பகவத் விஷயம் காலஷேபம் -177- திருவாய்மொழி – -9-8-1….9-8-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

அறுக்கும் வினை -பிரவேசம் –

திருவடி சென்று பிராட்டியைத் திருவடி தொழுது-மீண்ட பின்னர் பெருமாளை அடைவதற்கு முன்பு பிராட்டிக்கு பிறந்த
எண்ணங்கள் போலே
த்வம் சமேஷ்யசி ராமேண சசாங்கேந இவ ரோஹிணீ-ஷிப்ரம் ச தேவி சோகச்ய பராம் யாச்யசி மைதிலி -சுந்தர -39-45-
சந்த்ரனோடு ரோஹிணி சேர்வதைப் போலே நீ ராமபிரானோடு சேர்வாய்
அதி விரைவில் சோகத்தின் உடைய முடிவை அடைவாய் –
திருவடி வார்த்தையை எப்பொழுதும் எண்ணிக் கொண்டே இருந்த சீதைப் பிராட்டி போலே
மேல் திருவாய் மொழியில் விட்ட தூதுவர்கள்
அத்தலைப் பட்டு அவனைக் கொண்டு வருவதற்கு முன்பே-நடுவில் இவர்க்குப் பிறந்த
எண்ணங்களைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் –

இப்படி தம்முடைய துயரத்தை அறிவிக்கச் செய்தேயும்-அப்போதே வரக் காணாமையாலே துயர் உற்றவர்
தூது விடுகையாலும்
அவன் குணங்களை அனுசந்திப்பதாலும்
மனத்தின் தெளிவினாலும்
அவன் வந்து நம்மை அங்கீ கரித்து-அமர்ந்த நிலமான திரு நாவாயிலே கொடு போகை நிச்சயம்
என்று அறுதி இட்டு-
க்ரமத்தில் போக பற்றாமையாலே பதறி-அங்கே புக வல்லேனே-புகும் நாள் என்றோ
அங்கே புக்கு என் கண்ணாரக் கண்டு அடிமை செய்ய வல்லேனே-குறுக்கும் வகை உண்டு கொலோ –
என்று இப்படி பல வகையான எண்ணங்களை எண்ணுகிறார் –

உபாயமும் உபேயமும் இரண்டும் ஈஸ்வரனே -என்று அறுதி-இட்டார்க்கு
பிராப்யத்திலே ருசி கண் அழிவு அற்றால்-
விளம்பத்துக்கு காரணம் இல்லாமையால் –பேறு சித்திக்கும் அளவும் எண்ணம் செல்லா நிற்கும் அன்றோ-

இவ் எண்ணம் தான் இவனுக்கு தவிரதாதுமாய்-அது தான் இனியதுமாய்-
இவனுடைய ஸ்வரூபத்தோடு சேர்ந்து இருப்பதுமான-ஓன்று அன்றோ –
பெரிய முதலியார் -ஆளவந்தார் –பேற்றினை பெறுவதில் உள்ள விரைவாலே-
எப்பொழுதும் இத் திருவாய் மொழியினைச் சொல்லிக் கொண்டே இருப்பார் –ஆளவந்தார் மிகவும் உகந்த திருவாய்மொழி –
ஆகையால் இத் திருவாய்மொழி யினை-பெரிய முதலியார் திருமொழி -என்று ஆயிற்றுச் சொல்லுவது –
அன்றிக்கே
விட்ட தூதுவர்கள் தாழ்ந்தார்கள் என்று-தாமே அவன் எழுந்து அருளிய தேசத்துக்கு
ஏறப் போக ஒருப்படுகிறார் –என்பாரும் உளர் –

மூன்று அடுத்து அடுத்து வரும் திருவாய் மொழிகள் மலையாள திவ்ய தேசங்களுக்கு –
தாயாருக்கு தனி சந்நிதி -திரு நாவாய் முகுந்தன் -ஸ்ரீ விஷ்ணு போதம் –
வைகுந்தன் என்னும் தோனி பெறாமல் உழல்கின்றேன் -விபு -இவன் -அதனால் -இந்த தோனி -இக்கரைக்கு அக்கரைக்குமாக விபுவாக –
லீலா விபூதியில் இருந்து நித்ய விபூதி வரை பரந்து இருக்க – -நாமே -அனுபவித்து -விஷ்ணு போதம் -நாவாய் நாராயணன் -நாவாய் முகுந்தன்-
நவ யோகி ஸ்தலம் -எட்டு பேர் முத்தி ஒன்பதாவது யோகி வேண்டி சேவை நவ யோகி மருவி நாவாய்
திருவடி சேவை இல்லை -கால் வாசி உள்ளே -வற்கலை திருக்கையால் ஆசமனம்
இங்கு வேத விமானம் செங்கமல சரஸ் -பாரத புழா நதிக் கரையில்
பிண்ட பிரதானம் செய்வது இங்கே பிரசித்தம் -கடத்த -துன்பக் கடன் பித்ரு கடன் தீர்க்கவும் இந்த ஸ்தலம்
மு மோக்ஷம் கு பூமி த ததாதி முகுந்தன் –
-பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு ஸம்ஸயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-

——————————————————————————————

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

ஆஸ்ரித அனுபவ விரோதி நிரசன நிரதிசய போக்யம் -குறுகும் வகை உண்டோ -நாம் கிட்டுவோமோ-
அந்நலம் உடை ஒருவனை நணுகினம் நாமே -பரதன் பரத்வாஜர் ஆஸ்ரமம் -அடையாளம் கண்டு உகந்தால் போலே
அலகாபாத் நதிக்கரையில் திரிவேணி சங்கமம் அருகில் –
நாளேல் அறியேன் என்பார் -14 ஆண்டு பார்த்தனுக்கு – கோபிகளுக்கு பகல் பொழுது குறித்தால் போலே
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை-அனுபவ விரோதிகள் வினை -அநிஷ்ட நிவ்ருத்தி -ஸமஸ்த விரோதிகளை போக்கி
அவித்யாதி விரோதிகள் -ஜென்மம் சரீரம் உட்பட – -நிரதிசய போக்யனான சர்வேஸ்வரன்
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-ஒருமைப் பட்ட மநோ ரதம் உடையவர்க்கு -விருப்பமே போதும் –
உள்ளத்தில் விட்டுப் பிரியாமல் உள்ளான் -உடன் இருந்து அறிவான் –
உள்ளத்தே உறையும் மால் -ஸர்வஸ்ய -பரம யோகிகள் மட்டும் இல்லை -யார் உள்ளத்தே விசேஷணம் இல்லையே –
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா -இருப்பதை அறியாமல் – வெள்கிப் போய் -விலவறச் சிரித்திட்டேனே –
நினைக்க சிந்தை வேணுமே -உளன் கண்டாய் -உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல் நெஞ்சே –
யந்த்ரா ரூடானே மாயையா -பிரகிருதி கார்யமான சரீரத்தில் -உத்தமன் என்று உளன் கண்டாய் -கர்மாதீனமாக அன்றோ இது
-அட்டிகை பண்ண காய்ச்சி வெட்டி பண்ண வேணுமே –
சரணாகதி பண்ண வைத்து -திருவடிக்கு கீழ் அமர்த்திக் கொள்ளுகிறான் –
மூன்று திருவந்தாதி -இங்கும் தொண்டர் அடிப் பொடி -இந்த கருத்தை –
உள்ளத்தே இருப்பதை நினைக்கும் உள்ளம் வேண்டும் என்பதை வற்புறுத்தி அருளிச் செய்கிறார்கள் –
கங்கைக்குள் இருக்கும் மீன் -இருக்கும் ஞானம் வேண்டுமே
மனு -கங்கை -ஸ்ரீ பாத தீர்த்தம் -நம்பிக்கை இல்லாதவர் தீர்த்தம் ஆட வேண்டாம் -நம்பிக்கை உள்ளாறும் தீர்த்தம் ஆட வேண்டாம் -குரு ஷேத்ரமும் இப்படியே
தனக்கு அடிமை பட்டது தான் அறியே னே லும் மனத்தடைய வைப்பதாம் மால் —
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-போக்யம்-இஷ்ட பிராப்தி -சிரமஹரமான சோலைகள் உடைய –
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே–குறுக்கும் -பிறந்த வீட்டு பாஷை மறக்காமல் அருளிச் செய்கிறார்
அமரர் கோன் அர்ச்சிக்கின்று -மலையாள வாசனை –
அனுபவ அபி நிவேசத்துக்கு தக்க பெறாத -குறுகும் வழி உண்டோ –

திரு நாவாயைக் குறுகைக்கு-எனக்கு உபாயம் உண்டோ-என்கிறார்-

அறுக்கும் வினையாயின –
வினையாயின -அறுக்கும் –
வினை என்ற பேர் பெற்றன அனைத்தையும் போக்கும் -என்றது
ஏழை அழிக்க -ஏழு பேர் பெற்றாலே -குல பர்வதங்கள் போல்வன அஞ்சிற்றே –
ருசி விரோதி -பிரயோஜநாந்தரம் -தேவதாந்தரம் போன்றவை-உபாய விரோதி -உபாயாந்தரங்கள்
பேற்றினைப் பெரும் இடத்தில் வரும் விரோதிகள் -அவித்யா கர்ம வாஸநா ருசிகள் -பாகவத அபசாரம் -சுயம் போக்யத்வ பேறு போல்வன
இந்த சரீரத்தோடு முடியும் அளவு அன்றிக்கே-அனுபவிக்கப் படுமவற்றின் எஞ்சியவைகளாய் நின்று-
அவ்வருகே போம்படி விளம்பிக்க கடவனாய்-இருப்பவன வற்றைத் தெரிவித்த படி –
நின்ற நின்ற நிலைகள் தோறும் உண்டாய் இருக்குமன்றோ விரோதிகள் –
புதுப் புடவை அழுக்கு கழற்றுமா போலே-கிரமத்தாலே போக்க வேண்டுவது தான்-போக்கும் அன்றே அன்றோ –
பகவானுடைய திரு அருளாலே போம் அன்று ஒரு காலே போம் –
மேரு மந்தா மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண-கேசவம் வைத்திய மாசாத்ய துர்வியாதி இவ நச்யதி – விஷ்ணு தர்மம் -அத் -78-
பாப கர்மங்களின் கூட்டம் மேரு மலை மந்திர மலை இவைகளைப் போன்று-
உயர்ந்து இருந்தாலும் -வைத்தியனைக் கிட்டிக் கெட்ட வியாதிகள் நாசம் அடைவது போன்று
கேசவனை கிட்டி அவைகள் நாசத்தை அடைகின்றன -என்றும் –
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான பிர தூயந்தே -சாந்தோக்யம் -5-24-
எல்லா பாபங்களும் நாசத்தை அடைகின்றன என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ-அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-
சர்வ பாபேப்யோ -பிரபன்னனுக்கு -சர்வ -மோக்ஷ விரோதி பாபங்கள் –
பக்தி நிஷ்டனுக்கு அங்க பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதி பாபங்கள் –
எல்லா பாபங்களில் நின்றும் உன்னை விடுவிக்கின்றேன்-என்றும்-கூறப் படுகின்றன படியே ஆகக் கடவன அன்றோ –
பிராமணனைக் கொன்ற பாபத்துக்கு பிராயச் சித்தம் செய்தால்-
பசுவைக் கொன்ற பாபத்துக்கு தனித்து பிராயச்சித்தம் செய்ய வேண்டி வரும் அன்றோ –
அங்கனம் வேண்டா அன்றோ பகவானுடைய திருவருள் கொண்டு கார்யம் கொள்ளும் இடத்தில் –

யாருக்குத் தான் இப்படி செய்வது என் என்னில்
ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு –
மனத்திலே அவனை நிறுத்த வேண்டும் என்னும் உறுதியிலே-ஒருமைப் பட்ட-எண்ணத்தை உடையார்க்கு –
நான்கு விசேஷணங்கள்-
மநோ ரதம் மட்டுமே -தத் அபி சந்தி விரோதமாத்ராத் -ஒருமைப்பாட்டை -அத்யாவசியம் -இருதயத்தில் நிறுத்த –

வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் –
பாபங்களைப் போக்காமல்-அவற்றை விருத்தி செய்தாலும்-விட ஒண்ணாத படி ஆயிற்று தேசம் இருப்பது –
வாசனையை உடைய தாய்-சிரமத்தை போக்க கூடியதாய்-மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப் பட்ட-திரு நாவாய் –
கஜேந்திரன் பூ பறிக்க -நாச்சியார் முன்பே பறிக்க –
இடது கையால் அபய பிரதானம் -இரண்டு கையால் அனுக்ரஹித்தால் நித்ய விபூதி ஆகுமே -அதனால் வலது திருக்கை
திருவடி காட்ட -கஜேந்த்ரனுக்கு வீட்டுக் கொடுத்த -ஸ்தல புராணம் -பிராட்டி /ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் / நவ யோகிகளுக்கும் பிரத்யக்ஷம் –

குறுக்கும் வகை உண்டு கொலோ –
குறுகச் செய்யும் வகை ஏதோ –
அன்றிக்கே –
குறுகும் விரகு ஏதோ -என்னுதல் –குறுக்கு -எனபது மலையாள நாட்டு வழக்கு –
எம்பெருமானார் திருவடி தொழ எழுந்து அருளா நிற்க –
திரு நாவாய் எத்தனை இடம்போரும் -என்று-எதிரே வருகிறார் சிலரை கேட்டருள-குறுக்கும் -என்றார்களாக-அதனைக் கேட்டு
இத்திசைச் சொல்லாலே அருளிச் செய்வதே ஆழ்வார் -என்று-மிகவும் ஈடுபட்டு அருளினார் –

கொடியேற்கே –
கொடியேனுக்கு –
ஆசை சிறிது உடையாருக்கும் அடையக் கூடிய தேசமாக இருக்க-ஆசையும் கண்ணழிவு அற்று இருக்க-
புகப் பெறாதே நோவு படுகைக்கு அடியான பாபத்தைச் செய்த எனக்கு –

அவனை -ஆகத்து நிறுத்தும் மனத்து ஒன்றிய-சிந்தையினாருக்கு வினையாயின அறுக்கும் –
வெறி தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-கொடியேற்குக் குறுக்கும் வகை உண்டு கொலோ -என்று அந்வயம்-

——————————————————————————————-

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–

மஹிஷியாதி போக்யத்தை உடையவன் -வார்த்தைக்கும் திரு நாவாய்
கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்-போக்யமான ஸ்ரீ தேவிக்கு ஸ்வாமி
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்-ஒளி கூர்மை பெரிய கண்கள் –போக்தாவாய் -வடி -மா வடுவாய் பிளவு போலேயும்-என்றுமாம் –
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்-அப்பரியந்தம்-பாக்யத்தை உடையவன்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ-அனன்யா போக்யனான நான் என்று அணுகுவேன் –

திரு நாவாயிலே புகும் நாள் என்றோ-என்கிறார்

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்-
கொடி போலே அழகியதான இடையை உடையவளாய்-மலரில் மணமே முதல் காரணமாகப் பிறந்த
பெரிய பிராட்டிக்கு கணவன் ஆனவன் –பரிமளம் உபாதானம் —
யார் குற்றம் செய்யாதார் -என்பாரும் அருகே இருக்க இழக்கவோ -என்கிறார்
ந கச்சின் ந அபராத –

வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன் –
கூரிய வேல் போன்று-ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேராய் -நோக்காலே அகப்படுத்தி கொள்பவள் –
அனுபவிக்கின்ற்றவன் அளவு அல்லாத இனிமையை உடைய-கண்களை உடையவளாய்
ஆத்தும குணங்கள் நிறைந்தவளுமான
நப்பின்னை பிராட்டி உடைய செவ்வி நுகர்வதற்கு இட்டுப் பிறந்தவன் ஆயிற்று –

நெடியான்-
இப்படிப் பட்ட தேவிமார் முதலிய பரிகரங்களால்-எல்லை காண ஒண்ணாதவன் –

உறை சோலைகள் சூழ் திருநாவாய் –
அவனுக்கும் அவனுலகில் உள்ள மக்கட்கும் குறைவு அற-வசிக்கலாம்படி
இடத்தினை உடைய சோலைகளாலே சூழப் பட்ட திரு நாவாயை –

அடியேன் –
பவாமஸ்து சஹ வைதேஹயா கிரிசாநுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ஸ தே-அயோத்யா -31-25-
வனவாசத்துக்குப் புறப்பட்டுப் பெருமாளும் பிராட்டியுமாக கலக்கும் இடத்தில்
பவாமஸ்து -ஸ்லோகத்தில் கூறியபடியே
எல்லா அடிமைகளும் செய்ய இளைய பெருமாள் நேர் பட்டால் போலே ஆயிற்று
இங்குத்தைக்கு அடிமை செய்கைக்கு இவர் நேர்பட்ட படியும் –
இளைய பெருமாளைப் போலே அடிமை செய்வித்துக் கொள்ளுகிற விஷயத்தில் குறை இல்லை யாயிற்று இவருக்கு-
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஒருத்தியுமே அன்றோ அங்கு
இங்கு அதை விட ஏற்றம் உண்டே –

அணுகப் பெரும் நாள் எவை கொலோ –
அத் தேசத்தை நான் கிட்டப் பெரும் நாள் எவையோ –

————————————————————————————

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

அசாதாரண சம்பந்தம் -நாராயணன் -வர்த்திக்கும் ஓலக்கத்தில்
எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்-கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்-பிரயோஜ நான்தர மனம் இல்லாமல்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்-குற்றம் அற்ற -சோபாதிக பாந்தவ்யம் இல்லையே -துர்லபத்வ குற்றம் இல்லாமல்
-சுலபன்-திரு நாரணன் – -நிருபாதிக பந்து
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே-ராஜ்ய சபைக்குள் -போவது என்றோ -பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணைப் பள்ளியான் –
பரந்து திரி தரினும் –மறந்தும் பிரித்து ஒன்று அறிய மாட்டா -என் ஒரு நா வாய் -நாவோ வாயோ பாடாது -பிள்ளை பெருமாள் ஐயங்கார்

திரு நாவாயிலே-திரு ஓலக்கத்திலே புகும் நாள் என்று-என்று அறிகின்றிலேன் –என்கிறார் –

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று –-
நான் வந்து கிட்டப் பெரும் நாள் எவை என்று-

எப்போதும் –
ஒருகால் இதனைச் சொல்லி அல்லாத போது வேறு ஒன்றிலே நோக்காக இருக்கிறேனோ-

கவை யில் மனம் இன்றி –
அது தன்னிலும்-இதுவும் வேறு விஷயமாக செல்லுகிறதோ -என்றது-இரு தலைத்த நெஞ்சு இன்றிக்கே -என்றபடி
ஏகாக்ர சித்தனாய்க் கொண்டு-கவை -கார்யம் -வேறு விஷயம் –

கண்ணீர்கள் கலுழ்வன் –
கண்ணீர்கள் வெள்ளம் இட இருப்பன் –கலங்குதல் அழுவது –

நவை இல் திரு நாரணன்-சேர்
பற்றுதற்கு அரியனாய் இருக்கை முதலான-குற்றம் இன்றிக்கே-ஸ்ரீ மானான நாராயணன் -என்றது –
எளிமைக்கு ஊற்றான பிராட்டியோடு கூடத்-திரு நாவாயிலே வந்து-சுலபனானவன் -என்றபடி –

திருநாவாய் அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே –
திரு நாவாயிலே பேர் ஒலக்கமாய் இருக்க-
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று ஆசைப் பட்ட நான்
அத்திரளிலே சென்று கூடப் பெரும் நாள் என்று-என்று அறிகிலேன் –
பரதன் உடன் இல்லாத பொழுது இளைய பெருமாள் உடன் இருந்தும்
அவருடனும் எப்பொழுது சேர்வேன் என்று பெருமாள் அருளிச் செய்தாய் போலே –

—————————————————————————————–

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

நித்ய கைங்கர்யத்தில் அந்தவிதமாக புகுந்த நான் உபயுக்தமான நாள் என்றோ
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்-மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்-நித்ய சூரிகள் போலே இடைவிடாமல்
-விச்சேத ரோஹித நிரந்தர கைங்கர்யம் செய்ய அந்வயித்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா
-பெரிய நீண்ட திருக் கண்கள் -ஆத்ம குணம் பூரணமான நிரதிசய போக்தா

ஆத்துமா உள்ளவரையிலும்-செய்ய வேண்டிய அடிமையைச் செய்யும்படி -மீளா அடிமைப் பணி செய்ய-
உன்னால் ஏற்றுக் கொள்ளப் பட்ட நான்
நப்பின்னை பிராட்டியோடு கூடி இருக்கிற இருப்பிலே-அடிமை செய்யப் பெரும் நாள் என்று-
என்று அறிகிலேன்-என்கிறார்-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன –
எனக்கு உள்ளன நாளேல் அறியேன் –
பெறக் கூடிய நாள் என்று -என்று அறிகிலேன்
அன்றிக்கே
நான் பிரிந்து இருக்க வேண்டிய நாள் எத்தனை உண்டு-என்று அறிகின்றிலேன் -என்னுதல் –
நன்று-பேறு நிச்சயமான பின்பு பதறுகிறது என் -என்னில்

நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் –
நித்ய சூரிகள் செய்யும்-உயிர் உள்ள வரையிலும் செய்யப் படும் அடிமையிலே
அன்றோ நானும் அதிகரித்தது
ஒரு பிரயோஜனத்தைக் கொள்ளக் கிட்டினவனாய்-ஆறி இருக்கிறேனோ
அடிமைப் பணியினுடைய வாசனையின் இனிமை-அறியாதவனாய் ஆறி இருக்கிறேனோ –

நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் –
ஓங்கிப் பரப்பு மாறப் பூத்த-சோலைகளை உடைத்தான தேசம் -என்றது
அடிமை செய்கைக்கு பூக்கள் முதலான சாதனங்கள்-குறைவற்ற தேசம் -என்றபடி –
அன்றிக்கே –
நப்பின்னை பிராட்டியும் தானுமாக மலர்களைப் பறித்து குவிக்கலாம் தேசம் -என்பதனைத் தெரிவித்தபடி -என்னுதல்-
பிராட்டியும் கஜேந்திர ஆழ்வான் போலே தாமும் சேர்த்துக் கொள்கிறார் –

வாளேய் தடம் கண் –
ஒளியை உடைத்தான-பரந்த கண் -என்னுதல்
வாள் போன்று கண்டாரை அழிக்க வல்ல கண் என்னுதல் -என்றது
அவனைத்தனக்கு உரியவன் ஆக்க வல்ல-கண் அழகை உடையவள் -என்றபடி –

மடப்பின்னை மணாளா –
அழகே அன்றிக்கே-ஆத்தும குணங்களாலும் துவக்க வல்லவளுக்கு-கணவன் ஆனவனே-
வேறு தேசத்துக்கு சென்று இருந்த குழந்தை ஊர்-அணித்தவாறே-
தாய்மாரை பலகால் நினைக்குமாறு போன்று-அடையத் தக்க தெளி விசும்பு அணித்தானவாறே-
திரளவும் தனித் தனியும் பிராட்டிமாரை-அனுசந்திக்கிறார் பாட்டு தோறும் –

———————————————————————————————

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

பத்னி – பரிஜன -ஸ்தாநாதி– பரிபூர்ணன் -கண்டு அனுபவிப்பது என்றோ –
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்-பத்ம வாஸினி -ஸ்ரீ பூமி பிராட்டிக்கும் போக்தா
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்–பிராணி -ஜங்கமம் -மனுஷ்யர் -தேவதைகள் எல்லாருக்கும் -ரக்ஷகன் -நிர்வாகக்கண் தலைவன்
விண்ணாளன் -பர வ்யோமம் ஸ்ரீ வைகுண்டம் -அங்கு உள்ளாரையும் தனக்கு ஆக்கி கைங்கர்யம் கொள்ளும்
விரும்பி உறையும் திருநாவாய்-உபய விபூதியும் ஸ்தானம் -அர்ச்சாவதாரம் –
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே-நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு உருகி -நீர் மல்கி –
பரி பூர்ணமாக கண்டு நிரதிசய இடைவிடாமல் அனுபவிப்பது என்றோ -கண்ணுக்கு விடாய் -தீரும் படி

திருநாவாயை கண்ணின் விடாய் தீரக் கண்டு-அனுபவிப்பது என்று-என்கிறார்

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
பெரியபிராட்டியாருக்கும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாருக்கும்
கணவன் ஆனவன் –
இதனால்
புருஷகாரம் ஆவாரும்
பொறைக்கு உவாத்து ஆவாரும்-உபாத்தியாயர் –
உளராய் இருக்க இழக்க வேண்டுமோ -என்கிறார் –

கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் –
உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் -கண்ணாளன்
உலகத்தில் மனிதர்கள் என்ன
தேவர்கள் என்ன
எல்லார்க்கும் நிர்வாஹகன் ஆனவன்
இதனால் அவர்கள் உடைய படுக்கைப் பற்று -சீதனம் –நோக்குகிற படியைத் தெரிவித்த படி

விண்ணாளன் –
படுக்கை தான் இருக்கிறபடி -என்றது
பிராட்டிமாரும் தானும் -தனக்குத் தகுதியான பரமபதத்தில்-திவ்யமான கட்டிலிலே இருந்து
நித்ய சூரிகளை நிர்வஹிக்கிறவன் -என்கிறபடி –

விரும்பி உறையும் திருநாவாய் –
உபய விபூதி நாதன்-பெறாப் பேறாக விரும்பி வர்த்திக்கிற தேசம்-
அவன் விரும்புகிற தேசம் அல்லது அடையத் தக்க பேறு வேறு இல்லை அன்றோ –

கண்ணாரக் –
காண்கையிலே விடாய்ப் பட்ட கண் வயிறு நிறைய –

களிக்கின்றது இங்கு என்று கொல்-
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத –
நான் இனியன் -என்று ஒரு தேச விசேஷத்தே-களிக்கை ஒழிய-இங்கே களிக்கப் பெறுவது என்றோ –

கண்டே –
காண்பது நிச்சயம் -என்னும் நம்பிக்கையாலே-களிக்கை அன்றியே-கண்டே களிப்பது என்றோ

—————————————————————————–

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

ஆஸ்ரித சுலபன் -உன்னை என்று கண்டு களிப்பேன்-கோவலருக்கு கோ வாக இருப்பதே சுலபன் -என்றவாறு –
கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்-நிரந்தரமாக கண்டு களிப்பது என்றோ
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி–குறை குற்றம் கிறித்தரிமம் இல்லாமல் -உனக்கே -சபலனாகி விட்டேன்
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்-வண்டுகள் நிறைந்த மலர்கள் நிறைந்த சோலைகள்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே-சம்போதானம் -நேராக கூப்பிட்டுப் பேசுகிறார்
-இருப்பிடம் -என்று உள்ளத்திலே கொண்டு உறைகின்ற -உகந்து அருளினை திவ்ய தேசம் அன்றோ
-சுலபத்தை எனக்கும் கோவலருக்கும் காட்டி அருளி -என் கோ கோவலர் கோ –

ஊரை அன்றிக்கே-ஊரில் நின்று அருளின-உன்னைக் கண்டு களிப்பது என்றோ-என்கிறார்

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
இங்கு-கண்டே களிக்கின்றது என்று கொல் கண்கள்-
கரணங்கள் தனித்த தனியே விரும்பும் நிலை அன்றோ ஆழ்வாருக்கு –
நான் செய்த படி செய்ய-கண்களின் விடாய் கெடுவது என்றோ-ஒரு நாளில் காண்கை நிச்சயம்
ஆனபின்பு இந் நிர்பந்தத்துக்கு பலம் என் என்னில் –

தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி –
துரிசு இன்றி –உனக்குத் தொண்டே ஆய் ஒழிந்தேன் –
வேறு ஒன்றில் பற்று இல்லாமல்-உன் திருவடிகளில் மிக்க காதலன் ஆனேன் –அரைக் கணம் இழக்க மாட்டாதபடி அன்றோ என் ஆசை இருப்பது-
இங்கு -துரிசு -என்றது உலக விஷயங்களில் மனம் செல்லுதல் –

வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் –
வாசனையைப் போன்று-வண்டுகளும் படிந்து கிடக்கும் படி-மலர்ந்து இருக்கின்ற-சோலைகளை உடைத்தான தேசம் –
நச புன ஆவர்த்ததே -என்கிறபடியே
புக்காரை மீள ஒட்டாதபடி-எல்லை இல்லாத இனிமையை உடைய தேசம் –

கொண்டே உறைகின்ற –
நமக்கும் நம்மை உகந்தாருக்கும் நினைத்த படி செய்து-அனுபவிக்கலாம் தேசம் -என்று
திரு உள்ளத்திலே ஆதரித்துக் கொண்டு வசிக்கிற தேசம் ஆயிற்று –

எம் கோவலர் கோவே –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து-ஆயர்கட்கு சுலபன் ஆனால் போலே-திரு நாவாயிலே வந்து -எனக்கு சுலபன் ஆனவனே –

——————————————————————————————

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

சேஷித்வ ரக்ஷகத்வ பிராப்யத்வ -திரு மந்த்ரார்த்தம் -திருமாலே திரு -இருந்தும் அடியேன் இழப்பதே –
ஆகார பூர்த்தியை உடைய -ஆகார த்ரய சம்பந்தனாம் -அரவிந்த நிவாஸினி கூடி இருப்பதால் -வந்தே வரத வல்லபம் –
உறவை பார்த்து கிருபை பண்ணி அருள வேண்டும் -உறவை -நாரணன் -நாரா அயன சம்பந்தம் உண்டே ஆஸ்ரய உபாய உபேய சம்பந்தம் உண்டே
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்-சேஷித்வம் -அநந்யார்ஹத்வம் -சேஷி தம்பதி -சேஷி என்று துர் அபிமானம் கொண்ட மா வலி –
பூமியை அந்நிய சேஷத்வம் தவிர்த்து அநந்யார்ஹம் ஆக்கி கொண்டு அருளி –
தேவா சுரம் செற்றவனே திருமாலே-ரக்ஷகத்வம் -சேஷமான ஜகத்தை-தேவாசுர விபாகத்தால் வந்த ஆபத்தை போக்கி –
சாமான்ய அதி தேவதா -திருமாலே நடுவில் வைத்து -நிதானம் மூன்றுக்கும் –
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ-சப்தமே வைத்து பிராப்யத்வ -கைங்கர்யம் மிதுனத்தில்
நிரந்தர வாசம் -ஸமஸ்த குண விபூதி விசிஷ்டத்தால் வந்த நாராயணன் – பூர்ணன் -நாராயணத்தவத்தால் வந்த பூர்ணம் –
திருமாலே -அசாதாரண ஸ்ரீ யபதித்தவம் -மூன்று ஆகாரங்களுக்கும் நிதானம்
ஸ்ரீ மன் நாராயணத்வம் -காருண்ய ரூபை அவள் உடன் சேர்த்தியால் -காருண்யத்தை தூண்டி விடுவதால் காருண்ய ரூபை -நெருப்பு கிளருமா போலே
ஆவா அடியான் இவன் என்று அருளாயே-ஆஹா ஆஹா என்று ஆராய்ந்து -சேஷ பூதன் என்று -ஆகார த்ரய விசிஷ்ட சம்பந்தம் பார்த்து இரங்கி அருள வேணும்

அடியார்களுக்காக திரு நாவாயிலே நித்ய வாசம் செய்கிற தேவரீர்-வேறு ஒரு கதியும் இல்லாதவன் இவன் -என்று
என் பக்கலிலே கிருபை செய்து அருள வேண்டும் –என்கிறார் –
மதீயையா கிருபையா -கேவலம் கிருபையையா –அருளால் -மட்டுமே பெறுவோம் –

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் –
சர்வேஸ்வரன் இந்த்ரனை மூன்று உலகங்கட்கும்-அதிபதி யாக்கி வைத்தான் –
அவனைத் தள்ளி அந்த பதத்தைத் தானே ஏறிட்டுக் கொண்டு-நானே அரசு -என்று இருந்தான் ஆயிற்று
நீ கொடுக்க கொள்கை அன்றிக்கே-அவற்றை எல்லாம் தானே நியமிக்கிறவன்-என்று செருக்கு கொண்டு இருந்தான் ஆயிற்று
வெறும் புறத்திலே தன்னது அல்லாதத்தை தன்னது என்று-ஏறிட்டுக் கொண்டு இருக்கக் கூடிய-அவன் கையில் இவ் விஷயமும் கிடக்குமாகில்
நாடு குடி கிடவாது -என்று பார்த்தருளி-இந்த்ரனுடைய உலகத்தை அவன் பக்கலில் நின்றும் வாங்கினான் –
தான் போன்று என்று எழுந்தான் தரணி யாளன் -அது கண்டு -அரக்கர் தம் கோன் -அங்கும் ராவணண் அபிப்ராயத்தால் கோன்-

தேவா சுரம் செற்றவனே-
தேவாசுரர்கள் போரிலிலே அவர்கள் படுவது-இவர்கள் படுவதாய்-இங்கனே உருவச் செல்லப் புக்கவாறே-
அசுர சாதியை அழித்து-தேவ சாதிக்கு குடி இருப்பும் பண்ணிக் கொடுத்தான் ஆயிற்று –

திருமாலே –
அடியார்களை பாது காப்பதற்கும்
அவர்கள் விரோதிகளை அழிப்பதற்கும்
அடி திருமகள் கேள்வன் ஆகை-

நாவாய் உறைகின்ற –
இப்படிப் பாதுகாக்கும் இடத்தில்
அடுத்து அணித்தாக முகம் தோற்ற திரு நாவாயிலே
நித்ய வாசம் செய்கிற –

என் நாரண நம்பீ-
அடியார்களை பாதுகாப்பதே நோக்காக-எல்ல பொருள்களிலும் அந்தராமியாய் இருப்பவன்
அதற்கு உறுப்பாக அடியார்கள் இடத்தில்-அன்பு உள்ளவனாய்
அவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் என்றதனாலே-பரி பூரணன் ஆனவனே -என்பார் -நம்பீ -என்கிறார் –
பஹு வரீஹீ சமாசம் -அந்தர்யாமித்வம் -வாத்சல்யம் -ஸுலப்யம் இவற்றால் பூர்ணன்-

ஆவா அடியான் இவன் என்று அருளாயே –
சோஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதௌ ச்துதௌ நச-சாமர்த்யவான் க்ருபாமாத்ரா மநோ வ்ருத்தி ப்ரசீத மே-ஸ்ரீ விஷ்ணு பிராணம் -5-7-70
கிருபை ஒன்றையே மனத்தின் செயலாக கொண்டு-எனக்கு இரங்க வேண்டும் -என்கிறபடியே-
ஐயோ இவன் வேறு கதி ஒன்றும் இல்லாதவன்-இவனுக்கு வேறு புகல் இல்லை -என்று-என் பக்கலிலேகிருபை செய்து அருள வேண்டும்
அன்றிக்கே
அவன் அருளுகைக்கும்-இவன் அருள் கொள்கைக்கும்-சம்பந்தம் சொல்லுகிறது-அடியான் -என்ற சொல்லால் -என்னுதல் –

————————————————————————————-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

நீ அருளாது இருக்கவுமாம் -அருளுவாயாயாம் -கலக்கம் இல்லாத படி -தேவதாந்தர சம்பந்தம் -பாகவத அபசாரம் -ஞானம் கொடுத்து அருள வேண்டும்
உன்னை என் நெஞ்சில் வைத்து அந்த ஞானம் தந்து அருள வேண்டும் -சாமர்த்தியமான பேச்சு இது வந்தால் எல்லாம் வருமே –
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்-இவன் செய்த படி செய்கிறான் என்று கிருபை பண்ணாமல் -இருக்கவுமாம்
வேறு புகல் அற்ற என்னை -கிருபை பண்ணி
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-சத்தை அடைந்து உன் ஸ்ப்ருஹ ணீயமான திருவடிக் கீழ் வைக்கிலும்-
அருளாது இருந்தால் பலன் சொல்லாமல் -அருள் பெற்றால் -வஸ்து தாம் உபாயாதோஹம் –
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்-மயர்வு மருள் -அஞ்ஞானம் காந்தம் இல்லாத படி –
சர்வ பிரகார பரிபூர்ணன் போக்யன் -உன்னை -நாரண நம்பி -அத்யந்த அபி நிவிஷடனான என் நெஞ்சத்தில் வைத்து அனுபவிக்க -தந்து அருள வேணும் –
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே -தெருள் ஞானம் -கட்டளை பட்ட -அழகிய -தர்ச ணீயமான -பரம ப்ராப்ய பூதன் –

மேல் பாசுரத்திலே அருளாய் -என்றார்
அப்போதே விரும்பியதை பெறாமையாலே-அருளவுமாம்-தவிரவுமாம்
அறிவின்மை சிறிதும் இல்லாதபடி உன்னை-என் நெஞ்சிலே இருத்தும்படி-தெளிவைத் தர வேண்டும் –என்கிறார் –

அருளாது ஒழிவாய் –
என் பக்கல் திருவருள் செய்யாமல்-இவன் பட்டது படுகிறான் என்று இருக்கிலும் இரு

அருள் செய்து –
அன்றிக்கே-
எனக்கு வேறு கதி இன்மையைக் கண்டு-கிருபை செய்து –

அடியேனைப் பொருளாக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
அறிவில்லாத பொருளைப் போன்று இருக்கிற என்னை
அசந்நேவ ச பவதி அசத் ப்ரஹ்மேதி வேத சேத்-அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோவிது-தைத்ரியம்-என்கிறபடியே
ஒரு பொருள் ஆகும்படி செய்து-எல்லை இல்லாத இனிமையை உடைய-உன் திருவடிகளின் கீழே-வைத்துக் கொள்ளிலும் கொள்
பொருள் ஆனாரை வைத்துக் கொள்ளும் இடம்-உன் பொன்னடிக் கீழ் போலே காணும் –
பொருள் ஆனாரை -பொருளும் செல்வமும் –

மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்தெருளே தரு-
அடியில் மயர்வற மதி நலம் அருளின படியே-அறிவின்மை சிறிதும் இல்லாதபடி-
உன்னை என் மனத்தினில் எப்பொழுதும் வைத்துக் கொள்ளும் படி
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்கிற தெளிவினைத் தந்து அருள வேண்டும் –
தென் திரு நாவாய் என் தேவே -தெருளே தரு -என்று முடிக்க –
அன்றிக்கே
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு-தென் திரு நாவாய் என் தேவே-
அருளாது ஒழிவாய்-அருள் செய்து-அடியேனைப் பொருள் ஆக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
உன் திரு உள்ளம் ஆனபடி செய் -என்று பிள்ளான் பணிப்பர்-

—————————————————————————————————–

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-

அறிய அரிய சர்வாதிகன்-வர்த்திக்கும் -அத்யந்த அபி நிவிஷ்டம் உடைய நான் பெற வில்லை -இனி யார் பாக்யவான்களோ அவர்கள் பெறட்டும்
தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்-தம் பிரயத்னத்தால் காண முடியாதே -சர்வ காலத்திலும்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு முதல்வன் -சத்தாதி ஹிந்து பூதன் -அத்விதீயமான
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்-குணங்கள் உடைய அவன் உகந்து வர்த்திக்கும்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ-இனி யார் அடைவார் நானே இல்லையே -இந்த அபி நிவேச அதிசயத்தாலும் பெற வில்லையே –

இப்படி சொன்ன இடத்திலும்-ஒரு விசேஷ கடாஷம் செய்யாமையாலே
நான் இவ் வாசையோடு முடியா நின்றேன்
நான் விரும்பிய பொருளைப் பெற புகுகிற-மிக்க புண்ணியத்தை உடையவர்கள் யாரோ –என்கிறார்

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன் –
பிரமன் முதலான தேவர்கட்கும்-சனகன் முதலான முனிவர்கட்கும்
தங்கள் முயற்சியாலே என்றும் ஒக்க காண அரியனாய் உள்ளவன் –

மூவர் முதல்வன் –
பிரமன் சிவன் இவர்களுக்கு நடுவே வந்து அவதரித்து
இவர்களுக்கு நிர்வாஹகன் ஆனவன் –
அன்றிக்கே
பிரமன் சிவன் இந்திரன் என்னும் இவர்களுக்கு நிர்வாஹகன் -என்னுதல் –

ஒரு மூ உலகு ஆளி-
இந்த்ரன் மூலமாக நின்று-மூன்று உலகங்களையும் காக்கும் படியைச் சொல்லுதல்
அன்றிக்கே
கீழும் மேலும் நடுவுமான எலா உலகங்கட்கும்-ஒப்பற்ற நாயகன் -என்னுதல்-

தேவன்
எல்லாருக்கும் வேறு பட்டவன் -ஒளியைப் பரப்புகிறவன்

விரும்பி உறையும் திரு நாவாய் –
இப்படி எல்லா பொருட்கட்கும் நிர்வாஹகன் ஆனவன்
தனக்கு என ஒரு குடி இருப்பு இல்லாதவன்
ஒருவன் குடி இருப்பு பெற்றால் போலே-அடியார்களைப் பாது காப்பதற்கு பாங்கான தேசம்
என்று மிகவும் விரும்பி வர்த்திக்கிற தேசத்தை –
யாவர் அணுகப் பெறுவார் இனி –
நான் முடியப் புகா நின்றேன்
இனி பெற இருக்கிறவர் யாரோ-அவர்கள் மனிதர்கள் அல்லர் -என்கிறபடியே
நதே மனுஷ்யா தேவா தே எ சாரு சுப குண்டலம்-முகம் த்ரஷ்யந்தி ராமஸ்ய வர்ஷே பஞ்ச தசே புன -அயோத்யா-64-69- தசரதன் புலம்பல் –
மனிதர்களுக்கு கூட்டு அல்லர் –
இனி -என்ற சொல்-நான் முடிந்தேன் என்பதனைக் காட்டுகிறது –

எனக்கு உள்ளது அவனுக்கு உண்டாக பெறாது ஒழிவதே -என்பார்
அந்தோ –என்கிறார் –
நதே மனுஷ்யா –
அவர்கள் செத்து பிறக்கிறவர்களுக்கு கூட்டு அல்லர்
தேவா-
அவர்கள் எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருக்கிற-நித்ய சூரிகளுக்கு கூட்டு ஆவார் -அத்தனையே –
தே எ சாரு சுப குண்டலம் முகம் த்ரஷ்யந்தி ராமஸ்ய –
பதினான்கு ஆண்டும்-ஒருபடி தப்பிக்கிடந்து
அவர் மீண்டு வந்தால்
அவ் ஒப்பித்த முகத்தை காணப் பெரும்-புண்ணியம் மிக்கவர்கள் யாரோ –
இங்கே யாதாயினும் ஒரு கால விசேடத்திலே பெருமாளை-அனுபவிக்கிறவர்கள்
எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருக்கும்-நித்ய சூரிகளைக் காட்டிலும் சீரியரே
விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -79-என்கிறபடியே –
வர்ஷே பஞ்ச தசே புன –
பதினான்கு ஆண்டும் கழித்து
பதனைந்தாம் ஆண்டுக்கு இருப்பாரே அன்றோ காணப் பெறுவார்
காலம் முடிந்தது என்று இருக்கிறான் ஆயிற்று சக்கரவர்த்தி –

——————————————————————-

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

விட ஒண்ணாத ரம நீய விக்ரகம் -என்று அடைவேனோ
அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்-சர்வ காலமும் இதுவே கர்த்தவ்யம் –
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-தாயே தந்தையே என்னுமா போலே
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-கொத்தாக -பூவை உடைத்த சோலைகள்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–பரமபதாதிகளை விட்டு -திருப்பி பார் கடல் -சூர்ய மண்டலம் -விட்டு
நித்ய வாசம் செய்யும் -நீல ரத்னம் போலே –

உன்னைக் காணப் பெறாமையாலே-நெஞ்சு அழிந்து கூப்பிடா நின்றேன்-என்கிறார்

அந்தோ அணுகப் பெரு நாள் –
சொல்லத் தொடங்கினது தலைக் கட்ட மாட்டாத-வலி இன்மையைக் காட்டுகிறது -அந்தோ -எனபது –
அணுகப் பெறு நாள் என்று கொல்-என்ன அன்றோ நினைப்பது –
அணுக பெருநாள் எவை கொலோ அந்தோ என்று சொல்லப் பலம் இல்லாமல் -அந்தோ –

என்று எப்போதும் –
ஒருகால் சொல்லப் புக்கு இளைத்தால் விடுகை அன்றிக்கே-எல்லா காலத்திலும் –

சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் –
மனம் கலங்கி-துயர் உற்ற பிள்ளைகள் தாய் தந்தையர் கல் பெயரைச் சொல்லிக்
கூப்பிடுமா போலே –திருமால் என்று அழைப்பன் –

கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் –
கொத்துக்கள் மிக்க மலர்களை உடைத்தான-சோலையாலே சூழப் பட்ட
திரு நாவாயிலே
எப்பொழுதும் மாறாத மலர்கள் பொருந்திய-சோலைகளை உடைத்து ஆகையாலே
எல்லை இல்லாத இனிமையை உடைய தேசம் -என்றபடி

வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா –
ஒரு தேச விசேஷத்திலே சென்று-காணக் கூடியதான வடிவினைக் கொண்டு
அடியார்களுக்காக வந்து நித்ய வாசம் செய்கிறவனே
அவ்வடிவினை எனக்கு காட்டாத அன்று-உன் வரவு வாராமைக்கு சமம் -என்கை-

——————————————————————————-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

உபய விபூதியில் உண்டான ஆதர ணீயத்தையை -பலமாக -ஆழ்வார் பட்ட விசனத்தால் உலகம் வெறுக்காமல் -பெருமாள் விபூதி என்ற நினைவால் –
வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்-நானா வர்ணங்கள் உடைத்தான் மாணிக்கங்களால் சமைந்த மாடங்கள்
-திரு நாவாயில் நித்ய வாசம் செய்து அருளும் பெருமாளை பற்றி
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்-ஆழ்வார் அருளிச் செய்த –
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்-அப்யஸிக்க வல்லவர்கள்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே-மண்ணை ஆள்வது பலன் அதுக்கு மேலே -மனம் கமழ்வது –வாசனை -சர்வ கந்தன் -சாம்யா பத்தி கிட்டும் —
பூமியால் உப லக்ஷணையால் -அனைத்து லீலா விபூதியையும் -தங்கள் நினைவின் படியே பகவத் பரமாக நிர்வகித்து —
முயற்சி பொறுப்பு -சேர்ந்தே -இங்கு பொறுப்பு ஸ்வாமி அவனது -தாஸ்ய பாவத்தால் நாம் முயன்று -அவன் திரு உள்ளம் உகப்புக்காக –
இந்த விபூதியிலும் பகவத் அனுபவ ஞானத்தால் -நித்ய விபூதியிலும் -மல்லிகை போலே பரிசுத்த -அழுக்கு இல்லாமல் –
அனுபவிக்க பரிமளம் -கொண்டு -கமழ்தல்–யசஸ் கீர்த்தி உடையவர் ஆவார் –

நிகமத்தில் –

இத் திருவாய் மொழி கற்றார்-இவ் உலகம் அவ் உலகம் என்னும்
இரண்டு உலகங்களிலும்-எல்லா இன்பங்களையும் அனுப்பிக்கப் பெறுவர்-என்கிறார்

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்-
பல வகைப் பட்ட நிறங்களை உடைய-ரத்னங்களாலே செய்யப் பட்ட-மாடங்களை உடைத்தாய்-
எல்லை இல்லாத இனிமையை உடைய-திரு நாவாயிலே நின்று அருளினவனை-

திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன் –
திண்ணியதான மதிளை உடைத்தான-திரு நகரியை உடைய ஆழ்வார்-அருளிச் செய்த
திரு நாவாய்க்கு காவல் திரு நகரியின் மதிள் போலே காணும்-
ஆழ்வார் பரியவே அப்பரிவு தான் அவ் ஊருக்கு காவல் -என்னுதல்-
ஆழ்வார் ஸூ ரஷிதம் -ஆழ்வார் பரிவு ரக்ஷகம் -பரம்பரையாக ரக்ஷகம் –
அன்றிக்கே –
சர்வேஸ்வரனுக்கு செல்வம் ஆழ்வார் ஆகையாலே-
செல்வம் கிடக்கிற இடத்தில் அன்றோ மதிள் இடுதல் -என்னுதல் –

பண்ணார் தமிழ் –
பண் மிகுந்த தமிழ்-

ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் மண் ஆண்டு –
இவ் உலகில் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ யால் நிறைந்தவராய் –

மணம் கமழ்வர் மல்லிகையே
மல்லிகை மணம் கமழ்வர் –
மல்லிகையை கூறியது எல்லா வாசனைக்கும் உப லஷணமாய்-
சர்வ கந்த -என்கிற விஷயத்தோடு ஒத்து இருத்தலைப் பெறுவார்-
இவருடைய எண்ணம்-அவர்களுடைய பேற்றுக்கு உடலாகும் –

நாவாயில் உளானை நறையூரில் கண்டேனே -ஆழ்வார் மநோ ரதம் திருமங்கை ஆழ்வார் பெற்றார் –
தீர்த்தம் சடகோபர் பிரசாதம் பெற்று உஜ்ஜிவ்விப்போம் –

———————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பவ்மம் தேவி சுஷாக காமபி தேச விசேஷ யாராத் யாவது யாயாம் கதம்
இதி அவதி
தூத வாக்யாத் தாவத் விளம்பம் அஸஹன்ன
முனி ஈசே ஜிஹமிஷத்

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

வல்லி மத்யத்வ யோகாதி அபி -2 பாசுரம் கோடி ஏர் இடை
அபி ச ஸ்ரீ வாசோ வாஸ்ய பாவாத் -3
பூமியாத் ஐஸ்வர்யா யோகாத்
அவதரண தசா
ஸூ பத்ரு சந்தான த்ருத த்வாத
சு போத பரதம்
துரித ஹரணம் -1
சமா சன்ன பாவாத்
லஷ்மயா ஸ்ரீ ஈசன் நாதன் –

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 88-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்————-88-

———————————————————————–
அவதாரிகை –

இதில்
தூதர் வரும் அளவும் பற்றாமல்
திரு நாவாயில் போய்ப் புக வேணும் என்று
மநோ ரதிக்கிற ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இப்படி விட்ட தூதர் அத்தலைப் பட்டு அவனுக்கு
ஸ்வ தசையை அறிவித்து
மீண்டு
வருவதற்கு முன்னே
பிராப்ய த்வர அதிசயத்தாலே
அவன் எழுந்து அருளி இருக்கிற திரு நாவாயிலே
போய்ப் புக்கு
அவ்வோலகத்திலே அங்கு உள்ளவர்களோடு கூட
சபத்நீகனான அவனைக்
கண்டு
அனுபவித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ –என்று மநோ ரதிக்கிற
அறுக்கும் வினையில் -அர்த்தத்தை
அறுக்கும் இடர் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————————————-

வியாக்யானம்–

அறுக்கும் இடர் என்று –
நம்முடைய துக்கத்தை
போக்கி அருளும் என்று -வினை காரணம் -இடர் கார்யம் –

பால் அங்கு விட்ட தூதர் –
திரு மூழிக் களத்து யுறைவார் விஷயமாக
அவ்விடத்திலே விட்ட தூதர் –

மறித்து வரப் பற்றா மனத்தால் —
திரும்பி மீண்டு வந்து
மறுமாற்றம் சொல்ல
பற்றாத திரு உள்ளத்தாலே –

அறப் பதறிச் –
மிகவும் த்வரித்து –
இதம் ப்ரூயாச்ச மே நாதம் ஸூரம் ராமம் புன புன -என்று
திருவடியைத் தூது போக விட்ட-அநந்தரம்
பிராட்டி பதறினால் போலே –

செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன் –
அழகிய திரு நாவாயிலே எழுந்து அருளும்படி-எண்ணிய ஆழ்வார் –

அதாவது –
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே -என்றும் –
திரு நாவாய் அடியேன் அணுகப் பெறுநாள் யவை கொலோ -என்றும்
திரு நாரணன் சேர் திரு நாவாய் யவையுட் புகலாவதோர் நாள் அறியேனே -என்றும் –
திரு நாவாய் வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா –நாளேல் அறியேன்-என்றும்
விண்ணாளன் விரும்பி யுறையும் திரு நாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொள் கண்கள் -என்றும்
நாவாய் யுறைகின்ற என் நாரணன் நம்பி ஆவா அடியான் இவன் என்று அருளாயே -என்றும்
தென் திரு நாவாய் என் தேவே அருளாது ஒழிவாய் -என்றும்
திரு நாவாய் யாவர் அணுகப் பெறுவார் இனி யந்தோ -என்றும்
திரு நாவாய் யுறைகின்ற எம்மா மணி வண்ணா அந்தோ அணுகப் பெறு நாள் -என்றும்
இப்படி த்வர அதிசயத்தை பிரகாசிப்பித்தார் என்கை

அது எத்தாலே என்னில் –
மையலினால் செய்வது அறியாமல் –
சௌந்தர்யத்தாலே
அறிவு கலங்கி
அத்தாலே பிராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே
விட்ட தூதர் வருவதற்கு முன்பே த்வரித்தார் –

இவர் பிரேம ஸ்வபாவம் இருந்த படி
என் -என்று-வித்தராய் –
அருளிச் செய்கிறார் —

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: