பகவத் விஷயம் காலஷேபம் -172- திருவாய்மொழி – -9-3-1….9-3-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

ஓராயிரம் -பிரவேசம் –

நீர் இங்கனே விரும்பிக் கேட்க வேண்டுமோ-நம்முடைய குடல் துவக்கை அறியீரோ -என்ன
அதனை-நினைந்தும் சொல்லியும் இனியர் ஆகிறார் –
நாராயணனே நங்கள் பிரான் -என்றத்தை கடாக்ஷித்து சுருக்கமாக பிரவேசம் அருளிச் செய்தார் –
கூவுதல் வருதல் செய்யாய் -என்று வேண்டிக் கொண்டார் மேல் –யார் வேண்டிக் கொள்ள வேண்டியதை யார் வேண்டிக் கொள்ளுகிறார் –
உம்முடைய லாபத்துக்கு நாம் வேண்டிக் கொள்ளும்படி அன்றோ-உம்மோடு நமக்கு உண்டான இரத்த சம்பந்தம் –குடல் துவக்கு –
ஆனபின்பு நீர் விரும்பியவை அனைத்தையும் செய்யக் கடவோம்-நீர் வெறுக்க வேண்டா -என்று சமாதானம் செய்தான் –
இவரும் சமாதானத்தை அடைந்தார் –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ-நாச்சியார் திரு மொழி -2-4-என்னக் கடவது இறே-
ஸ்ரீ கௌசல்யார் ஒரே பிள்ளையை உடையாளான நாம் உம்மைப் பிரிந்து தனி இருக்க மாட்டேன்-கூட வருவேன் இத்தனை -என்று பின் தொடர-
புரிந்து பார்த்து -அம்மையீர் நீர் என்னைப் பின் தொடருகிற இடம் தர்மத்துக்கு குறைவு வரும் காண் -என்று
முகத்தை பார்த்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய-மீட்பதற்குப் போன இவர் மங்களா சாசனம் செய்து மீண்டாரே அன்றோ –
இப்படி அன்றோ -அவனுடைய பார்வைகளும் -மையல் ஏற்றி -வார்த்தைகளும் -பெருமாள் வார்த்தைகள் -இருக்கும்படி –
அவன் வார்த்தை சொன்னால் பின்னை அவன் வழியே போக வேண்டும்படியாய் அன்றோ இருப்பது –அம்மான் பொடி போலே அன்றோ –
இதே போலே தான் ஸ்ரீ சீதா பிராட்டி வார்த்தை கேட்டு -பெருமாள் உடன் கூட்டி சென்றார் -இதுவும் அவனுக்கு இவள் போட்ட அம்மான் பொடி –

ஆக –
அவன் நாராயணனாய் இருக்கிற இருப்பை நினைந்தார் –நாராயணன் அவனே
அந் நாராயண மந்த்ரத்தின் உடைய பொருளை ஆராய இழிந்தவாறே-
ஒரு பொருளுக்கும் தன்னுடைய பேறு இழவுகட்கு வேண்டிக் கொள்ளுதற்கு தனக்கு சம்பந்தம் இல்லாமலே இருந்தது –
இப்படி இருக்கிறவன் தம் பக்கலிலே விசேடக் கடாஷம் செய்த படியையும்- நங்கள் பிரான் அவனே-
இந்த நாராயண மந்த்ரத்தின் அர்த்தத்துக்கு எல்லையான அவன் சீல குணத்தையும் நினைத்தார்-கடைவதும் கடலுள் அமுதம்
நினைந்தவாறே -இப்படி சீல குனமுடையவனை இப்பொழுதே காண வேண்டும் என்னும் விருப்பம் பிறந்தது-என் மனம் ஏகம் என்னும் இராப்பகல் –
அதில் தமக்கு அவன் இருந்த இடத்தளவும் கால்நடை தராதபடிக்கு ஈடாயிற்று-
அவனுடைய சீலம் முதலான குணங்களிலே ஈடுபட்டு தாம் துவக்கு உண்டபடி –சீலம் எல்லை இலான் –
இனித்தான் இவர் போனாலும் ஒரு கைங்கர்யத்தை செய்கை மிகையாம்படி இருப்பான் ஒருவனாய் இருந்தான் அவன்-
சுணை கேடன்-ஓதி நாமம் குளித்து -உச்சி தன்னால் —-நமக்கே நலம் ஆதலின் -தொழுது எழுதும் என்னும் இது மிகை –
இவர்தாம் ஓன்று செய்து அனுபவிக்க வல்லவர் அன்றிக்கே இருந்தார் –
அவனுடைய சீல குணங்களிலே கால் தாழ்ந்து இருக்குமவர் ஆகையாலே –
இப்படிப் பட்டவனுடைய சீல குணத்தின் மிகுதியைச் சொல்லி-தலைக் கட்டுகிறது இத் திருவாய் மொழி-

அன்றிக்கே-
முதல் பாசுரத்தால் பிராப்யமாக இருந்துள்ள ரூபம் -திரு மேனி வைலக்ஷண்யம் -இரண்டாம் பாட்டால் அதற்கு ஆதாரமான
ஸ்வரூபம் அடியேன் உள்ளான் -அகாரத்தால் -சேஷி -காரணம் -அழகன் -ஸ்வரூபத்தால் மேம்பட்ட -அர்த்த பலத்தால் வந்த
ஸ்ரீ யபதித்தவமும்-அகாரம் ரக்ஷணம் ரஷிக்கும் பொழுது பிராட்டி சம்பந்தம் வேணும் –
மூன்றாம் பாட்டில் முதல் பாதியால் -அவனது அருளால் –உணர்வின் உள்ளே நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருள் -ரக்ஷகத்வம்
காரணத்வத்தையும் -சப்த காரணம் அகாரம் -சுத்தமான உபாயத்வத்தையும் அருளிச் செய்து -அகரார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார்-
அத் திருவாய் மொழியிலே முதல் இரண்டரை பாசுரங்களிலே-அகாரார்தம் -அகாரத்தின் பொருளை -அருளிச் செய்தது-

மேல்-ஒன்றரைப் பாசுரங்களாலே நான்காம் வேற்றுமையின் பொருளையும் -அடிமைத் தன்மையும் –
மகாரத்தின் பொருளையும் -யானும் தானாய் ஒழிந்தான் -அத்யந்த சேஷன் -அநந்யார்ஹ சேஷ பூதன் -அருளிச் செய்தார்-
நன்று -இது அடிமையாம் தன்மை -இது அவனுக்கே உரிமையாம் தன்மை -இது அவற்றுக்கு இடமாய் இருக்கிற ஆத்துமா-
என்று பிரித்து சொல்லாமல்-மகாரத்தின் பொருளாய் இருக்கின்ற ஆத்துமாவோடு கூட்டியே அருளிச் செய்தது என் -எனில்-
அவற்றைத் தனித் தனியே பிரித்து அருளிச் செய்யாதது
நான்காம் வேற்றுமையின் அர்த்தமும்–சேஷத்வம் -உகாரத்தின் அர்த்தமும்-அநந்யார்ஹத்வம் -ஆத்துமாவை விட்டுப் பிரிந்து
தனித்து இராமையாலே கூட அருளிச் செய்தார் -என்க –-
நர நாராயணன் -நியத பிரகாரம் -சரீர தயா -சாமான்ய கரண்யம் –
அதற்க்கு மேல நான்கு பாசுரங்களாலே-மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்துமாவின் உடைய ஞான ஆனந்தங்கள்
முதலிய வற்றின் சிறப்பினை அருளிச் செய்தார்
மேல் இரண்டு பாசுரங்களாலே-இம்முறையில் பிரணவத்தின் அர்த்தத்தை நினையாத-வேதத்துக்கு புறம்பான
புறச் சமயத்தாரையும்-அகச் சமயத்தார் ஆகிற குத்ருஷ்டிகளையும் மறுத்தார் –
ஆக –
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியாலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்து –
மேல்
கருமாணிக்க மலை -நெடுமாற்கு அடிமை -என்னும்-இரண்டு திருவாய் மொழி களாலும்
-நம –என்றதன் அர்த்தத்தை அருளிச் செய்தார்
எங்கனே எனின் –
சொல்லால் கிடைக்கின்ற பொருளும்-பொருளால் கிடைக்கின்ற பொருளும்
என்னும் இரண்டு வகையான பொருள்களும் கூறப்படும் -நம -என்ற சொல்லுக்கு-
அவற்றுள் சொல்லால் -கிடைக்கும் பொருளை -கரு மாணிக்க மலை -என்னும் திருவாய் மொழியில் அருளிச் செய்து
பொருளால் கிடைக்கும் பொருளை -நெடுமாற்கு அடிமை -என்னும் திரு வாய் மொழியில் அருளிச் செய்தார்-
நம -என்பதன் சொற்பொருள் -நானஎனக்கு உரியன் அல்லேன் -என்பதே அன்றோ –
ஒரு கன்னியானால் ஒருவனுக்கேயாய் இருக்கையும்-தான் தனக்கு உரியன் அன்றிக்கே இருக்கையும்-அன்றோ ஸ்வரூபம் –
அதனை அருளிச் செய்தார் கரு மாணிக்க மலை என்ற திருவாய் மொழியில்-
பொருள் ஆற்றலால் கிடைக்கும் பொருள் -அவன் அடியார்க்கு அடிமை பட்டு இருத்தல்-
அதனை அருளிச் செய்தார் – நெடுமாற்கு அடிமை -என்ற திருவாய் மொழியில்-
அதற்கு மேல்-கொண்ட பெண்டிர் -என்ற திருவாய் மொழியில்-நாராயண மந்த்ரத்தின் பொருளை அருளிச் செய்தார்
யாங்கனம் எனின் –
நாராயண பதத்துக்கு பொருள்-
தத் புருஷ சமாஹம் -ஸ்வாமித்வம் -நும்மது ஆகும் அவன் அன்றி மற்று இல்லை -தொண்டரோமாய் -பாசுரங்களால் –
-பஹு வ்ருஹீ சமாஹம் -வாத்சல்யம் -வண் புகழே -என்றும் -கணை ஒன்றாலே ஏழு மரமும் எய்த
உபாயத்வம் -கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
உபேயத்வம்-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
வியாபகத்வம் -நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லை
என்னும் இவை முதலானவைகள் அன்றோ –
அதற்கு மேல்
பண்டை நாளால் -என்கிற திருவாய் மொழியில் ஆய -என்னும் நான்காம் வேற்றுமையும்-அர்த்தத்தை அருளிச் செய்தார்
நான்காம் வேற்றுமைக்கு பொருள் -கைங்கர்யத்தை பிரார்த்தித்தல் அன்றோ –
பிரணவத்தின் பொருளும்
நம -என்ற சொல்லின் பொருளும்
எங்கும் பரந்து இருத்தலும் -பரந்து இராமையும் –
வாசு தேவன் -விஷ்ணு -என்னும் வியாபக மந்த்ரங்களிலும் உண்டு-
அதில் தாம் ஆதரித்து அருளியது -திரு எட்டு எழுத்தே -என்னுமதனை-ஓர் ஆயிரமாய் -என்னும் இத் திருவாய் மொழியிலே
அருளிச் செய்கிறார்-இங்கனம் -நடுவில் திரு வீதிப் பிள்ளை -அருளிச் செய்வர் –

அர்த்தத்தை மட்டும் அருளிச் செய்யாமல் சப்தம் -நாராயண -தனிச் சிறப்புடன் அருளிச் செய்து -ஆப்த உபதிஷ்டம்-
சரம சதுர்த்தியில் -ஆய -தாதரத்தே சதுர்த்தி -சேஷத்வம் லுப்த சதுர்த்தி -அவனையே பிரதானமாக என்று சொல்லி –
இது பிரார்த்தனா சதுர்த்தி -கைங்கர்யம் பிரார்த்திக்கிறது -அநந்யார்ஹ சேஷத்வம் சித்திக்க பிரார்த்திக்க வேண்டுமே –
சேஷத்வம் நிலை நாட்டும் கைங்கர்யம் -சகல வித கைங்கர்யங்களையும் –பிரார்த்திக்க வேண்டுமே –
அவனும் சித்தம் -கைங்கர்யமும் சித்தம் -ஆய பிரார்த்தனா கர்ப்பம் –
தத் பிரார்த்தனா உபபத்தி பலத்தாலும் -பிரார்த்தனா சதுர்த்தி என்பது சித்திக்கும் –

———————————————————–

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

தெளிவாக திரு நாமம் -சர்வ ரக்ஷகத்வம் -நாம சம்பத் உள்ளவன் –
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்-ஆயிரம் விதமாக ரக்ஷிக்கிறான்-விஸ்வம் -காப்பாற்றும் விதம் வேறே –
வைத்த அஞ்சேல் என்ற -அத்தனை முகத்தால் –
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்–வெவ்வேறு படிகளால்-திருநாமம் ரக்ஷிக்கும் -அவற்றை சொத்தாகக் கொண்டவன் –
நிர்வசன பேதம் -சர்வ வித சேதனங்கள் அசேதனங்களை ரக்ஷிக்கும் பெருமை –
கார் ஆயின காள நல் மேனியினன்-காள மேகம் போலே ஸ்யாமளமான -திவ்ய மங்கள விக்கிரகம் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே-நமக்கு உபகாரகன் –

அவன் நாராயணன் அன்றோ-
நம் விருப்பத்தை முடித்தல் நிச்சயம்-என்று தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிறார் —

ஓர் ஆயிரமாய் அளிக்கும் –
ஒவ்வொரு திருப் பெயரே ஆயிரம் முகத்தாலே எண்ணிறந்த வகைகளில் –காக்க வல்லதாய் இருக்கும் –
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர் யஸ்ய யசச ஸ்ரிய-ஜ்ஞான வைராக்யயோ சைவ ஷண்ணாம் பக இதீரணா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-74
நிறைந்த செல்வம் என்ன–வீர்யம் என்ன–கீர்த்தி என்ன–சம்பத்து என்ன-ஜ்ஞானம் என்ன-வைராக்கியம் என்ன-
ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் -பகவ -ஆகிய நிருக்தி பேதத்தாலே-பலவகையாக காக்க வல்லதாய் அன்றோ இருப்பது –

உலகு –
காக்கும் இடத்து ஒவ்வொருவராக அன்றி-உலகம் முழுதினையும் காப்பாற்றும் –

ஏழ்-
அதிலும் ஓர் உலகம் மாத்ரம் அன்றிக்கே-எல்லா உலகங்களையும் பாதுகாக்கும் –
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷு நாரதமான்-ஷிபாமி அஜஸ்ரம் அசூபான் ஆசூரீஷ்வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -16-19-
அடியார் ஒருவரைக் காப்பாற்றுமது உண்டு அன்றோ அவனுக்கு –திருப் பெயர்கள் காப்பது அங்கன் அன்று -என்றபடி –
அர்ஜுனன் வியாஜ்யமாக –
அவன் தூரஸ்தான் ஆனாலும் இது கிட்டி நின்று ரக்ஷிக்கும் –
இது தானே யோக்யதை பண்ணிக் கொடுக்கும் -வேறே யோக்யதை சம்பாதிக்க வேண்டாமே
அளிக்கும் –
இவை செய்த பாவங்களைப் பார்த்து -தள்ளுகிறேன் -என்பதும்
ஒரு காலத்தில் உண்டு அவனுக்கு –அளிக்குமது ஒன்றுமே ஆயிற்று இவற்றுக்கு இயல்பு –
ஷிபாமி -அசுர யோனிக்யில் தள்ளினாலும் தள்ளுவார் -இவை அளிப்பது மட்டுமே செய்யும் –

பேர் –
காப்பதற்கு ஒரு பேர் -காணும் -வேண்டுவது –
அப்படிப் பட்ட -ஒரே பெயரே ஆயிரம் முகமாக காக்க வல்ல -திருப் பெயர்களைத் தான்-எத்தனை உடையன் -என்னில் –

ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் –
சஹஸ்ராஷ சஹஸ்ராச்ய சஹச்ர சரணோ விபு-சஹச்ர பாஹூ சர்வஞ்ஞ தேவோ நாம சஹஸ்ரவான் -போலே-
தேவன் திருப் பெயர்கள் ஆயிரம் உடையவன்-பல பசுக்களை உடையவன் -என்னுமாறு-கற்றுக் கறவைக் கணங்கள் -பல கறந்து –
எல்லாருக்கும் உணவு அளிக்க நினைத்தவர்கள்-
சோறும் தண்ணீரும் குறை அறுத்துக் கொண்டு-இருக்குமாறு போலே-
உலகத்தை பாதுகாக்க நினைத்த ஈஸ்வரனுக்கு-அதற்குத் தகுதியாக ஆயிரம் திருப் பெயர்கள் உண்டாய்-இருக்கும் ஆயிற்று –

புத்திரன் இறக்க அதனாலே வருந்திய -கோயிலாய்த்தான்-பட்டர் திருவடிகளிலே வந்து தன்-
சோகம் எல்லாம் தோற்ற விழுந்து கிடக்க-அவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது-
நீ நம்முடைய திருப் பெயர் சாற்றின பிள்ளை இறந்தான் என்று அன்றோ துக்கப் படுகிறாய் -அதற்கு துக்கப் பட வேண்டா-
அந்த பெயரை உடைய நாம் இருந்தோமே -என்று
தம்மைப் போலே ஒரு விக்ரஹத்தை ஏறி அருளப் பண்ணி-அவர்க்கு கொடுத்து அருளினார் -என்பது சரித்ரம் –
ஆயிரம் திருப் பெயர்களை உடையவன் ஆகையால் வந்த பெருமையை உடையவன் –
அவை தான்
கரை கட்டா காவிரி போன்று பரந்து இருந்தால் -அவற்றை எல்லாம் ஒரு முகம் செய்து-
அனுபவிப்பதற்கு தக்கதான வடிவை உடையவனாய் இருக்கும்-என்கிறார் -மேல் –

கார் ஆயின காள நல் மேனியினன்-
கார் என்றே இருக்கிறார் ஆயிற்று-முற்று உருவகம் இருக்கிறபடி-
கறுத்து இருந்துள்ள காள மேகம் போலே இருப்பதாய் –அது தானும் பெருக்காற்றில் இழிவார் ஒரு தெப்பம் தேடி-
இழியுமாறு போலே-ஒன்றைச் சொல்லும் போது உபமானம் முன்னாக அல்லது சொல்ல-
ஒண்ணாமை யாலே சொன்ன இத்தனை போக்கி-
திரு மேனியைப் பார்த்தால் உபமானமில்லாததாய் ஆயிற்று இருப்பது
இப்படி இருப்பதனை உடையவன் தான் யார் -என்ன-நாராயணன் -என்கிறார் மேல் –

நாராயணன் –
ஞானம் சக்தி முதலானவைகளும் குணங்களாய் இருக்கச் செய்தே-
ஞானத்துவம்-ஆனந்தத்துவம்-அமலத்துவம்-முதலானவைகள் ஸ்வரூபத்துக்கு நிரூபகமாய் இருக்கும் அன்றோ-
ஸ்வரூபத்தை காட்டும் திரு நாமம் என்பதால் வந்த ஏற்றம் என்கிறார்-மற்றவை நிரூபித்த ஸ்வரூபம் விசேஷணங்கள்-
அப்படியே பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடுடையான் என்றவன் ஆகிறான் யார் -என்ன-
இன்னான் -என்று விசேடிக்கிற இடத்தில் -நாராயணன் -என்கையாலே நிரூபகமாய் புக்க தன்றோ-
ஆயிரம் திரு நாமங்களைச் சொல்லி-
அவற்றிலே மூன்றினைப் பிரதானமாக -விஷ்ணு காயத்ரியிலே -எடுத்தது-வியாபக மந்த்ரங்கள் ஆகையாலே
அவற்றிலே இரண்டனை மற்றைய வற்றோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆயிற்று-இதற்கு உண்டான முதன்மை –
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை -திரு நெடும் தாண்டகம் -4-என்றும்-
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் -பெரிய திரு மொழி -8-10-3-என்றும்
நாராயணா என்னும் நாமம் -பெரிய திருமொழி -1-1-1- என்றும் –
நமோ நாராயணம் -பெரிய திருமொழி -6-10-1-என்றும்-இவை அன்றோ திரு மங்கை மன்னன் படி
நம் ஆழ்வாரும்
வண் புகழ் நாரணன் -திருவாய் மொழி -1-2-10-என்று தொடங்கி
திருவாய் மொழி முடிய அருளிச் செய்ததும் இதுவே இருக்கும் அன்றோ –வாழ் புகழ் நாரணன் சொல்லி தலைக் கட்டினார் –
வேதங்களும் ஆழ்வார்களும் நம் ஆச்சார்யர்களும் எல்லாம் சென்ற வழி இது ஆயிற்று –
நாமும் எல்லாம் இப்போதும் அதனை ஆதரித்தால் ஒரு குற்றம் இல்லை அன்றோ-
மற்றை இரண்டு திருப்பெயர்களையும் சூத்ரர் – சைவர்-முதலாயினாரும்-வைசிய ஷத்ரியர் – மற்றையாரும் -அத்வைதிகள் –
விரும்புவதனால் அன்றோ நாம் அவற்றைத் தவிர்ந்தது –அசிஷ்ட பரிக்ரகமும் அபூர்த்தியும் உண்டே -விஷ்ணு வாஸூதேவ மந்திரங்களுக்கு –
நம் ஆசார்யர்கள் சென்ற வழியை அன்றோ நாம் ஆதரிக்க வேண்டுவது –

நங்கள் பிரான் அவனே –
நம்மை காப்பாற்று கின்றவனான உபகாரகன் அவனே-
கூவுதல் வருதல் செய்திடாய் -என்று நம் பேற்றுக்கு நாம் பிரார்த்திக்க-
நமக்கு உரிமை இல்லை என்கிறது -அவனே -என்கிற ஏகாரத்தாலே –
நம்மோட்டை குடல் துவக்கு -அயன சம்பந்தம் அறியீரோ-
அயனம் ஆஸ்ரயம் பற்றி இருப்பதால் நாராயணன்-நாரங்களை அவன் ஆஸ்ரயித்து இருக்கிறான்
எவ் உயிர்க்கும் தாயாக –அத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

————————————————————————————————–

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

ச ப்ரஹ்ம –ச சிவ -ச இந்த்ர -வேதம் தமிழ் செய்த மாறன் அன்றோ -நாராயண சப்தம் வேறு எங்கும் அயனம் செய்து அர்த்தம் சொல்ல முடியாதே –
அனைத்தும் பொதுச் சொல் -இதில் -கீழே -நாராயணன் நங்கள் பிரான் அவனே
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி முதலியன செய்து -சர்வாத்ம பூதன் -என்பதை பிரகாசிப்பித்து -கீழே பிரசுத்துதமான நாராயண சப்தார்த்தம் அருளிச் செய்கிறார்
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்-சஹாயாந்தர நிரபேஷன் அவனே -ஏவகாரம்–யார் செய்தான் என்ற
-சங்கை இருந்து தீர்க்க வில்லை -சஹாயாந்தர நைரபேஷ்யம் சொல்லுகிறது –
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்-பிரளயத்தில் வயிற்றிலே வைத்து நோக்கி -உமிழ்ந்து அளந்து
அவனே யவனும் அவனுமவனும்–ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் ரக்ஷணம் -இங்கு இந்திரன் திக் பாலகர் -கிழக்கே -தேவர் தலைவன்
-பிரகார தயா –அபிருத்தாக் சித்த விசேஷணம் ஸ்ருதி -பிரசித்தம் –
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே-கார்மீ பாவித்த மற்ற சேதன அசேதனங்கள் -அவனே -அவன் தந்த ஞானத்தால் -அறிந்தோமே

மேலே சொல்லப் பட்ட நாராயணன்-என்னும் திருப் பெயரின்-பொருளை -அருளிச் செய்கிறார்-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே –
அகன்ற பூமியை உண்டாக்கி-பிரளயம் கொண்ட பூமியை மகா வராகமாய் எடுத்தானும் அவனே
அவனே -என்ற ஏ காரத்தால்
படைத்தல் முதலான கார்யங்களில் வேறு-துணைக் காரணம் இல்லாமையைச் சொல்லுகிறது –

அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான் அவனே –
பிரளயம் கொள்ளாதபடி பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து-வெளிநாடு காண உமிழ்ந்து
மகாபலியாலே கவர்ந்து கொள்ளப்பட-எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் -அவனே
அவனே -என்ற ஏ காரத்தால் ஆபத்துக்கு துணையாதல் முதலான
காப்பாற்றுதல் தொழிலும் வேறு துணை இன்மையை-தெரிவித்தவாறு –

யவனும் அவனுமவனும் அவனே –
பிரமனும் சிவனும் இந்த்ரனும் ஆகிய இவர்கள் உடைய
ஸ்வரூபம் ரஷணம் ஸ்திதி நிற்றல் இருத்தல் பிரவ்ருத்தி நிவ்ருத்தி –முதலான செயல்கள் அவன் இட்ட வழக்கு
ஸ ப்ரஹ்மா ஸ சிவ ஸ இந்த்ரா -என்கிற பிரசித்தியைப் பற்றிச் சொல்லுகிறார் -என்றது
அவன் அவன் அவன் என்றே போருகிறார்-என்றபடி –

அவனே மற்று எல்லாமும்-
ஸ அஷர பரம ஸ்வராட் –
அவனே உயர்ந்தவனும்-விகாரம் இல்லாதவனும்-கர்மங்கட்கு வசப் படாதவனான முக்தன் -என்றபடியே
பிரதானரோடு-பிரதானம் இல்லாதாரோடு-வேற்றுமை இல்லாதபடி
சேதன அசேதன பொருள்கள் எல்லாம் அவன் வசப் பட்டவை யாம் –

அறிந்தனமே –
பிரமன் முதலாயினோர்- ஈச்வரோஹம் -என்று இருக்கையும்
அவர்களைப் பற்று கின்றவர்களுமாக சொல்லா நிற்க
நீர் -அவனே -என்றது என் கொண்டு -என்னில் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற காரணத்தால் நாம் அறிந்தவர் ஆனோம்
அதனாலே சொல்லுகிறோம் -என்கிறார் –
ஆக
இரண்டு பாசுரங்களாலும்
திரு மந்தரத்தையும்
அதன் பொருளையும்
அருளிச் செய்தாராய் நின்றார் –

——————————————————————————————–

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-

வேதங்கள் -வைதிக புருஷர்கள் -தம்மைப் போலே அன்றியே அவனை அறிந்தவை
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்-அஹம் வேத -வேதத்தின் அருமை பெருமை அறுதி இட்டு சொல்லும்
ப்ரஹ்ம ஸூத்ரம் இதிகாச புராணங்கள் -அறிவதற்கு அப்பால் பட்டவன் -என்று அறிந்து கொண்டன
யஸ்ய அமதம் தஸ்ய மதம் -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் –
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்-இப்படி அறிந்தனவாக அறிந்தன-அஹம் வேதிமி மஹாத்மநாம் –
ராமம் சத்ய பராக்ரமம் -வசிஷ்டர் அபி -வைதிகர் -அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி-சர்வ பாப ஹரனான சர்வேஸ்வரன் –
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே-பரம ஒளஷதமாக அறிந்தனர் –
உபாயமாக ஆபத்து போக்க வல்ல என்று தானே -அனுபவிக்கும் விருந்து என்று அடியேன் தானே அறிந்தேன் –
போக்யத்தை சீலாதிகளை அவன் கட்டக் கண்டு அறிந்தோம் -அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே-என்று கீழே சொல்லிய படி –

வேதங்களும்-வேதார்த்தங்களை அறிந்த முனிவர்களும்-அறிந்த அளவு அன்றிக்கே
நான் அவனை முழுதும் அறியும் படி-எனக்குத் திருவருள் புரிந்தான் –என்று இனியர் ஆகிறார்-

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் –
அறிதற்கு அரிய பொருள்களை அறிந்தனவாய் இருக்கிற-வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள் –
அன்றிக்கே
அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் அறிதற்கு அரிய பொருள்களை அறுதி இட்டு தரும்
ப்ரஹ்ம சூத்ரம் இதிகாசம் புராணங்கள் -முதலானவைகள் -என்னுதல் –

அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் –
அரும் பொருள் ஆதல் -அறிந்தன கொள்க-
அறிதற்கு அரியன்-என்னும் இவ்வளவே அறிந்தனவாகக் கொள்ள அமையும் –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குத்ஸ ஸ நேதி-தைத்ரியம் -என்றும்
யஸ்யாமதம் தஸ்ய மதம் அவிஜ்ஞாதம் விஜா நதாம்-கௌஷீதகி
வேத வாக்குகள் அறிய முடியாமல் எந்த ஆனந்த குணத்தின் நின்றும்மீண்டனவோ
அறியப் படாதது என்று இருப்பவன் எவனோ அவனுக்கு அறியப் பட்டது-
அறிந்தேன் என்று இருப்பார்க்கு அறியப்படாதது-என்னும் இவ்வளவே அறிந்தது –

அறிந்தனர் எல்லாம் –
எல்லாம் அறிந்தனர் –
மற்றைய வற்றை அறிந்தாராய் இருக்கின்ற-பராசரர் வியாசர் வால்மீகி முதலான இருடிகளும் –

அரியை வணங்கி –
எல்லா துக்கங்களையும் போக்கு கின்றவனை அடைந்து –
அரி-விரோதி போக்குபவன்
வணங்கி -இரண்டாலும் குற்றம் -உபாய பாவம் –

அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே
நோய்கள் அறுக்கும் மருந்து அறிந்தனர்-
சம்சாரா சர்ப்பே சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம்-க்ருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஸ்ருதவா முக்தோபவேத் நர –
சம்சாரம் ஆகிற பாம்பினால் கடிக்கப் பட்டவர்களாய்-செயல் அற்று இருக்கும் மக்கள்
கிருஷ்ணன் என்ற மந்த்ரத்தை கேட்ட உடன்-விடுபட்டவர்கள் -ஆகிறார்கள் -என்கிறபடியே
பிறவித் துன்பத்துக்கு மருந்து -என்னும் இவ்வளவே அறிந்தார்கள்-அவனுடைய இனிமையில் இழிந்திலர்கள்
அன்றிக்கே
வேறு ஒன்றையும் விரும்பாத அவனுடைய உபாய பாவத்தில் இழிந்திலர்கள்-
வேதங்களும்-வேத வித்துக்களும் போலே அன்றிக்கே-
தன்னை எனக்கு பூரணமாக அறியும் படி எனக்கு அருள் பண்ணினான்அறிய முடியாதவன் என்று அறிந்தன வேதங்கள் இதிகாசம்-
பிறவி நீக்கும் மருந்து என்று ரிஷிகள் அறிய
பூரணமாக உள்ளபடி -சீல குணத்தால் தானே தன்னை காட்டியதால் -அறிந்தேன்

——————————————————————————————

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

நித்ய ஸூரி போக்யம் நிரதிசய சீல- ஸுலப்ய – விசிஷ்டன் -அந்த அனுபவம் தருபவன் -நெஞ்சே விடாதே –
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று-பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்-உபகாரகன் -ப்ரஹ்மாதிகள்
-நித்ய ஸூ ரிகள் கூட்டம்கள் -அடைவு கெட -பிதற்றும் படி –
போகம் மகிழ்ச்சி விருத்திக்கு -அர்த்தகமான அம்ருதம் -என்று உத்கிருஷ்டர்கள் -ஆனந்திப்பிக்கும் மகா உபகாரகன் –
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்-தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–
கரும் தேவன் –கறுப்பே நிரூபனம் –எம்மான் -என் ஸ்வாமி
விருந்தாக இருக்கும் –கிருஷ்ணனுடைய -பரமபதம்தருபவனை விடாமல் பற்றிக் கொள்
திவ்ய விக்ரகம் -காட்டி என்னை அடிமை சாசனம் எழுதிக் கொண்ட ஸுலப்யன் –
அந்நிய பரத்தையாதல் -அயோக்கியன் நைச்சிய அனுசந்தானம் பண்ணி போகாமல்
போகத்தை மட்டுப் படுத்தி -பரிகரம் -பொறுக்க பொறுக்க -கோபிகளுக்கு தன்னை மறைத்தால் போலே

நித்ய சூரிகளுக்கு இனியனாய் வைத்து-கிருஷ்ணனாய் வந்து அவதரித்து-
நம்மையும் அவர்கள் நடுவே வைப்பானாய் இருக்கிறவனை-விடாதே காண் -என்று-மூன்று ஆகாரங்கள் –
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று –
நங்கள் போக மகிழ்ச்சிக்கு-மருந்தே -என்று –
உன்னுடைய அனுபவத்தால் எங்களுக்கு வரும் ஆனந்தத்தை-மேலும் மேலும் வளர்க்கின்றவனே என்று –

இப்படிச் சொல்லுகிறவர்கள் தாம் யார் என்னில் –
பெரும் தேவர் –
சம்சாரத்தின் சம்பந்தம் சிறிதும் இல்லாதாரான-நித்ய சூரிகள் –

குழாங்கள்-
அவர்கள்-கிண்ணகத்தில் இழிவாரைப் போலே-திரள் திரளாக ஆயிற்று இழிவது –

பிதற்றும் –
ஜன்னி ஜுரம் பிடித்தவர்களைப் போன்று-பலவாறாக கூப்பிடா நிற்ப்பார்கள் –
பிரான் –
அவர்களுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுக்கும் உபகாரகன் –

கருந்தேவன் –
காள மேகம் போன்று கரிய திவ்யமான வடிவை உடையவன் –

எம்மான் –
அவ்வடிவினைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்-
நித்ய சூரிகளுக்கு படிவிடும் வடிவினைக் கண்டீர்-எனக்கு உபகரித்து -என்றபடி-

கண்ணன் –
தன் நிலை குலையாமல் நின்று உபகரிக்கை-அன்றிக்கே-அவதரித்து வந்து உபகரிக்குமவன் –

விண்ணுலகம் தருந்தேவனை –
பரம பதத்தை தருவதாக இருக்கிற-சர்வேஸ்வரனை –
மேலே இருந்தார் -இறங்கி வந்தார் -தாழ இருந்தவரை உயர்த்தி தம்மிடம் சேர்த்துக் கொண்டார் -கிருஷி பலம் பெற்றார் –

சோரேல் கண்டாய் மனமே –
அவனை உடம்பு வெளுக்க பண்ணாதே காண் -நெஞ்சே-
இவன் விடுகையாவது-அவனுக்கு இழவு போலே காணும்-
அவன் செய்த கிருஷி பலித்தது இல்லையாமே-இல்லையாகில்
உலகிற்கு வேறுபட்ட அவனுடைய சிறப்பினை நினையாதே-சுலபன் என்று காற்கடை கொள்ளாதே காண் –

———————————————————————————-

மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5-

போக்யத்தை நிரூபகமாக உடையவன் -வை லக்ஷண்யம் -திருத்த துழாய் தரித்து -இன்றியமையாத அடையாளம்
-நெஞ்சே சிக்கென சொன்னால் போலே சிக்கென பற்று
மனமே யுன்னை வல்வினையேன் இரந்து-என்னிலும் முந்துற்ற நெஞ்சே -கிருபை பண்ண புகழ்வது போலே –
த்ரவ்யம் இந்திரியம் ஞானம் இல்லை -கத்தியே பழத்தை ஒழுங்காக நறுக்கு என்பதை போலே –
அடைய முடியாத பாவம் -நைச்யம் இல்லையே கண்கள் சிவந்து -பின் -விளம்பம் சஹியாத பாவம் -என்கிறார் -பிரபல பாவம் -சபல புத்தி –அர்த்தித்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்–கனகம் பொன்-திட்டமாகவே சொன்னேன் -எத்தை என்றால்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்-மாலை தரித்து -தன்னிலம்-திரு மார்பு -ஏறி -நிறம் -பெறுமே-
தாராயா– தண் துழாவ வண்டு உழுது வரை மார்பன் -சரிப்படுத்தி -பிராட்டி நித்ய வாசம் செய்ய
இனமேதும் இலானை அடைவதுமே-ஒப்பு இல்லாதவன் -வைலக்ஷண்யம் -கிட்ட வேண்டும் என்னும் இத்தை விடாமல் கொள்வாய்

மனமே அவனை விடாதே காண் -என்றார் மேல்-
அவ்வார்த்தையை ஒலக்க வார்த்தையாக-நினைத்திராதே காண்-என்கிறார் இப்பாசுரத்தில்

மனமே யுன்னை-
மோஷத்துக்கு காரணமாய் முற்பட நிற்கிற உன்னை அன்றோ –
பிற்பாடரைச் சொல்லுமாறு போலே இருக்க-நான் சொல்லுகிறது –பகவான் இடத்தில் பக்தி உனக்கு இயல்பாக இருக்க
என் செல்லாமையாலே சொல்லுகிறேன் அத்தனை அன்றோ -என்றது –
உன்னை இரக்க வேண்டும் என்று இரக்கிறேன் அல்லேன் –என் ஆசை மிகுதியினால் இரக்கிறேன் அத்தனை -என்றபடி –
முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -பெரிய திருவந்தாதி -1-என்று
நானும் காற்கட்ட வேண்டும்படி அனுபவத்திலே முற்பட்டு நிற்கிற உன்னை –

வல்வினையேன்-
பகவானை அடைவதை முறையாலே அடைவோம் என்று-இராதபடி பாவத்தைச் செய்தேன் –
உன்னை இரக்க வேண்டி இரக்கிறேன் அல்லேன் –என் ஆசை மிகுதியினால் இரக்கிறேன் இத்தனை –

இரந்து கனமே சொல்லினேன் –
உன்னை கால் பிடித்து உறுதியாகச் சொன்னேன் –
இரந்து சொல்லுகைக்கு -மணக்கால் நம்பியோடு ஒப்பார் காணும் –
கனம் -பொன் -சீரிய பொருளைச் சொன்னேன் -என்றபடி –உனக்கு மிக மேலான பொருளைச் சொன்னேன் என்க –

இது சோரேல் கண்டாய் –
இனி நானே -பகவான் இடத்தில் பக்தி கூடாது -இதனைத் தவிர வேண்டும் –என்று சொன்னாலும் நீ நெகிழ விடாதே காண்
சாயல் கரியானை -பெரிய திருவந்தாதி -14-
காந்தியால் கறுத்து-அறிவு கேடால் விஷப்பால் கொடுத்தாள் -அவன் திரு உள்ளம் அறியாமல் -அது போலே நெஞ்சே
-பகவத் விஷயம் அனுபவிக்கப் புகுந்து அழியாமல் -இரு –
பைத்தியமாக ஏதேனும் சொல்வேன் சொன்னாலும் கேட்க்காதே என்றவாறு

எதனை தான் நீர் இப்படி சோரேல் என்று சொல்லுகிறது -என்ன-
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல் –
எல்லை இல்லாத இனியனாவனை பற்றுதலை சோரேல் என்கிறேன் -என்கிறார் –
புனத்தில் மேவி இருப்பதான அழகை உடைய திருத் துழாய் மாலையை-உடையவன் ஆகையாலே ஒப்பு இன்றிக்கே இருக்கிறவனை
அத் தோள் மாலையை உடையனாகை அன்றோ அறப் பெரியன் ஆகையாவது-
ஒரு திரு முளைத் திரு நாளிலே -ப்ரஹ்மோஸ்தவம் – இப்பாட்டை அருளிச் செய்தது-
முன்னாள் -கையார் சக்கரத்துக்கு -ஆழ்வார் திருநாள் -–புறப்பட்டு அருளினபடி திரு உள்ளத்தில் கிடக்க
புனம் மேவிய பூந்தண் துழாய் அலங்கல் இனம் ஏதும் இல்லான் ஆகையாவது-நேற்றுப் புறப்பட்டு அருளின படி அன்றோ -என்று அருளிச் செய்தார் –
சேனை முதலியார் புறப்பாட்டை பெருமாள் புறப்பாடாக அருளிச் செய்தார் -நஞ்சீயர் என்ற படி -திருத்த துழாய் மாலை சூடி இருப்பதால் –
ஐப்பசி கார்த்திகை ப்ரஹ்மோத்சவம் இருந்து இருக்க வேண்டும் -ஆழ்வார் திருநாள் -மார்கழி மாசம் என்பதால் –
அடைவது சொல்லினேன் -இது சோரேல் கண்டாய் -என்று கூட்டி வினை முடிக்க –
அன்றிக்கே –
எதனை நீர் சொல்லுகிறது -என்ன-
இனம் ஏதும் இலானை அடைவது -என்று முற்றாக முடிக்கவுமாம் –இனமேதும் இலானை அடைவதுமே-

———————————————————————-

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6-

மூன்று கிரியைகள் பிராட்டிக்கு -ஒன்று ஆழ்வாருக்கு -மனம் உடைந்ததே
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஹேதுவான –ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் -அவளுக்கு வல்லபன் -அறிந்து மனம் இழந்தேன்
குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் -நிதானம் -சீதை -மேன்மைக்கும் எளிமைக்கும் –
அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்-பருவம் போக்யதை-ஆபரணங்களால் நெருங்கின திருத் தோள்கள் –
பரிஷ்வங்கம் சித்திக்க -தழும்பு -நாண் பட்டு இருக்க –
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே-அசுரர்கள் -பிரதி கூலர் -வெவ்விய போர்கள் -செய்வதும் –
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்-ஆச்ரித அர்த்தமாக -லஷ்மீ விசிஷ்டன் -அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி -ஆகாரத்ரயம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே-நினைந்து சிதிலம் ஆகா நின்றதே -நினைத்தேன் உடைந்தேன் –

தம்முடைய உபதேசம் பலித்து-இவ்விஷயத்தில் திரு உள்ளம் உருக் குலையா நின்றது –என்று இனியர் ஆகிறார்-

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் –
அணியார் மலர் மங்கை தோள் -அடைவதும்-மிகவும் அழகியதான பெரிய பிராட்டியார் தோளோடு கலப்பதும் –
அடைவதும் தோள் -என்றதனால்
அவன் தான் உலகமே உருவமாய் இருக்கும் வடிவினை கொண்டு-
இழிந்தாலும் தோளுக்கு அவ்வருகு போக மாட்டான் என்பதனைத் தெரிவித்தபடி –
அன்றிக்கே –
அணி ஆர் -என்பதனை மலர் மங்கைக்கு அடையாக்கி-
மார்வத்து மாலை -திருவாய்மொழி -10-10-2-என்கிறபடியே
திரு மார்புக்கு எல்லாம் தானே ஆபரணமாய் போரும்படி இருப்பாளாய்-
இனிமையாலே குறைவற்று இருக்கிறவள் தோளோடு ஆயிற்று அணைவது என்று பொருள் கூறலுமாம் –
இயம் சீதா -பிறப்பு -மம சுதா -சக தர்ம சரிதவ மூன்றும் போலே மலர் -மங்கை -அணியார் -மூன்றும் –

மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே –
அசுரர்க்கு வெம்போர்களே -மிடைவதும்-
இதனால் அவள் தோளை அணைவதற்கு இடும் பச்சையை-தெரிவித்த படி –
தம் த்ருஷ்டா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீனாம் ஸூகா வஹம்-பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பார்த்தாராம் பரிஷ்ச்வஜே-ஆரண்யம் -30-39-
பெருமாளை நன்றாக தழுவிக் கொண்டாள் சீதா பிராட்டி போலே-அடியார்கள் உடைய பகைவர்களுக்கு வெம்போர்களே நெருங்கச் செய்தும்
மிடைதல் -நெருங்குதல் -என்னுதல்
அன்றிக்கே
அவர்களை முடிக்கும் விரகினையே -எண்ணா நிற்கும் -என்னுதல்-

கடைவதும் கடலுள் அமுதம் –
பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்கும் அமுதம் கொடுக்க கடைவதும் -என்னுதல்
பெரிய பிராட்டியாரை பெறுதல் நிமித்தம் கடையும்படியைச் சொல்லுகிறது -என்னுதல்
அழகோடு கலத்தலைச் சொல்லிற்று –
அதற்க்கு இடும் பச்சையை சொல்லிற்று –
அவளைப் பெருகைக்கு முயற்சி செய்த படி சொல்லிற்று –
இவர் திரு உள்ளம் உடைகுலைப் படுகைக்கு காரணங்கள் இவை –
அடைந்த படியால் மிடைந்த படியால் கடைந்த படியால் ஒரு மடைப் பட உடைந்ததே

என் மனம் உடைவதும் அவற்கே யொருங்காகவே –
என் மனம் ஒரு மடைப்பட-உடைகுலைப் படா நிற்பதும்-இந்தவிதமான செயல்களை உடையவனுக்கு –
அவன் பனிக் கடலை கடைய-இவர் மனக்கடல் உடையப் புக்கது
கடைவதும் கடல் –என் மனம் உடைவதும் –
விரகராய் இருப்பார் -கோழை களாய் இருப்பார் இடத்தில்-பொருளை வாங்க நினைத்தால்
முந்துற மிடுக்கராய் இருப்பாரை நெருங்கி வாங்கவே-இவர்கள் தாங்களே கொடு சென்று கொடுப்பார்கள் அன்றோ –
அப்படியே
அவனும் மிக பெரியதான கடலை-உலக்கை வீடு நகம் இட்டு நெருக்கி-மந்த்ர பர்வம் உலக்கை போலே –
அதன் நல் உயிரை வாங்க-இவருடைய திரு உள்ளம் உடையத் தொடங்கிற்று –
பிராட்டி சீல குணத்துக்கு நிதானம் காரணம் என்றார் ஆயிற்று –

————————————————————————————–

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-

பிரபல அநிஷ்ட -பஞ்சகன் -வார்த்தைக்கும் பிராப்ய பூமி
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்-பொருந்த விடப்பட்ட -ஒரே ஆகம் சேர்ந்த -உளைந்த அரியும் மானிடமும் ஒன்றாகத் தோன்ற –
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை-அத்விதீயமான ஆகம் -வளைந்த துரு உகிரால்
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்–மா க வைகுந்தம் காண்பதற்கு –
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே-ஏகப் பிரகாரமாக -எண்ணும்-

அவன் நித்ய வாஸம் செய்கிற-பரம பதத்தை சென்று காண வேண்டும்-என்னா நின்றது -என் நெஞ்சு-என்கிறது

ஆகம் சேர் நரசிங்கமதாகி –
நர வடிவும் சிங்க வடிவும்-சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் போலே பொருந்திய-நரசிங்கமாய்
அன்றிக்கே
நரசிங்கத்தின் உடைய இவர் நெஞ்சிலே சேர்ந்த படி -என்னுதல் -என்றது –
ப்ரஹ்ம தண்ட பிரகாசானாம் வித்யுத் சத்ருச வர்ச்சசாம்-ஸ்மான் ராகவ பாணாநாம் விவ்யதே ராஷசேச்வர-யுத்தம் -60-3-
இராகவன் உடைய பாணங்களை நினைத்துக் கொண்டு -என்கிறபடியே-
மறக்க ஒண்ணாதபடி திரு உள்ளத்திலே சேர்ந்த படியை சொன்னவாறு
அன்றிக்கே
இரண்டு வடிவு களையும் சேர்த்துக் கொடு வந்து தோன்றின போது-ஸ்தம்பே சபாயாம் -தோன்றின போது –
இவர் மனத்துக்கு இனியதாய் சேர்ந்து இருந்த படியைச் சொன்னவாறுமாம் –

ஓர் -ஆகம் –
ஒப்பற்றதான-முரட்டு உடம்பு

வள்ளுகிரால் –
கூரிய நகத்தால் –
அன்றிக்கே
வளைந்த நகத்தால் -என்னுதல் –

பிளந்தான் உறை-
வருத்தம் இன்றியே கிழித்துப் பொகட்டவன்-நித்ய வாஸம் செய்கிற –

மாகவைகுந்தம் காண்பதற்கு –
அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது-
மா கம் -பரம ஆகாசம் என்னக் கடவது அன்றோ –மஹத்தான கம் -பரம ஆகாசம் -பரமபதம்

என் மனம் ஏகம் எண்ணும் –
என்னுடைய மனம் ஆனது-
எப்போதும் ஒக்க உச்சி வீடு விடாதே -இதனையே-எண்ணா நின்றது –

இராப்பகல் இன்றியே –
இரவில் ஒரு காரியமும்-பகலில் ஒரு காரியமுமே அன்றோ உலகத்தார்க்கு இருப்பது-
இவர்க்கு-எல்லா காலங்களிலும்-இதுவே ஆயிற்று –
ஸ்மா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர -33-17
நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய
மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று
பிராட்டி திரு அயோத்யையை நினைத்தாப் போலே ஆயிற்று
இவர் திரு உள்ளத்துக்கு பரம பதம் சொந்த தேசமாய் இருக்கிறபடி-

————————————————————————————–

இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8-

ஆசன்னமாக அவன் வார்த்தைக்கும் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -அவன் வார்த்தைக்கும் அபீஷ்ட திவ்ய தேசம் –
நெஞ்சை சேவிக்க ஸூரி சாம்யம் ஆவோம்
இன்றிப் போக இருவினையும் கெடுத்து–வாசனை ராசிகளும் இல்லாமல் நசிப்பித்து –
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்-விட்ட குறை தோட்ட குறை இல்லாமல் -பிரித்து அறியாத படி அசித்துடன் ஒன்றி
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து–அவசர பிரதீஷனாக நின்று -பகவல் லாபார்த்தியாக -திரு வேங்கடம் தன்னுள் கொண்ட சிலாக்கியம் நீண் நிலம்
சென்று தேவர்கள் கை தொழுவார்களே-தொழுதால் நித்ய ஸூ ரிகளை ஒப்பார்கள் –

இச் சரீர சம்பந்தம் அற்றால் சென்று அனுபவிக்கைக்கு -பரம பதம் வேண்டுமோ-
இச் சரீரத்தோடு இருந்து கொண்டே அனுபவிக்கத் தகுந்த-திருமலை இம் மண் உலகிலே உள்ளது அன்றோ –
ஆனாலும் நமக்கு திருமலையோடு பரம பதத்தோடு-வாசி அற்றதே அன்றோ –என்கிறார்

இன்றிப் போக இருவினையும் கெடுத்து –
இருவினையும்-இன்றிப் போக -கெடுத்து –
நல்வினை தீ வினைகளான-கருமங்களானவை-வாசனையோடு போகும்படி செய்து –
தானே போக்கிக் கொள்ளப் பார்க்கும் அன்றே அன்றோ-சிறிது கிடக்கப் போவது –

ஒன்றி யாக்கை புகாமை –
பின்னையும் ருசி வாசனைகள் கிடக்குமாகில்-அசித் தத்வத்தொடு சென்று கலசி-
வேறு ஒரு சரீரத்தை அடைந்து-அதனால் வரும் துயரங்களை அனுபவிக்க வேண்டி வரும் அன்றோ –அது செய்யாமை –

உய்யக் கொள்வான் -நின்ற வேங்கடம் –
உயிர் அளிப்பான் -திரு விருத்தம் -1- என்கிறபடி-எல்லாரையும் காப்பாற்றுவதற்காக காலத்தை-
எதிர் நோக்கினவனாய்க் கொண்டு-நிற்கிற திருமலை –

நீணிலத் துள்ளத்து –
நீள் நிலத்து உள்ளது –
சிறப்பு பொருந்திய பூமியில் உள்ளது-
திருமலையை உடைத்தது ஆகையாலே உளதாய-பெருமையை நோக்கி -நீள் நிலம் -என்கிறார் –

அத்தால் பெற்றது என் –
சென்று தேவர்கள் கை தொழுவார்களே-
சென்று கை தொழுவார்கள் தேவர்கள் –
அவ்வளவு தூரம் கால் நடை தந்து போக வல்லார்-புண்யம் மிக்கவர் அன்றோ
நதே மனுஷ்யா தேவா தேய சாரு சுப குண்டலம்-முகம் த்ருஷ்யந்தி ராமஸ்ய வர்ஷே பஞ்ச தசே புன -அயோத்யா -64-69-
ஸ்ரீராமபிரான் உடைய அழகு பொருந்திய குண்டலங்களோடு கூடின
திரு முகத்தை பதினைந்தாம் ஆண்டில் மீண்டும் எவர்கள் பார்ப்பார்களோ
அவர்கள் மனிதர்கள் அல்லர் -அவர்கள் தேவர்கள் -என்று சக்கரவர்த்தி கூறினால் போலே-
அவனுடைய சீலம் முதலான குணங்களை நினைத்து சொல்கிறார்-சேர்ந்தே துன்பம் -ஸுசீல்யம் படுத்தும் பாடு ஆழ்வாருக்கு –
அன்பினாலே மூடப் பட்டார்க்கு-இவ் உலகத்தோடு இவ் உலகத்தோடு-வாசி அற்றதே அன்றோ -எட்டாமைக்கு –
திருப் புளிங்குடியும் திருமலையும் பரம பதமும் இவருக்கு ஒரே மாதிரி தானே இதனால் –

——————————————————————————————-

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-

ஆச்ரயண உத்தியோகமும் அதிகம் -ஸூ பிரயத்தனம் கூடாதே
சீல குணம் அனுசந்தித்து -ஒரு பிரவர்த்திகளில் அடியேன் ஷமர் ஆகிலேன் நான் -இருவருக்கும் உள்ள பொருத்தம்
-எடுத்தால் அவனுக்குத் தாங்காது -இவருக்கும் இயலாது –
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு–சிலாக்கியமான அர்க்யாதி நீர் -தீபம் தூபங்களைக் கொண்டு -சீலம் பார்த்தால் –
எழுது மென்னுமிது மிகை யாதலில்–உத்தியோகித்தலும்-மிகை -ஆதலால் -இத்தையே மிகையாக கொண்டதால்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்-குற்றம் யில்லாத -ஆராதனம் ஸுலபன் என்பதால் -ச்வா பாவிக பிரத்தை புகழ்
-இத்தை நித்ய சம்ச்லேஷம் கொண்டு திரு அநந்த ஆழ்வான் இடம் -காட்டி அருளி
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–அங்குத்தைக்கு செய்வது ஒன்றும் அறியேன் –

இப்படி சுலபனான உன் திருவடிகளிலே கிட்டப் பெற்றாலும்-அடைய வேண்டும் என்று நினைத்த அளவிலேயே
அதனைக் கொண்டு பேர் உவகையன் ஆகின்ற-உன் சீல குணத்தை நினைத்து
யாதாயினும் ஒரு அடிமை செய்வதற்கு இயலாதவனாய் இருக்கின்றேன் –என்கிறார் –
அன்றிக்கே –
இங்கனே மூன்று திருப் பாசுரங்களாலே -8/9/10/-தம்முடைய தகுதி இல்லாமையைச் சொல்லுகிறார்-என்பாரும் உளர்-
அது இல்லை அன்றோ -கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழி பாடிய பின்பு -இவர்க்கு-
அன்றிக்கே –
இத் தலையாலே ஒன்றினை விரும்பி பெறுதல் மிகையாம்படி-இருக்கிறவனுடைய உபாயத் தன்மையைச் சொல்லுகிறார்-என்பாரும் உளர்
இவை எல்லாம் அல்ல –
அவன் திரு முன்னர் முறையாக அடிமை செய்ய-ஒண்ணாத படி அழிக்கும் அவனுடைய
சீல குணத்தைச் சொல்லுகிறது -என்று-நம் உடையவர்கள் அருளிச் செய்வார்கள் –

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுது மென்னுமிது மிகை –
சிறந்த பூக்கள் முதலான-சாதனங்களைக் கொண்டு-அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் என்றால்
இது மிகையாம் படி அன்றோ-உன் சீல குணம் இருப்பது
அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவனே ஜநாத்
அந்யத் குசல சம் பிரச்நாத் நசேச்சதி ஜனார்தனா -பாரதம் உத்தியோக பர்வம் -87-13-சஞ்சயன் கூற்று
நிறைந்து இருக்கிற தண்ணீர் உடைய பூர்ண கும்பத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றினையும் அவன் விரும்புவதில்லை -எண்ணப் படுமவன் அன்றோ அவன்

யாதலில் –
இப்படி சீல குணத்தால் மேம்பட்டவன் -ஆகையாலே –

பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்-
வருந்தி அரிதில் ஆராதிக்கத் தக்கவன் -என்கிற குற்றம் இன்றிக்கே
இயல்பாகவே அமைந்த எளிதில் ஆராதிக்க தக்க தன்மை உடையனாய்-அதற்கு அடியாக
திருவநந்த ஆழ்வான் உடன் கலந்து இருப்பவனே –

தழுவுமாறு அறியேன் உன தாள்களே-
உன் திருவடிகளை அணையும் விரகு அறிகிலேன் –
வலி இல்லாமையாலே முதலிலே கிட்டுதல் அரிது-கிட்டினாலும்
சீலத்தின் மேன்மையை நினைத்தால்-ஓர் அடிமை செய்ய இயலாதவனாக இருக்கிறேன் –

—————————————————————————

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-

பிரயோஜ நாந்த பரர்களுக்கும் -நான்முகனுக்கும் -பரம சிவன் -தேவர்களுக்கும் முகம் கொடுக்கும் சீலம் வாசா மன கோசாரம் அல்லன்
தாள தாமரையான் உனதுந்தியான்-நான்முகனும் உன் நாபி கமலத்தில்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்-ருத்ரன் ஒரு பக்கம்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்-ஸூ ரிகளைப் போலே சேஷ பூதர்கள்-
நாளும் என் புகழ் கோ உனசீலமே-என்ன வென்று சொல்லி புகழ்வேன் –

அடிமையின் இனிமையை அறியாத-பிரமன் முதலாயினோர்கட்கும்
பற்றப் படுமவனாய்-இருக்கிற உன்னுடைய சீலம்-என்னால் புகழ்ந்து முடிக்க ஒண்ணாது -என்கிறார்

தாள தாமரையான் உனதுந்தியான்-
தாமரைப் பூவினை பிறப்பிடமாக உடைய பிரமன்-உன் திரு நாபியைப் பற்றி வாழ்கிறான்
தாமரைப் பூவிலே பிறந்தோம் நாம் -எண்ணும் செருக்கினை உடையவனுக்கு-அன்றோ உடம்பினைக் கொடுத்தது –என்கிறார்

வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்-
ஒளியை உடைத்தாய்-தொடங்கின கார்யத்தை முடிய நடத்த வற்றான மழுவினை உடைய சிவன்-
உன் திருமேனியில் ஓர் இடத்தைப் பற்றிக் கொண்டு வாழாநின்றான்
வேறு ஒருவரையும் அடைகலமாகப் பற்றாமையை-தெரிவிக்கிற-தொடை ஒத்த துளவமும் கூடையுமாக -புகுந்து இருக்கிறான் அல்லனே –

ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள் –
அடியாராய் அடைகின்ற தேவர்களும்-நித்ய சூரிகள் செய்யும் அடிமையை அன்றோ-
மரணம் இல்லாத ஒப்புமையாலே-ஈச்வரோஹம் -என்று இருக்குமவர்கள் செய்கிறது –

நாளும் என் புகழ் கோ உனசீலமே –
காலத்தை முழுதும் ஒரு போகி ஆக்கி-புகழுகைக்கு எனக்கு உறுப்பு ஆக்கினால் தான்-
என்னாலே புகழ்ந்து தலைக் கட்டலாய் இருந்ததோ-உன்னுடைய சீல குணம்-
உன சீலம் -நாளும் -என் புகழ்கோ

———————————————————————————

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11

பரமபத பிராப்தி -கிட்டும் என்று அருளிச் செய்கிறார்
சீலம் எல்லை இலான் அடிமேல் அணி-அபரியந்தமான சீலம் உடையான் திருவடிகளில்
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்–அணியப்பட்ட தர்ச நீயமான-திவ்ய தேசம் –
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்-சப்த மாலை -சொல் செறிவாலே புனையப்பட்ட -சப்த அர்த்த முகத்தால் அன்வயம்
-பாராயணம் -அர்த்தம் சிந்தித்து ஏதாவது ஒன்றில் அந்வயித்தால் –
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே-ஸ்வபாவம் -வைகுந்தம் பெறுவது -பிரபாவம் இல்லை –
ஸ்வ பாவம் -இயற்க்கை -ஜகத் ரக்ஷணம் -ஸ்ரீ யபதித்தவம்-இவை எல்லாம் ஸ்வ பாவம் – வாத்சல்யாதிகள் பிரபாவம் என்றவாறு –

நிகமத்தில்
இத் திருவாய் மொழி கற்றார்-பரம பதத்தே செல்லுதல்-ஆச்சர்யம் அன்று –தக்கதே –என்கிறார் –

சீலம் எல்லை இலான் அடிமேல் –
எல்லை இல்லாத சீல குணத்தை உடையவனுடைய-திருவடிகளிலே –
இதனால்
இத் திருவாய்மொழி சொல்லப் பட்டது -சீல குணத்தின் மேம்பாட்டை ஆயிற்று-
அதனை முடித்துக் காட்டுகிறார் -சீலம் எல்லை இலான் -என்று

அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை-
அழகு மிக்கு இருந்துள்ள திரு நகரியை உடைய ஆழ்வார்
அன்றிக்கே
கோலம் நீள் என்ற சொற்கள் இருப்பதினாலே-
அணி -என்பதனை
அடி மேல் அணி மாலை -என்று-மாலைக்கு அடையாகக் கோடலுமாம் –
குருகூருக்கும் -திருவடிக்கும் -சொல் -மாலைக்கும் -திருவடி மேல் அணிவிக்கப் பட்டது என்றுமாம் –

ஆயிரத்துள் இவை பத்தினின் பாலர் –
இப்பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது-
இப்பாசுரங்களை ஒருகால் சொல்லுதல்-
இவற்றைப் பாடம் செய்தல்-
இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் –
என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –

வைகுந்தம் ஏறுதல் பான்மையே –
பரம பதத்தில் செல்லுதல் இயல்பாகவே இருக்கும் –
யாங்கனம் -எனின்
மாக வைகுந்தம் காண்பதற்கு ஏகம் எண்ணினார் இவர் –
இப்பாசுரங்களில் யாதானும் ஒரு வகையில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு-
பிரார்த்தித்துப் பெற வேண்டுவது தானாகவே கிடைக்கும் என்பதாம் –
தமப்பன் செல்வம் மகனுக்கு-தாய பாகமாக அடைய வேண்டியதாகவே-இருக்கும் அன்றோ –

———————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

நாராயணே-அனுபவ பூவ-
நிஜ சீலவத்தாம் -நிரவத்யம் ஆவிஷ்க்ருதாம் –
மை நாராயணே சதி-நான் நாராயணனாக இருக்கும் போது கவலை பட வேண்டாமே -உபாயம் உபேயம் வத்சலன் வியாபகம் ஸ்வாமி
ஸூ பரார்த்த சிந்த்தா -தவ நார்ஹா
இது பஹுமான பாஜா விபு நா நார்ஹா தவ -ராஷா பரம் உமக்கு பொருந்தாதே –
நாம் இரந்து கொடுப்போம் மணக்கால் நம்பி போலே –

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ந ஏக
சீல ரத்நாகரம் -ரத்னங்களுக்கு இருப்பிடம் -கடல் -சமுத்திரைவ காம்பீர்யம் -சீலம் ஒன்றே இருக்கும் -அச்வ
ந ஏக ஸ்ரீ நாம வாத்வாத் –
ஏக -ந ஏக -அப்ரதிமஸ்ய ஸ்வ பாவம் -அ சித்தும் சித்தும் -உண்டு –விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சொல்லும் திரு நாமங்கள் –
ஜகத் உதய ஸூ ஸம்ஸ்தானத்தியை
ஹரித்வாத் -பாபங்கள் ஹரிப்பவன் மருந்து
தானாத் மோக்ஷஸ்ய
ஹேய பிரதிபட -நிகர் அற்றவன் -அடையாளங்கள் இரண்டிலும் –
கடக ஸ்ரேணி சம்பாதிமத்வத்
பிரகலாத ஆஹ்லாதகத்வாத் -குளிர்ச்சி கொடுத்த பலன் -அநிஷ்ட நிவாரணம் பாசுரத்தில் –
விருக்ஷ கிரி கடகே சன்னிஹிதத்வாத் -பாம்பணை பள்ளி -வேங்கடம் ஆதி சேஷன் சேர்த்து
சர்வா தேகே ஸ்வ அங்கதானாத் –

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 83-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்து மை—————83-

———————————————————–

அவதாரிகை –

இதில்
சீல குணத்திலே ஆழம் கால் பட்டு ஆழ்வார் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உம்முடைய பேற்றுக்கு நீர் பிரார்த்திக்க வேணுமோ –
நாமே பிரார்த்திதுச் செய்ய வேண்டும்படி அன்றோ
நமக்கு யுண்டான நாராயணத்வ பிரயுக்தமான-ரக்த ஸ்பர்சம் –
ஆனபின்பு நாமே உம்முடைய சர்வ அபேஷிதங்களையும்-செய்யக் கடவோம் -என்று
அவன் அருளிச் செய்ய
தனது பெருமை பாராதே
எனது சிறுமை பாராதே
இப்படி அருளிச் செய்வதே
இது ஒரு சீலம் இருக்கும் படியே -என்று
அவனுடைய சீல குணத்திலே வித்தராகிற
ஓர் ஆயிரத்தில் அர்த்தத்தை
ஓரா நீர் வேண்டினவை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை-

——————————————————————————————

வியாக்யானம்–

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன் –
ஓரா -ஓர்ந்து
அது வேணும் இது வேணும் என்று ஆராய்ந்து –
நீர் அர்த்தித அவை உள்ளதெல்லாம்-என்னுதல்
அன்றிக்கே
நீர் அர்த்திதவற்றை எல்லாம்
இன்னது உபகரிக்க வேணும்
இன்னது உபகரிக்க வேணும்
என்று நாம் நிரூபித்து -என்னுதல்
இப்படி பந்து க்ருத்யமாய் உள்ளவற்றை எல்லாம்-நாமே அர்த்திகளாய் செய்கிறோம் –

அதுக்கு உடலாக –
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக் காட்ட-
ராமோ நாராயண ஸ்ரீ மான் -என்னும்படி
சர்வ வித பந்துத்வமும் நடத்தும் படி
நான் நாராயண சப்த வாச்யன் அன்றோ -என்று
அத்தாலே
பெரிதான தன் சர்வ வித பந்துத்வத்தைக் காட்ட -அத்தை –
ஓர் ஆயிரம் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு உடையன்
நாராயணன் நாங்கள் பிரான் அவனே –என்று அனுசந்தித்து –

அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் –
அதாவது –
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -என்றும்
அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -என்றும்
விண்ணுலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே -என்றும்
இனமேதுமிலானை அடைவதுமே-என்றும்
என் மனம் உடைவதும் அவர்க்கே ஒருங்காகவே -என்றும்
ஆகம் சேர் நரசிங்கமதாகி -என்றும்
நின்ற வேங்கடம் நீண் நிலத்து உள்ளது -என்றும்
தொழுது எழுதும் என்னுமிது மிகை -என்றும்
தாள தாமரையான் -என்று தொடங்கி-நாளும் என் புகழ் கோ சீலமே -என்றும்
சீலம் எல்லை இலான் -என்றும்
இப்படி குணவான் என்னும்படியான —சீல குணத்திலேஆழம் கால் பட்டு
அருளிச் செய்த ஆழ்வார் அருள் உண்டு -கிருபை –

அந்த கிருபை –
மாட்டி விடும் நம்மனத்து மை –
நம்முடைய அஞ்ஞானத்தை-நிச்சேஷமாகப் போக்கும் –

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று
பிற்காலிக்கிற கலக்கத்தை
சீல குண பிரகாசத்வத்தாலே-சேஷியாதபடி-நசிப்பிக்கும் –
சாமான்யமான அஞ்ஞானம் ஆகவுமாம்-

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: