பகவத் விஷயம் காலஷேபம் -176- திருவாய்மொழி – -9-7-1….9-7-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

எங்கானல் -பிரவேசம் –

மேல் திருவாய் மொழியிலே அப்ரீதியை உட்கொண்ட குணங்களின் நினைவாலே-மிகவும் ப்ரீதியை அடைந்தவர்-
நல்வினைக் குறையாலே-அப்ரீதி இன்மையே தலையெடுத்து-அவனைப் பெற்றால் பிழைத்தல் -பெறா விடில் முடிதல்
ஆம்படி தனக்கு உண்டான தம்முடைய நிலையினை-அன்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார் –
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்தால் ஒரு பிராட்டி-அவன் வடிவு அழகில் ஈடுபட்டு-துயரம் உற்றவளாய் –
தன் ஆற்றாமை கை கொடுக்க -தன் உபவனத்திலே சென்று-அங்கு இருக்கிற பறவைகளைக் குறித்து
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களம் -திரு நெடும் தாண்டகம் -10-என்கிறபடியே
தூது போவார்க்கு வருந்தி அறிவிக்க வேண்டாத படி-திரு மூழிக் களத்திலே வந்து நின்று அருளினான்
தனக்கு நல்லாரை விட மாட்டாதவன் ஆகையாலே நம் நிலை அறியாது இருந்தான் அத்தனை –
அருள் உடையவன் ஆகையாலே-நம் நிலையை அறிவிக்க வரும்-என்று அவற்றை வினயத்தோடு
இரக்கிறாள்-ஒரு பிராட்டி பேச்சாலே தம் நிலையை-அருளிச் செய்கிறார் –

தம் பிழையும் -சிறந்த செல்வமும் -படைத்த பரப்பும் – தமரோட்டை வாசமும்
மறப்பித்த
ஷமா – தீஷா – சாரஸ்ய – ஸுந்தர்யங்களை
உணர்த்தும்
வ்யூஹ விபவ பரதவ த்வய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் –சூர்ணிகை -156-

அஞ்சிறைய மட நாராய் -என்ற திருவாய் மொழியிலே
நம் பக்கல் உள்ள குற்றத்தால் வராது ஒழிந்தான் இத்தனை –என் பிழையே நினைந்து அருளி –
குற்றங்களைப் பொறுக்கும் அவனுடைய பொறை உடைமையை அறிவிக்க வருவான் –என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கே -என்று
பொறை உடைமையை பற்றாசாகக் கொண்டு தூது விட்டாள்-

வைகல் பூம் கழிவாய் -என்ற திரு வாய் மொழியிலே
நல்லது கண்டால்-சிறந்த செல்வம் – கால் தாழுமவன் ஆகையாலே-திரு வண் வண்டூரில் நிறைவினைக் கண்டு கால் தாழ்ந்தான் இத்தனை-
தம் துயரை அறிவித்தால் -என்னையும் உளள் என்மின்கள் –
தன் இனிமையில் நெஞ்சு வைப்பான் ஒருவன் அல்லன் –என்று அது பற்றாசாக தூது விட்டாள் –

பொன்னுலகு ஆளீரோ-என்ற திரு வாய் மொழியிலே
திருக் கோளூர் ஏறப் போக -என்று
தன்னுடைய உபவனத்து அளவும் சென்று மேலும் செல்லுவதற்கு வலி இல்லாமையாலே போக மாட்டாதே
இருக்கிற பிராட்டி -பின்னையும் வரக் காணாமையாலே –
யாவையும் யாவருமாய் – முன் உலகங்கள் எல்லாம் படைத்த –செல்வப் பரப்பாலே வாராது ஒழிந்தான் –
தண் துழாய் நமக்கு அல்லது நல்கான் -அடியார்களோடு-ஓன்று பட்ட இன்பத்தை உடையவன் ஆகையால் வரும் –
என்று ஓன்று பட்ட இன்பத்தை உடையவனாய் இருத்தலையே-பற்றாசாக தூது விட்டாள் –

இதில் தனக்கு நல்லராய் இருப்பாரை விட மாட்டாமையாலே-வாராது இருந்தான் அத்தனை
தன் வடிவு அழகு அது -அக்கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளுக்கு –குணங்கள் அவை -தமரோடு அங்கு உறைவார்க்கு –
ஆன பின்பு பிரிந்தார்க்குப் பிழைத்து இருக்கப் போமோ -என்று-அவன் வடிவு அழகையும் குணங்களையும்
பற்றாசாக தூது விடுகிறாள் –

அங்க மாலி அருகில் -திரு மூழிக் களம் –எர்ணா குளம் -திருக் காட்கரைக்கு -கிழக்கே உள்ள திவ்ய தேசம் –
மகாத்மாக்கள் விரகம் சஹியாத மார்த்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -சூர்ணிகை -179
திரு மூழிக் களத்து விளக்கு -பின்னானார் வணங்கும் சோதி –
கல்லும் கனை கடலும் -திரு வேங்கடம் அர்ச்சா ஸ்தலங்களுக்கு பிரதி நிதி போலே
திரு மூழிக்களம் -அர்ச்சைக்கு தூது இதில் -பிரதி நிதி தானே இந்த திவ்ய தேசம்
அப்பன் -ஸ்ரீ ஸூக்தி நாதன்-ஸ்ரீ மதுரை வேணி நாச்சியார்– பாரத புழா நதி அருகில்
ஹரிதா மகா ரிஷி தவம் -பக்தி ஸூ த்ரங்களை பிரார்த்தித்து -ஸ்ரீ ஸூக்தி -திரு மொழி –
களத்து மேடு -பயிர் செழிக்கும் -மொழி மருவி மூழிக் களம்
லஷ்மணன் தபம் -பரத அபசாரம் போக்கிக் கொள்ள -இங்கே வந்து –லஷ்மண ஸ்வாமி என்றே இந்த பெருமாள் இன்றும் –

————————————————————————

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

வாசா தர்மம் -ஆச்சார்யர் ஸ்தானம் பக்ஷிகள் -மார்த்வம் -ஆழ்வாரை விட்டுப் பிரியாமல் -பாசுரம் தோறும் –
கயா குண்டம் -பிருந்தாவனம் -அருகில் -பால்குனி நதி தீர்த்தம் ஆடி -பிள்ளைகளை கூட்டிப் போக -இங்கேயே பண்ண
-அங்குள்ளவற்றை இங்கே கூட்டி வர -குழந்தைகளை பிரிய மாட்டாமல் –
கோப கோபி ஜனங்கள் -ஆஸ்தானம் பண்ணிய கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -பிரிந்து விடுவானோ பயத்தால் தூது விடுகிறார் –
செங்கால மட நாராய் திருக் கண்ணை புரம் திரு மங்கை ஆழ்வார்
கமன சாதனம் பக்ஷம் இறகுகள் தானே -தலையில் தாங்க திருவடிகளை கொண்டாடி –
அதிசயித்தமான போக்யதா பிரகர்ஷ பிரகாரம் உடைய கிருஷ்ணனுக்கு நாரைகளை அபேக்ஷிக்கிறாள் -உபகாரத்துக்காக
தலை மேல் உங்கள் திருவடி வைக்க வேண்டும்
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்-உங்களுக்கு விநியோக அர்ஹம் -பந்த அதிசயம் -இங்குத்தை இறை தேடி –
எங்கள் மமதையில் வர்த்திக்கும்-கடல் கரையில் சோலையில் -வாசல் கழியில்-சந்நிதியில் பிரணவ ப்ரீதி உடன்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்-பவ்யத்தை -மடப்பம் -நியமித்து கார்யம் கொள்ளலாம் படி -ஆஸ்ரிதற்கு நித்ய வாசம் -சுலபம்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்-தேன் விஞ்சி தர்ச நீதியமான -திரு முடி -மநோ ஹாரி சேஷ்டிதங்கள்
-அழகும் சேஷ்டிதங்களும் -என்னுடைய தூத க்ருத்யத்தில்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே-ஆச்சார்யர் பத்னி புத்திரர்கள் திருவடிகள் தலையில் தரிக்க -ஆறுகால சிறு வண்டே-
குருவைப் போலே நுமர்கள் -தாரை பிள்ளைகள் -இவர்களையும் நடத்த வேண்டும் –
எனக்காக தூது சென்ற -உத்தம அங்கத்தில் சேர்த்து கிருபை பண்ணி -பாத்ர பூதன்-என்று
உபகார ஸ்ம்ருதி தத் சம்பந்தி அளவும் செல்ல வேண்டுமே
நாராய் -ஒருமை ஜாதி ஏக வசனம்

சில நாரைகளைக் குறித்து
அவன் தன் அழகாலும் குணங்களாலும்-தன்னைத் தோற்பித்த படியைச் சொல்லி
என் நிலையை அவனுக்கு அறிவித்து வந்து-உங்கள் திருவடிகளை என்தலை மேலே வைக்க வேண்டும்-என்கிறாள் —

எம் கானல் –
பகவத் விஷயத்தில் உபகாரம் செய்கின்றவர்களோடு-வேறுபாடு அறக் கலந்து
ஒக்க இன்பத்தினை உடையாராய்ச் செல்லுதல் தக்கதாக இருக்க
எம் கானல் -என்று-செருக்குத் தோன்ற கூறுதல் என் -என்ன –
ஒன்றனைத் தம்மது ஆக்கிக் கொடுத்தல்லது தரிக்க மாட்டாத-உபகாரத்தின் நினைவாலே –
எம் -என்று சொல்லுகிறது –
இந்நிலையில் வந்து முகம் காட்டித் தரிப்பித்த உபகாரகம் –
பிறருக்கு கொடுப்பதாக வரும் எனது என்னும் செருக்கு உத்தேச்யமாய் இருக்கும் அன்றோ –
தன்னை பகவானுக்கு உறுப்பு ஆக்கினவன்றே-தன்னது அடங்கலும் அங்குத்தைக்கு உரிய பொருளாய் இருக்க-
உபகாரத்தின் நினைவு அன்றோ இப்படி சொல்ல வைத்தது
ஆத்துமாவை அவன் திருவடியில் இடுவதற்கும் அடி இதுவே வன்றோ –
எனது ஆவி தந்து ஒழிந்தேன் -2-3-4-
கானல் –
கடல் கரை சோலை –
அன்றிக்கே
நெய்தல் நிலம்-என்னுதல் –

அகம் கழிவாய் –
உள்ளான கழி யிடத்து-
ஸ்தலஸ்த்தார்கள் போல அன்றோ இவைகள் அந்தரங்கர்கள் –
உன்னிடத்தில் புகுவதற்கு அனுமதி வேண்டாத படி அன்றோ-இவை அந்தரங்கமாய் இருக்கிறபடி –
இரகசியமான சமாசாரங்கள் சொல்லப் பட்டன –
கதிதானி ரஹச்யானி க்ருஹெ புக்தம் அசங்கிதம்-தர்சிதானி களத்ராணி சௌஹார்த்தம் கிமத பரம்-பாரதம் -உத்தியோக பர்வம் –
என்கிறபடியே -வசிக்கின்றன -என்றபடி –

இரை தேர்ந்து –
இரை தேடி –-க்ருஹெ புக்தம் அசங்கிதம்-கூசுதல் இல்லாமல்-வீட்டில் உணவு உண்ணப் பட்டது -என்கிறபடியே-
பண்டு தனக்கு உதவி செய்த படியைச் சொல்லுகிறாள் இப்போது உதவி செய்வதற்காக –

இங்கு-
இத்தலையை அழித்து தூது விட வேண்டும்படி-அகல இருந்த அவனைப் போலே அன்றியே
அண்மையிலே இருப்பவராகப் பெற்றேன் -என்கிறாள் –

இனிது அமரும் –
இனிதாக தம்மோடு சேர்ந்து வசிக்கின்ற –
அன்றிக்கே –
தர்சிதானி களத்ராணி-சேவலோடு சிறந்த இன்பங்களை அனுபவித்து வசிக்கிற -என்னுதல் –

செங்கால –
சிவந்த கால்களை உடைய -என்றது
என் மடியிலே இருக்கும் -நாயகன் கால் போலே இருந்ததே-நான் தலையில் வைத்துக் கொள்ளப் புகுகிற காலும் -என்றபடி –

மட நாராய் –
அடக்கத்தோடு இருக்கிற நாரையே –

திரு மூழிக் களத்து உறையும் –
தூது செல்வார்க்கு அடுத்து அணித்ததாக-திரு மூழிக் களத்திலே நிற்கையாலே
பரம பதத்தில் காட்டிலும் ஏற்றம் இருக்கிறபடி –

கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு-
ஒப்பனையும்
மனத்தை கவர்கின்ற செயல்களும்
ஆகிற இந்த இரண்டினையும்-எனக்கு ஆக்கி வைத்தவர்க்கு
எம் -என்பதனை -கொங்கார் பூம் துழாய் முடி-என்பதனோடும் கூட்டுக
எம் -எனபது தனித்தன்மை பன்மை –

என் தூதாய் –-
அவ் ஒப்பனையிலும் செயலிலும் தோற்று-அவனைப் பெற்று உய்தல் –
இல்லையாகில் முடிதலாய் இருக்கிற எனக்கு-தூது செல்லுகிற தொழிலை மேற்கொண்டு –

நும் கால்கள் என் தலை மேல் –
உதவி செய்கின்றவர்களான உங்கள் கால்களை
நீங்கள் உதவி செய்ய -அதனால் உய்வான் இருக்கிற -என் தலை மேலே
மயிர் கழுவிப் பூ சூட இருப்பாரைப் போலே-அவற்றின் காலாகில் -இவள் தலையிலே
இருக்கப் படைக்கப் பட்டன –
இவள் தலையாகில் அவற்றின் கால்கள் வைக்கப் படைக்கப் பட்டு இருந்தது-இரண்டும் பிறர் பொருட்டு இருந்தபடி –

கெழு மீரோ –
ஏதத் ஆக்யானம் ஆயுஷ்யம் படன் ராமாயணம் நர-சபுத்ர பௌத்ர சகன ப்ரேத்ய ச்வர்க்கே மஹீயதே -பால – 1-99-
ஒரு விதி கொண்டு செய்ய வேண்டா ஆயிற்று இங்கு
அவனுக்கு ஆக்கினவாறே உங்களதாக இருக்கும் அன்றோ-கொடு வந்து சேர்த்தீரோ –
கண்டு அருளி உங்களுக்கு அன்றோ இந்த அன்னம் புஜிக்க அருளுவான் –
நுமரோடே –
புத்ரர்களோடும் பௌத்ரர்களோடும் எனை உறவினர்களோடும் -என்னுமா போலே-உங்கள் கூட்டத்தோடு
ஆச்சார்யவத் ஆச்சார்ய தாரே வ்ருத்தி ததா சமாதிஷ்டே
அத்யாபயதி வ்ருத்ததரே ச சப்ரமசாரிணி உச்சிஷ்டாசக
வர்ஜம் ஆச்சார்யவத் ஆச்சார்யபுத்ரே வ்ருத்தி -ஆபஸ்தம்ப தர்மம் –
ஆசார்யனைப் போன்று அவனுடைய மகன் இடமும் நடந்து கொள்க -என்னக் கடவது அன்றோ-

முயல்கிறேன் உம் தம் மொய் கழற்கு அன்பையே என்று முயலத் தானே முடியும்
ஆச்சார்யர் செய்த உபகாரத்துக்கு சத்ருசமான -பிரதியுபகாரத்துக்கு

———————————————————————————————————-

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

அடியார்களுக்கு -உடன் கூடுவது என்று கொலோ என்று அன்றோ பிரார்த்தனை –
அசாதாரண பரிஜனங்கள் உடன் -கூட சேர அர்ஹதை இல்லோமோ
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்–சந்தான வர்த்திகள் -திரு உள்ளபடி -உங்களை அநு விதானம் பண்ணும் -சேவல் –
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்-அமர்ந்த காதல் நித்தியமான காதல் -ஸம்ஸலேஷித்து –
கூடி அமர்ந்த காதல் -தர்ச நியாமான திவ்ய தேசம்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு–எமர்கள் கை விட்ட பின்பும் -பழித்து விலகிய பின்பும்
-தம்மால் இழிப்புண்டு-காதா சித்க சம்ச்லேஷம் பண்ணி உபேக்ஷித்த பின்பு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே–தமரோட்டை சகவாசம் -நாங்கள் ஆகாமோ -கேளீர் –

சில குருகு இனங்களைக் குறித்து
தாமும்தமக்கு நல்லாருமாய் இருக்கும் இருப்பை –தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே – கேளீர் –
நான் இழந்தே போம் இத்தனையோ –என்று அறிவியுங்கோள்-என்கிறாள் –

நுமரோடும் பிரியாதே –
தமரொடும் அங்கு உறைவார் -என்று ஆயிற்று –அடையத் தக்கவனான இறைவனைப் பற்றி சொல்ல நினைக்கிறது –
அப்படியே இவையும் குறைவற்று இருக்கிறபடி –
குறைவாளர் கார்யத்தை குறைவற்றவர் தீர்க்க வேண்டாவோ –உண்டார்க்கு பட்டினி கிடந்தார் பசியினை நீக்குதல் செய்யத் தக்க கார்யம் அன்றோ –

நீரும் நும் சேவலுமாய் –
சேவல் நினைவு அறிந்து கலக்கும் நீரும்
உம்முடைய கருத்து அறிந்து கலக்கிற சேவலும் -என்றது
கலவியின் இன்பத்தை அறியும் நீங்கள்-பிரிந்தார் உடைய செல்லாமையும் அறிய வேண்டாவோ -என்றபடி –

அமர் காதல் குருகினங்காள் –
ஒன்றுக்கு ஓன்று பொருந்தின காதலை உடைய குருகு இனங்களே -என்றது
ஆசையிலே பிரிவினை உண்டாக்காத ஆசை உண்டே -அன்றோ
ஆசையிலும் குறைவு அற்று-பிரிவு இன்றிக்கே-கருத்து அறிந்து கலக்கவும் கூடியவர்களாய்
இருப்பதே-நீங்கள் என் முன்னம் –என்கிறாள் –
குருகு இனங்காள் -என்று விளித்து வைத்து-தொடங்கின வார்த்தையை முடியச் சொல்ல மாட்டாத
பலக் குறைவாலே பாதி வார்த்தையில் அதை முடித்து –தான் இருக்கிற இருப்பிலே துக்கிக்கிறாள் –

எமராலும் பழிப்புண்டு -அணி மூழிக் களத்து உறையும் -இங்கு என் தம்மாலும் விழிப்புண்டு –
ஒரு காலத்தில் உண்டான கலவியின் காரணமாக-உறவினர்கள் கை விட்டார்கள் –
ஒரு காலத்திலேயே உண்டான கலவி அளவிலே தாமும் விரும்ப வில்லை -என்றது –
உறவினர்கள் கை விட்டதே காரணமாக தாம் கைக் கொள்ள வேண்டும்-
பிற்பாடர்க்கு காட்சி கொடுக்க வந்து நிற்கிற நிலையில் ஆகிலும் தாம் கைக் கொள்ள வேண்டும் –
இவ்விரண்டும் என் அளவில் விரும்பாமைக்கு காரணம் ஆவதே -என்கிறார் -என்றபடி –

இங்கு என் –
இவ்விருப்புக்கு என்ன பிரயோஜனம் -என்றது –தம்மைப் பெற்று இருக்கிறேனோ
பந்துக்களைப் பெற்று இருக்கிறேனோ -என்றபடி –
இங்கு உள்ளார் கை விட்டால் பின்பு தம் எல்லைக்குள்-ஆக்கிக் கொள்ள வேண்டாவோ –
சர்வேஸ்வரன் இடத்தில் உட்புக உட்புக -அன்று தொடங்கி-கை விடுவார்கள் அன்றோ இவ் உலகத்தார் –

அவ்வளவில் அதனை விட்டு
பின்னையும் தன செல்லாமையாலே-அவற்றைக் குறித்து வார்த்தை சொல்லுகிறாள் -மேல்

தமரோடு அங்கு உறைவார்கு –
தம் பரிஜனங்களோடு நித்யவாசம் செய்கிற தமக்கு –

தக்கிலமே கேளீரே –
நாங்கள் ஆகேமோ -என்று கேளுங்கோள் -என்றது-தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கிற இருப்புக்கு
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று-இருப்பார் ஆகாதோ என்று கேளுங்கோள் -என்றபடி –-

————————————————————————————————-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

அழகன் -அவயவ சமுதாய அதிசயித போக்யதை-வடிவு கொண்டவனுக்கு நாங்கள் அயோக்கியரோ –
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்-பெரிய தடாகத்தில் -மீனைத் தேடும் –
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்-அபி நிவேசத்துக்கு அனுரூபமாக தனித்த தனியே திரள் திரளாக கொக்குகள் குருகுகள்-
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்-தாமரை மலர் அலர் போலே -ஜிதேந்த்தே என்னப் பண்ணும் திரு கண்கள்
ஹஸ்த பத்மம் அபேஷ்ய -சரண த்வந்தம் ஆஸ்ரயிக்கும் -மா ஸூ ச சாந்தனவாம் பண்ணும் திருப்பி பவளம்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே-இளம் சிவப்பாய் திரு மேனி ஸ்யாமளம் -அழகைக் காட்டி ஸ்வாமி யானவன்

சில கொக்கு இனங்களையும்-குருகு இனங்களையும் நோக்கி
-திரு மேனி அடிகளுக்கு தக்கிலமே கேளீர்கள் –
தன் அழகு காண்கைக்கு -நாங்கள் தகுதியேம் அல்லோமோ –என்று கேளீர் –என்கிறாள் –

தக்கிலமே கேளீர்கள் –
நாம் ஒன்றிலே துணியும் படி அறுதி இட்டு கேட்டு போருங்கோள் -என்றது
அவன் -இன்னம் இவள் வேண்டும் -என்று இருந்தானாகில்-உயிரை வருந்தி யாகிலும் நோக்கிக் கொண்டு கிடக்கவும் –
வேண்டா -என்று இருந்தானாகில் நாமும் ஒன்றிலே துணியும்படியும்-அறுதியாக கேட்டு விடுங்கோள் -என்றபடி –

தடம் புனல் வாய் இரை தேரும்-
மிகுதியாக தண்ணீர் நிறைந்து இருக்கின்ற-பொய்கையிலே நீரில் இரை தேடுகிற அளவாய் இருந்தது உங்களுக்கு -என்றது
தத மலின சம்வீதாம் ராஷ ஸீபி சமாவ்ருதாம்-உபவாச க்ருசாம் தீநாம் நிஸ்வசந்தீம் புன புன -சுந்தர -15-19-
உபவாசத்தாலே இளைத்தவள் -என்கிறபடியே
உபவாசத்தால் இளைத்தவலாய் இருக்கிற என்னைப் போல் அன்றியே-
இரை மிடற்றுக்கு கீழ் இழியும்படி அன்றோ நீங்கள் கூடி குறைவு அற்று இருக்கும் தன்மை –என்கிறாள் -என்றபடி –

கொக்கினங்காள் குருகினங்காள் –
யாம் கபீநாம் சஹஸ்ராணி சூஹூநி அயுதானி ச-திஷூ சர்வாசூ மார்க்கந்தே ஸா இயம் ஆஸாதிதா மயா-சுந்தர -30-3-
எந்தப் பிராட்டியை ஆயிரக் கணக்கான குரங்குகள் தேடுகின்றனவோ -என்கிறபடியே –
கண்ணால் கண்டவற்றை அடைய ஏவுகிறாள் –
சிலவற்றைப் போக விட்டோம்-அவை நம் கார்யம் தலைக் கட்டும்-என்று ஆறி இருக்கும் விஷயம் அன்றே –
கொக்கு -கொய்யடி நாரை –

குளிர் மூழிக் களத்து உறையும் –
விரகத்தால் தபிக்கப் பட்டு இருக்கின்ற எனக்கு-சிரமத்தை போக்க கூடியதான அந்த தேசத்தை அடைதல்-அரிது ஆவதே –

செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய் –
அந்த குளிர்த்திக்கு அடியான உள்ளில்-வாசத்தடம் -8-5-1- இருக்கிறபடி –
நயந புரஸ்தே புண்டரீக -பொற்றாமரைத் தடாகம் அவனே -தயரதன் பெற்ற மரகத மணித்தடாகம் –
சிவந்து அலர்ந்த தாமரை போல் இருக்கிற-கண் முதலிய திவ்ய அவயவங்களை உடையவன் –
முதல் உறவு செய்யும் கண் –அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை –
ஊற்று இன்பத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் –திருவடிகளில் விழுந்தாரை நல் வார்த்தை சொல்லித் தரிப்பிக்கும் முறுவல் –

அக்கமலத்து இலைபோலும் திரு மேனி –
அவயவங்களுக்கு பரபாகமான-செந்தாமரை இலை போலே ஆயிற்று-திரு மேனி இருப்பது –
வெண் தாமரை என்னில் வேறு பட்ட இனமாகும் என்று கருதி-அக்கமலம் -என்கிறது –
இதனால் அனுபவிப்பவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவைக் கூறிய படி –

அடிகளுக்கு –
அந்த அவயவங்களின் அழகையும் வடிவு அழகையும் காட்டி-அடிமை கொண்டவர்க்கு –
இவ் வடிவு அழகுக்கு தோற்று பசலையைத் தரித்து இருப்பார்-அங்குத்தைக்கு தகாதவரோ –
என்று கேட்டுப் போருங்கோள்
அவன் புருடோத்தமன் ஆனால்-இவள் பெண்களுக்குள் உயர்ந்தவள் ஆகும் போது-இப்படியே இருக்க வேண்டும் அன்றோ-

—————————————————————————————————–

திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

அழகால் அடிமை கொண்ட சுத்தர மூர்த்திக்கு -தூதாக சென்று -வார்த்தை சொன்னால் -உங்கள் ஸாரூப்யம் தேச வாசம் தவிர்க்குமோ
-சாமீப்யம் சாம்யாபத்தி சாலோக்யம் சாயுஜ்யம் தவிரான் –
மேக வண்ணம் -வெளுப்பு ஆக்குவானோ என்றுமாம் –
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்–தர்ச நீயமான மேகங்கள் – -பிரசித்தமான வி லக்ஷண திவ்ய தேசம்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்–திரு மேனி அழகால் -கண்டவாற்றால் தனதே உலகு என்று இருப்பானே
-சொல்வது சுலபம் இல்லை -என்றக்கால் –
நிரதிசய போக்யமான திருமேனியை பராங்குச நாயகிக்கு அருள -என்ற யுக்தி மாத்ரத்தால்
பரார்த்தமாக வார்த்தை சொல்லிய உங்களுக்கு –
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே-செய்ய மாட்டார் -கடகர்கள் அன்றோ நீர் -அடியிலே -நீல தோயத மத்யஸ்தா
-ஒளியை அகற்றி -அந்தமில் பேரின்பம் -இந்த லோகத்தில் ஆகாசம் போக விடாமல் பண்ணுவாரோ -என்றுமாம் –
சுவார்த்தமாக அபேக்ஷித்தார்க்கு கொடுப்பவன் -விஷ்ணு பதம் -தவிர்ப்பானோ -ஆகாசம் ஸ்ரீ வைகுண்டம் இரண்டுமே
-விஷ்ணு பதம் ஆஸ்ரயமும் சாரூப்யம் தவிர்க்கை அசம்பாவிதம் –

சில மேகங்களை நோக்கி
என் வார்த்தையை அவனுக்கு சொன்னால்-உங்களைத் தண்டிக்குமோ –என்கிறாள் –
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ -1-4- அங்கு அப்படி அனுபவம் -இங்கு இப்படி அனுபவம் –

திருமேனி அடிகளுக்குத்-
ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி என்னும் இவைகளால் அன்றி-வடிவு அழகாலே எல்லாருக்கும் ஸ்வாமி-என்று-தோற்றும்படி இருக்கிறவருக்கு-
அன்றிக்கே
வடிவு அழகாலே உலகம் முழுவதையும்-தோற்பித்து அடிமை கொண்டவர்க்கு – என்றுமாம் –
த்ருஷ்ட்வா கிருஷ்ணம் ததாயாந்தம் பிரதபந்தம் இவ ஒஜசா-யதார்ஹம் கேசவே வ்ருத்திம் அவசா பிரதிபேதரே-பாரதம் சபா பர்வம்
கண்ண பிரானைக் கண்டதும் பரவசப் பட்டு -வந்தனை முதலிய-கார்யங்களைச் செய்தார்கள் -என்கிறபடியே
பகைவர்களுக்கும் மனக் கவர்ச்சியாக அன்றோ வடிவு அழகு இருப்பது –
போயினித் தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும்
வேயெனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கி
தீ எனக் கொடிய வீர சேவகச் செய்கை கண்டால்
நாய் எனத் தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் -கம்பர் -கும்ப கர்ண வதை படலம் -30-
தீ வினையேன் விடு தூதாய் –
எல்லார்க்கும் பொதுவான உடம்பை இழந்து-உங்கள் காலிலே விழ வேண்டும்படியான பாபத்தை

தீ வினையேன் விடு தூதாய் –
எல்லார்க்கும் பொதுவான உடம்பை இழந்து
உங்கள் காலிலே விழ வேண்டும்படியான பாபத்தை செய்த நான்-அனுப்புகிற தூதாகச் சென்று –

திரு மூழிக் களம் என்னும் –
துயர் உற்றவர்களை பாது காப்பதற்காக-வந்து நிற்கிற இடம் என்ற-பிரசித்தமான தேசம் –

செழு நகர் –
பரம பதத்தைக் காட்டிலும் உண்டான ஏற்றம் –

வாய் அணி முகில்காள்-
வளப்பம் பொருந்திய நகரத்திலே செல்லுகிற-அழகிய முகில்காள்
அன்றிக்கே
செழு நகரிலே எழுந்து அருளி இருக்கின்ற அடிகள் -என்று-
செழுநகர் வாய் -என்பதனை-அடிகளுக்கு அடை மொழி ஆக்கலுமாம்-

திரு மேனி அவட்கு அருளீர் –
பிறர் பொருட்டே இருக்கிற உடம்பை-ஆசைப் பட்டார்க்கு கொடுக்க லாகாதோ -என்றது
பக்தாநாம் -என்கிறபடியே-மேகம் பேசுமோ -ஆண்டாள் ஆழ்வார் -இவற்றை தூதாக விட –
இவ் உடம்பு ஆசைப் பட்டார்க்கு உரியது அன்றோ என்று சொல்லுங்கோள் -என்றபடி
காதலிகட்கு ஸ்வரூபம் முதலான வற்றைக் காட்டிலும்-வடிவிலோ அன்றோ விருப்பம் –அருளீர் –
அருளீர் காதலே அன்றோ குடி போயிற்று-திரு அருளும் மறுத்ததோ –

என்றக்கால்-
வாசாதர்மம் அவாப்நுஹிசுதரம் -39-10 –
வாக்கால் தருமத்தை அடைவாய் -என்றபடி-உங்களுக்கு ஒரு வார்த்தை அன்றோ நேர வேண்டுவது –

உம்மை-
இப்படி உதவி செய்தவரான உங்களை-

தன்திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே-
உங்கள் வடிவில் புகரையும் போக்கிக்-களங்கம் இல்லாத ஆகாசத்தின் நின்றும்-உங்களை ஒட்டுவானோ
உங்களுக்கு இதற்கு முன்பு இல்லாதவற்றையும்-உண்டாக்கும் அது ஒழிய
பண்டு உள்ளவற்றதை தவிர்த்து உங்களைத் தண்டிக்குமோ -என்றது –சிறிது ஒப்புமையைத் தவிர்த்து
மேலான ஒப்புமையை அடைகிறான் -பரமம் சாம்யம் உபைதி –என்கிறபடியே
எல்லாவகையிலும் ஒத்து இருக்கும் தன்மையையும் தந்து-ஆகாசத்தில் மாத்ரம் இருத்தலோடு அன்றி
பரம ஆகாசத்தையும் தாரானோ -என்றபடி
உங்களுடைய வார்த்தை மாத்ரத்திலே-எனக்கும் உங்களுக்கும் பிரயோஜனமாக இருக்க –ஆறி இருக்கக் கடவீர்களோ –

பூண்ட நாள் -சீர்க்கடலை உட்க்கொண்டு திருமேனி நன்நிறம் ஒத்து உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஞான ஹ்ரதரத்தைப் பூரித்துத் தீங்கு இன்றி வாழ நிதி சொரிந்து கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்து
ஒளித்துக் கண்டு உகந்து பர ஸம்ருத்தியே பேறான அன்பு கூறும் அடியவர் உறையில் இடாதவர் புயல் கை
அருள் மாரி குணம் திகழ் கொண்டால் போல்வாரை மேகம் என்னும் –சூர்ணிகை -155-
குணக் கடலில் புகுந்து -ஆழ்வார்களும் திருமேனி கறுப்பாகத் தான் -மா முனிகள் -அயோனிஜர்கள் ஆனாலும் –
-காரார் திருமேனி காணும் அளவும் போய் -தீர்த்தங்கரார் -மகா வீர சரித்திரம் -உபன்யாசம் வடக்கே ஸ்வாமி அருளி –

———————————————————-

தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

பர வ்யோம சப்த வாஸ்யமான நிரதிசய விபூதியில் இருக்குமா போலே -அவன் என் உள்ளத்தில் -வந்து நித்ய வாசம் செய்து –
என் தூதாதாக சென்று சொல்லக் குறை இல்லை -மேகம் தன்னையே சொல்கிறாள்
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்-ஸ்ரீ வைகுந்தம் -நிர்மலமான ஆகாசம் – த்வரித்து-நிலத்தில் ஓடுவது போலே –
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்-
அலாக சக்ரம் போலே -அழகிய மின் தோன்றா நிற்கிற -ஸாரூப்யம் உபக்ரம தசையில்
பக்தி ஆரம்ப தசையில் பாகமாய் இருப்பது போலே –
நித்ய வாசத்தால் வி லக்ஷண குணங்கள் உடைய -தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்-
பரிதாப ஹேதுவான என் நெஞ்சில் முகம் தொற்றாமல் இருந்து கொண்டு
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே-துளி -வார்-கள் –தேன் துளி துளியாகக் கொட்டும்
-மயிர் முடி அழகை பிரகாசிப்பித்து -கேசவ பெருமாள் –
கிலேச நாசன் ஆக வேண்டாமோ -வாசக சப்தத்துக்கு தக்க நடக்க வேண்டாமோ -தூத வாக்கியத்தை செப்புமின்

எங்கள் வார்த்தையை அவன் அங்கீ கரிக்குமோ -என்று-இருந்தனவாக
பரம பதத்திலே செய்கின்ற ஆதரத்தை-என் பக்கலிலே செய்தவன்-அங்கீ காரியாது ஒழியான் –
ஆனபின்பு எனக்கு ஒரு வார்த்தை விண்ணப்பம்-செய்ய வேண்டும் –என்கிறாள் –

தெளி விசும்பு கடித்து ஓடித் –
குற்றம் இல்லாததாய்-பற்றுக் கோடு இல்லாததான ஆகாசத்திலே-
பூமியிலே சஞ்சரிப்பது போன்று கடு நடையிலே சஞ்சரித்து-
இவற்றின் விரைவு எல்லாம் தன் கார்யத்துக்கு-காரணம் என்று இருக்கிறாள் –

தீ வளைத்து மின் இலகும் –
கொள்ளி வட்டம் போலே மின் விளங்குகின்ற-தன் வடிவில் இருட்சிக்கு கை விளக்கினை கொண்டு-
திரிவாரைப் போலே ஆயிற்று –மின்னிக் கொண்டு சஞ்சரிக்கிற படி –

ஒளி முகில்காள் –
பரபாகத்தாலே அழகிதான வடிவை உடைய மேகங்காள் –

திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்-
திரு மூழிக் களத்தில் நித்ய வாசம் செய்கையாலே-புகர் மிக்கு இருக்கிறவனுக்கு –
அவன் வடிவிற்கு போலியாக அன்றோ உங்கள் வடிவு இருப்பது –

தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
பரம பதத்தில் செய்யும் ஆசையை-என் நெஞ்சில் செய்து வசிக்கின்றான் –
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் அன்றோ –
தீ வினையேன் –
மனத்தில் பிரகாசித்துக் கொண்டு இருக்க-காண ஒண்ணாத படி பாவத்தை செய்தவன் நான் -என்பாள்
தன்னை தீ வினையேன் -என்கிறாள் –
இதற்கு
கொம்பது பருத்தியாக அங்காடி பாரித்து -பாரித்தால் போலே –தனக்கு பரம பதம் கலவிருக்கையாக இருக்க
அதனைக் காற் கடைக் கொண்டு-அண்மையில் இருப்பாரைப் போல் இருக்க-
என் நெஞ்சில் பிரகாசியா நின்றான் -என்று-சிற்றான் கொண்டான் பணிப்பர் –
இது தான் -பருத்து கொம்பிலே இருக்கச் செய்தெ -கடை விரித்து புடவைக்கு விலை பேசுமா போலே
-தூத பிரகரணத்தில் வெறுப்பாக சொல்லுவது பொருத்தமோ -கண்ணால் பார்க்க ஆசை கொண்டே சொல்கிறார் என்றபடி –
இத் திரு வாய் மொழிக்குச் சொன்ன வாக்ய அர்த்தத்தோடு சேராது-
ஒவ்வொரு சமயங்களில் சொல்லிப் போம் வார்த்தை அன்றோ-
எம்பெருமானார் -நிர்வாஹம்
அங்கு உள்ள ஈடுபாடு என் நெஞ்சில் உண்டு-நெஞ்சில் வசிக்கிறான் -சிற்றாற்று கொண்டான் -சொன்னதில் கொஞ்சம் மாற்றி
இதுக்கு சேர-உடனே பெற பாரித்து தூது விடுகிறார் –
மது உடைய திருக் குழல் உடையார்க்கு
துளி வாருகின்ற மது -தேன் சொட்டும் திருத் துழாய் -புஷ்பமாக சொல்வார்கள் -அணிந்த திருக் குழல்
வல்லார் பூ முடித்தால் பூ தோற்ற காணாமல் மது வாசனை மட்டுமே தெரியுமே –அதனால் பூ சொல்ல வில்லை

————————————————————————————————————–

தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-

நித்ய அநபாயினி -பிராட்டியை திரு மார்பில் உடையவருக்கு உங்கள் வார்த்தை -கேட்ப்பிக்கவும் அவள் உண்டே-கேட்கவும் அவன் இருக்க
-சொன்னால் போதுமே -சேர்த்தியிலே சொல்லுமின் –
தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்–கந்தல் அற்ற பேச்சுக்கள் –
போதிரைத்து மது நுகரும்-புஷப விகாச தசையில் சப்தம் இட்டு மது கொட்ட -வந்து ரீங்காரம்
பொழில் மூழிக் களத்து உறையும்-சோலை வளம் -திவ்ய தேசம் வர்த்திக்கும்
மாதரைத் தம் மார்பகத்தே-அகலகில்லேன் இறையும் என்று
வைத்தார்க்கு என் வாய் மாற்றம்-பரம போக்யமான திரு மார்பில் வைத்தவர்க்கு -தூத வார்த்தை
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே-வளையல்கள் இடை ஆடை -உஜ்வலமான –
இவற்றை நீர் கொண்டு போனீர் என்று சொல்லுமின் -அறிவிப்பே அமையும் –

சில வண்டுகளைக் குறித்து –உங்கள் வார்த்தை விலை செல்லும்படி-
பிராட்டி சந்நிதியிலே சொல்லுங்கோள்-என் தூது வார்த்தையை -என்கிறாள் –

தூதுரைத்தல் செப்புமின்கள்-
என் தூது வார்த்தையை அறிவிக்க அமையும் –கொண்டு வர வேண்டா –

தூ மொழி வாய் வண்டினங்காள்-
இனிய பேச்சை உடைய வண்டுகாள் –
அவன் விரும்பானாகிலும் உங்கள் பேச்சு இனிமையாலே-வர வேண்டும்படி அன்றோ பேச்சு இருப்பது –
பெருமாளும் இளைய பெருமாளும்-கையும் வில்லுமாய் வருகிறபடியைக் கண்டு
இவர்கள் வாலி வரவிட வருகின்றார்களோ -என்று அஞ்சி-மகாராஜர் நாலு மூன்று யோசனை அவ்வருகே ஓட மீண்டு வந்து –
த்வயம் வயச்ய அஸி ஹ்ருதயா மேஹி ஏகம் துக்கம் சுகம்ச நௌ-சுக்ரீவம் ராகவோ வாக்யம் இதி உவாச பிரக்ருஷ்ட வத் -கிஷ்கிந்தா -5-18-
இன்பமும் துன்பமும் நம் இருவருக்கும் ஒன்றே -என்று-
அத சம்ஸ்கார சம்பன்ன ஹனுமான் சசிவோத்தமா-உவாச வசனம் ச லஷ்மணம் அர்த்ததவத் மதுரம் லகு -யுத்தம் -148
பின்பு சாஸ்திர பயிற்ச்சியால் உண்டான பழக்கத்தாலே-நிறைந்தவரும் அமைச்சர்களில் சிறந்தவருமான அனுமான்
வந்து அழகாயும்-பொருளோடு கூடினதாயும்-இனிமையாகவும்-சுருக்கமாயும்
உள்ள வார்த்தைகளைச் சொன்னார் -என்கிறபடியே-வார்த்தை சொன்னான் அன்றோ –

மாற்றம் அது உரைதலோடு வரிசிலை குரிசில் மைந்தன்
தேற்றம் உற்று இனி இவன் அங்கு செவ்வியோர் இன்மை தேறி
ஆற்றலும் நிறைவும் கல்வியும் அமைதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லை யாம் என விளம்பலுற்றான் -கம்பர் கிஷ்கிந்தா மராமர படலம் 19-22-

போதிரைத்து மது நுகரும் பொழில்-
பூக்களிலே இரைத்துக் கொண்டு-தேனைக் குடிக்கும் பொழில்
அன்றிக்கே
மலர்கிற காலத்தில் சென்று தேனைக் குடிக்கும் சோலை-என்னுதல்-
போது அறிந்து வானரங்கள் -ஆங்கு அலர்ந்த போது அரிந்து கொண்டு -போது -காலம் புஷபம் —
உங்களுக்கு மீட்சியில் ஆகவும் வேண்டா-ததிமுகன் முதலானோர் காவலும் இல்லை-
முன்பு தேனைக் குடிக்கிறவர் களோடு தேனைக் குடிக்க அமையும் –
நித்ய சூ ரிகள்-திருவடித் தாமரைகளில் இருந்து பெருகும் மது பானம் பண்ணிக் கொண்டு அன்றோ இருப்பார்கள் –

மூழிக் களத்து உறையும் மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு –
நீங்கள் சொல்லும் அத்தனையே வேண்டுவது
உங்கள் வார்த்தை கேட்டிருக்கவும்-கேட்டுக் கொண்டாடுகைக்கும்-புருஷகாரம் உண்டு -என்கை-

என் வாய் மாற்றம் தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே-
என் வார்த்தையான தூது வார்த்தையைச் சொல்லப் பார்த்தீர் கோள் ஆகில்
என்னுடைய அழகிய வளையும் கலையும் சீர்கேடு-அடைந்தபடியைச் சொல்லும் கோள்
அன்றிக்கே
செப்புதிரே யாகில் -அது தானே எனக்கு சுடர் வளையும் கலையும் ஆம் -என்னுதல்
அறிவிக்கும் அதுவே குறை-அவன் வரவு தப்பாது –

——————————————————————————————-

சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-

அதி உஜ்வலமான அவயவ சோபை –
சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த-படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும்
பங்கயக் கண்–படர் புகழான் -வளையல்களையும் கலையையும் கொண்டு தோளையும் விட்டு விலகிப் போனவன்
-எண் திசையும் அறிய இயம்புகேன் -ஸ்ரீ ஸூ க்தி நாதன் பெயர் கொண்டவன் ஆழ்வாரை இப்படி பண்ணினான் என்ற பெயரே நிலை நிற்கும் படி பெற்றான்
லோக பிரசித்தம் -பிரதம தம விபூஷணம் -வலி த்ரயம் தாமோதரன் -போலே –
கலந்த போதும் பிரிந்த போதும் வாசி இல்லாமல் -புண்டரீகாக்ஷன் -கூடினால் ஆழ்வாரை பெற்ற -பிரிந்தால் இவர் பாடல் கொண்டு லோகம் திருந்த
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குறுகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே-ஒரே நாள் -ஒரே வார்த்தை ஒரு சொல் -ஒன்றே மருந்து ஒரே தடவை பிரபத்தி
நித்ய அக்னி கோத்த்ரம் போலே இல்லை -ஓர் ஆர்த்த ரக்ஷணம் அத்விதீயம் நிகர் அற்ற சொல் -துடிப்பைப் போக்கி -தெளிவான –
பரப்பு அற்று ஒன்றான வார்த்தை -பணியீரே -கௌரவத்துடன் சொல்கிறாள்

சில குருகு இனங்களைக் குறித்து-சிலரோடு கலந்து-அவர்களைத் துறந்து
அதுவே புகழாக இருக்கப் போருமோ-என்று அறிவியுங்கோள் –என்கிறாள்

சுடர் வளையும் கலையும் கொண்டுஅரு வினையேன் தோள் துறந்த-
இத்தலையில் தனக்கு பிரயோஜனமான பாகத்தை கொண்டு-என்னைப் பொகட்டுப் போனான் -என்றது
தனக்கு தாரகமானவற்றைக் கொண்டு-அல்லாதவற்றை பொகட்டுப் போனான் -என்றபடி –
சங்கம் சரிந்தன -என்ற திருப் பாசுரத்தில் கூறிய படியே-
எல்லாப் பொருள்களும் உருக்குலைந்து கிடக்க –சுடர் வளையும் கலையும் -என்று விசேடித்து கூறியது என் என்ன –
கைக்கு அடங்கியதையும் கொண்டு-மடிச் சரக்கையும் கொண்டு போனான் என்றது-
முக்கிய பொருள்களை மாத்ரம் கொண்டு போனான் என்றபடி –
ஆதரித்து வந்து கலந்தவன்-பொகட்டுப் போம்படியான-பாபத்தை செய்துள்ளேன் -என்பான் -அரு வினையேன் -என்கிறாள்
தோள் துறந்த -என்றதனால்-அவன் தான் அந்தக் காதல் எல்லாம் கொண்டும்-
தோளுக்கு அவ்வருகு போக மாட்டிலன் போலே காணும் -என்பதனை தெரிவித்த படி –

படர் புகழான் –
தன்னால் அல்லது செல்லாதவரை இங்கனம் விட வல்லார் இல்லை –என்ற இதுவே புகழாக
கொடியும் காள வாத்யமும் எடுத்து புகழ் வித்துக் கொண்டு இருக்கிறான் ஆயிற்று –

திரு மூழிக்களத்து உறையும் –
சேயன் -என்று ஆறி இருக்க ஒண்ணாதபடி-திரு மூழிக் களத்திலே நித்ய வாசம் செய்கிறவனை –

பங்கயக் கண் சுடர் பவள வாயனைக் –
பொகட்டுப் போனான் என்று பொகட்டு இருக்க ஒண்ணாத-அவயவ சோபையை உடையவனை –
அன்றிக்கே
என்னை இப்பாடு படுத்துகையாலே-புதுக் கணித்த அவயவ சோபையை உடையவனை –என்னலுமாம் –

கண்டு-
அந்நோக்கையும் முறுவலையும் காண்கையாலே-உங்களுக்கு என்னைக் காட்டிலும்-பேறு முற்பட்டே அன்றோ இருக்கிறது –

ஒரு நாள் –
ஒரு நாளே அமையும்-பிற்றை நாள் சொல்ல வேண்டுவது இல்லை
இரண்டாம் நாள் சொல்லுமது பழி என்று இருக்குமவள் அன்றோ –

ஒரு தூய் மாற்றம்-
ஒப்பற்றதான நல்ல வார்த்தை –முடிகிறாள் ஒரு பெண் பிழைக்கச் சொல்லுகிற வார்த்தை அன்றோ –

படர் பொழில் வாய்க் குருகினங்காள்-
படர்ந்த சோலை இடத்திலே வசிக்கின்ற குருகு இனங்காள்-
நான் பட்டினியால் மெலிந்து கிடக்க-நீங்கள் உண்டு களித்து இருக்கப் போருமோ-
நான் முடிந்தால் இந்த சோலைப் பரப்பு எல்லாம் நோக்கித் தருவார் யார் –

எனக்கு-
என் வடிவு இருக்கிறபடி கண்டீர் கோளே-

ஓன்று பணியீரே –
இரண்டு வார்த்தை சொல்ல வேண்டா-
பணியீர் -என்றதனால்-
தான் ஜனக குலத்தில் பிறக்கவுமாம்-எதிர்த்தலை பறவைகள் ஆகவுமாம்
பகவத் விஷயத்தில் சேர்ப்பாரை சொல்லும்படி இது-என்று தெரிவிக்கிறார்கள் –

—————————————————————————————————

எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-

வடிவு அழகு ஒப்பனை உடையவர்க்கு வார்த்தை –
எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து-இரு பெருமை -பொழில் இடத்தில் போக்யமான மதுவை தேடா நின்று
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்-ஸம்ஸலேஷித்து வர்த்திக்கும்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்-சூழ்ந்த -கனத்த மதிள்கள்-பரிவர்-அன்றோ -விட்டாலும் பரிவது ஸ்வரூபம்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-தன்னிலும் -புனம்-காயாம் பூ நிறம் -தர்ச நீயமான -பணியீர் -சொல்லி அருள வேண்டும்

சில வண்டுகளையும்-தும்பிகளையும் குறித்து-அங்கு உள்ளவனுக்கு என்ன தீங்கு வருமோ -என்று
அஞ்ச வேண்டாதபடி காவல் உள்ள இடத்தில்-அவன் இருக்கப் பெற்றோம்-
இனி எனது துன்பத்தை அறிவியுங்கோள் -என்கிறாள் –

எனக்கு ஓன்று பணியீர்காள் –
நீங்கள் ஒரு வார்த்தை சொல்லாவிடில்-முடியும் நிலையாய் அன்றோ என் நிலை இருக்கிறது –
ஒன்றுக்கு மேல் சொன்னால் அவனுக்கு ஸ்வரூப நாசம் –

இரும் பொழில் வாய் இரை தேர்ந்து –
பரந்த சோலை இடம் எங்கும் புக்கு இரை தேடி –

மனக்கு இன்பம் பட மேவும் -வண்டினங்காள் தும்பிகாள்
மனத்திலே இன்பம் பிறக்கும்படி அன்றோ-நீங்கள் கலக்கிறபடி –
விரகத்தால் வரும் கிலேசம் வாராத படியாக-கலவா நின்றதாயிற்று -என்றது
பிரிவிலும் வற்றாத ஆனந்தம் உண்டாம்படி-கலவா நின்றதாயிற்று -என்றபடி –

கனக்கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும் –
கனத்து திண்ணியதான மதிள் சுற்றும் சூழ்ந்து உள்ள-திரு மூழிக் களத்தில் நித்ய வாசம் செய்கிறவருக்கு
அத்தலையில் அழகினை நினைத்தால்-பாதுகாவல் தேட்டமாய் அன்றோ இருப்பது –
அவனோடு கிட்டிக் கலக்க பெறாமையால் வருவதும்-ஓர் ஆற்றாமை உண்டு
அவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்றும் ஒரு ஆற்றாமை உண்டு
அவற்றிலே ஓன்று தீரப் பெற்றது முந்துற முன்னம் –
ஸ்ரீ பரத ஆழ்வான் சந்தோஷமாக ஸ்ரீ பாதுகை பெற்று மகிழ்ந்து திரும்பினால் போலே

புனக்கொள் காயாமேனிப் பூந்துழாய் முடியார்க்கே –
தன் நிலத்தில் காயாவின் நிறம் போலே ஆயிற்று நிலம் இருப்பது –
அவ் வடிவு அழகுக்கு மேலே ஒப்பனை அழகினையும் உடையவருக்கு-
வடிவு அழகு அது
ஒப்பனை அழகு அது
அவ் வடிவு அழகினையும் ஒப்பனை அழகினையும்-அனுபவித்துப் பிரிந்த எனக்கு
ஒரு வார்த்தை சொல்லுங்கோள் –

——————————————————————————————–

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-

அசாதாரண சேஷித்வ சிஹ்னம் -திருத் துழாய் முடியான் -தம்மைக் கொண்டு தாம் போவது குற்றம் –
பிறர் வஸ்துவை அபகரிப்பது திருட்டு -பக்தானாம் -என்று அன்றோ இருப்பது –
உனது சொத்தை கொண்டு போகாமல் -இரண்டு தப்பும் செய்தாயே -பராங்குச நாயகி உன் சொத்து
-சேஷமானதை விட்டு -ஆழ்வார் உடைய சேஷம் உம் திருமேனி அன்றோ –
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு-சர்வ சேஷித்வ ஸூ சகம் -ஸ்ப்ருஹ நீயமான ஸூ தர்சனம் -மதிப்புடன்
-அப்ராக்ருதமான -திருக்கையில் கொண்டு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு–நீருக்கு அஞ்ச வேண்டாத படி -கமான சாதனம் இளமை –
ஐந்தில் ஒன்று பெற்றான் -அவன் நம்மை அளித்துக் காப்பான் -வாயு குமாரன் -ஆகாசம் வழி -கடலை தாவி பூமா தேவி
கண்டு நெருப்பை வைத்தான் -பஞ்ச பூதங்களும் தடங்கல் பண்ண வில்லையே அதே போலே உங்களுக்கும் –
ராம தூதன் -மூன்று தடங்கல் வர சீதா தூதனுக்கு தடங்கல் ஒன்றும் இல்லையே –
பரத்வ ஸூ சகம் -அழகு -சந்நிஹிதன் ஸூ லபன் மூன்றும் சொல்லி -மாலே மணி வண்ணா ஆலின் இலையாய் –
வண் துவராபதி மன்னன் -மணி வண்ணன் -வா ஸூ தேவன் வலை உள்ளே அகப்பட்டேன்
பிராட்டிக்கு இரு பிறப்பு இரும் பொறை கற்பு -மூன்றும் -களி நடம் புரியக் கண்டேன் -திருவடி
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப-வை வர்ணயம் -வெளுத்து -பார்த்ததும் மலரும் கண்கள் நீர் விரஹத்தால் சோக அஸ்ரு-
தாம் தம்மைக் கொண்டதனால் தகவன்று என்று உரையீரே-தகவு -தயா கிருபா -தத்துவம் அன்று தகவு அன்று
-புருஷகாரம் ஸ்வரூபம் -கருணை ஸ்வபாவம் இரண்டுக்கும் சேராது –
சேஷித்வம் போக்யத்வம் சீலத்தவம் -மூன்றும் உள்ள தாம் -தயைக்கு போராது என்று உரையீர் -உபசரித்து வார்த்தை சொல்கிறாள்
திரு மேனியை விட்டுப் போகக் கூடாதோ
உண்ணும் சோறு -கள்வன் கொல்-பதிகங்களில் இதே -கரியான் ஒரு காளை வந்து -வெள்ளி வளைக் கைப் பற்ற பெற்ற தாயாரை விட்டு அகன்று –
கண்ணனுக்கு வெள்ளி தான் பிடிக்கும் -வெண்ணெய் பால் -போலே -அணி ஆலி புகுவர் கொலோ –
தான் ஜீவனம் தேடித் போனவள் என் ஜீவனம் கொண்டு போக வேண்டுமோ -பரம பாகவதர் முகம் பார்த்து -அழுத முகம் கழற்றி வைத்து போகக் கூடாதோ
இதே -திண்ணம் இள மான் புகுமூர் திருக் கோளூரே-சரீரம் படைத்த பயன் -இப்படி அழும் பாகவதர்களை பார்த்துக் கொண்டே இருப்பதே ஜீவனம்
-பெண்ணாகவுமாம் சிஷ்யர்களாகவும் பகவத் சம்பந்தம் உடையவள் அன்றோ -பெருமாள் திரு முகம் பரம பாகவதருக்கு உத்தேச்யம்

ஒரு குருகைக் குறித்து
எல்லை இல்லாத இனியரான தாம் போம் போது-தம்மைக் கொண்டு போகை
தம்முடைய தகவுக்கு போருமோ -என்று-விண்ணப்பம் செய் -என்கிறாள் –

பூந்துழாய் முடியார்க்கு –
திரு முடிக்கு ஒப்பனையான வளையம் இருக்கிறபடி –
பாண்டியன் கொண்டை -வளையம் திருத் துழாய் மேலே சாத்தி –

பொன் ஆழிக் கையார்க்கு –
திருக் கைக்கு வளையம் இருக்கிறபடி –

ஏந்து நீர் இளங்குருகே –
நிறைந்த புனலிலே தரையிலே நடப்பாரைப் போலே-நடக்க வல்ல இளங்குருகே
நீ பறந்து செல்லும் ஆற்றலால் உண்டாகும் பயன் நான் பெற அன்றோ புகுகிறது -என்றது-
நடுவே தண்ணீர் இடைச் சுவராய் இருந்தாலும் தேங்க வேண்டா அன்றோ உனக்கு -என்றபடி –

திரு மூழிக் களத்தார்க்கு-
வளையம் போலேயும்-ஆபரணம் போலேயும்-அவ் ஊரில் நிலையும்-அழகுக்கு உடலாய் இருக்கிறபடி –
அவை விக்கிரகத்துக்கு ஆபரணமாம் போலே-
சீலம் ஸ்வரூபத்துக்கு ஆபரணம் அன்றோ –அழகும் குணங்களும் ஒரு தலைத்த விஷயம் அன்றோ –

ஏந்து பூண் முலை பயந்து –
பூண் ஏந்து முலை பயந்து –
ஆபரணங்களைத் தரிக்கக் கூடிய முலைகள் பசலை நிறத்தை தரித்து –ஆபரணங்கள் கலவியின் பொருட்டு கழற்றுமவை-
பசலை நிறம் கல்வியால் அல்லாது கழலாதே அன்றோ –பிரிவில் இப்படி இருக்கை அன்றோ பெண் தன்மை யாவது –
இங்கனம் இராத அன்று ஆண் தன்மை யோடு வேறுபாடு கூடாதே அன்றோ –
புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் அவ்வளவில்-அள்ளிக் கொள் வற்றே பசப்பு –

என் இணை மலர்க் கண் நீர் ததும்ப –
இணை மலர் போலே இருக்கிற என் கண் –சோகக் கண்ணீருக்கு இலக்காகும்படி –
அவன் சொல்லும்படி அறிந்து இருக்கையாலே சொல்லுகிறாள் இத்தனை போக்கி-அல்லாத போது தன் கண்ணை இப்படி சொல்லக் கூடாது அன்றோ –
ததும்ப -என்கிறாள்-
ஆனந்த கண்ணீருக்கு தகுதியான கண்-சோகக் கண்ணீராலே நிறைந்து இருத்தலின் –
கண்களுக்கு இலக்கு நீராக –இருக்க வேண்டி இருக்க நீர் தண்ணீர் ஆவதே —
கடாக்ஷித்து உஜ்கஜீவனம் அளிக்க வேண்டிய கண்கள் இப்படி ஆவதே –

தாம்-
பூந்துழாய் முடியார்-பொன் ஆழிக் கையார்-திரு மூழிக் களத்தார் –என்று வைத்து தாம் என்கிறாள் அன்றோ –
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு -என்கையாலே-வடிவு அழகினைச் சொல்லிற்று
திரு மூழிக் களத்தாற்கு – என்கையாலே குணம் சொல்லிற்று-
ஆக
இப்படிப் பட்ட வடிவு அழகையும்-குணங்களையும் உடைய தாம் -என்றபடி –
இவற்றையே பற்றாசாக கொண்டு அன்றோ தூது விடுகிறாள் -வெறுப்பு -தீ வினையேன் -சொல்லக் கூடாது பார்த்தோம் —

தம்மைக் கொண்டு அகல்தல் –
தாம் அகல வேண்டினால்-இவ் வடிவை பிரிந்தார் பிழையார்-என்று அதனை வைத்தே அன்றே போவது –
தம்மைக் கண்ணாடி புறத்தில் கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த நிலைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது –
அத நு கிம் துக்கதாம் ச அஹம் இஷ்வாகு நந்தனம்-இமாம் அவஸ்தாம்ஆபன்ன ந இஹ பஸ்யாமி ராகவம் -அயோத்யா -59-26-தசரதன் புலம்பல்-
இந்நிலையை அடைந்த நான் இஷ்வாகு வம்சத்தில் பிறந்த இராமனை-இங்கு காண்கிறேன் இல்லை -என்கிறபடியே-
ஆற்றாமை எல்லாம் சொல்லுவிக்கும் அன்றோ -என்றது-
வா போகு-வந்து ஒரு கால் கண்டு போ முன் அழகும் பின் அழகும் கண்டு சக்கரவர்த்தி –
எனக்கு ஓர் ஆற்றாமை உண்டான அளவிலே கிட்டி நின்று முகம் காட்டி-ஈரக் கையாலே தடவி நோக்குகைக்கு அன்றோ தம்மைப் பெற்றது –
தம்மைப் பிரிந்து நோவு படுகிற இற்றைக்கு மேற்பட ஆற்றாமை இல்லை அன்றோ எனக்கு-
இவ்வளவில் பெருமாளை நான் காண்கின்றிலேன் -என்கிறாள் -என்றபடி –
அன்றிக்கே
தாம் தம்மைக் கொண்டு அகல்தல்-தாம் என்னைக் கொண்டு அகலுமது ஒழிய தம்மைக் கொண்டு அகலக் கடவரோ-
தம்மைக் கொண்டு அகல வேண்டினால்-தமக்கு உரிமைப் பட்ட பொருளைப் -ஆழ்வார் ஆகிய நாயகியை -பொகட்டு-
பிறர்க்கு உரிமைப் பட்ட பொருளையோ -இறைவனது திரு மேனியை -கொடு போவது -என்னுதல்-
பக்தர்களுக்காக அன்றோ அவன் உடம்பு இருப்பது -என்றபடி-
தனக்கே யாக எனைக் கொள்ள வேண்டும் -என்றே அன்றோ இத்தலை இருப்பது -என்றவாறு –
உனக்கே என்று சொல்லாமல் -ஆழ்வார் அருளிச் செய்ய -அழகில் மயங்காமல் கைங்கர்யம் செய்ய -படர்க்கையில் சொல்ல
பக்தானாம் -உமக்கே யாக என்னைக் கொள்ளும் இதே -சொல்லாமல் தனக்கே யாக -சத்ய ஸங்கல்பன் அன்றோ –

தாம் தம்மை -ஸ்வரூபம் ரூபம் -சதைக ரூப ரூபாயா –
ஆதமைவ பந்து -மனசே பந்த மோக்ஷ ஹேது -ஆத்மாவால் ஆத்மாவை உசற்ற -ஆத்மாவால் ஆத்மாவை தள்ளி விடாதே –
நல்ல நெஞ்சே நாம் தொழுதும் -முந்துற்ற நெஞ்சே —

தகவன்று என்று உரையீரே –
காதலுக்கும் மிருத தன்மைக்கு சேராத மாத்ரமே அன்றிக்கே
இது அருளே இல்லாதவர் செயல் என்று சொல்லுங்கோள்
பெண் கொலைக்கு அஞ்சாதவர் செய்ய்மவற்றைச் செய்தீர் -என்று சொல்லுகோள்-

———————————————————————————————————

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-

ஆஸக்தியால் நிரவதிக தயாவான் -தகவு இல்லை என்று அருளிச் செய்த உடனே -இப்படி -சந்நிஹிதன் ஆனபின்பு –
எனது சத்தை அழிவதற்கு முன்பு சொல்லுமின் – தடம் புனல் வாய் இரை தேர்ந்து-பெரிய பொழில் –
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்-மிக ஆனந்தம் -உண்டாம் படி சேர்ந்து வர்த்திக்கும் –
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்-திருப்பி பரிவட்டம் -கட்டுக் குலைந்து
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே-ஸ்வரூபம் குலைந்து போகும் முன்பு -ஆஸ்ரித அனுக்ரகம் செய்ய சந்நிஹிதன் ஆனபின்பு
தகவன்று என்று உரையீர்கள்-பிரயோஜனம் இல்லாமல் போகுமே –
அவர் ஆவி துவரா முன் -அருளாத நீர் -அருளாழி புட் கடவீர்-1-4-போலே இதிலும் –

சில அன்னம் களைக் குறித்து
நான் முடிவதற்கு முன்னே-அவனுக்கு என் நிலையை-அறிவியுங்கோள்

தகவன்று என்று உரையீர்கள் –
அவனுடைய உண்மையினை அழிக்கைக்கு -தகவு இல்லை என்னுங்கோள் -என்றது
அருள் இல்லாதவன் என்று உரையுங்கோள் -என்கிறாள் -என்கிறபடி –
அவனுக்கு நிரூபகம் அருள் ஆகையாலும்-ஸ்வரூப நிரூபக தர்மமே தயை தானே –
அவனுடைய மர்மத்தை அறிந்தவள் ஆகையாலும்-ஆன்ரு சம்சயம் கிருபை தான் தர்மம் சீதை பெருமாள் இடம் -சொல்லி
-அதனால் இவள் அறிந்த மர்மம் -அதனை இல்லை -என்கிறாள் –

தடம் புனல் வாய் இரை தேர்ந்து –
மிக்க நீர் வளத்தை உடைய பொய்கைகளிலே இரை தேடி –
இதனால் கலவிக்கு உறுப்பான செய்கையேயாய் இருப்பதனை-தெரிவிக்கிறாள் –

மிக வின்பம் பட மேவும்
இன்பம் மிகப் பட மேவும் –
இன்பம் கரை புரளும்படி அன்றோ நீங்கள் கலக்கிறபடி –பிரிவு தேட்டமாய் தலைக்கே மேலே ஏறிய இன்பமாய்-
செல்லுகிறபடியைத் தெரிவிக்கிறார்கள் -இதனால் என்றது –பிரியா விடில் இருவரும் அழியும்படி ஆயிற்று இவை கலக்கிற படி -என்றவாறு –

மெல் நடைய அன்னங்காள் –
கலவியின் மிகுதி நடையிலே தொடை கொள்ளலாம் படி-காணலாம் படி-திரிகின்றன ஆயிற்று –

மிக மேனி மெலிவு எய்தி –
மேனி மிக மெலிவு எய்தி –
சரசமாக திரிவது எல்லாம் குலைந்ததே அன்றோ உங்களுக்கு –கண்டீர் கோளே நான் இருக்கிற படி –
என் நிலையைக் கண்டால் தரித்து இருக்கலாய் இருந்ததோ-
உங்கள் கலவியின் மிகுதியை போன்றதாகும்-என் உடம்பின் மெலிவும் –

மேகலையும் ஈடு அழிந்து –
மேவுகின்ற கலை-புடைவையும் கட்டுக் குலைந்து –மேகலை தொங்கும் போது உடல் நல்ல நிலையில் இருக்க வேண்டுமே –

என் அகமேனி ஒழியாமே –
புறம்புள்ளன அடையக் கழன்றன-
இனி அகவாயில் உள்ள ஆத்மாவும் நீங்குவதற்கு முன்னே -என்றது-நான் முடிவதற்கு முன்னே -என்றபடி –

திரு மூழிக் களத்தார்க்கே –
தன்னை ஒழிய செல்லாதார் உடைய உயிர் களைக் காப்பாற்றுவதற்காக-வந்து கிடக்கிறவருக்கு-
திரு மூழிக் களத்தார்க்கு தகவு அன்று என்று உரையீர்கள் –
பின்னானார் வணங்கும் சோதி -சத்தை கொடுக்க அன்றோ இங்கே சந்நிஹிதன் ஆனது –
பொரி புறம் தடவி அத்தலையைப் பேணி வந்தது அமையும்-
இனி அவர் படியை நேராக சொல்லிப் போருங்கோள் -இவள் முன்பு அப்படி பேணினாளோ -என்ன
என் தவள வண்ணர் தகவுகளே -2-4-5-என்று திருத் தாயார் சொல்லிற்று பொறாமல்-தகவுடையவனே -என்று
கெடுவாய் ஆகரத்தில் தகவு மறுக்குமோ -என்றாலே அன்றோ-
ஆகரம் -கனி -பொன் முதலியன விளையும் இடம் –அதனைச் சொல்லுகிறாள் இங்கு –
குணாதிகன் சொல்லி -ரசம் இல்லாத பொருள்களுக்கு சக்கரை போன்றவற்றை மேலே தடவி –
பிரணியித்தவம் இல்லாதவனுக்கு பிரணயித்தவம் ஆரோபித்து –
முன்பு -தகவுடையவனே பரிந்து பேசி -கண்ட பலன் எல்லாம் போதும் இனி சொல்ல மாட்டேன் -என்றபடி –

———————————————————————————–

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

சம்சாரம் நிவர்த்திக்கும் -விஸ்லேஷ ரூபம் வியாதி வராது
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை-விஸ்லேஷம் ஒரு காலம் வாராத படி -விலக்ஷணம் தேஜஸ் உடைய
-நித்ய சந்நிஹிதன் ஆனபடியால் வந்த தேஜஸ்
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்-பிரிந்தால் தரியாத படி -அழகிய முக்த யுக்தியை உடைய
மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லை கிளி மொழியாள்-சொன்னத்தை சொல்லுபவள் -ஆர்த்தியால் அக்ரமமாகச் சொன்ன
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த-பிரேமத்தில் குறை இல்லாமல் -ஆழ்வார் அனுபவித்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே-போக்தாக்கள் நெஞ்சில் நின்றும் போகாமல்
-பகவத் விஸ்லேஷ ஹேது சம்சார வியாதி தீர்த்துக் கொடுக்கும்

நிகமத்தில் –
இத் திருவாய் மொழியை கற்பார்க்கு-பிரிவுக்கு அடியான பிறப்பாகிய நோயினை
இது தானே அறுத்துக் கொடுக்கும் –என்கிறார் –

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும்-
ஒரு நாளும் விட நினையாமல்-அவ் ஊரில் நித்ய வாசம் செய்யுமவனை –

ஒண் சுடரை –
பின்னானார் வணங்கும் சோதி -திரு நெடும் தாண்டகம் -10-என்கிறபடியே-அவ் ஊரில் நிலையால் வந்த புகர் இருக்கிறபடி –
அன்றிக்கே
அவ் ஊரில் இனிமையால் வந்த புகர் என்னுதல் –பிற் பாடர்க்கு முகம் கொடுக்கும் நீர்மையால் வந்த புகர் -என்றபடி –

ஒழிவில்லா –
அவன் அவ் ஊரை நீங்கில் தரிக்க-மாட்டாதவாறு போன்று-அவனை ஒழியில் தரிக்க மாட்டாதவள் -என்கை-
நச சீதா த்வயா ஹீநா நசாஹம் அபி ராகவ-முகூர்த்தம் அபி ஜீவாவ ஜலாத் மச்த்யாவிவோத்த்ருதௌ-அயோத்யா -33-31-
எனப்ப்படுமவள் அன்றோ இவளும் –

அணி மழலைக் கிளி மொழியாள் –
அழகிய இளமையான கிளியின் பேச்சுப் போல் இருக்கிற பேச்சினை உடையவள் –

அலற்றிய சொல் –
தன் ஆற்றாமையாலே-முறை பிறழச் சொல்லிய சொல் –

வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன்-
பிராட்டி படியில் ஒன்றும் குறைவு அற்று இருக்கிற ஆழ்வார் –

வாய்ந்து உரைத்த –
கிட்டி உரைத்த -என்றது-பாவ பந்தத்தால் சொன்ன -என்றபடி –

அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் –
கேட்டவர்கள் நெஞ்சினை ஒரு நாளும் விடாமல் தங்கி இருக்கிற இப்பத்து -என்றது-
இப்பாசுரத்தை கேட்டார்க்கு-அக்காலத்தில் போலே-எல்லாக் காலங்களிலும் இன்பம் பிறக்கும்படி ஆயிற்று இருப்பது -என்றபடி –

நோய் அறுக்குமே –
பகவானைப் பிரிதல் ஆகிற நோயை அறுக்கும் -என்றது-கலந்து பிரிந்து துக்கம் பட வேண்டா
பிரிவு இல்லாத தேசத்தில் புகப் பெறுவார் -என்றபடி –

————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸ்ரீயம் வியோகி ஜனம் ஹந்த்ரு
நிஜ ஆபீ ரூப்யம்
விஸ்ம்ருத்ய
ஸம்ஸ்ருதியா ஜனகி
அர்ச்சா ஹரே
கொசன தத் பிரதி போதனாயா
தூதி சக்கர விகதான்

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ரம்யத்வாத் -ஸ்ரீ துளஸ்யா
ஸ்ரீ த ஜன சரித்ரத்த வேன
பத்மாஷரா தாயா
ஸ்வாமித்வத்த
சத் பரஞ்சோதி கர்த்தநதகா
ஸ்ரீ தரத்வ
அதி கீர்த்தயா
அசதி புஷப சியாமளா
ரத சரண முககா
ஸுரே ஸ்ரீ மான் சடாரி
கடக முக

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 87-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்————87-

—————————————————————————-

அவதாரிகை –

இதில்
வடிவு அழகு பற்றாசாக
தூது விட்டு அருளின திவ்ய ஸூக்தியை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானமாக மாத்ரமாக சென்ற இடத்தில்
பாக்ய வைகல்யத்தாலே
குண அனுபவத்தால் வந்த ப்ரீதி கீழ்ப்பட்டு
அப்ரீதி அம்சமே தலை எடுத்து
அவனுடைய சௌந்தர்யத்தாலே
அபஹ்ருத சித்தராய்
அவ் வழகைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் -என்று
கண்ணால் கண்ட பஷிகளை தூது விடுகிற
எங்கானலில் அர்த்தத்தை
அருளிச் செய்கிறார் எம் காதலுக்கு அடி-இத்யாதியாலே -என்கை –

—————————————————————————

வியாக்யானம்–

எம் காதலுக்கு அடி –
என்னுடைய பிரேமத்துக்கு ஹேது –

மால் ஏய்ந்த வடிவு அழகு என்று –
சர்வேஸ்வரன் உடைய
ஸ்வரூப அனுபந்தியாய்
அனுரூபமான விக்ரஹ சௌந்தர்யம்-என்று –

அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் –
அத்தசையில்
அவன் சௌந்தர்யமே பற்றாசாக -ஆலம்பனமாக –
அவ்விடத்தில்
அவன் விஷயமாக
திரு மூழிக் களத்து உறையும் அவன் விஷயமாக

எங்கும் உள்ள புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன்-
யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்னும்படி
சர்வ திக்குகளிலும் உண்டான
பஷி சமூஹத்தை
தம்முடைய பிராண ரஷக அர்த்தமாக
தூத பரேஷணம் பண்ணும் ஆழ்வார் –

அதாவது –
செங்கால மட நாராய் -என்று தொடங்கி –
என் குடக் கூத்தர்க்கு என் தூதாய் -என்றும்
அமர் காதல் குருகினங்காள் -என்று தொடங்கி

தமரோடு அங்கு உறைவாருக்கு தக்கிலமே கேளீரே -என்றும் –
தக்கிலமே கேளீர்கள் -என்று தொடங்கி-கொக்கினங்காள் குருகினங்காள் செக்கமலத் தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய்
அக்கமலத்திலை போலும் திருமேனி யடிகளுக்கு -என்றும் –
திருமேனி யடிகளுக்கு என்று தொடங்கி -மாதரைத் தன மார்பகத்தே வைத்தார்க்கு -என்றும்
திரு மூழிக் களத்து உறையும் பங்கயச் சுடர் பவள வாயனைக் கண்டு -என்றும்
புனம் கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கு -என்றும் –
பூம் துழாய் முடியார்க்கு -என்று தொடங்கி-தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீர் -என்றும்
என் அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கு -என்றும்
இப்படி
பூம் துழாய் முடியார்க்கு-என்னும் அளவும்
வடிவு அழகு பற்றாசாக
பல பஷிகளைத் தூது விட்டார் -என்கை-

நம் பிழையும்
சிறந்த செல்வமும்
படைத்த பரப்பும்
தமரோட்டை வாசமும்
மறப்ப்பித்த
ஷமா
தீஷா
ஸாரஸ்ய
சௌந்தர்யங்களை
யுணர்த்தும்
வ்யூஹ
விபவ
பரத்வத்வய
அர்ச்சைகள்
தூது நாலுக்கும்
விஷயம் -என்று இறே-ஆச்சார்ய ஹிருதயத்தில்
நாயனாரும் அருளிச் செய்தது –

அபராத சஹத்வாச்ச விபோஸ் சம்பந்த வைபவாத்
ஐகரச்யாச்ச சௌந்தர்யாத் கடக அனயாதசே முனி -என்று இறே
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் அருளிச் செய்தது

மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்-
ஆழ்வார் திருவடிகள் ஆனவை
தன்னை மனசாலே அனுசந்தித்தவர்களுக்கு
பிரதிபந்தங்களை
தானே சேதித்துப் போகடும் –
துடர் அறு சுடர் அடி -போலே –

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: