காமல் ஒரு இரவு பட்ட விசனம்-
கோபிகள் பட்டது போலே ஆளவந்தார் -திருமாலை ஆண்டான் பணிக்க-அத்தை எம்பெருமானார் கேட்டு அருளி –
ஆற்றாமையால் முன்பே தூது விட்டு
முடியா நின்றார்-அத்தனை ஆடல் கொடுக்க வல்ல ஆற்றாமை பாராதே –
சங்கையில் பிரிந்த துன்பம் அடைகிறார் -எம்பெருமானார் –
பெற்றி நஞ்சீயர் சிஷ்யர்-
நம்பி திருவரங்க நாராயண தாசர்-நம்பிள்ளை சிஷ்யர் –
பிள்ளை பாடு வினோதம் என்ன பெற்றி கேட்க-
அறுக்கும் வினை சாற்றினோம் -என்றாராய் – உடனே
நாளைக்கு மல்லிகை கமல் தென்றலும்
மாலைப் பூசலும் என்று பெற்றி பணித்தாராம்-
எம்பெருமானார் நிர்வாகம் -படியே பெற்றி பணித்தார் –

ஞானம் பிறந்த பின்பு சம்சாரத்தில் இருந்து கால் வாங்க மாட்டாமல் –ப்ராப்ய தேசம் புகை -மநோ ரதம் மட்டும் -இருக்க
பாதக வர்க்கங்கள் ஈரலாம் படி –பதம் செய்ததாய் ஆயிற்று
பொய் நின்ற ஞானம் -அபேக்ஷித்த பின்பும் இவரைக் கொண்டு பிரபந்தம் தலைக் கட்ட -இருத்த
விரோதியை அருசி இவ்வளவும் வர நிலை நிற்க –
வேதாந்த -ஜிஞ்ஞாஸூ ப்ரஸ்னம் -தஸ்ய தாவதேவ சிரம யாவன்ன விமோஷ்யே-என்கிற
வாக்கியம் அன்றோ இவ் வர்தத்தைச் சொல்லுகிறது
-முக்தி கிடைக்கும் வரை அது வரை தான் கால தாமதம் –
முமுஷு தசையில் எப்பொழுது பெறுவோம் என்கிற நிலை போலே இந்த மாலைப் பூசல் –
தஸ்ய மே தாவதேவசிரம் -அது வரை தான் கால தாமதம் -பிராரப்ய கர்மம் தொலையும் வரை –
சிரம் -க்ஷணம் காலமும் நெடும் காலமாக தோன்றுமே -விமோஷே –ஸம்பத்ஸ்ஸே -உத்தம புருஷ சப்தம் தன்னிலை -ஆரம்பம் தஸ்ய -மே –அந்த எனக்கு –
சம்சாரத்தில் நசை அற்ற முமுஷுவான எனக்கு -என்றவாறு –
-ஒரு பகல் ஆயிரம் ஊழியாக தோன்றுமே -தெரிந்த பின்பு துடிப்போம்-அதனால் இதுவும் வேதாந்த சித்தம் –
ச்வாபதேசம் பகல் கண்டேன் -விடுவி இருள் தரும் மா ஞாலம் இரவு நடுவில் சந்த்யா காலம் முமுஷுத்வ தசை –
சம்சாரம் ஹேயம் -ஞானம் பிறந்த பின்பு –
அழுக்கு உடம்பும் -இனி யான் உறாமை -அந்த அருசி இது வரை நிலை -அறுக்கும் வினை -சம்சாரம் நீக்க பிரார்த்தித்தார் –
அர்த்தமாக -சப்தம் அணுகப் பெரு நாள் -என்று அருளிச் செய்கிறார் –
முடியானே கரணங்கள் சைதில்யம் சொல்லி –
இதில் அவற்றுக்கு ஆஸ்ரயமான கரணி -அவயவியும் ஒன்றாக அழிகின்றன –
ஞான கர்ம இந்திரியங்கள் ஒன்றாக அழிகின்றன
மல்லிகை – கமழ் ஸ்பர்ச இந்திரியங்கள் –குறிஞ்சி இசை ஸ்ரோத்ரியம் -தோளும் கொண்டு கர்ம இந்திரியம் –

இராமாவதாரத்தில் பதினான்கு ஆண்டு போலே ஆயிற்று-திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்களுக்கு
கிருஷ்ண விரஹத்தாலே ஒரு மாலைப் போது-
குணங்களால் மேம்பட்ட பெருமாளைப் பிரிகையாலே-அங்கு பதினான்கு ஆண்டுகளாய்க் கழியவும் கூடும்
இங்கு இவன் நீர்மையிலே கையடி உண்டு இருக்கையாலே
-தீம்பனான நீர்மையிலே ஈடுபட்டு -ஒரு பகல் பல கல்பமாகத் தோற்றுகிறது –
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே-திரு விருத்தம் -70
குணங்கள் தாம் கால் கட்டுவான குணங்களாய் அல்லவே-பெருமாள் இடத்தில் கிடந்தவையாய் அன்றோ
இங்கு தர்மி அதுவேயாய் -குணங்களால் மேம்பட்டதாய் –அதற்கு மேலே தீம்பும் ஆனால்-
பாடு ஆற்றப் போகாதே அன்றோ -துன்பம் பொறுக்கப் போகாது என்றது ஆயிற்று-
உலகத்தார் இனிமை உண்டு என்று நினைத்து இருக்கிற-ஐம்புல விஷயங்கள்
அனைத்தும் தமக்கு துன்புறுத்துவனவாக-பெற வேண்டிய பொருளைப் பெறாமல்
ஆண் புலியான ஸ்ரீ வீடுமர்-அர்ஜுனன் கையிலே அம்புகளால் உளைய
ஏவுண்டு கிடந்து துடித்தால் போலே-நடுவே கிடந்தது துடிக்கிறார் –
திரு வாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ணன் பசு மேய்க்கப் புறப்பட்டால்
அவன் வரும் அளவும் அவர்கள் படும் பாடு சொல்லுகிறது –
அதாவது பிராமணர்க்கு சந்த்யா வந்தனம் போலே அன்றோ-ஆயர்கட்கு பசு மேய்க்கை ஆயிற்று-
அது சாதிக்கு உரிய தர்மம் ஆகையாலே தவிர்க்க ஒண்ணாது இருக்கும் அன்றோ –
இப்படியாலே அவனை பசுக்களின் பின்னே புறப்பட விட்டு
அவன் வரும் மாலை நேரத்தை பார்த்து இருப்பார்கள் அத்தனை -ஆயிற்று
ஆக
அவன் பசு மேய்க்க போனால் பகல் பொழுதை வருந்தி ஒரு படி ஆற்றினால்
அவன் வரும் காலமான மாலைப் பொழுதும் வந்து முகம் காட்டி
பசுக்களின் முற் கொழுந்து வந்து தலை வைக்கச் செய்தேயும்
அவன் வரக் காணா விட்டால் ஆற்றப் போகாதே அன்றோ –
அதாவது
அவன் தான் முற் கொழுந்திலே வாராமல்-பிற் கூழையிலே நிற்கும் ஆயிற்று-நடுவு படும் அலமாப்பு காண்கைக்காக-
அவன் வரக் கூடிய காலமான மாலைப் பொழுதும் வந்தது-கூட பசுக்களும் வந்தன -ஆ புகும் மாலையும் ஆகின்றது –
பசுக்களும் வந்தன -மாயன் வாரான் –அவன் தான் வரக் காணா விட்டவாறே-அக்காலத்தில் –
நல்ல குறிஞ்சி இசை தொடக்கமான இன்பப் பொருள்கள்
தென்றல்
நிலா
கடல் ஓசை
அன்றில்
குழல் ஓசை
முதலானவை துன்புறுத்தத் தொடங்கின-
அவன் முன்னே வந்து இருந்தால் இவை எல்லாம் உத்தேச்யமாக இருக்குமே -சிங்கம் இல்லா விட்டால் நரிக் கூட்டம் நலியும் –
குழல் ஓசையும் அவ்வழியே அவனுடைய குணங்களை நினைவு ஊட்டி நோவு படுகைக்கு-உடலாய் இருக்கும் அன்றோ –
அப்படி இருக்கிற துன்புறுத்துகின்ற பொருள்கள் எல்லாம்-முன்பு தனித் தனியே இழி சொற்களைப் பேசி நலிந்த-
ஒற்றைக் கண்ணள்-
ஒற்றைக் காதள்-
உள்ளிட்ட அரக்கிகள் பின்பு-அவ்வளவிலே நில்லாதே எல்லாரும் ஒரு சேர மேல் விழுந்து
அதற்கு மேலே சில நலிவுகளைச் செய்ய நினைத்தால் போலே-துன்புறுத்துகின்ற பொருள்கள் எல்லாம்
தனைத் தனியேவும் திரளவும் மேல் விழுந்து நலிய-
அவற்றால் நலிவு பட்டவர் எல்லாரும் கூப்பிட்ட கூப்பீட்டை-இவர் ஒருவருமே கூப்பிடுகிறார்-

இரவு முழுவதும் துன்பம் -5-4 ஊரெல்லாம் துஞ்சி –10-3 -காலைப் பூசல் –

————————————————————————————–

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

ஸந்த்யை வேளையில் தென்றல் முதலான பதார்த்தங்கள் நலியா நின்றன -நிரதிசய போக்யனான -கிருஷ்ணன் -ஸம்ஸலேஷித்து –
விரும்பிய அவயவங்களைக் கொண்டு -ஒதுங்க இடம் காண கில்லேன் –
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ-பரிமளம் உடைத்தான் தென்றல் நஞ்சு ஊட்டிய வாள் போலே -சர்வதோ முகமாக ஈரா நின்றது –
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ-ஸ்ராவ்யமான -க்ராஹ்யமான குறிஞ்சி பண்ணை உடைத்த -அந்தரகதமாக துவளா நின்றது –
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ-அஸ்தமன முகமான மங்கிய கதிர்கள் -சந்த்யா வேளை மயக்கும் -கூப்பிட்டு அறிவிக்கும் படி இல்லாமல் -மோகிக்க வைக்கும் –
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ-செக்கர் நிறம் தர்ச ணீயமான மேகங்கள் அவன் வடிவுக்கு பொன் ஒத்த ஆடை கையில் தாங்கும்
அவனுக்கு சந்த்யா ராக ரஞ்சிதம் -வடிவுக்கு ஸ்மாரகமாய் -ஸரீரத்தை செதுக்கா நின்றது
நாலு பாடும் விரோதம் ஆனபின்பு
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்-விகசிதமான-ஜிதம் என்று தோற்பித்த -தோற்றோம் மட நெஞ்சே
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்-சஜாதீயர் கோபர் -ஏறு -ஈடுபடும் செருக்கு -ஸ்த்ரீ பும் விபாகம் இல்லாமல் சிம்மம் போலே
மேனாணிப்பு-சிம்ம ஸ்ரேஷ்டம்-ஆச்சர்ய சேஷ்டிதங்கள் கலக்க வரும் பொழுது -பேசி -தாழ நின்று பரிமாறும்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு-அவன் அத்யந்த அபி நிவிஷடனாய்க் கொண்டு -அணைத்த -இவற்றைக் கொண்டு தனியனாக
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ-ஒதுங்க இடம் தெரிய வில்லை
ரக்ஷகனானவன் சன்னிஹிதன் ஆக வில்லை
நாம் அஸஹாயன் ஆனோம்
சுற்றும் முற்றும் பாதகங்கள்
அவனால் விரும்பப் பட்டவை காக்க முடிய வில்லை
விஷயத்தை ஸூ சகம் ஆல் ஓ -அசைச் சொல் -அடி தொறும் -ஆர்த்தி அதிசயத்தால் அருளிச் செய்கிறார்
தனித் தனியே வந்து சேர்ந்து வந்து படுத்துமா போலே -நலிந்தன-

மாலைக் காலத்தில் தென்றல் தொடக்கமான-பொருள்கள்
தனித் தனியே தன்னை வருத்து கிறபடியை சொல்லுகிறாள்-
மல்லிகை -என்றது முதல்-செக்கர் நன் மேகங்கள் சிதைக்குமாலோ -எனபது முடிய
இவள் யார் கேட்க கூப்பிடுகிறாள் தான் –

மல்லிகை கமழ் தென்றல் –
வெறும் புறத்திலே நலிய வற்றான தென்றல்-
அதற்கு மேலே மல்லிகையின் வாசனையை-ஏறிட்டுக் கொண்டு வாரா நின்றது –
கொல்லுதற்கு கருவியான வாளிலே நஞ்சினை ஊட்டினாப் போலே ஆயிற்று-தென்றல் வாசனையைக் கொண்டு வருகிற படி-

ஈருமாலோ –
பண்டே பிரிவாலே செற்று அற்று இருக்கிற உடம்பை-பலகை பலகையாக ஈராநின்றது-
அன்றிக்கே
கண்ட இடம் எங்கும் வாயாக இரா நின்றது இத் தென்றலுக்கு என்பாள்-ஈரும் -என்கிறாள் என்னுதல்
வட்ட வாய் நேமி வலம் கையா போலே எங்கும் வாயாக இருக்குமே வாயுவுக்கு –
கிராண இந்த்ரியமான மூக்கிற்கு பாதகமாய்-பரிச இந்த்ரியமான உடம்பையும் அழியா நின்றது -என்பாள்
கமழ் தென்றல் ஈரும் -என்கிறாள் –
இராப்பகல் படை ஏறுவாரைப் போலே உடம்பிலே படக் காணும்-இத்தனை போக்கி கண்ணுக்கு தோற்றாதாய் ஆயிற்று
ஆதலால் கண்டு தப்ப ஒண்ணாது-
யானி ஸ்ம ரமணீயாநி தயா சஹ சீதயா-தானி ஏவ அரமணி யா நி ஜீவதோ மே தயா விநா-கிஷ்கிந்தா -1-69
அவன் உடன் இருந்த போது இன்பத்தைத் தந்த பொருள்கள்-அனைத்தும் இப்போது துன்பத்தினைத் தருவதாய் இரா நின்றன -என்கிறாள் –
இதனை சீதை உடன் இருந்த போது எந்தப் பொருள்கள் இனிமையாய் இருந்தனவோ
அந்த பொருள்கள் அவள் இல்லாமல் இருக்கும் பொழுது-எனக்கு துன்பம் பயப்பனவாய் இருக்கின்றன -என்று அருளியது போலேயும் –
ஏஷ புஷ்பவஹ வாயு சுகஸ்பர்ச ஹிமாவஹா-தாம் விசிந்தயத் காந்தாம் பாவனப்ரதிம மம -கிஷ்கிந்தா -1-52-
மலர்களின் வாசனை உடன் கூடியதும் இனிமையாக வீசுவதும் குளிர்ச்சி உடன் கூடியதும் ஆன
இந்தக் காற்று அந்த சீதையைப் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கிற எனக்கு-நெருப்புக்கு சமானமாய் இருக்கிறது -என்றும்
சதா சுகம் அஹம் மன்யே யம் புரா சஹ சீதயா-மாருத ச விநா சீதாம் சோக சஞ்சனக மம -கிஷ்கிந்தா -1-104-
முன்பு நான் சீதை உடன் இருந்த காலத்தில் எந்த காற்றை சுகம் தரக் கூடியது என்று
நினைத்தேனோ அந்த காற்றே சீதையை பிரிந்து இருக்கிற எனக்கு சோகத்தை அதிகப் படுத்துகிறது -என்றும்
வருவனவற்றால் அறிதல் தகும் –
பதம் சௌகந்திக வஹம் சிவம் சோக விநாசனம்-தன்யா லஷ்மண சேவந்தே பாம்பு பவன் மாருதம் -கிஷ்கிந்தா -1-103
இலக்குமணா -தாமரை முதலியவற்றின் மனங்களை அரித்துக் கொண்டு வருகின்ற
தூயதாய் உள்ள-துன்பத்தை போக்குகின்ற பம்பையின் சோலையின் நின்றும் எழுந்த காற்றை
மனைவியோடு கூடி உள்ள மாந்தர் எப்பொழுது வரும் என்ற எதிர் பார்க்கின்றனர் -என்கிறபடியே
கூப்பிடுவான் அவன் அன்றோ –
அங்கனம் இருக்க-இப்போது இவள் அன்றோ கூப்பிடுகிறாள்
இருவராய் இருப்பார் காற்றைத் தேடி படுக்கை படா நிற்க
இக்காலம் இவ் ஊர் பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் -திரு விருத்தம் -5-
என்னுமாறு போலே இவர் ஒருவருக்குமே ஆயிற்று பாதகம் ஆகிறது –

வண் குறிஞ்சி இசை தவரும் –
அழகிய குறிஞ்சி இசையானது தொளையா நின்றது-
காற்று ஈர்ந்து பொகட்ட புண்ணின் மேலே துளைத்து பொகடா நின்றது –
தென்றல் புறம்பே நலிகிற இத்தனை –இசை செவி வழியே உள்ளே புகுந்து நலியா நின்றது –
இசைக்கு எவ்வளவு செவிப்பாடு உண்டு அவ்வளவும் பாதகமாம்-
இத்தனை யாதலின் -வண் குறிஞ்சி-என்கிறாள் -என்றது
அவன் உடன் இருந்த காலத்தில் எத்தனை இனிமையாக இருக்கும்-பிரிந்து இருந்த காலத்தில் அத்தனையும் நலியும் -என்றபடி
குறிஞ்சியும் தென்றலும் கூடி-கிருத சங்கேதி களாய் வந்து
ஓன்று தொடங்கி செய்த கார்யத்தின் குறையை ஓன்று செய்யா நின்றது -என்றது –
நற்கொலையாக கொல்ல ஒண்ணாது-உயிர்க் கொலையாக கொல்ல வேண்டும்-
அதில் நீ இவ்வளவு செய்-நான் இவ்வளவு செய்கிறேன்
என்று கிருத சங்கேதராய் வந்தால் போலே ஆயிற்று இருக்கிறது என்றபடி –
செல்கதிர் மாலையும் மயக்கும் –
சென்ற கதிரை உடைத்தான மாலையானது மயங்கச் செய்கிறது -என்றது –
சூர்யன் மறைந்த பின் உண்டாகும் மாலைக் காலமானது மயங்கச் செய்தது -என்றபடி –
வாயிலே சீரையைத் துறுத்து கொள்ளுவாரைப் போலே
ஆற்றாமைக்கு போக்கு வீட்டு கூப்பிட்டு தரிக்கவும் ஒட்டாதபடி மயங்கச் செய்குன்ற்றது ஆதலின் -மயக்கும் -என்கிறாள்

செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும்-
மாலை நேரத்தின் செந்நிறத்தையும் -கருமையான நிறத்தையும்
உடைத்தான மேகங்கள் -அவனுடைய அவயவங்களின் காந்திக்கும் வடிவிற்கும் போலியாக
இவை என் அம்பு செய்தது -என்று அவற்றைப் பழித்துக் கொண்டு-
சரீரம் கிடக்கவோ நலிவது -என்று-வயிரத்தை செற்றா நின்றது –

அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் –
நாம் அவற்றை இன்னாதாகிறது என் –
அவன் தான் முன்னே நம்மை முடிக்க கார்யம் பார்த்து வைத்திலனோ –
கலந்து பிரியவே இவள் முடிவாள்-என்றே அன்றோ அவன் பிரிந்தது –
இவை யானால் போக்கு விட்டே அன்றோ அடித்தன –புகல் அறுத்தான் அவனே அன்றோ –

அல்லி அம் தாமரைக் கண்ணன் –
முதல் உறவு செய்வன கண்களே அன்றோ –
கண்ணோடு கண்ணினை கௌவி-ஒன்றை ஓன்று உண்ட பின் அன்றோ-மெய்யுறு புணர்ச்சி உண்டாவது –

நண்ணரு நலத்தினள் இனையள் நின்றுழி
கண்ணோடு கண்ணினை கௌவி ஒன்றை ஓன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
நோக்கிய நோக்கெனும் நுதி கொள் வேலிணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கணங்கு அனையவள் தனத்தில் தைத்ததே
பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர் –

எம்மான் –
அக் கண் அழகாலே என்னைத் தனக்கே உரியவள் ஆகும்படி செய்தவன் –

ஆயர்கள் ஏறு –
அவ் அழகாலே ஆயர்களைத் தோற்கடித்தால் போலே
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -அயோத்யா -3-28-
ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய் -கம்பர் பால -தாடகை வதைப் படலம்
வயிர உருக்காயிற்று அவனுடைய அழகு-தன்னோடு ஒத்தாரை அப்படி நலியா நின்றால்
பெண்களை நலிய சொல்ல வேண்டா அன்றோ –

அரி ஏறு –
கண்களாலே குளிர நோக்கி-இவளை தனக்கே உரியவள் ஆக்கி-இவளோடு கலந்து
அதனாலே தான் பெறாப் பேறு பெற்றானாய்-மேணாணிப்பு தோற்ற நின்றபடி –
அரி ஏறு -சிங்கங்களில் உயர்ந்தது –

எம் மாயோன் –
அம் மேன்மையை உடையவன்-தாழ்ந்தார் சிலர் உயர்ந்தவர்களோடு கலக்குமா போலே-
கையைக் காலைப் பிடித்து-தாழ நின்று பரிமாறின படி –கலக்கும் போது மின் மினி பறக்கும்படி காணும் கலந்தது –

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு –
அவனும் வாராது இருக்கிறான்-நானும் வருந்தி ஒருபடி ஜீவித்து கிடக்கிறேன்-
அவனுக்காக உண்டான இந்த பிள்ளைகளைக் கொண்டு புகலிடம் அறிகிலேன்-
நான் செய்தபடி செய்ய-இம் முலைகளின் வீக்கம் தீர அனுபவிக்கப் பெறுவது எப்போதோ –
பஞ்ச காலத்தில் குழந்தைகள் சோறு சோறு என்னுமா போலே படுத்தா நின்றன –
அவன் தானும் கலக்கும் போது எல்லா அங்கங்களிலும் கலப்பதற்கு-ஆற்றல் இல்லாதவன் போலே காணும்-
அவன் இழிந்த துறையும்-இளைப்பாறின இடமும்-
மலராள் தனத்து உள்ளான் -இழிந்த துறை
மெல்லியல் தோள் தோய்ந்தாய் -இளைப்பாறின

ஆக
எம் மாயோன் என்றது முதல் புகலிடம் அறிகிலம் -எனபது முடிய
கலக்கிற போதை அவனுடைய அலமாப்பையும்
தம்முடைய உறுப்புகளுக்கு உண்டான காதல் மிகுதியையும்
அவன் பெறாப் பேறு பெற்றானாய் நின்று கலந்த படியையும்
தமக்கு ஒரு புகல் அற்று இருக்கிற படியையும்-சொல்லுகிறது-
பிரிந்த காலத்தில் தென்றல் முதலான பொருள்களுக்கு-தப்பிச் சென்று
புகுகைக்கு இடம் காண்கின்றிலோம் -என்பாள் –புகலிடம் அறிகிலம்-என்கிறாள்

தமியம் –
இந்நிலையில் ரட்ஷிக்கின்ற அவனும் வாராமையாலே-தனிமைப் படா நின்றோம் –
ஆலோ
இப்படி தன் உலகம் முழுவதும் துன்புறுத்துவதனால்
பகதத்தன் விட்ட வேலை அர்ஜுனனைத் தள்ளி-தன்மார்விலே ஏற்றாப் போலே
இவை வரும் -என்று அறிந்தால் கூட இருக்க வேண்டாவோ –
அவன் கூட இருந்தானாகில் இவை தாம் இழி தொழில் -கைங்கர்யம் -செய்யத் தொடங்கும் அன்றோ –
ஸ தாம் புஷ்கரிணீம் காத்வா பத்ம உத்பல ஜஷாகுலாம்-ராம சௌமித்ரி சஹித விலலாப ஆகுலேந்த்ரிய -கிஷ்கிந்தா -1-1-
இலக்குமணனோடு இருந்த ஸ்ரீ ராமன் -என்று-
அவர் தாம் நோவு பட்டு கூப்பிடுகிற போது ஒரு தம்பியார் ஆகிலும் கூட உண்டு நோவு படுகைக்கு
அங்கனம் ஒரு துணை இல்லை எனக்கு -என்பாள் -தமியம் -என்கிறாள்
ஸ –
பிராட்டியை பிரிந்து நடுவே கபந்தன் கையிலே அகப்பட்டு-நோவு பட்டு நிற்கிற நிலையை சொல்லுகிறது –
தாம்-
இப் பிரிவும் ஆற்றாமையும் அழிக்க வற்றாயிற்று
புஷ்கரிணீம் –
பரப்பு மாறப் பூத்த பொய்கைகளும் -சோலைகளுமாய்-நீர் விளையாட்டுக்குத் தகுதியான தேசமாயிற்று -என்றது –
பிரிந்து தனி இருப்பார்க்கு கண் கொண்டு காணப் போகாது -என்றபடி –
காத்வா –
நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே-கூற்றுவனுடைய வாயிலே புகுவாரைப் போலே-வந்து கிட்டிக் கொடு நின்றார்
கூற்றுவனாகிற புடை தான் யாது -என்னில் –
பத்ம உத்பல ஜஷாகுலாம் –
பிராட்டியினுடைய முகத்துக்கும்-கண்களுக்கும் போலியானவற்றை உடைத்தாய் இருந்தது –
உயர் தாமரை செங்கழுநீர் மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் –5-9-7-என்னக் கடவது அன்றோ –
ராம –
பிறர் கூப்பீடு தவிர்த்துப் போந்தவர் ஆயிற்று
-ராமயதீதி ராம –சௌமித்ரி சஹித –
அரச நீதிகளை சொல்லிக் கொண்டும்-தனது வலிமையை கூறிக் கொண்டும்-அந்த ஸ்ரீ ராமனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
தம் மத்த மதாங்க விலாசகாமீ கச்சந்தம்-அவ்யக்ரமனாமகாத்மா
ஸ லஷ்மனோ ராகவம் அப்ரமத்த ராஷ-தர்தமன பலேனச ஏவ -கிஷ்கிந்தா -1-126-
ஏதேனும் அளவிலும் கூட இருந்து நோக்கிக் கொண்டு போந்தவரும் முன்னாக-ஆறு இழியுமவன் தெப்பம் முன்னாக இழியுமாறு போலே
விலலாப ஆகுலேந்த்ரிய –
பல இலக்கணங்கள் உடன் ஆயிற்று கூப்பிட்டது

இறைவனைப் பெற வேண்டும் என்னும் எண்ணமாய்-கீழே இவருடைய எண்ணத்துக்கு தகுதியாக வந்து கிட்டும்படி
அவனும் வாராதே நிற்க
அவனுடைய வரவுக்கு அறிகுறியான வாத்தியத்தின் ஒலி-ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தின் ஒலி
நாண் ஒலி-திருவடி திருச் சிறகு ஒலி-மற்றும் உண்டான நல்ல சகுனங்கள்-
மனத்தின் தெளிவு-என்றாப் போன்று சொல்லுகிறவை ஒன்றும் காணாமையாலே-அனுகூலமான பொருள்கள் துன்புறுத்துகின்றன-
உறுப்புகளும் சரீரமும் கிலேசப் படுக்கை யாகிற இது-விரோதியான சம்சாரத்தின் நின்றும் கால் வாங்க மாட்டாதே
இங்குப் பொருந்துவதும் செய்யாதே-காண்பன அனைத்தும் பகையாக இருக்கிறபடி –
ஆக
இங்கும் பொருந்தாதே-அங்குப் புகப் பெறாதே-நடுவே நின்று கிலேசப் படுகிற நிலை
மாலை நேரமாகிறது -என்று-இங்கனே ஒரு கருத்தாக சொல்லக் கடவதாய் இருக்கும் –

—————————————————————————————–

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

கிரியா பதம் இல்லை -நலியும் பிரகாரங்கள் -சொல்லாமல் பொருள்களை மட்டும் -நெருப்பு நெருப்பு என்று காத்துமா போலே –
இங்கு கீழ் உள்ள நிதானம் கூட இல்லை
சர்வ பிரகார ரக்ஷகன் சந்நிஹிதன்-இல்லை -கூட்டாக நலிய -ரக்ஷணம் எவ்வாறு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ-நாகை பின் தொடரும் கன்றுகளின் கழுத்தில் மணி புலம்ப –அசஹயாமாக நலியும் தென்றலும்
-இலைக் குழல் தளைக் குழல் -ஆம்பல் -கூடிக் கொண்டதே –
பகலடு மாலை வண் சாந்த மாலோ-பதார்த்த தர்சனம் பண்ண முடியாமல் பகலை அழிக்கும் இரவும் – மாலையும்
தத் கால உசிதமான அங்கராக
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ-ராகமும் -முல்லை புஷபமும் -குளிர்ந்த வாடையும் -சேர்ந்து ஒரு திரளாக –
சங்கமான இந்த அவஸ்தையில் –
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து-அந்நிய அபிமானம் வாராமல் அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்-வரையாமல் உபகாரன்-காரணத்வ ரக்ஷகத்வ கிருஷ்ணன் -சகலருக்கும் -ஆச்சர்ய சேஷ்டிதங்கள் உடையவன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்-யுத்தத்தில் அசுரர்களுக்கு மிருத்யு
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்-என் விரோதிகளை போக்காமல் -வராமல் -உபேக்ஷித்த பின்பு
அவன் விரும்பாத பிராணன் காத்து என்ன பயன் -ரஷ்ய பூதர் ஆனால் சக்தியும் பிராப்தியும் நம் இடம் இல்லை
பாதக பிரகாரங்கள் -சொல்லாமல் வாசா மகோசரம் -பயந்து -ஆர்த்தி அதிசயத்தாலே –
தென்றலையும் வாடையும் சொல்லி -கல்ப கோடி காலம் கழிந்தது போலே தோற்றுவதால்

முன்பு தூசி ஏறின பேர்க்கு உரமாக நின்று-பேரணி உறு பூசல் ஆனவாறே
திரள அமுக்குமாறு போலே-தனித்தனியே நலிந்த பொருள்கள்-வலிமை குறைய குறைய-
பல கூடி வந்து நலியா நின்றன –என்கிறாள்
மணி தென்றல் ஆம்பல் மாலை சாந்தம் பஞ்சமம் முல்லை வாடை அனைத்தும்-திரளாக வந்து நலிகிற படியை-பேசுகிறாள்-

புகலிடம் அறிகிலம் –
மேலே வருகின்ற துன்புறுத்துகின்ற-மணி முதலான பொருள்களைக் குறித்து சொல்லுகிறாள் -என்னுதல் –
அன்றிக்கே
முதல் பாசுரத்தில் சொன்னவை தமக்கு அஞ்சிப் பின்னும்-அதனைக் கூறுகிறாள் -என்னுதல் –

தமியம் ஆலோ –
புகலிடம் அற்றார்க்கு துணை யாமவன்-உதவாது ஒழிந்தால்-தனியே இருக்கிற இருப்பு அன்றோ –

புலம்புறு மணி –
புலம்பு உறு மணி-நாகுகளை தொடர்கிற சேக்கள் கழுத்திலே-மணியினுடைய ஒலி –
அந்நாகுகள் கை புகுராமையாலே கூப்பிடுமாறு போலே இரா நின்றது –

தென்றல் –
வெறும் புறத்திலே தென்றல் என்ன அமையும் –
மல்லிகை கமழ் தென்றல் -என்ன வேண்டா –வினை முடிகினால் பின்னை உடம்புக்கு ஈடு இடாதே ஏறுவாரைப் போலே-
யார் எதிராக உடம்புக்கு ஈடு இடுகிறது -என்று இரா நின்றது-ஈடு -கவசம் -சட்டை

ஆம்பலாலோ –
ஆம்பல் -குழல் -என்னுதல்
இலைக் குழல் என்னுதல்
இவை எல்லாம் மேல் பாசுரத்தில் கூறியது போன்று
ஈருமாலோ -தவருமாலோ -மயக்குமாலோ –சிதைக்குமாலோ -என்ன வேண்டா
புலி புலி -எனபது போன்று இவற்றின் பெயரைச் சொன்னாலே அச்சம் உண்டாகிறதே
அன்றிக்கே
இவற்றின் உடைய நலிவை-வாயால் சொல்லில் வாய் வக்குரிக்கும்படி யாய் -வேகும்படியாய் -இருக்கையாலே
சொல்லாது ஒழிந்தாள் -என்னுதல்
பகலடு மாலை –
பிராட்டியினுடைய விசனத்துக்கு உறுப்பாக
பெரிய உடையாரை முடித்துக் கொண்டு வந்து இராவணன் தோன்றினாப் போலே
ஆறுதலுக்கு இடமாய் இருக்கின்ற பகலை-முடித்து வந்து தோற்றிற்று ஆயிற்று மாலை –
பகல் காலத்தில் வெவ்வேறு பொருள்களை பார்த்து இருப்பதால் ஆறி இருக்கலாம் –
அது இல்லாமையாலே இரவில் உண்டாகும் துன்பம்-ஒரு முகம் செய்து இருக்கும் அன்றோ –

வண் சாந்த மாலோ
அழகிய சந்தனம் –

பஞ்சமம் –
பஞ்சமம் ஆகிற பண்

முல்லை –
முல்லைப் பண்
அன்றிக்கே
முல்லை மலர் ஆயர்களுக்கு மாலையாய் இருக்கும் அன்றோ –அதனைச் சொல்லிற்று ஆகவுமாம்

தண் வாடை யாலோ –
அவ்வாடையோடு-தென்றலோடு வாசி அற்று போயிற்று -என்றது-தென்றல் வருவது ஒரு காலமுமாய்
வாடை வருவது ஒரு காலமுமாய் -வைகறை காலமாய் -இருக்கும் அன்றோ –
அவை எல்லாம் அவ்வவ காலங்களிலே வந்து தோன்றும்படி ஆயிற்று காலம் நெடுகுகிற படி -என்றவாறு
அன்றிக்கே
கேட்டிற்கு அறிகுறியாய் -எல்லாக் காற்றும் ஒரே காலத்தில் அடித்தன -என்றுமாம்
இனி தென்றலுக்கு அஞ்சி வாடையின் கீழ் ஒதுங்க விரகு இல்லை என்று
அதன் கொடுமையின் மிகுதியை கூறுவாள் -தண் வாடை-என்கிறாள் -என்னுதல் –

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற –
பரப்புடைத்தான பூமி உருமாய்ந்து கிடக்க உண்டாக்கி-பிரளயம் கொண்டதனை இடந்து எடுத்து
திரியவும் பிரளயம் வர வயிற்றிலே வைத்து நோக்கி-உள்ளே கிடந்தது தளராதபடி வெளிநாடு காண புறப்பட விட்டு
மிடுக்கராய் இருப்பார் இறாஞ்சிக் கொள்ள-எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி வரையாதே நோக்கும் தன்மையன் கண்டீர்-இப்போது வாராது ஒழிகிறான் – என்றது-
பொதுவான ஆபத்து வந்தால் வயிற்றிலே வைத்து நோக்குமவன் கண்டீர்
தன் தேவியானவள் இப்படி துன்புறுத்தும் பொருள்களின்-கையிலே நோவு படா நிற்க இப்போது வாராது ஒழிகிறான்-என்றபடி –

வாயன் –
கிருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்தி அபி ஸ அப்யயா
கிருஷ்ண ஸ்யஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம்-பாரதம் இராயசூயம் – 38
உலகங்கள் உடைய படைப்பும் கிருஷ்ணனே-பிரளயமும் கிருஷ்ணனே-இது பிரசித்தம் -என்கிறபடியே –

காரணன் -மாயோன் –
உலகங்களைப் பாது காப்பதற்கு தக்கதான ஆச்சர்யமான ஆற்றலை உடையவன் —

இகலிடத் தசுரர்கள் கூற்றம் –
போர்க் களத்தில் காணும் அசுரக் கூட்டத்துக்கு யமனை இருப்பவன் –
சரணம் -என்ற-விபீஷணன் பிரகலாதன் முதலியோரை அழியச் செய்திலன் -அன்றோ –
இராவணன் இரணியன் முதலானோர்களை அன்றோ முடித்தது –
ப்ரஹ்மா ஸ்வயம்பூ சதுராநோவா ருத்ர த்ரிநேத்ர த்ரி புராந்தகோவா
இந்த்ரோ மகேந்திர சூரநாயகோவா த்ராதும் ந சக்தா யுதி ராம வத்யம் -சுந்தர -51-55-
இராம தண்டத்துக்கு காரணமாய் இருக்கும் ஒருவனை-இந்த்ரன் சிவன் பிரமன் என்னும் இவர்களும் கூட
அத் தண்டத்தின் நின்றும் காப்பதற்கு ஆற்றல் உடையார் அல்லர் -என்னக் கடவது அன்றோ –

வாரான் –
இங்கு அம்பு ஏற்கவும் வேண்டா-பகைவர்களும் இலர்-முகம் காட்ட அமையும் –

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –
வரைந்து நோக்குவான் ஒருவனாய் நான் ஆறி இருக்கேனோ-
வரும் இடத்தில் தடை உண்டு என்று ஆறி இருக்கிறேனோ-
என்னைப் பாது காத்து கொள்வதில் எனக்கு சம்பந்தம் உண்டாய்த்தான் ஆறி இருக்கிறேனோ
வரையாதே-
பாது காக்குகின்றவனுமாய்-ஆற்றலும் உடையவனுமாய்-சம்பந்தமும் உள்ளவனாய்
இருக்கிறவன் வாராது ஒழிய
அவனாலே பாது காக்கப் படுகின்ற பொருள்களில் சேர்ந்தவளாய்
ஆற்றல் இல்லாதவளாய்-தகுதி இல்லாதவளாய்-இருக்கின்ற நான் என் உயிரை நோக்குகை
என்று ஒரு பொருள் உண்டோ
அன்றிக்கே
நமாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-வந்யம் சூவிஹிதம் நித்யம் பக்தம் அச்நாதி பஞ்சமம் -சுந்தர 36-41
வரும் துணையும் ஜீவித்துக் கிடக்கும்படி இராகவன்-உணவுகளையும் உண்பது இல்லை என்று சிலர் சொல்லுதல்
கானனானி சூரம்யாணி நதீ பிரச்ரவண நிச-சரன் நரதிம் ஆப்நோதி த்வாம் அபச்யன் நருபாத் மஜே -சுந்தர -35-47
ஜனகராஜன் புத்ரியே உன்னைக் காணாமையால் மிக்க துன்பத்தை அடைகிறார்-என்னுதல் செய்து தான் ஆறி இருக்கிறேனா
அன்றிக்கே
வரவுக்கு உடலாக-கரன் பட்டான்-கவந்தன் பட்டான்-வாலி பட்டான்-கடல் அடைப்பது
வந்து புகுந்தார் அத்தனை -என்று சிலர் சொல்ல ஆறி இருக்கிறேனோ
இப்பொழுது -இனி இருந்து -என்கையாலே
இதற்கு முன்பு எல்லாம் அவன் சரக்கு அழிய ஒண்ணாது -என்று-நோக்கிக் கிடந்தமை தோற்றுகிறது-
பிறர் -சர்வேஸ்வரன் -உயிராகத் தான் நோக்கி இருக்கிறேனோ -என்பாள்-
அவன் விரும்பா விட்டால் நோக்கப் போமோ –என் உயிர் -என்கிறாள்
இவற்றின் கையில் நோவு பட-எனக்கு பணி யாகவோ என்னுடைய உயிரைப் பாதுகாப்பது -என்றபடி
துஷ்கரம் க்ருதவான் ராம பிரபு -என்று திருவடி –
——————————————————————————

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-

பாஹ்யமான பாதகங்கள் அன்றிக்கே அதி ரமணீயமான -அவன் அவயவங்கள் ஆந்தரங்கமாக நலிய
ஆச்வாஸப் படுத்துபவை -பாதகங்கள் -இனி
இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்-ரக்ஷிக்கும் பிரகாரம் எது -இனிமேல் எப்படி பிராணனை காத்துக் கொள்வது
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க-தோள்கள் அனைய -முலைகள் இளைக்க -இடையை நுடங்கும் படி -தளரும் படியாக
மார்பு -பக்தி -இடை வைராக்யம் -கண் -ஞானம் -அவனுக்கு
தர்ச நீயமான முலைகள் -குலையும் படி -சம்ச்லேஷ சாராசயத்தால்
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து-அணைத்து தோய்ந்து -துறந்து விட்டு அகன்றான் -துனி- துக்கம் வளரும் படி பாஹு முகமாக கலவி செய்து
ஆஸ்ரயித்து அளவு இல்லாத படி துக்கம் -விடாயார் மடுவில் ஆழ்ந்து -போலே ஆகம் தோய்ந்து -அபி நிவேசத்துடன் அவஹாகித்து புஜித்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்-சேர்ந்த போது வார்த்தை பேசி பரிமாறி
இட்டு -அசேதனம் போலே பொகட்டு-அகலுகையே நிரூபகம் கிருஷ்ணனுக்கு -விட்டு அகல் கிருஷ்ணன் -ஸ்வரூப நிரூபக தர்மம்
சம்ச்லேஷமே விஸ்லேஷத்துக்கு -கலந்த போது கல்லாய் பேச்சு வியாபாரங்கள்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்-பேராக் பெரு பெற்றால் போலே அத்விதீயமாய் -ஆழ்வாரை பெற்றதால் பால சிங்கம் யசோதை இளம் சிங்கம்
-இளமை மேநாணிப்பு உடைய -விஸ்லேஷ அபிப்ராயத்தால் தாழ்ந்து பரிமாறின ஆச்சர்ய சேஷ்டிதங்கள் மாயன் -வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்-செல்லாமை தோன்ற நோக்கிய கண்கள் -விஸ்லேஷ யுக்தியை -தாயார் வர்ண தர்மம் விக்கித்து பேசின திரு அதரம் –
பணி இரும் குழல்களும் நான்கு தோளும்-சம்ச்லேஷ தசையில் பரிமாறினதால் மிகைத்த நீல நிறம் புதுக் கணித்து
அணைத்ததால் பணைத்த நான்கு தோள்கள் -அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் – ஈர் இரண்டு நாள் வரைத் தோள்கள் –
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ-அனைவருக்கும் சாதகம் எனக்கு பாதகம் ஆவதே -பிரிந்து இருந்து -ஈடு படுக்கைக்கு ஈடான பாபங்கள் –

கண்களுக்கு இலக்கான பொருள்கள்-முழுதும் துன்புறுத்த புக்கவாறே-அவற்றுக்கு அஞ்சி கண்களைச் செம்பளித்தாள்-
அகவாயிலே அவன் அழகு நினைவுக்கு வந்து-நலியா நின்றது -என்கிறாள்-

மனத்தே நின்று ஈரும் –
என்கையாலே கண்ணை மூடினாள் எனபது தானே போதரும்-செம்பளித்தல் -மூடுதல்
எட்ட இருந்த குருவை இறை என்று அன்று
விட்டோர் பரனை விருப்புறுதல்-பொட்டானத்தன்
கண் செம்பளித்து இருந்து கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தை பார்த்திருப்பான் அற்று -ஞான சாரம் -38

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்
என்னது என்று அபிமானித்த -உடம்பு பகை ஆயிற்று –என்னது -என்று அபிமானித்த அழகு பகை ஆயிற்று –
இனி இருந்து என்னுடைய உயிரை பாதுகாப்பாது என்ற-ஒரு பொருள் உண்டோ –

இணை முலை நமுக-
அவன் சேர்த்தி அழகினைச் சொல்லி வாய் வெருவும் முலைகளானவை-
வன்னிலத்தில் மழை பெய்தால் பதமாமாறு போலே-புணர்ச்சி காலத்தில் அவனுடைய சேர்க்கையால்-மெல்கிக் குழைந்தபடி
நமுகை -குழைதல்-

நுண்ணிடை நுடங்க-
வெறும் புறத்திலும் -அரும் குலைக் கீழ் விளை நிலம் போல்-நோக்க அரிதான-இடை நுடங்கும்படியாகவும் -என்றது-
கலக்கும் போது எதிர்த் தலையை பேண அறிந்திலன் –தன் காதல் தீர்ந்தான் இத்தனை -என்றபடி –

துனியிரும் கலவி செய்து –
துக்கமே பயனாக கலவி செய்து -என்றது-கலவி பிரிவினை முடிவாக உடையதாகையாலே-துக்கத்தை விளைக்கும் கலவி -என்றபடி –
கலக்கிற போது அவன் செய்த கார்யங்கள் தன்னளவு அல்லாமல்-பெரியவை இருத்தலின் -இரும் கலவி -என்கிறது –
அன்றிக்கே
கலக்கும் அந்நிலையிலே தலை தடுமாறாக கலக்கையாலே –பொறுக்க ஒண்ணாதபடி துக்க ரூபமான கலவி ஆதலின்
நுனி இரும் கலவி -என்றாள் -என்னுதல்-

ஆகம் தோய்ந்து-
இக் கலவியாலே நீராகச் செய்து –
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவிஹ்ர்தம் -பாரதம் மோஷ தர்மம் -4-50-
நான் வெயில் காலத்தில் குளிர்ந்த மடுவில் படிவது போலே-பரப்ரமத்தை அடைந்தவன் ஆகின்றேன் -என்கிறபடியே
இவளோடு கலந்தவன் ஆயிற்று –நீராட்டம் -ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் -தோய்தல் –
க்ரீஷ்மே சீதமிவிஹ்ர்தம் –வேனிற் பருவத்தில் மடுவிலே முழுகிக் கிடப்பாரைப் போலே-
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் -நீர்ப் பண்டமாகி உருக்கி பின்பு தோய்ந்தான் –

துறந்து –
இப்படி முழுகிக் கிடந்தது எல்லாம்-பொகடுகைக்கு காரணம் ஆயிற்று –

எம்மை விட்டு –
இப்படி என் பக்கலிலே விருப்பத்தை பண்ணி வைத்து-என்னைக் கை விட்டு-
உயிர் இல்லாத சில பொருள்களை பொகடுமா போலே-பொகட்டோம் என்கிற நினைவையும் கூட போகத்தான் -ஆயிற்று –

அகல் கண்ணன்-
இவனுக்கு கலவி ஏதோ ஒரு கால விசேடத்தில் உண்டு –அகலுதலே இவனுடைய தன்மை
கலவியாலே அல்லது பிரிவு கூடாமையாலே கலந்தான் -இத்தனை –

கள்வன்-
புணர்ச்சி காலத்தில்-குளிர நோக்கின நோக்கும்-பேசின பேச்சும்-செய்த கார்யங்களும்
எல்லாம் என்னுடைய செல்வம் அனைத்தையும்-கொள்ளை கொள்ள தக்கனவாய் இருக்கின்றன –
அன்றிக்கே
கலக்கிற போது செய்தவை முழுவதும்-தன் ஆற்றாமையால் செய்தான் என்று தோற்றும்படி
பிரிவில் நம்மை வருத்துவதற்காக இவற்றைச் செய்தான்-யென்னும்படியாய் இருக்கின்றது
ஆகையால் -கள்வன் -என்கிறாள் -என்னுதல் –

தனி இளம் சிங்கம் –
அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜா-ந த்வம் ஸ்மர்த தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயம் வனே -ஆரண்ய -37-18-மாரீசன் வார்த்தை –
யாவர் ஒருவருக்கு அந்த ஜனக குளத்தில் பிறந்த பிராட்டி-மனைவியாக இருக்கிறாளோ
அந்த பெருமாள் உடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்னுமா போலே
இவளுடைய கலவியாலே ஒப்பற்றவனாக இருந்தான்-என்று தோற்றும்படி இருந்தான் –
கலக்க கலக்க கீழ் நோக்கிப்பிராயம் புகா நின்றான் ஆதலின்-இளமை -என்கிறது –
இவளுடைய கலவியாலே பெறாப் பெறு பெற்றானாய் மேல்-நாணித்து இருந்தான் ஆதலின் -சிங்கம் -என்கிறது –

எம்மாயன் -வாரான்-
பிரிவினை நினைத்து கலங்கிப் போக மாட்டாதே-என் பக்கல் மிகவும் காதலாலே-அந்நிலையிலே தடுமாறினவன்
இப்போது வருகின்றிலன் –
அந்நிலையிலே இருந்த காதலைப் போன்றது ஒன்றாம்
இப்போதை விரக்தியும் –அப்போது போகையில் உள்ள அருமை போரும்-இப்போது வருகையில் உள்ள அருமையும் –

தாமரைக் கண்ணும் செவ்வாயும் -நீலப்பணி இரும் குழல்களும் நான்கு தோளும்பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ-
அவன் கண்களுக்கு தோன்றாது ஒழிந்தால்
இவை நெஞ்சுக்கு தோன்றாது ஒழிந்தால் ஆகாதோ –தான் போகிறான்-இவற்றை வைத்துப் போக வேண்டுமோ –
தாமரைக் கண்ணும் –
கலந்த போது தன் பேறு என்று தோற்றும்படியான-திருக் கண்களை உடையவன் -என்னுதல் –
பிரிவினை நினைத்து வாய் விட மாட்டாதே-ஆற்றாமை அடங்கலும் நோக்கிலே தோற்றும்படி நின்ற நிலை -என்னுதல்

செவ்வாயும் –
பிரிவினைச் சொல்லப் புக்கு முடியச் சொல்ல மாட்டாதே-போதைச் சிவந்த திரு அதரமும்-
இவனுடைய -நிமியும் வாயும் கண்களும் -6-5-2- இருக்கிறபடி-நிமியும் வாய் -உதடு நெளிக்கிற வாய்-

நீலப்பணி இரும் குழல்களும் –
கலவியாலே குலைந்து-பிரிவினை நினைத்து-பேண மாட்டாதே போதைக் கறுத்த குளிர்ந்த
பெரிய திருக்குழலும் –

நான்கு தோளும்-
இவன் தடுமாற்றத்தைக் கண்டு-குழலைப் பேணி வரும் தனையும் தரிக்கைக்காக
நெருக்கி அணைத்த நான்கு திருத் தோள்களும்-மறைத்துக் கொள் –
உபசம்ஹர சர்வாத்மன் ரூபம் ஏதத் சதுர்புஜம்-ஜானாதுமா அவதாரம்தே கம்சோயம் திதி ஜன்மஜே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12 -தேவகி வார்த்தை –
என்றது கம்சன் முதலானோரை குறித்தே அன்றோ-
பெண்களுக்கு நான்காகத் தோன்றும்
சங்க சக்ர கதா பானே த்வாரக நிலய அச்யுத-கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் -பாரதம் சபா பர்வம் -75-43- த்ரௌபதி வார்த்தை
சங்கையும் சக்கரத்தையும் கதையையும் தரித்த திருக் கைகளை உடையனே -என்றாளே அன்றோ –
பாவியேன் –
இவ் அழகுகளை அனுபவித்து இழந்தால்-மறந்து இருக்க பெறாத படியான பாவத்தை செய்த என்னுடைய

மனத்தே நின்று ஈருமாலோ-
மனத்திலே எப்பொழுதும் நின்று நலியா நின்றது
அணைக்கும் படி கைக்கு எட்டுதல்-நெஞ்சுக்கு எட்டாது ஒழியல்-செய்யப் பெற்றிலன் –
அறிவு அழிந்து-மறந்து பிழைக்க-ஒண்ணாதபடி-செய்தான் ஆயிற்று –

——————————————————————————————————-

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த
எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

அபி ரூபமான கருட வாஹனம் உடையவன் புஜித்த -பெண்மை ஆஸ்ரயமும் ஈடு படும் படி நெஞ்சும் துணை இல்லை
-ஆஸ்ரயத்துக்கு தகுதி -ஆழ்வார் அளவுக்கு இல்லாமல் -பாதகம்-
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ-சர்வ அனுகூலம் ஆனவையும் பிரதி கூலமாம் படி -தோல் புரையே போகாமல் நின்று -ஒருபடிப்படை வாடை ஈரா நின்றது –
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ-சம்ச்லேஷ தசையில் பொதுவாக அனைவருக்கும் -குளிர்ந்த வாடை -இப்பொழுது விஸ்லேஷத்தில் வெவ்வாடை ஆனதே –
காடும் நாடாக இனிக்கும் பெருமாள் உடன் சேர்ந்தால் நரகம் சுவர்க்கம் ஸ்வ பாவம் –
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ-சர்வருக்கு ஆச்வாஸ கரமாம் படி குளிர்ந்த சந்திரனும் வெப்பம் சொரிய
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ-பண்டு போலே இல்லாமல் அக்னி போலே
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த-எம் பெண்மை யம் பூவி தாலோ-அம் பூ இது ஆலோ -தர்ச நீயமான சிறகுகள்
-வாஹனம் -பர தேவதை ஆகிய தெய்வ வண்டு-சாரம் கொண்டு போனதால் வண்டு -புஷபமாக நான் இருக்க
-பெண்மை ஸ்த்ரீத்வம் -அழகிய பூ போன்ற இது –
ஆவியின் பரமல்ல வகைகளாலோ-ஆத்மாவுக்கு பொறுக்க முடியாமல் -பாதக பதார்த்த பிரகாரங்கள்
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ-மநோ பலம் இருந்தால் பொறுக்கலாம் -நெஞ்சும் துணை இல்லாமல் போனதே –
அவனுடை நெஞ்சமாக போனதே -உஸாத் துணை ஆகிறது இல்லை –

அகவாயில் நலிகிறது ஒழிய-நேராக வந்து நின்றும் -பெண்மை –ஸ்பர்சம் முதலியவற்றால் வந்து நின்றும் -வாடை -போல்வன
நினைப்பூட்டுதலால் வந்து நின்றும் -மென் மலர்ப் பள்ளி-நலிகிற பொருள்களைச்-சொல்லுகிறாள்

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ
உலகத்தார் இவ் வழகு தன்னை மனத்திலே வலிய வைத்து-பாபத்தைப் போக்கிக் கொள்ளா நிற்பார் கண்டீர் –
இவ்வடிவை அன்றோ பற்றுக் கோடாக நினைத்து-தாங்கள் விரும்பிய பலன் களைப் பெறுவது –

வாடை தண் வாடை -வெவ்வாடை யாலோ –
உட்பகையாய் புறம்புள்ள பொருள்கள் தாம்-அனுகூலமாக இருக்கப் பெற்றேனோ
தண் வாடை வெவ்விய வாடை வாயிற்று-குளிர்ச்சியை இயல்பாக உடைய காற்றும் நெருப்பு போன்று நலிகிறது –
வ்யாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம்-பராசர ஆத்மஜம் வந்த சுகதாதம் தபோ நினம் –என்னுமாறு போலே
வாடை தண் வாடை என்று புத்ரனை இட்டுச் சொல்லும்படியாய் இரா நின்றது-வாயுவின் பிள்ளை அன்றோ நெருப்பு –
தாய்மார் வார்த்தையைக் கேட்டு தண் வாடை என்கிறாள்
தன் அனுபவத்தால் வெவ்விய வாடை -என்கிறாள்

மேவு தண் மதியம் வெம் மதியமாலோ –
உலகத்தார் வெம்மைக்கு அஞ்சி நிலாவிலே ஒதுங்க காண்கையாலே-தானும் அதிலே ஒதுங்கப் பார்த்தாள்
அவன் நெருப்பு மயமான சந்தரன் ஆனான்-அவன் நெஞ்சு அறிந்தவன் ஆகையாலே -இச் சந்திரனும் வேறு பட்டான் –
சந்த்ரமா மநசோ ஜாத -புருஷ சூக்தம் படி-
பரம் பொருளின் மனத்தில் இருந்து சந்தரன் உண்டானான் -என்னக் கடவது அன்றோ-

திண் சுடர் ஆழி அரங்கேசர் திக்குத் திருச் செவியில்
மண் கழலில் சத்ய லோகம் சிரத்தில் மருத்து உயிரில்
தண் கதிர் உள்ளத்தில் வான் உந்தியில் செந்தரணி கண்ணில்
ஒண் கனல் இந்த்ரன் வாழ் முகப் போதில் உதித்தனரே -திருவரங்கத்து மாலை -8
எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதயத் திங்கள் மா மார்பினில்
விழியன் நெஞ்சின் வால் நெருப்பின் நீடு உந்தியின் விதி படைப்பினில் தோன்றி
பொழியும் வெண் கதிர் ஐவகை மதியும் அப்பொழுது உதித்தது என்ன -வில்லி பித்தூரார் ஆழ்வார் பாரதம்
ஆயன் தன் மனம் கல்லானது -9-9-5-அறிந்து மதி கேடாய் இருந்தது

மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ –
புறம்புள்ள பொருள்கள் துன்புறுத்திய வாறே-அவற்றுக்கு அஞ்சி படுக்கையிலே சென்று விழுந்தாள்-
அது இருவருக்கும் படுத்த படுக்கையாய் இருந்தது-இருவருக்கு படுத்த படுக்கை-ஒருவருக்கு பாதகமாம் அன்றோ
மென்மை பொருந்திய மலர்களால் செய்த படுக்கை-வெப்பதற்கு காரணமாய் நலியா நின்றது
பழைய வாடையும் நிலாவுமே நன்றாம் படி ஆயிற்று –

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ –
பெரிய திருவடியை உடைய-தெய்வம் ஆகிற வண்டாலே எடுப்பப் பட்ட சாரத்தை உடையதான
என்னுடைய பெண்மை யாகிற பூ -பெண்மையாம் பூ -பாட பேதமும் உண்டே –இந்த விதமாய் நலிய -நலிவு படா நின்றது –
படுக்கை துன்புறுத்தியவாறே புறம்பே புறப்பட்டாள் –
உடல் இருக்கும் வரையிலும் இருப்பதான பெண் தன்மையானது கெடத் தொடங்கிற்று-
அழகிய சிறகுகளையுடையனாய்-காண்பதற்கு இனியனான் பெரிய திருவடி முதுகிலே வந்து ஆயிற்று – இவளுடைய பெண்மையை அழித்தது-
அன்றிக்கே
கருட வாகனத்தை உடையவன் அன்றோ பரம் பொருள் ஆவான் -ஆதலின் -தூவி அம் புள்ளுடைத் தெய்வம் – என்கிறாள் -என்னுதல் –
தன் பெண்மை அழிந்தது பேச்சுக்கு நிலம் இல்லாமையாலே -இது -என்கிறாள் –
ஆவியின் பரமல்ல வகைகளாலோ –கலக்கிற போது அவன் செய்த தன்மைகள்-உயிரால் தாங்கக் கூடியன அல்ல –
அன்றிக்கே –
துன்புறுத்துகின்ற பொருள்களின் பாரிப்பு-ஆன்மாவின் அளவு அன்று -என்னுதல் –

யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ –
புறம்புண்டானவை பாதகம் ஆனால்-நெஞ்சு உண்டாகில் உசாவித் தரிக்கலாம் அன்றோ
அதுவும் துணை ஆகிறது இல்லை

————————————————————————————————————–

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-

ஆஸ்ரித சுலபன் இரக்கம் அரிதானால் நம்முடைய பிராணன் எப்படி ரஷிப்போம்
யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ-பவ்யமான நெஞ்சமும் துணை இல்லாமல் -அலற்றவும் தரிக்கவும் –
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ-பசு வரும் பொழுது -நிலையிலே புகும் –
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ-அவற்றுடன் வராமல் -இவன் -கையாளக இருந்தவன் -மனஸ் கல்லாகி விட்டதோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ-புல்லாங்குழல் -கான ரசம் வேறே வாசித்துக் கொண்டு -ஸ்ம்ருதி விஷயம் -அவனது மிருதுவான
திரு உள்ளம் ஸூ சிப்பித்து -கொண்டு –
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்-இப்படி ஈடு படும் அளவில் -உஸாத் துணைக்கு
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ-தோழி மார் முன்னமே மாய்ந்து -இவள் விஷயம் என் சிந்தித்தாய் என்று மாய்ந்து -பேருக்குத் தான் துணை –
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்-கிருபையால் காக்கப் பட வேண்டிய இந்த ஆத்மாவை எவ்வாறு காப்பது –
அவனுடை யருள் பெறும் போதரிதே-ரக்ஷகமான அவனது கிருபை கிட்ட மறுக்கிறது

எல்லா பொருள்களும் தம்தம் தன்மைகளை நீக்கி வேறு பட்டனவாக–நெஞ்சம் துணை அன்று -துணை என்னும் தோழி மாரும் மாய்வர்-
அவ்வளவிலும் அவனுடைய திருவருள் அரிதானால்-அவனுடை யருள் பெறும் போதரிதே-தரித்து இருப்பதற்கு விரகு உண்டோ-என்கிறாள்-

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ-
என்னது என்று விரும்ப அமையும் அன்றோ-துணை இன்றிக்கே ஒழிகைக்கு-
-யாமுடை நெஞ்சம் – யாமுடை ஆயன் -யாமுடை தோழி மார்-ஆ புகு மாலையும் ஆகின்றாலோ –
பசுக்களும் வந்து புகுரும் மாலைக் காலமும் ஆகா நின்றது –
மனம் துணை இன்றிக்கே ஒழிந்தால்-ஓரடி தாழ்ந்து வர வேண்டாவோ இம் மாலைக்கு –

யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ –
நெஞ்சு துணை அன்றிக்கே-மாலையும் வருகிற இது-அவன் நெஞ்சில் படுகிறது இல்லை
எல்லா பொருள்கட்கும் தன்மை வேறுபாடு உண்டாவது போன்று-மென்மைத் தன்மை உடையவன் நெஞ்சு கல்லாயிற்று
நெஞ்சிலும் அண்ணியன் நெஞ்சு நெகிழ வேண்டாவோ-ஒரு கல்லை பெண்ணாக்கினவன் நெஞ்சு கல்லானால்
அதனை நெகிழ்க்க வல்லார் இலர் அன்றோ –

அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ –
அவனுடைய இனிய குழல் ஓசை-அவன் நெஞ்சு கல் -என்று கை வாங்க ஒட்டுகிறது இல்லை-
நான் பகல் முழுதும் பிரிந்தேன்-வரவு தாழ்ந்தேன்-ஆற்றேன்-பரதந்த்ரனாய் கெட்டேன்-
என்கிற வகைகளில் சில பாசுரங்களை வைத்தே அன்றோ குழல் ஊதுவது –
அது கல் என்று கை வாங்காதே காண் -தண்ணீர் காண் -என்னா நின்றது –
இப் பாசுரங்களாலே அவனுடைய இனிய குழல் ஓசையானது ஈரா நின்றது –

யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
மனமும் துணை அன்றிக்கே-அவனும் உதவாத போது-துணையான தோழி மாரும் என் துன்பத்தினைக் கண்டு
எனக்கு முன்னே -இவளுக்கு அவன் கணவனாக வேண்டும் –என்று நோவு படா நின்றார்கள்-
மாய்வர் -நோவு படுவார்கள் -இவளுக்கு உதவ வில்லை என்று அவனுக்கு மாய்வர் -என்று சப்தார்த்தம் –
துணை என்னும் -மாம்பழ உண்ணி -போலே அன்றோ-வாசனையே அறியாத வற்றை மாம்பழ உண்ணி என்னுமா போலே
துணை என்று சொல்லப் படுகிற மாத்ரமே -என்பாள்-நீங்கள் தோழி மார் ஆனபடி -என்பதனைத் தெரிவித்தபடி –
த்வம் வயச்ய அஸி ஹ்ருதய மே ஹி ஏகம் துக்கம் சுகம் நௌ-சுக்ரீவோ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரஹ்ருஷ்டவத் -கிஷ்கிந்தா -5-18-
துக்கமும் சுகமும் நமக்கும் ஒன்றே என்று இருக்குமவர்கள்-ஆகையால் இவள் ஆற்றாமை பொறுக்க முடியாமல் நோவு படுகிறார்கள்
இவர்களுக்கு அவனோடு உண்டான சம்பந்தம் இவள் வழியாக அன்றோ –

யாமுடை யார் உயிர் காக்குமாறு என் –
இத் தனிமையில் ஆத்துமாவைத் தரித்துக் கொண்டு இருப்பதற்கு விரகு -என்-பிறர் உயிர் ஆகில் நோக்கவுமாம்-
ஆதலால் யாமுடை உயிர் -என்கிறாள்

அவனுடை யருள் பெறும் போதரிதே –
அவனுடைய திருவருள் பெறுகை அரிதாயிற்று-அது பெறில் நம் உயிரையும் நோக்கலாம் –

—————————————————————————————————-

அவனுடை யருள் பெறும் போதரிதால்
அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெருமள வாவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

சுசீலன் -குணத்தில் ஈடுபட்டு -துர்மானிகள் -நித்ய அநபாயினி -நித்ய வாசம் செய்யும் -வாசி இல்லாமல் -கூறாளும் தனி உடம்பின் –
அவனுடை யருள் பெறும் போதரிதால்-சம்ச்லேஷ உபகாரம் -அந்த அவஸ்தை -அரிதாக இரா நின்றதே
அவ்வருள் அல்லன வருளும் அல்ல-வேறு எதுவும் -அந்த உபகாரம் ஒழிந்த மற்ற ஆசுவாஸ ஹேதுவானவை உபகாரமும் அல்ல –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –
அவன் அருள் பெருமள வாவி நில்லாது-ஆறி இருக்கவும் முடியாதே -ஆவி நில்லாது –
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்-பதார்த்த தர்சனம் பண்ணி பொழுது போக்க -பகல் பொழு தை அழித்து மாலையும் வர –
நெஞ்சையும் காண வில்லை –
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை-சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்-சிவன் -பிரமன் நிரதிசய -ஸம்பத் ரூபை-ஆபாசரயமாக பற்றும் படி
-ஸ்ம்ருதி விஷயமாகி ஆவி யாரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ-புகும் இடம் ஒதுங்க இடம் இல்லை -தத் ஆதீனம் பிரவ்ருத்தி யாக இருக்க ச்வா தீனமாக என் செய்வேன்
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்-உங்களுக்கு சொல்லவா -அவனுக்கு சொல்லவா -என்ன பாசுரம் இட்டு சொல்லுவேன்
அடு பகல் மாலை என் நெஞ்சும் -பாட பேதம் -மாலையில் நெஞ்சும் உதவாபி பெற வில்லை –

அகலகில்லேன் இறையும்-என்று-நித்ய வாசம் செய்கிற பிராட்டியோடு
வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவர்களான பிரமன் சிவன்-முதலானவர்களோடு வாசி அற-உடம்பு கொடுக்குமவனுடைய -சௌசீல்யம்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்-என் உயிரை ஈரா நின்றது-என்கிறாள் –

அவனுடை யருள் பெறும் போதரிதால்
கொள்வார் தேட்டமாய் அன்றோ-அவன் அருள் இருப்பது -உதார -ஸ்ரீ கீதை
தண்ணீர் பந்தலிலே சேர்ந்த விடாயர்க்கு குளிர்ந்த தண்ணீர் அரிதாய்-இருக்குமாறு போலே அன்றோ
எனக்கு அவன் திருவருள் அரிதானபடி –
அவன் அருள் கிடைக்கும் அளவும் உறவினர்கள் உடைய-இன் சொற்களைக் கொண்டாகிலும் தரித்தாலோ -என்ன

அவ்வருள் அல்லன வருளும் அல்ல –
அந்த அருளை ஒழிய மற்றும் உண்டான அருள்கள் அருள்களும் அல்ல
நல்லான் அருள் அல்லால் பல்லார் அருளும் பழுது -முதல் திருவந்தாதி -15 -என்றதே அன்றோ –
விடாய்த்தவனுக்கு நெருப்பு கூட்டங்களைக் கொண்டு விடாயை நீக்கினாப் போலே அன்றோ பிறர் உடைய அருள்
நீக்க ஒண்ணாமை மாத்ரமே அன்று-தீமையையும் விளைவிக்கும் –

அவ்வருள் தப்பாத பின்பு அதனைப் பெறும் அளவும் ஆறி இருத்தல் ஆகாதோ -என்ன –
அவன் அருள் பெருமள வாவி நில்லாது –அவன் திருவருள் கிட்டும் தனையும் உயிர் தரிக்கிறது இல்லை –
கிரமத்திலே அடைகிற வரையிலும் பொறுத்து இருப்பது-ஓர் உயிரைப் பெற்றோம் ஆகில்-ஆறி இருக்கலாயிற்றே –

அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் –
பகல் அடு மாலையும் -பகலை முடித்துக் கொடு வந்து-மாலையும் தோற்றா நின்றது –நெஞ்சையும் காண்கின்றிலேன்-எம்பெருமானார் நிர்வாகம்
அன்றிக்கே
மாலையும் காண்கின்றிலேன்-நெஞ்சையும் காண்கின்றிலேன் -என்னுதல் -என்றது –ஆளவந்தார் நிர்வாகம் –
மேலே வருகிற காலத்தின் உடைய கொடுமையைப் பார்த்தவாறே-மாலையே தேட்டமாக இருக்கிறது -என்றபடி
வழியில் போகா நிற்க வழி தெரியாமல் மயங்கினால்-கையில் பொருளைக் கொண்டாகிலும் வழி காட்ட
வல்லடிக்காரரை யாகிலும் கிடையாதோ -என்னுமாறு போன்றும்
ஒற்றைக் கண்ணள்- ஒற்றைக் காதள் -தொடக்கமான அரக்கியர்கள்-கையில் காட்டிக் கொடுத்து இராவணன் பேர நின்றால் போலே
ஆற்றலாம்படியான பகலை முடித்துக் கொடு வந்த மாலை நேரமானது-தேட்டமாம்படி யாய் வந்து விழுந்தது -என்றபடி –

சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
பிராட்டியோடு-பிரயோஜனாந்த பரர்களான-வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவர்களான
பிரமன் சிவன் முதலாயினவர்களோடு வாசி அற உடம்பு கொடுக்கும்-சீலத்தை நினைத்த அளவில்
அச் சீலத்தை உடைய திருமேனி நித்தியமான ஆத்துமாவை-முடியா நின்றது
காபாலி கந்தர்க்கு எளிதானது கண்டீர் எனக்கு அரிதாயிற்று-ஆயின் புறம்பே சென்றாகிலும் தரிக்கல் ஆகாதோ என்ன
காபாலி கந்தர் -மூலம் -பிரமன் என்றபடி –

எவன் இனிப் புகுமிடம் –
இனி புகுமிடம் எவன் –எல்லார்க்கும் பொதுவான உடம்பை இழந்து இனி எங்கே புக்குத் தரிப்பது
அவன் உடம்பு கிட்டிற்று இல்லை -என்று-நலத்தை சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ
ஆயின் உலக யாத்ரையைப் பற்றித் தரித்தாலோ -என்ன
எவன் செய்கேனோ –
அவ்வளவில் தரிக்கலாம் விஷயம் அன்றே
ஆயின் அவனுடைய சீலம் முதலான குணங்களைச் சொல்லிக் கொண்டு தரித்தாலோ என்ன –

ஆருக்கு-
வடுகருக்கு தமிழர் வார்த்தை சொல்லுமாறு போலே-சொல்லும் வார்த்தைக்கு அதிகாரிகள் ஆர்
சீலம் முதலான குணங்களைச் சொல்லும் தோழி மார்கள் எனக்கு முன்னே அழிந்தார்கள் –
அந்யதாகா அர்த்தம் பண்ணுவார்கள் வடுகர் –

என் சொல்லுகேன் –
கேட்ப்பாரைப் பெற்றால் தான் சொல்லுகைக்கு வார்த்தைகள் உண்டோ –

அன்னைமீர்காள் –
தோழி மார்கள் அழிந்தார்கள்-
உலகத்தார் வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவர்கள்-
அவர்களைத் தவிர நீங்கள் எஞ்சி இருந்தீர் கோள்-
உங்களுக்குச் சொல்லவோ-
மீனுக்கு தண்ணீர் வார்த்தால் போன்று நித்ய சூரிகளுக்கு சொல்லவோ
ஈச்வரோஹம் -என்று இருக்கும் பிரமன் முதலானவர்க்கு சொல்லவோ
விஷயங்களில் ஈடுபட்டவர்களாய் திரியும் சம்சாரிகட்குச் சொல்லவோ
அன்றிக்கே
ஆச்சார்யனை அடைந்து-ஸ்வரூப ஞானம் பிறந்து-துறும்பு நறுக்கலாகாது -என்று இருக்கிற செங்கோடு குட்டைகளுக்கு சொல்லவோ
செங்கோடு குட்டை -செவ்வையாக கொடுக்கிற நாழி
தாம் கொண்ட கொள்கை விடாதவர்கள்-கிருஹீதக் ராஹிகள்-
உபாய பாவத்தில் செய்வதற்கு ஒன்றும் இல்லை -கைங்கர்யம் வேண்டாம் என்று சொல்ல வில்லை என்று உணராதவர்கள் —
யாருக்கு எதனைச் சொல்ல-சொல்லுதற்கு வார்த்தை இல்லை-கேட்கைக்கு அதிகாரிகளும் இல்லை

———————————————————————————————

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-

உபகார சீலமான மேகம் போலே -திரு நிறம் கொண்ட -நமக்கு பவ்யனான கிருஷ்ணன் இடம் நெஞ்சு சேர
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்-யாருக்கு சொல்லுவேன் -எப்படிப் பட்டவர் அறிவித்தார் -பிரிந்ததே அவன் -அறிவிப்பே அறியாத நீங்கள் –
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை-பரிகர ஸாமக்ரிகள் உடன் -வந்து நலிய -நம் அளவு இல்லாமல் –
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்–வரையாமல் அபகரிக்கும் -காள மேகம் போலே -கிருத்ரிம பவ்யத்தை -யாலே
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே-அபகரிக்கப் பட்டு -நம் நெஞ்சம் அவன் இடம் போனதே -தனிமையிலே இவளை பாதிக்க
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு-பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து-போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்-
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ-
பரிமளம் கொண்ட அகில் புகை -யாழின் நரம்பு -பஞ்சம பண் -குளிர்ந்த சந்தனம் -அளைந்து -சஹகாரி இல்லாமல் போர் உற்ற வாடை
-கவசம் பூண்டு -இவற்றை -மணத்தை கானத்தை ராகத்தை குளிர்ந்த சந்தனம் க்ரஹித்துக் கொண்டு
செவ்வியான மல்லிகைப் பூ -நஞ்சு -புது மனம் முகந்து -வந்து -வீசா நிற்கும்

மேல் கூறிய துன்புறுத்தும் பொருள்கள் எல்லாம்-திரண்டு வந்து கண் பாராதே நலியா நின்றன –என்கிறாள்

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
நெஞ்சம் உங்களதாய்-துன்புறுத்தும் பொருள்கள் இனிய பொருள்கள் என்று அவற்றைத் தேடித் திரிகிற-உங்களுக்குச் சொல்லவோ-
இதனைச் சொன்னவாறே-என் நெஞ்சம் தம்மதாய்-தத்தமக்கு என்ன அனுகூலமான பொருள்களையும் தடக் கடவது அன்றோ-
என்பார்கள் அன்றோ தங்கள் வாசனையால் –

உங்களுக்குச் சொல்லுவோம்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை –
மிகைத்து குளிர்ந்து வருகிற வாடையானது-என்னுடைய அரிய உயிரின் அளவு போமது அன்று –
துன்பத்தினை ஊட்டும் பொருள்கள் உறைத்தாலும் தரித்து இருக்கலாம் அன்றோ
எனக்கு ஒரு நெஞ்சு பெற்றேன் ஆகில்-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்- என்கிறபடியே-அதுவும் மீளா இடத்தே புக்கதே –

காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே –
மேகம் போன்று சிரமத்தை போக்கும் வடிவு உடையவனாய்-அவ்வடிவைக் காட்டி என்னை தனக்கே உரியவள் ஆக்கி
எனக்கு உரிமைப் பட்டவனான கிருஷ்ணன் உடைய-
கள்வம் உண்டு-கலவிக் காலத்தில் பேசின தாழ்ந்தபேச்சுகளும்-செய்த செயல்களும்
அவற்றாலே கவரப் பட்ட ஒப்பற்றதான என் மனதானது
அவன்பக்கலது-பேச்சும் செய்கையும் – நாச்சியார் திருமொழி -2-4–என்னக் கடவது அன்றோ
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து போருற்ற வாடை
தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ –
இங்கே உள்ளத்து கேவல சரீரமே யாகும்-என்று அறிகின்றன அல்ல அவை
வாடை தான் முதன்மையாய் வருகை அன்றிக்கே-மற்றும் முதன்மை இல்லாவற்றனவையும் கூடக் கொண்டு
ஏஷைவ ஆசம்சதே லன்காம் ஸ்வேன அநீகேன மர்த்திதம் -யுத்தம் -30-30
இந்த நீலன் ஒருவனே இலங்கையை தன் சேனையால் அழிப்பதற்கு விரும்புகிறான் -என்றபடியே-நான் நான் என்று மேல் விழா நின்றதாயிற்று –

சீருற்ற அகில் புகை –
சீர் உருகையாவது அழகு மிக்கு இருக்கை-அதாவது வாசனையேயாய்
கிரண இந்த்ரியமான மூக்கினை நலிவதோடு அல்லாமல்-கண்களையும் நலியும்படியான அழகிய -அகில் புகை -என்றபடி –

யாழ் நரம்பு –
பண்பட்ட யாழ் –

பஞ்சமம் –
பஞ்சமமாகிற பண்-

தண் பசுஞ்சாந்து –
ஆறிக் குளிர்ந்து வாசனை உடைய-பொருள்களில் செவ்வி மாறாத சாந்து –

அணைந்து –
இவற்றைக் கூட்டிக் கொண்டு

போருற்ற வாடை –
கூடின பரிகரங்கள் பங்களங்கள் -என்னும் படி-தனி வீரம் செய்கிற வாடை யானது-பொருகையிலெ சமைந்த வாடை யானது –

தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு –
சிரமத்தைப் போக்கக் கூடியதான-மல்லிகைப் பூவின் புதிய வாசனையை முகந்து கொண்டு
முகப்பார் தாழ்வே ஆயிற்று-மணத்தில் குறை இல்லை

எறியுமாலோ –
இவளுடைய விரஹ அக்னி தன்னை கதுவாதபடி-கடக்க நின்று வீசா நின்றது-அம்பைக் காய்ச்சி எய்வாரைப் போலே-

——————————————————————————————

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ
பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-

அதிசயித்த சம்ச்லேஷம் பண்ணிக்க கலந்த கிருஷ்ணன் -உடைய கிருத்ரிம சேஷ்டிதங்கள் வானிலும் கூடியவை -அதை விட பாதக பதார்த்தங்கள் நினைவு படுத்தி
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ-அபி நவமான பரிமளம் முகந்து கொண்டு
பொங்கிள வாடை புன் செக்கராலோ-இளகிப் பதித்த -செக்கர் வானம் ஆகா நின்றது -வாசா மகோசர மகிமை
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்-சம்ச்லேஷித்து அகன்ற கிருஷ்ணன் சேஷ்டிதங்கள் நினைவுக்கு வந்து
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்-அத்தை விட மேலாக
மது மண மல்லிகை மந்தக் கோவை-செவ்வி அழியாத தொடை -வரிசை -நெருக்கி –
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து-விலக்ஷணமான சந்தனம் விட -பண்ணையும் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே-ராகம் வைத்து -அதுக்கும் மேலே -பரிச்சேதிக்க முடியாத -அருள் -ஆய்ச்சியர்க்காக
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-இரண்டு ஏவ காரங்கள் –தீம் குழலே -ஆய்ச்சியர்க்காகவே ஊதுவது –
அக்காலத்தில் காட்சியால் -உண்டான இனிமை -கேட்பதிலும் இனிமை -கோபால சூடாமணி -பிரகாசிப்பிக்கும் -இதற்கே நான் முடிந்தேன் –

மேலே தனித் தனியாகவும்-திரண்டும் வந்த-பாதகப் பொருள்கள்
ஒன்றுக்கு ஓன்று முற்கோலி-நலியா நின்றன-என்கிறாள்-
சாந்தினில் பஞ்சமம் வைத்து-நான் முன்னே என்றவாறு –

பொங்கிள வாடை -புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ –
பெண் கொலை என்றவாறே கிளர்ந்து-இளகிப் பதிக்கிற வாடைக் காற்றானது புது மணத்தைக் கொண்டு எறியா நின்றது –

புன் செக்கராலோ –
செக்கர் வானமும் சென்று மறையும் அளவாயிற்று -என்றது
மேல் வருகிற காலத்தின் தண்மையைப் பார்த்தவாறே-பகலைப் போன்று மாலைப் பொழுதும் தேட்டமாய் வந்து விழுந்தது
ஆளவந்தார் நிர்வாஹம் படி வியாக்யானம் இது –
எம்பெருமானார் நிர்வாஹம் -கொடிய செக்கர் வானமும் வாரா நின்றது-

அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில்கொடிது –
அது -பேச்சுக்கு நிலம் இல்லாத படிக்கு ஆயிற்று கலந்தது –
சோக விஷயமாக 24000கிரந்தம்-i கிரந்தம் -32 எழுத்துகள் – சொன்னவன்-கலவி விஷயமாக ஒன்றும் சொல்லிற்றிலன் அன்றோ
பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே
ஸ அநு வ்யாகரனாத் பூய சோக ஸ்லோகத்வம் ஆகத-பால -2-40-
சோக வேகத்தால் கூறியது இலக்கணங்கள் உடன் கூடியது ஆயிற்று -என்கிறபடியே
சோக விஷயமாகவே அன்றோ சொல்லிற்று -ராமஸ்து சீதயா ஸார்த்தம் –
அப்படி கலந்து அகன்ற நம் கண்ணபிரானுடைய-கலக்கிற போதை தாழ்ந்த பேச்சுக்களும்
அவன் வருத்துவதைக் காட்டிலும் வருத்தா நின்றன
கலக்கிற போது நமக்கு உரிமைப் பட்டவன் என்னும்படி இருந்த-கிருஷ்ணன் உடைய அக் காலத்து செயல்கள் அவனைக் காட்டிலும் வருத்தா நின்றன
ஆதலின் கண்ணனில் கொடிது -என்கிறாள் -என்றது
இச் செயல்களைக் காட்டிலும் இன்னமும் அவன் தானே நல்லன் -என்றபடி –

இனி அதனில் உம்பர் –
பின்னையும் அதற்கு மேலே-மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்து –
மதுவையும் மணத்தையும் உடைத்தான-மல்லிகையாலே செறியத் தொடுத்த மாலை-மந்தம் செறிவு —
அழகிய பசும் சாந்து-இவையும் நலியா நின்றன –
அதற்கு மேலே பஞ்சமம் வைத்து –பஞ்சமம் ஆகிற பண்ணையும் கூட்டிக் கொண்டு-குழல் ஓசை துன்புறுத்துகிறது -என்னுதல்
இவற்றில் பஞ்சமம் என்கிற பண்ணையும் கூட்டிக் கொண்டு -என்னுதல்

அது மணந்து –
அப்படியே கலப்பதற்காக -என்னுதல்
அன்றிக்கே
அது மணந்த -என்று கொண்டு-அப்படிக் கலந்த ஆயர் மகளிர்க்காக -என்னுதல்

இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் -அத் தீம் குழற்கே
தன் திரு அருளுக்கு இலக்கான ஆயர் பெண்களுக்கே-காவல் காத்து கிடக்கிறவர்களை தொடை குத்தி உறங்கச் செய்து
ஒரு பருவத்தில் பெண்களை மயிரைப் பற்றி இழுக்கும் ஆயிற்று இக் குழல் ஓசை
ஆதலின் -இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும்-என்கிறாள்-இன்னார்க்கு தொடுத்த அம்பு -என்னுமா போலே –

குழற்கே உய்யேன் நான் –
துன்புறுத்தும் மற்றைப் பொருள்களுக்கு பிழைத்து இருந்தேன் ஆகிலும்
இக் குழல் ஓசைக்கு நான் பிழைக்க மாட்டேன்-அவை எல்லாம் ஒரு படியும்-இது ஒரு படியும் ஆயிற்று நலிகிறபடி

—————————————————————————————————

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

முக்த ஜீவன் -சுத்த ஆத்ம ஸ்வரூபம் -அசித் மிஸ்ராத் விஸுக்தாத் -சங்கல்ப ரூப ஞானம் -கொண்டே பார்த்து கேட்டு -கண் காது மூலம் இல்லை –
சாபிப்ராயம் கொண்ட யுக்திகள் -மனசை அபகரிக்கும் -இசைகள்
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-இனிய குழல் ஓசை தனக்கு நான் தரிக்க முடியாமல்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்–நைச்சிய ஸூ சகமான பாசுரங்கள் -அது -தனக்குத் தானே செய்த கோலம் கண்கள் –
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்-கண்களால் பேசி -தூத க்ருத்யம் -ஸூ அபிப்ராயம் ஸ்பஷ்டமாக பேசி -வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டே –
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்–இசையால் நோக்கி -மாறாடி-இதனால் தான் முக்தனும் -தன்னுடைய -ஸூ அபேக்ஷித்ங்களை கடாக்ஷித்து
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து-பேதம் உள்ள திரு முகம் காட்டி -விகாரம் அடைந்து -இப்பாட்டில் இனிமை
தனக்கு -தானே ஈடுபட்டு -பெண்கள் தங்க மாட்டார்கள் என்று தானே நொந்து -நித்ய நிர்விகார தத்வம் -ஜென்ம கர்ம மே திவ்யம் –
மாயம் அவனுக்கு -மகன் ஒருவருக்கு அல்லாத மா மேனி மாயன் –
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை-முக்தர்கள் பெண்கள் நெஞ்சில் உடலால் வந்த விஸ்லேஷம் யாரும் படி பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம-அறிய முடியாதே -தத்ருஸ -பார்த்தாலே விகாரம் கேட்க வேண்டாமே –
மான் கணங்கள் -ஆ நிரை-கால்கள் பரப்பி –செவி ஆட்ட கில்லாமல்-மேய்ச்சல் மறந்து எழுத்து சித்ரங்கள் போலே
-சிலா சலிலா -கல்லுப்பாறை உருகி -நெருப்பு குளிர்ந்த – அனைத்தும் மாறி -நீர் ஓடாமல் நின்று -ஆகாசம் உருவம் கொண்டு
இசை கேட்க -ராசா காலே -கூரத் ஆழ்வான் -அம்மே அம்மே -மாலையும் வந்தது மாயன் வாரான்-

பண்டே ஆயர் பெண்கள் நடுவே-இவன் குழல் ஊதுகிற போது-நடு நடுவே தன் ஆற்றாமையாலே சில வார்த்தைகளை
பேசிக் கொண்டும்-சில செயல்களைச் செய்து கொண்டும்-பாடும் பாட்டை நினைத்து-ஒன்றும் தரிக்க மாட்டு கின்றிலேன் –என்கிறாள் –

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் –
மேலே கூறியவை மிகை என்னும்படி-குழல் இசையே துன்புறுத்துகிற படி –

அது மொழிந்து இடை இடைத் –
இடை இடை -அது -மொழிந்து-
பிரிந்தேன்-ஆற்றேன்-என்றாப் போலே சொல்லுகிற இழி சொற்களை இடை இடையே சொல்லி-ஆயிற்றுப் பாடுவது
தாழ்ந்த செயல்களையும் சொற்களையும் தன் வாயாலே-சொல்ல மாட்டாமையாலே -அது -என்கிறாள் –
எம்பார் -இந்த இடம் வந்தவாறே
மோர் உள்ளதனையும் சோறேயோ-தேசிகரும் கூட பாசுரம் இட்டு சொல்ல மாட்டாதே -அது-என்னா நிற்க
மத்யஸ்தரான நாம் இதற்கு என்ன பாசுரம் இட்டுச் சொல்வது -என்று அருளிச் செய்தாராம் –
அன்றிக்கே –
அது ஒழிந்து–என்ற பாடமான போது-அது தவிர்ந்து -என்னுதல் –
அதாவது
நடு நடுவே-தாழ்ந்த சொற்களை சொல்லிப் பாடுகிற பாட்டை விட்டு -என்றபடி –
குழகன் என் தன் கோமள பிள்ளாய் –மழலை மென்னகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க வென் முகத்தே
எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேன் -பெருமாள் திருமொழி -7-7-

தன் செய் கோலம் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தனக்குத் தானே ஆபரணமாய்-தன் கருத்தினை அவர்களுக்கு அறிவிக்க வல்ல திருக் கண்கள் -என்றது –
மனத்திலே உள்ள மறத்தாலே -கிட்டக் கடவோம் அல்லோம் –என்று இருக்கிற-பெண்களுடைய கால்களை சென்று பிடியா நிற்கும் கண்கள் -என்றபடி –
நம்பி மூத்த பிரான் செய்யவற்றை அடைய செய்யா நிற்கும் ஆயிற்று
சந்தேசை சாம மதுரை பிரேம கர்ப்பை அகர்விதை-ராமேன ஆஸ்வாசிதா கோபய ஹரிணா ஹ்ருத சேதச – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-20-
பாலா ராமானால் மணம் தெளிந்தார்கள் -என்றபடியே-
குழல் ஊதுகையிலே மீண்டு மீண்டு வார்த்தை சொல்ல-ஒண்ணாமை யாலே-வாக்கின் செயலை ஏறிட்டு கொள்ளுமாயிற்று
பேச்சாலே பிறக்கும் தெளிவு-நோக்காலே பிறக்கையைத் தெரிவித்தபடி –

நினைந்த முனி பகர்ந்த வெலாம் நெறி உண்ணி அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்குப் போரேற்றின் முகம் பார்த்தான்
வனைந்தனைய திருமேனி வள்ளலும் அம் மாதவத்தோன்
நினைந்த வெலாம் நினைந்து அந்த நெடும் சிலையை நோக்கினான் -கம்பர் பால -கார்முகம் -25

தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப் –
அழகிய பேச்சுக்களோடு கூடின இசைகளாலே-கண்களாலே நோக்கி ஈடுபடுத்துமாறு போலே ஈடுபடுத்தி
இசையோடு இருக்கச் செய்தேயும் இயலும் தெரிந்து இருக்கை
அன்றிக்கே
வாக்கின் பேச்சும் கண்களின் நோக்கும்-மாறாடின படி -என்னுதல் –

பேதுறு முகம் செய்து நொந்து நொந்து –
கேட்கிறவர்களிலும் தன் செவி அணித்து ஆகையாலே-நாம் வருந்துகிறபடி கண்டால் பெண்கள் என் படுகிறார்களோ
என்று மிகவும் நோவு பட்டான் என்பதனை தெரிவித்த படி –

பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை-
பெண்களுடைய நெஞ்சு ஊடலை மறந்து வந்து-பொருந்தும்படி படுகிற பாட்டை

யாதும் ஒன்றும் அறிகிலம் –
அது துன்புறுத்துகிறபடி-எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை –

அம்ம அம்ம-
பூசல் -பூசல் –

மாலையும் வந்தது –
மிகவும் துன்புறும்படி மாலைபொழுதும் வந்தது -என்றது –
இனி இருந்து வருந்த வேண்டாதபடி-இது முடிந்தே விடும் போலே இருந்தது -என்றபடி –

மாயன் வாரான் –
தன்னைப் பிரிந்தார் நாணம் உறும்படி-தானே இழவாளனாய் வந்து-காலைப் பிடிக்கும் ஆச்சர்யத்தை உடையவன்-வருகின்றிலன் –

—————————————————————————————

மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-

பூசல் -நோய் -கூப்பீடு இரண்டும் –
ஆச்சர்ய புதன் வந்திலன் -பாதகங்கள் நலியா நின்றன -இனி எங்கனம் உஜ்ஜீவிப்பேன்
மாலையும் வந்தது மாயன் வாரான்-அவன் குறித்த நேரமும் வந்ததே -தன் சந்நிதியால் எல்லாம் அனுகூலமாம் படி இருக்கும் –
விஸ்லேஷத்தில் அனைத்தும் பாதகமாம் படி அன்றோ அவன் ஸ்வ பாவம் -காண்டீபம் தூக்க முடியவில்லையே அர்ஜுனனுக்கு -கண்ணன் பிரிந்த பின்பு –
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த-மணிகள் சபதிக்க -காளை மாடுகள் -அணைந்து கொண்டு
கோல நன் நாகுகள் உகளுமாலோ-தர்ச நீயமான வடிவு -ஈறுகள் உடன் சேர்ந்த -தாய் நாடு கன்றே போலே -நாகு தாய் பசு -ஆனந்தத்தால் சுற்றி சுற்றி
கொடியன குழல்களும் குழறுமாலோ-குழறி -ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் –பசுக்களை குவிக்க -பல இடங்களிலும் ஊதி-
இந்த சப்தம் அவன் குழல் ஓசை ஸ்மரிப்பிக்க
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்-வெளுத்த ஒளி -கரு முகை-ஓங்கிய கொடிகள் உடன்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ-கலம்பகம் மாலை -சேர்ந்து அவஹாகித்துக் கொண்டு -வண்டு பதிந்து அலம்பி சப்தம் இட
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ-கடல் அலைகள் ஆகாசம் கிட்டி வாய் விட்டு கூப்பிடா நின்றதே
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே-இந்த நிலையில் என்ன சொல்லி உஜ்ஜீவிப்பேன் –

வருவதாக சொன்ன காலம் வந்திருக்க-அவன் வருகின்றிலன்
துன்புறுத்துகின்ற பொருள்களின் நடுவிலே-அவனை ஒழிய தரிப்பது எங்கே –என்கிறாள் –

மாலையும் வந்தது மாயன் வாரான் –
மாலையையும் மாலையும் கூட பிணைத்து விட்டாள் போலே காணும்-வருவதாக குறித்துப் போன காலம் வந்தது
அவன் தான் வருகின்றிலன் –
அவனைக் காணவே-துன்புறுத்தும் பொருள்கள் எல்லாம் இன்புறுத்தும் பொருள்களாகத் தோற்றும் அன்றோ –

மா மணி புலம்ப –
பெரிய மணி ஒலிக்க-

வல்லேறு அணைந்த கோல நன் நாகுகள் உகளுமாலோ-
விரும்பிய பொருள்கள் கை புகுந்தால் அல்லது மீளாத-வலிய ஏறுகளோடு கலந்த-அழகிய சிநேகத்தை உடைய நாகுகள்
அந்த சேர்க்கையால் உண்டான உவகையாலே-களித்துக் குதித்து ஓடா நின்றன –
இதனால்
நான் சோகத்தோடு இருந்தேன்-இவை உவகைக்கு போக்குவீடா நின்றன -என்கிறாள் -என்றபடி –
நாகு கை புகுந்தால் அல்லாது மீளாத ஏறுகள் ஆதலின் வல் ஏறுகள் -என்கிறாள் –
பின்னை அவன் செய்தது என் என்னில்-அவன் இன்னமும் வரவுக்கு முயற்சி செய்யா நின்றான் -என்கிறது மேல் –

கொடியன குழல்களும் குழறுமாலோ –
தூரத்திலே சென்ற பசுக்களை ஓர் இடத்திலே-திரட்டுகைக்காக அங்கும் இங்கும் சிதறின-ஆயர்கள் அடையத் திரண்டு-
எல்லாரும் ஒரு சேரக் குழல்களை வாங்கி-சாம்யா பத்தி — ஆயர்களுக்கு குழல் உண்டே -தன்னேராயிரம் பிள்ளைகள் போலே -இங்கேயே அருளுவான் —
மாலை நேரத்திலே தங்கள் வரவை-ஊர் அறியும் படியாகவும்-பெண்கள் நெஞ்சில் மறம் அறும்படியாகவும்
எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி-
ஒன்றாக விரவி எழும்படி ஊதுவது-ஒரு குழல் ஓசை உண்டு –அது துன்புறுத்தா நின்றது

வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
மிக்க ஒளியை உடையதாய்-கண்ட இடம் எங்கும் தானே யாம்படி படர்ந்த முல்லை-அப்படி இருக்கிற கருமுகை-மல்லிகை
இவற்றிலே புக்கு தேனைக் குடித்து-ஒலிக்கிற வண்டுகளானவை களித்து-விளையாடா நின்றன –
ஆக
திர்யக்குகள் ஆனவை கல்வியால் வந்த உவகைக்கு போக்கு விட்டு களிப்பனவும்-குதித்து ஆடா நின்றனவும் ஆகா நின்றன -என்றபடி

வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ –கடலும் ஆகாயத்தில் நின்று கூப்பிடா நின்றது -என்றது
புணர்ச்சி காலத்திலேயே பிரிந்து விடுவானோ என்ற எண்ணம் பிறந்து-கூப்பிடுவதற்கு போலியாக இரா நின்றது -என்றபடி –

என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே –
துன்புறுத்தும் பொருள்களின் நடுவே-அவனை ஒழிய-எதனைச் சொல்லி பிழைப்பது-இவை மேன்மேல் என நலியா நின்றன –
அவனோ வந்திலன்-நான் பிழைக்க என்று ஓன்று உண்டோ -முடிந்தேன் -என்றபடி –

————————————————————————————————————

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-

பகவத் சம்ச்லேஷ பலன் –
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா-அதிசயித்த போக்யனான கிருஷ்ணனை விட்டு –பிராண தாரணம் பண்ண மாட்டாத
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்-ஆபரணங்கள் -அவன் வரும் பொழுது வேண்டுமே -பூசல் நோய் கூப்பீடு –
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி-அகன்று இருப்பதால் -பிரிந்து விடுவோமோ என்ற நோயால்
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்-அழகிய திவ்ய தேசம்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த-பிரளய ஆபத்தில் -வைத்து ரக்ஷித்தவன்
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு-இந்த திருவாய் மொழியை சுவீகரித்துக் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்-ப்ரீதியால் கூப்பிட்டு -அனுபவ சாபல்யம் கொண்டு
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே-திரு மாலை சொன்ன –அப்படிப் பட்ட -கோபிகா ஸ்த்ரீகள் கோகுலத்தில் நின்று
மாநசமாக ஆழ்வார் அங்கே சென்று அருளிச் செய்ய -வ்யாமோஹனை அடைந்து -அனுபவிப்பார் –
கோபிமார் தனித்த தனியே -திரளாகவும் கூப்பிட்ட பாசுரங்கள் –மாலையும் இருக்கும் மாயனும் இருப்பான் -கைங்கர்யமும் கிட்டும்

நிகமத்தில்
அவன் பக்கல் ஆசை உடையார்-இத் திருவாய் மொழியைச் சொல்லி-அவனைப் பெருங்கோள் என்கிறார்

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் -மாலைப் பூசல்
அவனைப் பிரிந்து-தங்களுடைய உயிர் களைக் கொண்டு-தரிக்க மாட்டாதே
அவனுடைய வரவுக்கு உறுப்பாக ஒப்பிக்கப் பட்ட ஆபரணங்களை உடைய-ஆயர் பெண்கள் –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து -நாச்சியார் திருமொழி -என்கிறபடியே-
திரு ஆய்ப்பாடியிலே ஐந்து லஷம் குடியில் பெண்கள்-அவன் வரவுக்கு உடலாக தங்களை அலங்கரித்து இருக்க
வரும் காலத்தில் அவன் வரவு காணாமையாலே-கிருஷ்ணனைப் பிரிந்த விரகத்தாலே-ஒரு மாலைப் பொழுதில் கூப்பிட்ட கூப்பீடு ஆயிற்று –
சடகோபனுக்கு விசேஷணம் -ஆய்ச்சிகளுக்கும் –

அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன் –
அவர்கள் எல்லாரும் பட்ட துன்பத்தை இவர் ஒருவரும் பட்டார் -என்கை-

அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த –
பிரளய காலத்தில் பாதுகாத்து-அழிந்தவற்றை அடைய உண்டாக்கின
சர்வேஸ்வரன் திருவடிகளிலே ஆயிற்று சொல்லிற்று –

தொண்டீர்-அணி குருகூர் சடகோபன் மாறன்-அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள்
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி-அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா-அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்
சொன்ன இப்பத்தும் கொண்டு-அம்மாலை நண்ணித் தொழுது-அவனியுள் அலற்றி உய்ம்மின் -என்று கூட்டுக –

இப்போது இது சொல்லிற்று-விரகப் பிரளயத்தின் நின்றும்-தம்மை எடுக்க வேண்டும் -என்கைக்காக

ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின்
தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே –
அப்படிப் பட்ட காதலை விளைக்க வல்லவனைக் கிட்டி-அவனைத் தொழுது-
அவன் பக்கல் ஆசை உடையார்-பூமியிலே நின்று அடைவு கெடக் கூப்பிட்டு
உய்ந்து போகப் பாருங்கோள் –அகாராம் ஈஸ்வர விசேஷணம் -அம்மாளை -ஆலோ ஆலோ என்று கதற வைத்த வியாமோஹன்
இப்பாசுரத்தை கற்பார்க்கு என்னைப் போன்று கூப்பிட வேண்டா –
என் சொல்லி உய்வன் -என்று-ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண் அழிவு இல்லை –

———————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸூ பிராப்தி காலம் அவிபாவயதி
இந்திரேஸ் ரமேஸ்-கிருஷ்னே
கவாம்
சாயம்விசமாகமம் விளம்பிநீ
ஸ்ப்ருதே சடாரி

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பத்மாக்ஷத்வாத்
ஜகத் அவதரணத்தயா
பவ்யாத்யை
சார க்ராஹ்யத்வாத்
வேணு நாதையைகி கிருஷி ஜனதயா
அஜாதேயே ஸ்வாங்கத்வாத்
ஸ்யாமளத்வாத்
கவ்விய சோரத்வாத்
வசன அவலோகநா-சரஸசேஷ்டத்வ பூம்னா

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 89-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என் தன மால் ———–89-

மல்லடிமை – பூர்ண அனுபவம் –
மால் -மருட்சி அஞ்ஞானம் –
தொல் நலம் -ஸ்வாபாவக பக்தி – சஹஜ பக்தி –

——————————————————————————

அவதாரிகை –

இதில்
ஒரு சந்தையில் யுண்டான
ஆழ்வார் அபிசந்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
அறுக்கும் வினையில் பெரிய த்வரையோடே மநோ ரதித்தவர்
த்வர அனுகுணமாக பிராப்ய பூமியிலே புக்கு
அவனை அனுபவிக்கப் பெறுவதற்கு முன்னே
தத் ப்ராப்தி ஸூசகமான அடையாளங்களைக் கண்டு
நோவு பட்டுச்
செல்லுகிறபடியை
பகல் எல்லாம் பசுமேய்க்கப் போன கிருஷ்ணன்
மீண்டு வருவதற்கு முன்னே
அவன் வரவுக்கு அடையாளமான
மல்லிகை கமழ் தென்றல் முதலான வஸ்துக்களைக் கண்டு
திரு ஆய்ப்பாடியில் இடைப் பெண்கள்
அந்த கிருஷ்ண விரஹத்தாலே
சந்த்யா சமயத்திலே நோவு பட்டுச் செல்லுகிற துறை மேலே
வைத்து அருளிச் செய்கிற மல்லிகை கமழ் தென்றலில் அர்த்தத்தை
மல்லடிமை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

———————————————————————————

வியாக்யானம்–

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க –
மல்லடிமை -சம்ருத்தமான அடிமை –பரிபூரணமான கைங்கர்யம் –
அது செய்யும் காலம் எப்போதோ என்று
சர்வேஸ்வரனை கேட்க –
நாளேல் அறியேன் -எனக்கு உள்ளன -என்று கேட்க –

அவன் சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் –
அவன்
மாலை நண்ணியிலே
மரணமானால் -என்று நாள் அறுதி இட்டு அருளிச் செய்யும்
அத்தனையும் பற்றாத
ஸ்வா பாவிகமான பக்தியாலே —

செல்கின்ற ஆற்றாமை பேசி யலமந்த மாறன் –
தமக்கு நடந்து செல்லுகிற
தரியாமையை அருளிச் செய்து
அலமாப்பை அடைந்த ஆழ்வார் –
அதாவது –
மல்லிகை கமழ் தென்றல் -என்றும்
புலம்புறு மணி தென்றல் -என்றும்
தாமரைக் கண்ணும் கனி வாயும் -என்றும்
வாடை தண் வாடை -என்றும்
ஆ புகு மாலை -என்றும்
அவனுடை அருள் பெரும் போது அரிதால் -என்றும்
ஆர் உயிர் அளவன்றி கூர் த வாடை -என்றும்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை -என்றும்
ஊதும் அத்தீம் குழற்கே உய்யேன் நான் -என்றும்
மாலையும் வந்தது மாயன் வாரான் -என்றும்
இவை அடியாக
பாதக பதார்த்தங்களாய் உள்ள எல்லா வற்றாலும் நொந்து
பிராட்டி
ஸூகரீவ தர்சன அநந்தரம்
மாருதி தர்சநாத் பூர்வம்
மத்யே ராவண ப்ரேரிரதான-ராஷசீ வசம் ஆபந்னையாய்
ஜீவிதத்தில் நசை ஆற்றாப் போலே
யாமுடைய ஆர் உயிர் காக்கும் ஆறு என் -என்கிறார்-
அதாவது –
புகலிடம் அறிகிலம் தமியமாலோ -என்றும்
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் -என்றும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ -என்றும்
ஆவியின் பரமல்ல வகைகளாலோ -என்றும்
யாமுடைய ஆர் உயிர் காக்கும் ஆறு என் -என்றும்
எவம் இனிப் புகுமிடம் எவம் செய்கேனோ -என்றும்
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னை மீர்காள் ஆர் உயிர் அளவன்றிக் கூர் தண் வாடை -என்றும் –
ஆய்ச்சியற்கே ஊதும் அத தீம் குழற்கே உய்யேன் நான் -என்றும்
யாதும் ஒன்றும் அறிகிலம் வம்ம -என்றும்
என் சொல்லி உய்கேன் இங்கு அவனை விட்டு -என்றும் –
அவனை விட்டு உயிர் ஆற்ற கில்லா -என்றும்
இப்படி ஆற்றாமையை அருளிச் செய்து
முன்னாடி தோற்றாமல்
அலமந்து
நிலம் துழாவின ஆழ்வார் -என்கை-

இப்படியான
மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன மால் –
அதாவது
அவனி யுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள்
இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்மின் தொண்டீர் –என்று
உபக்ரமித்த ஆழ்வார் அருள் –
அஞ்ஞானத்துக்கு பிரதிபடமாக
என்னுடைய அஞ்ஞானம் நிவ்ருத்தமாகும் –
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்னக் கடவது இறே –
ஆ புகு மாலைக்கு அவனுடை அருள் பெறும் போது அரிதாயிற்று –
இங்கு
என் தன மால் மாறன் அருள் மாற்றாகப் போகும் -என்று நிச்சிதம் ஆயிற்று –

————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: