பகவத் விஷயம் காலஷேபம் -173- திருவாய்மொழி – -9-4-1….9-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மையார் -பிரவேசம்

இறைவனுடைய ஸ்வா தந்த்ர்யத்துக்கு அடி -அவன் தானே இருக்கும்-
அவனுடைய சீலம் முதலான குணங்களுக்கு அடி -பிராட்டியே இருக்கும் –
சீலம் முதலான குணங்கள் வந்தவாறே-ஸ்வா தீனம் இன்றிக்கே ஒழிகிறதோ -என்னில்-நிரூபித்தால்
அந்த ஸ்வா தந்த்ரியத்தைப் போன்று-இவளுடைய சேர்த்தி-நித்தியமாய் இருக்கையாலே –
அங்கனமாய் இராது -காரணம் பற்றி வந்தது ஆனாலும் –
பாஷ்ய காரர் மேலே ஸ்ரீ வல்லப என்று நினைத்து-ஸ்வரூபத்தை நிரூபிக்கிற இடத்தில்-
ஞானம் ஆனந்தம் இவற்றுக்கு முன்பு ஸ்ரீய பதி என்றாரே அன்றோ –கீதா பாஷ்யத்தில் –
ஸ்ரீய பதி – நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநாநந்த
ஞான ஆனந்த ஏக ஸ்வரூப –ஸ்வ அபிமத அநுரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ
ஐஸ்வர்ய சீலாத்ய-அநவதிக அதிசய அசங்கேய கல்யாண குண கண ஸ்ரீ வல்லப-இப்படி இருக்கிறவனுடைய-சீல குணத்தையும்
அதற்கடியான திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையையும் -அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் –
அருளிச் செய்தார் மேல் திருவாய் மொழியிலே –
கடுக பெற வேண்டும்படி-குணங்களால் மேம்பட்டவனுமாய்-பெறுவிப்பாரும் அருகிலே உளராய் இருக்கையாலே
இப்போதே பெற வேண்டும்படியான ஆசை பிறந்தது –
அப்போதே பெறக் காணாமையாலே-விஷயத்துக்கு தகுதியாக விடாய்த்தார்-
பெற வேண்டும்படி குணங்களால் மேம்பட்டவனுமாய்-பெறுவிப்பாரும் அருகே உளராய்-
இருக்கப் பெறாவிட்டால் ஆறி இருக்க போகாதே அன்றோ –
ஆகையாலே-
முடியானே -என்ற திருவாய்மொழியின் வாசனையாலே-அறிவுடைப் பொருள்களைப் போன்று தனித் தனியே
கரணங்களும் விடாய்க்க -தாமும் விடாய்க்கிறார் -முதல் ஐந்து பாசுரங்களில்-
வீற்று இருந்து ஏழ் உலகு -திருவாய்மொழி வாசனை 6-7-8-
என்றைக்கும் என்னை -திருவாய்மொழி வாசனை -9-
செஞ்சொற் கவிகாள் –திருவாய்மொழி வாசனை –10
இதுதான் எல்லா திருவாய் மொழி களோடும் கூடி இருப்பது ஒன்றாயிற்று -என்றது-கலம்பகம் மாலை போலே –
முடியானே /வீற்று இருந்து ஏழ் உலகு /என்றைக்கும் என்னை /செஞ்சொற் கவிகாள்
என்னும் திருவாய் மொழிகளில் ஓடுகிற எண்ணங்களை உடைத்தாய் இருப்பது ஆயிற்று -என்றபடி-
இப்படி இந்த்ரியங்களும் தனித் தனியே விடாய்க்க -கண்ணே -என் கருத்தே -உன்னை உள்ளும் என் உள்ளம் –
தாமும் விடாய்த படி தான் -நாம் அழைப்பேன் -பேதுறுவன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய துயரத்துக்கு தோற்றின-அது தான் காலம் தாழ்த்து வந்தான் என்னலாம்படி
ஆற்றாமைக்கு காலம் தாழ்த்துத் தோற்றாமல்-
தூணிலே வந்து தோற்றினால் போலே -நரசிங்கமாய் –தோற்ற வேண்டும் படி ஆயிற்று –
இப்படிப் பட்ட
தம் நிலையையும்
அதற்கு அடியான விடாயையும்-
விடாய் அறிந்து அதற்கு உதவ வந்து அவன் முகம் காட்டின படியையும்
நினைத்து உவகையினராய்-என் உள்ளம் உகந்தே
நான் கிருதக் கிருத்தியன் ஆனேன்-கண்டு கொண்டேனே
அடிமை செய்யப் பெற்றேன்-தொண்டர்க்கு அமுது உண்ண
வாழ்ந்தேன்-உய்ந்தவாறே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் எல்லாம் நான் உபகாரகனாம் படி ஆனேன்
இது ஒருவன் பெரும் பேறு இருந்தபடியே -என்று
தமக்கு பிறந்த லாபத்தை நினைத்து
இனியராய்
அதனைப் பேசித் தலைக் கட்டுகிறார் –

—————————————————————————–

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

நிரதிசய போக்கியா -ஸ்ரீ லஷ்மி விசிஷ்டன் —ரக்ஷகத்துக்கு திவ்ய ஆயுதங்கள்- காண கருதும் –
விஷய த்ரயம் -விசிஷ்ட த்ரயம் -பிராட்டி -திவ்ய ஆயுதங்கள் -திவ்ய விக்ரக விசிஷ்டன்
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்-ஸ்வ பாவிக-கரும் கண்ணி – அலங்க்ருதமான –மங்களார்த்தமான -தாமரை மலர் மேல் பிறப்பிடம்
-ஆபி ஜாத்யம் குணம் -செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே-பித்தன் ஒன்றே அவனுக்கு விசேஷணம் -திருவுக்கு முன்பு அனைத்தும் சொல்லி –
பத்ம வர்ணம் -அகலகில்லேன் இறையும்-அழகிலே ஈடுபட்டு சேரும் படி -அவயவ சோபை ஆபி ஜாதியத்திலும் துவக்குண்டு
-திருவின் இடத்தே வ்யாமோஹம் அதிசயித்த –திரு -பிரித்து -அவள் இடம் மால் –
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்-திவ்ய ஆயுதங்கள் -அஸ்தானே பய சங்கை பண்ணி -அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் -உறகல்
-ரேகை -வலத்ரயம் சுழற்சியைப் பார்த்தே பயந்து -கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே-திவ்ய மங்கள விக்ரகம்
-ஸ்ரீ யபதி -சங்கு கதா தரன்-காண விருப்பம் படா நின்றது –

திருமகள் கேள்வனானவனை-காண வேண்டும் -என்று-
தம்முடைய கண்களுக்கு பிறந்த-அவாவினை-அருளிச் செய்கிறார்

மையார் கருங்கண்ணி –
அவனைப் பெற வேண்டும் என்று இருப்பார் ஆசைப்படுவதும் அவள் முன்னாகவாய் பெற்றால்-
உபாயமாக பிரார்த்தித்து -பூர்வ கண்டம் -புருஷகாரமாக இவளை பற்றி –
பின்னை கைங்கர்யம் செய்வதும் இருவருமான சேர்த்தியிலேயாய் இருக்கும் அன்றோ –
மையார் கருங்கண்ணி –
வேறு ஒரு பொருளைக் கொண்டு அழகு செய்ய வேண்டாதபடி-இயல்பான அழகினை உடையதாய்-
ஆயிற்றுத் திருக் கண்கள் இருப்பன –
இனி மங்களத்தின் பொருட்டு தரிக்கும் இத்தனையேயாம் அஞ்சனம்-
கருங்கண்ணி -என்னா நிற்கச் செய்தே -மையார் -என்னும் போது-மங்களத்தின் பொருட்டு தரிக்கப் படுத்தல் எனபது தானே போதரும் அன்றோ –

கமல மலர்மேல் செய்யாள் –
இது ஆயிற்று மிருதுத் தன்மை இருக்கும்படி –
கீழே அழகைச் சொல்லி -மற்றை இடம் பொறாத -மலர் மேல் இருக்கையே-பொருந்தும் படியான மிருதுத் தன்மை –

திரு மார்வினில் சேர் திருமாலே –
தாமரைப் பூவில் வாசனையும் தாதும் அடிக் கொதித்தால்-
உன் மார்வில் அடி மாறி இட வேண்டும்படி-மார்வு படைத்தவனே-
இவள் இவ்வேற்றம் எல்லாம் கொண்டும் அம்மார்வுக்கு அவ்வருகே போக மாட்டாள்-
அவ்வகலம் எல்லாம் இனிமையாக இருக்கையாலே-அவ்வருகு போக வேண்டாவே-
அகலம் மார்வு -விரிந்து இருத்தல் சிலேடை-

திருமாலே
இவள் -மார்பில் படும் பாட்டினை –
இவளுடைய எல்லா உறுப்புகளிலும் பிச்சு ஏறி இருக்குமாயிற்று அவனும் –
அவனுடைய திருக் கண்கள் சிவந்தனவாய் அன்றோ இருப்பன
அவன் இவளை எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதனால் –-
அவன் கண்களின் சிவப்பு இவள் மேல் ஊறி இவள் திருமேனி சிவந்து இருக்கும் –
இவள் அவனை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கையாலே-
இவள் கண்களின் கருமை அவன் திருமேனியில் பரந்து-அவன் திருமேனி கருமையாய் இருக்கும் –
இவளுக்கு திருக் கண்கள் குளிர்ந்து இருக்கும் -கருமை -குளிர்ச்சி கிருபை-அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருக்கும்
அவனுடைய சேர்க்கையால் ஆயிற்று இவளுக்கு தண்ணளி விஞ்சி இருப்பது
இவளுடைய சேர்க்கையால் ஆயிற்று அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருப்பது-
உபாதி நித்யம் -தயையும் வாத்சல்யமும் வேணுமே -இவையும் நித்யம்
மாயாவதி -அவித்யாதி ப்ரஹ்ம சத்யம் ஜகத் மித்யா -உபாதி வசம் என்பர் -வாக்ய ஜென்ம வாக்யார்த்தம் -ஐக்கியம் வந்து சித்தி
-சப்தவித்த அனுபவத்தில் லகு மகா சித்தாந்தம்
உபாதி வசத்தால் பொருந்தாது -உபாதி உண்மையா இல்லையா -உண்மை என்றால் ப்ரஹ்மம் அசத்தியம் –
அசத்தியம் மேல் எப்படி உபாதி ஏற்றுவது -உபாதி சத்யம் ஆனால் நித்யம் -ஆகும் அவித்யா போகாதே –
ஆக
காதலாலே இருவருக்கும் இரண்டும் குறை அற்று இருக்கும்
வரவிட்ட ஆள் -மாருதி -அழியச் செய்யப் புக
பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம்-கார்யம் கருணம் ஆர்யென ந கச்சித் ந அபராத்யதி -யுத்தம் -116-45
யார் குற்றம் செய்யாதவர் -என்னும் இவள்
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-
என்று இவளோடு மறுதலிக்கும் படி ஆயிற்று அவன் இருப்பது
ஆகையாலே
இருவருமான சேர்த்தியிலே இவை இருவருக்கும் குறை அற்று இருக்கும் -என்றுமாம் –
பிரிந்து இருக்கும் காலத்திலும் தனித் தனியே குறைவு அற்று-இருக்கும் என்றுமாம்-
அவதார த்தால் பிரிவு -இருந்தாலும் வாத்சல்யமும் தயையும் குறையாதே –

-திரு மார்வினில் சேர் -என்றதனால்
எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்
அகலகில்லேன் இறையும்-என்று இன்று வந்து கிட்டின புதியார்-படுவதனை எல்லாம் படா நிற்பாள்-என்பதனைத் தெரிவித்தபடி
சேர் திருமாலே -என்ற நிகழ்கால வினைத் தொகை இதனைக் காட்டுகிறது-
யாமி -போகப் போகிறேன் -வளையல்கள் உடைய
நயாமி -போக மாட்டேன் -உன்னை கூட்டிப் போகிறேன் -மீது வளையல்கள் ஓடிய
சங்கு தங்கு முங்கை நங்கை -வளையல்கள் தங்கும் பிரிவே இல்லையாம் –
மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்ட மாதவா -திருவாய்மொழி -1-5-5-
வெருவும் ஆலமும் பிறையும் வெவ் விடையவற்கு ஈந்து
தருவும் வேறுள தகைமையும் சதமகற்கு அருளி
மருவு தொல் பெரு வளங்களும் வேறுற வழங்கி
திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி -கம்பர் -பால -அகலிகைப் படலம் -26

வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் –
இவள் கையில் உள்ள விளையாட்டுத் தாமரைப் பூ அவனுக்கு-இனிதாக இருக்குமா போலே ஆயிற்று
அவன் கையில் திவ்ய ஆயுதங்கள் இவளுக்கு இனியவை இருக்கிறபடி-பிராட்டியை கூறி திவ்ய ஆயுதங்களை அருளுவதால் –
ஸ்ரீ குணரத்ன கோசம் -47 ஸ்லோகம் -இது போலே
இவள் உகப்புக்காக அடியார்கள் உடைய பகைவர்களை அழியச் செய்கைக்கு காரணமாய்
காட்சிக்கு இனியதாய் இருக்கும் ஆயிற்று –
பகைவர்கள் மேல் மிக வெம்மையை உடைத்தாய்-புகரோடு கூடி இருக்கிற திரு ஆழி –
இருக்கும் தோற்றப் பொலிவே அமைந்து -வேறு ஒரு கார்யம் கொள்ள வேண்டாதே-
வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டு இருக்கும் படியான-ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –

ஏந்தும் கையா –
வெற்று ஆயுதங்களையே அன்று –
வெறும் திருக் கரங்களையே அன்று –
இரண்டின் உடைய சேர்த்தியை யாயிற்று இவர் ஆசைப் படுகிறது-
கூர் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6-9-1- என்னுமவர் அன்றோ

உனைக்-
பிராட்டி சம்பந்தத்தோடும்
திவ்ய ஆயுதங்களோடும்
திவ்ய விக்ரகத்தோடும்
கூடி இருக்கிற உன்னை –இவருடைய உத்தேச்ய வஸ்து இருக்கிற படி இது காணும் –

காணக் கருதும் –
தமஸ பரமோ தாதா சங்க சகர கதா தர-ஸ்ரீ வத்ஸ வஷ நித்ய ஸ்ரீ அஜய சாஸ்வத த்ருவ-யூத -115-15-மண்டோதரி -வார்த்தை
சங்கையும் சக்ரத்தையும் கதையும் தரித்து இருப்பவனே-
பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ வத்சத்தையும் மார்பில் உடையவனே-
என்கிற உன் வடிவைக் காண ஆசைப் படா நின்றது –
அவனை ஆசைப் படுவார் ஆசைப் படுவது ஒரு கார்யம் கொள்ள அன்று-காண ஆயிற்று
திரு வேங்கடத்தானைக் காண அன்றோ காரார் திரு மேனி காணும் அளவும் அன்றோ -சிறிய திரு மடல் -69-
சதா பஸ்யந்தி சூரைய-நித்ய சூரிகளும் இத்தனை -அன்றோ
அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள்-மற்று ஒன்றினைக் காணாவே -என்று
இவ்வளவிலே தேக்கிட்டு விடுவர் இங்கு உள்ளார்
நவை தேவோ அச்நந்தி நபிபந்தி-ஏத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -சாந்தோக்யம் –3-10-
தேவர்கள் உண்பது இல்லை
இந்த அமிர்தத்தை பார்த்தே திருப்தி அடைகிறார்கள் -என்று-இவ்வளவிலே தேக்கிட்டு விடுவர் அங்கு உள்ளார்

என் கண்ணே –
சம்சாரிகளில் தமக்கு உண்டான ஆசையோ பாதியும் பேருமாயிற்று
இவரைக் காட்டிலும் இவர் திருக் கண்களுக்கு-
முக்கியமானவர்களாய் இருக்கும் ஏற்றம் உண்டே அன்றோ அவற்றுக்கு-

——————————————————————————————-

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-

அபி நிவேசம் -நெஞ்சும் நானும் அலற்றா நிற்கிறேன் -ஜீவனுக்கு கருவி வேணுமே -நெஞ்சு அசேதனம் -ப்ரேமம் வளர்ந்து சேதன சமாதி
-நாம் அசேதன சமாதி ஆவது போலே -ஆழ்வார் நெஞ்சு -சேதனம் ஆனதே -முடியானே -பார்த்தோம்
கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்-தரிசன சாதன பூதநாயக் கொண்டு -என்னிலும் சபலனாமாக் கொண்டு
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்-பஹு சங்க்யாதம் -மநோ ரதம் -கொண்டு -ஐந்து வேலைக்கு காரர்கள் உண்டே
-ஐந்து விருப்பங்களும் மனஸ் கொள்ளலாமே -காண்கையிலும் பிரதி பந்தம் போகையிலும் -அடிமை செய்வதிலும் –
நான் -கரணி -நாமே அவனுக்கு காரணம் -சரீராத்மா பாவம் உண்டே –
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை-ப்ரஹ்மாதிகள் -சனகாதிகள் -காண முடியாத உன்னை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே-பார்க்காமல் விட மாட்டேன் -மனஸ் -கண் -ஜீவன் உறுதி கொள்ளுவது
-காரணம் காரணி சொன்ன படி தானே கேட்க வேண்டும் -கிட்டாமல் விட்டேன் -வியாசனப்பட்டு கூப்பிடா நிற்கிறேன் –
யாராலும் பார்க்க முடியா உன்னை பார்த்தே தீருவேன் -சொல்ல வில்லை -கூப்பிடா நிணர்கிறேன் -காரணி தானே முடிவு எடுக்க வேண்டும்
ஆழ்வார் என்னைப் பார்க்கட்டும் என்று நீ தானே சங்கல்பம் கொள்ள வேண்டும் -கரணியும் நீயே -கரணங்களும் நீயே -உபாய மும் உபேயமும் நீயே -என்றபடி –

தமக்கும்-தம்முடைய மனதுக்கும் உண்டான-காதல் பெருக்கை-அருளிச் செய்கிறார்-

கண்ணே –
எனக்கு கண் ஆனவனே-

உன்னைக் காணக் கருதி-
எல்லை இல்லாத இனியனான உன்னைக் காண ஆசைப் பட்டு-
கண்ணைக் கொண்டே கண்ணை காண இருக்குமா போலே-காணும் இவர் இருக்கிறது –
காண்பதற்கு கருவியான கண்களும்-காணப்படும் விஷயமும்-அவனே என்கிறார் –
சஷூஸ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண-ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண -சுபால உபநிஷத்
பார்கின்ற கண்களும் பார்க்கப் படுகின்ற பொருள்களும்-நாராயணனே -என்னக் கடவது அன்றோ –
அவனாலேயே அவனைப் பெறுமவர் அன்றோ இவர்-பிரபன்ன ஜன கூடஸ்தர் -நாலாயிர ஆழ்ந்த பொருள் இதுவே –
பேற்றிலே உள்ள நியதியைப் போன்றே -அதனைப் பெறுதற்கு உரிய-வழியிலும் இவருக்கு உள்ள நியதியும் –

என்நெஞ்சம் –
நல்வினை தீவினைகட்கு காரணமாய் கொண்டு-விஷயங்களிலே பரகு பரகு என்று
வாரா நிற்கும் அன்றோ சம்சாரிகள் உடைய மனம்-பந்த ஹேது-சம்சாரிகளுக்கு -ஆழ்வாருக்கு மோக்ஷ ஹேது –
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் மனம் அன்றோ -தொழுது ஏழு -என்பது –

எண்ணே – கொண்ட சிந்தையதாய் —
எண் கொண்ட என்னத்தை உடையதாய் -என்றது-பலவிதமான எண்ணங்களை எண்ணி -என்றது –
காண வேண்டும்-காணாதே பட்ட துக்கத்தைப் போக்க வேண்டும்-அடிமை செய்ய வேண்டும் –என்று எண்ணி என்றபடி –

நின்று இயம்பும்-
எப்பொழுதும் கூப்பிடா நிற்கும்-
கூப்பிடிகை யாகிற செயலையும் தானே ஏறிட்டுக் கொள்ளா நிற்கும்-
கண்ணே -என்கையாலே – வழியும் அவனே -என்பதனைச் சொல்லிற்று-
உன்னைக் காண -என்கையாலே பேறும் அவனே -என்பதனைச் சொல்லிற்று-
எண்ணே கொண்ட -என்கையாலே -அந்த வழியைக் கொண்டு-இந்த பேற்றினைப் பெற வேண்டும் என்று-
இருக்கும் அதிகாரியினுடைய வாழ்க்கை இருக்கிறபடி சொல்லிற்று –
ஆத்மா யோசித்து -மனஸ் சிந்தித்து -கையால் செய்வதை -மூன்றும் மனஸ் செய்யும் ஆழ்வாருக்கு –
உபாயமும் அவனே உபேயமும் அவனே –இத்தை உணர்ந்து – ப்ரீத்தி காரித கைங்கர்யம் அவன் கொடுக்க
-விருப்பம் ஆசை ஒன்றே நமக்கு க்ருத்யம் -அதிகாரி ஸ்வரூபம் இதுவே –

விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே –
இதனால்-இது தான் மனத்திற்கேயாய் நான் செயல் அற்று இருக்கிறேனோ-என்பதனை தெரிவித்தபடி-
பிரமன் முதலான தேவர்களுக்கும்-சனகன் முதலான முனிவர்களுக்கும்-என்றும் ஒக்க காண அரியையாய் இருக்கிற உன்னை
நான் கிட்டாது ஒழிவனோ-பெற்றே முடிப்பேன் -என்று நான் கூப்பிடா நின்றேன்-
இவர் பெற்றே முடிப்பன் எனபது என் கொண்டு -என்னில்-
வேறுபட்ட சிறப்பினை உடைய தேசங்களில் வாழ்கின்ற வர்களாய்-
தங்களுக்கு என்ன ஒரு கைம்முதல் உண்டாய் இருக்குமவர்கள் ஆகையாலே விளம்பத்துக்கு காரணம் உண்டு அவர்களுக்கு-
அங்கன் ஒரு கைம்முதல் இல்லாதவர்களுக்கு விளம்பத்துக்கு காரணம் உண்டோ-
இல்லையே என்னும் உறுதியைக் கொண்டு கூப்பிடா நின்றார் என்க –
நண்ணாது ஒழியேன் -என்பதற்கு-
1-அவனைக் கிட்டாத போது நான் தரியேன் -என்று பொருள் அருளிச் செய்வர் ஆய்த்தான் -பட்டரின் சிஷ்யர் –
அங்கன் அன்றிக்கே-
2-நண்ணாது ஒழியேன் -என்கிற இடம் மகா விசுவாசத்தை சொல்லுகிறது-
தேவர்கள் வேறுபட்ட சிறந்த தேசத்தில் இருக்கையாலே கிரமத்திலே எடுக்கலாம்-
அங்கன் அன்றிக்கே இவ் உலகத்தில் அகப்பட்டு நிற்கிற இவரை அன்றோ கடுக எடுக்க வேண்டுவது-
எடுக்க வேண்டும் நிலத்தில் இருந்தேன் –எடுக்க வேண்டும் என்று இருந்தேன்-
எடுப்பான் தானாய் இருந்தான்-எடுத்தால் பெறுவது தன்னையாய் இருந்தது-
ஆன பின்பு-எனக்கு என்ன கண் அழிவு உண்டு –

—————————————————————————————

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-

ஆர்த்தியே பற்றாசாக -ஆஸ்ரித ரக்ஷகனான உன்னுடைய -கிருபை பொழிவது பகவான் ஆனபடியால் -நிர்ஹேதுக -காரணம் –
ஆர்த்தி இருந்தால் தான் பொழிவார் -ஆர்த்திக்காக பொழிய வில்லை -ஆர்த்தி -அதிகாரி ஸ்வரூபம் –
கிருபை என்னை நழுவ விடுகிறதோ –
அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்-அபி நிவேச அதிசயத்தால் கூப்பிடா நின்று -வேறு புகல் இடம் இல்லாத
-அவத்யாவாஹம் கிட்டினால் நாயேன் -நைச்யம் -பழைய வாசனை போக்க கூடாதே –
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
துக்கப்பட்டு சுருங்கிய நெஞ்சு -உன்னுடைய சந்நிதியில் -வளைந்த வாழை அசைத்து -மனசில் உள்ளத்தை சொல்வதை போலே -சிதிலமாகா நின்றது –
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்-இந்திரன் -ஆர்த்தியை ஜெநிப்பித்த அன்று –கோபி கோபி ஜனங்களுக்கு
-ராஷா அபேக்ஷை பண்ணவும் அறியாத -அங்கு பலிக்க
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே-அடியேன் இழந்தேன் -நிரவதிக கிருபை தப்புமோ -உனக்கு தப்புமோ -என் விஷயத்தில் தப்புமோ –
எனக்கா உனக்கா -வார்த்தை இல்லையே -இருவருக்கும் -கொள்ளலாமே –

இப்படிக் கூப்பிடச் செய்தேயும் வரக் காணாமையாலே-துன்பத்தையே கைம்முதலாக கொண்டு காப்பாற்றுகின்ற
உன் குணத்துக்கு புறம்பு ஆனேனோ –என்கிறார்

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால் குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்-
தகுதி அற்றவனாய்-அற்பனாய் இருந்து வைத்து-துயரத்தாலே கூப்பிடா நின்றேன்-ருசியாலே தவிர மாட்டார்-
கிட்டினால் அத்தலைக்கு குற்றமாம்படி ஆயிற்று தம்முடைய நிலை-
நாய் தன் தலைவனுக்கு தான் விரும்பிய பொருளில் ருசியை தெரிவிப்பது வாலாலே ஆயிற்று-
அவ்வால் தான் கூழை ஆனால் தெரிவிக்கை அரிதாகும் அன்றோ –
அது போலே என் மனமானது நோவு படா நின்றது-இதனால் நமக்கு ஓடுகிற துயரம் பேச்சுக்கு நிலம் அன்று-என்பதனைத் தெரிவித்தபடி –
அன்றிக்கே
சாதனம் ஒன்றும் இல்லாதவனாய் வைத்தும் ஆசைப் படா நின்றேன் -என்கிறார் -என்னுதல்-
மனஸ் அழுக்கு அடைந்தால் சொல்ல முடியாதே யோக்கியதையும் இல்லையே -வாலை குழைத்து நின்றால் ரொட்டி துண்டு போடுவது போல
ஆர்த்தி -சொல்லி கூப்பிட வேண்டுமே -அதுவும் இல்லாமல் இழந்து போகிறோமே -வால் ஆட்டுவது -தேனே இன்னமுதே
என்று என்றே சில கூத்துக்கள் சொல்ல வேணுமே –

மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் –
இந்த்ரன் கல் மழையைப் பெய்த அளவிலே-மலையை எடுத்து ஆயர்களையும் பசுக்களையும்
துயரமே கைம்முதலாக பாதுகாத்தவனே –

பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே –
அருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –
வரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று-
பேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –
அதனை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகிது-ஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது-
ஆனபின்பு-பசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த-இம் மகா குணத்துக்கு
நான் புறம்பு ஆகிறேனோ-என்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்
அவ்வருள் அவனை தப்பி போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்-
அவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்-

————————————————————————————————-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-

உத்தேசியமான சேஷத்வம் பிரதி சம்பந்தி சேஷி -அடிமையாக வைத்து எனக்கு என்ன பேறு என்று நெஞ்சு கலங்கா நின்றது –
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்-சேஷத்வமே ஏற்புடைத்து -பிரதி சம்பந்தி -உனக்கு தாஸ்ய அனுமதியைப் பண்ணி
-இசைந்து -இசைவித்து உன் தாழ் இணைக்க கீழ் இருத்தும் அம்மானே
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்–சம்சார ஸ்திதியோ -ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யமோ –
இரண்டுக்கும் நீயே கடவன் –
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்—அறிவது அரிய அரியாய அம்மானே-அசாதாரண சம்பந்தம் உண்டே -அனைவருக்கும்
-சாமான்யம் அதி தைவதம் -யாராலும் அறிய முடியாத போது நின்ற பொன் அம் கழல்-ஆஸ்ரித சுலபன் சர்வேஸ்வரன் இரண்டு ஆகாரங்களை
எவராலும் அறிய முடியாமல் – -வாசாம் அகோசரம் -ஸ்வாமி -நரசிம்மம் –
பேதையேன் -அறிவில்லாத நெஞ்சு -சொல்ல வில்லை -எது கொடுத்தாலும் யுக்தம் அதுவே என்று ஏற்றுக் கொள்ளாத நெஞ்சு
-எது செய்தாலும் பிராப்தம் என்று அறியாமல் கலங்கா நின்றது –

நீர் இங்கன் அஞ்சுகிறது என் என்ன –
தேவர்கள் முதலானோருக்கு அரியை ஆகையாலே-எனக்கும் அரியை ஆகிறாயோ-என்று
என் நெஞ்சு கலங்கா நின்றது –என்கிறார் –
எம்பெருமானார் நிர்வாகம் படியே இந்த அவதாரிகை –

உறுவது இது என்று –
சீரியது அடிமை செய்யும் இது -என்று

உனக்கு ஆட்பட்டு –
ஆத்மா பகவானுக்கு அடிமைப் பட்டது என்ற சேஷத்வ ஞானம் வந்ததும் பின் சீரிய பயன்-கைங்கர்யமே அன்றோ –

நின் கண் பெறுவது எது கொல் என்று –
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் உணர்ந்து –சீரியதும் கைங்கர்யமே என்றும் அறிந்து –
அநந்ய பிரயோஜனருக்கு சர்வேஸ்வரன் வேறு ஒன்றையும்-கொடுப்பான் ஒருவன் அல்லன் என்றும் அறிந்து இவர்
உன் பக்கல் பெறுவது எது கொல் -என்கைக்கு காரணம் என் என்னில்-
க்ரமத்தில் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்து-சம்சாரத்தில் இருக்கும் இருப்பையே கொடுத்து விடப் போகின்றாயோ-
அன்றி-என் விரைவு அறிந்து சடக்கு என முகம் காட்டுகிறோயோ –என்கைக்காக சொல்லுகிறார் என்பது –ஆர்த்த பிரபன்னர் அன்றோ ஆழ்வார் –
கஜேந்திரன் அநாதி காலம் இழந்து காணப் பெற்றான் -பரதன் கண்டு இழந்து 14 சம்வத்சரம் பொறுத்து பெறப் பெற்றான் -எனக்கு என்ன ஆகுமோ

பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும் –
நாம் விரும்பிய படி பலிக்கும் என்னும் அறிவு இன்றிக்கே இருக்கிற-என் நெஞ்சம் கலங்கா நின்றது –
இங்கனம் கலங்குகைக்கு அடி என் என்னில் –
மனத்தின் உடைய அறிவின்மையே இதற்கு காரணம் –நீயும் கூட இதற்கு காரணம் –

வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே –
தேவர்களுக்கும் தானவர்களுக்கும் சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து-தேவர்களுக்கும் தானவர்களுக்கும் என்றும் ஒக்க அறிய அரியையாய் –
தேவானாம் தானவானாம்ச சாமான்யம் அதிதைவதம்-சர்வதா சரணத் வந்தவம் வ்ரஜாமி சரணம் தவ -ஜிதந்தா
அந்நிலையிலே ஒரு சிறுக்கனுக்கு உன்னை உள்ளபடி அறியலாம்படி இருந்தாய்-அதில் நான் எக்கோடியில் ஆகிறேனோ -என்ற அறியாமை –
தேவர்களையும் அசுரர்களையும்பிரித்த பின்னர் அர்ஜுனன் -நான் எக் கோடியிலே ஆகிறேனோ-என்று அஞ்சினாப் போலே
இரண்டாவது சோகம் தேவாசுர விபாகம் கேட்டு ஜனித்த சோகம் -அர்ஜுனனுக்கு —
பின்னை அவன் இதற்கு செய்த மாற்று என் என்னில் –
தன் சௌலப்யத்தை காட்டுகை அன்றோ -என்றது-எளியோமாகையும் ஒரு கோடி உண்டாக நீர் சொன்னீர் ஆகில்-
நீர் தாம் அக் கோடியில் உள்ளார் ஒருவராய் இருந்தீர் ஆகில்-உமக்கு இனி
நாம் கைப் புகுந்தோம் என்று இருக்கை அமையாதோ -என்கிறான் -என்றபடி-
நரசிம்கனாய் வந்ததால் எளியவன் -பிரகலாதன் போலே எளியவனாய் இருக்க கை புகுந்தோம் என்று அன்றோ இருக்கக் கடவது –

——————————————————————————————

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-

காரணாத்வாதி குணங்கள் –
அரியாய அம்மானை அமரர் பிரானைப்-விரோதி நிரசனா சீலன் -நிரஸ்த ஸமஸ்த விரோதிகள்-நித்ய சூ ரிகளுக்கு போக்கிய புதன்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை-இயத்தா ராஹித்யம் -முமுஷு க்களை உருவாக்க ஜகம் படைக்க -நான் முகன்-
சமஷ்டி ஸ்ருஷ்டியில் முமுஷுக்கள் இல்லையே -அதற்குத் தயார் படுத்தி -அதனால் முன் படைத்து –
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற-உத்பன்ன ஜகத்தைக் காக்க -வரி -ஒளி தேஜஸ் உடைய -சியாமளா விக்ரகம் -பரிபாகம் -பஞ்ச சயனம் –
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே-கண்ணும் -புத்தி -பண்ணும் -கரியான் தன்னை என்றும் பாட பேதம்
கரியானை -எல்லாம் த்வதீய விபக்தியில் கொண்டு கணக்கு கருதும் கருத்து -அம்மானாய் –காரியானாய் -பிரதம விபக்தியிலும் கொண்டு –
கருத்துமாக பார்த்துக் கொள்ள இரண்டு பாசுரங்கள் -ஸ்ரீ மதே- நாராயணாயா -உன் என்றும் அவனது திருவடிகளை என்றும் சொல்லுமா போலே –

நாம் எளியோமான கோடியிலே அன்றோ-
உமக்கு பேறு கை புகுந்து இருக்க-நீர் இங்கன் படுகிறது என் -என்ன
என் நெஞ்சு காண்கையிலே-விரையா நின்றது-என்கிறார்

அம்மானை
சர்வேஸ்வரனை –

அமரர் பிரானைப்
நித்ய சூரிகளுக்கு தன்னைக் காட்டிக் கொடுத்து-அனுபவிப்பிக்கும் உபகாரகனை –

பெரியானைப் –
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள்-தனக்கு உரிமைப் பட்டவையாய்-
தன்னை அவர்களால் அளவிட்டு அறிய முடியாமல் இருப்பவனை –

பிரமனை முன் படைத்தானை –
பிரமனை முன்னே உண்டாக்கினவனை –

அரியாய –
படைக்கப் பட்ட உலகத்திலே-அடியவன் பொருட்டு-அவன் சூளுறவு செய்த அந்த சமயத்திலே
தன்னை அழிய மாறி வந்து அவதரித்தவனை –

வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற –
அடியாருக்கு உதவுகை அன்றிக்கே-அவர்களோடு கலந்து இருக்கும் தன்மையானை
வரி வாள் அரவு
வரியையும் ஒளியையும் உடைய அரவு
வரி -அழகுமாம் –

கரியான் –
வெளுத்த நிறத்தை உடைய திருவநந்த ஆழ்வான் மேலே
ஒரு காளமேகம் சாய்ந்தால் போலே-ஆயிற்று கண் வளர்ந்து அருளுவது –

கழல் காணக் கருதும் கருத்தே
என்மனமானது காண வேண்டும் என்று விரையா நின்றது-
படுக்கைக்கு பரபாகமான வடிவும்-அதற்கு பரபாகமான திருவடிகளும்-ஆகிய இவற்றை ஆயிற்று காண ஆசைப் படுகிறது

எளியோமான கோஷ்டி பேறு கை புகா நிற்க எதனால் பதற்றம் -என்ன-நெஞ்சு காண துடிக்கிறதே என்கிறார் இதில்

—————————————————————————————

கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-

சாதனம் -அவனே -கண்ணும் கருத்தும் -அவனே உபாயமும் உபேயமும் அவனே –
ஆர்த்தி சாந்தி 7/10-நான்கு பாசுரங்கள் –
பூர்த்தி பலம் -11
ஆர்த்தி சொல்லும் பாசுரம் இறுதி இதுவே –
மநோ ரதித்த படி – சூ ரி சேவ்யனான உன்னை -கண்டேன்
கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து-உறுதி அவனால் -கருத்தே அவன் -பலத்தை கொடுத்து -நெஞ்சுக்குள்
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்-கெட்டியாக கொண்டேன் -வ்ருத்தன்-முதல்வன் சேஷி உஜ்வலன்-தேஜோ மயன்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து-ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே -ஓத்தார் மிக்கார் இலையாய மாயன்
-அகவாயில் அனுபவியா நின்றேன் -அந்தகரணத்துக்குள் ஆழமாக -நெஞ்சுக்குள் அமர வைத்து -அத்யந்த பிரேம விசிஷ்டமாகக் கொண்டு
அனுபவியா நின்றேன் -கண் ஆசைப்பட இவன் நெஞ்சுக்குள் புகுந்தான்

காண ஆசைப் பட்ட அளவிலே-அவன் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்தருள
தம்முடைய மனம் உகந்து-அனுபவிக்கிறபடியை-அருளிச் செய்கிறார் —

கருத்தே உன்னைக் காண கருதி-
எனக்கு மிடுக்கான உன்னைக் காண ஆசைப் பட்ட அளவிலே-முகம் காட்டினாய் –
இவ் விறைவனை அடைவதற்கு ருசியே அமையும் -என்றபடி –
கண்ணே உன்னைக் காண கருதி -என்றார் மேல்
கருத்தே உன்னைக் காணக் கருதி -என்கிறார் இங்கே
இதனால் இவருக்கு கண்ணும் கருத்தும் அவனே -ஞானமும் சக்தியும் அவனே -ஆயினமையைத் தெரிவித்த படி
அனுபபத்தியைக் கொண்டு அர்த்தா பத்தியாலே கற்பித்தல்-
அனுமானத்தாலே அதீந்த்ரியம் என்று அறிதல் செய்யும் பொருளை-நேரே காண வேண்டும் என்று எண்ணுகிறார் என்கை
அநுபவத்தி -பொருத்தம் இன்மை
அர்த்தா பத்தி -அர்த்தத்தாலே கிடைத்தால் –
-செய்ய முடியாத விசித்திர கார்யம் -ஈஸ்வரனை கற்பித்தல் -அனுமானத்தால் -செய்வார்களே -மஹீ மந்த்ராதிகளை கொண்டு
கார்யம் செய்ய விசித்திர ஈஸ்வரன் -இருக்க வேண்டும் என்பர் -பிரபாகரன் மதம் –
அதீந்த்ரன் -உக்தியால் அப்பால் பட்டவன் -அனுமானத்தால் -இந்திரியங்களுக்கு உட்பட்டால் அவயவங்கள் இருக்க வேண்டுமே -தார்கிகன்
அவயவங்கள் கொண்டே கடல் கடைந்தான் –அவனாலே அவனை பெற அன்றோ இவர் இருக்கிறார் –

என் நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன் –
மறுகல் செய்த நெஞ்சிலே -மறுகல் இல் ஈசனை
பரம பதத்தில் இருக்குமாறு போலே இருத்தினேன்-இவர் பக்கல் இசைவு பெற்றிலோம் என்று இருக்குமவன்
இத்தனை இசைவு பெற்றால்-பின்னை தள்ளிக் கதவு அடைத்தாலும் போகானே அன்றோ –

யதீஹ சரத அநேகர த்வயா ஸார்த்தம் அநிந்திதே-லஷ்மனேன ச வத்ச்யாமி நமாம் சோக பிரதஷ்யதி -ஆரண்ய -94-15-
குற்றம் இல்லாத சீதையே உன்னோடும் இலக்குமணனோடும்-பல வருடங்கள் இங்கே வசிப்பதனால் என்னை சோகம் வந்து அடையாது -என்றார்
இதம்புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்-இஹ வத்ச்யாமி சௌமித்ரெ ஸார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-
இலக்குமணா இவ்விடம் புண்யத்தைக் கொடுக்கக் கூடியது-பரிசுத்தமானது-மிருகங்களோடும் பறவைகளோடும் கூடியது
இந்த ஜடாயு பறவை உடன் நான் வசிக்கப் போகிறேன்-என்றும் அருளிச் செய்தார் அன்றோ பெருமாள் -என்றது
ஐயர் கண் வட்டத்திலே வசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் செய்ய வேண்டுகையாலே அது செய்யப் பெற்றிலோம்
இனி இவர் சிறகின் கீழே யாகிலும் வசிக்கப் பாரா நின்றோம் -என்கிறார் -என்கிறபடி-
பஷீணாம் -சப்தம் -இவர் சிறகுக்கு உள்ளே இருக்க அன்றோ ஆசைப்பட்டு இழந்தேன் என்கிறார் பெருமாள் –
இனி -இருத்தாக என்பதற்கு-சிநேக பாவமே அன்றோ என் பக்கலில் உள்ளது என்கிறார் -என்னுதல்-

தேவர்கட்கு எல்லாம் விருத்தா –
இனி அவ்வருகு இல்லை என்னும்படி உயர்ந்தவர்கட்கும் அவ்வருகானவனே-
தலை மகனையும் தலை மகளையும் கிழவனும் கிழத்தியும் என்று தமிழர் சொல்லுவர்-
அவளையும் மலர்க் கிழத்தி –திருச் சந்த விருத்தம் -55-என்றார்கள் அன்றோ –

விளங்கும் சுடர்ச் சோதி உயரத்து ஒருத்தா –
அத யத்த பரோ திவோ ஜ்யோதி தீப்யதே -சாந்தோக்யம்
இந்த பிரகிருதி மண்டலத்துக்கு மேலே உள்ள பரமபதத்தில் சோதி மயமான பரம் பொருள் விளங்குகிறான் –என்கிறபடியே
எப்போதும் ஒக்க விளங்கா நிற்பதாய்-எல்லை இல்லாத ஒளி மயமாய் இருக்கிற-பரம பதத்தில் எழுந்து அருளி இருக்கிற-ஒப்பற்றவனே –
பிரகாரத்தில் அன்றோ பல வகை உள்ளது-பிரகாரி ஒருவனே ஆம் –

உன்னை என் உள்ளம் உகந்து உள்ளும் –
சடக்கென முகம் காட்டின உன்னைக் கண்டு-கலங்கின என் நெஞ்சம் உகந்தே அனுபவியா நின்றது-
தேவர்கட்கு எல்லாம் விருத்தா-விளங்கும் சுடர்ச் சோதி உயரத்து ஒருத்தா –என்று சொல்லுகிற இவ் விசேஷனங்கட்கு கருத்து-
மேலானார்க்கும் மேலாய்-பரம பதத்தில் எழுந்தருளி இருந்து-அவர்களை அனுபவிக்குமாறு போலே-
தன்னை அனுபவிப்பிக்க-அனுபவித்த என் நெஞ்சம் உகந்தது ஆகா நின்றது -என்கை –

——————————————————————————————

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7-

ஆர்த்தி சாந்தி அடைந்து அனுபவிக்கப் பெற்றதை இது முதல் நான்கு பாசுரங்களால் -அருளிச் செய்கிறார் –
ஹ்ருத்யனாய்க் கொண்டு -விரோதி நி ரசன சீலன்
உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்-அகவாயிலே பொருந்தி -அது தானே தனக்கு பிரயோஜனமாக
தான் பேறாகக் கொண்ட அமலன் -உஜ்வல ஸ்வ பாவன் –
துர்மானம் ஹிரண்ய கசிபு சூ சகம் -வர புஜ பலங்களால் செருக்கி -பரியனாகி -வரத்தினால் சிரத்தை வைத்த
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா-மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா-இரண்டு கூறாக்கி
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே-நகத்தால் -உள்ளம் அகவாய் -அதற்கும் உள்ளே உன்னை உகந்தே அனுபவியா நின்றது

தூணிலே தோற்றி-பிரகலாதனுடைய துன்பத்தை தீர்த்தால் போன்று
தம் துன்பத்தை தீர்த்த படியை நினைந்து-ஏத்துகிறார்

உகந்தே யுன்னை உள்ளும் –
பிரிந்த துயரத்தோடு தலைக் கட்டும் உகப்பு அன்றிக்கே-ஒரே தன்மையாக உன்னை அனுபவிக்கும்படியாக –
விஸ்லேஷம் கலசாத சம்ச்லேஷம் அபேஷையால் ஏவகாரம் –

என்னுள்ளத்து –
எண்ணே-கொண்ட சிந்தையை உடைத்தான-என் உள்ளத்து –

அகம்பால் அகந்தான் –
உள்ளுக்கும் உள்ளே -என்றது
உள் உள் ஆவி -என்னும்படியே-கமர் பிளந்த இடம் எங்கும் மறு நினையும்படி -என்றவாறு –
வெளி உள்ளம் -உள் உள்ளம் -உள்ளத்துக்கு உள்ளே -மூன்றும் —

அமர்ந்தே –
தன பேறாக மிக்க காதலைச் செய்து –

யிடங்கொண்ட –
இடம் உள்ள எங்கும் தானே ஆம்படி நிறைந்த –

வமலா –
இவ்விருப்புக்கு அவ்வருகு ஒரு பயனைக் கணிசித்து அன்றிக்கே -ஸுயம் பிரயோஜனமாகவும்
ஒரு காரணத்தையும் பற்றியும் இன்றி நிர்துஹேகமாக இருக்கையும் –
எண்ணே கொண்ட சிந்தையதாய் -என்றதனை ஒரு சாதனமாக நினைத்து இலர் –

மிகுந்தானவன் –
பகைமையில் ஒரு அளவில்லாத தானவன் -என்றது-தன்னை இல்லை செய்கை அன்றிக்கே
தன் உயிர் நிலையிலே நலிந்தவன் -என்றபடி-
உதாரா சர்வ ஏவ எத ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்-ஆஸ்தித சஹி யுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம் – ஸ்ரீ கீதை -7-18-
ஞானியானவன் என் உயிர் என்னக் கடவது அன்று –
நரசிம்ம ராகவா யாதவ ரெங்கேந்திர சிம்மம் -ஆத்மா தானே பக்தர்கள் -பிரகலாதன் -விபீஷணன் -அர்ஜுனன்
-திருப் பாண் ஆழ்வார் -நலிவுப்பட கிளர்ந்த சிங்கங்கள்

மார்வகலம் இரு கூறா நகந்தாய் –
அகன்ற மார்வானது இரண்டு கூறு ஆகும்படி செய்ய வல்ல-நகத்தை உடையவனே
நகத்தாய் -எனபது நகந்தாய் -என்று வந்தது -மெலித்தல் விகாரம் –

நரசிங்கமதாய வுருவே –
என்றும் ஒரே தன்மையை உடைய உருவம் –
சதைக ரூப ரூபாயா விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே-ஸ்ரீ விஷ்ணு புராணம் –என்கிற விக்ரகத்தை இப்படி கொள்வதே –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என்னில் –
அடியார்கள் சூளுறவு செய்த காலத்தில் வந்து-தோற்றுமவன் ஆகையால்-
தூணிலே தோற்றினால் போலே வந்து தோற்றி-மனத்தின் இடம் எல்லாம் புகுந்து-
கமர்பிளந்த இடம் எங்கும் நீர் பாய்ச்சுமாறு போலே-நிரம்ப என்னை அனுபவிப்பித்தான் –என்கிறார் என்பது –

——————————————————————————————–

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

சர்வ அந்தராத்மா -சர்வ காரணன் -சர்வ சுலபனான -உன்னைக் காணப் பெற்றேன் –
உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்-சங்கர பாஸ்கராதி ஒரே உருவமாக இருக்கும் -ஆபாத-ப்ரதீதியில் சாம்யம் -பாஹ்ய சாருவாகன்
-புத்தன் க்ஷணிகம் எல்லாம் -ஷபனர் ஜைனர் சப்தபந்தி வாதம் -விசேஷ வாதம் -வைசேஷிகர் பிரதானம் அணுக்களே காரணம் -என்பர்
-சாக்ஷி நிமித்த காரணம் ப்ரஹ்மம் நிமித்த காரணம் இல்லை என்பர் -சங்க கியர் -சேஸ்வர நிரீஸ்வர இரண்டு
-கபிலர் -தேவகூதி -உபதேசித்து -நிமித்தமாத்ரம் ஒத்துக்க கொண்டு உபாதான மாத்திரம் இல்லை என்பர் –
பாசுபத -ருத்ரன் சைவர் காபாலி பசுபதி ஆகமம் கொண்டு
குத்ருஷ்டிகள் -அத்வைதிகள் -இங்கே பாஹ்யர் -வேதம் ஒத்துக் கொள்ளாத ஒரே தன்மை இவற்றுக்கு உண்டே –
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்-பிரதிபடனாகக் கொண்டு -எதிராகி -அபிராகாப்பியனாய் நடுக்கச் செய்ய முடியாதவன் –
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்-ஸமஸ்த பதார்த்தங்களும் அந்தராத்மா காரண பூதன்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே-தேவர்களுக்கும் காரண பூதன் -கருவாகி –
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்தவனைக் காணப் பெற்றேன் –

எல்லா பொருள்களுக்கும் அந்தராத்மாவாய் –பிரமன் முதலாயினார்க்கு எல்லாம்-
காரணன் ஆனவனை காணப் பெற்றேன்-என்று இனியர் ஆகிறார் –

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம் –
மேல் எழுந்த பார்வையில் ஓன்று போல் இருக்க-சிலவற்றை விதிப்பது-சிலவற்றை விலக்குவது
விலக்கியனவற்றை ஒழிதலைச் சொல்லுவதாய்க் கொண்டு-
உபதேசிப்பாரும் கேட்ப்பாருமாய் பொறுக்கிற புறச் சமயங்கள் எல்லாவற்றாலும் –

பொருவாகி நின்றான் -அவன் –
பொரு -தடை
அவற்றால் தன்னை இல்லை செய்ய ஒண்ணாத படி –தடை அற்றவனாய் நின்றான் –

எல்லாப் பொருட்கும் அருவாகிய -வாதியைத்-
எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்மாவாய்-அவற்றை எல்லாம் நியமிப்பதில் முதன்மையன் ஆனவனை –

தேவர்கட்கு எல்லாம் கருவாகிய –
பிரமன் முதலானதேவர்களுக்கு எல்லாம் காரணனாய்-உள்ளவனே –

கண்ணனைக் –
காரியங்களிலே ஒன்றுக்கு-வசுதேவருக்கு -தான் கார்யம் ஆனவனை -சௌலப்யம் காட்ட

கண்டு கொண்டேனே –
அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க-கண்டு கொண்டேன் -என்கிறார் -இதற்கு கருத்து என் -என்னில் –
அன்பினால் நனைந்த மனத்தினர்க்கு என்றும் காணலாம்
அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசுபாலன் முதலாயினர்க்கு-
புறச் சமயங்களால் அசைக்க முடியாதவனாய்-எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாய்க் கொண்டு
எல்லாரையும் நியமிக்கின்றவனாய்
பிரமன் முதலாயினார்க்கும் காரணனாய் இருந்து வைத்து-அடைந்தார்க்கு சுலபன் ஆனவனைக்-காணப் பெற்றேன் -என்கிறார்

———————————————————————————————-

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

நிதான பாசுரம் -பக்தாம்ருதம் -ஒரே பாசுரத்தில் திருமந்த்ரரார்த்தம் அனைத்தும் அருளிச் செய்து
வாயால் கைங்கர்யம் -வாசிக கிஞ்சித் காரம்
-பக்தி ரூபாபன்ன ஞானம் -இரண்டு கண்கள் -வயிறு நிறையும் படி -ஆர-கண்டு -ஆர்த்தி எல்லாம் தீரும் படி
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்-நமஸ் சபிதார்த்தம் விரோதிகள் தொலைந்து -அநாதி சுத்தமான
அகங்கார மமகார-வாசனை ருசிகள் இல்லாமல் -போக்கி
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்-இதுவே பகவானுக்கு கைங்கர்யம் —
சப்த சந்தர்ப்பம் ரூபமான வாசிக்க கைங்கர்யம்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே-நாராயண அர்த்தம் -அடியேன் -ஆய
அயர்வரும் அமரர்கள் அதிபதி பிராப்யா பூதனுக்கு -அடியேன் –
பிரதமபதம் -அநந்யார்ஹ சேஷ பூதன் -நம-விரோதி போக்கி -பிரதி சம்பந்தித்தவம் -நாராயணா-அடியேன்
-மந்த்ர தாத்பர்யம் ததீய சேஷத்வம் சொல்லிற்று ஆயிற்று

தன்னை அனுபவிக்கப் பெற்று-அதற்கு மேலே-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அமுதமாம்படி
திருவாய்மொழி பாடவும் பெற்றேன் –என்கிறார் –

கண்டு கொண்டு-
நான் அழைப்பன் -என்ற விடாய் எல்லாம் கெட-கண்களால் காணப் பெற்று –

என் கண்ணினை ஆரக்-
காணக் கருதும் என் கண்ணே -என்ற கண்கள் விடாய் கெட-
கலியர் -வயிறார உண்டேன் -என்னுமா போலே-ஆரக் கண்டு கொண்டு -என்கிறார்

களித்து-
மறுகின நெஞ்சு களித்து –

பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத் –
இவ்வுகப்புக்கு இடைச் சுவரான-பழைய கர்மங்களை-வாசனையோடு போக்கி –

தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் –
என்னளவும் அன்றிக்கே –ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகன் ஆகப் பெற்றேன் –
நானும் உண்டு-என் வேலையாள்களும் ஜீவித்து-என் உறவினர்களுக்கும் விருந்திட வல்லேன் ஆனேன் –என்பாரைப் போலே –
சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்-அடியார்கட்கு அடிமை யாதலை-எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –
பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே-இது தான் தோன்றியான கைப்பற்று அடியாக வந்தது ஓன்று அன்று –

அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –
சர்வேஸ்வரனாலே-அடியவனாக-அங்கீகரிக்கப் பட்டவன் ஆனேன் –

——————————————————————————–

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

அனுபவத்துக்கு அடியான-நிருபாதிக சம்பந்தம் உடையவனைக் கிட்டி -சேஷத்வத்துக்கு குடல் துவக்கே உபாதை -சாமான்யம் -அனைவருக்கும் உண்டே –
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்-எப்படியும் அடியான் தானே ஸ்வதா சேஷ பூதன் -ராவணன் அறியாமல் இழந்து –
சொல்லி -புரியாமல் வாயால் சொன்னாலும் -பரிபூரணமான கிருபை செய்து அருளி -ஒன்றும் செய்யாதவனாய்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்-குணத்தால் நெடுமை -ஆர் அருள் செய்தானே -அடியான் சொல்வதற்காக –
இதுவே பற்றாசாக -சரணவரண வா -சொல்லி வைத்து –
நெடியோன் -ருணம் -ஒன்றும் செய்ய வில்லையே -அனுருபமான சீல-ஞான -புகழ்-அதற்கு கொடி கட்டி -தானே சர்வ ரக்ஷகன் என்று காட்டி
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த-அந்நிய அபிமானம் குறை வாராமல் -நிருபாதிக சம்பந்தம்
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே-திருவடிகள் கொண்டு சேஷி இத்தால் காட்டி உலகம் அளந்த பொன்னடி –
இன்னார் இணையார் வாசி இல்லாமல் –
பிரகாசித்தமான சேஷத்வ ஸ்வரூபம் -உஜ்ஜீவிக்கப் பெற்றேன்- -அவனைப் பெற்று கிருதார்த்தன் ஆனேன் –

இப்படி-அவனைப் பெற்று-கிருதார்த்தன் ஆனேன்-என்கிறார் –

அடியான் இவன் என்று –
மேல் செய்யப் புகுகிற கொடை தக்கதே -என்று சொல்லுகைக்காக-
அடியான் என்று-ஒரு பெயரை இட்டாயிற்றுக் கொடுத்தது –

எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை-கொள்ளுகிற என் அளவு அன்றிக்கே-
தன் அளவிலே அருள் செய்த சர்வேஸ்வரனை –
அருள் பெறுவார் அடியாரே அன்றோ –புத்ரர்களுக்கு அம்சம் அன்றோ உள்ளது-
எல்லா வற்றிலும் கூறு உண்டாய் இருக்கும் அடியார்க்கு –பிராதா -சிஷ்யன் -தாசன் -பரதன் மூன்றையும் -சிரஸா யாசித்து –
பிள்ளை அகளங்க பிரமராயர் -பட்டரை சமாதானம் செய்ய வேண்டும் என்று-
பட்டர் திரு உள்ளத்துக்கு உகந்த -இருகை மத வாரணம் –என்கிறவனை பட்டர் பக்கல் வரவிட
அவனும் சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து-திரு உள்ளம் மகிச்சியை உடையதாய் இருக்கிற அளவிலே-
இவனுடைய வைஷ்ணத்வம் இருக்கும் படி திரு உள்ளம்-பற்றி இருக்கை உண்டே -என்றானாக-
சொல்ல வேண்டுமோ கர்ப்ப தாசர்கள் -கருவிலே திரு உடையார் -அன்றோ என்றது தொடக்கமாக-இப்பாசுரத்தை அருளிச் செய்தார் பட்டர் –

ஆர் அருள் செய் நெடியானை –
பெறுகிற என் அளவில் அன்றிக்கே-தருகிற தன் அளவிலே தந்தான் –

தனக்கு அளவு தான் என் என்ன –
நெடியானை –
சர்வேஸ்வரன் -என்னும் அத்தனை –

நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானைக் –
இது தான் நான் இன்று இருந்து விரித்து கூற வேண்டி இருந்ததோ-கட்டிக் கொண்டு இருக்கிற கொடியிலே தெரியாதோ –
சூரம் வீரம் முதலிய குணங்களில் பிரசித்தியை உடையனாய்
பகவானை எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் அனுபவத்தாலே
காட்சிக்கு இனிய வேஷத்தை உடையனாய்-இருக்கிற பெரிய திருவடியை கொடியாக உடையவனை
பெரிய திருவடியை அங்கீ கரித்தால் போலே என்னை அங்கீ கரித்தவனை –

இப்படி அங்கீ கரித்த தற்கு இத்தலையில் என்ன நன்மை உண்டு -என்னில் –
குன்றாமல் உலகம் அளந்த அடியானை –குணத்தையும் குணம் இல்லாமையையும்-நிரூபணம் செய்யாதே
திரு உலகு அளந்து அருளினாப் போலே
ஒரு காரணமும் இல்லாமல் நிர்துஹேகமாக -அங்கீ கரித்தான் -என்கிறார்-
ஒரு அடியும் குறையாமல்-பூமிப் பரப்பை அளந்து கொண்ட-திருவடிகளை உடையவனை –
தன் பெருமையையும் சௌலப்யத்தையும் என்னை அனுபவிப்பித்தான் –

அடைந்து அடியேன் உய்ந்தவாறே –
அடிமைத் தன்மையே காரணமாக-உஜ்ஜீவித்த படி -என் –
அடிமைப் பட்டு இருக்கும் ஞானத்துக்கு-இத்தனை பிரயோஜனம் உண்டோ –

————————————————————————————–

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-

நித்ய சூரிகள் பாக்யத்தை பலன்
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்-குன்றாத மட்டுப்படாத ஆற்றுப் பெருக்கு போலே மதம் ஒழுகும் –
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்-மிக்க வயல் -நிர்வாகக்கர்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்-நூறு நூறாக -பரத்வம் –ஆர்த்தி ஹரத்வம் நூறு -நின்ற கிடந்த -நூறு
-பிரித்து பிரித்து அனுபவிக்க -சொற்கள் பணி செய்ய
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே-ஏற்றினைத் தரும் -நித்ய சூ ரிகள் உகந்த
-நெஞ்சுக்கு சந்தோஷம் -குத்தும் -என்றுமாம் -இரண்டு நிர்வாகங்கள் -இழந்து -தெள்ளியீர் அனுபவம் இங்கே தானே –
ஏறான சர்வேஸ்வரன் என்றுமாம் –

நிகமத்தில் –இத் திருவாய்மொழி-தன் இனிமையினால்-நித்ய சூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் -என்கிறார்

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச் –
ஒரு நாளும் மாறாத மதத்தினை உடைய-குவலயா பீடத்தை அழித்தவனை –
அதனை அழித்தாப் போலே-என் விரோதியைப் போக்கினவனை –

சேறு ஆர் வயல் –
குவலயா பீடமோ தான் திரு நகரியிலே வயலை உழுவது நடுவதாக-ஒட்டாதே கிடந்தது –
ரஸோக்தி -அங்குத்தைக்கு தீங்கு வந்தால் ஆழ்வார் உளராகா மாட்டார் -ஆழ்வாருக்கு தீங்கு வந்தால்
இங்கு உள்ளார் வயல் உழாமல் இருப்பாரே -ஆனை முடித்ததால் -அனைத்தும் நடந்ததே –

தென் குருகூர் சடகோபன் -நூறே சொன்ன ஓர் ஆயிரம் –
கிழி கிழி யாய் கொடுப்பாரைப் போலே-நூறு நூறாக சொன்னபடி-
பாரதம் இராமாயணம் முதலியவைகளில் உள்ள காண்டம் பர்வம் முதலிய பேதம் போலே-விஷ்ணு புராணம் -அம்சம் –
பாகவதம் -ஸ்கந்தம் -போலே -முதலிய என்பதால் –தரிப்பார்க்கு எளிதாம்படி செய்தார் -என்கை –

இப்பத்தும் — வானவர் தம் இன்னுயிர்க்கே -ஏறே தரும் –
இத் திருவாய்மொழி நித்ய சூரிகள்-மனத்தினைப் புண் படுத்தும் என்னுதல்-
அன்றிக்கே
நித்ய சூரிகளுக்கு எறான சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்

——————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தஸ்ய க்ருபா கடாக்ஷம் ஈசன் அத்ராக்ஷம்
சீலாதி கஸ் ஸ்ரீ யம் -உரஸ்தல ததானோபி
அதி மாத்ர சிதில
லப்பியா தஸ்ய கிருபா கடாக்ஷம்
ப்ரஜஹர்ஷ

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

லஷ்மீ வக்ஷஸ்தல பாவாத்
ஸ்வ ஜன சுலபதா
பர்வத உத்தாரானோ
துர்யாஞ்ஞாம்
அகில பதிதயா
நாகி நாம் வ்ருத்த பாவாத்
சுவேஷம் ஹ்ருத் வாசிதவ்யா
ஸூ ஜன வசதியா
தத்ரஜா அதி பூம்னா
ஸூ ஸ்வஸ் ஸ்வாமித் வாதி பந்த்வாத்

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 84-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத வுய்யுமே இன்னுயிர்——————–84-

———————————————————————–

அவதாரிகை –

இதில் –
விலஷண விக்ரஹ உக்தனானவனை காண-ஆசைப்பட்டு கூப்பிடுகிற பாசுரத்தை
அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் –
சீலாதிகனாய் –
அதுக்கு ஊற்றுவாயான பிராட்டியோடு நித்ய சம்யுக்தனாய் –
இரண்டு இடத்திலும் அழகு பெற தரித்த ஆழ்வார்களை யுடையனான-எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று
தாமும்
தம்முடைய
கரண க்ராமங்களுமாக விடாய்த்துக் கூப்பிட
தூணிலே தோற்றி சிறுக்கனுக்கு உதவினாப் போலே
மானசமாகத் தோற்றி தன் குணங்களை அனுபவிப்பிக்க
அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற
மையார் கரும் கண்ணியில் அர்த்தத்தை
மையார்கண் மா மார்பில் மன்னும் -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————————-

வியாக்யானம்–

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை –
அஸி தேஷணையான லஷ்மி-வஷஸ் ஸ்தலத்திலே நித்ய வாசம் பண்ணும்படியாக
அத்தாலே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனை-

கையாழி சங்குடனே காண வெண்ணி –
அச் சேர்த்தியை காத்தூட்ட வல்ல
ஆழ்வார்கள் உடன்
அனுபவிக்க எண்ணி –
இத்தால் –
மையார் கரும் கண்ணி -என்று தொடங்கி
உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -என்று முதல் பாட்டை
கடாஷித்து அருளிச் செய்தபடி –
வைதேஹீம் லஷ்மணம் ராமம் நேத்ரைர நிமிஷை ரிவ-என்றும்
அவஷ்டப்ய சதிஷ்டந்தம் ததர்சத நுரூர்ஜிதம் -என்னும் படி-ஆயிற்றே அபேஷிததது
மெய்யான காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் –
யகாவத்தான பிரேமத்தோடே கூப்பிட்டு
அப்படியே கண்டு
ஹ்ருஷ்டரான –
அதாவது
கண்ணே உன்னைக் காணக் கருதி -என்று தொடங்கி -நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பன் -என்றும்
உகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்று தொடங்கி-நரசிங்கமகதாய உருவே -என்றும் –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்
கண்டு கொண்டு -என்று தொடங்கி -அண்டத்து அமரர் பெருமான் அடியேனே -என்றும்
உலகம் அளந்த அடியானை யடைந்தேன் அடியேன் உய்ந்த வாறே -என்றும்
இவற்றாலே அவற்றை வெளி இட்டார் -என்கை
மாறன் பேர் ஓத வுய்யுமே இன்னுயிர் –
இப்படி பகவத் விஷய பக்தியை உடைய
ஆழ்வார்
திருநாமத்தை அனுசந்திக்கவே
உஜ்ஜீவிக்கும் -விலஷணமான
ஆத்மவஸ்து –

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: