பகவத் விஷயம் காலஷேபம் -168- திருவாய்மொழி – -8-9-1….8-9-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

கரு மாணிக்க மலை பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே முதல் இரண்டரை பாசுரங்களாலே-அவனுடைய அழகு சீலம் முதலானவைகளை அருளிச் செய்து –
அவற்றைப் போன்று சிறந்ததாய் –அனன்யார்ஹமுமாய்-இருக்கிற ஆத்தும ஸ்வரூபத்தை மற்றைப் பாசுரங்களாலே-
அருளிச் செய்து இனியர் ஆனார் –
அந்த அடிமை இன்பத்தாலே ப்ரீதராய்-ப்ரீதியின் பரவசத்தாலே -அப்பன் திருவருள் மூழ்கினளே-
தாமான தன்மை அழிந்து-ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய்-
அநந்யார்ஹ சேஷத்வம் -யானும் தானுமாய் ஒழிந்தேன் -என்ற ஸ்வ ஸ்வரூபம் -தம்முடைய நிலையை –
அன்யாபதேசத்தாலே பேசி இனியர் ஆகிறார் -இத் திருவாய் மொழியிலே –
ப்ரீதியில் அன்யாபதேசம் உள்ளது இத் திருவாய்மொழி ஒன்றுமே -என்று ஆழ்வான் நிர்வஹிப்பர்-

திருப் புலியூரிலே எம்பெருமானோடு இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்தால் ஒரு பிராட்டி –
அவனாலே கொள்ளப் பட்ட மனத்தினை உடையவளாய் இருக்கிறபடியை-உயிர் தோழி யானவள் கண்டு
இவள் வடிவில் வேறுபாட்டாலும் -புனை இழைகள் அணிவும் –
சொற்களின் வேறுபாட்டாலும் -அரு மாயன் பேர் அன்றி பேச்சிலள்-புணர்ச்சி உண்டானமையை அறிந்தாள் –
இவற்றில் ஒன்றையும் அறியாதே-
என்னுடைய தந்தையாரான ஜனக மகராஜர்-கணவனுடைய கல்விக்கு தகுந்த என் வயதைப் பார்த்து –என்கிறபடியே –
பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா-சிந்தார்ணவகத பாரம் நாசசாத ஆப்லவோ யதா – அயோத்யா -118-34-
தகுந்த யௌவனப் பருவம் உடையவள் என்னும் இவ்வளவே கொண்டு-
தந்தை முதலியோர் சுயம் வரத்துக்கு ராஜ புத்ரர்கள் வருவது என்று நகரத்திலே-மண முரசு அறைவிக்க-
அதனைக் கேட்ட தோழி யானவள் -பரதன் இராஜா -என்று அறைவித்த முரசொலி செவிப்பட்ட போது-
ஸ்ரீ பரத ஆழ்வான் பட்டது எல்லாம் பட்டு-இம்முரசொலி பெண் பிள்ளை செவிப்படுமாகில்-
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்-நாச்சியார் திருமொழி -1-5-வாழாத தன்மையளாய்-இருக்கிற இவள் உயிர் தரியாள்-
ஏற்கவே தடுக்க வேண்டும்-அது செய்யும் இடத்தில் திருப் புலியூர் நாயனாரோடு புணர்ச்சி-
உண்டானமையை அறிவிப்போம் ஆகில்-நம் காவற் சோர்வால் வந்ததாம் என்றாம்-
அறிவியாது ஒழியில் இவள் வாழாள்-இனி இவ்வளவில் செய்வது என் என்று பார்த்தாள் –

அங்கனம் பார்த்தவள்-இவர்கள் தாமும் -இவளுக்கு வடிவிலே வேறுபாடு உண்டு
இதற்க்கு காரணம் யாதோ -என்று-விசாரியா நின்றார்கள்
நாமும் இவர்கள் தம்மோடு ஆராய்வதிலே இழிந்து-
அவ்வழியாலே அறிந்தோமாய் இதனை விலக்க வேண்டும்-என்று அறுதி இட்டுக் கொண்டு
இவள் வடிவு இருந்தபடியால் இவளுக்கு-
திருப் புலியூர் நாயனாரோடு புணர்ச்சி உண்டாயிற்று போலே இருந்தது –
அவனுடைய குணங்களையும் செயல்களையுமே வாய் புலற்றா நின்றாள்-
நீங்கள் செய்கிறவற்றைத் தவிருங்கோள் -என்று
அறத்தோடு நிற்க எண்ணினாளாய்–கிளவுத்துறையில் ஒரு பகுதி -அறம் -தர்மம் படி -இது தர்மம் அன்று -என்ன –
ஆனால் நீ சொல்லுகிற திருப் புலியூர் நாயனாருக்கு இவளுக்கு தகுதியான சிறப்பு உண்டாக வேண்டும்-
ஒப்பனையும் ஆண்மையும் குணமும் செல்வமும் கொடையும் காதலும் உண்டாக வேண்டும் –
நல் ஒழுக்கம் உடையனாக வேண்டும்-வேதார்த்த தத்வ ஞானம் உடையனாக வேண்டும் –இவை எல்லாம் உளவோ -என்ன
கூறுகிறாள் மேல் –
நீங்கள் கேட்கிற அளவு அன்று –இவை எல்லாம் குறைவு அற்றவன்-
இவை ஒன்றும் இல்லையாகிலும் இவள் தான்-திருப் புலியூர் நாயனாருக்கே உரியவள் ஆனாள்-
நீங்கள் செய்கிற இவற்றைத் தவிருமின் -என்று அதனை விலக்குகிறாள்-இது மணவிலக்கு -எனபது ஒரு கிளவித் துறை ஆகும் –

முதல் பாசுரத்தால் அவயவ சோபை -இரண்டாம் பாசுரத்தாலே –ஆபரண சோபை -மூன்றாம் பாசுரத்தாலே -ஆண் பிள்ளைத் தனம் – வீரம்
-நான்காம் பாசுரத்தால் –ஆபத் ஸகாத்வமும் –ஐந்தாம் பாசுரத்தால் – ஐஸ்வர்யம் ஆறாம் பாசுரத்தால் – உதாரத்வம் –
ஏழாம் பாசுரத்தால் -பிரணயித்தவம் -எட்டாம் பாசுரத்தால் -சமாச்சாரமும் –ஆச்சார்ய அனுஷ்டானம் –
-ஒன்பதாம் பாசுரத்தால் –வித்யா பூர்த்தியையும் –சொல்லி
பத்தாம் பாசுரத்தால் -இல்ல யாகிலும் -இவள் நேர் பட்டதே -அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லி தலைக் காட்டுகிறாள் –

திரு மந்த்ரத்திலே-தனக்கும் பிறர்க்குமாய் இருக்கும் இருப்பைக் கழித்து-அவனுக்கே அடிமை யாதல்
என்னும் தன்மையை சொல்லக் கடவது அன்றோ –அதனை இங்குச் சொல்லுகிறது-
மேல் திருவாய் மொழியில் அவனுக்கே அடிமையாக இருத்தல் என்னும் தன்மையைச் சொல்லிற்று-
இத் திருவாய் மொழியிலே-பிறர்க்கு உரியனாய் இருத்தலும்-தனக்குத் தானே உரியனாய் இருத்தலும்-
ஆகிய இரண்டும் பேறு அன்று -என்கிறது –ஒரு கன்னி யாகில் ஒருவனுக்கே யாய் இருக்கையும்-
ஒருவனுக்கே ஆனால் பிறர்க்கு உரியள் அல்லளாய் இருக்கையும்-அன்றோ ஸ்வரூபம்-
உகாரார்த்தம் நமஸ் அர்த்தம் -அநந்யார்ஹ சேஷத்வம் –கீழில் சொல்லி -அந்நிய சேஷத்வமும் ஸூஸ்வாதந்தர்யமும் கழிக்கும் இடம் சொல்கிறது

அதிக ப்ரீதியாலே உருகி பெண் பாவனை யால் அருளிச் செய்கிறார் -ஆண் பாவனையில் ஊடல் திரு இந்தளூர் போலே
சிபி சக்கரவர்த்தி -பீமன் -பிரதிஷ்டை -செங்கணாஞ்சேரி -ஆறு-திவ்ய தேசங்களில் ஒன்று -18 படி ஏறி சேவை –
சிபி சக்கரவர்த்தி அரசாண்ட பொழுது பஞ்சம் வர -ரிஷிகள் தானம் பெறாமல் -மறுக்க -வாழைப் பலம் உள்ளே தங்கம் வைத்து கொடுக்க
மறுக்க -ரிஷிகளை அழிக்க கிருத்ரியை -தேவேந்திரன் வஜ்ராயுதம் புலி வேஷம் கொண்டு ரக்ஷித்தான்
குட்ட நாடு பிரதேச பெயர் -மாயப்பிரான் –
அவகாஹித்தாரை அநந்யார்ஹம் ஆக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழுமூரிலே குட்டமிடும் –176–

——————————————————————————

கருமாணிக்க மலை மேல்
மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை
உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல்
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

அவயவ சோபையில் அகப்பட்டு -அவன் திரு நாமங்கள் அன்றி சொல்லா மாட்டாள் –
கருமாணிக்க மலை மேல்-மணித் தடந்தாமரைக் காடுகள் போல்-தர்ச நீயமான தாமரைக் காடு போலே
திரு மார்பு வாய் கண் கை-லஷ்மீ கௌஸ்துபம் அடையாளம் திரு மார்பு
உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்-ஆஸ்ரிதற்கு உபகரிப்பவன்
திருமால் எம்மான் செழு நீர் வயல்-காட்டில் எரித்த நிலா இல்லாமல் அவள் அனுபவிக்க
எம்மான் -இவற்றைக் காட்டி நமக்கு நாயகன் -நீர் வாய்ப்பு
குட்ட நாட்டுத் திருப் புலியூர்-அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்-ஆச்சர்ய பூதன் திரு நாமங்களைத் தவிர
அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ-தான் உள் பாடு அல்லாமையை -சேர்த்து வைக்க வில்லை -என்று விலகி சொல்கிறாள்

அவனுடைய திவ்ய அவயவங்களின் அழகினைக் கண்டு-மற்று ஓன்று அறியாதபடி ஈடுபட்டாள்-என்கிறாள் –
கரு மாணிக்கக் குன்றத்து தாமரை போல் திரு மார்பு-கால் கண் கை செவ்வாய் உந்தியான் -என்று
இருத்தும் வியந்து -திருவாய் மொழியில் அனுபவித்த-அதனை தோழி பேச்சிலே பேசி இனியர் ஆகிறார் –

கருமாணிக்க மலை மேல் –
அனுபவிப்பார் நெஞ்சு குளிரும்படி கருமையை உடைத்தாய்-பிரகாசத்தால் மிக்கு இருப்பதாய்-
தனக்கு மேல் ஒன்றும் இல்லாத இனிமையை உடையதாய்-இருப்பது ஒரு மலை மேலே
அன்றிக்கே
கரிய நிறத்தோடு கூடிய இருள் நீக்குவது ஒரு மலை -என்றுமாம்
இல் பொருள் உவமை இருக்கிறபடி –

மணித் தடந்தாமரைக் காடுகள் போல்-
இப்படி இருப்பது ஒரு மலை மேலே –தெளிந்தது ஒரு தடாகமாய்
அது காடுபடத் தாமரை பூத்தாப் போலே ஆயிற்று-திருமேனியும்-அழகிய உறுப்புகளும் இருப்பது –

செய்ய திரு மார்பு –
பற்றாசான பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கும் திரு மார்பு –
திரு மார்புக்கு சிவப்பு -பிராட்டி எழுந்து அருளி இருப்பதனாலே –

வாய் –
அவள் வழியாலே உறவு செய்தாருக்கு அனுகூலமான வார்த்தைகளை பேசுகிற திருப்பவளம் –

கண் –
இன் சொற்கள் சொல்லப் புக்கு-இனியனான தன்னைக் கண்ட காட்சியாலே தடுமாறினால்
குறையும் தலைக் கட்டிக் கொடுக்கும் கண் –

கை-
நோக்குக்கு தோற்றாரை அணைக்கும் கை –

உந்தி –
உத்தேச்யமான நிலத்தில் விழா நின்றால் நடுவே கால் கட்ட வல்ல திரு வுந்தி –
நடுவே அமுக்கும் சுழி அன்றோ –

கால் –
இவை எல்லாவற்றுக்கும் தோற்று விழும் திருவடிகள் –
உடை யாடைகள் செய்ய –
செய்ய உடை ஆடைகள் –
அங்கே கிடந்தது அனுபவிக்கும் திருப் பீதாம்பரம் –
கமல பாதம் என்ன -சிவந்த ஆடை -என்னக் கடவது இ றே-

பிரான்-
இவ் உறுப்புகளின் உடைய அழகு முழுவதும் பக்தர்களுக்காக-என்று இருக்குமவன் –
நதே ரூபம் நச ஆகார ந ஆயுதானி ந ச ஆஸ்பதம்-ததாபி புருஷகாரோ பக்தாநாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே -5

திருமால் –
அழகே அன்றிக்கே-இவளுக்கு ஈடான மேன்மையும் உண்டு –
அப்ரமேயம் ஹி தத் தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த ஸ்தாம் ஹர்த்தும் ராம சரபாஸ்ரயம் வனே -ஆரண்ய -37-18-
யாவர் ஒருவருக்கு அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி-மனைவி யாக இருக்கிறாளோ
அந்த பெருமாளுடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்கிறபடியே –

எம்மான் –
இவளை அவனுக்கு கொடுங்கோள் என்றால் –
இவளுக்கு அவன் தரம்-போருமோ -என்ன வேண்டாதபடி இருப்பதே என் நாயகன் -என்கிறாள் –

செழு நீர் வயல்-
அழகிய நிறைந்த தண்ணீரை உடைத்தான-வயல் சூழ்ந்த –

குட்ட நாட்டுத் திருப் புலியூர்-
குட்ட நாடு -என்று அந்நாட்டுக்கு பெயர் –

அருமாயன் –
பெறுதற்கு அரிய-ஆச்சர்யத்தை உடையவன் –

பேரன்றிப் பேச்சிலள்-
பரம் வியூகம் விபவம் என்னும் இவைகட்கு உரிய-திரு நாமங்களைச் சொல்லுகின்றிலள்-
அன்றிக்கே
அல்லாத உகந்து அருளின திவ்ய தேசங்களின்-நிற்கிறவர்கள் பெயர்களும் சொல்லுகின்றிலள்-என்னுதல் –

அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ-
அவர்களோடு ஒக்க தானும் இப்போது அறிந்து சொல்லுகிறாள்-என்னும் இடம் தோற்ற-
இதற்கு என் செய்கேனோ–என்கிறாள் –

————————————————————————————————–

அன்னைமீரிதற் கென் செய்கேன்
அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும்
அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம்
பல்கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ்
திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2-

ஆபரண சோபையில் அகப்பட்டு அவன் உரைப்ப புகழா இருக்கிறாள் -சம்பந்தம் எல்லாம் புகழ வேண்டுமே -கிரீட மகுட –அபரிமித திவ்ய பூஷணங்கள்
அன்னைமீரிதற் கென் செய்கேன்-நீங்களும் நானும் அறியாமல் இவளுக்கு நேர்ந்த பிரகாரத்துக்கு என் செய்கேன்
அணி மேருவின் மீதுலவும்-அழகிய மேரு பர்வதம் மேலே -உலகுக்கு ஆபரணம் போலே –
துன்னு சூழ் சுடர் நாயிறும்-செறிந்து சூழ்ந்த சூரியன் –
அன்றியும் பல் சுடர்களும் போல்-சந்திரன் மற்ற தேஜஸ் கொண்ட நக்ஷத்ர கூட்டங்கள் அழகு போலே
மின்னு நீண் முடி யாரம்–சூரியன் போலே -திரு அபிஷேகம்
பல்கலன் தானுடை யெம்பெருமான்-அழகைக் காட்டி நம்மை அடிமை கொண்ட சர்வாதிகன்
புன்னை பூம் பொழில் சூழ்-புன்னை உடைத்தான் அழகிய சோலைகள்
திருப் புலியூர் புகழும் இவளே-திவ்ய தேசத்தை புகழா இருப்பாள் –

அவனுடைய ஆபரணங்களின்-அழகிலே அகப்பட்டாள் –என்கிறார்

அன்னைமீரிதற் கென் செய்கேன்-
நீங்கள் கற்பித்திலீர் கோள்-நான் கற்பித்திலேன்-இதற்கு நான் என் செய்கேன் –

அணி மேருவின் மீதுலவும்துன்னு சூழ் சுடர் நாயிறும்-
அழகிதான மேருவின் மேலே சஞ்சரிக்கின்றவனுமாய் –காண்கிற அளவு அன்றிக்கே
நெருங்கிச் சூழ்ந்த ஒளியை உடைய-வேறுபட்ட சிறப்பினை உடைய சூரியனும் –

அன்றியும் பல் சுடர்களும் போல் –
மற்றும் அப்படியே இருக்கிற நஷத்ரங்கள் முதலான-ஒளிப் பொருள்களும் போலே –

மின்னு நீண் முடி-
துன்னு சூழ் சுடர் நாயிறு -என்று சொன்ன திரு முடி –

யாரம் –
அம் சுடர் மதியம் பூண்டு -திருவாசிரியம் -1–என்கிறபடியே பூண்ட திருவாரம் –

பல்கலன்-
அல்லாத திவ்ய ஆபரணங்கள் –

தானுடை யெம்பெருமான்-
யெம்பெருமான் -ப்ரீதியின் வார்த்தை -என்றது-இத் தன்மைகள் பொய் ஆகாதபடி இருந்த என் நாயகன் -என்கிறாள் -என்றபடி –

புன்னை பூம் பொழில் சூழ்-
சோலை வாய்ப்பை அன்றோ இவள் சொல்லுகிறது -என்றது-சோலையில் கலந்தார் வார்த்தையாய் அன்றோ-இது இருக்கிறது -என்றபடி –
சங்கேச ஸ்தலம் இந்த பொழில் -இங்கே தானே சம்ச்லேஷம் என்பதால் இத்தையே வாய் வெருவி கொண்டு இருக்கிறாள் –

திருப் புலியூர் புகழும் இவளே –
பிள்ளாய் -இவ் ஊர் வாசி எங்கே அறிந்தாள்-
அவனுடைய ஆபரணங்களின் அழகைப் போன்று-அவ் ஊரில் சோலையிலும் அவ் ஊரிலும்-
குமுழி நீர் உண்டாளாய்த் தோற்றுகிறது-இல்லையோ இவள் வார்த்தையாலே –

—————————————————————————————————-

புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்
கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப
செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு
அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு
திருப் புலியூர் வளமே–8-9-3-

புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்-கடல் தீப் பட்டு எங்கும்-சண்டை இடும் அலைகள் –
-பாடபாகநி -குதிரை முக-அக்னி-கடலுக்குள் ஜாடபாகினி வயிற்றுக்குள் –
ஆழி பேர் அலை -பாடபாகனியால் -திகழும் எரியோடு செல்வது ஒப்ப-செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு-அசுரரைப் பொன்றுவித்தான்-ஆண் பிள்ளைத் தனம் -வீர தீரச் செயல்கள் -மாதர் மைதிலி –
சுற்று சுழன்று -ஸ்ரீ ஸுதர்சன ஆழ்வான் பெருமை -ஜ்வாலை உடன் செல்வதற்கு த்ருஷ்டாந்தம் -சத்ருக்களும் புகழும் படி –
ஹேதி ராஜன் -ஹேதி புங்கவன் -ரங்க பாணி -ஸு மய தர்சனம் ஆசிய -ஸூ மார்க்கம் தர்சயாதி ஸூ தர்சனம் -வட்ட வாய் நேமி வலம் கையா
திகழும் மணி நெடு மாடம் நீடு-திருப் புலியூர் வளமே-செல்வச் செழிப்பு -18 படி ஏறி பெரிய மண்டபம் -இன்றும் உண்டே –

ஒப்பனை அழகு இருடிகளும் சொல்லார்களோ –இது கலவிக்கு அறிகுறி ஆக வேண்டுமோ -என்ன-
கணவனை நன்றாக தழுவிக் கொண்டாள் -என்கிறபடியே-
பார்த்தாராம் பரிஷஷ்வஜே -வீரத்தின் சிறப்பினைக் கண்டு அணைக்கும் பிராட்டியின் வார்த்தையாக அன்றோ
-இவள் வார்த்தை இருக்கிறது -என்கிறாள்-
மான் தோல் மர உரி கண்டு ஸ்ரீ தாண்ட காரண்ய ரிஷிகள் -பெருமாளை புகழ்ந்து -மங்களா சாசனம் செய்து பாடினார்களே-

புகழும் இவள் நின்று இராப்பகல்-
வீரத்தின் சிறப்பினை அறிந்து ஈடுபடும் பருவம் இன்றிக்கே இருக்கிற இவள்-கேட்டார் வாய் கேட்டு ஒரு கால் சொல்லி விட்டாளோ-
இரவு பகல் நின்று வாய் புலற்றா நின்றாள்-
நெஞ்சாலே நினைத்து விட்ட அளவேயோ-நாணம் குடி போய் வாய் விட்டுப் புகழ் கிறாள் -என்பாள் -புகழும் -என்கிறாள் –

பொரு நீர்க் கடல் தீப் பட்டு-
பொரா நின்றுள்ள திரையை உடைத்தான கடல்-நெருப்புக் கொழுத்து –

எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப-
பரப்பு மாறிக் கொண்டு பிரகாசிக்கின்ற நெருப்போடு கூட-நடந்து சொல்லுமாறு போலே ஆயிற்று
ஆயுதங்களால் வந்த புகரும்-திருமேனியும் இருக்கிறபடி –

செழும் கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்தி –
புகழும் பொரு படை -செழும் கதிர் ஆழி முதல்-ஏந்தி –போர் செய்கின்ற மிக்க ஒளியை உடைத்தான
திரு ஆழி முதலான அழகிய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு –
புகழும் படை -என்றது-ஞானம் உடைய திரு ஆழி முதலான ஆயுதங்களாலே-புகழப் பட்ட வெற்றி ஒலியை உடைய பெருமானே –என்கிறபடியே
ஹேதிபி சேதனாவத்பி உதீரித ஜெயஸ்வனம் – இரகுவம்சம் -10-
ஆழி எழ சங்கும் வில்லும் எழ போலே -அழகிய ஆயுதங்களால் புகழப் படுகின்ற எம்பெருமான் -என்றபடி –
அங்கன் அன்றிக்கே –
பிரசித்தமான வீரத்தை உடையவனும்-பராக்ரமங்களாலே மகிழச் செய்கின்றவனுமான ஸ்ரீ ராம பிரான் -என்கிறபடியே –
சத்ரோ பிரத்யாக வீரஸ்யரஞ்சனி யஸ்ய விக்ரமை-பஸ்யத யுத்த லுப்த அஹம் க்ருத கா புருஷ த்வயா -சுந்தர -105-6-என்கிறபடியே
கையும் ஆயுதமுமாய் பொருத்தம் இருந்தபடி என் என்று பகைவர்கள்-புகழும் படியைச் சொல்கிறது என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –

போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்-
ஆயுதம் தரித்தவனாய்-போரிலே புக்கு தீயோர்களை முடித்தான் –பொன்றுவித்தான் -முடித்தான்-

திகழும் மணி நெடு மாடம் நீடு திருப் புலியூர் வளமே-
ஒளி பொருந்திய மாணிக்கங்களை உடைய-ஓங்கின மாடங்களை உடைத்தாய்-கற்பகாலம் வரையிலும் அழியாததான-
திருப் புலியூரிலே அழகைப் புகழும்
வளம் -அழகு –
பகைவர்கள் கிட்ட ஒண்ணாமைக்கு அவன் தான் வேண்டா –
அவ் ஊரே அமையும் –
பிராட்டி ஸ்ரீ மிதிலையை விட்டு ஸ்ரீ ராகவன் வீட்டிலே என்று-திரு அயோத்யைப் புகழுமாறு போலே –
சமா த்வாதச தத்ர அஹீம் ராகவச்ய நிவேசதே-புஞ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்திநீ -சுந்தர -33-17-
இவள் திரு நகரியை விட்டு திருப் புலியூர் புகழையே புகழா நின்றாள் -என்பாள் வளமே புகழும் -என்கிறாள் –
பகைவர்களால் வெல்ல முடியாத அயோதியை -என்கிற-பரமபதத்தை நினைத்து இருக்குமாறு போலே காணும்-இவள் இவ் ஊரை நினைத்து இருப்பது
–மாக வைகுந்தம் காண்பதற்கு என்மனம்-ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே –திருவாய் மொழி -9-3-7–எனபது அன்றோ இவருடைய பாசுரம் –

———————————————————————————————————–

ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும்
பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
நாட்டுத் திருப் புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள்
இன்று இப் புனை இழையே–8-9-4-

ஆபத் சகத்வாதி குணங்களை -ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும்-வளப்பம் –
பெரும் செந்நெலும் சூழ்ந்து-கரும்பும் அதிலும் பெரிய செந்நெலும்
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட-உழுவது நடுவது அறுப்பது மாறி மாறி -அழகான ஸம்ருத்தி தோன்றுகிற -வளப்பம் சோலையிலே தோன்றுமே
நாட்டுத் திருப் புலியூர்-திவ்ய தேசத்தில் -சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்-தேவ பிரான்-ஆபத் ஸகத்வம்
-ரக்ஷகத்வ உபயுக்த்வ குணம் -ஸம்ருத்தி -தோற்றும் படி -சூரி உபகாரகன் –
பேர் வளம் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள்–திவ்ய தேசமும் திவ்ய நாமமும் -வாய் புலற்றி
இன்று இப் புனை இழையே-கிளர்ந்து கிளர்ந்து திரு நாமம் பேசுகிறாள் –

வெறும் ஆண்பிள்ளைத் தனமே போராதே –ஆபத்துக்கு துணைவன் ஆகவும் வேண்டுமே -என்ன –
அக்குறை தான் உண்டோ அவளுக்கு -என்கிறாள் –புனல் தரு புணர்ச்சியை அன்றோ -இவள் வாய் புலற்றுகிறது-

ஊர் வளம் கிளர் சோலையும் –
ஊரில் செல்வத்தை கோள் சொல்லிக் கொடுக்கும் சோலை -என்னுதல்
அன்றிக்கே
ஊர்களுக்கு இட்டுச் சொல்லும் சிறப்புக்களை தெரிவிக்கும் சோலை -என்னுதல்

கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து –
வயல் அடங்கக் கரும்பும்-அதற்கு நிழல் செய்யும் செந்நெலும் சூழ்ந்து கிடக்கும்

ஏர் வளம் கிளர் –
ஏரால் உண்டான அழகை உடைத்தாய் -என்னுதல் –
ஏரினுடைய கூட்டத்தை சொல்லிற்றாதல் -என்னுதல்-என்றது உழுவது நடுவதே செல்லா நிற்கை-

தண் பணைக் –
மருத நிலம் என்னுதல்-
அழகிய நீர் நிலம் என்னுதல்-
மருத நிலம் என்றால் வயலைச் சொன்னபடி –

சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் –
குணங்களின் நன்மை அடைய-செயலிலே தெரியும்படி-எல்லா உலகங்களையும் வயற்றிலே வைத்து
வெளி நாடு காண உமிழ்ந்த

தேவ பிரான் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –

பேர் வளம்-
திருப் பெயர்களின் உடைய அழகு என்னுதல்
திருப் பெயர்கள் முழுதும் -என்னுதல்

குட்ட நாட்டுத் திருப் புலியூர் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள் –
குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசக மான திருப் பெயர்களை-கடல் கிளர்ந்தால் போலே பெரிய கிளர்த்தியோடே
அன்றோ இவள் சொல்லுகிறது -என்றது –
நாம் திருப் பெயரைச் சொல்லுமாறு போலேயோ இவள் சொல்லுகிறது -என்றபடி

இன்று –
இவ் வேறுபாடும்-நன்மையையும்-நேற்று இல்லை காண் –

இப் புனை இழையே –
திருப் பெயரைச் சொல்லச் சொல்ல-ஒருபடி ஆபரணம் பூண்டாப் போலே இரா நின்றாள் –

—————————————————————————————–

புனையிழைகள் அணிவும்
ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று
இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும்
தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி
அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-

வடிவில் புதுமை -அதிசயித்த ஐஸ்வர்யம் உடையவன் உடன் சம்ஸ்லஷித்தாள் -என்று தோற்றம்-
புனையிழைகள் அணிவும்-ஆடையுடையும் புது கணிப்பும்-நினையும் நீர்மையதன்று-நினைக்க முடியாத புதுக் கணிப்பு
இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்-நின்றே தேடினாலும் -இவளுக்கு இந்த வைலக்ஷண்யம் -வாயாலே சொல்ல முடியாதே -ஆதலால்
சுனையினுள் தடந்தாமரை மலரும்–தண் திருப் புலியூர்-சிரமஹரமான –
முனைவன் மூவுலகாளி-பிரதானனன் -த்ரைலோகத்துக்கும் ஸ்வாமி -அப்பன் திருவருள் மூழ்கினளே-அவஹாஹித்தாள்

ஆபத்துக்கு துணையாதல் மாத்ரம் போருமோ –
இவளுக்கு தக்க செல்வமும் அவனுக்கு உண்டாக வேணுமே -என்ன –அதுவும் உண்டு -என்கிறார் –
அவனுக்கு உள்ள ஐஸ்வர்யம் கொண்டாடாத தக்கதே -நமக்கு என்றால் கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் என்பார் –
பிரபன்ன ஜட கூடஸ்தர் -ஈஸ்வரனை சொத்தாகக் கொண்டவர் -தக்க ஐஸ்வர்யம் –

புனையிழைகள் அணிவும் –
ஆபரணங்கள் நாம் பூட்டினால் போலே இருந்தனவோ –

ஆடையுடையும் –
முகத்தலை அறிந்து உடுத்ததாய் இருந்ததோ –

புது கணிப்பும் –
நீர் வாய்ந்த வயல் போலே இவள் வடிவிலே பிறந்த செவ்வி பாரீர் கோள்-

நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால் –
நின்று நினைக்கப் புக்கால் -நினையும் நீர்மையதன்று இவட்கிது -தொடங்கி விடுதல் அன்றியே
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் நின்று-ஆராயப் புக்காலும்-இவளுக்கு பிறந்த இவ் அழகுகள்-நினைக்கப் போகா என்றது –
யதோவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ – தைத்ரிய ஆனந்த -9-1-
பேச முடியாமல் வேத வாக்குகள் திரும்பின -என்கிற விஷயத்தை அளவிட்டு அறினும்-இவள் படி அளவிட்டு அறிய முடியாது -என்றபடி –

இவை எல்லா வற்றிலும் நீ அறிந்த தன்மை யாது -என்ன-
அப்பன் திருவருள் மூழ்கினளே -என்கிறாள் –

சுனையினுள் தடந்தாமரை மலரும்
ஒரு பூவே தடாகத்தை கண் செறி இட்டாப் போலே மலரும் -என்றது –
அவ் ஊரில் பொருள்கள் பிறக்கு இடம் கொடா என்கிறாள் -என்றபடி –
இதனால்-இவளுக்கு புறம்பு போக்கு இல்லை என்பதனை தெரிவிக்கிறாள் –

தண் திருப் புலியூர் முனைவன் –
அவ் ஊருக்கு முதல்வன் –

மூவுலகாளி –
எல்லா உலகங்களையும் ஆளுகிறவன் -என்றது
ஐஸ்வர்யத்துக்கு புறம்பு ஒருத்தரைத் தேடித் போக வேண்டாதவன் -என்றபடி-

அப்பன் –
ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் என்று-தன் ப்ரீதியாலே சொல்கிறாள் –

திருவருள் மூழ்கினளே –
கடல் கொண்ட பொருளை எங்கனே மீட்கப் பார்க்கிறபடி –
அருட்கடலில் மூழ்கின இவளை மீத்கலாமோ உங்களாலே

—————————————————————————————-

திருவருள் மூழ்கி வைகலும்
செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடை
யாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று
சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்
தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-

அபி ரூபன் –அழகன் -பவ்யன் –உதாரன்-ஆட்பட்டு -அதராமுதம் பெற்றாள்-
திருவருள் மூழ்கி வைகலும்-அநேக காலம் -மூழ்கி -புதுக் கணிப்பு -முன் சொல்லி -இப்படி பிரகிருதி பெற
எதிர் சூழ் புக்கு அன்றே தொடங்கி -கிருஷி பலம் அன்றோ இவள் நிலை –
செழு நீர் கண்ண பிரான்-ஆச்ரித சுலபன் உபகாரன் –
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடை-சம்ச்லேஷ தசையில் செய்து அருளிய உபகார பரம்பரைகள்
-மறைக்க ஒண்ணாத அடையாளங்கள் –திருமேனியில் திரு உள்ளத்தாலும்
திருவருள் அருளால் அவன் சென்று-சேர் தண் திருப் புலியூர்-வந்தார் -சென்றார் -விபரீத லக்ஷணை
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே-கற்பூரம் நாறுமோ -திருவருள் கமுகு -கடாக்ஷம் விளைநீர்-
கமுகு மரத்தின் பழம் இவள் அதரம்-நித்தியமான அடையாளம் -திரண்ட பழம் போலே –

செல்வம் மாத்ரம் போருமோ –வள்ளலாக இருக்க வேண்டாவோ -என்ன-
அவனுடைய வள்ளல் தன்மையில் அகப்பட்டுக்-களைந்தமைக்கு அடையாளம்-தெளிவாக உண்டு -என்கிறாள் –

திருவருள் மூழ்கி வைகலும் –
வைகலும் திருவருள் மூழ்கி-பலகாலம் அவனுடைய அருளிலே மூழ்கி –நாம் கண்டதனை அறிவோம் இத்தனை அன்றோ –
கீழே இன்று இப் புனை இழை-எனபது வைகலும் திருவருள் மூழ்கி என்றது மாறுபட்டது ஆகாதோ -என்பதற்கு –
எதிர் சூழல் புக்கு இப்படி பரிமாறி திரிகிறது எத்தனை காலம் உண்டு-அதனை அறிந்தோமோ –

செழு நீர் கண்ணா பிரான் –
அழகு-எளிமைகளைக்-காட்டிக் காணும் இப்படி அகப்படுதிற்று –

திருவருள்களும் சேர்ந்தமைக்கு –
அவனுடைய அருள் எல்லாம்-இந்த வடிவு ஒன்றினில் வந்து சேர்ந்தமைக்கு

அடை யாளம் திருந்த உள-
அடையாளம் தெளிவாக உள –
நீ இதனை அறிந்தபடி யாங்கனம் -என்ன –
திருவருள் அருளால் –
குணாகுணம் நிரூபணம் பண்ணாமல்-அங்கீ கரித்தலாகிற தன்மையை செய்வதற்காக –திருவருள் செய்கைக்காக -என்றபடி –
அவன் திருவருளால் அன்றோ திருவாயமொழி -அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் -அவனது
உதார குணம் இவருக்கு கொடுத்து நாமும் அனுபவிக்க -அருளினார் –

அவன் சென்று சேர் தண் திருப் புலியூர் –
கலங்கா பெருநகரம் கலவிருக்கையாய் இருக்க அன்றோ-அவன் இங்கு வந்து அணியன் ஆயிற்று –

திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே –
திருவருட் கமுகு -என்று சில உண்டு –அதாவது நீரால் வளருகை அன்றிக்கே
பெரிய பிராட்டியாரும் சர்வேஸ்வரனுமாக கடாஷிக்க-அதனால் வளருவன சில –
அதன் உடைய அழகிய பழம் போலே இரா நின்றது –மெல்லிய தன்மையாளான இவளுடைய அதரம்
அவ்வாயிலே அறியலாய் அன்றோ இருக்கிறது-

———————————————————————————————–

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க
வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை
ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு
காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
இம் மடவரலே–8-9-7-

உனக்கும் வசப் பட வில்லையா இவள் -தேச வருஷ லதாதிகள் -பரஸ்பரம் சம்ச்லேஷம் -பிரணியித்தவ ஐஸ்வர்யம் -உள்ளவனை அன்றோ இவள் கிட்டினாள்-
வெற்றிலை கமுகு வாழை தெங்கு நெருங்கி அணைந்து இருக்க -பரம பிரணியத்வம் உள்ள –கிருஷ்ணன் திருவடிகளை அன்றோ இவள் கிட்டினாள் –
கீழே பரம வேதாந்தி திரு வாய்மொழி -இது பரம காதலி அருளிய திரு வாய் மொழி -திருவருளின் மூழ்கி அன்றோ அருளிச் செய்கிறார் –
மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க-வீங்கிளந்தான் கமுகின்—மிருதுவான -அழகான ஐஸ்வர்யம் -அழகிய வெற்றிலை கொடி
கமுக மரத்தை அணைக்க-சம்ச்லேஷத்தால் பருத்து -புஷ்டமாய் இலக்கிப் பணைத்த-
இந்த மிதுனத்துக்கு சிசிரோபசாரம் பண்ண -மல்லிலை மடல் வாழை-ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு-காலுலவும் தண் திருப் புலியூர்-காற்று உலாவத் பார்க்கிறது -முடிய வில்லையே
செறிந்த இலைகள் -பரிசார சாதனம் பூ மடல்களை உடைய வாழை மரம் -பக்குவ பழங்கள் -பரிமள உத்தரமாக
தெங்கு -இவை எல்லாம் செறிந்து இருக்க -மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
இம் மடவரலே-இன்று மடப்பம் -போனதே -ஸ்த்ரீத்வம் எல்லாம் போனதே -பெருமாள் உடன் சேர்ந்தால் வெட்கம் போகுமே –
அதிசயித்த பிரணயித்தவம் செல்வம் உடைய கண்ணன் திருவடிகளை அன்றோ கிட்டி அனுபவித்தாள் –

கேவலம் கொடையாளனாக மட்டும் இருந்தால் போராதே-காதல் குணம் உண்டாக வேணுமே -என்ன
அவ் ஊரில் தாவரங்களும் கூட ஒன்றுக்கு ஓன்று-பற்றுக் கோடாம்படி அன்றோ-
அவனுடைய காதல் குணம் இருந்த படி -என்கிறாள் —

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க-
மிருதுவான இலையை உடைத்தாய்-ஆர்வத்தை உடைத்தாய்-இருக்கிற வளவிய கொடிகள் தழுவ –
தன் கணவனான காமுக்கு தன் உடம்பை-முற்றூட்டாக கொடுக்கும் போலே காணும் –

வீங்கிளந்தான் கமுகின் –
கொடி தழுவ தழுவ வளரா நின்று-ஒருகாலைக்கு ஒருகால் இளகா நின்றுள்ள-தாளையை உடைய கமுகு –
அப்ரமேயம் ஹி தத் தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த்த தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயம் வனே -ஆரண்ய -37-18-
அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி எவருக்கு மனைவியாக-இருக்கிறாளோ அவருடைய பராக்கிரமம் அளவிடற்கு அரியது –
என்னும் நியாயத்தாலே –
ஒரு ஆயர் மடக்கொடியானவள் மது என்கிற அசுரனைக் கொன்ற கிருஷ்ணனுடைய-தொழில் கொடி போன்ற கையைக் கொடுத்தாள் –
பரிவ்ருத்தி ச்ரமேண எகா சலத்வலய சாலிநீ-ததௌ பாஹூ லதாம் ச்கந்தே கோபீ மது நிகாதின -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-54-
என்கிறபடியே –
கமுகின் மல்லிலை மடல் வாழை –
கமுகோடே கூடின பெரிய இலையையும்-மடலையும் உடைய வாழை-வெற்றிலைக் கொடிக்கும் கமுகுக்கும் வெய்யில் தட்டாதபடி
நிழல் செய்து நிற்குமாயிற்று வாழை –

ஈன் கனி சூழ்ந்து-
பழத் தாறுகள் தெற்றிக் கிடக்குமாயிற்று –

புல்லிலைத் தெங்கினூடு-
புல்குதல் -தழுவுதல்-
ஒன்றுக்கு ஓன்று தழுவப் பட்ட இலையை உடைய தெங்கு -என்னுதல்
வாழை இலையோடு தழுவின தெங்கு -என்னுதல்
சோலை நெருக்கத்தாலே-நேரிதான இலையை உடைய தெங்கு என்னுதல் –

மணம் கமழ்ந்து -காலுலவும் தண் திருப் புலியூர் –
காற்றானது-விளைவது அறியாதே புக்கு-வாசனையில் ஆகையாலே -அங்கே இங்கே சுழித்து
வாசனையை ஏறிட்டுக் கொண்டு
வாழை நெருக்கத்தாலே நெருக்கப் பட்டு-சிறிய வெளியை உடைய தெங்கின் சோலையிலே புறப்பட்டு
சஞ்சரிக்கும் படியான திருப் புலியூர் –

மல்லலஞ் செல்வக் கண்ணன் –
தனக்கு மேல் ஓன்று இல்லாததாய்-அழகிதான செல்வத்தை உடைய-கண்ணன் –

தாள் அடைந்தாள் –
காதல் குணத்துக்கு தோற்று-திருவடிகளைப் பற்றினாள் –

இம் மடவரலே –
முன்பு எனக்கு அடங்கினவளாய் போந்த இவள் கண்டீர்-மீட்க ஒண்ணாதபடி ஆனாள் –

——————————————————————————————

மடவரல் அன்னை மீர்கட்கு
என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர்
வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்
தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால்
பரவாள் இவளே–8-9-8-

விலக்ஷண சமாச்சார பிரியன் -அனுஷ்டானம் இதில் வித்யா பூர்த்தி அடுத்து -10 பாசுரம் இவை அனைத்தும் இல்லா விடிலும் அநந்யார்ஹை -என்கிறாள்
மடவரல் அன்னை மீர்கட்கு-அன்னையாகிய உங்களுக்கு -என் சொல்லிச் சொல்லுகேன் -என்ன சப்தம் இட்டு சொல்லுவேன்
மல்லைச் செல்வ-பெரிய சம்பத் உடைய -வடமொழி மறை வாணர்-ஆராதனம் -ஸ்தோத்ரம் வேதம் உணர்ந்து
வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்-வேள்வி செய்து -ஆகுதி புகை வான் வரை போக –
யாகம் யஜ தேவ பூஜாம் -ஹோமம் த்ரவ்யம் தியாகம் த்யஜித்து செய்தல் -ஸ்வாகா – -தேவ லோகம் கொண்டு சேர்க்க -பித்ருக்கள் இடம் சேர்க்க சுதா –
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்-தண் திருப் புலியூர்-திரை போட்டால் போலே வளைத்து -சிரமஹரமான திவ்ய தேசம்
கர்மம் செய்யா விடில் -லோகம் கெட்டப் போகுமே -கண்ணனும் செய்ய வேண்டுமா -தீண்டா விடிலும் -தேரோட்டி குதிரைக்கு குளிப்பாட்டுவது கூட செய்து –
லோக சங்க க்ரஹம் பார்த்து செய்து கொண்டு -அர்ஜுனா நீயும் இப்படி -இவற்றை அறிந்த வேத வல்லார்கள் உள்ள திவ்ய தேசம்
காம்ய கர்மா வில்லை -லோக க்ஷேமார்த்தம் -ஆச்சார்ய பிரபு -பிரதானம் -தீர்த்தம் ஆடி வேஷ்ட்டி காயாமல் -சந்தனம் புஷ்ப்பம் இலையில் வைத்து தூக்கி போட்டு –
ஆச்சார்ய பிரதன்-நித்ய வாசம் செய்யும் திவ்ய தேசம்
படவர வணையான் தன் நாமம் அல்லால்-ஸ்பர்சத்தால் படம் விகசித்து -ஆராத்யன் கண் வளர்ந்து அருளும்
பரவாள் இவளே- திரு நாமம் மட்டுமே சொல்லிக் கொண்டே இருப்பாள் –

வெறும் காதல் மட்டும் இருந்தால் போராதே –
ஜனகர் முதலானோர் கர்மங்களைச் செய்ததனாலேயே-சித்தியை அடைந்தவர்கள் -என்னும்படி –
கர்மணைவ ஹி சம்சித்திம் ஆஸ்திதா ஜனகாதயா-லோக சங்கரஹ மேவாபி சம்பச்யன் கர்த்தும் அர்ஹசி-ஸ்ரீ கீதை -3-20-
அன்றோ இக்குடி இருப்பது –
ஆகையால் இதற்க்கு தக்க ஆசாரம் உண்டாக வேணுமே அவனுக்கு -என்ன-
ஆனாள் அவ் ஊரில் உள்ளார் உடைய ஆசாரம் இருக்கிறபடி யைக் கேட்கலாகாதோ-என்கிறாள் –

மடவரல் –
மடம்வந்த படியை –இவள் எனக்கு அடங்கி இருந்த படியை -என்றபடி –
அன்றிக்கே
மடம்-எனபது -பற்றிற்று விடாமை -என்னுதல் –

அன்னை மீர்கட்கு –
என் கையில் இவளைக் காட்டித் தந்து இருக்கிற உங்கட்கு –

என் சொல்லிச் சொல்லுகேன் –
இவள் என் வழி வருகின்றிலள் என்னவோ –
இவள் எனக்கு அடங்கினவள் -என்னவோ –

மல்லைச் செல்வவடமொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்-
எல்லை இல்லாத செல்வத்தை உடையராய் –புராண இதிகாசங்களுக்கும் வேதத்துக்கும்-
வியாசபாதம் செலுத்த வல்லரே இருக்கின்ற-பிராமணர்கள் உடைய யாகங்களிலே
நெய்யாலே ஒமம் செய்த நெருப்பில் உண்டான-செறிந்த புகையானது சென்று –

திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் –
ஒரு நிலையான தன்மையை உடைய-ஆகாயத்தில்-தேவ லோகத்தை மறைக்கும் –என்றது
ஸ்வர்க்க்கத்தில் உள்ளவர்களான தேவர்களை-தேவ மாதர்கள் முகம் கண்டு-அனுபவிக்க ஒட்டாமல் மறைக்கும் -என்றபடி –
அன்றிக்கே
போகத்துக்கு தனியாக திரை வழியா நின்றது என்றுமாம்-

தண் திருப் புலியூர் –
நான் கர்மத்தைச் செய்யேன் ஆயின் இந்த மனிதர்கள் கெட்டுப் போவார்கள் –
சங்கர சாதி உண்டாவதற்கும் காரணன் ஆவேன்-இந்த மக்களைக் கொன்றவ னாயும் ஆவேன் –
உத்சீதேயு இமே லோகா ந குர்யாம் கர்மசேத் அஹம்-சங்கரஸ்ய ஸ் கர்த்தா ச்யாம் உபஹன்யாம் இமா பிரஜா -ஸ்ரீ கீதை -3-24-
என்பதே அன்றோ அவன்படியும் –

பட அரவு அணையான் தன் பாதம் அல்லால் இவள் பரவாள் –
தன் ஸ்பர்சத்தாலே மலர்ந்த படத்தைஉடையவனான-திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடையவனுடைய
திரு நாமம் அல்லது வாய் புலற்று கின்றிலள் -என்றது
நான் அருகே இருக்க கலவிக் காலத்திலே படுக்கை அழகையே சொல்லி-வாய் புலற்றா நின்றாள் -என்றபடி –
என்னை ஒழிய வேறு ஒன்றிலும் செல்லுவதற்கு அறியாதவள் -என்பாள் -இவள் -என்கிறாள் –

——————————————————————————————————

பரவாள் இவள் நின்று இராப்பகல்
பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம்
தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9-

வேத வித் பிரதானனான கிருஷ்ணனுடைய -திருப்பி புலியூர் புகழ் மட்டுமே சொல்லி -வித்யா பூர்த்தி –
கீழே அனுஷ்டானம் -கற்ற பின்பு தானே அனுஷ்டானம்
அனுஷ்டானம் செய்து பின்பே உபதேசம் -பெருமாள் அனுஷ்டானம் கிருஷ்ணன் உபதேசம் -போலே –
பனி நீர் நிறக் கண்ணபிரான்-குளிர்ந்த நீர் வண்ணன் -மகா உபகாரகன் -ஸூ லபன்
விரவாரிசை மறை வேதியரொலி–விரைவார் இசை -பாட பேதம் -பரவும் ராகம் மறை சாம வேதம் அறிந்தவர் கோஷம் -சாம கானம் -தொடக்கமான
வேலையின் நின்று ஒலிப்ப-கடல் ஒலி-நின்று முழங்க
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம்-தீவிகை நின்றலரும்-
புரவார் கழனிகள் சூழ்-இயற்க்கை பரகாலன் நிறைய –
கரவு முதலை -நிறைந்த -ஹரித்ரா -சேற்றுத் தாமரை –ஏரி காத்த -பெரிய தடங்கள்-நீராஞ்சனம் சமர்ப்பித்து –
தீர்த்தவாரி -பொழுது – நரசிம்மர் சந்நிதியில் -தீபங்கள் -2 மணி நேரம் -ஆகுமே -நம்மாழ்வார் திருமேனி ஸ்பர்சம் நேராக தாமிர பரணி
-மாசி வைகாசி இரண்டு தடவை ஸ்ரீ பெரும் புதூர் குரு புஷ்யம் சித்திரை திருவாதிரை -இரண்டு உத்சவங்கள் போலே
தாமரை நீராஞ்சனம் இங்கு -ஆழ்வார் திரு நகரியில் தேங்காயில் -தீபம் -தீபிகை போலே நின்று மலர்ந்த தாமரைகள் இங்கே
கட்டளைப்பட்ட கழனிகள்-சூழ்ந்த திவ்ய தேசம் –
திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே-பரவாள் இவள் நின்று இராப்பகல்-இத்தையே பேசுவாள்
தடம் -கரை -கரவு -முயல் -பொய்கையை என்றுமாம்

ஆசாரமே போருமோ-செய்கின்ற தொழிலை அறிவிக்கிற நூலைப் பார்த்து
அனுஷ்டானத்துக்கு வேண்டுவது-அறிந்து இருக்க ஒண்ணாதே –
எல்லா நூல்களையும் ஆராய்ந்தவரும்-எல்லா வேதங்களையும் ஆராய்ந்தவரும்-ஆன ஜனகர் -எனபது அன்றோ
இக்குடியில் உள்ளார் படி
மிதிலாதிபதிம் சூரம் ஜனகம் சத்ய விக்ரமம்-நிஷ்டிதம் சர்வ சாஸ்த்ரேஷூ சர்வ வேதேஷூ நிஷ்டிதம் -பால -13-21-
இதற்க்கு தக்க வேதார்த்த தத்வ ஞானம் உண்டாக வேணுமே என்ன –அதற்கும் ஒரு குறை இல்லை -என்கிறாள் –

பரவாள் இவள் நின்று இராப்பகல்
இவள் அடைவு கெட பேசா நின்றாள் –இராப் பகல் பேசா நின்றாள் –
இவள் கலவிக்கு வேறு பிரமாணம் தேட வேண்டுமா –இவள் வார்த்தையே அன்றோ பிரமாணம் –

பனி நீர் நிறக் கண்ணபிரான் –
குளிர்ந்த வடிவையும்-அப்படியே இருக்கும் சீலத்தையும்-உடையவள் –

விரவாரிசை மறை –
விரவு ஆர் இசை மறை –எங்கும் ஒக்க பரம்பி மிக்கு இருந்துள்ள ஒலியை உடைத்தான வேதம் –
அன்றிக்கே
விரைவார் -எனபது பாடம் ஆயின்-
விரை என்று இனிமையாய்-வார் -என்று அதில் மிகுதியாய்-இசைமறை என்று சாம வேதத்தை குறிக்கிறாள் -என்னுதல் –

வேதியரொலி-
வேத ஒளியும்-வேதார்த்தத்தை விசாரம் செய்கின்றவர்களின் ஒலியும்-

வேலையின் நின்று ஒலிப்ப –
கடல் ஒலியைக் காட்டிலும் நின்று ஒலிப்ப –

கரவார் தடந்தொறும் –
முதலை மிக்கு இருந்துள்ள பொய்கை தோறும் –

தாமரைக்கயம் தீவிகை நின்றலரும் –
தாமரையின் திரள் நிலை-விளக்குப் போலே அலர்ந்து நிற்கும் –

கயம் -பெருமை -அல்லது -திரள் –

புரவார் கழனிகள் சூழ் –
தலைத் தரப் பெருக்காய் -இருக்கிற வயல்கள் சூழ்ந்த –
பட்டர் -அவ் ஊரில் பிராமணர்கள் இறுத்து மாய்கிறார்கள் –இவர் ஊருக்கு சிறப்பு சொல்லுகிறார் அன்றோ –என்று அருளிச் செய்வர்-

திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே பரவாள் இவள் நின்று இராப்பகல்
அவ் ஊரில் உள்ளார் உடைய வேத ஒலியும்-வேத விசாரம் செய்கின்ற ஆரவாரமும்-
அவ் ஊரில் இனிமையுமே அன்றோ இவள்-அடைவு கெடச் சொல்லா நிற்பது-

————————————————————————————————

அன்றி மற்றோர் உபாயம் என்
இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
இவள் நேர் பட்டதே–8-9-10-

6-10-10- சரணாகதி -பண்ணி -குணங்கள் குணாதிகன் ஆஸ்ரயம் -உலகம் உண்ட பெறுவாயா –பாதம் கூடுமாறு
வாத்சல்யம் -ஒரு குணம் சொல்லி பாசுரம் தோறும் -அங்கு –
ஆனால் இங்கோ -பாசுரங்கள் தோறும் -குணங்களை சொல்லி -8-9-10 -பாசுரத்தில்
குணங்கள் இல்லா விடில் அவன் இடம் அற்று தீர்ந்தாள் -அநந்யார்ஹத்வம் -என்கிறாள் –

ஆச்சர்ய சேஷ்டி தங்கள் உடையவன் என்றாலும் –அசாதாரண சிஹ்னம்-இவனுக்கே உரிய -துளசி கந்தம் -உண்டே
குன்ற மா மணி மாட மாளிகைக்-குன்றம் போலே சிலாக்கியமான மாடங்கள் மாளிகைகள்
கோலக் குழாங்கள் மல்கி–கூட்டங்கள் -நெருங்கி
தென் திசைத் திலதம் புரை-குட்ட நாட்டுத் திருப் புலியூர்-தெற்குத் திக்குக்கு திருமலை போலே இதுவும் -இதிலும் 6-10 உடன் சம்பந்தம்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்-இவள் நேர் பட்டதே-ஆச்சர்ய புதன் உடைய -கிருபையால் இவள் -நேர் பட்டாள்-
இதை விட வேறு எத்தை சொல்லி விசுவசிப்பது -என்றால்
சொல் என்னைச் சொல்கிறாள் -சம்ச்லேஷம் ஏற்கனவே முடிந்ததே -கலந்து பிரிந்ததற்கு அடையாளம் என்றுமாம் –
இவள் அம்தண் துழாய் கமழ்தல்-இவள் இத்தையும் மேல் சொல்கிறாள் -அழகிய குளிர்ந்த திருத்த துழாய் பரிமளம் உடையவளாக இருப்பதற்கு –
அன்றி மற்றோர் உபாயம் என்-அநந்யா சித்தம் -அந்யதா சித்தம் இல்லை -இதனாலே ஸ்தாபிக்கப் படும் -துளசி கந்தம்
ராஜ புத்ரனை அணைவதற்கு கோயில் சாந்து கந்தம் போலே -இவள் வகுளா மாலா தரர் -துளசி அவனது தானே
தாயார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்ட கோயில் சாந்து பானையில் இருந்ததை வைத்தே -அசாதாரணம் அங்கும் –
அங்கீ கார ஸூ சகம் – ஸ்வா பதேசத்தில்

நீ சொல்லுகிறவை எல்லாம் கிடக்க-இவளை அவனுக்கு கொடுக்க வேண்டியதற்கு
தக்கபடி சிறந்த காரணங்கள் உண்டாகில்-சொல்லிக் காணாய் –என்று சொல்லுகிறாள்-

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல் –
வேறு மற்று ஓர் உபாயம் உண்டோ –
இவள் -அழகியதாய்-குழிந்த திருத் துழாய் நாறுகைக்கு –இராச புத்திரனை அணையாதார்க்கு கோயில் சாந்து
நாறுகைக்கு விரகு உண்டோ –
என் உடம்பாதல்-உங்கள் உடம்பாதல்-திருத் துழாய் நாறுகின்றதோ –
அம்தண் துழாய் கமழ்தல் –என்கிறதற்கு –
அங்கீ காரத்துக்கு அறிகுறியாய் இருக்கிறது -எனபது-உள்ளுறை பொருள் -ஸ்வாபதேச பொருள்

குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி –
மலை போன்று சலிப்பிக்க ஒண்ணாததாய்-பெரு விலையனான ரத்னங்களால் செய்யப் பட்டு இருந்துள்ள
மாடங்களின் உடையவும் மாளிகைகளின் உடையவும்-காட்சிக்கு இனிய குழாம்களால் மிக்கு –
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர் நின்ற மாயப் பிரான் –

தெற்குத் திக்குக்கு திலகம் போலே இருக்கிறகுட்ட நாட்டுத் திருப் புலியூரில்
நின்று அருளின ஆச்சர்யத்தை உடையவன் -என்றது –
அவனுக்கு இவள் தக்கவள் அல்லள்-என்னும்படி அன்றோ-அவன் குணங்களால் மேம்பட்டு இருப்பது -என்றபடி –
கொம்பினை காணும் தோறும் -குரிசிற்கு அன்னதேயாம் நம்பியைக் காண ஆயிரம் நயனம் வேணும் -தவம் பெற்றது தரணி -போலே இங்கும்

திருவருளாம் இவள் நேர் பட்டதே –
இவள் நேர்பட்டது அவன் திருவருளாம் –
அன்றிக்கே
அன்றி மற்று ஓர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் -என்பதற்கு
அவன் திருவருளேயாம் -என்றாள்-
இதுவேயோ -வேறு அடையாளம் வேண்டோ -என்ன
அம் தண் துழாய் கமழ்தல் ஒழிய வேறு அடையாளம் உண்டோ -என்கிறாள்-என்று பொருள் கூறலுமாம்-

———————————————————————————–

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்
நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்
தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை
ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார்
நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

பகவத் கைங்கர்யம் -பழம் இதில் அடுத்ததில் பாகவத கைங்கர்யம்
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்நாயகன் -த்ரிவித சேதன அசேதனங்களுக்கும்
தன்னடிமைநேர்பட்ட தொண்டர் -கைங்கர்யத்துக்கு வாய்த்த பக்தி பரவசர்
தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் -சம்பந்த சம்பந்திகளுக்கு
சொல்நேர்பட்ட தமிழ் மாலைஆயிரத்துள் இவை பத்தும்நேர்பட்டார் -சொல் வாய்ப்பு -கட்டளை பட்ட -திராவிட மாலை -அப்யஸித்து கிட்டினவர்கள்
அவர் நேர்பட்டார்-சேஷத்வத்தில் நிலை நின்றார்
நெடுமாற்கு அடிமை செய்யவே-ஆச்ரித வ்யாமுக்தனுக்கு அடிமை செய்யும் பலன் கிட்டும்

நிகமத்தில்
இப்பத்தைக் கற்றவர் ஸ்வரூபத்துக்கு தகுதியான-கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவர்-
சேஷத்வ பாரதந்தர்யம் -சேர்ந்த ஸ்வரூபம் -பாகவத சேஷத்வம் பொசிந்து காட்டுகிறதே –

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன் –
குறைவு அற்ற மூன்று உலகங்கட்கும் நேர்பட்ட நாயகன்-
எந்த நாதனால் மூன்று உலகங்களும் நல்ல நாதனை-உடையவன ஆகுமோ -என்கிறபடியே
பாது காக்கப் படுகின்ற பொருள்களின் அளவு அன்றிக்கே-இருக்கிற-பாது காக்கின்ற தன்மையின் துடிப்பு
இதனால் நாயகன் படி சொல்லிற்று –
அந்த இராமன் தகுந்த நாதன் என்னுமா போலே-அடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
இதனால் இவர் படி சொல்கிறது –
அவன் இறைவனாம் தன்மைக்கு எல்லை ஆனால் போன்று-இவர் அடிமை யாம் தன்மைக்கு எல்லை யாம்படி –

சொல் நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும் நேர்பட்டார் –
அந்த தகுதியான நாயகனுக்கு-தகுதியான சொற்கள் வாய்ந்த-தமிழ் தொடை ஆயிரத்திலும்
இத் திருவாய்மொழி நேர் பட்டவர்கள் –

அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே –
நெடுமாற்கு அடிமை செய்ய நேர் பட்டார் –
இவர் பாசுரத்தை சொன்னவர்-இவர் செய்ய விரும்பிய கைங்கர்யத்திலே சேரப் பெறுவர் –
நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –
ஆக
இப்பாட்டால்
சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்-
ஆத்ம ஸ்வரூபத்தையும்-
இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் சிறப்பினையும்-
இதனைக் கற்றவர்கள் பெரும் பேற்றின் சிறப்பினையும்-
சொல்லிற்று ஆயிற்று —
வங்க கடல் கடைந்த –கோபிகள் -கோதை அநுகரித்து-தமிழ் மாலை -முப்பதும் -அப்யஸிக்க வல்லார் –
-அனுஷ்டித்த -அநுகரித்த -அப்யஸிக்க – -தோல் கன்றுக்கும் கிட்டும் போலே –

—————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அந்யார்ஹதா சேஷத்வத்வம் ஸ்ரவணம் அபி
நாசோடும் ஸஹ்யத இதை ஸூ தசா விசேஷம்
அந்யாபதேசம் அவலம்பிய
ததோபா யுக்தம்
நாராயண பரதீ
நவமே ஜகாதே

——————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

வைலக்ஷண் யாத் ஸூ மூர்த்தே
மகுட முக மகா பூஷணாதவாத
ஸ்வர்க்க அநேக ஆயுதத்வாத்
பிரளய ஸகாத் வாத
உஜ்ஜீவனம் கர்ஷகத்வாத்
பவ்யத்வாத்
சம்பத் நிரவாதிக்கத்தய ஆச்சர்ய -7/8/9
நிஷ்டாம் தாஸ்யே ஆச்சரிய சேஷ்ட்யத்வ யோகாத்–100 ஸ்லோகம் –

——————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 79-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒரு மா கலவி யுரைப்பால் -திறமாக
அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர்
இந்நிலையை யோரு நெடிதா ———79-

———————————————————-

அவதாரிகை –

இதில்
ஆத்மாவின் உடைய அந்ய சேஷத்வ நிவ்ருத்தியை
ஆழ்வார் அருளிச் செய்த படியை
அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இப்படி விலஷணமான ஆத்மஸ்வரூபம் தான்
தனக்கும் உரித்தது அன்றிக்கே
அவனுக்கே -அனந்யார்ஹ -சேஷமாய் இருக்கும் படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
கரு மாணிக்க மலையில் அர்த்தத்தை
கருமால் திறத்தில் -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————————

வியாக்யானம்–

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன் –
நீல நிறத்தை யுடையவனாய்
ஆஸ்ரித வ்யாமுக்தனான
சர்வேஸ்வரன் விஷயத்தில்
அந்ய சேஷத்வம் இல்லாத
கன்யா அவஸ்தையை
பஜித்த ஆழ்வார் –
கரு மாணிக்க மலை -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி –

ஒரு மா கலவி யுரைப்பால் –
அத்விதீயமான
விலஷணமான
சம்ச்லேஷ லஷணங்களை
தோழி பேச்சாலே அருளிச் செய்யப் புகுகையாலே –
அதாவது –
திருப் புலியூர் அருமாயன் பேர் அன்றி பேச்சிலள் -என்றும்
திருப் புலியூர் வளமே –புகழும் -என்றும் –
அப்பன் திருவருள் மூழ்கினள்–புனை இழைகள் அணிவும் ஆடையும் யுடையும்
புதுக் கணிப்பும் நினையும் நீர்மை யதன்று -என்றும்
திருவருள் கமுகு ஒண் பழத்து மெல்லியில செவ்விதழே
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள -என்றும்
இவற்றாலே
கண்ணன் தாள் அடைந்தாள் இம்மடவரல் -என்றும்
பட வரவணையான் தன நாமம் அல்லால் பரவாள் இவள் -என்றும் –
திருப் புலியூர் புகழ் அன்றி மற்று பரவாள் இவள் -என்றும் –
திருப் புலியூர் நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே –
அன்றி மற்று ஒரு உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் என்றும்
இப்படி
கலவிக் குறிகளை கூறப் புகுகையாலே -என்கை-
திறமாக அன்னியருக்காகாதவன் தனக்கே யாகும் உயிர் இந்நிலையை –
கதம் நாமோ பதாஸ்யாமி புஜ மன்யச்ய கச்யசித் -என்கிறபடியே
நிச்சயமாக
அந்யருக்கு
சேஷம் ஆகல் ஆகாது –
பிராப்த சேஷி யானவனுக்கே
சேஷம் ஆகிற ஆத்ம ஸ்வரூபத்தின் நிஷ்டையை

யோரு நெடிதா –
ஆராய்ந்து போருங்கோள் –
தீர்க்கமாக -என்னுதல் –
தீர்க்கமாக விசாரி என்று தன திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் -ஆதல்-

————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: