பகவத் விஷயம் காலஷேபம் -169- திருவாய்மொழி – -8-10-1….8-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

நெடுமாற்கு அடிமை -பிரவேசம்
மேலிரண்டு திருவாய் மொழியிலுமாக–ஆத்மாவினுடைய அனன்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –
அதனால் அது பிறர்க்கும் உரித்து அன்று -உணர்வைப் பெற ஊர்ந்து இற ஏறி -என்று
தனக்கும் உரித்து அன்று -அருமாயன் பேரன்றி பேச்சு இலள்-என்று ஆயிற்று சொல்லிற்று –
பிரணவத்தில் நடுப்பததாலும்-நமஸ் சப்தத்தாலும் சொன்ன அர்த்தமாயிற்று சொல்லி நின்றது –
அனன்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை-அவன் அடியார்க்கு அடிமை ஆதல் அளவும் அன்றோ-
அதனைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் –
அவன் அடியாருக்கு கிரய விக்ரயங்கட்கு தகுதியான-அன்று தான்-அவனுக்கு அடிமைப் பட்ட நிலை நின்றதாவது –
எந்தம்மை விற்கவும் பெறுவார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-10-என்று இறே-அன்றோ இருப்பது-
தத் பக்தி நிக்ன மனஸாம் க்ரய விக்ர யார்ஹா -பிரமாணம்
இறைவன் மாட்டு அன்புடைய மனஸ் உடையவர்களுக்கு-விற்றற்கு உரியவன் -என்னக் கடவது இ றே –
அம்முணி ஆழ்வான் போசல ராஜ்யத்தின் நின்று வந்த நாளிலே
பட்டர் கண்டருளி
நீ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போர அடிமை செய்து போந்தாய் –என்று கேட்டோம் .
உன் தன்மைக்கு சேர -நெடுமாற்கு அடிமை -என்னும் திருவாய் மொழியைக் கேள் -என்று-அருளிச் செய்தாராம் –

ஈஸ்வரனுக்கு அடிமை என்று அறிந்த அன்று மயங்கி மீளவுமாம் –
அவன் அடியார்க்கு அடிமை ஆதல் அளவும் உணர்ந்தால் மீள வேண்டா அன்றோ –
செல்வமே புருஷார்த்தம் -என்று இருப்பார் –செல்வமே -என்றும் -வியன் மூ உலகு –
ஆத்மலாபம் புருஷார்த்தம் என்று இருப்பார் -தானே தானே யானாலும் –
பகவானுக்கு அடிமைப் பட்டு இருத்தல் புருஷார்த்தம் -உறுமோ பாவியேனுக்கு –
ஈச்வரனாய் ஆனந்த மய என்று இருக்கும் இருப்பு புருஷார்த்தம் -மூ உலகின் வீடு பேறு –என்று இருப்பராய் அன்றோ இருக்கிறார்கள் –

இப்படிப் பட்ட புருஷார்த்தங்கள்
தனித் தனியும் -திரளவும் நான் பற்றின பாகவதர்களுக்கு-அடிமைப் பட்டு இருத்தல் ஆகிற புருஷார்ததோடு ஒவ்வாது
என்று எடுத்துக் கழிக்கவும் போராது –
இப்படி இருக்கிற இதுவே காலம் என்னும் ஒரு பொருள் உள்ளவரையிலும்
எனக்கும் என்னோடு சம்பந்தம் உடையாருக்கும் வாய்க்க வேண்டும்-என்று வேண்டிக் கொண்டு தலைக் கட்டுகிறார் –

பயிலும் சுடர் ஒளி-என்னும் திருவாய் மொழியைக் காட்டிலும்-இத் திருவாய் மொழிக்கு வாசி என்-என்னில்
பாகவதர்கள் இறையவர்கள் -என்றது அங்கு -எம்மை ஆளும் பரமர்களே –
பாகவதர்கள் இனியர் -என்கிறது இங்கு -வீடுமாறு எனபது என் வியன் மூ உலகு பெறினுமே –

கச்சதா மாதுல குலம் பரதேன ததா அநக-சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரச்க்ருத-அயோத்யா -1-1-
-ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானுக்கு ஆதல்-இவ் வாழ்வாருக்கு ஆதல் அன்றோ இவ் வர்த்தங்களில் ருசி உள்ளது –
நித்ய சத்ருக்ன -எப்பொழுதும் உட்பகைவர்களாய் உள்ள இந்திரியங்களை வென்றவர் -என்பதால்-
பெருமாள் இனியர் -என்று அவன் பக்கல் கண் வையான்-என்று கூறப் பட்டது அன்றோ –

கேசவ பக்தி -பக்த சமாகம் இரண்டும் – பழங்கள் -சம்சார காட்டில் -இதுவே சிறந்தது -ராமானுஜர்
ஸ்ரீ வைஷ்ணவர் பிரதானம் -ஆச்சார்யர் இடம் சேர்த்து வைக்கும் உபகாரகர் -அனுபவம் வளர்த்து -சம்சாரம் கொதிப்பால் தடுமாறி
-இருக்கும் பொழுதும் -திருத்தி -அனுஷ்டான பர்யந்தம் ஆக்கி அருளி –
இந்த உபகாரத்வத்துக்கு ஒப்பு இல்லையே —
புறம்பு உள்ள பற்று அறுத்தும் ஐந்தை சொல்லி ஆறாவதாக –இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும்
-ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் -துர்லபம்
சஜாதீயர் -என்பதால் -மத் பக்த ஜன வாத்சல்யம் –பூஜா அனுமோத்தனம் -ஸ்வயம் -பூஜ டம்ப வர்ஜனம் மத கதா ஸ்ரவணீ ப்ரீத்யம் –
அரங்கன் சேறு செய் முற்றம் -தொண்டர் சேவடி சேறு சென்னிக்கு அணிந்து -சமமாக நினைத்து பூஜிக்க கருட புராணம் –
மேம் பொருளில் மேல் உள்ள பாட்டுக்கள் -எல்லாம் இந்த கருத்தை வலி உறுத்தி –
கைங்கர்ய பிரதி சம்பந்திகள் சேஷிகள் -பாகவத அபசாரம் கொடியது –
சாரமான திருவாயமொழி -பயிலும் சுடர் ஒளியும் நெடுமாற்கு அடிமை -திரு உள்ளம் பின் சென்றே கண்ணி நுண் சிறுத் தாம்பு –
பிள்ளாய் —மாமான் மகள் –போதரிக்கண்ணினாய் -கிளியே பாகவதர்களை முன்னிட்டு ஆண்டாள் -வேதம் வல்லார்களைக் கொண்டே
விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து க்ரமமாக –
குரு பரம்பரை முன்னிட்டே த்வயம் பல பர்யந்தம் ஆகுமா பாகவதர்களை முன்னிட்டே பெருமாள்
ஆட்க்கொண்ட வில்லி ஜீயர் -வார்த்தை -ஸ்மரிப்பது-எம்பெருமானார் -மதுரகவி ஆழ்வார் -ஆண்டாள் -சேர்த்து மா முனிகள்
-உபதேச ரத்ன மாலை -பாகவத நிஷ்டை -விஷ்ணு சித்தர் –வல்ல பரிசு தருவிப்பரேல் -தேவு மாற்று அறியேன் –
புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் –

———————————————————————————————

நெடுமாற்கு அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-

நமஸ் சப்த ஆந்திர அர்த்தம் -3-7-8-தொழு குலம்-பிராப்யம் அங்கு சொல்லி -அதன் விரிவாக்கம் இந்த திருவாயமொழி –
பாகவத சேஷத்வம் இல்லாத பகவத் சேஷத்வம் த்யாஜ்யம்
ஆஸ்ரித வ்யாமுக்தன் -சர்வேஸ்வரன் -சேஷ பூதமான பாகவதர் சேஷத்வம் ஒப்பு இல்லாதது -என்கிறார் –
நெடுமாற்கு அடிமை செய்வன் போல்-அவனை நம்ப வைத்து -எனக்கு விருப்பம் பாகவத சேஷத்வம் –
அவனைக் கருத வஞ்சித்து–
தடுமாற்றற்ற தீக் கதிகள்-துக்க ஹேதுக்கள் அவித்யா கர்மம் வாசனை ருசி ஜென்மம் -இந்த ஐந்தும் மாறாமல் -வருமே
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்–ஆகவே இப்பொழுது பாகவத சேஷத்வம் -தவிர்ந்தேன் -கைங்கர்யம் என்று பேசப் போனதற்கு
பாபங்கள் என்னை வஞ்சித்து போனதே
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே-ஆஸ்ரித வத்சலன் அவன் -இனி மேல் -பாகவத சேஷத்வம் –
கூடும் இது வல்லால்-இதுவே வேண்டுவது
விடுமாறு எனபது என்னந்தோ-இத்தை சொல்ல வேண்டி உள்ளதே அந்தோ எடுத்துக் -கழிக்க கூட இதுக்கு பெருமை இல்லையே பாவமே
-மா வினை தான் இது -தீ வினைகள் போகவே -இப்பொழுது மா வினைகள் சூழ்ந்ததே
வியன் மூ வுலகு பெறினுமே-தரை லோக்ய ஐஸ்வர்யம் பெற்றாலும் –
விடுமாறு என்பது ஏதேனும் உண்டோ -ஆயிரம் நாக்குகள் வாங்கிக் கொண்ட பின்பு தானே அரங்கனைப் பாட முடியாதே –
அதே போல மூ உலகு ஐஸ்வர்யம் பெற்று இவை ஒப்பு இல்லை என்னலாம்

பகவத் விஷயம் அனுபவம் அல்லாமையாலே-ஆத்துமா அனுபவம் புருஷார்த்தம் ஆக மாட்டாது-
செல்வம் போலே நிலை அற்றது அல்லாமையாலே-நிலை நின்ற புருஷார்த்தம் ஆகும் என்றபடி-
உலகத்தார் விரும்புகிற செல்வம் ஆகிய புருஷார்த்தமும்-நான் பற்றின புருஷார்த்ததோடு ஒவ்வாது -என்று
எடுத்துக் கழிக்கவும் போராது –என்கிறார் –

நெடுமாற்கு –
நெடுமாலுக்கு -என்றபடி-
மால் -என்றது பெரியோன் -என்றவாறு –நெடுமையால் நினைக்கிறது அதில் பெருமையை –அறப் பெரியோன் -என்றபடி
தாம் அடிமைத் தன்மையின் எல்லையைக் கணிசிக்கிறவர் ஆகையாலே-அவனுடைய இறைமைத் தன்மையின் எல்லையைப் பிடிக்கிறார் –
அன்றிக்கே
மால் -எனபது வ்யாமோகமாய்-மிக்க வ்யாமோகத்தை உடையவன் -என்னுதல் –நெடுமையால் மிகுதியை நினைக்கிறது -என்றது
தன் அளவில் இன்றியே தன்னடியார் அளவிலே நிறுத்தும்படியான வியாமோகம் -என்றபடி –
21 தலைமுறைகள் அன்றோ ஏறிப் பாய்ந்தது அவன் விஷயீ காரம் –
அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் -என்னக் கடவது அன்றோ –

அடிமை செய்வன் போல் அவனைக் கருத –
அவனுக்கு அடிமை செய்வாரைப் போலே அவனை நினைக்க –அன்புள்ளவர்களைப் போன்ற பாவனை யேயாய்
ஆராய்ந்தால் அது தானும் போட்கேன் -பொய்யன் –

வஞ்சித்து தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த-
தடுமாற்று அற்ற தீக்கதிகள் -முற்றும் -விஞ்சித்து -தவிர்ந்த –
ஒரு நல்ல கார்யத்தைச் செய்து-அது நின்று தடுக்குமது இல்லாமையாலே-
தடுமாற்றம் அற்று வசிக்கிற அறிவின்மை-முதலானவைகள் முழுதும் வஞ்சித்துத் தவிர்ந்தன –
பகல் முழுதும் ஒரு சேர வசிக்க கடவோம் -என்று சொல்லி வைத்து-
இரவு வந்தவாறே ஒரு காலத்திலே உண்டு வைத்து ஒக்க கிடந்தது-
விளக்கை எரிய வைத்துப் போனது அறியாமே வஞ்சித்துப் போவாரைப் போலே-
இனி அடிமை செய்ய வேண்டில் — அவனை வஞ்சித்துக் கருத –எனக் கூட்டி வஞ்சித்தலை-தமக்கு அடைமொழி ஆக்கலுமாம் –

முற்றும் தவிர்ந்த –
நாம் போக்கிக் கொள்ளும் அன்றே அன்றோ க்ரமத்தால் போக்க வேண்டுவது –
பக்திமானுடைய புண்ய பாபங்கள் அனைத்தும் அழிகின்றன –
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான ப்ரதூ யந்தே-ய ஏதத் ஏவம் வித்வான் அக்னிஹோத்ரம் ஜூஹோதி -சாந்தோக்யம் -5-24-3-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ-அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுசா -ஸ்ரீ கீதை -18-66-
என்கிறபடி அன்றோ அவன் போக்கும் போது இருப்பது –

சதிர் நினைந்தால் –
அவன் திருவடிகளிலே குனிந்த அளவிலே-தீவினைகள் அடங்கலும் போன படியை நினைந்தால்
பேற்றுக்கு எல்லை யானாரை அன்றோ பற்ற அடுப்பது –
உறுவது பார்க்கில் அவன் அடியாரை அன்றோ பற்ற அடுப்பது –

கொடுமா வினையேன் –
ப்ரீதி தலை மண்டை இட்டுச் சொல்கிறார்-
பாட்டுக் கேட்பார்-பாட்டு ஈடு படுத்தினவாறே -பாவியேன் -என்னுமாறு போலே –
அன்றிக்கே
முதன் முதலிலேயே -பொய் நின்ற ஞானமும் -தொடங்கி-
அவன் அடியாரைப் பெற்ற பெற்றிலேன் -என்பார்-பாவியேன் -என்கிறார் என்னலுமாம்-
நீராடப் போதுவீர் -பிரதமத்திலே அருளிச் செய்தாய் போலே செய்யாமல் போனேனே -என்கிறார்-

அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால் –
தன் திருவடிகளைப் பற்றினார் திறத்திலே அவன் மிக்க வ்யாமோகத்தைப்
பண்ணுவானே ஆனால் -அவன் விரும்பினாரை அன்றோ நமக்கும் பற்ற அடுப்பது -என்றபடி
அவ்வடியார்கள் கூட்டத்தில் அவர்களோடு ஒத்தவராய் இருப்பவர் அல்லர்
அவன் இறைவனாம் தன்மையில் முடிந்த நிலையில் நிற்குமா போலே-
இவர் அடிமையின் தன்மையில் முடிந்த எல்லையில் நிற்கிறவர் ஆதலின்-
அடியே -எனத் தேற்ற ஏகாரம் கொடுத்து ஓதுகிறார்-பிரிநிலை ஏகாரம் ஆகவுமாம் -என்றது
அவர்களோடு ஒப்பூண் உண்ண இருக்குமவர் அல்லர் –அவர்கள் காலைப் பற்றுமவர் -என்றபடி –

வீடுமாறு -எனபது என் –
புறம்பு உண்டான விஷயத்திலே விடுவது பற்றுவது ஆனா செயலை-இவ்விஷயத்திலும் செய்யவோ –
அந்தோ –
நான் பற்றின பேற்றுக்கு -நாலு மூன்று படி-ஐஸ்வர்யார்த்தி -கைவல்யார்த்தி -பகவத் லாபார்த்தி -மூவரையும் -கழித்து –
கீழே நிற்கும் செல்வம் -இத்தோடு ஒவ்வாது-என்ன வேண்டுவதே -என்று -அந்தோ -என்கிறார் –

வியன் மூன்று உலகு பெறினும்
காடும் மலையுமான பாகங்களைத் திருத்தி-அனுபவ போக்யமாம் படி செய்து-
மூன்று உலகங்களையும் எனக்கு கை யடப்பு ஆக்கினாலும்-விடுமாறு எனபது என் அந்தோ-
செல்வத்துக்கு உலகத்தாரால் விரும்பி போற்றப் பட்டு-ஏற்றுக் கொள்ளப் படுகின்ற தன்மை-
உண்டாகையினால் அன்றோ உவமையாக எடுத்துச் சொல்வதற்கு-ஒண்ணததாய் இருக்கும்-
இது நான் பற்றின பாகவதர்களுக்கு அடிமை என்பதனோடு ஒவ்வாது -என்ன வேண்டுகிறது-

—————————————————————————————

வியன் மூ வுலகு பெறினும் போய்த்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

வ ர்ஷுக வளாவாஹம் போல் ஆஸ்ரிதர் விஷயத்தில் -உதார ஸ்வ பாவன் –அவன் அடியார் சேஷத்வத்துக்கு
-ஐஸ்வர்ய கைவல்யம் சேர்ந்தாலும் -சத்ருசம் இல்லை
வியன் மூ வுலகு பெறினும் போய்த்-தானே தானே ஆனாலும்–ஆத்மா தானே பகவத் சம்பந்தம் இல்லாமல்
புயல் மேகம் போல் திருமேனி-ஆஸ்ரித உபகார சீலன் -அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்–பகவத் சேஷத்வ பூதர் திருவடிகளில்
சயமே அடிமை தலை நின்றார்-ஸ்ரீ பரத ஆழ்வான்-ஸ்வயம் பிரயோஜனமாய் இருக்கும் -ஜெயம் என்றுமாம் -அடிமையை மேல் எல்லையில் –
திருத்தாள் வணங்கி இம்மையே-பயனே இன்பம் யான் பெற்றது-பாகவத சேஷத்வம் அனுபவித்து இருக்கும் அடியேன்
புருஷார்த்தங்கள் -அந்நரூபமாக இருக்க -இவற்றை -உறுமோ பாவியேனுக்கே–இப்படி ஒப்புக் சொல்ல வேண்டும் படி

மேலே கூறிய செல்வத்தோடு-ஆத்ம அனுபவத்தைச் சேர்த்துத் தந்தாலும்
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தல் ஆகிற-பேற்றுக்கு ஒவ்வாது –என்கிறார்

வியன் மூவுலகு பெறினும் –
பரந்து இருக்கின்ற மூன்று உலகங்களின் செல்வத்தையும்-என் ஒருவனுக்கே ஆக்கினாலும் –

போய்த் தானே தானே ஆனாலும் –
சம்சார சம்பந்தம் அற்றுப் போய்-கேவல ஆத்துமா அனுபவம் பண்ணப் பெற்றாலும் –
தானே தானே -என்ற அடுக்குத் தொடரால்-சம்சாரத்தில் புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் தானுமாய்-வாழ்கின்ற வாழ்க்கையைத் தவிர்ந்து –
பரம பதத்தே போய் -நான் பரமாத்வாவுக்கு இன்யன் நான் பரமாத்மாவுக்கு இனியன்-என்று கழிக்கும் அத்தனையும் விட்டு-
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -தைத்ரியம் –
கேவலம் தானேயாகைத் தெரிவித்த படி –

புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ் –
மழை மேகம் போலே இருக்கிற திருமேனியைக் காட்டி-எல்லா உலகங்களையும் எழுதிக் கொண்டு இருக்கிறவனுடைய
சாத்தப் பட்ட பூக்களையும் வீரக் கழலையும் உடைய-திருவடிகளின் கீழே –
அழகு இல்லாதாவனாயினும் விட ஒண்ணாத சம்பந்தத்தை உடையவன்-ஆதலின் -அம்மான் -என்கிறது –

சயமே அடிமை தலை நின்றார் –
அடிமை செய்தலே பிரயோஜனமாக-எல்லா அடிமைகளும் செய்யுமவர்கள் –
அன்றிக்கே
அவனுடைய அழகிலே தோற்று எல்லா அடிமைகளையும் செய்யுமவர்கள் –
சயம் -ஸ்வயம் அல்லது ஐயம் –

திருத்தாள் வணங்கி-
சரீரத்துக்கு வேறு பட்டதாய் –நித்தியமான ஆத்துமாவை அடைவதில் காட்டிலும்-
அவன் வடிவு அழகிலே தோற்று இருக்குமவர்கள்-வடிவில் ஒரு உறுப்பு அமையும் -என்கிறார் –

இம்மையே பயனே இன்பம் –
சரீரத்தை விட்டுச் சென்று அனுபவிக்கும் அது அன்றிக்கே-இந்த உலகத்தில் பிரயோஜன ரூபமான-சுகமாயிற்று நான் பெற்றது
ஒரு சாதனத்தைச் செய்ய-அச் சாதனத்தாலே கை புகுரும் -என்று நினைத்து இருத்தல் இல்லை-என்பார் -பெற்றது -என்கிறார் –

உறுமோ-
இதனோடு ஒக்குமோ –

பாவியேனுக்கே –
நிலை நின்ற புருஷார்த்தின் எல்லைக்கும்-புருஷார்த்தம் அல்லாத்தற்கும்-வாசி சொல்லும்படியான பாபத்தைச் செய்தவன்-பாபத்தைச் செய்தவன்-
பகவத் பிராப்தி -அனுபவம் இல்லை கைவல்யம் அப்ராப்தம் -ஐஸ்வர்யம் அல்பம் அஸ்திரம் –
பாகவத சேஷத்வம் -ஸ்திரமாயும் -பகவத் அனுபவமும் உண்டே -அவன் சம்பந்தம் விடாத பாகவத சம்பந்தம் சேஷத்வம் –

——————————————————————————————

உறுமோ பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே-8-10-3-

அசேஷ ஜன சம்ச்லேஷ ஸ்வ பாவன் -த்ரி விக்ரமன் -திரு வடிகளை பெறுகையும்-லோக விக்ராந்தை சரணம் -உலகம் அளந்த பொன்னடி –
அடியார் இங்கேயே சன்னிஹிதராக இருக்க -சீறியது இல்லை –
உறுமோ பாவியேனுக்கு-இவ்வுலக மூன்றுமுடன் நிறைய-ஜகாத் ரத்தமும் ஏக நிமிர்ந்த வேகத்தில் –
சிறுமா மேனி நிமிர்ந்த–சிறுமையின் வார்த்தையை மா வலி இடம் -பாலகன் என்று பரிபவம் செய்யேல் –
எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்–சம்பந்தம் உண்டே -நிரதிசய போக்யமான
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்-புகுதல் அன்றி –அலங்க்ருத்ய சிரைச் சேதம் போலே -கண்ணி நுண் சிறுத்த தாம்பு — அப்பனில்-
அவன் அடியார்-சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே-இந்த தேசத்திலே -இருக்க -இப்பொழுதே பற்றும் படி –
ததீய சேஷத்வம் பர்யந்தமான தத் சேஷத்வம் ஒழிய -தகுமோ -தத் சேஷத்வம் மாத்திரம் சீரியது அன்று

செல்வம் என்ன-கைவல்யம் என்ன-இவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாய்-உயர்ந்ததாய்-பகவல் லாபம் உண்டானாலும்
இங்கே இருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்கைக்கு அது ஒவ்வாது -என்கிறார்
உலகம் அளந்த பொன்னடிக்கு நல்ல ஸ்ரீ வைஷ்ணவர்கள் இங்கே இருந்து-என்னை அடிமை கொள்ளில் –
அதற்கு –உலகம் அளந்தவன் திருவடிகளில் அடிமை தான்-உறாது -என்கிறார்-

உறுமோ பாவியேனுக்கு-
ஆத்தும அனுபவத்தையும் செல்வத்தையும் குறித்துச் சொன்ன வார்த்தையை-பகவத் விஷயத்திலும் சொல்லுகிறார் –
மேலே கூறியவை போன்று கழிக்க ஒண்ணாது –
புருஷார்த்ததின் எல்லை அல்லாமையாலே கழிக்க வேண்டும் -என்றது –
தள்ளவும் கொள்ளவும் ஒண்ணாத படியான பாவத்தைச் செய்தேன் -என்றபடி –
பாவியேன் –
முதல் நிலத்துக்கும்-முடிந்த நிலத்துக்கும்-வாசி சொல்ல வேண்டும்படியான பாபத்தைச் செய்தவன் –

இவ்வுலக மூன்றுமுடன் நிறைய –
சில ஏரிகள் வற்றிப் பாழாய்க் கிடக்க-நினைவு இன்றிக்கே மழை பெய்ய-நிறைந்து இருக்குமாறு போலே
தன வாசி அறியாதே மூன்று உலகங்களும்-ஒருக்காலே நிறையும் படி –

சிறுமா மேனி நிமிர்ந்த –
கண்களாலே முகந்து அனுபவிக்கா லாம்படி சிறுத்து-அழகுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற
திரு மேனியை நிமிர்த்த –

எம் –
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு -இரண்டாம் திருவந்தாதி -61- என்றபடியே-அடியார்கட்காக செய்த செயல் அன்றோ –

செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் –
மலர்த்து -செவ்வி -குளிர்த்திகளுக்கு-தாமரையை ஒப்பாக சொல்லலாம் படி இருக்கிற
கண் அழகை உடைய ஸ்ரீ வாமனனுடைய-அழகிய மிக்க வாசனையை உடைத்தான-நாட்ப்பூ போலே இருக்கிற திருவடிகளின் கீழே புகுதல் –
நறு மா விரை –
நன்றாய் மிக்க வாசனை –
நறு மா விரை நாண் மலரடி காணும்-இவருக்கு வேப்பங்குடி நீராய்-உறுமோ என்று கழிக்கிறது-என்றது
பகவத் விஷயத்திலே -வெளிறு கழிந்த பாகமான இது ஆயிற்று –
பரத்வம் முதலானவைகளை விட அதி சுலபமானது என்பதால் –இவருக்கு பாகவத புருஷார்தத்தைப் பற்றிக் கழிக்க-வேண்டியது ஆகிறது –

அன்றி –
அவர்களைத் தவிர்ந்து –

அவன் அடியார் –
ஸ்ரீ வாமனனின் அழகிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
அவர்கள் ஆகிறார்
முன்னம் குறள் உருவாய் மூ அடி மண் கொண்டு அளந்த
மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் -பெரிய திருமொழி -9-4-2-என்று இருக்குமவர்கள் –

சிறுமா மனிசராய் –
வடிவு சிறுத்து பிரபாவம் பெருத்து இருக்குமவர்கள்-
சிறுமை பெருமை யாகிற மாறுபட்ட இரண்டு தர்மங்கள்-ஒரு பொருளில் சேர்ந்து இருத்தல் எப்படி -என்று
பட்டர் இளமைப் பருவத்தில் ஆழ்வானைக் கேட்க
நம்மோடு ஒக்க -அன்னம் பானம் முதலானவைகள் தாரகம் -என்னலாய்-பகவத் விஷயத்தில் மூழ்கி இருக்கும் தன்மையைப் பார்த்தால்
நித்ய சூரிகளோடு ஒப்பார்கள் என்னலாய் இருக்கிற-
முதலி ஆண்டான்-அருளாள பெருமாள் எம்பெருமானார் ஜீயர்-ஸ்ரீ கோவிந்த பெருமாள் -எம்பார்-
இவர்கள் காண்-சிறு மா மனிசர்கள் -ஆகிறார் என்று பணித்தார் –

என்னை யாண்டார் –
என்னை அடிமை கொண்டவர்கள் –

இங்கே திரியவே –
என் கண் வட்டத்திலே சஞ்சரியா நிற்க
அன்றி -நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் -பாவியேனுக்கு உறுமோ –
இவருடைய கண்ணி நுண் சிறு தாம்பு இருக்கிறபடி-
ஸ்ரீ மதுர கவிகட்கும் அடி இது அன்றோ –
பொய் நின்ற ஞானம் தொடங்கி-முனியே நான்முகனே -என்ற திருவாய் மொழி முடிய
இவரைத் தொடர்ந்து பின் பற்றிய இடத்து-ஆழ்வார் தமக்கு பிரயோஜனமாக சொன்ன
பயிலும் சுடர் ஒளி –
நெடுமாற்கு அடிமை-
என்னும் திருவாய் மொழி களையே தமக்கு தஞ்சமாக பற்றினார்-

எவை எங்களுடைய நல் ஒழுக்கம் களோ அவை கொள்ளத் தக்கவை -என்று
ஆச்சார்யன் சிஷ்யனுக்கு உபதேசிக்கிறார் -என்னக் கடவது அன்றோ –
யாநி அஸ்மாகம் ஸூ சரிதானி-தாநி த்வயா உபாச்யானி நோ இதராணி -தைத்ரியம்

—————————————————————————————

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச்
செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-

ததீயர் நடை யாடும் இந்த விபூதியில் –ஆபத் சகனான அவன் உடைய -பகவத் கைங்கர்யம் சித்தித்தால் -பாகவதர்கள் திரு உள்ளம் உகக்கும் படி –
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்-இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த–பெருத்த சிலாக்கியமான ஜகம் -பிரளய ஆபத்தில் –
செங்கோ லத்த பவள வாய்ச்–ஊனுடு உமிழ்ந்தால் சிவந்த வாயை -பவளம் போன்ற திரு அதரம்
செந்தாமரைக் கண் என் அம்மான்-புண்டரீகாக்ஷன் -என் ஸ்வாமி
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்–பொங்கி எழும் புகழ்கள் -சொல்லி முடிக்க முடியாதே -குண அனுசந்தானம் -வர்த்தித்து வளரும் –
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்-சர்வ இந்திரிய அபஹாரியான -இந்திரிய வசம் இல்லாத –
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்-ஏய்ந்த பொருந்திய -புஷபங்கள் கையிலே
வழி பட்டு ஓட அருளிலே-பாகவத உத்தமர்கள் முக் கரணங்களால் செய்த கைங்கர்யம் போலே கிட்டினால் எங்கே போக வேண்டும்

ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உகப்பான கைங்கர்யம் கிடைக்குமாகில்
அவர்கள் சஞ்சரிப்பதனால் கொண்டாடத் தக்க தான இந்த உலகத்தில் இருப்பதே புருஷார்த்தம் -என்கிறார் –
அன்றிக்கே
மேல் பாசுரத்தில் சிறு மா மனிசர் -என்றீர்-இங்கே -என்றீர்-இது இருள் தரும் மா ஞாலம் அன்றோ-
பகவத் கைங்கர்யத்தை வளர்க்கக் கூடியதான பகவானுடைய அனுபவம்-முற்றும் கிடைப்பது பரம பதத்தில் அன்றோ -என்னில்
அந்த அனுபவம் அவன் திருவருளால் கிடைக்குமாகில்-இங்கேயே வசித்தால் குற்றம் என் என்கிறது –
அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் திருவருள் அன்றோ காரணம் –
அது இங்கே கிட்டுமாகில் இங்கேயே வசிப்பதனால் குற்றம் என் என்கிறார் -என்றபடி-

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் –
தண்மை -என் –

இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த –
மிக்க பரப்பை உடைத்தான பூமியை-பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்து நோக்கி
படைப்பு காலம் வந்த வாறே உமிழ்ந்த –

செங்கோ லத்த பவள வாய்ச் –
பிரளயத்திலே தள்ளினாலும் விட ஒண்ணாத திரு அதரத்தை உடையவன் –
சிவந்து அழகியதான பவளம் போலே இருக்கிற திரு அதரம் –

செந்தாமரைக் கண் என் அம்மான் –
என்னை நோக்காலே -உனக்கு ஜிதம் -எண்ணப் பண்ணினவன்-
மேலே கூறிய குணத்தாலும் அழகாலும் என்னை எழுதிக் கொண்டவன் –

பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் –
பொங்கி எழா நின்றுள்ள கல்யாண குணங்கள்-வாயிலே உழவே –
ஆற்றுப் பெருக்கு போலே கிளர்த்தி உடைத்தாய்-புக்காரைக் கொண்டு கிளர வற்றான குணங்கள் ஆதலின்-பொங்கு ஏழ் -என்கிறது –
ஏழ் -எழுதல் -மேலே கிளர்தல் –
அன்றிக்கே –
பொங்கி கேழ் என்று பிரித்து-பரந்து அழகான குணங்கள் -என்று பொருள் கூறலுமாம்
பொங்கி -பரந்து கேழ் -அழகு –

புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
-எல்லா இந்திரியங்களையும் கொள்ளை கொள்ளத் தக்கதான-வடிவு என்மனத்திலே இருப்பதாய் –

அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் –
அந்த வடிவுக்கு தக்கதான மலர்கள் கையிலே உளவாய் –

வழி பட்டு ஓட அருளிலே –
நெறி பட்டு செல்லும் படி அருளப் பெறில்-என்றது-
மனம் வாக்கு காயம் என்ன இம் மூன்றும் அவன் திருவடிகளிலே-
எப்பொழுதும் அடிமை செய்யும்படி அவன் திரு வருளைப் பெற்றால் -என்றபடி –

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் –
பாகவதர்கள் உடைய ப்ரீத்தியின் உருவமான-பகவத் கைங்கர்யத்தை-அவன் திருவருளாலே இங்கே செய்யப் பெறில்-எனக்கு அதுவே பேறு -என்கிறார் –
திரிதந்தாகிலும் தேவபிரானுடை-கரிய கோலத் திரு உரு காண்பன் நான் –
ஆசார்ய ஹிருதயம் -அழும் தொழும் ஸ்நேக பாஷ்ய அஞ்சலியோடு –புலன் கொள் நித்திய சத்ரு விசிதனம் –
என்ற ஸ்ரீ சூக்தி இங்கே அனுசந்தேயம்

———————————————————————————–

வழி பட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-

நிரதிசய ஆனந்தம் உடன் ஐஸ்வர்ய கைவல்யம் கூடினாலும் -ஹேய சரீர பரிக்ரகம் பண்ணி -பாகவதருக்கு உறுப்பாக திருவாய் மொழி பாடுவதற்கு சத்ருசமோ –
வழி பட்டு ஓட அருள் பெற்று-நித்ய கைங்கர்யத்தில் -நெறி பட்டு -அவன் பிரசாதம் லபித்து
மாயன் கோல மலர் அடிக்கீழ்-ஆச்சர்ய ஸ்வ பாவன் -வியப்பாய் வியப்பு -நிரதிசய போக்யமான –
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி-வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்-தேஜோ மயமான வெள்ளத்தில் இன்புற்று –
முழுதுமே -ஐஸ்வர்யம் கைவல்யம் சமஸ்தமும் பெற்றாலும் -இழி பட்டு ஓடும் உடலினில்-நச்வரம் -பிராக்ருதமான சரீரம்
பிறந்து தன் சீர் யான் கற்று-கை கழிய போகும் சரீரம் பிறந்தாலும் –நிரதிசய போக்யன் -அஹம் -அவன் கல்யாண குணங்களை அறிந்து
-த்வா -நீசனான நான் -கற்று -அப்யஸித்து –மொழி பட்டு ஓடும் கவி அமுதம்-அடியார்க்கு இன்ப மாரி -தொண்டர்க்கு அமுது
-பக்தாம்ருதம் -கேட்டாரார் வானவர்க்கு செஞ்சொல் -பாகவதர் ஆனந்தம் அடைவதே உத்தேச்யம் –
கட்டளை பா இனம் -அனுபவ ஜனித்த ப்ரீதி சொல்லாய் ஓடும் –
நுகர்ச்சி உறுமோ முழுதுமே-அடியார் உடன் சேர்ந்து அனுபவிப்பதும் ஒக்குமோ –
அர்ச்சிராதி மார்க்கம் உட்படட நமக்கு அருளி -இனி இனி -என்று விருப்பத்தின் கால் கூவி -துக்கித்து இருந்தாலும் -சாதித்தாரே-

இப்படிப் பட்ட பகவானுடைய அனுபவமும்-மேல் கூறிய புருஷார்த்தங்களும் எல்லாம் கூடினாலும் –
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் –என்கிறபடியே-
பாகவதர்களுக்குப் பிரியமாக திருவாய் மொழி பாடி-அடிமை செய்யும் இதனோடு ஒக்குமோ -என்கிறார் –

பகவத் பிரசாதத்தால் பெற்று
அழகாலும் ஸூ சீலத்தவ குணத்தாலும் -மாயனான கோல மலர் அடிக்கீழ்

சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து –
ஆற்றுப் பெருக்கு போலே சுழித்து செல்லுகிற –ஒளி அலைகளை உடைத்தான பரம பதத்திலே –
சூர்யன் அக்னி ஆகியவற்றின் ஒளிகளைக் கடந்துள்ள-ஒளியுடன் விளங்குகிற
மாகாத்மாவின் ஸ்ரீ மன நாராயணன் உடைய ஸ்ரீ வைகுண்டம் -என்னக் கடவது -அன்றோ –
அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோ மகாதமன-ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ்ப்ரேஷம் தேவதா நவை -பாரதம் -ஆரண்ய பர்வம் –
ஏஷக்யேவ ஆனந்தயாதி -தைத்ரியம்

முழுதுமே –
மேலே கூறிய செல்வம் முதலானைவைகளும்-இதனோடு கூடப் பெற்றாலும்-

இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து-
தாழ்வுக்கு எல்லையாம் படி கை கழிய போன சரீரத்தோடு பிறந்து –

தன் சீர் –
நித்ய சூரிகளும் குமுழி நேர் உண்ணும்-கல்யாண குணங்களை –

யான் கற்று –
நித்ய சம்சாரியாய்-அந்த குணங்களுக்கு அடைவு இல்லாத நான் அறிந்து –

மொழி பட்டு ஓடும் –
அவை உள் அடங்காமையாலே சொல்லாய் வெளிப்படுகின்ற-

கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ –
திருவாய் மொழி யாகிற அமுதத்தை-அனுபவிக்கையோடு ஒக்குமோ –
அவன் அடியார் சிறு மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய
நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ் புகுதல் உறுமோ -என்றாரே மேல்-
அதனை விட்டு
கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதும் -என்கிறாரே இங்கு-
அதனை விட்டாராய் இருக்கிறதோ -என்னில் -விட்டிலர்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் -9-4-9-என்கையாலே
அவர்களுக்கு அடிமை செய்கிற படி –
இன்புற்று இருந்தாலும் –இந்த பரமாத்மா ஆனந்திப்பிக்கிறான் –என்கிறபடியே

————————————————————————————–

நுகர்ச்சி உறுமோ மூ வுலகின்
வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகரச் செம் பங்கி எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே–8-10-6-

விரோதி நிரசன சீலன் -சர்வேஸ்வரன் -ஜகத் காரண பூதன்-அவனாக இருக்கும் இருப்பும் ஒப்போ -என்கிறார் –
நுகர்ச்சி உறுமோ மூ வுலகின்-வீடு பேறு தன் கேழ் இல்–ஒப்பு இல்லாத புகரை உடைய -சம்ஹார ஸ்ருஷ்ட்டி -ஈஸ்வரத்துவம்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட-கோபத்தால் சிவந்த முகம் குவலயா பீடம்
பொன் ஆழிக்கை என் அம்மான்-ஸ்வாமி -ஸ்ப்ருஹநீயமான –
நிகரச் செம் பங்கி எரி விழிகள்–நீண்ட அசுரர் உயிர் எல்லாம்-ஜாதிக்கு உசிதமான — நாலுகிற
செம்பு காய்ந்த நெருப்பு போன்ற -கோபம் கொப்பளிக்கும் கண்கள் என்றுமாம் –
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்-பெரிய தனி மாப் புகழே-பெரிய திருவடி நாயனார் நியமித்து

மேலே கூறப்பட்ட செல்வம் முதலானவைகளும்-
இறைவனே உலகின் படைப்பு முதலானவற்றுக்கு எல்லாம் காரணமான சர்வேஸ்வரனாய்-
தனக்கு மேல் ஓன்று இல்லாத ஆனந்தத்தை உடையனாய்-இருக்கும் இருப்பும்-
பாகவத பிரீதி ரூபமாக திருவாய்மொழி பாடி அனுபவிக்கும் இன்பத்தோடு ஒவ்வாது -என்கிறார்
புட்பாகன் உடைய பெரிய ஒப்பு இல்லாத விலஷணமான-புகழை திருவாய்மொழி யாலே
நுகருமதற்கு விபுவான அவனுடைய ஆனந்தமும் போராது என்கிறார் –

நுகர்ச்சி உறுமோ-
திருவாய் மொழி முகத்தாலே பகவானுடைய குணங்களை-அனுபவிக்குமதனோடு ஒக்குமோ –
அவனாலும் இந்த ஆனந்தம் முழுவதும் அனுபவிக்க முடியாதே -தத்வ த்ரயத்தையும் கபளீ கரம் கொண்ட அவா அன்றோ ஆழ்வாரது –

மூ வுலகின் வீடு பேறு –
தன் நினைவின் ஏக தேசத்தாலே உலகத்தைப் படைத்தல் அழித்தல்கள் ஆகும்படி இருக்கிற
இறைமைத் தன்மைதான் அதனோடு ஒக்குமோ –
அவனுக்கு அன்றோ இது ஐஸ்வர்யமாகத் தோற்றுவது –இவர்க்கு இது புருஷார்த்தமே –
உலகத்தை படைத்தல் முதலான தொழில்கள் நீங்கலாக-ஏனையவற்றில் பரமாத்வோடே-
ஒத்தவன் ஆகிறான் முக்தன் -என்கிறபடியே-ஜகத் வியாபார வர்ஜம்-சாரீர மீமாம்சை -4-4-17-
ஸ்வரூபத்துக்கு தக்கவை ஆனவை அன்றோ புருஷார்த்தம் ஆவது-
தொழும் கை –கைங்கர்யம் நம் கர்த்தவ்யம் -தொழுவித்தும் கை அவனது -சேஷித்வம் அவனது –

தன் கேழ் இல் புகர்ச் செம் முகத்த களிறு அட்ட –
மிடுக்கிற்கு தனக்கு ஒப்பு இன்றிக்கே இருப்பதாய்-புகரையும்-
சீற்றத்தாலே சிவந்த முகத்தையும் உடைத்தான-குவலயா பீடத்தை முடித்த –

பொன் ஆழிக்கை –
அழகிய திரு ஆழி மோதிரத்தாலே-அலங்காரத்தை உடைத்தான திருக்கையை உடையவன் –
குவலயா பீடத்தின் கதுப்பிலே அடித்த போது கையும் திரு வாழி மோதிரமும் இருந்தபடி –

என் அம்மான் –
கையும் அறுகாழியுமான-மெல்லிய மோதிரம் -வடிவைக் காட்டி-என்னை எழுதிக் கொண்டான் –
உகவாதாரை மிடுக்காலே அழித்தான்-உகந்தாரை அழகாலே அழித்தான் –

நிகரச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன் –
சாதிக்கு தக்கதான சிவந்த மயிரை உடையவராய்-எரி போலே விழியா நின்றுள்ள கண்களை உடையவராய்-
பெரிய வடிவை உடையரான அசுரர்கள் உடைய உயிரை எல்லாம்-தகர்த்து உண்டு –
இது தானே இயல்பாக இருக்கிற பெரிய திருவடியைக் கருத்து அறிந்து-நடத்துகின்றவனுடைய

பெரிய தனி மாப் புகழே-
அளவிடற்கு அரியனாய்-உபமானம் இல்லாதவனாய்-
இருந்துள்ள கல்யாண குணங்களை திருவாய் மொழி முகத்தாலே அனுபவிக்கும்-அனுபத்துக்கு ஒக்குமோ -என்றது
திருவாய் மொழி நுகரும் ஆனந்தத்துக்கு-
ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல வீற்று இருக்கும்-ஆனந்தமும் போராது –என்கிறார் -என்கிறபடி –

—————————————————————————————-

தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

அகில ஜகத் காரண பூதன் -சர்வேஸ்வரன் திருவடிகளை பிறப்பிக்கும் அத்தை விட பாகவத சம்ச்லேஷம் என்றும் ஓக்க உண்டாக வேணும் என்கிறார் –
தனி மாப் புகழே எஞ்ஞான்றும்-அத்விதீயம் -அதிசயித்த ஆகாரம் -காரணத்தவம்-சர்வ காலமும் வேதாந்த பிரசித்தமாக
நிற்கும் படியாத் தான் தோன்றி–ஸ்ருஷ்ட்டி உன்முகனாய் ஆவிர்பவித்து
முனி மாப் பிரம முதல் வித்தாய்-பஹுஸ்யாம் சங்கல்பத்தால் -வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி பண்ண சமஷடி ஸ்ருஷ்ட்டி பண்ணி -உபாதான காரணமாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த-தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப்-அத்யந்த சுகுமாரமான திருவடிக்கு கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்–காரண குணங்களுக்கு தோற்று-நனி மாக் கலவி இன்பமே-சம்ச்லேஷேக சுகம்
நாளும் வாய்க்க நங்கட்கே-நித்தியமாக வாய்க்க

தனியே அனுபவிக்கும் பகவான் உடைய அனுபவம்-எனக்கு வேண்டா-
பாகவதர்களோடு கூட அனுபவிக்கும் பகவான் உடைய அனுபவமே-
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்-எனக்கு உண்டாக வேணும் -என்கிறார் –
விஷய விபாகத்தாலே பரிகரிக்கிறார் -பாகவத அனுபவம் இல்லாத பகவத் அனுபவம் த்யாஜ்யம் -என்கிறார் –

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் –
உபமானம் இல்லாததாய்-ஸ்லாக்கியமான புகழே-காலம் என்னும் ஒரு பொருள் உள்ளவரையிலும் நிற்கும்படியாக –

தான்-
மதத் தத்வத்துக்கு காரணமான-பிரக்ருதியை சரீரமாக உடையனான நான் –
அன்றிக்கே –
விரும்புவார் இன்றிக்கே இருக்க-பூர்ணனாய் இருக்கிற தான் -என்னுதல் –

தோன்றி –
தன் பேறாக-பகுச்யாம்-என்று தோன்றி –

முனி மாப் பிரம முதல் வித்தாய் –
சங்கல்பிக்கிற பர ப்ரஹ்மம் ஆகிற பரம காரணமாய் –
அன்றிக்கே –
முனி -துறந்தவன் -என்றுமாம் –ஸ்ரீ வைகுண்ட விரக்தாய-
அன்றிக்கே
வேறு தேசத்துக்கு போன புத்ரனை தாய் நினைக்குமா போலே-இவை என் பட்டன -என்று திரு உள்ளத்தில் நினைத்து-
பர ப்ரஹ்மமான தானே மூன்று வித காரணுமுமாய் -என்னுதல் –

உலகம் மூன்றும் முளைப்பித்த –
கார்யக் கூட்டம் அனைத்தையும் தன் பக்கலிலே அரும்பும்படி பண்ணினான் ஆயிற்று-
எல்லாப் பொருள்களும் தோன்றும்படியான சங்கல்ப்பத்திலே-கார்யமான வியஷ்டி சிருஷ்டி இருந்தபடி –

வித்து உபாதான காரணம் -முதல் நிமித்த காரணம் -சாஹஹாரி -உப லக்ஷணம்
தோன்றி -சமஷடி ஸ்ருஷ்ட்டி -பிரகிருதி மாற்றி -கார்ய வர்க்கங்கள்
முளைப்பித்த -வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி -நான் முகன் மூலம் –
பகுஸ்யாம்-பலவாக போகிறேன் -இதற்காக
பிரஜாயேய -என்றது போலே
தோன்றி முதலில் சொல்லி அப்புறம் முளைப்பித்த –
தேவாதி படைக்கவே லஷ்யம்
பிரகிருதி மகானாக்கி இது முக்கியம் இல்லையே -நேராக ஆக முடியாதே
பானை பண்ண சங்கல்பித்து -மண் தண்ணீர் களிமண் போன்றவை போலே –
பஹு பவன-ஸ்ருஷ்டி என்பதால் -தோன்றி -முளைப்பித்த–என்கிறார்

தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் –
ஒப்பு இல்லாத பர தேவதையினுடைய தளிர் போலே இருக்கிற-திருவடிகளின் கீழே புகுதல் –
இது காணும் படைப்பிற்கு பயன் –
சேதனன் ஆனால் உபகாரம் செய்தவன் திருவடிகளைப் பற்றுதல் அன்றோ-செய்யத் தக்கது –

அன்றி –
அதனை விட்டு –
ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் என்று சொல்லி உடனே அன்றி -என்றது -அடியார்க்கு என்னை ஆட்படுத்திய விமலன் –
-இது வன்றோ இவர் பிரயோஜனமாக ஆர்த்தித்து பெற்றது –

அவன் அடியார் நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க –
அந்த உபசாரத்திலே தோற்று எழுதிக் கொடுக்கும்-ஸ்ரீ வைஷ்ணவர்களோடு உண்டான-
மிக்க சிறப்பினை உடையதாய் இருந்துள்ள கலவி இன்பமே-நாள் தோறும் வாய்க்க –

நங்கட்கே –
இதனை விரும்பி-
இதுவே பேறு-என்று இருக்கிற நமக்கு-
இது காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் கிட்ட வேணும் –

——————————————————————————————

நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8-

ஏகார்ணவ -சாயி -நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்-பூதாந்த்ர விகார சம்சர்க்கம் இல்லாத -அப ஏவ சருஷ்யா ஆதவ் -வேத பிரதிபாத்யமாய்
நார சப்தம் தண்ணீர் -நாராயணன் ஆச்ரயமாக கொண்டவன்
தாளும் தோளும் முடிகளும்-திருவடிகள் திருத் தோள்கள் -கற்பகக் கா -திரு முடிகள் சகஸ்ர -சமன் இலாத பல பரப்பி-
நீளும் படர் பூங்கற்பகக்-காவும் நிறை பல் நாயிற்றின்-நிறைந்த பல ஆதித்ய கிரணங்கள் -திரு அபிஷேகம்
கோளும் உடைய மணி மலை போல்-திருமேனி மாணிக்க மலை போலே –
கிடந்தான் தமர்கள் கூட்டமே-அடியார்கள் ஈட்டமே -சங்கம் சந்நிஹிதம் ஆக வேண்டும்

பாகவதர்கள் உடைய கலவி இன்பம் வேண்டும் என்றார் மேல்-
அது தான் வேண்டுமோ-அவர்கள் திரளை கண்களால் காண அமையும் –என்கிறார் இதில் –

நாளும் வாய்க்க நங்கட்கு-
இதுவே புருஷார்த்தம் என்று இருக்கிற நமக்கு-இது நாள் தோறும் வாய்க்க வேண்டும் –

நளிர் நீர்க் கடலைப் படைத்து –
குளிர்ச்சியையே தன்மையாக உடைய கடலை உண்டாக்கி –
திருக் கண் வளர்க்கைக்கு ஒத்ததான தண்ணீர் -என்கை –

தன்-தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத –
சமன் இலாத -தன்-தாளும் தோளும் முடிகளும்-உபமானம் இல்லாதவையான திவ்ய அவயவங்கள் –

பல பரப்பி-
அந்த கடலிலே பாழ் தீரும்படி-வடிவாலே அலங்கரித்து –

நீளும் படர் பூங்கற்பகக் காவும் –
எல்லை இல்லாத இனிய பொருளான-பூ போலே இருக்கிற தாளும்-
கற்பகக் காவைப் போலே இருக்கிற தோளும்-
தாளும் தோளுமிருக்கிறபடி –

நிறை பல் நாயிற்றின் கோளும் –
முடிகள் ஆயிரத்தாய் –8-1-10-என்றதனைச் சொல்லுகிறது –
பல நாயிறு -ஒவ் ஒரு திரு முடிக்கும் ஒரு நாயிறு-
அன்றிக்கே
கோள்-தேஜஸ்-ஆயிரம் கோடி சூரியர்களை திரட்டி முடியாக வகுத்தாப் போலே இருக்கிற முடி -என்னுதல் –
கோள் -என்பன கிரஹங்கள்-அவை தான் ஒளி பொருள்கள் ஆகையால் ஒளியைக் காட்டுகிறது இலக்கணை –

உடைய மணி மலை போல் கிடந்தான் –
ஓர் இரத்தின மலை சாய்ந்தாப் போலே ஆயிற்று-கண் வளர்ந்து அருளிய படி –

தமர்கள் கூட்டமே-நாளும் வாய்க்க –
இப்படி வைத்த கண் வாங்க ஒண்ணாத படி-கண் வளர்ந்து அருளா நிற்குமவனை-அன்று நாளும் வாய்க்க -என்கிறது-
கிடந்தோர் கிடக்கை -திருமாலை -23–என்று கிடை அழகிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே-
நானும் ஒருவனாய் சேர வேண்டும் என்கிறார் ஆதல்-
அன்றிக்கே –
அத் திரளை கண்களால் காண அமையும் என்கிறார் -என்னுதல்-
பசியர்-கல் அரிசிச் சோறு உண்ண வேண்டும் என்னுமா போலே –தம் காதல் எல்லாம் தோற்ற அருளிச் செய்கிறார் –
பெரியோர்கள் கூட இருக்க வேண்டும் -என்றும் –
சத்பிரேவ சஹாசீத சத்பி குர்வித சங்கமம்-சத்பி விவாதம் மைத்ரம்ச ந அசத்பி கிஞ்சித் ஆசரேத் -மார்கண்டேய புராணம் –
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -பெருமாள் திருமொழி -2-1-என்றும் சொல்லக் கடவது அன்றோ –
அவன் செய்த உபகாரத்துக்கு தோற்று இருக்கும்-ஸ்ரீ வைஷ்ணவர்களோடே கூடி இருக்க வேண்டும் -என்றார் மேல் –
நங்கட்கு நமக்கு -தனித் தன்மையில் பன்மை -நம் கண்ணுக்கு -என்றுமாம் –

————————————————————————————————–

தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை
கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

விரோதி நிரசன உபகரணங்கள் -திவ்ய ஆயுதங்கள் -அவனுக்கு சேஷ புதர்களுக்கு -சம்பந்தி -சம்பந்தி -சம்பந்திக்கு அடியவன் ஆக
தமர்கள் கூட்ட வல்வினையை-அடியார்கள் கூட்டம் விரோதி -வல் வினை கூட்டம் என்றுமாம் –
தமர்கள் வல் வினையைக் கூட்ட என்றுமாம்
நாசம் செய்யும் சதிர் மூர்த்தி–சது மூர்த்தி நாலாக பிரித்து -சதுர் மூர்த்தியின் விகாரம்
சாமர்த்தியம் என்றுமாம்-சர்வ வி நாசம் பண்ணும் ஸ்வாமி
அமர் கொள் ஆழி சங்கு வாள்-விரோதி நிரசன அர்த்தமாக யுத்த உன்முகமாக -அமர்க்களம் -சண்டைக் களம் -அசி கடகம்
வில் தண்டாதி பல்படையன்-கௌமோதுக்ம் தண்டு -எண்ணிறந்த
குமரன் கோல வைங்கணை வேள் தாதை–அழகிய பஞ்ச அம்புகள் கரும்பு வில் வண்டுகள் நாண் -காமனுக்கு -தாதை -சாஷாத் மன்மத மன்மதன் –
குமரன் -பருவத்தில் இளமை -விரோதி நிராசன சாமர்த்திய ஸூ சகம் யுவ குமரன்
கோதில் அடியார் தம்-தமர்கள் தமர்கள் தமர்களாம்-கோது -பிரயோஜ நான்தர சம்சர்க்கம் -அசாரம் -அநந்ய பிரயோஜனர் –அடியார் அடியார் அடியார்கள்
சதிரே வாய்க்க தமியேற்கே-சதிர் பாக்யம் -தானியேல் -சகாயம் சம்சாரத்தில் இல்லை –

ஸ்ரீ வைஷ்ணவர்களோடு சேர்ந்து இருக்கும் சேர்க்கை தான் வேண்டுமோ –
அவர்களுடைய அடிமையிலே முடிந்த நிலமாக அமையும் என்கிறார் –

தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய திரளுக்கு வரும் வல்வினையை-நாசம் செய்யும்
அன்றிக்கே –
தமர்களுடைய திரண்ட வல்வினையை நாசம் செய்யும் -என்னுதல்
அன்றிக்கே –
தமர்கள் வல்வினையைக் கூட்ட-அத வல்வினைகளை நாசம் செய்யும் -என்னுதல் -என்றது –
இவர்களுக்கு வல் வினையை கூட்டுகையே தன்மை ஆனாப் போலே
அவனுக்கு அந்த வல்வினைகளை நாசம் செய்கையே யாத்ரையாய் இருக்கும்படியைத் தெரிவித்தவாறு –

சதிர் மூர்த்தி –
விரோதிகளை போக்குகைக்கு தக்கனவான-பல வடிவுகளையும் கொள்ளா நிற்கும் -என்றது-
இவர்கள் கைங்கர்யம் செய்வதற்கு பல வடிவுகள் கொள்ளுமாறு போலே ஆயிற்று-
அவன் காத்தல் நிமித்தம் பல வடிவுகளை கொள்ளுகிறபடி-என்பதனை தெரிவித்தவாறு –
வாசுதேவாதி -அவதாரங்களும் உப லக்ஷணம்
விரோதி நிராசன சக்தி ஸூசகமான இளைமை சதிர் மூர்த்தி -சாமர்த்தியம் என்றுமாம்

அமர் கொள் ஆழி சங்கு வாள்வில் தண்டாதி பல்படையன் –
விரோதிகளை அழிப்பதற்கு உறுப்பாக-
போரை நோக்கி உள்ள திரு ஆழி தொடக்கமானதிவ்ய ஆயுதங்களை உடையவன் –
குமரன் –
எப்பொழுதும் இளையோனாய் இருப்பவன் –யுவா குமாரா -நித்ய யுவனம்-

கோல வைங்கணை வேள் தாதை –
ஐந்து பானங்களை உடையனான காமனுக்கும் தந்தை யானவன் என்றது –
அழகுக்கு தனக்கு மேல் இல்லை என்று இருக்கும் காமனுக்கும்-அழகுக்கு தோற்றுவாயாய் இருக்கும் -என்றபடி –
மன்மதனுக்கு மடல் எடுக்க வேண்டும்படி அன்றோ இவன் அழகு
-தாஸாம் ஆவீர்பூத சவுரி ஸ்வயமேவ -மை வண்ண நறும் குஞ்சி -பீதாம்பர ஸ்ரக்கவி சாஷாத் மன்மத –

கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தாமர்களாம் சதிரே வாய்க்க –
அப்பருவத்துக்கும்–அழகுக்கும் தோற்று இருக்கும்-வேறு பிரயோஜனம் ஒன்றையும் கருதாதவரான-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய அடிமையில்-முடிந்த நிலமாக வேண்டும் -என்கிறார் –
இந்த மிக உயர்ந்த புருஷார்த்தம் என்றும் ஒக்க வாய்க்க வேண்டும்-என்பார் -சதிரே வாய்க்க -என்கிறார் –

தமியேற்கே –
சென்ற காலத்திலும் ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைத் தேடித் பிடிக்க வேண்டி-இருக்கையாலே -இப்பொழுது நடக்கும் காலத்திலும்-
தமக்கு உபமானம் இன்றிக்கே இருக்கை –
கேசவன் தமர் -என்ற திருவாய் மொழிக்கு பின்பு தனியார் அல்லாமையாலே-மேல் நங்கட்கு -என்றார்-
இங்கு தமியேற்கு -என்கிறது சம்சாரிகளில் தமக்கு உபமானம் இல்லாமையாலே –
பகவத் பக்தர்களுக்கு கூட்டம் உண்டு -பாகவத பக்தர்கள் துர்லபம் என்றவாறே -த்வாபர யுகத்திலும் ஒருவரே -என்றவாறு –

————————————————————————————————-

வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்கு தோள்
பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா வடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்
நல்ல கோட்பாடே-8-10-10-

அதிசயித்த -அனுபாவ்யமான ஆகார அவயவ சோபை உடைய அப்ருதக் சித்த -சேஷ பூதர்-சரமாவதிகளில் கல்பம் தோறும் -சேஷ பூதன்-ஆக வேண்டும்
வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்கு தோள்-தர்ச நீய வைலக்ஷண்யம் -காயம் பூ நிற திரு மேனி -ஆஸ்ரிதர் ஒதுங்க நிழல் நான்கு தோள்கள் –
பொன்னாழிக்கை என்னம்மான்-ஸ்ப்ருஹ ணீயமான-ஸூ தர்சன ஆழ்வான் -உடைய -வடிவைக் காட்டி என்னை எழுதி கொண்ட ஸ்வாமி –
நீக்கமில்லா வடியார்தம்–பிரிவு இல்லாதபடி –
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்-அசாதாரண பரம்பரை -எனக்கும் என்னுடைய சம்பந்தம் உடையார்க்கு -நம்மையும் சேர்த்து -ஸ்வாமிகள் –
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்-நல்ல கோட்பாடே-அவர்களுக்கே சேஷ வ்ருத்தி பண்ணும் குலமாக-சிலாக்கியமான சுவீ கார பிரகாரம் –
கல்பம் தோறும் -அவாந்தர கல்பங்களிலும் -ததீய பார தந்தர்யத்துக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கும் -உண்டாக வேணும் –

இப்பேறு-எனக்கும்-என் சுற்றத்தாருக்கும்-என்றும்-வாய்க்க வேண்டும்-என்கிறார்-

வாய்க்க தமியேற்கு-
தமியேற்கு வாய்க்க-
புருஷார்தத்தின் எல்லையிலே மூழ்குதலாலே-உபமானம் இல்லாதவனான எனக்கு-இப்பேறே வாய்க்க வேண்டும் –

ஊழி தோறு ஊழி ஊழி-
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் இடைவிடாதே-உயிர் உள்ள வரையிலும்
இதுவே புருஷார்த்தம் -என்கை –யவாதாத்மபாவி –

மாகாயாம் பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான் –
அழகிய காயாம்பூ போலே இருக்கிற திருமேனியையும்-அதஸீ புஷப ஸ்ங்காஸம் –
கற்பகத் தரு பணைத்தால் போலே இருக்கிற திருத் தோள்களையும்-
கற்பகம் பூத்தாப் போலே இருக்கிற திரு ஆழியையும்-காட்டி என்னை-தனக்கே அடிமை ஆக்கினவன் –

நீக்கமில்லா வடியார்தம் அடியார் அடியார் அடியார் எம்கோக்கள் –
பிரிய நினைக்கில்-என்னை அடிமை கொள்ள வேண்டும் -என்ன வேண்டும்படி –
குருஷ்வம் மாம் அநுசரம் வை தர்ம்யம் ந இஹ வித்யதே-க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த பிரகல்பதே -அயோத்யா -31-22-
பிரிய மாட்டாதவர்களில் எல்லை நிலம் ஆனவர்கள்-என் ஸ்வாமிகள்-
தமர்கள் தமர்கள் தமர்களாம் – என்று முடித்த எல்லையை-முதலாகத் தொடங்குகிறார்-
ஆனந்த வல்லி-சதமாக-மீண்டும் கீழே வைத்து -மேலே போனால் போலே –
மற்றைய ஆழ்வார்களுக்கு ஆழம் பெரியாழ்வாரும் மேடு –
அத்தை முதல் நிலம் -மற்றவர்களுக்கு காதா சித்தம் -இவருக்கு நித்யம் -பொங்கும் பரிவு -அதே போலே –
சயமே அடிமை தலை நின்றார் ஆகிறார் -ஸ்ரீ பரத ஆழ்வான் போல்வார் –சயமே -ஸுயம் பிரயோஜனமாக -கைப்பட்ட ராஜ்யத்தை பொகட்டவர்-
— சிந்தை செய்யில் ஓர் ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ -ராஜ்யத்தை பொகட்டு பெருமாளையே ஸ்வயம் பிரயோஜனமாக பற்றியதால் –
கோதில் அடியார் ஆகிறார் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வார் போல்வார் –ஸ்ரீ ராம பக்தி என்னும் கோது இல்லாமையாலே-
நீக்க மில்லா அடியார் ஆகிறார் -இளைய பெருமாள் போல்வார் –ஏவிப் பணி கொள்ள வேண்டும் -கிரியதாம் இதி மாம் வத –

அவர்க்கே குடிகளாய்ச் –
இரு கரையராய் இராதே –வேண்டும் பலன்களை தருவதில் மிக உயர்ந்த-வடுக நம்பி நிலை –
உண்ட போது ஒரு வார்த்தை -உண்ணாத போது ஒரு வார்த்தை அவர்களை சிரித்து -தேவு மற்று அறியேன் -என்ற நிலை –
ராமானுஜ -என்னும் நான்கு எழுத்து உள்ள மந்த்ரமாவது இல்லை யாயின்-
என்னைப் போன்ற உயிர் கள் எத்தனை கொடிய நிலையை-அடைவார்களோ -அறியேன் –
ஆச்சர்யம் -என்று இருக்கை போலே காணும் அடுப்பது –
நசேத் ராமானுஜேதி ஏஷா சதுரா சதுரஷரீ-காம் அவஸ்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவ ஹந்த மாத்ருஷ -கூரத் ஆழ்வான்-
அனைத்து உலகும் வாழப் பிறந்த யதிராஜா மா முனிகள் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடிகளே -என்ற நிலை -என்றவாறு –

அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடு-
அவர்களுக்கே என் குடி முழுவதும்-அடிமைப் பட்டவர்களாய்ச் செல்லும்-
நல்ல கட்டளை –
வாய்க்க தமியேற்கு-
கோட்பாடு -கட்டளைப் பாடு –

———————————————————————————

நல்ல கோட்பாட்டுலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-

ததீய சேஷத்வம் -புத்ரா பார்யா சேர்ந்து -பலன்
நல்ல கோட்பாட்டுலகங்கள்–இடம் விலக்ஷணம் -ஜக த்ரயம் –
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த-அல்லிக் கமலக் கண்ணனை- விகசித தாமரை –
அந்தண் குருகூர்ச் சடகோபன்-நிர்வாககர்
சொல்லப்பட்ட வாயிரத்துள்-இவையும் பத்தும் வல்லார்கள்-அப்யஸிக்க வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்-கொண்ட பெண்டிர் மக்களே-சுவீ கரிக்கப் பட்ட நல்ல பார்யா புத்ராதிகள் -உடன் –
பாகவத சேஷத்வம் பெற்று சபரிகரமாக வாழப் பெறுவார்கள் –

நிகமத்தில்
இத் திருவாய் மொழி வல்லார்-இதில் சொன்ன-பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலைப் பெற்று
பெண்டு பிள்ளைகளோடு-வாழப் பெறுவர்-என்கிறார்

நல்ல கோட்பாட்டுலகங்கள்-
இவர் பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலே-மிக மேலான பேறு -என்று-
நெடுமாற்கு அடிமை -என்னும் திருவாய்மொழி -அருளிச் செய்த பின்பு காணும்-உலகம் கட்டளைப் பட்டது –

மூன்றின் உள்ளும் தான் நிறைந்த-
பரந்து இருக்கும் தன்மையும் தேவை ஆகை அன்றிக்கே புதுக் கணித்தது-
அடியார்க்கு அடிமைப் பட்டு இருத்தல் ஆகிய ஞானம்-உடையவர்கள் உடைய மனத்தில்-
இருக்கையாலே வ்யாப்தியும் தேவையாய் இராதே புதுக் கணித்தது –

அல்லிக் கமலக் கண்ணனை-
இவர் தன்னைப் பற்றினாரைப் பற்றி விரும்ப விரும்ப-திருக் கண்களும் சிவந்து புதுக் கணித்தது –
மாசி விசாகம் தீர்த்தவாரி —
8 பத்து -திருமொழியில் -நிகமத்தில் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -நஞ்சீயர் -நம்பிள்ளை -சம்வாதம் –
அல்லிக் கமலக் கண்ணனாய் இருக்கும் -இங்கே இருந்து அங்கே கோத்து அருளிச் செய்தாராம் –

அந்தண் குருகூர்ச் –
ஊரும் காண்பதற்கு இனியதாய்-சிரமத்தை போக்கக் கூடியதாயிற்று –

சடகோபன் சொல்லப்பட்ட வாயிரத்துள்-
வேதம் போல் தான் தோன்றி இன்றிக்கே -இருக்கை-பரத்வம் போலே வேதம்-அவதாரம் போலே திருவாய்மொழி –
பிரமேய சரமம் -பிராமண சரமம் -பரத்வ பர முது வேதம் -அர்ச்சாவதாரங்களை திருவாய் மொழி சொல்லுமே —

இவையும் பத்தும் வல்லார்கள்-
இப்பத்தை கற்க வல்லவர்கள்

நல்ல பதத்தால் –
நல்ல பதம் ஆகிறது –பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தல் அன்றோ –
அதனை இத் திருவாய் மொழியிலே இவர் அறுதி இட்ட படியாலே –

அதனோடு கூட -மனை வாழ்வர்-
இல்லற தர்மத்தில் வாழ்வார்கள்-

கொண்ட பெண்டிர் மக்களே-
தாங்கள் ஒன்றனை நினைக்க-தம் மனைவி மக்கள் முதலாயினோர் வேறு ஒன்றை நினைக்கை அன்றிக்கே
குடும்பத்தோடு பாகவதர்களுக்கு உறுப்பாக வாழப் பெறுவர் –
திருவனந்த புரத்துக்கு சாத்தாகப் -கூட்டமாகப் -போகா நிற்கச் செய்தே-
திருக் கோட்டியூரிலே செல்வ நம்பி திரு மாளிகையிலே-போய்ப் புக்கார்களாக-
நம்பி தாம் வேற்று ஊருக்காக சென்று இருக்க-நங்கையார் நூறு வித்துவக் கோட்டை கிடக்க-
அவற்றைக் குற்றி ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்யப் பண்ணி விட-
பிற்றை நாள் நம்பி வந்து -அவை செய்தது என் என்ன –பரம பதத்திலே விளைவதாக வித்தினேன் -என்றாராம் –
தொண்டனூர் நம்பி எச்சான் -என்று மகா புருஷர்கள் சிலர் உளர் அன்றோ-
பாகவத சேஷத்வமே யாத்ரையாக போந்தவர்கள்-அவர்கள் படியே ஆகப் பெறுவர்கள்-

———————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

திகிறதா ஆத்மரூசி
தாம் சேஷதாம் அபி -அநந்யார்ஹ சேஷத்வம் -நேர் பட்டது
ததீய ததீய ஸீமா, பர்யவசிக்கும் தாம் புருஷார்த்த சீமான்
ஆவிஷகர்த்த
பக்த பக்த ப்ரீதி
அந்நிய பூமர்த்தம் –வேறே புருஷார்த்தம் தள்ளி –

—————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்வ கீயேஷு வ்யாமுக்த பாவாத்
அமல தன
வாமனத்வேஷத
ஆபத் பந்து த்வாத்
ஆச்சர்ய பாவாத்
அஹித நிரஸனாத்
லோக ஸ்ருஷ்டியாதி சக்த்தியே
ஆதவ் ஸயினித்வ யோகாத்
ஸ்ரீத துரித ஹ்ருதே
அதஸீ புஷப காந்தியா ஆக்ருஷடேயே ஸ்வ தாஸ்யா —

சித்தம் சூரி தித்ருஷாஷா
நிஸ் ஸ்ப்ருஹ ஏவ லப்யம்
ஸ்வானாம் விஸ்லேஷா போக்யம் –
ஸ்ரீத விகித சமஸ்த விபூதி
ஸ்வேபேஷா
ஸ்வ விதர பரணம்
ஹ்ருதகதம் ஸ்பஷ்ட
தாஸ்யம் ஸ்வம்
தஸ்ய நிஷ்டாம்
தத் அவதிமபி –
அஷ்டமே-

——————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 80-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை யுடைய பத்தர் அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
கொல்லை நிலமான நிலை கொண்டு ———80-

——————————————————————————-

அவதாரிகை –

இதில்
அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை-
பாகவத சேஷத்வ பர்யந்தமாய் இருக்கும்
என்று ஆழ்வார் அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
கீழே
ஆத்மாவுக்குச் சொன்ன பகவத் அனந்யார்ஹ சேஷத்வம் தான் நிலை நிற்பது
பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆனால் என்னும் இடத்தை அனுசந்தித்து
அவனுடைய சௌந்தர்ய சீலாதி குண சேஷ்டிதங்களிலே
தோற்று அடிமை புக்கு இருக்கும்
பாகவதர்களுக்கு சேஷமாய் இருக்கும் இருப்பே எனக்கு புருஷார்த்தம் –
ஐஸ்வர்ய
கைவல்ய
பகவல் லாபங்கள் ஆகிற
புருஷார்த்தங்கள்
நான் பற்றின பாகவத சேஷத்வம் ஆகிற பரம புருஷார்த்ததுக்கு
தனித் தனியாகவும்
திரளாகவும்
ஒப்பாக மாட்டாது –
ஆனபின்பு
எனக்கும்
என்னுடையார்க்கும்
இப் புருஷார்த்தம்
கால தத்வம் உள்ளதனையும் நித்ய சித்தமாகச்
செல்ல வேணும் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிரார்த்தித்துத் தலைக் கட்டுகிற
நெடுமாற்கு அடிமையில் அர்த்தத்தை
நெடுமால் அழகு தனில் -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————————————-

வியாக்யானம்–

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு படுமா நிலை யுடைய பத்தர் –
அதாவது –
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத் தாள் -என்றும்
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய
செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் உறுமோ -என்றும்
தனி மா புகழே எஞ்ஞான்றும் –என்று தொடங்கி –
தனிமாத் தெய்வத் தளிர் அடிக் கீழ் புகுதல் அன்றி
அவன் அடியார் நனிமா கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கு -என்றும்
கோளுமுடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே நாளும் வாய்க்க நங்கட்கு -என்றும்
தமர்கள் கூட்ட வல் வினையே -என்று தொடங்கி
கோதில் அடியார் தமர்கள் தமர்கள் தமர்கள் தமர்களாம்-சதிரே வாய்க்க தமியேற்கு -என்றும்
நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்க்கே
குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடு வாய்க்க தமியேற்கே -என்றும்
இப்படி உத்துங்கத்வமான வடிவு அழகிலும்
தனி மா புகழே -என்கிற தீர்க்க சௌஹார்த்த குணத்திலும்
ஈடுபட்டு இருக்கும் –
பத்தர் அடிமை தனில் எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் –
பக்தர்கள் திறத்தில் அடிமை யாம் அளவு அன்றிக்கே
அவ்வடிமையில்-சீமா பூமிதாம்படி அனுசந்தித்தார் ஆழ்வார் –

அது கொல்லை நிலமான நிலை கொண்டு -அந்த பாகவத சேஷத்வம்
சீமாதிலங்கியான உத்தம புருஷார்த்தம் என்கிற-நிஷ்டையைக் கொண்டு
எல்லை நிலம் தானாக எண்ணினான்-
சத்ருனோ நித்ய சத்ருகன -என்கிறபடியே
வியன் மூ வுலகு பெறினும் -என்கிற ஐஸ்வர்யம்-ஆத்மபிராப்தி அளவாய் இருக்கும் –
தானே தானே யானாலும் -என்கிற ஆத்மா பிராப்தி-
செந்தாமரைக் கண் திருக் குறளன் அறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் -என்கிற
பகவத் பிராப்தி -அளவாய் இருக்கும் –
இந்த பகவத் பிராப்தி பாகவத பிராப்தி சாபேஷமாய் இருக்கும்
இந்த புருஷார்த்ததுக்கு மேல் எல்லை இல்லை -ஆகை இறே முழுதும் உறுமோ -என்றது –

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: