பகவத் விஷயம் காலஷேபம் -170- திருவாய்மொழி – -9-1-1….9-1-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

ஒன்பதாம் பத்து -பிரவேசம் –
முதல் பத்தால் -பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் – களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது-பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார்
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே -என்றார் –
ஆறாம் பத்தால் -விரோதிகளைப் அளிக்கும் தன்மையனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் -இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்-தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிற படியைக் கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே-தக்த பட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும்-நசை அறாத படியாலே -என்று பார்த்து -அவற்றில் ஒரு நசை இல்லை -என்றார்
இப்படி நசை அற்ற பின்பும் பாது காவாமல் ஒழிவான் -என்-என்று ஐயம் கொள்ள
நான் நாராயணன்-எல்லா ஆற்றலோடும் கூடினவன்-உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன் –என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணங்களிலே ஆழம் கால் படுகிறார்-இந்த ஒன்பதாம் பத்தில் –

————————————————————————————————-

கொண்ட பெண்டிர் -பிரவேசம் –

மேல் திருவாய் மொழியிலே
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலை எல்லையாக உடைய-தனக்கு மேல் ஓன்று இல்லாததான பேற்றினை
யாதொரு தடையும் இல்லாதபடி அவன் காட்டிக் கொடுக்க
மிக்க ப்ரீதியோடே-காட்டிக் கொடுத்த அந்த பேர் உபகாரத்தைக் கூறிக் கொண்டு
சயமே அடிமை தலை நின்றார் -என்றும்
நீக்கம் இல்லா அடியார் -என்றும் –
கோதில் அடியார் -என்றும்-பாகவதரை விரும்பினாராய் நின்றார் –
ஆப்பான் திருவழுந்தூர் அரையர் -தாம் ஆஸ்ரியராய் அடைந்ததும் திருவாய்மொழி கேட்டதும்-ஆழ்வான் உடன் அன்றோ –
சயமே அடிமை தலை நின்றார் -என்றது -ஸ்ரீ பரத ஆழ்வானை போல்வாரை –
நீக்க மில்லா அடியார் -என்றது -இளைய பெருமாளை போல்வாரை –
கோதில் அடியார் -என்றது -ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் போல்வாரை காணும்-என்று ஆழ்வான் பணித்தாராக பணிப்பர் –
இப்படிப் பட்ட -பாகவதர்களுக்கு அடிமை பட்டு இருத்தல் ஆகிற பேற்றின் எல்லையை நமக்குத் தந்த-
அவனே இயல்பாகவே அமைந்த நல்ல எண்ணத்தை உடையவன் –
அல்லாதார் பக்கல் தோன்றுகிற நல்லெண்ணம் ஒரு காரணத்தைப் பற்றி-வருகிற நல்லெண்ணம் -ஆகும்-என்று
பிராப்ய ஆபாசங்களைத் தவிர்த்து-அவனே பிராப்யன் என்றும் –
பிராபக ஆபாசங்களைத் தவிர்த்து -அவனே பிராபாகன் என்றும்
அறுதி இட்டு பிறந்த லாபத்தாலே உண்டான உவகையாலே-மக்களைக் குறித்து
நீங்கள் ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களான மற்றோரை விடுத்து-இயல்பாகவே உள்ள பந்துவான அவனையே பற்றி-
உஜ்ஜீவிக்க பாருங்கோள்-என்று-பரோபதேசத்திலே மூளுகிறார்

சர்வேஷாம் ஏக லோகாநாம் பிதா மாதா ச மாதவ-கச்சத்வம் ஏனம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பாரதம் –
உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் திருமகள் கேள்வரே தந்தையும் தாயுமாக இருக்கிறார் -ஓர் ஆடவர் ஏறே –
காப்பவரான அவரையே சரணமாக சென்று அடைமின் –
பூதாநாம் ய அவ்யய பிதா – சஹஸ்ரநாமம் –
மற்றையோர் தாய் தமப்பன் என்ற பேரே-நாலு நாள்கள் இருந்து மணல் கொட்டகம் போலே அழிந்து போவார்கள் –
அங்கன் இன்றிக்கே -அழியாதே என்றும் ஒக்கக் காப்பாற்றும் தமப்பன் அவனே ஆயிற்று –
தனக்கு நலத்தை கூறிய விபீடணனை –
அன்யஸ்து ஏவம் விதம் ப்ரூயாத் வாக்யம் ஏதத் நிசாசர-அஸ்மின் முகூர்த்தே நபவேத் த்வாம் து திக் குலபாம்சனம் – யுத்த -16-15-
அரக்கர் குலத்துக்கு குறையை விளைவித்த உன்னை விடுகிறேன் -என்று
புறப்பட விட்டான் அன்றோ ராவணன் –
அவன் தம்பியை ஒழியச் செல்லாது என்றார் அன்றோ -பெருமாள் –
பெற்ற தமப்பன் பகையாக அவனிலும் அண்ணியனாய் வந்து உதவினான் அன்றோ பிரகலாதனுக்கு
மகாராஜர் தமையனால் நோவு பட தனிமையில் வந்து உதவினார் அன்றோ பெருமாள் –
மாதா பிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மா-தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சுந்தர -38-33-
அந்த காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும்-விடப்பட்டவனாய் மூன்று லோகங்களிலும் நன்றாக திரிந்து
அந்த பெருமாளையே சரணம் அடைந்தான் -என்கிற படியே-ஸ-நீரிலே புக்கு அழுந்துவாரைப் போலே
தாரகர் ஆனவரே பாதகராய்-அம்பு தொடுக்கும் படி சூழ்த்துக் கொடு நின்ற அவன்
–மற்றைய பதங்கட்கு முன்பு கூறியது போன்று கொள்க –பயிலும் சுடர் ஒளி -நம்பனை பாசுர வியாக்கினத்தில் கண்டு கொள்வது -என்றவாறு –

த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க
அவர்களை ஒழிய சேயனான கிருஷ்ணனை நினைக்க –
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி -பாரதம் -உத்தியோக பர்வதம் -58-22-
அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று
த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை கோவிந்தா என்று அழைத்து அழுதாள் –
எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று
என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –
அர்ஜுனன் என் கார்யங்களை என்னால் செய்து கோடல் அரிது-என்று சோகிக்க
உன்னைத் தொற்றி வருவது ஓன்று பேற்றுக்கு உடலாம் அன்றே அன்றோ உனக்கு சோகிக்க வேண்டுவது –
உன்னுடைய எல்லா பாரங்களையும் நம் தலையிலே போகட்டு -நாமே கடவோம் -என்று இரு –
உன்னுடைய பகைக் கூட்டத்தை எல்லாம் நாமே போக்கித் தருகிறோம் -என்றான் அன்றோ –
இப்படிகளாலே
அவனே நிருபாதிக பந்து-அவனையே பற்றப் பாருங்கோள் -என்று-தாம் அறுதி இட்ட அர்த்தத்தை
தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுவதாக-பரோபதேசத்தில் மூளுகிறார் –

—————————————————————————————–

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்று பிரபன்ன பவித்ராணாம் -பிரபந்தத்தில் சொன்னோம் –
உபாதையால் வந்த பந்துக்கள் -தாரக புத்ராதிகளால் ஒரு பிரயோஜனம் இல்லை -அசேஷ ஜகத்தையும் திரு வயிற்றில் வைத்து
ரஷித்து அருளியவனே ரக்ஷகன் கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்-எல்லாமாகக் கொண்ட பெண்டிர்
-பிறரும் -மித்ரர் வேலைக்காரர் போல்வாரும் கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை-நம் கையில் பிரயோஜனம் பெற்று –
கையில் இத்தைக் கண்டால் வருவார்கள் -இதை தவிர ஏக தேசமும் காதல் இல்லை –
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்-சர்வ ரக்ஷகன் -எல்லா வற்றையும் பிரளயம் கொள்ளாத படி உபகரித்தவன் –
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே-இவனுக்கு சேஷ பூதராய் உஜ்ஜிவிக்கலாம்
-சம்பத் மட்டும் கண்டு வருபவர்கள் ரக்ஷகர் அல்லர் –

ஒரு காரணம் பற்றி வந்த மனைவி புத்திரர்கள் முதலானவர்களால் ஒரு பிரயோஜனம் இல்லை –
இயல்பாகவே பந்துவாய் இரா நின்ற சர்வேஸ்வரனே ஆபத்துக்கு துணைவன் –
அவனையே பற்றி உஜஜீவியுங்கோள் -வேறு துணை இல்லை -என்கிறார் —
சர்வ சாதாரண சம்பந்தம் -சாமான்யம் -சம்பந்தம் உண்டு என்று ஏற்றுக் கொள்ளாமையாலே ராவணன் ஹிரண்யன் –
அடியார்க்கு பிரதி கூல்யம் செய்யும் பொழுது தானே நலிகிறான் -மாறிப் பிறந்தாலாவது -என்று மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுத்து அருளுகிறார் –
பகவத் அனுக்ரகத்துக்கு பாத்திரமாக தகுதி -அனைவருக்கும் உண்டே -ருசி இருந்தால் உஜ்ஜீவிக்கலாம் —

கொண்ட பெண்டிர் –
தான் தன் மனத்திலே உறவாக நினைத்து இருக்கும் மனைவி –
அன்றிக்கே
ஒரு காரணம் இல்லாமல் வந்தவள்
அன்றிக்கே
பொருள் முதலான காரணங்களாலே கொள்ளப் பட்ட மனைவி -என்னுதல்-வரன் கொடுக்கும் தக்ஷிணை என்றபடி –
அன்றிக்கே –
தாய் தந்தையர்களை செங்கற்சீரை கட்ட விட்டு-தான் ஈட்டிய செல்வம் முழுதினையும் கொடுக்கும் படி-
தஞ்சமாக நெஞ்சிலே கொண்ட மனைவி -என்னுதல் –
அன்றிக்கே
ஆச்சார்யனும் பரம்பொருளும் செல்வமும் முதலானவைகள் எல்லாம்-இவளே ஆக கொண்ட பெண்டிர் -என்னுதல் -என்றது-
இவள் இருப்பதனால் அல்லவா எல்லாம் -என்று இருக்கையைத் தெரிவித்த படி –
இனி -கொண்ட -என்பதனை மக்கள் முதலாயினாருக்கும் கூட்டிப் பொருள் கோடலுமாம் –
பந்துக்களாக தான் நினைத்து இருக்கும் மக்கள் முதலாயினோர் -என்றபடி-

மக்கள் –
அப்படிப்பட்ட அவளுடைய இளமையை அழிய மாறி பெரும் பிள்ளைகள் –

உற்றார் –
தனக்கும் ஒத்தவர்கள் என்று ஆதரித்த சம்பந்திகள் –

சுற்றத்தவர் –
அவர்கள் மதிக்கும் படியான தாயாதிகள் –

பிறரும் –
மற்றையோரும் -முன்பு சொன்னவர்களுக்கும் இவர்களைக் காட்டிலும் வாசி பெரிது இன்று -என்றபடி –
அன்றிக்கே
பிறரும்-நட்பினர்-பணியாள்கள்-முதலாயினோர் -என்றுமாம் –

கண்டதோடு பட்டது அல்லால் –
இவனைக் கண்ட போது சிநேகிக்கும் அது ஒழிய -என்னுதல் –
கையிலே பொருள் கண்ட போது அதனை நோக்கி ச்நேகிக்குமது ஒழிய -என்னுதல் –

காதல் மற்று யாதும் இல்லை –
பிரயோஜனம் கண்ட போது உடன்படுமது ஒழிய வேறு வகையில் சிறிதும்
சிநேகம் உடையார் அல்லர் -என்னுதல்
காணாத போது மெய்யான அன்பு சிறிதும் இல்லை -என்னுதல்
மற்று -எனபது
காணாத போதைக் காட்டுமோ -எனின்
கண்டதற்கு மறுதலை காணாத போது அன்றோ –
காதல் மற்று -அன்பும் அதற்கு மறுதலையான வெறுப்பும் இல்லை -என்னுதல்
அன்பும் அதுக்கடியான உறவும் இல்லை -என்னுதல் –

எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –
பத்துத் திக்குகளிலும் உண்டான எல்லா ஆத்துமாகளையும்-பிரிகதிர் படாமே திரு வயிற்றிலே வைத்து காப்பாற்றிய
உபகாரத்தை உடையவன் –
இவற்றின் பக்கல் ஒன்றும் இல்லாத அன்று ரஷிக்குமவன்-
பிரளயம் தோன்றிய நிலையில் காப்பதற்கு சாதனமும் இல்லை-வேண்டுகோளும் இல்லை அன்றோ
பாது காப்பதற்கு தான் அறிந்த ஆபத்தும் சம்பந்தமும் அன்றோ வேண்டுவது
அப்போது விலக்குகைக்கு ஒரு சாதனம் இல்லையே
பிரான் –
உபகார சீலன் ஆனவன் –

தொண்டரோமாய் உய்யல் அல்லால் –
அவனுக்கு நம்மதாய் இருப்பது ஓன்று கொடுக்க வேண்டுவது இல்லை-
அடியோமாய் பிழைத்து போமது ஒழிய
அடிமை -ஸ்வரூப மான பின்பு அதனை இழைக்கை யாவது-அழிதலே அன்றோ
விதி முகத்தால் அன்றிக்கே-மறை முகத்தாலும் இவ்வர்த்தத்தை அறுதி இடுகிறார் -மேல்-

உபகார சீலன் -பச்சை இட வேண்டாம் -அபிரதிசேதமே வேணும் -விலக்காமை ஒன்றே வேண்டும் –
பற்றினால் உஜ்ஜீவிக்கலாம் -அவனைப் பற்றினால் உஜ்ஜீவிக்கலாம்
வேறே யாரையும் பற்றினாள் உஜ்ஜீவிக்க முடியாது –
இவனைத் தவிர வேறு வாஸ்து ரக்ஷகர் என்பதே இல்லையே

இல்லை கண்டீர் துணையே-
ஆபத்துக்கு வேறு ஒரு பற்றுக் கோடு உண்டாய் இருக்க-இவனைப் பற்றச் சொல்லுகிறேன் அல்லேன்
அவனைப் பற்றிச் ஸ்வரூபம் பெறுதல் இல்லையாகில் இல்லையாம் இத்தனை –

——————————————————————————–

துணையும் சார்வும் ஆகுவார் போல்
சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல்
அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த
எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் பொருளே-9-1-2-

அனுபகாரகர் -அவிசுவசீய நீயர்-பந்து புத்தி பண்ணி – பற்றாமல் சக்கரவர்த்தி திருமகன் ஒருவனே உபாயம் -விசுவாசிக்க ஜனகன் உபகாரகன்
துணையும் சார்வும் ஆகுவார் போல்—சுக துக்கங்களை துணையாகவும் -ஆபத்து வந்தால் அபாஸ்ரயம் ஆகுவார் போலே -போலி தான் –
சுற்றத்தவர் பிறரும்-பந்துக்களும் மற்றும் உள்ளாறும்
அணையவந்த வாக்கம் உண்டேல்-அட்டைகள் போல் சுவைப்பர்–நல்லது பண்ணுவார் போலே ரத்தம் கொண்டு
–இவன் தனக்கு உபகாரம் என்று நினைக்கும் படி பசை அற சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த-ஆபத்து காலத்தில் -சங்கை பட்ட சுக்ரீவனுக்கு விச்வாஸமும் பிறப்பித்து –
ஏழு -என்ற கடல்களும் -குல பர்வதங்களுள் லோகங்களும் -இக்கலைக்கு இலக்கு ஆவோமோ என்று பயப்பட்டனவே –
மூன்று லோகம் -இந்திரனுக்கு ஏழையும் அளந்தால் போலே -ஆபத்தில் அபாஸ்ரயம் தன் பக்கலிலே அதி சங்கை பட்டவனுக்கு விசுவாசம் பிறப்பித்து
எம் கார் முகிலை-புணை என்று உய்யப் போகல் அல்லால்-ஆஸ்ரயம் -தெப்பம் -போலே அமிழாமல் இருக்க –
இல்லை கண்டீர் பொருளே -இவனைத் தவிர வேறு ரஷக வஸ்துவே இல்லையே

உபகாரகரைப் போலே இருந்து -தம் தம் காரியங்களையே-தலைக்கட்ட நினைக்கும் நம்பத் தகாதவர்களை ஒழிய-
காரணம் இல்லாமலே இயல்பாகவே நம்பிக்கையை விளைக்குமவனாய்-
ஆபத்திற்கு துணைவன் ஆனவனைப் பற்றுமது அன்றிப் பயன் இல்லை –என்கிறார் –

துணையும் சார்வும் –
துணையாகை யாவது -துக்கமும் சுகமும் நம் இருவருக்கும் ஒன்றே -என்கிறபடியே-
த்வம் வயச்ய அஹிஹ்ருத்ய மேஹி ஏகம் துக்கம் சுகம் ச நௌ-சூக்ரீவ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரஹ்ருஷ்ட வத் -கிஷ்கிந்தா -5-35
இன்ப துன்பங்களை ஒக்க அனுபவித்தல் –
சார்வு ஆகையாவது –
போக்கடி அற்ற நிலையில் தாங்களே புகலிடம் ஆதல் –
பாண்டவர்கள் உடைய வனவாசத்திலே தனிமையிலே முகம் காட்டியும் திரௌபதியை மீட்டுக் கொண்டு-போகும் போது
கிருஷ்ணன் பலராமனுடன் அந்த குயவனுடைய தொழில் சாலைக்குச் சென்றான் -என்கிறபடியே
பாண்டவர்கள் தங்கின பணிக் கொட்டிலிலே சென்று முகம் காட்டி-கூடக் கிடந்தது கதறியும் துணையாயும்-
வருஷ்ணி ப்ரவீரஸ்து குருபிரவீரான் ஆசங்கமான சஹ ரௌ ஹி னேயே
ஜகாமதாம் பார்க்கவா கர்மசாலாம் யத்ர ஆசதே தே புருஷ பிரவீரா -பாரதம் சம்பவ பர்வம் –
பகதத்தன் விட்ட வேலை அர்ஜுனனைத் தள்ளி தன் மார்பில்-ஏற்றுப் புகலாயும் போந்த கிருஷ்ணனைப் போலே இருக்கை –

ஆகுவார் போல் –
தாங்கள் உறவினர்கள் அல்லாதாரைப் போன்று கடக்க நிற்பதும் செய்யாதே-இரட்சகர் -என்று மயங்கும்படி சேர்ந்து இருப்பார்கள் –
சுற்றத்தவர் பிறரும் –
தாயாதிகளும் -மற்றும் உள்ளாறும் –
அணையவந்த வாக்கம் உண்டேல் –
கைக்கு எட்டின செல்வம் உண்டாகில் -என்றது
இவன் பக்கலில் தங்களுக்கு பிரயோஜனம் உண்டாம் என்று தோற்றி இருக்கில் -என்னுதல்-
அன்றிக்கே –
தங்கள் பக்கல் ஒரு பிரயோஜனம் இவனுக்கு உண்டு என்று தோற்றி இருக்குமாகில் -என்னுதல் -என்றபடி –

அட்டைகள் போல் சுவைப்பர் –
இரத்தத்தை அடியோடு வாங்கா நிற்கச் செய்தே இவனுக்கு நன்மை செய்தனவே அன்றோ இவை இருப்பன –
அப்படியே உபகாரம் கொண்டாராய் கொள்ளாதே-நன்மை செய்கிறார்களாய் கொண்டு பிழைப்பார்கள் -என்றது –
உன்னிடத்தில் செல்வம் கிடக்கில் வாங்கிக் கொள்வார்கள்
அவற்றை என் மேல் ஏறிட்டு வை என்று நன்மை செய்கிறார்களாய் ஆயிற்றுப் பேசுவது -என்றபடி –

கணை யொன்றாலே–ஒரு சிறந்த வில்லினாலே-ஏழு மராமரங்களையும்
அருகில் இருந்த மலையையும்-பாதாளத்தையும் பிளந்தார் -என்கிறபடியே-கைக்கு எட்டிற்று ஓர் அம்பால்

மகாராஜர் தனியருமாய் வெறுவியருமாய்-தமையன் பகையுமாய் –மனித சஞ்சாரம் இல்லாத தனிக் காட்டில் இருக்க
பெருமாளையும் இளைய பெருமாளையும் தூரத்தில் கண்டு
வாலி வரவிட்டவர்கள் என்று அஞ்சி ஓடித் திருவடியை வரவிட்டு அறிவித்த பின்பு –
நாம் உம்முடைய கார்யம் செய்ய வல்லோம் -என்று மழு வேந்திக் கொடுத்தும் அவன் கார்யம் செய்தார் அன்றோ –
பிபேத ச புன சாலான் சப்த ஏகேன மகே ஷூ ணா-கிரிம் ரசாதலம் சைவ ஜநயன் ப்ரத்யயம் ததா -பால -1-66- –

யேழ் மராமும் எய்த-
ஓன்று இரண்டாலே மகா ராஜர் உடைய ஐயத்தை தீர்க்கலாய் இருக்க-ஏழு மராமரமும் எய்த –

எம் கார் முகிலை –
எம் -என்று-அடியார்களையும் சேர்த்துக் கொள்ளுகிறார்-
அன்றிக்கே
தனித் தன்மை பன்மையாய்-மகாராஜருக்கு செய்தது தமக்கு செய்ததாக நினைத்து இருக்கிறபடி யாலே -யாதல் –
பரம உதாரன் -ஆதலின் -கார் முகில் -என்கிறார்

அவன் படி இதுவாகில் நாம் அவனுக்கு செய்ய வேண்டுவது என் என்னில் –
புணை என்று உய்யப் போகல் அல்லால் –
இட வேண்டுவது ஒரு பச்சை இல்லை –ஒரு வார்த்தை மாதரம் அமையும் –
என் கார்யம் உனக்கே பொறுப்பு -என்ற ஒரு வார்த்தையே அவனுக்கு நேர வேண்டுவது –

இல்லை கண்டீர் பொருளே –
புறம்பு ஒருவரைப் பற்றினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றது –
புறம்பே சிலரை பற்றுகையிலே துக்கப்பட சிலர் உண்டு அத்தனை-பயன் தரத் தக்கது ஓன்று இல்லை -என்றபடி –

——————————————————————————————————–

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில்
போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில்
என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் அரணே-9-1-3-

அநிஷ்டம் போக்கும் கிருஷ்ணன் கிருபைக்கு பாத்திரம் ஆவதே வழி
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில்–பசை கையில் இருந்தால் மங்களா சாசனம் போர் முகம் பார்த்த புலி
போற்றி என்று ஏற்றி எழுவர்–பொருளை வாங்கிக் கொண்டு வசவுகளை போவார்கள்
இருள் கொள் துன்பத்தின்மை காணில்-தமஸ் பிரசுரம் -இன்மை வறுமை தாரித்ர்யம்
என்னே என்பாருமில்லை-கிருபை பண்ணுவாரும் இல்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க-நெஞ்சு கலங்கும் படி பிறவிருத்தி செய்யும் அசுரர்
வடமதுரைப் பிறந்தார்க்கு-அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால்-கிருபை கொள்ளும் சேஷ பூதராக உஜ்ஜீவிக்கள் அல்லால்
இல்லை கண்டீர் அரணே

அவனை ஒழிந்தவர்கள்-பயன் உள்ள போது -பந்துக்களாய் கொண்டாடுவார்கள் –
ஆபத்து வந்த காலத்தில் ஏன் என்று கூடப் பார்க்க மாட்டார்கள் –ஆனபின்பு
காரணம் இல்லாமலே ஆபத்துக்கு துணைவனாய் இருக்கிற-ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவருளுக்கு பாத்திரம் ஆகுங்கோள்
அவனை ஒழிய காப்பவர் வேறு இல்லை –என்கிறார் –

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில்-
இவன் தான் சிலவற்றை அவிழ்ப்பது முடிவது சேமிப்பதாக போரா நிற்கும் அன்றோ –
பொருளானது கையில் உண்டாய் போரக் காணில்-

போற்றி என்று –
பிறருடைய நலத்தை விரும்புகின்றவர்களை போன்று வார்த்தை சொல்லுவர் -என்றது –
உனக்கு இன்னமும் கிழிச்சீரை பெருக வேண்டும் -என்பார்கள் என்றபடி –
நம்முடைய நலத்தையே தனக்கு பிரயோஜனமாக கொண்டு இருப்பான் ஒருவன் உண்டாவதே –என்று குளிர நோக்குவானே-
இனி இவன் நமக்கு கண்ணற மாட்டான் -என்று அறிந்தவாறே -கண் -அருள் -கிருபை –

ஏற்றி எழுவர் –
இடல் ஆகாதோ போக -என்று ஏற்றுக் கொண்டு எழுந்திருப்பார்கள் –

இருள் கொள் துன்பத்தின்மை காணில் –
அறிவின்மையை விளைப்பதாய்-துக்கத்துக்கு காரணமாய் இருக்கிற வறுமையைக் காணில் –

என்னே என்பாருமில்லை –ஐயோ என்பாரும் இல்லை –பிள்ளை திரு நறையூர் அரையர்
ஒருவனுக்கு இட்டு ஒருவன் வெறுவியன் ஆவது
அவனால் பொருளைப் பெற்றவன் இவனை -என் -என்னுதல் –
இவனுடைய வீட்டிலே வந்து ஒரு நாள் கால் கழுவிப் போதல் செய்ய -அவ்வளவாலே
இன்னான் இன்னானுக்கு உறவினன் ஆவான் அன்றோ -என்று-இவ்வளவு கொண்டு ஜீவிக்க இருந்தால்
அவ்வளவும் செய்வார் இலர் -என்று பணிப்பர் –

மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு –
பொருள் கை உண்டாய்ச் செல்லக் காணாத அன்றும் அடியார்களுடைய ஆபத்தை போக்குகைக்காக-
கருமங்கட்கு கட்டுப் படாதவனான தான் வந்து அவதரித்து
உதவுவான் ஒருவன் உளன் -என்கிறார் –
மக்கள் மனத்தில் இருள் குடி புகுரும்படியான செயல்களை உடைய அசுரர் கூட்டம் முடியும்படி-
ஒருவர் விரும்பாது இருக்கவும் தானே வந்து அவதரித்து-காப்பாற்றுமவனுக்கு –
அவனுக்கு நாம் செய்ய வேண்டுவது என் என்னில் –

அருள் கொள் ஆளாய் யுள்ளால் அல்லால் –
திருவருளைப் பெறுவதற்கு பாத்திரமான அடியவர்களாய் கொண்டு உஜ்ஜீவிக்கல் அல்லது –
அவன் செய்யும் அருளை விலக்காது ஒழியும் அத்தனையே வேண்டுவது –
தன் அருள் கொள்வாரை -உதாரர் -என்னும் அவன் அன்றோ அவன் –
இவன் பக்கல் இதற்கு மேற்பட கொள்ளலாவது இல்லை –
அவனுக்கும் இதுக்கு மேலே செய்ய வேண்டுவது இல்லை –
அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே
சம்பந்தமோ இயல்பாகவே அமைந்ததே இருந்தது –
இவன் புகுர நின்ற இடம் உண்டாகில் தன் பேறாக நினைத்து இருக்குமவனாய் இருந்தான் –
இனி விலக்காமை அன்றோ வேண்டுவது –
இது ஒன்றே நம்மிடம் உள்ள பொருள் -அவன் இடம் இல்லாமல் -அவன் ஆசைப்படுவது –

இல்லை கண்டீர் அரணே-
பாதுகாவல் ஆவது -இது ஒன்றுமே –
அல்லாதன எல்லாம் கேட்டோடே தலைக் கட்டும் அத்தனை –
சிறு குழந்தை -குன்றிச் சூடு -குன்று மணியின் உச்சி -என்று
நெருப்பிலே கை வைக்குமாறு போலே இருப்பது ஒன்றே அன்றோ –
புறம்பு இவன் பாதுகாவலாக நினைத்து இருக்கும் இவை –

ஆதரேண யதாஸ் தௌதி தனவந்தம் தன இச்ச்சயா-ததாசேத் விஸ்வ கர்த்தானாம் கோ ந முச்யதே பந்தநாத் -பிரமாணம்
செல்வம் உள்ளவனை செல்வத்தில் விருப்பத்தால் விருப்பத்தோடு எங்கனம் புகழ்கிறானோ -அங்கனமே
உலகத்தைப் படைத்தவனை புகழ்ந்தால் எவன் பிறவிக் கட்டின் நின்றும் விடுபடமாட்டான் -என்கிறபடியே
செல்வத்தின் மேல் உள்ள ஆசையாலே செல்வம் உள்ளவனைத் துதித்து போந்த வாசனையாலே மிக உயர்வாகத் துதியா நிற்கும்
இப்படி துதிக்கிறது உதாரனையோ -என்னில்-தநவந்தம் -ஓர் பற்றையை -என்றபடி –
அவன் பக்கல் நெகிழ்ச்சி இல்லை -ஆகில் அவனை துதிக்கும்படி தூண்டியவர்கள் யார் -என்னில்
தன இச்ச்சயா -செல்வத்தின் மேலே உள்ள ஆசையே –எல்லா வற்றையும் உடையவனாய்
இவன் அளவு அன்றிக்கே இருக்கிற அவன் பக்கலிலே-இந்த ஆசையைச் செலுத்தினால்
பிறர் கீழே இருந்து துதிக்க வேண்டும்படி இவனை வையான் –
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் –இவன் இடம் -கை நீட்டி பெற்றால் அவனே வள்ளல் ஆகிறான்
-கொடுக்க தொடங்கும் பொழுதே சாம்யா பத்தி அருளுகிறானே –

————————————————————————————————

அரணம் ஆவர் அற்ற காலைக்கு
என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர்
இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் சதிரே–9-1-4-

ஆபத்துக்கு உதவுவார் என்று ஆக்கி வைத்தவர்களும் -அந்த அவஸ்தையிலும் உதாவார் -அபேஷா நிரபேஷமாக ரக்ஷிக்கும் சர்வேஸ்வரன் ஒருவரே ரக்ஷகர்
அரணம் ஆவர் அற்ற காலைக்கு–கை முதல் இல்லாத அன்று அரண் ஆவார் என்று – என்று அமைக்கப் பட்டார்–அர்த்தாதிகளாலே அமைத்து
இரணம் கொண்டு தெப்பர் ஆவர்-கடன் -பெற்ற துச்சர் ஆவார் தாழ்ந்தவர் –இன்றி இட்டாலும் அக்தே-ஆக்கி வாய்க்கா விடிலும் -உதவாமையே சித்தம் –
வருணித்து என்னே-பேசி என்ன பிரயோஜனம் -செய் நன்றி கொன்றதை பேசி என்ன பலன் –
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே-சரண் என்று உய்யப் போகல் அல்லால்-நிர்ஹேதுக உபகாரம் -இந்த புகழே சரண்
-குண அனுபவமே பொழுது போக்காகக் கொள்ள வேண்டும் -இல்லை கண்டீர் -சதிரே-இதுவே சாமர்த்தியம்

சிலரை ஆபத்துக்கு துணை ஆவார் என்று செல்வம் முதலியவற்றைக் கொடுத்து பல நாள் அடைந்தாலும்-
ஆபத்து வந்தவாறே கண்ணற்று பாராமுகம் செய்வார்கள்-
ஆதலால் ஒருவித காரணமும் இல்லாமல் வந்து அவதரித்து-ஆபத்துக்கு துணை ஆனவனே பற்றத் தக்கவன் -என்கிறார்-

அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார் –
கைம்முதல் அற்ற காலைக்கு காப்பாற்றுவான் ஒருவன் வேண்டும் என்று பலகாலும் நினைந்து
தனக்கு இயற்றி ஆற்றல் உள்ள காலத்தில் பச்சை இட்டு அவர்களை அடைந்து
தனக்கு ஆபத்து காலத்தில் உதவுமவர்களாக சமைத்து வைக்கப்பட்டவர்கள்-இப்படி செல்வம் முதலியவைகளால் வசீகரிக்கப் பட்டவர்கள்
ஆபத்து காலத்தில் உதவும்படி என் என்னில்

இரணம் கொண்டு தெப்பர் ஆவர் –
இவன் இட்ட பச்சையை -இவன் ஓன்று செய்தானாக -நினைத்து இருக்கை
அன்றிக்கே
தங்களுக்கு கிடைக்க வேண்டியதை வாங்கினாராய்-இவனுக்கு இயற்றி இன்மையால் பச்சை இடாத நாள்களிலும்
நமக்கு இட்டிலன் -என்று வெறுத்து இப்படி கொடுத்ததை வாங்கினார் போன்று-புல்லியராம் படியை உடையவர் ஆவார்
தெப்பர் -தப்ரர் -சப்ரர் -என்றபடி –

இன்றி இட்டாலும் அக்தே-
பச்சை இட்டுப் பற்றா விடிலும் ஆபத்து வந்தால் கை விடுவாரைக் கிடைக்கும் –
ஆபத்து வந்தால் கை விடுவார்க்கு பச்சை இட்டு அவர்களைப் பற்ற வேண்டாவோ
அன்றிக்கே
இப்படியே இப் பச்சை இட்டவன் -நம்மை பாதுகாக்குமவன் -என்று-உபசரியா நிற்கச் செய்தே -நடுவே -அவன் இறப்பது
அப்போதும் மேலே கூறிய அதுவே பலிதமாம் இத்தனை -என்னுதல் –

வருணித்து என்னே –
உபகாரம் செய்வார்களுக்கு அபகாரம் செய்வார் படியை நினைந்து வெறுத்து –வருணித்து என்னே -என்கிறார்
இளைய பெருமாள் கைகேயின் தன்மையை நினைந்து
தன் கார்யத்தில் நோக்கு உள்ளவளும் -எப்போதும் கொடிய தன்மை உடையவளும்
கோபம் உள்ளவளும் -தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக் கொண்டு இருப்பவளுமான என் தாயான கைகேயி -என்று
ஸ்ரீ பரத ஆழ்வான் சொன்னால் போலே –
ஆத்மகாமா சதாசண்டீ க்ரோதனா ப்ராஞ்ஞா மானி நீ-அரோகாசாபி மே மாதா கைகேயி கிம் உவாச ச -அயோத்யா -71-10
வாராய் பிள்ளாய் நீ தான் இவை எல்லாம் சொல்லுகிறது நடுவில் ஆய்ச்சியையே-அப்பா உன்னுடைய நடுத் தாயாரான கைகேயி யானவள்
எவ்விதத்திலும் நிந்திக்க தக்கவள் அல்லள்-என்கிறபடியே –
ந தேம்பா மத்ய மாதாத கர்ஹிதவ்யா கதஞ்சன-தாமேவ இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய கதாம் குரு -ஆரண்ய -16-37-
ஒருபடியாலும் நீ அவளை இவ்வார்த்தை சொல்லக் கடவை அல்லை-
தாமேவ –வேண்டுமாகில் கை கண்ட மருந்தைச் செய்யப் பாராய்
இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய –ஐயரோ பொகட்டு முடிந்து போனார்-நாம் போகட்டு போக்க இராச்சியத்தை இக்குடியின் மரியாதை
குலையாதபடியாக நோக்கிக் கொண்டு-கிடந்த பிள்ளை பரதன் அன்றோ இக்குடிக்கு நாதன் –
பரதச்ய கதாம் குரு –
நாக்கிலே நீர் வரும்படியான வார்த்தை சொல்லப் பாராய் -என்றார் பெருமாள் –

ஆக உபகாரம் செய்தவர்கள் விஷயத்தில் அபகாரமாக நினைத்து இருப்பார் தன்மையை நினைந்து-
பயன் இல்லாத இந்த கதையை கிடந்தது வர்ணிக்கிற இத்தால்-பயன் என்ன –
பச்சை இட்டு அமையாத ஒன்றும் விரும்புகிற காலத்திலே வந்து உதவுவான் ஒருவன் உண்டு-
அவனைப் பற்றிப் பிழைத்துப் போகப் பாருங்கோள் -என்கிறார் மேல்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சரண் என்று உய்யப் போகல் அல்லால்
ஒருவர் விரும்பாது இருக்கச் செய்தே-இவற்றைப் பாதுகாத்தல் பொருட்டு தானே வந்து
ஸ்ரீ மதுரையில் அவதரித்தவன் உடைய-ஒருவித காரணமும் இல்லாமல் உபகாரமாய் இருக்கின்ற
சௌசீல்யம் சௌலப்யம் முதலான கல்யாண குணங்களே நமக்கு புகலிடம் என்று பிழைத்து போகல் ஒழிய

இல்லை கண்டீர் சதிரே –
நெற்றி பெருத்து-பிரயாசை செய்து – பயன் ஒன்றும் இன்றிக்கே-இருக்கும் என்னுமது இளிம்பு அன்றோ
நெற்றி சிறியதாய் பயன் கனக்கபெறுமது அன்றோ சதிராவது-
இங்கு நெற்றி -நம -என்றல்-பயன் -சமன் கொள் வீடு -அன்றோ –

——————————————————————————

சதிரமென்று தம்மைத் தாமே
சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே
வைகி மற்றொன்றுறுவர்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

-இம்மட உலகர் கண்டதோடு பட்ட அபாந்தவ -அரஷக-அபோக்ய அசுக -அ நுபாய -பிரதி சம்பந்தியைக் காட்டி
மற்று ஒன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்த உபாயம் -சூர்ணிகை –227-
போக்யதயா சுவீ க்ருதைகளான ஸ்த்ரீகளும் -உதவாத படி கிலேசிப்பர்-கிலேச நாசன் கேசவன் -போக்கும் சமர்த்தன் உதாரன்
-அபிகமனம் பண்ணி -எதிரே சென்று -விழி கொடுத்து -புளிப்பு பாய்ச்சலில் நம் பெருமாள் -பராங்குச பரகால யதிவராதிகள்
நாலடி முன் வைத்து பின் வந்து -சேவை -உடனே சேர்ந்து சேவை -ஆளாய் -ஆக்கி -ஆயிரம் கால் மண்டபம் சேர்வதே உஜ்ஜீவனம்
பாசுரம் பிரத்யக்ஷம் ஆக்கும் -ராமானுஜர் திவ்யாஜஞஜை –
சதிரமென்று தம்மைத் தாமே–அபிமத விஷயம் வசீகரிக்க வல்ல சாதுர்யம் கொண்டோம் என்று தாங்களே
சம்மதித் தின்மொழியார்–பேச்சில் மட்டுமே இனிமை -பண்ணின் மொழியார் பைய நடமின் -திரு நறையூர் –
வார்த்தைகள் -சரசம் -ஸ்த்ரீகள் -மதுரபோகம் துற்றவரே-இனிய போகத்தை பூர்ணமாக அனுபவித்து
வைகி மற்றொன்றுறுவர்–காலாந்தரத்திலே -அவமானாதி கார்யங்கள் பெறுவர்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க-வடமதுரைப் பிறந்தார்க்கு-லோகத்தை அதிர்ச்சி செய்வதே ஸ்வ பாவம் அசுரர்கள் –
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்-அபி கமனம்-திருவாராதனம் -அபி கமனம் -செய்வதே -உஜ்ஜீவனம் —

தன்னைப் பெறாவிடில் தரிக்க மாட்டாதபடி சிநேகத்தை உடையவர்களான-பெண்களாலே ஆபத்து வந்த காலத்திலே இகழப்படுவர்
ஆனபின்பு-ஒரே தன்மையான சிநேகத்தை உடைய இறைவனைப் பற்றுவது ஒழிய-சுகம் வேறு இல்லை -என்கிறார்-

சதிரமென்று –
சதிராகா வாழா நின்றோம் -என்று

தம்மைத் தாமே சம்மதித்து –
தங்களை தாங்களே இசைந்து-நாம் சதிரர் நாம் சதிரர் -என்றாயிற்று எல்லாரும் ஒக்க-தங்கள் தங்களை நினைத்து இருப்பது
சிறிது இயற்றியை உடையவனாய் இருக்குமவன் –
ஒருவனைப் பார்த்து -அங்கே நம்மை சதிரன் என்று நினைப்பிட்டுக் கொடு வா-நாம் அதிலே மேல் எழுத்து இட்டுத் தா -என்னும்
அவைக்கு பொருத்தம் இல்லாத இச் செயலுக்கு துணை செய்வார் கிடையாரே –தானே அன்றோ இருக்கிறான் –

இன்மொழியார் –
இனிய பேச்சை உடையவர்களாய் இருந்துள்ளவர்கள் உடைய-அகவாய் மயிர்க் கத்தியாய் இருக்கச் செய்தேயும்
அன்பு கலந்த இனிய வார்த்தைகளாலே வசீகரிக்க வல்லவர்கள்-ஆதலின் -இன் மொழியார் -என்கிறார் –

மதுரபோகம் துற்றவரே –
இனிய இன்பத்தை அவர்களுடனே நெருங்க அனுபவித்தவர்கள் –

வைகி மற்றொன்றுறுவர் –
வைகி மற்று ஓன்று உறுவர்-
இன்பத்தை அனுபவிப்பதற்கு தகுதியான யௌவனமும்-அதற்கு கைமுதலான செல்வமும் போமே
பின்னையும் ஆசை மாறாதே-அவ்வவ் இடங்களிலே போய் இருக்கும்-வருவார்க்கும் விரோதியாய் –

முற்பட மனிச்சிலே -மனித தன்மைக்கு சேர -நாலிரண்டு பண்ணை போகலாகாதோ -என்பார்களே-
போகிறோம் போகிறோம் என்று இருக்குமே-போகாதே பின்னை வெள்ளாட்டியை இட்டுப் பரிபவிப்பர்கள்-அதற்கும் போகானே
பின்னை ஆணை இட்டு எழுப்பிப் பார்ப்பார்கள்-அதற்கும் எழுந்திரான்-
பின்னை காலைப் பற்றி இழுப்பார்கள்-இவன் தூணைக் கட்டிக் கொள்ளும்-
இப்படியால் அவர்களாலே சிறுமை உறுவர்கள்-
பலம் கிடைக்கும் வேளையில் பிறக்கும் சிறுமையை நினைந்து வெறுத்து-அவனை தம் திருவாயால் அருளிச் செய்ய மாட்டாமையால்
மற்று ஓன்று -என்கிறார்-பேதை பாலகன் அது ஆகும் -யுவனம் சொல்லாமல் -போலே –
அங்கன் இன்றிக்கே
பலம் கிடைக்கும் வேளையில் நன்மையொடு தலைக் கட்டும் விஷயத்தைப் பற்றி-பிழைத்துப் போகப் பாருங்கோள் -என்கிறார் மேல் –

அதிர்காள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு –
மனிதருடைய மனங்கள் அதிரும்படியான செயல்களை உடைய அசுரர் கூட்டம்-முடியும்படி வடமதுரையில் வந்து திரு வவதரித்தவற்கு –

எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் –
எதிர்முகமாதலை உடைய அடியாராய் உய்யுமது ஒழிய-அவனுக்கு நான் செய்ய வேண்டுவது இது
அவன் தானே மேலே விழா நின்றால்-முகத்தை மாறா வைக்காது ஒழிகையே வேண்டுவது
அந்யப் பூர்ணாத் அபாம் கும்பாத் அன்யாத் பாதரவ நேஜநாத்-அந்யத் குசல சம்ப்ரசநாத் நசேச்சதி ஜனார்த்தன -பாரதம் உத்தியோக பர்வம் 89-13
அந்யப் பூர்ணாத்-
பாண்டவர்கள் இடத்தில் அன்புள்ளவனான கிருஷ்ணன் வாரா நின்றான்
அவனுக்கு நாட்டையும் கொடுத்து பொன்னையும் கொடுத்து நமக்கு ஆக்கிக் கொள்வோம்
எனபது போன்ற சில வார்த்தைகளை திருதராஷ்ட்ரன் சொல்ல -என்றது-இவற்றால் அவனை படை அறுத்துக் கொள்ளுவோம் என்றபடி
அவன் தான் நெஞ்சாலே நினைப்பது ஒன்றாய் வாயாலே பேசுவது ஒன்றாய் இருப்பது
இதனை அறிந்த சஞ்சயன்
வருகிறவன் அங்கன் ஒத்தவன் அல்லன் காண்-அவனுக்கு வேண்டுவது இவ்வளவு -என்கிறான்
தான் குடிக்கும் தண்ணீரை குடத்திலே இட்டு குளிர வைக்கக் கடவனே
அதனை அவன் வருகிற வழியிலே வாசலிலே வைக்க அமையும்
தன் இல்லத்திலே விருந்து வந்து புகுந்தால் கால் கழுவ கடவதாக சாமான்ய சாஸ்த்ரம் விதித்தது
அதற்கு மேற்பட அவனான வேற்றுமைக்கு சிறப்பாக ஒன்றும் செய்ய வேண்டுவது இல்லை
அன்யாத் பாதரவநே ஜநாத்
அந்தக் குடத்திலே நீரைக் கொண்டு அவன் திருவடிகளை விளக்க அமையும் -மற்று வேண்டா –
அந்யத் குசல சம்ப்ரசநாத் –
நெடும் தூரம் வந்தவனை -நடந்த கால்கள் நொந்தவோ -என்னத் தக்கதே அன்றோ –
நசேச்சதி –
உண்டவனுக்கு உண்ணப் போகாதே அன்றோ
அப்படியே இவன் முயற்சி மாத்ரத்திலே அவன் வயிறு நிறையும்-ஆன பின்பு இவன் செய்யுமவை அடைய அவனுக்கு மிகையாக இருக்கும் –

இல்லை கண்டீர் இன்பமே –
துன்பங்களிலே சிலவற்றை இன்பம் என்று மயங்குகின்ற இத் துணையே ஒழிய-இன்பத்தை தர வல்லதாய் இருப்பது ஓன்று இல்லை
உயிர் கழுவிலே இருக்கிறவனுக்கு தண்ணீர் வேட்கையும் பிறந்து-தண்ணீரும் குடித்து தண்ணீர் வேட்கையும் தணிந்தால்
பிறக்கும் இன்பம் போலே இருப்பது ஒன்றே அன்றோ –மனிதர்க்கு கல்வியால் பிறக்கும் இன்பம் ஆகிறது-
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்கி-அது அள்ளிக் கொள்ளும் -என்று அறியாமல்-வெய்யிலைத் தப்பப் பெற்றோம் என்று மகிழ்ந்து இருப்பாரை
போலே அன்றோ விஷய அனுபவங்களால் களித்து இருக்கிற-இருப்பு ஒருவனுக்கே –

——————————————————————————————————

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ
உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர்
தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால்
மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

புருஷார்த்த பரி ஞானம் இல்லாமல் -முடிந்து போகாமல் -கிருஷ்ணன் உடைய ஆனந்த ஜனகன் -குண அனுபவம் ஒன்றே உஜ்ஜீவன ஹேது
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ–சர்வம் துக்க மயம் -ஜகத் –
உள்ளது நினையாதே–சர்வ கால அனுவர்த்தியான பேரின்பம் -ஆனந்த மயன் அனுசந்திக்காமல் –
தொல்லையார்கள் எத்தனைவர்–தோன்றிக் கழிந்து ஒழிந்தார்-பழைய அநாதி காலங்களில் ஜென்ம மரணங்கள் யாத்திரையாக போய் -ஆனபின்பு
மல்லை மூதூர்-வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே-நிரதிசய சம்பத் -யுகங்கள் -வாமன பூர்வாஸ்ரமம் -சத்ருக்கனன் ஆட்சி -த்வாபர ஜென்ம பூமி -தத் சம்பந்தம் மாறாமல் -புண்ய பாபம் ஹரி -பிருந்தாவனம் புகுந்த இடம் -பாட்டுத் தோறும் வடமதுரை -தாபம் போக்கும் குளிர்ச்சி கொடுக்கும் குண அனுபவம் –
சொல்லி யுப்பப் போக வல்லால்-மற்று ஓன்று இல்லை சுருக்கே-இது ஒன்றே உஜ்ஜீவன வழி-வேறு ஒன்றும் ஆத்மாவுக்கு ஹிதம் இல்லை –

எல்லை இல்லாத பேரின்பம் ஆகிற பேற்றினை உணராமல்-முன்புள்ளார் பலர் முடிந்து போனார்கள் –
ஆதலால் அப்படியே நீங்களும் அழிந்து போகாமல்-அடியார்கட்காக அவதரித்து பாதுகாக்கும் அவனையே பற்று-உய்யுங்கோள்-
அதனை ஒழிய ஆத்மாவுக்கு நன்மை இல்லை -என்கிறார்-
பிராப்தம் -நித்யம் -பேரின்பம் -சோபாதிகம்-உண்மை இது அன்றோ –

இல்லை கண்டீர் இன்பம் –
உலகம் எல்லாம் துக்க மயமானது -எனப்படுகிற இவ் உலகத்தில்-கெடுவீர்காள் இன்பம் சிறிதும் இல்லை கண்டீர் கோள்-

அந்தோ
அனுபவிக்கின்ற வர்களான உங்களுக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே
காட்சி அனுபவமும் பயன் இல்லாததாய் இருக்க உபதேசிக்கிறார் அன்றோ –
பரம கிருபையால் – வம்மின் -விரோதம் -ஈனச்சொல் -எவ் உயிர் க்கும் அறிய என்று அடைவு கெட-
உபதேசிப்பது ஞாலத்தார் மந்த பந்த பத்தியும்-அனர்த்தம் கண்டு ஆற்றாமையும் –
மிக்க கிருபையால் இறே
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தார்க்குமே இவை உள்ளது
உள்ளது நினையாதே –
உண்டான பேற்றினை நினையாமல் -என்றது
இன்ப மயமாய்-என்றும் உள்ளதாய்-இருப்பது பகவத் விஷயம் என்று நினையாமல் -என்றபடி –
அன்றிக்கே
உண்டான இல்லாமையை நினையாமல் -என்று மேலே கூட்டலுமாம் –இல்லாமை தானே உள்ளது உலகத்தில் -இது அன்றோ பிரத்யக்ஷம் –

தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார்-
பழையராய் இருப்பார் எத்தனை பேர்-பிறப்பானது இறப்போடே கூட்ட
நடு உள்ள நாள்கள் பேற்றுக்கு உடல் அன்றிக்கே கழிந்து போனார் -என்றது-
குடம் அவஸ்தை மண் அவஸ்தை -இப்படி அவஸ்தைகள் மாறுமே –
சில பூண்டுகள் உண்டாய்-தோன்றின இடம் தன்னிலே நின்று தீய்ந்து போவன உள அன்றோ -அப்படியே -என்றபடி –

மல்லை மூதூர் வடமதுரைப் –
நிறைவை உடையதாய்-அவனுக்கு என்றும் ஒக்க கலவிருக்கையாய் போருகிற-சித்தாஸ்ரமமாய்
ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்தும்-
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படை வீடு செய்தும்-
ஸ்ரீ கிருஷ்ணன் வந்து அவதரித்ததும்-
இப்படி பகவானுடைய சம்பந்தம் மாறாதே போருகிற-தேசம் ஆதலால் -மல்லை-என்கிறார்
மல்லை -நிறைவு-பழையதாய் வருகிற ஊர் ஆதலின் -மூதூர் -என்கிறார் –
அயோத்யா மதுரா -ஆழ்வார் இங்கேயே இருக்கிறாய் போலே ஆழ்ந்து அனுபவிக்கிறார் –
அயோத்யா -மதுரா – மாயா -அவந்திகா (-உஜ்ஜைனி- ) காசி -காஞ்சி — -த்வாராகா –முக்தி தரும் ஏழு ஷேத்ரங்கள் –

பிறந்தவன் வண் புகழே-
அங்கே வந்து அவதரித்தவனுடைய சீரிய புகழையே –

சொல்லி யுப்பப் போக லல்லால்-
வாயாலே சொல்லி பிழைத்து போமது ஒழிய –

மற்று ஓன்று இல்லை சுருக்கே –
புறம்பே நின்று பரக்க-காடுகைக்கலாவதுண்டு -வாய் கைக்கும் படி வர்ணித்தல் –
வாய்க்கு கேடாக சொல்லுதல் -இத்தனை போக்கி-சுருங்க ஒரு பாசுரத்தாலே சொல்லலாவது இல்லை-

——————————————————————————————–

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம்
மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன்
வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல்
வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

சிந்தா மாத்திரை சிலபல கிருஷ்ணன் குண அனுபவம் பண்ணி கால தத்வம் உள்ள வரை வாழலாம்
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம்-இதுவே சுருக்கமாக –
மா நிலத்து எவ் உயிர் க்கும்-சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்-சிந்தா மாத்திரம்
கண்டீர்கள் அந்தோ–ஆயாசம் கொடுக்காத வழி அன்றோ -பிரத்யக்ஷம் –
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன்–அநர்த்தகரம் ஏதும் இல்லை -ஸ்மார்த்தவ்யம் ஏது என்னில் –பசுக்களுக்கு ரக்ஷகன்
வடமதுரைப் பிறந்தான்–ஆஸ்ரயித்தவர்கள் சம்ச்லேஷகம் ஒன்றே -நோக்கு
குற்றமில் சீர் கற்று வைகல்–கல்யாண குணங்கள் கற்பதே -உஜ்ஜீவன ஹேது -உபதேச முகத்தால் கற்று
வாழ்தல் கண்டீர் குணமே-ஸர்வான் காமான் -பேரின்பம் உடன் வாழ்வதே பிராப்தம் –

பகவானைப் பற்றுதல் மிக மிக எளியது-இனிமை வாய்ந்தது-என்று அருளிச் செய்கிறார்

மற்று ஓன்று இல்லை –
இதனோடு ஒக்க வேறு எண்ண லாவது இல்லை -என்னுதல்
அன்றிக்கே
இப்போது இதனை சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றைச் சொல்லுகிறான்-என்று இருக்க வேண்டா -என்னுதல்-
ஒரே மருந்து ஒரு வைத்தியர் -ஒரே ரகஸ்யம் – த்வய மந்த்ரம் -பிரதி பத்தி பட இத்துடன் எண்ண வேறு ஒன்றும் இல்லையே –

சுருங்கச் சொன்னோம் –
இதனைப் பரப்பு அறச் சொன்னோம் –
அன்றிக்கே
நினைவிற்கு விஷயம் ஆகாதபடி சொல்லுகை அன்றிக்கே-உள்ளம் கொள்ளும்படி தெளிவாகச் சொன்னோம் -என்னுதல்
இத்தால் சொல் சுருக்கமும் பொருள் சுருக்கமும் சொல்லிற்று என்னுதல்-

மா நிலத்து-
இதற்கு அதிகாரிகள் இந்த உலகத்திலே-இவ்வர்த்ததுக்கு அண்ணி யார் பரம பதத்தில் உள்ளார் ஆயினும்
உபதேசத்துக்கு அதிகாரிகள் இந்த உலகத்தில் உள்ளவர்களே என்பார் -மா நிலத்து -என்கிறார் –

எவ் உயிர்க்கும் –
குறித்த சிலருக்கு மாத்ரம் உரியது அன்று-எல்லாருக்கும் உரியது –எருது கெட்டார்க்கும் ஏழே கடுக்காய் –
அதிகிருதா அதிகாரம் இல்லையே -சர்வாதிகாரம் —

சிற்ற வேண்டா –
வருந்த வேண்டா-
சிற்றுதல் -சிதறுலதாய்-பரக்க வேண்டா -என்கை-வேறு ஒரு செய்கை வேண்டா -என்றபடி –

சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-
வார்த்தைகள் வேண்டா-நினைப்பே அமையும்-கண்டீர் கோள் -என்றது
அவனைப் பற்றி பேசுதல் வணங்குதல் வேண்டா -என்பார்-சிந்திப்பே – எனப் பிரிநிலை ஏவகாரம் கொடுத்துப் பேசுகிறார்-

அந்தோ –
நல்ல பொருள்கள் கிட்டே இருக்கச் செய்தேயும்-அது கை விடுகைக்கு உடலாவதே -என்கிறார் –

குற்றம் அன்று –
மேலே கூறிய நன்மைகள் ஒன்றும் இல்லையே யாகிலும்-இது சொன்னாலும் உங்கள் தலையிலே முந்துற முன்னம் இடி விழாது
ப்ரதா தேவேதி கிருஷ்னே தி கோவிந்தேதி ச ஜல்பதாம்-மத்யாஹ்னே ச அபராஹ்னே ச ய அவசாத ச உச்யதாம் -பிரமாணம் படியே
காலை மாலை நடுப்பகல் என்னும் மூன்று வேளையிலும் தேவா என்றும் கிருஷ்ணா என்றும் கோவிந்தா என்றும்
சொல்லுகிறவர்களுக்கு யாதேனும் குறை உண்டோ-இருந்தால் கூறுங்கோள்-என்றார்
அன்றிக்கே
இவ் உபாயத்துக்கு பலம் இல்லை யானாலும்-இது தானே பிரயோஜனம் போரும் -என்னுதல் –

எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் –
வந்து பிறப்பதற்கு முன்பே-பெற்றத்து ஆயன் போலே காணும்
வந்து அவதரிப்பதாக நினைப்பட்டதில் புரை அற்று இருக்கிறபடி-
அடியார்கட்காக வடமதுரை பிறந்தானான பசு மேய்க்கும் ஆயன் -என்னுதல்
அடியார்கட்காக பசு மேய்க்கும் ஆயன் ஆவானாக வடமதுரை பிறந்தான் -என்னுதல் –

குற்றமில் சீர் கற்று –
குற்றங்கட்கு எல்லாம் எதிர் தட்டான-கல்யாண குணங்களைக் கற்று -என்னுதல்
அன்றிக்கே
பிறப்பிலும் செயல்களிலும் புரை அற்று இருக்கும் கல்யாண குணங்களைக் கற்று -என்னுதல்

நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ நாசா தாநவ-அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதத் சிந்த்யம் அதோன்யதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-13-
நான் தேவன் அல்லன் கந்தருவன் அல்லன் யஷன் அல்லன் அசுரன் அல்லன்-உங்கள் பந்துவாய் பிறந்தவன்
ஆதலால் வேறு நினைவு வேண்டா -என்றான் ஸ்ரீ கண்ணபிரான் –

சர்வ உபாய -அதிகமத்வ-பிரதிபத்தி விஷயத்துவ –விச்வாஸ நீயமான– ஸூ லபத்வ -சர்வாதிகாத்தவ
-அநாயாஸத்வ -யுக்தி நிரபேஷ ரூபமாக -இருப்பது அன்றோ

வைகல் வாழ்தல் கண்டீர் குணமே –
கற்பது ஒரு காலாய்-ஒரு தடவையாய்-பின்பு வாழ்ச்சி நித்தியமாய்-இருக்கும் ஆயிற்று-இதுவே பிராப்தம் –
ஏவகாரத்தால் -இது ஒன்றுமே குணம்-இது ஒழிந்தன அடையத் தக்கன அல்ல -என்கிறார் –

———————————————————————————————

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ
மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும்
புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில்
யாதுமில்லை மிக்கதே–9-1-8-

அவதார பிரயோஜனம் மாறாமல் -அநந்ய பிரயோஜனர்களுக்கு -மேல் விழுந்து அனுபவிப்பதே கர்தவ்யம்
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ-லோக பிரத்யக்ஷம்
மாயவன் அடி பரவி-ஆச்ரித குண சேஷ்டிதங்கள் கொண்ட சர்வேஸ்வரன் திருவடிகளை ஸ்துதித்து இருப்பதே
போழ்து போக வுள்ள கிற்கும்-இனிமையான அனுபவம் -பரம போக்யமான அனுபவம் –
புன்மை யிலாதவர்க்கு-தாழ்ச்சி இல்லாதவர் -பொழுது போக்குவதற்கு என்று மட்டும் இல்லாமல் -வேறே பிரயோஜனம் கருதாமல்
வாழ் துணையா–பிறவி என்னும் பெரும் கடலை நீந்த -ஸ்வரூப அனுரூபமான வாழ்ச்சிக்கு
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே-ஆ ஸ்ரிதா பவ்யன் -ஆஸ்ரிதற்காகவே அன்றோ அவதரித்தான்
வீழ் துணையாப் போமிதனில்–காதலித்து அதிலே மக்நனாக ஆழ்ந்து -இருப்பதை தவிர
யாதுமில்லை மிக்கதே-விஞ்சினது யாரும் இல்லை வீல் துணை விழுமிய துணை என்றுமாம் –

அவதாரத்துக்கு காரணத்தை சொல்லி-பாது காப்பவனாக அவனையே பற்றுமது ஒழிய
வேறு சீரியதாய் உள்ள ஒரு பற்றுக் கோடு இல்லை-என்கிறார் –

வாழ்தல் கண்டீர் குணம் இது –
அவன் குணங்களை நினைந்து வாழும் இதுவே கண்டீர்-பொருத்தமாவது –

அந்தோ –
கரும்பு தின்னக் கூலி கொடுப்பாரைப் போலே-இவர்களை நான் இரக்க வேண்டுவதே -என்றது
வாழ்ச்சி உங்களதாக இருக்க-இரந்து திரிவேன் நான் ஆவதே -என்றபடி

மாயவன் அடி பரவி போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு-
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சர்யப் படத் தக்கவனாய்-இருந்துள்ள இறைவனுடைய-குணங்களுக்கு தோற்றவர்களாய் –
ப்ரீதியாலே அவன் திருவடிகளை முறை இன்றிக்கே ஏத்தி-அதனாலே போது போக்குவதலைச் செய்வதாக-
அறுதி இட்டுள்ள நன்மையை உடையவர்கள் -சீரியர்கள் -என்றது –
வேறு பயன்களைக் கருதாத ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -என்றபடி –
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும்-போது போக்குமவர்கள் -நான் முகன் திருவந்தாதி -63-என்றவாறு –
இந்த மாயவன் அடி பரவுகையை சூது சதுரங்களை போன்று-காலத்தை கழிப்பதற்கு வழியாக
கொள்ளுகின்ற புன்மை இல்லாதவர்கள் -என்று-பட்டர் அருளிச் செய்வர் –
போக ரூபமாக உள்ளுவர்கள் என்றபடி –

வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் –
அவர்கள் தன் குணங்களை அனுபவித்து வாழ்க்கைக்கு துணையாக-வடமதுரையில் வந்து அவதரித்தவனுடைய –
புன்மை உடையவர்களும் அகப்பட கழித்து அதுவே போது போக்காகா நின்ற பின்பு-
முதலிலே அது குடி புகுராதவனுக்கு அடியார்கள் உடைய சேர்க்கை ஒழிய வேறு பயன் இல்லை அன்றோ-

அவதாரத்துக்கு பயன்
சாதுக்களை பாதுகாப்பதற்காகவும்-
பரித்ராணாய சாதூநாம் விநாசாயா ச துஷ்க்ருதாம்-தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-8-

வண் புகழே வீண் துணையாப் போம் இதனில் –
அவனுடைய கல்யாண குணங்களையே ஆசைப் படும் துணையாக பற்றும் இது போக்கி
வீழ் துணை -ஆசைப்படும் துணை
தாம் வீழ்வார் — தம் வீழப் பெற்றவர் -திருக்குறள் -1191-என்னக் கடவது அன்றோ ஆசையோடு கூடியவரை-
ஆசைப் பட்டவர் -கொட்டை இல்லாத பழம் உண்பது போன்ற சுகம் -அவள் மேல் விழுந்து ஆசைப் பட்டால் -உரிச்ச வாழைப் பழம் –

இதனில்
இதைக் காட்டிலும்

யாதும் இல்லை மிக்கதே –
இதனில் மேலாக இருப்பது ஓன்று உண்டானால் அன்றோ-
இதினின்று என்ன வேண்டும்-இதற்கு மேலாய் இருப்பது ஒன்றும் இல்லை-

———————————————————————————————

யாதும் இல்லை மிக்கதனில்
என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து
கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட
வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்
இல்லை கண்டீர் சரணே–9-1-9-

வேறு ஒன்றை பிரயோஜனமாக -கொண்டால் பெற்றதையும் இழப்பான் -முன்பு உள்ள போகத்தையும் இழப்பான்
-நிரதிசய போக்யன் கிருஷ்ணன் ஒன்றே பிராப்தம்
யாதும் இல்லை மிக்கதனில்-ஐஸ்வர்யா கைவல்யாதி பிரயோஜ நாந்தரங்கள்
என்று என்று அது கருதி–இப்படி வேறு பல நினைத்து -காது செய்வான் கூதை செய்து–கா தை பெருக்கி
கடை முறை வாழ்க்கையும் போம்-கடைசி நிலை வாழ்வும் இழப்பான்
மாதுகிலின் கொடிக் கொள் மாட-வடமதுரைப் பிறந்த-தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்-இல்லை கண்டீர் சரணே
புஷப கேசரம் தாது -இதுவே பிராப்தம்

இவனை ஒழிய வேறு ஒன்றனை ரட்ஷகம் என்று பற்றினவர்கள்-பண்டு நின்ற நிலையும் கெட்டு அழிந்து போவார்கள் –
ஆனபின்பு -இவன் அல்லது சரண் இல்லை -என்கிறார்-
அன்றிக்கே
கைவல்யம் ஆகிற பேற்றினைச் சொல்லுகிறார் -என்னாலும் ஆம் –

யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி –
பகவானுக்கு வேறுபட்டதாய் இருப்பது ஒன்றனைப் பற்றி –
இது ஒழிய நமக்கு பாதுகாவலாய் இருப்பது வேறு ஓன்று இல்லை -என்று சொல்லி-அதனையே பாது காக்கும் பொருளாக நினைத்து -என்றது
ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனே-சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம் – பிரமாணம் படி
செல்வத்தை கொடுப்பதிலும் ஆபத்துக்களை போக்குவதிலும்-அந்த புருஷோத்தமனை விட ஆற்றல் உடையவனாக வேருஒருவனும்
காணப் படுகிறான் இலன் –என்னும் நினைவினை அதிலே பண்ணி -என்னும்படி –

காது செய்வான் கூதை செய்து –
காதினைப் பெருக்கப் புக்கு பண்டுள்ள நிலையினும் கெடுத்துக்-கூதை ஆக்கினாப் போலே –

கடை முறை வாழ்க்கையும் போம் –
தண்ணிதான முறைமையாலே வாழக் கடவ வாழ்வு உண்டு-சம்சாரத்தில்-பசலும் குட்டியுமாய் அளாய் குளாயாய் போருமது –
பசல் பையன் குட்டி பெண் குழந்தை அளாய் குளாய்-களிப்பின் கார்யம்-அதுவும் கூடக் கெடும் இத்தனை -என்றது
ஆபத்தில் -அது பாதுகாவலாக மாட்டாது
அதன் பக்கலிலே தன் பாரத்தை எல்லாம் விட்டானாய் இருக்கையாலே-தான் செய்து கொள்ளும் அத்தனையும் இழக்கும் -என்றபடி –
கைவல்ய புத்தி பண்ணி -பகவத் அனுபவம் இழந்து சம்சார ஐஸ்வர்ய சப்த ஸ்ப்ரசாதிகளையும் இழந்து -என்றுமாம் –

மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த –
கம்சன் வாழ்கிறானாய் -அலங்காரமாக கட்டின கொடியை-கிருஷ்ணன் உடைய அவதாரத்துக்கு என்றே நினைத்து இருக்கிறார் ஆயிற்று இவர்
சிசுபாலன் திரு மணத்துக்கு உடலாக செய்த சடங்குகள் அடங்க தனக்கு-உடலாக செய்ததாக நினைத்து கைப் பிடித்தான் அன்றோ ஸ்ரீ கிருஷ்ணன் –

தாதுசேர் தோள் கண்ணன்-
வைஜயந்தி தொடக்கமான மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட-திருத் தோள்களை உடையவன் -என்றது
வேறு ஒரு பயன் தான் வேண்டா என்றபடி –

அல்லால் இல்லை கண்டீர் சரணே –
அவனை ஒழிய பாதுகாக்க கூடியதாக உள்ள வேறு ஒரு பொருள்-இல்லை காணுங்கோள்-

——————————————————————————-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே
வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல்
அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும்
அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

சேஷத்வம் முதல் நிலை -அடுத்து அநந்யார்ஹத்வம் -நமஸ் உகாரார்த்தம்-சொல்லி -பாகவத சேஷத்வம் -மூன்றாவது நிலை –
சர்வவித பந்து நாராயணன் -என்பதை இதில் சொல்லி -பந்து கிருத்யம் கைங்கர்யம் -ஆய -அர்த்தம் –
8-8 பகவத் சேஷத்வம் யானும் தானாய் ஒழிந்தானே
8-9-அநந்யார்ஹத்வம் -குட்ட நாட்டுத் திருப்புலியூர் –
மாயப்பிரானுக்கு வாழ்க்கை பட்டு
8-10- நெடுமாற்கு அடியார் -பாகவத சேஷத்வ பர்யந்தம் –
9-1-சோபாதிக பந்துக்களை விட்டு -அசாதாரண பந்து வடமதுரை பிறந்தவனே -நாராயண சப்தா ர்த்தம்
எண்ணிடையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொடங்கி -ஆபத் சஹத்வம் -ஒன்பதாம் பத்து தாத்பர்யம் –
கணை ஒன்றினால் ஏழு மரங்கள் எய்தவன் –
வட மதுரை பிறந்தான் -8 தடவை சொல்லி -அஷ்டாக்ஷர மந்த்ரார்த்தம் சொல்லி –
9-2- கைங்கர்யம் அடுத்த பத்தில் -குடி குடி ஆட் செய்ய -ஆய -பிரார்த்தனையாயாம் சதுர்த்தி –
ஐம்பது பாசுரங்களால் ஐந்து அர்த்தங்களும் -திருமந்த்ரார்த்தம் சாதித்தார் –

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
சரண் அது நிற்க வந்து-சொல்லி சொல்லி பார்த்தேன் -அது நிற்க -கருட வாகனமும் நிற்க சேட்டை மடி அகம் பார்த்து உள்ளீர்களே –
சென்று நின்று ஆழி தொட்டனை –
தானே உபாயம் உபேயம் நிலை நிறுத்த ஸ்தாபிக்க அவதரித்து -பூ பாரம் நீக்கி -இது வந்த இடத்தில் செய்த -தர்ம சமஸ்தானம் அர்த்தமாக –
நீங்கள் நினைத்து இருப்பதை திருத்தமாக அவன் இடம் சமர்ப்பியுங்கோள் -பலம் எதிர்பார்க்காமல் –கர்மம் செய்து -சர்வம் ஸ்ரீ கிருஷ்ணாப்பரணம் அஸ்து-
உபாய உபேய பாவம் நிலை நிறுத்தப் பட்டு நிற்க –
மண்ணின் பாரம் நீக்குதற்கே-வடமதுரைப் பிறந்தான்-தத்விரோதிகளை – பூ பாரத்தை நீக்கி -நாக பர்யங்கம் விட்டு -ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதி
திண்ண மா நும் உடைமை உண்டேல்-அவன் அடி சேர்த்து உய்ம்மினோ-உங்கள் அப்பிராயத்தால் உங்களது பதார்த்தம் உண்டாகில் திண்ணமாக
-விசாரிக்காமல் சமர்ப்பி க்க வேண்டும் என்கிறார் -எண்ண வேண்டா நும்மது ஆதும்
அவன் அன்றி மற்று இல்லையே-உம்மிடம் இருப்பதாக நினைத்து இருப்பது எல்லாம் அவனது -உம்முடைய அல்லா என்று நினைத்தீர் ஆகில்
அவனே உங்களது -இதுவே பிராப்ய சொத்து –

தானே புகலிடம் -என்னும் உண்மையை-நிலை நிறுத்துவதற்காக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன்
திருவடிகளைப் பற்றுமினோ –என்கிறார்

கண்ணன் அல்லால்-சரண் – இல்லை கண்டீர்-
கிருஷ்ணன் ஒழிய புகலிடம் ஆவார் வேறு இலர்

அது நிற்க –
இந்த உண்மை பொருள் நிலை நிற்கைக்காகவும் –

மண்ணின் பாரம் நீக்குதற்கே –
அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்குகைக்காகவும் –

-வந்து-வடமதுரைப் பிறந்தான் –
வடமதுரையில் திரு வவதாரம் செய்தான் –

நும் உடைமை உண்டேல் –
ஆனபின்பு-நீங்களும்-உங்கள் உடைமை என நினைத்தன உண்டாகில் –
உண்டேல் -என்றது
தம் நினைவால் இல்லை-அவர்கள் உடைய அன்யதா ஞானத்தால் உண்டான நினைவால் வந்தன உண்டாகில் -என்றபடி –

அவன் அடி -திண்ண மா -சேர்த்து உய்ம்மினோ –
அவன் திருவடிகளில்-அடிமை என்ற நினைவோடு-கடுக-திண்ணமாக-சேர்ந்து கொள்ளுங்கோள் –

எண்ண வேண்டா –
இது தான் அவனதோ நம்மதோ விசாரிக்க வேண்டா –
மாம் மதியஞ்ச நிகிலம்-அவனுக்கே சேஷம் -யானும் நீ என் உடைமையும் நீயே –

நும்மது ஆதும் அவன் –
உங்களோடு-உங்கள் உடைமையோடு வாசி அற-அவனுக்கே உரிமை –

அன்றி மற்று இல்லையே
வேறு இல்லை-
அன்றிக்கே
ஈற்று அடிக்கு-உங்களுடைய பாரத்தில் நீங்கள் செய்ய வேண்டுமவை அனைத்தும்-
உங்கள்தலையில் கிடக்கின்றன அல்ல –எல்லாம் அவன் பக்கலிலே கிடக்கின்றன-என்று பொருள் கூறுதலும் உண்டு-
பலன் கிடைப்பதற்க்கு தகுந்த சாதனங்களும் அவனை ஒழிய இல்லை ஆதலின்-மற்று இல்லை -என்கிறார்-
சமிதி பாதி சாவித்திரி பாதி யாக நீங்களும் ஒரு தலை-கூட்டுப் பட வேண்டுவது இல்லை-என்பதனை உணர்த்துதலின் –
இல்லையே -என்பதன் கண் ஏ காரம்-பிரி நிலையின் கண் வந்தது –
சாதனாந்தரங்கள்- ஸ்வாதந்திரம் போகாதவர்களுக்கு தானே –

————————————————————————————————————

ஆதும் இல்லை மற்று அவனில்
என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச்
சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை
ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை
ஆளுடையார்கள் பண்டே-9-1-11-

8-10 வாசனை மாறாமல் -பலன் -பாகத்தை உத்தமர்களுக்கு சேஷ பூதர்
இந்த திருவாயமொழி கற்றவர்களுக்கு சேஷ பூதர் தாம் என்கிறார் –
ஆதும் இல்லை மற்று அவனில்-என்று அதுவே துணிந்து-உபாயம் உபேயம் அவனே என்று துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை -அழகன் சுலபன்-காட்டி ஆழ்வாரை அடிமை கொண்ட
குருகூர்ச்-சடகோபன் சொன்ன-தீதிலாத ஒண் தமிழ்கள் இவை
ஆயிரத்துள் இப்பத்தும்–சொல் பொருள் குற்றம் இல்லாமல்
ஓத வல்ல பிராக்கள் நம்மை-ஆளுடையார்கள் பண்டே-இந்த திருவாயமொழி பாட யோக்யதை -சரீர பரிக்ரகம் கொண்ட
காலம் தொடங்கி நாதர் ஸ்வாமிகள் என்கிறார்

நிகமத்தில் –
அற நெறியை விட்டு விலகாததாய் இருக்கிற நம் இருவருவருடைய எவன் படிக்கிறானோ-
அவனால் ஞானமான வேள்வியால் நான் ஆராதிக்கப் பட்டவன் ஆகிறேன் -என்வது என் எண்ணம் –
அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் சம்வாதம் ஆவயோ-ஜ்ஞான யஜ்ஞ்ஞென தேன அஹம் இஷ்டா ச்யாம் இதி மே மதி -ஸ்ரீ கீதை -16-70-
என்று அவன் அருளிச் செய்தாப் போலே
இத் திருவாய் மொழியை கற்பவர்கள் எனக்கு பிரியத்தை செய்கின்றவர்கள் ஆவார்கள்-என்கிறார் –
நாதர் -அன்புடையார் -பிரிய தரர் -ஸ்வரூபத்துக்கு ஈடாக ஆழ்வார் ஸ்வாமி அருளிச் செய்கிறார் –
சம்வாதம் -சத்துக்கள் வார்த்தை -நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார் /பீஷ்மர் -தர்மர் -/சுகர் -பரிக்ஷித் /
ஸ்ரீ கிருஷ்ணன் -அர்ஜுனன் /-பராசரர் -மைத்ரேயர் -போல்வார் –

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து –
அவனை ஒழிய வேறு அடையப் படும் பொருளும்-அடைதற்கு உரிய வழியும் -இல்லை -என்று துணிந்து –
சதுரம் -என்ற பாட்டில் -மதுர போகம் -உபேயம் என்றும் -மற்று ஒன்று இல்லை -உபாயம் அவனே -என்றத்தை அத்யவசித்து –

இவர்க்கு இப்படி இந்த துணிவைக் கடுத்தார் ஆர் -எனின்
வேறு ஒருவர் உளரோ –அவனுடைய தோளும் தோள் மாலையும் அன்றோ –என்கிறார் மேல் –

தாது சேர் தோள் கண்ணனை –
அவனுடைய பெரு வனப்பு ஆயிற்று -இவரை இப்படி துணியப் பண்ணிற்று –

தீதிலாத-
தீது இல்லாமையாவது
பகவானுடைய சம்பந்தம் இல்லாத சரிதங்கள் இதில் கூறப் படாமல் இருத்தல் –

ஒண் தமிழ்கள் –
ஒண்மையாவது-உள் உண்டான அர்த்த விசேஷங்கள் எல்லாம்-வெளிட்டு கொடுக்க வற்றாய் இருக்கை –
அன்றிக்கே –
குற்றம் இல்லாதவையாய் -பல குணங்களை உடைத்தாய் -இருத்தல் என்றுமாம் –
அகில ஹேய பிரத்யநீக கல்யாண குணங்கள் நிறைந்தவன் போலே –

குருகூர்ச் சடகோபன் சொன்ன இவை ஆயிரத்துள் இப்பத்தும் ஓத வல்ல பிராக்கள்–
இப்பதத்தினை கற்க வல்ல உபகாரகர் –இவ் உலக வாழ்க்கையின் தண்மையையும்-
சர்வேஸ்வரன் உடைய பிராப்ய பிராபகங்களின் உடைய தன்மையையும் – அன்றோ-இத் திருவாய் மொழியில் சொல்லப் பட்டன –
இதனைக் கற்கவே -தீய வழியைத் தவிர்ந்து -நல் வழி போகத் தொடங்குவார்கள் –
இதற்கு மேற்பட இவர்கள் இவருக்கு செய்யும் உபகாரம் இல்லை அன்றோ –

நம்மை ஆளுடையார்கள் பண்டே –
ஒரு பிறவியிலே இதனைக் கற்கைக்கு தகுதியான அதிகாரத்தை-உடையராய் இருப்பார்கள் ஆகில்
அவர்கள் பண்டே நமக்கு தலைவர் –
அத்யேஷ்யதே -எவன் படிப்பானோ -அவன் என்கிறபடியே-இதனைக் கற்பதற்கு தகுதியான தன்மை உள்ளவர்
பிறவி தொடக்கி நமக்கு தலைவர் –
படிக்கிறவன் -நிகழ் காலத்தில் சொல்லாமல்
படிப்பவன் -எதிர் காலத்தில் சொன்னது போலே –
படிக்க தகுதி யானவர்கள் -என்கிற பொருளில்-
இங்கும் ஓத வல்ல பிராக்கள் -ஓதுவதற்கு தகுதி உள்ளவர்கள் -என்று அருளிச் செய்கிறார்-
யோக்யதை உள்ள அன்று தொடங்கி -அர்ஹயதை உள்ள ஜென்மம் தொடங்கி நாதர் என்கிறார் –

—————————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சடாரி நவமே சதகே
பரோபதேசம் ஆத்யே சதகே
தத் சேஷத்வ அனுபவ சம்மதி சம்மதேந நிச்சித்ய
தம் ஈசன் சர்வவித பந்து தயா நிச்சித்ய
தம் ஈசன் ஆபத்சகம் பிரணமத இதி பரோபதேசம் –
நிச்சயம் பண்ணி -பற்றுமின் -அனைவர் இடம் கொள்ளும் பிரியத்துடன் இவனை -பற்றுமின்
மாதா பிதா -சர்வம் –குலபதே-

——————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஆபத் பந்துத்வ கீர்த்தியா-
கபீந்த்ரே திருட மதி ஜனநாத் –
தைத்யா நாஸாத் பூமவ் ஜாதத்வாத் -உத்தர மதுரா புரிம் 3-10-அஷ்டாக்ஷர –
பந்தோ கிருஷ்ணஸ்ய பாதாஸ்ரயா நம் இதை விணோ நோஸஹாயம்
ரஷா சாமர்த்தியம் -மற்றவர்க்கு இல்லை -கண்ணன் அல்லால் இல்லை –
கண்ணனே சரண் -முதல் ஆழ்வார் –
கண்ணன் அல்லால் இல்லை -திரு மழிசை ஆழ்வார்
நம் கண்ணன் கண் அல்லது மற்று ஓர் கண் இல்லையே -நம் ஆழ்வார் சேர்த்து அருளிச் செய்கிறார்

——————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 81-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு ———–81-

————————————————————————
அவதாரிகை –

இதில் –
சோபாதிக பந்துக்களை விட்டு
நிருபாதிக பந்துவை பற்றச் சொல்லுகிற ஆழ்வார்
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
தன்னைப் பற்றினாரை
தனக்கு அபிமதரான பாகவதர்கள் திருவடிகளிலே
சேர்த்து ரஷிக்கும் சர்வேஸ்வரனே
பிராப்யமும்
பிராபகமும்
சர்வ வித பந்துவும் –
அல்லாதார் அடங்கலும் ஔபாதிக பந்துக்கள் –
ஆனபின்பு –
அவனை ஒழிந்த ஔபாதிக பந்துக்களை விட்டு
பிராதா பார்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா -என்னும்படி
நிருபாதிக-சர்வவித பந்துவுமாய் இருக்கும் சர்வேஸ்வரனுக்கு அடிமை புக்கு
உஜ்ஜீவித்துப் போருங்கோள் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிறரைக் குறித்து உபதேசிக்கிற
கொண்ட பெண்டீரில் அர்த்தத்தை
கொண்ட பெண்டிர் தாம் முதலா -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————————————————-

வியாக்யானம்–
கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார்-
கையில் தனத்தை
அழிய மாறிக் கொண்ட ஸ்திரீகள்
கொண்ட -என்று
அதில் ஔபாதிகதவம் தோற்றுகிறது-
தான் என்று கொண்ட பெண்டீரில் ப்ராதான்யம் தோற்றுகிறது –
இப்படி களத்திர புத்ராதி யாகச் சொல்லப் படுகிற
பந்து வர்க்கம் எல்லாம் –
கூடும் உற்றார் -என்ற பாடமான போது
ஆகந்துகமாக வந்து கூடினவர்கள் -என்றாகிறது –

கன்மத்தால் அண்டினவர் என்றே யவரை விட்டு –
கர்ம ஔபாதிகமாக அடைந்தவர்கள் என்றே
ஔபாதிக பந்து வர்க்கங்களை விட்டு –
கொண்ட பெண்டீர் மக்கள் உற்றார் -என்று தொடங்கி அருளிச் செய்ததை
அனுவதித்து அருளிச் செய்தபடி –

தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் –
தன்னை ஆஸ்ரயித்தவர்களைதனக்கு சேஷ பூதர் ஆனவர்கள் உடன் சேர்க்கும்
ஸ்ரீ யபதியை ஆஸ்ரயுங்கோள் -என்றார் –

ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு –
எத்தனை அறிவில்லாதவர்கள் விஷயத்திலும்
ஹிதத்தை தம்முடைய தீர்க்க தர்சிக்கும்-யசஸை உடையரான ஆழ்வார்-முற் காலத்திலே-
இப்படி ஆத்மஹித தர்சியான இவரும் ஒருவரே -என்றபடி –

ஆர்க்கும் ஹிதம் பார்க்கை யாவது –
கொண்ட பெண்டீர் -என்று தொடங்கி-தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணை -என்றும்
துணையும் சார்வும் ஆகுவார் போல் -என்று தொடங்கி -புணை ஓன்று உய்யப் போகல அல்லால் இல்லை கண்டீர் பொருள் -என்றும்
பொருள் கை யுண்டாய் -என்று தொடங்கி -அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே -என்றும்
அரணாம் அவர் -என்று தொடங்கி -சரண் என்று உய்யப் போகில அல்லால் இல்லை கண்டீர் சதிரே -என்றும்
சதிரம் -என்று தொடங்கி -எதிர் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே -என்றும்
இல்லை கண்டீர் இன்பம் -என்று தொடங்கி -சொல்லி உய்யப் போகில அல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே -என்றும்
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் -என்று தொடங்கி வடமதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே -என்றும்
வாழ்தல் கண்டீர் குணம் இது -என்று தொடங்கி வீழ் துணையாப் போமிதினில் யாதும் இல்லை மிக்கதே -என்றும்
யாதும் இல்லை மிக்கு இதினில்-என்று தொடங்கி -தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே -என்றும்
கண்ணன் அல்லால் -என்று தொடங்கி -அவன் அன்றி மற்று இல்லை -என்றும்
இப்படி பஹூ முகமாக
சர்வர்க்கும்
சர்வ ஹிதங்களையும்
உபதேசித்து அருளிற்று -என்கை-

இம்மட வுலகர் கண்டதோடு பட்ட
அபாந்தவ
அரஷக
அபோகய
அஸூக
அநுபாய
பிரதிசம்பந்தியைக் காட்டி -என்று இறே
ஆச்சார்ய ஹிருதயத்தில் நாயனாரும் அருளிச் செய்தது –

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: