பகவத் விஷயம் காலஷேபம் -171- திருவாய்மொழி – -9-2-1….9-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

பண்டை நாள் -பிரவேசம் –

போக்ய பாகத் த்வரை தெளிந்த சிந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் -சூர்ணிகை -177-
-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-இறுதியில் தானே ஆழ்வார் -பந்து க்ருத்யம் -கைங்கர்ய பிரார்த்தனை இதில் —

மேல் திருவாய் மொழியில் -அவனை ஒழிந்தார் அடங்கலும் -ஔபாதிக -ஒரு காரணம் பற்றி வந்த உறவினர்கள்-
அவன் ஒருவனுமே -நிருபாதிக -ஒரு காரணமும் பற்றாமல் இயல்பாகவே அமைந்த உறவினன் -என்றார் –
ஒரு காரணம் பற்றாமல் அமைந்த உறவினன் ஆனால்-பின்னை உறவினருக்கு உரிய கார்யங்களைச்
செய்யாது இருக்க முடியாது அன்றோ –
ஆதலால் ஒரு காரணம் பற்றாமல் இயல்பாகவே அமைந்த-உறவினனான சர்வேஸ்வரன்
திருக் கண் வளர்ந்து அருளுகிற திருப் புளிங்குடியிலே-
எல்லா வித கைங்கர்யங்களையும் பெற வேண்டும் என்று ஆசைப் பட்டு இவர் சென்று கிட்டினார் –
கிட்டின இடத்தில் -இவரை-என் -என்னுதல்-திருக் கண்களாலே குளிர நோக்குதல் –
ஒரு வார்த்தை சொல்லுதல்-செய்யக் கண்டிலர் –காணாமையாலே மிகவும் துன்புற்றவர் ஆனார்
அத்துன்பம் அவன் உளனாக தீரும் அன்றோ –அதற்கு மேலேயும் ஓன்று உண்டாயிற்று –அது என் எனின் –

திருமேனி அலசும்படி பலகாலமாக ஒரே தன்மையாக திருக்கண் வளர்கின்றான் -என் வருகிறதோ
என்று ஒரு அச்சம் உண்டாயிற்று -திரு உடம்பு அசைய –எத்தனை காலம் கிடத்தி –
மேலே ஆரா அமுதே -என்கிற திருவாய் மொழியிலே-என் துன்பத்தை தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆனார் –
இங்கே -என் துன்பத்தினையும் தன் துன்பத்தினையும் தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆகிறார் –
ஆக –
கொடியார் மாடம் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே -என்று அதுவே தலை எடுத்து-
அங்கும் இங்கும் -திருவாய் மொழியிலும் தன் துன்பங்களை தீர்க்காமை அருளிச் செய்தாரே –
அதனுடைய அனுபாஷனம் -இத் திருவாய் மொழி –அனுபாஷனம் –
பெரிய ஆற்றாமையோடு-மீண்டும் கூறுதல் –
பெரிய ஆற்றாமையோடு என்னுடைய துன்பம் எல்லாம் தீரும்படி-
திருக் கண்களாலே நோக்கி அருள வேண்டும் -தாமரைக் கண்களால் நோக்காய் –
என் தலை மேலே திருவடிகளை வைத்து அருள வேண்டும் -பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
தேவரும் பிராட்டியாரும் கூட எழுந்து அருளி இருக்கும் இருப்பை எனக்கு காட்டி அருள வேணும் –உன் தாமரை மங்கையும் நீயும் –
யத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணச சத்யபாமாச பாமி நீ -பாரதம் -உத்தியோக பர்வம் –
எந்த இடத்தில் கிருஷ்ணனும் திரௌபதியும் அர்ஜுனனும்-கோபத் தன்மை உள்ள சத்ய பாமையும்-இருக்கிறார்களோ -என்று சொல்லுகிறபடி
அவ்விருப்பில் அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது -என்றது-இப்படி சஞ்சயன் வந்தான் என்று அறிவிக்க
நமக்கு நல்லான் ஒருவன்-உகவாதார்க்கும் இவ்விருப்பைப் போய்ச் சொல்லுவான் ஒருவன்
அனுகூலனான இவனுக்கு விழிநீர் அடைத்தோம் ஆகிறோம்
உகவாதார் மண் உண்ணும்படி கார்யம் பார்த்தோம் ஆகிறோம்-புகுர விடும் கோள்
என்று உள்ளே அழைப்பித்து காட்சி கொடுத்தான் -என்றபடி –சஞ்சயன் பெற்ற பேற்றில் எனக்கு குறைய ஒண்ணாது –
நச அபிமன்யு நயமௌ தம் தேசம் துபிஜக்மது -பாரதம் உத்தியாக பர்வம்
அவர்கள் வீற்று இருந்த அந்த இடத்துக்கு அபிமன்யுவும் சென்றான் இல்லை-
இரட்டையர்களான நகுல சகா தேவர்களும் போனார்கள் இல்லை -என்கிறபடியே-
தாயும் தமப்பனும் சேர இருந்த இடத்தில் குழந்தைகளுக்கு சென்று கிட்ட ஒண்ணாமை இல்லை அன்றோ –
அவர்களுக்கும் சென்று கிட்ட ஒண்ணாத படி ஆயிற்று எழுந்து அருளி இருக்கிற இருப்பு-
அவ்விருப்பிலே அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது –
அப்படியே
தேவரும் பிராட்டிமாரும் எழுந்தருளி இருக்கும் இருப்பை எனக்குக் காட்ட வேண்டும் –
என்னைக் கண்ட காட்சியிலே வேறுபட்டவனாய் என் முன்னே-நாலடி உலாவி அருள வேண்டும் –
பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராய் –
அனுகூலரைக் கண்டால் பிறக்கும் புன்முறுவல் காண வேண்டும் -தவழ கதிர் முறுவல் செய்து-
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -கூவுதல் வருதல் செய்யாய் –என்று இங்கனே-
தாமும் அவனும் அறிந்ததாக திருவாசலை திருக் காப்பு கொண்டு தனி இடத்திலே-
தம்முடைய எண்ணங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து-கொடு வினையேனும் -ஏக வசனம் —
இவற்றை இப்போதே பெற வேண்டும் என்று விரைகிறார்-
இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தத்தை அனுபவித்தார் மேல் திருவாய் மொழியில் –
சம்பந்தத்தின் பலத்தை ஆசைப்பட்டு விரும்புகிறார் இத் திருவாய் மொழியில் —
சர்வ வித பந்து அவனே -கண்ணன் அல்லால் வேறு சரண் இல்லை –பற்ற உபதேசித்தார்-
ஆடாமல் அசையாமல் அர்ச்சையில் கண் வளர்ந்து இருக்க கண்டார் –கைங்கர்யம் செய்ய பாரிக்கிறார் -இதில்-

உபாதி-கர்மத்தால் வந்த பந்துத்வம் -விட்டு -சர்வவித பந்து -காரணம் இல்லாமல் -ஆச்ரயித்தால் -அடியார்க்கு ஆட்படுத்த விமலன் போலே ராமானுஜர்
அனந்தாழ்வான் -அருளாள பெருமாள் எம்பெருமானார் இடமும் -வான மா மலை ஜீயர் -கோயில் அண்ணன்
அப்பாச்சி அண்ணா -இவருக்கு பொன்னடிக்கு கால் ஜீயர் இடம் காட்டிக் கொடுத்து -ஆய்ச்சியர் குமாரர் –
நித்ய நிருபாதிக சர்வ பந்து –பிராதா –பிதா ச மம ராகவா –
பந்துவும் பிதாவும் அவரே என்றார் இளைய பெருமாள் -ராமம் தசரதன் வித்தி -கச்சதாம் -தாய் சொன்ன படியே –
சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்து போக அருளிச் செய்கிறார் –
லுப்த சதுர்த்தி -அகாரம் -நாராயணாயா -வியக்த சதுர்த்தி –
நாராயணனுக்குக்காக -தருவித்துக் கொண்டு சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த்தை உசித கைங்கர்யம் -செய்ய வேண்டும் –
ஸ்யாம் பவேயம் —சேர்த்தியில் -குடிக்கிடந்து கைங்கர்யம் செய்ய வேண்டும் –

————————————————————————-

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

ஸ்ரீ வைகுண்டம் -சோர நாதன் -வைகுண்ட நாதன் கள்ளப்பிரான் –கால தூஷகன் -கள்ளன் -பிரார்த்திக்க –
அரசன் இடம் தன்னைக் காட்ட –அரசன் திருடன் எலி தர்மம் நான்கும் விரோதிகள்
-கஜானா நன்றாக செலவழிக்க உதவி -பூ மண்டலம் தபஸ் பண்ண இடம் -சோமுகாசுரன் –
கன்னம் கிள்ளி சிற்பி மயங்கி -நின்ற அழகன் -காஞ்சி -ஊரகம் பாடகம் வெக்கணை நின்று இருந்து – கிடந்து
வரகுண மங்கை விஜயாசன -வேத வித் -சக்யம் மகேந்திர கிரி -நடுவில் -தபஸ் பண்ணி சேவை சாதிக்க
ரோமசர் -சத்யவான் சீடர் இடம் -வேடன் மீன் பிடிக்க பாம்பு கொத்தி போக -தேச மஹாத்ம்யம் -விதர்ப்ப விஷ்வா சகனாக இருந்து
தர்ம கார்யம் செய்தவன் -விஜய ஆசனப் பெருமாள்
இரு தேவிமார் திருவடிகளை பிடிக்க -திருவடி சேவை சாளரம் வழியே -மலர் மக்கள் மற்று நில மகள் பிடிக்கும் மெல்லடி அடியேனும் பிடிக்க கூறுதல் வருதல் –
லஜ்ஜை சர்மா -வசிஷ்டர் புத்திரர் சக்தி சாபம் -இந்திரன் வந்து தபஸ் -பண்ணி -உன்னை பூமி பாலன் -காசினி வேந்தன் -காய் சின வேந்தன் —
ஒரே பாசுரம் ஸ்ரீ வர மங்கைக்கும் ஸ்ரீ வைகுண்டத்துக்கும் -பதிகம் முழுவதும் திருப் புளிங்குடிக்கு -மங்களா சாசனப் பாசுரம் மூன்றுக்கும் இந்த பாசுரம் –

குலம் குலமாக கைங்கர்யம் பண்ணிப் போந்த அடியோங்களுக்கு பவள வாய் திறந்து ஆச்வாஸப் பண்ணி அருள வேணும் -சாந்தநம் வாதம் –
விபீஷணனுக்கு பண்ணி -கடாக்ஷித்து வார்த்தை பேசி உருக பருகினீரே –
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த–நீர் வாய்ப்பு நிலை வாய்ப்பு சோலை வாய்ப்பு –
திருப் புளிங்குடிக் கிடந்தானே-கண் வளர்ந்து அருளி -சம்போதானம்
பண்டை நாளாலே நின் திரு வருளும்–பங்கயத்தாள் திருவருளும்-நிருபாதிக -உன்னை அருளுவிக்க கடவுளான அவள் திருவருளும்
-இவன் உபாயம் அவள் புருஷகாரம் -ஜாய மான கடாக்ஷம்
உத்பத்தி காலம் முதல் -மிதுன அருள்களை சொத்தாகக் கொண்டு
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்–நீ உக்காந்து அருளும் நித்ய வாசம் செய்து அருளும் -திரு அலகு இடுதல்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்–மூன்று பாட்டிலும் -கைங்கர்யம் செய்ய கொடுத்து வைத்து இருக்கிறோம்
-யோக்யதை இருப்பதாக சொல்லிக் கொள்கிறார் அல்லர் -உரிமை -கேட்க வில்லை -உனக்கே -என்று அநந்யார்ஹை
-போக்கிடம் இல்லை கத்யந்த சூன்யத்தை ஆவிஷ்கரிக்கிறார் -அநந்ய கதித்வம் -சாஸ்திரம் படி -கைங்கர்யம்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்–நிரவாதிக கிருபையை பண்ணி -உஜ்வாலாமான திருப் பவளம் திறந்து சாந்தநம் பண்ணி
தாமரைக் கண்களால் நோக்காய்-கடாக்ஷம் பண்ணி அருள வேண்டும் –

வேறு கதி இல்லாத-அடியோங்களைக் குறித்து-ஒரு வார்த்தை அருளிச் செய்து
விடாய் கெடும்படி குளிர நோக்கி அருள வேண்டும் -என்கிறார்-

பண்டை நாளாலே நின் திரு வருளும் –
பல நாள்களாக செய்து போந்த உன் திரு வருளையும் -என்றது
நீ நேற்று இன்று செய்து போந்த கிருஷியின் பலமோ -இது –
எதிர் சூழல் புக்கு பல நாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இந்த கைங்கர்யம் -என்றபடி –
நெடுநாள் கிருஷியை செய்து-பல வேளையில் கை விடவோ -என்கிறார்-

பங்கயத்தாள் திருவருளும் -கொண்டு –
அவன் அருளுக்கு காரணமான பெரிய பிராட்டியார் திருவருளையும் கொண்டு-
அவனுடைய அருளின் ஸ்வாதந்த்ரியத்தை தவிர்க்கும் அருள் –
காதல் காரணமாக வந்த பாரதந்த்ரியமே அன்றோ ஸ்வாதந்த்ர்யத்தை தவிர்ப்பது -என்றது-
அவன் அருளின் ஸ்வாதந்த்ர்யத்தின் வாசனையை தவிர்க்குமவன் அருளும்படியாக அன்றோ வந்தது –
ஆதலால் அவள் அருள் அவன் ஸ்வாதந்த்ர்யத்தை பின் செல்லாதபடி செய்யும் ஆயிற்று -என்றபடி-
நன்று -அங்கனமாயின் –
அவனுடைய பாரதந்த்ர்யம் அவள் காதல் காரணமாக வந்தது அன்றோ –அது நிலை நிற்குமோ –
ஸ்வா தந்த்ர்யமே அன்றோ அவனுக்கு இயற்க்கை –அதற்கு நாம் அஞ்ச வேண்டாமோ-எனின் -அஞ்ச வேண்டா
அவள் அருகே நிற்க ஸ்வாதந்த்ர்யம் நிலை நிற்காது-
ஆகையால் அன்றோ த்வயத்தில் முன் வாக்யத்தில் அவள் புருஷகாரமாக பற்றுகிறது
இனி
பண்டை நாளில் நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் -என்பதற்கு
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்னும் உன் திரு அருளையும் –
பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்-
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சின் ந அபராத்யதி -யுத்தம் -116-44 -என்று
குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் அவள் திருவருளையும் பெற்று -என்றலுமாம் –
அன்றிக்கே –
சதம் நிபபதிம் பூமௌ சரண்ய சரணாகதம்-வதார்ஹமாபி காகுஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
கொல்லத் தக்கவனாய் இருந்தும் பேரருளால் அந்த காகாசுரனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
கிருபைக்கு பரதந்த்ரப் பட்டவனான உன்னுடைய திருவருளையும்-
அந்த பரதந்த்ரத்துக்கு காரணமான அவள் திருவருளையும் பெற்று என்றலுமாம் –

நின் திரு அருள் -பங்கயத்தாளுக்கு திரு வருள் -ஆழ்வார் திருமகள் -பக்ஷ பாதி -இயம் சீதா -உன் கையால் இவள் கையைப் பிடிக்க
-உன் தாமரைக்கு கையால் நோக்காய் –செந்தாமரைக் கையால் -சீரார் வளை ஒலிப்ப – அணி மிகு தாமரைக்கு கையை அந்தோ
–ஸ்வா தந்தர்யம் போக்கும் பார தந்தர்யம் -பாபங்களைக் கண்டு பயப்படாமல் இருக்க அபாய ஹஸ்தம் வைத்து இருக்கும்
-அவனைக் கண்டு பயப்படாதே என்னும் திருக் கை அன்றோ -இவளது –

நின் கோயில் சீய்த்துப் –
உகந்து அருளின நிலங்களிலே-அவனுக்கே உரிய திரு அலகு இடுதல் -முதலிய தொண்டுகளைச் செய்து
தம்தாமுடைய புண்ய விசேடத்தாலே பகவானுடைய திருவருளைப் பெற்றவர்கள்-
உகந்து அருளின நிலங்களைப் பேணா நிற்பார்கள்
ந கிஞ்சித் அபி குர்வாணா விஷ்ணோ ஆயதனே வசேத்-விஷண் வாலயே வசந் நித்யம் குர்யாத் தத்கர்ம சக்தித -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றபடியே
ஒரு தொழிலையும் செய்யாதானாய் பகவான் எழுந்து அருளி இருக்கின்ற கோயில்களிலே வசிக்கக் கடவன் –
கோயில்களிலே வாசம் செய்து கொண்டு தினமும் தனது ஆற்றலுக்கு ஏற்பப் பகவானுக்கு பணிகளை செய்யக் கடவன் -என்கிறபடியே-
ஒரு துரும்பையும் நறுக்கேன்-என்னுமவர்களையும்-அவன் உகந்து அருளின நிலத்தைப் பற்றிக் கிடக்க வேண்டும்-
சரீர சம்பந்தம் அற்றால் பெற வேண்டும் என்று ஆசைப் படுகிற அடிமையை-
இச் சரீரத்தோடு இருக்கும் போதே கிடைக்குமாகில் விடானே அன்றோ –

பேற்றினை அடையவே பேற்றுக்கு தடைகளான உள்ளனவற்றை போக்கலாம் என்பதாயிற்று –
திருக்கண்ண மங்கை யாண்டான் -திருக் கண்ணமங்கை என்னும் திவ்ய தேசத்தில் ஒரு திரு மகிழ் மரம் அடியில் இருந்து
சருகை திரு அலகு இடா நிற்க-கூட வாசித்து நாஸ்திகனாய் இருப்பான் ஒருவன்-
பகவான் உபாயம் -நாம் வேறு பயனைக் கருதாதவர்கள்இப்போது செய்யும் இப்பணிக்கு பயன் என் என்ன –
திரு அலகு இட்ட இடத்தையும் இடாத இடத்தையும் காட்டி-இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாய்க்கு ஒரு பயன் இல்லை
என்று தோன்றி இருந்ததோ -என்றான் –
பிராப்யம் லபிக்கவே பிராப்ய விரோதியைப் போக்க -ஆனு ஷங்கிக பலனாக கிட்டும் –
வயல் அணி அனந்தபுரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே -10-2-7-என்றாரே அன்றோ –
கடு வினை களையலாமே-இதுக்கு என்று கடைத்தலை சீய்க்கப் பெற வில்லை –

பல்படிகால் –
இது தான் இன்று தொடங்கி வந்தது ஒன்றோ –நீ திருவருள் செய்யப் புக்க அன்று தொடங்கி வந்தது அன்றோ –
குடி குடி-
உற்றார் உறவினர்களோடு –
வழி வந்து –
சாஸ்த்ரங்களில் சொல்லுகிற முறை தப்பாதபடி வந்து –
ஆள் செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் –
அடிமை செய்கிற அடியோங்கள் பக்கல் திருவருள் செய்து –அருள் -கிருபா -கடாக்ஷம் -கிருபா கார்யம் –
சோதி வாய் திறந்து –
பூ அலருமா போலே ஆயிற்று-திருவாய் திறந்து வார்த்தை அருளிச் செய்யும் போது-திரு முகத்தில் பிறக்கும் செவ்வி -என்னைப் பார்த்து
அக்ரூரனே -என்று அருளிச் செய்வர் –
ய அநந்த ப்ருதிவீம் தத்தே சேகர ஸ்திதி சமஸ்திதாம்-ச அவதீர்ண ஜகத்யர்த்தே மாம் அக்ரூர இதி வஷ்யதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-12-என்கிறபடியே
வார்த்தை அளவிலே ஆயிற்று அக்ரூரன் அனுபவித்தது-அந்தக் காலத்தில் திருமுகச் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறது இவர்க்கு –

உன் தாமரைக் கண்களால் நோக்காய் –
வார்த்தையிலே தோற்றாத அன்பும்-நோக்கிலே அனுபவிக்கும்படி குளிர நோக்கி அருளவேண்டும் -என்றது-
வார்த்தை அருளிச் செய்யப் புக்கு விக்கினால்-குறையும் திருக் கண்களால் தலைக் கட்டி அருள வேண்டும் -என்றபடி-
அழியாதவனே -மறுபடியும் காட்சி தருதலால் என்னைக் காப்பாற்றி அருள வேண்டும் –
தேவ பிரபன்னார்த்தி ஹர பிரசாதம் குரு கேசவ-அவலோகேன தானேன பூயோ மாம் பாலய அவ்யய – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-19
இது பிரகலாதன் கூற்று -போலே

பிள்ளை தேவப் பெருமாள் அரையர்-
உன் தாமரைக் கண்களால் நோக்காய் நோக்காய் -என்று பல காலும் சொல்ல-
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் -எழுந்து இருந்து
பிள்ளாய் நீ இங்கனே எம்பெருமான் திரு உள்ளம் புண்படும்படி பலகாலும்-நிர்பந்திக்கிறது -என் –
அழகிய மிடற்றை தந்தானாகில்-நல்ல பாட்டை தந்தாராகில் –பிள்ளையும் செல்வத்தையும் தந்தாராகில் –
என் செய்யாதாராக நீ இங்கனே கிடந்தது படுகிறது –என்று அருளிச் செய்தாராம் –

தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே –
திருமேனியில் மிருதுத் தன்மைக்கு தகுதியான தண்ணீர் நிறைந்து இருக்கிற
திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளப் பெற்றது –
தெளிந்த அலைகளை உடைய திருப் பொருநல் உடன் சேர்ந்து-அழகிய நீர் நிலம் சூழ்ந்த
திருப் புளிங்குடியிலே திருக் கண் வளர்கின்றமை உண்டு-இது செய்த அம்சம் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய்-
திருப் புளிங்குடிக் கிடந்தானே -செய்த அம்சத்துக்கு நன்றி உள்ளவனாகவும் செய்ய வேண்டும்-
உன் தாமரைக் கண்களால் நோக்காய்–அமிசத்துக்கு பிரார்த்திக்கவும் வேண்டும் அன்றோ அதிகாரிக்கு –

————————————————————————————————–

குடிக் கிடந்து ஆக்கம் செய்து
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

ஆஸ்ரய விஷய அனுரூபமாக -திருவடிகளை சென்னிக்கு சூட வேணும்
குடிக் கிடந்து ஆக்கம் செய்து-பிரபன்ன குல மரியாதை கெடாமலும் வளர்த்தும் -சேஷத்வம் அபி வ்ருத்தமாம் படி யும் –
எதிர் பொங்கி மீதளிப்ப -நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற-இதர சங்கை நிவ்ருத்தமாக -கிஞ்சித் காரம் -ஸ்ப்ருஹ நீயமான திருவடிகளை தாண்டாமல் –
கடவ -அற்று தீர்ந்து -நாத அந்தர்யாமி -தாண்டாமல் -அனுபவ ஜெனித அப்பரியந்தமான ஸூ ஆனந்தத்தில் கண் வையாதே –
கைவல்ய ஆனந்தம் -பகவத் அனுபவம் ஸூ ய போக்யமாகவும் இல்லாமல் -அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்-படிக்களவாக நிமிர்த்த
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்-அந்நிய சேஷம் ஆகாத படி நிமிர்த்த நிரதிசய போக்யமான திருவடிகள்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்-திருப் புளிங்குடிக் கிடந்தானே–ஆஸ்ரித அனுரூபமாக -கிடந்து அருளி

எல்லார்க்கும் சுலபமான உன் திருவடிகளை-என் தலையிலே வைத்து அருள வேண்டும்-என்கிறார்-

குடிக் கிடந்து –
குடிக்கு தகுதியாக ஒழுகி -என்றபடி-குல மரியாதை தப்பாதபடி ஒழுகுதலை தெரிவித்தபடி –
இஷ்வாகு குலத்தோரில்-தமையன் இருக்க தம்பிமாரில் முடி சூடி அறிவார் இலர் –என்றான் அன்றோ ஸ்ரீ பரத ஆழ்வான்-ஆக்கம் செய்து –
குடியில் -பண்டு இல்லாத நன்மைகளை உண்டாக்கி –
பங்க திக் தஸ்து ஜடில பரத த்வரம் ப்ரதீஷதே-பாதுகே தே புரஸ் க்ருத்ய சர்வஜ்ஞ ச குசலம் க்ருஹே -யுத்த -127-5-
பரதன் சடை முடியனாய் -அழுக்கு அடைந்த தேகத்தை உடையனாய்-உன் வரவை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறான்-
உன் பாதுகைகளை முன்னிட்டுக் கொண்டு இராச்சிய பாரம் செய்து இருக்கிறான்-
எல்லாரும் சௌக்யமாய் இருக்கிறார்கள் -என்றும்
ஜடிலம் சீர வசனம் ப்ராஜ்ஞ்ஞலிம் பதிதம் புவி-ததர்ச ராமோ துர்தர்சம் யுகாந்தே பாஸ்கரம் யதா -அயோத்யா -100-1-
ஜடைகளை அணிந்தவனும் -மரவுரி தரித்தவனும் கை கூப்பினவனும் பூமியில் விழுந்தவனும்-
பார்க்க முடியாதவனுமான பரதனை ஸ்ரீ ராமன் எவ்வாறு யுகத்தின் முடிவில் சூர்யனை காண்பார்களோ-அவ்வாறு கண்டான் -என்றும்
நஹிதே ராஜபுத்ரம் தம் காஷாயம் பரதாரிணம்-பரிபோக்தம் வ்யவச்யந்தி பௌராவை தர்ம வத்சலம் -யுத்தம் -70-4-
நஹிதே ராஜபுத்ரம் தம்-
அருகே இருக்கச் செய்தேயும் -இவனை சூழ இருக்கிற நகர மக்கள் இவனை அனுபவிக்கையில் நசை அற்றார்கள் –
அதற்கு அடி என் என்னில் –
ராஜ புத்ரம் -பெருமாள் பேர நின்ற அநந்தரம் முடிந்தவன் மகன் அன்றோ –
இவனோ தான் நமக்காக இருக்கப் புகுகிறான் -என்று இருந்தார்கள் –
தர்ம வத்சலம் –
இதற்கும் அந்த சக்கரவர்த்தியோடு ஒப்பான் –
தர்மத்துக்காக தன்னை அழிய மாறினான் அன்றோ அவன் -என்றும் வருவன காண்-

ஏபி ச சஸிவை ஸார்த்தம் சிரஸா யாஸிதோ மயா-பிராது சிஷ்யஷ்ய தாசஷ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹசி – அயோத்யா -101-12
ஏபி ச சஸிவை ஸார்த்தம்-
தான் ஒருவனே போக அமைந்து இருக்க-துன்பம் அற்ற பலரையும் கொண்டு போனான் –அதற்கு அடி –
நாம் ஒருவனுமே அன்றிக்கே பலர் கண்ண நீரை கண்டால் மீளாரோ -என்னுமத்தனைப் பற்ற –
போர் செய்யப் போவாரைப் போலே யானை குதிரை அகப்பட திரட்டிக் கொடு போனான் ஆயிற்று-
பிரிவில் ஆற்றாமைக்கு தன்னில் குறைந்தார் ஒருவரும் இலர் ஆயிற்று அங்குள்ள சேனைகளில் –
சிரஸா யாஸிதோ மயா-
நான் தலையால் இரந்த கார்யத்தையும் மறப்பரோ –
மாம் நிவர்த்தயிதும் ய அசௌ சித்ரகூடம் உபாகதா-சிரஸா யாசத தஸ்ய வசனம் ந க்ருதம் மயா -யுத்தம் -24-19-
தலையாலே வணங்கின அந்த பரத ஆழ்வான் உடைய வார்த்தை
என்னால் நிறைவேற்றப் படவில்லை -என்றார் அன்றோ பெருமாள் -என்றது –
அவனும் தனக்கு அடுக்கும்படி செய்தான் –நாமும் நமக்கு அடுக்கும்படி செய்தோம் -என்றார் என்றபடி
அவன் தலையாலே இரந்த கார்யத்தை மறுத்துப் போந்தோம்-என்றே அன்றோ அவர் திரு உள்ளம் புண்பட்டது
பிராது –
உடன்பிறந்தவன் தன்னுடைய சரீரம் என்கிறபடியே-
ஆச்சார்யோ ப்ரஹ்மனோ மூர்த்தி பிதா மூர்த்தி பிரஜாபதே
மாதா பிருதிவ்யா மூர்திஸ்து பிராத ஸ்வ மூர்த்தி ராத்மன -மனு தர்ம சாஸ்திரம் படி –
அவர் தம் திருமேனியாக அன்றோ என்னை நினைத்து இருப்பது
சிஷ்யஷ்ய தாசஷ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹசி –
இந்த பதங்களுக்கும் முன்பு போலே உரைத்துக் கொள்க-
இப்படி இக்குடியில் இல்லாத ஏற்றங்களை செய்து -என்றது
மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அன்று என்று போந்த இத்தனை முன்பு-
ஆற்றாமையும் கண்ணும் கண்ணநீருமாக-சடையும் புனைந்து
வற்கலையும் உடுத்து இருந்தார் இலர் அன்றோ -முன்பு இவனை ஒழிய
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து –
தன்னுடைய இனிமையாலே மற்றைய பேறுகளிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில்
அந்தரங்கமான அடிமைகளை செய்து –

அப்படியே இவரும் பிராப்ய த்வரையால் -அழுவது தொழுவது -கண்ண நீர் கைகளால் இறைக்கும் -பிரபன்ன குடியில் இல்லாத –
அநந்ய கத்தி ஆகிஞ்சன்யம் மட்டும் இல்லாமல் -மண்ணை இருந்து வாமனன் மண் இது -மின்னிடை மடவார் -அநுகரித்து
-தூது விட்டு -த்வரையில் விஞ்சி -ஆக்கம் செய்தார் இறே

உன் பொன் அடிக் கடவாதே –
முன்பு பெரிய ஆற்றாமையோடு-ஸ்ரீ வசிஷ்ட பகவான் தொடக்கமானவரை புருஷகாரமாகக் கொண்டு
மீட்பதாக சென்றவன் –
ததா சிரஸி க்ருத்வா து பாதுகே பரத ததா-ஆருரோஹா ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்னேன சமன்வித -அயோத்யா -112-25
நாம் ஐயர்-சொன்ன கார்யத்தை செய்தோமாய் நிறம் பெறலாவது
நீர் பதினால் ஆண்டு இராச்சியத்திலே-இருக்கில் காணும் -என்ன-

தன் ஆசையால் நிர்பந்திக்குமதுவும் இன்றிக்கே-அப்போது ஆனந்தம் அடைந்தவனாய்-
சத்ருகன ஆழ்வானோடு கூடினவனாய் தேரில் ஏறினான் -என்கிறபடியே-உவகையையனாய் மீண்டான் அன்றோ –
அப்படியே –
உன்னுடைய ஆணையை மீறாமல் உன் திருவடிகளுக்கு தப்பாமல்
அன்றிக்கே –
உன்னுடைய விரும்பத் தக்கவான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல்
அதாவது வேறு பயன் ஒன்றையும் கருதாவராய் இருத்தல் -என்றபடி –
ஆஞ்ஞா அதி லங்கனம் பண்ணாதே -ஆயிரம் பாசுரங்கள் முடியும் வரை -இனி இனி இருப்பதின் காலம் கதறினாலும் –
பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது உண்ண அருளினார் –
தாண்ட மாட்டார் -திருவடி தவிர வேறு ஒன்றை அறியாமல் அநந்ய கதி ஆனார் -என்றபடி –

வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி-
அடிமை முறை தப்பாதே போருகிற-வேறு கதி இல்லாத எங்களுக்கு திருவருள் செய்து –

நீ யொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே –
அங்கனம் திருவருள் புரியும் தன்மை ஒரு நாளிலேயாய்-பின்பு வற்றுமதோ –என்கிறார்
தடை இல்லாமல் இருப்பதற்கு மேற்பட ருசி வேண்டற் பாலதோ -என்பார் -படிக்கு -என்கிறார்

பூமியை விளாக்குலை கொள்ள -பரந்து –விஞ்ச வளரும் அதிலும் அரிது போலே காணும்
பூமிக்கு அளவாக திருவடிகளை -குசை தாங்கின அருமையும் -என்பார் –
கடிவாளத்தை இழுத்துப் பிடித்து -என்பார் -படிக்கு அளவாக நிமிர்த்த -என்கிறார்
அன்றிக்கே
உனக்கு அரியது ஒன்றாய் நான் வருந்துகிறேனோ -என்னுதல் –

இத்தனை அன்றோ செய்ய வேண்டுவது என்கிறார் மேல் –
நின் பாத பங்கயம் –
ஒரு செவ்விப் பூவினைக் கொண்டு காணும் காடும் ஓடையும் அளந்து கொண்டது-
ஏதேனுமாக கொள்ள நினைத்த கார்யத்துக்கு அளவாக்கும் இத்தனையாய் இருந்ததே அன்றோ-
பூமிக்கு அளவாக்கின திருவடிகளை-என் தலைக்கு அளவாக்க லாகாதோ –
கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்று இருப்பார் தலைக்கு வைக்கலாகாதோ -என்றது-
தேவரீருடைய -அப்போது அலர்ந்த -செவ்வித் தாமரை போன்ற
இரண்டு திருவடிகளும் என் தலையை எப்போது அலங்காரம் செய்யப் போகின்றன -என்கிறார் –
ஆக
குணா குணம் நிரூபணம் பண்ணாதே-எல்லார் தலைகளிலும் வைத்த திருவடிகளை
ஆசை உடைய என் தலையிலும் -ஒரு நாள் தலைக்கு அணியாய் என்றுமாம் –
கதா புன சங்க ராதாங்க கல்பக
த்விஜார விந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம்
மதிய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-

கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே –
அந்த சீதை யானவள் ஸ்ரீ ராம நாமத்தை கேட்டதனால் துன்பம் நீங்கினவளாய்
ஸ்ரீ ராமனுடைய உண்மையில் ஐயத்தால் ஒரு துன்பத்தை உடையவளாய்
சரத் காலத்திலேயே மேகங்களால் மறைக்கப் பட்ட சந்தரன் உடைய-இரவினைப் போலே இருந்தாள்-என்கிறபடியே
சா ராம சங்கீர்த்தன வீத சோகா
ராமஸ்ய சோகேன சமான சோகா
ஸ்ரன்முகே சாம்புத சேஷ சந்த்ரா
நிசேவ வைதேக சுதா பபூவ -சுந்தர -36-17-
பெருமாள் உளரோ இலரோ என்ற ஐயத்தாலேயும் ஒரு சோகம் உண்டு-
பிரிவு ஆற்றாமையாலே படுகிறதும் ஒரு சோகம் உண்டு பிராட்டிக்கு-
அவற்றுள் திருவடியைக் கண்ட பின்பு ஓன்று தீர்ந்தது அன்றோ-வீத சோகா-
அப்படியே
காவலோடு கூடியதாய்-சிரமத்தை போக்கக் கூடியதான தேசத்தில்-திருக் கண் வளரப் பெற்றதனால்-
என் வருகிறதோ என்ற அச்சம் தீர்ந்து-இனி என்னை அங்கீ கரிக்கும் அதுவே குறை-
அக்குறையும் தீர்த்து அருள வேண்டும் -என்கிறார்

———————————————————————————————

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

திரு மேனி அசையும் படி -வருந்தும் படி -கண் வளர்ந்து அருளால் -அடியோங்கள் கண்டு அனுபவிக்க பிராட்டி மார் உடன் எழுந்து இருந்து அருள வேண்டும் –
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்–ரிஷி அபேக்ஷைக்காக இங்கேயே சயனித்து -பரதந்த்ரனாக -கிடந்தே இருப்பதால்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய–நீந்தும் போகும் படி இப்படியே எத்தனை காலம் கிடந்து கொண்டே இருப்பாய்
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை-வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-எங்கள் அபேக்ஷைக்கும் கொஞ்சம் இருந்தும் நின்றும் சேவை சாதிக்கக் கூடாதோ –
கிடந்த போது எழுந்து இருக்கும் அழகையும் -ஒவ் ஒரு பெருமாளையும் நின்றும் இருந்தும் சேவை சாதித்து அருள வேண்டும் –
அந்தரங்க வ்ருத்தி செய்து -அநாதி-திரு மாலே நாமும் உனக்கு பழ வடியேன் -தடம் கொள் தாமரைக் கண் விழித்து-பரக்க விழித்து அருளி
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்–உனக்கு அநபாயினி -பூவில் பிறப்பால் வந்த போக்யதை -பருவத்தையும் –
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்-மூ உலகத்தோரும் -அநந்ய பிரயோஜனர்கள் –ஆக தொழும் படி -பக்த முத்த நித்யர் -மூவரும் –
திருப் புளிங்குடிக் கிடந்தானே-எழுந்து அருளி சேவை சாதிக்க வேண்டும் –

திரு உடம்பு வருந்த ஒரு படியே திருக் கண் வளர்ந்து அருளாதே-அடியோமுக்காக
பிராட்டியும் நீயும் எழுந்தருள வேண்டும்-என்கிறார் –

கிடந்த நாள் கிடந்தாய் –
கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -23-என்று கிடை அழகை காண வேணும் என்று
ஆசைப் பட்டு இருப்பான் ஒருவனுக்காக-ஆசைப் பட்ட அன்று தொடங்கி கண் வளர்ந்து அருளினாய் –

எத்தனை காலம் கிடத்தி –
இனி ஒருவன் வந்து –
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு -திருச் சந்த விருத்தம் -61-என்னும் அளவும் கிடக்கும் இத்தனை அன்றோ –
நதே ரூபம் நசாகாரோ நாயுதானி ந சாஸ்பதம்-ததாபி புருஷாகாரோ பக்தாநாம் தவம் பிரகாசசே -ஜிதந்தே -5-
எல்லா செயல்களும் பக்தர்களுக்காக என்ற இருக்கை தவிராது அன்றோ –

உன் திரு உடம்பு அசைய –
மிருது தன்மை உடைய திரு உடம்பு அசையும்படி -என்றது-
விரும்புகிற வர்களையே பார்க்கும் இத்தனையோ-உன் தன்மையையும் பார்க்க வேண்டாவோ -என்றபடி –

தொடர்ந்து குற்றேவல் செய்து –
இந்நிலையில் செய்ய அடுப்பது இது-இந்நிலையில் செய்ய அடுப்பது இது -என்று உணர்த்தி-
அந்தரங்கமான தொண்டுகளைச் செய்து -என்றது-
பெருமாள் தமக்கு வேண்டிய கார்யங்களிலே நோக்கு இல்லாமலே இருந்த போதும்-
இவ்வடிமையைக் கொண்டருள வேணும் என்று-அவ்வவ் காலம் தோறும்-
என்னை நியமித்து அருள வேணும் என்று வடிம்பு இட்டு அடிமை செய்தாப் போலே-
அந்தரங்கமான தொண்டுகளை செய்து -என்றபடி –
பரவாநச்மி காகுஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே-ஸ்வயந்துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -ஆரண்ய -15-7-

தொல் அடிமை –
ஆத்மாவுக்கு இயற்கையாகவே அமைந்த அடிமை ஆகையாலே-பழையதாய் போருகிற அடிமை-
அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா
நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம்
யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலாஸூ
அவஸ்தாஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய -அஷ்ட ஸ்லோகி –
எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்-
தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும் -என்னக் கடவது அன்றோ –

வழி வரும் தொண்டரோர்கு அருளித் –
அடிமை முறை தப்பாமே போருகிற-வேறு கதி இல்லாத-எங்களுக்கு-திருவருள் செய்து –
இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –
அது அன்று இங்குச் சொல்லுகிறது-
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று-தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –
கைங்கர்ய கிரியைச் சொல்லி -யோக்யதை இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வில்லை -உனக்கே அற்றுத் தீர்ந்தோம் -நீ கை விட்டால்
வேறு யாரும் கொள்ள மாட்டார்கள் -மறந்தும் தொழா மாந்தர் -அன்றோ -அநந்ய கதித்வம் அன்றோ வெளியிட்டுக் கொள்கிறார் –

தடம் கொள் தாமரைக் கண் விழித்து –
பொய்கையை கண் செறி இட்ட தாமரை போலே-இடமுடைத்தான திருக் கண்களாலே குளிர நோக்கி –
தாமரை -ஒருமையில் அருளியதற்கு வியாக்யானம்

நீ எழுந்து –
நீ எழுந்திருந்து –
சீரிய சிங்கம் அறிவுற்று -என்கிறபடியே-உணர்ந்து அருளும் போதை அழகு காண வேண்டும் —

உன் தாமரை மங்கையும் நீயும் –
பகவத் விஷயத்தில் முதலடி இடுவார் பிராட்டி புருஷகாரமாக பற்ற வேணும் -என்னுமதனாலே-பங்கயத்தாள் திருவருளும் -என்றார் மேல்
அடிமை செய்யும் இடத்திலும் இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்வதாக-சொல்லி போரும் அதனைப் பற்ற சொல்லுகிறார் இங்கு –

இடம்கொள் மூவுலகும்-
இடம் உடையவையான எல்லா உலகில் உள்ளவர்களும் –

தொழ இருந்தருளாய்-
வேறு பிரயோஜனத்தை கருதாதவர்களைப் போலே-

முறையிலே தொழ-
நீ இருக்கும் இருப்பை நான் கண்டு அனுபவிக்க வேண்டும் –

திருப் புளிங்குடி கிடந்தானே –
நீ சுலபனான பின்பு எல்லாம் செய்து அருள வேண்டும் -என்றது-
விரும்பியனவற்றை எல்லாம் செய்து அருளக் கடவதானால்-
அவற்றில் ஒரு சில செய்தால்-குறையும் செய்து தலைக் கட்ட வேண்டாவோ –
திருப் புளிங்குடி கிடந்தானே –இருந்தருளாய்-
சாய்ந்து அருளின அழகு காட்டினாய்-இருந்து அருளின போதை அழகையும் காட்டி அருளாய்-
நின்ற வாறும் இருந்த வாறும் கிடந்தவாறும் -குழந்தை கிருஷ்ணன் -பெரிய கிருஷ்ணன் -பெருமாள் நிலை சேவித்தது போராதே –
அர்ச்சையிலும் ஒவ் ஒரு பெருமாளையும் இப்படியே சேவிக்க அபேக்ஷை கொண்டோம் -காட்ட்டி அருளுவாய் –

————————————————————————————-

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்
சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

மங்களா சாசனப் பாசுரம் -ஆஸ்ரித அர்த்தமாக -நின்று இருந்து கிடந்து –
புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை-இருந்து வைகுந்தத்துள் நின்று-மூன்று திவ்ய தேசங்களிலும்
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே–இவை நமக்காகவே அன்றோ என்ற தெளிந்த சிந்தை –
அநந்ய பிரயோஜனர்களாக அனைவரும் வர வேண்டும் என்று -நெஞ்சுக்கு உள்ளே நின்று -பேராமல்-
என்னை ஆள்வாய் எனக்கு அருளி-நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப- சீலாதி குணங்களை பிரகாசிப்பித்து
-என்னை அடிமை கொண்டு அருளி – லோக த்ரயமும் ஏக கண்டமாய் வியக்கும் படி -சீலாதி குணங்கள் -நாமும் சேவிக்கும் படி –
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்-ஓர் ஆஸ்ரித பக்ஷ பாதமே என்று -ப்ரீதி பிரகரக்ஷத்தாலே நாட்டியமாடி -ஆர்ப்பாட்டம் பண்ணும் படியாகவும் –
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்-சிவப்ப நீ காண வாராயே-காள மேகம் -பவள கொடி படர்ந்தால் போலே –
திரு அதரம் சிவந்து தோன்றும் படி -நடந்து அருள வேண்டும் -மூவரும் நடந்து வந்து மங்களா சாசனம் பெற்று இன்றும் அருளுவார்களே

திருப்பதிகளிலே எழுந்து அருளி இருப்பவனாய்-என்னை இவ்வளவு ஆக்கினாப் போலே-
மேலும் எனது விருப்பத்தை செய்தருள வேண்டும் –என்கிறார்

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று –தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே-
திருப் புளிங்குடியிலே -கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -என்னும் அழகினைக் காட்டியும்-
வர குண மங்கையிலே – பிரான் இருந்தமை காட்டினீர் -திருவாய்மொழி -என்னும் இருப்பின் அழகினைக் காட்டியும்-
ஸ்ரீ வைகுண்டத்தில் -நிலையார நின்றான் -திருவாய்மொழி -என்னும் நின்ற நிலையின் அழகினைக் காட்டியும் –
அன்றோ என்னை புகுர நிறுத்தியது-இவை எல்லாம் நான் இரந்த தற்காகவோ நீ செய்தது-

தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே –
தெளிந்த சிந்தை -என்னும் இவ்விடத்தில்-
பட்டர் -தொட்டியம் -திருநாராயண புரத்திலே வெறுப்பிலே -பிள்ளை திரு நறையூர் அரையரும் திரு நாட்டுக்கு-
எழுந்து அருளியதாலும்-எம்பெருமான் திரு மேனிக்கும் அழிவு வந்ததாலும்-
தேவர் ஸ்வாதந்தர்யம் எல்லாம் காட்டினாலும் பின்னையும் பண்ணின நம்பிக்கையில்-
குலைத்தல் இன்றிக்கே இருக்கும்படி-எலும்பு உரமுடைய எம்பெருமானார் போல்வார் பக்கல் செய்யுமத்தனை-
எலி எலும்பனான அடியேன் பக்கலிலும் செய்வதோ -என்றது-
மகா விஸ்வாச பூர்வகம் -மிக பெரிய நம்பிக்கை முன்னாக -என்கிறபடியே-
ஏதேனும் ஓன்று வந்தாலும்-இங்குத்தைக்கு வருவதாய் வந்தது ஓன்று அன்று-
இதற்கு அடி நம்முடைய பாவம் -என்று-பண்ணின நம்பிக்கை குலையாதார் விஷயத்தில் செய்யும் அத்தனை –
இது தானே காரணமாக நெஞ்சு நெகிழும்படி இள நெஞ்சர் பக்கலிலும் அதைச் செய்யக் கடவதோ -என்றாராம் -என்றபடி-
பேற்றுக்கு அடி கிருபை -இழவுக்கு அடி கர்மம் -என்கிற மகா விச்வாஸம் இருக்கும் படி -தெளிந்த என் சிந்தை –என்றபடி-

அன்றிக்கே
தண்ணியன் -என்று அகலாதபடி-
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே என் மனத்தினைத் தெளிவித்தும்-
அதனைக் கைவிடாதே எப்பொழுதும் எழுந்தருளி இருந்து -என்னுதல் –

என்னை ஆள்வாய் –
என்னை -தண்ணியன் -என்று அகலவும் ஒட்டாதே-பிரிவாற்றாமையால் -முடியவும் ஒட்டாதே-
குண ஞானத்தினாலே தரிப்பித்து கொண்டு போனதாய் –

எனக்கு அருளி –
புறம்பு போகாதபடி வளைத்து-நீயும் காப்பாற்றா விட்டால் எங்கனே தரிக்கும் படி –

நளிர்ந்த சீர் –
நினைத்தவர்கள் மனம் குளிரும்படியான சீல குணத்தை -என்றது-
ஆழ்வார் விரும்பியதைச் செய்து அருளினான் -என்ற-கல்யாண குணத்தை -என்றபடி –

உலகம் மூன்றுடன் வியப்ப –
விலஷணரோடு அல்லாதாரோடு வாசி அற-எல்லாரும் ஒக்க அனுபவித்து ஆச்சர்யம் படும்படியாக –

நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப் –
நாங்கள் ஆச்சர்யப் படும் அளவு அன்றிக்கே-வேறு பட்டவர்கள் ஆகும்படி –இவர்க்கு ஆச்சர்யப் படக் காலம் இல்லை ஆயிற்று–

பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப-
தெளிந்த நீரை முகக்கையாலே காணுதற்கு இனியதான-மேகமானது பவளத்தை பூத்தாப் போலே ஆயிற்று-
திரு அதரத்தில் பழுப்பு இருப்பது-
இவர் கூத்தாடி நின்று ஆர்த்தலைக் கண்டு-அவன் செய்யும் புன்சிரிப்பு இருக்கும் படி –

நீ காண வாராயே –
என் எதிரே உன் அழகு காண வர வேண்டும் –அவன் கூத்து இருக்கிறபடி-
அவன்மாறி மாறி இடும் அடி வல்லார் ஆடினால் போலே காணும் இருப்பது –
பிள்ளை அழகிய மணவாள அரையரைப் பெருமாள்-ஒரு நாள் அருளப் பாடிட்டு
நாம் இங்கனே நடக்கிறோம் -அதற்கு ஈடாக நீ ஆடிக் காண் -என்ன
கானகம் படி உலாவி உலாவி -பெரியாழ்வார் திருமொழி -3-6-4- என்றபடி-
தேவருடைய குழல் ஓசையைக் கேட்டவாறே பாடல் தவிர்ந்தார்கள்-
தேவர் இயல்பாகவே நடக்கிற நடைக்கு பயிற்சியின் பலத்தால் உண்டான ஆடல் தவிர்ந்தார்கள்-
குரக்குக் கைகொடு கூழ் துழாவி-அடியேன் தேவர் திரு முன்னே-ஆட வல்லேனோ -என்றாராம் –
பிருந்தாவன பண்டிதர் -தயிர் கடையும் ஓசையை நட்டுவாங்கமாகக் கொண்டு ஆடிய பண்டிதர் -ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே –

———————————————————————————————–

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்
தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

மந்த ஸ்மிதம் பண்ணி நின்று அருள வேணும் -பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண–பவளம் செறிந்த
வந்து நின் பல் நிலா முத்தம்-அதரம் சிவந்து வெண் பல வரிசை இழக்க
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்-தாமரை தயங்க நின்று அருளாய்-ப்ரீதி தோற்ற நின்று அருள வேணும்
-கஜேந்திர ஆழ்வான் துக்கம் தீர்த்த உகப்பு –
ஆயிரம் சமவஸ்தரம் ஆன பின்பாவது நீ என்னைக் கூப்பிட்டாயே -இன்னும் பழ ஜன்மாந்தரங்களில் உழன்று
இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே -இருக்கும் -மாக்கள் –
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்–பவள பாறை நன்றாக படர்ந்து -கீழே இடை வெளியில் சங்கு -தாமிர பரணி –
தண் திருப் புளிங்குடி கிடந்தாய்–சிரமஹராமான
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்-பொய்கைய்க் கரையில் –குவலயா பீடம் -மதம் பிடிக்க வைத்து –
ஆயிரம் தேவ சம்வத்சரம் -பட்ட துன்பம் -நிராகாரனாய் நின்று –
காய்சினப் பறவை ஊர்ந்தானே–வெவ்விய சினம் -விரோதிகள் வர்க்கங்கள் மேல் –

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே-வந்து தோன்றி அருள வேணும்-என்கிறார் –

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து –
மௌனமாய் இருக்குமவன் -விருப்பம் இல்லாது இருக்குமவன்-
அவாக்ய அநாதர-ஒன்றுக்கும் உன் தன்மையில் வேறுபடாத நீ –
ஆதரவு அநாதாரவு வாசி இல்லாத தேசம் என்பதே ஸ்ருதி -சப்த அர்த்தம் —
அனுகூலர்களைக் கண்ட காட்சியாலே-அகவாயில் அன்பு தோற்ற-தன்மைகள் வேறுபட்டவனாய்-
புன்முறுவல் செய்து நிற்கும்படியை காண வர வேண்டும் –

நின் பல் நிலா முத்தம் –
ஒளியை உடைய பல் ஆகிற முத்துக்களின் வரிசை –நிலா ஒளி -திரு முத்துக்களின் தேஜஸ்

தவழ் கதிர் முறுவல் செய்து –
கதிர் தவழ் முறுவல் செய்து –ஒளி உள் அடங்காமல் -புறம்பே தவழும்படி-புன்முறுவல் செய்து-
அன்றிக்கே-
நின் பல் நிலாக்-கதிர் முத்தம் தவழ் முறுவல் செய்து -என்று பிரித்துக் கூட்டி-
நின் பல்லின் உடைய மிக்க ஒளியானது திரு அதரத்திலே-தவழும்படி முறுவல் செய்து -என்னுதல்-என்றது
திரு அதரத்தின் நின்றும் மிக்க ஒளி புறப்படும்படி ஒளி செய்து -என்றபடி-
முத்தம் -திரு அதரம்

நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் –
திருக் கண்கள் உடைய புன் முறுவல் இருக்கிறபடி –
தயங்குகையாவது-அப்போது பிறந்த ஒளி ஆதல்-
கடல் சலித்தால் போலே அசைந்து வருகிற படியைச் சொல்லிற்று ஆதல் –

காண வந்து நின்று அருளாய் –
முந்துற நாலடி வந்து -பின்னை அதுவும் மாட்டாதே-
செயல் அற்றவனாய் நிற்கும் நிலையைக் காண வேண்டும் –

நல் பவளம் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் புளிங்குடி கிடந்தானே –
நல்ல பவளத் தூறுகளின் கீழே-சங்குகள் கேடு அற்று வசிக்கிற திருப் பொருநலை உடைத்தாய் –
சிரமத்தை நீக்கக் கூடியதான-திருப் புளியங்குடியில் திருக் கண் வளர்கின்றவனே –
படர் -தூறு -என்றது –
அவ் ஊரில் உள்ள பொருள்களுக்கு தீங்கு செய்வாருக்கு அஞ்சி வசிக்குமது அல்லை ஆயிற்று -என்றபடி-

அத் தேசத்தின் தன்மை இதுவாக -எனக்கு நீ கிடைப்பாயோ கிடையாயோ -என்று நான்-
அஞ்சும்படி இருக்கிறது என் என்கிறார் -என்றபடி –

கவளம் மா களிற்றின் –
கவளம் கொண்டு இருப்பதான பெரிய யானையினது-
கவளம் கொண்ட என்றது -மதத்தால் இன்புற்ற யானை -என்றபடி –
இதனால் இதற்கு முன்பு இடர்ப்பட்டு அறியாத யானை என்பதனை தெரிவித்தவாறு –

இடர் கெட –
வாராய் என் ஆர் இடரை நீக்காய் -சிறிய திரு மடல் -50-என்கிறபடியே –
தன் வாயால் -ஆர் இடர் -என்னும்படி அன்றோ இடரின் கனம் –
ஆனையின் துயரம் -பெரிய திருமொழி -2-3-9-என்று நெஞ்சு உளுக்கும் படி அன்றோ பட்டது –

தடத்து –
தன் நிலம் அல்லாத பொய்கையிலே மிகச் சிறிய பொருளின் -முதலையின் -கையில் அகப்பட்டு-
மாற்று வினை செய்வதற்கு இடம் இன்றிகே இருக்கும்படியான ஆபத்து போம்படியாக –
தடம் -எனபது-கரைக்கும் பொய்கைக்கும் பெயர் –

காய் சினம் பறவை ஊர்ந்தானே –
பகைவர்களை காயும் சினத்தை உடைய பெரிய திருவடியை –
அவன் வேகம் போராமை அவனை நடத்திக் கொண்டு வந்து தோற்றிலையோ-
தோள் மேலே திருவடி வைத்து ஹும்காரம் -இப்படியே சில திவ்ய தேசங்களில் சேவை –
அவ் யானையின் நிலை காண் – என் நிலை –அதற்க்கு தோற்றினாப் போலே என் முன்னே வந்து-
தோற்றி அருள வேண்டும் –
கருமுகில் தாமரைக் காடு பூத்து நீடு
இருசுடர் இருபுறத்து ஏந்தி ஏடு அலர்த்
திருவொடும் பொலிய ஓர் செம் பொன் குன்றின் மேல்
வருவ போல் கலுழுன் மேல் வந்து தோற்றினான் -கம்பர்

———————————————————————————————–

காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-

யுகாவாதார் முன் அகப்பட பெரிய திருவடி மேல் எழுந்து அருளி –
காய்ச்சினப் பறவை யூர்ந்து-பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்-கனக மலை -மேரு பர்வதம் போலே -காள மேகம் போலே
-காய்ந்த சினம் -பிரதி பஷத்தின் மேல் காலாக்கினி போலே -மாசின மாலி மாலிமான் என்று–மாலி சுமாலி மால்யவான் –
அங்கவர் படக் கனன்று முன்னின்ற-உத்தர ராமாயணம் -அகஸ்தியர் பெருமாள் இடம் சொல்லும் கதை –
யுத்த பூமியில் அழியப்பட -காலாக்கினி சத்ருச கோபம் -சமுத்திரம் போல காம்பீர்யம் -பூமி போலே க்ஷமை -ஹிமவான் போலே ஸ்தைர்யம் –
காய்சின வேந்தே கதிர் முடியானே-விரோதிகளை எரிக்க வல்ல -சிம்ம சொப்பனம் -தேஜஸ் -இப்பொழுது பட்டொளி வீசி பரக்க –
கலி வயல் திருப் புளிங்குடியாய்–ஆஸ்ரித அர்த்தமாக -காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி-பஞ்சாயுதங்கள்
எம்மிடர் கடிவானே–பெருமாள் திரு நாமம் -உத்சவர் -பூமி பாலன் காய்ச்சின வேந்து -உத்சவர்களுக்கும் பாசுரம்
-தேவ பிரான் -அரவிந்த லோசன் -பொலிந்து நின்ற பிரான் கண்டீர் –
அனுபவ விரோதிகள் -தேவர் சேவை சாதிக்கப் போகுமே -அனுபவ அலாப ரூப துக்கம் –
கீழே காய்ச்சின பறவை ஊர்ந்து -திருத் தண் தாமரை கண் -தயங்க சேர்ந்து அன்வயம்

நீர் விரும்பினவற்றை செய்ய ஒண்ணாதபடி-தடைகள் பிரபலமாக அன்றோ இருக்கின்றன -என்ன
மாலி சுமாலி மால்யவான் என்னும் இவர்களைக் காட்டிலும்-வலியவோ என் விரோதிகள் -என்கிறார் –

காய்ச்சினப் பறவை யூர்ந்து –
பகைவர்கள் இடத்து உனக்கு கண்ணோடிலும்-கண் அற்று அழியச் செய்யும் -பெரிய திருவடியை நடத்தி –

பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல் –
அப்பொழுது இருக்கும்படி –
மேருவைக் கினியக் -கபளீகரிக்க -காளமேகம் படிந்தாப் போலே ஆயிற்று இருப்பது –
இப்பொழுது இது சொல்லுகிறது-பெரிய திருவடி முதுகில் இருப்பை காண்கைக்காக-

மாசின மாலி –
பெரிய சினத்தை உடையனாய்க் கொண்டு வந்த மாலி-

மாலிமான் -என்று அங்கவர் படக்-
மகானான மாலி சுமாலி -என்றபடி -என்ற அவர் அங்குப்பட-என்கிறவர்கள் -அங்கே முடியும்படியாக-என்று –

கனன்று முன்னின்ற –
சீறி அவர்கள் முன்னே நின்ற-
வடிவைக் கண்ட போதே எதிரிகள் முடியும்படியாக அன்றோ வீரம் இருப்பது –ஆதலின் முன் நின்ற -என்கிறார் –

காய்சின வேந்தே-
திருநாமம் –காயும்சினத்தை உடைய நிர்வாஹகனே -என்றபடி –

கதிர் முடியானே –
விளங்குகின்ற திருமுடியை உடையவனே -என்றது-
நீ பாது காப்பதற்கு முடி சூடி இருக்க -நான் இழக்கவோ -என்கிறார் என்றபடி-

கலி வயல் திருப் புளிங்குடியாய்-
நிறைந்த வயல்கள் உடைய திருப் புளியங்குடியில்-திருக் கண் வளர்ந்து அருளுகிறவனே-
நீ சேய்மையில் உள்ளவனாய் தான் நான் இழக்கிறேனோ -என்பார்-திருப் புளிங்குடியாய் -என்கிறார் –

காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே –
காயும் சினத்தை உடைய திரு ஆழி முதலான திவ்ய ஆயுதங்களைத் தரித்தது-
அடியார்கள் உடைய ஆபத்தைப் போக்குகைக்காக அன்றோ –
எம் இடர் கடிவானே -திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய் –என்று மேல் பாசுரத்தோடு கூட்டி வினை முடிக்க –

——————————————————————————————-

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து
நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

அளவிலிகள் எங்கள் உடன் -அளவுடையோர் நித்ய ஸூ ரிகள் -நீதி வானவர் -சேஷி சேஷ பாவம் அறிந்து பரிமாறுவார்கள்
-அசாதாரண சேஷர்கள்-அனுபவிக்கும் கிளர்த்தியைக் கண்டு நாங்களும் காணும் படி
எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே-அவித்யாதி -சகல துக்கங்களையும் போக்கி -கைங்கர்யம் ஏற்றுக் கொண்டு
-அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி -இங்கு –
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்-அநிமிஷர் -அவர்களுக்கும் இப்படியே அநிஷ்டம் நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி அங்கும் -ரஷிக்கும் அவனாய்
இடர் கடித்தால் தானே கைங்கர்யம் பண்ண முடியும் –
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்-தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்– சிவந்த மடல்கள்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து-அசாதாரண சேஷ பூதர்கள் ஸூ ரிகள் -ஆனந்தம் களிப்பு -அனுபவ ஜனித கோலாகலத்தை கண்டு
நாம் களித்துள நலம் கூர-நாங்கள் ஆனந்திப்பிக்க -பிரேமம் வளர -இம்மட வுலகர் காண நீ யொரு நாள்-ஸுலப்யம் காணும் படி –
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே-மடப்பம் உள்ள தாழ்ந்தவர்களும் காணும் படி -ஒரு நாள் ஆகிலும் இருந்து சேவை சாதித்து அருள வேணும் –

வலி அற்றவர்களோடு–வலி மிக்கவர்களோடு–வாசி அறக் காப்பவனான நீ-
நாங்கள் வாழும்படி கண் எதிரே ஒரு நாள் இருக்க வேண்டும் -என்கிறார் –

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே-
எங்கள் உடைய பிறவி காரணமாக வந்த எல்லா துக்கங்களையும் போக்கி –
பகவானுடைய ஞானத்துக்கு அடைவு இல்லாத இந்த உலகத்திலே என்னை அடிமை கொள்ளுகின்றவனே –

இமையவர் தமக்கும் ஆங்கனையாய்-
ஒரு கைம்முதலும் இல்லாத எங்களுக்கு அன்றிக்கே –
ஈச்வரோஹம் –நான் ஈஸ்வரன் -என்று இருக்கின்ற பிரமன் சிவன் முதலாயினோர்கட்கும்-
அங்கு அப்படி நிர்வாஹகன் ஆனவனே –

செம்மடல் மலரும் தாமரைப் பழனத்-
சிவந்த மடல் மலரா நின்றுள்ள தாமரைகள் பொருந்திய நீர் நிலங்களை உடைய

தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய் –
சிரமத்தை போக்குகிற திருப் புளிங்குடியில் திருக் கண் வளர்கின்றவனே -என்றது
உள்ளும் புறம்பும் தாமரையாகவே இருக்கின்றன -என்றபடி –
கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே
ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே
அரவம் சுமப்பதே ஓர் அஞ்சன மலையே
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளதே
உவப்புடன் ஒரு கால் நோக்கிப்
பவக்கடல் கடக்கும் பரிசு பண்ணினவே -திருவரங்கக் கலம்பகம் -73

நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து –
உன் அடியார் உன்னை அனுபவிக்கிற ஆரவாரத்தை கண்டு நாங்கள் உகந்து –

நாம் களித்துள நலம் கூர –
நாம் களித்து உளம் நலம் கூர –அந்த உகப்பு தலை மண்டை இட்டு –
மனத்திலே சினேகமானது மேன்மேலும் என மிக்கு வர –

இம்மட வுலகர் காண –
இந்த உலகத்தில் அறிவு கேடராய்-இடக்கை வலக்கை அறியாதே மனிதர்களும் கண்களாலே காணும்படியாக –

நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே –
எங்கள் கண் வட்டத்திலே ஒரு நாள் இருந்து அருள வேண்டும் -என்றது –
நித்ய சூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமான நீ-
ஒரு நாள் எங்கள் கண்ணுக்கும் விஷயமாய் இருந்தால் ஆகாதோ -என்கிறார் என்றபடி-
உன்னுடைய காட்சி அதிகாரத்தை உடைய ஒரு சிலர்க்கேயாய் இருக்க வேண்டுமோ -என்பார்-எங்கள் கண் முகப்பே -என்கிறார் –

——————————————————————————————–

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்
இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்
திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

அந்த விபூதியில் அன்றியே சகல லோகத்தாரும் விழுந்து -இந்த விபூதியில் வணங்கும் படி உன் வாசி தோன்ற எழுந்து அருள வேணும் –
எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்-இணை யடி தொழுது எழுது இறைஞ்சி-தொழுது எழுந்து ஸ்தோத்ரம் பண்ணி -மூன்று கிரியைகள்
-பாரதந்தர்யம் தோன்றும்படி தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்–பக்தி -உளன் நலம் கூர கீழே -யுக்தி பல அனுரூபமாக
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப–அன்பு பெருகி -தொழுது எழுந்து -பாடி -அன்பு வழிந்து- மேல் விழுந்து -ஆடிப்பாடி
-அஹம் அஹம் மிகையாய் நாம் முன்னே -பஹு முக ஸ்தோத்ரம்
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்–சந்திரன் வரை ஓங்கிய மாடங்கள் –
திருவைகுந்தத் துள்ளாய் தேவா-ஸ்ரீ வைகுண்டத்தில் -ஸுலப்ய தேஜஸ் கொண்டு -திவு காந்தி-
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்-இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–சுட்டி இ -பெரிய லோகம் -திவ்ய தேசம் இருப்பதால் பெருமை
-இருள் தரும் மா ஞாலம் இருந்தாலும் ஸ்ரீ மத்தான -மேன்மை தோன்றும்படி பற்றாசாக வெளிப்படுத்த இருந்து அருள வேணும் –

பரம பதத்தில் அன்றோ-வீற்று இருத்தலின் அழகு-காட்டலாவது-என்ன –
அவ்விருப்பின் அழகினை நாங்கள் காணத்-திருப் புளிங்குடியில் ஒரு நாள் இருந்து அருள வேண்டும் –என்கிறார் –

எங்கள் கண் முகப்பே -இருந்திடாய் –
எங்கள் கண் முகப்பே இருக்க வேண்டும்-அது செய்யும் இடத்து –

யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி –
உலகத்துள்ளார் அடங்க -திருவடிகளில் உண்டான சேர்த்தி அழகு கண்டு-
திருவடிகளில் விழுவது எழுவதாய்க் கொண்டு வணங்கி –

தங்கள் அன்பாரத் –
தங்கள் பக்தி மிக்கு வர –

தமது சொல் வலத்தால் –
தமது ஆற்றலுக்கு தகுதியான சொற்களாலே –என்னுதல்
அன்றிக்கே –
தாம் தாம் சொல்ல வல்ல அளவுகளாலே -என்னுதல் –
அந்தப் புராண புருஷனைப் பற்றி நான் அறிந்த அளவு சொல்லுகிறேன் -என்பது ஸ்ரீ நாராயணீயம்
யதாஜ்ஞ்ஞானம் து வஷ்யாமி புருஷம் தம் சனாதனம் -ஸ்ரீ நாராயணீயம் –
அதாவது
ஈஸ்வரன் கடாக்ஷம் பள்ள மடை என்பதால் வித்வத் கோஷ்டி -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் விட்டு – -யம்ச்ச ராம பஸ்யதி –
-இடையர் கோஷ்டியில் புகுந்து -அங்கும் இருந்து -அவர்கள் சொன்ன வார்த்தையும் -இவர் சொன்ன வார்த்தையும் –
நூறு பிராயம் புகுவீர் –பொன்னாலே பூணூல் இடுவர்-பழம் உண்பீர்-பால் உண்பீர் –அழுத்த இரட்டை உடுப்பீர் –
என்பன போன்று சொல்லுகை —
வங்கி புரத்து நம்பி -விஜயஸ்வ -வெற்றி உண்டாக -என்ன-ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது –
அங்கு சென்றாலும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லீரே-எங்கே இருந்தாலும் நாம் நாமே காணும் இங்கே எழுந்து அருளீர் –

தலைச் தலைச் சிறந்து பூசிப்ப –
ஒருவர்க்கு ஒருவர் மேல் விழுந்து மிகவும் துதித்துக் கொண்டாட –

திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் –
இங்கும் அங்கும் திரிந்து கொண்டே இருக்கிற சந்த்ரனுக்கு-திரிந்து வருகையாலே உண்டான இளைப்பு-
எல்லாம் ஆறும் படியாக
இருக்குமாயிற்று மாடங்களின் உடைய ஒக்கம் –அத் திவ்ய தேசத்தில் எழுந்து அருளி இருக்கிறவனே –

திருவைகுந்தத் துள்ளாய் –
அவ்வளவே இன்றிக்கே-திரு வைகுந்தத்திலே நின்று அருளுகின்றவனே –

தேவா –
தீவு கிரீடா –பரம பதத்தில் காட்டில் இவ்வுலகத்தில் நிலையால் வந்த புகர் –

இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் –
இந்தப் பெரிய பூமியிலே-திருப் புளிங்குடியிலேயும் ஒரு நாள் இருந்து அருள வேணும் –
இருக்கும் இடத்தில் –

வீற்று இடம் கொண்டே –
பரமபதத்தில் இருக்குமாறு போலே உன்னுடைய வேறுபாடு-தோற்ற இருக்க வேண்டும்
இதனுள்ளும் -என்பதற்கு கருத்து என் என்ன –
சாய்ந்து அருளின அழகு கண்டோமுக்கு-இவன் இருந்தால் எங்கனே இருக்கிறதோ என்றும்-
இப்படி இருக்கிறவன் தான் நின்றால் எங்கனே இருக்கிறதோ என்றும்-
இங்கனே சில விருப்பங்கள் பிறக்கும் அன்றோ இவர்களுக்கு-அது வேறு ஒரு படி நமக்கு-
இவை எல்லாம் நரகத்திற்கு காரணமான விஷயங்களிலே உண்டு-பகவத் விஷயத்தில் தெரியாது
செய்த எல்லாம் பரிதாகையும் அதற்கு மேலே வேறு சில செயல்களிலே-
ஆசைப்படுகையும் எல்லாம் நமக்கு இவ் உலக விஷயங்களிலே உண்டாய் இருக்கும் –இப்படி இருக்குமோ என்று அறியும் இத்தனை-

————————————————————————————

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப்
புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும்
செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த
கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

நிரதிசய சுகுமாரமான -இந்த விபூதியில் இந்த திவ்ய தேசத்தில் இருந்து அருளி சேவை சாதிக்க வேண்டும்
சேற்றிள வாளை செந்நெலூடு களும்–தன்னிலம் -வாளை மீன் இளகிப் பதித்து -வா வா போகு வந்து ஒரு கால் கண்டு போகு போலே
-பஞ்ச விம்சதி -உயர்ந்த சென் நெல் கதிர்கள் -செழும் பணைத் திருப் புளிங்குடியாய்-
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த-யமனாய் பிரதிபக்ஷத்துக்கு
கொடு வினைப் படைகள் வல்லானே-பஞ்ச ஆயுதங்கள் தரித்து -அசுரர் குலங்களை-நிரசித்து -கர்ப்ப பர்யந்தமாக –
அதுக்கு ஈடாக பஞ்ச ஆயுதங்கள் கொண்டு -விதேயமாக ஏந்திக் கொண்டு –
வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து-இதனுளும் இருந்திடாய் அடியோம்-இந்த திவ்ய தேசத்திலும்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப்-லோசனாம்-கண்களால் கடாக்ஷித்து பருகினால் போலே
புது மலர் ஆகத்தைப் பருக-திரு மேனி -புதிய மலர் -அப்பொத்தே அலர்ந்த மலர் போலே –
பக்திக்கு அனுரூபமாக -சர்வாதிகம் தோற்ற -விஸ்தாரமாக சிலாக்கியமான ஜகத்திலும் இருந்து சேவை சாதிக்க வேண்டும் –

இவ்விருப்பில் வாசி அறியாத-இவ் உலகத்தாருக்கு
நடுவில் இருக்கிறது என் -என்னில் -ருசி உடைய நாங்கள் கண்டு அனுபவிக்க –என்கிறார்-

வீற்று இடம் கொண்டு –
சேஷியாய் இருக்கும் தன்மையால் வந்த வேறுபாடு தோன்றும்படி –

வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் –
அகன்றதான பெரிய மண் உலகமான இதிலேயும் இருந்திடாய்-
உன்னைக் கொண்டு ஒரு கார்யம் இல்லாத இப்பூ உலகத்திலும் -என்பார் –ஞாலத்து இதனுளும் -என்கிறார்
அன்றிக்கே –
இதனுளும் இருந்திடாய் -என்பதற்கு-இந்த திருப் புளியங்குடியாகிற திருப் பதிலேயும் இருந்திடாய் -என்னுதல் –
பரம பதத்தில் உன்னை ஒழிய செல்லாமை உடையார் முன்னே இருந்தாய்-என்னும் இது போருமோ -என்பார் -ஞாலத்து இதனுளும் இருந்திடாய் -என்கிறார் –
சாய்ந்து அருளின போது இருக்கும் இருப்பின் அழகை-அனுபவிப்பித்து அருளிற்று-
இனி இருந்தால் இருக்கும் அழகையும் அனுபவிப்பித்து அருள வேண்டும் -என்பார்-இதனுளும் -என்று உம்மை கொடுத்து ஓதுகின்றார் –
நமக்கு இவை எல்லாம் இங்கே காணலாம் அன்றோ –
சாய்ந்து அருளின அழகு பெரிய பெருமாள் பக்கலிலே காணலாம்-
நின்று அருளின அழகு நம் பெருமாள் பக்கலிலே காணலாம்-
இருப்பில் உண்டான அழகு பெரிய பிராட்டியார் பக்கலிலே காணலாம் -என்று பட்டர் அருளிச் செய்வர் –
நாம் இங்கு இருக்க நீர் பெறப் புகுகிற பேறு யாது -என்ன-அருளிச் செய்கிறார் மேல் –
அடியோம் –
அவ் விருப்பு பட விட-அதுவே ஜீவனமாக இருக்கிற நாங்கள் –

போற்றி –
இவ் இருப்பு -இங்கனே நித்யமாக செல்ல வேண்டும் என்று-மங்களா சாசனம் செய்து –

யோவாதே –
உச்சி வீடு விடாதே –

கண்ணினை குளிரப் –
காணப் பெறாமையாலே கமர் பிளந்து கிடந்த கண்கள்-விடாய் எல்லாம் தீர்ந்து குளிரும்படியாக –

புது மலர் ஆகத்தைப் பருக –
செவ்விப் பூ போலே இருக்கிற-திரு மேனியை அனுபவிக்கும்படியாக -என்றது –
மலர்ந்த மலர் போன்ற மிருதுவான வடிவினை-திருக் கண்களால் பருகுவார் போலக் குளிரக் கடாஷித்து
வார்த்தை அருளிச் செய்தார் -என்கிறபடியே –
தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்-வசஸா சாந்தயித்வா ஏனம் லோசநாப்யாம் பிபன்னவ-யுத்தம் -21-6-
எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுகையை தெரிவித்தபடி –

சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய் –
செந்நெலின் நடுவே சேற்றிலே-இருபத் தைந்து வயசு படைத்த முக்தர்கள் போலே இருக்கிற
வாளைகள் களித்து துள்ளா நிற்கின்ற அழகிய நீர்-நிலத்தை உடைய திருப் புளிங்குடியாய் –
பணை –
மருத நிலமுமாம் –
இதனால் அவ் ஊரில் உள்ள பொருள்கள் அடைய விரும்பினவற்றை பெற்ற காரணத்தாலே
களித்து வாழும்படியான ஊர் -என்பதனைத் தெரிவித்த படி –

கூற்றமாய் அசுரர் குல முதலரிந்தகொடு வினைப் படைகள் வல்லானே –
பகைவர்களுக்கு கூற்றமாய் கொண்டு-அவர்கள் உடைய குலத்தை முதலிலே அரிந்து பொகடுமவனாய்-
அதற்கு கருவியாக கொடிய தொழில்கள் உடைய திவ்ய ஆயுதங்களை உடையவனாய் -இருக்கிறவன் -என்னுதல் –
இப்போது இது சொல்கிறது
இதற்கு முன்பு தம்முடைய விரோதிகளை போக்கினபடிக்கு எடுத்துக் காட்டு -என்னுதல்-
உனக்கு என்ன குறை உண்டாய் இழக்கிறேன் -என்னுதல்-

—————————————————————————————–

கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

அடிமை கொள்ளும் படி -பிராட்டிமார் போலே -செய்ய வேண்டும் என்கிறார் -கூப்பிடு தூரம் தானே -இந்த திவ்ய தேசம் –
கொடு வினைப் படைகள் வல்லையாய்-விரோதி விஷயத்தில் –
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்-அனுகூலர் தேவர்கட்க்கு -பிரதி கூலர் அழியும் படி
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே-சடக்கென வியாபாரிக்கும் நஞ்சு -நச்சு மா மருந்தம் என்கோ-விரும்புதல்
-சொல்லு மட்டும் அங்கு -அனன்யா பிரயோஜனம் எனக்கு அமுது
கலி வயல் திருப் புளிங்குடியாய்-வடி விணை யில்லா மலர்மகள்-அசி தீக்ஷணா-துல்ய சீல வாயோ வ்ருத்திம்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை-ச்வா பாவிக்க மார்த்த்வம் கொண்ட திருகி கைகளால் -நிரதிசய ஸுகுமார்யம் உடைய திருவடிகள்
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்–மீண்டும் கொடு வினையெனும் -கண்கள் சிவந்து ஆனதே -கொலை கொலை போலே -சந்தோஷம் -உடன்
அடியேனும் பிடிக்க -ஒரு நாளாவாவது செய்து அருள வேணும் –
கூவுதல் வருதல் செய்யாயே–பிரிக்க விருப்பம் இல்லை கூவுதல் -பிரிய மாட்டார்கள் -வருதல் என்கிறார்

எல்லை இல்லாத இனிமையை உடையதான-உன் திருவடிகளில் நானும் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்-அல்லது நீ இங்கே வருதல் செய்ய வேண்டும்-என்கிறார் —

கொடு வினைப் படைகள் வல்லையாய் –
உனக்கு அடியவர்களாய் இருந்தும்-பகைமை கொண்டவர்கள் பக்கல்-நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறி
ஆயுதம் எடுக்க வல்லையாய் -என்றது –
சிலரை அழிய செய்ய -என்றால் ஆற்றல் இல்லாதவனாய் இருக்கையைத் தெரிவித்தபடி –
இறைவன் அப்படி இருப்பானோ -என்ன –
ஆனய ஏனம் ஹரி ஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷணோ வா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18-34-
இராவணன் தானே ஆகிலும் இவனை அழைத்துக் கொண்டு வாரும் -என்னுமவன் அன்றோ –
ஆயின் அவனை கொல்வான் என் என்ன –
கச்ச அனுஜா நாமி ரனார்த்தி தஸ்த்வம் பிரவிச்ய ராத்ரிம் சர ராஜ லங்காம்
ஆச்வச்ய நிர்யாஹி ரதீ ஸ்தன்வீ தாதா பலம் தாஷ்யசி மே ரத்ஸ்த -யுத்தம் -59- 144
கடலை ஆணை செய்து-ஊரை முற்றுகை இட்டு-பின்னை அங்கத பெருமாளையும் புக விட்டு
கையிலே வந்து அகப்பட்டவனை-ராஷேச்வரனான ராவணனே போரில் அடி பட்ட நீ போ-என்று அனுமதி தருகிறேன்
இலங்கைக்குள் சென்று சிரமத்தைப் போக்கிக் கொண்டு-வில்லோடும் தேரோடும் கூடினவனாய் மீண்டும் வா
அப்போது தேரில் இருக்கிற நீ என் வலிமையைப் பார்ப்பாய் –என்று தப்ப விட்டது இன்னும் ஒரு கால் அனுகூலிப்பானோ -என்று
நான் முடிந்தே போம் இத்தனை என்று அதிலே-விரோதத்திலே – முதிர நின்ற பின்பே-கண்ணும் கண்ணநீருமாய் அன்றோ நின்று கொன்றது –
ஆளையா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூனை ஆயினை கண்டனை இன்று போய்ப் போர்க்கு
நாளை வா என நல்கினேன் நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல் -கம்பர் –
இவர்கள் செய்யும் தீய செயலாலே அழியச் செய்யும் அத்தனை போக்கி-தானாக அழியச் செய்ய மாட்டான் ஆயிற்று

அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய் –
அசுரர்களாலே தேவர்களால் உண்டான துன்பம் தீரும்படி-அசுரர்களுக்கு துன்பத்தை விளைவிக்கும் –

கடு வினை நஞ்சே-
அப்போதே சடக்கென முடிக்க வற்றாய்-மாற்றும் மருந்து இல்லாத நஞ்சு ஆனவனே –

என்னுடை யமுதே –
அந் நஞ்சு தான் இவர்க்கு அமுதமாய் இருக்கிறபடி-
தமக்கு அமுதம் தேவர்கள் உடைய உப்பு சாறு அன்று என்பர் –என்னுடைய அமுதே -என்கிறார் –

கலி வயல் திருப் புளிங்குடியாய் –
இவ் வமுதினைப் பெறுதற்கு-கடல் கடைதல்-சுவர்க்கத்துக்கு போதல்-செய்ய வேண்டா
திருப் புளியங்குடியில் அண்மையிலே இருக்கிறது இவ் வமுதம் -என்கிறார்
கலி வயல் -நிறைந்த வயல் –

வடி விணை யில்லா மலர்மகள் –
வடிவில் வந்தால் ஒப்பு இன்றிக்கே இருக்கும் -என்றது-பகவானும் ஒப்பு ஆகான் -என்றபடி
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம்-ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5-
பெருமாளுக்கு கருத்த கண்களை உடைய வளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-என்கிறபடியே-எற்றமாயே நின்றது அன்றோ –

மற்றை நிலமகள் –
இந்த விதமான ஏற்றத்தை உடைய பூமிப் பிராட்டியும்-

பிடிக்கும் மெல்லடியை –
அவர்களும் திருவடிகளைப் பிடிக்கப் புக்கால்-பூத்தொடுவாரைப் போலே-
கன்றி விடுமோ -என்று கூசித் தொட வேண்டும்படி ஆயிற்று மிருதுத் தன்மை இருப்பது –அப்படிப் பட்ட திருவடிகளை –

கொடு வினையேனும் பிடிக்க –
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழிக்கு பின்பு-இவர்க்கு தாம் தாழ்ந்தவர் என்னும் நினைவு இல்லை அன்றோ –
அவர்களும் அண்மையில் இருப்பாராய்-சம்பந்தமும் உண்டாய் இருக்க-
நான் இழந்து இருப்பதே -என்று-பாவியேன் -என்பாரைப் போன்று -கொடு வினையேன் -என்கிறார் –

நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே –
எல்லை இல்லாத இனியனாய்-அண்மையில் இருப்பவனான நீ-ஸ்வரூபத்தை நோக்குகைக்கு-
ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல்-செய்து அருள வேண்டும்-
முற்பட வருதல் என்று இலர் ஆயிற்று-அச் சேர்க்கையை குலைக்க ஒண்ணாது என்னுமதனாலே-
விருப்பம் உடையார் பக்கல் அவனைத் தனியே விட்டு இரார்கள் அன்றோ –
அதனால் கூடக் கொடு வருவார்கள் என்னும் அதனை பற்றச் சொல்லுகிறார்-

——————————————————————————————

கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்
அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11-

பலமாக பகவத் விஷய லாபம் -அருளிச் செய்கிறார் -கூவுதல் வருதல் செய்திடாய் என்று-
குரை கடல் கடைந்தவன் தன்னை-பிரயோஜ நான்தர பரர்களுக்கு கார்யம் -அபேக்ஷித்து -அவனுடைய அங்கீ காரம் பெற்று
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்-வார்த்தை கேட்டு சத்தை ஆனதே ஆழ்வாருக்கு –
வழுதி நாடன் சடகோபன்-நிர்வாகர் -நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்-இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்-அத்விதீயமான இந்த திருவாயமொழி
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்-விட்டு விடாமல் -நிரந்தரமாக -அடி இணை யுள்ளத்தோர் வாரே-அனுசந்திக்கப் பெறுபவர்கள் –

நிகமத்தில் –
இத் திருவாய்மொழி கற்றார்-எப்பொழுதும் நினைக்கப் பெறுவார்-என்கிறார்-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை –
குரை கடல் கடைந்தவன் தன்னை -கூவுதல் வருதல் செய்திடாய் என்று-ஆயிற்று இவர் சொல்லிற்று
முறை கெடவுமாம்-முறையிலே ஆகவுமாம்-காணும் இத்தனையே வேண்டுவது –
உடைமை இருந்த இடம் உடையவர் வந்து கைப்பிடித்தல் தானே முறைமை -கூவுதல் -உடைமையே வருவது -முறை இல்லாமை
-வருதல் -முறையாக ஆக்கவுமாம் -என்றபடி -பார்யை ஆள் இட்டு அழைக்கை முறை இல்லையே -அதுபோல் கூவுதலும் முறை இல்லை –
குரை கடல் கடைந்தவன் தன்னை —
இந்த விருப்பம் இல்லாதார்க்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அமுதம்-கொடுத்தவனை ஆயிற்று இவர் விரும்பியது-

மேவி நன்கு அமர்ந்த –
இந்த தன்மையின் நினைவாலே பொருந்தி-கால் தரையிலே பாவினார் ஆயிற்று –

வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் –
பரந்த புனல் நிறைந்த திருப் பொருநலை உடைய-திரு வழுதி நாட்டுக்கு தலைவரான ஆழ்வார்-

நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் –
மனத்தின் துணையும் இன்றிக்கே ஆயிற்றுச் சொல்லிற்று-
அங்கனம் சொன்ன ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் – வல்லவர்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத்தோர் வாரே –
யுலகம் மூன்று அளந்தான் அடி இணை -யுள்ளத்து -ஓவுதல் இன்றி-ஒர்வாரே
அடியவர்கட்கு சுலபன் ஆனவனுடைய திருவடிகளை மனத்தால்-எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுவார்-
இத்தனை போதும் இவர் தாம் -இவற்றைப் பெற வேண்டும் -என்னும் ஆசையோடு-
திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்
திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும்
உலாவும்படி காண வேண்டும்
புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும்-
என்று ஆசைப் பட்ட இவருக்கு அப்போதே கிடையாமையாலே-
இவற்றைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று-
இதனைக் கற்றவர்களுக்கும் இந்த எண்ணம் மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்-
உன்னை அடைந்து இருக்கிற என்னுடைய எண்ணமானது கெடாமல் இருந்ததே ஆனால்-
அதனால் எல்லா காலத்திலும் விரும்பினவற்றை எல்லாம் பெற்றவனாய் இருக்கிறேன் -என்கிறபடியே –
துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோ ரத-யதி நாசம் நவிந்தேத தாவதாஸ்மி கருதி சதா -ஜிதந்தா ஸ்தோத்ரம்-
மநோ ரதம் தானே புருஷார்த்தம் -என்ற படி –

——————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பந்துத்வ ஸ்வம் அனுகம்பிதம் வந்தும் ஆதவ்-பண்டை யுறவான பரனை
ஆஸன்ன தாமினி புஜகாதி பத்வ சயானாம் -புளிங்குடிக்கே-கண்டு
ஸூ அபேக்ஷிதம் முனி அயாச்சத -எல்லா வுறவின் காரியமும் பிரார்த்தித்து -ஆய -அர்த்தம் -கைங்கர்யம் –
தம் த்வதீய
தஸ்ய ஏக ரூபா சயனேபி துக்கிதோ பூத் –

——————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

லஷ்மீ சம்பந்த பூம்னா
மித தரணி தயா
பத்ம நேத்ரத்வ யோகாத்
ஸ்திதியா ஸ்வைகி சரித்தரைத்தி ஸூ ஹ்ருத் அபஹரணாத்
ஸ்ரீ கஜேந்த்ர அவதாச்சிய
தாரக்ஷ்யாம்சவ் அதிருஹ்ய அரி கண நிரஸனாத்
தேவ துஷ் பிரபாவாத்
துஷ் கர்ம உன்மூலநத்வாத்
ஸூ சிர ஹ்ருதத்தாயா மாதவா சேதியைதி –

——————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 82-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்—————-82-

தண்டற -தடை இல்லாமல்

—————————————————————————
அவதாரிகை –

இதில் –
பந்து க்ருத்யம் எல்லாம் செய்ய வேணும் -என்று
பேசின ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து-அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
இப்படி நிருபாதிக பந்துவான சர்வேஸ்வரனுக்கு
சர்வவித பந்து க்ருத்யமும் செய்ய வேணும்-என்று
திருப் புளிங்குடியிலே போய்ப் புக்கு-அங்கே பிராட்டியாரோடு கூட-
பள்ளி கொண்டு அருளுகிற-காய்ச்சின வேந்தைக் குறித்து –
திருப் பவளத்தைத் திறந்து ஒரு இன் சொல்லுச் சொல்ல வேணும் -மா ஸூ ச -உபாயத்துக்கு சோகப்படாதே– க்ரியதாம் மாம் வத -கைங்கர்யம் –
திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி அருள வேணும்-
திருவடிகளைத் தலைக்கு அலங்காரமாக வைத்து அருள வேணும் –
பிராட்டியும் தேவருமாக திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்க வேணும்-
கண் முகப்பே நாங்கள் சசம்ப்ர்ம ந்ருத்தம் பண்ணும்படி உலாவி அருள வேணும்-என்றால் போலே
ஒரு கோடி வெள்ளங்களை
அவர் சந்நிதியிலே
அசல் அறியாதபடி
பிரார்த்திக்கிற பண்டை நாளில் -அர்த்தத்தை
பண்டை யுறவான இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————————————

வியாக்யானம்–

பண்டை யுறவான பரனைப் –
உலகுக்கு ஓர் முந்தை தாய் தந்தையே முழு வேழு உலகுண்டாய் -என்றும்
தாய் இருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -என்னும்படியும்
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் -என்று
அநாதி சித்தமான சம்பந்தத்தை யுடைய-சர்வ ஸ்மாத் பரனை –
-அன்றிக்கே –
கண்கள் சிவந்து -தொடங்கி -நடந்து வருகிற-
திரு மந்திர பிரதிபாத்யமான நவவித சம்பந்த யுக்தனான-
சர்வ ஸ்மாத் பரனை -என்றாகவுமாம்-

புளிங்குடிக்கே கண்டு –
திருப் புளிங்குடி கிடந்தானே -என்னும் படி
திருப் புளிங்குடியிலே கண்டு
என் மனக்கே -என்னுமா போலே
புளிங்குடிக்கே -என்று இருக்கிறது –

எனக்கு எல்லா வுறவின் காரியமும் –
குடி குடி வழி வந்து ஆட்செய்யும் தொண்டர் -என்றும்
வழி வருகின்ற அடியர் -என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர் -என்றும்-சொல்லும்படியான எனக்கு-
ப்ராதுஸ் சிஷ்யச்ய தாஸ்ய-என்னும்படி -சர்வவித பந்துத்வ காரியமும்-
விகல்பமாக -ஏதாவது ஒரு வழியில் -பரதன் பிரார்த்தனை -எல்லா உறவின் காரியமும் வேணும் -என்கிறார் ஆழ்வார்
தாயே தந்தை என்றும் தாரமே மக்கள் என்றும் -திருமங்கை ஆழ்வார் -1-9-

தண்டற நீ செய்தருள் என்றே யிரந்த –
தண்டு -விளம்பம்
விளம்பம் இன்றிக்கே -என்னுதல்
பரப்ரேரிதனாய் அன்றிக்கே -என்னுதல் –
இவற்றில் ஒன்றிலும்-இடை விடாமல்-தடை அற தேவர் நடத்தி அருள வேணும் என்று அர்த்தித்து -என்னுதல் –

அதாவது –
சோதிவாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்றும்
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும்
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம்கொள் மூ வுலகும் தொழ இருந்து அருளாய் -என்றும்
கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -என்றும்
நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் -என்றும்
காய்சினப் பறவை ஊர்ந்து -காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டு-ஏந்தி எம் இடர் கடிவானே -என்றும்
இம்மட வுலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே -என்றும்
இருந்திடாய் வீற்று இருந்து கொண்டே -என்றும்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும்
மெல்லடியைக் கொடு வினையேனும் பிடிக்க-நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -என்றும்
இப்படி
ஆத்மதர்சன-பரமாத்மா -தர்சனம் —
பல அனுபவ-பரம்பரையை
கூவுதல் வருதல் என்று முடுக விட்ட படி -என்கை-
இப்படி செய்து அருள வேணும் -என்று அர்த்தித்த-
சீர் மாறன் தாளிணையே –
கைங்கர்ய சம்பத்தை -யுடையவர்-என்னுதல்
பக்த்யாதி குணங்களை யுடையவர்-என்னுதல் –
ஏவம் விதராண ஆழ்வார் திருவடிகளை –
உய்துனை என்று உள்ளமே ஓர்-
நாசத்தை விளைக்கும் துணை போல்-
அன்றிக்கே
உஜ்ஜீவனத்தைப் பண்ணும் துணை என்று-
மனசே-அனுசந்தித்துப் போரு-என்கிறார் –

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: