பகவத் விஷயம் காலஷேபம் -167- திருவாய்மொழி – -8-8-1….8-8-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

கண்கள் சிவந்து -பிரவேசம்
மாயக் கூத்தா என்னும் திருவாய் மொழியிலே–இவருக்கு ஓடின விடாய் எல்லாம் ஆறும்படி
இருத்தும் வியந்து -என்கிற திருவாய்மொழி யிலே வந்து கலந்து
இவர் விடாயும் தீர -தன் விடாயும் தீர்ந்து–இவரைப் பெற்ற பேற்றினால் ப்ரீதனாய்-
நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே இங்கனே சேர விழுந்தது-யாங்கனம் விழுந்தது எனின் –
இனி உண்டான கலவி உலைய ஒண்ணாது –
இவர் ஆகிறார்
வளவேழ் உலகின் -என்ற திருவாய் மொழியைப் பாடின ஆழ்வார் ஆயிற்று –
நாம் கிட்டக் கொள்ள -சிறியேனுடைச் சிந்தையுள் -என்று-தம் தாழ்வினை நினைத்தவர்-
இன்னும் அது பின்நாட்டி அகலப் பார்ப்பர்-
அங்கனம் அகலப்பார்ப்பதற்க்கு முன்னே அதனை நீக்க வேண்டும் -என்று பார்த்து
இனி இவர் தாம் அகலப் பார்ப்பதும்-அநாதி காலம் சம்சாரத்தில் உழன்று போந்த ஆத்மவஸ்து
அங்குத்தைக்கு இனி அது அன்று என்று ஆயிற்று-
இது அங்கன் அன்று-வந்தேறியான இதனைப் பாராமல்-அடியைப் பாரீர் என்று-
இந்த ஆத்மவஸ்து வினுடைய சிறப்பினை இவர் நெஞ்சிலே படுத்த வேண்டும் என்று பார்த்தான்
அங்கனம் பார்த்து–
என்றும் உள்ளதாய்-ஞான ஆனந்த லஷணமாய்–நமக்கே உரிய அடிமையாய் காணும் இருப்பது
நீர் கிட்டுமது நமக்கு தாழ்வு அன்று
கௌச்துவத்தை போன்றும் பிராட்டிமாரைப் போன்றும் -நமக்கு நிறமாம் இத்தனை -என்று
இவருடைய ஸ்வரூபத்தின் சிறப்பினை இவர் நெஞ்சிலே படுத்துகிறான்-

அங்கனம் படுத்தும் இடத்து
உம்முடைய ஆத்மா ஸ்வரூபம் இருக்கும்படி காட்டுவதற்கு வாரீர் -என்றால்-
மின் மினி போலே இருக்கிற இதில் சரக்கு என் -என்று இசைவார் ஒருவர் அல்லர் இவர்
அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்றருள் -என்று-நம்வடிவிலே துவக்குண்டு இருப்பது ஓன்று உண்டு
ஆதலால் நம் வடிவினைக் காட்டி அதன் மூலமாக நமக்கு
பிரகாரமாக இருக்கிற ஆத்மா ஸ்வரூபத்தை காட்டிக் கொடுப்போம் -என்று பார்த்து –
வாரீர் நம்முடைய வடிவு அழகு இருக்கிறபடி கண்டீரே
நம்மைக் காணும் காட்சியிலே உம்மையும் காணலாய் காணும் இருப்பது -என்று
தம்முடைய வடிவு அழகினை முற்பட அனுபவிப்பித்து
தனக்கு நூபுரம் முதலான வைகளைப் போன்று மிகைனிய பொருளுமாய்
தனக்கே அடிமையுமாய் இருக்கிற ஆத்மா ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்க
அதனை-அனுபவித்து இனியர் ஆகிறார்-

ஸ்ரீ கௌஸ்துபம் முன் அருளிச் செய்தது எம்பெருமான் திரு உள்ளம் -பிரணயித்தவ ஸ்வ அபிப்ராயத்தால்
-நூபுரம் என்றது ஆழ்வார் திரு உள்ளம் -இது தத்வ ஸ்திதி –
தாஸ்ய பாவனையில் இருப்பாரே -பிரேம பாவனை விட -பர்த்ரு பார்யை -ஸ்வாமி தாஸ்ய பாவமே -மிகுத்து இருப்பாரே –
அத்யந்த போக்யமுமாய் அத்யந்த சேஷத்வமுமாய் இருக்கும்-அமுதனார் -இத்தை கொண்டே ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி –
சீலம் கொள் நாதமுனியை -யதிகட்க்கு இறைவன் யமனைத்துறைவன் -திருவடி -அப்ருதக் சித்தம் என்று காட்டி அருளினால் போலே –

இத் திருவாய்மொழி யில் முதல் இரண்டரை பாசுரங்களால்-பாட்டையும் பிரிக்காமல் -அவ்வளவு நெருக்கம் என்று காட்ட –
தன்னை அனுபவிப்பித்து-பின்னர் ஆத்ம ஸ்வரூபத்தை காட்டிக் கொடுத்தானாய் இருக்கும்-அதற்கு அடி என் என்னில்
ஆத்மவஸ்து வானது சர்வேஸ்வரன் தன்னைப் பற்றி அல்லது இராமையாலே-பற்றுக்கோடான தன்னைக் காட்டி
பின்பு ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறான் -என்பாரும் உளர்
அன்றிக்கே
ஸ்வரூபம் இருக்கிற படியைக் காட்டித் தருவதற்கு வாரும் என்றால் இசையார் என்று
தன்னை முற்பட காட்டிக் கொடுக்கிறான் -என்பாருமுளர் –
அன்றிக்கே –
இரண்டரை பாசுரங்களாலும்-இருத்தும் வியந்து -என்னும் திருவாய் மொழியில் கூறிய
கலவி பின்னாட்டுகிறது -என்பாரும் உளர் –

பிராணவார்த்தம் -8-8-என்பர் -8-8-/-8- 9/8-10 -மூன்றும் சேர்ந்து திருமந்த்ரார்த்தம் –
பகவத் ஸ்வரூபம் ஆரம்பித்து ஆத்ம ஸ்வரூபத்தில் -முடியும் -கீதை விட ஏற்றம்
சந்தோஷம் உடன் ஆரம்பித்து வருத்தம் உடன் கீதை முடிய
ஏ பாவம் பரமே -உற்றேன் உன பாதம் பெற்றேன் -ஆனந்தம் முடித்து
ஐவரை வாழ வைக்க அது
ஒருவரை வாழ்வித்து 25 பேரை அழிக்க திருவாயமொழி –
இருத்தும் வியந்து -உபாயம் இரக்கம்
அருத்தித்து -தகுதி -இச்சை
அவர் பொன்னடிக்கீழ் -இனிமை புருஷார்த்தம் –
இச்சை இரக்கம் இனிமை –
பாலோடு அமுது அன்ன ஆயிரம் -த்ருஷ்ட்டி விஷம் இந்த திருவாயமொழி
வானோர் மனச் சுடரை தூண்டுவிக்கும் வினைச் சுடரை அழிக்கும் திருமலை போலே –

மாசி மகம் -மணக்கால் நம்பி -ராம மிஸ்ரர் -கலியுக ராமர் -மூவர் இடம் இல்லா பெருமை
-அனுஜித ஷாமா யோகம் -பரசுராமர் போல் ரோஷ ராமர் இல்லை
அபுண்ய ஜன பாதகம் -பெருமாள் போலே இல்லையே –
மது -கள் குடிக்காத -பல ராமர் போலே இல்லையே —

————————————————————————————-

கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு
விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்
அடியேன் உள்ளானே–8-8-1-

அகாரார்த்தம் -முதல் 2.5 பாசுரங்கள்
லுப்த சதுர்த்த்யர்த்தம் உகார்த்தம் மீதி பாசுரம்-
சர்வ பிரகார விலக்ஷணமான -வடிவு அழகுடன் என் நெஞ்சுக்குள் புகுந்தான் -உள்ளான் -உள்ளே ஆனான் -உள்ளே இருப்பானாக இருக்கிறான் -என்றபடி –
கண்கள் சிவந்து பெரியவாய்- -பெரியதாகி என்றபடி -சம்ச்லேஷ ப்ரீதி அதிசயத்தாலே -இருத்தும் வியந்தில் கலந்தார் -நீண்ட அப்பெரியவாய் கண்கள்
வாயும் சிவந்து கனிந்து -உள்ளே-நெய்ப்பே இல்லாமல் வறண்டு இருந்தது சிவந்தது -பெரியதாகி –
வெண் பலிலகு சுடரிலகு-ஒளி விட ஆரம்பித்தது -வெண் பல இலகு சுடர் —
விலகு மகர குண்டலத்தன்-பளிச்சு என்று -இலகு விலகு-மகர குண்டலத்தன் -ஆடும் ஒளி விடும் –
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்-வெள்ளை மேகம் இப்பொழுது -இவ்வவயவ சோபைக்கு பரிபாகம் -கருத்த மேகம்
-சாத்ருஸ்யம்-ரூப சோபை -பேர் ஒளி உடைய திரு அபிஷேகம் –
நான்கு தோளன் குனி சாரங்கன்-ஈரிரண்டு மால் வரை தோள்கள் ஆனதே -ஸர்வேச்வரத்வ அனுரூபம் சதுர் புஜன்
பூத்தால் போலே இருக்கும் -திவ்ய ஆயுதங்கள்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்-ருக்மிணி பிராட்டி மகா பாரதம் ஊதி இனி இவருக்காக -கற்பக மரம் அவன்
-கிளைகள் தோள்கள் -பூக்கள் இவை கௌமோதகி கந்தகம் -அவயவ ஆபரண ஆயுத சோபைகளால் அத்விதீயன் -ஒப்பார் மிக்கார் இல்லாதவன்
அடியேன் உள்ளானே-இந்த அழகைக் கண்டு மயங்கி -சேஷ பூதன் இப்பொழுது தான் -நானும் உனக்கு பழ வடியேன்-ஸ்வரூபம்
இங்கு அழகுக்குத் தோற்று அடிமை -போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தான் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் ஐயப்பாடு அறுத்ததும் அழகால்
உள்ளத்திலே பிரகாசிக்கிறான்
சங்கத்தை கடைக்குறை -இனிது இறைத்து மோத-அங்கும் -முழிந்து ஈந்த விழுந்து ஈந்த-சேரும் பொழுதும் இப்படியே –
கபோலம் சொல்லாமல் -ஏழையராவி பதிகத்தில் கபோலம் படுத்துவதை சொல்ல வில்லையே –
அங்கே எதனால் சொல்ல வில்லை -வாசா மகோசரம் அது -பேசாமல் விக்கித்து போனார்
-கூரத் ஆழ்வான் -யசோதை கை பட்டு பருத்த இந்த இடம் – -தாயாருக்கு சொத்து என்று விட்டார் -மற்றவை எல்லாம் பார்யை இவளுக்கு

அவன் தன்னுடைய கலவியாலே புதுக் கணித்த-தெய்வத்தன்மை உடைய வனப்பு முதலானவைகளோடே
என்னுடைய மனத்தினிலே புகுந்து இருந்தான் -என்கிறார் –
நம் ஆழ்வார்கள் வடிவு அழகிற்கு அவ்வருகு ஸ்வரூப குணங்களில் இழிய மாட்டார்கள் –
திவ்ய விக்ரகத்தை பற்றுக்கோடாக பற்றின பின்னை அவ்வருகு போவான்-என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன-
இதனை விட்டுப் போக சொல்லுகின்றன அல்ல –
ஸ்வரூப குணங்களும் உபாசிக்கத் தக்கவை என்பதற்காக சொல்லுகின்றன-
அவன் தன்னோடு-பிராட்டிமாரோடு-அடியார்களோடு-வாசி இல்லை-எல்லாருக்கும் விரும்பத் தக்கதாய் இருக்குமாயிற்று திருமேனி –

கண்கள் சிவந்து
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-சாந்தோக்யம் -1-6-
சூர்யனை கண்டு மலர்கின்ற தாமரை எவ்வண்ணன் இருக்குமோ அவ்வண்ணமே-அந்த பரம் பொருளின் உடைய திருக் கண்கள் -என்கிறபடியே
இறைவனுடைய கண்கள் சிவந்து இருக்குமே அன்றோ –
இப்படி இருக்கச் செய்தே
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே பிரிவினால் வெண்ணிறத்தை அடைந்தது –
ஆசார்ய ஹிருதயம் -சூர்ணிகை -58
மூவாறு மாசம் மோஹித்து – என்ற இடத்து
மாயக் கூத்தனில் தாம் கண்ணும் வாயும் துவர்ந்தால் போலே
தம்மைப் பிரிகையாலே அவன் கண்ணும் வாயும் துவர்ந்து-தம்மோடு கலந்த பின்பு அவை தன் நிறம் பெற்றதை அனுசந்தித்து
ஈதென்ன பிரகாரம் -என்று ஆறு மாசம் மோகித்து -மணவாள மா முனிகள் வியாக்யானம் –
இருத்தும் வியந்து -என்ற திருவாய்மொழியிலே கலவியாலே தன்னிறம் பெற்றபடி –
கண்ணிலே துவக்குண்டு கால் வாங்க மாட்டாதே இருக்கிற இருப்பு -இசையிலே காணும் இத்தனை –

பெரிய ஆய்-
பெருத்தல் குறைதல் முதலாவைகளுண்டாயினவாயிற்று-சதைகரூபரூபாயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1-
எப்போதும் ஒருபடிப் பட்ட உருவம் உடையவன் பொருட்டு -என்கிறது
கர்மம் காரணமாக உண்டாகிற விகாரகங்கள் இல்லை என்ற இத்தனை ஒழிய-
அடியார்களோடு கலக்கின்ற கலவியாலே பிறக்கும் விகாரத்தை இல்லை என்கிறது அன்று –
அப்படியேயான வன்று பற்றத்தக்கவன் அல்லனாய் ஒழியுமே-அவனும் தன் அளவில் வேறுபாடு அடையத் தக்கவன் ஆவான் அன்றோ –

வாயும் சிவந்து –
கண்களே அன்றிக்கே -திரு அதரமும் தன்னிறம் பெற்ற படி சொல்லுகிறது-செவ்வாய் வெண்பல் சுடர்க் குழை -என்றது பின்னாட்டுகிறபடி –

கனிந்து –
இந்த சிவப்பு தன்னிலே ஊறி நெய்த்து தொடரா நின்றது ஆயிற்று –

உள்ளே –
திரு அதரத்தில் சிவப்பை விட்டு-உள்ளே புகுகையில் உண்டான அருமை அடைய தோற்றுகிறது-

வெண் பல் இலகு சுடர் –
திரு அதரத்தில் சிவப்புக்கு பரபாகமான வெண்மை உடைத்தாய்-ஒளி நின்று சுழியா நின்றது ஆயிற்று –

இலகு விலகு மகர குண்டலத்தன் –
திருக் குழலில் இருட்சிக்கு பிரகாசமாய்–அலைந்து வருகின்ற திரு மகர குண்டலங்களை உடையவன் –
இக்கல்வி நமக்கு உண்டாயிற்றே -என்று தலை சித்து படா நின்றான் போலே-
கடல் உடைந்தாப் போலே தன் அளவிலே உவகையன் ஆகா நின்றான் –
இது அன்றோ கை விளக்கு பிச்சன் ஆழ்வாருக்கு அவனை அனுபவிக்க –

கொண்டல் வண்ணன் –
மழை முகில் போலே வடிவும் குளிர்ந்து கறுத்தது-முன்பு வெண்ணிறத்தை உடையதாப் போலே திருமேனி இருந்தது-

சுடர் முடியன் –
அழகாலே மற்றைய அழகை எல்லாம் முட்டாக்கிடும் திரு முடியை உடையவன்-
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே இவர் விடாய்-தீர்ந்த பின்பாயிற்று நல் முடியும் தரித்தது-
முடி சேர் சென்னி அம்மா –8-5-3-என்றோ அன்று கூப்பிட்டது–இவர் ஆசைப் பட்ட படியே வந்து அனுபவிப்பதற்கு சான்று –

நான்கு தோளன் –
இவரை அணைத்த பின்பு தோள்கள் பணைத்த படி-
இந்திரா அணைத்ததாலோ -மந்தர ப்ராஹ்மண -கடலைக் கடைந்து பெண்ணமுதம் பெற்றதாலோ -சுந்தரஸ்ய -கூரத் ஆழ்வான் –

குனி சாரங்கன் –
மகர குண்டலத்தன் -எனபது போன்று-இவையும் சில ஆபரணங்கள் இருக்கிறபடி-திருவாரமும் -திருவே ஆரம் –திருவும் ஹாரமும் என்றபடி –
சரபங்கன் ஆஸ்ரமம் -இளைய பெருமாள் இடம் வில்லில் நாணை இறக்கி உள்ளே போகச் சொல்லி
-இங்கு பராங்குச நாயகி செல்ல வளைந்து இருக்க வேணுமோ என்னில் –
வீரர்கள் கையில் வில் வினை இல்லாத போதும்-வளைந்தே இருக்குமாதலின் -குனி சாரங்கன் -என்கிறது –

ஒண் சங்கு
உண்பது சொல்லி –உன் செல்வம் சால அழகியது -நாச்சியார் திருமொழி –என்னும்படியான ஒண் சங்கு-

கதை வாள் ஆழியான் –
இவற்றை உடையவன் –

ஒருவன் –
தாமரைக் கண்ணனாய்-மழை முகில் போன்ற நிறத்தை உடையவனாய்
நான்கு தோளனாய்-சங்கு சக்கரம் முதலான திவ்ய ஆயுதங்களை தரித்தவன்-ஆகையாலே-ஒப்பற்றவன் –

அடியேன் –
அவனுடைய சேஷித்வம் இறைமை தன்மை ஒப்பற்றதாய்-இருப்பது போன்று
இவருடைய சேஷத்வமும் -அடிமைத் தன்மையும் ஒப்பற்றது -என்றது-
ஸ்வரூப ஞானத்தால் அன்றிக்கே-அழகுக்கு தோற்று -அடியேன் -என்கிறார் -என்றபடி –

உள்ளானே –
புறத்தில் திரியும் மனத்தினை உள் முகம் ஆக்கினவாறே-
யுவா குமாரா -என்று கேட்டே போம் வடிவு அழகு–வயிரப் பேழை திறந்தாப் போலே
அவயவ சோபையும்—-ஆயுத சோபையும் – ஆவரண சோபையுமாய்–மிளிரா நின்றதாயிற்று-
ஸ்ரீ ரெங்காந்திர மந்த்ரம் -அரவம் சுமப்பது அஞ்சன மலை -அரவிந்த பூ தோறும் அற்புதம் உள்ளதே -சிந்தாமணி –

—————————————————–

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

இதுவும் அகாரார்த்தம் -பராங்குசர் -பக்திக்கடல் –சர்வாத்ராத்மகன் ஞானானந்த உக்தன்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்-ஸமஸ்த பதார்த்தங்கள் -உள்ளேயும் புறவாயில் அவ்யக்த மகத் அஹங்காரங்களுக்கும் ஆத்மபூதன்
படியேயிது வென்றுரைக்கலாம்படி யனல்லன் பரம் பரன்-இதன் படி தான் என்று குறைக்கலாம் படி இல்லை –
அப்படிப்பட்டவன் என்று சொல்ல முடியாத வாசா மகோசரன் என்றபடி –
பரரான நித்ய முக்தர்களுக்கும் பரன் –
கடி சேர் நாற்றத்துள்ளாலை-நாற்றத்தில் -மீதி அசை சொல் -ஆல் ஐ-என்பவை -பரிமளம் மிக்கு -விலக்ஷணமான கந்தங்கள் சேர்ந்த
-கடி நாற்றம் வாசனை இரண்டும் -செண்பகக் கடி தாழம்பூ கடி எண்வகை பூக்களின் கடிகள் சேர்ந்த கலம்பகம் நாற்றம் -சமுதாய சேர்க்கை
-அவஹாஹித்து அனுபவித்து -உள்ளாலை –
இன்பத் துன்பக் கழி நேர்மை-இன்பமும் துன்பமும் சேர்ந்தே -அல்பம் அஸ்திரம் –நிபந்தநத்வாதி- துன்பம் கழித்து
-பெரும் இன்பம் எடுத்து -அபூத உவமை இங்கு -அங்கும் துன்பமே இல்லையே -அதனால் அபூத உவமை அங்கும் –
நேர்மை -ஸூஷ்மம்-புஷபத்தின் பரிமளம் ஸூஷ்மம் –
ஓடியா வின்பப் பெருமையோன்-அவிச்சின்னமான -தடையில்லாத -இன்பம் உடைய பெருமை -உதாரணம் சொல்லிப் புரிய வைக்க முன்பு அருளிச் செய்தவை –
உணர்விலும்பர் ஒருவனே-ஞானத்தால் அதிகன் -மேலானவன் -ஆனந்தம் போலே நித்யத்வ அபரிச்சின்னம் சொன்னது போலே
ஞானத்தில் வந்தாலும் -நித்யத்வ அபரிச்சின்னத்வ -அல்ப அஸ்திரம் எதிர்மறை -மேலாய் இருப்பவன் -அத்விதீயன் -அஹம் அர்த்தம்
-அந்தராத்மாதயா -அடியேன் உள்ளான் –சேஷத்வ ஏக நிரூபணீயம்-அடிமை தனமே அடையாளம் அஹம் அர்த்தம் –
அடியேன் நான் என்கிறார் -நான் அடியேன் என்று சொல்ல வந்தவர் அல்லர் -சேஷத்வத்தாலே நிருபணீயன்
-அவனுக்கு ஞானமும் இருக்கும் என்கிறார் -தெளிவான பாசுர வியாக்யானம் –
உவமானம் இல்லை என்று சொல்லி -கந்த அனுபவ சுக த்ருஷ்டாந்தம் -பிரதிபத் யர்த்தமாக சொல்லுகிறது –
-உபய லிங்க விசிஷ்டம் -அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகை த ஏக குணாத்மகன் –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணம்
-ஞானானந்த விசிஷ்டம் -உபமான ராஹித்யம் என்றதாயிற்று

என்னுடைய மனத்தில் புகுந்த அளவு அன்றிக்கே-என் சரீரத்திலும் புகுந்து கலந்தான் -என்கிறார்-
கீழே அடியேன் உள்ளான் -உள்ளே ஹிருதயத்தில்-என்றாரே -இதில் சரீரத்திலும் புகுந்து கலந்தான் என்றவாறு —

அடியேன் உள்ளான் –
ஆச்சார்ய முகேன பெற்று வர -திருக் கோட்டியூர் நம்பியின் ஸ்ரீ பாதத்திலே-ஆறு மாதங்கள் ஆழ்வான் சேவித்து நின்று-மீளப் புக்கவாறே
ஆழ்வான் -ஆழ்வார் அடியேன் உள்ளான் -என்றபடி கண்டாயே என்ன –
கிருதார்த்தனானேன் -என்று போந்தாராம் –
என் உள்ளான் என்ன வேண்டும் இடத்தில்-அடியேன் உள்ளான் -என்கையாலே
ஆத்மாவுக்கு நிரூபகம் ஞானமும் ஆனந்தமும் அன்று -அடிமையே -என்கிறார் –
அஹம் அர்த்தத்துக்கு ஞாநானந்தங்கள் தடஸ்தம் என்னும்படி தாஸ்யம் இறே அந்தரங்க நிரூபகம்–ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ சூக்தி –
ஞான ஆனந்தங்களைக் காட்டிலும் நெருங்கிய தொடர்பு உடையது-பகவானுக்கு அடிமையாக இருக்கும் தன்மை –
பகவானுக்கு சரீரமாய் இருப்பதனால் கிடைத்த இருப்பை உடைய வஸ்து ஆத்மாவாகையாலே —
சேஷத்வம் ரத்னம் -அறிவுள்ள ஜீவாத்மா ரத்ன பேழை -போலே -ரத்னத்தால் தானே ஏற்றம் -அஹம் அபி தாஸ-
பகவத் பிரகாரத்தயா லப்த சத்தாகும் -ஆத்மா -சத்தை கிடைத்ததே சேஷத்வம் தானே –
அதனால் முதலில் அந்தரங்கமான இத்தை நிரூபித்து -மேலே ஞானத்தவம் –

உடல் உள்ளான் –
சேதனனுக்கு பகவானுடைய ஸ்வரூபத்தைக் காட்டிலும்-திவ்ய மங்கள விக்ரகமே உத்தேச்யம் ஆனால் போலே-
ஈஸ்வரனுக்கும் இவருடைய ஆத்மாவைக் காட்டிலும்-இவர் கழிக்கிற சரீரம் உத்தேச்யமாய் தோற்றா நின்றது –
செருக்கர் தாம் உகந்த விஷயத்திலே அழுக்கு உகக்குமா போலே –
அப்ராக்ருதம் -விரும்புவது பிராப்தம் -அவன் செருக்கன் என்பதால் இத்தை விரும்புகிறான் –என்றபடி –
இதனால்-அல்லல் எல்லாம் வாதில் வென்றான் –என்றபடி
ஜீவ பர பேதமும் -அடியேன் -உள்ளான் -என்பதால்-
ஜீவர்களுக்குள் உள்ள பரஸ்பர பேதமும் -அண்டத்தகத்தான் -என்பதால்-
சேஷ சேஷி சம்பந்தமும் இல்லை-என்று சொல்லுகிற மதங்கள் பொருள் ஆற்றலால் மறுக்கப் பட்டனவாம்-

உம்முடைய திரு மேனியை விரும்புகின்றவன் யார் என்ன–இன்னான் என்கிறார் மேல்-
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்-
அண்டத்துக்கு உள்ளே இருக்கிற பொருள்களோடு–புறம்புள்ள பொருள்களோடு-வாசி அற
எங்கும் பரந்து இருப்பவன் ஆனான் –
எங்கும் பரந்து இருக்கிற பொருள் கண்டீர்-ஒரு உருவத்திலே-ஏகதேசமான சரீரத்திலே-கூற்றிலே அகப்பட்டது -என்கை-
உள்ளான் -உள்ளு ஹிருதயம் ஏக அம்சம் தானே -தெள்ளிய சிங்கம் -பிரகலாதன் இடம் -கலங்கிய சிங்கம் -பரமை ஏகாந்திகள் இடம் –

படியேயிது வென்றுரைக்கலாம்படியனல்லன் –
இதுவே படி -எல்லா வகையிலும் ஒத்ததாய் இருப்பது–ஒரு உபமானத்தை உடையன் அல்லன் -என்றது
எல்லா இடத்திலும் பரந்து இருப்பதுமாய்–எல்லா பொருள்களையும் நிர்வஹித்துக் கொண்டு இருப்பதுமாய்
இருப்பது ஒரு பொருள் உண்டாகில் அன்றோ ஒப்பு சொல்லலாவது-என்றபடி-
அதீர்க்கம்-ப்ரேமம் கொட்டும் -க்ஷணம் பொழுதில் காணாமல் போகும் தாமரை
ந சோரம் அந்தகரணம் பச்யதாம் தாமரை ஒப்பு சொல்ல முடியாது என்றாலும் சொல்கிறோம்

சொல்லலாம் படிதான் என் என்னில் –
பரம் பரன்
மேலானவற்றுக்கு எல்லாம் மேலானவன் –
இவ்வளவு அன்று இவ்வளவு அன்று -என்கிறபடியே
நேதி நேதி -ப்ருகதாரண்ய உபநிஷத் -4-3–இவ்வளவு அல்லன் எவ்வளவு என்றால் இவ்வளவு அல்லன் ந இதி ந இதி –
இவ்வளவு அன்று என்னும் இத்தனை –ஆனாலும் இவ்விஷயத்தை நினைக்கும்படி தான் என் என்னில் –

கடி சேர் நாற்றத்துள்ளாலை-
கடி என்பதும் நாற்றம் எனபது ஒரு பொருளனவே ஆதலின்-மீமிசை சொல்லாய் -மிக்க வாசனை என்பதனைக் குறிக்கிறது-
அன்றிக்கே
கடி எனபது புதுமையாய் -செவ்விப் பரிமளம் என்னலுமாம்-
நாற்றத்துள் என்றார் ஏனும்–வாசனைக்கு உள்ளும் புறம்பும் இல்லாமையாலே நாற்றத்திலே -என்று கொள்க
ஆலை – தேன்-

இன்பத் துன்பக் கழி நேர்மை –
அதனுடைய அனுபவத்தால் வந்த-சுகத்தில் துக்கத்தின் பகுதியைக் கழித்து-நுண்மையான சுகத்தின் பகுதி -என்றது-
மலரில் மணத்தை உவமையாக சொல்லுகையாலே-அதில் அற்பம் அழிந்து போதல் முதலானவைகள் துக்கத்தின் பகுதி-
அவை கழிந்த நுண்மை -சுகத்தின் பகுதி-துன்பம் கழிந்த இன்பம் -என்றபடி-

ஓடியா வின்பப் பெருமையோன்-
அழியாததுமாய்–பெரியதுமான சுகம்-அதாவது அழியாததுமாய்-
தனக்கு மேல் ஓன்று இல்லாததான-ஆனந்தத்தை உடையவன் -என்றபடி-
ஆனந்தமய -என்கிறார் என்றபடி –

உணர்விலும்பர் ஒருவனே –
ஞானத்தில் வந்தால் மேலான ஒருவன்-
ஒப்பற்ற ஞான ஆனந்த ஸ்வரூபன் -என்றபடி-
ஓடியா இன்பப் பெருமையோன் -உணர்விலும்பர் ஒருவன்-அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-
எல்லாருக்கும் விரும்பத் தக்கவனாய் இருக்கிறவன் காண்-என் சரீரத்தை விரும்புகிறான்-

———————————————————————————————

உணர்விலும் உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன்
அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி
யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-

கிருபாதிசயத்தாலே தான் என்னுள்ளே புகுந்து இருப்பதும் -அனுமதிப்பித்தும் செய்து -பிரகார பூதனாய் இருப்பதையும் பிரகாசிப்பித்தான்
உணர்விலும் உம்பர் ஒருவனை-நித்ய சூ ரிகளுக்கு நிர்வாஹகன் -அத்விதீயன்
அவனது அருளால் உறல் பொருட்டு என்உணர்வினுள்ளே யிருத்தினேன்-அபேஷா ரூப ஞானத்துக்கு உள்ளே இருத்தினேன்
அதுவுமவன தின்னருளே-இதுவரை பகவத் அனுபவம் –இச்சையும் அவனது நிர்ஹேதுக கிருபையால் -அகரார்த்தம்
-மேலே ஆத்ம விஷயம் -லுப்த சதுர்த்தி அர்த்தம்
உணர்வும் உயிரும் உடம்பும்-விஷய அவலம்பியான ஞான வ்ருத்தி விசேஷம் -கட ஞானம் பட ஞானம் போலே -பிரவ்ருத்தி-ஹேதுவான –
பஞ்ச வ்ருத்தி பிராணன் -பிராண ப்ரவ்ருத்தி பேதமான சரீர பேதமும்
மற்று உலப்பினவும் பழுதேயாம்-எண்ணிறந்த மஹத் அகங்கார இந்திரியாதிகள் -ஹேயம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி-என்பதை அறிய -அசித்துக்கள் அனைத்தையும் சொல்லி -ஞானம் அறிவித்து -நடந்து
-முடியும் வரை -படி படியாக மேலே பிரக்ருதிக்கே மேலே தானே ஜீவாத்மா -இற்று ஏறி -விலக்ஷண ஆத்மா வரை
யானும் தானாய் ஒழிந்தானே-உகாரார்த்தமும் விவஷிதம் -அநந்யார்ஹ சேஷத்வம் -அஹம் பொருளே தானாக படி –
ஸ்வரூப ஐக்கியம் இல்லை -அடியேன் உள்ளான் என்றாரே -நான் சொல்ல வில்லை -சரீரம் ஆத்மா பாவம் –
நியதி பிரக்ருதம் -அப்ருதக் சித்தி விசேஷம் -சாமா நாதி காரண்யம்-ஆத்ம பிரகார விசிஷ்டன் –

காரணம் இலாத கிருபையாலே -நிர் ஹேதுக-கிருபையாலே-தன் விஷயமாக இச்சையும் பிறப்பித்து–
என்னோடே கலந்து-அக்கலவி நிலைத்து நிற்கும் பொருட்டு-
சிறப்பினை உடையதாய்-தனக்கே யுரியதுமான ஆத்மாவின் ஸ்வரூபத்தையும்-காட்டி அருளினான் -என்கிறார்
அநந்யார்ஹ சேஷத்வமான ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டி அருளினான் -என்றவாறு —

உணர்விலும் உம்பர் ஒருவனை-
உணர்விலே உளரான நித்ய சித்தர் -என்றது-ஞானத்தில் மேம்பட்டரான நித்ய சூரிகள் உடைய
ஸ்திதி முதலானவைகள் தன் -அதீனமாம்படி இருக்கிற ஒப்பற்றவனை –
இதனால்–பிராப்ய ஸ்வரூபம் -அடையத் தக்க பேற்றின் ஸ்வரூபம் சொல்லிற்று-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கும் இருப்பே அன்றோ-அடையத் தக்க பேறு
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -என்றே அன்றோ இவர் வேண்டிக் கொண்டது –

அவனது அருளால் –
அவனுடைய திரு அருளாலே –
அடையத் தக்க பேறு அவனே என்கிற நிர்பந்தத்தைப் போன்று-
அவனை அடைவதற்கு உரிய வழியும் அவன் திரு அருளாய் இருக்கிறபடி –

உறல் பொருட்டு –
அடையும் பொருட்டு-
பேறும் பேற்றினை அடையும் வழியும் அவனே ஆகில்-நீர் அதிலே தொடர்பு உற்ற கார்யம் யாது -என்ன –

என் உணர்வினுள்ளே யிருத்தினேன்-
அவனை என் ஞானத்துக்கு விஷயம் ஆக்கினேன்-
வைத்தேன் மதியால் -என்றது தானே அன்றோ –விரும்பினேன் என்கை –
அவ்வாறு விரும்புதலும் தன் செயலோ என்ன –

அதுவுமவன தின்னருளே –
அந்த விருப்பம் பிறந்ததுவும் அவனுடைய திரு அருளாலே –
நின்ற நின்ற அளவுகள் தோறும்-இவ்வளவும் அவனாலே பிறந்தது என்னும்படி ஆயிற்று இருப்பது
அவனுடைய நல்ல எண்ணம் -தன் பொன்னடிக் கீழ் இருத்தும் வியந்து -என்று-
பேறும்-பேற்றுக்கு வழியும் அவனே என்று கூறி
அருத்தித்து -என்றார் அன்றே –அதனை அன்றோ இங்கு சொல்கிறது
இரண்டரைப் பாட்டு என்றது அற்றது –மேல் ஆத்ம ஸ்வரூபத்தின் சிறப்பினைக் காட்டித் தந்தார் என்கிறார் –

உணர்வும் –
விஷய ஞானமும்-

உயிரும்-
பஞ்ச விருத்தி பிராணனும் -பிராணன் – அபானன் -உதானன் – சமானன் விதானன் -ஐந்து பிராணனான உயிர் –

உடம்பும் –
சரீரமும் –

மற்று உலப்பினவும் –
மற்று உலப்பு இல்லனவும்-மற்றும் எல்லை இல்லாதனவான மகத்து முதலான-மூலப் பகுதியின் விகாரங்களும் –மூலப் பகுதியும் –

பழுதேயாம் உணர்வைப் பெற ஊர்ந்து-
இவை எல்லாம் தாழ்ந்தவை என்னும்படியான-அறிவை நான் பெறும்படி நடத்தி –அன்வர்த்த பிரயோஜன தேர் ஊருமாரு போலே -என்றது
இவை புருஷார்த்தங்கள் அல்லாதவை என்னும் உணர்வு உண்டு -மயர்வு அற்ற மதி-அதனை நான் உடையேனாம்படி செய்து -என்றபடி –
சமர்த்தனான ராஜா பிச்சை எடுக்க -தானே தேரை ஒட்டிக் கொண்டு போவது போலே -அன்றிக்கே
விஜயாவாகமான அர்ஜுனன் ரத்தம் -பார்த்த சாரதி ஒட்டிக் கொண்டு -சாரதி பரமாத்மா -ரதி நாம் -அவன் தானே ஒட்டி
-பீஷ்மாதிகள் சாமர்த்தியம் எல்லாம் பழுதாம் படி -அவை சாரம் அல்ப சாரம் என்று தள்ளினால் போலே –
சரீரம் -ரதம் -ஏக தேசம் ஹிருதயம் -இருந்து ஞானத்தை நடத்தினான் –

இறவேறி –
பிரக்ருதியும் பிரகிருதி சம்பந்தப் பட்ட பொருள்களும்-புருஷார்த்தங்கள் அல்லாதவைகள் என்னும் அளவே அன்றிக்கே
முடியப் போய்-என்றது-ஞான ஆனந்த ஸ்வரூபமாய்-பகவானுக்கு அடிமைப் பட்டு இருக்கும் அதனையே தனக்கு-
இன்பமாகக் கொண்டு இருக்கும் ஆத்மவஸ்து-என்னும் அளவும் காட்டித் தந்து -என்னும்படி–
ஜீவாத்மாவும் -அவன் சரீரம் என்பதால் பகவத் பிரகாரத்தயா உயர்த்தி அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே
இற ஏறி -முடிய ஏற்றி என்னுதல் –

யானும் தானாய் ஒழிந்தானே-
அவ்வளவிலும் முடியாமல்-
என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம்படி-தனக்கு பிரகாரம் ஆகையாலே-
அடிமை என்னும் இடத்தையும் காட்டிக் கொடுத்தான் –
ஆழ்வீர்-என்றால் ஏன் -என்பான் ஈஸ்வரனே போலும் காணும்-
நான் என்னும் சொல்லும்-நான் என்னும் புத்தியும்-தன்னளவும் செல்லும் படி சரீரமாய் இருக்கையே
ஸ்வரூபமாம்படி இருக்கிற படியைக் காட்டித் தந்தான் –
தத் -சப்தம் -குணங்களோடு கூடின இறைவனை காட்டுவது போன்று-
த்வம் -சப்தமும் சரீரத்தோடு கூடின ஆத்மாவுக்குள்-அந்தர்யாமியாய் இருக்கிற சர்வேஸ்வரன் அளவும் செல்லக் கடவது அன்றோ –
தத் -அவன் / த்வம் -நீ / அஸி -ஆகிறாய்–போலே என்கிறார்-
இரண்டும் ப்ரஹ்மம் -விசேஷணங்கள் தானே மாறி இருக்கும் -விசிஷ்டாத்வைதம் – –

—————————————————————————————————

யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப்
பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-

அநந்யார்ஹ சேஷத்வம் -முதல் பாதியில் லுப்த சதுர்த்தி அர்த்தம் -பின் பாதி –
அனைத்துக்கும் காரணம் -பஹஸ்யாம் பிரஜாயேய -பஹு பவன ஸ்ருஷ்ட்டி -சமஷ்டி-பிரகிருதி -மஹான் –மனசு வரை
வ்யஷடி சதுர்வித தேகாதி -பணைத்த-தனி முதல் -இங்கே –
அஹம் அன்னம் -சர்வ வித போக்யம் ஆத்மாவை அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரம் -அறிய பெற்றேன் என்கிறார்
யானும் தானாய் ஒழிந்தானை-யாதும் யவர்க்கும் முன்னோனை-ஸமஸ்த சகல சேதன அசேதன -சமஷ்டி
-ஜீவாத்மா -அசேதனங்கள் -அவ்யக்தாதி -யாவர்க்கும் யாதும் என்பதால் -இவற்றுக்கும் முன்னோனை
காரணம் விதை சொல்லாமல் -நியதி பூர்வ க்ஷண வர்த்தியான் -இத்தால் தானே காரணத்தவம் சித்திக்கும்
-ஆகாச விசிஷ்ட ப்ரஹ்மம் -வாயு விசிஷ்ட ப்ரஹ்மம் இத்யாதி -இதனால் முன்னோன் –
தானும் சிவனும் பிரமனுமாகிப்–பணைத்த தனி முதலை–இது வரை லுப்த சதுர்த்தி அர்த்தம் –
தானே தன்னாகி-பிரதம விஷ்ணு அவதாரம் -ஆக்குகிறார் இல்லை ஆகி -சாமா நாதி கரண்யம்-
ஆகியும் ஆக்கியும் காக்கும் தனி முதல் -1-9-1–நிமித்த உபாதான – காரணம் சொல்லி -அத்விதீய காரணம்
-அபின்ன நிமித்த உபாதான காரணம் -கை விளக்காக கொண்டு –வேதார்த்த சங்க்ரஹத்தில் சரீராத்மா பாவம் பிரகரணம்
-மாறியும் நிர்விகாரத்வமும் ஸ்தாபித்து -ரக்ஷணம் கடவனான தானும் -சம்ஹார ருத்ரன் ஸ்ருஷ்டிக்கு பிரம்மாவும் -முக்கிய பிரதான காரண புதன்
தான் போக்ய பூதனாகுமா போலே -தேனும் பாலும் கன்னலும்அமுதுமாகித் தித்தித்து என்-தான் போக்ய பூதனாகுமா போலே ரசித்து
ஊனில் உயிரில் உணர்வினில்-நின்ற வொன்றை யுணர்ந்தேனே-நின்ற ஒன்று -ஆத்ம சப்தம் ஜீவனா பரமாத்மா விசாரம் ப்ரஹ்ம ஸூத்த்ரம் உள்ளது போலே –
ஆகாசம் காரணம் -முதலில் தோன்றி -பிரசித்த ஆகாசம் இல்லை -ஆகாச சப்த வாச்யன் ப்ரஹ்மம் -ஆகாசம் சங்கல்பித்தது என்ற வாக்கியமும் இருக்குமே –
அதே போலே இங்கு நின்ற ஒன்று -சரீரம் பிராணன் ஞானம் -மூன்றில் நின்ற ஒன்றை உணர்ந்தேன் -பரம போக்யம்
-மகாரார்த்தம் -ஞாத்ருத்வம் சொல்லி அதனால் அனுபவிப்பவர் -போக்த்ருத்வம் -ஜீவத்வாரா பரமாத்மாவை சொல்கிறார்
சரீரமாக உடையவன் ஆகையால் -ஒன்றை -யானும் தானுமாய ஒழிந்தானை உணர்ந்தேன் -தானே அது என்னும் படி -ஏகாகாரம்
-இது -அந்தராத்மாவாக -சரீரமாகக் கொண்டவன் -அவனை உணர்ந்தேன் -கீழே பஹு ஆகாரம் –சரீரமாக -அஹம் அர்த்தமாக உணர்ந்தேன் –
சப்தம் இது தான் அர்த்தம் அவன் அளவும் பர்யவசிக்குமே

தொடர்பினைக் காட்டின அளவே அன்றிக்கே-இவ்வாத்மா தனக்கு மிகவும் இனிய பொருள்
என்னும் இடத்தையும் காட்டித் தந்தான் -என்கிறார்-

யானும் தானாய் ஒழிந்தானை-
மேலே கூறிய அனந்யார்ஹ சேஷத்வத்தில் உள்ள ப்ரீதியாலே-மீண்டும் அதனையே அருளிச் செய்கிறார் –

யாதும் யவர்க்கும் –
காரண நிலையில் உள்ள அசேதனங்களையும்-சேதனங்களையும் சொல்லுகிறது –

முன்னோனை –
கார்யத்துக்கு அவச்யமாக முன் கணத்தில் இருப்பது ஒன்றே அன்றோ காரணம் ஆவது –
யானும் தானாய் ஒழிந்தானை-யான் காரியம் தான் காரணம் மட் குடம் போலே -காரணம் அழிந்தால் கார்யத்திலே லயிக்கும்

தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை –
பிரமன் சிவன் இவர்கள் நடுவே அவதரித்த தானும் –பிரமன் சிவன் முதலான கார்யங்களின் கூட்டமுமாய்க் கொண்டு
விரிந்த-அத்விதீய காரணம் ஆனவனை –
அறிவுடைப் பொருள்கள்–அறிவில்லாத பொருள்கள்–
முழுதும் அழிந்த போது-தன் திருமேனியிலே நீறு மூடிய நெருப்பு போலே சூஷும ரூபமாக
இவை கிடக்கும்படி ஏறிட்டுக் கொண்டு நோக்கி–படைப்புக் காலம் வந்தவாறே தன் பக்கல் நின்றும் பிரித்து –
அண்ட சிருஷ்டி அளவும் தானே நடத்தி-அண்டத்தில் வசிக்கின்றவர்களுக்கு உள்ளே பிரதானரான-
பிரமன் முதலானோர்களை உண்டாக்கி–தன் உருவமாக நின்று பாதுகாத்தலைச் செய்தும்-
பிரமன் சிவன் இவர்கள் உடைய சரீரங்களையும் ஆத்மாக்களையும் தொடர்பு கொண்டு நின்று-படைத்தல் அழித்தல் களைச் -செய்தும்
அவர்கள் செய்கிற கார்யங்கள் உடன் தான் செய்கிற கார்யத்தோடு வேற்றுமை இல்லாமல்-எல்லாம் தானே நடத்துகிறவனை –

தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து –
இப்படி இனிதாய் இருக்கிறது யாருக்கு என்னில் –சர்வ ரச-என்கிறபடியே-இவனுக்கு அவன் இனியனாக இருக்குமா போலே-
ஈஸ்வரனுக்கும் இது இனியதாய் இருக்கும் அன்றோ –
அவனுக்கு -என்னது -என்பதனால் இனியதாய் இருக்கும்-
இவனுக்கு -அவனது -என்பதனால் இனியதாய் இருக்கும்-
ஈஸ்வரனுக்கு பரதந்த்ரப் பட்டது இவ்வாத்மா என்று அறிவதற்கு முன்னும்-தன்னைத் தானே அனுபவிக்கிற
ஆத்துமா அனுபவம் அமையும்-என்னும்படி இனியதாய் இருக்கிறது அன்றோ -கைவல்யம் –அப்ராப்த போக்யம் -இது –
இதனால் யானும் தானாய் ஒழிந்தவனை உணர்ந்தேன் என்கிறார் -பாட்டுத் தோறும் இத்தை விடாமல் அருளிச் செய்கிறார் –

என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே –
என் சரீரத்திலும்–பிராணனிலும்–ஞானத்திலும்-பரந்து இருப்பதாய்-சிறந்ததான ஆத்மாவை
தனக்கு சரீரமாக உடையவனை அறியப் பெற்றேன்-

நின்ற ஓன்று -என்று ஜீவாத்மா ஸ்வரூபத்தைக் காட்டும் இந்த சொல்லானது-
இந்த ஜீவாத்மா ஸ்வரூபத்துக்கு பற்றுக் கோடாய் இதனை சரீரமாக உடைய-பரமாத்மா அளவும் சென்று அவனைக் காட்டுகிறது-
ஜீவாத்மா ஸ்வரூபத்தை காட்டும் அச் சொல் தன்னளவில் நிற்பது அல்லாமையால்-பகவானைக் காட்டும் அளவாய் அன்றோ இருப்பது-

நன்று இப்பாசுரம் ஆத்மாவின் உடைய இனிமையைச் சொல்லப் புகுந்ததே யாகில்-
காரணமாக இருக்கும் ஈஸ்வரனுடைய தன்மையை சொல்லுகிறது என் என்னில் –
தன் பக்கல் பக்தி இல்லாத ஆத்மாக்களை கர்மங்கட்கு தகுதியாக படைத்து விட்டான் –
ஐஸ்வர்யத்தை விரும்பிய பிரமன் முதலார்க்கு அவர்கள் உகந்த ஐஸ்வர்யம் கொடுத்து விட்டான் –
எனக்கு இந்த சரீரம் விடத் தக்கது என்னும் இடத்தையும் –
ஐஸ்வர்யம் புருஷார்த்தம் அல்லாதது என்னும் இடத்தையும்-
ஆத்மவஸ்து தனக்கு-அனந்யார்ஹ சேஷமாய் -எல்லை இல்லாத இனிய பொருளாய் இருக்கும் இடத்தையும்-
காட்டித் தந்தான் என்கைக்காக சொல்லுகிறார் –
நின்றனர் இருந்தினர் -என்ற பாசுரத்திலே போலே-இந்த சாமாநாதி கரண்யத்துக்கு
இனிமையோடு கூடிய ஸ்வரூபத்தின் விசேஷண அம்சமான-இனிமையிலே தாத்பர்யம்-
வையதி கரண்யத்துக்கும் உலகத்தார் சொல்லுகிற சுத்த பேதம் அன்று பொருள்-
சாமாநாதி கரண்யத்துக்கும் ஸ்வரூப ஐக்கியம் அன்று பொருள்-
தர்சனம் பேதம் ஏவச–பின்னம் தான் -அதனால் வையதி கரண்யம் –
-சரீராத்மா பாவனையால் ஒன்று -அதனால் சாமா நாதி கரண்யம் -என்றவாறு –
அன்றிக்கே
யாதும் யவர்க்கும் முன்னோனை -என்று தொடங்கி-என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றான-
யானும் தானாய் ஒழிந்தானை உணர்ந்தேன் -என்னுதல் –

——————————————————————————————

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5-

மகாரார்த்தம் விளக்கி அருளிச் செய்கிறார் -இப்படி பகவத் பிரகாரம் ஆத்மாவை அறிந்து கொள்ளாத தன்மையை அருளிச் செய்கிறார் –
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு-நஸ்ரவமாய்-நாநா காரமான அசித்தைப் போலே இல்லாமல் -நித்தியமாய் ஞான ஏக ஆகாரம்
-அவன் பிரகாரமாகக் காட்டக் கண்ட எனக்கு -அதன் நுண் நேர்மை அது இது என்று-ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது-
நேர்மை ஸூ ஷ்மமான வை லக்ஷண்யம் -ஒரு பிரகாரத்தாலும் -நிஷ் பன்ன ஞானாதிகருக்கும்
அநு பூய-அனுபவித்த -இல்லாதது என்பதிலும் சஜாதீயத்வம் இல்லை -சரவண மன நாதிகளால் அறிய போகாது
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது-வருந்தி அறிந்தாலும் -யமாதி சமாதி பர்யந்தம் -அபரோக்ஷித்து காண்பது அரிதாகும்
சென்று சென்று பரம்பரம் ஆய்-அவன் காட்டக் கண்ட எனக்கு -பரம் -அத்தை காட்டிலும் அபரம் -தேக இந்திரிய மன பிராணன் ஞானம் -போனாலும்-
யாதும் இன்றித் தேய்ந்து அற்று-விகாராதி ஸ்வ பாவம் இல்லாமல் -தேகம் சுருங்கி இந்திரியம் சொல்லி அதுவும் சுருங்கி –
ஞானம் புத்தி வரை -சுருங்கி -சம்பந்தம் அற்று -நன்று தீது என்று அறிவு அரிதாய்-நன்றாய் ஞானம் கடந்ததே
-இப்படி நன்று தீது என்று புத்தி பண்ணி -பிராகிருத பதார்த்தங்களில் போலே ஒப்பிட்டு சொல்ல முடியாதே ஆத்மாவுக்கு
-சர்வ பிராகார வியாவர்த்தமான -இந்திரிய ஞானம் கடந்து -25 தத்வம் -சங்க்ய தத்வம் -பரமாத்மாவை ஒத்துக்க கொள்ளாமல் – –

மேல் பாசுரத்தில் பகவான் உடைய சரீரமாக ஆத்மா பேசப் பட்டது –
இதற்கு மேலே நான்கு பாசுரங்கள் –
ஆடையில் உள்ள வெண்மையைப் பிரித்து நிஷ்கர்ஷக சப்தத்தை இட்டுச் சொல்லுமா போலே-
நிஷ்கர்ஷகம் ஆவது தர்மத்தையும் தர்மத்தின் உடைய பொருளையும் பிரித்து பேசுவது-
அநிஷ்கர்ஷகம் ஆவது தர்மத்தையும் தர்மத்தின் உடைய பொருளையும் அபேதமாக பேசுவது-
நியத நிஷ்கர்ஷகம் தரமி தர்மங்களை பிரித்து பேசுதல்-வாசனை உடைய மண் போலே-
வைஷிக நிஷ்கர்ஷகம் ஆவது தர்ம தர்மிகளை விருப்பத்துக்கு தக்க பிரித்து பேசுவது -வஸ்த்ரம் வெண்மை நிறத்தை உடையது போலே-
மேலே நான்கு பாசுரங்களும் வைஷிக நிஷ்கர்ஷ்கம் என்பார் எம்பார்-
அநிஷ்கர்ஷமாக திருமாலை ஆண்டான் நிர்வாகம்-
எம் பெம்மானோடு -என்கிற பாசுரம் முடிய கேவல ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லுகிறது -என்று எம்பார் அருளிச் செய்யும் படி –
திருமலை ஆண்டான் -சரீரமான தன்மையிலே வைத்து சொல்லுகின்றன -என்று பணிப்பர் –

வெண் வஸ்திரம் -வஸ்த்ரத்தில் உள்ள வெண்மை -பிரித்து -வேற்றுமை உருபு வைத்து -இரண்டும் உண்டே
ஜீவன் பரன் -பிறனுடைய ஜீவன் போலே -ஒரே அர்த்தம் -துளி வாசி உண்டே –
ஆண்டான் -பிரிக்காமல் -எம்பார் பிரித்து அருளிச் செய்வார் என்றபடி –
பகவத் உபாஸனைக்கு ஏற்று ஆண்டான் நிர்வாகம் -முமுஷுக்கு அறிய வேண்டிய ரகஸ்ய த்ரயம் ஞானம் வேணும்
-கைவல்யனுக்கு வேண்டாம் -மா முனிகள் –
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் என்று உபாஸிக்க -ஐஸ்வர்யம் வேண்டுபவர் -அண்டத்துக்கு அதிபதி
ஆத்ம பிராப்தி காமன் -சுத்தன்-அகர்ம வைசியன் -விகாரம் அற்றவன் -என்றே உபாஸிக்க –
பகவத் லாபார்த்தி குண விசிஷ்டன் -குணவான் – சோஸ்னுதே ஸர்வான் காமான் -சேர்ந்து குணங்களை அனுபவித்து
-அனுபவ ஜனித்த ப்ரீதி காரித கைங்கர்யம் கதி த்ரய மூலஸ்தம் உண்டே –
சேர்த்துச் சொல்கிறது -ஆண்டான் நிர்வாகம் -பிரித்து தனியாக சொல்கிறது எம்பார் நிர்வாகம் –
ஆத்மாவின் வைலக்ஷண்யம் சொல்ல வந்த பிரகரணம் -இத்தை அன்றோ ஆழ்வாருக்கு காட்டி அருளுகிறார் —

நின்ற ஒன்றை -என்கிற இதில் -பிரகாரி பர்யந்தமாக்கி பிரகாரமான தன்மையிலே சொல்லுகிறது-
பகவான் உடைய திருவருளால் நான் அறிந்த இவ் வாத்மவஸ்து-
ஒருவருக்கும் அறியப் போகாது -வருந்தி அறிந்தாலும் கண் கூடாகக் காணப் போகாது -என்கிறார்-

நின்ற –
தேகம் இந்திரியம் மனம் பிராணம் ஞானம்-இவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாய் நின்ற –
அன்றிக்கே
இவை அழியும் அன்றும் அழியாதே ஒரே தன்மையாய் நின்ற -என்னுதல் –
மாதவங்கள் என்று ஓதவங்களின்-மருவு சீவன் என்று ஒருவ நீ பெரும்
பூதமல்லை இந்திரியுமல்லை ஐம்-புலனுமில்லை நற் புத்தி அல்லை காண்
சீதரன் பரந்தாமன் வாமனன்-திருவரங்கனுக்கு அடிமை நீ உனக்கு
ஏதம் இல்லை என்றறி அறிந்தபின்-ஈதின் மாதவம் இல்லை எங்குமே -திருவரங்க கலம்பகம் –

ஒன்றை-
இவற்றை நியமிக்கின்றதுமாய்-வேறுபட்ட சிறப்பினை உடையதுமான-ஆத்துமாவை –

உணர்ந்தேனுக்கு –
ஆராய்ந்தேனுக்கு –
உயர்வற உயர் நலம் -என்று அவனுடைய கல்யாண குணங்களிலே இழிந்தவர் ஆகையாலே-
இதற்கு முனு மின்மினி போலே இருக்கிற ஆத்மா ஸ்வரூபத்தில் கண் வைத்திலர்-
அன்றிக்கே
பரிகரமும் பக்தியின் உருவத்தை அடைந்த ஞானம் ஆகையாலே-
இதனை நினைப்பதற்கு போது பெற்றிலர் -என்னுதல்
இதனை ஆராய்ந்தேனுக்கு இது இருந்தபடி என் என்ன-மேலே அருளிச் செய்கிறார்-

அதன் நுண் நேர்மை –
அதனுடைய வேறுபட்ட சிறப்பு –

அது இது என்று –
அனுபவித்த பொருள்களின் படி என்றாதல்-
அனுபவிக்கிறவன் படி என்றாதல் –
அறியப் போகாது –

ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது –
எத்தனையேனும் மேம்பட்ட ஞானியர்கட்கும்-ஒரு சிறிதும் அறியப் போகாது –

உணர்ந்தும் மேலும் காண்பு அரிது –
என்னிடத்தே வைக்கப் பட்ட பக்தியினாலே-
உண்மையாக அறிகிறதற்க்கும் பார்க்கிறதற்க்கும் என்னுடைய ஸ்வரூபத்தை அடைகிறதற்கும்-தகுந்தவனாக இருக்கிறான் -என்கிறபடியே –
பக்த்யாது அனந்யயா சக்ய அஹம் எவம் வித அர்ஜுன-ஜ்ஞாதும் த்ருஷ்டும் சத்வேன ப்ரவேஷ்டும் பரந்தப -ஸ்ரீ கீதை -11-54-

சென்று சென்று பரம்பரம் ஆய்
செல்ல செல்ல ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற-
அன்னமயம்-
பிராண மயம்-
மநோ மயம்-
அன்யோந்தர ஆத்மா விஞ்ஞான மயம் -தைத்ரியம்-என்னுமிவற்றுக்கு அவ்வருகாய் –
தேக இந்திரிய மன பிராண தீப்யோன்ய -உபநிஷத் –

யாதும் இன்றித் தேய்ந்து அற்று –
அவற்றின் தன்மை ஒன்றும் இன்றிக்கே-அவற்றோடு அறத் தேய்ந்து அற்று

நன்று தீது என்று அறிவு அரிதாய் –
சரீரம்
சரீரத்தைக் காட்டிலும் இந்திரியம்
இந்த்ரியங்களைக் காட்டிலும் மனஸ்
மனசைக் காட்டிலும் பிராணன்
என்று ஒன்றுக்கு ஓன்று சிறப்பை உடைத்தாய் இருத்தல் போன்று
பிரகிருதி சம்பந்தப் பட்ட பொருள்களின் படியால் நன்று என்றும் தீது என்றும் அறிய அரிதாய் இருக்கும்

நன்றாய் –
இயல்பாகவே வேறு பட்டதாய்

ஞானம் கடந்ததே –
இந்திரியங்களால் உண்டான ஞானத்துக்கு எட்டாததை இருக்கும் –
மேலே அவை ஒன்றுக்கு ஓன்று நெடு வாசியாய் இருக்கச் செய்தேயும்-
ஒரு பிரமாணத்தால் அறியக் கூடிய ஒப்புமை உண்டு என்றார்-
இங்கே அதுவும் இல்லை என்கிறார் –

ஆக
இப்பாட்டில் சாங்கிய சாஸ்த்ரத்தில்-தத்துவங்களை என்னும் முறையாலே
ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும் படியையும்-அதனை அறிகையில் உண்டான அருமையும் சொல்லிற்று-

————————————————————————————————-

நன்றாய் ஞானம் கடந்து போய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே–8-8-6-

பகவத் பிரகாரம் -மூன்றாம் -பாசுரம் –போக்யம் நாலாவது -பாசுரம் -ஸ்வயம்ய பிரகாசம் -ஐந்தாம் பாசுரத்தில் சொல்லி –
கைவல்யம் பெறவும் பகவத் பிரசாதத்தால் -ஆறாம் பாசுரத்தில் -இவற்றை தெரியாமல் சம்சாரத்தில் உழல்வோம் என்று ஏழாம் பாசுரம் -அருளிச் செய்கிறார் –
இதுவும் மகாரார்த்தம் -யோக சாஸ்திரத்வாரா -அஷ்டாங்க யோகம் -நிஷ்கார்ஷித்தி வருந்து அப்ரோக்ஷிக்கப் பட்ட ஆத்ம பிராப்தி ரூபத்தை
-கைவல்யார்த்தி அபிப்ராயத்தால் -ஆழ்வார் அருளிச் செய்கிறார் -பிராகாரமாக இருப்பதால் பிராப்யம்-
நன்றாய் ஞானம் கடந்து போய்-பிராகிருத சகல பதார்த்தங்களில் -சம்பந்தம் இல்லாத நன்றாய் -சுத்தியை உடைத்தாய் -நன்றாய் –
விஷயங்களில் சங்கிப்பிக்கும் வைஷம்ய ஞானம் -கடந்து -கட பட ஞானங்களைக் கடந்து
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து-யோக முறை சொல்கிறார் -விஷயாந்தர மேய்ச்சல் தவிர்ந்து -ஞான ஜனன த்வரா-தப்பாமல்
பிரவர்த்திக்கும் நன்மை உண்டே -நல் ஞானம் நல் இந்திரியம் –
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்-தில தைலவத்-பிரித்து அறிய முடியாமல் -ஆத்மாவுடன் ஒன்றி -தாருவன்னிவத
-எள்ளுக்குள் எண்ணெய் கட்டைக்குள் அக்னி போலே
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து-அபரிச்சின்னமாய் -கடக்க அரியதாய் -சூழ்ந்து அகன்று ஆழ்ந்து -பிரகிருதி -கார்ய முகத்தால் பஹு முகமாய் –
ஆத்மாவைக் காட்டில் -உயர்ந்தது -மேலும் உயர்ந்து -வேறுபட்டதாக -அத்யந்த -ஸ்ரவணம் மூலம் பல காலம் கேட்டு அறிந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்-செற்றுக் களைந்து பசை யற்றால்-வாசனை கூட ஒட்டாமல் -பாப புண்யங்களை அழித்து-ருசியையும் கழைந்து
அன்றே அப்போதே வீடு-சாம்சாரிக மோக்ஷம் -கைவல்யம்
அதுவே வீடு வீடாமே-ஆத்ம அனுபவம் -வீடாகுமோ -இதுவோ மோக்ஷம் -சம்சார சுக துக்க மோக்ஷம் -தனித்து அனுபவித்தால் நிந்திப்பார் –
பகவத் பிரகாரமான ஆத்ம அனுபவமும் -அந்தரகதம் தானே –

யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே-
இந்திரியங்களை அடக்குதல் முதலியவற்றின் வடிவமான யோகத்தாலே-பிரகிருதியின் நின்று விடுபட்ட ஆத்ம ஸ்வரூபத்தை
வருந்தினால் நேரே காணலாம் –என்கிறார் –

நன்றாய் ஞானம் கடந்து போய்-
வேற்பட்டதான நன்மை உடைத்தாய்-இந்திரிய ஞானத்துக்கு அறிய முடியாததாய்
இருக்கும் என்று அவற்றை மீண்டும் அருளிச் செய்கிறார் -என்னுதல்-
அன்றிக்கே –
நன்றாய் -என்று இது கிடக்க –
ஐம்புல இன்பங்களைத் தப்பிப் போய் என்னுதல் –
ஜ்ஞாதாய இதி ஜ்ஞானம் -என்கிற பிரக்ரியையாலே -பிரித்து பொருள் கூறுவதாலே –
ஞானம் என்கிறது -என்றது
ஞானத்தால் காணப் படும் விஷயங்களை ஞானம் என்ற சொல்லாலே சொல்லுகிறது -என்ற படி –

நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து –
விஷயங்களைத் தப்பிப் போனாலும்-
அவை இருந்த இடங்களிலே கொடு போய் மூட்டக் கடவனவான ஆற்றலை உடைய இந்திரியங்களைக் கழித்து –

ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ் உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து –
அநாதி காலம்-இவ்வாத்மாவோடு கலந்து கிடப்பதாய்-என்னுடைய மாயை தாண்ட முடியாதது – என்கிறபடியே
தைவி ஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்தயா-மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-ஸ்ரீ கீதை -7-14-
ஒருவரால் கடக்க அரியதாய்-
மகத்து அகங்காரம் முதலிய நிலை வேறுபாடுகளால் பரப்பை உடைத்தாய்-
போக மோஷங்களை விளைத்துக் கொள்ளலாம் படியாய் –
பிரவாஹ ரூபத்தாலும் ஸ்வரூபத்தாலும் நித்தியமாய்-இருக்கிற அசித் தத்தவத்தை மிகவும் உணர்ந்து –
மிக உணர்தல் -என்றது –
பிரகிருதி யானது கார்யங்களாயும்-காரணங்களாயும் -நிற்கும்-என்னுமதனை உணர்தலைத் தெரிவித்தபடி-

சென்று ஆங்கு –
ஆங்கு நன்றாய்ச் சென்று-
தன் பக்கல் இனிமை உண்டு என்னும் புத்தியை
பிறப்பிக்கக் கூடியதான இதில் கால் தாழாமல்
ஆத்ம ஸ்வரூபத்தின் அளவும் சென்று –
விஷயாந்தரம் காட்டில் ஓடும் -இந்திரிய யானை வசப்படுத்த -ஞானம் அங்குசம் கொண்டு —

இன்ப துன்பங்கள் செற்றுக் களைந்து –
அதனை விடத்தக்கது என்று விட்டாலும்-சுக துக்கங்களுக்கு காரணமான புண்ணிய பாப கர்மங்கள்
கிடக்குமாகில்-பின்னையும் கொண்டு மூட்டுமே அன்றோ –அவற்றையும்விட்டு –

பசை யற்றால் –
அவற்றை விட்டாலும்-ருசி வாசனைகள் கிடக்குமாகில்
பின்னையும் கருவிலே தள்ளும் அன்றோ –ஆதலால் ருசி வாசனைகள் அற்றால் –

அன்றே அப்போதே
அக்காலத்திலே-அம் முகூர்த்தத்திலே –

வீடு –
பிரகிருதி சம்பந்த பட்ட பொருள்களிலும் தொற்று அறும் –
பிரகிருதி போன்று -சுனையும் -நாணமும் -மிருதுத் தன்மையும் உடையார் அலர்-
தன் பக்கல் பராமுக புத்தி பண்ணினாரை தானும் முகம் பாராது –
பகவான் -தள்ளி நிற்க தள்ளி நிற்க அவகாசம் பார்த்து உடனே இருப்பானே -அவன் போலே இல்லையே பிரகிருதி —

அதுவே வீடு –
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் -என்கிறபடியே-பிரகிருதி சம்பந்தப்பட்ட பொருள்களில் தொற்று அற்றவாறே-
ஆத்துமாவை அடைதல் ஆகிற அதுவே-மோஷமாய் இருக்கும் –
அதற்கு என்று செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -என்பார்-வீடாமே-என்கிறார் –
வீடாமே
சர்வேஸ்வரனுக்கு பிரகாரமாக ஆத்தும வஸ்துவை நினைத்து-
அவ்வழியாலே இதனை பேறாக அன்றோ இவர் தாம் நினைத்து இருப்பது-
அவ்வளவு போக மாட்டாமல் இதன் நன்மையைக் கண்டு-
இவ்வளவில் கால் தாழ்வார்க்கும் போந்திருந்ததே -என்கிறார்-
தம்முடைய உத்தேச்யத்தில் ஒரு சிறு பகுதியை புருஷார்தத்தில்-முடிந்த நிலமாக
கொள்ளுகையால் அன்றோ முன்பு–அது செற்று -திருவாய் -1-2-5– இவர் இதனைச் சிரித்து இருந்தது-

——————————————————————————————————–

அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு எது இன்பம் என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே–8-8-7-

நிதர்சனம் -யுக்த பிரகாரத்தில் ஆத்ம அவலோகநாம் பண்ணாதார் -தத் அனுபவ சித்தி அன்றியே சமசரிப்பார்
அதுவே வீடு வீடு பேற்று-கீழே சொன்ன படி -ஆத்மா அனுபவ சுகம்
இன்பம் தானும் அது தேறி-மோக்ஷ லாபம் இன்பம் -நிஷ்கர்ஷித்து
எதுவே தானும் பற்று இன்றி-போக்யம் போக ஸ்தானம் போக உபகரணம் -மூன்றிலும் பற்று இல்லாமல் –
ஆதும் இலிகளா கிற்கில்-பாத்தாலே வந்த ருசி வாசனைகளும் இல்லாமல் ஒழிய பெற்றால்
அதுவே வீடு வீடு பேற்று-கீழே ஞானம் சொல்லி இங்கு பல தசை சொல்லி
இன்பம் தானும் அது தேறாது-இப்படி பிரகாரமாக நிஷ்கரிஷிக்காமல் –
எதுவே வீடு எது இன்பம் என்று-எது மோக்ஷம் எது இன்பம் கேட்டால்
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே-சம்சாரத்திலே உழன்று -சித்த துரபல்யம் பிறந்தால் -தளர்ந்து -கர்ப்பம் நரகம் மாறி மாறி செல்வர் –

மேலே கூறிய உபாயத்தின் படியே-அந்த ஆத்துமாவை அடையாமல்
அதிலே ஐயம் தொடரப் பெற்றவர்கள்-உருவக் கிலேசப் பட்டே போம் இத்தனை –என்கிறார் –

அதுவே வீடு –
மேலே கூறிய அதுவே -ஆத்துமாவை அடைதல் ஆகிற-மோஷம் ஆகிறது –

வீடு பேற்று இன்பம் தானும் அது –
அந்த மோஷத்தை அடைந்தால் வரும் இன்பமும் அதுவே –

தேறி –
இப்படித் தெளிந்து –

எதுவே தானும் பற்று இன்றி –
சரீரத்திலும்-சரீர சம்பந்தம் பட்ட பொருள்களிலும் தொற்று அற்று -என்றது

ஆதும் இலிகளா கிற்கில்-
யாதும் இலிகள் ஆகிற்கில்-அவற்றில் ருசி வாசனைகளும் அறப் பெறில் –

கர்மங்களைச் செய்து -ஒரு பலத்தையும் கருதாமல் வர்ணாஸ்ரம தர்மப் படி செய்து
ஞானத்தை உடையவனாய் -ஆத்மாவை அடைய சாதனமாய்-
ஐம் புலன்களையும் அடக்கி -ஞான யோகத்தில் நிலை நின்று –
ஸ்திதப் பிரஜ்ஞாக்ய அவஸ்தை பிறந்து -உலக விஷயங்கள் வந்து மேலிட்டாலும் கலங்காத தைர்யத்தை உடையவனாய்-
ஸ்ரீ கீதை -2-55- ஸ்லோகம் படி –யோகமும் தலை நின்று -அஷ்டாங்க யோகத்தில் முதிர நின்று –

அதுவே வீடு-
ஆத்மாவை அடைதலே மோஷம் –
வீடு பேற்று இன்பம் தானும் அது –மோஷத்தை அடைதலால் வரும் இன்பமும் அந்த ஆத்தும அனுபவம் –

தேறாது –
இப்படி தெளிய மாட்டாமல் —

எதுவே வீடு எது இன்பம் என்று எய்த்தார் –
மோஷம் ஆகிறது ஏது –மோஷ இன்பம் ஆகிறது ஏது –என்று இளைத்தவர்கள் –

எய்த்தார் எய்த்தாரே –
இளைத்தார் இளைத்தார் என்று உருவக் கிலேசப் பட்டே போம் இத்தனை –
நிராஸ்ரயமாக -யோக சாஸ்திர க்ரமத்தால் அன்றிக்கே –
விசுவாசம் இல்லாமல் -ஆத்தும ஸ்வரூபத்தை நினைப்பதனால் பயன் இல்லை -என்றபடி
எம்பெருமானுக்கு பிரகாரமாக சரீரமாக இருப்பது என்கிற ஆத்ம ஸ்வரூபம்

——————————————————————————————————————

எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று
இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்
தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8-

இப்படி துஸ்ஸம்பாவாதனான ஞானம் கிட்டினாலும் -அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் -ஞானம் பெற பட்ட கிலேசம் எல்லாம் வியர்த்தம்-
பிராண பிராயண சமயத்தில் -எம்பெருமான் நினைவு வேண்டும்
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று-முடிந்தார் என்று பல காலும் சொல்லி –
அவயவங்கள் வியாபார சமர் அன்றி -இந்திரியங்கள் இளைத்து-ஸ்ரவணமும் இல்லாமல் –
இல்லத்தாரும் புறத்தாரும்-பார்யா புத்ராதிகள் முதலில் சொல்லி —அவர்கள் அவஸ்தை அறிய வந்த -அசலார் சொல்லி -இதனால் பாயாவாஹமாய் –
சம்பந்த பாந்தவ்ய பிரக்ருதிகளும் -மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்-மேல் விழுந்து கட்டி கொள்ள
தாம் போகும் போது உன்-மத்தர் போல் பித்தே ஏறி-சரீரம் விட்டு -வீத ராகரும் அறிவு இழந்து
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ-டொத்தே சென்று அங்கு உள்ளம்-கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே-
புத்ராதிகள் பக்கல் சிநேகம் பண்ணி -நெஞ்சு கலங்கி -இவற்றின் பக்கல் மமதையாலே -குழம்பி –
அவன் நடத்தியே தீருவான் என்ற விச்வாஸம் இல்லாமல் –படைத்தவர் ரஷிப்பான் –
கூரத் ஆழ்வான்-பகவத் சொத்துக்கு நாமோ கரைய வேண்டும் என்பார் –
-எம்பெருமான் வை லக்ஷண்யம் அனுசந்தித்து கூடிற்று ஆகில் -பிராப்தி கிட்டும்
இல்லையாகில் பட்ட கிலேசங்கள் எல்லாம் வியர்த்தம் -ஆகையால் கலக்கம் இல்லாமல் -தெளிந்து –
நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபம் மாத்திரம் இல்லாமல் பகவத் சேஷமாய் பிரகாரமாய் அனுசந்தித்து –
இப்பாட்டில் -ஓத்தே சென்று -அவன் திரு உள்ளபடி -பிரகாரம் -அடியேன் சேஷன் என்று அனுசந்திக்க வேண்டும் –
அவன் பக்கல் நெஞ்சு கூடினால் அவனை லாபித்ததாகலாம் -இப்படி கஷ்டமான ஆத்ம அவலோகத்தை எளிதாகப் பிரகாசிப்பித்தான்
-ஆழ்வாருக்கு புருஷார்த்தம் இல்லை இது

இப்படி அரிதில் பெறத் தக்க-ஞானம் கை வந்தாலும்-அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில்
செய்தன எல்லாம் பயன் அற்றவை ஆகும்-என்கிறார்-

எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று –
இவனுக்கு உடலை விட்டு உயிர் பிரியும் நிலை-வருவதற்கு முன்பே-இவன் இறப்பது விருப்பம் ஆகையாலே-
முடிந்தான் முடிந்தான் முடிந்தான் -என்று பலகாலும்-சொல்லா நிற்பர்கள் ஆயிற்று -என்றது-
இவன் கலங்கிய நிலையில் நெஞ்சினைத் தெளிவித்து உத்தேச்யமான எம்பெருமானை நினைக்க –
வல்லனாம்படி செய்கை –அன்றிக்கே-முடிந்தான் முடிந்தான் முடிந்தான் -என்று இதனையே சொல்லா நிற்பர்கள் -என்றபடி –

இல்லத்தாரும் புறத்தாரும் –
இவன் தான் வாழ்கிற நாளிலே இவர்களுக்கு ஒன்றும் கொடாமையாலே-
இவனும் இது ஒரு நடுவில் பெரும் குடியும் என் –
இவன் இறக்க -உள்ள செல்வங்களை நாமோ எடுத்துக் கொண்டால் ஆகாதோ -என்று-இருப்பவர்கள் மனைவி முதலாயினோர்கள் –
அவனும் இவர்க்களுமான கூட்டம் பொறாமையாலே போக அமையும் என்று இருப்பார்கள் புறம்பு உள்ளார்கள் –

மொய்த்து –
கல்யாணத்துக்கு அழைத்தாலும் வாராதவர்கள்-துக்கம் உண்டானவாறே தாங்களே வந்து மேல் விழுவர்கள்-

ஆங்கு அலறி –
இவனுக்கு உள்ள தெளிவும் போம்படி கூப்பிடா நிற்பர்கள்-என்றது-
மீண்டாலும் மீளலாம் என்று ஐயம் உண்டான நிலையில்-
அச்சத்தாலே பிராணம் போம்படி கூப்பிடா நிற்பர்கள் -என்றபடி-

முயங்கத்-
கட்டிக் கொள்ள -என்றது –கூப்பீட்டுக்கு போகாத குறை பிராணனும் போம்படி –
அன்புள்ளவர்களைப் போலே மேல் விழுந்து கட்டிக் கொள்வார்கள் என்றபடி –
தாம் போகும் போது -இவர்களையும் இந்த செல்வத்தையும் விட்டுப் போகா நின்றோமே -என்று-மனம் இங்கே இழுக்க-
தன்னால் மீள ஒண்ணாமையாலே சரீரத்தை விட்டு-தாங்களே போகா நிற்பர்கள் –

தாம் போகும் போது -என்கிறார் காண்
அப்பொழுதைய துக்கத்தைப் பற்ற —

உன் மத்தர் போல் பித்தே ஏறி-
ஆசை அற்ற பெரியோர்களும் கூட-உன்மத்தன் உடைய நிலையைப் போன்று அறிவு கெட்டு-என்றது –
தெளிவு பிறந்து தன்னையும் சர்வேஸ்வரனையும் நினைக்க வேண்டிய நிலையிலே கலங்கி -என்றபடி –

அனுராகம் பொழியும் பொழுது –
இளையாளை பொன்னையும் பூட்டிக் கொடுவந்து முன்னே நிறுத்துவர்கள்-
அன்றிக்கே –
புத்திரர் முதலாயினோர்கள் பக்கல் அன்பு செலுத்தாத நாள்களுக்கும் போர அன்பு செலுத்தத் தொடங்குவான் – என்னுதல் –
வாழ்கிற காலத்தில் உலோபத்தாலே இவர்களுக்கு ஒன்றும் செய்யான்-
இப்போதாக புதைத்து வைத்த செல்வத்தை ஆபரணமாக பூட்டிக் காணப் பெற்றிலோமே-
என்று மதகு திறந்து அன்பு செலுத்துவான் –

எம் பெம்மானோடொத்தே சென்று அங்கு உள்ளம் கூடக் கூடிற்றாகில் –
இப்படி கலங்குகிற சமயத்தில் -தெளிவு உண்டாய்-தன்னையும் அவனையும் நினைத்து
அவனோடு ஒத்த சுத்தியும் இது உடைத்து -என்று நினைத்தல் ஆகிற இவ்வர்த்தம் கூடிற்று ஆகில் -என்றது
எம்பெருமானும் ஞான ஆனந்த லஷனமாய் இருப்பன்-
இவ்வாத்மாவும் ஞான ஆனந்த லஷனமாய் இருக்கும்-
என்று நினைக்கும்படி அவ்வாத்ம வஸ்துவில் மனம் சேர்த்தல் ஆகிற இவ்வர்த்தம் கூடுமாகில் -என்றபடி –
ஒத்த தேஜஸ் படைத்தது என்ற எண்ணம் —
அவன் திரு உள்ளத்துக்கு ஓத்தே சென்று —

நல்லுறைப்பே-
நல்ல வாய்ப்பு –
அல்லாத போது செய்தன வெல்லாம் பயன் இல்லாதவையே யாகும்-
உன்மத்தர் போலே பித்தே ஏறில் விரும்பிய பயன் சித்தியாது-
அனுராகம் பொழியில் ஆதிபரதனைப் போலே மானாகப் போம் இத்தனை-

எம்பார் நிர்வாகத்துக்கு சேர -ஆத்மா வினுடைய இயல்பான தன்மை பற்றி அருளிச் செய்தார் -இப்படி என்று தொடங்கி-
மேல் திருமாலை ஆண்டான் நிர்வாகத்துக்கு சேர எம்பெருமான் நினைவோடு ஒத்தே சேர்ந்து -சேஷமாக-என்று நினைவு பற்றி -அருளிச்செய்கிறார் –
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு -என்னும் பாட்டு தொடங்கி-
நிஷ்கிருஷ்ட ஆத்மா அனுசந்தானம் மாத்ரமே அன்றிக்கே-
பகவானுக்கு அடிமையாம் தன்மை பர்யந்தமாக அனுசந்திக்கிறது என்றும்-
இப்பாட்டில் எம்பெருமானோடு ஒத்தே சென்று அங்கே உள்ளம் கூடக் கூடிற்றாகில் -என்னும் அந்திம ஸ்ம்ருதியும்-
எம்பெருமான் தனக்கு அடிமையாக இவ்வாத்மாவை நினைத்து இருக்குமா போலே-
இவனும் அவன் நினைவோடே ஒத்து அந்நிலையிலே அடிமையாம் தன்மையை நினைக்கிற நினைவு கூடுமாகில்
நல்ல வாய்ப்பு என்று ஆண்டான் அருளிச் செய்வர் –
நன்று
பகவான் உடைய குணங்களில் ஈடுபட்டவராய் இருக்கிற இவர்
இவற்றை எல்லாம் பேசுவது என் -என்னில் –
இப்படி அரிதாய் இருக்கிற இதனைக் கண்டீர் எனக்கு காட்டித் தந்தது -என்று
அவன் பக்கலிலே செல்லுகின்ற செய்ந்நன்றி அறிதலே காரணமாம் -என்க –

—————————————————————————–

கூடிற்றாகில் நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி
எம்மாயனாவாத துவதுவே
வீடைப் பண்ணி யொரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே–8-8-9-

பிரகார தயா பிராப்தி அன்றிக்கே -ஸ்வரூப ஐக்கியம் மோக்ஷம் -உயி ர்கள் மெய் விட்டு ஆதி பரனோடு ஒன்றாம் -அல்லல்
-குத்ருஷ்ட்டி பக்ஷம் சம்பவம் -நிரசிக்கிறார்
கூடிற்றாகில் நல் உறைப்பு-ஒன்றே -அப்பும் அப்பும் சேர்ந்து அப்பு -இரண்டு பங்கு ஆகும் -அப்பும் உப்பும் சேர்ந்து -உப்பு கரிக்கும் –
அளவு குற்றம் தாரக குற்றம் -அது அதுவே இது இதுவே
நித்ய சம்சாரி ஜீவ ஸ்வரூபம்–அத்யற்புத பரன்-நிரதிசய ப்ரஹ்ம ஸ்வரூபம் -இருள் –சூர்யன் -கூடுமோ –
கூடாமையைக் கூடினால்-அனுப பன்னம் ஆனவை -முயலும் கொம்பும் போலே
ஆடல் பறவை யுயர் கொடி-எம்மாயனாவாத துவதுவே-நிர்தோஷ பிரமாணம் வேதமே தான் -ஏசல் கண்டு அருளி -பெரிய திருவடி
-ஆச்ரித அனுபாவ்யமான எம் மாயன் -ஜீவன் தானே யாகவும் பரமாத்மா தானே -த்ரவ்யம் த்ரவ்யாந்தரம் ஆகாதே
வீடைப் பண்ணி யொரு பரிசே-வீட்டைப் பண்ணி -எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்-சு போத கல்பித்தம்-அப்ரமாணம் -கல்பித்து -திரிகால
ஓடித் திரியும் யோகிகளும்-உளரும் இல்லை அல்லரே-யோகிகள் -போல்வார் -அடைய வில்லை -திரிந்தே கொண்டே இருப்பார்கள் –
புறம் கால் வீங்கி -ஓடினேன் ஓடி –நாடினேன் நாடி –
யோகிகளும் உளர்–இந்த ஜகத்தில் இல்லை என்று சொல்ல முடியாதே –
சம்ப்ரதாயம் எதனாலும் பலர் உண்டே -ஏவம் வித மகா யோகிகளும் சம்பாவிதம் -வெறுத்து சொல்கிறார் -கொண்டாடவில்லை

அந்திம ஸ்மிருதியிலே ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும்-பேதம் கூறப்படவாறே-
இந்த பேதம் உண்மை அன்று-
தத்வ ஞானம் பிறந்த ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஓன்று -என்று கொண்டு
எப்பொழுதும் பிறவியிலே உழன்று திரிகிற ஆத்மாவை ப்ரஹ்மமாகச் சொல்லுகிற-மாயாவாதிகளை இகழ்கிறார்

கூடிற்றாகில் நல் உறைப்பு –
முன் கூறியதனையே மீண்டும் கூறுகிறார் –

கூடாமையைக் கூடினால் –
முயல் கொம்பு ஆதல் –ஆகாயத் தாமரை ஆதல் –மலடி மகன் ஆதல்-
பொருந்தாதன உலகில் இருப்பனவாய் பேசப்ப்படுமாகில்-

ஆடல் பறவை யுயர் கொடி எம்மாயனாவது-
சர்வேஸ்வரன் உடைய வாகனம் என்னும் உவகையின் மிகுதியாலே-
ஆடா நின்றுள்ள பெரிய திருவடியை கொடியாக உடையவனாய் –
ஆச்சர்யமான குணங்களையும் செயல்களையும் உடையவனாய்
பெரிய திருவடி திருத் தோளிலே பின்பும்-பிறகு வாளியுமாய் -பின்புறம் சாத்துகின்ற ஆபரண விசேடம் –
சம்சாரியாக இவ்வாத்மா இருப்பது –அவயவம் போலே –
ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே -சொல்ல ஆடல் பறவை –

அது அதுவே –
அந்த ஆத்மவஸ்து அந்த ஆத்மவஸ்துவே
ஒரு பொருள் வேறு பொருள் ஆகாதே அன்றோ –
நித்ய சூரிகளுக்கும் அவ்வருகாக-இச் சம்சாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களை சொல்லுவாரும் உளரோ -என்ன –
வீடைப் பண்ணி யொரு பரிசே
ஒரு பரிசே வீடைப் பண்ணி –
சாஸ்த்ரங்களின் மூலமாக அன்றிக்கே-அஞ்ஞானம் கழிதலே மோஷம் என்று-
தம்முடைய அறிவாலே ஒன்றைக் கட்டி –

எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் –
இறந்த காலம் எதிர்காலம் நிகழ் காலம் என்னும் மூன்று காலங்களிலும் உளராய் –

ஓடித் திரியும் யோகிகளும் உளரும் –
பிரயோஜனம் இல்லாமலே தட்டித் திரியும்-மகா யோகிகளும் உளர் –

இல்லை அல்லரே –
இல்லாமை இல்லை –
காலம் அநாதி –
செய்து வைக்கும் பாபங்களுக்கும் எல்லை இல்லை –
ஆனபின்பு இப்படி இருப்பார் மகா புருஷர்கள் சிலர் உண்டாகக் கூடாதோ-இவ்வுலகத்தில் கூடாதது உண்டோ -என்கிறார் –
அந்நிய த்ரவ்யம் -சம்சரித்தவர்கள் -அவன் அனுக்கிரகத்தால் பெற்ற சாம்யபத்தி –
-ஒன்று என்று சொல்பவர்கள் மித்யை -ஸ்ரீ விஷ்ணு புராணம்

—————————————————————————————

உளரும் இல்லை அல்லராய்
உளராய் யில்லை யாகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து
என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே
அசைவும் ஆக்கமும்
வளருஞ்சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10-

ஏவம் விதமான ஆத்ம ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்து பாஹ்ய குத்ருஷ்டிகள் கோஷ்டியில் புகாமல் -நெஞ்சுக்கு உள்ளே இருந்து
சம்சாரிக துரிதங்களை போக்கி அருளினான் –
உளரும் இல்லை அல்லராய்-இல்லை அல்லராய் உளரும்-ஆஸ்ரிதர் -சேஸ்வர
உளராய் யில்லை யாகியே-இல்லையாகியே உளராய் -அனாசிரித்தார் -நிரீஸ்வர
உளர் எம் ஒருவர் அவர் வந்து-அத்விதீயாராய் பிரகாசிப்பித்து
என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்-நித்ய வாசம் செய்து அருளி –
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே-அசைவும் ஆக்கமும்-வளர் பிறை போலே வளர்ந்து -தே பிறை போல் அசைவு தேய்ந்து
வளருஞ்சுடரும் இருளும் போல்-தெருளும் மருளும் மாய்த்தோமே-ஞானம் -அஞ்ஞானம் இரண்டையும் ஒழித்து-
வ்ருத்தி ஷயங்கள் -உபாதியால் வந்த ஞானம் அஞ்ஞானங்கள் போக்கி

சாங்க்யம் முதலான குத்ருஷ்டி மதங்களில்-நான் புகாதபடி-
தானே யாதொரு பயனையும் கருதாது என்னை அங்கீகரித்து-
நினைவுக்கு வாய்த்தலையான மனத்திலே நித்ய வாஸம்-
செய்கையாலே -என்னுடைய எல்லா துக்கங்களும் போயின –என்கிறார் –

உளரும் இல்லை அல்லராய் –
இல்லை அல்லராய் உளரும்-
ஈஸ்வரன் என்பான் ஒருவன் உளன்-இல்லை என்ன ஒண்ணாதே இருக்கிறான்-அஸ்தி – என்ற மாத்ரமாய் இருப்பான் -எனபது
சேஸ்வர சாங்க்ய மதம் என்றது
விதி விலக்குகளை செய்வதற்கு ஆற்றல் இன்றிக்கே இருக்கும் கணவனைப் போன்று
ஈஸ்வரன் என்பான் உலகத்தில் நியமிப்பதில் ஆற்றல் இல்லாதவனாகி-
உளன் என்ற மாத்ரமேயாய் இருப்பான் -என்றபடி –

உளராய் யில்லை யாகியே –
இல்லை யாகியே உளராய் –
இல்லையாகியே காண் அவனுடைய உண்மை -என்பான் நிரீஸ்வர சாங்க்யன் –அந்த மதங்களை மறுக்கிறார் –
அன்றிக்கே-
அடியர் -அடியர் அல்லாதவர் -விஷயமாக்கி-இல்லை அல்லராய் உளராய் இருப்பார் அடியார்க்கு-ஆஸ்ரிதற்கு
இல்லை யாகியே உளராய் இருப்பார் அடியார் அல்லாதார்க்கு -என்னுதல் –நாஸ்திகர்க்கு –

உளர் எம் ஒருவர் –
குணம் உலகம் முதலியவைகளால் நிறைந்தவராய் கொண்டு உளராய்-
அவற்றைக் காட்டி என்னை அங்கீகரித்த ஒப்பற்றவர் –

அவர் வந்து என் உள்ளத்துள்ளே யுறைகின்றார் –
குணங்களால் மேம்பட்டவரான அவர்-என்னளவும் வந்து
மயர்வற மதிநலம் அருளி-தாம் திருத்தின நெஞ்சிலே-நித்யவாசம் செய்யா நின்றார் –

வளரும் பிறையும் தேய்பிறையும் போலே அசைவும் ஆக்கமும் -வளருஞ்சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே
வளரும் பிறை போல் ஆக்கமும் -தேய் பிறை போல் அசைவும்-
வளரும் சுடர் போல் தெருளும் இருளும் போல் மருளும் மாய்த்தோம் –
விளக்கின் முன்னர் இருள் நில்லாதது போன்று-அவர் என் மனத்தில் நித்ய வாஸம் செய்கையாலே-
சந்த்ரனுக்கு வருதல் போன்று மாறி மாறி வரக் கூடியதான–சரீரத்துக்கு -வளர்ச்சியும் குறைவும்-
சூரியனும் இருளும் மாறி மாறி வருதல் போன்று-மாறி மாறி வரக் கூடியனவான-
ஞான அஞ்ஞானங்களும் மாய்க்கப் பெற்றோம்-
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு -வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு

————————————————————————————–

தெருளும் மருளும் மாய்த்துத்
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும்
நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

ஆத்ம அவலோகனம்-முடிந்து -அழகை அனுபவிக்கிறார் -நாயகி பாவம் -பொசிந்து காட்டுகிறது
குருகூர் சப்தம் இல்லை -பகவத் பிராப்தி பலன் -பிரகாரமாக ஆத்மாவை அன்பவித்து –
தெருளும் மருளும் மாய்த்துத்-சம்சார விஷய ஞானமும் த்யாஜ்யம் -பகவத் விஷய ஞானம் மட்டுமே நிலைக்க வேண்டும் –
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்-ஆஸ்ரிதரை தானே அங்கீ கரிக்கும் –
அருளி இருத்தும் அம்மானாம்-வில்லாண்டான் -தானே அம்பு பொழியும் -திருவடி தானே அங்கீ கரிக்கும் -திண் கழல் -இவர்கள் விட்டாலும்
-அநுக்ரகோத்து இருக்கும் -வாய் திறந்து அருள பாடிட்டு -அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியார் வாழ்மீன் என்று
அயனாம் சிவனாம் திருமாலால்-அந்தராத்மா வாயும் -தானாகவும் -ஸ்ரீ யபதி-கீழும் மேலும் கூட்டி -இவள் அடியால்
அருளப் பட்ட சடகோபன்-ஸ்ரீ ய பதியால் அருள பெற்ற -ஸ்ரீயப்பதி -சர்வாதிகன் -முன்பு -புருஷகார பூதை-இங்கு அன்வயித்து
-தேகளீ தீப -ஹார மத்திய நியாயம் ஓராயிரத்துள் இப்பத்தால்-அத்விதீயமான ஆயிரம்
அருளி யடிக் கீழ் இருத்தும்-நம் அண்ணல் கரு மாணிக்கமே-அழகிய திரு மேனி -ஸ்வாமி -நிரவாதிக கிருபையை பண்ணி -திருவடிக்கு கீழ் இருத்தும் –

நிகமத்தில்
இப்பத்தும் கற்றாரை–தம்மை அங்கீகரித்தாப் போலே அங்கீகரித்து-
தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்வான் –என்கிறார் –

தெருளும் மருளும் மாய்த்துத்
ப்ரஹ்மாவின் ராஜசம் அடியாக வந்த-குத்ருஷ்டி ஞானமானதும் –
சிவனுடைய தாமச ஞானம் அடியாக வந்த ஆகமம் முதலான-புற ஞானம் ஆகிற அஞ்ஞானமும் மாய்த்து –
அன்றிக்கே
தம்முடைய அனுபவத்துக்கு விரோதியான-
இவ்வுலக விஷயமான ஞான அஞ்ஞானங்களை வாசனையோடு போக்கி -என்னுதல்
அந்யதா ஞானம் -பிறர் தெய்வங்கட்கு தன்னை அடிமை என்று நினைத்தல்-
விபரீத ஞானம் -தனத்து தானே உரியன் என்றும் கைவல்ய அனுபவ புத்தியையும் -இவற்றைப் போக்கி என்னுதல்

தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ் –
அடியார்களை வேறு ஒருவர் காலில் குனிய விடாததாய் –விரும்பத் தக்கதாய் –
வீரக் கழலை உடைத்தான-திருவடிக் கீழ்-இப்போதைய வீரக் கழல்-
பிராட்டி முன்னாக அடைந்தாரை அவன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாத வீரக் கழல் –

அருளி இருத்தும் –
கேவல கிருபையாலே இருத்தும் –

அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் –
பிரமன் சிவன் முதலிய எல்லா ஆத்துமாக்களுக்கும் நிர்வாஹகனாய்-சர்வேஸ்வரனான-திருமகள் கேள்வனாலே-

அருளப் பட்ட சடகோபன் –
மயர்வற மதிநலம் அருளினான் -என்றபடியே-அருளுக்கு பாத்ரமான ஆழ்வார் –
இந்த அருளுக்கு வாய்த்தலை –பிறப்பிடம் -பிராட்டி ஆதலால்-திருமாலால் -என்கிறார் –

ஓராயிரத்துள் இப்பத்தால் அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே –
ஓராயிரத்துள் இப்பத்தால்-
நம் அண்ணல் கரு மாணிக்கமே –அருளி யடிக் கீழ் இருத்தும்-
எல்லா பொருள்கட்கும் நிர்வாஹகனாய்-
விரும்பத் தக்க வடிவு அழகையும் குணங்களையும் -முடிந்து ஆளும் படியும் -உடையவனுமான
சர்வேஸ்வரன் தானே அருள் செய்து-தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் –
இத் திருவாய் மொழி கற்றார்க்கு தாம் பெற்ற பேறு என்கிறார் –
எம் அண்ணல் -பாட பேதம் –

—————————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அஷ்டமி அவதன்
சுவஸ்ய ஸ்வரூபம் —அவதன் -ஆ த்ம ஸ்வரூபம் பகவத் பிரகாரம்
ஆத்மகை சேஷம் -அவனுக்கே சேஷம்
ஈஸ்வரணே அவ போதிதம் –
ஸ்வ அயோக்யதா மதி -நிழல் ஆடுகிறதே
நிவர்த்தக லோலுபேண -நப்பாசை பெருமாளுக்கு –
ஸ்ரீ கௌஸ்துபே ந துல்யம் கமலாஸ்தான பிரியம் –
ஸூ பிரகார பூத ஆத்ம ஸ்வரூப வைபவம் –பிரகாசத்வம் -பரம போக்யம்

——————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஹரி பிரகடயிந்தி
பும்ஸே தாஸ்யம்
ப்ராசிஸ்தேன – — பாணாத்– அலங்கரிக்கப் பட்ட சுடர் முடியான்
விபூதியா அலம் ஹிருதிச
விபூதியா மஹிம்னா பரத்வாத் –
மாதுர்யாத்-தேனும் பாலும்
தேவ தேஹ்ய ஸூ ஸ்வரூப பிரகாசாத் -5/6/7
அந்திம ஸ்ம்ருதி அபாபியாத்வாத
ஸூ பிரம புருஷ ஐக்கியம் பிரமம் த்வம்சத்வாத்
ஞானாஞ்ஞானம் நிராசன பிரசாதாயாத் –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 78-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-ஆத்மஸ்வரூப வைலஷண்யத்தை எம்பெருமான் காட்டக் கண்டு பேசின ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இருத்தும் வியந்தில் -பெரிய ப்ரீதியோடு அனுபவிக்கிற அளவில்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்று நம் பெருமைக்கு எதிர்தட்டான தம் சிறுமையை அனுசந்தித்தார்-
இவர் இன்னம் வள வேழ் உலகு தலை எடுத்து நம்மை விட்டு அகலவும் கூடும்
அதுக்கு இடம் அறும்படி
ஜ்ஞானனந்த லஷணமாய் நித்யமாய் ஸ்ரீ ஸ்தனம் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும்
நமக்கு நித்ய போக்யமுமாய் காணும் இவ்வாத்மஸ்வரூபம் இருப்பது -என்று
ஆத்ம ஸ்வரூபம் வைலஷண்யம் அடியாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிற
கண்கள் சிவந்தில் அர்த்தத்தை கண் நிறைய இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

——————————-

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கல்வி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து –தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான்
காரி மாறன் தன் கருத்து —78-

——————————————

வியாக்யானம்–

கண் நிறைய வந்து கலந்த மால்-
கண்ணும் வாயும் துவர்ந்த-இவருடைய கண் நிறையும் வந்து சம்ஸ்லேஷித்த
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –

இக் கலவி –
இருத்தும் வியந்தில் இருந்த சம்ஸ்லேஷம் –

திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து —
திருட ஸ்வபாவத்தை யுடைத்தாக வேணும் என்று எண்ணி –

தண்ணிது எனும் ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட –
இவர் -சிறியேனுடைச் சிந்தையே -என்று அனுசந்தித்துப் போருகிற
ஆத்மாவின் உடைய பெருமையானதைக் காட்டி அருள –

ஆய்ந்து உரைத்தான் –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார் –
அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் -உரைக்காமல்– ஆராய்ந்து உரைத்து –
பகவத் பிரகார தயா போக்யம் என்று அருளிச் செய்தார் –
அதாவது –
தாசஸ்து-என்றும்
தாசோஹம் -என்னும் படியும்
கண்கள் சிவந்து -என்று தொடங்கி -அடியேன் உள்ளான் -என்றும்
அடியேன் உள்ளான் -என்று தொடங்கி -உணர்வில் உம்பர் ஒருவனே -என்றும்
உணர்வில் உம்பர் ஒருவனே -என்று தொடங்கி -என் உணர்வினுள் இருத்தினேன் -என்று
இரண்டரைப் பாட்டாலும் தனக்கு
ஸ்ரீ கௌஸ்துபம் போலே சேஷமாய் இருக்கிற படியையும்
உணர்வைப் பெற ஊர்ந்து -என்றும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து என் உயிரினில் உணர்வினில் நின்ற
ஒன்றை யுனர்ந்தேனே -என்றும்
நன்றாய் ஞானம் கடந்தே -என்றும்
தெருளும் மருளும் மாய்த்தோமே -என்றும்
ஆத்மாவினுடைய பிரக்ருதே பரத்வமும்
ஜ்ஞாத்ருத்வாதிகளும்
போக்யதையும்
ஜ்ஞானானந் தத்வமும்-முதலாக அருளிச் செய்தவை -என்கை –

அது காட்ட -வாய்ந்து உரைத்தான் -காரி மாறன் தன கருத்து –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஸ்ரீ எம்பெருமான் காட்ட அத்தை ஆராய்ந்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
தன் திரு உள்ளக் கருத்தாலே – என்னுதல் –
இப்படி ஸ்வரூப வை லஷண்யத்தை ஆராய்ந்து அருளிச் செய்யும்படி யாயிற்று
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்து – என்னுதல் –
அப்போது -ஆய்ந்து உரைத்த காரிமாறன் தன் கருத்து -என்றாகக் கடவது –

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: