பகவத் விஷயம் காலஷேபம் -175- திருவாய்மொழி – -9-6-1….9-6-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

உருகுமால் -பிரவேசம் –

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் -என்று-தம் இருப்பில் நசை அற்றுச் சொன்ன வார்த்தை அன்றோ -மேல்
இவ்வளவில் வந்து முகம் காட்டி இவரைப் பெறுதல் –இல்லையாகில் இழத்தல் –செய்ய வேண்டும்படி யான நிலை ஆயிற்று –
இந்நிலையிலே திருவடி சென்று கிட்டின போது-முன்பு பல நாள் பட்ட துக்கமும் கிடக்கச் செய்தே-பெருமாளும் வாராது இருக்க
சமா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்தி நீ -சுந்தர -36-11-
பன்னிரண்டு ஆண்டு பெருமாளும் தானும் ஒருபடிப்பட கலந்த கலவி வந்து
பிராட்டியின் நினைவுக்கு விஷயம் ஆனால் போலே –
இருத்தும் வியந்து -என்ற 8-6-திருவாய் மொழியிலே -தலைதடுமாறாக பிறந்த கலவி வந்து-நினைவுக்கு விஷயம் ஆயிற்று
இங்கு திருவடி போல்வார் வர வில்லை -ஸத்ருச அத்ருஷ்ட-ஸத்ருச -சம்பந்த பதார்த்தம் –அத்ருஷ்ட வசத்தால் என்றுமாம் –

அதற்கடி-
இவர் மேற்கொண்ட கைங்கர்யத்தை முடியச் செய்து-தலைக் கட்டுகைக்கு தகுதியான ஜீவன அதிர்ஷ்டமாவது –
அன்றிக்கே –-
இவர் சொல்லக் கேட்கையிலே பாரித்துக் கொண்டு இருக்கின்ற ஈஸ்வரனுடைய பாக்யமாவது –
அன்றிக்கே –
பகவானை அனுபவிக்கிற அனுபவத்தால் உண்டான ப்ரீதி-உள் அடங்காமை வழிந்து புறப்பட
இவர் சொற்களைக் கேட்டு பகவத் விஷயத்திலே ருசி பிறக்க இருக்கிற மக்கள் உடைய பாக்கியமாவது –
நின் கண் வேடிக்கை எழுவிப்பேன் -இது அன்றோ ஆழ்வார் செய்த கைங்கர்யம் —
இராமர் பாக்யம் சீதை பாக்யம் -தரணி செய்த பாக்யம் -தவம் உடைத்து தரணி -கம்பர் –
சேர்த்தி சேவை இன்றும் நமக்கு அதிருஷ்டம் -நாம் தான் பாக்கியவான்கள் -மூன்றும் என்றால் போலே –

இப்படி -இருத்தும் வியந்து -திருவாய் மொழியில் பேசப்பட்ட கலவி வந்து நினைவுக்கு விஷயம் ஆயிற்று-
சமாத்வாதச -பிள்ளாய் -இன்று இங்கு வெறும் தரையாய் இருக்கிற நான்-
எங்கள் மாமனார் மாளிகையிலே பன்னிரண்டு ஆண்டு ஒருபடிப்பட இராம குணங்களை விளை நீர் அடைத்துக் கொண்டேன் காண்
என்றாள் அன்றோ –

வீற்று இருந்து ஏழு உலகம் -கலவி என்றாலும் இருந்தும் வியந்து -என்பதில் தான் நெறி மாறி அனுபவம் –
இங்கு -இருத்தும் வியந்து -என்கிற திருவாய் மொழியிலே-மூ வுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்ட
சிறியேனுடைச் சிந்தையுள் நின்று ஒழிந்தான் -என்கிறபடியே
புறம்பு எங்கும் முறையிலே கார்யம் செய்தவன்-இவர் ஒருவர் அளவிலும் அன்றே -முறை கெடக் கார்யம் செய்தது
–8-7/9-6 ஏகார்த்தம் -இரண்டிலும் -சிறிய என் ஆருயிர் உண்ட -இங்கும்
அப்படிப் பட்ட அக்கலவி தான் இப்பொழுது-ஒரு நினைவின் அளவில் இருக்கை அன்றிக்கே-நினைதொறும் -ஸ்ம்ருதி விஷயம் –
அப்பொழுது உண்டான அக்கலவி இன்பத்தை-இப்பொழுதும் அனுபவிப்பதாக ஒரு புத்தி பிறந்தது -என்றது
அப்படியே மேன்மை உடையவன்-அம்மேன்மையும் கிடக்கச் செய்தே-
தாழ நின்று கலந்த குணத்தையும்-வடிவு அழகையும் சொல்லி-அது தான் இப்பொழுதைய அனுபவமே யென்னும்படியாய்
இருப்பது ஒரு புத்தி பிறந்து –
அவனுடைய சீல குணத்தை நினைக்கும் நினைவாலே-உருகுகிறார் -என்றபடி –

விஸ்வரூபம் ரூபம் அத்புதம் ஹரே -நினைத்து -இன்பம் இல்லை -கண் முன்னால் சஞ்சயன் -இன்றும் கண்டால் போலே –
ஆச்சார்ய அனுக்கிரகத்தால் – -நினைவு மாத்திரம் அன்றிக்கே –
நேராக காண்பது போன்ற இன்பம்
மேன்மை -இருத்தும் வியந்த -வாமனன் த்ரிவிக்ரமன் -சொன்னபடி -கார் முகில் வண்ணன் -அழகையும் -சொல்லி –

கடலைத் தரை காண்பாரைப் போலே-இருத்தும் வியந்து -என்கிற திருவாய் மொழியின் அனுபவத்தை-
இதிலே கொண்ட வந்து சேர்ப்பதே நம் முதலிகள் -என்று ஈடுபட்டு அருளிச் செய்வர் நஞ்சீயர்–
அப்ராப்தியும் கிடக்கச் செய்தே-சீல குணத்தை நினைக்கும் நினைவாலே உருகுகிறார் ஆயிற்று
ப்ரீதி இன்மையை உட்கொண்ட குண அனுசந்தானம் காண்-என்று இதற்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் சந்தை-
ஸ்ம்ருதி மாத்ர வியசனம் இருக்கச் செய்தெ -பிரத்யக்ஷ சாமானாகாரம் தர்சனம் இல்லையே -அதனால் அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் –

குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்-
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ-பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி-
நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின-
இராச்சியத்தை-இனிதரு சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ-என்று பார்த்து
இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து
சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித-ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-
மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது -என்கிறபடியே-
சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு
நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –
கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி-பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-
வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று
எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே
அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக-பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு
இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்-பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-
எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில்
கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே
முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே
உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-
நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ
செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்-அன்றியே
கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –
படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே
என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்-உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –
ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது-தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம்
ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது
நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை-உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –
நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை-
குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் காண் –
பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு
விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்-ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-
பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று
சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்-சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்
இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே-
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் -எனபது ஸ்ரீ ராமாயணம் –

எர்ணா குளம் பக்கம் திருக் காட்கரை -பெரிய கோயில் –
போகத்திலே தட்டு மாறும் சீலம் காட்கரையிலே -கரை அழிக்கும் –
ஞானம் -தர்சன் பிராப்தி -ப்ரீதி காரித கைங்கர்யம் வரை -மூன்று தசைகள் உண்டு –
மயர்வறமதி நலம் அருள பெற்று அந்தாமத்து அன்பத்து-அனுபவம் கலந்து –
ஒளியில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய பாரித்து -உகந்து பெற்றார் ஆழ்வார்

—————————————————————————————————

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

ஆச்சர்ய பிரகாரம் அனுபவித்து -அபி நிவேசத்தால் -என் நெஞ்சு சிதிலம் ஆகா நின்றது –
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை-மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–நினைக்கும் -பொருந்தி வர்த்திக்கும்
-ஆச்சர்ய ஸுந்தர்யம் ஸுசீல்யம் -அனுபவ பிரதம உபகரணம் -நெஞ்சு -த்ரவியா நிற்க -ஆல் -விஷாதம் –
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி-பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்-வேட்க்கை –
அணு போலே இல்லாமல் பெருகி -ஆல்-விஷாதம்
அனுபவ சாரஸ்யம் -பொறுக்க முடியாமல் அபி நிவேசம் -அதி பிரவ்ருத்தம் ஆகா நின்றது -அத்யந்த சபலன் -தொண்டனேன்
-மனசு ஸைதில்யாம் மாற்றவோ -அபி நிவேசம் அகம் சுரிப்படுத்தவோ -அனுபாவ்ய குணாதிகனை விலக்கவோ-ஆஸ்ரய கரமான
சாபல்யத்தை தவிர்க்கவோ –

திருக் காட்கரையிலே எம்பெருமானுடைய-ஆச்சர்யமான செயல்களை நினைதொறும்
என் மனம் உருகா நின்றது –என்கிறார்-

உருகுமால் நெஞ்சம் –
அனுபவத்துக்கு முதல் கருவியான-மனம் உருகா நின்றது –
அனுபவத்துக்கும்-அனுபவித்து சுகம் பெறுதற்கும்-மனம் வேண்டும் அன்றோ -என்றது –
நீந்தப் புக்கவனுக்கு வாய்க்கரையிலே -ஆற்றின் அருகிலேயே -தெப்பம் ஒழுகுமாறு போலே-கருவியான மனம் உருகா நின்றது -என்றபடி –
தொழுது எழு-1-1-1-என்கைக்கும்-
நீயும் நானும் இந்நேர் நிற்கில் -1-10-6-என்கைக்கும் மனம் வேண்டுமே –
எதிர் தலையை உண்டாக்கி கலக்க அறியான் காணும்-கலப்பதற்கு இரண்டு தலையும் வேண்டும் என்று இரான் –

உயிரின் பரம் அன்றி பெருகுமால் வேட்கையும் –
உயிரால் பொறுக்க ஒண்ணாதபடி ஆசை பெருகா நின்றது –
பிள்ளாய் -அணு அளவிதான இவ் உயிரின் அளவு அன்று-
ஆற்றுப் பெருக்கு போன்று மென்மேலும் என -பெருகா நின்றது -என்பார் -பெருகும் -என்று நிழல் காலத்தில் அருளுகிறார்
ஆல் –
எனபது துக்கத்தின் மிகுதியைக் காட்டுகிறது -என்றது
நெஞ்சம் உருகாமல்
வேட்கையும் பெருகாமல்
என்று தம்மால் அடக்க ஒண்ணாத துக்கம் தோற்றச் சொல்லுகிறார் -என்றபடி –

என் செய்கேன் –
மனத்தினை உருகாமல்கரை கட்டுவேனோ-
வேட்கை பெருகாமல் தகைவேனோ-
இவற்றுக்கு அடியான அவன் குணங்களைத் தவிர்ப்பேனோ –

தொண்டனேன் –
அதற்கு அடியான என் ஆசையைத் தவிர்ப்பேனோ –
ஆசை எட்டாதது -என்று கை வாங்க ஒட்டுகிறது இல்லை –
அவன் அழகு முதலிய மிக உயர்ந்த குணங்கள்-மறந்தும் தரித்து இருக்க ஒட்டுகிறது இல்லை –

தெருவு எல்லாம் காவி கமழ் –
நெஞ்சு உருகுவதற்கும்-வேட்கை பெருகுவதற்கும் காரணம் சொல்லுகிறது மேல்
குறுந்தெரு என்று அணை கட்ட ஒண்ணாதபடி-குறுந்தெரு வோடு வாசி அற-செங்கழு நீர் மலர்களின் வாசனை பரக்கிறபடி
அன்றிக்கே
ஊரொடு சேர்ந்த பொய்கைகள் ஆகையாலே-உள்ளோடு புறம்போடு வாசி அற -வாசனை அலை எறிகிறபடி என்னுதல் –
தெருவில் ஒரு வாசனை-உள்ளே -சர்வ கந்த –கந்தம் -வாசனை-
தெருவு எல்லாம் -குறும் தெரு பெரும் தெரு -உள்ளும் புறமும் என்றுமாம்

திருக் காட்கரை மருவிய –
இதனால்
பரத்வத்திலும்
அவதாரத்திலும்
ஏற்றம் சொல்லுகிறது –
பரத்வம் -நெடுங்கை நீட்டு-அவதாரம் -காலாவதி உடைத்து –

மாயன் –
அழகு சீலம் முதலியவைகளால்-பிறரை பிச்சேற்ற வல்லவன் –

தன் மாயம் –
கிட்டின போது தாழ நின்று செயல்களை செய்தபடி -என்றது-
குறைவாளர் நிறைவாளரைப் பற்றி பின் தொடருமா போலே-ஆயிற்று தான் செயல்களைச் செய்த படி -என்றவாறு –

நினைதொறே
ஊரை நினையும் தோறும்
அழகினை நினையும் தோறும்
ஒரு ஊரும் வடிவும் இல்லாதாரைப் போலே தாழ நின்ற சீலத் தன்மையை நினையும் தோறும் –
அன்றிக்கே –
நினைதொறே –
எத்தனை காலம் நினைக்கப் புக்கார்
எத்தனை காலம் மீண்டார்
ஒன்றோடு ஓன்று சேராதன நூறாயிரத்தை அனுபவிக்க வல்லவன் அவன்
ஒரு குணத்தையே காலம் என்னும் ஒரு பொருள் உள்ளவரையிலும் கால் தாழ்ந்து
கணம் தோறும் புதுமை பிறந்து-அனுபவிக்க வல்லவர் இவர்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே -என்னுமவர் அன்றோ-

திருவோணம் பிரசித்தம் -வாமன மூர்த்தியாகவே சேவை –
பூ லோகம் வந்து பிரஜைகளை ஆசீர்வாதம்
பொன்னாலான நேந்திரம் பழம்-தனிகன்-நித்யம் வாழைக் குலை சமர்ப்பித்து -காணாமல் போக
-பொன்னால் -அதுவும் காணாமல் போக -எல்லாம் கர்ப்ப க்ரஹத்தில் இருக்க –
போகம் -தட்டு மாறும் சீலம் -சேஷி சேஷ பாவம் -ஆராவமுத ஆழ்வான் -திரு மழிசைப்பிரான் -ஏதோத்த காரி போலவும் –
பிரணயி பிரகர்ஷம் -நீக்கமற நிறைந்து அந்தர் பஹிஸ்த்ய தத் சர்வம் -வஸ்து ஸத்பாவம் -ப்ரஹ்மாத்மகம் அனைத்தும் –
உபாய உபேய பாவம் -கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவான்-இரா மடம் -ஹார்த்த ரூபன் -மார்க்கம் காட்டும் வழித்துணை ஆப்தன் –
திருத்த நாள் பார்த்து இருக்கும் -வந்த அளவிலே -லஷ்மீ விசிஷ்டன் விக்ரக விசிஷ்டன் குண விசிஷ்டன் -யோகி ஹிருதயத்துக்குள்
-ஞானம் மாற மாற வெளிப்படுவார் -உண்ணும் சோறு -சிதிலமாகி உருகி -மீண்டும் மீண்டும் –
மேல் நிலை -அபி நிவேசம் மிக்கு -பொங்கி -இந்த ஜீவன் தனக்கு அந்தராத்மா -காரகம் என்று மாற்றி நினைக்கும் நிலை
-கரை அழிந்து -தட்டு மாறும் சீலம் –வெள்ளைப் பெருக்கு -புகுந்து தனித் தன்மை அன்றோ –
ஆற்று அருகே அனுபவிக்கைக்கும் நிர்வ்ருத்தர் ஆகைக்கும் நெஞ்சு வேணும் –ஓட்ட ஓடமானால் -அனுபவிக்க முடியாதே –

———————————————————————————————–

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-

நிருபாதிக பந்து -உன்னுடைய சம்ச்லேஷக பிரகாரம் அனுசந்திக்க ஷமர் அல்லேன்
நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்-
நினைக்கும் பொழுதும் சிதிலமாகி -நெஞ்சு இல்லாமல் அனுபவிக்க முடிய வில்லை -அனுபவிக்க ஆரம்பிக்க நெஞ்சு உடைய
-அனுசந்தானம் அபி நிவேச வாசனையால் -வாக் விசேஷமாகக் கொண்டு –
மநோ பூர்வ வாக் உத்தர -மனசு சகாயம் இல்லாமல் ஆழ்வார் வாக்கு பேசும் -கரணங்கள் -ஒவ் ஒன்றும் தனியே வியாபாரிக்குமே –
சொன்னது வாய் வழியே புகுந்து நெஞ்சுக்கு உள்ளே சென்று மேலே உருக வைக்கும் –
அப்பொழுதைக்கு அப்பொழுதைக்கு ஆராவமுதம் அதே போலே சிதிலம் -தோறும் சப்த அர்த்தம்
அபி நிவேசம் ஒரு அளவு மட்டுப் படாமல் -இளைப்பிலம் -குணங்களை பாடி பாடி -பயக்ருத் பய நாசனன் -அன்றோ அவன் ஆபத் பாந்தவன் அன்றோ –
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
கல்யாண குணங்கள் நினைக்க ஆத்மா -அதாஹ்யேயாம் என்றாலும் -குணங்கள் எரிக்காது சொல்ல வில்லையே –
அதனால் தான் நெருப்பால் வெந்து போகாது என்று விசேஷித்து அருளிச் செய்தான்
சம்ச்லேஷ அதிசய பிரகாரம் -சீலம் –
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா-
தடாகங்கள் -தர்ச நீய மான -தெற்கு -அழகு -எனக்கு நிருபாதிக ஸ்வாமி –
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே-ஒழி வில் காலம் -வேண்டி -இப்பொழுது
-உனக்கு நான் ஆள் செய்யும் நீர்மை -நினைக்க -உருகி விட்டால் முடியாதே -முதல் அர்த்தம்
பகவானுக்கு ஆள் செய்கை நீர்மை இல்லையே -ஸ்வ பாவம் தானே -இங்கே அவன் ஆழ்வாரை மேலே இருத்தி
கைங்கர்யம் செய்யும் நீர்மை -என்றவாறு –
நான் எனது -என்பதை நீர் நுமது வேர் முதல் -சொன்னால் போலே வார்த்தைப் பாட்டில் ஆவது இப்படி
நான் உனக்கு ஆள் செய்வது சொல்லி வைப்போம் -பரம பிரமாதா அன்றோ ஆழ்வார்
-புரிந்த அந்தரங்கள் ஈடு மூலம் அறிவார்கள் -எம்பார் நிர்வாகம்
கைங்கர்யம் பண்ணும் பிரகாரம் நினைக்க ஷமன் அல்லேன்

திருக் காட்கரையிலே எம்பெருமானைக் குறித்து-உன்னோடு நான் கலந்த கலவியை
நினைக்க முடியாதவனாய் இருக்கிறேன் –என்கிறார் –

நினைதொறும்-
நினைக்க என்று தொடங்குவர் –
அந்நினைவு மாறாதே செல்ல ஒண்ணாத படி-பலக்குறைவு மிகும் –
ஆனாலும் மறக்க மாட்டார் –
மீண்டும் நினைக்க -என்று தொடங்குவார் –தலைக் கட்ட மாட்டார் –
நினைவின் வைவித்யம் விவிதமான -முதல் நினைவின் படி அன்று அல்லவே அடுத்த க்ஷணம் இருப்பது
-புதுசாக புதுசாக அனுபவம் அன்றோ க்ஷணம் தோறும்

எத்தனை காலம் நினைக்கப் புக்கார் -எத்தனை காலம் மீண்டார் –
சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் –
நினைக்கவே முடியாத பொருளை சொல்ல ஒண்ணாது என்னும் இடம்-சொல்ல வேண்டா அன்றோ –
பின்னிச் சொல்லும்படி என் என்னில்
மனம் முன்னே வார்த்தை பின்னே –மன பூர்வோ வாக் உத்தர -பிரமாணம் -என்னும் கணக்கு இன்றிக்கே
குறளாகிய வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகம் -திருவாய்மொழி -3-8-2-என்கிறபடியே
இவருடைய நாவானது எப்பொழுதும் பேசா நிற்குமே –அந்த வாசனையாலே மனத்தோடு படாமலே சொல்லா நிற்பார் –
நினைவு இருந்தாலும் இல்லா விடிலும் குறளாகிய வஞ்சனை -தூங்கும் பொழுதும் உண்ணும் பொழுதும் இதே வாய் வார்த்தை –
அது தான் செவி வழியாலே உள்ளே புக்கு ஊற்று இருந்தது –
குணங்களாலே மேம்பட்ட இறைவனுடைய விஷயம் ஆகையாலே மனத்தினை அழிக்கும் –
நெஞ்சு இடிந்து உகும் –
மனம் கட்டழிந்து நீர் ஆகா நின்றது -என்றது
பெருக்காற்றின் கரை இடிந்து பின்-நீராய்க் கரைந்து போமாறு போலே
ஓர் உருவம் ஆக்கிக் காண ஒண்ணாதபடி-உக்குப் போகா நின்றது -என்றபடி –

வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்-
வினை கொள் சீர் பாடிலும்-எனது ஆர் உயிர்–வேம்-
பாபங்களை விழுங்கும் -அபகரிக்கும் –பாவங்களைப் போக்குகின்ற கல்யாண குணங்கள்-என் ஒருவனையும் அழியா நின்றன –
அன்றியே
சீர் -என்று சீலமாய்-வினை -என்று செயலாய் –அதாவது சீலத்தின் கார்யமாய் தாழ நின்ற செயல்கள் -என்னுதல்
ஏஷ தத்வா ச வித்தானி ப்ராப்யச அநுத்தமம் யச-லோகநாத புரா பூத்வா சூக்ரீவம் நாதம் இச்சதி -கிஷ்கிந்தா -4-18-
சுக்ரீவனை நாதனாக விரும்புகிறார் -என்னக் கடவது அன்றோ –
இச்சித்து -விரும்பி -நாதன் ஆகவுமாம் இல்லையாகவுமாம் -இச்சிக்கலாமே -ஸ்வரூப கர்மாதீன பாரதந்தர்யம் இல்லை -ஸ்வதந்த்ரம் அடியாக அன்றோ –
தாத்தா பேரன் பஞ்சு திருவடியால் கன்னத்தில் அடித்துக் கொள்வது போலே
பாடிலும் –
அடைவுபடப் பேசுமது ஒழிய -அன்பினாலே பாடுவதும் ஓன்று உண்டு-அதனைச் செய்யிலும் –
வேம் எனது ஆர் உயிர் –
மனத்தினை அன்றிக்கே-எரிக்க முடியாத உயிரினையும் எரிக்கின்றது –
அச்சேத்ய அயம் அதாஹ்ய அயம் அக்லேத்ய அசோஷ்ய ஏவச-நித்ய சர்வகத ஸ்தாணு அசல அயம் சனாதன -ஸ்ரீ கீதை -2-24-
எல்லாவற்றுக்கும் குளிர்த்தியைப் பண்ணக் கடவதான பனி-தாமரை ஒன்றினையும் கருகப் பண்ணுமாறு போலே
எல்லா துக்கங்களையும் போக்கக் கூடியனவான குணங்கள்-என் ஒருவனையும் அழிக்கின்றன –
எரிக்கப் படாதது -என்றது நெருப்புக்கு-பகவானுடைய குணங்கள் புக்கு அழிக்க மாட்டாதான இல்லை –

சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா –
தம்மை குமிழி நீர் ஊட்டின இடங்கள்
சுனைகளையும் காட்சிக்கு இனிய சோலைகளையும் உடைத்தாய் இருக்கிற-திருக் காட்கரையிலே
காரணம் பற்றி வாராத நிர்துஹேக உறவினனாய்-அண்மையில் இருப்பவனே –

நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –
நான் உனக்கு அடிமை செய்யும் வகை-நினைக்க மாட்டு கின்றிலேன்
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1- என்று இருந்தமையைத் தெரிவிப்பார் -நான் -என்கிறார்
வகுத்த சேஷி யானவன் இறைவன் ஆதலின் -உனக்கு -என்கிறார் –
அவன் தாழ நின்று புரிந்த செயல்களை விநயத்தாலே-ஆள் செய்யும் நீர்மை -என்கிறார்-
அவன் தமக்கு ஆள் செய்யும் நீர்மையை –தாம் ஆள் செய்யும் நீர்மை நினைகிலேன் -என்கிறார் –
இச் சொலவையும் இழக்க ஒண்ணாது என்று-நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மை என்பான் என்-
நீ எனக்கு ஆள் செய்யும் நீர்மை என்னாமல்-என்ன-இச் சொலவையும் இழப்பரோ பாவியார் -என்று பணிப்பர் எம்பார்-
நம் விதி வகையே வாட்டாற்றான் -ஆழ்வார் ஆசைப் பட்டதையே தனது விதி ஆக்கி வைத்தான் அவனும்

——————————————————————————————————

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

கிரிதரும சேஷ்டிதங்கள் -வாமனன் கிருஷ்ணன் அவதார -ஸூ ஸ்வாமி சம்பந்தம் -தட்டு மாறும் -சீலம் -ஈரமாய் செய்து
-சொல்லாமல் உள்ளே புகுந்து -அதுக்கு மேலே சேஷ்டிதங்கள்
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்-
ஈரமாய் செய்து -உயிராகி உயர் உண்டான்
தாரகன் -புகுந்ததால் -ஈர்த்து -இரண்டு ஆகாரங்களால் உயிர் –
வாங்கிக் கொண்டு பறித்து உண்டு -புஜிக்கும் அவன் -தனது விருப்பப்படி அனுபவித்து –இவர் விருப்பம் பார்க்காமல் -அழித்து-
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்-மது புஷப சம்பத் -அழகிய -திவ்ய தேசம்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்-கார் முகில் நமக்கு தானே பொழியும் -தன்னைக் காட்டி ஆசைப்பட்ட படி வந்து
-ஸ்வரூபம் -உதாரண -முகப்பும் முடிவும் மாறி
இன்னபடி என்று ஆகாரம் அறியாமல் -நீர்மை சீலாதிகள் –

அடிமை கொள்ள என்று புகுந்து-தன் படிகளைக் காட்டி-எல்லா வற்றையும் கொள்ளை கொண்ட தன்மைகளை
நினைக்க முடியாதவனாக இருக்கிறேன் –என்கிறார் –

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து –
அவன் தலைவனும் நான் அடிமையும் ஆன முறையிலே
கார்யங்களைச் செய்ய வேண்டும் என்று மனத்தினை இசையச் செய்து -வஞ்சித்துப் புகுந்தான் –
முறை கெடப் புகுர என்னில் இசையார் – அன்றோ-
வஞ்சித்தல் ஆவது -ஒன்றைச் சொல்லி மற்று ஒன்றை செய்தாலே அன்றோ –
நன்று –
மற்று ஒன்றைச் செய்தல் யான் இங்கு யாது என்னில் –
நீர்மையால் என்னை ஈர்மை செய்து –
நீர்மையாவது-தாழ நின்று கலத்தலும்-அதற்கு அடியான சீலமும் –
என்னை –
முறையிலே செயல் புரிவோம் வாரும் -என்றதனை மெய் -என்று இருந்த என்னை –
ஈர்மை செய்து –
ஈரும் தன்மைகளைச் செய்து-தன் தாழ்ந்த செயல்களிலே ஈடுபடுத்தி -என்னுதல் –
அன்றிக்கே
ஈரப் பாட்டினை விளைத்து -என்னுதல் -என்றது-என்னை நீராகும்படி செய்து -என்றபடி –

என் உயிராய் என் உயிர் உண்டான் –
போக்தாச்ச பிரபுரேவச -எனக்குத் தாரகன் போலே புகுந்து என்னை அழித்தான் –அழிக்குமவனாகப் புகுரில் இவர் இசையாரே –
இருவரும் கூட உண்ணப் புகுந்து உண்பவன் தானே ஆனான் –
அன்றிக்கே
என் உயிராய் என் உயிர் உண்டான் -என்பதற்கு-தன்னால் அல்லது சொல்லலாதபடி என்னைச் செய்து
என்னை உண்பதும் செய்தான் -என்றுமாம் –

சீர் மல்கு சோலைத்-
அழகு மிக சோலை –
என்னோடு கலந்த கல்வியால் அவனுக்கு உண்டான அழகின் நிறைவினை
அவ் ஊரில் சோலையே கோள் சொல்லித் தரா நின்றது –
மதுவனம் அழித்ததால் கண்டார் சீதையே என்றால் போலே –

தென் காட் கரை என் அப்பன் –
சுலபனாய்
நிர்ஹேதுகமான உறவினன் ஆனவன் –
என் கார்யத்துக்குத் தானே கடவனாய் இருக்கிற உறவு தோற்ற
அண்மையில் இருக்கிறவன் –

கார் முகில் வண்ணன்-
என்னுடைய சேர்க்கையாலே–பக்தி பூமா அன்றோ இவர் -கடலை முழுக்கப் பருகின காளமேகம் போலே ஆயிற்று
அவன் வடிவில் செவ்வி இருப்பது –
தூ நீர் முகில் போலே தோன்றாயே-8-5-3-என்று இவர்
ஆசைப்பட்ட படியே தோற்றி அனுபவிப்பித்து பேர நின்ற பின்பு-அத் தலையில் செவ்வி இருந்த படி –

தன் கள்வம் அறிகிலன் –
முகப்பில் ஒன்றாய்-முடிவில் ஒன்றான செயல்கள் தெரிகிறது இல்லை –என்றது
அடிமை கொள்ள என்று புகுந்து-அச் செயலை தானே செய்து நின்ற நிலை-
எனக்கு ஒன்றும் தெரிந்து இருக்கிறது இல்லை -என்றபடி –
அறப் பெரியவன் இப்படி தாழ நின்று செயல்களைச் செய்ய கூடாது-நான் மயங்கினேனோ-
கலவியில் -மருள் தான் ஈதோ -8-7-3-என்றதனைச் சொல்லுகிறார் -அறிகிலேன் -என்று –

——————————————————————————————————-

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

முறை தவறாமல் சர்வ ஆதார பூதன் -சர்வாந்தராத்மா -ஆனவன் -அதி ஸூத்ரனான என்னுடன் கலந்து அனுபவித்த
சீல அதிசயத்தை அளவிட்டு சொல்ல அறியேன்
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க-நாராயண சப்தார்த்தம்-தத் புருஷ சமாசம் -தன்னுடைய சங்கல்ப ஏக தேசத்திலே
அனைத்து உலகும் தங்கப் பட்டு தரித்து நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்-இதுவும் நாராயண சப்தார்த்தம்-பஹு வரீஹீ சமாசம் –
சரீராத்மா பாவம் நெறிமை -சேஷி -சேஷ பாவம் -அறிவார் ஆத்மா அவன் மதம் -வாசு தேவ சர்வம் சொல்பவன் ஆத்மா என்று
சொன்னது இதற்காக தான் என்று அறியாமல் இருந்தேனே -என்னதுன்னதாவியில் அவன் மதம் தோற்றும்-உபகாரகன் பிரான் –
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்-வி லக்ஷணமான பரிமளம் –
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே-இது என்ன முறைமை என்னிடம் மட்டும் -அதி ஸூத்ரனான -இன்ன படி என்று அறிய மாட்டாமல் உள்ளேன் –

தான் தலைவனான முறை தப்பாமல் எல்லாரோடும் கலக்கிறவன்-
மிகச் சிறியேனான என் பக்கல் செய்த காதல்-எனக்கு அறிய நிலம் அன்று –என்கிறார்

அறிகிலேன் –
உகப்பால் செய்தேனோ –
இவ் உயிரை அழிக்கைக்கு செய்தானோ –அறிகிலேன் –

தன்னுள் அனைத்து உலகும் நிற்க –
என்னை ஒழிந்தவர்கள் விஷயத்தில்-அவன் உபகாரமே அன்றோ செய்து போருவது -என்றது
எல்லா உலகங்களும் தன் நினைவினைப் பற்றிக் கிடக்க-தான் அவற்றின் உள்ளே தன் சேஷியாம் தன்மையின்-முறையாலே நிற்குமவன்
இவர் ஒருவர் விஷயத்திலும் அன்றோ இப்படி-முறை கெடச் செயல்களைச் செய்தது -என்றபடி –

மூ உலகும் தன் நெறியா வயிற்றில் கொண்டு
சிறியேனுடைச் சிந்தையுள் நின்று ஒழிந்தார் -8-7-8- என்றதனைச் சொல்லுகிறார் –
பிரளய ஆபத்தில் உலகங்கள் முழுதுதினையும் காத்தவன்-என்னை ஒருவனையும் அழித்தான் –
பகைவர்களை அம்பாலே அழிக்கும் –அடியார்களை குணத்தாலே அழிக்கும்-
நடு நிலையரைப் போலே அன்றோ அவன் பாதுகாப்பது
அம்பு பட்ட புண் மருந்து இட்டு ஆற்றலாம்-குணத்தால் வந்த புண்ணுக்கு மாற்று இல்லை -அன்றோ –

வெறி கமழ் சோலைத்-தென் காட்கரை-
அவ் ஊரை உடையவனுக்கு-ஒரு பொருள் உத்தேச்யம் ஆவதே –வாசனை அலை எறியா நிற்பதான சோலை –

என் அப்பன் –
தமப்பன் அன்றோ அழித்தான் –

சிறிய என் ஆர் உயிர் உண்ட-
சிறியேனுடை நல் உயிரை -என்றது-மிக்க அற்பனான என்னுடைய ஆத்துமாவை -என்றபடி –
அவனுடைய மேன்மைக்கு எல்லை காண ஒண்ணாததைப் போன்று-
தம்முடைய சிறுமைக்கும் எல்லை இல்லையாக நினைத்து இருக்கிறார் –
ஆர் உயிர் –
இவர் தம்மை சிறுக நினைத்திரா நின்றார்-அவன் இவரை நித்ய சூரிகட்கும் அவ்வருகாக நினைத்திரா நின்றான்-
இவர் தம்மை சிறுக நினைத்தால் பயன் என் –இவர் தம்மைத் தாம் அறிந்தாரோ -என்று-மேல் விழா நின்றான் –
யானே என்னை அறிய கிலாத என்று அன்றோ இவர் இருந்தார் –
திரு வருளே அறிகிலேன் –
இது முன்னம் ஸ்வரூப ஞானத்தால் செய்தது ஓன்று அன்றே –
ஸ்வரூப ஞானத்தால் விரும்பினால் அன்றோ ஸ்வரூபத்து அளவு நிற்பது –கழி பெரும் காதல் -முறையை அழிக்கும் அன்றோ –

—————————————————————————————

திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-

ஆஸ்ரித பவ்யன் கிருஷ்ணன் -வ்யாமோஹம் திருவருள் -உபகரிப்பான் போலே சரீர ஆத்ம விபாகம் இல்லாமல் -தான் தனக்கு போக்யமாம் படி அபகரித்து –
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து-உபகரிப்பவன் போலே -அடிமை கொள்ளுகை க்காக -நிரவதிக மகா உபகாரம் செய்வான் போலே -வந்து –
நெஞ்சிலே புகுந்து –
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்-எனக்கும் ஹேயமான சரீரமும் –அத்துடன் வியாப்தமான ஆத்மாவையும் –
ஹேய உபாதேய விபாகம் அற -உடனே சடக்கென -நிரதிசய போக்யமாம் படி
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்-என் நாதனாய்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே-என் கண்ணன் -பாட பேதம் -இயல் இசை அந்தாதிக்கு சேர -இல்லை என்னில் பொருள் இசை அந்தாதி –
ஸ்யாமளத்தை விஞ்சி -ஆழ்வார் உடைய சம்ச்லேஷத்தால் -இயற்க்கை நிறம் வளர்ந்து -எனக்கு அத்யந்த பவ்யன் -கிருஷ்ணன் உடைய
கள்வங்கள் இருக்கிற படி –
உபகரிப்பான் போலே போக்கிய பூதனாய் வந்து தான் போக்தாவாகக் கொண்டு உபகிருதன் ஆகியும்
தேஹாத்ம விபாகம் பிரகாசிப்பது போலே வந்து -மயர்வு அறுக்க வந்து -உத்தவர் -கோகுலம் சென்று ஞான மார்க்கம் உபதேசிக்க வந்து -பட்டு
-பக்தியில் ஆழ்ந்ததை -கண்ணன் இருப்பதாகவே அனைவரும் இருக்க -பக்தி மார்க்கம் கற்று வந்தார் -போலே
-பார்த்து தெரிந்து வந்தேன் -சொல்லி கற்பிக்க போனவர் என்றார்
பெருமாள் தேகாத்ம அபிமானம் கற்று -வாசி இல்லாமல் உண்டார் –
ரூப உஜ்வலம் அத்தாலே பிறந்து -கரு வளர் மேனி -இவை சில பிரவருத்தங்கள் –

என்னை அடிமை கொள்பவனைப் போல் புகுந்து-என் உடலையும்-உயிரையும் கொண்டான் –
ஒருவனுடைய-கழி பெரும் காதல் -இருந்தபடி என் –என்று ஆச்சர்யப் படுகிறார்

திருவருள் செய்பவன் போல –
எல்லாவற்றையும் கொடுத்து அடிமை கொள்வாரைப் போலே ஆயிற்று புகுந்தது -என்றது
துயரறு சுடரடி தொழுது எழுகைக்கு-மயர்வற மதிநலம் அருளுவாரைப் போலே புகுந்தான் -என்றபடி
ஆயின் -தம் திறத்தில் செய்தது அங்கன் அன்று –திருவருள் தான் பெற்றானாய் இரா நின்றான்-
ஆதலின் -போலே -என்கிறார் –

என் உள் புகுந்து –
வழுவிலா அடிமை செய்யப் பாரித்த என் பக்கலிலு புகுந்து –

உருவமும்-
முதலிலேயே அழுக்கு உடம்பு -திரு விருத்தம் -1-
ஆத்மாவுக்கு முதலிலே என்னுதலுமாம் -என்றதனையே-விரும்பா நின்றான் –
அவன் அங்கீ காரத்துக்கு முன்பு இவர் சரீரத்தையே விரும்பிப் போந்தார்-சிறப்பு உம்மை
அவன் இவரை அங்கீ கரித பின்பு இவர் சரீரத்தை அவன் விரும்பிப் புக்கான் –
இவருக்கு அவன் உடைய சேர்க்கை ஸ்வரூப ஞானத்துக்கு உடல் ஆயிற்று-
அவனுக்கு இவருடைய சேர்க்கை உடலை உயிராக விரும்புவதற்கு உடல் ஆயிற்று-இவர் தாம் வேண்டுமோ
இவர் என்னது என்று ஆசைப் பட்ட ஓன்று அமையாதோ என்று இரா நின்றான்-
ஆதலின் -உருவமும் -என்று சிறப்பு உம்மை கொடுத்து ஓதுகிறார் –

ஓர் ஆர் உயிரும் –
அபர்ய வாசன வ்ருத்தியால் ஆத்மா அளவும் செல்லுதல் –
உம்மை அமுக்கிய பொருள் காட்டுகிறது-சர்வ சப்த வாஸ்யம் அவன் அளவிலே பர்யவசிக்குமே –
விசேஷணத்தை காட்டும் சொல் விசேடியம் அளவும் சென்று விசேடியத்தை காட்டுவது அபர்ய வாசனை –
இச் சரீரம் தான் உயிரை விட்டு தனித்து இராமையாலே-அவ் வாதமா வளவும் செல்ல-
அவ் வாத்மாவையும் விரும்பினான் -என்றபடி –
பிரதான்ய சமுச்சயம் சிறப்பு உம்மைத் தொகை -உருவமும் -ஆர் உயிரும் –
சகாரம் -திரு மேனியில் பிராவண்யம் ஆத்மா அளவுக்கும் போகுமே -விசேஷயமும் காட்டும் விசேஷணம் சொல்ல வந்த – சொல் –

உடனே உண்டான் –
அங்கனம் உண்ணும் போது வாசி வைத்து உண்டிலன் –
தமக்கு இடம் வையாமல் அவனே உண்டான் –
ஆதலின் -உண்டான் -என அவன் தொழிலாக அருளிச் செய்கிறார் –

திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன் –
தானே உண்பானாக உண்டமை-
அவ் ஊரில் சோலையும் வடிவும் கோள் சொல்லித் தரும் –
அழகு வளரா நின்றுள்ள சோலை –

கருவளர் மேனி –
கருமை வளரா நின்றுள்ள வடிவு –
சதைக ரூபம் -என்றது இவ்வளவில் கண்டிலோம் —

நம் கண்ணன் –
அடியார்கட்கு எளியனான கண்ணன் –

கள்வங்களே-
முகப்பில் ஒன்றாய்-முடிவில் ஒன்றாய் -இருக்கும் செயல்கள் –
அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-தான் ஏவப் படுகிறவனாய் -தாழ நிற்கையும் –
விரோதியான சரீரத்தை -கழித்து தர என்று புகுந்து-
உடலையும் உயிரையும் வேறு படுத்து உணர்தலை-செய்யாது ஒழிகையும்-
இனிய பொருளாக புகுந்து தான் அனுபவிக்கின்றவன் ஆகையும்
என் பேறாகப் புகுவானாகப் புகுந்து தன் பேறாகத் தலைக் கட்டுகையும்
இவை முழுதும் வடிவில் வேறுபாட்டால் தோற்றி இருக்கையும் ஆம் –
இத்தலையில் ஆத்தும அபகாரத்தை தவிர்த்தது-தன் ஆத்தும அபகாரத்தாலே ஆயிற்று –

——————————————————————————————

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

அதி வியாமுக்தன் -ருஜுவாய் நேர்மையாய் இருக்கும் –
எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்-அத்யந்த வியாமுக்தன் -கிருத்ரிம வியாபாரங்கள்
-எனக்கு நேர்மையாக இருக்கின்றன -எதனால் என்னில்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது–மீதி உள்ள ஆத்ம தத்வம் -காதலன் உண்ட பின்பு மீதி உள்ள கோது-
அழகிய கண்ணன் -பெரிய காதலன் -உண்ட மிச்சம் -சாரம் உண்ட பின்பு – இது தானே உபகாரம்
-பரமாத்மா சம்பந்தம் ஏற்படுத்திய உபகாரம் -சாரம் அபகரித்ததால் –
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்-புல்லிய தீணா தன்மை -பவ்யன் என்று சொல்லி
புன் கண்மை எய்தி-அல்பம் அறிவு பெற்றது -என்றுமாம் –
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-ஸ்துதிக்கும் –

அவன் வஞ்சகன் என்று அறிந்தால்-அதிலே கிடந்தது நெஞ்சாறல் படாமல்-நீர் அகன்றாலோ -என்ன
அவனைக் கண்டவாறே-அவ்வஞ்சகனை மெய் என்று இருப்பன் -என்கிறார் –

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் –
எனக்கு அடங்கினவனைப் போல் இருக்கிற-கிருஷ்ணன் உடைய வஞ்சனைகள்-எனக்குச் செவ்விதாகத் தோற்றும்
ஒரு நாள் அவன் களவிலே அகப்பட்டால் பின்னை மீள மாட்டேன் –
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்-காணேன் தவறல்லவை-திருக் குறள் –
அவன் முகத்திலே விழித்தவாறே அவன் செய்யுமவை அடைய-மெய்யாக இருக்கும் எனக்கு –
எனக்குச் செம்மாய் இருக்கும் -என்றதற்கு-எனக்கு சேமமாய் இருக்கும் என்று ஒரு தமிழ் புலவர் பொருள் கூறினார் –
நன்று –
நம் கண்ணன் கள்வங்கள் என்று மேல் திருப் பாசுரத்தில் முடிய-எம் கண்ணன் -என்று தொடங்குவான் என் எனில் –
நாம் என்பதும் யாம் என்பதும் ஒரு பொருள் சொற்கள் ஆகையாலே
பொருளிசை அந்தாதி ஆக இருக்கிறது
மேல் பாசுரத்தில் ஈற்றடியில்-எம் கண்ணன் கள்வங்கள் -என்ற பாடமாகில் நேரே கிடக்கும்

அம் கண்ணன் உண்ட –
மிக்க காதலை உடையனான கிருஷ்ணன் நுகர்ந்த –மிக்க காதலரை -அங்கண்ணர் -என்னக் கடவது அன்றோ –

என் ஆர் உயிர்க்கோது இது –
கோது என் ஆர் உயிர் இது-கோதான என் ஆத்துமாவான இது-ஆத்துமா கோதாம்படி காணும் செயல் புரிந்தது –

புன் கண்மை –
பேகணிப்பு-தீனம் -சிறிய ஞானம் இரண்டு அர்த்தங்கள் –
பொல்லா நோக்கை உடைத்தாய் என்கை-
புன் கண் -புல்லிய அறிவு-கண் -அறிவு-
பட்டர் -இதற்கு -மீளவும் அறிவை அடைந்து-மீள உயிர்ப் பெய்து -என்று ஆயிற்று நிர்வஹித்து போவது
இது தானே சொல்லோடு சேர்ந்து இருக்கிறது இல்லை-
கேட்கப்பட்ட இந்த பொருளோடு -சொல்லும் சேரப் பொருந்தி வழக்காறாம் படி எங்கனே-
என்று ஆராயா நிற்கச் செய்தே -நஞ்சீயர் நம்பிள்ளை உடன் ஆராயா நிற்கச் செய்தே –
கோதான இது மீளவும் புன் கண்மை எய்தும் போது மீளவும்-உயிர்ப் பெய்தது ஆக வேண்டும் அன்றோ –
பொருளின் தன்மையாலே தன்னடையே வரும் என்று-நான் -நம்பிள்ளை -சொன்னேன்-
சீயர் போர உகந்து அருளினார் -என்று அருளிச் செய்வர் –

புலம்பி இராப்பகல் என் கண்ணன் -என்று-
என் கண்ணன் -என்று -இராப் பகல் புலம்பி –
முன்பு எனக்கு அடங்கி இருந்தவனான கிருஷ்ணன் என்று-இரவு பகல் என்ற வேறுபாடு இன்றிக்கே கூப்பிட்டு –

அவன் காட் கரை ஏத்துமே –
அவன் எழுந்து அருளி இருக்கிற திருக் காட் கரையை ஏத்தா நின்றது-
சமா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்தி நீ -சுந்தர -33-17-
இராகவனுடைய திரு மாளிகையிலே -என்னுமாறு போலே –

—————————————————————————————————

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

உயிரான பாசுரங்கள் இது முதல் மூன்றும் –
-திவ்ய தேசம் -பிரதானம் -இங்கே நித்ய வாசம் செய்வதால் அவனுக்கும் கும்பீடு –
ஈஸ்வரன் தனக்கேயாய் இருக்கும் -அசித்துப் பிறக்கேயாய் இருக்கும் -ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருக்கும் —
என்ற முற்பட்ட நினைவு -அங்கண் இன்றிக்கே அசித்தைப் போலே தனக்கே யாக எனைக் கொள்ள வேணும் என்கிறது நமசாலே
அதாவது போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை –
அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று -மேலும் சொல்லும் -பிரணவத்திலும் -நாராயணாயா என்றத்திலும் —சூர்ணிகை -91-93-
அகாரம் இல்லாத பிரணவம் இல்லையே -அவன் விருப்பம் செய்வதே அடிமைத் தன்மை -திரு உள்ளம் படியே வேதம் சொல்லும் –
எதிர் விழி கொடுக்கும் பார தந்தர்யம் -அவனுக்கு பிடித்ததே செய்ய வேண்டும் –
அசித்து போலே பாரதந்தர்யம் -அவனுக்கே என்ற நினைவால் -அவன் அனுபவம் வளர்க்க -இதுவும் வேண்டுமே -அவன் போகம் அழிக்க கூடாதே –
அவனுடைய அதி வியாமோகத்தின் -ஆத்மா உண்டாய் பட்டாலும் மீதி உள்ளது என்னும் படி
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்-திவ்ய தேசம் ஏத்தும் -பவ்யன் கண்ணா என்று கூப்பிடும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்-அபி நிவேசம் -பறி மாற்றம் நினைத்து -மங்கா நிற்கும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்-ஆச்சர்ய பூதன்
எதிர் விழி இருக்கும் பார தந்தர்யம்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–கோள் உண்டே உண்ணப் பட்டாலும் -மீதி உள்ளதே –

அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என் உயிரை நேராக உண்டு-
பின்னையும் உண்ணாதாரைப் போலே-இருக்கும் -என்கிறார் –

காட்கரை ஏத்தும் –
அவனிலும் அவன் இருந்த ஊரை ஏத்தும் –

அதனுள் கண்ணா என்னும் –
பரத்துவத்தைக் காட்டிலும்-அவ் ஊரில் புகுந்த பின்பு உண்டான ஏற்றம் –
என் கண்ணா என்ன -மேல் பாசுரத்தில் சொல்லி-இதில் -காட் கரை ஏத்தும்-
அவ் ஊரை ஏத்தா அவனை ஏத்தும் –இவ்விரண்டுக்கும் புறம்பே போகிறது இல்லை –

வேட்கை நோய் கூர நினைந்து –
ஆசை மிகும்படி நினைந்து –

கரைந்து உகும் –
உருக் குலைந்து-ஒரு அவயவி என்று நினைக்க ஒண்ணாத படி உகும் –

ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால் –
அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என்னை வெறுந்தரை ஆக்கின-ஆச்சர்யத்தை உடையவனாலே
மேலே -திருவருள் -என்று மறைத்துக் கூறியதை-வெளியிடுகிறார் –
கிட்டின போது தாழ நின்று மின்மினி பறக்க-செயல் புரிந்த ஆச்சர்யத்தை நினைந்து -மாயனால் -என்கிறார் –

கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே –
என் ஆர் உயிர் கோள் உண்டே -கோட் குறை பட்டது-
என் உயிரைக் குறை இல்லாதபடி உண்ணச் செய்தேயும்-அவன் குறைவாளனாய்-விருப்பம் உள்ளவனாய்
போகையாலே-இத்தலையில் இன்னம் சிறிது குறைந்தது உள்ளது-என்று இருக்கிறார் –
அன்றிக்கே
இப்போது இருந்து துக்கப் பட்டு காண்கையாலே-சிறிது தொங்கிற்று உண்டு -என்று இருக்கிறார் -என்னுதல்
ஒரு முற்றறிவினன்-சர்வஞ்ஞன் –இல்லாதது ஒன்றிலே இத்தனை காதல் செய்யக் கூடாது-என்று இருக்கிறார் –

————————————————————————————————–

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

அபேஷா நிரபேஷமாக -இவருக்கு என் ஆத்மா பட்ட பாடே -ஹர்ஷத்தாலே -இதில் -ஈடுபட்டு அருளிச் செய்கிறார் –
தரைப் பட்டு முன்பு பேசினார்
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்-நான் சுவீ கரிக்காமல் நீர் ஹேதுக்கமாக தானே வந்து அபி நிவேசத்துடன் புஜித்தான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்-அவ்வளவும் இன்றிக்கே நாள் தோறும் -பக்ஷம் தோறும் -மீண்டு மீண்டு
வருவதால் சேஷம் இருக்க வேண்டுமே -அபூர்வமாக வந்து -ஸ்வரூபம் குணங்கள் சரீரம் இத்துடன் என்னை அத்யாதரம் பண்ணி உண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு-ஸ்யாமள வர்ணன் -திவ்ய தேசம் நித்ய வாசம் செய்யும் என் அப்பனுக்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–அன்றோ -என்றபடி -அடிமை பட்டது அன்றோ –ஹர்ஷத்தால் –
-நானும் உனக்கு பழ அடியேன் -தொன்மை அன்றோ சம்பந்தமும் கைங்கர்யமும் -இது அன்றோ நான் பெற்ற பாக்யம்

நாள் தொறும் என்னை அனுபவியா நின்றாலும்-பெறாப் பேறு பெற்றால் போலே
அனுபவிக்கிற இவனுடைய-குணத்தின் தன்மையை-பொறுக்க ஒண்ணுகிறது இல்லை-என்கிறார்

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான் –
இதற்குப் பலபடியாக அருளிச் செய்வர் –
என் பக்கல் ஒரு உபகாரம் கொள்ளாமலே -ஒரு காரணமும் இன்றிக்கே –என் உயிரை அனுபவித்தான் –நிர்ஹேதுகமாக –
வெறிதே அருள் செய்வர் -8-7-5-
எந்நன்றி செய்தேனோ -4-5-9-
அன்றிக்கே –
இதற்கு முன்பு இப்படி பட்டது ஒரு சரக்கினைப் பெற்று அறியாதானாய் -பக்கம் நோக்கு அறியான் -2-5-2- போலேயும்
அனந்தன் பாலும் -பெரியாழ்வார் திருமொழி -5-4-8- போலேயும்
என் பக்கல் காதலை உடையவன் ஆனான் -என்னுதல் –
அன்றிக்கே –
என்னால் தான் கொள்ளப் படாது இருக்க-தான் யென்னைக் கைக் கொண்டான் -என்னுதல் –

உபகாரம் கொள்ளாமல் -சாதன பக்தி பண்ணாமல் -முதலில் -சொல்லி –
இத்தனை போக்கிய வாஸ்து முன்பு பெற்றது இல்லையே -அடுத்து சொல்லி –
பிரதிபத்தி பண்ணாமல் வெட்டிப் போகவே -விலகிப் போகவே -நான் இருக்க -வந்து உண்டானே

நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான் –
ஒரு நாள் அனுபவித்து-இனி இது நாம் அனுபவித்தது அன்றோ -என்று-கை வாங்கி இருந்தானோ
நாள் தோறும் நாள் தோறும் வந்து –
அவனுடைய அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் இருக்கிறபடியைத் தெரிவித்தபடி –முற்றவும் தானுண்டான் –
அணு அளவிதான இவ் உயிரை-எங்கும் பரந்து இருக்கிற தான்-
விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது-தனக்கு ஏற்றமாம் படி ஆதரியா நின்றான் –
சிறிய என் ஆர் உயிரை -என்ற அது தம்மை பார்த்து-இது அவனுடைய அனுபவத்தைக் கொண்டு சொல்கிறார் –

காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு –
கறுத்த நீர் கொண்டு எழுந்த-காளமேகம் போலே இருக்கிற வடிவை உடையவனாய்
அம்மேகம் தான் மழை பெய்யும் இடத்திலே படிந்தாப் போலே
திருக் காட் கரையிலே வந்து-அண்மையிலே எழுந்து அருளி இருக்கிற-நிருபாதிக பந்துக்கு –
வடிவழகு அது
ஊர் அது
தனக்கு என்ன குறை உண்டாய் இப்படி படுகிறான் –

ஆள் அன்றே பட்டது –
அடிமை அன்றோ புக்கது -என்றது
இராவணன் முதலியோர்களை போன்று-எதிர் அம்பு கோத்தேனோ-என்றபடி –

என் ஆர் உயிர் பட்டதே –
ஓர் உயிர் படும் பாடே இது –எதிர்த்தார் உடம்பு இழத்தல்-
புண் பட்டதற்கு மருந்து வைத்து ஆற்றுதல் -செய்யும் அத்தனை அன்றோ-
இங்கு ஆர் உயிர் அன்றோ நோவு பட்டது
குணத்தால் வரும் நோவு ச்வரூபத்தோடு சேர்ந்ததாய்-அதற்கு மாற்று இல்லை அன்றோ –

——————————————————————————————

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

அனவதிக ஸுந்தர்ய உக்தன் —
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது-நித்ய சூரிகளும் இப்படி பட வில்லையே -போக்யமாக -அபி நவ விஷய ஈடுபாடு
-அன்றோ ஆழ்வாரது -மூத்தவர் நித்ய சூரிகள் -யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவா –
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்-கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்–
மேகம் -தாமரை கண்கள் வாய் ஒட்டி -அழகிய திவ்ய தேசம்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே-வீர ஸ்ரீ அழகு -வாரி கடல் -உத்பாத ஸ்தானம் –

நீரேயோ இப்படிப் பட்டீர்-குண அனுபவத்தையே பொழுது போக்காக உடைய
நித்ய சூரிகளும் படும் பாடு இது அன்றோ -என்ன-அவர்களும் தான் நான் பட்டது பட்டார்களோ –என்கிறார் –

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது –
எனது உயிர் பட்டது –ஆர் உயிர் பட்டது-
நான் பட்ட பாட்டினை நித்ய சூரிகளிலே தாம் பட்டார் உளரோ –பகவான் உடைய குணங்களுக்கு நிலம் அல்லாததாய் இருக்கிற
இவ் உலகத்திலே நான் பட்ட பாட்டினை-நித்ய விபூதியில் உள்ளவர்கள் தான் பட்டார்களோ -என்கிறார் –
இங்கு எனது உயிர் பட்டது-அங்கு ஆர் உயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார்
எல்லார் செய்வதும் குண அனுபவம் தானே –
அங்கனம் இருக்க இவர்க்கு இவ்வாசி கூறினபடி என் -என்று நான் -நம்பிள்ளை -கேட்க
திருமணம் ஆன புதுப் பெண்ணுக்கு கணவனுடைய கைகள்-அவள் மேலே பட்டவாறே வேர்ப்பது விடுவது ஆமாறு போலே
இவர் அனுபவத்தில் புதியர் ஆகையாலே வருகிறது காணும் -என்று ஜீயர் அருளிச் செய்வர் –

உயிரை அழித்த காரணங்களை சொல்லுகிறபடி மேல் –

பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது –
பெரிய இதழை உடைய தாமரை போல் இருந்துள்ள கண்ணையும்-சிவந்த வாயையும் உடையவனாய் –

ஓர் கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்-
கறுத்த எழிலை உடைத்தான மேகம் போன்ற வடிவை உடையனாய்-திருக் காட் கரையைக் கோயிலாக உடையவனாய் –

சீர் எழில் நால் தடம் தோள் –
வீர ஸ்ரீயையும் எழிலையும் உடைத்தாய்-கற்பகத் தரு பணைத்தால் போலே-நாலாய் சுற்று உடைத்தான தோள்களை உடைய –

தெய்வ வாரிக்கே –
தெய்வங்களைப் படும் கடலுக்கு-வாரி -கடல் –
தெய்வங்களை எல்லாம் படைத்தவனுக்கு -என்றபடி –தம்மைத் தாமே மதித்து இருக்கிற தெய்வங்களைப்-படைத்தவன் கண்டீர்
யான் எனது என்ற செருக்கை அற்ற என்னை அழித்தான் –
வடிவு அழகையும்-அவ் ஊரில் இருப்பையும் காட்டி-ஆயிற்று இவரை அழித்தது –

———————————————————————————

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

ஆச்சார்ய சம்பந்தம் ஹேது எனக்கு வேணுமே -அவனுக்கு அது தேவை இல்லை -அநாதி காலமாக அன்றோ -சொத்தை அடைய ஸ்வாமி –
அபி நிவேசத்தில் என்னிலும் முற்பாடானாய்க் கொண்டு சீக்ர காரியாகி –
காற்றில் கடியனாகி ஓடி அகம் புக்கு போலே கடியேன்
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று-ஸ்வரூப ரூப குணங்கள் விபூதிகள் ஒன்றும் சேஷியாமல்-அனுபவிக்க பாரித்து
–காண வேண்டுமே -கண்ட பின்பே -கபளீ கரித்து புஜிக்க
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்-அபி நிவேசம் பாரிப்புடன் இருந்தேன் -சத் என்று இருந்த முதல் நாளே தொடங்கி
-என்றுமே சத் தானே ஜீவாத்மா -நித்யம் அன்றோ -பாரிப்பும் அநாதி
நமக்கு ஆச்சார்ய சம்பந்தம் ஆதியாகக் கொண்டதே –
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்-விழுங்கி முடித்து தண்ணீர் குடிப்பது போலே முடித்தே விட்டான் –
அத்யந்த அல்பன் -அவன் அபரிச்சின்ன ஸ்வ பாவன்-கோனாரை அடியேன் -அஹம் த்வா-தான் என்னை
-சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -அஞ்ஞான அசக்தன் -என்னை
பசித்தவன் சோறு கண்டால் போல என்னை போல் அன்றிக்கே தாஹித்தவன் தண்ணீர் கண்டால் போலே
-அன்றோ அவன் -பூர்ணமாக பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே-வேகமாக வியாபாரிக்குமவன்
கடலை பருகிய ஸ்யாமளன் -ஆழ்வார் திரு மேனி உட்க்கொண்ட -கரு வளர் -ஸ்வாமி பெற்ற புகராலே திவ்ய தேசமும் சோலைகளும்
சோலை திருவளர் சோலை ஆயிற்றே -தானே முதல் -சீக்ரகாரியாகா நின்றானே
அனுபவத்தில் ஒருவருக்கும்-முற்பட மாட்டாத படி –

தம்மோடு கலந்த எம்பெருமானுக்கு-தம்மிலும் காதல் மிக்கு இருந்த படியை-சொல்லுகிறார்-

வாரிக் கொண்டு –
இந்தப் பொருளில் சிறிதும் பிறர்க்கு இல்லாதவாறு-உண்ணக் கடவோம் -என்று இருந்தார் ஆயிற்று -என்றது
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்ததனை –
இதனால் திரு வநந்த வாழ்வான் திருவடி முதலிய நித்ய சூரிகட்கும்-அடிமை செய்ய இடம் கொடேன் -என்று இருந்தார் ஆயிற்று
என்பதனை தெரிவித்த படி
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசாநுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபத சச தே-அயோத்யா -31-25
எல்லா அடிமைகளையும் நான் செய்வேன் -என்கிறபடியே –உன்னை –எல்லார்க்கும் தலைவனான உன்னை –

விழுங்குவன் –
அடியவனுக்கு கைங்கர்யம் அன்றோ தாரகம்-

காணில்-
உன்னைக் காணப் பெறில்-

என்று ஆர்வுற்ற –
இப்படி ஆசையை அடைந்த –

என்னை ஒழிய –
என் அளவு பாராதே –

என்னில் முன்னம் பாரித்துத் –
நான் பாரித்த அளவும் அன்றிக்கே-நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –
ஆசார்யன் உடைய அங்கீ காரத்துக்கு பின்பே அன்றோ இவருடைய பாரிப்பு-சம்பந்தத்தை மறைப்பதற்கு காரணம் இல்லாமையாலே
அவனுடைய பாரிப்பு உயிர் உடன் கூடியே உள்ளது அன்றோ –
சம்பந்தம் நித்யம் சம்பந்த ஞானம் இழந்து -அன்றோ இருந்தோம் –

தான்-
எங்கும் பரந்து இருப்பவனாய்-தனக்குத் தானே உரியவனான-தான் –

என்னை –
அணு அளவினனாய்-பர தந்த்ரனான-என்னை –

முற்றப் பருகினான் –
தன் குணங்களையும்-செயல்களையும்-காட்டி-என்னை நீராக்கி-குறை சிறிதும் இல்லாதபடி பருகினான் –
தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்-வசஸா சாந்த்வயித்வா ஏனம் லோசநாப்யம் பிபந்நிவ-யுத்தம் -16-65-
ஸ்ரீ ராமர் -அந்த விபீஷணன் உடைய அந்த வார்த்தையைக் கேட்டு
அவனை வார்த்தையால் சமாதானம் பண்ணி-கண்களால் பருகுவார் போலே
நின்று வார்த்தையைச் சொன்னார் -என்கிறபடியே
இத்தலையை அழித்துச் செயல் புரிந்தான் -என்றபடி
இருந்த குலக்குமரர் தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி
அருந்தவனை அடி வணங்கி யாரை இவர் உரைதிடுமின் அடிகள் என்ன -கம்பர் -மிதிலைக் காட்சி படலம் –

உண்டபடி சொன்னார் மேல்
உண்டவனுக்கு தண்ணீரும் வேண்டும் அன்றோ –
ஆகையால் தண்ணீர் குடித்த படி சொல்கிறார் மேல் -பருகினான் -என்று
அவனுடைய உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை இருக்கிறபடி அன்றோ இது –

கார் ஒக்கும் காட் கரை அப்பன் –
பரம உதாரனாய்-அண்மையில் இருப்பவன் –

கடியனே –
இன்ப நிலையிலே விரைந்து இருக்கும்-
இருவராய் செயல் புகப் புக்கால்-எதிர் தலைக்கு இடம் வையான் –

இராப்பத்து உத்சவம் -பூச்சாத்து மண்டபம் -ஆழ்வார் முன்னோக்கி வர -நம்பெருமாள் புலிப் பாய்ச்சலில் வர
முன் வைத்த காலை பின்னே வைத்து -இன்றும் சேவிக்கிறோம் –

—————————————————————————————

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

ஜென்ம விநாச பலன்
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்-அவன் நினைவுக்கும் தான் முற்பாடானாய்க் கொண்டு
-கம்சனைக் கொன்ற -ஜராசந்தன் பெண்கள் கம்சன் மனைவிகள் நிஜமாகவே கண்ணை நீர் மல்கும் படி அன்றோ
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்-கொடியை உடைத்தான் மதிள்-கம்சனைக் கொன்றதும் இங்கே கொடி கட்டி –
தொண்டர் தலைவர் ஜெயத்தை கொண்டாடுவார்கள்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்-பகவத் குணங்களை வடிவு பட பிரதிபாதிக்கப் பட்ட -கட்டு அடங்க –
ஞானம் வர மட்டும் -இல்லாமல் -அனுபவத்துக்காக அன்றோ -இங்கே –
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே-கானல் நீர் போன்ற சம்சாரம் நசிக்கும்-ஜன்ம பரம்பரை முடிவு அடைந்து
மிருக த்ருஷ்டிகையும் நாசம் அடையும் –
அத்வைத பாஷாணம் -கானல் நீர் போலே மாயையா -இல்லை -சம்சாரம் நித்யம் -உண்மையான இது இவர்களுக்கு
தொலைந்து போகும் என்று பலம் சொல்லி அருளுகிறார் –

நிகமத்தில்-
இத் திருவாய் மொழியைக் கற்பார்க்கு-பிறவி முடிந்து-அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –என்கிறார் –

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக் –
கம்சன் தான் நினைத்த நினைவினை-அவன் தன்னோடு போம்படி செய்தான்-
தன் பக்கல் இல்லாதது-வந்தேறி-ஆதலால் கடியன் ஆய் -என்கிறார்-
கொண்ட சீற்றம் -5-8-3- என்னக் கடவது அன்றோ –
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –

பிரான் தன்னை –
முன்பு உபகாரகன் ஆனவன் கண்டீர் நம்மை அழித்தான் –

உகந்தாரை அழித்தல் அன்றோ தீமை யாவது
விரோதிகளை அழிக்குமது உபகாரகம் அன்றோ –

கொடி மதிள் தென் குருகூர்ச் –
கம்சனை வென்ற வெற்றிக்கு கொடி கட்டிற்று-திரு நகரியிலே ஆயிற்று-
ஸ்வாமியின் வெற்றிக்கு உரிய அடியார் இருந்த இடத்தே-அன்றோ கொடி கட்டுவது –
சடகோபன் சொல்-
வடிவு அமை ஆயிரத்து –முழுவதும் அழகினை உடைத்தாய் இருக்கை-என்றது-
கட்டடங்க அழகியதாய் இருக்கையைத் தெரிவித்த படி-
வெற்றி உண்டாகையாலே வெற்றி மாலைகளும் செல்லா நிற்கும் அன்றோ –

இப்பத்தினால் சன்மம் முடிவு எய்தி-
பிறவிகளின் தொடர்ச்சிக்கு முடிவினைப் பெற்று –ஜாதி ஏக வசனம் -ஜென்மம் —

நாசம் கண்டீர்கள் எம் கானலே –
பிறவிகட்கு அடியான சம்சாரமும் நசிக்கும்-எம் -சுவ சம்பந்திகளை சேர்த்து –
கானல் -பேய்த்தேர்
இங்கும் இங்கே பிறக்க இருக்காமல்-பகவான் உடைய குணங்களை அனுசந்திக்கும்-
அனுசந்தானம் பொறுக்கக் கூடிய தேசத்திலே-புகுவார்கள் -என்றபடி –

————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சுவஸ்தி யாத்மா
ஸ்வயம் அர்த்தயித்வா
ஸ்வம் ப்ராப்யா
ஹர்ஷ விவஸ்த்யா
ஹரி அதஸ்தாத் -தாழ விட்டுக் கொண்டு
எச் சீலம் அன்வயம் ததேவ தேவாதி அநு ஸ்ம்ருதியா
திருத்த மனகா
வியாஸனே ஷஷ்ட்யயே

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

கம்ச ஜேதா-சடஜித் -கம்சனை வென்றவரை சடத்தை வென்றவர் –
ஆச்சர்ய ஏகான்-மாயன்
அகில பதிதயா-
அந்தராத்மத்வ பூம்னா
சக்தத்த்வ பூம்னா
ஜலதய தனுதயா
பவ்யதா ஆகர்ஷத்வாத்
7/8/9/-உதார தேகியே-பாவ ப்ருதாம் ரக்ஷசனாம் தீவ்ர சங்த்காத் விஸ்மர்த்தும் –

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 86-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு————-86-

என்னால் -என் நா என்றுமாம்

————————————————————————

அவதாரிகை –

இதில்
ஆழ்வார் உடைய
அப்ரீதிகர்ப்ப
குண அனுசந்தானவித்தராம்
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
ஸ்மாரக பதார்த்தங்களைக் கண்டு
நோவு பட்டு செல்லா நிற்கச் செய்தே
இருந்ததும் வியந்தில் தடுமாறாகக் கலந்த கலவி
ஸ்ம்ருதி விஷயம்மாக தரிக்க
அத்தாலே
பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தை அனுசந்தித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற -உருகுமால் நெஞ்சத்தில் -அர்த்தத்தை
உருகுமால் என் நெஞ்சம் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————————————————-

வியாக்யானம்–

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி –
ஹ்ருதயா ந்யாமமன் தேவ ஜனச்ய குணவத்தயா-என்னும்படி
உன்னுடைய தாழ்ந்த செயல்களை அனுசந்தித்து
என்னுடைய மனசானது
த்ரவ்யத்ரவ்யம் போல்
உருகா நின்றது –

பெருகுமால் வேட்கை எனப்பேசி –
அதுக்கு மேலே
அபிநிவேசமும் மிக்கு
வாரா நின்றது என்று
அருளிச் செய்து —

மருவுகின்ற இன்னாப்புடன் –
கீழே
ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்டு
அந்த அனுவ்ருதமான
வெறுப்போடு-

அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் –
அவனுடைய
இருத்தும் வியந்திலே
அறியேன் மற்று அருள் -இத்யாதியாலே
அருளிச் செய்த பிரணயித்வ குணங்களை
திரு உள்ளத்திலே பொருந்த
அருளிச் செய்த-

அதாவது –
உருகுமால் நெஞ்சம் -உயிர் பாட்டாய்
அத்தைப் பின் சென்று
நினை தொறும்-என்று தொடங்கி -நினைகிலேன் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே -என்றும்
நீர்மையால் கார் முகில் வண்ணன் தன் கலவம் அறிகிலேன் -என்றும்
அறிகிலேன் –சிறிய என் ஆர் உயிர் உண்ட திருவருளே -என்றும்
திருவருள் செய்பவன் போலே –கரு வளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே -என்றும்
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும் –என் கண்ணன் என்றவன் காட்கரை யேத்துமே -என்றும்
என் ஆர் உயிர் கோள் உண்டே –காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் -என்றும்
கோள் உண்டான் அன்றி ஆளன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே -என்றும்
தெய்வ வாரிக்கு இங்கு எனது உயிர் பட்டது அங்கு ஆர் உயிர் பட்டது -என்றும்
வாரிக் கொண்டு பருகினான் -கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே -என்றும்
இப்படி
அவன் தாழ நின்று பரிமாறின
சீலாதி குணங்களிலே
சிதில அந்த கரணராய் அருளிச் செய்த
ஸ்ரீ ஸூக்தி -என்கை –

இப்படி ஈடுபாட்டை யுடையராய்
அருளிச் செய்த இச் சொல்லை –
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு –
என்னுடைய நாவானது-எவ்விடத்து-சொல்லாது இருப்பது –

எல்லா விடத்திலும்
நாவினால் நவிற்று –குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்னுதல் –

அன்றியே
என் நா சொல்லாது இருப்பது எங்கு -என்று பாடமாய் –
இதில்
ரசஞ்ஞனான என்னாலே
சொல்லப் படாது இருப்பது எத்தசையிலே எங்கனே-என்றது ஆகவுமாம் –
எல்லா தசையிலும் அனுசந்தியாது இருக்க ஒண்ணாது-என்றபடி –

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: